Monday, April 12, 2010

பிரியமானவளே...பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

காயத்ரிக்கு எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்றே புரியவில்லை. தன்னிலை இழந்து இதயம் வெளியே விழுந்து விடுமோ என அஞ்சும் படி துடித்தது

இனி என்ன என கேள்விக்குறியாய் நின்றாள்??????????????

வீட்டிற்குள் வந்ததும் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்

பழைய சினிமால எல்லாம் வர்ற மாதிரி அவளுக்கும் அவ மனசாட்சிக்கும் (White Dress Costume ல) ஒரு பெரிய வாக்குவாதமே நடந்தது

காயத்ரி: "ஏன் இப்படி இருக்கு. ச்சே இது தப்பில்லையா"

மனசாட்சி: "என்ன தப்பு?"

காயத்ரி: "சின்னதுல இருந்து ஒண்ணா இருக்கற நண்பன இப்படி வேற மாதிரி நெனக்கறது தப்பில்லையா"

மனசாட்சி: "நண்பன் நல்ல கணவனா இருக்க கூடாதா என்ன?"

காயத்ரி: "ஆனா அவன் மனசுல அப்படி இல்லேன்னா"

மனசாட்சி: "இல்லாமயா ஒரு ஒரு பிறந்த நாளுக்கும் பாத்து பாத்து செய்யறான். உனக்கு ஒண்ணுனா மொதல் ஆளா நிக்கறான்"

காயத்ரி: "அது சும்மா ஒரு அன்புல இருக்கலாம் இல்ல"

மனசாட்சி: "வெறும் அன்புன்னா நோக்கு செகப்பு கலர் நன்னா இருக்குனு கூடவா சொல்லுவான்"

காயத்ரி: "அது சும்மா எல்லாரும் சொல்றது தான"

மனசாட்சி: "உன்ன மாதிரி பிடாரியவே சமாளிக்கலயானு அன்னிக்கி மறைமுகமா சொன்னது கூடவா நோக்கு ஏறல"

காயத்ரி: "எப்பவும் பேசற கேலி தான"

மனசாட்சி: "நீ நிச்சியம் அசடு தான் போ"

காயத்ரி: "ஆனா அவன் ஷிவானிய நெனச்சுண்டு இருந்தானே"

மனசாட்சி: "அதே ஷிவானி ரெண்டு மாசம் முந்தி அவ மாமாவ கட்டிக்க போறான்னு தெரிஞ்சப்ப ரெண்டு நாள் தான் சோகம். அப்புறம் பழைய படி சிரிக்கலையா கார்த்தி"

காயத்ரி: "அது...."

மனசாட்சி: "அதுவே நீ போன லீவுக்கு உங்க அக்கா ஆத்துல போய் சேந்தாப்புல பத்து நாள் இருக்கவும் உன்னைய தேடிண்டு உங்க அக்கா ஆத்துக்கு வந்தானே. ஞாபகமில்லையா"

காயத்ரி: "அவன் எப்பவும் எங்க அக்கா ஆத்துக்கு போறது தானே"

மனசாட்சி: "எப்பவும்னா நீ அங்க போய் இருகறச்ச தான ஒரு ஒரு வாட்டியும் அவன் அங்க வந்தான்"

காயத்ரி: "அதுவும் உண்மை தான்...ஆனா..." என அவள் இழுக்க

மனசாட்சி: "இப்படி நீ இழுந்துண்டே இரு. இன்னொரு ஷிவானியோ இல்ல பவானியோ கொத்திக்க போறா"

காயத்ரி: "ஐயோ..,...இல்ல...." என நிகழ் உலகிற்கு வந்தாள். மனசாட்சி ஓடி ஒளிந்து கொண்டது

மிகவும் குழம்பித்தான் போனாள். எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ திடீரென

"அதான் அழுது அழுது சாதிச்சுண்டாச்சே. போதும் உன் நாடகம். மணி ஆறாச்சு வெளிய வா" என்ற தன் அம்மா கோகிலாவின் பேச்சு எரிச்சலை கிளப்ப

