Wednesday, April 07, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நம்ம ப்ரியாவுக்கு மிகவும் நன்றி

பிடித்த பத்து பெண்கள்ல உறவுகாரங்க இருக்க இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க . ஆனா இதுவும் நல்ல விசயம் தான். உறவுன்னு இல்லாம நமக்கு பிடிச்சவங்க யாருன்னு ஒரு சுய பரிசோதனை செய்துக்க ஒரு நல்ல வாய்ப்பு

1 . ஸ்ரீதேவி - எனது ஆசிரியை:

பத்தாவது வரைக்கும் நாம class ல பெரிய தெரிஞ்ச முகம் எல்லாம் இல்ல. எங்க வகுப்புல மொத்தம் 89 பேரு. யோசிச்சு பாருங்க. ஆசிரியருக்கு எங்க பேரு ஞாபகம் இருந்தாலே பெரிய விசயம். படிப்புலையும் புலி எல்லாம் இல்ல. ஒரு 25 ரேங்க்குள்ள வருவேன்

ஆனா +1 வந்தப்ப அந்த வருஷம் தான் எங்க ஸ்கூல்ல புதுசா +1 ஆரம்பிச்சு இருந்தாங்க. எனக்கு சயின்ஸ் எப்பவுமே பாவக்கா சாப்பிடற மாதிரி தான். சயின்ஸ்ல இருந்து தப்பிக்கணும்னே commerce குரூப் எடுத்தேன். வாழ்க்கைல நான் செஞ்ச உருப்படியான ஒரு decision அது தான். +1 க்ளாஸ்ல எங்க commerce குரூப்ல மொத்தமா நாங்க ஆறு பேரு தான். செம ஜாலி நாட்கள் அவை. காலேஜ் கூட அத்தனை என்ஜாய் பண்ணினதா எனக்கு தோணல

என்னோட ஸ்ரீதேவி மிஸ் அவங்களும் அப்போ தான் M . Com முடிச்சு வந்தாங்க. டீச்சர் ஸ்டுடென்ட் மாதிரி இல்லாம நல்ல friends மாதிரி தான் இருப்போம். ஆனா படிப்பு விசியத்துல ரெம்ப கண்டிப்பா இருப்பாங்க. பள்ளில முகம் தெரியாம இருந்த எனக்கு ஒரு முகவரி குடுத்தவங்க அவங்க. +2 ல நான் ஸ்கூல் 2nd மார்க் எடுத்தேன்னா அதுக்கு முழு காரணம் அவங்க தான். இன்னைக்கும் அவங்க சொல்லி குடுத்த அந்த strong basic accounting தான் வாழ்க்கைல மேல வர உதவி இருக்கு. படிப்பு மட்டும் இல்ல தன்னம்பிக்கையும் கத்து குடுத்தது ஸ்ரீதேவி மிஸ் தான்

அவங்க இப்ப எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல. நான் ரெம்ப admire பண்ணினா பெண் இவங்க. பிடித்த பத்து பெண்கள்னதும் முதல்ல ஞாபகம் வந்தது என்னோட ஸ்ரீதேவி மிஸ் தான்

2 . ஸ்ரீதேவி - சினிமா நடிகை:

இன்னிக்கி எத்தனை நடிகைகள் வந்தாலும் என்னோட எவர் கிரீன் favourite மூன்றாம் பிறை ஸ்ரீதேவி தான். அந்த படம் வந்தப்ப நான் ஸ்கூல் கூட போக ஆரம்பிக்கல, ஆனா அந்த படத்த ரெம்ப ரசிச்சு பாத்தேன்னு எங்க அம்மா சொல்லுவாங்க

அந்த charm இப்ப யாரு கிட்டயும் இல்ல. அவங்க ஒரு ரோல் பண்ணினா அதுவாவே வாழுற involvement தான் அவங்க அழகு. அசின் கொஞ்சம் ஸ்ரீதேவி பக்கத்துல வந்தாலும் அந்த உயரம் தொட முடியலங்கறது தான் உண்மை

இந்த துறைல நான் மிகவும் ரசிக்கற பெண் இவங்க தான்

3 . சித்ரா - என்னோட தோழி:

எதிர்பார்ப்பு இல்லாத தோழமை ரெம்ப அரிது. அந்த வகைல நான் குடுத்து வெச்சவ. நெறைய நல்ல தோழிகள் எனக்கு கெடைச்சுருக்காங்க. அவங்கள்ள நெறைய பேரு என்னோட உறவினர்கள் கூட. அதனால அவங்கள இங்க சேத்துக்க முடியாது. பாத்த மொதல் நாளே இப்படி நட்பு பாராட்ட முடியுமான்னு வியக்க வெச்சவ என்னோட தோழி சித்ரா. அவள பத்தி சொல்லியே ஆகணும்

