Monday, April 05, 2010

பிரியமானவளே...பகுதி 3

பகுதி 1 பகுதி 2

"கௌரி உடனே நம்மாத்துக்கு வர்றயா?"

"என்னாச்சு காயத்ரி?"

"நீ நேர்ல வா"

"காயத்ரி உன் கொரலே சரியா இல்ல, சொல்லேண்டி, நேக்கு ரெம்ப பதட்டமா இருக்கு"

"நீ வருவியா மாட்டியா?"

"அம்மாகிட்ட கொஞ்சம் போன்அ குடு"

"அதான் ஆத்துக்கு வரேல்ல. அம்மா அப்பா எல்லாரோடையும் அப்ப பேசிக்கோ"

"ஏண்டி இப்படி பிடிவாதம் பண்ற. சரி வரேன் போன்அ வெய்யி"

தான் நினைத்தது போல் ஏதேனும் காதல் விவகாரமோ என மனம் பதறியது கௌரிக்கு

சிறிது நேரத்தில் பதட்டமாக வந்த பெரிய மகளை கண்டதும்

"என்ன கௌரி. ஏன் இப்படி பதட்டமா வர்ற. கொழந்தைங்க எங்க?"

"அம்மா காயத்ரி போன் பண்ணினா. என்னமோ போல பேசினா. என்னமா ஆச்சு. அவளுக்கு உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?"

"அதுக்குள்ள உனக்கு போன் பண்ணினாளா? எங்க பிராணன வாங்கறது போறாதுன்னு உன்னையும் நிம்மதி இல்லாம செய்யனும்னு பாக்கறாளா?"

"ஏம்மா எப்பவும் அவள திண்டிண்டே இருக்க. இப்ப எங்க அவ?"

"கௌரி..." என்றபடி ஓடி வந்த காயத்ரி கௌரியின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்

"என்னடி ஆச்சு...ஏன் இப்படி அழற" என்று கௌரி பதற

அதே சமயம் வீட்டுக்குள் நுழைந்தார் கௌரி காயத்ரியின் தந்தை கோபால்

"ஏண்ணா...ஏன் ஆபீஸ்ல இருந்து சீக்கரமே வந்துட்டேள்" என்று பதட்டமாய் விசாரித்தாள் கோகிலா

"கௌரி பஸ் விட்டு எறங்கி நடந்து போறான்னு பியூன் வந்து சொன்னான். அதான் என்னமோன்னு வந்தேன்" என்றார் கோபால். அவருடைய அலுவலகம் வீட்டில் இருந்து நடக்கும் தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் தான்

"எல்லாம் உங்க செல்ல மக வேல தான். வேற என்ன" என்று பெருமினாள் கோகிலா

"காயத்ரி என்னடி ஆச்சு? யாராச்சும் சொல்லுங்கோளேன்" என்றாள் கௌரி

காயத்ரி எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருக்க கோகிலா தொடர்ந்தாள்

"இருடி நான் சொல்றேன். ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி. இவ வேண்டாம்கறா"

"அவ இஷ்டம் தானேமா முக்கியம். வேற வரன் பாக்க வேண்டியது தானே" என தங்கைக்கு பரிந்தாள் கௌரி

"இந்த வரன பத்தி சொல்றேன். என்ன கொறகண்டானு நீயே கேப்ப"

"சொல்லும்மா"

"மெட்ராஸ்ல கலெக்டர் ஆபீஸ்ல வேல...." காயத்ரி இடை புகுந்தாள்

"கலெக்டர் ஆபீஸ்ல தான் வேல. கலெக்டர் இல்ல..."

கோகிலா: "நோக்கு கலெக்டர் மாப்பிள்ளை வேற கேக்குதோ?"

