Sunday, April 18, 2010

பிரியமானவளே...பகுதி 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4


எல்லாவற்றிக்கும் மேலாய் "படம் முடிஞ்சு வெயிட் பண்ணு. நான் நேரா வீட்டுக்கு தான் போறேன்னு" கார்த்தி சொல்லி சென்றதும்

"ஆஹா இங்க பாடற கச்சேரி போதாதுன்னு இனி தனி ஆவர்த்தனம் வேறயா" என தன் பங்குக்கு ப்ரியா ஏற்றி விட "சும்மா இருங்கடி" என தோழிகளை பொய்யாய் அடக்கிய காயத்ரி தன் மனதை அடக்க முடியாமல் திணறினாள், இதனால் நடக்க போகும் விபரீதத்தை உணராமல்...

சினிமா முடிந்து கூட்டம் கிளம்ப தொடங்கியது. "கெளம்பலாமா காயத்ரி" என்றபடி கார்த்தி வர "கெளம்புங்க மேடம் கெளம்புங்க" என்று தோழிகள் கலாய்க்க இரு பக்க நண்பர் நண்பிகளிடம் விடை பெற்று சென்றனர்

இதற்கு முன் பலமுறை கார்த்தியுடன் பைக்கில் காயத்ரி சென்றவள் தான் என்ற போதும் இன்று ஏனோ மிகவும் வித்தியாசமாய் உணர்ந்தாள். உடல் குறுக்கி ஓரமாய் அமர்ந்தாள்

"காயத்ரி போலாமா, நல்லா பிடிச்சு உக்காரு. கீழ விழறாப்ல ஓரத்துல உக்காந்துண்ட்ருக்க...." என்றான் கேலியாய்

எப்போதும் பேசும் கேலிக்கும் கூட புது அர்த்தம் தோன்றியது காயத்ரிக்கு, காதல் கொண்ட மனதின் பலவீனமாய்

காயத்ரி பதில் எதுவும் பேசாமல் இருக்க "ஏய் காயத்ரி.... என்ன எதுவும் பதிலே காணோம்.... என்னாச்சு நோக்கு? போலாமா?"

"ம்....போலாம்...." என்றாள்

"என்னமோ ஆய்டுச்சு...." என்றான் சிரிப்புடன்

"பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னமோ ஆய்டுச்சுன்னு வேற சொல்றயா.... பாவி" என மனதிற்குள் புலம்பினாள்

கார்த்தி அவள் இதோ சஞ்சலத்தில் இருக்கிறாள் என உணர்ந்து சற்று மனநிலைஐ மாற்றும் எண்ணத்துடன் "காயத்ரி... ஐஸ்கிரீம் பார்லர் போயிட்டு அப்புறம் ஆத்துக்கு போலாமா..." எனவும் "ம்..." என்றாள்

ஐஸ்கிரீம் பார்லரில் அந்த பின் மதிய நேரத்தில் கூட்டம் அத்தனை இருக்கவில்லை. சற்று ஓரத்தில் தனியாய் இருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்தனர்

பணியாள் வந்து "என்ன சாப்பிடறீங்க சார்?" எனவும்

"ம்...உன்னோட favourite கசாட்டா தானே காயத்ரி " என்றவன் அவள் பதிலை கூட எதிர்பாராமல் "ரெண்டு கசாட்டா கொண்டு வாங்க" என கார்த்தியே ஆர்டர் செய்தான்

தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை அவனே தேர்ந்தெடுத்து சொன்னது காயத்ரிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது

பணியாள் சென்றதும் "வேற எதாச்சும் மில்க் சேக் சொல்லட்டுமா காயத்ரி..." என கேட்க

"வேண்டாம்..." என்றாள்

"என்ன மேடம்...? இன்னிக்கி எல்லாம் ஒன் வோர்ட் answer தானா?" என கண்கள் சிரிக்க புருவத்தை யுயர்த்தி கேட்க அந்த அழகில் அப்படியே மயங்கினாள் காயத்ரி

பதில் எதுவும் பேசமால் தலை தாழ்த்தி இருந்தவளின் வாடிய முகம் வேதனை தர அவளை சிரிக்க வைக்க முயன்றான் கார்த்தி

"என்னமோ காத்து கருப்புன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி எதாச்சும் ஆய்டுச்சா? ஒரு நல்ல மந்திரவாதியா பாக்கலாமா காயத்ரி" என கேலி போல் கேட்க

"மந்திரம் மொத்தமா உன்னோட கண்ல வெச்சுகிட்டு எந்த மந்திரவாதிய பாக்கறது" என தனக்கே கேட்காத குரலில் முனுமுனுத்தாள் காயத்ரி

"என்ன? என்ன சொன்ன? சத்தமா சொல்லு" எனவும்

"ஒண்ணும் இல்ல..." என மழுப்பினாள்

"ஏய்...என்னமோ சொன்ன நீ? சரி அத விடு...உன் friend ப்ரியா வீடு எங்க?" என வேண்டுமென்றே வம்பிழுத்தான்

நிஜமாகவே கோபம் தலை எடுக்க அவனை முறைத்தாள். வேண்டுமென்ற தன்னை தூண்டுகிறானோ என மனம் நொந்தாள்

"சரி சரி டென்ஷன் ஆகாத காயு....சும்மா... சும்மா தான் கேட்டேன்" என்றான். எப்போதும் இந்த மாதிரி பேச்சுக்களில் சகஜ நிலைக்கி வந்து விடும் காயத்ரி இன்று மேலும் இறுகுவதை கண்டதும் கார்த்தி ஏதேனும் பெரிய பிரச்சனையோ என குழம்பினான்

அதற்குள் பணியாள் ஐஸ்கிரீம் கொண்டு வர உண்ண தொடங்கினர்

எதுவும் பேசாமல் சற்று நேரம் அமைதியாய் கழிந்தது

காயத்ரியின் அந்த அமைதி கார்த்திக்கு மிகவும் புதியதாயும் வருத்தமாகவும் இருந்தது

அது அவனுள் பல காரணங்களையும் கற்பனை செய்தது

"காயத்ரி...ஏன் இப்படி டல்லா இருக்க? எதாச்சும் பிரச்சனயா?"

