Thursday, December 30, 2010

உன்னை ஒன்று கேட்பேன்... (சிறுகதை)


"என்னங்க..." என மித்ரா பாசமாய் அழைக்க

"என்னடி? அதிசியமா இன்னிக்கி நல்ல மூட்ல இருக்க?" என தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் மித்ராவின் கணவன் பிரகாஷ்

"அப்போ தினம் ராட்சசி மாதிரி இருக்கேனா?" என மித்ரா டென்ஷன் ஆக

"ச்சே ச்சே...அதை எப்படி என் வாயால சொல்லுவேன்" என பிரகாஷ் மனைவியை சீண்டினான்

மித்ராவின் பார்வையில் BP ஏறுவதை உணர்ந்த பிரகாஷ், இதுக்கு மேல அவள டென்ஷன் பண்ணினா சொந்த செலவுல சோமாலியாவுக்கு போன கதைதான்னு உஷார் ஆனார்

"சொல்லு மித்து... என்ன மேட்டர்?" என பேச்சை மாற்றினார்

"அது... நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன்...நீங்க உண்மையான honest ஆன பதில் சொல்லணும் சரியா?" என மித்ரா கேட்கவும் இப்போ பிரகாஷ்க்கு BP ஏறிடுச்சு

பிரகாஷின் கற்பனை தாறுமாறாக ஓடியது... ஐயையோ... இயர் எண்டு பார்ட்டில ஒரு பெக் அடிச்ச விசயம் லீக் ஆய்டுச்சோ...ச்சே ச்சே இருக்காது... யாரும் சொல்லி இருக்க சான்ஸ் இல்ல... ஒருவேள இந்த ஆனந்த் அவன் wife கிட்ட ஒளறி அவ இவகிட்ட வத்தி வெச்சுருப்பாளோ...ச்சே இதுக்கு தான் இந்த மனைவிகள பிரெண்ட்ஸ் ஆகவே விட கூடாது...ச்சே ச்சே அதெல்லாம் இருக்காது...

ஒருவேள... போன வாரம் இவ பிரெண்ட் வீட்டு மொக்கை பார்ட்டிஐ அவாய்ட் பண்ண ஆபீஸ் வேலைனு சொல்லிட்டு சினிமா போனேனே...எவனாச்சும் பாத்து போட்டு குடுத்து இருப்பானோ... இல்லையே...அதுக்கு தானே அந்த டப்பா தியேட்டர் போனேன்... யாரும் பாத்திருக்க சான்ஸ் இல்ல...

வேற என்ன... ஐயையோ... அதே தான்... அதே தான்... புது அசிஸ்டன்ட் தீபிகா பாவம் மழைல பஸ்க்கு வெயிட் பண்றான்னு லிப்ட் குடுத்த மேட்டரே தான்... மேம்பாலம் கிராஸ் பண்றப்ப யாரோ பாக்கற மாதிரி ஒரு உள்ளுணர்வு தோணுச்சு... ஒரு வைட் மாருதி கிராஸ் பண்ணுச்சே... அட ராமா இவ சித்தப்பா பையன் அருண் கார் வைட் மாருதி தானே... போச்சு... இன்னிக்கி நான் காலி... பேசாம நானே சரண்டர் ஆகறது பெட்டர்...

இப்படி பிரகாஷ் என்ன என்னமோ யோசிச்சுட்டு இருக்க "என்னங்க...எத்தன வாட்டி கூப்பிடறது...என்ன யோசனை அப்படி?" என ஆழம் பார்த்தாள் மித்ரா

"அது...மித்து...என் மேல எந்த தப்புமில்ல...அன்னைக்கி என்ன ஆச்சுனா... ஒரே மழை...பாவம் பஸ் வேற வர்ல... மத்தபடி..." என்றவனை இடைமறித்தாள் மித்ரா

"என்ன சம்மந்தம் இல்லாம என்ன என்னமோ ஒளர்றீங்க? என்ன மழை? என்ன பஸ்?" என மித்ரா சிபிஐ ரேஞ்சுக்கு கேள்விகளை அடுக்க

"அடக்கடவுளே...இவ வேற ஏதோ சொல்ல வந்தா போல இருக்கே... நானே தான் சூனியம் வெச்சுகிட்டனா? ஐயோ...."என மனதிற்குள் புலம்பினான் பிரகாஷ்

"அ... அது... ஆமா நீ என்ன சொல்ல வந்த...அத சொல்லு மொதல்ல..."என பேச்சை மாற்றினான்

ஒரு கணம் யோசனையாய் நோக்கிய மித்ரா, தான் கேட்க வந்ததை கேட்கும் ஆவலில் பிரகாஷ் narrow escape ஆனார்

"அது... உண்மைய சொல்லணும் சரியா?" என மீண்டும் பீதியை கிளப்பினாள் மித்ரா

"நான் எப்ப டி உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேன்" என ஆஸ்கர் நாயகன் ஆனார் பிரகாஷ்

"சரி...நெஜமா சொல்லுங்க... நான் இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனா?" என கேள்வி குண்டை தூக்கி போட

"அடிப்பாவி... இதுக்கு நீ நாலு நாளைக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்லி இருந்தா கூட நல்லா இருந்துருக்கும்" என ஜெர்க்கனார் பிரகாஷ்

"என்னது..." என மித்ரா டென்ஷன் ஆக

"சரி சரி...என்ன கேட்ட இன்னொரு தரம் கேளு" என பூகம்பம் வரும் நேரத்தை கொஞ்சம் தள்ளி போட முயன்றார் பிரகாஷ்

"நான் முன்னைக்கு இப்போ எளைசுட்டேனா இல்ல குண்டாய்டேனானு கேட்டேன்"

"ஒரு வாரம் முன்னாடி கூட இந்த கேள்வி கேட்டியேடி" என பாவமாய் ஒரு பார்வையை வீசினார் பிரகாஷ்

"அது ஒரு வாரம் முன்னாடி... அப்போதைக்கு இப்போ என்ன மாற்றம்னு சொல்லுங்க"

"ஹும்... போன வாரம் ஊருக்கு பேசினப்ப எங்கம்மா ஜாதகத்துல கண்டம்னு சொல்றாங்கடா பாத்து இருன்னு இதைதான் சொல்லுச்சோ..." என பிரகாஷ் முணுமுணுக்க

"ஓ...என்னை பாத்தா கண்டமா தெரியுதா..." என மித்ரா கண்ணை கசக்க ஆயுத்தமாக

"ச்சே... ச்சே... அப்படி சொல்வேனா கண்மணி..." என பிரகாஷ் ஒரு ரொமாண்டிக் லுக் விட

"ஐஸ் வெச்சது போதும்...பதில் சொல்லுங்க..."

"அது வந்தும்மா... ஒரு வாரத்துல என்ன மாறும் நீயே சொல்லு" என தப்பிக்க பார்த்தார்

"ஏன் மாறாது? இல்ல ஏன் மாறாதுங்கறேன்.. நான் டையட் இருக்கேன் ஒரு வாரமா"

"ஓ...அப்படியா? சொல்லவே இல்ல...என்ன பண்ணின...?" என ஆர்வமாய் கேட்பது போல் பேச்சை மாற்றினார் பிரகாஷ்

"இந்த பேச்சை மாத்தறதேல்லாம் எனக்கும் புரியும்... பதில் சொல்லுங்க மொதல்ல..." என மித்ரா கறாராய் சொல்லவும், ஒரு முடிவுக்கு வந்த பிரகாஷ்

"இங்க பாருடி... எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவ... குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்... ப்ளீஸ் மித்து... வேற எதாச்சும் கேளேன்... ப்ளீஸ்"

"அப்போ... நான் குண்டாய்டேன்னு சொல்றீங்க இல்ல?" என மித்ரா  பரிதாமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க

ஆஹா இவ மொறச்சா கூட பெட்டர் இப்படி பாவமா பாத்தா புலி பதுங்குதுன்னு அர்த்தம்னு அனுபவத்தில் உணர்ந்த பிரகாஷ், "நான் எப்பம்மா அப்படி சொன்னேன்?" என டிரியல் ஆனார்

"இப்ப சொன்னீங்களே...குண்டாய்டேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்னு"

"எளைச்சுட்டேன்னு சொன்னா பொய் சொல்றீங்கனு கண்ண கசக்குவனு கூடத்தான் சொன்னேன்..."

"சரி விடுங்க...நான் குண்டு தான்... உங்களுக்கு மேல் வீட்டு மேனாமினிக்கி ரூபா தான் கண்ணுக்கு அழகா தெரிவா.. என்னை எல்லாம் பாத்தா இப்படி தான் இளக்காரமா இருக்கும்" என இன்ஸ்டன்ட் fountain உற்பத்தியானது கண்ணில்

"ஒகே.. ஸ்டேஜ் 2 வந்தாச்சு(அழுகை படலம்) இனி உஷாரா பேசணும்" என புரிந்த பிரகாஷ்

"ச்சே ச்சே...அப்படி இல்லடி செல்லம்... ஒரு மேட்டர் சொல்லட்டுமா? இப்ப நம்ம குஷ்பூவ எடுத்துக்கோ..." எனவும், மித்ரா அழுகைய நிறுத்தி முறைக்க

"ஐயோ...அப்படி எல்லாம் பாக்காத... சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்... குஷ்பு ஒல்லியானா பாக்க சகிக்குமா? சிலர் குண்டா இருக்கறது தான் அழகு... அப்படி தான் நீயும்" என ஒரு பிரச்சனையை முடித்த சந்தோசத்தில் பிரகாஷ் பெருமூச்சு விட்டார்

ஆனால் இனி தான் விபரீதம் என்பது புரியாமல்... (!!!)

"ஓ...அப்ப நான் குண்டுன்னு முடிவா சொல்றீங்க?" என மித்ரா கொக்கி போட தான் தெளிவாய் சிக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த பிரகாஷ் தப்பிக்க வழி புரியாமல் திருதிருவென விழித்தார்

"அப்படி இல்லடி..." என சமாளிக்க முயல

"ஆனா இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்" என்றாள்  மித்ரா  தீர்மானமாய்

"அடிப்பாவி...மனசாட்சியே இல்லாம பேசுறியே..." என டென்ஷன் ஆன பிரகாஷ், ஒரு கணம் யோசித்தவர் "ஓ... நான் உன்னை சந்தோசமா வெச்சுருக்கரதால தான் குண்டா இருக்கேனு பாராட்டுரயா...தேங்க்ஸ்டி செல்லம்" என பிரகாஷின் முகத்தில் பல்பு எரிந்தது

"இல்ல... ரெம்ப Stress ஆனா கூட வெயிட் போடுவோம்னு recent statistics சொல்லுது you know?" என பிரகாஷின் முக பல்பை அணைத்து அவருக்கு பல்பு வழங்கினாள் மித்ரா

"நேரம்டி...எல்லாம் நேரம்..."

"இங்க பாருங்க...இன்னிக்கி தேதி என்ன? டிசம்பர் 31... விடிஞ்சா 2011 .... இப்ப சொல்றேன் கேட்டுகோங்க... என்னோட New Year Resolution இதான். நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த வெயிட்க்கு வந்து காட்றேன்...challenge ?" என மித்ரா கூற

"இதே சபதம் தான போன வருசமும் எடுத்த?"னு கிராஸ் கொஸ்டின் கேக்கற அளவுக்கு பிரகாஷ் லூசு இல்லையே... அனுபவப்பட்ட கணவன் ஆச்சே...ஹா ஹா  ஹா

"சூப்பர் மித்து... நீ சொன்னா சொன்ன மாதிரி செய்வே... குட் லக்... ஹாப்பி நியூ இயர்" என எஸ்கேப் ஆனார் பிரகாஷ்

என்னங்க நீங்களும் New Year Resolution எல்லாம் எடுத்தாச்சா? குட் லக் டு யு டூ... ஹாப்பி நியூ இயர்...

என்னோட resolution என்னவா? நான் என்னங்க பெருசா ஆசைப்படப்போறேன்...  மென்மேலும் நெறைய பதிவுகள் போட்டு எல்லாரையும் உயிர வாங்கணும், அவ்ளோ தான்... ஹா ஹா ஹா

Hope you enjoyed this story... Lets start 2011 with a little laugh and stay that way all year long... Happy New Year to all...

...

Tuesday, December 28, 2010

Leave Letter & குட் நியூஸ்...


Dear Friends,

As I'm sufferring from fever, I'm not able to post Jillunu oru kaadhal part 2 today

I request you to kindly grant me leave for 3 days. Thanking you

Yours Appavifully,
Appavi

Note: லீவ் லெட்டர் எழுதி வருஷம் பல ஆச்சு. எனவே தப்பும் தவறும் இருந்தால் பொறுத்தருள்க... (ஹி ஹி)

Rangs Says - "It's that couch (sofa) & laptop thats raising ur fever every time"...

LOL... it never occured to me to use that against him to get him off the couch & laptop...men men men... ha ha ha

Okay Next, குட் நியூஸ்

ஒரு குட் நியூஸ்... என்னோட அம்மாவும் நானும்  கவிதை பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவில் தமிழ்மணம் விருதில் முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. இந்த இணைப்பில் அதை பார்க்கலாம்
http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

அதோடு நகைச்சுவை பிரிவில் முட்டை ஆம்லேட் தத்துவம் கூட இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகி இருக்குங்க (கமெண்ட்ல் சுட்டிக்காட்டிய Vasagan அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி)

வாக்களித்த உங்கள் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி

இரண்டாம் சுற்றிலும் உங்கள் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என நம்புகிறேன்... நன்றி

அன்புடன்,
அப்பாவி தங்கமணி  

Thursday, December 23, 2010

ஆசை ஆசை இப்பொழுது... (சிறுகதை)


"ஜெனிபர் டைம் ஆச்சு... கெட் அப் கெட் அப்" என ஜேம்ஸ் தனது ஏழு வயது மகளை எழுப்ப முயன்று கொண்டு இருந்தான்

"ப்ளீஸ் டாடி... ஒன் மினிட்..." என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள் ஜெனிபர்

"ஜெனி...கெட் அப் ஐ சே... இப்ப எழுந்துக்க போறயா இல்லையா?" என மிரட்டும் தெனியில் கூற சிணுங்கி கொண்டே எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள் ஜெனிபர்

சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி சாப்பாட்டு மேஜை முன் வந்து அமர்ந்தவளின் முகம் வாடிப்போனது

அதை உணர்ந்தும் உணராதவன் போல் ஜேம்ஸ் "ம்... சாப்புடு... உன்ன ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு நான் போகணும்...குய்க் குய்க்... " என துரிதபடுத்தினான்

"தினமும் இதே பிரட் டோஸ்ட் ஆம்லேட்... ஐ ஹேட் இட்.." என ஜெனிபர் முகம் திருப்ப

"இங்க பாரு...என்னால இதான் செய்ய முடியும்... ஒழுங்கா சாப்டு" என கடுமையான குரலில் கூறி விட்டு தன் தட்டை காலி செய்ய முயன்றான் ஜேம்ஸ்

"அம்மா இருந்தப்ப டெய்லி டெய்லி Pancake, சாண்ட்விச்னு வேற வேறயா செய்வாங்க" என பெற்றவளின் நினைவில் ஜெனிபர் கண்களில் நீர் நிறைய கூற ஜேம்ஸின் நெஞ்சில் வேதனை மேல் எழும்பியது

முயன்று மறக்க நினைக்கும் நினைவுகளை தன் மகள் நினைவுப்படுத்த துக்கம் கோபமாய் உருவெடுத்தது

"ஜெனி... அம்மா இனி இல்ல... ஒகே? Try to accept that... உனக்கு நெறைய வாட்டி சொல்லிட்டேன்... இந்த மாதிரி காலைல நேரத்துல பேசாதேன்னு... சாப்ட்டா சாப்பிடு இல்லேனா பட்டினி கெட" என கோபமாய் கூற

"ஐ ஹேட் யு... ஐ ஹேட் யு.. ஐ ஹேட் யு டாடி" என அழுது கொண்டே உள்ளே ஓடினாள்

மகளின் அந்த வார்த்தை மேலும் துக்கத்தை கூட்ட, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி தன்னை நிராதரவாய் விட்டு போன காதல் மனைவியின் மேல் இப்படி விட்டு சென்றாயே என கோபம் துளிர்த்தது

உணர்வுகளுக்கு கூட காலை பரபரப்பில் நேரமில்லை என உணர்ந்தவனாய் மகளை அழைக்க சென்றான்

"ஜெனி... வா டைம் ஆச்சு போலாம்" என்ற அழைப்பில் ஜெனி மேலும் முறுக்கிக் கொள்ள, கவிழ்ந்து படுத்து இருந்த மகளை கட்டாயமாய் தோள் பற்றி திருப்ப அவள் விசும்பினாள்

குழந்தையின் அழுகை ஜேம்சை மேலும் பலவீனப்படுத்தியது, குற்ற உணர்வில் மகளை அள்ளி அணைத்து கொண்டான்

"சாரி ஜெனி... வெரி சாரி... இனிமே அப்படி திட்ட மாட்டேன்... டாடி செல்லம் தானே நீ.. போற வழில சப்வே சாண்ட்விச் வாங்கிக்கலாம் சரியா...சாரி ஜெனி..." என பலவாறு சமாதானம் செய்த பின் சற்று முகம் தெளிந்தாள்

ஜெனியை பள்ளியில் விட்டுவிட்டு அவசரமாய் அலுவலகத்துள் நுழைந்தவனை வரவேற்பில் இருந்த விக்டோரியா "ஹாய் ஜேம்ஸ்" என உற்சாகமாய் விளிக்க "ஹாய்.." என்று விட்டு விலகினான்

விக்டோரியாவின் பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தும் அறியாதவன் போல் மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்

சில மாதங்களாய் நடக்கும் மௌன நாடகம் தான் அது. மறைமுகமாக தன் மேல் விருப்பம் இருப்பதை விக்டோரியா உணர்த்தியும் மனைவியின் நினைவை மறக்க முடியாத ஜேம்ஸ் விக்டோரியாவின் காதலை ஒதுக்கினான்

இந்த அமெரிக்க கலாசாரத்தில் மறுமணம் என்பது மிக சகஜமான ஒன்று என்ற போதும் ஏனோ அவன் மனம் ஒப்பவில்லை

அவனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் கூட சொல்லி பார்த்து சலித்து, விட்டுவிட்டனர்

"அம்மா இனி இல்ல... Try to accept that" என மகளிடம் கூறியவன் தன்னால் மட்டும் அது முடிகிறதா என கேட்டு கொள்ள முனையவில்லை

ஜெனிக்கு இனி பெற்றவளின் நினைவு அதிகம் வராமல் இருக்கும் படி நடந்து கொள்ள வேண்டுமென நினைத்து கொண்டான் ஜேம்ஸ்

மாலை பள்ளிக்கு அவளை அழைக்க செல்ல, அன்று காலையில் கடுமையாய் தான் நடந்து கொண்ட நினைவே இல்லாதவள் போல் "டாடி.." என ஓடி வந்து கட்டி கொண்ட மகளை அணைத்து உச்சி முகர்ந்தான் ஜேம்ஸ்

இவள் மட்டும் இல்லையென்றால் தன் மனைவி சாராவின் மறைவு தன்னையும் வீழ்த்தி இருக்குமென நினைத்து கொண்டான்

"டாடி டாடி...soooooo much snow daddy... இன்னிக்கி நம்ம வீட்டுல Snow Man செய்யலாமா... ப்ளீஸ் டாடி" என அழகாய் கெஞ்ச அந்த கெஞ்சலில் அப்படியே கரைந்தான்

"ஒகே குட்டிமா... வி வில் டூ இட்..."