"எதுக்குமா இப்ப கத்திண்டுருக்க" என்றபடி கதவை திறந்தாள்

"ஆமாடி நான் வீதில போற கழுத பாரு. கத்திண்டுருக்கேன்"

"உன்னிட்ட பேச நேக்கு தெம்பில்ல" என்று சலிப்புடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றால் போதுமென அவசரமாய் முகம் கழுவி கோவிலுக்கு கிளம்பினாள்

காயத்ரியின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ சரியாய் கார்த்தியும் வீட்டை விட்டு வெளியே வந்தான்

"ஹாய் காயத்ரி நானே உன்னைய பாக்கலாம்னு தான் வந்துண்டுருந்தேன். வா நடந்துண்டே பேசலாம்"

அவனை எதிர்பாராததால் என்ன பேசுவதென்றே தோணாமல் அமைதியாய் நடந்தாள்

"என்ன காயத்ரி? ஏன் எதுவும் பேசாம இருக்க?"

"ஒண்ணும் இல்ல" என்றாள் அவளுக்கே கேட்காத நடுங்கிய குரலில்

"இத்தன வருசமா பாக்கற கார்த்தி தானே. இன்று ஏன் இப்படி என் குரல் நடுங்குகிறது. அவனை பார்க்கவும் கூசுகிறதே. அவன் எப்போதும் போல் தான் இருக்கிறான். ச்சே சும்மா இருந்த சங்கை இந்த கௌரி ஊதி கெடுத்துடாளே" என மனதிற்குள் புலம்பினாள்

"என்ன ஆச்சு காயத்ரி? ஆத்துல ரெம்ப திட்டிட்டாளா"

"இவனுக்கு எப்படி? என்ன தெரியும்?" என குழப்பத்துடன் "நோக்கு எப்படி....?"

"அம்மா சொன்னா. மாமி வந்து ஒரே பொலம்பல்னு"

"....."

"ஏன் காயத்ரி? நல்ல வரன் தானே. ஏன் வேண்டாம்னே"

"கடவுளே இவனுமா..." என அழும் நிலைக்கு தயாரானாள்

"சொல்லுமா. ஏன் மாப்பிளைய பிடிக்கலையா?"

"இல்ல...நேக்கு மேல படிக்கணும்"

"அதுக்கு என்ன. கல்யாணம் பண்ணிண்டு படி. யாரு வேண்டாம்னா"

"ப்ளீஸ் கார்த்தி...நீயும் சேந்து என்ன கொல்லாத" என்றாள் அழுகையுடன்

"ஏய் என்ன காயத்ரி இது, இதுக்கு போய் அழற? சும்மா நான் கேக்க கூடாதா?"

"நீதாண்டா கேக்க கூடாது பாவி" என்றாள் மனதினுள்

"சாரி காயத்ரி. ஒகே நான் எதுவும் கேக்கல ஓகே வா" என்றான் சமாதானமாக

"ம்..." என்றாள்.

அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசவில்லை

காயத்ரிக்கு தான் தூக்கம் காணாமல் போனது அன்று முதல்

"அவன் மனசுல நான் இருந்தா "கல்யாணம் பண்ணிண்டு படி. யாரு வேண்டாம்னா" னு எப்படி சொல்லுவான். ஒருவேள ஆழம் பாக்கறானோ" என்று தனக்குள் பலவாறு குழம்பினாள் காயத்ரி

அடுத்த ஒரு வாரம் கார்த்தி கண்ணில் படுவதையே வேண்டுமென்றே தவிர்த்தாள் காயத்ரி

பரீட்சை எல்லாம் முடிந்து வீட்டில் இருந்ததால் நேரத்தை கொல்வது சிரமமாய் இருந்தது

அன்று தோழிகள் வந்து வற்புறுத்தி அழைக்க சினிமாவுக்கு கிளம்பினாள்

டிக்கெட் பெற்று கொண்டு தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்க, திடீரென யாரோ தோள் தொட திரும்பியவள் "ஹேய் காயத்ரி...நீ எங்க இங்க?" கண்களும் சிரிக்க நின்றவனை கண்டதும் தன்னிலை இழந்தாள்