கௌரி: "இரு காயு அம்மா சொல்லட்டும். நீ சொல்லுமா"

கோகிலா: "ஒரே மூத்த அண்ணா கூட பிறந்தவா வேற பெண்கள் யாரும் இல்ல. அண்ணாவும் மன்னியும் சொந்த ஊர்ல அம்மா அப்பாவோட இருக்கா. எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல. கலெக்டர் ஆபீஸ்ல Survery Engineer ஆ இருக்கார். மாசாமானா சொளையா இருபதாயிரம் சம்பளம். இதுக்கு மேல என்னடி வேணும்"

காயத்ரி: "அதுக்கு மேல நான் சம்பாதிப்பேன். நேக்கு இந்த வரன் வேண்டாம்"

கோகிலா: "கேட்டியா கௌரி.எதுக்கு இந்த விதண்டா வாதம். என்ன கொறனு நீயே கேளு"

கௌரி: "என்ன காயத்ரி? ஏன் வேண்டாங்கறேனு சொல்லு"

கோகிலா: " நானே சொல்றேன். இந்த ஊற விட்டு போமாட்டாளாம். மேல படிக்கணுமாம். வேலைக்கு போகணுமாம். பெரிய லட்சியம்..."

காயத்ரி: "ஆமா லட்சியம் தான். நான் அத்தனை தூரம் எல்லாம் வாக்கப்பட்டு போமாட்டேன். இதே ஊர்ல தான் இருப்பேன்"

கோகிலா: "ஏன் வீட்டோட மாபிள்ள பாத்துடுவோமா...?" என்றாள் கோவக்குரலில்

காயத்ரி: "வீட்டோடயா? ஐயோ சாமி உன்னோட காலமெல்லாம் நேக்கு குப்ப கொட்ட முடியாது. அதுக்கு கொடுமைக்கார மாமியாரே மேல்" என்றாள் கோபத்தில்

கோகிலா: "கேட்டியா கௌரி. பெத்த தாய்க்கு கொடுமைக்கார மாமியார் மேல்னு சொல்ற அளவுக்கு நான் என்னடி இவளுக்கு கொடுமை பண்ணினேன்" என்று அழத்தொடங்கினாள் கோகிலா

கௌரி: " அவ சும்மாவாச்சும் உன்ன வம்பு பண்றா விடேம்மா" என்று தாயை சமாதனம் செய்துவிட்டு "காயத்ரி ரெம்ப நல்ல வரனா தோன்றதுடீ...யோசி"

காயத்ரி: "நீ கூட என்பக்கம் பேச மாட்டியா கௌரி. மேல படிக்கணும். வேலைக்கு போகணும்னு எத்தனை ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா?"

இதுவரை பேசாத அவளுடைய அப்பா வாய் திறந்தார்

"காயத்ரிமா கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கலாம்மா. நான் வேணா அதை பத்தி அவா கிட்ட பேசிடறேன்"

"ஏன்பா நீங்க கூட என்னை புரிஞ்சுக்க மாட்டேளா. என்னை ஊரை விட்டு வெரட்டரதுலையே குறியா இருக்கீங்க. நான் அத்தனை பாரமா போய்டேனா?" என்று அழத்தொடங்க செல்ல மகளின் அழுகை காண பொறுக்காமல்

"அப்படி இல்லமா. பெத்த பொண்ண பாரமா நெனைக்கறவன் நான் இல்ல. நல்ல வரனா இருக்கேன்னு தான்...."

"அவ கிட்ட எதுக்கு நீங்க கெஞ்சிண்டு இருக்கேள். போங்கோண்ணா. அவாள இந்த வார கடசில பொண்ணு பாக்க வரச்சொல்லுங்கோ" என்று கோகிலா கூற உடனே காயத்ரி பெரும் குரல் எடுத்து அழத்துவங்க

கௌரி: "விடும்மா.நான் தான் பத்தொன்பதுலையே வாக்கப்பட்டு போனேன். அவளாச்சும் மேல படிக்கட்டும். விடு"

கோகிலா: "சீக்கரம் கல்யாணம் பண்ணி என்ன கெட்டு போச்சு இப்ப நோக்கு. மணிமணியா ரெண்டு பிள்ளைங்க. ராணி மாதிரி வெச்சு தாங்கற மாபிள்ள. மனுசாளும் தங்கம் தான்.வேற என்ன?"

