Monday, March 29, 2010

பிரியமானவளே...பகுதி 1

"காயத்ரி...காயத்ரி...காயத்ரி..."

"டீ...காயத்ரி காஞ்சனா மாமி கூப்டுண்டே இருக்கா பாரு. போய் என்னனு கேட்டுண்டு வா" என்றாள் கோகிலா தன் மகளிடம்

"சரிம்மா. தோ வரேன் மாமி"

"மாமி கூப்டேளா" ஈரத்தலையை துவட்டியவாறே பக்கத்து வீட்டுக்கு சென்றாள்

"நாலு அடிக்கு அந்த பக்கம் இருந்து உன்னைய வரவெக்க நான் நாப்பது தரம் கூப்பிடவேண்டினா இருக்கு"

"ஆஹா...நாலு தரம் கூட கூப்பிடல. உங்க சீமந்தப்புத்ரனவிட அதிகமா பொய் சொல்வீங்க போல இருக்கே"

"கொழுப்பாடி நோக்கு. நான் சிவனேன்னு இருக்கேன். என்னை ஏண்டி வம்பிழுக்கற" என்றான் காஞ்சனா மாமியின் மகன் கார்த்தி என்கிற கார்த்திகேயன்

"நீ சிவனேன்னு இருக்கியோ...ஷிவானிஏன்னு இருக்கியோ..." அதே தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கோமதி மாமியின் மகள் ஷிவானியிடம் கார்த்தி வழிய போய் பேசுவதை சமயம் பார்த்து கேலி செய்தாள் காயத்ரி

"ஏய்...." என்று பார்வையாலேயே அவளை அடக்கினான் கார்த்தி

பத்து வயது முதல் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் கார்த்தியும் காயத்ரியும் வம்பு பேசுவது புதிதல்ல என்பதால் காஞ்சனா அதை கண்டு கொள்ளவில்லை

"உங்க ரகளைல உன்ன எதுக்கு கூப்டேனோ அத விட்டுட்டு என்னமோ பேசிண்டு இருக்கேன்"

"எதுக்கு மாமி கூப்டேள்"

"இந்தாடி..இத வாங்கிக்கோ"

"என்னதிது..."

"உனக்கு இன்னிக்கி பிறந்தநாள்னு ஒரு பொடவை வாங்கினேன்...பிரிச்சு தான் பாரேன்"

"வாவ்...அழகா இருக்கு மாமி. எதுக்கு மாமி இதெல்லாம்... "

"ம்...தலைல வெச்சுக்க" என்றான் கார்த்தி கேலியாக

"போடா நீ.." என்றவள் அப்போது தான் பூஜை அறையில் இருந்து வெளியே வந்த கார்த்தியின் தந்தை ரங்கராஜனிடம் "வாங்கோ மாமா, இப்படி மாமியோட சேந்து நில்லுங்கோ. சேவிச்சுகறேன்"

"தீர்க்க ஆயுசா, தீர்க்க சுமங்கலியா, எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க" என்று தம்பதியாய் வாழ்த்தினர்

இது ஒரு ஒரு வருடமும் நடக்கும் விஷயம் தான். தனக்கு பெண்கள் இல்லை என்ற குறை காஞ்சனாவுக்கு எப்போதும் உண்டு. அதை இப்படி தீர்த்து கொள்வாள்

"சரி இப்படி வா என்னோட கால்லயும் விழு. அப்போதான் என்னோட gift தருவேன்" என்றான் கார்த்தி

"அஸ்கு புஸ்கு...அதுக்கு வேற ஆளப்பாரு...போடா உன் கால்ல எல்லாம் விழ முடியாது"

"சரி பர்த்டே அன்னைக்கி பொழைச்சு போ" என்றவாறே தான் வாங்கிய பரிசை அளித்தான்

காயத்ரியை விட கார்த்தி சில மாதங்கள் மட்டுமே பெரியவன். கார்த்தி இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் காயத்ரி BSC chemistry மூன்றாம் வருடமும் படித்து வந்தனர். கடந்த சில வருடங்களாக இருவரும் பரிசுகள் பரிமாறி கொள்வது வழக்கமானது தான்

"காயத்ரி...டீ...காயத்ரி...உங்க அக்கா போன்ல இருக்கா. வந்து பேசிட்டு போ" அம்மா கோகிலாவின் குரல் கேட்க "சரி மாமி நான் அப்புறம் வரேன்" என கிளம்பினாள்