"ஒண்ணும் இல்ல..."என்றாள் மிகவும் பலவீனமான குரலில்

உடல் நிலை சரி இல்லையோ என தோன்ற "உடம்புக்கு எதுனா சரி இல்லையா?" என நெற்றியில் கை வைத்து பார்க்க அவன் தொடுகையில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உறுதியையும் இழந்தாள்

உணர்ச்சி மயமாய் தாங்க இயலாமல் உடல் அதிர கீழே விழப்போனாள்

"ஏய் என்னாச்சு..."என பதறி அவள் தோளை இறுக பற்றி நிறுத்தினான் "காயத்ரி சம்திங் இஸ் ராங். டாக்டர்கிட்ட போலாம் நட..."என கார்த்தி பதற

"ஒண்ணும் இல்ல...வேண்டாம்" என தடுத்தாள். "இத்தனை அக்கறை இருக்கறவனுக்கு மனசுல இருக்கற தவிப்பு புரியலையா.... இல்ல வேணும்னே நானே சொல்லனும்னு வம்பிழுக்கரானோ...." என மனதிற்குள் புழுங்கினாள்
ஏதோ தோன்ற "காயத்ரி நான் ஒண்ணு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே..."என இழுக்க

என்ன என்பது போல் விழியுயர்த்தி பார்க்க "Are you in Love?" என குறும்பாய் கேட்டான்

ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது போல் சிலையானாள்

அவனுடைய அந்த குறும்பு பார்வை ஆயிரம் அர்த்தம் சொல்ல பேசா மடந்தை ஆனாள்

"அப்போ மௌனம் சம்மதம்...இல்லையா காயத்ரி..." என மேலும் கேலியாய் கேட்க பலவித உணர்ச்சி குவியலில் திண்டாடினாள்

அழவும் தோன்றியது சிரிக்கவும் தோன்றியது. இதைத்தான் காதல் பைத்தியம் என்பார்களா என தனக்குள் மௌனமாய் சிரித்தாள்

"ஏய்....காயத்ரி...என்ன மேடம்? இப்படி ஒரு அமைதி...கமான்...ஸ்பிக் அவுட் " என்றான்

"என்ன பேசறது..." என்றாள் நடுங்கிய குரலில் தலை தாழ்த்தி

"அடே அப்பா.... உனக்கு வெக்க பட கூட தெரியுமா? தமிழ் சினிமா ஹீரோயின் தோத்தா போ உன்னிட்ட..." என்ற கேலிக்கு உரிமையுடன் பொய் கோபம் காட்டினாள் கண்களில்

அதையும் ரசித்தவன் "அது சரி... யாரு அந்த unlucky guy னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என சிரிப்புடன் கேட்க "பாவி என்னை தவிக்க வெச்சு பாக்கறதுல என்ன சுகமோ... என் வாயாலேயே சொல்லி கேக்கனும்னு ஆசையோ..." என மனதிற்குள் நெகிழ்ந்தாள்

"சொல்லு காயு.... ப்ளீஸ்..." என அவன் கண்களை சுருக்கி கெஞ்ச, அந்த பார்வையில் சொக்கியவள் "I Love You Kaarthi" என்றாள் நேசம் நிறைந்த குரலில்

அதன் பின் வெட்கம் ஆட்கொள்ள தலை குனிந்தாள்

கார்த்தி எதுவும் பேசாதது உறுத்த இமை உயர்த்தி பார்த்தவள்....அப்படியே....

((இனி என்னை ஆகும்னு உங்களால கணிக்க முடியுதா... யாரு சரியா சொல்றீங்கன்னு பாக்கலாம்.... கரெக்ட்ஆ சொல்றவங்களுக்கு ஒரு பரிசு இருக்கு... அது என்னங்கறது suspense  (ஆஹா... பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னவெல்லாம் தகிடுத்ததம் பண்ண வேண்டி இருக்கு) அதோட Followers ல பதிவு செஞ்சுகரவங்களுக்கு சிறப்பு பரிசு இருக்கு (ஒத்த ஆள் சேரல என்னத்துக்கு அந்த Follow பெட்டி தண்டத்துக்கு வெச்சுண்ட்ருக்கனு ரங்கமணி நக்கல் எல்லை தாண்டி போயிட்டு இருக்கு))மனதில் கள்ளம் புகுந்ததும்
மற்றதெல்லாம் துச்சமடி
உன்கண்ணில் காதல் கண்டதும்
உலகம் மொத்தம் உறைந்ததடி!!!
சிரிக்கும் உன் கண்களில்
சிறைவைத்தாயே என்னை
விடுதலை என்றுமே விரும்பாத
வித்தியாசமான கைதி நான்!!!
எண்ணம் பொருள் காட்சி
எல்லாம் நீயே ஆனாய்
என்னதவம் செய்தனை
எனது வரமாய் நீகிடைக்க!!!

