Thursday, May 28, 2009

எனது முதல் பதிவு...

ஆறாம் வகுப்பின் ஒரு நாளில்
அறிவியல் வகுப்பை புறக்கணிக்க
இலக்கிய மன்ற போட்டியில் இணைந்து
இலக்கண பிழை ஊட
எழுதிய கட்டுரைக்கு
எப்படியோ ஆறுதல் பரிசு வர
எழுத்தாளர் ஆவதே
என் வாழ்வின் லட்சியமானது


பின்னர்...


காலங்கள் மாறின
காட்சிகள் மாறின
கணக்கு பாடமும் கணினி படமும்
கண் கண்ணாடியும் வாழ்வாகின


ஆயினும்...


அன்றொரு நாள்
ஆறுதல் பரிசின் வேகத்தில்
மனதில் பதிந்த கனவு
மறையவில்லை இன்றும்


இதோ...


எனது முதல் பதிவு....


தொடரும்...