Tuesday, March 23, 2010

பொண்ணு பாக்க போறோம்...

இநத பதிவோட முடிவுல சிலரை தொடர் பதிவு எழுத கூப்பிட்டு இருக்கேன். எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்"


சரி கதைக்கி போவோம் ரெண்டு வாரம் முன்னாடி எங்க family friend ஒருத்தரோட பொண்ணு போன் பண்ணி "ஆண்ட்டி எங்க அம்மா அப்பாவுக்கு 20th wedding anniversary வருது நாம எல்லாம் சேந்து ஒரு surprise பார்ட்டி செய்யலாமானு கேட்டா"

அடடா அம்மா அப்பா அசந்தா தனக்கே அலைபாயுதே ஸ்டைல்லே வெட்டிங் கொண்டாடற பசங்க இருக்கற இந்த காலத்துல பெத்தவங்க மேல இத்தனை பாசமான்னு மாடு விட்டு மேயவெக்கற ரேஞ்சுக்கு (அதாங்க புல்லரிச்சு போய்னு சொல்ல வந்தேன்) feel பண்ணி "கண்டிப்பா செய்யலாம்"னேன். நமக்கு தான் மத்தவங்கள ஜெர்க் அடிக்க வெச்சு பாக்கறதுல தனி சுகமாச்சே

இன்னும் ரெண்டு தங்கமணிக கூட கூடி கும்மி அடிச்சு அப்படி இப்படி தேத்தி ஒரு மொக்க பிளான் போட்டாச்சு. அந்த தம்பதிக்கு ஹார்ட் அட்டாக் வர்ற ரேஞ்சுக்கு Surprise ம் குடுத்தோம். அது தனி பதிவா போடற அளவுக்கு பெரிய கலாட்டா. அது இன்னொரு தரம் சொல்றேன்

இநத பொண்ணு பாக்க போறோம் தலைப்பு எங்க வருதுன்னா...இந்த surprise பார்ட்டில அந்த தம்பதிய கலாட்டா பண்ணலாம்னு யாரோ ஒருத்தர் அந்த ரங்கமணி கிட்ட "பொண்ணு பாக்க போன கதைய சொல்லுங்க" னு கேட்டாங்க

அப்படி ஆரம்பிச்சது அப்படியே எல்லாரும் ரெம்ப ஆர்வமா சொல்ல ஆரம்பிச்சாங்க. சிரிச்சு சிரிச்சு திரும்பவும் பசிக்கவே ஆரம்பிச்சுடுச்சு (எல்லாருக்கும் பொதுவா சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்கும் எனக்கு என்னமோ பசிக்கும்...ஒரு வேள விழுந்து விழுந்து சிரிக்கறதால exercise மாதிரி ஆகி பசிக்க ஆரம்பிச்சுடுது போலனு ரங்கமணி கிட்ட சொன்னா...வித்தியாசமா இருக்கறதால தான் நீ தங்கமணினு ரங்கமணி கமெண்ட் வேற..எல்லாம் நேரம்)

அதுல ஒருத்தர் தன்னோட மனைவிய பொண்ணு பாக்க போனது மட்டும் இல்லாம அதுக்கு முன்னாடி பொண்ணு பாக்க போன கதை எல்லாம் பேரு ஊரு detail எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பின் விளைவுகள் பத்தி யோசிக்காம (அடுத்த நாள் போன் பண்ணி எந்த hospital ல இருக்கார்னு கேக்கனும்னு நெனச்சேன்...ஆனா நம்ம சின்ன கலைவாணர் விவேக் சொல்ற மாதிரி அவங்க அவங்க பிரச்சனைய அவங்க அவங்க தான் deal பண்ணனும்னு விட்டுட்டேன்)

ஆனா அது தான் அந்த பார்ட்டியோட மேல் விளக்கா (அதாவது highlight ) ஆய்டுச்சு

அப்ப தான் தோணுச்சு இதை ஏன் ஒரு தொடர் பதிவா போட கூடாது. அவங்க அவங்க மனசு பாரத்த எறக்கி வெசாப்பலையும் இருக்குமேன்னு நெனச்சேன். ஏதோ நம்மளால ஆனா ஒரு சிறு உதவி

மொதல்ல என் (சோக) கதைய சொல்றேன் கேளுங்க

என்னை பொண்ணு பாக்க எல்லாம் வரலங்க....அப்பவே பாக்கற மாதிரி கூட இல்லையான்னு கேட்டா அப்புறம் உங்கள நித்யானந்தா சாமி கிட்ட புடிச்சு குடுத்துடுவேன்...பொறந்ததுல இருந்தே பாக்கற மூஞ்சிய என்ன புதுசா பாக்கறதுன்னு தான்...ஆமாங்க, ரங்கமணி வேற யாரும் இல்லைங்க. சொந்தம் தான். ஒரு வகைல மாமா மொற (மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு தான் இருக்காக), இன்னொரு வகைல அத்தை மகன். அது என்ன வகைன்னு எங்க அம்மாவும் நெறைய வாட்டி சொல்லிடாங்க, எனக்கு தான் விளங்கல. எந்த வகையா இருந்தா என்ன...அதான் வகையா சிக்கியாச்சே...

பொண்ணு பாத்த கதை தான் இல்ல...எப்படி கல்யாணம் முடிவு ஆச்சுனு சொல்றேன்... தமிழ் சினிமால வர்ற மாதிரி மொறை வெச்சு எல்லாம் பேசி பழக்கம் இல்ல. பெரியவங்களும் அப்படி எல்லாம் யோசிச்சதில்ல. பெரிய கொடுமை என்னன்னா இவர நான் அண்ணான்னு தான் கூப்பிடுவேன். நாங்க பாண்டவர் பூமி படத்துல வர்ற மாதிரி பெரிய குடும்பம். எட்டு cousins சேந்து அந்த ஏரியாயவே கலக்குவோம்...அது எல்லாம் ஒரு காலம்...அந்த ஊரே எங்கள பாத்து பொறாம பட்ட காலம் அது (இது கொஞ்சம் ஓவர் build up தான்...)

