Wednesday, March 17, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 2

பகுதி 1 படிக்க

அத்தை மகள் மாமன் மகன் என்றால் ஜாலி கலாட்டா இல்லாமல் பாம்பும் கீரியுமாய் இருக்க காரணம் என்ன? அதுக்கு ஒரு பயங்கரமான flashback இருக்கு....அது என்னன்னா...

Transfer ஆகற அரசு வேலைல அப்பாக்கள் இருக்கறதால காலேஜ் சேந்ததும் ரகுவும் மதியும் பாட்டியிடம் சேர்ந்தனர். கணவரை இழந்து தனியாய் இருந்த பாட்டிக்கு சிறந்த துணையாகவும் இருந்தனர். ரகு இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் மதி BBM முதல் வருடமும் படித்து வந்தனர்

ரகுவின் அப்பா ராம்குமாரும் மதியின் தாய் ரஞ்சனியும் பாசமான அண்ணன் தங்கை. ஆனால் ரஞ்சனி அண்ணனின் திருமணத்திற்கு பின்னும் அண்ணனிடம் அதே உரிமையும் எதிர்பார்ப்பும் கொண்டது தான் பிரச்சனையின் ஆணி வேர்

பல சமயங்களில் தன் பெற்றோர் அத்தையின் பொருட்டு சண்டை இடுவதை பார்த்த ரகு அந்த கோபத்தை மதியின் மேல் காட்டி வந்தான். அதே போல் தன் உரிமையை ரகுவின் அம்மா தட்டி பறிப்பதாய் பல முறை கண்ணீர் சிந்தும் அன்னையை கண்டு அந்த கோபத்தை ரகுவிடம் தீர்த்து கொள்வாள் மதி

(நீங்க வேற எதாச்சும் கற்பனை பண்ணி இருந்தீங்களோ...)

ஆனா இப்படியே மொறைச்சுட்டு இருப்பாங்களான்னு guarantee இல்ல. என்ன வேணா நடக்கலாம்...எல்லாம் கலா மாஸ்டர் கிட்ட தான் கேக்கணும்...அவங்க தானே chemistry expert ...

இனி...நடக்க போற கூத்தை பாருங்க...sorry படிங்க

சனிக்கிழமை நண்பர்கள் புழாம் சூழ ரகு மகிழ்ச்சியில் இருந்தான்

"வாவ் உங்க வீடு சூப்பர்ஆ இருக்கு ரகு"

"தேங்க்ஸ் மகேஷ். என்ன சாப்பிடறீங்க எல்லாரும்?"

"ரகு இந்தாப்பா...எல்லாருக்கும் ஜூஸ் எடுத்து குடு" என்றபடி பாட்டி வந்தாள்

"தேங்க்ஸ் பாட்டி" என்றனர் எல்லோரும்

"மதிம்மா நீயும் கொஞ்சம் ஜூஸ் சாப்பிடு வா"

"எனக்கு வேண்டாம்" உள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்

"யாரு அது" என்று கேட்ட மகேஷிடம்

"அவ என் பேத்தி, ரகுவோட அத்தை பொண்ணு"

மதி வெளியே வந்தால் நண்பர்கள் முன் ஏதேனும் வம்பு செய்வாளோ என "பாட்டி நாங்க தோட்டத்துக்குள்ள போயிட்டு வரோம்"

"வெயில் நேரம் ஆய்டுச்சு ரகு. சாபிட்டுட்டு வெயில் தாழ போலாமே"

"இல்ல பாட்டி. இப்ப தான ஜூஸ் குடிச்சோம். கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறோம். ஒரு சின்ன ரவுண்டு போயிட்டு வரோம்" என்றபடி ரகு நண்பர்களுடன் நழுவினான்

தோட்டத்திற்குள் நடக்க தொடங்கியதும் "டேய் ஆனந்த். பாத்தியாடா இந்த ரகுவ. வீட்டுலையே ஒரு மொற பொண்ணு. இது வரைக்கும் மூச்சு விட்டு இருக்கானா?" என்று மகேஷ் வார

ரகு: "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கும் அவளுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். அதான் சொல்லல"

ஆனந்த்: "அட அட...இதை நாங்க நம்பணுமா?"