University Entrance எக்ஸாம்ல எனக்கு அடுத்த சீட்ல தான் அவள first பாத்தேன். பாத்ததும் ஒரு நட்பான சிரிச்ச முகம் அபூர்வமா தோணுச்சு. எக்ஸாம் முடிச்சு வந்து என்னமோ ரெம்ப நாள் பழகின மாதிரி ஒரு பேச்சு. நான் அப்போ எல்லாம் ரெம்ப அமைதி (நம்புங்க...அதாவது வெளியில எலி மாதிரினு வெச்சுக்குங்களேன்)

அந்த university ல மொத்தம் 30 சீட் தான் அதுக்கு முந்நூறு பேரு entrance எழுதினோம். அப்புறம் அதுல 100 பேரை அடுத்த step குரூப் discussion க்கு கூப்டாங்க. போனா அதே சித்ரா அதுவும் ஒரே குரூப்ல நாங்க ரெண்டு பேரும். இது தான் விதிங்கறதா

அப்ப ஒரு குண்ட தூக்கி போட்டாங்க சீட் எல்லாம் quota system தான்னு. அப்படி பாத்த என்னோட community க்கு ஒதுக்கப்பட்டது ரெண்டே சீட் தான். அவ்ளவு தான்னு நெனச்சேன். எப்படியாச்சும் மெரிட்லையே சீட் கெடைக்கணும்னு ஒரே வேண்டுதல் தான். அப்ப என் பக்கத்துல நின்னுட்டு இருந்த சித்ரா "அந்த ரெண்டு சீட் நம்ம ரெண்டு பேருக்கே கெடைச்சா நல்லா இருக்குமல்ல. கிடைக்கும் பாரு" அப்படினா

நெஜமா சொல்றேங்க. நான் என்னை பத்தி மட்டும் யோசிச்சுட்டு இருந்தப்ப அந்த நேரத்துல கூட அடுத்தவங்கள பத்தி யோசிக்கற அந்த குணம் எல்லாருக்கும் இருக்காது இல்லைங்களா. அது தான் என் சித்ரா. சீட் என்ன ஆச்சுனு கேக்கறீங்களா. நல்ல மனசு உள்ளவங்க நெனைக்கறது நடக்காம போய்டுமா

அவ நெனச்ச மாதிரி அந்த ரெண்டு சீட் எங்க ரெண்டு பேருக்கும் கெடைச்சது. அன்னில இருந்து இப்ப வரைக்கும் நாங்க பெஸ்ட் friends தான்

இப்ப பேசினா கூட முதல் தான் பேசினா அதே நட்போட தான், அவ போன்ல பேசறப்ப கூட கண்களும் சிரிகரதுனு சொல்வாங்கல்ல அதை என்னால உணர முடியும். சித்ராவ பத்தி எழுதினா எழுதிகிட்டே இருப்பேன். அதனால இதோட நிறுத்திடறேன்

4 . சித்ரா - பின்னணி பாடகி:

என்ன ஒரு குரல்? என்ன ஒரு நளினம்? சான்சே இல்லைங்க. ஆரம்ப கால பாடல்கள்ள கொஞ்சம் கொஞ்சற மலையாள வாடை அடிக்கும் பாடல்களிலும் சரி இன்று வெளிவரும் ஸ்பஷ்டமான பாடல்களும் சரி, அத்தனை அழகு

சின்ன குயில் சித்ரானு சரியா தான் சொல்லி இருக்காங்க. அஞ்சு வயசுலேயே வானொலில பாடினாங்கன்னு ஒரு வார பத்திரிகைல படிச்சேன்

Classical இசை மேல எனக்கு ஒரு ஆசை வர்றதுக்கு முதல் படி சித்ரா "சிந்து பைரவி" ல பாடின "பாடறியேன் படிப்பறியேன்" பாடல் தான். இன்னிக்கி அந்த பாட்ட கேட்டாலும் அப்படி ஒரு சந்தோஷம் மனசுல

பர்சனல்ஆ அவங்கள பத்தி பெருசா தெரியாதுன்னாலும் அந்த சிரிச்ச கொழந்தை முகம் எப்பவும் மனசுல நிக்கும். அவங்களுக்கவே விஜய் டிவில சூப்பர் சிங்கர் ஜூனியர் பாக்க ஆரம்பிச்சேன்

5 . நித்யஸ்ரீ - கர்நாடக இசை பாடகி:

ஒரே துறைல ரெண்டு பேரை எழுத கூடாதுன்னு ப்ரியா கண்டிஷன் போட்டு இருந்தாங்க. இவங்க பாடகி தான்னாலும் கர்நாடக இசை பாடகி அப்படிங்கற தனி category ல சொல்லலாம் தானே ப்ரியா

இவங்களும் அப்படி தான். தன்னோட பாட்டால கட்டி போடற ரகம். இசை குடும்பத்துல இருந்து வந்து இருந்தாலும் அந்த பந்தா எல்லாம் இல்லாம எளிமையான பெண்மணி