ஒரு வாரமாய் காணாமல் கண்டதாலோ என்னவோ அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொள்ள தோன்றியது. செய்வதறியாமல் நின்றாள்

"ஏய்...என்னாச்சு.காயத்ரி..நான் கூப்டுண்டே இருக்கேன்...நீ பேசாம இருக்க?. இவங்கெல்லாம் யாரு உன் friends ஆ"

"ம்...ஆ...ஆமா..."

"எனக்கு introduce பண்ண மாட்டியா..." என்று அவள் மட்டும் காணும் விதமாய் கண் சிமிட்டி கேட்க மொத்தமாய் கரைந்தே போனாள் அந்த பார்வையில்

முன் போல் என்றால் "போதும் வழியாத" என்று அவனை வம்பிழுத்து கொண்டிருப்பாள்

இப்போது எதுவும் தோன்றாமல் "ம்...இவ சித்ரா, இவ ப்ரியா...இது சத்யா.."

"ஏய்...இவர் யாருன்னு எங்களுக்கு சொல்லுடி" என்று தோழிகள் கலாய்க்க கார்த்தியே தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டான்

"என் பேரு கார்த்திகேயன். காயத்ரிக்கு பக்கத்துக்கு வீடு. காயத்ரியோட பெஸ்ட் பெஸ்ட் friend சின்னதுல இருந்தே" என்று கூறியவன் இவளுடன் திரும்பி "கரெக்ட் தானே காயத்ரி நான் சொன்னது" என்று வேண்டுமென்றே கேட்க பேச முடியாமல் திணறினாள்

"என்ன ஆச்சு நோக்கு இன்னிக்கி...மௌன விரதமா.." என வம்பிழுத்து விட்டு சற்று தொலைவில் இருந்த தன் நண்பர்களை கை காட்டி அழைத்தான்

"டேய் நான் சொல்லுவேன் இல்லையா... என்னோட பெஸ்ட் friend காயத்ரினு, எங்க பக்கத்துல வீட்டுல. அது இவங்க தான். காயத்ரி இவங்க எல்லாம் என்னோட friends இவன் அசோக் இவன் குரு இவன் தான் எங்க gang leader ஜெய்" கார்த்தி கூறியது எதுவும் மனதில் பதியாமல் வெறுமனே தலை அசைத்தாள் காயத்ரி

"டிக்கெட் வாங்கியாச்சா காயத்ரி" என கார்த்தி கேட்க அருகில் இருந்த தோழி "வாங்கியாச்சு" என்றாள்

"குடுங்க எந்த சீட்னு பாக்கலாம்" என்று வாங்கியவன் "எங்களுக்கு நாலு row முன்னாடியா. ஆஹா Front ல பசங்க rouse ஓவர்ஆ இருக்கும். இந்தா காயத்ரி எங்க டிக்கெட்ஸ் நீங்க நாலு பேரும் use பண்ணிகோங்க" என மாற்றி கொடுத்தான்

காயத்ரி எதுவும் பேசாமல் பெற்று கொண்டாள்

அதற்குள் கேட் திறக்கப்பட எல்லோரும் உள்ளே சென்றனர்

காயத்ரி மற்றும் தோழிகளை அமர வைத்து விட்டு கார்த்தி தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்தான்

கார்த்தி சற்று தூரம் சென்றதும் தோழிகளின் கேலி ஆரம்பித்தது

பிரியா: "பாத்தியாடி இந்த காயத்ரிய. வீட்டோட மாப்பிள்ளை ரெடிஆ இருக்கார். ஒரு வார்த்தை சொன்னாளா. ஆளும் சும்மா handsome தான்"

காயத்ரி: "சும்மா இரு ப்ரியா. அதெல்லாம் இல்ல"