"நம்மாத்துலையும் இப்படி ஒரு பெண் கொழந்தை இருந்தா வீடே நெறைஞ்சு இருக்கும் இல்லையாண்ணா" என்றாள் காஞ்சனா கணவனிடம்

"காலம் கடந்த யோசனை காஞ்சு" என்றார் ரங்கராஜன் கேலியாக

"ச்சே...தோளுக்கு மேல வளந்த புள்ளைய பக்கத்துல வெச்சுட்டு பேச்சை பாரு..." என்று பொய் கோபம் காட்டினாள்

"அம்மா நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதே..அதுக்கு ஒரு சுலபமான வழி நான் சொல்றேன்" என்றான் கார்த்தி

"அது என்னடா சுலபமான வழி"

"காஞ்சு...நான் என்ன சொல்றேன்னா..." என்று கார்த்தி தன் தந்தையின் குரலில் பேச

"டேய்...அம்மாவ காஞ்சுனு பேரா சொல்ற...ஒதைப்பேன்" என்றாள் காஞ்சனா

"உன் ஆத்துகாரர் சொன்னா மட்டும் "ஏன்னா...கூப்டேளா..." னு கொஞ்சற...பெத்த மகன் நான் சொன்னா tension ஆ"

"போட்டேன்னா ஒண்ணு வாய் மேல...பேச்சு மட்டும் அப்படியே உங்க அப்பன கொண்டிருக்க..."

"அம்மா மகன் சண்டைல என்னை ஏண்டி இழுக்கற" என்றார் தினசரியை படித்தபடி "அதுசரி...அது என்னடா சுலபமான வழி...அதை சொல்லு மொதல்ல" என்றார் ரங்கராஜன்

"அது ஒண்ணுமில்லப்பா...very simple ...எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வந்துடுவாளோனோ...அது தான் சொன்னேன்"

"இன்னும் இருபது முடியல...உங்க புள்ளைண்டானுக்கு கல்யாணம் கேக்குது கேட்டேளாண்ணா..."

"கேட்டேன் கேட்டேன்...கலி முத்திடுச்சு காஞ்சு..வேற என்ன?"

"இது நல்ல கதையா இருக்கே...ஏன்பா..நீங்க அம்மாவ கல்யாணம் பண்ணினப்ப உங்க வயசு பத்தொன்பது தான...நாங்க சொன்னா மட்டும் கலி முத்திடுச்சுனு dialogue "

"அது அந்த காலம்டா"

"இந்த சாக்கு எல்லாம் வேண்டாம்"

"இப்ப என்ன? நோக்கு கல்யாணம் பண்ணிக்கணும் அதானே...டீ காஞ்சு உன் தம்பி வரதனோட பொண்ணு வத்சலாவ பாக்கலாமா" என வேண்டுமென்றே எட்டாவது கூட தாண்டாத கார்த்தியின் மாமன் மகளை பற்றி பேச

"ஐயோ சாமி ஆள விடுங்கோ..." என்று சிதறி ஓடினான் கார்த்தி

_________

கார்த்தி வெளியே வரவும் காயத்ரி பூக்கூடையுடன் கோவிலுக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வரவும் சரியாய் இருந்தது

"எங்க...? மகாராணி அதுக்குள்ள நகர்வலம் கெளம்பியாச்சா?" என்றான் கேலியாக

"ம்...வெட்டி ராஜாக்களே கெளம்பறப்ப நாங்க கெளம்பினா என்னவாம்?"

"உடம்பு பூரா கொழுப்ப தவிர ஆண்டவன் வேற ஒண்ணும் வெக்கலடி நோக்கு"

"ஆஹா...ஐயா நீங்க தெனமும் வடிச்சு கொட்டறேளேன்னோ...கொழுப்பு நேக்கு"

"வாயடி உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா? அது சரி...எங்க கெளம்பிட்ட"

"இந்த கேலி தான வேண்டாங்கறது...பூக்கூடை எடுத்துட்டு காலேஜ்ஆ போவா? கோவிலுக்கு தான்"

திடீரென நினைவு வந்தவனாய் "ஏண்டி காத்தால ஒரு நிமிஷம் அம்மாகிட்ட என்ன மாட்டி விட்டுருப்ப...எப்ப என்ன பேசறதுன்னு இல்லையா நோக்கு"

"என்ன சொல்ற..." என்றாள் புரியாமல்

"ம்...ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத...அம்மா முன்னாடி எதுக்கு ஷிவானி பத்தி பேசின "

"ஹா ஹா ஹா...நல்லா சிக்கினயா...இன்னும் கூட சொல்லி இருப்பேன்...போனா போறதுனு விட்டேன்"

"பெரிய மனசு தான்..."