"ஐ லவ் யு டாடி" என கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்

அப்படியே அம்மாவை போல கோபம் என்றாலும் காதல் என்றாலும் அதீதமாய் என நினைத்தான் ஜேம்ஸ்

ஜெனியை காருக்குள் அமர்த்தி சீட் பெல்ட் போட முயல "நானே போட்டுக்கறேன் டாடி... you go and drive safe" என பெரிய மனுசி போல் கூற ஒரு கணம் சாராவே அருகில் நிற்பது போல் உணர்ந்தான் ஜேம்ஸ்

அன்று மாலை முழுவதும் ஸ்னோ மேன் செய்யும் வேலையே விளையாட்டாய் நேரத்தை விழுங்கியது

"வாவ்... சூப்பர் ஸ்னோ மேன் இல்ல டாடி"

"ஆமா ஜெனி... குட் ஜாப்" என அவள் உற்சாகத்தில் தானும் கலந்து கொண்டான் ஜேம்ஸ்

"டாடி கிறிஸ்துமஸ்க்கு நாம தாத்தா பாட்டி பாக்க போறோம் தானே"

"ஆமா ஜெனி... பாட்டி நேத்து போன் பண்ணினாங்க இல்லையா..."

"பாட்டிக்கு என்ன கிப்ட் டாடி?" என மகள் கேட்டதும் தான், தான் பரிசுகள் வாங்க வேண்டுமென்பதையே மறந்து விட்டதை உணர்ந்தான் ஜேம்ஸ்

சாரா இருந்த வரை எல்லோருக்கும் பரிசுகளை அவளே தேர்வு செய்து விடுவாள், மிக உற்சாகமாய் பண்டிகைக்கு தயாராவாள் என மனைவியின் நினைவில் லயித்தான் ஜேம்ஸ்

ஒருவழியாய் ஜெனியை பள்ளி பாடம் செய்வித்து உண்ண செய்து தூங்க வைத்தான்

மகளின் அறையை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் ஒரு வெறுமை வந்து ஒட்டி கொண்டதை உணர்ந்தான் ஜேம்ஸ்

பகலின் ஓட்டத்தில் உணரப்படாத தனிமை இரவானதும் தன்னை சூழ்வதை சில நாட்களாய் உணர்ந்தான், விக்டோரியாவின் காதல் பார்வை தன்னை அசைக்க தொடங்கி இருப்பதே அதற்கு காரணமோ என ஒரு கணம் தோன்றியது

விக்டோரியா அருமையான பெண் தான். ஆனால் ஏனோ முழு மனதாய் இன்னொரு பெண்ணை துணையாய் ஏற்க மனம் ஒப்பவில்லை

ஜெனியை முன்னிட்டு இப்படி நினைக்கிறேனோ என தோன்றியது ஜேம்சுக்கு

********
மறுநாள் பள்ளியில் மகளை இறக்கி விட்டு "பை பேபி... சி யு.." என அவன் கிளம்ப முயல

"டாடி டாடி..." என அழைத்தாள் ஜெனி

"என்ன ஸ்வீட்டி?"

"இந்த லெட்டர் போஸ்ட் பண்ணிடறீங்களா?"

"லெட்டரா?" என புருவம் உயர்த்தினான் ஜேம்ஸ், இவளுக்கு லெட்டர் எழுத தெரியும் என்பதே புதிர் என்பது போல்

"ஆமா டாடி... லெட்டர் டு Santa Claus... எங்க க்ளாஸ்ல எல்லாரும் எழுதறாங்க... கிறிஸ்துமஸ் அப்போ சேன்டா கிளாஸ்கிட்ட லெட்டர் எழுதி ரிக்வஸ்ட் பண்ணினா அவர் கண்டிப்பா குடுப்பார்னு மிஸ் லாரா (ஆசிரியை) சொன்னாங்க"

"ஓ..." என புரிந்தவனாய் "சரி குடு நான் போஸ்ட் பண்ணிடறேன்" என வாங்கினான்

"மறக்காம போஸ்ட் பண்ணிடு டாடி... ஆபீஸ் வேலைல மறந்துடாதே... லேட் ஆனா சேன்டா பிஸி ஆய்டும் யு நோ" என அழகாய் அபிநயித்து கூற அந்த அழகில் தன்னை மறந்தவன்

"ஒகே ஜெனி குட்டி... இப்பவே போஸ்ட் பண்ணிடறேன்...சரியா..."

"ம்..பை டாடி..." என பள்ளிக்குள் ஓடினாள் ஜெனி

தானும் இது போல் சிறு வயதில் பெற்றோர் ரகசியமாய் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கும் பரிசை சேண்ட்டா தான் கொடுத்தது என நம்பியதை எண்ணி இதழில் முறுவல் பூத்தது

அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் வேலையாய் ஜெனி கொடுத்த கடிதத்தை எடுத்தான் ஜேம்ஸ்

அவள் அதில் கேட்டிருப்பதை வாங்கி கொடுத்து சேன்ட்டாஸ் கிப்ட் என அவள் மகிழ்வதை காண ஆவலானான்

அந்த கடிதம்.....

Dear Santa Claus,

My name is Jennifer

I know about you. So I'm going to say about me. I am seven years old and I go to Glen Park School. My best friend is Sandy. I love Ice Skating. I love my daddy a lot

My teacher is Miss Laura and she is really nice. I am very excited about Christmas

I have a question to ask you. How many elves do you have to help you? If you need help, let me know

For Christmas, I need a gift. I know you only can give me that gift. I miss my mommy so much. I need my mommy or someone who can love me like my mommy. My daddy miss my mommy too. So please give this gift and make me and my daddy happy

I won't forget to leave you some milk and cookies on Christmas Eve

Your friend,
Jeni

கடிதத்தை படித்ததும் கட்டுப்படுத்த இயலாமல் அழுதான் ஜேம்ஸ். இந்த பிஞ்சு உள்ளத்தில் இத்தனை ஏக்கமா?

தன் வேதனையை அறியாமல் பிடிவாதம் செய்கிறாளே என பல முறை நினைத்தது பொய் என நிரூபித்து விட்டாள் தன் மகள் என நினைத்தான் ஜேம்ஸ்

அதை உணர்ந்ததால் தானே "My daddy miss my mommy too. So please give this gift and make me and my daddy happy" என எழுத முடிந்தது

கடவுளே இத்தனை அருமையான பிள்ளையுடன் வாழும் அதிர்ஷ்டத்தை என் சாராவிடமிருந்து ஏன் பறித்தாய் என அழுதான்

சற்று நேரம் அதே நினைவில் இருந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான்

*******

மாலை ஜெனி வீட்டு பாடம் செய்து கொண்டிருக்க ஜேம்ஸ் சமையல் அறையில் வேலையாய் இருந்தான்

அழைப்பு மணி சத்தம் கேட்க, விரைந்து சென்று கதவை திறந்தவன் "ஹாய் விக்டோரியா... உள்ள வா" என புன்னகையுடன் வரவேற்றான் ஜேம்ஸ்

சிறிது நேர அளாவளுக்கு பின் "ஜெனி இவங்க யாருன்னு தெரியுமா?" என விக்டோரியாவை கை காட்டி கேட்க

"ம்... உங்க பிரெண்ட்..." என இயல்பாய் ஜெனி கூற அவளை எடுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டவன்

"எஸ், என் பிரெண்ட் தான்... சரி, நீ சேண்ட்டாகிட்ட என்ன கிப்ட் கேட்ட?"

"ம்ம்... அது சீக்ரட்" என்றாள்

"ம்... ஆனா சேண்ட்டா நேத்து எனக்கு போன் பண்ணுச்சே"

"ஓ...ரியலி... என்ன சொல்லுச்சு டாடி சேண்ட்டா" என கண்களில் ஆர்வம் மின்ன ஜெனி கேட்க

"ம்... நீ சேண்ட்டாகிட்ட கேட்ட கிப்ட் இவங்க தான்னு சொல்லுச்சு" என புன்னகையுடன் ஜேம்ஸ் விக்டோரியாவை கை காட்ட மகிழ்ச்சியில் அந்த சின்ன கண்கள் பளபளத்தது
எதுவும் புரியாமல் விழித்த விக்டோரியாவின் நிலைமை புரிந்த ஜேம்ஸ் "நீ சேண்ட்டாகிட்ட என்ன கேட்டேன்னு இப்பவாச்சும் சொல்லு ஜெனி"

"மம்மி வேணும்னு கேட்டேன்" என ஜெனி கூற விக்டோரியாவின் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்தது

மாலை கிளம்பும் முன் "விக்டோரியா, நைட் டின்னர்க்கு என் வீட்டுக்கு வர முடியுமா? என் குட்டி தேவதைய சந்திக்கணும்னு ரெம்ப நாளா கேட்டுட்டு இருக்கியே" என்று ஜேம்ஸ் கூற நடப்பது கனவா நிஜமா என நம்ப இயலாமல் விழித்தாள் விக்டோரியா, ஆனால் இப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருக்குமென அவள் கனவிலும் நினைக்கவில்லை

அவளின் தவிப்பு புரிந்த ஜேம்ஸ் மகளை ஒரு கையால் மடியில் இருத்தி கொண்டே வா என விக்டோரியாவை நோக்கி மறு கை நீட்ட அதற்கே காத்திருந்தவள் போல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்

ஜெனியும் சேண்ட்டாவிற்கு நன்றி கூறி தன் புது அம்மாவை கட்டிகொண்டாள்

And they lived happily ever after...

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்....

...

Tuesday, December 21, 2010

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 1)


Toronto University வளாகம் புது பொலிவு பெற்று இருந்தது

விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்கள் இரண்டு மாத கால கதையை பிரதாபித்து கொண்டு இருந்தனர்

அப்போது தான் சேர்ந்திருந்த புது மாணவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கமும் நிறைய கனவுமாய் வலம் வந்தனர்

அந்த கூட்டத்துல இந்த கதைக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு பேர் யூனிவர்சிட்டிகுள்ளேயே இருக்கற ஒரு Food Courtல உக்காந்துட்டு என்னமோ பேசிட்டு இருக்காங்க... என்ன பேசறாங்கன்னு கேப்போம் வாங்க...

"சதீஷ் அங்க பாரேன் ஒருத்தன் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"எங்க மீரா?"

"உனக்கு சைடுல நமக்கு அடுத்த டேபிள்ல...சட்டுன்னு திரும்பாத"

"ம்... " என்றவன் மெதுவாய் இயல்பாய் திரும்புவது போல் திரும்பி பார்த்தான்

"என்ன நான் சொன்னது கரெக்டா சதீஷ்?"

"ம்... கரெக்ட் தான்... அவனை இன்னிக்கி ஓரியன்டேசன்ல பாத்தா மாதிரி ஞாபகம்"

"ஓ...நம்ம க்ளாஸ்ஆ?"

"தெரியல...எல்லா மேஜர்க்கும் ஜெனரல் ஓரியன்டேசன் செசன் தானே இங்கெல்லாம்... மே பி நம்ம க்ளாஸ்ஆ இருக்கலாம். எல்லாரும் Self Introduce பண்ணிகிட்டப்ப இவன் தன்னை இட்டாலியன்னு சொன்னதா ஞாபகம்"

"ஓ... நான் கவனிக்கல"

"ஆமா பாத்தனே நீ தூங்கி தூங்கி விழுந்ததை"

"ஏய்... நான் ஒண்ணும் தூங்கல... ஓரியன்டேசன் பைண்டர் படிச்சுட்டு இருந்தேன்"

"நம்பிட்டேம்மா..." என சதீஷ் சிரிக்க

"உனக்கு ரெம்ப கொழுப்புடா ஆனாலும்... ஏய் அவன் மறுபடியும் நம்மளையே பாக்கறான்"

"நம்மளை இல்ல உன்னைனு சொல்லு... அழகா ஒரு பொண்ணு இருந்தா பாக்கத்தானே செய்வாங்க"

"நெஜமாவா சொல்ற... நான் அவ்ளோ அழகா இருக்கேனா?" என மீரா வெட்கப்படுவது போல் நடித்து அழகாய் கேட்க

"Sorry I lied" என குறும்பாய் சிரித்து கொண்டே சதீஷ் கூற

"ஏய்... யு... யு... " என அவனை அடிக்க புத்தகத்தை எடுத்தாள்

"ஒகே ஒகே... சமாதானம் சமாதானம்" என கையில் இருந்த வெள்ளை பேப்பரை காட்டினான்

"சதீஷ்... அந்த பையன் இன்னும் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"பாத்துட்டு போகட்டும் விடு மீரா"

"நேத்து ஒருத்தி பிசாசு மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தானு நான் ஒரு நிமிஷம் முழிச்சு பாத்ததுக்கு starring is bad manners, did your mom not teach it னு ஒரு மணிநேரம் இங்கிலீஷ் லெக்சர் குடுத்தாளே அதை அப்படியே இப்ப இவனுக்கு குடுக்கட்டுமா?"

"வேண்டாம் மீரா... பாவம் அவனுக்கு இங்கிலீஷ் மறந்துடும், பொழச்சு போகட்டும் விடு" என சதீஷ் சிரிக்காமல் சொல்ல

"உன்ன... இரு இரு... நோட்ஸ் வேணும்னு வந்து நிப்பெல்ல அப்ப சொல்றேன் யாருக்கு இங்கிலீஷ் மறக்கும்னு" கோபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னாள் மீரா

"ஒகே ஒகே... சும்மா கிண்டல் தானே...சாரி" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்ச அவர்கள் பின்னால் இருந்த அவன் லேசாக புன்னகைத்தான்

"ஏய் ஏய்... அவன் சிரிக்கறான்.. என்னமோ நாம பேசறது ரெம்ப புரிஞ்ச மாதிரி"

"அவன் ஏதோ Magazine வெச்சுருக்கான் பாரு... அதுல ஏதோ படிச்சுட்டு சிரிக்கறான் போல இருக்கு"

"ம்...ஆமாம் கரெக்ட்... அவனும் அவன் மூஞ்சியும்"

"ஏன் அவன் மூஞ்சிகென்ன?"

"இல்ல... அடிக்கற கிரீன் கலர் ஷர்ட்... கண்றாவி... நம்ம ஊர்ல கட்டிட வேலைக்கு வர்றவன் மாதிரி இருக்கான்"

"ஹா ஹா ஹ... நல்ல கம்பாரிசன்"

"ம்... அவன் தலைய பாரேன் என்னமோ எலி கரண்டி வெச்ச தேங்கா மாதிரி"

"சான்சே இல்ல மீரா... நல்லா சிரிக்க வெக்கற... பேசாம நீ அசத்த போவது யாரு ப்ரோக்ராம்க்கு போலாம்"

"நக்கல் தான் உனக்கு"

"எஸ் எஸ்"

"அவன் பேரு என்ன சொன்ன?"

"நான் எப்ப சொன்னேன்?"

"காலைல ஓரியன்டேசன்ல என்னமோ சொன்னான்னு சொன்னியே"

"இட்டாலியன்னு சொன்னான்... பேரு சொல்லல"

"ஐ சி... அவனோட ஹேர் அது நேச்சுரல் கலர் இல்லைன்னு தோணுது... கலர் பண்ணி இருக்கான்..."

