Friday, April 09, 2010

முட்டை ஆம்லேட் தத்துவம்...

என்னோட ஆபிஸ் பயணம் பத்தி உங்க கிட்ட சொன்னதில்லனு நெனைக்கிறேன். எங்க அரண்மனை (சரி சரி ஒரு ஓட்ட வீடு தான்) இருக்கற எடத்துல இருந்து ஆபீஸ்க்கு distance னு பாத்தா ஒரு 35 km தான்

அந்த 35 km சாதாரணமா கார்ல போனா ஒரு 45 நிமிசத்துல போய்டணும். ஆன இந்த ______ பிடிச்ச ஊரு டிராபிக்ல 4 மணி நேரம் ஆகும். அது பரவா இல்லைனாலும் பார்கிங்க்கு தினம் 15 டாலர். அதுவும் போகட்டும்னு பாத்தாலும் பார்கிங் கெடைக்கணுமே. இந்த வம்பே வேண்டாம்னு தான் நான் subway train எடுத்துக்கறது (தலை சுத்துதா...இன்னும் ஆரம்பிக்கவே இல்ல)

ரங்கமணி வந்து ஸ்டேஷன்ல விட்டுட்டு போவாரு. அங்க இருந்து ரெண்டு ட்ரெயின் மாத்தி ஆணி எடுக்க வரணும்

இருங்க யாரோ என்னமோ சொல்றாங்க "இப்படி கஷ்டப்பட்டு ஆபீஸ் போய் ப்ளாக் எழுதறதுக்கு வீட்டுலையே எழுதலாமே"ன்னு யாரோ கேக்கற மாதிரி இருக்கு (நாம தனியா பேசுவோம்)

மொக்கை போதும் மேட்டர் என்னனு கேக்கறீங்களா? அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்? இருங்க இருங்க போகாதீங்க. சாரி சாரி hand slip எழுதிட்டு இருக்கேன்னு சொல்ல வந்தேன்

விடிய காலை ஏழரை மணிக்கி (ஓகே ஓகே நோ டென்ஷன்) வீட்டுல இருந்து கெளம்பி ட்ரெயின் ஏறி ஜன்னல் ஓர சீட் புடிச்சு.....underground ல போற ட்ரைன்ல எதுக்கும்மா ஜன்னல் சீட் அப்படின்னு கேக்கறீங்களா? அந்த சீட்ல தான் சாஞ்சு தூங்கறதுக்கு வசதியா sidepanel இருக்கும் (இதுவும் ஒரு பொழப்பானு....யாருப்பா அது இப்படி எல்லாம் பேசறது... தப்பு தப்பு)

எங்க விட்டேன்? ஆங்....ஜன்னலோர சீட்ல விட்டேன்.... ஜன்னலோர சீட் பிடிச்சு ஆனந்தமா லயிச்சி தூங்க ஆரம்பிச்சுடுவேன். சிலசமயம் எதாச்சும் ஒரு ஆத்மா/ஆத்மாக்கள் பக்கத்துல வந்து உக்காந்து ஏ. ஆர். ரஹ்மான் ரேஞ்சுக்கு காதுல ஒரு வயரே மாட்டிட்டு அவங்களுக்கு மட்டும் இல்லாம ஊருக்கே ஒலிபரப்பு செஞ்சா அன்னிக்கி தூக்கம் போயே போச்சு...

சரி எதாச்சும் கேக்கறாப்லயாச்சும் இருக்குமான்னு காது குடுத்தா (காதை கழட்டி எல்லாம் குடுக்கறது இல்ல...சும்மா செவி சாய்த்தல்...ஒகே...ஒகே) ஒரு எழவும் புரியாது....மொக்க இரைச்சல் தான் கேக்கும்.... அப்புறம் என்ன விதிய நொந்துட்டு தூங்க முடியாம போனதுக்காக "தூங்கநாங்சாமி" கிட்ட (மெய்யாலுமே இருக்குங்க....நம்புங்க) மன்னிப்பு கேட்டுட்டு ஜெர்னிய அதாவது பயணத்தை continue பண்ணுவேன்

ஐயோ தலைப்புக்கும் உன் மொக்க சுய சரிதைக்கும் என்ன சம்மந்தம்னு அவசரப்படாதீங்க.... அங்க தான் வர்றேன் (வந்து தொல...)

