Saturday, April 24, 2010

பிரியமானவளே...பகுதி 6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5


"சொல்லு காயு.... ப்ளீஸ்..." என அவன் கண்களை சுருக்கி கெஞ்ச, அந்த பார்வையில் சொக்கியவள் "I Love You Kaarthi" என்றாள் நேசம் நிறைந்த குரலில்

அதன் பின் வெட்கம் ஆட்கொள்ள தலை குனிந்தாள்

கார்த்தி எதுவும் பேசாதது உறுத்த இமை உயர்த்தி பார்த்தவள்....அப்படியே உறைந்தாள்

கார்த்தியின் நிலை அதை விட மோசமாக இருந்தது. இவள் தன்னிடம் விளையாடுகிராளோ என ஒரு கணம் நினைத்தவன் அவள் கண்களில் தெரிந்த வலியில் இது விளையாட்டல்ல என்பதை உணர்ந்தான்

கார்த்தியின் உணர்ச்சியற்ற குழம்பிய பார்வை மனதில் கிலியூட்ட செய்வதறியாது திகைத்தாள்

இருவரும் வார்த்தை தேடி தவிக்க மௌனம் மௌனமாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது அந்த கணத்தை

இருவரின் மனமும் நிலைகொள்ளாமல் தவித்தது. யார் மௌனத்தை கலைப்பது என்ற போரில் கார்த்தி தன் வாள் எடுத்தான்

"காயத்ரி....நான்...வந்து...." என தயங்க அதுவே தன் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்துவிட அவன் வார்த்தையில் நிராகரிப்பை கேட்கும் பலம் இன்றி கண்களில் பெருகிய நீரை அப்படியே விழுங்கியவள் "வேண்டாம்.... ஒண்ணும் சொல்ல வேண்டாம்... ப்ளீஸ்... போலாம்...." என எழுந்து நின்றாள்

இந்த நிலையில் பேசும் வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளே நலம் பயக்கும் என தோன்ற எதுவும் சொல்லாமல் அவளை பின் தொடர்ந்தான் கார்த்தி

வெளியே வந்ததும் காயத்ரி அங்கு சென்று கொண்டிருந்த ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்

"காயத்ரி.... என்ன பண்ற?..." என அவளை தடுக்க முயல

"ப்ளீஸ்......" என்றாள் கண்ணில் பெருகிய நீருடன்

அவளது கண்ணீர் தன்னை செயலற்றவனாக்க திகைத்து நின்றான் கார்த்தி

ஆட்டோவில் ஏறிய காயத்ரி "இந்த நிமிடம் இப்படியே பூமி பிளந்து தன்னை உள்வாங்கி கொள்ளாதா" என மனம் வெதும்பினாள்

"எங்கம்மா போகணும்...?" என்ற ஆட்டோ ஓட்டுனரின் குரல் சிந்தனையை கலைக்க முகவரி சொன்னாள்

வீட்டிற்குள் சென்றவள் தன் தாய் "எத்தன நேரம் காயத்ரி சினிமா போயிட்டு வர..." என கேட்டது காதில் கூட கேளாதவள் போல தன் அறைக்குள் சென்று சாற்றி கொண்டாள்

படுக்கையில் விழுந்தவள் சத்தமின்றி அழ வெகு பிரயத்தனப்பட்டாள். கண்களில் நீர் வற்றும் வரை அழுதவள் அப்படியே சோர்ந்து உறங்கி போனாள்

"காயத்ரி....காயத்ரி....எத்தன நாழியா உன்ன கூப்டுண்டே இருக்கறது" என்ற அன்னையின் குரல் உலுக்க கண் திறந்தவள் மதியம் நடந்ததெல்லாம் கண்முன் காட்சியாய் தோன்ற "எல்லாம் வெறும் கனவு தான் என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா" என தேம்பினாள்

அதற்குள் மறுபடியும் அன்னை அழைக்க "வரேன்மா...." என்றபடி எழுந்து சென்றவள் "எதுக்கும்மா கூப்ட..." என கேட்க