பிரியா: "ஆமா ஆமா ஒண்ணும் இல்லாம தான் உன்ன மத்த பசங்க rouse பண்ண கூடாதுன்னு டிக்கெட்ஸ் மாத்தி குடுத்தாரா"

சத்யா: "அது மட்டுமா. நான் காயத்ரியோட friend அப்படின்னு சொல்லிட்டு கரெக்ட் தானே காயத்ரினு கிண்டலா கேட்டாரே. அதுலயே தெரியல. தனி ரீல் ஓடுதுன்னு"

காயத்ரி: "கொஞ்சம் சும்மா இருங்கடி" என்று பொய்யாய் சலித்தாள் காயத்ரி

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாள் கௌரி என்றால் இந்த தோழிகள் பட்டாளம் மாட்டை கொம்பு சீவிய கதை ஆனது

அங்கிருந்து நாலு சீட் முன் தள்ளி அமர்ந்து இருந்த கார்த்தியை அந்த அரை இருட்டில் பார்த்து கொண்டே நேரத்தை கழித்தாள் காயத்ரி

யாரோ தன்னை காண்பது போன்ற உணர்வு தோன்ற கார்த்தி திரும்பி பார்க்க காயத்ரியின் முகம் அந்த இருட்டிலும் ஜொலித்தது மகிழ்ச்சியில்

அவளின் முக மாற்றத்தை கண்ட கார்த்தி அவள் தன்னை எதற்கோ அழைக்கிறாள் என எண்ணி எழுந்து வந்தான். காயத்ரிக்கு உடல் நடுங்க தொடங்கியது

"என்ன காயத்ரி எதாச்சும் வேணுமா" என கார்த்தி கேட்க "ஒண்ணும் இல்ல" என்றாள்

"வேணும்னா நீங்க உங்க காயத்ரி கூடயே உக்காந்துகோங்க. நாங்க யாராச்சும் ஒருத்தர் முன்னாடி போறோம்" என தோழி ப்ரியா கேலியாய் கூற

"இல்ல என்னமோ கூப்ட மாதிரி இருந்தது. அதான் வந்தேன். சாரி disturb பண்ணினதுக்கு. நீங்க படம் பாருங்க" என கார்த்தி செல்ல, அவன் சற்று தூரம் சென்றதும் "எங்க படம் பாக்கறது. உங்க படம் தான் பெரிய படமா இருக்கே. ஏண்டி காயத்ரி இதுக்கும் ஒண்ணும் இல்லனு சொல்ல போறியா" என ப்ரியா கேலி செய்தாள்

காயத்ரி எதுவும் பேசவில்லை. ஆனால் மிதந்து கொண்டு இருந்தாள். "தான் நினைத்ததும் அக்கறையாய் அருகில் வந்தானே, இது எப்படி சாத்தியம்" என அதுவே மனதில் நின்றது

போதாதற்கு இடைவேளையில் ஐஸ்கிரீம் snacks supply வேறு தோழிகளின் வாய்க்கு அவலானது. காயத்ரியின் காதல் கொண்ட மனதிற்கும் தூபம் போட்டது

எல்லாவற்றிக்கும் மேலாய் "படம் முடிஞ்சு வெயிட் பண்ணு. நான் நேரா ஆத்துக்கு தான் போறேன்னு" கார்த்தி சொல்லி சென்றதும் காயத்ரி தன்னிலை மறந்தாள்

"ஆஹா இங்க பாடற கச்சேரி போதாதுன்னு இனி தனி ஆவர்த்தனம் வேறயா" என தன் பங்குக்கு ப்ரியா ஏற்றி விட "சும்மா இருங்கடி" என தோழிகளை பொய்யாய் அடக்கியவள் தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள், இதனால் நடக்க போகும் விபரீதத்தை உணராமல்...

கண்ணாளனே...
உன் ஒவ்வொரு அசைவும்
ஓராயிரம் சேதி சொல்கிறதே
உன் ஒவ்வொரு சொல்லும்
ஒன்றே பணியாய் கொல்கிறதே
பார்க்கும் இடமெல்லாம்
பாவிமனம் உனை தேடுகிறதே
பனியாய் நீ உருக
பாவை நான் கரைகிறேனே

தொடரும்...