இன்னிக்கி காலைலயும் அதே மாதிரி அதிகாலை ஏழரை மணிக்கி .....(ஐயோ ஐயோ காதுல ரத்தம்னு யாரோ கத்தறாங்க...சரி சரி I will cut short)

மொதல் ட்ரெயின்ல ஆத்ம திருப்தியா தூங்கி எந்திரிச்சு ரெண்டாவது ட்ரெயின் ஏற்ரதுக்காக Escalator ல போயிட்டு இருந்தப்ப அங்க இருந்த சைடு போர்டுல இருந்த இந்த அரிய தத்துவம் கண்ணுல பட்டுச்சு

"You can't make an omlet without breaking a few eggs"

அட அட அட என்னா தத்துவம். இப்படி ஒரு நல்ல விசியத்த தெரிஞ்சுட்டு நாலு பேருக்கு சொல்லலைனா இந்த உலகம் என்னை மன்னிக்குமா (சொன்னதுக்காக தான் இப்ப சபிக்க போகுதுன்னு mind voice கேக்குது... இதோட தொல்ல ஓவர்ஆ போய்டுச்சு)

இந்த பதிவு இதோட முடிஞ்சதுன்னு நீங்க நெனச்சா...நீங்க என்ன புரிஞ்சுகிட்டது அத்தனை தான்னு அர்த்தம் (ஐயோ இன்னுமா? நாடு தாங்காதுடா சாமி - mindvoice )

இன்னும் என்ன சொல்ல போற.... சீக்கரம் கொதறி முடின்னு இப்படி எல்லாம் நீங்க கோவ படக்கூடாது.... கோவபட்டா ஹார்ட்க்கு நல்லதில்ல....உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்

என்ன சொல்ல வந்தேன்னா...ரெண்டாவது ட்ரெயின் ஏறினப்புரம் (அந்த ட்ரெயின்க்கு ஏன் யாரும் குண்டு வெக்கல ஐயோ - mindvoice ) எனக்குள்ள இந்த தத்துவமே ஓடிட்டு இருந்துச்சு (நீயும் கூடயே ஓடி இருக்க வேண்டியது தான - mindvoice )

இதே dailogue ஐ நம்ம சினிமா ஹீரோஸ் பேசினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை தோணுச்சு. அதை சொல்லி உங்கள எல்லாம் சந்தோசபடுத்தலாம்னு நல்ல எண்ணத்தோட வந்தா இந்த mindvoice தொல்ல ஓவரா போச்சு (எல்லாம் நேரம்டா சாமி. என்னோட டயலாக் எல்லாம் இது சொல்லுது - mindvoice )

ஒகே ஒகே மேட்டர்க்கு போலாம் (நாங்களும் போறோம் - mindvoice )

இந்த டயலாக்ஐ நம்ம நடிகர் திலகம் சிவாஜி பேசினா "அம்மாடி....கண்ணு...ஒரு ஆம்லேட் போடணும்னா...ஆ....சில முட்டைகள ஓடைச்சுதாம்மா ஆகணும்.... ஒடைச்சுத்தான் ஆகணும்....My lord please help me"

சிவாஜி சார் சொன்னத கேட்டதும் நம்ம கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி சொல்றத கேளுங்க "முடியாது கோபால் முடியாது... என்னால முடியவே முடியாது....முட்டைய ஒடைக்காம எப்படி கோபால் ஆம்லேட் போடுவேன்... முடியாது கோபால் முடியாது..."

இதையே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல சொன்னா "கண்ணா...ஆம்லேட் இல்ல ஆம்லேட்... அத...அத போடணும்னா...சில பல முட்டைகள கதம் கதம் பண்ணனும்... அந்த ஆண்டவன் சொல்றான் இந்த ரஜினி செய்யறான்...கூடி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்... ஹா ஹா ஹா... வர்ட்டா"

இத நம்ம உலக நாயகன் கமல் perform பண்ணினா "சரியாக சொல்வதென்றால் இந்த தத்துவத்தின் பின்னணி பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. ஷேக்ஸ்பியர் அவர்கள் Hamlet என்ற தொகுப்பை வெளியிட்ட போதே.... என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு ஆம்லேட் போட முட்டைகளை உடைக்காமல் முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்லி கொள்கிறேன்"

