Thursday, April 01, 2010

பிரியமானவளே...பகுதி 2

பகுதி 1 படிக்க

"அடடே...வாங்க வாங்க...என் செல்லம் வாங்க" கணவன் வீட்டில் இருந்து வந்த மூத்த மகள் கௌரியின் கையில் இருந்து ஒரு வயது பேத்தியை வாங்கினாள் கோகிலா

அதற்குள் "பாட்டி நானு" என்று இரண்டு கைகளையும் உயர்த்தினான் நான்கு வயதான கௌரியின் முதல் பிள்ளை

"பாட்டி ரெண்டு பேரையும் தூக்க முடியுமா...செத்த நாழி பேசாம இரு" என்று பிள்ளையை அதட்டினாள் கௌரி

"சும்மா இரு கௌரி. கொளந்தைய ஏன் முகம் வாட வெக்கற. நீ வாடா செல்லம்" என்று அவனை இன்னொரு பக்கம் அமர்த்திக்கொண்டாள்

"எங்கம்மா காயத்ரிய காணோம்"

"அவளா...இதோ இருக்கற கோவிலுக்கு போயிட்டு வர இத்தன நாழி. கேட்டா உங்க அப்பாவும் சேந்துண்டு என்னை கேலி பண்றது தான் நடந்துண்ட்ருக்கு. போற எடத்துல என்னத்தான் கோச்சுக்கபோறா பொண்ண வளத்தின அழகுக்கு" என்றாள் பெற்றவளுக்கே உரிய கவலையுடன்

"சும்மா ஏம்மா அவள திட்ற. எல்லாம் நாளானா சரியாய்டும்"

"ஆனா சரி தான்...தோ வந்துட்டா மகாராணி" என்றாள் காயத்ரியின் தலை கண்டதும்

"ஹேய் கௌரி" என்று ஓடி வந்து தமக்கையை கட்டிக்கொண்டாள்

"என் செல்லமே...happy birthday Gayu " என்று மனம்நிறைய அன்புடன் தங்கையின் கன்னத்தில் இதழ் பதித்தாள் கௌரி

தான் பெற்ற பிள்ளைகள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பை கண்டு ஆனந்தத்தில் கண் நிறைந்தது கோகிலாவிற்கு

இதே பெண்கள் இருவரும் கௌரியின் திருமணத்திற்கு முன் பாம்பும் கீரியுமாய் இருந்ததும் நினைவு வந்தது

ஆனால் கௌரி திருமணம் முடிந்து மறுவீடு சென்ற போது காயத்ரி அழுதது போல் வேறு எப்போதும் அவள் அழுது கண்டதில்லை கோகிலா. பார்த்தவர்களெல்லாம் கண் கலங்கிய தருணம் அது

"சரியா தான் சொல்லி இருக்கா அந்த காலத்துல. அண்ணன் தம்பினா கல்யாணம் கட்ற வரை உறவாளி கல்யாணம் ஆனா பங்காளி. அக்கா தங்கைனா கல்யாணம் கட்ற வரை பங்காளி கல்யாணம் பின்னாடி உறவாளினு" என்று நினைத்து கொண்டாள் கோகிலா

"ஏய் செல்ல குட்டி... சித்தி கிட்ட வா..." என்று அக்கா மகளை கொஞ்சினாள் காயத்ரி

"காயத்ரி. இந்தா இது உனக்கு என்னோட பர்த்டே gift " என்று ஒரு அழகிய கம்மல் பரிசளித்தாள் கௌரி

"வாவ்...அழகா இருக்கு கௌரி"

"எதுக்கு கௌரி இதெல்லாம்" என்று கடிந்து கொண்டாள் கோகிலா

"ஏம்மா என் காயத்ரிக்கு நான் வாங்க கூடாதா"

"அதில்லடீ...ஏதோ ஒரு சேலை துணினா சரி...தங்கம் விக்கற வெலைல மாப்பிளைக்கு எதுக்கு செலவு வெக்கற"

"அடடா...உன் மாப்பிள்ளை ஒண்ணும் ஒட்டியாணம் வாங்கி தரல...ஒரு 3 கிராம் தங்கம்...இதுக்கு என்னமோ...போம்மா நீ"

"அம்மாவுக்கு பொறாம கௌரி. நீ கண்டுக்காத" என்றாள் காயத்ரி வேண்டுமென்ற பேச்சை மாற்றும் பொருட்டு