"இல்ல மீரா... இட்டாலியன்ஸ்க்கு Black Hair தான் நம்மள போல... Blonde இல்ல"

"ஓ... அவன் ஷூவ பாரேன்... என்னமோ பார்முலா ஒன் ரேஸ் கார் கூட ஓட போறவன் மாதிரி வில் எல்லாம் வெச்சு.. கண்றாவி"

"ஹா ஹா... " என சிரித்தான் சதீஷ்

"கைல ஒரு புக் கூட இல்ல... இவனெல்லாம் என்ன படிக்க போறானோ"

"ஏய்... இந்த வாரம் முழுக்க ஜஸ்ட் ஓரியன்டேசன் தானே மீரா... நீ தான் நான் சொல்ல சொல்ல கேக்காம நாலு நாளா என்னையும் சேத்து புக் பாக்னு தூக்க வெச்சுருக்க... பொண்ணுங்க எல்லாம் என்னை லூசா நீ ங்கற மாதிரி பாக்கறாங்க"

"அது என்ன பொண்ணுங்க... பசங்க உன் கண்ணுல படலியா"

"பொண்ணுங்க அளவுக்கு படல"

"சரியான ஜொள்ளு பார்ட்டிடா நீ... ச்சே"

"சரியா சொல்லு... no harm ஜொள்ளு பார்ட்டி"

"எப்படியோ போ... அந்த பையன் வெச்சுருக்கற Magazine பாரு... என்னமோ யோகானு போட்டிருக்கு.. சரியான சாமியார் போல இருக்கு"

"மீரா... திஸ் இஸ் டூ மச்... " என அவனும் அடக்க மாட்டாமல் சிரித்தான்

"அவன் கைல பாரேன் ஒரு லிட்டர் பாட்டில் சைஸ்ல காபி கப்... இந்த ஊரு ஜென்மங்க எப்படி தான் இப்படி காப்பிலையே உயிர் வாழுதுங்களோ... எப்படா MBA முடிச்சுட்டு ஊர் போய் சேருவோம்னு இருக்கு"

"அடிப்பாவி நீ தானே அடம் பிடிச்சு இங்க வரணும்னு என்னையும் சேத்து வம்புல மாட்டி விட்ட"

"அப்படியாச்சும் நீ உருபடட்டும்னு தான்"

"நேரம் தான்... சிவனேன்னு செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளை சைட் அடிச்சுட்டு சந்தோசமா இருந்தவனை இப்படி பனி காட்டுல கொண்டு வந்து தள்ளிட்டீங்க எல்லாரும் சேந்து"

"ஏய்...ரெம்ப டிராமா பண்ணாத சதீஷ்... இந்த ஒரு வாரத்துல யுநிவர்சிட்டில உன் ரவுசு தாங்காம நெறைய பொண்ணுங்க Torontoவ விட்டு போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்"

"எல்லாம் நேரம் தான்... பேசு பேசு"

"சரி அதை விடு... சதீஷ் அங்க பாரு அவன் ஐ-போன் வெச்சுட்டு செம அலப்பறை செய்யறான். நம்ம ஊர்ல இதை விட சூப்பர் மாடல் போன் எல்லாம் இருக்குனு இவனுக்கு என்ன தெரியும்... கூமுட்ட"

"என்ன மீரா... ஓவரா லோக்கல் பாஷை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட"

"அப்பப்பா பேசறது தான்... அது சரி... நீ அந்த இத்தாலிகாரன் பத்தி என்ன நெனைக்கற"

"என்ன நெனைக்கிறேன்னா... " என ஏதோ சீரியஸ்யாய் சிந்திப்பவன் போல் பாவனை செய்துவிட்டு "அவன் உன்னை பாக்கறதை விட நீ அவனை அதிகம் பாக்கறேன்னு நினைக்கிறேன்" என சிரித்து கொண்டே சதீஷ் குறும்பாய் கூற

"யு...யு... " என கோபத்தில் கையில் இருந்த புத்தகத்தை அவன் மேல் வீசினாள்

சதீஷ் அதை எதிர்பார்த்தவன் போல் சட்டென குனிய அவள் வீசிய புத்தகம் சதீஷ் பின் அமர்ந்திருந்த அந்த இத்தாலிக்காரன் மேல் போய் விழுந்தது

அவன் தன் கையில் வைத்திருந்த காபி கோப்பை சிதறி அவன் மேல் அபிஷேகம் ஆகியது

மீரா சதீஷ் இருவரும் செய்வதறியாது திகைக்க அவன் இவர்கள் இருவரையும் ஒன்றும் பேசாமல் பார்த்தான்

அவன் கண்களில் தெரிவது கோபமா கேலியா என புரியாமல் மீரா தடுமாறினாள்

மீரா தான் முதலில் சுதாரித்து "Sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

இனி...

அப்பாவியின் நோட்ஸ்:
இயக்குனர் சங்கர் தான் Foreignல போய் சினிமா எடுக்கணுமா? நாங்களும் எடுப்போம்ல... ச்சே... எழுதுவோம்ல... ஆமாங்க இந்த கதை கனடா நாட்டில் டொரோண்டோ (Toronto) என்ற மாநகரத்தில் நடக்கும் ஒரு கதை... அதாவது "ஜில்லுனு ஒரு காதல்" கதை... See you in next episode...

(ஜில்லுனு தொடரும்...) - Next Tuesday

அடுத்த பகுதி படிக்க...


...

Thursday, December 16, 2010

நான் சொல்வதெல்லாம் உண்மை...


மைண்ட்வாய்ஸ்: என்னத்துக்கு இப்ப இந்த பில்ட் அப்பு

அப்பாவி: ஏய்... வேண்டாம்...இன்னைக்கி மட்டும் என்கிட்ட வம்பு பண்ணாத...வம்பாய்டும் ஆமா...

மைண்ட்வாய்ஸ்: ஐ...அப்பாவி டென்ஷன் டென்ஷன் ...மீ ஹாப்பி ஹாப்பி...

அப்பாவி: வேண்டாம் சொன்னா கேளு

மைண்ட்வாய்ஸ் : சரி சரி மேட்டர் என்னனு சொல்லு

அப்பாவி: அது...வந்து...  தமிழ்மணம் இருக்கில்ல...அதுல அவார்ட்ஸ் இருக்கில்ல...அதுக்கு நான் மூணு பதிவுகள nominate பண்ணி இருக்கேன்... அந்த மூணு பதிவை படிச்சு... 26 ந்தேதிகுள்ள உங்கள் பொன்னான வாக்குகளை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்... (voting instructions at the end of this post)

மைண்ட்வாய்ஸ் : ஹையோ ஹயோ...உன் காமெடி சென்சுக்கு ஒரு அளவே இல்லையா...நீ?????? விருதுக்கு?????  ஹா ஹா ஹா

அப்பாவி: வேண்டாம்... நல்லதுக்கில்ல... நெசமாத்தான் சொல்றேன்...

மைண்ட்வாய்ஸ் : ஏன் இந்த கொல வெறி திடீர்னு?

அப்பாவி: சும்மா நானும் ஒரு பதிவர்னு வேற எப்படி தான் prove பண்றது

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா... அது சரி...எந்த நம்பிக்கைல இதுல எல்லாம் கலந்துக்கற

அப்பாவி: இங்க பாரு மைண்ட்வாய்ஸ்...ஜெயக்கறது தோக்கறது மேட்டர் இல்ல... participation is what matters னு பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் சொல்லி இருக்காங்க தெரியுமா?

மைண்ட்வாய்ஸ் : அது அவங்க பெரிய ஆளுங்களுக்காக சொன்னது.. உனக்கு ஏன் அது?

அப்பாவி: இந்த அப்பாவி இதுக்கு மேலயும் அப்பாவியா இருக்கனுமா இல்லையாங்கறது உன்கிட்ட தான் இருக்கு

மைண்ட்வாய்ஸ்: சரி சரி... மெரட்டாதே... சரி நீ இதுல ஜெய்ச்ச்சா மக்களுக்கு என்ன நல்லது எல்லாம் செய்வ அதை சொல்லு மொதல்ல

அப்பாவி: அடப்பாவி... இதென்ன பொது தேர்தல் வாக்குறுதி ரேஞ்சுக்கு பேசற

மைண்ட்வாய்ஸ் : தேர்தல்னு வந்துட்டா பொது தேர்தல் என்ன தனி தேர்தல் என்ன எல்லாம் ஒண்ணு தான் யு சி?

அப்பாவி: எல்லாம் நேரம் தான்

மைண்ட்வாய்ஸ் : சரி...நானே கேக்கறேன்... ஒட்டுமொத்த பதிவுலகம் சார்பா

அப்பாவி: உன்னை யாரு இப்ப representative ஆ appoint பண்ணினது

மைண்ட்வாய்ஸ் :இதான் மொதல் கோரிக்கை...தமிழ் பதிவர்னு பேரு வெச்சுட்டு இப்படி வாக்கியத்துக்கு நாலு வார்த்தை ஆங்கிலத்துல போட்டு கொல்லக்கூடாது

அப்பாவி: ம்...நேரம் தான்...அப்புறம்?

மைண்ட்வாய்ஸ் : சும்மா சும்மா பாத்தது கேட்டது எல்லாம் பதிவு போட்டு எங்க பொன்னான நேரத்த நீ வீணடிக்கரத நாங்க வன்மையா கண்டிக்கறோம்...

அப்பாவி: நீ சொல்லி முடி நான் அப்புறம் பேசறேன்

மைண்ட்வாய்ஸ் : ம்...இதே மாதிரி எப்பவும் மத்தவங்க பேசறதுக்கு டைம் குடுக்கணும்...சும்மா நீயே பேசிட்டு இருக்க கூடாது... அப்புறம் 100 எபிசோடு கதை எல்லாம் தடை விதிக்கணும்னு நீயே ஒரு சட்டம் கொண்டு வரணும்...

அப்பாவி: அய்யயோ... என் பொழப்பு எப்படி நடக்கறது அப்புறம்

மைண்ட்வாய்ஸ் : இன்னும் பத்து பக்க கோரிக்கை மனு எங்க சங்கம் சார்பா வரும்... அதுல நீ கையெழுத்து போட்டா அப்புறம் உனக்கு வோட்டு போடறதா இல்லையான்னு நாங்க முடிவு பண்றோம்

அப்பாவி: அது சரி...என்னமோ சங்கம்னியே...என்னாதது?

மைண்ட்வாய்ஸ் : அப்பாவியால் பாதிக்கப்பட்ட அபலைகள் சங்கம்

அப்பாவி: அடப்பாவி...

மைண்ட்வாய்ஸ் :உன் பேர சொன்னதுக்கு நன்றி...

அப்பாவி: பேசு பேசு... உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்...

மைண்ட்வாய்ஸ் : இங்க பாரு...அந்த பத்து பக்க கோரிக்கைல முக்கியமா விசயமே... வோட்டு போட்டப்புறம் எனக்கு எதாச்சும் அடிகிடி பாட்டா நீ தான் பொறுப்புனு இருக்கும்...அதுலயும் நீ கையெழுத்து போடணும்...

அப்பாவி: நான் nomination திருப்பி வாங்கிகறேன்..நீ போ

மைண்ட்வாய்ஸ் :ச்சே ச்சே...என்னதிது... முன் வெச்ச காலை பின் வெக்காத பரம்பரைனு நெனச்சேனே உன்னை (இப்படி ஏத்தி உட்டு தான் நம்ம மேட்டர சாதிச்சுக்கணும்... ஹா ஹா)

அப்பாவி: என்ன என்னமோ முணுமுணுக்கற...

மைண்ட்வாய்ஸ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ என்ன முடிவு பண்ணின அதை சொல்லு

அப்பாவி: என்ன சொல்றது? சிக்கியாச்சு... மீள முடியுமா இனி... அன்பார்ந்த ப்ளாக் உலக திலகங்களே... திலகிகளே... நான் சொல்வதெல்லாம் உண்மை...உண்மை தவிர வேறில்லை..

மைண்ட்வாய்ஸ் : இரு இரு... இந்த டயலாக் எல்லாம் அரசியலுக்கு வந்து ஊழல் பண்ணி மாட்டி கோர்ட்க்கு கூட்டிட்டு போறப்ப சொல்ல வேண்டியது...இப்பவே அவசரப்பட்டு சொல்லாதே

அப்பாவி: படுபாவி...ஆரம்பத்துலையே இப்படியா...வெளங்கிடும்...

மைண்ட்வாய்ஸ் :எல்லாம் வெளங்கும்.. நான் கேக்கறேன் உனக்கு வோட்டு இரு...

ஹாய் ஹாய் ஹாய்....எல்லாரும் சௌக்கியமா... என்ன மேட்டர்னா நம்ம அப்பாவி இருக்கே... அதாங்க பதிவு போட்டே கொல்லுமே...அதே அதே... அந்த அப்பாவி தங்கமணி தமிழ்மணம் அவார்ட்ஸ்ல கலந்துக்குதாம்...

உங்க சார்பா நானே கோரிக்கை எல்லாம் போட்டுடறேன்... ஒரு முக்கியமான மேட்டர்... உங்களுக்கு மட்டும் சொல்றேன்... அந்த பத்து பக்க கோரிக்கைல இனி மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடணும்கரதை சின்ன சின்ன எழுத்துல போட்டு இருக்கேன்

அவ எப்படியும் அவ சோடாபுட்டி கண்ணாடி வெச்சு அதை படிக்க போறதில்ல... கையெழுத்து போட்டுடுவா...இதை விட்டா நமக்கு நல்ல சான்சே கிடைக்காது

அதனால உங்க வோட்டை போனா போகுதுன்னு போட்டுடுங்க...அப்புறம் நமக்கு விடுதலை விடுதலை விடுதலை தான் யு சி...

ஒகே டாட்டா பை பை...மறக்காம 26 ந்தேதிக்குள்ள வோட்டு போட்டு தொரத்தி விட்டுடுங்க... ஹா ஹா ஹா... அப்புறம் இருக்கு கச்சேரி நம்ம அப்பாவிக்கு... அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மைண்ட்வாய்ஸ்
 
Dear Friends,
Vote only if you like these 3 posts... not for me... (நெனப்பு தான்...ஹா ஹா அஹ)
Thanks,
Appavi Thangamani

Voting Instructions:-
 1. ’tamilmaNam Awards2010 - Voting Invitation from tamilmaNam.NET’ உங்களுக்கு இந்த சப்ஜெக்ட்ல ஒரு ஈமெயில் வந்து இருக்கும்...அதுல இருக்கற லிங்க் கிளிக் பண்ணுங்க. You can see a page titled "தமிழ்மணம் விருதுகள் 2010 பதிவருக்கான வாக்குச்சீட்டு"

2. In that first category is "பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)". Just below you'll see "இந்த பிரிவுக்கு வாக்களிக்க இங்கே கிளிக்கவும்" . If you click that a page will open showing all the nominations for awards

3. In that page, you need to find out mine listed as உருகுதே மருகுதே... (சிறுகதை) - அப்பாவி தங்கமணி. To vote for that, click vote button at the end of same row. Once you click vote, this page will close and your selection will show up on the main page under the category you selected. To read the post click this link உருகுதே மருகுதே

4. Likewise, to vote for other 2 nominations here are the topics:-
- பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்
முட்டை ஆம்லேட் தத்துவம்... (சைவம் தான் அசைவம் இல்ல...எல்லாரும் தைரியமா படிக்கலாம்)
- பிரிவு: பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
அம்மாவும் நானும்... (இது அந்த அம்மா இல்ல...எங்க அம்மா...)

...

Monday, December 13, 2010

வேலைக்காரி & அறிவிப்பு (ஜில்லுனு ஒரு காதல்...)


இதென்ன கண்றாவி இப்படி ஒரு தலைப்புனு கேக்கறவங்க இதுக்கு முன்னாடி போஸ்ட் பாத்தீங்கன்னா புரியும்... பாக்கலைனாலும் புரியும்... (ஹி ஹி)

சரி சரி நோ டென்ஷன்... அது போன போஸ்ட்ல "அமெரிக்கா... வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு... " னு தலைப்பு வெச்சேன்... ஆனா அதுல ஒரு விஷயம் பத்தி எழுதவே இடம் பத்தலை...

சோ அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்... மத்தபடி அந்த போஸ்ட்க்கும் இந்த போஸ்ட்க்கும் சம்மந்தம் உறவு பாத்தியதை ஒண்ணும் இல்லை...

(மைண்ட்வைஸ் : ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல)_______________________________________________________

ஒகே...போஸ்ட்க்கு போவோம்...

அறிவிப்பு என்னனா...

என்ன நீ வேலைக்காரி மேட்டர் சொல்லாம மொதல்ல அறிவிப்புக்கு போறேன்னு நீங்க கேக்கலாம்... அதுக்கு ஒரு காரணம் இருக்கு..

ஆனா நீங்க கோவப்படாம கேக்கணும்...

மைண்ட்வாய்ஸ் :சொல்லி தொல கேக்கறேன்...

அப்பாவி: அதாவது நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா... மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா...

மைண்ட்வாய்ஸ் :உன் மேட்டர்ம் வேண்டாம்.. நாங்க மேலோகதுக்கும் போக வேண்டாம்...ஆள உடு...

அப்பாவி: என்னதிது...நீ தானே கோவப்படமாட்டேனு சொன்ன...இப்ப கோவப்படறியே

மைண்ட்வாய்ஸ் : உன் ப்ளாக் படிச்சா கோவம் வராது அம்மணி... கொல வெறி தான் வரும்...

அப்பாவி: கூல் கூல்... சரி போஸ்ட்க்கு போவோம்...
________________________________

அறிவிப்பு என்னனா... நான் புதுசா ஒரு தொடர் கதை ஆரம்பிக்க போறேன்.... வெயிட் வெயிட்... ஓடாதீங்க...

நீங்க பயப்படுற மாதிரி இது டெர்ரர் கதை எல்லாம் இல்லை... ஜாலியான கதை... ஜில்லுனு ஒரு கதை...

கதை தலைப்பே "ஜில்லுனு ஒரு காதல்"... இப்ப ஒகேவா...

தமிழ் சினிமா டைரெக்டர்க தான் பாரின் போய் சினிமா எடுக்கணுமா... நாங்க எடுக்க கூடாதா... So, இந்த கதை நடக்கும் இடம் கனடா (Canada)... அவ்ளோ தான் இப்போ details ... மற்றதெல்லாம் ப்ளாக்(Blog) திரையில் காண்க...

Don't Worry...Trailer Trailer னு ஓட்டி கொடுமை எல்லாம் படுத்த மாட்டேன்... Straight ரிலீஸ் தான்... எப்போவா?

வர்ற செவ்வாய் முதல் ஒரு ஒரு செவ்வாய்க்கிழமையும் "ஜில்லுனு ஒரு காதல்" படிக்கலாம்...

உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி நன்றி நன்றி...

Mindvoice : This is what we call over confidence

Appavi :  This is what we call கொலை செய்யும் கத்தி... (என அப்பாவி தாயாராய் வைத்திருந்த  ஆயுதம்  எடுக்க)

Mindvoice : Me escape...
 _________________________________________________________________

சரி அடுத்த டாபிக்... "வேலைக்காரி..."

நான் இந்தியால இருந்தப்ப, தீபாவளி முடிஞ்ச மறு நாள் வேலைக்கு வந்த எங்க வீட்டுல வேலை செய்யற அம்மாவுக்கும் எங்க மாமியாருக்கும் நடந்த சம்பாஷனை...

"என்ன சாவித்திரி... பண்டிகைக்கு ஓரம்பரை வருவாங்கன்னு சொன்ன... எல்லாம் வந்துட்டு போயாச்சா" இது எங்க மாமியார்

"அதை எனுங்கம்மா கேக்கறீங்க?"