எனக்கு கர்நாடக இசை ஞானம் எல்லாம் இல்ல, ஆசை இருந்தும் அதுக்கான வாய்ப்பு அமையல. ஆனா இவங்க பாடல்கள் கேட்க பிடிக்கும், விமர்சனம் எல்லாம் விரிவா சொல்ல தெரியல. நிறைய பழைய பாடல்கள் எல்லாம் இவங்க பாடின மறுபதிப்பு இன்றைய இளைய சமுதாயதிற்கு ஒரு நல்ல வரம்

6 . நித்யஸ்ரீ - சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 :

என்ன காரணம்னு சொல்ல தெரியல. இந்த பொண்ண ஆரம்பத்துல இருந்தே ரெம்ப பிடிச்சிருக்கு. நான் மொதல்ல சொன்னா மாதிரி பாடகி சித்ரா மேடம்காகத்தான் இந்த ப்ரோக்ராம் பாக்க ஆரம்பிச்சேன். அதுக்கு பின்னாடி இந்த குட்டி பொண்ணுக்கு நான் பெரிய ரசிகை ஆய்ட்டேன்

என்ன வேலை இருந்தாலும் ராத்திரி ஒம்பது மணி ஆனா டிவி முன்னாடி ஆஜர். இப்ப டாப் 8 contestants வந்துட்டாங்க. ஒரு ஒரு வாரமும் டென்ஷன் தான் எனக்கும்

பதினோரு வயசு பொண்ணுக்கு என்ன ஒரு energy , நம்ப முடியாத maturity . குறை சொன்னாலும் சிரிச்சுக்கிட்டே தலை ஆட்ற அழகு, அப்பப்ப இந்த பக்குவம் பெரியவங்களுக்கு கூட இல்லன்னு தான் சொல்லணும்

எந்த வகையான பாட்டுனாலும் ஆட்டம் பாட்டம்னு கலக்கல் கண்மணி தான் நித்யஸ்ரீ. சுத்தி இருக்கறவங்களையும் அதே mood க்கு கொண்டு வர்ற திறமை எல்லாருக்கும் வாய்க்கரதில்ல

7 . ரமணிசந்திரன் - எழுத்தாளர்:

எனக்கும் ரங்கமணிக்கும் அடிக்கடி சண்டை வர்றது இவங்கள வெச்சுத்தான். அது ஏன்னு அப்புறம் சொல்றேன். பெண்களை மையமா வெச்சு எழுதற இவங்க எழுத்துக்கு நான் பரம விசிறி. ஒரே மாதிரி stereo type கதைகள்னு சிலர் விமர்சனம் பண்றாங்க. ஆனா ஒரே மாதிரி கதைகள்னாலும் ஒண்ணு ஒண்ணும் ஒரு முத்து தான்

ஒரே கதைய எத்தனை வாட்டி படிச்சாலும் சலிக்காது. எனக்கு mood சரி இல்லைனா எனக்கான மருந்து இவங்க எழுத்து தான். அவங்கள பத்தின பேட்டி ஒண்ணு கொஞ்ச நாள் முன்னாடி படிச்சேன். ரெம்ப எளிமையான குடும்ப தலைவியா இருந்தாங்க. இவங்களா இப்படி எழுதறாங்கன்னு ஆச்சர்யமா இருந்தது

எனக்கும் ரங்கமணிக்கும் அடிக்கடி சண்டை வர்றது இவங்கள வெச்சுத்தான்னு சொன்னேன் இல்லையா ஆரம்பத்துல, அது எதுக்கு தெரியுமா? வீட்டுல ரமணி சந்திரன் புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா யார் பேசறதும் காதுல விழாது எனக்கு. ரங்கமணி செம டென்ஷன் ஆய்டுவாரு. அது மட்டும் இல்ல, இந்தியால இருந்து vacation முடிஞ்சு திரும்பி வர்றப்ப ஒரு பெட்டி நெறைய ரமணிசந்திரன் புக்ஸ் இருக்கும். அதுக்கும் ரங்கமணி மட்டும் இல்ல எங்க அம்மா அப்பா கூட டென்ஷன் ஆய்டுவாங்க. இதுக்கு பதிலா உப்பு புளி எடுத்துட்டு போனாலும் உருப்படும்னு திட்டுவாங்க

நமக்கு தான் ரமணி சந்திரன் புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா யார் பேசறதும் காதுல விழாதே. So , no problem no problem தான்

8 . மோனிஷா - என்னோட குட்டி தோழி:

