Monday, March 22, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

மருண்ட பார்வையுடன் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டவுடன் காலை முதல் தனக்குள் இருந்தது வெறும் கோபம் அல்ல என்பதை அவன் மனம் உணர்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு புதிய உணர்வில் தத்தளித்தான்...

ரகுவின் இந்த புதிய பார்வையின் அர்த்தம் விளங்காமல் அவன் பிடியில் இருந்து திமிறினாள் மதி

அவளை விட்டுவிட மனம் இன்றி "மதி ப்ளீஸ் கோபப்படாம சொல்றத கேளு"

"முடியாது நான் சொல்றத நீ எப்பவாச்சும் கேட்டு இருக்கயா?"

தன்னை அவள் உணரவில்லையே என்ற ஆதங்கம் கோபமாய் மாற "மதி...." என்று பிடியை இறுக்கினான்

அதை ரகுவின் வழக்கமான கோபம் என நினைத்து "விட்றா...இல்லேன்னா பாட்டிய கூப்பிடுவேன்" என்றபடி "பாட்டி...." என்று சத்தமாக அழைத்தாள்

"டேய் ரகு. என்னடா அவளோட வம்பு" என பாட்டி கேட்டுகொண்டே சமையல் அறைக்கு வர அவளை பிடித்து இருந்த கை விட்டு விலகி நின்றான்

"ஒண்ணும் இல்ல பாட்டி. சக்கர கொஞ்சம் extra போடசொன்னா சண்டைக்கு வர்றா" என சமாளித்தான்

"என்ன மதிம்மா இது?" என்ற பாட்டியிடம்

"இல்ல பாட்டி...அவன் தான்...'' அவள் முடிக்கும் முன் பாட்டிக்கு பின் நின்றபடி ஆட்காட்டி விரல் உயர்த்தி கோப பார்வையால் அடக்கினான் அவளை. அவளும் ஏனோ மௌனம் காத்தாள்

"சரி விடு...ரகு மகேஷ் தம்பிகிட்ட நம்ம கோவில் பத்தி சொல்லிட்டு இருந்தேன், பாக்கணும்னுச்சு. காப்பிய குடிச்சுட்டு இருட்டறதுக்குள்ள வெரசா போயிட்டு வாங்க"

"சரி பாட்டி" என்று ரகு முடிக்கும் முன்

"நானும் போறேன் பாட்டி" என்று வேண்டுமென்றே மதி கூற

"ஒரு மண்ணும் வேண்டாம். நீ வீட்லயே இரு" என்று ரகு மறுக்க

"நான் வந்தா உனக்கு என்ன? பாரு பாட்டி இவன"

"கூட்டிட்டு தான் போயேண்டா. இவளுக்கு தனியாவா வண்டி கட்ற. நடந்து போறது தான"

"என் friends கூட நான் ஜாலியா இருந்தா அவளுக்கு பொறுக்காது பாட்டி. அதை கெடுக்க தான் வர்றேன்கறா" என்று ஏதேதோ சொல்லி அவளை அழைத்து செல்வதை தவிர்க்க முயன்றான்

"எல்லாம் சும்மா பாட்டி. இவன் பண்ற திருட்டுத்தனம் எல்லாம் எனக்கு தெரிஞ்சுடும்னு..." வேண்டுமென்றே ரகுவிற்கு ஏட்டிக்கு போட்டியாய் மதி பேச

"மதி நீ போய் மொகம் அலம்பி கெளம்பு. ரகு அவளையும் கூட்டிட்டு சீக்கரம் போயிட்டு வா" என்று பெரியவள் கட்டளை போல் சொல்ல அதற்கு மேல் பேச வழியற்று மௌனியானான் ரகு

"கடவுளே எப்படி தான் நாளைக்கி வரைக்கும் சாமாளிக்க போறேனோ? நைட் தங்கமாட்டோம் என்ற நண்பர்களை நிச்சியம் தங்கவேண்டும் என வற்புறுத்தி அழைத்தது தான் தானே" என மனதிற்குள் நொந்து கொண்டான் ரகு

"இந்த மதி ஏன் இப்படி நடந்துக்கறா? ச்சே சித்ரவதையா இருக்கு" என மேலும் குழம்பினான்

---------------

ரகுவிற்கு இந்த புதிய உணர்வு முழுதாய் புரிபடவில்லை என்றே சொல்லலாம். புதியதாய் காணும் பெண் என்றால் மனமாற்றத்தை உணர்வது எளிதாக இருக்கும். குழந்தை பருவம் முதல் ஓடி விளையாடிய உறவில் உண்டான மாற்றத்தை இனம் காண முடியாமல் தவித்தான்