"ஏன் என்னாச்சு?"

"நானே உங்ககிட்ட அடுத்த வாரம் ஒரு நாலு நாள் லீவ் வேணும்னு கேக்கணும்னு நெனச்சேன்" என அப்பாவியா சாவித்திரி அம்மா ஒரு லுக் விட

"லீவா எதுக்கு?" னு, இதென்னடா வம்புனு ஒரு லுக் விட்டாங்க எங்க மாமியார்

"அது... ஓரம்பரை யாரும் வருலிங்கம்மா... அவிக வந்தா நாலு பேருக்கு போக்குவரத்து செலவு...நான் போனா ஒருத்தி தானங்க"

சூப்பர் ரீசன்...இதுக்கு மேல என்ன பேச முடியும்னு எங்க மாமியார் "சரி சரி... பாத்திரம் கழுவிட்டு வெயில் அதிகமாறதுகுள்ள துணி தொவைச்சுடு"

"சின்னய்யாவும் அம்மாவும் (ரங்க்ஸ்ம் நானும்) இருக்கறதால கழுவற பாத்திரமும் ஜாஸ்திங்க துணி நாளைக்கு தொவைக்கிறேன்"

எங்க மாமியார் ஒண்ணுமே பேசல... நான் தான் டென்ஷன் ஆய்ட்டேன்...

"என்ன அம்மா இது... எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிட்ட plate... மிஞ்சி போனா ஒரு ரெண்டு பாத்திரம் கூட... இதை நானே கழுவி வெச்சு இருப்பேன்" னு எங்க மாமியார்கிட்ட நான் சொன்னதுக்கு

"ஆமா சாமி... இப்பவெல்லாம் வேலைக்கு வர்ற ஆளுக இப்படி தான்... திருப்பி பேசினா வேலைக்கு வர மாட்டாங்க நாளைக்கு... நான் வேற இப்ப சும்மா இருக்காம ஓரம்பர வரலியான்னு கேட்டு இப்ப பாரு நாலு நாள் லீவ் கேக்கறா" னு நொந்துட்டாங்க...

அதுக்கு ரங்க்ஸ் "ஹா ஹா...சொந்த செலவுல சூனியம்"னு கிண்டல் வேற அவங்க அம்மாவை... நேரம் தான்...

எங்க மாமியார் அதுக்கு அப்புறம் சொன்ன விளக்கம் தான் சூப்பர் "இப்பவெல்லாம் எல்லாம் இலவசம் இலவசம்ங்கறாங்க... யாருக்கும் வேலை செஞ்சு சம்பாதிக்கற எண்ணமில்ல... வீட்டு வேலைக்கு வர்ற ஆளுக கம்மி ஆகி போச்சு... அதனால இருக்கறவங்களுக்கு டிமாண்டு"

கொடுமைடா சாமி?
 
...

Wednesday, December 08, 2010

அமெரிக்கா...வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு...
இப்படி பின் நவீனத்துவம் ரேஞ்சுல எல்லாரும் வெக்கற மாதிரி கசாமுசான்னு தலைப்பு வெச்சு போஸ்ட் போடணும்னு ரெம்ப நாள் ஆசை எனக்கு ... அதான் போட்டுட்டேன்... ஹி ஹி ஹி...

மைண்ட்வாய்ஸ் : தலைப்பு வெச்ச சரி... உள்ள என்ன இருக்கு... அத சொல்லு

நான் : ஏய் மைண்ட்வாய்ஸ் ஒரு விசயம் நல்லா புரிஞ்சுக்கோ.... கமெண்ட் விடறது ரெம்ப சுலபம்... போஸ்ட் எழுதி பாரு அப்ப தெரியும் கஷ்டம்

மைண்ட்வாய்ஸ் : நீ எழுதலைன்னு இங்க யாரு உண்ணாவிரதம் இருக்கா

நான் : என்ன இப்படி சொல்லிட்ட... நான் போஸ்ட் போடலைனா மக்களுக்கு நல்லது கெட்டது எப்படி புரியும்

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா ஹா ஹா

நான் : ஏய் எதுக்கு சிரிச்ச

மைண்ட்வாய்ஸ் : இல்ல வேண்டாம் விடு... சொன்னா நீ ரெம்ப வருத்தபடுவ

நான் : பரவால... ஒழுங்கா சொல்லு

மைண்ட்வாய்ஸ் : அது வேற ஒண்ணுமில்ல... நீ எழுதினா தானே மக்களுக்கு கெட்டது எதுன்னு புரிஞ்சு மத்த நல்ல ப்ளாக் பாப்பாங்கன்னு நீயே ஒத்துகிட்டது நெனச்சு சிரிச்சேன்...

நான் : யேஏஏஏஏஏ...

மைண்ட்வாய்ஸ் : ஹா ஹா ஹா... (என மைண்ட்வாய்ஸ் எஸ்கேப் ஆய்டுச்சு...)

அத விடுங்க... அது பேசினதெல்லாம் ஒண்ணும் மனசுல வெச்சுக்கதீங்க மக்களே...

சரி மேட்டர்க்கு போவோம்...
____________________________________________________________

மொதல்ல தலைப்புல "அமெரிக்கா..." னு இருக்கே...அதுக்கு விளக்கம்

இது என்னோட சொந்த அனுபவம் இல்ல... என்னோட பிரெண்ட் அவங்க பிரெண்ட்க்கு நடந்ததா சொன்ன ஒரு காமெடி எபிசோடு...

என் பிரெண்ட்க்கு பிரெண்ட் (பேரு என்னனு தெரியல) Canada ல இருந்து இந்தியாக்கு vacation போனாங்களாம்... போனவங்க கோயம்புத்தூர்ல ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போய் இருக்காங்க

அங்க சர்வீஸ்க்கு இருந்த ஆள் நெறைய சாரீஸ் எல்லாம் எடுத்து காட்டி இருக்கான். இவங்க "என்ன விலை இவ்ளோ இருக்கு? offer ஒன்னுமில்லையா? விலை கம்மில இல்லையா?"னு கொஸ்டின் மேல கொஸ்டின் போட்டு இருக்காங்க, ஒண்ணும் செலக்ட் பண்ணாமியே

அதுக்கு அந்த கடை ஆள் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி "நீங்க அமெரிக்கால இருந்து வரீங்களா?"

என்ன கொடும சார் இது? விடு ஜூட்...

நம்ம ஊர பொறுத்த வரை அமெரிக்கான அமெரிக்கா மட்டும் தான்...அமெரிக்கா கண்டத்துல இருக்கற கனடா மற்றும் உள்ள நாடுகெல்லாம் கணக்குலேயே வர்றதில்ல...

இதை வெறும் காமெடி எபிசோடா சிரிச்சுட்டு மட்டும் ஒதுக்க முடியலங்க...

நெஜமாவே இந்த வாட்டி ஊருக்கு போனப்ப பணபுழக்கம் ரெம்ப ஜாஸ்தி ஆகி இருக்கறத பாக்க முடிஞ்சுது, நான் மூணு வருஷம் கழிச்சு போறதால அப்படி தோனுச்சானு தெரியல

இங்க வந்த புதுசுல எதை வாங்கணும்னாலும் multiplied by 32 (அப்போ கனடா டாலர் = 32 இந்தியன் ரூபாய்) போட்டு போட்டு யோசிப்போம்... இப்போ நிலைமை தலைகீழ்

நெஜமாவே இந்தியால ஷாப்பிங் போனப்ப எல்லாம் divided by 43 போட்டு போட்டு கனடாலையே வாங்கிக்கலாம் போல இருக்கேனு தோணற மாதிரி இருந்தது போங்க

எனக்கு புரிஞ்ச வரைக்கும் (தப்புனா திருத்துங்க) ஊருல இருக்கற விலைவாசிக்கு ஒரு குடும்பத்தோட மாத வருமானம் 30000 ரூபாய் இருந்தாதான் கொஞ்சம் ஸ்டாண்டர்ட் லைப் ஸ்டைல் இருக்கும்னு தோணுச்சு

அப்படி மாசம் 30000 சம்பாதிக்கற மக்கள் தொகை 20% னே வெச்சுக்கலாம் அதிகபட்சம், மிச்சம் 80% இருக்கறவங்களோட நிலை என்ன?

ஒரு மொழம் மல்லிகை பூ முப்பது ரூபா, என்ன கொடுமைங்க இது?

Globalisation, MNC வரவுகள் தான் இதுக்கு காரணம்னு முழுசா சொல்ல முடியல... அதுவும் ஒரு காரணம் தான், வேற நெறைய காரணங்கள் இருக்கு

முக்கியமா... இன்னைக்கி இந்தியால மார்க்கெட் Sellers Market ஆ இருக்கு... விக்கறவன் என்ன விலை வெச்சாலும் கேள்வி கேக்காம வாங்கற ஆட்கள் எண்ணிக்கைல கூடி இருக்காங்க

அதுக்கு அதிக சம்பளம் குடுக்கற MNC கள் தானே காரணம்னு நீங்க கேக்கலாம்... அது எப்படிங்க... காசு இருந்தா செலவு பண்ணனும்னு இருக்கா... இந்த மனப்பான்மை தான் மாறனும். அதை விட்டுட்டு எல்லாம் இந்த IT கம்பெனிகாரன் பண்றது தான்னு சொல்றது சரி இல்ல...
 
பேரம் பேசறது indecentனு நினைக்கற மனப்பான்மை இருக்கு. This attitude has to change...

நான் ஸ்கூல் காலேஜ் படிச்ச நாட்கள்லயெல்லாம் இந்தியாலேயே எங்கயாச்சும் வெளியூர் போறப்ப ரெம்ப பேரம் பேசினா "உங்களுக்கு கோயம்புத்தூரா?" னு நக்கலா கேள்வி வரும்... இப்ப பாருங்க நெலமைய...

முன்னியெல்லாம் ஒரு கடைல விலை கேட்டுட்டு "இவ்ளோ விலையானு" நீங்க நகந்தா... "இருங்கம்மா பாருங்க அப்புறம் விலை பேசுவோம்" சொல்வான்

ஆனா இப்போ "நீ இல்லேனா வேற ஒருத்தன் வாங்குவான் போ"ங்கற மனநிலை தான் விக்கறவங்ககிட்ட இருக்கு

அதை விட பெரிய கொடுமை என்னனா விலை ஜாஸ்தி இருக்கற பொருள் தான் நல்ல பொருள்னு ஒரு கொடுமையான impression வேற நெறைய பேரு மனசுல இருக்கு... அது விக்கரவனுக்கு விலை ஏத்த இன்னும் வசதியா போச்சு... விலை கூடின பொருட்கள மட்டும் தான் வாங்கறது ஒரு prestige value வா வேற சிலர் பாக்கறாங்க... ரெம்ப கொடுமைங்க இதெல்லாம்

நீங்க கனடால எல்லாம் பேரம் பேசி தான் வாங்குவீங்களானு நீங்க கேக்கலாம்? நிச்சயமா... furniture appliances ல இருந்து துணி கடைல கூட பேரம் பேசுவேன் நான்

நான் மட்டுமில்ல... இங்க பெரும்பான்மையான மக்கள் அத்தியாவிசிய பொருட்கள் தவிர மத்ததை நல்ல டீல் இருக்கற சமயம் மட்டும் தான் வாங்கறாங்க

ஆனா டீல் இருக்குதுங்கரதுக்காகவே வேண்டாதத வாங்கி வீட்டை நெறைசுக்கற அரை லூசுகளும் சிலர் உண்டு...but exceptions are not examples...right?

Economicsல சொல்வாங்க "when a market is not ruled by consumers, the economy will not flourish" னு... அது 200% கரெக்ட் statement

நீ ஒருத்தி பேசி என்ன மாத்த போறேன்னு சிலர் நினைக்கலாம்... every pebble makes a difference...that's all I can think...
 
ஒரு கனேடிய டாலர்க்கு 2003ல 32 இந்தியா ரூபாய் குடுத்தா போதும்... இப்ப 43  ரூபா தரணும்... ஏன் இப்படி? இது ஒரு வரில பதில் சொல்ற கேள்வி இல்ல தான்... ஆனா இந்த மாற்றம் எப்படி நல்லதாகும்?

இது நல்லதுன்னு வாதிக்கற சிலர் நெறைய interpretations சொல்றாங்க. அதுல ஒண்ணு இங்க... இது போல டாலர் ரேட் கூடும் போது டாலர்ல சம்பாதிக்கறவன் இந்தியால property வாங்குவான்... இதனால இந்தியாவுக்கு அந்நிய செலவாணி வருதில்ல நல்லது தானேனு... this is also called literal meaning...

அமெரிக்கா / கனடாகாரன் இந்தியால property வாங்கினா இந்தியாவோட தனி மனிதனுக்கு இதுல என்ன லாபம்... I don't see any direct or indirect relationship to this theory...

கேட்டா per capita income கூடுமல்லனு சொல்லுவாங்க...

அது என்ன per capita income , அது கூடினா என்ன லாபம்னா... In simple terms, Per capita income is defined as Total Income for the country divided by Total Population... அதாவது நாட்டோட மொத்த வருமானம் வகுத்தல் மக்கள் தொகை... அது கூடினா என்ன லாபம்னா வெளி உலகத்துல நாட்டோட மதிப்பு உயரும்...

இன்னும் தெளிவா சொன்னா... மும்பைல 43 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புள்ள வீடு கட்டுற அம்பானியும், 43 பில்லியன்க்கு எத்தனை சைபர்னு கூட தெரியாத நம்ம அம்பாசமுத்திரம் அம்பானியும் ஒரே கணக்கு இந்த calculationக்கு

என்ன கொடும சார் இது?

ஏன் இப்படி சொல்றாங்கன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு உதாரணத்தோட சொல்றேன்

ஒரு வீட்டுல நாலு பசங்க இருக்காங்க. அதுல ஒரு பையன் நல்ல சம்பாத்தியம், கார் பங்களானு வாங்கறான் அவன் பேருல தான் எல்லா சொத்தும். மத்த மூணு பசங்களும் அதே வீட்டுல தான் இருக்காங்க, பெருசா வேலை வசதினு இல்லை

ஆனா அந்த குடும்பத்த பத்தி பொதுவா வெளிய விசாரிச்சா என்ன சொல்வாங்க. "அவங்களுக்கு என்ன, கார் இருக்கு பங்களா இருக்கு நிலபுலன் இருக்கு... கோடீஸ்வரங்கய்யா...பெரிய பார்ட்டி" னு சொல்லுவாங்க... ஆனா தனி மனித ஈடு பத்தி அங்கே சொல்லபடலை

அதே தான் நாட்டுலயும் நடக்குது... statistics படி இந்தியாவோட per capita income 2009 க்கு US$ 1032... அதாவது அம்பானி / அம்பாசமுத்திரம் அம்பானி எல்லாருக்கும் அதே தான்...

ஏன் இந்த per capita வுக்கு இவ்ளோ முக்கியத்துவம்னு நீங்க கேக்கலாம்... அதை வெச்சு தானே MNCல இருந்து எல்லாமும் உள்ளே வரும்,  அமெரிக்கால இருந்து எல்லா நாடும் ஒப்பந்தம் போடும், அதாவது குடும்ப சொத்த பாத்து அந்த சம்பாத்தியம் இல்லாத மூணு பசங்கள்ள ஒருத்தனுக்கு பெரிய எடத்து பொண்ணை கட்டி குடுக்கற மாதிரி தான்...

இதுக்கு மேல நான் பேசினா கிளாஸ் ரெம்ப போர் டீச்சர்னு சொல்லுவாங்க... சரி விடுங்க...

என்னாச்சு அப்பாவி... சும்மா ஹி ஹி ஹா ஹானு பதிவு போட்டுட்டு  போறத உட்டுட்டுனு கேக்கறீங்களா? சும்மா தோணுச்சுங்க சொன்னேன்... அவ்ளோ தான்... சத்தியமா நான் அரசியலுக்கெல்லாம் போக போறதில்ல... ஹா ஹா ஹா
____________________________________________________________

அமெரிக்கா...வேலைக்காரி... மற்றும் பின்ன அறிவிப்பு...னு தலைப்பு வெச்சுட்டு ஒரு விஷயம் பத்தி எழுதவே பதிவு இழுத்துடுச்சு... மிச்சத்த அடுத்த போஸ்ட்ல எழுதறேன்... டாட்டா... பை பை...

மைண்ட்வாய்ஸ் : எப்படி எல்லாம் போஸ்ட் எண்ணிகைய கூட்டுரதுனு நீ ஒரு கோச்சிங் க்ளாஸ் போட்டா வாழ்க்கைல எங்கயோ போய்டுவ அப்பாவி தங்கமணி

அப்பாவி : ஏய் இன்னும் போலயா நீ... உன்ன... (என அப்பாவி ஆயுதம் தேட மைண்ட்வைஸ் எஸ்கேப்...)

...