இந்த மோனிஷா எனக்கு friend ஆனப்ப அவளுக்கு ரெண்டரை வயசு. எனக்கு கெடைச்ச மொதல் குட்டி தோழி அவங்க தான். நான் கல்யாணம் ஆகி நாடு கடத்தபட்டப்ப (இப்பவும் எங்க அம்மா கிட்ட இப்படித்தான் சொல்லி டென்ஷன் பண்ணுவேன்) புது ஊரு புது பொண்ணுனு எல்லாம் இருந்தாலும் அதுவரைக்கும் அம்மா அப்பா தங்கை தாத்தா பாட்டி சித்தி சித்தப்பானு பெரிய குடும்பமா இருந்து பழகிட்டு கொஞ்சம் கஷ்டமா இருந்தது

நான் துபாய் போன ரெண்டாவது நாள் அவரோட friend family யோட எங்கள பாக்க வந்து இருந்தாங்க. நாங்க இருந்த அதே பில்டிங்ல அதே ப்ளோர்ல அவங்களும் இருந்தாங்க. அவங்களோட செல்ல பொண்ணு தான் மோனிஷா

மொதல் நாளே செம பெட் ஆய்டாங்க மேடம். அப்புறம் என்ன தினமும் ரங்கமணிய ஆபீஸ்க்கு தொரத்தி விட்டுட்டு நாங்க ஒரே ஆட்டம் தான். என்னை பேரு சொல்லி தான் கூப்பிடுவாங்க பெரிய மனுசி மாதிரி. அதுவும் பேரை சுருக்கி செல்ல பேரு வேற. கடைசில அங்க எல்லார் கிட்டயும் அந்த பேரு தான் நிலைச்சு போச்சு

என்னோட தனிமைய போக்கி ஒரு புது பொலிவ தந்த மோனிஷா இப்பவும் எனக்கு First Best குட்டி தோழி தான். நாங்க அந்த ஊர விட்டு வந்தப்ப நான் அவள ரெம்ப மிஸ் பண்ணினேன். இப்பவும் அப்ப அப்ப பேசுவோம். அதே சந்தோசத்தோட பேசுவா என் செல்ல தோழி

9 . Heidi - அலுவலக தோழி:

இப்ப நான் வேலை செய்யற எடத்துல என்னோட தோழி இவங்க. ரெம்ப friendly type . ஆரம்பத்துல இந்தியன்ஸ் தவிர மத்த ஆளுகளோட ஒட்டவே முடியாது என்னால. கூடாதுன்னு இல்ல, ஓட்ட முடியலனு தான் சொல்லணும். என்னமோ ஒரு தயக்கம் இருந்துட்டே இருந்தது. அதை மாத்தினவ இந்த Heidi

ஜேர்மன் வம்சாவழி பொண்ணு. பல தலைமுறை முன்னாடியே ஜேர்மன்ல இருந்து வந்தவங்க. இழுத்து வெச்சு பேசுவா. என்ன லஞ்ச் இன்னிக்கி. ஏன் இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்க, ஏன் நேத்து ஆபீஸ்க்கு லீவ்னு எனக்கு சொல்லல, nutrition ஆ ஏன் சாப்பிடமாட்டேன்கர இப்படி எதாச்சும் ஒண்ணும் பேசிட்டே இருப்பா. சமயத்துல கோவமே வரும் எனக்கு

ஆனா இவ மூலமா தான் எனக்குள்ள இருந்த அந்த தயக்கம் போய் எல்லாரோடவும் நல்ல பேசி பழக ஆரம்பிச்சேன். அந்த மாற்றம் எனக்கு ரெம்ப பிடிச்சு இருந்தது, நெறைய நல்ல தோழிகளை கிடைக்க செய்தது

இதோ இப்ப இதை லஞ்ச் டைம்ல எழுதிட்டு இருக்கறப்ப கூட சாப்பிடறப்ப கம்ப்யூட்டர் பாக்காதேனு அட்வைஸ் சொல்லிட்டு போறாங்க மேடம்

ரங்கமணிக்கு தான் இதுல ரெம்ப சந்தோஷம் என்னையும் மிரட்ட ஒரு ஆள் இருக்குனு

10 . நந்தினி:

நந்தினி - குறிப்பா யாருன்னு இல்ல. ஆனா இந்த பேரை எங்க கேட்டாலும் ஒரு சந்தோஷம். அதுக்கான காரணம் என்னனு நானும் யோசிச்சுகிட்டே இருக்கேன். இப்ப வரைக்கும் தெரியல. அந்த பேர்ல எனக்கு நெருங்கின யாரும் இது வரைக்கும் இல்ல. சின்னதுல இருந்தே இந்த பேரு மேல ஒரு காதல்னு தான் சொல்லணும்

ஒரு சினிமால இல்ல ஒரு கதைல இந்த பேரை பாத்தா கூட சந்தோசமா இருக்கும். இந்த பேருல என் வாழ்க்கைல யாராச்சும் வருவாங்கன்னு காத்துட்டு இருக்கேன். வந்தப்புறம் சொல்றேன். இப்போதைக்கி இந்த பேரு பிடிக்கும்

எனக்கு பிடிச்ச பத்து பெண்கள் பத்தி பொறுமையா படிச்சா நீங்களும் எனக்கும் பிடிச்சவங்க தான். மிக்க நன்றி

இந்த பதிவை எழுத அழைத்த ப்ரியாவுக்கு மிக்க நன்றி மீண்டும்

42 பேரு சொல்லி இருக்காக:

Dubukku said...