தொடரும்...

49 பேரு சொல்லி இருக்காக:

LK said...

//ollowers ல பதிவு செஞ்சுகரவங்களுக்கு சிறப்பு பரிசு இருக்கு (ஒத்த ஆள் சேரல என்னத்துக்கு அந்த Follow பெட்டி தண்டத்துக்கு வெச்சுண்ட்ருக்கனு ரங்கமணி நக்கல் எல்லை தாண்டி போயிட்டு இருக்கு))///
சேர்ந்தாச்சு .உடனே ஆப்பிள் ipad வாங்கி அனுப்பவும்

LK said...

ரொம்ப ரொம்ப சின்னதா இருக்கு இந்த பகுதி

தக்குடுபாண்டி said...

//ஐஸ்கிரீம் பார்லரில் அந்த பின் மதிய நேரத்தில் கூட்டம் அத்தனை இருக்கவில்லை// அதுக்குதானே அங்க கூட்டிண்டு வந்தது.....:)

தக்குடுபாண்டி said...

/"வேற எதாச்சும் மில்க் சேக் சொல்லட்டுமா காயத்// ஏற்கனவே நம்ப காயு.. 'ஷாக்'ல இருக்கா, இதுல ஷேக் வேறையா??...:)

தக்குடுபாண்டி said...

இனி என்னை ஆகும்னு உங்களால கணிக்க முடியுதா.....

கார்த்தி : காயு, எனக்கும் பவானிக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்துமா.......:)LOL correctaa??

தமிழ் உதயம் said...

(ஒத்த ஆள் சேரல என்னத்துக்கு அந்த Follow பெட்டி தண்டத்துக்கு வெச்சுண்ட்ருக்கனு ரங்கமணி நக்கல் எல்லை தாண்டி போயிட்டு இருக்கு))நா FOLLOWERS ல இருக்கேனே.

padma said...

தங்கமணி நா உங்க follower தான் .நீங்க பொட்டி போடறதுக்கு முன்னாடிலேந்து.ok யா .முடிவு யோசிச்சு வந்து சொல்றேன் .

நிஜாம் என் பெயர் said...

முன்னரே பணியாள் வைத்த ஐஸ் க்ரீமை சாப்பிட்டு கொண்டு இருந்தான் கார்த்தி..

அதில் பல்லி விழுந்தது தெரியாமல் !!!

அப்படியே....

அவள் சொன்ன அதிர்ச்சியில் புகைச்சல் வந்து, அவ பேரு என்ன !!!
ஆஆ ஆஆஅ காயத்ரி முஞ்சி மேல ஐஸ் க்ரீமை துப்பிட்டான் ..

அவ கோவம் வந்து, விட்டா ஒரு அர ..
அவன் கிழே விழுந்து செத்து போய்ட்டான் ,, போலீஸ் இவள புடுச்சுட்டு போய் அவார்ட் கொடுத்து தூக்குல போட்டுடுச்சு..

யாரும் இத படுச்சுட்டு
ஏ இந்த கொலவேறி அப்படின்னு பின்னுட்டம் எல்லாம் போடா கூடாது என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்

அமைதிச்சாரல் said...

வினையை எதுக்கு வெல கொடுத்து வாங்கணும்ன்னு கார்த்தி எஸ்கேப் ஆகியிருப்பான்.. சரியா!..

நீங்க ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே நா உங்க ஃபாலோயர்தார் தெரியாதா :-)))

Complan Surya said...

am the first.

am the first.

am the first.

Complan Surya said...

அதன் பின் வெட்கம் ஆட்கொள்ள தலை குனிந்தாள்

என்னது வெட்கமா அப்டின என்னனு கேக்கிற காலம் அச்சே
அப்பரும் நன் சொல்றேன் next

அதாவது காயு என்ன சொல்ற நீ
விளைடாத எப்போ பாரு commedy பண்ணிக்கிட்டு
என்னக்கு அப்படி எல்லாம் தோணவே எல்லா
உங்கிட்ட சண்ட போட பிடிக்கும்
அதவும் எல்லாம

எவ்ளோ நல்ல பிரிண்ட்ச பழகிட்டு////

சரி மீதிய நீங்களே சொலிடுங்க..தூக்கம் வேற வரது

நன்றி வாழ்க வளமுடன்
வருதபட்த வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

Porkodi (பொற்கொடி) said...

ஏங்க அப்பாவி எப்போவுமே காம்ப்ளானுக்கு தூக்கம் வர்ற டைம்லயே பதிவு போடறீங்க? ;)

அமைதிச்சாரல் மாதிரி நீங்க ப்லாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எல்லாம் நான் ஃபாலோ பண்ணல, ஆனா நான் வர ஆரம்பிச்ச டைம்ல இருந்து ஃபாலோ பண்றேனே! :)

கஸாட்டாவா!!!!! இது என்னோட ஃபேவரிட்டோ ஃபேவரிட்! மிஸ்ஸிங்க் மை அருமை கஸாட்டா.. :'(

கார்த்தி என்ன சொல்லப் போறான்.. "இதை சொல்ல இவ்வளவு நாளா? நீ பொறந்ததுல இருந்தே (!!) நான் உன்னை தான் லவ் பண்ணிட்டு இருக்கேன்!"