கௌரி: "ஆமா நீ தான் மெச்சிக்கணும். என்னமோ சொல்லுவாளே "ராஜ்யம் இல்லா ராஜானு" அந்த கதை தான்" என்றாள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு

கோகிலா: "அந்த பேச்செல்லாம் விடு. ஏண்ணா...அவாளுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கோ வரச்சொல்லி"

மகளின் அழுத முகம் மனதை பிசைய "காயத்ரிமா கடசியா ஒரு வாட்டி நல்லா யோசனை பண்ணி சொல்லு. பின்னாடி தப்பு பண்ணிட்டோமேன்னு நெனைகராப்ல இருக்க கூடாது"

ஏதோ பேச வாய் எடுத்த மனைவியை கை உயர்த்தி அமர்த்தினார்

"நல்லா யோசிச்சுட்டேன்பா. நேக்கு இஷ்டம் இல்ல" என்றாள் காயத்ரி தீர்மானமாக

"சரிம்மா. வேண்டாம்னு சொல்லிடலாம். முகம் கழுவிட்டு போய் தட்டு எடுத்து வெய். எல்லாரும் சாப்பிடலாம். நீ நேத்திக்கி ராத்திரில இருந்து ஒண்ணும் சாபிடல இல்ல போ"

"என்னணா இது. அவ சொல்றத கேட்டுடுண்டு....." என்ற மனைவியிடம்

"இங்க பாரு கோகி, நம்ம காலம் மாதிரி இல்ல இப்ப. பிள்ளைக இஷ்டத்துக்கு மேல நேக்கு எதுவும் பெருசு இல்ல. இதோட விடு"

"எப்படியோ போங்கோ...நீங்களாச்சு உங்க மகளாச்சு...இப்படியே செல்லம் குடுத்து குடுத்து எங்க போய் முடிய போறதோ" என்று புலம்பியபடி உள்புறம் சென்றாள் கோகிலா

____________

"சரிம்மா நான் கிளம்பறேன்"

"ஏன் கௌரி. சாப்ட்ட கையோட போகாட்டா என்ன.செத்த நாழி இருந்து போயேன்"

"இல்லமா. சின்னது இப்பவே மாமிய என்ன பாடு படுத்துறதோ தெரியல. பெரியவன் ஸ்கூல்ல இருந்து வர்ரச்சே நான் இல்லன்னா ஆத்த ரெண்டு பண்ணிடுவான்"

"சரி பாத்து போ. கொடை இந்தா. நல்ல வெயில் நேரம்"

"சரிம்மா. காயத்ரி பஸ் ஸ்டாண்ட் வர என்னோட வாயேன்" ஏதோ பேசவே அழைக்கிறாள் என்று உணர்ந்து அவளும் கிளம்பினாள்

வீட்டை விட்டு சற்று தூரம் சென்றதும் "காயத்ரி உன்னிட்ட கொஞ்சம் பேசணும். நான் கேக்கறதுக்கு மறைக்காம சொல்லுவயா?"

"கேளு கௌரி. உன்கிட்ட நான் எப்போ என்ன சொல்லாம இருந்துருக்கேன்"

"அது...அது வந்து...நீ யாரையாச்சும் மனசுல நெனச்சுண்டு இருக்கயா?" தமக்கையின் கேள்வியில் உடல் அதிர

"ச்சே ச்சே...அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள் அவசரமாக

"அதனால தான் இந்த வரன வேண்டாங்கறயோனு...."

"எதை வெச்சு இப்படி ஒரு சந்தேகம்..." என்றாள் கேலி குரலில்

"இல்லடி...நீயும் கார்த்தியும் பழகறத பாத்து....."என்று தயங்கியபடி இழுத்தாள்

"அதெல்லாம் இல்ல....." என்றவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை

ஆனால் கௌரி அப்படி கூறியதற்கு கோபத்திற்கு பதில் சந்தோஷம் தோன்றியது ஏன் என்று புரியாமல் விழித்தாள்

அதற்குள் கௌரி செல்ல வேண்டிய பஸ் வர அவள் புறப்பட்டாள்

காயத்ரிக்கு எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்றே புரியவில்லை. தன்னிலை இழந்து இதயம் வெளிய விழுந்து விடுமோ என அஞ்சும் படி துடித்தது

இனி என்ன என கேள்விக்குறியாய் நின்றாள்

????????????????????????????????