உங்க பெண் பார்க்கும் படலம் தொடர்பதிவுக்கு அழைப்புக்கு ரொம்ப நன்றி. ரொம்ப சாரிங்க அன்னிக்கே பதில் அடிக்கனும்ன்னு நினைச்சேன் தப்ப விட்டுட்டேன்...நடுவில நிறைய வேலைகளாகி மறந்துவிட்டேன்...நீங்க கூப்பிடுவீங்கன்னு தெரிஞ்சு நான் என்னை பையன் பார்த்த படலம் பற்றி முன்னமே போஸ்ட் போட்டாச்சே :)) இந்த லிங்கலில இருக்கு பாருங்க...
http://dubukku.blogspot.com/2005/11/11.html

Dubukku said...

///எனக்கும் ரங்கமணிக்கும் அடிக்கடி சண்டை வர்றது இவங்கள வெச்சுத்தான்னு சொன்னேன் இல்லையா ஆரம்பத்துல, அது எதுக்கு தெரியுமா? வீட்டுல ரமணி சந்திரன் புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா யார் பேசறதும் காதுல விழாது எனக்கு. ///

--- ஐய்யோ ஐயைய்யோ.....எங்க வீட்டில இதே கொடுமை தாங்க....இத விட கொடுமை என்னான்னா...என்னோட தங்கமணி கம்ப்யூட்டர்ல ஆன்லைன்ல வேற படிப்பாங்க....ஆரம்பிச்சிடுட்டா கம்ப்யூட்டர் அன்னிக்கு கிடைச்ச மாதிரி தான்

அனாமிகா துவாரகன் said...

Nice one =))

Complan Surya said...

etho vantuviten..

maniikavum..konjam late- aitu..

valakam pola rumba amitha

arbatam pola erukunga.

nandri valga valamudan.

v.v.s

complan surya

அநன்யா மஹாதேவன் said...

அ.த,
ரொம்ப வித்தியாசமான எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு. ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

தமிழ் உதயம் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கீங்க.

My days(Gops) said...

பதிவு சூப்பர் :)

//பெரிய தெரிஞ்ச முகம் எல்லாம் இல்ல//

அப்போ முகம் சின்னதா?


நல்லா இருந்தது பதிவு :)

ஹுஸைனம்மா said...

வித்தியாசமா இருந்துது. ஒரே பேர்ல ரெண்டு பேர் வந்துகிட்டேயிருந்ததும், ரமணி சந்திரன்க்கு அடுத்ததும் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சு ஏமாந்துட்டேன்.

அனாமிகா துவாரகன் said...

நானும் அப்படித் தான் ஏமாந்தேன் ஹுஸைனம்மா . சரி பப்ளிக்கா நீங்களே ஒத்துன்ட பிறகு நான் எதுக்கு மறைக்கனும்னு சொல்லிட்டேன்.

ஹுஸைனம்மா said...

//பப்ளிக்கா நீங்களே ஒத்துன்ட பிறகு//

ஹி.. ஹி.. ஒருதரம் ரெண்டு தரம்னா மறைக்கலாம்... இப்பல்லாம் டெய்லி எங்கனா, யார்ட்டயாவது ஏமாறலைன்னாதான் சந்தேகம் வருது, இன்னிக்கு எதோ சரியில்லியேன்னு...

பித்தனின் வாக்கு said...

குட்டிப் பொண்ணு பிரட்ண்சிப் அருமை,
சாப்பிடும் போது சிஸ்டம் பார்ப்பது ஏன் கூடாது என்ற விளக்கம் இல்லியே,
நித்திய ஸ்ரீ ரொம்ப நல்லா பாடறா. ஆனா ஸ்ரீனிசாதான் டாப்பு, அவள்தான் ஜெயிப்பாள் என்று தோன்றுகின்றது.
நந்தினி பொன்னியின் செல்வனில் வரும் வில்லி + ஹீரோயிகளில் ஒருவள். கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தால் நந்தினி + வந்தியத்தேவனின் விசிறி ஆகிவிடுவீர்கள்.

மிக்க நன்றி.

அனாமிகா துவாரகன் said...

ரொம்ப ப்ராக்டிக்கலாக இருக்கீங்க ஹுஸைனம்மா. எப்டீங்க??!!?? =))

சின்ன அம்மிணி said...

ஹுசைனம்மா மாதிரியே நானும் நினைச்சேங்க

அனாமிகா துவாரகன் said...