31 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

arumai arumai arumai endru koori indha erumai vadaiyai vaangi selgiradhu.

Porkodi (பொற்கொடி) said...

எங்க படம் பாக்கறது. உங்க படம் தான் பெரிய படமா இருக்கே.

adhane! ennadhu vibareedhama??? idho paarunga, vibareedham ellam en kadhaila thaan varalam, inga azhaga amsama karthiyum gayathriyum romance matum thaan panalam, gnabagam irukkatum!

LK said...

////"ஆஹா இங்க பாடற கச்சேரி போதாதுன்னு இனி தனி ஆவர்த்தனம் வேறயா" என தன் பங்குக்கு ப்ரியா ஏற்றி விட "சும்மா இருங்கடி" என தோழிகளை பொய்யாய் அடக்கியவள் தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள், இதனால் நடக்க போகும் விபரீதத்தை உணராமல்//

பாதி காதல் விபரீதங்களுக்கு தோழிகள் / தோழர்கள்தான் காரணம்

My days(Gops) said...

:o innaikum vadai pochey :(

//indha erumai vadaiyai vaangi selgiradhu//

idhai naaan vanmaiaah vanmuraiah kandikiren ..........

Complan Surya said...

heyy heyy am the 5th

am the 5th

am the 5th

eppudi,

firsto lasto vantomula

My days(Gops) said...

am the 5th

am the 5th

eppudi,

firsto lasto vantomula/


complan boy

technically neenga 4th :)

My days(Gops) said...

//இனி என்ன என கேள்விக்குறியாய் நின்றாள்??????????????//

காயத்திரி எங்க போகிறாள் ????

//வீட்டிற்குள் வந்ததும்//
வூட்டுக்கி வண்டாளா... பேஷ் பேஷ்

My days(Gops) said...

//நண்பன் நல்ல கணவனா இருக்க கூடாதா என்ன//

இருக்கலாம் ஆனா அவன நண்பனா இருக்க விட்டா தானே...

//அவன் மனசுல அப்படி இல்லேன்னா"//

அவன் மனுசனே இல்லை :)

//ஒரு ஒரு பிறந்த நாளுக்கும் பாத்து பாத்து செய்யறான்//

அப்பதான் 100 ரூபாய்க்கு ஒரு பரிசு பொருள் கொடுத்தா , ஐநூறு ரூபாய்க்கு திரும்ப வரும்.. நம்ம தக்குடு மாதிரி டகால்டி'யா இருப்பாரு போல :)

Complan Surya said...

thokam varhtu nalliku vanthu cments podren..

varata

v.v.s sanga thalivar
complan surya
LK K.P.S
SEEMANGANI SEYALAR
APRUM NAM SUTRAMUM PADIVARGALUM

My days(Gops) said...

//அதே ஷிவானி ரெண்டு மாசம் முந்தி அவ மாமாவ கட்டிக்க போறான்னு //

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. இது எப்போதிலிருந்து?.. அய்யோ

//உன்னைய தேடிண்டு உங்க அக்கா ஆத்துக்கு வந்தானே. ஞாபகமில்லையா"//

கை செலவுக்கு இல்லாம இருந்து இருக்க்கு :)

//சும்மா இருந்த சங்கை இந்த கௌரி ஊதி கெடுத்துடாளே//

இல்லாட்டி மட்டும் நம்ம பாப்பா'க்கு ஒன்னும் புரியாத மாதிரி தான்

My days(Gops) said...

//நேக்கு மேல படிக்கணும்//

ஆத்துல மொட்டை மாடி இல்லை'யா?

//கல்யாணம் பண்ணிண்டு படி//
படி ஏறுனா தான் மாடி அதாவது மேல சோ, மேல படி மேல ஏறுனா தான் படி :) ..

My days(Gops) said...