இத நம்ம இளைய தளபதி விஜய் அவர்கள் சொன்னா "ண்ணா...என்னங்ணா... ஒரு ஆம்லேட் மேட்டர்... சப்ப மேட்டரு... இதுக்கு போய் நான் என்னங்ணா சொல்றதுங்ணா... ஒரு ஆம்லேட் போடணும்னா முட்டைகள சும்மா சும்மா ஒடச்சு தட்டனும்ங்ணா... வர்றனுங்ணா"

நம்ம தல அஜித் சொல்றாரு "லே...யாருலே அது... சும்மா பேசிகிட்டு... ஆம்லேட் போடறதுன்ன முட்டைய போட்டு தள்ள வேண்டியதுதானல....அது..."

நம்ம கொங்கு சிங்கம்...அஞ்சா நெஞ்சர்... நக்கல் நாயகன்... ஆனாலும் பெரியார் சொல்றாரு "அம்மணி... இதெல்லாம் தகுடு தகுடு ஜிகினா மேட்டர் கண்ணு... ஆம்லேட் என்ன கண்ணு பெரிய ஆம்லேட்... அல்வாவே போட்டவனாமா நானு. நம்ம ஊரு பக்கம் அங்கண்ணன் கடைல போடுவாங்க பாருங்க ஆம்லேட்... அது...ஆம்லேட்... சரி நான் என்ன சொல்றேன்னா... அந்த ஆம்லேட் கெறகத்த போடணும்னா கழுத நாலு முட்டைகள ஒடச்சு தானுங்க ஆகோணும்....என்னங் நான் சொல்றது"
யாருன்னு சொல்ல வேண்டியதில்லன்னு நெனைக்கிறேன், நம்ம சத்தியராஜ் சார் தானுங்க

நம்ம நாட்டாமை சரத்குமார் வர்றாரு "எலேய்... என்றா அது ஆம்லேட் கீம்லேட்.... அதெல்லாம் ஒண்ணும் கூடாது... நாலு முட்டைய ஒடச்சு தான் ஆம்லேட் போடோனுன்னா... அந்த முட்டயுசரி அம்லேட்டும்சரி எல்லாரையும் ஊர உட்டே தள்ளி வெக்கறேன். ஆரும் அவிகளோட அன்னந்தண்ணி பொழங்ககூடாது. ஆமா சொல்லிபுட்டேன்... இது இந்த நாட்டமையோட தீர்ப்பு"

நம்ம கார்த்தி (என்னோட பிரியமானவளே தொடர்கதைல வர்ற கார்த்தி இல்லைங்க...இப்படி வெள்ளந்தியா இருக்கீகளே). இவரு நம்ம....நம்...ம... மௌனராகம் கார்த்திக் சொல்றாரு "என்ன...என்..ன...முட்டை...வாட் முட்டை? வாத்து முட்டையா? நோ நோ...நான் வந்து I mean ... ஆம்லேட் வந்து நான் நல்லா சாப்பிடுவேன்.... வாட் தத்துவமா? அப்டீனா? ஒ... யு mean philosophy ... I... I... know philosophy....எனக்கு... ரெம்ப.... பிடிக்கும்....அதாவது ஒரு ஆம்லேட் போடறதுக்கு egg இருக்கில்ல.... egg .... நம்ம அண்ணாச்சி கடைல எல்லாம் இருக்குமே... அத... அத... you... you... have to break...break... you know..."

"I know....I know...." என்றபடியே வந்தார் நம்ம ரகுவரன் "I know....I know... என்ன தெரியுமா? எல்லாம் தெரியும்... எனக்கு...எனக்கு எல்லாம் தெரியும்.... இந்த ஆம்லேட் இருக்கே அது அது I know... இந்த egg இருக்கே அது....அது... I know... you know ... இந்த egg ஒடைக்காம ஆம்லேட் போட எந்த கொம்பனாலையும் முடியாது....I know....I know... "