"ஆமாண்டி...பொறாம...உன்ன" என்று அடிப்பது போல் கை தூக்க தப்பி ஓடினாள் காயத்ரி

"அது சரி....இந்த வருஷம் கார்த்தி gift என்ன? அதை காட்டு மொதல்ல" என்றாள் கௌரி

ஒவ்வொரு வருடமும் மிகவும் மெனக்கெட்டு தேடி தேடி வித்தியாசமான பரிசு வாங்குவதில் கார்த்திக்கு நிகர் யாரும் இல்லையென்றே கூறலாம். என்ன பரிசு இந்த வருடமென எதிர்பார்ப்பை கிளப்பும்படி இருக்கும் அவனுடைய அக்கறையான அணுகுமுறை

"இதோ இங்க பாரேன். வாட்ச் ரெம்ப அழகா இருக்கல்ல கௌரி. அதுவும் இந்த strap , dial எல்லா கலர்லயும் குடுத்து இருக்கான். Dressக்கு ஏத்தாப்புல மாத்தி போட்டுக்கலாம்"

"நன்னா இருக்குடி.எப்பவும் போல இந்த வருசமும் கார்த்தி gift தான் first class " என்றாள் கௌரி தங்கையை அணைத்தபடி

"பாசமலர்கள் கொஞ்சலுக்கு நடுவுல உள்ள வரலாமா" என்றவாறே வந்தான் கார்த்தி

"வா கார்த்தி...அட இப்ப தான் உன்னைய பத்தி பேசிட்டு இருந்தோம் நீ வந்துட்ட. நூறு ஆய்சு நோக்கு" என்றாள் கௌரி

கௌரியின் எதிர்பார்ப்பில்லா அன்பில் எப்போதும் போல் நெகிழ்ந்தான் கார்த்தி. தனக்கு இப்படி ஒரு தமக்கை இல்லையே என்று பலமுறை எண்ணியதுண்டு

"கௌரி அதுக்கு வேற ஒண்ணும் சொல்லலாம்" என்றாள் அவளுக்கே உரிய குறும்பான பார்வையுடன் காயத்ரி

"என்ன?" என கௌரி கேட்கவும்

"அது...அது..." எழுந்து ஓட தயாராய் நின்றபடி "Think of the Devil there it is னு சொல்வாங்கல்ல" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் ஓட சந்தர்ப்பம் தராமல் அவள் பின்னலை பிடித்து கொண்டான் கார்த்தி

"கொழுப்பு பாத்தியா கௌரி இவளுக்கு. நான் Devil ஆ நோக்கு" என்று பின்னலை இறுக்க

"விடுடா பாவி...தலை எல்லாம் கலையுது...ஐயோ கோவில்ல குடுத்த பூ எல்லாம் போச்சு" என அவள் சிணுங்கவும் விட்டான்

சண்டையிட்டு கொண்டாலும் அவனை கண்டதும் தங்கையின் முகத்தில் தெரிந்த ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கௌரிக்கு ஏதோ புரிவது போல் தோன்றியது

_______

காலமும் அலையும் தான் யாருக்கும் நிற்பதில்லையே. நாலு மாதம் நாலு நிமிசமாய் போனது

"மாமி...மாமி.... கார்த்தி எழுந்துட்டானா" என்றபடியே வீட்டுக்குள் சென்றாள் காயத்ரி

"வா காயத்ரி" என்றாள் காஞ்சனா சமையல் அறையில் இருந்தபடி

"உன்னைய மாதிரி என்ன சோம்பேறின்னு நெனச்சுண்டயா. நான் எல்லாம் எப்பவோ எழுந்தாச்சு" என்றபடி பூஜை அறையில் இருந்து வந்தான் கார்த்தி

"யாரு நானா சோம்பேறி. ஏன் சொல்ல மாட்ட. நோக்கு பொறந்தநாள்னு இந்த மார்கழி குளிர்லயும் அஞ்சு மணிக்கி எழுந்து குளிச்சு கோவில் போய் உன்பேர்ல அர்ச்சனை பண்ணிண்டு நோக்கு பிடிச்ச பொங்கல் பிரசாதம் கொண்டு வந்தா என்னைவே சோம்பேறிங்கற" என்றாள் நிஜமான ஆதங்கத்துடன்

