Friday, March 12, 2010

என் சுவாச காற்றே....பகுதி 1

"ஏய் வேண்டாம்டா, என்னை கொலைகாரி ஆக்காதே"

"போடி இவளே...நீ கொல்ற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா?"

"கடைசியா சொல்றேன், பேசாம போய்டு"

"நானும் கடைசியா கேக்கறேன், இல்ல இல்ல கடைசியா warn பண்றேன், ஒழுங்கா ஒத்துக்கோ"

"போடா..." (sensored)

"போடி..." (sensored)

"ஏன் இப்படி ரெண்டு பேரும் அடிச்சுகறீங்க? என்ன பிரச்சனை இப்ப புதுசா?"

"பாட்டி இதுல நீ தலை இடாதே"

"ரகு, சின்ன பொண்ணுடா மதி, நீ கொஞ்சம் விட்டு குடுத்தா என்ன?"

"பாட்டின்னா பாட்டி தான், என் செல்ல பாட்டி" என்று கழுத்தை கட்டி கொண்டாள் மதி

"பாட்டி என்ன பிரச்சனைனே தெரியாம நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற. உன் மகளோட மக, இந்த அரை லூசு பேத்தி தான் உனக்கு முக்கியமா? உன் ஒரே மகனோட ஒரே மகன். உன்னோட மொதல் பேரன், நான் முக்கியமில்லையா?"

"டேய்...லூசு கீசுனா மண்டைய ஒடைச்சுடுவேன்"

"கொஞ்சம் சும்மா இரு மதி குட்டி. ரகு, பிரச்சனை என்னனு சொன்னா தான தெரியும்"

"பாட்டி என்னோட friends இந்த வாரம் நம்ம வீட்டுக்கு stay பண்ண வராங்க. சனிக்கிழமை ஒரு நாள் இவளோட ரூம் பெருசா இருக்கே அதை குடுன்னு கேட்டா என்னமோ சொத்தையே கேட்ட மாதிரி பிகு பண்றா"

"என்னடா ரகு, வயசு பொண்ணு இருக்கற வீட்டுல பசங்க வந்து தங்கினா பாக்கறவங்க நாலு விதமா பேச மாட்டாங்களா?"

"நீ யாரை சொல்ற? இந்த கொரங்கு மூஞ்சியவா? இதை யாரு பாட்டி பாக்க போறா"

"ரகு நீ ஓவரா பேசற, பாட்டி என்னை இப்படி எல்லாம் பேசறத நீ வேடிக்கை பாக்கற இல்ல, நான் எங்க அம்மா அப்பா கிட்டே போறேன்"

"அப்பாடா நிம்மதி, போய் தொல. ஆனா ஒரே நாளுல திருப்பி அனுப்பிடுவாங்க"

"ஐயோ ரகு கொஞ்சம் பேசாம இரேன்டா. மதிம்மா, ஒரு நாள் தானே விட்டு குடு தங்கம்"

"முடியாது முடியாது முடியாது"

"நீ என்னடி எனக்கு விட்டு குடுக்கறது. இது எங்க தாத்தா வீடு. இந்த வீட்டுக்கு ஒரே பேரன் நான். நான் போடினா நீ போகத்தான் வேணும்"

"நீ மட்டும் தான் வாரிசா. நானும் தான். எங்க அம்மா பிறந்த வீடு இது. உங்க அம்மாவ மாதிரி ஒண்ணும் சொத்துக்கு ஆசைபடற புத்தி எங்களுக்கு இல்ல. ஆனா இருக்கற உரிமைய விட்டு தர மாட்டேன்"

"எங்க அம்மாவ பத்தி பேசினா நாக்க அறுத்துடுவேன்"

"ஐயோ மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா? மதி, எனக்காக இந்த பாட்டிக்காக ஒத்துக்க மாட்டியா. வீட்டுக்கு வர்றவங்களுக்கு நல்ல வசதி செஞ்சு தரணும் இல்லையா. என் செல்லம் இல்ல"

"நீ கெஞ்சற ஒரே காரணத்துக்காக ஒத்துக்கறேன் பாட்டி. ஆனா என்னோட ரூம் கிளீனா இருக்கணும். இல்லைனா நீ தான் பொறுப்பு"

"சரி சரி போய் அவங்க அவங்க வேலைய பாருங்க"

ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு சென்றனர்

பெற்றோர்கள் வேலை நிமித்தம் வேறு ஊரில் இருக்க, பாட்டியுடன் வாழும் இவர்களுக்குள் ஏன் இந்த ஒற்றுமையின்மை?

அத்தை மகள் மாமன் மகன் என்றால் ஜாலி கலாட்டா இல்லாமல் பாம்பும் கீரியுமாய் இருக்க காரணம் என்ன? அதுக்கு ஒரு பயங்கரமான flashback இருக்கு. அது என்னனு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்....

கண்டதும் வருவது
கந்தர்வ காதல்...
மோதலில் தொடங்கி
மோகத்தில் முடிவது
சினிமா காதல்...
ஆதிஅந்தம் அறியாமல்
ஆகாசமாய் உயர்ந்துநிற்பது
அன்பே - நம்காதல்...

தொடரும்...

பகுதி 2


28 பேரு சொல்லி இருக்காக:

கண்மணி/kanmani said...

ம்ம் நடத்துங்க தொடர்கதையா....

