Monday, February 22, 2010

புதுசா கட்டிகிட்ட ஜோடியா இருந்தப்ப...நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடியா இருந்தப்ப நடந்த ஒரு சம்பவம். சம்பவம்னு சொல்றத விட இந்த அப்பாவி தங்கமணிக்கு நடந்த ஒரு கொடுமைன்னு சொல்லலாம்


கல்யாணம் ஆன ஒரு மாசத்துல ரங்கமணி "கடமையே கண்ணா" துபாய் போய்ட்டாரு. எனக்கு ஒரு மாசத்துல விசா எடுத்து அனுபறேனு சொல்லிட்டு போனாரு. நானும் ஊரெல்லாம் "ஆத்தா நான் பாஸ் ஆய்ட்டேன் " ரேஞ்சுக்கு சொல்லிட்டு திரிஞ்சேன்

வீடு கிடைக்கலன்னு ஒரு மாசம், மேனேஜர் ஊருக்கு போய்ட்டாரு விசாவுக்கு கையெழுத்து போட அவரு வரணும்னு ஒரு மாசம். எல்லாம் வந்தப்புறம் டிக்கெட் கிடைக்கலைன்னு ஒரு மாசம் எல்லாம் முடிஞ்சு ஒரு வழியா விசா வந்தது (இது எல்லாமே ரங்கமணி பிளான் தான்னு பின்னாடி தெரிஞ்சு அப்புறம் நடந்தது எல்லாம் ரங்கமணி கெஞ்சி கேட்டதற்கு இணங்க கட் பண்ணிட்டேன் ......)

ஏர்போர்ட்ல அம்மா அப்பா தங்கச்சி எல்லாருக்கும் பாய் பாய் சொல்லி மூக்க உரிஞ்சுட்டு நடுராத்திரி பன்னண்டு மணிக்கி துபாய் போய் சேந்தேன்


அடுத்த நாள் அதிகாலை ஏழு மணிக்கி "வேலைக்கு போகணும் எந்திரிச்சு சமையல் செய்" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டாரு

ஜெர்க் ஆனாலும் அதை எல்லாம் வெளிய காட்டாம நானும் சமைக்கறேனு தயார் ஆனேன். சரி சுலபமா அரிசி பருப்பு சாதம் செய்யலாம் நம்ம அம்மா செய்யறத எத்தானை பாத்து இருக்கோம்னு களம் இறங்கியாச்சு

எல்லாம் செஞ்சு ரங்கமணி சாபிட்டு வேலைக்கு போய்ட்டாரு

இனி தாங்க கொடுமையே ஆரம்பம். சுத்தம் பண்ணலாம்னு சமையல் ரூம் போனா ஒரு கப்புல துவரம் பருப்பு என்னை பாத்து சிரிப்பா சிரிக்குது

பருப்பு போடாமலே அரிசி பருப்பு சாதமானு ஒரே அழுகையா போச்சு. உடனே ரங்கமணிக்கு போன் பண்ணி என்ன பேசினோம்னு நீங்களே படிங்க:-

தங்க்ஸ்: என்னங்க, அரிசி பருப்பு சாப்பாடு எப்படி இருந்தது?

ரங்கஸ்: நல்லா தான் இருந்தது , என்னாச்சு?

தங்க்ஸ்:(அழுகையுடன்...) பருப்பே போடல...(ஆணியே புடுங்கல ரேஞ்சுக்கு...அழுகை
தொடர்கிறது)

ரங்கஸ்: விடும்மா பரவால்ல

தங்க்ஸ்: நீங்க ஏன் சொல்லல?

ரங்கஸ்: உங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்கன்னு நெனச்சேன் (இதை கேட்டு
நான் எப்படி நொந்து போய் இருப்பேனு நீங்களே சொல்லுங்க சக தங்கமணிகளே)

அதிகாலை ஏழு மணிக்கி எந்திரிச்சு கஷ்டப்பட்டு சமையல் செஞ்சு குடுத்த என்னை பாத்து...என்னை பாத்து...என்னை பாத்து...என்ன வார்த்தை சொல்லிட்டாரு....இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா.....???

31 பேரு சொல்லி இருக்காக:

Asha said...