Monday, December 06, 2010

சிந்துபைரவி... (சிறுகதை)


"மேடம் உங்களுக்கு தான் போன். CM லைன்ல" என என் செக்ரட்டரி அஞ்சலி பதட்டமாய் வர

"குடு... " என வாங்கினேன் அதை விட பதட்டமாய்

மறுமுனையில் "ஹலோ சிந்து. எப்படிமா இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் சார்"

"உங்க புத்தகத்துக்கு சாகித்யா அகாடமி விருது குடுத்துருக்கறதா பேப்பர்ல பாத்தேன். பாராட்டுக்கள்"

"ரெம்ப நன்றிங்க சார். நீங்க கூப்பிட்டதுல ரெம்ப ரெம்ப சந்தோஷம் சார்"

"சரிம்மா. அப்புறம் பேசுவோம்"

"தேங்க்ஸ் சார்" என பேசியை அணைத்து அஞ்சலியிடம் கொடுத்தேன்

"மேடம், CM ஏ கூப்ட்டு பேசி இருக்காருன்னு நெனைக்கரப்ப ரெம்ப சந்தோசமா இருக்கு மேடம்" என அஞ்சலி மகிழ்ச்சி காட்ட

"ஆமாம் அஞ்சலி. எனக்கும் சந்தோசமாத்தான் இருக்கு"

"இந்த சின்ன வயசுல இவ்ளோ பெரிய அவார்ட் யாரும் வாங்கினதில்லைன்னு எல்லா பேப்பர்லயும் ரெம்ப புகழ்ந்து எழுதி இருக்காங்க மேடம்" என அவள் கூற அதே நேரம் மறுபடியும் தொலைபேசி அலறியது

எனக்கு தான் என அஞ்சலி கூற மகிழ்வோடு பேசினேன். மேலும் மேலும் வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருந்தன

"சரி அஞ்சலி இனி யாராச்சும் போன் பண்ணினா நீயே பேசிடு. நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடு. காலைல இருந்து போன் அட்டென்ட் பண்ணி பண்ணி ஒரே அலுப்பா இருக்கு"

சரி மேடம் என அஞ்சலி விலக எனக்கு மனதில் இருந்த உற்சாகத்தில் அப்படியே பறக்க வேணும் போல தோன்றியது

அதை தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் பாராட்டு விழாக்களும் மாலை மரியாதைகளுமாகவே இருந்தது

அன்று மிகவும் அலுப்பாய் இருந்தது. ஆனாலும் விடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன

"ஐயோ போதும்... எனக்கு இந்த விருது பாராட்டு ஒண்ணும் வேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க" என வாய் விட்டு கத்திய அதே நிமிடம்

"ஏய் சனியனே... எந்திரி மொதல்ல... பத்து மணி வரைக்கும் வயசு பொண்ணு தூங்கினா வெளங்கிடும் வீடு" என அம்மாவின் கத்தலில் நான்  ஒன்றும் புரியாமல் விழிக்க

"என்னடி முழிக்கற? விடிய விடிய ப்ளாக் எழுதறேன்னு உக்காந்துட்டு விடியரப்ப தூங்க வேண்டியது. அப்புறம் விருது வேண்டாம் பாராட்டு வேண்டாம்னு கனவு கண்டுட்டு கத்த வேண்டியது. எந்திரிச்சு போய் குளி மொதல்ல. காலேஜ் லீவ் விட்டா இதே பொழப்பா போச்சு...ச்சே" எனவும்

அடச்சே... எல்லாம் கனவா... ஹும்...அதானே எனக்காவது "சாகித்யா அகாடமி விருதாவது"...சரி கனவுலயாச்சும் வாங்குவோம் என நினைத்து கொண்ட சிந்து, அம்மா பைரவி மறுபடியும் திட்டும் முன் இடத்தை காலி செய்தாள்

அப்பாவி நோட்ஸ்:
ஐ... நான் கூட ஒரு பக்க கதை எழுதிட்டனே... ஹா ஹா... சக்சஸ்...

அப்புறம் சினேஹா படம் போட்டதுக்கும் இந்த போஸ்ட்க்கும் என்ன சம்மந்தம்னு உங்களுக்கு ஒரு டவுட் வரலாம்... வரலாம் என்ன... வரும்... உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா?

அது ஒரு விட்ட குறை தொட்ட குறைங்க...

அது என்னன்னா? "சிந்துபைரவி" படத்தோட ரியல் ஹீரோயன் யாரு? சுஹாஷினி (மணிரத்தினம்). சினேஹாவோட ரியல் பேரு என்ன? சுஹாஷினி... இதான் அந்த விட்ட குறை தொட்ட குறை... Righto? (ஒகே ஒகே... ப்ளட் பிரஷர் செக் பண்ற machine ஸ்டாக் இல்ல... ஸ்டாக் வந்தப்புறம் ஆளுக்கு ஒண்ணு ப்ரீயா தரப்படும் சரிங்களா... அதுவரைக்கும் bye bye)


...

Friday, December 03, 2010

எனக்கும் ஒரு ரோஸ்ட்... (ஹா ஹா ஹா)


நன்றி முதலில்:
"ஊருக்கு போறேன்" போஸ்ட்ல நெறைய வோட்டு போட்டுடீங்களேனு பீல் பண்ணினதுக்கு சேத்து வெச்சு "வந்தேன் வந்தேன்" போஸ்ட்லயும் வோட்டை அள்ளி விட்டதுக்கு நன்றி நன்றி நன்றி எல்லாருக்கும்

சரி போஸ்ட்க்கு போவோம்...
 
நான் ஊருக்கு போன சமயம் நெறைய காமெடி கலாட்டா எல்லாம் நடந்துச்சு...

(நீ போன டிராஜடிய சமாளிக்க இதெல்லாம் வேணும் தானே - Mindvoice)

நடந்த எல்லா காமெடிலயும் இதான் டாப்பு...
ஏன்னா எங்களுக்கு வெச்சான் ஒருத்தன் ஆப்பு...
ச்சே... என்னதிது டி.ஆர் வாடை வீசுது வர வர...சரி விடுங்க

தீபாவளி ஷாப்பிங் போன அன்னிக்கி வடகோவை அண்ணபூர்ணால சாப்பிட போனோம்

நாங்க தான் பெரிய குடும்பமாச்சே... ஒரு டேபிள் எல்லாம் பத்தலை...

நான் / அம்மா / தங்கை / பாட்டி (அரட்டை அடிக்க சௌகரியமா) ஒரு டேபிள்லயும், ரங்க்ஸ் / தங்கை கணவர் / எங்க அப்பா ஒரு டேபிள்லயும் ஒரு வழியா எடம் பிடிச்சோம், அவ்ளோ கூட்டம் பண்டிகை சமயம்ங்கறதால

சாப்பிட்டு முடிக்கவும் பில் வந்தது, எங்கப்பா பில் கட்ட போறதுக்கு முந்தி என் தங்கை கணவர் "ஒரு நிமிஷம் பில் குடுங்க மாமா, சரி பாத்துடலாம்"னு சொன்னாரு, அவருக்கு என்ன அனுபவமோ தெரியல

ரெண்டு டேபிள்க்கும் தனி தனி பில் போட்டு இருந்தான், எங்க டேபிள் பில் சரியா இருந்தது

அவங்க டேபிள் பில்ல ஒரு ரோஸ்ட், ஒரு ஊத்தாப்பம், ஒரு பரோட்டா, ஒரு காபி எல்லாம் எக்ஸ்ட்ராவா இருந்தது. இது எல்லாமும் இவங்க ஆர்டர் பண்ணின items தான், ஆனா ஒரு ஒரு எண்ணிக்கை கூட இருந்தது

அப்புறம் சர்வர கூப்பிட்டு விசாரிச்சா "உங்க டேபிள்ல நாலு பேரு சாப்பிட்டதுக்கு இதான் பில்லு"னு போட்டான் ஒரு போடு

என்னாது?னு ஒரு லுக்கு விட்டாரு எங்க டாடி... அப்புறம் தான் மேட்டர் புரிஞ்சது

இவங்க மூணு பேரு உக்காந்திருந்த டேபிள்ல ஒருத்தன் கூட்டத்துல வேற இடம் இல்லைன்னு சொல்லி அந்த நாலாவது ஆளா உக்காந்து ரெம்ப விவரமா இவங்க ஆர்டர் பண்றதையே தானும் கேட்டு சாப்ட்டுட்டு கம்பி நீட்டிட்டான்...

அப்புறம் சர்வர் அதுக்கு பொறுப்பு ஏத்துட்டு பணம் குடுத்தது தனி கதை

அந்த நிமிஷம் டென்ஷன் ஆனாலும், அப்புறம் இதை நெனச்சு நெனச்சு சிரிச்சது தனி காமெடி ட்ராக்...

வெளிய வந்து வண்டில ஏறினப்புரம் இவரும் (ரங்க்ஸ்) அவரும் (தங்கையோட ரங்க்ஸ்) சொன்ன டயலாக்ஸ் தான் சூப்பர்...ஹா ஹா ஹா

தங்கையோட ரங்க்ஸ்: அவன் நம்ம டேபிள்ல உக்காறதுக்கு முன்னாடி பெர்மிசன் எல்லாம் கேட்டான்.. .ரெம்ப நல்லவன்னு நம்பிட்டமே...

தங்கை: அவனுக்கு தெரிஞ்சுருக்கு உங்கள பத்தி நல்லா...

(நானும் தங்கையும் சிரிப்போ சிரிப்பு)

ரங்க்ஸ்: அவன் என்ன ஸ்டைலா ஆர்டர் பண்ணினான் தெரியுமா... ரஜினி "நான் ஒரு தடவ சொன்னா..." டயலாக்க்கு ஸ்டைலா ஒரு விரல் தூக்குவாரே அதே மாதிரி சொன்னான் "எனக்கும் ஒரு ரோஸ்ட்"னு... ச்சே ஒரு போட்டோ எடுத்து இருக்கணும் அவன..மிஸ் பண்ணிட்டேன்...

நான்: ம்... போட்டோ எடுத்து வீட்டுல மாட்டி தான் வெக்கணும் நீங்க ஏமாந்த கதைய சொல்ல... ஹா ஹா ஹா

ரங்க்ஸ்: அவன் அவசரம் அவசரமா சாப்பிடரப்பவே நான் யோசிச்சேன்...

நான்: இப்ப சொல்லுங்க எல்லாத்தையும்...

தங்கையோட ரங்க்ஸ்: அவன் நாம ஆர்டர் பண்ணின ஐட்டத்தயே ஆர்டர் பண்ணினப்ப கூட சந்தேகம் வராம போச்சே

ரங்க்ஸ்: நம்ம ஆர்டர் பண்ணின அதே மாதிரி Syncronizedஆ வேற ஆர்டர் பண்ணினானே... பயங்கரமான பிரைன் உள்ள திருடன் தான்

நான்: இதெல்லாம் நல்லாத்தான் கவனிச்சு இருக்கீங்க... ஏமாத்தினத தான் கோட்டை விட்டுடீங்க...

தங்கையோட ரங்க்ஸ்: நல்லாத்தான் இருந்தான்... கடைசீல "அண்ணன் குடுப்பாரு"னு கை காட்டிட்டு போய்ட்டான் பாவி... ஹும்...

(குடும்பம் மொத்தமும் சிரிப்போ சிரிப்பு...)

ஜோக்ஸ் அபார்ட்... ஊர்ல எப்படி எல்லாம் நூதன முறைல திருட்டு ஆரம்பிச்சுருக்கு பாருங்க... கொடுமைடா சாமி

இதுல முக்கிய பங்கு சினிமாவுக்குனு எனக்கு தோணுது. ஆனா சினிமால வர்ற நல்ல விசியங்கள எத்தன பேரு செயல்படுத்தி பாக்குறாங்க

இந்த மாதிரி ஐடியாஸ் மட்டும் நல்லா யூஸ் பண்ணிக்கறாங்க

"ஐயன்" படத்துல சூர்யா வைரம் கடத்திட்டு வர்ற சீன் பாத்தப்ப எனக்கு இதை எவனும் செயல் படுத்தி பாத்தா என்ன ஆகும்னு பயமா இருந்தது... ஒருவேள ஏற்கனவே நிஜத்துல நடந்ததோ என்னமோ. எனக்கு தெரியல...

நேரடியா கைல இருந்து பைய திருடிட்டு போற திருடன்கிட்ட இருந்து தற்காத்துக்க தான் நமக்கு சின்னதுல இருந்து சொல்லி தர்றாங்க

இந்த மாதிரி நூதன முறைகள் எல்லாம் ரெம்ப புதுசாதான் இருக்கு

இப்படி எல்லாம் நடக்குது பாத்து பத்திரமா இருங்கனு சொல்ல தான் இந்த பதிவு... முக்கியமா பண்டிகை சமயங்கள்ல

கெளரவம் பாக்காம சில விசயங்கள நாம கடைபிடிக்கறது கூட இந்த மாதிரி ஏமாற்று வலைல இருந்து தப்பிக்க உதவும், அவற்றில் எனக்கு தோணின சில:-

1. ஹோட்டல்ல சாப்பிட்டா பில் சரி பாக்கறதை நெறைய பேரு செய்யறதில்ல (நானும் தான்). அதை கண்டிப்பா செய்யணும்

2. பெரிய கடைகள்ல இப்பவெல்லாம் வேற வேற ப்ளோர்ல பொருள் செலக்ட் பண்ணி Pay பண்ணிட்டு கீழ ப்ளோர்ல வந்து ஒண்ணா சேந்து வாங்கிக்கறது பழக்கமா இருக்கு. கண்டிப்பா கவர் பிரிச்சு செக் பண்ணனும் கடைய விட்டு வெளிய வர்றதுக்கு முந்தி

3, இப்ப நூறு ரூபா நோட்டும் ஐநூறு ரூபா நோட்டும் ஒரே கலர்ல இருக்கு, நெறைய பேரு மாத்தி குடுக்கறதை நானே இந்த முறை பாத்தேன், கொஞ்சம் கவனம் ப்ளீஸ்

4. இப்ப இருக்கற முக்கியமான ஒரு பிரச்சனை பிள்ளைகள் கடத்தப்படறது, ஷாப்பிங் பிசில எப்பவும் பிள்ளைகள் மேல ஒரு கண்ணு இருக்கறது அவசியம்

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான், ஒத்துக்கறேன்

ஆனா நாம கவனமா இருக்கறதால சில திருட்டுகள தவிர்க்க முடிஞ்சா அது பண விரயத்த மட்டுமில்ல மன நிம்மதியையும் குடுக்கும்

அன்னபூர்ணால நாங்க ஏமாற இருந்தது பெரிய பணம் இல்லை தான், ஆனா கிடைச்சது ஒரு நல்ல அனுபவம், சிரிக்கவும் சிந்திக்கவும், ofcourse பதிவெழுதவும்... ஹா ஹா ஹா

Yet more stories to come from India trip...no escapes possible...ha ha

...

Wednesday, November 24, 2010

வந்தேன் வந்தேன்...


நானே நானே
வந்தேனேனே
வந்ததுமே
ப்ளாக்கினேனே

கமெண்ட்ஸ் பாத்து
கந்தல் ஆனேன்
கண்ணீருல
கரைஞ்சு போனேன்

இன்ட்லி வோட்டு
பாத்து பாத்து
இதயம் கனத்து
போச்சுனேனே

ஹ்ம்ம்... இப்படி எல்லாருமா சேந்து பொலம்ப விட்டுடீங்களே... ஹ்ம்ம்... எதுக்கா? ஏன் கேக்க மாட்டீங்க?

ப்ளாக் ஆரம்பிச்சு நான் உசுர குடுத்து எழுதின 87 போஸ்ட்ல ஒன்ணத்துக்காச்சும் இத்தன வோட்டு விழுந்துருக்கா? நான் ஊருக்கு போறேன்னு சொன்ன போஸ்ட்க்கு 42 வோட்டு.... என்ன கொடும சார் / மேடம் இது?

இருங்க இருங்க எல்லாரையும் எழுதியே பழி வாங்குறேன்... இதுக்கெல்லாம் பயந்து போறவளா நானு... கொங்கு நாட்டு சிங்கி'ல (சிங்கம் female எபக்ட்க்கு சொல்றது)....ஒகே ஒகே... கூல் கூல்னு யாரோ சொல்றீங்க... அதனால விட்டுடறேன்... ஹ்ம்ம்... (ஹி ஹி ஹி)

நானே ஊருக்கு போயிட்டு திரும்ப வந்து, எல்லாரையும் பிரிஞ்ச சோகத்த மறக்க ப்ளாக் பக்கம் நம்ம மக்கள் இருக்காக நமக்குனு வந்தா, இந்த அக்கபோரு ஞாயமா உறவுகளே...

தக்குடுக்கு சொன்னது தான் எல்லாருக்கும் "Elephant க்கு ஒரு காலம் வந்தா cat க்கு ஒரு காலம் வருமுங்கோ..." ஆமாம் சொல்லிட்டேன்... ஹ்ம்ம்

சரி பொலம்பல் போதும் மேட்டர்க்கு போவோம்...

பயம் வேண்டாம், பயண கட்டுரை எல்லாம் போட்டு கொல்ற எண்ணமில்ல... போனமா வந்தமான்னு சுருக்கமா சொல்லிடறேன்.. (டேமேஜ் அப்படி...ஹ்ம்ம்...)

சரிங்க... இங்க இருந்து கெளம்பி நேரா துபாய் போனோமா. நேரானா நேரா இல்ல... flight அப்படி இப்படி வளைஞ்சு நெளிஞ்சு தான் போய் இருக்கும், அதை பத்தி விவரம் எல்லாம் நீங்க பைலட்கிட்ட தான் கேக்கணும்

என்னை ஓட்ட விட்டுருந்தா நான் நேராவே கூட்டிட்டு போய் இருப்பேன், ஆனா எங்கேனு எல்லாம் கேக்க கூடாது. கிட்டத்தட்ட பதினாலு மணிநேரம் flight, அதான் பெரிய கொடுமை

ரங்க்ஸ் சில வருஷம் அந்த ஊர்ல இருந்ததால துபாய்ல இருந்த அவரோட நட்பு வட்டத்தை சந்திச்சோம். அப்படியே ஹுஸைனம்மா / காயத்ரி / ஜெய்லானி எல்லார்கிட்டயும் சொல்லி ஒரு துபாய் பதிவர் சந்திப்பு போட்டுடனும்னு தான் துடித்தது மனம்

ஆனா ரெண்டு நாளுல இவரோட நட்பு அளாவலுக்கே போதலை, எல்லாரையும் ரெம்ப நாள் கழிச்சு பாத்ததுல எனக்கும் ரெம்ப சந்தோசமாவும் இருந்தது

நாங்க அங்க இருந்தப்ப இருந்ததுக்கு துபாய் ரெம்பவே மாறிபோச்சு இந்த ஏழு வருசத்துல. புதுசா மெட்ரோ ரயில், உலகத்தின் உயரமான கட்டிடம், Palm பீச், நெறைய புது கட்டிடங்கள் எல்லாம் முடிஞ்ச வரை பாத்தோம்

அப்புறம் இந்தியா போனோம், சென்னை ஏர்போர்ட்ல சாலமன் பாப்பையாவை பாத்தோம், கூட ராஜாவும் இருந்தாரு. ஏதோ தீபாவளி பட்டிமன்றம் போல இருக்குனு நெனச்சுட்டோம். ஏன் தொந்தரவு பண்ணனும்னு பேசலை

உண்மைய சொல்லணும்னா எப்படா கோயம்புத்தூர் போய் சேருவோம்ங்கற அவசரத்துல வேற எதுலயும் கவனம் பதியல

என்னோட அவசரத்துக்கு ஏத்தாப்ல, சென்னைல Flight ஏறி உக்காந்து சீட் பெல்ட் கூட போட்டப்புறம் கோயம்புத்தூர்ல லேண்டிங் பண்றதுக்கு தகுந்த சிதோஸ்னம் இல்லைனு அப்படியே உக்கார வெச்சுட்டான்

செம எரிச்சலா போச்சு, என்ன பண்ண முடியும்? இதென்ன 102A டவுன் பஸ்சா? நிறுத்துயா நான் எறங்கி வேற வண்டி ஏறிக்கறேன்னு சொல்றதுக்கு, பேசாம ஒரு மணிநேரம் நொந்து போய் இருந்தோம்

ஒரு வழியா கோயம்புத்தூர் போய் சேந்தோம், ஒண்ணரை வயசு குழந்தையா பாத்த என் தங்கை மகள் என்னை அந்நியமா பார்ப்பாளோனு பயந்து போய் இருந்தேன், ஆனா என்னை பாத்ததும் ஓடி வந்து கட்டிக்கிட்டா... ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு அந்த நிமிஷம்...