என்னை நீளமா எழுத சொல்லிட்டு, நீங்க இத்துனூண்டு எழுதறீங்களே சிஸ்டர்..

அனாமிகா துவாரகன் said...

கசட்டா? ரமணி சந்திரன் விசிறின்னா இப்படி தான் எழுதுவீங்களா? புதுசா Follow பண்ணுபவர்களுக்கு பரிசு என்பதால், உங்கள் வலைத்தளத்தை தொடராமல் விட்டுவிட்டு திருப்ப இணைந்துள்ளேன். வேணும்னா ஸ்கிறீன் ஷொட் ஆதாரமாக இருக்கு. பரிச அனுப்பிடுங்க.

Complan Surya said...
This comment has been removed by the author.
Complan Surya said...

எதோ பாருங்கோ..appavi.
நேக்கு தூக்கம் வந்துட்டு துங்கிடேன்.


வடை போயடேய்னு சில பேரு பீல்பன்றது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கேறேன்.


அப்பரும்
கண்டிப்பா உங்க ப்ளாக் படிச்தள thookam வரலை.
ப்ளாக் படிச்சு கனவில எதாவது காயு,பிரியா இல்ல பவனியாவது
வரமட்டேன்கலனுதன் seikramey தூங்கிட்டேன்.நல்ல தூக்கம்தான் வந்தது.கனவு வரலை :(

ம் இதோ பாருங்கோ கதை அவnga சொல்ற எவnga சொல்றனு கேட்டு மாத்தபிடாது.நீங்க எப்படி சொலனும் நினைகேறேன்களோ அப்படி எழுதுங்கோ..
வரட்டா..
sangathuku poganum rumba neram aitu..(thavarugal erunthal manikkavum)


நன்றி
வாழ்கவளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

My days(Gops) said...

//இரு பக்க நண்பர் நண்பிகளிடம் விடை பெற்று சென்றனர்//

எந்த கேள்விக்கான விடை சிஸ்டர்?

My days(Gops) said...

//எப்போதும் பேசும் கேலிக்கும் கூட புது அர்த்தம் தோன்றியது காயத்ரிக்கு, காதல் கொண்ட மனதின் பலவீனமாய் //

மனசுல கோட்டை கட்டு தங்கச்சி காயத்திரி தப்பில்லை, பட் மலைக்கோட்டை கட்டிடத....

My days(Gops) said...

/என்ன சாப்பிடறீங்க சார்?"//

ரெண்டு கிலாஸ் ஜஸ் தண்ணி கொண்டு வாங்க ஜஸ் இல்லாம...

//தமிழ் சினிமா ஹீரோயின் தோத்தா போ உன்னிட்ட//
எஸ்கூஸ்மீ எந்த தமிழ் சினிமா' இந்த கார்த்தி heroine வெக்க படுறதை பார்த்து இருக்கிறாரு.... பிச்சி புடுவேன் பிச்சி

My days(Gops) said...

//கார்த்தி எதுவும் பேசாதது உறுத்த இமை உயர்த்தி பார்த்தவள்....அப்படியே....//

இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம்... வந்தோமா ஜஸ்கீரிமை சாப்பிட்டோமா'னு போகாம... என்ன சார் இது...

My days(Gops) said...

///இனி என்னை ஆகும்னு உங்களால கணிக்க முடியுதா... யாரு சரியா சொல்றீங்கன்னு பாக்கலாம்.... கரெக்ட்ஆ சொல்றவங்களுக்கு ஒரு பரிசு இருக்கு... //

காயு மா இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கவே இல்லை... இப்படி சொல்லிட்டியே மா.. நீ உங்க அக்காவுக்கு மட்டும் தங்கச்சி இல்லை எனக்கும் தான்.. இதை சொல்லும் போது எனக்கே சிரிப்பை அடக்க முடியல பட் இருந்தாலும் நீ ரொம்ப அழுவ கூடாது'னு தான் இந்த உண்மைய சொல்லுறேன்.. உனக்கு நல்ல மாப்பிள்ளையா ( தக்குடு மாதிரி நல்லா சமைக்க தெரிந்த ) பார்த்து அவனை உனக்கு கல்யாணம் கட்டி வைக்கிறது தான் என் முதல் வேலை அப்படி'னு கார்த்தி சொல்லவே மாட்டான்..

காயத்திரி தங்கம், நானே உன்கிட்ட ஜ லவ் யூ சொல்லாம்'னு தான் இருந்தேன், பட் நீ இங்கிலிஷ் ல கொஞ்சம் நிறையவே வீக்'னு தெரியும் அதனால தான் இத்தனை நாளா இந்த பூகம்பத்தை நான் எனக்குள்ளேயே குழி தோண்டாம புதைச்சி வச்சி இருந்தேன்.. ஆனா இனிமேல் அதுக்கு வேலை இருக்காது'னு எனக்கு இப்ப இங்க தெரியுது...ஜ லவ் யூ யூ யூ டூ டூ டூ.. அப்படி'னு சேம் side் கோல் போட்டுட்டு கூலா சிரிப்பான் நம்ம ஆட்ட நாயகன் கார்த்திக்...

ஸ்ரீராம். said...

இந்த இடத்துல கதையை நிறுத்தி வசசகம் போட்டுடறாங்க... டைரக்டர் காவியக் குரலில், "அவன் என்ன சொல்வான்..அதில் அவள் எதிர்காலமே இருக்கிறதா..? நமக்குத் தெரியாது..காலம் பதில் சொல்லும். "
மங்கி மங்கிக் காட்சி மறைய...."A Film by AT"...(அப்பாவி தங்கமணிங்க..)