இனியவனே...
பேசிய வார்த்தைக்கெல்லாம்
புதுஅர்த்தம் தோன்றுவதேன்
பேசாத வார்த்தைகூட
பலஅர்த்தம் சொல்லுவதேன்

அருகில் நீவேண்டுமென
ஆதங்கம்எனை கொல்வதேன்
ஆயுள்எல்லாம் உனக்கேஎன
ஆசைமனம் சொல்வதேன்

தொடரும்...

36 பேரு சொல்லி இருக்காக:

Complan Surya said...

mee the first

am the first

na pakum varikum yarum comment podalai..

etho vantuviten....

v.v.s
complan surya

Complan Surya said...

உங்கள் பதிவு சூப்பரா இருக்குங்க
வாசிக்க சுவாரசியம இருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் படியாக உள்ளது
அப்புறம் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் பதிவு போட்ட எப்படி? குறைந்தது இரண்டு பதிவாவது போடுங்க
எங்கள் சங்கம் சார்பாக
இளம்கவி எழுத்தாளர் என்கிற
பட்டதை அளித்து மகிழ்கிறோம்

கவி எழுத்தாளர்
கவி எழுத்தாளர்
கவி எழுத்தாளர்
வாழ்க வாழ்க வாழ்க!


நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

அன்புத்தோழன் said...

Very nice...

படிக்குரச்ச என்னோட பழகிய அய்யராத்து பொண்ண ஞாபக படுத்திட்டேல்.... எழுத்தின் வேகம் அருமை.... Keep up the good work..

அப்பாவி தங்கமணி said...

Complan Surya - சூப்பரு... கவி எழுத்தாளர் பட்டத்திற்கும் மிக்க மிக்க நன்றி பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//அன்புத்தோழன் சொன்னது…
Very nice... படிக்குரச்ச என்னோட பழகிய அய்யராத்து பொண்ண ஞாபக படுத்திட்டேல்.... எழுத்தின் வேகம் அருமை.... Keep up the good work..//

வாங்க அன்புதோழன். முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..... யாருங்க அந்த அய்யராத்து பொண்ணு...

My days(Gops) said...

aah aah

vadai ah pathi kevalama pesitu, inga paaruda gops, indha complan surya aaaluku modhal'la vandhu line katti nikkiraaaru ...

mmm

My days(Gops) said...

//ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி. இவ வேண்டாம்கறா"//

கொக்க மக்கா அதுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமா? எடுடா அந்த ஸ்கேலை.....

//ஒரே மூத்த அண்ணா கூட பிறந்தவா வேற பெண்கள் யாரும் இல்ல. அண்ணாவும் மன்னியும் சொந்த ஊர்ல அம்மா அப்பாவோட இருக்கா. எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல. கலெக்டர் ஆபீஸ்ல Survery Engineer ஆ இருக்கார். மாசாமானா சொளையா இருபதாயிரம் சம்பளம். //

ஓவர் டிடெயிலு'டா

//இதுக்கு மேல என்னடி வேணும்//
சம்பளமே இவ்வளவுனா அப்போ? சரி சரி நீங்க கதைய சொல்லுங்க

padma said...

ஏன் ஏன் சொல்லிடுங்க சீக்கிரம்

தமிழ் உதயம் said...

கதையை தொடர்ந்து வாசிக்கிறேன். முற்றும் போடும் போது முழுமையான பின்னூட்டம்.

தக்குடுபாண்டி said...

////ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி// suuuuuuper வரந்தான் பக்கத்தாதுலேயே இருக்கே! பாருப்பா கோப்ஸு, இப்படியே எல்லரும் வெளியூர்லையே வரன் பார்த்தா நம்ப கோப்ஸுக்கு எல்லாம் எப்ப கல்யாணம் ஆகர்து???...:)LOL

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
aah aah...vadai ah pathi kevalama pesitu, inga paaruda gops, indha complan surya aaaluku modhal'la vandhu line katti nikkiraaaru ... mmm//

ஆஹா எங்க போனாலும் இந்த வட கத பெரிய கதையா இருக்கே

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
//ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி. இவ வேண்டாம்கறா"//
கொக்க மக்கா அதுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமா? எடுடா அந்த ஸ்கேலை.....//

என்னது ஸ்கேல்ஆ... ஆஹா... இந்த வீரம் எல்லாம் எத்தனை நாளைகின்னு நாங்களும் பாக்கறோம்...

//ஓவர் டிடெயிலு'டா//

detail இல்லாம சும்மா பொண்ண தூக்கி குடுத்துடுவாங்களா சார். நீங்களும் detail எல்லாம் ரெடி பண்ணி வெயுங்கோ....ம் ம்

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
ஏன் ஏன் சொல்லிடுங்க சீக்கிரம்//

சீக்கரம் சொல்லிடறேன் ரெம்ப நன்றி பத்மா

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
கதையை தொடர்ந்து வாசிக்கிறேன். முற்றும் போடும் போது முழுமையான பின்னூட்டம்.//

இது என்ன புது ஸ்டைல். அப்புறம் நாங்க இப்படி போனி பண்றது பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
////ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி// suuuuuuper வரந்தான் பக்கத்தாதுலேயே இருக்கே! பாருப்பா கோப்ஸு, இப்படியே எல்லரும் வெளியூர்லையே வரன் பார்த்தா நம்ப கோப்ஸுக்கு எல்லாம் எப்ப கல்யாணம் ஆகர்து???...:)LOL//


உங்களுக்கு எல்லாம் எதிரி வெளிய இல்ல.... இங்கயே தான்

G3 said...

//தக்குடுபாண்டி கூறியது...

////ஒரு நல்ல வரன் வந்து இருக்கு கௌரி// suuuuuuper வரந்தான் பக்கத்தாதுலேயே இருக்கே! பாருப்பா கோப்ஸு, இப்படியே எல்லரும் வெளியூர்லையே வரன் பார்த்தா நம்ப கோப்ஸுக்கு எல்லாம் எப்ப கல்யாணம் ஆகர்து???...:)LOL//

@தக்குடு, இது பக்கத்து இலைக்கு பாயசம் கதையா இல்ல இருக்கு :P

ஆனாலும் கோப்ஸ பத்தி நீங்க தப்பா நெனச்சுப்புட்டேளே.. அவன் குவைத்லயே ஏதாவது பக்கத்து ஊட்ல பொண்ண பாத்திருப்பான் ;))

@கோப்ஸ், நான் சொல்றது ரைட் தானே. பைதிபை அந்த ரிச்செப்ஷனிஸ்ட் எல்லாம் எப்படி கீறாங்கோ?? அவங்கள பத்தி அப்டேட்ஸே இல்ல???

G3 said...

@அப்பாவி தங்கமணி,

ஒரு பக்கம் பத்தவைச்சுட்டேள். அடுத்த பக்கம் எப்போ தீபிடிக்கப்போகுது ;))))

அன்புடன் மலிக்கா said...

ப்ரொபைலில் பார்த்து சிரிச்சுட்டேன்.
என்னா ஒரு நக்கலு.

ஆனாலும் அப்பாவியாட்டம்தான் தெரியுது. அச்சோ அப்பாவி அப் எடுத்துட்டா.......

சும்மா சும்மா.

பிரியமானவளே மூன்றும் சூப்பர்..

My days(Gops) said...

@தக்குடு //இப்படியே எல்லரும் வெளியூர்லையே வரன் பார்த்தா நம்ப கோப்ஸுக்கு எல்லாம் எப்ப கல்யாணம் ஆகர்து???...:)LOL//

என்ன அக்கறை தக்குடுக்கு என் மேல.... ஓவர் பீலிங்க்ஸ் ஒடம்புக்கு ஒத்துக்காது ராசா:)

பக்கத்துல வீடு இருந்தா பொண்ணு பார்க்கலாம்.., ஆனா பக்கத்துல வீடே இல்லாட்டி நான் எங்கப்பா போவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

My days(Gops) said...