அந்த எட்டு cousins ல இவர் எல்லாம் இல்ல. ஏன்னா எப்ப பாத்தாலும் எங்க எட்டு பேரையும் மார்க் சீட் வாங்கற அன்னிக்கி எல்லாம் ஒரு example வெச்சு திட்டரதுன்ன இவர வெச்சு தான் திட்டுவாங்க. படிப்பாளி, பண்பாளி, அறிவாளி, பொறுப்பாளி, பப்பாளி.... இப்படி இன்னும் என்ன என்னமோ இவர் புகழ் பாடி தான் அர்ச்சனை நடக்கும். அதன் காரணமா சில சமயம் இவர் மேல கோபம் தான் வரும்

ஒரு ஒரு வருசமும் அவங்க ஊர்ல நடக்கற தேர் திருவிழாவுக்கு போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வருவோம் நாங்க எட்டு பேரும். என்னடா இவ கீறல் விழுந்த ரெகார்ட் கணக்கா எட்டு எட்டு னு சொல்றான்னு நெனைக்கறீங்களோ....என்னோட கல்யாண பத்திரிக்க friends க்கு எல்லாம் குடுக்க கூட நாங்க எட்டு பேரு சேந்து தான் போனோம் அதுவும் ஒரே ambassador கார்ல (இன்னிக்கி இருக்கற சைஸ்க்கு அந்த கார் எங்கள்ள 4 பேர கூட தாங்கதுங்கறது தனி கதை...)

அவங்களும் அப்ப அப்ப எங்க வீட்டுக்கு வருவாங்க

இப்படி இருந்த சமயத்துல இவரு துபாய்க்கு வேலை கெடைச்சு போய்ட்டாருனு ஒரு நியூஸ் வந்தது. சொல்லவே இல்ல பாருனு எங்க cousins குள்ள பேசிகிட்டோம். நாங்க பேசினது கேட்டுச்சோ இல்ல திடீர் நாநோதயமோ எங்க எட்டு பேரு வீட்டுக்கும் லெட்டர் போட்டாரு...உடனே நீங்க எதாச்சும் கற்பனை பண்ணிகாதீங்க...எங்க அம்மா அப்பாவுக்கு தான் லெட்டர் போட்டாரு எனக்கு இல்ல

அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு லீவ்க்கு இந்தியா வந்தப்ப வீட்டுக்கு வந்தாரு போனாரு. அப்புறம் ஒரு ஒரு வருசமும் இது ஒரு வழக்கமாச்சு. அப்ப அப்ப ஈமெயில் எல்லாம் கூட வரும், நானும் அனுப்பறதுண்டு

இவருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறாங்கன்னு நியூஸ் வந்தது. எங்க அப்பா கூட நெறைய ஜாதகம் எல்லாம் வாங்கி குடுத்தாரு. அப்படியும் ஒண்ணும் அமையல (அதுக்கு ரங்கமணி இப்ப சொல்ற கமெண்ட் என்ன தெரியுமா "உன்ன என் தலைல கட்டணும்னு உங்க அப்பா வேணும்னே பொருந்தாத ஜாதகம் குடுத்து ஏமாத்திட்டாருன்னு"....நல்லதுக்கு காலம் இல்ல)

நானே ஒரு தடவ இவங்க வீட்டுக்கு போனப்ப (எப்பவும் போல எட்டு பேரும் தான்) துபாய் creek கிட்ட(கடல் கரை மாதிரி) இவர் நிக்கற மாதிரி ஒரு போட்டோவ செலக்ட் பண்ணி பொண்ணு பாக்கறப்ப குடுங்கன்னு அவரோட தங்கை கிட்ட சொன்னேன் (அப்படியும் விதி விடல...)

திடீர்னு ஒரு நாள் இவங்க வீட்டுல இருந்து என்னோட ஜாதகம் கேட்டாங்க. ஒண்ணும் புரியல. ஜாதகத்த பாத்த ஜோசியர் வேற பத்துக்கு பன்னண்டு பொருத்தம்னு ஒரே அடியா அடிச்சுட்டாரு (ஒரு ஒரு வாட்டி இப்ப சண்டை வர்றப்ப எல்லாம் நிச்சியம் அந்த ஜோசியர் மண்டை உருள்றது தனி கதை...)

அப்புறம் அந்த வீட்டுல பேசி இந்த வீட்டுல பேசி முடிவு பண்ணிடாங்க. அப்புறம் என்ன "மாங்கல்யம் தந்து நானே..." தான்

நெறைய சினிமா எல்லாம் பாத்து பொண்ணு பாக்க வர்றத பத்தி நெறைய கற்பனை எல்லாம் பண்ணி வெச்சு இருந்தேன். எல்லாம் கனவாவே போச்சு...இருந்தாலும் மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால சமாதானம் பண்ணிகிட்டேன்

எனக்கு தான் பொண்ணு பாக்க வந்த அனுபவம் இல்ல...உங்க அனுபவத்த சொல்லுங்க...கேட்டு மனச தேத்திகறேன்


நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க

இந்த பதிவ தொடரனும்னு இவங்கள எல்லாம் கேட்டுக்கறேன்(எச்சரிக்கறேன்) :-

பொற்கொடி

கண்மணி

சின்ன அம்மணி

கண்ணகி

Dubukku

My Days (Gops )

பத்மா

ப்ரியா

தக்குடுபாண்டி

ஐந்திணை

அனன்யா மகாதேவன்

முத்துலெட்சுமி

Dhans

புதுகை தென்றல்

அறிவிலி

70 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

ada kodumaiye idhu veraya!