Anonymous said...

very nice

ஹுஸைனம்மா said...

நாந்தான் ஃபர்ஸ்ட் ஃபாலோயர் போல!! அதுக்கே நீங்க பரிசு கொடுக்கணும்!!

அப்றம், நீங்க குடுக்கிற பில்ட் அப்பப் பாத்தா, கார்த்தி, நான் பிரியாவைத்தான் விரும்புறேன்னு சொல்லி கவுத்தப் போறானோன்னு சந்தேகமா இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

எல்லாருக்கும் ஒரு கேள்வி:-
"நானும் உங்க Follower தான்னு" எல்லாரும் தான் சொல்றீங்க....நானும் F5 key தேஞ்சி போற அளவுக்கு page refresh பண்ணி பண்ணி நொந்து போயிட்டேன். ஒண்ணும் காணோம். எடது கை பக்கமா "லேபிள்கள்" க்கு மேல "விருதுக்கு" கீழ Followers பெட்டி அநாதையா இருக்கு. நான் என்ன பொய்யா சொல்றேன்? ஒரு வேள page setup ஏதச்சும் மாத்தணுமோ. யாராச்சும் tech geeks இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...நான் ஒரு ஒண்ணும் தெரியாத அப்பாவின்னு தான் உங்களுக்கே தெரியுமே.... ("ஒன்னரை வருஷம் கம்ப்யூட்டர் டிப்ளோமா என்ன படிச்சயோனு" ரங்கமணி சைடு கமெண்ட் வேற. நீங்க இன்ஜினியரிங்ல படிச்சா Mechatronics or FluidMechanics ல எல்லாம் நான் கேள்வி கேட்டேனா... இல்லையே? ஏன்னா நான் நல்லவ.... அப்பாவி... ப்ளீஸ் ப்ளீஸ் எல்லாரும் ஓடிடாதீங்க ப்ளீஸ்...இதோட நிறுத்திடறேன்....)

LK said...

try removing and then adding the gadget again. might be problem with gadget

அப்பாவி தங்கமணி said...

@ LK - தெய்வமே... Apple IPOD ஸ்டாக் இல்ல, அதுக்கு பதிலா ஒரு கிலோ காஷ்மீர் ஆப்பிள் வேணும்னா பார்சல் பண்ணவா?

@ LK - நெக்ஸ்ட் டைம் நீளமா போஸ்ட் போடறேன். ஆணி ஓவரா இருக்கு... மாமியார் (Auditors ) கொடுமை முடிய இன்னும் ரெண்டு வாரம் இருக்கு

@ தக்குடுபாண்டி -
"அதுக்குதானே அங்க கூட்டிண்டு வந்தது.....:)"
உங்கள போலவே எல்லாரையும் நெனச்சுடேளா பிரதர்

"ஏற்கனவே நம்ப காயு.. 'ஷாக்'ல இருக்கா, இதுல ஷேக் வேறையா??...:)"
அது என்ன காயு மேல அதன கரிசனம்... ஒண்ணும் சரி இல்ல

"கார்த்தி : காயு, எனக்கும் பவானிக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்துமா.......:)LOL correctaa??"
ஏன் இந்த கொல வெறி? அது சரி, யாரு அந்த பவானி? கதைல அப்படி ஒரு கேரக்டர் வெச்சதா எனக்கு ஞாபகம் இல்ல

@ தமிழ் உதயம் - நன்றிங்க.... நானும் அதை தேடிட்டே இருக்கேன்

@ பத்மா - ஆஹா... புல்லரிக்க வெச்சுடீங்க பத்மா... முடிவ சொல்றேன்னு போனீங்க...ஆளையே காணோம்... சொல்லுங்க சொல்லுங்க

@ நிஜாம் என் பெயர்: அப்பாவி என் பெயர் சொல்வது பேசாம உங்க பேரை "ராம் கோபால் வர்மா 2 " மாத்திகோங்க.... இப்படி பயபடுத்தினா எப்படி? பொற்கொடி சிஸ்டர் தான் பெரிய கொலைகாரின்னு (கதைல..... கதைல மட்டும்) நெனச்சா... நீங்க அவங்களுக்கு அண்ணனா இருப்பீங்க போல இருக்கே

@ அமைதிசாரல் - எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க?

"நீங்க ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே நா உங்க ஃபாலோயர்தார் தெரியாதா :-)))"
ஆத்தா.... நான் surrender .......................................

@ Complan Surya - அடப்பாவி... ஊருக்கு கடேசீல வந்துட்டு "am the first" போடறவங்கள ப்ளாக் சட்டம் section 420 இன் கீழ் வன்மையாக கண்டிக்கிறேன்

படுபாவி.... நான் serious ஆ ஒரு லவ் ஸ்டோரி சொல்லிட்டு இருக்கேன்... இப்படி காமெடி டைம் பண்றீங்களே... ஞாயமா இது நியாமா?

@ பொற்கொடி -
//ஏங்க அப்பாவி எப்போவுமே காம்ப்ளானுக்கு தூக்கம் வர்ற டைம்லயே பதிவு போடறீங்க? ;)//
என்னங்க பண்றது பொற்கொடி, காம்ப்ளான் ஒரு நாளைக்கி 24 hours மட்டும் தான் தூங்குவாராம்

//ஆனா நான் வர ஆரம்பிச்ச டைம்ல இருந்து ஃபாலோ பண்றேனே! :)//
ஆஹா... எல்லாரும் பிளான் பண்ணி தான் பண்றாங்க.....