அவள் அபிநயத்துடன் கூறிய விதமும், தனக்காக அவள் எடுத்த சிரத்தையும் நெகிழச்செய்ய பேச்சை மாற்றும் விதமாய் "அத விடு. சங்கரன் பட்டர் பொங்கல்னதும் நாக்குல ஜலம் ஊர்றது...குடு" என்று கை நீட்ட

"சோம்பேறி குடுக்கற பிரசாதம் மட்டும் நோக்கு எதுக்கு" என்றாள் வேண்டுமென்றே

"ஏய் இப்ப குடுக்கப்போறியா இல்லையா" என அவள் பதிலுக்கு காத்திராமல் பிரசாத தட்டை பிடுங்கினான்

"டேய் டேய் பொங்கல் முழுசா சாப்டாதே...நான் கஷ்டப்பட்டு சமைச்சுண்டு இருக்கேன் உனக்கு பிடிச்சதெல்லாம்" என்றாள் காஞ்சனா

"இன்ன பொழுது ஒரு நாள் உன் சமையல்ல இருந்து நேக்கு விமோசனம் இல்லையா மா" என்று அன்னையை வம்பிக்கிழுத்தான்

"ஏண்டா பேசமாட்ட...உன் ஆத்துக்காரி வந்து இடிச்சுண்டே சமைச்சு தற்ரச்சே பெத்தவள நெனச்சுப்ப அன்னிக்கி" என்று காஞ்சனா கூற

"சரியா சொன்னீங்க மாமி...அதுவும் நல்ல அடங்கா பிடாரியா பூரி கட்டைலையே போட்ரவளா பாத்து மாட்டி விடணும்" இதுதான் சமயமென வாரினாள் காயத்ரி

"உன்ன மாதிரி பிடாரியவே இத்தனை வருஷம் சமாளிச்சேனாமா. இதையும் விடவா ஒரு பஜாரி லோகத்துல இருப்பா?"

"பாருங்க மாமி இவன...நான் போறேன்" என்று நகர

"ஏய் ஏய் இரு கேசரி வாசம் பிடிச்சுட்டு தான வந்த...அதை சாப்டாம போனா எப்படி?"

"Birthday னு பாக்கறேன். இல்லேன்னா..."

"இல்லேன்னா...என்ன பண்ணுவ?"

"ஏண்டா அவளோட காத்தாலேயே வம்பு பண்ற" என்று காஞ்சனா பரிந்து கொண்டு வர

"இந்த வருஷம் என்னோட gift உனக்கு தர மாட்டேன் போ" என்று காயத்ரி நிஜமாகவே கோபமாய் கூற

"லூசே...எதுக்கு எடுத்தாலும் கோவம்...சும்மா தான...நீ மட்டும் என்னை சொல்றதில்லையா? நான் கோவிச்சுகறனா?"

"இரு gift எடுத்துட்டு வரேன்" என்று வீட்டுக்கு ஓடினாள் காயத்ரி

அழகாக பரிசு காகிதம் சுற்றப்பட்ட ஒரு பெட்டியை நீட்டினாள்

"இப்டி மூஞ்ச உம்முன்னு வெச்சுண்டு குடுக்கறதுன்னா நேக்கு வேண்டாம்"

"ஈ ஈ ...போதுமா?" என்றாள் பல்லை காட்டி

"இதுக்கு நான் சும்மாவே இருந்து இருக்கலாம்"

"Shirt பிடிச்சுருக்கா?" எதிர்பார்ப்புடனும் கேட்டாள்

"வாவ்...சூப்பர்...ரெம்ப நன்னா இருக்கு காயத்ரி...என்கிட்டே இந்த மெருன் கலர்ல இந்த checked டிசைன்ல இல்ல. அழகா இருக்கு"

"போட்டு காட்டு" என்றாள் ஆசையுடனும்

"ம்....நன்னா இருக்கா?"

"வாவ்...super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume உனக்கு. அப்படியே பொண்ணு பாக்க போலாம். இல்லையா மாமி?" என்றாள் காயத்ரி

"ரெம்ப நன்னா இருக்கு காயத்ரி. நீ சொன்னாப்ல பொண்ணு பாக்கவே போலாம்"

"ரெண்டு பேரும் சேந்து வேணும்னே சதி பண்றேளா" என்றான் கார்த்தி

"நாங்க என்னடா பண்ணினோம்" என்றாள் அப்பாவியாய் காயத்ரி

"ம்...உங்க அத்திம்பேர் கௌரிய பொண்ணு பாக்க வந்தப்ப வேஷ்டி சட்டை போட்டுட்டு வந்ததுக்கு எப்படி எல்லாம் கேலி பண்ணின நீ. என்னையும் அந்த மாதிரி சிக்க வெக்க பாக்கறயா"

"அப்ப நான் சின்ன பொண்ணு. விவரம் தெரியாம பேசினேன்"

"இப்ப ரெம்ப விவரம் வந்துடுச்சோ?"