//நீயும் சேந்து என்ன கொல்லாத" என்றாள் அழுகையுடன் //

கொல்லுறத்துக்கு தான் கொடி இருக்காங்களே.... என்ன சொல்லுறீங்க கார்த்திக்? காயத்திரிய தட்டிடுவோமா? யம்மா கொடி எங்க இருந்தாலும் இங்க வரவும் ... உங்க எபிசோட் க்கு இன்னொரு பலி கிடைச்சாச்சி ....

கொடி சும்மா தமாசு.. சிரிக்கனும் ஒகே?

My days(Gops) said...

13 இது எனக்கு

My days(Gops) said...

//பாத்தியாடி இந்த காயத்ரிய. வீட்டோட மாப்பிள்ளை ரெடிஆ இருக்கார்//

இதுக்கு தான் ஆரம்பத்திலேயே நண்பனே கணவனா வந்தா நல்லா இருக்கனும்'னு சொன்னதா? தெளிவா தான் இருக்காங்க :)

My days(Gops) said...

//எங்க படம் பாக்கறது. உங்க படம் தான் பெரிய படமா இருக்கே//

rotfl :)

//தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள்//

எத்தனை தபா'ங்க காயத்திரி திணருவாங்க? பாவம் heart attack வந்துட போகுது :)

My days(Gops) said...

வழக்கம் போல கவிதை சூப்பர்..... எனது கருத்து எதுவும் யாரையாச்சும் காயப்படுத்தினா, தயவு செய்து நீங்களே உங்க செலவுல மருந்து வாங்கி போட்டுக்கோங்க.... கம்பேனி அதுக்கு பொறுப்பு ஏற்க்காது.. சொல்லிப்புட்டேன்....

இப்போ டைம் அவுட்.. வரட்டா...

என்றும் மொக்கையுடன்
போப்ஸ்

padma said...

nice reading thangamani

தமிழ் உதயம் said...

இம் மாதிரியான நீண்ட கதைகளுக்கு, தேவியின் கண்மணி போன்ற மாத நாவல்களுக்காக நீங்கள் முயற்சிக்கலாம்.

தக்குடுபாண்டி said...

//அதே ஷிவானி ரெண்டு மாசம் முந்தி அவ மாமாவ கட்டிக்க போறான்னு தெரிஞ்சப்ப// அது எப்படி எனக்கு தெரியாம???...:) வடை போச்சா??

தக்குடுபாண்டி said...

//டிக்கெட் பெற்று கொண்டு தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்க// //சித்ரா, இவ ப்ரியா...இது சத்யா.."// கோப்ஸ், நல்லா கவனி! ஆக மொத்தம் மூனு டிக்கெட்டு, காயத்ரியை கணக்குல சேர்க்க முடியாது, ஏன்னா அவங்க கார்த்தியோட டிக்கெட்டு, சரிதானே அடப்பாவி அக்கா??...:)

தக்குடுபாண்டி said...

//பாத்தியாடி இந்த காயத்ரிய. வீட்டோட மாப்பிள்ளை ரெடிஆ இருக்கார். ஒரு வார்த்தை சொன்னாளா. ஆளும் சும்மா handsome தான்// நல்லா உசுப்பேத்தராங்கப்பா, நம்ப அனன்யா அக்கா மாதிரி

தக்குடுபாண்டி said...

//பவானி// ஆஹா! பெயர் நல்லா இருக்கு, நான் பெயரை மட்டும்தான்பா சொன்னேன்!