பொற்கொடிக்கு ஒரு கஸாட்டா பார்சல்.....பார்சல்.... பார்சல்.... (வந்ததும் சொல்லுங்க...)

//நீ பொறந்ததுல இருந்தே (!!) நான் உன்னை தான் லவ் பண்ணிட்டு இருக்கேன்!"//
நீங்க நெறைய தமிழ் சினிமா பாக்றீங்க (இல்லேன்னா அப்பாவி தங்கமணி ப்ளாக்அ தொடர்ந்து படிக்கறீங்க....கரெக்ட்ஆ?)

//என்னை நீளமா எழுத சொல்லிட்டு, நீங்க இத்துனூண்டு எழுதறீங்களே சிஸ்டர்..//
நெக்ஸ்ட் டைம் நீளமா போஸ்ட் போடறேன். ஆணி ஓவரா இருக்கு... மாமியார் (Auditors ) கொடுமை முடிய இன்னும் ரெண்டு வாரம் இருக்கு

LK said...

//@ LK - தெய்வமே... Apple IPOD ஸ்டாக் இல்ல, அதுக்கு பதிலா ஒரு கிலோ காஷ்மீர் ஆப்பிள் வேணும்னா பார்சல் பண்ணவா? //

இப்போதைக்கு ஓகே பட் Apple IPOD ஞாபகம் வச்சிருக்கேன் அப்பறோம் பார்த்துக்கலாம்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நீங்க சொன்னப்புறம் தான் எனக்கும் அது ஞாபகம் வருது. நான் நெனைக்கிறேன் ரமணிச்சந்திரன் influence நமக்கு தெரியாமையே எழுத்துல இருக்குன்னு.... சும்மாவா ரமணிச்சந்திரன்ஆ? நீங்க இப்படி சொன்னது எனக்கு ரெம்ப ரெம்ப ஹாப்பியா இருக்கு. நன்றி அனாமிகா.

//வேணும்னா ஸ்கிறீன் ஷொட் ஆதாரமாக இருக்கு. பரிச அனுப்பிடுங்க.//
நேத்தே அனுப்பிட்டேன்... நடுவுல ஐரோப்பால சிக்கிருச்சு....மிக்க நன்றி

//Complan Surya சொன்னது… இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்..//
ஏன்....ஏன் இப்படி எல்லாம்? நீங்களே உங்களுக்கு சொந்த செலவுல....... வெச்சுகறீங்க பிரதர்? ஒரு வேள தூக்க கலக்கத்துல என்னமோ எழுதிடீன்களோ....? பாவம்

//கண்டிப்பா உங்க ப்ளாக் படிச்தள thookam வரலை.//
அப்பாடா... நான் இனி நிம்மதியா தூங்குவேன்....
கனவுல காயு, ப்ரியா, பவானியா.... ஏன்பா....ஏன்....?
எழுத்து சுதந்திரம் வழங்கிய தம்பி தங்ககம்பி காம்ப்ளான் சூர்யா வாழ்க... வாழ்க
மிக்க நன்றி

@ My days(Gops) -
//எந்த கேள்விக்கான விடை சிஸ்டர்?//
கோப்ஸ் ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேக்கராருங்கர கேள்விக்கான விடை தான் பிரதர்

//மனசுல கோட்டை கட்டு தங்கச்சி காயத்திரி தப்பில்லை, பட் மலைக்கோட்டை கட்டிடத....//
ஏன்? அதை நீங்க ஏற்கனவே கட்டிட்டீங்களா? இல்ல ப்ரியாமணியே கட்டிட்டாங்களோ?

//ரெண்டு கிலாஸ் ஜஸ் தண்ணி கொண்டு வாங்க ஜஸ் இல்லாம... //
உங்கள எல்லாம் கனடால கொண்டு வந்து போடணும். நாலு நாள் driveway ல snow தள்ளினா... அப்புறம் ஐஸ் வாட்டர் இல்ல... ஐஸ்னு எழுத கூட மாட்டீங்க

//எஸ்கூஸ்மீ எந்த தமிழ் சினிமா' இந்த கார்த்தி heroine வெக்க படுறதை பார்த்து இருக்கிறாரு.... பிச்சி புடுவேன் பிச்சி//
நோ டென்ஷன் பிரதர்.... நோ டென்ஷன். எல்லாம் ஒரு பேச்சுக்கு சொல்றது தான்... இப்போ ஒரு உதாரணத்துக்கு உங்க ப்ளாக்ல நீங்க ஒரு போஸ்ட் போடறீங்கன்னு வெய்ங்க... ஒரு பேச்சுக்கு தான்... இதை உண்மைன்னு நம்பி எழுதகூடாது... அப்புறம் அதிசியமா தம்பி போஸ்ட் போட்டு இருக்காரேன்னு நாங்களும் வந்து கஷ்டப்பட்டு படிச்சுட்டு "சூப்பர்" அப்படின்னு கமெண்ட் போடறோம்னு வெய்ங்க.... அது எல்லாம் நிஜம்னு நீங்க நம்பிடுவீன்களா என்ன? "சூப்பர்" எல்லாம் ஒரு பேச்சுக்கு தானே... அதே மாதிரி இந்த heroine வெக்கபடர மேட்டர் எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு தான். இந்த வஞ்சப்புகழ்ச்சிஅணி எல்லாம் ஸ்கூல்ல படிச்சுருபீங்களே (??????) அதான் இது. இப்போ உங்க டவுட் கிளியர் ஆய்டுச்சா பிரதர். நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் அத்தன தான்பா....

//இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம்... வந்தோமா ஜஸ்கீரிமை சாப்பிட்டோமா'னு போகாம... என்ன சார் இது...//
நீங்க மேல கேட்ட கேள்விக்கு நீங்களே பின்னாடி பதில் எழுதி இருப்பீங்கன்னு நான் நெனைக்கல... கேள்வியும் நீயே பதிலும் நீயே?....

// நீ உங்க அக்காவுக்கு மட்டும் தங்கச்சி இல்லை எனக்கும் தான்..//
இந்த டயலாக் நெறைய வாட்டி சொல்லி இருக்கீங்களோ?... அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கேன்னு சொன்னேன்

//இங்கிலிஷ் ல கொஞ்சம் நிறையவே வீக்'னு தெரியும்//
இது உங்களுக்கு யாரோ சொன்ன டயலாக்? கரெக்ட்ஆ? கண்டுபிடிச்சுட்டேனே?

@ ஸ்ரீராம் - ஆஹா ஆஹா... என்னை இயக்குனர் சிகரம் பாரதிராஜா ரேஞ்சுக்கு ஒரு நிமிஷம் பீல் பண்ண வெச்சதுக்கு நன்றி... நன்றி... நன்றி... (என்னை வெச்சு காமெடி கீமடி பண்ணலையே....)

@ பெயரில்லா - ரெம்ப நன்றிங்க.... பேரை சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்

@ ஹுஸைனம்மா - அது என்னமோ அந்த follow வேலை செய்ய மாட்டேன்குதுங்க.... யாரு செய்யற சதின்னு தெரியல... அநேகமா இந்த தக்குடு இல்லேன்னா கோப்ஸ்ஆ தான் இருக்கணும்.... கண்டுபிடிச்சு சொல்றேன்
நன்றி தொடர்ந்து படிப்பதற்கு

//கார்த்தி, நான் பிரியாவைத்தான் விரும்புறேன்னு சொல்லி கவுத்தப் போறானோன்னு சந்தேகமா இருக்கு//
அப்படிங்கறீங்களா? ம்..... தெரியலையே... இருங்க கார்த்தி கிட்ட கேட்டு சொல்றேன்....

அப்பாவி தங்கமணி said...

// LK சொன்னது… try removing and then adding the gadget again. might be problem with gadget//

LK - Followers gadget is not available right now, testing stage or something like that. So, I added it as a page (like "about me" page). May be thats not working. I will try again later to see if the follower pages becomes available. Thanks for helping out


ஆப்பிள் பார்சல் on the way.. IPOD on backorder.... (ha ha ha)

அப்பாவி தங்கமணி said...

என்னை நானே followers add பண்ணிகிட்டேன்.... பாவம் அனாதையா இருக்கே...இப்ப மட்டும் எப்படி work ஆகுது... ? ஏன்பா? எல்லாரும் சேந்து என்னை காமெடி பீஸ் ஆக்கரீங்களா?

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. ப்லாக்கர்ல பக்கு( bug i mean, ஹிஹி)! நான் உங்களை ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன், ப்ரைவேட்டா. (நல்ல வேள இத ஒரு பையன் ப்லாக்குல என்னனு சொல்றது) நேத்து இங்க ஃபாலோயர் கேட்ஜட் வழியா இன்னொரு தரம் பப்ளிக்கா ஃபாலோ பண்ணியாச்சு. என் ப்ரொஃபைல் படம் கூட இருந்துது. இப்போ நீங்க அதை நீக்கிட்டு திருப்பி போட்டுருக்கீங்க (ஸோ இங்க நான் தெரியல), இப்போ என்னோட ப்ரொஃபைல்ல போய் பாத்தா, உங்க சைட் இருக்கணும்ல? இல்ல! ஆனா, டேஷ்போர்ட் படி இன்னமும் உங்களை பப்ளிக்கா தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். ப்ரொஃபைல்ல மட்டும் தெரிய மாட்டேங்குது.. விநோதமானவனே.. என் விநோதமானவனே.

LK said...

@பொற்ஸ்
follower listla என் பேரு மட்டும்தான் காமிக்குது . என்ன நடக்குது இங்க

Porkodi (பொற்கொடி) said...

LK, enaku yar perume therila! appavi veedu has become a booth bungalow!:)

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - I honestly gave up on that followers thingy.... அது gadget இல்ல, ஜஸ்ட் அ பேஜ், அது தான் problem னு நெனைக்கிறேன். இட்ஸ் ஒகே, நீங்க எல்லாருமே என்னை follow பண்ணுவீங்கன்னு எனக்கு தான் தெரியுமே (7th sense சொல்லுச்சு). கொடி, பூத் பங்களா எல்லாம் உங்க கதைல தானேப்பா வரணும்.... ஆஹா....

@ பொற்கொடி - என்ன கொடி நாட்டாமை ஆளையே காணோம்? வழக்கு கூடி போச்சா? தீர்ப்பு சொல்லி தீரல போல?