அடுப்படியில் ஏதோ வேலையாய் இருந்த கோகிலா மகளை திரும்பி கூட பாராமல் "எதுக்கா....? நல்லா கேக்கறடி கேள்வி? மால நேரம்...இன்னொரு ஆத்துக்கு போ போற பொண்ணு இப்படி தூங்கிண்டுருந்தா பாக்கறவா கை கொட்டி சிரிப்பா...போனா போன எடம் வந்தா வந்த எடம்னு என்ன பழக்கம் இது.... காத்தால சினிமா போறேன்னு போனவ மூணு மணிக்கி வந்த...வந்தவ கேட்ட கேள்விக்கி கூட பதில் சொல்லாம போய் கதவ அடைசுண்டுட்ட....கேப்பார் இல்லன்னு நெனப்பா....எல்லாம் அந்த பிராமணணன் குடுக்கற எடம்..." என்று கணவனையும் சாடினாள்

ஒரு சொல் சொல்லும் முன் வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் மகள் எதுவும் பேசாமல் நிற்கவும் என்னவென திரும்பி பார்த்தவள் மகள் கண்களில் நீர் வழிய நின்றதை கண்டதும் பதறி எழுந்தாள்

"ஏய்...காயத்ரி...என்னடி ஆச்சு நோக்கு...அம்மா நான் உன்ன எதுவும் சொல்ல கூடாதா. இப்படி வயசுக்கேத்த பொறுப்பில்லாம இருக்கியேன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டேன். தப்பு கேட்டுக்கறேன். அம்மா மேல கோபமா" என பரிவுடன் தோளில் சாய்த்து கொள்ள

தான் அழும் காரணம் புரியாத தாயின் பதட்டம் நெகிழ செய்ய மௌனமாய் அழுதாள்

"காயத்ரி...நீ இப்படி சட்டுன அழரவ இல்லையேடி....என்னாச்சு நோக்கு..." என பெற்ற மனம் பதறியது

"ஒண்ணும் இல்லமா.... கொஞ்சம் தல இடியா இருக்கு... சாப்பிட எதாச்சும் இருக்கா? பசிக்கறது..." என்றாள் அன்னையின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு

அவள் நினைத்தது போலவே, மகள் பசி என்றதும் மற்றதெல்லாம் மறந்து "த்தோ... ரெண்டே நிமிஷம்டா செல்லம்... தோச வார்த்து தரேன்" என கோகிலா பரபரவென செய்தாள்

சாப்பிடும் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி "காயத்ரி... நெஜமா சொல்லு... தலை இடினு தான் அழுதாயா... வேற ஏதும் இல்லியே... " என பாவமாய் கேட்டாள் கோகிலா

"எதுவும் இல்லமா... உன்கிட்ட சொல்ல மாட்டேனா...?" என சமாளித்தாள்

"அப்புறம் சொல்ல மறந்துட்டனே... கார்த்தி வந்திருந்தான் கொஞ்ச நேரம் முன்ன உன்ன தேடிண்டு.... எழுப்பறேன்னேன்... வேண்டா மாமி அப்புறம் வரேன்னுட்டான்"

அவன் பெயரை கேட்டதும் மீண்டும் மனம் துவள "ம்.." என்றாள் ஒற்றை வார்த்தையாய்

அதன் பின் அவனை தனியே சந்திக்கும் வாய்ப்பை வலிந்து தவிர்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் வதை படுவது போல் உணர்ந்தாள்

அவனை காணாத வரை சற்று தைரியமாய் இருக்கும் மனம் கண்டதும் மொத்தமாய் துவண்டு போனது 

நாளானால் சரி ஆகும் என நினைத்தாள், ஆனால் அதற்கு மாறாய் இன்னும் வேதனையும் காதலும் போட்டி போட்டு கொண்டு வளர்ந்தன
 
எல்லாவற்றிக்கும் மேலாய் இவள் படும் வேதனைக்கான காரணம் புரியாமல் அவளை பெற்றவர்களும் "என்ன ஆச்சு என்ன ஆச்சு" என மருகியது இன்னும் வேதனை அளித்தது
 
வேறு வழி எதுவும் தோணாமல் ஒரு முடிவுக்கு வந்தாள்
__________________

கார்த்தியின் நிலை தான் கொடுமையாய் இருந்தது

உற்ற தோழி இது போல் பாரா முகமாய் இருப்பது வேதனை அளித்தது. மனதில் இல்லாத ஒன்றை எப்படி ஒப்பு கொள்ள முடியும் என தவித்தான்