ரகுவரன் சூரவளில அங்க வந்த வைகை புயல் என்ன சொல்றாருன்னு பாப்போம் "ஹா ஹா ஹா....ஹா ஹா ஹா ஹா....நோ நோ நோ பேச்சு பேச்சா தான் இருக்கணும்....இருங்க சொல்ல வந்தது சொல்லிட்டு பெறகு உங்க அடிய எல்லாம் வாங்கிகறேன்....முட்ட இருக்கே முட்ட.... நல்லா வெள்ள வெளேர்னு என் பல்லு நெறத்துல... அதுல ரெண்டு நாலு எடுத்து நங்கு நங்குனு ஒடைக்காம ஆம்லேட் போட முடியுமா சொல்லுங்க மக்கா... இப்படி தான் நானு துபாய்ல இருந்தப்ப...." (எங்க இருந்த நீ.... என்றபடி பார்த்திபன் வர ஓட்டம் எடுத்தார் வடிவேலு)

வந்த பார்த்திபன் சும்மா போவாரா... அவரு பங்குக்கு சொல்றாரு "என்னது... ஆம்லேட்ஆ? எதுக்கு ஆம்லேட்டு டூலேட்னு பேசிகிட்டு இருக்கீங்க? என்னது தத்துவம் சொல்லணுமா? எதுக்கு? இல்ல எதுக்கு சொல்லணும்? எல்லாரும் சொன்னதுனால சொல்லணுமா? எல்லாரும் சொன்னா நான் எதுக்கு சொல்லணும்? என்னது சொல்ல வேண்டாமா? இல்ல நான் சொல்லுவேன்...என்னது குண்டக்க மண்டக்க பேசறனா.... அப்படினா? சரி சொல்றேன் கேளுங்க. ஆம்லேட் போடணும்னா முட்டைய ஓடைகனுங்க....நான் அப்படி தான் சொல்லுவேன்"

இதுக்கு மேல தாங்காதுடா சாமின்னு எல்லாரும் ஓடிட்டாங்க. நாமளும் போவோம்

இப்படியே எழுதிகிட்டே இருந்த இன்னிக்கி முடியாது. ரங்கமணி waiting in station... me going....sleeping in train...byeing byeing....

சனி ஞாயிறு ரெண்டு நாளும் நல்லா படிச்சு சிரிங்க. திங்ககிழமை அடுத்த மொக்கையோட வாரேன். Have a good weekend all...

60 பேரு சொல்லி இருக்காக:

sriram said...

இத படிச்சு ஒரு நல்ல Spring weekend ஐ கெடுத்துக்கணுமா?? :):)
சிரிப்பான் போட்டுட்டேன், நல்லா பாத்துக்கோங்க.

அப்புறம் 35KM போக நாலு மணி ஏன் எடுக்குது? எந்த ஊர்ல இருக்கீங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

நான் போணி பண்ணா வியாபாரம் நல்லா நடக்கும், முந்தா நேத்து டுபுக்கு பக்கத்தில் போணி பண்ணேன், நேத்து ஃபுல்லா செம கும்மி. இங்கயும் அப்படியே நடக்கட்டும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

My days(Gops) said...

vadai pochey :(

My days(Gops) said...

rotfl post :).

nalla irundhadhu, btw, neeeenga nerai ah tamil padam paarpeeenga pola...

2 ruva muttai'ku 40 episode'ku dialogue eludhi saachiteeenga... good job smile plz...

My days(Gops) said...

//நோ டென்ஷன்) வீட்டுல இருந்து கெளம்பி ட்ரெயின் ஏறி ஜன்னல் ஓர சீட் புடிச்சு.....underground ல போற ட்ரைன்ல எதுக்கும்மா ஜன்னல் சீட் அப்படின்னு கேக்கறீங்களா? அந்த சீட்ல தான் சாஞ்சு தூங்கறதுக்கு வசதியா sidepanel இருக்கும் //

ellaam soneenga right (left, straight neengaley paarthukonga) train'la porathuku ticket edupeeengala?

train'la thooongura maadhiri act koduthaa TTR ticket ketka maaataaaram'nu naaan kelvi patten :)

இனியா said...

Good one!!! NJ Transit?

Priya said...

அடஅடடா... என்னமா எழுதி இருக்கிங்க... படிக்கும்போது நடிகர்களின் வாய்ஸ் எஃப்க்டு இருந்தது உங்க எழுதுக்களுக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் முழுசா படிச்சு முடிக்குறதுக்குள்ள ரொம்பவே கண்ண கட்டிடுச்சி:)

Porkodi (பொற்கொடி) said...

enna new yorklaya irukinga?! adhuku kooda 4 mani nerama!!!

unga mind voice ku gops romba soru pottu valathu vutrukaru i think.. konjam patini podunga.. :D

Porkodi (பொற்கொடி) said...