@g3:- //ஆனாலும் கோப்ஸ பத்தி நீங்க தப்பா நெனச்சுப்புட்டேளே.. அவன் குவைத்லயே ஏதாவது பக்கத்து ஊட்ல பொண்ண பாத்திருப்பான் ;)) //

ஏன்? யக்கா ஆனாலும் தம்பி மேல உனக்கு ரொம்ப நம்பிக்கை...அந்த நம்பிக்கைய வச்சி தன்னம்பிக்கையா நானும் பக்கத்து வீடுகளை தேடுறேன் தேடுறேன் தேடிக்கிட்டே இருக்கிறேன் :) .. நம்பிட்ட தானே?

//பைதிபை அந்த ரிச்செப்ஷனிஸ்ட் எல்லாம் எப்படி கீறாங்கோ?? அவங்கள பத்தி அப்டேட்ஸே இல்ல???//

எல்லாத்துக்கு அறிவுறை சொல்லி ஊருக்கு அனுப்பிட்டேனாக்கும் :)

My days(Gops) said...

//detail இல்லாம சும்மா பொண்ண தூக்கி குடுத்துடுவாங்களா சார். நீங்களும் detail எல்லாம் ரெடி பண்ணி வெயுங்கோ....ம் ம்//

:) பண்ணிட்டா போச்சி

அப்பாவி தங்கமணி said...

//@தக்குடு, இது பக்கத்து இலைக்கு பாயசம் கதையா இல்ல இருக்கு :P//

ஆஹா... விசயம் அப்படியா... தம்பி கூச்சபடாம நேரவா சொல்லுங்க... வயசு ஆகுதல்ல

// - @கோப்ஸ் - எல்லாத்துக்கு அறிவுறை சொல்லி ஊருக்கு அனுப்பிட்டேனாக்கும் :)//

நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே

அப்பாவி தங்கமணி said...

//G3 சொன்னது… ஒரு பக்கம் பத்தவைச்சுட்டேள். அடுத்த பக்கம் எப்போ தீபிடிக்கப்போகுது ;))))//

பத்திகிட்டே இருக்கு வெயிட் அண்ட் சி G3

அப்பாவி தங்கமணி said...

//அன்புடன் மலிக்கா சொன்னது…
ப்ரொபைலில் பார்த்து சிரிச்சுட்டேன்.
என்னா ஒரு நக்கலு.//

அது நம்ம ஊரு குசும்பு எங்க போகும் சொல்லுங்க

//ஆனாலும் அப்பாவியாட்டம்தான் தெரியுது. அச்சோ அப்பாவி அப் எடுத்துட்டா.......//

"ஆனாலும் அப்பாவியாட்டம்தான் தெரியுது" இதுக்கு மேல எனக்கு selective invisionableasia (அதாவது கண்ணு தெரியல)


//பிரியமானவளே மூன்றும் சூப்பர்..//
ரெம்ப ரெம்ப நன்றிங்க மலிக்கா

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
என்ன அக்கறை தக்குடுக்கு என் மேல.... ஓவர் பீலிங்க்ஸ் ஒடம்புக்கு ஒத்துக்காது ராசா:)//

எனக்கு என்னமோ இது அக்கறை மாதிரி தெரியல. TEST DRIVE மாதிரி உன்ன சிக்க வெச்சு பாத்து அப்புறம் தானும் தேடலாம்னு பிளான் பண்றா மாதிரி இருக்கு. கரெக்ட் தானே தக்குடு பிரதர்

//பக்கத்துல வீடு இருந்தா பொண்ணு பார்க்கலாம்.., ஆனா பக்கத்துல வீடே இல்லாட்டி நான் எங்கப்பா போவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

அட பாவமே... அப்படி ஒரு காட்டுலையா இருக்கீக... கஷ்டம்தேன்

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
//detail இல்லாம சும்மா பொண்ண தூக்கி குடுத்துடுவாங்களா சார். நீங்களும் detail எல்லாம் ரெடி பண்ணி வெயுங்கோ....ம் ம்//
:) பண்ணிட்டா போச்சி//

அப்ப தயாராத்தான் இருக்கீக

ஸ்ரீராம். said...