Porkodi (பொற்கொடி) said...

naan erkanave enoda kalyana kadhakalatchebam ellam panirukene.. inoru dadavai potta varra 4 perum therichu odida matanga?

Porkodi (பொற்கொடி) said...

neenga nijamave appavi thaan! same pinch!!

Porkodi (பொற்கொடி) said...

hahaha.. gops.. thakkudu ellam kooda ezhudanuma.. enna villathanam!!

(ananya: ingayum vadaiya nu poruma vendam, ennane therialai, login pannum podhu ellam yaravadhu post potrukanga.. :P)

புதுகைத் தென்றல் said...

மாட்டிவிட்டு புண்ணியம் கட்டிகிட்டீங்களா!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்

தாராபுரத்தான் said...

இனி கலக்கல்தான் போம்மா.

padma said...

ayyoooooooooo

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html

pathivu potachu

அநன்யா மஹாதேவன் said...

வந்துட்டோம்ள? அடடா... தொடர் பதிவா? மீ அண்டு ஆல்?? ஹ்ம்ம்..அப்பிடியே மயிர்கூச்செரியரது.. புல்லரிச்சுடுத்து! ஆனந்த கண்ணீர் தாரை தாரையா வழியறது கண்கள்ல இருந்து. சரி கட்டாயம் எழுதிடுறேன்.
உங்க நரேஷன் ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தது! அப்போ எல்லாமே ப்ளாண்டுன்னு சொல்றாரா உங்க ரங்கு? இதெல்லாம் நல்லா இல்லே! மனம் போல மாங்கல்யம்? அப்படீன்னா,கதைல சில பார்ட்ஸ் மிஸ்ஸாகுதே?
பொற்ஸ், ப்ளீஸ் கிவ் தி லின்க்கு 4 தி காலக்‌ஷேபம். ஈகர்லீ அவெய்ட்டிங்கு.. தொடர் பதிவு எளுதிட்டு நெஸ்டு மீட் பண்றேன்.

அநன்யா மஹாதேவன் said...

பொற்ஸ் எப்படி எப்படி? சேம் பின்ச்சா? தோடா.. அ.த, இந்த பொண்ணுகிட்டே மட்டும் பீ கேர்புள்.. ஆமா சொல்லிப்புட்டேன்!

அநன்யா மஹாதேவன் said...

பொற்ஸ்,
ஆமா, நோக்கு ப்ளாகோமேனியான்னு நான் கரெக்டா டயக்னைஸ் பண்ணிட்டேனாக்கும். நீ தான் அடங்காம ப்ளாக் ப்ளாகா சுத்திண்டு இருக்கே.. தொடர்கதை நெஸ்டு பார்ட் போட சொன்னா ஆணின்னு சொல்றே ஆனா என் ப்ளாக் ல நேத்திக்கி மட்டும் ஒரு 30 கமெண்டு போட்டு இருப்பே இங்கே ஒரு அரை டசன். தென்றலக்கா ப்ளாக் ஒரு 75.. கேட்டா நான் பொருமறேனா.. டூமச்.. உனக்கு ப்ளாகோமேனியா மட்டுமில்லை கமெண்டோகேனியா சிம்டம்ஸ் கூட இருக்குன்னு நான் சஸ்பெக்டு பண்றேன்.

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹி.. அநன்யா யக்கா.. அது ஒண்ணுமில்ல நான் வேற ஒரு காரியத்துல பிஸியா இருக்கேன் (ஒரு வகையான ஆணி), அதுனால 1 மணிக்கு ஒரு தரம் ஒரு 15 நிமிஷம் ப்ரேக் வருது. இந்த ப்ரேக்ல உருப்படியா ஒண்ணும் வேலை செய்ய முடியலை! அதனால் கமெண்டு ஜாஸ்தியா இருக்கு இந்த வாரம். கதை ஒரு பகுதி எழுத ட்ராஃப்ட் இருந்தாலே 2 மணி நேரம்.. ஹிஹி இப்போ அதெல்லாமும் தீர்ந்து போச்சு, ஆக 4 மணி நேரமாவது வேணும். என்னவோ நான் வேணும்னு பண்றாப்புல.. :( பழைய கதை எல்லாம் 2006/07 ஆர்கைவ்ல தான் இருக்கும். லிங்க் குடுத்து சொ.செ.சூ வெச்சுக்க எனக்கு பைத்தியமா என்ன?

அ.த. நீங்க இவங்க பேச்சை எல்லாம் கண்டுக்காதீங்க.. உண்மைலயே நான் ஒரு வாயில்லா அறியா பூச்சி.

My days(Gops) said...

vadai na kodi ku ambuttu ishtam pola :)

break time la tea kudi kodi'nu sonna, inga vandhu vadai ah eduthutu poidraaaanga... :)

nalla iruma

My days(Gops) said...

//சரி கதைக்கி போவோம் //

sare povam vaanga..

//மொதல்ல என் (சோக) கதைய சொல்றேன் கேளுங்க //

ada engada kadhai ah kaanom nu thedikittu irundhen, paartha inga thaaan aaarambikireeenga ;).....

தமிழ் உதயம் said...

பதின்ம நினைவுகளுக்கு பிறகு... ஒரு சுவராசியமான தொடர் பதிவு.

My days(Gops) said...

//இன்னிக்கி இருக்கற சைஸ்க்கு அந்த கார் எங்கள்ள 4 பேர கூட தாங்கதுங்கறது தனி கதை...)//

oh appoh kandipaa neenga ettu perum serndhu ipa andha car'ah thaangiduveeenga????? cool

Porkodi (பொற்கொடி) said...

gops anga vandhu boni pannupa.. naan morning vandhu pakum podhu pazhaiya padi 13 comments or 113 comments irukanum.. okay?

My days(Gops) said...

//அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு லீவ்க்கு இந்தியா வந்தப்ப வீட்டுக்கு வந்தாரு போனாரு. அப்புறம் ஒரு ஒரு வருசமும் இது ஒரு வழக்கமாச்சு. அப்ப அப்ப ஈமெயில் எல்லாம் கூட வரும், நானும் அனுப்பறதுண்டு//

neenga science student ah ilaatium parava illai., unmai ah sollunga,

ungalukkum, unga rangamani'kum oru chemistry koooda illai?

Porkodi (பொற்கொடி) said...

a.t! ippodhaiku sample post onnu potruken :)

My days(Gops) said...

@kodi:_ //gops anga vandhu boni pannupa//

enga vandhu'nga? link kodunga.. vuttu thaalichi eduthuruvom :)

My days(Gops) said...

//எனக்கு தான் பொண்ணு பாக்க வந்த அனுபவம் இல்ல...//

adhu epadinga ilaaamah irukum?

marriage fix aanadhuku appuram ungala unga rangamani first paarthu irupaaaru la? adhu eppadi irundhadhu? adha solaaama vuttuteeengaley ????

My days(Gops) said...

//இந்த பதிவ தொடரனும்னு இவங்கள எல்லாம் கேட்டுக்கறேன்(எச்சரிக்கறேன்//

idhu verai ah? eki :)

ஹுஸைனம்மா said...

இவ்வளவு டெரரா இருக்கீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி உங்களப் பத்தி சரியா தெரிஞ்சுக்காம தலைய ஆட்டிட்டாரோ உங்க ரங்ஸ்?

//மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு//

//அறிவாளி, பொறுப்பாளி, பப்பாளி.... //

எல்லாம் சரி, //மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால// அப்ப ஏதோ விஷயம் இருக்கு, இல்ல?

கண்ணகி said...

நீங்க அப்பாவித் தங்கமணின்னு பேர வச்சுட்டு இப்படி கிரிமினலா மாறலாமா..

Priya said...

ஆஹா என்னையும் மாட்டி விட்டுடீங்களே;) அழைப்பிற்கு நன்றி!

விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.
//எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்"//.....
இதுக்காக‌வாது எழுத‌னுமில்ல‌:)

சொந்த‌துக்குள்ளே ஆன‌தால் உங்க‌ க‌தையில் கொஞ்ச‌ம் சுவார‌ஸிய‌ம் குறைய‌ர‌ மாதிரி இருக்கு. இருந்தாலும் அதுவும் ஒருவகையில் நல்லாதான் இருக்கு.

DHANS said...

//எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்//

இந்த மாதிரி இம்போசிசன் மிரடல பள்ளிகூடத்துல இருந்தே பார்த்தாச்சு, இதுகெல்லாம் நாங்க அசர மாட்டோம்.

//அதுல ஒருத்தர் தன்னோட மனைவிய பொண்ணு பாக்க போனது மட்டும் இல்லாம அதுக்கு முன்னாடி பொண்ணு பாக்க போன கதை எல்லாம் பேரு ஊரு detail எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பின் விளைவுகள் பத்தி யோசிக்காம//

அவரு வெறும் பேசால சொனதுக்கே ஆஸ்பிடல் நாங்க எழுத்துல வாக்குமூலம் கொடுத்தா என்ன ஆகறது? ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல, யார் வந்து என்ன பூரிக்கடையால பூச போறாங்க தெர்ல ஆனா பூரிக்கட்டை ரெடி பண்றீங்க நீங்க, ஏன்னா வில்லத்தனம்.

//துபாய் creek கிட்ட(கடல் கரை மாதிரி) இவர் நிக்கற மாதிரி ஒரு போட்டோவ செலக்ட் பண்ணி பொண்ணு பாக்கறப்ப குடுங்கன்னு அவரோட தங்கை கிட்ட சொன்னேன் (அப்படியும் விதி விடல...)//

நீங்க மட்டும் என்ன உங்க அப்பா பொருந்தாத ஜாதகம் என்றால் நீங்க இருகரதுலையே மோசமான போட்டோவ செலக்ட் செஞ்சு கொடுத்து இருக்கீங்க. பயங்கர பிளான் தான் போல

//இவங்கள எல்லாம் கேட்டுக்கறேன்(எச்சரிக்கறேன்) ://

ஐயோ ஏங்க கடசில இப்படி குண்டு வைத்து இருப்பீங்க என தெரியலையே :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்பத்தாங்க எப்படி கல்யாணம் ஆச்சுன்னு பஞ்சாயத்து முடிஞ்சு கணினில உக்காந்தேன்..நடுவரா அது என் மகள் தான்..

இது ப்ன்னிரண்டுவருசமா நடக்கிற பஞ்சாயத்து. :)

ஆனா ஒன்னுங்க நாம மட்டும் இல்ல மத்தவஙக்ளும்ம் இதேரேஞ்சுல தான் திங்க் பண்ராங்கன்னு இதுல வர சம்பவங்கள் எனக்கு உணர்த்துது..
கலக்கலா எழுதி இருக்கீங்க.. நன்றி.. எழுத முயற்சி செய்ய்றேன்..

தக்குடுபாண்டி said...

//ரங்கமணி வேற யாரும் இல்லைங்க. சொந்தம் தான். ஒரு வகைல மாமா மொற (மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு தான் இருக்காக), இன்னொரு வகைல அத்தை மகன்//

பகுதி 5-க்கும் இதுக்கும் எதோ லிங்கு இருக்கிறமாதிரி இருக்கே??? அப்போ இதுதான் பகுதி 5??????( நாராயண! நாராயண).....:)

தக்குடுபாண்டி said...

நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைங்க, அதனால் அனன்யா அக்கா போடப்போகும் அமரகாவியத்தை(மொக்கைனு சொன்னா கன்னா! பின்னா!னு திட்டு விழும்...:)) என்னுடைய அக்கவுண்ட்ல வரவு வத்துக் கொள்ளவும்.