@ LK - உங்க பேரும் இப்போ காமிக்கல, என்னோட பேரு மட்டும் தான் காட்டுது.... எனக்கே பொற்கொடி சொல்றாப்ல பூத் பங்களா மேட்டர் ஓனு சந்தேகம் வருது... சரி விடுங்க.... அந்த பூதம் என்ன தான் பண்ணுதுன்னு பாப்போம்

Venkatesh said...

அருமையான கதை, நல்ல எழுத்து நடை. காதலித்த அனுபவம் இருக்கு போல. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க வெங்கடேஷ். Ofcourse வாழ்கையின் ஓவொரு கனத்தையும் காதலிச்சுட்டு தான் இருக்கேன்

உங்க ப்ளாக்ல கவிதைகள் படிச்சேன். ரெம்ப நல்ல இருக்கு. தொடர்ந்து நெறைய எழுதுங்க (அங்க கமெண்ட் போடற option நீங்க சேக்காததால இங்கயே சொல்றேன்)

Priya said...

Very Nice

Priya said...

Very Nice

sriram said...

லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டா வந்து
ஒரு ஆஜர் போட்டுக்கறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

ஐ தொரசானி கத, கவுஜயெல்லாம் சொல்லுது, இங்கிலிபீசு கூட பேசுமா??

ஜூப்பரா இருக்குதுமே...
அடுத்த தபா பிரியிற மாதிரி கவுஜ சொல்லுமே..

என்னிய காணோம்னா மட்டும் இவ்ளோ கூவுறவங்களுக்கு இந்த அநன்யா பொண்ணு காணாம போனது தெரிய மாட்டேங்குதே??

அப்பாலிக்கா திரும்ப வர்றேன்

பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//கஸாட்டாவா!!!!! இது என்னோட ஃபேவரிட்டோ ஃபேவரிட்! மிஸ்ஸிங்க் மை அருமை கஸாட்டா.. :'(//

சேம் பின்ச் கேடி.. போன வாரம்தான் அருண் ஐஸ்க்ரீம் கஸாட்டா பத்தி சிலாகித்துக் கொண்டிருந்தேன் நண்பனிடம்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது… Very Nice//

ரெம்ப நன்றிங்க ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் நாட்டாமை -
வாங்க வாங்க. ஆஜர் noted down

//ஐ தொரசானி கத, கவுஜயெல்லாம் சொல்லுது, இங்கிலிபீசு கூட பேசுமா??
ஜூப்பரா இருக்குதுமே...
அடுத்த தபா பிரியிற மாதிரி கவுஜ சொல்லுமே..//

ஐயயோ நல்லாதானே இருந்தீங்க.... Lake ல ரெம்ப நேரம் தத்தளிச்சதுல.... எதாச்சும்.... (ஒரு வேலை உங்க கொ ப செ பாதிப்பா?)

//என்னிய காணோம்னா மட்டும் இவ்ளோ கூவுறவங்களுக்கு இந்த அநன்யா பொண்ணு காணாம போனது தெரிய மாட்டேங்குதே??//

அனன்யா பிஸி , உங்கள எப்படி எல்லாம் சமாளிக்கலாம்னு அவங்க ஊர்ல ஒரு செமினார். அதுக்கு போய் இருக்காங்க

//சேம் பின்ச் கேடி.. போன வாரம்தான் அருண் ஐஸ்க்ரீம் கஸாட்டா பத்தி சிலாகித்துக் கொண்டிருந்தேன் நண்பனிடம்//

நாட்டாமைக்கும் ஒரு கஸாட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்................

Guna said...

//Porkodi (பொற்கொடி)கூறியது..
இங்க ஃபாலோயர் கேட்ஜட் வழியா இன்னொரு தரம் பப்ளிக்கா ஃபாலோ பண்ணியாச்சு. என் ப்ரொஃபைல் படம் கூட இருந்துது. இப்போ நீங்க அதை நீக்கிட்டு திருப்பி போட்டுருக்கீங்க (ஸோ இங்க நான் தெரியல), இப்போ என்னோட ப்ரொஃபைல்ல போய் பாத்தா, உங்க சைட் இருக்கணும்ல? இல்ல! ஆனா, டேஷ்போர்ட் படி இன்னமும் உங்களை பப்ளிக்கா தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். ப்ரொஃபைல்ல மட்டும் தெரிய மாட்டேங்குது.. ///

same here...naanum unga blog-a follow pannikittu thaan irukken, but unga followers list-la vara mattenguthu :(

Kathai nalla irukku

Venkatesh said...

நன்றி தங்கமணி அவர்களே. என்னுடைய ப்ளாக்ல கமெண்ட் போடற option சேர்த்துட்டேன். நன்றி

சின்ன அம்மிணி said...

நான் போடலாம் நினைச்சதை எல்லாம் மத்தவங்க போட்டுட்டாங்க

அப்பாவி தங்கமணி said...

//Guna சொன்னது… same here...naanum unga blog-a follow pannikittu thaan irukken, but unga followers list-la vara mattenguthu :(Kathai nalla irukku//

ரெம்ப நன்றிங்க குணா. வருகைக்கு மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

//Venkatesh சொன்னது… நன்றி தங்கமணி அவர்களே. என்னுடைய ப்ளாக்ல கமெண்ட் போடற option சேர்த்துட்டேன். நன்றி//

நன்றிங்க வெங்கடேஷ்

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
நான் போடலாம் நினைச்சதை எல்லாம் மத்தவங்க போட்டுட்டாங்க//

ஆஹா... இது நல்லா இருக்கே....ரெம்ப நன்றிங்க சின்ன அம்மணி

Post a Comment