"போடா நேக்கு காலேஜ்க்கு நேரம் ஆச்சு...நான் வரேன் மாமி" என்று கிளம்பினாள்

அவள் சென்ற பின்னும் "super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume நோக்கு" என்று அவள் சொன்னது காதில் ஒலித்து கொண்டே இருந்தது. கள்ளமில்லாத அவளுடைய அன்பு மனதிற்கு நிறைவாய் இருந்தது

அதே சட்டையை அணிந்து கொண்டான் கல்லூரிக்கு. பொருத்தமான Pant போடவும் மிகவும் நன்றாக பொருந்தியது அவனுக்கு

சட்டை அளவெடுத்த மாதிரி இவ்ளவு சரியா வாங்கி இருக்காளே great தான் என்று நினைத்துக்கொண்டான்

_______

அவன் கிளம்பிய அதே நேரத்தில் காயத்ரியும் கல்லூரிக்கு செல்ல கிளம்பினாள்

அவனை கண்டதும் "கார்த்தி..நீயே நெஜமா சொல்லு...இந்த Shirt நோக்கு நன்னா இருக்கு தான"

"சூப்பர்ஆ இருக்கு Gayu "என்றான். முதல் முறையாய் அவன் Gayu என்று அழைத்தது வித்தியாசமாய் இருந்தது

"ஏய் இந்த saree எங்கம்மா உனக்கு பர்த்டேக்கு குடுத்தது தான"

"ஆமா...இதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா"

"உனக்கு எப்பவும் ரெட் கலர் நல்லா suite ஆகும் காயத்ரி"

"தேங்க்ஸ் கார்த்தி"

இப்படியே பேசிட்டே போனாங்க ரெண்டு பேரும்

இது எங்க போய் முடியுமோன்னு எழுதற எனக்கு தான் டென்ஷன்ஆ இருக்கு.....(அப்ப உங்களுக்கு....?)

ப்ரியசகி...
சிந்தனை மழுங்கச்செயும் சிரிப்பும்
சிரிக்கவே மறக்கசெய்யும் கோபமும்
என்னையே இழக்கசெய்யும் அபிநயமும்
எந்த தேவதையிடம் கற்றாய்
கெஞ்சிகேட்கிறேன் சொல்லிவிடு
கொஞ்சமேனும் தூங்கவிடு...

கண்பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல
கனிவாய்பேசும் வார்த்தைகள்கூட
புரியத்தான் இல்லைஎனக்கு
புரியாத புதிரே
புத்தனாய் இருந்தஎன்னை
புதுமை பித்தனாக்கினாயே...

தொடரும்...

50 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

ipdi express vegathula pos tpanna, comment panradhu than en full time joba vechukanum polarku! :)

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) கூறியது...
ipdi express vegathula pos tpanna, comment panradhu than en full time joba vechukanum polarku! :)//

என்ன ஆள காணோம்னு திட்டுவீங்கன்னு பயந்து பயந்து அவசரமா எழுதினா இப்படி சொல்றீங்களே அம்மணி. இருந்தாலும் மொதல் வடை எடுத்ததுக்கு நன்றி. My days (Gops) க்கு பிரஷர் எகிற போகுதுன்னு நெனைக்கிறேன்

Porkodi (பொற்கொடி) said...

aahaa.. oru chinna vishayamana porandha naalu periya catalyst polarke rendu peru chemistrykum naduvila!! :P

supera irundhudhu! ana neenga mega serial edukka mudiyadhu.. oru linela 4 months otitinga? :) apdiye shivaniya backdoor vazhiya kootitu poidunga.. :)))

Porkodi (பொற்கொடி) said...

//My days (Gops) க்கு பிரஷர் எகிற போகுதுன்னு நெனைக்கிறேன்//

hihihi.. avar thaan ponnu paaka poi coffee, tea, bournvita, idli, pongal, vadai, sojji, bajji, pakoda nu katta porare.. so onnum solla matar!