ஹா ஹா. ;)) Join the Club சின்ன அம்மிணி. எல்லோரையும் திட்டமிட்டு ஏமாற்றிய இவர்களை யாருங்க அப்பாவி தங்கமணி என்று சொன்னார்கள். அப்பாவி தங்கமணி, எங்க இருக்கீங்க. எல்லோரையும் ஏமாத்திட்டு. We need you here ;))

ஹுஸைனம்மா said...

நான்தான் கிளப்புக்கு தலைவி; சரின்னா நானும் சேந்துக்கிறேன்!! ;-))

இவங்க பேரில மட்டுந்தான் ‘அப்பாவி’!!

அனாமிகா துவாரகன் said...

சரிங்க ஹுஸைனம்மா ;)) நீங்க தான் தலைவி. மத்த போஸ்ட் யாருக்கு வேணும்னாலும் எடுத்துக்கோங்கோ. அப்படியே எனக்கும் ஒன்னு குடுத்திடுங்க. சின்னப்பொண்ணு ஒதுக்க கூடாது. சரியா? டீல்.

@ அப்பாவி (??!!??) தங்ஸ், எனக்கு எப்ப உங்க வலைத் தளத்துக்கு வந்தாலும் உவங்க ஹஸ்பன்ட் சொன்னது தான் ஞாபகத்துக்கு வரும். "உன்னை என் தலையில் கட்டணும் என்பதற்காகவே பொருந்தாத ஜாதகங்களை உங்கப்பா எங்ககிட்ட கொடுத்தார்".

ராமலக்ஷ்மி said...

ரசித்துப் படித்தேன். எல்லோரையும் போல நானும் தேடினேன் இன்னொரு ரமணி சந்திரனை:)! நல்ல பகிர்வு தங்கமணி.

ஸ்ரீராம். said...

ஹுஸைனம்மா, ராமலக்ஷ்மி சொன்னதுதான் நான் சொல்ல விரும்புவதும்.

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
Nice one =))//

ரெம்ப நன்றிங்க அனாமிகா

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…
etho vantuviten..
maniikavum..konjam late- aitu..
valakam pola rumba amitha
arbatam pola erukunga.
nandri valga valamudan//

நன்றிங்க சூர்யா. வழக்கம் போல சூப்பர் கமெண்ட்க்கு

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
அ.த, ரொம்ப வித்தியாசமான எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு. ரொம்ப ரசிச்சு படிச்சேன்//

ரெம்ப நன்றிங்க அனன்யா. நாமலே விதியாசமானவங்க தானே. நம்ம பதிவும் அப்படி தானுங்க இருக்கும்

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
பதிவு சூப்பர் :)
//பெரிய தெரிஞ்ச முகம் எல்லாம் இல்ல//
அப்போ முகம் சின்னதா?
நல்லா இருந்தது பதிவு :)//

ரெம்ப நன்றிங்க பிரதர். எப்பவும் நமக்கு மூர்த்தி சிறிசு தான் ......(மிச்சத்த நீங்களே fill பண்ணிக்குங்க...நமக்கு சுய விளம்பரம் வராது...சரி சரி கூல் டௌன்)
அது சரி நம்ம receptionist நல்லா இருக்காங்களா? விசாரிச்சதா சொல்லுங்க

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
//பப்ளிக்கா நீங்களே ஒத்துன்ட பிறகு//
ஹி.. ஹி.. ஒருதரம் ரெண்டு தரம்னா மறைக்கலாம்... இப்பல்லாம் டெய்லி எங்கனா, யார்ட்டயாவது ஏமாறலைன்னாதான் சந்தேகம் வருது, இன்னிக்கு எதோ சரியில்லியேன்னு...//

சில சமயம் எனக்கும் அப்படி தாங்க ஆய்டுது...நம்புங்க நான் அப்பாவி தான்

அப்பாவி தங்கமணி said...

//பித்தனின் வாக்கு சொன்னது…
குட்டிப் பொண்ணு பிரட்ண்சிப் அருமை,//

ரெம்ப நன்றிங்க

//சாப்பிடும் போது சிஸ்டம் பார்ப்பது ஏன் கூடாது என்ற விளக்கம் இல்லியே//

சாபிடரப்ப சாப்பாட்டுல கவனம் இல்லேன்னா அளவு சரியா சாப்பிட மட்டோமாம். அது மட்டும் இல்லாம நல்லா chew பண்ணாம சாபிடரதுக்கும் வாய்ப்பு இருக்கு அது நல்லது இல்லைன்னு நான் சொல்லல்லைங்க Heidi சொல்றாங்க

//நித்திய ஸ்ரீ ரொம்ப நல்லா பாடறா. ஆனா ஸ்ரீனிசாதான் டாப்பு, அவள்தான் ஜெயிப்பாள் என்று தோன்றுகின்றது//