அம்மா அப்பா அத்தை மாமா உறவு மக்கள்னு அப்படியே அன்பு வெள்ளத்துல மெதந்துட்டு இருந்தோம் அன்னிக்கி பூராவும்

ஸ்டாண்டர்ட்ஆ ஒரு அஞ்சு கேள்வி எல்லாரும் கேட்டாங்க எப்பவும் போல

- எத்தனை நாள் இருப்ப?
- அங்க ரெம்ப குளிரா?
- எப்ப ஊருக்கே வந்து செட்டில் ஆகற?
- ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி இருக்கு?
- சமையல் எல்லாம் ஒழுங்கா செஞ்சுகறையா? (இதான் கொஞ்சம் டெரர் கிளப்பின கேள்வினு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல)

மறுநாள் அப்பா தீபாவளி பர்சேஸ் போகணும்னு கூட்டிட்டு போயிட்டாரு. RMKV கடை புதுசா கோவைல போட்டு இருக்கான், எல்லாம் அங்கேயே வாங்கிக்கலாம்னு எல்லாரும் சொல்ல அங்கே போனோம்

போற வழில வடகோவை அன்னபூர்ணால ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்தது, அதை தனி பதிவா போடறேன் (ஹா ஹா ஹ). அப்புறம் ஜவுளி எல்லாம் முடிச்சு வீடு வந்து சேந்தப்ப கிட்டத்தட்ட நைட் மணி பத்து

ஷாப்பிங் என்னமோ கொஞ்சம் தான் (அதை பில் கட்டின எங்க அப்பாகிட்ட கேட்டாதான் தெரியும்), ஆனா டிராபிக் மகா கொடுமைடா சாமி

இருபது கிலோ மீட்டர் தூரத்த ரெண்டு மணி பயணம் செஞ்சோம். சில இடங்கள்ல நான் கண்ணை மூடி உக்காந்துட்டேன். எதிர்புறம் / சைடுல வர்ற டிராபிக் பாத்தா ரெம்ப பயமா இருந்தது

இதே ஊர்ல தான் எத்தனை வருஷம் ஸ்கூல் காலேஜ்னு பஸ்ல போய் இருக்கேன். அப்பவெல்லாம் இவ்ளோ கார் / டூ வீலர் கிடையாது. மக்கள் தொகையும் கூடி போன மாதிரி தோணுது

எந்த கடைல பாத்தாலும் பீகாரிஸ், அஸ்ஸாமிஸ், நேபாளிஸ் வேலைக்கு இருக்காங்க. இது தான் நான் பார்த்த பெரிய மாற்றம் ஊர்ல

அப்புறம் சில வருசங்களுக்கு பிறகு குடும்பத்துல எல்லாரும் சேந்து கொண்டாடின தீபாவளி மறக்க முடியாத ஒரு நிகழ்வு

நெறைய போட்டோ வீடியோனு சேமிச்சுட்டு வந்திருக்கேன், அதானே இனி மறுபடி எல்லாரையும் பாக்கற வரை டானிக்

நெறைய உறவுகளை சந்திச்சேன். நெறைய பேரு நேரம் குறைவுங்கர சூழ்நிலைய புரிஞ்சுட்டு அவங்களே வந்து பாத்துட்டு போனாங்க. அது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது

வர முடியாத நிலைல இருக்கற வயோதிக உறவுகளை நாங்க போய் பாத்தோம், அதில் நாங்க போன முறை பாத்த சில உறவுகள் இப்ப இல்ல. மனசுக்கு ரெம்ப வேதனை தந்த நேரம் அது

இந்த முறை பாத்த சிலரை மறுபடியும் பார்போமானு மனசுல தோணினதை மறுக்க முடியல. பணத்துக்காக வாழுற இந்த நாடோடி வாழ்கையின் மிச்சம் அதான்னு கொஞ்சம் வெறுப்பா உணர்ந்த தருணம் அது

முதல் வாரம் இப்படி ஓடி போச்சு. அப்புறம் ரெண்டாவது வாரம் வழக்கம் போல காய்ச்சல், சளி, infection. ஆனா கேக்கறதுக்கு முன்ன மிளகு ரசமும், அம்மாவின் தைலம் தடவலும் இன்னும் கொஞ்சம் நாள் படுத்து இருப்போம்னு தோண வெச்சது நிஜம், பொய் சொல்ல விரும்பலை

இனிமே ஊருக்கு போறப்ப செய்ய வேண்டிய லிஸ்ட்ல ரெண்டு நாளாச்சும் காய்ச்சல் வந்து கவனிப்பை அனுபவிக்கணும்ங்கறதை லிஸ்ட்ல சேத்துப்பேனு நினைக்கிறேன்... ஹா ஹா

மூணாவது வாரம், அதாவது கடைசி வாரம் கொஞ்சம் ஷாப்பிங், டெய்லர்கிட்ட அலைஞ்சது (அந்த கொடுமைய மட்டும் தனி பதிவா போடறேன் பின்ன), பாக்கிங் அப்படி இப்படினு ஓடி போச்சு

இத்தனைக்கு நடுவுலயும் குலதெய்வ கோவில் விசிட், அம்மா மற்றும்               அம்மா(மாமியார்) உனக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் பாத்து பாத்து செஞ்சத ருசிச்சது, நண்பர்கள் விசிட் அடிச்சது, தங்கையோட விடிய விடிய அரட்டை, அவ வாண்டுக பேச்சுல சின்ன வயசு எங்க நாட்கள அசை போட்டது இப்படி நெறைய நெறைய

எழுதினா எழுதிட்டே இருப்பேன், ஆனா பாவம் நீங்க, வேண்டாம் விட்டுடறேன்... ஹா ஹா

இது தான் நீ சுருக்கமா சொல்ற அழகானு நீங்க திட்டறது புரியுது... என்ன செய்ய? அப்படியே வள வளனு பேசியே வளந்துட்டோம்... ஹி ஹி ஹி

வேற என்ன சொல்லல... இப்ப ஒரே சோக ராகம் தான் பாடிட்டு இருக்கேன்... மறுபடி எப்படா ஊருக்கு போவோம்னு அதே தோணிட்டு இருக்கு... போயிட்டு வந்து கொஞ்ச நாள் இப்படி தான் எப்பவும்... அப்புறம் நிதர்சனத்துக்கு பழகிடுவோம்... வேற வழி...

ஒகே... கொஞ்சம் மூட் சரி ஆனப்புறம் மெதுவா தனி தனி பதிவா ஊர்ல நடந்த சில காமெடி மற்றும் டிராஜடி நிகழ்வுகளை எழுதறேன்...

இன்னுமா... னு யாருங்க அங்க மயங்கி விழறது...ஹா ஹா... இது வெறும் சாம்பிள் தான் யு சி... ஹா ஹா ஹா...

முடிவல்ல ஆரம்பம்... ஹா ஹா ஹா...

(இன்னுமா திருந்தல இவ...ஹ்ம்ம்... - மைண்ட்வாய்ஸ்)...

Thursday, October 28, 2010

அவள் பறந்து போனாளே... (டாட்டா... பை பை...)எவள் பறந்தா? எங்க பறந்தா?

அந்த "அவள்" வேற யாருமில்ல...சாட்சாத் இந்த அப்பாவி தான்... ஹி ஹி ஹி

எங்க பறந்தானு கேக்கறீங்களா? Actually, sorry there is a gramatical error in that statement

அவள் பறந்து போனாளேனு past tense ல சொன்னது தப்பு... actually it is future tense... இனிமே தான் பறந்து போக போறேன்... எங்கயா?

எல்லாம் நம்ம தாய் நாட்டுக்கு தான்... மூன்று வருடங்களுக்கு பின் என் இந்திய மண்ணில் காலடி தடம் பதிக்க போகும் அந்த தருணத்தை...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... இவ போற flight ஐ எவனும் ஹைஜாக் பண்ணினா கோடி புண்ணியமா போகும் அவனுக்கு - மைண்ட்வாய்ஸ்)

ஏய்... மைண்ட்வாய்ஸ் நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்னை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்... ரெம்ப நோசை நுழைக்கர நீ வர வர...

(ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே - மைண்ட்வாய்ஸ்)

அத உடுங்க... ஊருக்கு போறத நெனச்சாலே flight ஏறாமலே பறக்கற மாதிரி தான் இருக்கு போங்க...

பெரிய லிஸ்ட் போட்டு வெச்சுருக்கேன், என்னவெல்லாம் செய்யணும்னு... பாப்போம் எவ்ளோ நடக்குதுன்னு

- லிஸ்ட்ல மொதல் விஷயம் அம்மாகிட்ட மூணு வருஷ கதை பேசணும்... என்னதான் போன்ல பேசினாலும் நேர்ல பேசறாப்ல வருமா  

- பாட்டி கையால உருட்டி தர்ற கலந்த சாதம் சாப்பிடணும் 

- தங்கையோட மூணு வருஷம் போடாம விட்ட சண்டையெல்லாம் போடணும்...ஹா ஹா ஹா

- என் உடன்பிறப்பு சின்னதுல பண்ணின ரகளை எல்லாம் அவ நாலு வயசு வாண்டுகிட்ட சொல்லி குடுத்து அதையெல்லாம் ரிபீட் பண்ண சொல்லணும்... இதெப்படி இருக்கு? ஹா ஹா அஹ  

- நானும் தங்கையும் சேந்து முடிஞ்ச வரை எங்க அப்பா/தாத்தாகிட்ட வம்பு இழுக்கணும் like gold old days...

- டெய்லி மூணு மொழம் மல்லி/முல்லைனு பூ வாங்கி தல நெறைய வெச்சுக்கணும்  

- சொந்தம் பந்தம் ஊரு உறவு நட்பு எல்லாரோடையும் வாய் வலிக்க பேசணும்  

- அப்புறம் அம்மா கை மணத்தில் மல்லிகை பூ இட்லி சாப்பிடணும்  

- கரண்ட் எப்படியும் போகும்... அப்ப மொட்டை மாடி நிலா வெளிச்சத்துல அம்மா மடில தல வெச்சுட்டு நானும் தங்கையும் ஸ்வீட் non-sense பேசணும், பாட்டுக்கு பாட்டு விளையாடணும்  

- கைல அம்மா குடுக்கற காபி டம்ளர் வெச்சுட்டு பின் கட்டு படில உக்காந்துட்டு வேற எதை பத்தியும் யோசிக்காம எந்த இலக்கும் இல்லாம ரோட்டை வேடிக்கை பாக்கணும், பக்கத்து வீட்டு அக்கா கூட அரட்டை அடிக்கணும் 

- அதிகாலை எட்டு மணிக்கே (!!!) எந்திரிச்சு எங்க வீட்டு கேட் முன்னாடி ஸ்கூல் பஸ்க்கு நிக்கற குட்டி வாண்டுகள பாத்து மலரும் நினைவுகள அசை போடணும் 

- இந்த கருமம் பிடிச்ச ஸ்வெட்டர் / விண்டர் டிரஸ் எல்லாம் மறந்து தினமும் ஆசை தீர புடவை கட்டிட்டு  வீட்டு பக்கத்துல இருக்கற கோவில் எல்லாம் போய் பாக்கணும்  

- எங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒரு முறை போய் பாக்கணும்  

- எல்லாத்தையும் போட்டோ வீடியோனு பதிவு செஞ்சு வெச்சுக்கணும்  

- அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் ருசிக்கணும், Hot chips ல நேந்திரம் சிப்ஸ் வாங்கி கொரிக்கணும்  

- நெறைய ரமணிச்சந்திரன் புக்ஸ் வாங்கணும்...மத்த புக்ஸ்ம் கூட வாங்கணும்  

- கிராஸ் கட் ரோடு, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம் எல்லா பக்கமும் கடை கடையா ஏறி எறங்கி கொஞ்சமா(!!!) ஷாப்பிங் செய்யணும், எங்க ஊரு டவுன் பஸ்ல போகணும்  

- இங்க இருக்கறப்ப ரங்க்ஸ் ஓவர் பிஸி act குடுக்கறதுக்கெல்லாம் சேத்து வெச்சு அங்க போய் பிஸியா கண்டுக்காம பழி வாங்கணும்... ஹா ஹா ஹா (ஜஸ்ட் கிட்டிங்....) 

இப்படி லிஸ்ட் போட்டுட்டே போனா.... இன்னிக்கி முடியாது.. அவ்ளோ இருக்கு... பாவம் நீங்க... விட்டுடறேன்...

(அப்பாவி உன் கருணையே கருணை - மைண்ட்வாய்ஸ்)

கடைசியா ஒன்னே ஒண்ணு... என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சு இன்னும் மூணு வருசத்துக்கு தாக்கு பிடிக்கற மாதிரி வேண்டிய நினைவுகள சேமிச்சுட்டு வரணும்...

ஏர்போர்ட்ல கண்ண கசக்கி அம்மாவ அழ வெக்காம flight ஏறி திரும்பி வரணும்... அவ்ளோ தான்...

சரிங்க... டாட்டா பாய் பாய்... ஒரு மாசம் கழிச்சு பாக்கலாம்... அச்சச்சோ... என்னதிது... அழவெல்லாம் கூடாது... ஒரே மாசம்... இப்படி போய்டும் கண்ணமூடி தெரக்கராப்ல... வந்துடறேன்... சரியா

(ஹும்... நெனப்ப பாருங்க இவளுக்கு... நாமெல்லாம் ஆனந்த கண்ணீர் விடறோம்னு புரியாம ஓவர் பில்ட் அப் பண்ணுது - மைண்ட்வாய்ஸ்)

டாட்டா... சி யு....
 
(விடுதலை விடுதலை விடுதலைனு ஏதோ பாட்டு கேக்குதே... என்னோட பிரமையோ... என்னமோ போங்க... ஹா ஹா அஹ)

கடைசியா ஒரு விஷயம், அக்டோபர் 12th தேதி தினத்தந்தில வந்த "கோவை விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்... போலீஸ் படை குவிப்பு" னு வந்த அந்த நியூஸ்க்கும் நான் ஊருக்கு போறதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்றேன்... (உள்ளூர நடுங்கியபடியே... ஹும்... )

இது நெஜமாவே தினதந்தில வந்த நியூஸ்... எனகென்னமோ என் ப்ளாக் படிச்ச யாரோட சதியோ இதுனு யோசனையாவே இருக்கு? ஹும்... கடவுளே... ஒழுங்கா திரும்பி வந்து சேந்தா உனக்கு தேங்காய் ஒடைக்கிறேன்...

அப்படி வராம போனா என்னோட ப்ளாக்ஐ யாருக்கு உயில் எழுதி வெக்கறதுன்னு நான் தீவிரமா யோசிச்சப்ப, ஐயோ வேண்டாம் ஐயோ வேண்டாம்னு யாரோ கத்தற சத்தம் கேட்டது... சரி உடுங்க... பொது சொத்தாவே இருந்துட்டு போகட்டும்... ஹும்

Happy Deppavali to all of you!!!

ஒகே Bye Bye...

கடைசியா ஒரு விஷயம்...

(டாட்டா... பை பை சொல்லி ஏழு மணி நேரமாச்சு... இவ கெளம்ப மாட்டா... இந்த ஜென்மத்துல... - மைண்ட்வாய்ஸ்)

அப்பாவியின் அப்பாலஜி:
கடந்த ரெண்டு மூணு வரமா உங்க ப்ளாக் பக்கமெல்லாம் அதிகம் வர முடியல... தப்பா நெனைக்க வேண்டாம். ஊருக்கு போறதால ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி அதிகம்... அதுவுமில்லாம கொஞ்சம் நேரம் கிடைச்சப்ப கூட கர்ம சிரத்தையா "அதே கண்கள்..." எழுதவே சரியா போச்சு. முடிக்காம ஊருக்கு போனா உங்க சாபத்துல flight ஏ வெடிச்சுடுமோனு ஒரு பயம் தான்... சரிங்க ஊரு போயிட்டு வந்து உங்க ப்ளாக்ல விட்டதெல்லாம் படிச்சு பக்கம் பக்கமா கமெண்ட் போட்டு உயிரை வாங்குவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... (தக்குடு இப்பவே காத தூரம் ஓடற மாதிரி இருக்கே... ஹா ஹா)

ஒகே... ஒகே... ஐ வில் ஸ்டாப் நௌ... நெஜமாவே டாட்டா... பை பை...  

மாவடுவும் மல்லிகையும்  
மணக்கும் பருப்புபொடியும் 
அதிரசமும் அச்சுமுறுக்கும்
அத்தனையும் வேணுமுன்னு 
அம்மாகிட்ட ஆசையசொன்னேன்  
அவளுந்தான் உருகிப்போனா....

