Thursday, March 25, 2010

என் சுவாச காற்றே... - பகுதி 5 (இறுதி பாகம்)

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

தன்னை தானே மன்னிக்க இயலாமல் தவித்தான். ஆனால் இந்த நிகழ்வு அவள் மேல் தான் கொண்ட காதலை அவனுக்கு தெளிவாய் உணர்த்தியது. அவள் இல்லாத ஒரு வாழ்வு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தான்...

................

"மதி..."

"...."

"மதி ப்ளீஸ்...சாரி மதி. நான் வேணும்னு அடிக்கல...நீ அப்படி பேசினது தாங்காம தான். சாரிமா ப்ளீஸ் மதி. இப்படி பேசாம இருக்காத ப்ளீஸ். கஷ்டமா இருக்குடா ப்ளீஸ். வேணும்னா நீயும் கோபம் தீர என்னை அடிச்சுக்கோ"

"...."

"மதிம்மா ப்ளீஸ். ஒரு வாரமா என்னால தூங்கவே முடியல. நீ அழுத முகமா நின்னது தான் கண்முன்னாடி வருது. நீ ஒரு வாரம் பேசாம இருக்கறது ஒரு யுகமா இருக்கு மதி ப்ளீஸ் ப்ளீஸ் மா"

"...." அவன் பேச்சே காதில் விழாதது போல் ஏதோ புத்தகத்தை படித்து கொண்டு இருந்தாள்

"மதி....." பொறுமை இழந்தவனாய் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்களால் கைது செய்ய முயன்றான்

மனம் கவர்ந்தவளின் நெருப்பு பார்வையை தாங்க இயலாமல் கரைந்தான்

"ப்ளீஸ் குட்டிமா...நீ என்ன சொன்னாலும் கேக்கறேன். இப்படி யாரோ மாதிரி முகம் திருப்பாத"

"...." எப்பொழுதும் சண்டைக்கி வரும் ரகுவின் இந்த கொஞ்சலும் கெஞ்சலும் மனதை வருத்தினாலும் தன்னை எப்படி அவன் சந்தேகிக்கலாம் என்பதே நெஞ்சை நெரித்தது. எதுவும் பேசாமல் அவன் கை விலக்கினாள்

"மதி இங்க பாரு....மதி இப்படி பிடிவாதம் செஞ்சா எப்படிடா. நான் என்ன செஞ்சா உன் கோவம் கொறயும்னு சொல்லு"

"நீ என்ன செஞ்சாலும் என்மேல சந்தேகப்பட்டது இல்லைனு ஆய்டுமா?" ஒரு வாரத்திற்கு பின் பேசிய முதல் வார்த்தை என மகிழ்ந்தான்

"இல்ல மது...அது...சந்தேகம்னு இல்ல...நீ என்னை புரிஞ்சுகலைன்னு தான்..."

"உன்ன என்ன புரிஞ்சுக்கணும் நான்..."

மண்டையில் அடித்தது போல் இருந்தது. ஐயோ இன்னும் தன் காதலை அவளிடம் தான் கூறவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தான்

"மதி...அதை எப்படி சொல்றதுன்னு...நான் வந்து.....அது..."

"உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல...நான் படிக்கணும்....please leave me alone . உன் தொல்ல தாங்காம தான மொட்ட மாடில வந்து படிச்சுட்டு இருக்கேன் போ இங்க இருந்து"

"மதி ப்ளீஸ் இப்படி கோபபட்டா நான் எப்படி..."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இனி நீ யாரோ நான் யாரோ"

"மதி ப்ளீஸ் அப்படி சொல்லாத"

"ரகு கடைசியா சொல்றேன். நீ அப்படி பேசினத என்னால எப்பவும் மறக்க முடியாது. நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ என்ன காயபடுத்தினது மாறாது. விட்டுடு"

"விட முடியாது மதி. எனக்கு நீ வேணும்...எனக்கு காலம் பூரா நீ வேணும்"

"என்ன?"

"ஆமா மது எனக்கு நீ வேணும் குட்டிமா ப்ளீஸ். என்ன கல்யாணம் பண்ணிப்பயா?"

"...." இதை எதிர்பாராத மதி பேச்சிழந்து நின்றாள்

"மதி இப்படி எதுவும் பேசாம இருந்தா பயமா இருக்கு மது ப்ளீஸ். say something "

"வெளயாடாத ரகு"

"மது நான் சத்தியமா சொல்றேன். I love you Madhu "

"ஆனா ...ஏன்.....எப்படி...."

"இதுக்கெல்லாம் என்கிட்டே பதில் இல்ல கண்ணம்மா. ஆனா நீ எனக்கு வேணும்"

"இப்படி திடீர்னு..."