அவளுக்கு இப்படி ஒரு நெனைப்பு வர தன் மீது என்ன தவறு என மருகினான்

எல்லாவற்றிக்கும் மேலாய் அந்த இடி போன்ற செய்தி அவனை மிகவும் பாதித்தது
________________________

காயத்ரியின் வீட்டில் ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டு இருந்தது

"ஏண்டி... நோக்கு என்ன பைத்தியமா? என்னத்துக்கு இப்போ கோயம்புத்தூர் காலேஜ்ல MSC படிக்கணும்னு வீம்பு பிடிக்கற. ஏண்ணா... என் பொண்ணு என் பொண்ணு தூக்கி வெச்சுப்பீளே... கேளுங்கோ நீங்களே.... உங்க செல்ல மகள..." என கோகிலா பெரும

"நானும் கொஞ்ச நாளா உன்ன பாத்துட்டு தான் இருக்கேன்.... என்னமோ போல இருக்க... கேட்டா ஒண்ணுமில்லன்னு மழுப்பற... இப்போ திடீர்னு இப்படி ஒரு முடிவு. பிரச்சனை எதுனாலும் சொல்லுமா... அவசரத்துல எதுக்கற முடிவு எப்பவும் சரியா இருக்காது"  என அவள் அப்பா பரிவுடன் பேச

"எனக்கு என்னப்பா பிரச்சன? எதுவும் இல்ல....நான் இது எப்பவோ யோசிச்ச விசயம் தான். நான் போகணும்பா" என்றாள் பிடிவாதமாய்

அவளது காரணமற்ற பிடிவாதம் கோபமூட்ட "என்ன காயத்ரி பிடிவாதம் இது?" என்றார் சற்றே கோபமாய்

எப்போதும் அம்மாடி, செல்லம், கண்ணம்மா என்றே அழைக்கும் தந்தை இன்று யாரோ போல் பெயர் சொல்லி அழைத்ததும் கோப முகம் காட்டியதும் காயத்ரிக்கு வேதனை அளித்த போதும் மௌனம் காத்தாள்

"ஏண்டி... அப்பா கேக்கறது காதுல விழறதா இல்லையா?"

காயத்ரி: "இங்க பாருங்க அம்மா அப்பா... என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல"

அப்பா: "நீ பேசறது சரி இல்ல கண்ணம்மா"

காயத்ரி: "ப்ளீஸ் பா... நீங்களாச்சும் என்ன புரிஞ்சுகோங்களேன்..."

அப்பா: "காரணத்த சொல்லு... புரிஞ்சுகறேன்... எப்பவும் காரணம் இல்லாம எதையும் என் புள்ளைங்க மேல நான் தினிச்சதில்ல.. அதே போல காரணம் இல்லாம ஒத்துண்டதும் இல்ல.... சொல்லும்மா இப்ப ஏன் hostel ல தங்கி படிக்கனும்கற"

காயத்ரி: "இங்கேயே இருந்தா எதுவும் கத்துக்க முடியாதுப்பா.... நாலு எடம் போய் நாலு விசயம் கத்துக்கணும்னு நீங்க தானே சொல்லுவேள்"

அம்மா: "மெட்ராஸ் மாப்பிள்ளை வந்தப்ப மட்டும் இதே ஊர்ல தான் இருப்பேன்னு பிடிவாதம் பண்ணினது என்ன? இப்ப பேசறது என்ன? நீ என்ன சொன்னாலும் கேட்டுபோங்கற திமிர்ல ஆடற நீ"

காயத்ரி: "நீ என்ன வேணுன்மா பேசுமா... நான் போகத்தான் போறேன்"

அப்பா: "காயத்ரி... மறுபடியும் சொல்றேன்... காரணம் இல்லாம நான் ஒப்புக்க போறதில்ல.... என்ன மீறி போகணும்னு நெனச்சா நீ போகலாம்" என்றார் தீர்மானமாக