அப்பாவி தங்கமணி said...

பொற்கொடி said :
//ada kodumaiye idhu veraya!//
வேற என்ன கொடும வேணுங்க அம்மணி

//naan erkanave enoda kalyana kadhakalatchebam ellam panirukene.. inoru dadavai potta varra 4 perum therichu odida matanga?//
போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். ஓடுவார் ஓடட்டும். எத்தனையோ பண்ணிடீங்க இதை பண்ண மாட்டீங்களா பொற்கொடி

//neenga nijamave appavi thaan! same pinch!!//
நன்றி நன்றி நன்றி

//hahaha.. gops.. thakkudu ellam kooda ezhudanuma.. enna villathanam!!//
அப்பாவின்னு சொல்லிட்டு வில்லதனம்னு சொல்றது நல்லா இல்ல...வேணாம் அழுதுருவேன்...

//(ananya: ingayum vadaiya nu poruma vendam, ennane therialai, login pannum podhu ellam yaravadhu post potrukanga.. :P)//
ஆஹா, நம்ம ப்ளாக்ஐ சாட்டிங் சைட்ஆ மாத்திட்டாங்களே

//அ.த. நீங்க இவங்க பேச்சை எல்லாம் கண்டுக்காதீங்க.. உண்மைலயே நான் ஒரு வாயில்லா அறியா பூச்சி//
என்னையும் அப்பாவின்னு சொன்னதால கண்டுகல (அனன்யா கிட்ட சொல்லிராதீக)

அப்பாவி தங்கமணி said...

புதுகை தென்றல் said : //மாட்டிவிட்டு புண்ணியம் கட்டிகிட்டீங்களா!!!//
ரெம்ப ரெம்ப புண்ணியம். நீங்க கேள்விப்பட்டதில்லையா

//pathivu போட்டாச்சு//
மிக்க மிக்க நன்றி. புதுகை தென்றல்க்கு ஒரு ஒ போடுங்க எல்லாரும்

அப்பாவி தங்கமணி said...

//தாராபுரத்தான் சொன்னது…இனி கலக்கல்தான் போம்மா.//
நன்றிங்க. கலக்கிடுவோம்

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது… ayyoooooooooo //
என்னாச்சு...நோ டென்ஷன் நோ டென்ஷன்...பதறாம இருங்க..ஒண்ணும் ஆகல

அப்பாவி தங்கமணி said...

அநன்யா மஹாதேவன் - ரெம்ப நன்றிங்க அனன்யா
//அப்போ எல்லாமே ப்ளாண்டுன்னு சொல்றாரா உங்க ரங்கு? இதெல்லாம் நல்லா இல்லே!//
நீங்களாச்சும் என் பக்கம் பேசறீங்களே...நன்றி
//மனம் போல மாங்கல்யம்? அப்படீன்னா,கதைல சில பார்ட்ஸ் மிஸ்ஸாகுதே?//
என்ன இருந்தாலும் விட்டு குடுக்க முடியுமா. என்னங்க நான் சொல்றது
//பொற்ஸ், ப்ளீஸ் கிவ் தி லின்க்கு 4 தி காலக்‌ஷேபம். ஈகர்லீ அவெய்ட்டிங்கு.. தொடர் பதிவு எளுதிட்டு நெஸ்டு மீட் பண்றேன்//
ஆத்தி...என்ன நடக்குது இங்க
//பொற்ஸ் எப்படி எப்படி? சேம் பின்ச்சா? தோடா.. அ.த, இந்த பொண்ணுகிட்டே மட்டும் பீ கேர்புள்.. ஆமா சொல்லிப்புட்டேன்!//
நம்பவே மாட்டேன் அனன்யா (பொற்கொடி கிட்ட சொல்லிராதீக...)
பொற்ஸ்,
//ஆமா, நோக்கு ப்ளாகோமேனியான்னு நான் கரெக்டா டயக்னைஸ் பண்ணிட்டேனாக்கும். நீ தான் அடங்காம ப்ளாக் ப்ளாகா சுத்திண்டு இருக்கே.. தொடர்கதை நெஸ்டு பார்ட் போட சொன்னா ஆணின்னு சொல்றே ஆனா என் ப்ளாக் ல நேத்திக்கி மட்டும் ஒரு 30 கமெண்டு போட்டு இருப்பே இங்கே ஒரு அரை டசன். தென்றலக்கா ப்ளாக் ஒரு 75.. கேட்டா நான் பொருமறேனா.. டூமச்.. உனக்கு ப்ளாகோமேனியா மட்டுமில்லை கமெண்டோகேனியா சிம்டம்ஸ் கூட இருக்குன்னு நான் சஸ்பெக்டு பண்றேன்//
அட பாவிகளா...கஷ்டப்பட்டு ஐடியா தேத்தி கை வலிக்க பதிவ போட்டா இங்க என்ன discussion போகுது பாருங்க...எந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லையா...

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது… vadai na kodi ku ambuttu ishtam pola :) break time la tea kudi kodi'nu sonna, inga vandhu vadai ah eduthutu poidraaaanga... :) nalla iruma //
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...அது என்ன வடை.... (நான் அப்பாவின்னு எப்பவாச்சும் ஒத்துக்கறீங்களா மக்களே...)

//oh appoh kandipaa neenga ettu perum serndhu ipa andha car'ah thaangiduveeenga????? கூல்//
நல்ல கண்டுபிடிப்பு...இத தான் சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்றதுன்னு சொல்வாங்களோ

//neenga science student ah ilaatium parava illai., unmai ah sollunga,
ungalukkum, unga rangamani'kum oru chemistry koooda illai?//
நான் சயின்ஸ் இல்லைங்க...பாழாபோன ஆர்ட்ஸ் தான்...இல்லையே...இல்லையே...ஒரு chemistry physics history geography ஒண்ணுமே இல்லையே ... oh God ... அப்படி இருந்திருந்தா...ஹும்...ஒரு சூப்பர் பதிவில்ல போட்டுருப்பேன். இப்படி மொக்கை அடிச்சுருக்க வேண்டியதில்லையே...இல்லையே...