இதுக்கெல்லாம அழுவாங்க?
அவரில்லே அழுவனும்..சரி சரி கண்ணே தொடைச்சிக்கொங்க..
எவ்ளோவோ பண்ணிட்டோம் இதே பண்ண மாட்டோமா?

அறிவிலி said...

அரிசி பருப்பு சாதம் மாதிரி ஒரு கஷ்டமான சமையல் செய்யும்போது இந்த மாதிரி தப்பு நடக்கறது சகஜம். அரிசி போட்டீங்களே, அதுக்கே பாராட்டணும். :-)).

இப்படிக்கு
ஒரு அப்பாவி ரங்ஸ்.

(Please remove word verification. It is troublesome to comment in Tamil with this.)

அப்பாவி தங்கமணி said...

நன்றி அறிவிலி. சரியா சொன்னீங்க, அத்தனை கஷ்டத்துலயும் அரிசிய போட்டேனே....(இப்பவே கண்ண கட்டுதே)

அப்பாவி தங்கமணி said...

ஆஷா,
சப்போர்ட் பண்ணுற மாதிரியும் இருக்கு...வாருற மாதிரியும் இருக்கு...ஆஷா நீங்க நல்லவரா கெட்டவரா? டொன்டொன்டொன்...(நாயகன் மியூசிக்....)

புதுகைத் தென்றல் said...

அப்பாவி தங்கமணின்னு பேரு வித்தியாசமா இருக்கேன்னு ஓடிவந்தேன்.

நான் ஹஸ்பண்டலாஜி பேராசிரியை. நாங்கள்லாம் இருக்கோம். கண்ணத்துடைச்சிக்கோங்க.

என் பதிவுகளில் ஹஸ்பண்டாலஜி பாடங்கள் படிக்கலாம்.

அன்புடன்
புதுகைத் தென்றல்

சின்ன அம்மிணி said...

ஆனாலும் ரொம்ப தெளிவா இருக்கீங்அ

அப்பாவி தங்கமணி said...

உங்க ஆதரவுக்கு ரெம்ப நன்றி புதுகை தென்றல். நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே. உங்க ப்ளாக் இல் தொடர விண்ணப்பித்துள்ளேன். இனிமே உங்க ஹஸ்பண்டாலஜி பாடங்கள் படிச்சு உபயோகிக்க போறேன்

அப்பாவி தங்கமணி said...

சின்ன அம்மணி - தெளிவா இருந்தே இப்படி...இன்னும் இல்லேன்னா என்ன ஆகும்? எல்லாம் உங்கள மாதிரி ப்ளாக் படிச்சு தேறினது தான். நன்றி சின்ன அம்மணி

கண்மணி/kanmani said...

அம்மிணிக்கு எந்த ஊரு .இவ்ளோ விவரமா இருக்கிய?
அது சரி வெறும் பருப்பை வேக வச்சி குடுக்கலியே.
பின்னூட்டத்தில் நான் 3 ல் ஆரம்பித்து 4 ல் முடிப்பேன்.;)

அப்பாவி தங்கமணி said...

நம்ம ஊரு கோயமுத்தூருங்க. நல்ல சனம் நம்ம சனம் இருக்கற ஊருங்க. என்ற அப்பாவித்தனம் எல்லாம் எங்க ஊரு பக்கம் இருந்து வந்தது தானுங்க. என்னங்க கண்மணி நாஞ்சொல்றது. நம்மளுக்கு மதுரைங்களா

DHANS said...

ithukuthaan visa manager nu konjam thalli potrukaar.. thappika mudialaye :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மையில் உங்க ரங்கமணி தான் தங்கமானவர் போலயே தங்கமணி.. உங்க வீட்டுல இப்படித்தான் செய்வாங்க போலன்னு எவ்வளவு அப்பாவியா கேட்டிருக்கார்..

சரி சரி ..இருந்தாலும் நீங்க அதை கேட்டு சந்தோசப்படாம அழுதிருக்கீங்க.. உங்க கள்ளம் கபடமற்ற அன்பு உள்ளம் தெரிகிறது நீங்க தான் அப்பாவி ஒத்துக்கிற்றேன் ஒத்துக்கிற்றேன்..

அப்பாவி தங்கமணி said...

என்னங்க dhans இப்படி கவுத்துடீங்க. பதிவை படித்தமைக்கி நன்றி. தொடர் கதை எல்லாம் எழுதறீங்க போல. படிச்சுட்டு சொல்றேன்

அப்பாவி தங்கமணி said...