மகேஷ்: "ஆகாத அத்தை மகளை கொஞ்சம் எங்களுக்கு introduce பண்ணினா நாங்களாச்சும்...." முடிக்கும் முன்

"டேய்...மகேஷ் என்ன ஒளர்ற" என்றான் ரகு நிஜமான கோவக்குரலில்

மகேஷ்: "ரகு டென்ஷன் ஆகாதடா. சும்மா ஜோக் பண்ணினேன். ஏழாம் பொருத்தமாம். சும்மா ஒரு பேச்சுக்கு இப்படி கோவம் வருது...ம்...நம்பிட்டோம்...நம்பிட்டோம்"

"ஓஹோ" என்று நண்பர்கள் கலாய்க்க, தனக்கு ஏன் இப்படி கோவம் வந்தது என புரியாமல் திகைத்தான் ரகு

"என்ன சார் அதுக்குள்ள டூயட்ஆ" மகேஷ் கேட்க

"ச்சே...அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவ என் cousin thats it " என்றான் ரகு

"ஒகே ஒகே...." என்றனர் கோரசாக

திரும்பி வந்த போது மதி வாசல் திண்ணையில் இருந்தாள். பாட்டி அவள் தலைக்கு சம்பராணி புகை போட்டு கொண்டு இருந்தாள்

அவள் நிறத்திற்கேற்ற சிவப்பு சல்வாரில் காற்றில் கூந்தல் பறக்க தேவதை போல் இருந்தாள் (sorry ...தமிழ் சினிமா ஸ்டைல் வந்துடுச்சு....)

அனைவரிடமும் பொதுவாக "ஹாய்" என்றாள்

மகேஷ்: "நீங்க தான் ஜூஸ் குடிக்க கூப்டப்ப வெளிய வராததா?"

மதி: "சாரி, கொஞ்சம் தலை வலியா இருந்தது. அதான்"

மகேஷ்: "இட்ஸ் ஒகே. இப்ப தலை வலி பரவால்லையா?"

மதி: "ம்..இப்ப ஒகே" என்று சிரித்தபடி கூறியவள் தன்னை யாரோ உற்று நோக்குவதாய் தோன்ற அந்த திசையை பார்க்க ரகுவின் கோப பார்வைக்கான அர்த்தம் புரியாமல் விழித்தாள்

எப்பொதும் சண்டை இடும் போது பார்க்கும் கோப பார்வைக்கும் இந்த பார்வைக்கும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். ஆனால் அது என்னவென புரியவில்லை அவளுக்கு

"சரி எல்லாரும் சாப்பிடலாம் வாங்க" என்று பாட்டி அழைத்தார்

மதி இலை போட்டு தண்ணீர் வைத்தாள். அனைவரும் அமர "மதி, நீயும் உக்காரு. நான் போடறேன்" என்று பாட்டி கூற

"இல்ல பாட்டி நான் வெக்கறேன். நீங்க உக்காருங்க"

என்ன இவ இன்னிக்கி இப்படி சீன் போடறா ஒரு நாளாவது எனக்கு ஒரு டம்ளர் தண்ணி குடுத்து இருப்பாளா, இன்னிக்கி எவன் எவனுக்கோ சாப்பாடு போடறா என்று யோசனையாய் ஏறிட்டான் ரகு

ச்சே என்னோட friends ஐ நானே அப்படி நெனைக்க கூடாது என்று சமாதானம் செய்து கொண்டான்

"எல்லாமே ரெம்ப நல்லா இருக்கு பாட்டி. அல்வா தான் சூப்பர்" என்றான் மகேஷ்

"அல்வா மதி செஞ்சது தம்பி. எங்க மதி ரெம்ப நல்லா சமையல் செய்வா" என்று பாட்டி பெருமை பேச "ரெம்ப அவசியம்" என்று மனதிற்குள் புழுங்கினான் ரகு

"வாவ்...நான் எதிர்பாக்கவே இல்ல மதி. நீங்க சமையல் கூட செய்வீங்களா?"