மதிக்கும் ரகுவின் மனமாற்றம் புரியவில்லை. தான் அவன் நண்பர்களுடன் பேசினால் ரகுவை பற்றிய ரகசியங்களை மதி அறிந்து கொள்வாள் என அவன் கோபப்படுவதாய் எண்ணினாள்

கோவிலுக்கு என்பதால் அழகிய பாவாடை தாவணியில் தேவதையாய் நின்ற மதியை கண்டதும் மனதில் இருந்த கோபம் எல்லாம் பனியாய் உருக முகம் மலர்ந்தான் ரகு

அதற்குள் அங்கு வந்த மகேஷ் "சூப்பர் மதி. மகாலட்சுமி மாதிரி மகாலட்சுமி மாதிரின்னு சொல்லி கேட்டு இருக்கேன். இப்ப தான் நேர்ல பாக்கறேன்" எனவும் மலர்ந்த ரகுவின் முகம் கோபத்தில் சிவந்தது

"தேங்க்ஸ் மகேஷ். சில ரசனை கெட்ட ஜென்மங்க நான் தாவணி போட்டா பட்டிகாடுனு சொல்லும்" ரகு முன்பொருமுறை தன்னை கேலி செய்ததை மறைமுகமாய் சொல்லி காட்டினாள் மதி

"நோ நோ...நெஜமாவே உனக்கு ரெம்ப நல்லா இருக்கு" மகேஷ் சொல்லி முடிக்கும் முன்

"சரி போலாம் டைம் ஆச்சு" என்றான் ரகு

எப்படியோ ஒரு யுகமாய் ஒரு நாளை நகர்த்தினான் ரகு. நண்பர்கள் புறப்பட்டதும் தான் மனம் நிம்மதியானது. மகேஷ் விடைபெற்றபோது மதியின் வாடிய முகம் வேறு குழப்பியது

----------------

அடுத்து வந்த ஒரு வாரம் மதியின் பெற்றோர் வரவு அவளை தனியே காணும் வாய்ப்பே இல்லாமல் போனது ரகுவிற்கு. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் மட்டுமே உடன் இருக்கும் பெற்றோரை விட்டு ஒரு கணமும் விலக மாட்டாள் மதி

ஒரு வாரம் காத்திருந்து அவளுடன் தனியே பேசும் வாய்ப்பு அன்று

பாட்டி  தோட்டத்தில் ஏதோ வேலையென சென்று விட்டாள்

"மதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் ரகு

"என்ன?"

"வந்து....."

"போன் அடிக்குது அதை மொதல்ல எடு. அப்புறம் வந்து போய் எல்லாம் பேசலாம்" என்றாள் கேலியாக

மற்றொரு சமயம் என்றால் சண்டை வலுத்திருக்கும். இப்போது எதுவும் பேச தோன்றாமல் தொலைபேசியை எடுத்தான்

"ஹலோ"

"....."

"ஹலோ யாரு?"

"......"

"மகேஷ் நான் அப்புறம் கூப்பிடறேன்..." அவன் சொல்லி முடிக்கும் முன்

"ஐ... மகேஷா?" என்று போன்ஐ பிடுங்கினாள்

"ஹாய் மகேஷ் எப்படி இருக்க?"

"...."

"ம்.....நான் நல்லா இருக்கேன்"

"...."

"ம்....அந்த சிடு மூஞ்சி நல்லா தான் இருக்கு" என்றாள் இவனை பார்த்த படி. கோபத்தில் ரகுவின் முகம் சிறுத்ததை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தாள்

"ம்... சொல்லு மகேஷ் சாப்டாச்சா"

"...."

"ஒ எஸ். சாப்டேன். தோசை தக்காளி சட்னி"

"...."

"அப்படியா. அடுத்த தரம் வர்றப்ப கண்டிப்பா செஞ்சு தரேன்"

"...."

"ஹா ஹா ஹா ...." அடக்கமாட்டாமல் சிரித்தாள்

எரிச்சல் மிக "மதி போன் குடு" என்று இழுத்தான்

"விடு பேசிட்டு இருக்கேன்ல manners இல்லையா?"