அப்பாவி தங்கமணி said...

நன்றி கண்மணி.ஏதோ உங்க தயவுல ஓடுது

padma said...

வாழ்த்துக்கள் .இது வரை நல்லாவே இருக்கு

ஐந்திணை said...

தொடருங்கள்.....

DREAMER said...

தங்கமணி,
உங்க கவிதை அகராதிப்படி பார்த்தால், இது மோதலில் தொடங்கியுள்ளது. அப்போ சினிமாக்காதலோ... இல்லை கவிதையின் கடைசிவரி காதலா..? ஆர்வமா இருக்கு, அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள! தொடருங்கள்!

-
DREAMER

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை புதிர் போட்டுர்ச்சு இது எந்த விதமான காதல்ன்னு தெரியல..

ஆனா எப்படியோ காதலிக்கப்போறாங்கன்னு தெரியுது..

DHANS said...

இப்படி எல்லாம் படிச்சு தேதிக்க வேண்டி இருக்கு,
நல்ல இல்லைன்னு சொன்ன நம்பவ போறீங்க, நடத்துங்க

திருப்பூர் மணி Tirupur mani said...

:-)

கண்ணகி said...

சரளமாக தங்குதடையில்லாமல் போகிறது உங்கள் எழுத்து நடை...

Dubukku said...

நல்ல ஆரம்பம் கலக்குங்க

அப்பாவி தங்கமணி said...

Dreamer - உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. விரைவில் அடுத்த பகுதி எதிர் பாருங்கள்

அப்பாவி தங்கமணி said...

நன்றி பத்மா படித்ததற்கும் வாழ்த்துக்கும்

அப்பாவி தங்கமணி said...

ஐந்திணை - ஊக்கத்திற்கு நன்றி

அப்பாவி தங்கமணி said...

எப்படியும் காதலிச்சு தான் ஆகணும் ஆனா யார் யாரைங்கறது தான் பாக்க போறீங்க நன்றி முத்துலட்சுமி

அப்பாவி தங்கமணி said...

Dhans - நடத்தறோம் நடத்தறோம். நல்லா இல்லேன்னா பொய் சொன்னா நம்பறது கஷ்டம் தான் (இது எப்படி இருக்கு)

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க மணி

அப்பாவி தங்கமணி said...

Dubukku - நீங்க Obamaவ பிஸியான ஆளுன்னு கேள்வி பட்டேன். அப்படி இருந்தும் நேரம் எடுத்து என் பதிவை படித்ததிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

கண்ணகி - உங்கள் பாராட்டு மிகவும் ஊக்கபடுத்துவதாய் உள்ளது. மிக்க நன்றி

Priya said...

//கண்டதும் வருவது
கந்தர்வ காதல்...
மோதலில் தொடங்கி
மோகத்தில் முடிவது
சினிமா காதல்...
ஆதிஅந்தம் அறியாமல்
ஆகாசமாய் உயர்ந்துநிற்பது
அன்பே - நம்காதல்...//....நைஸ்!

அடுத்தது எப்போ?

அப்பாவி தங்கமணி said...

நன்றி ப்ரியா. அடுத்த ரிலீஸ் புதன்கிழமை. தவறாமல் பாருங்கள்...சாரி...படியுங்கள்

தக்குடுபாண்டி said...

கவிதை சூப்பர்....:)

அப்பாவி தங்கமணி said...

தக்குடுபாண்டி - மிக்க நன்றி

சின்ன அம்மிணி said...

தொடர்கதையெல்லாம் ஒருநாள் விட்டு ஒருநாள் போடணும். இல்லாட்டி மக்கள் எல்லாத்தையும் ஒண்ணா படிச்சுக்கலாம் கடைசீலன்னு விட்டுருவாங்க

Complan Surya said...

hmmmmm

etho vantuviten........

evlo nalla namaku thirima pochu

eppdi oru appavi..nu oru padivu erukirathu..

nala erukunga..

vasika vasika neram sarnu poiduthu..

thitathenga avalo nala erkunu chonen..but kamiya kadai cholrengalaey konjam neelama eurntha nala ekruum..eto oru 20linesthan eruntha pola erunchu..
but kavithai super..

valga valamudan

v.v.s sangam sarbaga
complan surya.

அநன்யா மஹாதேவன் said...

உங்க ஐடிக்கோசரமே உங்க ப்ளாக் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்பா. சூப்பரு..
உன் மகளோட மக, உன் ஒரே மகனோட ஒரே மகன். ஐயயோ, அத்தை பொண்ணு, மாமா பையனா? லவ்வா? வெயிட்டீஸ் நெஸ்ட் பார்ட் படிச்சுட்டு வர்றேன்.

அப்பாவி தங்கமணி said...

சின்ன அம்மணி - நன்றிங்க அம்மணி. நாம எதுக்கு புதுசுங்கறதால தெரியல. தொடர்ந்து போடறேன். படித்ததற்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

Complan Surya - இனிமே நீளமான பதிவா போடறேன். நல்ல இருக்குனு சொன்னதுக்கு மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

அநன்யா மஹாதேவன் - நன்றி. உங்க ஆர்வம் எழுதறது ஊக்கபடுத்தறதா இருக்கு. மிக்க நன்றிபா உங்கள் நேரத்துக்கு

Post a Comment