//நான் போணி பண்ணா வியாபாரம் நல்லா நடக்கும், முந்தா நேத்து டுபுக்கு பக்கத்தில் போணி பண்ணேன், நேத்து ஃபுல்லா செம கும்மி. இங்கயும் அப்படியே நடக்கட்டும்//

adhu neenga boni pannadhala illa boss, naan vandhadhala.. ipovum inga naan vandhadhuku apram thaan gummu gummu nu gummi agum parunga! :D

Porkodi (பொற்கொடி) said...

soooberu ammani.. ellar voicelayum padichu paathu ore vi.vi.si!!!! nalla karpanai valam, adhukaga ipdi truetamilan rangeku ivlo neelamana posta!!!! pinringle..

sari, priyamanavale enga? :P

Porkodi (பொற்கொடி) said...

//சனி ஞாயிறு ரெண்டு நாளும் நல்லா படிச்சு சிரிங்க.//

enna koduma idhu, idhai padikka 2 naal aagum nu theirnje thaan post panningla? idhuku peru thaan appavithanama? :P

Complan Surya said...

என்ன கொடுமைட சாமி ..

முடியல ..

முடியல்ல ..

ஏன்??? ஏன்???

சிரிச்சு வயறு வலிக்குது .

லாஸ்ட் one day before than mc..(athanga medical leave.)
நிசம உங்க போல ஒரு புனியாவான் பதிவு படிச்சுட்டு வந்த பாதிப்பு..)
மறுபடயும

ஆக மொத்தம் kalakalana கல கல பதிவு

உங்கள் திறமைக்கு
வாழ்த்த வயதில்லை.

நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

Complan Surya said...

எங்கே
பிரியமானவளே தொடர்
எங்கள் சங்கம் காத்து இருக்கிறது...


next..marupadium vadiku sandiyappa sami.
ok vidunga athuku ellam kduthu vachuerukanum..

apprum
பல பேரு என்னலத்தான் போனி ஆகுதுன்னு பேசிக்றாங்க
எது எல்லாம் சரி இல்லை.
முதல்ல பதிவுக்கு ஒரு
திரிஸ்ட் சுத்தி போடுங்க
கண்ணு பட்டு விட போகிறது..

பின்குறிப்பு யாரயும் குறிப்பிட வில்லை
நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

sriram said...

//பல பேரு என்னலத்தான் போனி ஆகுதுன்னு பேசிக்றாங்க//

கொஞ்சம் என் பின்னூட்டத்தை நல்லா படிங்க, நான் போணி செஞ்சா நல்லா வியாபாரம் ஆகும்னுதான் சொன்னேன்

LK said...

அதிகாலையில் சிரிக்க வைத்ததற்கு நன்றி . ஆனாலும் உங்க லொள்ளு தாங்கல அம்மணி

ஸ்ரீராம். said...

வடிவேலு சொன்னதைப் போட்ட நீங்க பார்த்திபன் சொன்னதை போடாததற்கு வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரத்தில் மிச்ச மொக்கை எல்லாம் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது என்றாலும் திரும்பத் திரும்ப ட்ரெயின் சீட் என்று சொல்லியிருக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது என்று சொல்லும் நேரம் அது சொல்லாமல் பதிவைத் தொடர முடியாதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்த காலையில் சனி, ஞாயிறு இரண்டு நாள் இந்த இடம் பார்க்கப் படாமல் இருக்குமா என்ற ஐயத்தை உங்கள் வரிகள் எங்கள் மனதுள் விதைக்கின்றன என்பதை சொல்லாமலிருக்க முடியாதுதான் என்றாலும் மொத்தத்தில் இந்தப் பதிவு பற்றி சொல்ல வேண்டுமானால்...

அநன்யா மஹாதேவன் said...

good one! konjam long post! still did good.. keep writing

தமிழ் உதயம் said...

படிச்சு நல்லா சிரிச்சேன். ஹி.. ஹி.. ஹி..

சின்ன அம்மிணி said...