"மதி...ஒழுங்கா குடு...." பிடுங்கி இழுத்து "மகேஷ் நான் அப்புறம் பேசறேன்" என்று பதிலை கூட எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான்

"டேய் உனக்கு கொஞ்சமாவாது மூளை இருக்கா. பேசிக்கிட்டு இருக்கறப்ப வாங்கி கட் பண்ற"

"பேசினது போதுணும்னு தான்"

"நான் பேசினா உனக்கு என்ன"

"எதுக்கு அப்படி ஊருக்கே கேக்கற மாதிரி சிரிச்சு பேசற"

"உனக்கு என்ன?"

"மதி என் கோவத்த கிளப்பாதே"

"உனக்கு தான் கோவம் வருமா எனக்கு வராதா"

"மதி...கொஞ்சம் பொறுமையா கேளு"

"எதுக்கு இப்ப போன் கட் பண்ணின. அதை மொதல்ல சொல்லு"

"நீ பொண்ணா லச்சணமா இல்லாம அவன் கூட அப்படி பேசறது எனக்கு புடிக்கல போதுமா?"

"அப்ப....அப்ப...நீ என்ன சந்தேக படற. அப்படி தான"

"மதி...ப்ளீஸ்...நான் சொல்றத கொஞ்சம்"

"நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லு. என்மேல சந்தேக படறயா?" அவள் பிடிவாதம் ஆத்திரமூட்ட

"ஆமா அப்படி தான்" ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டினான்

"அப்படிதாண்டா பேசுவேன்...அதை கேக்க நீ யாரு"

"நான் யாரா?" கோபத்தில் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்றே உணராமல் தான் உயிராய் நினைப்பவள் தன்னை யார் என்று கேட்டதை தாங்கமாட்டாமல் அவள் கன்னத்தில் விரல் பதிய அறைந்தான்

ஒரு கணம் தான், மதியின் கலங்கிய கண்கள் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது

தன் தவறை உணர்ந்து "மதி..."என்று சமாதானம் செய்ய முயல

வலி கோபம் வருத்தம் எல்லாம் ஒன்று சேர "போதும்...நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இந்த ஜென்மத்துல என்கூட பேசாத"

"மதிம்மா...ப்ளீஸ்" கண்ணீர் வழிய அவள் நின்றதை காண இயலாமல் மார்போடு அணைக்க விழைய

"என்ன தொடாத....I hate you ... I just hate you ..." பேச்சிழந்து அவன் நிற்க கதறியவளாய் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள். எத்தனை கெஞ்சியும் பேச மறுத்தாள்

ரகுவிற்கு அன்று இரவு ஒரு நிமிடம் கூட கண்மூட இயலவில்லை. மதியின் கலங்கிய முகமே கண்முன் வந்து சித்ரவதை செய்தது

இதற்கு முன் எத்தனையோ முறை இருவரும் சண்டை இடும் போது அவன் அவளை அடித்ததுண்டு. அவளும் திருப்பி அடிப்பாள். சில சமயம் அழுதும் இருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவாள்

ஆனால் இன்று அவள் கலங்கிய கண்களுடன் தான் அவளை சந்தேகம் கொண்டதை தாங்க இயலாமல் கதறிய காட்சி நெஞ்சை அறுப்பதாய் இருந்தது

தன்னை தானே மன்னிக்க இயலாமல் தவித்தான். ஆனால் இந்த நிகழ்வு அவள் மேல் தான் கொண்ட காதலை அவனுக்கு தெளிவாய் உணர்த்தியது. அவள் இல்லாத ஒரு வாழ்வு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தான்...


கண்மணி...
இத்தனை சக்தியா உன் கண்ணீருக்கு
இதயத்தையே சுக்குநூறாக்கி விட்டதே
இன்னொரு முறை கலங்கிவிடாதே
இழக்க இன்னோர்இதயம் இல்லை என்னிடம்
மன்னித்துவிடு கண்ணம்மா
மனதார பொய் சொன்னதற்கு
இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்...


தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் முடியும்...

24 பேரு சொல்லி இருக்காக:

My days(Gops) said...

1 vandhom la

My days(Gops) said...

வடை எனக்கு தாம்லே

அப்பாவி தங்கமணி said...

Gops - ஆஹா...இத தான் எதிர்ப்பாக்கல. First கமெண்ட்க்கு ரெம்ப நன்றிங்க Gops

My days(Gops) said...

ரகுவுக்கு மதி கிடைப்பாளா? மதி ரூம்மை விட்டு வெளியே வருவாளா? அவள் வருவாளா?, டுவிஸ்ட்டு ஜாஸ்திலே......

//இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஓவர் பீலிங்க்ஸ்...

My days(Gops) said...

//இத தான் எதிர்ப்பாக்கல. First கமெண்ட்க்கு ரெம்ப நன்றிங்க Gops//

:) அப்போ இரண்டாவது மூனாவது கமெண்ட்'க்கு எல்லாம் நன்றி கிடையாதா? .... :P

padma said...

தங்கமணி சூப்பரா போது கதை

Porkodi (பொற்கொடி) said...

first vandha gops kadaikke first naanga vandhomla.. anga thaan nama nikarom!

Porkodi (பொற்கொடி) said...

enaku raghu pidikkala pidikkala pidikkala! (unna evan ketan nu yaarum kekka mudiyadhu :P) madhi purinju nadikrala illa nijamave she doesnt know?

My days(Gops) said...

//first vandha gops kadaikke first naanga vandhomla.. anga thaan nama nikarom//

vadai ungalukku thaaan :)

சின்ன அம்மிணி said...

அடுத்த பார்ட் எப்போ. கதைக்கு ஏத்தமாதிரி ஏதாவது படங்களையும் போடுங்க

கண்ணகி said...

கதையோடு ஒன்றிவிட்டேன்...அடுத்து, அடுத்து என்ன...எதிர்பார்ப்பு...

அப்பாவி தங்கமணி said...

My Days Gops said - //ரகுவுக்கு மதி கிடைப்பாளா? மதி ரூம்மை விட்டு வெளியே வருவாளா? அவள் வருவாளா?, டுவிஸ்ட்டு ஜாஸ்திலே......
//இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஓவர் பீலிங்க்ஸ்...//

தங்கமணி said - ரகுவுக்கு மதி கிடைப்பாளா? மதி ரூம்மை விட்டு வெளியே வருவாளா? எல்லா கேள்விக்கும் பதில் புதன்கிழமை கிடைச்சுடும். பீலிங்க்ஸ் இல்லேன்னா அப்புறம் எப்படிங்க Gops ...
வருகைக்கு மிக்க மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க பத்மா. தொடர்ந்து படிச்சு பின்னூட்டம் போடுவதற்கு

அப்பாவி தங்கமணி said...

//My days (Gops) said - :) அப்போ இரண்டாவது மூனாவது கமெண்ட்'க்கு எல்லாம் நன்றி கிடையாதா? .... :P//
ரெண்டாவது மூணாவது கமெண்ட்க்கு ரெண்டு மூணு தேங்க்ஸ்ங்க Gops . இப்ப சரிங்களா....

அப்பாவி தங்கமணி said...

//பொற்கொடி said - first vandha gops kadaikke first naanga vandhomla.. anga thaan nama nikarom!//
ஆஹா....இது சூப்பரு....

அப்பாவி தங்கமணி said...

//Porkodi said - enaku raghu pidikkala pidikkala pidikkala! (unna evan ketan nu yaarum kekka mudiyadhu :P) madhi purinju nadikrala illa nijamave she doesnt know?//

ஆஹா...பொற்கொடிக்கு ரகுவ பிடிக்கலயாமே...இப்ப என்ன பண்றது...டேய் ரகு...ரூட்டை மாத்து...பொற்கொடிக்கு பிடிக்கற மாதிரி....(சொல்லிட்டேன் பொற்கொடி சரிங்களா...இன்னும் கேக்கலேன்னா அப்புறம் ஒரே தூக்கு தூக்கிற வேண்டியது தான்)

அப்பாவி தங்கமணி said...

//Porkodi Said - //first vandha gops kadaikke first naanga vandhomla.. anga thaan nama nikarom//
//My Days (Gops) Said - vadai ungalukku thaaan :)//

ஆஹா...என்ன நடக்குது இங்க...சரி சரி...வெள்ளை கொடி...வெள்ளை கொடி...சமாதானம் ப்ளீஸ்

அப்பாவி தங்கமணி said...

சின்ன அம்மணி - தேங்க்ஸ்ங்க சின்ன அம்மணி. இனிமே உங்க பேரு சின்ன அம்மணி இல்ல, ஐடியா அம்புஜம்னு மாத்திட்டோம். சூப்பர் சூப்பரா எப்படி இப்படி ஐடியா எல்லாம். அடுத்த கதைக்கு போட்டுடறேன். மிக்க நன்றி தொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கு

அப்பாவி தங்கமணி said...