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
supera irundhudhu! ana neenga mega serial edukka mudiyadhu.. oru linela 4 months otitinga? :) apdiye shivaniya backdoor vazhiya kootitu poidunga.. :)))//

மெகா சீரியல்ஆ.. ஆஹா ஒரு மார்கமாத்தான் கெளம்பி இருக்கீக போல. நான் அப்பாவிங்க அம்மணி உங்களுக்கு தெரியாததா

கார்த்தி ஷிவானிய மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீக போல இருக்கே. சூப்பர் மேடம், அனுப்பிடுவோம்

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
hihihi.. avar thaan ponnu paaka poi coffee, tea, bournvita, idli, pongal, vadai, sojji, bajji, pakoda nu katta porare.. so onnum solla matar!//

ஆஹா... அந்த பால்காரர் மேட்டர் வேற என்ன ஆச்சோ தெரியலையே. அந்த பொண்ணு தப்பிச்சா சரி தான்

சின்ன அம்மிணி said...

ஓகே, அடுத்தது என்ன

padma said...

நடத்துங்க

Complan Surya said...

What is this

marupadium Vadai kidaklinu

feelingsa....

ada kadavuley...ethu ellam nee kekamatiya..

Kastapattu padikravangaluku ellam
treat kudukrenga....(yarium kuripidavillai enpathi thalmiodu koorikolkirom..)

istapatu padikravangalku ethum kidiatha...(enga sangam uripinargal and vasargal)

Engal Appaviku..
oru siriya viruthu onruku siparisu cikren..

"Elam Kavi Eluthalar"
enkira pattathi engal
Varuthapadtha VAsipphor sangam sarbaga valangukirom"
"elam Kavi Eluthalar Thangamani".
"elam Kavi Eluthalar Thangamani"
"elam Kavi Eluthalar Thangamani"...

Valga valamudan
Nandri.

eppdiku
V.V.S
Sangam Seyalaar
Complan Surya.

Complan Surya said...

rumba rumba nala erukunga

VAsikka pidithu erukirathu...

miga eyalbai sirithu vegamagavum

kadai chelkriathu......

enta chemistry,physicsla elam eanku nambikai ellai..

ernuthalum neenga istam pola kadhia eduthu selungal.(engal sangam patukappu alikkum)

nandri
valga valamudan
V.v.s
Complan surya.

G3 said...

Aaha.. ingayum thodar kadhaiya !!! TVla odara megaserial kanakka vida blogla odara thodar kadhai count jaasthiyaagum pola irukkae ;))))

G3 said...

//"காயத்ரி. இந்தா இது உனக்கு என்னோட பர்த்டே gift " என்று ஒரு அழகிய கம்மல் பரிசளித்தாள் கௌரி//

avvvvvv... enakkum porandhanaal pochu.. indha gaya3kku yaarum ippadi kudukkaliyae :(((

G3 said...

adutha part eppo poduveenga ??

Ella postlayum indha kelvi kekka vendiyadha irukkae :(((

My days(Gops) said...

/My days (Gops) க்கு பிரஷர் எகிற போகுதுன்னு நெனைக்கிறேன்//

:O eppadinga post poda poren vadai'ku ready aaagikonganu sollitu post ah publish pannuveeengala? eksi :)

My days(Gops) said...

//hihihi.. avar thaan ponnu paaka poi coffee, tea, bournvita, idli, pongal, vadai, sojji, bajji, pakoda nu katta porare.. so onnum solla matar!//

//அந்த பால்காரர் மேட்டர் வேற என்ன ஆச்சோ தெரியலையே. அந்த பொண்ணு தப்பிச்சா சரி தான்//


enna vachi comedy keemaday pannalaiey ?

My days(Gops) said...

// என்னத்தான் கோச்சுக்கபோறா பொண்ண வளத்தின அழகுக்கு"//

பொண்ணு அழகா இருந்தா அந்த கஷ்டம் வேணாம் :)

//உன் மாப்பிள்ளை ஒண்ணும் ஒட்டியாணம் வாங்கி தரல//

இவங்க சொல்லுறத பார்த்தா கௌரி ரொம்ப டயட்'ல இருப்பாங்க போல

//strap , dial எல்லா கலர்லயும் குடுத்து இருக்கான். Dressக்கு ஏத்தாப்புல மாத்தி போட்டுக்கலாம்"//

பர்மா பஜார்'ல 150ரூபாய் மட்டுமே

//தனக்கு இப்படி ஒரு தமக்கை இல்லையே என்று பலமுறை எண்ணியதுண்டு//

என்னங்க இதுலையே தெரியுது கார்த்திக் காயத்திரிக்கு அப்பீட் கொடுக்க போறான்'னு

My days(Gops) said...