"நான் உண்மைய தெளிவா சொல்லிடறேன் மதி. ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் என் மனசுல இந்த எண்ணம் எதுவும் இல்லைன்னு சொன்னா நம்பறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்"

"குழப்பற ரகு" என்றாள் நிஜமான குழப்பத்துடன்

"இல்ல...எனக்கு எந்த குழப்பமும் இப்ப இல்ல. நீ மகேஷ் கிட்ட closeஆ பேசினத என்னால ஏத்துக்க முடியல. நீ எனக்கு சொந்தமானவனு உணர்ந்த தருணம் அது. எனக்குள்ள இருந்த possessiveness அப்பத்தான் வெளிபட்டதுனு நெனைக்கிறேன்"

"அதான் சந்தேகபட்டயா?" இதை இப்போது சொல்லும் போது கூட அவள் குரல் தழுதழுத்தது. அவனால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை

அவள் சம்மதத்திற்கு காத்திருக்கும் பொறுமை கூட அற்றவனாய் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்

அவளும் மறுக்காமல் பேசாமல் ஒட்டி நின்றாள். ஏதோ எல்லா கவலையும் பஞ்சாய் பறந்து மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில இருப்பதாய் உணர்ந்தாள். இது தான் காதல் என்பதா என்ற பாடல் மின்னலாய் மனதில் தோன்றி மறைந்தது. ஆனாலும் அவன் சந்தேகித்தது முள்ளாய் உறுத்தியது. சிறிது சிறிதாய் தேம்பல் கேவலானது. அழுததும் மனம் சமாதானம் அடைந்தது போல் இருந்தது


"ப்ளீஸ் baby . அழாத ராஜாத்தி. என் செல்லம் இல்ல, ப்ளீஸ்"

"என்னால தாங்க முடியல....எப்படி நீ...என்ன...அதுவும் மகேஷ் கூட...அவன் எனக்கு அண்ணன் மாதிரி. அவன் கூட ஒரு தடவை சொன்னான். எனக்கு உன்ன மாதிரி ஒரு சிஸ்டர் இருந்தா வீட்டுல செம ஜாலியா இருக்கும்னு"

"மது அப்போ அதை புரிஞ்சுக்கற பொறுமை எனக்கு இருக்கலடா. ஏன் நீ அவன் கூட பேசறது எனக்கு கோவம் வருதுனு புரியாம குழப்பம். என் மனசுல நீ இருகேங்கரத உணர முடியாம ரெம்ப தவிச்சுட்டேன் மது"

"இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"என்ன..?" என்று புரியாமல் கேட்டான்

"நான் உன்மனசுல இருகேங்கறது இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"இதோ இப்படி கைபிடிக்குள்ள நெஞ்சுக்கு பக்கத்துல வெச்சுட்டு இருக்கேனே உன்ன. இன்னும் நம்பலையா?"

"உம்ஹும்...."

"என்ன செஞ்சா நம்புவ சொல்லு செய்றேன்" என்றான் நிஜமான ஆதங்கத்துடன்

"எங்க அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டு கழுத்துல தாலி கட்டு அப்புறம் நம்பறேன்"

"அடிப்பாவி நீ என்ன விட fast ஆ இருக்க"

"பொண்ணுங்க எப்பவும் முடிவு பண்ணிட்டா அப்புறம் fast தான்"

"அப்படியா பசங்க எத்தனை fast னு இப்ப காட்டட்டுமா?" என்று முகத்தை நோக்கி குனிந்தான்

"ச்சே...ரெம்ப மோசம் நீ" என்றவாறே அவன் பிடியில் இருந்து விலக முயன்றாள்

"ஒகே ஒகே நான் ஒண்ணும் செய்யல. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பக்கத்துல இரு மது ப்ளீஸ்"

அதுவே தன் விருப்பமும் என்பது போல் உரிமையாய் அணைத்து நின்றாள்

"நம்ம வீட்டுல என்ன சொல்வாங்கன்னு நீ நெனைக்கற" என்றாள் யோசனையாய்

"இப்போதைக்கி கொஞ்ச நாள் எதுவும் சொல்ல வேண்டாம் மது. திருட்டுத்தனமா காதலிக்கறதுல ஒரு த்ரில் இருக்கு இல்லையா. அதை கொஞ்சம் அனுபவிக்கலாம். studies எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் சொல்லலாம் சரியா?"

"எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டு சும்மா பேச்சுக்கு கேக்கற இல்லையா? கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது. ஞாபகம் வெச்சுக்க" என்று செல்லமாய் மது மிரட்ட அதற்கே காத்திருந்தவன் போல்

"உத்தரவு மகாராணி" என்று தலை பணிய அங்கு ஒரு இனிய சங்கமம் உதயம் ஆகியது. இனி சுவாச காற்றுக்குக்கூட அவர்களுள் இடைவெளி இல்லை....


என் சுவாச காற்றே...
சுவாசமின்றி காற்றில்லை
காற்றின்றி சுவாசமில்லை - அதுபோல்
நீயன்றி நானில்லை
நானின்றி நீஇல்லை
நம் காதலிலே
நீ நான் பேதமில்லை....