"அடடா...இதுக்கு பேரு தான் டெலிபதியா..."

"என்ன?" என்றான் கார்த்தி புரியாமல்

"அங்க பாரு ஷிவானிய பத்தி பேசினா அவளே எதுக்க வர்றா"

"வாவ்..."

"என்ன வாவ்..."

"ஒண்ணும் இல்ல...நீ சொன்னா மாதிரி டெலிபதினு நெனச்சேன்"

"யாருக்கு தெரியும். அவள வர சொல்லிட்டு தான் நீ ஆத்த விட்டு கிளம்பினயோ என்னமோ"

"அடிப்பாவி...இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் போகல"

"ஒஹோ.....ஆனா போற எண்ணம் இருக்கு போல"

"கொஞ்சம் பேசாம இரு காயத்ரி, அவ பக்கத்துல வந்துட்டா"

"ஹாய் ஷிவானி" என்றாள் காயத்ரி கார்த்தியை முந்திக்கொண்டு வேண்டுமென்றே

"ஹாய் காயத்ரி..என்ன ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிடீங்க போல"

"அதெல்லாம் இல்ல ஷிவானி. காயத்ரி கோவில் போறா. நான் சும்மா இன்னிக்கி சனிக்கிழமை லீவ் தானேனு என் friend வீட்டுக்கு போறேன்" என்றான் அவசரமாக

"ஒ அப்படியா.."

"காயத்ரி நீ சீக்கரமா ஆரத்திகுள்ள கோவில் போகணும்னு சொன்னியோன்னோ. நீ வேணும்னா போய்க்கோ" என்றான் ஷிவானியுடன் தனியே பேசும் ஆசையுடன்

அதை புரிந்து கொண்ட காயத்ரி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "ரெம்ப வழியாதடா" என்று விட்டு ஷிவானியிடம் "எங்க அக்கா புக்காத்துல இருந்து வர்றேன்னா, அதுக்குள்ள கோவிலுக்கு போயிட்டு ஆத்துக்கு போணும். சரி ஷிவானி அப்புறம் பாக்கலாம். Bye "

"Bye காயத்ரி..பாக்கலாம்...எனக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு டைம் ஆச்சு கெளம்பறேன்" என்று விடை பெற்று செல்ல பாவமாய் நின்றான் கார்த்தி

உன்னிடம் பேசும்போது மட்டும்
உலகம் வேகமாய் சுத்துகிறதோ
பத்துமணி நேரம் கூட
பத்து நொடியாய் கரைகிறதே...

பார்க்கும்வரை பலவும் பேசிட
பலநாள் ஒத்திகைபார்க்கிறேன்
உனைப்பார்த்ததும் உலகமேமறந்து
ஊமையாகிறேனே என்னவளே...

என்னமாயம் செய்தாய்
எனையேநான் மறக்க - உன்நினைவில்
பிழைகள் தினம்செயும்
பித்தனாக்கினாயே பிரியமானவளே...

தொடரும்...

39 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

staart meesic!

Porkodi (பொற்கொடி) said...

ugh... enaku ipo shivani pidikkala!! :P

gayatri and karthi - chemistry nalla iruku! serthu vainga appavi thangamani.. puhleeeease!

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
ugh... enaku ipo shivani pidikkala!! :P

gayatri and karthi - chemistry nalla iruku! serthu vainga appavi thangamani.. puhleeeease//

ஆஹா....இப்ப ஷிவானி தான் வில்லியா...
அது சரி நீங்க chemistry மேஜர்ஆ இல்ல கலா மாஸ்டர்க்கு சொந்தமோ? நல்லாவே chemistry அனலிசிஸ் செய்றீங்க

Complan Surya said...

ஆஹா பேஷ் பேஷ்.
ரொம்ப நல்ல இருக்குங்க...

முன்னாடி நீங்க விக்ரமன் உதவியளர்னு நினைத்தேன் எப்போ நீங்க பாய்ஸ் ஷங்கர் உதவியளர்னு நினைக்கிறேன் மாமி.