ஸ்ரீநிஷா சூப்பர் தான், சந்தேகமே இல்ல. யார் ஜெயிச்சாலும் அதுவும் ஒரு கொழந்த தான், சந்தோஷம் தான். ஆனா என்னமோ நித்யஸ்ரீ ஸ்பெஷல் எனக்கு. காரணம் சொல்ல தெரியல

//நந்தினி பொன்னியின் செல்வனில் வரும் வில்லி + ஹீரோயிகளில் ஒருவள். கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தால் நந்தினி + வந்தியத்தேவனின் விசிறி ஆகிவிடுவீர்கள்.//

கேள்விபட்டு இருக்கிறேன், படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே. இத்தனை விரிவா பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
ரொம்ப ப்ராக்டிக்கலாக இருக்கீங்க ஹுஸைனம்மா. எப்டீங்க??!!?? =))//

அனாமிகா அது வேற ஒண்ணும் இல்ல. அவங்களும் என்னை மாதிரியே அப்பாவி. சரிதானுங்க ஹுஸைனம்மா

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
ஹுசைனம்மா மாதிரியே நானும் நினைச்சேங்க//

ரெம்ப நன்றிங்க சின்ன அம்மணி. ஏமாந்ததுக்கு இல்லைங்க படிச்சதுக்கு

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
ஹா ஹா. ;)) Join the Club சின்ன அம்மிணி. எல்லோரையும் திட்டமிட்டு ஏமாற்றிய இவர்களை யாருங்க அப்பாவி தங்கமணி என்று சொன்னார்கள். அப்பாவி தங்கமணி, எங்க இருக்கீங்க. எல்லோரையும் ஏமாத்திட்டு. We need you here ;))//

(ஐயையோ எல்லாரும் ஒண்ணா சேந்துட்டாங்களே...கொஞ்சம் careful ஆ தான் டீல் பண்ணனும்) அனாமிகா நம்புங்க நான் நெஜமாவே அப்பாவி தாங்க.... இந்த பால் வடியும் முகத்த பாத்தா நீங்க இப்படி சொல்ல மாட்டீங்க (சாரி கொஞ்சம் ஆணி ஓவர் ஆய்டுச்சு இயர் எண்டுகரதால. கமெண்ட்ம் லேட் ஆய்டுச்சு. மன்னிச்சுடுங்க.... மத்தபடி தான் அப்பாவி தானுங்க)

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
நான்தான் கிளப்புக்கு தலைவி; சரின்னா நானும் சேந்துக்கிறேன்!! ;-))
இவங்க பேரில மட்டுந்தான் ‘அப்பாவி’//

(ஆஹா கிளப் வேறயா...உஷார் தாங்க்ஸ் உஷார்) நானும் உங்க கிளப்ல சேந்துகரனுங்க ஹுஸைனம்மா. நானும் உங்களாட்டவே அப்பாவி தானுங்க (அப்பாடா.... இப்போதைக்கு சமாளிச்சாச்சு... கண்ண கட்டுதுரா சாமி)

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
சரிங்க ஹுஸைனம்மா ;)) நீங்க தான் தலைவி. மத்த போஸ்ட் யாருக்கு வேணும்னாலும் எடுத்துக்கோங்கோ. அப்படியே எனக்கும் ஒன்னு குடுத்திடுங்க. சின்னப்பொண்ணு ஒதுக்க கூடாது. சரியா? டீல்.//

அட பாவிங்களா... விட்டா அரசியல் கட்சியே ஆரம்பிச்சுருவாங்க போல இருக்கே... அனமிக்கா நீங்க மதுரையா? உள்குத்து எல்லாம் இல்ல, சும்மா கேட்டேன்

//@ அப்பாவி (??!!??) தங்ஸ், எனக்கு எப்ப உங்க வலைத் தளத்துக்கு வந்தாலும் உவங்க ஹஸ்பன்ட் சொன்னது தான் ஞாபகத்துக்கு வரும். "உன்னை என் தலையில் கட்டணும் என்பதற்காகவே பொருந்தாத ஜாதகங்களை உங்கப்பா எங்ககிட்ட கொடுத்தார்".//

இத தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதோ? வர வர ரங்கமணி கச்சிக்கு ஆள் சேந்துட்டே போகுதே. அனாமிகா எதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம். இப்படி எல்லாம் கூடாது... வேண்டாம்.... நான் அழுதுருவேன்

அப்பாவி தங்கமணி said...