காயத்ரி: "அப்பா...நீங்க சொல்றத சொல்லிட்டேள்.... நானும் சொல்லிடறேன்... நான் உயிரோட இருக்கணும்னா அனுப்பி வெயிங்கோ.... இங்கேயே இருந்து சாகட்டும்னு நெனச்சா அப்படியே ஆகட்டும்" என தன் கடைசி அஸ்திரத்தை ப்ரயோகித்தாள்

"ஐயோ...." என்று அலறினாள் அன்னை

"உன்னோட மெரட்டளுக்கு பயந்து ஒத்துக்கல காயத்ரி... எப்போ நீ இப்படி மெரட்டி பணியவெக்கனுங்கர அளவுக்கு துணிஞ்சயோ... இனி உன்னோட நான் பேச பிரியப்படல..."

"அப்பா...."

"இனிமே அப்படி கூப்டாதே ... என் பொண்ணு இப்படி பேச மாட்டா... நீ எப்ப கிளம்பனுமோ போய்க்கோ.... கோகிலா அவள தடுக்காத... பணம் எத்தனை வேணும்னு கேளு... ஏற்பாடு பண்றேன்... பெத்த கடமைய நான் சரியா செய்யறவன்..."

"எண்னனா இது... அவ தான் இதோ புரியாம பேசறானா எடுத்து சொல்றது விட்டுட்டு... அவளுக்கு சரியா நீங்களும் கோபபட்றேள்..."

"கோகிலா... சொன்னது காதுல விழலயா... இதை பத்தி இனி யாரும் பேச கூடாது... மீறி பேசினா நீயும் என்னோட பேசாதே..." என்று விட்டு இனி பேச எதுவும் இல்லை என்பது போல் அந்த இடத்தை விட்டு சென்றார்

தந்தையின் பேச்சு உயிர் வரை வலித்த போதும் இங்கு அவர்கள் கண்முன் இருந்து கொஞ்சம் கொஞ்சம் அழ வைப்பதை விட செல்வதே மேல் என முடிவு செய்தாள் காயத்ரி

________________

இந்த செய்தி கார்த்தியின் வீட்டிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது

"ஏண்டா நீயாச்சும் காயத்ரிகிட்ட என்ன ஏதுன்னு கேக்கபடாதா" என காஞ்சனா தன் மகனிடம் கேட்க

"என்ன" என்றான் சாதரணமாய் இருக்க முயன்றபடி

"என்னடா இப்படி கேக்கற... அவ என்னமோ கோயம்புத்தூர் காலேஜ்ல hostel ல போய் தங்கி படிக்க போறேன்னு ஒத்த கால்ல நிக்கராளாம்... வேற வழி இல்லாம அவ அப்பாவும் ஒத்துண்டாராம்"

"என்னமா சொல்ற...?" என பாதி சாப்பாட்டில் அதிர்ச்சியுடன் எழுந்தான்

"ஆமாண்டா... மாமி வந்து சொல்லிட்டு ரெம்ப வருத்தபட்டா... மாமா காயத்ரியோட முகம் குடுத்து பேசரதில்லயாம்... யாரு கிட்டயும் சொல்லாம காலேஜ்க்கு application எல்லாம் அனுப்பி admission கார்டு வந்தப்புறம் சொல்லி இருக்கா... என்ன அழுத்தம் பாரேன்" என அங்கலாய்தாள்

ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவனுக்கு இது பெரும் இடியாய் இருந்தது. அவளிடம் பேசியே தீர வேண்டுமென தீர்மானித்தான்

____________

"வா கார்த்தி" என்றாள் கோகிலா சுரத்தின்றி

"வரேன் மாமி... காயத்ரி எங்க?" என கேட்டு கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்தாள்

வந்தவள் எதுவும் பேசாமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்

"என்ன காயத்ரி இதெல்லாம்... இப்ப எதுக்கு வெளியூர் போகனுங்கற" என்றவனை எதுவும் தெரியாத மாதிரி கேக்கறையா என்பது போல் பார்த்தாள்

"விடு கார்த்தி... அவ கிட்டயெல்லாம் பேசறதுல எந்த பயனும் இல்ல.... மார்ல வெச்சு தாங்கின அந்த மனுசனையே தூக்கி வீசி பேசிட்டா... இத்தன வருஷ வாழ்க்கைல அவர் கண்கலங்கி நான் பாத்ததில்ல... இவ அந்த கொறைய தீத்துட்டா..." என அழத்துவங்க