இதோ பாருங்க அவாசொல்றனு கதையஎல்லாம் மாத்தபிடாது.

பதிவு நன்றாக உள்ளது வசிக்க நகைச்சுவையுடன் உள்ளது..

வாழ்க வளமுடன்
வருத்தபடாத
வாசிபோர் சங்கம் சார்பாக
காம்ப்ளான் சூர்யா

padma said...

எப்பிடி தான் இம்புட்டு எழுதுறீங்களோ?
அந்த விருதை சேவ் பண்ணி ஒங்க பக்கத்தில போட்டுகோங்க தங்கமணி .நீங்க விரும்பினவங்களுக்கும் கொடுக்கலாம்

My days(Gops) said...

enga ponaaalum namaalungaley vadai ah thattidraangaley :)

My days(Gops) said...

//டீ...காயத்ரி காஞ்சனா மாமி கூப்டுண்டே இருக்கா பாரு//

coffee gayathri ilai ah appho :)

valakkam pola kavidhai super..

idhu triangle love story ngala?

Complan Surya said...

stop muusic...

enga ponalum entha vadiku yen eumputu sanda potukiranga...neenga kekamatengala???

neenga pesma oru hotel onum arbituvidunga...

ellarukum thadai ellama vadai supply panunga...

kavithai super..

i like it shivani....

appurm varen.

varuttha padatha
vasiphor sangam sarbaga

complan surya

LK said...

nice starting enakennavo karthi gayathrithan match agumnu tonuthu

சின்ன அம்மிணி said...

நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க.

My days(Gops) said...

//enga ponalum entha vadiku yen eumputu sanda potukiranga...neenga kekamatengala???

neenga pesma oru hotel onum arbituvidunga...

ellarukum thadai ellama vadai supply panunga//

y dension ??? no dension..

ennaikaavadhu oru naaal vadai'ku ninnu paarthu vadai'ah vaangi paarunga appoh therium adhan arumai :)

புதுகைத் தென்றல் said...

அசத்தலான ஆரம்பம்.

வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…
ஆஹா பேஷ் பேஷ்.
ரொம்ப நல்ல இருக்குங்க...//

ரெம்ப நன்றிங்க சூர்யா

//முன்னாடி நீங்க விக்ரமன் உதவியளர்னு நினைத்தேன் எப்போ நீங்க பாய்ஸ் ஷங்கர் உதவியளர்னு நினைக்கிறேன் மாமி//

ஆத்தி...வம்பா போச்சே...இப்போ ரெண்டு பேரும் கூப்பிட்ட என்ன செய்ய... (மிக்க நன்றி)

//இதோ பாருங்க அவாசொல்றனு கதையஎல்லாம் மாத்தபிடாது//

ஆஹா...இவிக பஞ்சாயத்த கேக்க ஆளே இல்லையா...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு...

//பதிவு நன்றாக உள்ளது வசிக்க நகைச்சுவையுடன் உள்ளது..//

நன்றிங்க பிரதர். அது சரி எனக்கு ரெம்ப நாளா கேக்கனும்னு...அது என்ன complan Surya ... வளர்கிறேனே மம்மினு சொல்றீங்களோ... இல்ல complan கம்பெனி காரன் கிட்ட கமிஷன்ஒ... விளக்கம் ப்ளீஸ்

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
எப்பிடி தான் இம்புட்டு எழுதுறீங்களோ?
அந்த விருதை சேவ் பண்ணி ஒங்க பக்கத்தில போட்டுகோங்க தங்கமணி .நீங்க விரும்பினவங்களுக்கும் கொடுக்கலாம்//

ரெம்ப நன்றிங்க பத்மா...இப்பவே செஞ்சுடறேன்

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
enga ponaaalum namaalungaley vadai ah thattidraangaley :)//

இந்த வடை பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா வடை ஆண்டவா

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
//டீ...காயத்ரி காஞ்சனா மாமி கூப்டுண்டே இருக்கா பாரு//
coffee gayathri ilai ah appho :)//

காபி காயத்ரி பின்னாடி வருவாங்க பிரதர் dont worry (எப்படி எல்லாம் யோசிக்கராங்கய்யா)

//valakkam pola kavidhai super..//

வழக்கம் போல நன்றி நன்றி நன்றி

//idhu triangle love story ngala?//

triangle ஆ rectangle ஆ circle ஆ எல்லாம் நம்ம கைலயா இருக்கு...அவன் சொல்றான் இவ எழுதறா.....