சிரிச்சேன். அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதையே ஆடியோ பதிவா நீங்க மிமிக்ரி செய்து அப்லோட் செய்திருக்கலாமில்ல்ல.. அடுத்த முறை ட்ரை செய்யுங்க..சூப்பருங்க எல்லாமே.. ஆனா நாட்டாமையா விஜயக்குமார் தானே வரனும்...

என்ன சரத்குமார் ஸ்டைல்ல தொலைச்சுப்புடுவேன்னு சொல்றீங்க்ளா..இந்தா ஓடிட்டேன்..

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
இத படிச்சு ஒரு நல்ல Spring weekend ஐ கெடுத்துக்கணுமா?? :):)
சிரிப்பான் போட்டுட்டேன், நல்லா பாத்துக்கோங்க.//

spring weekend ஆ? ஏங்க டென்ஷன் பண்றீங்க? இங்க பனி விழும் மலர் வனம்னு பாடராப்ல கொடுமையா இருக்கு. போன வாரம் weather நல்லாத்தான் இருந்தது...யாரு கண்ணு பட்டுச்சோ...


//அப்புறம் 35KM போக நாலு மணி ஏன் எடுக்குது? எந்த ஊர்ல இருக்கீங்க//

எந்த ஊரா? எல்லாம் இந்த Toronto (கனடா) மாநரகத்துல (ஸ்பெல்லிங் mistake எல்லாம் இல்லைங்க நரகம்னு தெரிஞ்சே தான் சொன்னேன். அதுவும் எங்க ஆபீஸ் கொடுமைக்கி பக்கா டௌன்டவுன், விதி

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
நான் போணி பண்ணா வியாபாரம் நல்லா நடக்கும், முந்தா நேத்து டுபுக்கு பக்கத்தில் போணி பண்ணேன், நேத்து ஃபுல்லா செம கும்மி. இங்கயும் அப்படியே நடக்கட்டும்//

ஆஹா... இந்த டீல் நல்லா இருக்கே? நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
vadai pochey :(//

நோ பீலிங்க்ஸ் பிரதர்...நெக்ஸ்ட் டைம் ஒகே.. ஒகே

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
rotfl post :).nalla irundhadhu, btw, neeeenga nerai ah tamil padam paarpeeenga pola...2 ruva muttai'ku 40 episode'ku dialogue eludhi saachiteeenga... good job smile plz//

நன்றி கோப்ஸ். நெறைய படம் பாக்கறது உண்மை தான். இந்த பனிகாட்ல வேற என்னத்த தான் செய்ய

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
ellaam soneenga right (left, straight neengaley paarthukonga) train'la porathuku ticket edupeeengala?
train'la thooongura maadhiri act koduthaa TTR ticket ketka maaataaaram'nu naaan kelvi patten :)//

அடப்பாவி.... நம்மள யாருமே அப்பாவின்னு நம்ப மாட்டேன்கரான்களே....இப்படி எல்லாம் பேச்சு வந்துட கூடாதுன்னு தான் பத்து டாலர் அதிகமா போனா போகட்டும்னு நான் monthly pass வாங்கிக்கறது (உண்மைய சொல்லனும்னா தினமும் டிக்கெட் வாங்க சோம்பேறித்தன பட்டுட்டு தான் இந்த ஏற்பாடு. இந்த தொழில் ரகசியத்த யாராச்சும் ரங்கமணிகிட்ட சொன்னீக.... அப்புறம் நல்லா இருக்காது....ஆமா...)

அப்பாவி தங்கமணி said...

//இனியா சொன்னது…
Good one!!! NJ Transit?//

No Iniya. Toronto Transit (canada). Thanks for your visit to the blog

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது…
அடஅடடா... என்னமா எழுதி இருக்கிங்க... படிக்கும்போது நடிகர்களின் வாய்ஸ் எஃப்க்டு இருந்தது உங்க எழுதுக்களுக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் முழுசா படிச்சு முடிக்குறதுக்குள்ள ரொம்பவே கண்ண கட்டிடுச்சி:)//

ரெம்ப நன்றிங்க ப்ரியா. கண்ண கட்டிடுச்சா...ஆஹா

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
enna new yorklaya irukinga?! adhuku kooda 4 mani nerama!!!//