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) - அச்சச்சோ... இன்னைக்கும் வட போச்சா...
- //technically neenga 4th :)// எப்படி பிரதர் இப்படி எல்லாம்? அப்போ psyschologically யாரு 4th ?
- காயத்ரி எங்கயும் போகல சார், கவலை வேண்டாம், ஆத்துக்கு தான் போறா. நண்பனா இருக்க யாரு விடல?
- //அப்பதான் 100 ரூபாய்க்கு ஒரு பரிசு பொருள் கொடுத்தா , ஐநூறு ரூபாய்க்கு திரும்ப வரும்.. நம்ம தக்குடு மாதிரி டகால்டி'யா இருப்பாரு போல :)//
சிவனேனு (ஷிவானி இல்ல) இருக்கற ஆள வம்புக்கா? ஒருவேள பக்கத்துக்கு இலை பாயசம் மாதிரியா
- ஷிவானி மேல என்ன இப்படி ஒரு அக்கறை? நோ டென்ஷன் நோ டென்ஷன்
- //கை செலவுக்கு இல்லாம இருந்து இருக்க்கு :)// ஏன் எதுக்கு இந்த கொலைவெறி?
- //இல்லாட்டி மட்டும் நம்ம பாப்பா'க்கு ஒன்னும் புரியாத மாதிரி தான்// அவ பேசாம தானே இருந்தா மொதல்ல
- //ஆத்துல மொட்டை மாடி இல்லை'யா?// ஆத்துல தண்ணி தான் இருக்கும்
- //கொல்லுறத்துக்கு தான் கொடி இருக்காங்களே// ஐயோ ப்ளீஸ் என்னோட கதை பாத்திரத்த உட்டுடுங்க ப்ளீஸ்
- //13 இது எனக்கு// என்னாதிது ?
- //தெளிவா தான் இருக்காங்க :)// இல்லேன்னா உங்கள மாதிரி பட்டவங்கள எப்படி சமாளிக்கறது
- //எத்தனை தபா'ங்க காயத்திரி திணருவாங்க? பாவம் heart attack வந்துட போகுது :)// காயத்ரிய பத்திரமா பாத்துகறேன். டோன்ட் வொர்ரி
- //வழக்கம் போல கவிதை சூப்பர்..... // நன்றி நன்றி நன்றி
- //கம்பேனி அதுக்கு பொறுப்பு ஏற்க்காது.. சொல்லிப்புட்டேன்....// அடப்பாவி நானே கணக்கெழுதி பொழச்சுட்டு இருக்கேன்பா

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - வடை இன்னிக்கி உங்களுக்கா? சூப்பரு... விபரீதம் உங்க கதைல தான் வரணுமா... அடப்பாவி இதுக்குமா copyright ?

@ LK - //பாதி காதல் விபரீதங்களுக்கு தோழிகள் / தோழர்கள்தான் காரணம்// சொந்த அனுபவமா LK

@ Complan Surya - ஒகே ஒகே தூங்கி எந்திருச்சு பிரெஷ்ஆ கமெண்ட் போடுங்க

@ பிரியா - ரெம்ப நன்றிங்க ப்ரியா

@ தமிழ் உதயம் - //இம் மாதிரியான நீண்ட கதைகளுக்கு, தேவியின் கண்மணி போன்ற மாத நாவல்களுக்காக நீங்கள் முயற்சிக்கலாம்//
நீங்க சொன்னா மாதிரி ஆசையாதாங்க இருக்கு. ஆனா அதுக்கு வழி வகை தான் தெரியல. மிக்க நன்றி

@ தக்குடு -
//எப்படி எனக்கு தெரியாம???...:) வடை போச்சா??// ஆஹா, உங்களுக்கு பத்திரிக்க வரலையா. அங்கயும் வட போச்சா
//கோப்ஸ், நல்லா கவனி! ஆக மொத்தம் மூனு டிக்கெட்டு//
அடப்பாவிங்களா... பண்றதெல்லாம் நீங்க... சொல்றது மட்டும் நான் தான் அடபாவின்னு
//நல்லா உசுப்பேத்தராங்கப்பா, நம்ப அனன்யா அக்கா மாதிரி//
அனன்யா ஆளையே காணோம். ஆனாலும் விடுவேனான்னு வம்பு பண்றீங்க
////பவானி// ஆஹா! பெயர் நல்லா இருக்கு, நான் பெயரை மட்டும்தான்பா சொன்னேன்!//
நான் ஒண்ணுமே கேக்கலையே...

Complan Surya said...