முத்துலட்சுமி,
"உங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்கன்னு நெனைசென்னு" அவர் அப்பாவியா கேட்டருனா நெனைசீங்க. இல்லைங்க அந்த சாக்குல எங்க பரம்பரையையே குத்தி காட்டி இருக்கார் (கூட இருக்கறவங்களுக்கு தான் தெரியும் அப்பாவி அவரா நானான்னு). இருந்தாலும் ஏதோ ஒரு வகைல என்னை அப்பாவின்னு சொன்னதுக்கும் என் பதிவை படித்ததற்கும் நன்றி முத்துலட்சுமி. உங்க பதிவ follow போட்டு இருக்கேன். படிச்சுட்டு சொல்றேன் நீங்களும் என்னை மாதிரியே அப்பவியானு

DHANS said...

கவுக்கவேல்லாம் இல்லை ஒரு சப்போர்ட் வேணாமா? அதான்

//பதிவை படித்தமைக்கி நன்றி. தொடர் கதை எல்லாம் எழுதறீங்க போல. படிச்சுட்டு சொல்றேன் //

நம்ம மொக்கையை படித்ததற்கும் நன்றி, தொடர் கதையை எழுத ஆரம்பித்தேன் பாதியில் நிறுத்தி விட்டேன் மறுபடியும் எழுத வேண்டும்.

Priya said...

//ரங்கஸ்: உங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்கன்னு நெனச்சேன்//....இது சூப்பர்:-)

அப்பாவி தங்கமணி said...

ப்ரியா - ஹா ஹா... சூப்பர் தான். தேங்க்ஸ் ப்ரியா

VANJI.K.THANGAMANI said...

பருப்புத்தானே போடல,அரிசி போட்டவரைக்கும் சந்தோசந்தாங்க.அழுக வேண்டியது நீங்க இல்ல ரங்க்ஸ்.

கண்ணகி said...

நம்ம சமையலுக்கு நம்ம் ஊட்டுக்காரர்தானே சோதனை எலி...

இது எப்படி இருக்கு...

அப்பாவி தங்கமணி said...

VANJI.K.THANGAMANI - நன்றிங்க வஞ்சி. அப்போ அழ ஆரம்பிச்சவர் என்னும் அழுதுட்டு தான் இருக்கார். அது தனி கதை

அப்பாவி தங்கமணி said...

கண்ணகி - சரியா சொன்னிங்க கண்ணகி. நாம வேற எப்படி தான் தொழில் (சமையல்) கத்துக்கறது. நன்றிங்க உங்க நேரத்துக்கு

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சிரிச்சு முடியல.. ஹாஹ்ஹா... தங்க்ஸ், எப்பிடியோ அரிசி போட்டாவது அரிசிம்பருப்பு பண்னுனீங்களே..

அப்பாவி தங்கமணி said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ் - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க

மார்கண்டேயன் said...

Excellent, செய்வது எதிலும் உன்னதம், அதாவது, நான் பதிவெழுதுரதச் சொன்னேன், ரொம்ப நாளுக்கப்பறம் மனசு விட்டு சிரிச்சேன், பகிர்தலுக்கு நன்றி,

அப்பாவி தங்கமணி said...

//மார்கண்டேயன் சொன்னது… செய்வது எதிலும் உன்னதம்//

உள்குத்து எதுவும் இல்லீங்களே... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ரெம்ப நன்றிங்க... பழைய பதிவுகள தேடி படிக்கறதுக்கு

Gayathri said...

அக்கா இவ்ளோ நகைச்சுவையான பதிவை வாழ்க்கையில் நான் படிச்சதே இல்லை..அருமை அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ha ha ah.... thanks a lot Gayathri

Arul Kumar said...

ada andava,
rangs kavalapadathinga,Naama oru sangam aarmpithu Thangamani kitta ungala kaappathurom...!

அப்பாவி தங்கமணி said...

@ Arul Kumar - Ahaa... sangam veraya? Me escape...

dhanya said...

Thangamani akka.. unga story padichu enaku ore sirippu...
Alagaaana eluthu nadai.,.
Vaalthukkal

அப்பாவி தங்கமணி said...

@ dhanya - Thanks Dhanya.. :)

Post a Comment