"அம்மா..... இப்போ என்னத்துக்கு அழுந்துன்டருக்க... வேற வேலை எதுனா இருந்தா பாரு" கார்த்திக்கும் சேர்ந்தே இந்த பதில் என்பது போல் அவனையும் ஒரு கண்ணால் பார்த்தே கூறினாள்

"பாக்கறேண்டியம்மா... பாக்கறேன்...." என்றபடி கோகிலா "பால் வாங்கிட்டு வந்துடறேன் கார்த்தி" என்றபடி வெளியே சென்றாள்

கோகிலாவின் தலை மறைந்ததும் "காயு ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு"

"கார்த்தி... தயவு செஞ்சு இனிமே என்னை காயுனு கூப்டாதே... ப்ளீஸ்"

"என்மேல கோவம்னா ஆத்திரம் தீர திட்டிக்கோ... இப்படி ஏன் எல்லார் மனசையும் கஷ்டபடுத்தற"

"அப்போ... எல்லார் மனசும் கஷ்டபட்றத பத்தி தான் உனக்கு அக்கற... என் மனச பத்தி யாருக்கும் கவலை இல்ல இல்லையா"

"ஐயோ.... அப்படி இல்லமா... நீயா எதையோ கற்பனை பண்ணிண்டு..." அவன் முடிக்கும் முன்

தன் மனம் நிறைந்த காதலை கற்பனை என்றது தாங்கமாட்டாமல்

"போதும்.... இதுக்கு மேல எதுவும் பேசாத.... ஆமா நான் கற்பனைதான் பண்ணிண்டு இருக்கேன். அப்படியே இருந்துட்டு போறேன். நீ நேக்கு எதுனா உதவி செய்யனும்னு நெனச்சா... தயவு செஞ்சு இனிமே என்னிட்ட பேசாத...ப்ளீஸ்" என்றாள் வந்து விடுவேன் என்று பயம் காட்டிய அழுகையை அடக்கியபடி

"காயத்ரி... நான்...அப்படி சொல்லல..."

அவன் பேசியதை காதில் வாங்காமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்

செய்வதறியாது திகைத்து நின்றான் கார்த்தி.....

நம்நட்புக்கு ஈடாய்
நான் எதையும்ஏற்றதில்லை
எதையும்நீ கேட்டநொடி
எப்படியேனும் பெற்றுதருவேன் - இன்று
என்நட்பையே கேட்கிறாயே
எப்படிதருவேன் சொல்லடி!!!

தொடரும்...

37 பேரு சொல்லி இருக்காக:

LK said...

நினச்ச மத்திரியே போகுது கதை.. இனி கதை சோக ராகம்தான்

AnnyBenny said...

hi frnd, i just peeped into your blog and was really impressed with this story..superb writing style..and very poetic too..hey..am waiting eagerly for the forthcoming parts..finish it positively..
Hearty congratulations..for this unique skill of poetic expressions..

Venkatesh said...

தங்கமணி மேடம் காயத்ரியா ரொம்ப அழ வைகதீங்க ப்ளீஸ். அடுத்த பகுதி எப்போ?

Complan Surya said...

hey
hey hey
am the first am the first
am the first....

erunga poi padichituvandren..

v.v.s complan surya

Complan Surya said...

am very sad..

gayuva eppdi ala vaikraley....

hm sari sari..

"இப்போ கோயம்புத்தூர் காலேஜ்ல MSC படிக்கணும்னு வீம்பு பிடிக்கற."
no no athu bad college..neenga enga oru collegela serthuvidunga...
sariya.appavai..

...நீ இப்படி சட்டுன அழரவ இல்லையேடி....en gayuva enna "avangala pola heart stone apdinu ninaichengala.."yarium kuripidavillai..

அந்த மனுசனையே தூக்கி வீசி பேசிட்டா... இத்தன வருஷ வாழ்க்கைல அவர் கண்கலங்கி நான் பாத்ததில்ல... அழத்துவங்க "ethu poi daily avar alarathu engalkuthaney therium neenga siura samyala saptu..."

nandri
v.v.s group
complan surya

Complan Surya said...