மனசாட்சி: "அதே ஷிவானி ரெண்டு மாசம் முந்தி அவ மாமாவ கட்டிக்க போறான்னு தெரிஞ்சப்ப ரெண்டு நாள் தான் சோகம். அப்புறம் பழைய படி சிரிக்கலையா கார்த்தி"----அட பாவிங்கள எங்க போனாலும் எண்ட மாமன்கார தொல்ல தங்கமுடிலப்பா..

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாள் கௌரி என்றால் இந்த தோழிகள் பட்டாளம் மாட்டை கொம்பு சீவிய கதை ஆனது ---எதுக்குத்தான் கைபுள்ளைகளை ப்ரிண்ட வச்சுக்கணும் என்று சொல்றது...

அப்பரும்
வழக்கம் போல கலக்கலா போய்கிட்டு இருக்கு..
இந்த பொண்ணு சிவனிக்கு கண்ணாலம் வேற கட்டி வைத்துவிட்டேங்க ..பாருங்க பலபேரு வடை இல்லைன்னு பீல்பன்றங்க...அவர்களை பொறுமை காக்குமாறு எங்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது...

அப்பரும் உங்களை பாராட்டி எங்கள் சங்கத்தின்
மகளிர் அணி கைபுள்ளையாக பதவி வழங்கி உள்ளோம்..
மகளிர் அணி கைபுள்ளையாக பதவி வழங்கி உள்ளோம்..
மகளிர் அணி கைபுள்ளையாக பதவி வழங்கி உள்ளோம்..

மற்றும் குழு உறுபினர்களாக
மய் கோப்சம்,,
போர்க்கொடி அவர்களும்
அப்பரும் தடுக்குபாண்டி அவர்களும் தொடர்வார்கள் ..(மாத சம்பளம் ரூபாய் 5000 வழங்கப்படும்)

இப்படிக்கு
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
செயலாளர்
காம்ப்ளான் சூர்யா

My days(Gops) said...

//மகளிர் அணி கைபுள்ளையாக பதவி வழங்கி உள்ளோம்..//

வாழ்த்துக்கள் அப்பாவி

//மற்றும் குழு உறுபினர்களாக
மய் கோப்சம்,,
போர்க்கொடி அவர்களும்
அப்பரும் தடுக்குபாண்டி அவர்களும் தொடர்வார்கள் ..(மாத சம்பளம் ரூபாய் 5000 வழங்கப்படும்)//

சம்பளம் உண்டா :).. அட்ரா அட்ரா

சின்ன அம்மிணி said...

நல்லா கொண்டுபோறீங்க :)

அப்பாவி தங்கமணி said...

@ Complan Surya - உங்க மாமாவா சொல்லவே இல்ல. கைப்புள்ள பதிவுக்கு மிக்க நன்றி. எனக்கும் சம்பளம் இல்லையா?

@ My days(Gops) - நன்றிங்க. என்னப்பா அநியாயம். உறுப்பினர்களுக்கு சம்பளம் கைபுள்ளைக்கு இல்லையா

@ சின்ன அம்மணி - ரெம்ப நன்றிங்க சின்ன அம்மணி

ஸ்ரீராம். said...

ஒரு பெண்ணின் மன நிலை அப்படியே சித்தரிக்கப் பட்டுள்ளது...

Priya said...

//பழைய சினிமால எல்லாம் வர்ற மாதிரி அவளுக்கும் அவ மனசாட்சிக்கும் (White Dress Costume ல) ஒரு பெரிய வாக்குவாதமே நடந்தது //ஹா ஹா ஹா:)

ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஒரு வழியா நீங்க எழுத சொன்ன "பொண்ணு பாக்க போறோம்" பதிவை எழுதிட்டேன். டைம் கிடக்கும் போது வாங்க , வந்து படிச்சு பாத்துட்டு சொல்லுங்க!!!!

அப்பாவி தங்கமணி said...

@ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

@ Priya - நன்றிங்க ப்ரியா. வாவ்...இப்போவே பாக்கறேன் உங்க கதைய...

Post a Comment