Thursday, May 28, 2009

எனது முதல் பதிவு...

ஆறாம் வகுப்பின் ஒரு நாளில்
அறிவியல் வகுப்பை புறக்கணிக்க
இலக்கிய மன்ற போட்டியில் இணைந்து
இலக்கண பிழை ஊட
எழுதிய கட்டுரைக்கு
எப்படியோ ஆறுதல் பரிசு வர
எழுத்தாளர் ஆவதே
என் வாழ்வின் லட்சியமானது


பின்னர்...


காலங்கள் மாறின
காட்சிகள் மாறின
கணக்கு பாடமும் கணினி படமும்
கண் கண்ணாடியும் வாழ்வாகின


ஆயினும்...


அன்றொரு நாள்
ஆறுதல் பரிசின் வேகத்தில்
மனதில் பதிந்த கனவு
மறையவில்லை இன்றும்


இதோ...


எனது முதல் பதிவு....


தொடரும்...

13 பேரு சொல்லி இருக்காக:

சுரேகா.. said...

வார்த்தைகள் அழகாக வசப்படுகின்றன. உங்கள் களம் கவிதையெனில், கலக்குவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

முயலுங்களேன்...!

வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

மிக்க நன்றி சுரேகா. நிச்சியம் முயற்சி செய்கிறேன்

சக்தி said...

this is the first time so i do read your first post..!

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க சக்தி. முதல் வருகைக்கு நன்றி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாத்தான் இருக்குது.. ஆனா, ஏன் அ ஆ இ ஈ வரிசை மாத்தி எழுதியிருக்கீங்க :))))))))

அப்பாவி தங்கமணி said...

/எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது… நல்லாத்தான் இருக்குது.. ஆனா, ஏன் அ ஆ இ ஈ வரிசை மாத்தி எழுதியிருக்கீங்க :)))))))) //

எங்க தமிழ் டீச்சர் அப்படிதானுங்க சொல்லி குடுத்தாங்க... ஹி ஹி ஹி

priya.r said...

ஆகா ! முதல் பதிவே கவிதையா ! நல்லா இருக்குபா !

மிகவும் எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், கவிதை ஆசிரியரே
கவிதை நாயகியாகவும் தன் அனுபவத்தை கூறிய பாங்கு அருமை புவனா !

தொடரட்டும் உங்கள் கதை ,கவிதை,கட்டுரை பணிகள் ! வாழ்த்துக்கள் !

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க ப்ரியா...

cheena (சீனா) said...

அன்பின் தங்கமணி

கவிதை அருமை - சொற்கள் விளையாடுகின்றன. சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - 125 இடுகைகள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

அப்பாவி தங்கமணி said...

@ cheena (சீனா) - மிக்க நன்றிங்க, முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

மகி said...
This comment has been removed by the author.
மகி said...

நல்லா இருக்குது முதல் கவிதை! :)

அப்பாவி தங்கமணி said...

@ மகி - ஏன் மொதல் கமெண்ட்ஐ டெலிட் பண்ணிட்டீங்க மகி... ஆனா, நான் படிச்சுட்டனே...ஹா ஹா... நோ ப்ராப்ளம்... தேங்க்ஸ் மகி...:))

Post a Comment