ஸ்டோரி வெரி interestinga போய்கிட்டு இருக்கு
வாழ்த்துக்கள்
ரொம்ப சோகம் வேணாம்..
கவிதைகள் சூப்பர்,
எப்பொதும் போல வார்த்தை கோர்வைகளும் அழகாய்
வந்து இருக்கிறது.
"பேசும் வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளே நலம் பயக்கும் "என தோன்ற எதுவும் சொல்லாமல் "

வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

அன்புடன் மலிக்கா said...

தங்கமணி ரங்கமணி பாமாணி[நீ]

சூப்பரப்பூஊஊஊஊ கதை கலக்குது.

ஹுஸைனம்மா said...

எக்கா, சோகமெல்லாம் வாணாம்க்கா. சீக்கிரம் சுபமாக்குங்க.

செ.சரவணக்குமார் said...

நல்ல முயற்சி. முதல் பகுதியிலிருந்து வாசித்துவிட்டு வருகிறேன்.

Madhuram said...

Romba viruviruppa irukku kadhai. I thought Part 5 yoda mudinjudumnu, nethu adhu varaikkum padichen. Ippa dhaan recent times la naan library la Ramani Chandran stories padikka aarambichen. Yaaro mention panna madhiri andha style irukku unga writing la. Romba nalla irukku.

Madhuram said...

Solla marandhutten, last la ezhudhira kavidhaigal romba excellenta irukku ET (sorry sorry AT!)

Porkodi (பொற்கொடி) said...

karthi down down!

My days(Gops) said...

13 en favourite :)

ஸ்ரீராம். said...

நுட்பமான உணர்வுகளுடன் நிதானமாகப் போகிறது கதை. இனி ஒரே சோக ராகம்தானோ..?

சின்ன அம்மிணி said...

அடுத்த பகுதி எப்போன்னு கேக்கவைக்குது சஸ்பென்ஸு

அப்பாவி தங்கமணி said...

@ LK - சார், வாழ்க்கைல சோகம் சந்தோஷம் எல்லாம் மாறி மாறி தானே வரும்.. என்னங் நான் சொல்றது

@ Annybenny - Thanks for your first visit and congrats. I'm very glad that you liked the story and writing

@ வெங்கடேஷ் - ஆஹா.. காயத்ரிக்கு fanclub ஏ இருக்கும் போல இருக்கே.... தொடர்ந்து படிக்கறதுக்கு நன்றிங்க வெங்கடேஷ்

@ காம்ப்ளான் சூர்யா - இனிமே நெஜமாவே first வந்தா கூட first னு ஒத்துக்க மாட்டேன் உங்கள. காயு மேல ரெம்ப கரிசனம் போல. கோயம்புத்தூர் காலேஜ் bad காலேஜ்ஆ? யார் அங்கே? மந்திரியாரே, நம்ம ஊரு காலேஜ்ஐ தப்பா சொன்ன இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? (உங்க தங்கமணி வந்து சமைக்கரப்ப என்ன டயலாக் சொல்றீங்கன்னு நாங்களும் பாக்கறோம்). நன்றி வாழ்த்துக்களுக்கு

@ அன்புடன் மலிக்கா - நன்றிங்க மலிக்கா

@ ஹுஸைனம்மா - நீங்களே சொன்னப்புறம் அப்பீல் ஏது?

@ சரவணகுமார் - நன்றிங்க சரவணகுமார். வாசிச்சுட்டு சொல்லுங்க

@ மதுரம் - நன்றிங்க மதுரம். இன்னும் கொஞ்சம் உங்களை எல்லாம் torture பண்ணிட்டு அப்புறம் முடிக்கறேன் கதையை. ரமணி சந்திரன் மாதிரின்னு எல்லாம் சொன்னா நான் பறக்க ஆரம்பிச்சுடுவேன். ஆஹா... ET ஆக்கிடீங்களே என்னை? ஞாயமா இது ஞாயமா?

@ பொற்கொடி - என்னடா இது வம்பா போச்சு? இந்த கதைல கார்த்தி புடிக்கலையா? கஷ்டம் தான்...

@ கோப்ஸ் - ஏன்பா... 13 ஆ?

@ ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம். வாழ்க்கைல எப்பவும் சந்தோஷம் மட்டுமே இருக்குமா என்ன? நீங்களே சொல்லுங்க?

@ சின்ன அம்மணி - ரெம்ப நன்றிங்க சின்ன அம்மணி. Made my day

Complan Surya said...

அடப்பாவி மாமி
எதோ பாருங்க காயத்த்ரிய எல்லாம்
அழ வைக்க பிடாது
சொன்னா கேளுங்கோ
யாரு சின்ன பிள்ளை
"அவங்களோ" எங்கள் சங்க உறுப்பினர்கள்
L .K ,தக்கது அண்ணா,அப்பறம் எல்லாருக்கும் நல்ல கண்ணு திரியும்.

ஓகே..
செயக்ரம் அடுத்த பதிவு வரட்டும்

தற்போது விடை பெற்று கொள்வது
நன்றி வாழ்க வளமுடன்
வருத்தபடாத வசிப்போர் சங்கத் தளபதி
காம்ப்ளான் சூர்யா

Venkatesh said...

நீங்க சொன்னதுகபுறம் காயத்திரிக்கு fanclub அரம்பிசுடவேண்டியதுதன் :)

Priya said...

//இருவரும் வார்த்தை தேடி தவிக்க மௌனம் மௌனமாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது அந்த கணத்தை//...

வாவ்! ரசனையான வரி! ரசித்து படித்தேன்!

padma said...

நா கொஞ்சம் லேட் .இருந்தாலும் படிச்சுட்டேன் .நல்லா முடிவுதான் தரணும் ok யா

sriram said...

ஆஜர் அப்பாவி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Guna said...

Super ponga....Gayathri-a romba kashtapaduthathinga

அமைதிச்சாரல் said...

// மார்ல வெச்சு தாங்கின அந்த மனுசனையே தூக்கி வீசி பேசிட்டா.//

அடி ரொம்ப பலமோ!! :-)))))

யக்கா... கதை சொல்லச்சொன்னா மெகா சீரியல் ஓட்டுறீங்க.. அழுவாச்சி வாணாம்...

அப்பாவி தங்கமணி said...

@ காம்ப்ளான் சூர்யா - நீங்களும் என்னை அடப்பாவின்னு சொல்ல ஆரம்பிச்சாச்சா... (எல்லாம் இந்து தக்குடு வேலையா தான் இருக்கும்)

@ வெங்கடேஷ் - ஆஹா... சூப்பர் தான். காயத்ரி ரசிகர் மன்ற தலைவர் வெங்கடேஷ் வாழ்க...

@ ப்ரியா - ரெம்ப நன்றிங்க ப்ரியா

@ பத்மா - லேட் ஆனாலும் லேட்டஸ்ட் தானே பத்மா... நல்ல முடிவா... அதை கார்த்தி கிட்ட தான் கேக்கணும்... பத்மா கேட்டங்கன்னு கேட்டு சொல்றேன்

@ பாஸ்டன் ஸ்ரீராம் - நன்றிங்க. ஒரு விண்ணப்பம் - தயவு செஞ்சு இந்த template கமெண்ட் வேண்டாமே.... நாட்டாமைனா நாலு வார்த்தை நறுக்குன்னு பேச வேண்டாமா (நான் வேணும்னா இனிமே போஸ்ட் எழுதி உங்களை கலாய்க்கலைனு உறுதி மொழி தரேன்...டீல்ஆ நோ டீல்ஆ)

@ குணா - நன்றிங்க குணா... சரிங்க காயத்ரிய கொஞ்சம் சிரிக்க வெச்சுடலாம்

@ அமைதிச்சாரல் - அடி ரெம்ப பலம் தான் போல. மெகா சீரியல் எல்லாம் இல்லைங்க அமைதிச்சாரல். வாழ்க்கைல எப்பவும் சிரிச்சுட்டே இருக்க முடியுமா... கொஞ்சம் அழவும் தான் வேணும்... என்னங் நாஞ்சொல்றது...

Porkodi (பொற்கொடி) said...