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது… இவ்வளவு டெரரா இருக்கீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி உங்களப் பத்தி சரியா தெரிஞ்சுக்காம தலைய ஆட்டிட்டாரோ உங்க ரங்ஸ்?//
என்னங்க ஹுஸைனம்மா நமக்குள்ள எதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம்...இப்படி சொன்னா எப்படி

//மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு//
//அறிவாளி, பொறுப்பாளி, பப்பாளி.... //
எல்லாம் சரி, //மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால// அப்ப ஏதோ விஷயம் இருக்கு, இல்ல?//
விசயம் எல்லாம் ஒண்ணும் இல்லைங்க...உண்மைய சொல்லனும்னா இருந்திருந்தா நெனச்சு பாக்க நல்லா தான் இருக்கும். மனம் போல் மாங்கலயம்ன இந்த தங்கமணிக்கு ஏத்த ரங்கமணினு சொல்லிக்கறது தான்

அப்பாவி தங்கமணி said...

//கண்ணகி சொன்னது… நீங்க அப்பாவித் தங்கமணின்னு பேர வச்சுட்டு இப்படி கிரிமினலா மாறலாமா..//
ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லைங்க கண்ணகி...ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா சோகத்த பேசிகலாமேனு தான்.....வேற உள் குத்து எல்லாம் ஒண்ணும் இல்லைங்க சிஸ்டர்

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது… ஆஹா என்னையும் மாட்டி விட்டுடீங்களே;) அழைப்பிற்கு நன்றி! விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்//
நன்றிங்க ப்ரியா

//எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்"//.....
இதுக்காக‌வாது எழுத‌னுமில்ல‌:)//
அட நம்மள பாத்து கூட terror ஆகுறாங்க...இதை ரங்கமணி கிட்டயும் use பண்ணி பாக்கணும்

//சொந்த‌துக்குள்ளே ஆன‌தால் உங்க‌ க‌தையில் கொஞ்ச‌ம் சுவார‌ஸிய‌ம் குறைய‌ர‌ மாதிரி இருக்கு. இருந்தாலும் அதுவும் ஒருவகையில் நல்லாதான் இருக்கு//
எனக்கும் அந்த ஆதங்கம் சில சமயம் உண்டு. ஆனா ரெண்டு பேருக்கும் பழைய கதைய பேசறப்ப அது ஒரு மாதிரி சுவார‌ஸிய‌ம் இருக்கும்

அப்பாவி தங்கமணி said...

//DHANS சொன்னது… //எழுதாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கை - "இன்னும் பத்து நாளைக்குள்ள தொடர் பதிவு எழுதி முடிக்கலைனா இன்னும் பத்து தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிடுவேன்னு பணிவு எச்சரிகையுடன் (பணிவன்புடன்க்கு எதிர்பதம்) தெரிவித்து கொள்கிறேன்//இந்த மாதிரி இம்போசிசன் மிரடல பள்ளிகூடத்துல இருந்தே பார்த்தாச்சு, இதுகெல்லாம் நாங்க அசர மாட்டோம்//
அப்ப வேற வழியே இல்ல...உங்க தங்கமணி கிட்ட சொல்லிற வேண்டியது தான் (ஹா ஹா ஹா...இது எப்படி இருக்கு?)

//அதுல ஒருத்தர் தன்னோட மனைவிய பொண்ணு பாக்க போனது மட்டும் இல்லாம அதுக்கு முன்னாடி பொண்ணு பாக்க போன கதை எல்லாம் பேரு ஊரு detail எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பின் விளைவுகள் பத்தி யோசிக்காம//
//அவரு வெறும் பேசால சொனதுக்கே ஆஸ்பிடல் நாங்க எழுத்துல வாக்குமூலம் கொடுத்தா என்ன ஆகறது? ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல, யார் வந்து என்ன பூரிக்கடையால பூச போறாங்க தெர்ல ஆனா பூரிக்கட்டை ரெடி பண்றீங்க நீங்க, ஏன்னா வில்லத்தனம்.//
ஆத்தி...ரங்கமணிக உஷாரா தான் இருக்காக

//துபாய் creek கிட்ட(கடல் கரை மாதிரி) இவர் நிக்கற மாதிரி ஒரு போட்டோவ செலக்ட் பண்ணி பொண்ணு பாக்கறப்ப குடுங்கன்னு அவரோட தங்கை கிட்ட சொன்னேன் (அப்படியும் விதி விடல...)//நீங்க மட்டும் என்ன உங்க அப்பா பொருந்தாத ஜாதகம் என்றால் நீங்க இருகரதுலையே மோசமான போட்டோவ செலக்ட் செஞ்சு கொடுத்து இருக்கீங்க. பயங்கர பிளான் தான் போல//
இது வேறயா...ரங்கமணிக்கு நீங்களே ஐடியா குடுப்பீங்க போல இருக்கு

//இவங்கள எல்லாம் கேட்டுக்கறேன்(எச்சரிக்கறேன்) ://ஐயோ ஏங்க கடசில இப்படி குண்டு வைத்து இருப்பீங்க என தெரியலையே :(//
இதுக்கு தான் சொல்றது...பதிவ முழுசா படிச்சுட்டு அப்புறம் அட்டாக் ஆரம்பிக்கணும்