கண்ணகி - நன்றிங்க கண்ணகி. உங்க பின்னூட்டம் ரெம்ப சந்தோசமா இருக்கு. அடுத்த பகுதி புதன்கிழமை பாக்கலாம்

Priya said...

//இன்னொரு முறை கலங்கிவிடாதே
இழக்க இன்னோர்இதயம் இல்லை என்னிடம்//

//இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்...//

அழகிய வரிகள்!

இன்றுதான் நான்கு பகுதியும் முழுதாக படித்து முடித்தேன், நைஸ்! தொடர்ந்து எழுதுங்கள்!

அப்பாவி தங்கமணி said...

ப்ரியா - மிக்க நன்றி ப்ரியா பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும்

Complan Surya said...

enaku raghu pidikkala pidikkala pidikkala! (unna evan ketan nu yaarum kekka mudiyadhu :P) madhi purinju nadikrala illa nijamave she doesnt know?
---

"yenn,yen yen pidkkala pdikala...nanga kekomula..."

ethaparunga thangamani
kadhiya ellam mathai eluthakoodathu..

ennaku mahesha pidikala ammam choliputen.."

apprum enaku oru atha ponu ellamey pochey..so feelings.

kavithigal neenga elthinatha..
supera erukunga.

amma enku oru doubt.yen ellarum
vadaiku sanda potukiranga.""
neenga poitu aluku oru vadiya parcel pani anupidunga..(apdiey namakum onu..)

ada ennga ponga
தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் முடியும்....ipothan interstinga poikitu eruku athukula mudikrenga..inum oru thodar enga sangathukga podunga please...

kahai nalaerukunga please seikram mudichrathenga...

nandri valga valamudan
v.v.sangam sarbaga
Complan Surya

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது… enaku raghu pidikkala pidikkala pidikkala! (unna evan ketan nu yaarum kekka mudiyadhu :P) madhi purinju nadikrala illa nijamave she doesnt know?//"yenn,yen yen pidkkala pdikala...nanga kekomula..."ethaparunga thangamani
kadhiya ellam mathai eluthakoodathu..ennaku mahesha pidikala ammam choliputen..//
அட பாவமே உங்க பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போல இருக்கே. எனக்கு மகேஷ் ரகு ரெண்டு பேரையுமே புடிக்கல...வேற ஹீரோ introduce பண்ணிரலாமா...(இது எப்படி இருக்கு?)

"apprum enaku oru atha ponu ellamey pochey..so பீலிங்க்ஸ்//
அச்சோ பாவம்...உங்களுக்கு வர போன தங்கமணிய அத்த பொண்ணுன்னு நெனச்சுகோங்க

//kavithigal neenga elthinatha..supera erukunga.//
ஆமாங்க நம்ம கிறுக்கல் தான்...நன்றி

//amma enku oru doubt.yen எல்லாரும் vadaiku sanda potukiranga.""//
அதே தான் நானும் கேக்கறேன்

//neenga poitu aluku oru vadiya parcel pani anupidunga..(apdiey namakum onu..)//
கொடுமடா சாமி

//ada ennga போங்க தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் முடியும்....ipothan interstinga poikitu eruku athukula mudikrenga..inum oru thodar enga sangathukga podunga please...kahai nalaerukunga please seikram mudichrathenga...//
ரெம்ப இழுத்தா ப்ளாக்வே block பண்ணிடுவாங்கன்னு சொல்றாங்களே சூர்யா..

Complan Surya said...

//neenga poitu aluku oru vadiya parcel pani anupidunga..(apdiey namakum onu..)//
கொடுமடா சாமி --appdina enaku vadi vennam...

//ada ennga போங்க தொடரும்...அடுத்த அத்தியாயத்தில் முடியும்....ipothan interstinga poikitu eruku athukula mudikrenga..inum oru thodar enga sangathukga podunga please...kahai nalaerukunga please seikram mudichrathenga...//
ரெம்ப இழுத்தா ப்ளாக்வே block பண்ணிடுவாங்கன்னு சொல்றாங்களே சூர்யா..----athellam block panamatenga "enga sangam pathukum neenga kavalapadathenga..(ellam oru sila peroda vaituerchal neenga feel panathenga)

"yar angey china kaipula udaney entha thangamaniblogku oru security podu.."

nandri valga valamudan
v.v.s
complan surya

Post a Comment