//ஒரு விண்ணப்பம் - தயவு செஞ்சு இந்த template கமெண்ட் வேண்டாமே.... //

ஹாஹாஹா.. அ.த., ஏதாவது கோக்குமாக்கா விண்ணப்பம் போட்டீங்க, எங்க தல இதுவுமே பேச மாட்டாரு. அவரு காலடி இந்த பூமில படணுமா வேணாமா, யோசிச்சுக்குங்க! தல, நீங்க ஒண்ணும் டென்சன் ஆவாதீங்க தல! நான் பாத்துக்குறேன்!

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - ஒகே ஒகே விண்ணப்பம் வாபஸ் அம்மணி.... (இப்படி எல்லாம் மெரட்டினா சின்ன புள்ள பாவம் பயந்துரும்னு சொல்லுங்க நாட்டாம)

sriram said...

//தயவு செஞ்சு இந்த template கமெண்ட் வேண்டாமே.... நாட்டாமைனா நாலு வார்த்தை நறுக்குன்னு பேச வேண்டாமா (நான் வேணும்னா இனிமே போஸ்ட் எழுதி உங்களை கலாய்க்கலைனு உறுதி மொழி தரேன்...டீல்ஆ நோ டீல்ஆ)//

தப்பா நெனைக்க வேண்டாம் அப்பாவி..
நீண்ட பின்னூட்டம் போடக்கூடாதுனெல்லாம் ஒண்ணும் கிடையாது, ஒரு நாளைக்கு 12-14 பதினாலு மணி நேரம் ஆணி புடுங்கறேன் ரெண்டு வாரமா, அப்படியும் கழகக் கண்மணிகளின் இடுகைகள் எதையும் விடாமல் படித்து விடுகிறேன். வேறொன்றுமில்லை..

நீங்க என்னை எவ்வளவு வேணா கலாய்க்கலாம், இது எதையும் தாங்கும் இதயம். நல்லது செய்யப்போயி நாட்டாமை பட்டம் கொடுத்ததுக்கே நான் டென்சன் ஆவல..
All well, Don't worry, Be happy..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//ஏதாவது கோக்குமாக்கா விண்ணப்பம் போட்டீங்க, எங்க தல இதுவுமே பேச மாட்டாரு. அவரு காலடி இந்த பூமில படணுமா வேணாமா, யோசிச்சுக்குங்க! //

என் வருகைக்காக யாரும் காத்துக் கிடக்கும் அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் கிடையாது கேடி. நானொரு காமடி பீஸு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Venkatesh said...

நன்றி தங்கமணி அவர்களே. காயத்திரி ரசிகர் மன்றம் வாழ்க வளர்க !

அப்பாவி தங்கமணி said...

@ (பாஸ்டன்) ஸ்ரீராம் - இத்தன பிஸிலயும் கழக கண்மணிகளின் பதிவ விடாம படிக்கறது கிரேட்.... ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்.....

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க வெங்கடேஷ்

தக்குடுபாண்டி said...

hello, oru mail poda koodathaa akka??? yenekkey theriyaama oru part miss panniyirukken...:(

Elam said...

ரொம்ப நல்லா இருக்கு .....

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு -
அக்காஸ் ப்ளாக் எல்லாம் அப்ப அப்ப வந்து நலம் விசாரிக்கணும்கறது முறை... அதை செய்யாட்டாலும் பாவம் தம்பினு ஒண்ணும் சொல்லாம விட்டா தப்பை எங்க மேல திருப்பி விடறேளா... நன்னா இருக்குப்பா ஞாயம்.... ஆனா ஒண்ணு... இந்த தகுதியையும் சேத்து (எதிராளி மேல பழி போடறது) நீங்க கல்யாணத்துக்கு தயார்ன்னு சொல்லாம சொல்றேள்.... பட் யாரும் கேக்கறாப்ல தான் காணோம்....

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க Elam

thendral said...

Super kavithai!Kaadhalin valiya azhagaa ezhudiyirukinga,natpoda valiyayum adhula saamarthiyamaa inaichirukinga.Great!

அப்பாவி தங்கமணி said...

தேங்க்ஸ் தென்றல்.... பழைய பதிவு எல்லாம் எடுத்து படிக்கறீங்க போல... ரெம்ப நன்றிங்க மீண்டும்

Post a Comment