Porkodi (பொற்கொடி) said...

காம்ப்ளான் சூர்யா சார்! வாசகர்களுக்கு பிடிக்கறதுக்காக தானே கதையே.. பிடிச்ச மாதிரி மாத்தி எழுதலாம் தப்பு இல்ல பாஸ்! சாமி வரம் குடுத்தா கூட பூசாரி கெடுக்கும்ங்கறது இதானா? :))

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…
stop muusic...
enga ponalum entha vadiku yen eumputu sanda potukiranga...neenga kekamatengala???//

போச்சுடா சாமி...அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு...பிரதர் பிரதர் இது எல்லாம் ப்ளாக்ல சகஜம் பிரதர்...டேக் இட் ஈஸி பாலிசி...

//neenga pesma oru hotel onum arbituvidunga...
ellarukum thadai ellama vadai supply panunga...//

இது நல்லா ஐடியாவா இருக்கே... செஞ்சுட்டா போச்சு..."தங்கமணி வடை ஸ்டால்" நல்லா இருக்கா பேரு...இல்ல மாடர்ன்ஆ "Thangs Cafe " How is it? ஆபீஸ்ல ஆணி எடுக்கறதுக்கு இது சூப்பர் தான்

//kavithai super..//
நன்றி நன்றி நன்றி

//i like it shivani....//
என்ன விசயம் பிரதர்? என்னமோ நடக்குது உலகத்துல...மர்மமாய் இருக்குது???

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
nice starting enakennavo karthi gayathrithan match agumnu tonuthu//

அப்படீங்கறீங்க???? என்னமோ பாக்கலாம்......நன்றி

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க//

ரெம்ப நன்றிங்க அம்மணி

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
y dension ??? no dension..

அதே தான் நானும் சொல்றேன்...யாரும் கேக்க மாட்டேன்கறாங்க

//ennaikaavadhu oru naaal vadai'ku ninnu paarthu vadai'ah vaangi paarunga appoh therium adhan arumai :)//

அடப்பாவி....அவனா நீ...sorry அவரா நீங்க

அப்பாவி தங்கமணி said...

//புதுகைத் தென்றல் சொன்னது…
அசத்தலான ஆரம்பம்.
வாழ்த்துக்கள்//

நன்றிங்க புதுகை தென்றல்

My days(Gops) said...

unga tag potaachi nga....

part part ah thaaan poduven..

first part pottuten :)

Complan Surya said...

"அது ஒண்ணுமில்லப்பா...very simple ...எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா நம்மாத்துக்கு ஒரு பொண்ணு வந்துடுவாளோனோ...அது தான் சொன்னேன்"

"இன்னும் இருபது முடியல...உங்க புள்ளைண்டானுக்கு கல்யாணம் கேக்குது கேட்டேளாண்ணா..."

"கேட்டேன் கேட்டேன்...கலி முத்திடுச்சு """"


அங்க அங்க ஒரு வடிவேலு போல ஒரு மிமிக்ரே பண்ணிட்டு
எங்க சங்கத்தை சிரிக்கவும் வைக்கேறீங்க
வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
வருத்தபடாத வாசிப்போர்
சங்கம்
-
காம்ப்ளான் சூர்யா

Priya said...

அசத்தல் ஆரம்பம்.

கதையின் கடைசியில் வரும் கவிதைகள் சூப்பர்!

அப்பாவி தங்கமணி said...

//அங்க அங்க ஒரு வடிவேலு போல ஒரு மிமிக்ரே பண்ணிட்டு
எங்க சங்கத்தை சிரிக்கவும் வைக்கேறீங்க
வாழ்த்துக்கள்//

ரெம்ப நன்றிங்க சூர்யா

அப்பாவி தங்கமணி said...

//அசத்தல் ஆரம்பம்.
கதையின் கடைசியில் வரும் கவிதைகள் சூப்பர்!//

ரெம்ப நன்றிங்க ப்ரியா

Priya said...

உங்களுக்கு ஒரு விருது காத்துக்கிட்டு இருக்கு!
வாங்க‌ http://enmanadhilirundhu.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க ப்ரியா. விருதை போட்டுட்டேன் என்னோட பக்கத்துல

தக்குடுபாண்டி said...