//முதல் முறையாய் அவன் Gayu என்று அழைத்தது வித்தியாசமாய் இருந்தது//

அடங்க மாட்டாங்கே'லே இவங்கே

//இது எங்க போய் முடியுமோன்னு எழுதற எனக்கு தான் டென்ஷன்ஆ இருக்கு//

இப்படி சொன்னா எப்படி?


வழக்கம் போல கவிதை சூப்பர்

My days(Gops) said...

//enakkum porandhanaal pochu.. indha gaya3kku yaarum ippadi kudukkaliyae :((//

அதுக்கு எதிர் வீட்டுல கார்த்தி'னு ஒருத்தன் இருக்கனுமே... நல்லா சொல்லுறாங்கையா டிடெய்லு

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
ஓகே, அடுத்தது என்ன//

அடுத்தது start the மீசிக் தான் சின்ன அம்மணி

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
நடத்துங்க//

நடத்திடுவோம்....நன்றிங்க பத்மா

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…
What is this marupadium Vadai kidaklinu feelingsa....ada kadavuley...ethu ellam nee kekamatiya..//

இந்த வடை பிரச்சனைக்கு கடவுளை வேற இழுக்கறீங்களே...என்ன கொடுமை சார் இது?

//Kastapattu padikravangaluku ellam
treat kudukrenga....(yarium kuripidavillai enpathi thalmiodu koorikolkirom..)
istapatu padikravangalku ethum kidiatha...(enga sangam uripinargal and vasargal)//

ஒகே ஒகே கூல் டௌன் பிரதர். கண்டிப்பா அழைப்பு அனுப்பரோம்

//Engal Appaviku..
oru siriya viruthu onruku siparisu cikren..
"Elam Kavi Eluthalar"
enkira pattathi engal
Varuthapadtha VAsipphor sangam sarbaga valangukirom"
"elam Kavi Eluthalar Thangamani".
"elam Kavi Eluthalar Thangamani"
"elam Kavi Eluthalar Thangamani"...//

ஐயோ....மக்கா....ஆனந்த கண்ணீர்ல ப்ளாக் எல்லாம் மெதக்குதப்பா...ரெம்ப ரெம்ப நன்றிங்க பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…
rumba rumba nala erukunga
VAsikka pidithu erukirathu...
miga eyalbai sirithu vegamagavum
kadai chelkriathu......
enta chemistry,physicsla elam eanku nambikai ellai..
ernuthalum neenga istam pola kadhia eduthu selungal.(engal sangam patukappu alikkum)//

உங்கள் அன்புக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//G3 சொன்னது… Aaha.. ingayum thodar kadhaiya !!! TVla odara megaserial kanakka vida blogla odara thodar kadhai count jaasthiyaagum pola irukkae ;))))//

என்னங்க பண்றது G3 ...கற்பனை வளம் கரை புரண்டு ஓடுதே

அப்பாவி தங்கமணி said...

//G3 சொன்னது… //"காயத்ரி. இந்தா இது உனக்கு என்னோட பர்த்டே gift " என்று ஒரு அழகிய கம்மல் பரிசளித்தாள் கௌரி//
avvvvvv... enakkum porandhanaal pochu.. indha gaya3kku yaarum ippadi kudukkaliyae :(((//

சரி சரி...நோ crying நோ crying ...ஒன்லி லாப்பிங்... கண்ண தொடச்சுக்கோ.... அடுத்த பொறந்த நாளைக்கு இந்த சிஸ்டர்.... இந்த சிஸ்டர்.... நான்.... நான் இருக்கேன்.....

அப்பாவி தங்கமணி said...