பதிலை மட்டும் பார்த்துட்டு எங்கே என் கமெண்ட் எங்கே என் கமெண்ட் என்று தேடி சென்ற பதிவில் கண்டு பிடித்தேன்...ரொம்ப அப்பாவியாய் இருக்கேனோ?

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
பதிலை மட்டும் பார்த்துட்டு எங்கே என் கமெண்ட் எங்கே என் கமெண்ட் என்று தேடி சென்ற பதிவில் கண்டு பிடித்தேன்...ரொம்ப அப்பாவியாய் இருக்கேனோ?//

ஆஹா...சாரி பிரதர்... மாத்தி போட்டுட்டேன்.... இப்ப சரி பண்ணிட்டேன் பாருங்க...(இதை வெச்சு எல்லாம் உங்களை அப்பாவினு ஒத்துக்க மாட்டோம்....உங்க தங்கமணிய கேட்டா தான் உண்மை தெரியும்)...அது சரி பதிவ பத்தி கமெண்ட் ஒண்ணும் போட்டதா தெரியலையே (நாங்களும் அப்பாவி தான்)

Complan Surya said...

where is my first comments..

enga enna nadakuthu...

ethai nan acheypithu

vilinadppu cikren..

தாராபுரத்தான் said...

சரியானவங்களைத்தான் வலைச்சரத்தில் பாலாசி அடையாளம் காட்டியிருக்காருங்கோ.

ஸ்ரீராம். said...

அவள் காதலை அவளே இனிதான் உணரப் போகிறாளா? ஷிவானியோடு கார்த்தி பழகி நிறைவு காணாமல் காயத்ரியிடம் தஞ்சமடைவதுதான் க்ளைமாக்ஸா? பார்ப்போம். இனி தொடர்ந்து படிக்கலாம்...!

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது… where is my first comments..enga enna nadakuthu...ethai nan acheypithu
vilinadppu cikren..//

ஹலோ பிரதர்... கூல் கூல்...உங்க கமெண்ட் தான் first கமெண்ட்ஆ இருக்கு. நல்லா பாருங்க.... உங்களுக்கும் selective invisionasia பாதிப்பு இருக்கோ?

அப்பாவி தங்கமணி said...

//தாராபுரத்தான் சொன்னது…
சரியானவங்களைத்தான் வலைச்சரத்தில் பாலாசி அடையாளம் காட்டியிருக்காருங்கோ//

ரெம்ப நன்றிங்க, வருகைக்கும் பாராட்டுக்கும்

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
அவள் காதலை அவளே இனிதான் உணரப் போகிறாளா? ஷிவானியோடு கார்த்தி பழகி நிறைவு காணாமல் காயத்ரியிடம் தஞ்சமடைவதுதான் க்ளைமாக்ஸா? பார்ப்போம். இனி தொடர்ந்து படிக்கலாம்...!//

நன்றி நன்றி நன்றி. சினிமா விமர்சனம் ஸ்டைல்ல கமெண்ட் சொன்னதுக்கும் நன்றி (ஒருவேள ரெம்ப கொழப்பறேங்கறத தான் polished ஆ சொன்னாரோ... நான் தான் ஓவர் build up பண்றேனோ... சரி சரி அப்படியே maintain பண்ணு அப்பாவி தங்கமணி)

LK said...

கதைய விட கடைசியா எழுதறீங்க பாருங்க அந்த கவிதை நல்லா இருக்கு

கதைய பத்தி பேசாம மத்தது எல்லாம் பேசறீங்க

LK said...

namma veetu address change aiduchunga matthirunga unga home pagela

http://lksthoughts.blogspot.com

Post a Comment