//ஷிவானி// அடடா, பெயர் சூப்பரா இருக்கு!// ...:)

//சேவிச்சுகறேன்// அப்போ, தாம்க தரிகிட தின்னா! ஏஏஏ! தோம்க தரிகிட தின்னா! வா????...:)

அப்பாவி தங்கமணி said...

////ஷிவானி// அடடா, பெயர் சூப்பரா இருக்கு!// ...:)//
என்ன அங்க தனி ரீல் ஒடராப்ல இருக்கு... என்ன விசயம் பிரதர்

////சேவிச்சுகறேன்// அப்போ, தாம்க தரிகிட தின்னா! ஏஏஏ! தோம்க தரிகிட தின்னா! வா????...:)//
அட அட அட ... எப்பவும் இசை பிரவாகம் தானா...கொஞ்சம் வெளிய வாங்கோ பிரதர்

ஸ்ரீராம். said...

ஒண்ணு படிச்சாச்சு...அருமை...ஆனால் பெயர்க் கூட்டத்தில் கார்த்தி என்ற பெயர் ஒட்டவில்லையே...!

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது… ஒண்ணு படிச்சாச்சு...அருமை...ஆனால் பெயர்க் கூட்டத்தில் கார்த்தி என்ற பெயர் ஒட்டவில்லையே...!//

நன்றி ஸ்ரீராம். சைவ பெயர் கார்த்தி அய்யராத்தில் ஒட்டலைன்னு சொல்றேளா. நீங்க சொன்னப்புறம் அப்படி தான் தோணுது எனக்கும். இனிமே கவனமா இருக்கேன். Detail ஆ யோசிச்சதுக்கு நெஜமாவே நன்றி

ஸ்ரீராம். said...

இங்கேயும் அதே குழப்பம்...மற்ற எல்லாம் வைணவப் பெயர்களாக வருமிடத்தில் கார்த்தி என்ற முருகன் பெயரை வைணவக் குடும்பத்தில் வைப்பதில்லை என்று சொல்ல வந்தேன்...

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
இங்கேயும் அதே குழப்பம்...மற்ற எல்லாம் வைணவப் பெயர்களாக வருமிடத்தில் கார்த்தி என்ற முருகன் பெயரை வைணவக் குடும்பத்தில் வைப்பதில்லை என்று சொல்ல வந்தேன்...//

நீங்க சொன்னப்புறம் தான் இந்த சைவ வைணவ கலப்பு புரிகிறது. மீண்டும் நன்றி

priya.r said...

நன்றாக உள்ளது தங்கமணி !
நல்ல துவக்கம் !ஹரியும் சிவனும் ஒன்று என்று நீங்கள் பெயர் வைத்ததன் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது .

எப்படி தங்கமணி ,எல்லா வகுப்பு பேச்சுகளும் உங்களால் சிறப்பாக எழுத முடிகிறது !
தெலுகு வார்த்தைகள் ,மதுரை வட்டார வார்த்தைகள் ,இப்போ பிராம்மணாள் பாஸை,
சற்று வியப்பாக தான் இருக்கிறது !
அடுத்து இந்த கதையின் தொடர்ச்சியை தேடி படித்து விட்டு சொல்கிறேன்.

கதையை பற்றிய ஒரு வரி விமர்சனம்
பேஷ் !நன்னா இருக்கு மாமி !

அப்பாவி தங்கமணி said...

@ Priya r - நன்றி ப்ரியா... நம்ம ஊர்ல எல்லா மக்களும் உண்டே... அந்த பழக்கம் தான்... எல்லாமும் ஒரு அளவுக்கு வரும்... தெலுகு எங்க எழுதினேன் ? எனக்கே ஞாபகமில்ல? தேங்க்ஸ் ப்ரியா

priya.r said...

/அப்பாவி தங்கமணி சொன்னது…
@ பொற்கொடி - ரண்டி ரண்டி ரண்டி.... மீரு இக்கட்னே உன்னாரா... அய்த்தே அசல் announcement revert செய்யால்சிந்தே.... இப்புடே சேஸ்துன்னான்... revert revert revert .... we missed you............

30 மே, 2010 1:15 pm//

அம்மாடியோ ! உங்கள் பதிவுகளை அலசி தேடி
ஒரு வழியா கண்டு பிடித்து விட்டேன் புவனா !

அப்பாவி தங்கமணி said...

ha ha ha... thanks priya

Post a Comment