என்னவாங்கி வரட்டுமுன்னு  
என்தாய நானும்கேக்க 
என்புள்ள நீவந்தாபோதும் 
'எனகென்ன வேணுமடி' னா

அம்மா...
குடுக்கத்தான் தெரியுமுனக்கு 
கேக்கத்தான் தெரியுமெனக்கு...
....

Wednesday, October 27, 2010

அதே கண்கள்... (இறுதி பகுதி)இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய்  அவள்  கைகளை  அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம்  சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க,  அப்படி  ஒரு கேள்வியை  எதிர்பாராத  சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

அவன் கண்களில் தெரிந்த வேதனை தன்னை அசைத்த போதும் அதை தன் கண்களில் அவன் கண்டுகொள்வானோ என பயந்தவளாய் முகத்தை வேறு புறம் திருப்பினாள் சுமேதா

அதற்கு மேல் வீட்டிற்கு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. கார் நின்றதும் தான், வீட்டிற்கு வந்திருப்பதை உணர்ந்த சுமேதா "நான்... போகணும்..." என்றாள் அவன் முகத்தை கூட பாராமல்

"போ...நான் தடுக்கல... அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் சுமி" என அவன் குரல் நிதானமாய் ஒலித்தது

"எனக்கு... எதுவும் கேக்க வேண்டாம்..." என சுமேதா வெளியே கேட்  பக்கம்  நடந்தாள்

அவள் முன் வந்து மறித்தவன் "உள்ள வா.... உன்கிட்ட பேசணும் ப்ளீஸ்..." என்றான் அவள் கண்களை நேராய் பார்த்து

"வழி விடுங்க நான் போகணும்" என அவனை மீறி செல்ல முயன்றாள்

சட்டென அவள் கைகளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான் சூர்யா

அவன் தொடுகை தன்னை பலமிழக்க செய்வதை உணர்ந்தவள் அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள்

என்ன செய்தாலும் உன்னை விடுவதாய் இல்லை என முடிவு செய்தவன் போல் சூர்யா இன்னும் தன் பிடியை இறுக்கினான்

இயலாமை கோபத்தை கிளற, அவன் பிடியை தளர செய்ய ஒரே ஆயுதமாய் தன் பேச்சை பயன்படுத்த எண்ணினாள் சுமேதா

"இப்ப என்ன? யாரும் இல்லாதப்ப என்னை கொன்னு எங்கயாச்சும் கொண்டு போய் போட போறீங்களா? உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். நானே எங்கயாச்சும் போய் விழுந்துடறேன்" என்றாள்

அவள் வார்த்தை மனதை வேதனையுற செய்த போதும் தன்னை பலவீனபடுத்தி தன்னை விட்டு விலகவே அப்படி செய்கிறாள் என்பதை உணர்ந்த சூர்யா பேச்சை மாற்றும் எண்ணமாய்

"தனியா கொல தான் செய்யணும்னு இல்ல சுமி... இன்னும்...." என மையலாய் புன்னகையுடன் நோக்கியவனை இடைமறித்தாள்

"போதும் நிறுத்துங்க... விடுங்க நான் போகணும்" என்றாள் தீர்மானமாய்

"நீயே வீட்டுக்குள்ள வர்றயா? இல்ல நான் தூக்கிட்டு போகணுமா?" என தான் அதற்கும் தயார் என்பது போல் அவளை தூக்க தயாராவது போல் பாவனையுடன் நெருங்கினான் சூர்யா சிறு முறுவலோடு

அவன் கோபத்தை கூட தாங்கி நின்று பழகியவள் இப்போது அவன் நெருக்கத்தை தாங்க இயலாமல் "விடுங்க வரேன்... "  என்றாள்

அவளை விடுவிக்க மனமில்லாத போதும் அவள் பிடிவாதத்தை உணந்தவனாய் விலகி நின்றான்

சுமி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றாள்
 
உள்ளே சென்றதுமே "நான் தான் டைவர்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணிட்டனே... இன்னும் என்ன வேணும்?" என எங்கோ பார்த்து கொண்டு சுமேதா கேட்க

"நீ தான் வேணும்..." என்ற சூர்யா அதற்கு மேல் விலகி நிற்க இயலாமல்  அருகில் சென்று அவள்  முகத்தை கைகளில் ஏந்தினான்

அவன் பார்வையை நேரே சந்திக்க இயலாமல் அவனை விட்டு விலகியவள்

"நான்... நான்... இங்க இருக்க மாட்டேன்... நான் உங்களுக்கு தேவை இல்ல" என்றவளின் குரலில் கோபம் மிகுந்து இருந்ததை உணர்ந்தான் சூர்யா

"சுமி ப்ளீஸ்... அப்படி சொல்லாத... நான் பண்ணினது தப்பு தான்... மன்னிக்கவே முடியாத தப்பு தான்... ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம் சுமி..." என உணர்ச்சி மேலிட கூற

"இதுவும் உங்க டிராமால ஒரு பகுதியா...?" என இரக்கமில்லாமல் அவள் குரல் வெளிப்பட்டது

சற்று நேரம் அவன் எதுவும் பேசவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் அவன் துயரம் நிறைந்த முகம் மனதை பிசைய பார்வையை விலக்கினாள்

"சுமி... உன் கோபம் நியாமானது தான்... அதுக்கு காலம் பூரா நான் மன்னிப்பு கேக்க தயார். ஆனா எனக்கு நீ வேணும்" என அவள் அருகில் வர அவனருகில் தன் உறுதி தளர்வதை உணர்ந்தவள் விலகி சென்றாள்

"சுமி...நான் சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சுடறேன்... அதுக்கு மேல உன் விருப்பம்" என அவன் நிறுத்த அவள் பதிலேதும் பேசாமல் நின்றாள்

மீண்டும் அவனே தொடர்ந்தான் "ஆரம்பத்துல அனிதாவோட இந்த நிலைமைக்கு காரணமான அந்த ரெண்டு பேரை கண்டுபிடிக்க முடியாம போனப்ப, இதை ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு அது ஒண்ணு தான் மனசுல இருந்தது. நான் பொய் சொல்ல விரும்பல... உன்னோட போட்டோவ தரகர் கொண்டு வந்தப்ப கல்யாணம் நிச்சியம் மட்டும் பண்ணி அப்புறம் விலகிடனும்... அப்படி தான் உன்னை பழி வாங்கணும்னு மட்டும் தான் எண்ணம் இருந்தது. ஆனா உன்னோட பழக ஆரம்பிச்சப்புறம் என்னையும் அறியாம எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு தோண ஆரம்பிச்சது" என்றவனை நம்பாமல் ஏறிட்டாள்

"ஆனா அப்போ அதை வாய் விட்டு சொல்லவோ மனசால ஏத்துக்கவோ முடியல சுமி... உன்மேல என் கவனம் பதிய பதிய என்னை இப்படி அடிமைப்படுத்தறேனு அதுக்கும் உன் மேல கோவம் தான் வந்தது. ஆனாலும் கல்யாணத்த நிறுத்த மனசு வரல. அனிதாவோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போச்சு. நம்ம கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அனிதாவ பாக்க போனப்ப அவ என்னை கூட அடையாளம் தெரியாம கத்தினது தாங்க முடியல... அந்த கோபம் மொத்தமா உன்மேல தான் திரும்புச்சு... அப்ப தான் நான்...." என சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் சூர்யா நிறுத்த

"என்னை கொல்லனும்னு முடிவு பண்ணினீங்களா?" என வேதனை நிறைந்த குரலில் சுமேதா அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்டாள்

அவளின் வேதனை நிறைந்த குரலும் கலங்கிய கண்களும் அவன் குற்ற உணர்வை மேலும் கூட்ட கட்டுப்படுத்த இயலாமல் அவள் கைகளை பற்றி தன் நெஞ்சோடு வைத்து கொண்டான் சூர்யா

"சுமி... ப்ளீஸ்... நான்...  நான் ஒரு ஒரு நாளும் நெனச்சு நெனைச்சு என்னையே வெறுக்கற ஒரு விஷயம் அது"

அவன் சொன்ன  சமாதானத்தை  ஏற்க  இயலாதவள்  போல்  அவன்  கையை  உதறியவள் "எப்படி சூர்யா? நெஜமாவே உங்க மனசுல நான் சின்ன பாதிப்பயாச்சும் ஏற்படுத்தி இருந்தா என்னை... என்னை... அந்த நடு காட்டுல... " என்றவள் அதற்கு மேல பேச இயலாமல் அந்த பயங்கரமான நினைவில் தடுமாற

"சுமி..." என பதறியபடியே விரைந்து அவளை தன்னோடு அணைத்தான்

"நோ... என்னை தொடாதீங்க" என விலகினாள் சுமேதா

அவள் விலகியது பொறுக்காமல் "ப்ளீஸ்டா... சாரி சுமி...ப்ளீஸ்... சத்தியமா சொல்றேன்... அதை நெனச்சு உன்னை விட அதிகமா வேதனை படறவன் நான் தான் சுமி..." என தன்னிலையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்

ஆனாலும் சற்றும் சமாதானமாகாத சுமேதா "இதை நான் நம்பனுமா?"  என்பது போல் ஒரு பார்வை பார்க்க

"நான் சொல்ல வந்தத சொல்லி முடிச்சுடறேன் சுமி... அந்த நிமிச கோபத்துல வேகத்துல உன்னை அப்படி தனியா விட்டுட்டு வந்துட்டு உனக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதுன்னு என்னோட இன்னொரு மனசு ஏங்கினது எனக்கு தான் தெரியும் சுமி... அந்த நாள் எனக்குள்ள இருந்த மிருகம் என்னை பலவீனமாக்கிடுச்சு... "

"ஒருவேள நான் செந்திருந்தா..." என சுமேதா  கேட்க ஒருகணமும் தாமதியாமல் "நான் அதுக்கப்புறம் உயிரோட இருந்துருப்பேனு தோணல" என்றான் சூர்யா

"ஹும்...அதான் திரும்பி வந்ததும் அவ்ளோ நல்லா பாத்துகிட்டீங்களா?" என ஏளனம் போல் கேட்டாள்

ஏளனத்தையும் மீறி அவள் குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன் தன் மனதை மறைக்காமல் எடுத்துரைத்து அவள் வேதனையை போக்க எண்ணினான்

"திரும்பி வந்தப்ப மொதல்ல உன்னை face பண்ற தைரியம் எனக்கு இருக்கல சுமி... உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு புரிஞ்சப்ப நீ இனி என்னை முழு மனசோட நேசிக்க மாட்டேன்னு மனசுல ஒரு எண்ணம் வந்தது. என்னால அதை தாங்க முடியல...

உன்னை இனி இழந்துடுவேங்கர எண்ணமே என்னை பைத்தியமாக்கிடுச்சு. எப்படி என்னை உனக்கு புரிய வெக்கறதுன்னு புரியாம தவிச்சுட்டேன் சுமி. எல்லா உண்மையும் சொன்னா அந்த நிமிசமே நீ என்னை விட்டு போய்டுவயோனு பயம்

நீ கணேஷ்கிட்ட பேச முயற்சி பண்ணினப்ப, அருணை தேடி போனப்பவெல்லாம் நீ என்னை விட்டு விலகறயோனு... அதான் கோபமா வெளிப்பட்டது சுமி... சத்தியமா அதான் உண்மைடா... ப்ளீஸ் என்னை நம்பும்மா ப்ளீஸ்..." என அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன்

"நீ அனிதாவ பத்தி தெரிஞ்சுக்க தான் அருணை தேடினேனு சொன்னப்ப அனிதாவ பாக்க போகனுங்கற அந்த பதட்டத்துலயும் என் மனசுல ஏற்பட்ட சந்தோஷம் உனக்கு புரியாது சுமி..."

சட்டென அவன் கையை விலக்கியவள் "அப்போ... என்னை அருண் கூட வேற விதமா தப்பாவும் யோசிச்சு இருக்கீங்க இல்லையா?" என கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு சுமேதா கேட்க

"ஐயோ... இல்லடா... நான் பண்ற கொடுமை தாங்காம... ஒருவேள..." என சூர்யா தடுமாற

"அவன்கிட்ட போய்டுவேன்னு நெனச்சீங்க இல்ல?" என அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்,  தன்னை எப்படி அவன் அவ்வாறு நினைக்கலாம் என தாங்காமல்

"ப்ளீஸ் சுமி...அப்படி பாக்காத...  என்னோட நெலமைல இருந்து ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு... ஏன் நீ நெனைக்கலையா? அனிதா உங்க காதலியான்னு கேக்கலையா? என் மேல உள்ள அன்புனால தானே அப்படி கேட்ட... ப்ளீஸ்டா என்னை நம்பு... ஐ லவ் யு சுமி... எனக்கு நீ வேணும்மா" என்றவனின் குரலில் இருந்த அன்பும் காதலும் அவள் பிடிவாதத்தை தகர்க்க அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவள் கண்ணீர் அணை மீறியது

அவள் அழுவதை காண சகியாமல் அவளை தன்னோடு அணைத்தவன் "ப்ளீஸ் சுமி... அழாதடா ப்ளீஸ்... ப்ளீஸ்...ப்ளீஸ்..." என சூர்யா அவளை  சமாதானப்படுத்த  முயல  அவள் அழுகை மேலும் வலுத்ததே ஒழிய குறையவில்லை

"எ...என்னால... தா... தாங்க முடியல.... " என கதறினாள். துக்கம் தீரும் வரை அழுது ஓயட்டும், இனி எப்போதும் அவள் கண்ணில் நீர் வர தான் காரணமாய் இருக்க கூடாது என உறுதி பூண்டவன் போல் ஆதரவாய் அவளை அணைத்து நின்றான்

கதறல் தேம்பலாகி கேவலில் தொடங்கி விசும்பலில் வந்து நின்றது

"என்னால இன்னும் நடந்ததெல்லாம் நெனச்சா, தாங்க முடியல சூர்யா" என அவள் விசும்ப

"சாரிடா ப்ளீஸ்... நடந்த எதையாச்சும் மாத்த முடியும்னா அதுக்காக என்ன விலை குடுக்கவும் நான் தயார் சுமி... என்னை நம்புமா ப்ளீஸ்..." என ஆதரவாய் அவளை தன் மார்போடு அணைத்தான்

மெல்ல அவளை விலக்கி முகத்தை பார்த்தவன் அவளின் அழுது சிவந்த கண்களில் இதழ் பதித்தான். மீண்டும் தன்னோடு அணைத்து கொண்டான்

தனக்கும் அதுவே சம்மதம் என்பது போல் அவன் அணைப்பில் அசையாமல் நின்றாள் சுமேதா

அதற்கு பின் எதுவும் பேசக்கூட வேண்டியதில்லை என்பது போல் இருவரும் மௌனமாய் இருந்தனர்

சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல செய்திகளை சொல்வதை இருவரும் அந்த கணம் அனுபவப்பூர்வமாய் உணர்ந்து நின்றனர்

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் "அனிதாவ பத்தி அத்தை கூட என்கிட்ட எதுவும் பேசினதில்லயே... ஏன்?" என கேட்க

"அவள பத்தி பேசினாலே நான் ரெம்ப அப்செட் ஆய்டுவேன், சரியா சாப்டாம தூங்காம இருப்பேன்னு அந்த பேச்சே வீட்டுல இருக்காது சுமி. அம்மாவுக்கும் அவ மேல உயிர். அவளுக்கு எங்க யாரையும் அடையாளம் தெரியாம எங்களை பாத்தாலே பயந்து கத்தினப்ப அம்மாவால தாங்க முடியல. அவளுக்கு குணமாகற வரை பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என வருத்தம் மேலிட கூற

"என்னாலையே அவளை அப்படி பாக்க முடியல... சாரிப்பா... " என சுமேதா நிஜமான வருத்ததோடு கூற

"இனி பழச பத்தி பேச வேண்டாம் சுமி... அனிதா குணமாகி வர்றப்ப உன்னை அவ அண்ணியா பத்தா சந்தோசத்துல குதிக்க போறா பாரேன்" என தங்கையின் அன்பை நினைவு கூர்ந்தான்

"ம்... நானும் அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்" என்றாள் சுமேதா

"சுமி... அனிதா மனசுல அருணோட பிம்பம் அப்படி பதிஞ்சு போய் இருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு உன்னால யூகிக்க முடியுதா?" என சூர்யா அர்த்தத்துடன் அவளை பார்க்க

"அவ மனசுல அருண் முக்கியமான எடத்துல இருக்கான்னு தோணுது. அருணும் அனிதா மாதிரியே சின்ன வயசுலேயே பெத்தவங்கள இழந்து அன்புக்கு ஏங்கினவன்...அதான் நான் நட்பா காட்டின அன்ப கூட..." என தயக்கமாய் நிறுத்த

"எனக்கு புரியுது சுமி... ஆனா நாம நேத்து பாத்த அருண் பழைய அருண் இல்ல. நல்ல மாற்றம் தெரியுது... ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கும்னா அருண் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை" என மகிழ்வோடு கூற

"எனக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தப்ப அப்படிதாங்க தோணுச்சு" என தானும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள் சுமேதா

"ஆஹா... இதான் made for each other போல இருக்கே" என அவன் சிரிக்க அவளும் அவன் சிரிப்பில் கலந்தாள்

அதற்கு பின் வெகு நேரம் இருவரும் ஏதேதோ பேசி ஒருவர் மேல் மற்றவர் கொண்ட அன்பை ஏதோ ஒரு விதமாய் பறைசாற்றி கொண்டிருந்தனர்

"சுமி... நான் விலகி விலகி போனப்பவெல்லாம் என் கோபத்த கூட பொருட்படுத்தாம இருந்த நீ... இப்ப... எப்படி சுமி உனக்கு மனசு வந்தது... மொத்தமா போறேன்னு எழுதி வெச்சுட்டு போக... ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு அதை படிச்சப்ப" என அவன் நெகிழ

"நீங்க கோபபட்டப்ப அதுக்கு என்ன காரணம்னு தேடுச்சு மனசு. ஆனா அமைதியானப்ப பயம் வந்துடுச்சு. ஒருவேள போ வெளியனு சொல்லிடுவீங்களோனு பயம். அதை தாங்கற சக்தி எனக்கில்ல. அதான் நானே விலகிடனும்னு... சாரிங்க... அந்த நிமிச வேகத்துல அப்படி எழுதிட்டேன்" என கூற அவள் குரலில் தெறித்த வேதனை தாங்காமல் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்

