Wednesday, December 30, 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010

எந்த special occassion ஆனாலும் நம்ம எல்லாருக்கும் old memories இருக்கும். Deepavali மாதிரியே New year உம் அப்பவெல்லாம் ஜாலி தான். ஒரே torture சீக்கிரமா எழுந்து கோவில் போக சொல்றது தான்

பெரிய ஜாலி அன்னைக்கி என்ன லொள்ளு செஞ்சாலும் easy escape. அம்மா அப்பா ஏதாச்சும் திட்டினாலும் உடனே பாட்டி கிட்ட இருந்து ஒரு comment வரும் "வருசம் மொதல் நாள் திட்டின வருசம் பூரா இப்படி தான் இருக்கும்" அப்படினு

ஐ ஜாலி அப்படினு இன்னும் கொஞ்சம் overaa லொள்ளு பண்ணுவோம். ஆனா அடுத்த நாள் எல்லாம் சேத்து மொத்தமா கிடைக்கும்னு அப்போ தெரியாது.

Deepavalikku தப்பி தவறி ஏதாச்சும் பட்டாசு மிச்சம் இருந்தா இன்னொரு தீபாவளி தான். என்ன அப்புறம் பின் விழைவுகள் தான் கொஞ்சம்.

தீபாவளி மாதிரியே இதுக்கும் வசூல் எல்லாம் super தான். என்ன கூட கொஞ்சம் free advise உம் கிடைக்கும். Sampleக்கு சில. "புது வருசதலயாவது நல்லா படி", "இனியாச்சும் ஒழுங்கா இரு", "என்ன சபதம் (அதாங்க new year resolution) எடுத்து இருக்கற?", இப்படி எல்லாம் variety variety யா torture இருக்கும்

அது எல்லாம் பாத்தா முடியுமா?. நாம பாக்காத tortureஆ? கீதை உபதேசம் மாதிரி "நம் பணி collection செய்வதே" அப்படினு அது எல்லாம் ஜாலி ஜோலீ தான்.

ஓகே,இந்த இனிய அந்த நாள் நினைவுகள் மாதிரியே இந்த 2010 இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்

Happy New Year 2010

Thursday, May 28, 2009

எனது முதல் பதிவு...

ஆறாம் வகுப்பின் ஒரு நாளில்
அறிவியல் வகுப்பை புறக்கணிக்க
இலக்கிய மன்ற போட்டியில் இணைந்து
இலக்கண பிழை ஊட
எழுதிய கட்டுரைக்கு
எப்படியோ ஆறுதல் பரிசு வர
எழுத்தாளர் ஆவதே
என் வாழ்வின் லட்சியமானது


பின்னர்...


காலங்கள் மாறின
காட்சிகள் மாறின
கணக்கு பாடமும் கணினி படமும்
கண் கண்ணாடியும் வாழ்வாகின


ஆயினும்...


அன்றொரு நாள்
ஆறுதல் பரிசின் வேகத்தில்
மனதில் பதிந்த கனவு
மறையவில்லை இன்றும்


இதோ...


எனது முதல் பதிவு....


தொடரும்...