"ஏதோ சுமாரா செய்வேன்"

"இது சுமாரா...சூப்பர்ங்க...இந்த அல்வாவுக்கே சொத்தை எழுதி வெக்கலாம்" என்று மகேஷ் புகழ ரகு இடத்தை விட்டு அகன்றான்

கலாட்டாவில் அவன் எழுந்து சென்றதை கூட யாரும் கவனிக்காதது அவனை மேலும் வருத்தியது

ஆனால் அவன் எழுந்து சென்றதை கண்டு ஒரு உள்ளம் சிரிப்பாய் சிரித்தது. அது வேறு யாரும் அல்ல. ரகுவின் அத்தை பெற்ற ரத்தினம் மதி தான்


சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது அவர்களின் விளையாட்டு பொழுதுபோக்கு. அதையே தான் இப்போது மதி செய்தாள், அதனால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்...

செல்லமே...
என் இதயத்தை சிதைப்பதில்
என்ன மகிழ்ச்சி உனக்கு...
என்னுள் இருப்பதுஉனது இதயமேஎன
எப்போது நீ உணரப்போகிறாய்...

என்னை நீ கோபித்தபோது
என்னவளின் உரிமைஎன மகிழ்ந்தேன்
இன்னொருவனுடன் நீ சிரித்தபோதோ
இதயம் வலிக்க அழுதேன்...
இன்னொருவனின் காதலியாய் உன்னை
கற்பனைகூட இயலவில்லை எனக்கு
கொலையும் செய்வாள் பத்தினி என்பதை
கொஞ்சமும் நம்பியதில்லை
இன்றுநீ என் இதயத்தை கொல்லும்வரை...


தொடரும்....

20 பேரு சொல்லி இருக்காக:

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்குங்க கதை.

ஐந்திணை said...

தொடருங்கள்....

அநன்யா மஹாதேவன் said...

ஹீ ஹீ.. குட் கோயிங்.

அப்பாவி தங்கமணி said...

சின்ன அம்மணி - நன்றிங்க. நீங்களே சொன்னப்புறம் appeal ஏது

அப்பாவி தங்கமணி said...

ஐந்திணை - நன்றிங்க வருகை தந்தமைக்கு

அப்பாவி தங்கமணி said...

அநன்யா - தேங்க்ஸ். follow செய்யறதுக்கு

padma said...

அடடடா யாராவது கிராமராஜன் திரைக்கதைக்கு கேக்க போறாங்க .காபி ரைட் போட்டு வச்சுகோங்க
good going

அப்பாவி தங்கமணி said...

பத்மா - ஆலோசனைக்கி நன்றி பத்மா, நல்ல வேல சொன்னிங்க, செஞ்சுடறேன். படித்ததற்கும் நன்றி

ரோஸ்விக் said...

உண்மை கதையா இது... சுவாரசியமாத்தான் போகுது... :-)


நீங்க அப்பாவி தங்கமணியா?? ;-))

அப்பாவி தங்கமணி said...

ரோஸ்விக் - நன்றிங்க. உண்மை கதை எல்லாம் இல்லைங்க சும்மா கற்பனை தான். மெய்யாலுமே நான் அப்பாவி தானுங்க

Priya said...

mmm... superb!keep writing!

கண்மணி/kanmani said...

ஆத்தா கதைக்கு காபி ரைட்டு வாங்கிடுங்க.சினிமாக்காரங்க சுட்டுடப் போறாங்க.

DREAMER said...

இரண்டாம் பகுதியும் அருமை..! நல்லாயிருக்குங்க... தொடர்ந்து கலக்குங்க...!

-
DREAMER

அப்பாவி தங்கமணி said...

பிரியா - தேங்க்ஸ் பிரியா. தொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்கும்

அப்பாவி தங்கமணி said...

கண்மணி - நன்றிங்க கண்மணி. copyright வாங்கிடலாம்

அப்பாவி தங்கமணி said...

Dreamer - தேங்க்ஸ் Dreamer . எல்லாம் உங்க ஆதரவுல தான் ஓடுது. ரெம்ப நன்றி தொடர்ந்து படிப்பதற்கு

கண்ணகி said...

இண்ட்ரஸ்டிங்....

கண்ணகி said...

அழகான கவிதை...

அப்பாவி தங்கமணி said...

//கண்ணகி said - இண்ட்ரஸ்டிங்....//

தங்கமணி said - நன்றிங்க கண்ணகி

அப்பாவி தங்கமணி said...

//கண்ணகி said - அழகான கவிதை...//

தங்கமணி said - மீண்டும் மீண்டும் மிக்க மிக்க நன்றிங்க கண்ணகி

Post a Comment