அப்பாவி தங்கமணி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது… இப்பத்தாங்க எப்படி கல்யாணம் ஆச்சுன்னு பஞ்சாயத்து முடிஞ்சு கணினில உக்காந்தேன்..நடுவரா அது என் மகள் தான்..இது ப்ன்னிரண்டுவருசமா நடக்கிற பஞ்சாயத்து. :) ஆனா ஒன்னுங்க நாம மட்டும் இல்ல மத்தவஙக்ளும்ம் இதேரேஞ்சுல தான் திங்க் பண்ராங்கன்னு இதுல வர சம்பவங்கள் எனக்கு உணர்த்துது..
கலக்கலா எழுதி இருக்கீங்க.. நன்றி.. எழுத முயற்சி செய்ய்றேன்..//
நன்றிங்க முத்துலெட்சுமி...சூப்பர் நடுவரா தான் புடிச்சுருகீங்க

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது… //ரங்கமணி வேற யாரும் இல்லைங்க. சொந்தம் தான். ஒரு வகைல மாமா மொற (மொறமாமானு தினமும் மொறச்சு மொறச்சு நிரூபிச்சுட்டு தான் இருக்காக), இன்னொரு வகைல அத்தை மகன்// பகுதி 5-க்கும் இதுக்கும் எதோ லிங்கு இருக்கிறமாதிரி இருக்கே??? அப்போ இதுதான் பகுதி 5??????( நாராயண! நாராயண).....:)//
அட கடவுளே...

//நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைங்க, அதனால் அனன்யா அக்கா போடப்போகும் அமரகாவியத்தை(மொக்கைனு சொன்னா கன்னா! பின்னா!னு திட்டு விழும்...:)) என்னுடைய அக்கவுண்ட்ல வரவு வத்துக் கொள்ளவும்.//
முகம் தெரியாத தங்கமணி மேல இப்பவே அத்தனை பயமா...இல்ல யாருன்னு முடிவு பண்ணினதால பயமா...அனன்யா brother மேல ஒரு கண்ணு எப்பவும் இருக்கட்டும்...சொல்லிட்டேன்

Complan Surya said...

ada kodumiey ethu veriya..

enga ponalum entha vadiku eppdi adichukirkrangappa...

apprum unga paidvu

rumba nala erukunga..

sariyana thalipu ponu paka porom..

enga vetila evlo marimugama chonalum kilamba matrangaiya...

sari vidunga ellam nalathukugthan
konja naliku free vidu freea viduvom...

apothana ella athaiponugalium site aidkamuidum...elati adivanga vendivarumey..if marriage aita..

so unga kadiya ketu rumba rumba themi themi aluthenga..apo apo commedy potu erunthathala vanga alugai koda odipochu..

neenga rumba nalavanga...

padivu elutharithilum sari commentsku reply panrthiyilum sari..

pinkurippu..(mudia pogum padivil herovai matrinal enga sangathuku neenga abratham katta vendivarum)...pathukonga choliputen.

marupadium varuven.seikrama release panunga rumba avalaga erukirom..


nandri valga valamudan.
Varhtapadtha Valibar sangam
sarbaga
Complan Surya.

அறிவிலி said...

நிச்சயமா போடறேங்க. அழைப்புக்கு நன்றி. இந்த 10 நாள் கெடுவை மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.

அறிவிலி said...

//இருந்தாலும் மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால சமாதானம் பண்ணிகிட்டேன் //

:-)) இதுக்கு பின்னால இருக்கற கதைய எப்போ எழுத போறீங்க?

அப்பாவி தங்கமணி said...

அறிவிலி - நன்றிங்க அறிவிலி. பத்து நாள் கெடுவ ரிலாக்ஸ் பண்ணனுமா...சரிங்க அப்படினா...பார்ட் 1 பார்ட் 2 ரெண்டு பதிவு போடணும் சரிங்களா பிரதர்....deal ஆ no deal ஆ

//இருந்தாலும் மனம் போல் மாங்கல்யம்னு ஒரு "சுபம்" போட்டதால சமாதானம் பண்ணிகிட்டேன் //
:-)) இதுக்கு பின்னால இருக்கற கதைய எப்போ எழுத போறீங்க?//
அதுக்கு பின்னாடி கதை எல்லாம் இல்லைங்க. கல்யாணம் நிச்சியம் ஆகற வரைக்கும் அவர் கிட்ட அதிகம் பேசினதில்ல...அதனால கொஞ்சம் ஜெர்க் ஆகி இருந்தேன்...அப்புறம் பேசினப்புறம் நாம எதிர் பாத்த ரங்கமணி மாதிரி தான் இருக்கார்னு தெரிஞ்சுது...அது தான் "மனம் போல் மாங்கல்யம்"னு சொன்னேன்...(ஆஹா...ரெம்ப உஷாரா இருக்காகளே எல்லாரும்....)

அப்பாவி தங்கமணி said...

Complan Surya - உங்க சங்கத்தின் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி பிரதர்

அப்பாவி தங்கமணி said...

மிக்க நன்றிங்க தமிழ் உதயம்

வேலுபையன் said...

நல்ல இடுகை படித்ததும் பிடிச்சு இருக்குது. நல்ல நகைச்சுவையா இருக்கு . வாழ்த்துக்கள்

அநன்யா மஹாதேவன் said...

போட்டாச்சு போட்டாச்சு, தொடர் பதிவு போட்டாச்சு.
http://ananyathinks.blogspot.com/2010/03/blog-post_27.html
எல்லாரும் வந்து போணி பண்ணுங்கப்பா.. நன்றீஸ் இன் அட்வான்ஸு!

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
போட்டாச்சு போட்டாச்சு, தொடர் பதிவு போட்டாச்சு//

நன்றி நன்றி நன்றி அனன்யா

அப்பாவி தங்கமணி said...

//வேலுபையன் சொன்னது…
நல்ல இடுகை படித்ததும் பிடிச்சு இருக்குது. நல்ல நகைச்சுவையா இருக்கு . வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி வேலு

சின்ன அம்மிணி said...