முற்றும்

இன்னும் அழகான ஒரு காதல் கதை "பிரியமானவளே..." அடுத்த வாரம்  முதல். படிக்க தவறாதீர்கள்...

24 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

:)))

Porkodi (பொற்கொடி) said...

aaaah! taknu mudichutingle.. super! (enaku inum raghu pidikala thaan, i hate sandhegapranis :D)

waiting for priyamanavale.. mokkai film titles eduthu neega pudhu story pinringa.. kalakringa ponga! (ana pera ketta appavi thangamaniyam..!)

LK said...

ethirpaartha mathirithan irunduchi.l but unga style nalla iruku

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க பொற்கொடி...அடடா...இன்னும் ரகுவ பிடிக்கலையா... உரிமை இருக்கற எடத்துல தானுங்க சந்தேகம் வரும்... நீங்க சொல்றதும் சரி தான்... அடுத்த கதைல உங்களுக்கு புடிச்ச மாதிரி ஹீரோ போட்டுடலாம் சரிங்களா...நாம தான் same pinch ஆச்சே அப்போ நான் அப்பாவி தானே (அனன்யா கிட்ட சொல்லாதீங்க). Thanks a lot for your encouragement

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க கார்த்திக்

padma said...

டும் டும் டும் நல்ல கதை நல்ல முடிவு

தக்குடுபாண்டி said...

//பொண்ணுங்க எப்பவும் முடிவு பண்ணிட்டா அப்புறம் fast தான்// confirmaa நீங்க 'அடப்பாவி' தங்கமணிதான்....:)

அப்பாவி தங்கமணி said...

மிக்க நன்றி பத்மா தொடர்ந்து படித்ததற்கு

அப்பாவி தங்கமணி said...

என்னங்க தக்குடு...பொதுவா நடக்கறத சொன்னா என்னை "அடப்பாவி" ங்கறீங்க...நான் அப்பாவி தான் பிரதர்...என் ரங்கமணிய வேணும்னா கேட்டு பாருங்க....

Complan Surya said...

mmmmm appada epothan kadhai supera mudichu erukku..nandri valga valamudan..

kavithaigal nandru..
என் சுவாச காற்றே...
சுவாசமின்றி காற்றில்லை
காற்றின்றி சுவாசமில்லை - அதுபோல்
நீயன்றி நானில்லை
--ethey kavithaiya
eppadium elathalamnu...

"kattru swasika
swasam uir vala
uir unnoda valanu"
oru tholi eluthinathu...

paruda orey lines vachu eppadi ellam yesikranganu..namakuthan onum thiriamatengethu...

ethirparphugaludan..
priyamanavaley thodrukaga.

nandri valga valamudan.

v.v.s
complan surya

கண்ணகி said...

நல்ல முடிவு.

.வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது..போய்ப்பாருங்க..

padma said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

Priya said...

சுபம் சுபம் சுபம்!

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்(எப்படி... உங்களையும் மாட்டி விட்டுடேனே:-))

அப்பாவி தங்கமணி said...

Complan Surya - நன்றி நன்றி நன்றி சூர்யா

அப்பாவி தங்கமணி said...

Kannagi - ரெம்ப ரெம்ப நன்றிங்க கண்ணகி

அப்பாவி தங்கமணி said...

Padma - மிக்க நன்றி பத்மா

அப்பாவி தங்கமணி said...

Priya - நன்றி நன்றி நன்றி (ஆஹா...சிக்க வெச்சுடீங்களா...சீக்கரம் எழுதிடறேன்)

சின்ன அம்மிணி said...

மகேஷ் அண்ணன் மாதிரின்னேல்லாம் இல்லாம கொஞ்சம் வேறமாதிரி கொண்டு போயிருக்கலாம். :)

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
மகேஷ் அண்ணன் மாதிரின்னேல்லாம் இல்லாம கொஞ்சம் வேறமாதிரி கொண்டு போயிருக்கலாம். :)//

எனக்கும் அப்படி தோணுச்சு (same blood ), அப்புறம் ஓவர்ஆ இழுக்கற மாதிரி ஆய்டும்னு விட்டுட்டேன். நன்றிங்க சின்ன அம்மணி

Madhuram said...

நல்ல இருந்ததுங்க கதை. எனக்கு இந்த மாதிரி tutti-fruiti love stories ரொம்ப பிடிக்கும். பிரியமாணாவாளே நீங்க முடிச்துககப்பறம் படிக்க போறேன்.

vgr said...

happa...mudiavelenga...unga kadal oviyam :)

அப்பாவி தங்கமணி said...

@ VGR - ஹப்பா... நீங்க என்ன சார் கதை போட்டு நாலு மாசம் கழிச்சு படிக்கறீங்க... சூப்பர்... தேங்க்ஸ்ங்க

Gayathri said...

sama cute story akka. Romance pidikatha ennai ippadi ore naalla romance kadhai paythyama aakkiteengale..super ponga..ur great

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - wow...thats a great compliment...thanks Gayathri

Post a Comment