//G3 சொன்னது… adutha part eppo poduveenga ?? Ella postlayum indha kelvi kekka vendiyadha irukkae :(((//

அட பாவி கமெண்ட் கூட கட் பேஸ்ட் தானா

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
/My days (Gops) க்கு பிரஷர் எகிற போகுதுன்னு நெனைக்கிறேன்//
:O eppadinga post poda poren vadai'ku ready aaagikonganu sollitu post ah publish pannuveeengala? eksi :)//

அப்படி எல்லாம் இல்லைங்க பிரதர்... கொடி சிஸ்டர் கொஞ்சம் பாஸ்ட்ஆ தான் இருக்காக

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது… enna vachi comedy keemaday pannalaiey ?//

ச்சே ச்சே என்ன பாத்தா அப்படியா தெரியுது...என் பேரே அப்பாவி ஆச்சே

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
// என்னத்தான் கோச்சுக்கபோறா பொண்ண வளத்தின அழகுக்கு"//
பொண்ணு அழகா இருந்தா அந்த கஷ்டம் வேணாம் :)//

இப்படி வேற ஒரு நெனப்பா... சந்தேகமில்லாம உனக்கு பால் காரன் தான் வில்லன்... அந்த போஸ்ட் என்ன ஆச்சு பிரதர்

//உன் மாப்பிள்ளை ஒண்ணும் ஒட்டியாணம் வாங்கி தரல//
இவங்க சொல்லுறத பார்த்தா கௌரி ரொம்ப டயட்'ல இருப்பாங்க போல//

இப்படியே பேசிட்டு இருங்க... அப்புறம் இருக்கு வேட்டு

//strap , dial எல்லா கலர்லயும் குடுத்து இருக்கான். Dressக்கு ஏத்தாப்புல மாத்தி போட்டுக்கலாம்"//
பர்மா பஜார்'ல 150ரூபாய் மட்டுமே//

150 ரூபாய்ங்கறது மேட்டர் இல்ல பிரதர்..... யாரு யாருக்கு வாங்கி தர்றாங்க அப்படிங்கறது தான் மேட்டர்

//தனக்கு இப்படி ஒரு தமக்கை இல்லையே என்று பலமுறை எண்ணியதுண்டு//என்னங்க இதுலையே தெரியுது கார்த்திக் காயத்திரிக்கு அப்பீட் கொடுக்க போறான்'னு//

அட பாவி எப்படி எல்லாம் லாஜிக் இருக்கா...

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
//முதல் முறையாய் அவன் Gayu என்று அழைத்தது வித்தியாசமாய் இருந்தது//அடங்க மாட்டாங்கே'லே இவங்கே//

இவிங்க அடங்கினா கதை எழுதறது எப்படி

//இது எங்க போய் முடியுமோன்னு எழுதற எனக்கு தான் டென்ஷன்ஆ இருக்கு//இப்படி சொன்னா எப்படி?//

வேற எப்படி சொல்ல ...என்னனு சொல்ல


//வழக்கம் போல கவிதை சூப்பர்//

நன்றி நன்றி நன்றி

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
//enakkum porandhanaal pochu.. indha gaya3kku yaarum ippadi kudukkaliyae :((//
அதுக்கு எதிர் வீட்டுல கார்த்தி'னு ஒருத்தன் இருக்கனுமே... நல்லா சொல்லுறாங்கையா டிடெய்லு//

அட பாவி... கதைய நல்லா படிப்பூ... கம்மல் குடுத்தது அவ அக்கா... கார்த்தி இல்ல

தக்குடுபாண்டி said...

//சரி சரி...நோ crying நோ crying ...ஒன்லி லாப்பிங்... கண்ண தொடச்சுக்கோ.... அடுத்த பொறந்த நாளைக்கு இந்த சிஸ்டர்.... இந்த சிஸ்டர்.... நான்.... நான் இருக்கேன்.....//

'அடப்பாவி' அக்கா, எனக்கு அக்டோபர் 2'nd birthday, sooooo மறக்காம ஒரு முப்பது கிராம்ல செயினோ அல்லது கங்கணமோ அது உங்க இஷ்டம்...:)

தக்குடுபாண்டி said...

//வாவ்...super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume உனக்கு. அப்படியே பொண்ணு பாக்க போலாம். இல்லையா மாமி?" என்றாள் காயத்ரி// uncle uncle-nu minkle aaraaledaa kaarthi....:)

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
'அடப்பாவி' அக்கா, எனக்கு அக்டோபர் 2'nd birthday, sooooo மறக்காம ஒரு முப்பது கிராம்ல செயினோ அல்லது கங்கணமோ அது உங்க இஷ்டம்...:)//

காந்தி பொறந்த நாள்ல பொறந்த நீ இப்படி பேசலாமா....என்ன பிரதர் அக்கா தங்கச்சிகளுக்கு அண்ணன் தம்பி செய்றது தானே முறை. வேணும்னா தங்கமணியோட வாங்க அப்போ முறை செய்றோம்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//வாவ்...super ஆ இருக்குடா இந்த வேஷ்டி சட்டை costume உனக்கு. அப்படியே பொண்ணு பாக்க போலாம். இல்லையா மாமி?" என்றாள் காயத்ரி// uncle uncle-nu minkle aaraaledaa kaarthi....:)//

அச்சோ அச்சோ... மாமினா அங்கிள் இல்ல ஆண்ட்டி...