"அது சரி... உங்க அம்மாகிட்ட ஒரு வாரம் அங்க தங்க போறதா சொன்னயாமே... அப்புறம் என்ன செய்யறதா உத்தேசம் இருந்தது மேடம்க்கு" என கேலி போல் கேட்க

"ம்... உண்மைய சொல்லணும்னா... அதுக்குள்ள நீங்களே வந்து கூப்ட்டுட்டு போய்டுவீங்கன்னு ஒரு பேராசை... உள்மனசுல..." என்றவளின் குரலில் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் காதலும் வெளிப்பட

"அது பேராசை இல்லடா கண்மணி... அன்பு மேல உள்ள நம்பிக்கை" என அவள் நெற்றியில் இதழ் பதித்தான் சூர்யா

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் சுமேதா "ஐயோ... அத்த மாமா வர்ற நேரமாச்சே... " என அவனிடமிருந்து தன்னை விலக்கி கொள்ள முயல

"ப்ளீஸ் சுமி... என்னை விடு நகராத" என அணைத்தான், ஒருகணமும் அவளை விட்டு பிரிய மனமில்லாதவன் போல்

"அத்த மாமா... " என அவள் தொடங்க

"அவங்க இன்னைக்கி வரல..." என சூர்யா கூற, அவள் தலை உயர்த்தி கேள்வியாய் நோக்க அவன் விஷமமாய் சிரித்தான்

"பொய் சொன்னீங்களா?" என பொய் கோபம் காட்ட

"அது தான் நான் உன்கிட்ட சொல்ற / சொன்ன கடைசி பொய்... இனி வாழ்நாள் முழுக்க உன்கிட்ட உண்மை தவிர வேற எதுவும் பேச மாட்டேன்... இது என் காதல் தேவதை உன் மீது ஆணை" என ஏதோ வசனம் போல் சூர்யா பேச சுமேதா வாய் விட்டு சிரித்தாள்

அவள் சிரிப்பை மனதார ரசித்தவன் "இந்த சிரிப்ப பாத்து எவ்ளோ நாளாச்சு சுமி... இனி எப்பவும் நீ சிரிச்சுட்டே இருக்கணும்...." என அன்பு ததும்ப கூற

"எப்பவும் சிரிச்சுட்டே இருந்தா அதுக்கு பேரு பைத்தியம்" என அவள் கேலி செய்ய

"அது தெரிஞ்சுது தானே..." என அவனும் வம்பு செய்ய

"என்னது?" என அவள் செல்லமாய் அடிக்க, அந்த மெல்லிய கைகளை பற்றி அவள் விரல்களில் இதழ் பதித்தான் சூர்யா

தன் சிவந்த முகத்தை மறைக்க அவன் மார்பில் முகம் புதைத்தாள் சுமேதா

ஊடலின் ஆதாரம்
உரிமையின் ஸ்வீகாரம்
உரிமையற்ற உறவுகளில்
ஊடல் ஊடுவதில்லை

ஊடலற்ற காதல்
உயிரற்ற உடல்
ஊடலின் பின்னானநேசம்
உயிர்நிறைக்கும் சுவாசம்

உயிர்நிறைக்கும் சுவாசமாய்
உள்ளம்புதையும் நேசமாய்
உன்னில்என்றும் கலந்திருப்பேன்
உயிராய்என்னில் சுமந்திருப்பேன்!!!

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

முற்றும்)

...

Monday, October 25, 2010

அதே கண்கள்... (பகுதி 23)


இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள் சுமேதா

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை ... முடிந்தால் மன்னிக்கவும்...  - சுமேதா"
______________________________________________________
 
அதே நேரம் அலுவலகத்தில் நிலைகொள்ளாமல் தவித்தான் சூர்யா

எப்போது சுமேதாவை காண்போமென்ற எண்ணமே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தது

உடனே அவள் குரலை கேட்க வேண்டுமென தோன்ற தன் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்

வெகு நேரம் மணி அடித்தும் சுமி எடுக்காமல் போக என்ன ஆனதோ என பதறினான்

ஒருவேளை கணேஷ் வீட்டிலேயே இருக்கிறாளோ, மிகவும் சோர்வாக வேறு இருந்தாளே என தோன்ற உடனே கணேசின் செல்போன் எண்ணுக்கு அழைத்தான்

"சொல்லுங்க சூர்யா..."

"கணேஷ்... ம்... சுமி இருக்காளா...? சும்மா... பேசலான்னு தான்" என தடுமாற

"சுமிய அப்பவே வீட்டுல டிராப் பண்ணிட்டனே சூர்யா... அம்மா இருன்னு எவ்வளவு சொல்லியும் கேக்கல... " என கணேஷ் கூற பதறிய மனதை கட்டுபடுத்திய சூர்யா

"ஒகே கணேஷ் நான் வீட்டுக்கு கூப்பிட்டு பாக்கறேன்" என சமாளித்து பேசியை துண்டித்தான்

என்ன ஆனது, எங்கு போனாள் என எதுவும் அனுமானிக்க இயலாமல் யாரை கேட்பது என எதுவும் தோன்றாமல் சற்று நேரம் மௌனமானான் சூர்யா

"ஏதேனும் தவறாய் முடிவு எடுத்து இருப்பாளோ" என தோன்றிய கணம் இதயம் சற்று நின்று இயங்கியது

"இல்லை, அப்படி செய்யும் கோழை இல்லை என் சுமி... " என உடனே தன்னை தானே சமாதானம் செய்து கொள்ள முயன்றான்

"வேண்டுமென்றே தன் மேல் உள்ள கோபத்தில் வீட்டில் தொலைபேசி எடுக்காமல் இருக்கிறாளென" மனதை அமைதிப்படுத்த முயன்றான்

அடுத்த கணமே இரவு கார் கண்ணாடியில் தெரிந்த அந்த வேதனை நிறைந்த முகம் கண் முன் வர உடனே அவளை பார்த்தால் தவிர தன்னால் மூச்சு விடவும் இயலாது என நினைத்தான்

ஆனால் அலுவலக வேலைகள் அவனை நகரவும் விடாமல் தடுத்தன. இன்னும் சற்று நேரம் பாப்போம் என வேலையில் கவனத்தை செலுத்த முயன்றான்
_____________________________________________

மகள் பெட்டியுடன் வீட்டினுள் நுழைந்ததை கண்ட சுமேதாவின் அன்னை துணுக்குற்றாள்

"என்ன சுமி? என்ன இந்த நேரத்துல தனியா? அதுவும் பெட்டி எல்லாம்" என பதற என்ன சொல்வதென புரியாமல் ஒரு கணம் சுமேதா விழித்தாள்

எப்படியும் சொல்ல வேண்டியது தானே என பேச தொடங்கியவள் பெற்றவளின் உடல் நிலை பற்றிய கவனம் வர, அண்ணனும் அப்பாவும் அருகில் இருக்க கூறுவது தான் சரியென மௌனமானாள்

"அது வந்தும்மா... ஒரு வாரம் இங்க இருக்கலாம்னு... ரெம்ப நாள் ஆச்சே நம்ம வீட்டுல ரெண்டு நாள் சேந்த மாதிரி இருந்து... என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்க இருந்தது... அதான் பெட்டி... "என ஏதோ சமாளித்தாள்

மகள் தன்னுடன் ஒரு வாரம் இருக்கபோகிறாளென்ற சந்தோசத்தில் பெற்றவளுக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை

"அப்படியா... இப்பவாச்சும் மாப்பிளைக்கு உன்னை அனுப்ப மனசு வந்ததே... " என பெற்றவள் மகிழ

"என்னை மொத்தமா அனுப்பணும்னு தானேமா இவ்ளோ நாளா போராடினாரு" என மனதில் தோன்றிய வார்த்தைகளை விழுங்கினாள் சுமேதா

"சரி சுமி... நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா... நான் உனக்கு பிடிச்ச காரக்கொழம்பு செய்யறேன் இன்னிக்கி" என அவள் அம்மா அன்பு மேலிட உரைக்க அது தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்த சுமேதா அந்த இடத்தை விட்டு அகன்றாள்

தன் அறைக்கு சென்றவள் சற்று மனதை நிலைபடுத்த முயன்றாள். அதே நேரம் அன்னை அழைக்கும் குரல் கேட்க வெளியே வந்தாள்

"இருங்க மாபிள்ள... சுமிகிட்ட குடுக்கறேன்..." என அவள் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவள் அன்னை நகர என்ன செய்வதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

பொறுமை இழந்த சூர்யா "சுமி...சுமி... லைன்ல இருக்கியா... சுமி" மீண்டும் மீண்டும் அழைக்க அவன் குரலை ஒரு முறை கேட்கும் ஆவல் தூண்ட "ம்..." என்றாள் மெதுவாய்

"என்ன சுமி இது? அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்ல... வீட்டுல நீ போன் எடுக்காம.. எங்க போனயோனு...." என அந்த கணத்தின் நினைவில் பேச இயலாமல் நிறுத்த அவன் குரலில் தெறித்த உணர்வுகள் தன்னை தாக்குவதை உணர்ந்த சுமேதா

"நான் வெச்சுடறேன்..." எனவும்

"சுமி... ப்ளீஸ் ப்ளீஸ்... " என அவசரமாய் தடுத்தான்

"என்ன? சொல்லுங்க" என முற்றிலும் உணர்ச்சி துடைத்த குரலில் சுமேதா கேட்க அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை புரிந்து கொண்டவன் போல்

"சுமி... நான் உன்கிட்ட நெறைய பேசணும்டா..."

"வேண்டாம்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்..." என அவனை இடைமறித்தாள்

"சுமி ப்ளீஸ்... "

"குட் பை..." என துண்டித்தாள்

அவள் தன்னிடம் பேச மறுத்தபோதும் அவள் தாய் வீட்டில் தான் பத்திரமாய் இருக்கிறாளென அறிந்ததும் சற்று நிம்மதியானான் சூர்யா

அதன் பின் நடு இரவு வரை வேலை நகர விடாமல் பிடித்தது

ஒரு வழியாய் எல்லாம் முடித்து நாளை தான் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லாதபடி எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினான் சூர்யா

"நேரே அவள் அம்மா வீட்டுக்கு இப்போது சென்றால் என்ன?" என தோன்றியது சூர்யாவிற்கு

ஆனால் நடு இரவில் சென்று கதவை தட்ட என்னமோ போல் தோன்ற, அதுவும் இல்லாமல் அவளிடம் நிறைய தனிமையில் பேச வேண்டியதும் உறைக்க காலையில் செல்வதே சரியென முடிவு செய்தான்
______________________________________________
தன் வீட்டுக்குள் நுழைந்த அந்த கணமே சுமி இல்லாத வெறுமையை அவன் மனம் உணர்ந்தது

தன் அறைக்கு சென்றவன் அங்கு மேஜை மேல் இருந்த டைவர்ஸ் பத்திரம் கண்ணில் பட துவண்டு போனான்

அதற்கும் மேலாய் அவளது குறிப்பு அவனது மனதை மொத்தமாய் கொன்றது "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

சுமேதாவின் அழகிய கையெழுத்தை கண்டதும், தன்னையும் அறியாமல் அவன் விரல்கள் அந்த எழுத்தை வருட, பின் தன் மார்போடு அணைத்து கொண்டான்

தான் விலகி சென்றபோதெல்லாம் தன் மனதை கொள்ளை கொள்ள முயன்றவள் இப்போது தான் மொத்தமாய் அவளிடம் சரணடைந்தபின் இப்படி விலகி செல்கிறாளே என வேதனைப்பட்டான்

அவளை தான் ஊட்டியில் வைத்து கொல்ல முயன்றேன் என்று அறிந்த பின்னும் மனதில் அத்தனை அன்பை தேக்கி கொண்டிருந்தவள், எத்தனை வேதனை ஆட்கொண்டிருந்தால் இப்படி விலகி செல்ல முடிவு செய்திருப்பாள் என தோன்ற, அதற்கு காரணமான தன் மீதே கோபமாய் வந்தது சூர்யாவிற்கு

ஒரு கணமும் கண் மூட இயலவில்லை அவனுக்கு

முந்தின தினம் உறங்காமல் நீண்ட நேரம் பயணித்து அன்று நாள் முழுவதும் வேலை நெரித்தும் கூட உறக்கம் அவனை தழுவவில்லை

தன் மனதில் நிறைந்திருப்பவளை கண்ணில் காணும் வரை உறக்கத்தை கூட தழுவ விட மாட்டேன் என்பது போல் பிடிவாதமாய் நேரத்தை கொல்ல முயன்றான்

முதல் முறையாய் தங்கள் திருமண ஆல்பத்தை ஆசையோடு பார்த்தான்

அதில் உலகின் சந்தோஷம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்பது போல் மகிழ்வாய் சுமேதா சூர்யாவை பார்த்து கொண்டிருந்த ஒரு புகைப்படம் அவன் கண்களை நிறைத்தது

எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் தன்னை மணந்திருப்பாள்... தான் செய்ததென்ன... ச்சே... என தன்னையே வெறுத்தான் அந்த கணம்

ஒரு வழியாய் ஜன்னல் வழியே மெதுவாய் விடியல் கண்ணுக்கு புலப்பட, அன்று தங்கள் வாழ்விலும் விடியலாய் இருக்குமென்ற நம்பிக்கையோடு எழுந்தான் சூர்யா
_______________________________________________________

"ஹாய் சுரேஷ்" என சூர்யா சுமேதாவின் அம்மா வீட்டினுள் நுழைய, அந்த காலை நேரத்தில் சூர்யாவை அங்கு எதிர்பாராத சுமேதாவின் அண்ணன் சுரேஷ் ஆச்சிர்யமாய் நோக்கியவன்

"வாங்க சூர்யா உள்ள வாங்க" என மகிழ்வோடு அழைத்தான்

"நீங்க ஆபீஸ் கெளம்பற நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..சாரி சுரேஷ்"

"ஐயோ... என்னங்க சூர்யா இது... நம்ம வீட்டுக்கு நீங்க வர்றதுக்கு... என்ன இது..." என்றவன் "அம்மா.. சூர்யா வந்திருக்காரு"என உள்நோக்கி குரல் கொடுத்தான்

"வாங்க மாபிள்ள..." என்றபடி சுமேதாவின் பெற்றோர் வெளியே வர அவர்களிடம் சம்பிரதாயமாய் வாய் பேசிய போதும் சூர்யாவின் கண்கள் சுமேதாவை தேடியது

அதை புரிந்து கொண்ட சுரேஷ் "சுமி எங்கம்மா?" என தன் அன்னையிடம் கேட்க

"இங்க தானே இருந்தா... இருங்க கூப்பிடறேன்... " என உள்ளே சென்றார்

சூர்யா மனதை அமைதிபடுத்த முயன்று தோற்று தவித்தான்

அதே நேரம் தன் அன்னையுடன் சுமேதா வரவேற்பறைக்கு வர "நேரத்துலையே எழுதுட்டயா சுமி?" என என்னமோ அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் இயல்பாய் கேட்டான் சூர்யா

"ம்... " என்றவள் அதற்கு மேல் என்ன பேசுவதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

"சரி மாபிள்ள... நீங்க பேசிட்டு இருங்க... நான் டிபன் ரெடி பண்றேன்... " என அவள் அன்னை உள்ளே சென்றார்

சுமேதாவும் அவள் அன்னையின் பின்னோடு செல்ல அவளுடன் தனியே பேச இயலாமல் பொறுமையை இழுத்து பிடித்தான் சூர்யா

காலை உணவு ஆன பின் சற்று நேரம் பேசி கொண்டிருந்தவன் "சரி சுமி... டைம் ஆச்சு... போலாமா?" என அவளை பார்த்து கேட்க,  என்ன சொல்வதென புரியாமல் விழித்தவள்

"நான்... என் பிரெண்ட் திவ்யா கல்யாணத்துக்கு..." என ஏதோ கூற வர

"ஆமா... சொல்லிட்டு இருந்தெல்ல... ம்...ரெண்டு பேருமே போலாம்... கிப்ட் எதாச்சும் வாங்கனுமா?" என எல்லாம் அறிந்தவன் போல் பேசி கொண்டே போனான்

"இல்ல... நான்..."

"ஓ... கிப்ட் வாங்கிட்டயா? ஒகே சுமி... டைம் ஆச்சு கெளம்பலாம்" என கடிகாரத்தை பார்த்து கொண்டே கூறினான், அவளுக்கு பேசவே அவகாசம் தராமல்

"என்ன சுமி... ஒரு வாரம் இருக்கேன்னு பெட்டி எல்லாம் தூக்கிட்டு வந்த..." என அவள் அன்னை குற்றம் சாட்டுவது போல் கூற அப்படியா என்பது போல் அவளை பார்த்தான் சூர்யா

"அது..." என சுமேதா ஏதோ கூற விழைய

"அது...அது வந்து அத்த... அம்மா அப்பா ஊர்ல இருந்து அடுத்த வாரம் தான் வர்றதா இருந்தது... அதான் சுமி இங்க இருக்கட்டும்னு நெனச்சேன்... ஆனா அவங்க இன்னைக்கே வராங்க... அதான்...  அப்புறம் நெக்ஸ்ட் வீக் கொண்டு வந்து விடறேன் அத்த" என சூர்யா அவளுக்கும் சேர்த்து பேச அதற்கு மேல் மறுக்க இயலாமல்

"சரி சுமி... அடுத்த தரம் வரப்பவாச்சும் சேந்த மாதிரி ஒரு வாரம் இருக்கறாப்ல வா சரியா" என மகளுக்கு மனமின்றி விடை கொடுத்தாள் அன்னை

அதற்கு மேல் என்ன செய்வதென எதுவும் புரியாமல் அவனுடன் கிளம்பினாள் சுமேதா

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய் அவள் கைகளை அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம் சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க, அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்

குறிப்பு - புதன் கிழமை இந்த கதையின் இறுதி பகுதி வெளி வரும்      

இந்த தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க இங்கே கிளிக்கவும்

(தொடரும்...)


....