//ராமலக்ஷ்மி சொன்னது…
ரசித்துப் படித்தேன். எல்லோரையும் போல நானும் தேடினேன் இன்னொரு ரமணி சந்திரனை:)! நல்ல பகிர்வு தங்கமணி.//

ராமலக்ஷ்மி நீங்களுமா? ஆஹா. ரெம்ப நன்றிங்க படிச்சதுக்கு

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
ஹுஸைனம்மா, ராமலக்ஷ்மி சொன்னதுதான் நான் சொல்ல விரும்புவதும்//

எனக்கு ரெம்ப சந்தோஷம் ஸ்ரீராமர்ஏ ஏமாந்தது தான். Jokes Apart . பதிவ படிச்சதுக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

ஹுஸைனம்மா / அனாமிகா துவாரகன் / சின்ன அம்மிணி / ராமலக்ஷ்மி / ஸ்ரீராம்

எல்லாருக்கும் ரெம்ப ரெம்ப நன்னி. அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. ஏப்ரல் 1st அன்னிக்கி யாரையுமே ஏமாத்த முடியலயேன்னு ஒரே பீலிங்க்ஸ்ஆ இருந்தேன். இப்ப நெறைய பேர ஏமாத்தினதுல ஒரு ஆத்ம திருப்தி. சரி சரி டென்ஷன் ஆகாதீங்க சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்
பதிவ படிச்சதுக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க எல்லாருக்கும்

அப்பாவி தங்கமணி said...

//Dubukku சொன்னது… --- ஐய்யோ ஐயைய்யோ.....எங்க வீட்டில இதே கொடுமை தாங்க....இத விட கொடுமை என்னான்னா...என்னோட தங்கமணி கம்ப்யூட்டர்ல ஆன்லைன்ல வேற படிப்பாங்க....ஆரம்பிச்சிடுட்டா கம்ப்யூட்டர் அன்னிக்கு கிடைச்ச மாதிரி தான்//

ஆஹா... நம்ம கூட்டணிக்கு ஆள் சேருதே. வாழ்க வாழ்க
Dubukku சார் - விட்டா நீங்க அடிக்கடி பதிவு போடாதக்கு காரணமே உங்க தங்கமணி கம்ப்யூட்டர் குடுக்காததுதான்னு சொல்லுவீங்க போல இருக்கே. இது ரெம்ப அநியாயம்

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது… லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கீங்க//

ரெம்ப நன்றிங்க தமிழ் உதயம்

Porkodi (பொற்கொடி) said...

enna idhu, en pere illai? :(

sari, priyamanavale podunga :)

(am fine, bloggerku thaan udambu mudiyama poiduchu.. thanks for asking!)

தக்குடுபாண்டி said...

ஆத்தாடி, கமண்ட்செக்ஷன் எதோ தங்கமணிகள் மாநாடுக்குள்ள வந்த மாதிரி இருக்கு...:)

Priya said...

நல்லாயிருக்கு உங்க தேர்வுகள். அது என்னங்க முதல் 6 பேரோட பெயர் "pair" ஆகவே இருக்கு!

அமைதிச்சாரல் said...

பத்து பெண்கள் தேர்வு நல்லாருக்கு.ரமணி சந்திரன் தனித்தன்மையான பேரு. அவ்வளவு லேசா ஜோடி கிடைச்சிடுமா என்ன?.ஆனாலும் ஏமாந்தது நிஜம்.

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
enna idhu, en pere illai? :(//

இந்த தொடர் பதிவுக்கு அழைச்ச ப்ரியா உறவுகாரங்கள இதுல சேக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க... நான் வேற உங்கள பொற்கொடி சிஸ்டர் பொற்கொடி சிஸ்டர்னு சொல்லிட்டேனா...அதுனால தான் சிஸ்டர் உங்கள இதுல சேக்க முடியல சிஸ்டர் (என்ன ரெம்ப ஓவரா இருக்கோ?)


//sari, priyamanavale podunga :)//

கண்டிப்பா திங்கள்கிழமை போட்டுடறேன். நன்றி கேட்டதற்கு

(am fine, bloggerku thaan udambu mudiyama poiduchu.. thanks for asking!)

Oh I see, blogger இப்போ சுகமா?

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
ஆத்தாடி, கமண்ட்செக்ஷன் எதோ தங்கமணிகள் மாநாடுக்குள்ள வந்த மாதிரி இருக்கு...:)//

பதிவ படிக்காம கமெண்ட்அ படிச்சது மட்டும் இல்லாம டயலாக் வேறயா...அப்புறம் கவனிச்சுகறேன் பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது…
நல்லாயிருக்கு உங்க தேர்வுகள். அது என்னங்க முதல் 6 பேரோட பெயர் "pair" ஆகவே இருக்கு!//

நன்றிங்க ப்ரியா. எல்லாம் ஒரு இதுக்கு தான்

அப்பாவி தங்கமணி said...

//அமைதிச்சாரல் சொன்னது…
பத்து பெண்கள் தேர்வு நல்லாருக்கு.ரமணி சந்திரன் தனித்தன்மையான பேரு. அவ்வளவு லேசா ஜோடி கிடைச்சிடுமா என்ன?.ஆனாலும் ஏமாந்தது நிஜம்.//

நன்றிங்க அமைதிசாரல்... சரியா சொன்னீங்க...தனித்தன்மையான பேரு தான். நன்றி ஏமாந்ததுக்கும் படிச்சதுக்கும்

Post a Comment