ஸ்ரீராம். said...

தொடர்கதையா...அப்போ மிச்ச பகுதில்லாம் படிச்சிட்டுதான் இங்க வரணுமா?

LK said...

//வேணும்னா தங்கமணியோட வாங்க அப்போ முறை செய்றோம்//

yaru thanmaniyoda vanthalum murai seyyapaduma ???

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
//வேணும்னா தங்கமணியோட வாங்க அப்போ முறை செய்றோம்//
yaru thanmaniyoda vanthalum murai seyyapaduma ???//

ஐயோ சாமி... நீங்க வெவகாரமான ஆளா இருப்பீங்க போல... இப்படி குண்டக்க மண்டக்க பேசினா எப்படி பிரதர் (பார்த்திபன் சார்க்கு சொந்தமா)

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
தொடர்கதையா...அப்போ மிச்ச பகுதில்லாம் படிச்சிட்டுதான் இங்க வரணுமா?//

ஆமாங்க பிரதர். படிச்சுட்டு சொல்லுங்க

LK said...

இல்லை அவர்தான் என் பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
இல்லை அவர்தான் என் பிரதர்//

கஷ்டம் தான். உங்க கிட்ட கொஞ்சம் alert ஆவே இருந்துக்கறேன்

தக்குடுபாண்டி said...

//ஐயோ சாமி... நீங்க வெவகாரமான ஆளா இருப்பீங்க போல... இப்படி குண்டக்க மண்டக்க பேசினா எப்படி பிரதர் (பார்த்திபன் சார்க்கு சொந்தமா)// யோவ் LK, அக்காவை கலாய்க்காம இருக்கவும்...:)

தக்குடுபாண்டி said...

@ LK - //yaru thanmaniyoda vanthalum murai seyyapaduma ???// யாரோட தங்கமணியோடையோ வரக்கூடாது, ஒழுங்கா அவங்களோட தங்கமணியோட வரணும்...:)

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
யோவ் LK, அக்காவை கலாய்க்காம இருக்கவும்...:)//

@ தக்குடு - பாசமலரே....நன்றி நன்றி..
@ LK - ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
@ LK - //yaru thanmaniyoda vanthalum murai seyyapaduma ???// யாரோட தங்கமணியோடையோ வரக்கூடாது, ஒழுங்கா அவங்களோட தங்கமணியோட வரணும்...:)//

சரியா சொன்னீக தம்பி

LK said...

overa jalra sattham kekkuthu

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
overa jalra sattham kekkuthu//

@ LK - அப்படியா...எனக்கு ஒண்ணும் கேக்கலையே. LK உங்களுக்கு selective hearingosia அப்படிங்கற ஒரு defect உடைய பாதிப்புன்னு தோணுது
@ தக்குடு பிரதர் - கரெக்ட் தானே

ஸ்ரீராம். said...

அக்கா தங்கைப் பாச வர்ணனை அழகு...சங்கரன் பட்டர்?

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
அக்கா தங்கைப் பாச வர்ணனை அழகு...சங்கரன் பட்டர்?//

நானும் என் தங்கையும் கூட இந்த கொஞ்சல் எல்லாம் உண்டு (கல்யாணத்துக்கு அப்புறம் தான்), அந்த பாதிப்புன்னு நெனைக்கிறேன்
சங்கரன் பட்டர் - கோவில்ல குருக்கள அப்படி சொல்லுவாங்க தானே...இல்லையா? (ஐயோ...)

ஸ்ரீராம். said...

சங்கரன் குருக்கள்....நாராயண பட்டர்...சைவ வைணவப் பெயர் கலப்பு...வைணவர்கள் சங்கரனை நம்புவதில்லை..!

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
சங்கரன் குருக்கள்....நாராயண பட்டர்...சைவ வைணவப் பெயர் கலப்பு...வைணவர்கள் சங்கரனை நம்புவதில்லை..!//

ரெம்ப நன்றி ஸ்ரீராம். இனிமே கவனமா இருக்கேன்

Post a Comment