இருக்கும் ஆணிகளுக்கிடையே தொடர முயற்சிக்கிறேன் தங்கமணி

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
இருக்கும் ஆணிகளுக்கிடையே தொடர முயற்சிக்கிறேன் தங்கமணி//

முயற்சி திருவினை ஆக வாழ்த்துக்கள். நன்றிங்க சின்ன அம்மணி

அனாமிகா துவாரகன் said...

//"உன்ன என் தலைல கட்டணும்னு உங்க அப்பா வேணும்னே பொருந்தாத ஜாதகம் குடுத்து ஏமாத்திட்டாருன்னு"//

Highlight =))

Anamika

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
//"உன்ன என் தலைல கட்டணும்னு உங்க அப்பா வேணும்னே பொருந்தாத ஜாதகம் குடுத்து ஏமாத்திட்டாருன்னு"//
Highlight =))//

ஆத்தி...நமக்கு எதிரிக எண்ணிக்க கூடிகிட்டே போவுதே...

Dubukku said...

ஹா ஹா சூப்பர்

ரொம்ப சாரிங்க அன்னிக்கே பதில் அடிக்கனும்ன்னு நினைச்சேன் தப்ப விட்டுட்டேன்...நடுவில நிறைய வேலைகளாகி மறந்துவிட்டேன்...நீங்க கூப்பிடுவீங்கன்னு தெரிஞ்சு நான் என்னை பையன் பார்த்த படலம் பற்றி முன்னமே போஸ்ட் போட்டாச்சே :)) இந்த லிங்கலில இருக்கு பாருங்க...
http://dubukku.blogspot.com/2005/11/11.html

அப்பாவி தங்கமணி said...

Dubukku - வாவ்... சூப்பர்ங்க டுபுக்கு. எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணி இருக்கீங்க. பக்கா தமிழ் சினிமாவுக்கான கதை வீட்டுலையே ஓடுது போல. உங்க பையன் பாத்த கதைய படிக்க போய் வேற ஒரு பழைய பதிவையும் படிச்சேன்... ஜெர்க் ஆய்ட்டேன். நீங்க நமீதாவோட அண்ணனா, சொல்லவே இல்ல. உங்க தங்கமணிக்கு இந்த விசயம் தெரியுமா... (ஏதோ நம்மால ஆனது)

DHANS said...

எழுதியாச்சு எழுதியாச்சு தொடர் பதிவு எழுதியாச்சு பாத்துகங்க

SurveySan said...

fyi, http://surveysan.blogspot.com/2010/04/blog-post_14.html

அப்பாவி தங்கமணி said...

@ Dhans - படிச்சாச்சு, கமெண்ட்ம் போட்டாச்சு

@ சர்வேசன் - படிச்சாச்சு, கமெண்ட்ம் போட்டாச்சு

Madhuram said...

Eppadinga ivalvau comidya ezhudha mudiyudhu? Super. Yaaravadhu enakku thamizla eppadi type pannanum nu solli thaanga pa.

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம்

ரெம்ப நன்றிங்க மதுரம் உங்க பாராட்டுக்கு

நம்ம Lifeஏ காமெடியா போய்டுச்சு, So நாமளும் அப்படியே போறோம், வேற ஒண்ணும் இல்லைங்க

தமிழ்ல type பண்றதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க மதுரம். மத்தவங்க எப்படின்னு தெரியல. நான் என்னோட ரகசியம் சொல்றேன் காத குடுங்க

- Goto gmail account

- Click compose

- Just above the message composing box,you will see the option to select font

- If you dont see that option, you need to change from "Plain formatting" to "Rich formatting" (just above the compose box)

- Once you see font option, you should select தமிழ்

- Once you do that, you start typing in english and it will convert to tamil after you finish typing one one word. For example to type name மதுரம், you should type as mathuram and press space bar. It will change to மதுரம். Simple as that

எனக்கு Blogல type பண்றத விட இது Fastஆ இருக்கற மாதிரி தோணுது

எனக்கு தெரிஞ்சத மதுரம் சிஸ்டர்க்கு சொன்னேன். படிச்சுட்டு யாரும் திட்டாதீங்க

Madhuram said...

ரொம்ப தாங்க்ஸ் தங்கமணி. எனக்கு gmail work ஆகல. Rediffmail ல அந்த option இருந்தது நினைவுக்கு வந்தது. Try செஞ்சேன்.

இப்படிக்கு
பாச மலர், மதுரம்.

Sabarinathan TA said...
This comment has been removed by the author.
priya.r said...

நன்றாக இருந்தது ;
முடிந்தவரை வெளிப்படையாக நகைச்சுவை இழையோட சொல்லி ரசிக்க வைத்து இருக்குறீர்கள் தங்கமணி

நிட்சயத்திற்கு பிறகு எப்போது ,யார் ,என்ன வார்த்தை பேசியது அதற்கு உண்டான பதில் ,அப்போது இருந்த மனநிலை இதையெல்லாம்
நீங்கள் மனதிற்க்குள் வைத்து மகிழ்ந்து கொண்டு இருப்பீர்கள் என்று தான் தோன்றுகிறது !(It was purely personal Isn't!)
வாழ்த்துக்கள்பா !

அப்பாவி தங்கமணி said...

@ Priya r - தேங்க்ஸ் ப்ரியா... அதெல்லாம் சிதம்பர ரகசியம் இல்லியா... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ப்ரியா

Gayathri said...

இவ்ளோ அழகா கல்யாணம் ஆனா கதைய யாருமே சொல்லல ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சு சந்தோஷமா படிச்சேன்...வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

Thanks a lot Gayathri

முனியாண்டி said...

படித்தேன் ரசித்தேன். நான் என்னமோ.... அவர் பக்கம்தான் ஏதோ சதி (மனைவி என்றும் பொருள்) நடந்திருக்குறது.

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ha ha ha.. thank you

Post a Comment