இல்லைங்க பொற்கொடி நமக்கு இங்க Toronto (கனடா). ஆபீஸ் இருக்கறது core downtown . அது தான் இந்த கொடுமை

//unga mind voice ku gops romba soru pottu valathu vutrukaru i think.. konjam patini podunga.. :D//

சரியா சொனீங்க பொற்கொடி.... கவனிச்சுகறேன்

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
adhu neenga boni pannadhala illa boss, naan vandhadhala.. ipovum inga naan vandhadhuku apram thaan gummu gummu nu gummi agum parunga! :D//

அச்சச்சோ.. நோ பைட்டிங்... நோ பைட்டிங்.... இதோ கம்மிங் வெள்ளை கொடி....வெள்ளை கொடி

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
soooberu ammani.. ellar voicelayum padichu paathu ore vi.vi.si!!!! nalla karpanai valam, adhukaga ipdi truetamilan rangeku ivlo neelamana posta!!!! pinringle.. //

நன்றிங்க பொற்கொடி.... கொஞ்சம் நீளமாதான் போய்டுச்சுங்க.... இன்னும் கற்பனை குதிரை ஓடிகிட்டே தான் இருந்தது... இழுத்து புடிக்கரதுக்குள்ள என்பாடு உம்பாடுனு ஆகி போச்சு போங்க...

//sari, priyamanavale enga? :P//

பிரியமானவளே திங்கள்கிழமை ரிலீஸ்...கேட்டதற்கு ரெம்ப நன்றி

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
//சனி ஞாயிறு ரெண்டு நாளும் நல்லா படிச்சு சிரிங்க.//
enna koduma idhu, idhai padikka 2 naal aagum nu theirnje thaan post panningla? idhuku peru thaan appavithanama? :P//

ஆஹா.. ரங்கமணி கேட்ட அதே கொஸ்டின் ரிபீட் ஆகுதே....இது எதாச்சும் உள்நாட்டு சதியா.... மெய்யாலுமே அப்பாவி தானுங்க நானு

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப ரெம்ப நன்றி சூர்யா... (ஆனா சந்தடி சாக்குல எனக்கு வயசாச்சுன்னு சொல்லிடீக.... வெவரமாதான்யா இருக்காக)

அப்பாவி தங்கமணி said...

சூர்யா - பிரியமானவளே தொடர் திங்கள் ரிலீஸ் பிரதர். உங்கள் சங்கத்தின் தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் தன்யனானேன். திருஷ்டி சுத்தி போட்டுட்டேன் நீங்க சொன்னாப்ல. (நோ பைட்டிங் நோ பைட்டிங் சூர்யா / ஸ்ரீராம் / பொற்கொடி)

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
//பல பேரு என்னலத்தான் போனி ஆகுதுன்னு பேசிக்றாங்க//
கொஞ்சம் என் பின்னூட்டத்தை நல்லா படிங்க, நான் போணி செஞ்சா நல்லா வியாபாரம் ஆகும்னுதான் சொன்னேன்//

நோ பைட்டிங் நோ பைட்டிங் வெள்ளை கொடி ..... வெள்ளை கொடி

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
அதிகாலையில் சிரிக்க வைத்ததற்கு நன்றி . ஆனாலும் உங்க லொள்ளு தாங்கல அம்மணி//

நன்றிங்க LK . அந்த லொள்ளு பொறந்த ஊரு சொத்து... எங்க போகுமுங்க...

அப்பாவி தங்கமணி said...

ஸ்ரீராம பிரானே.... நான் தோல்விய ஒத்துக்கறேன்... கமல் சார் கூட இத்தன நீளமா டயலாக் பேச முடியாது

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
good one! konjam long post! still did good.. keep writing//

ரெம்ப நன்றிங்க அனன்யா... கொஞ்சம் பெரிய பதிவா தான் ஆய்டுச்சு

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
படிச்சு நல்லா சிரிச்சேன். ஹி.. ஹி.. ஹி..//

ரெம்ப நன்றிங்க தமிழ் உதயம்...

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
சிரிச்சேன். அருமை//

ரெம்ப நன்றிங்க அம்மணி

அப்பாவி தங்கமணி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…
இதையே ஆடியோ பதிவா நீங்க மிமிக்ரி செய்து அப்லோட் செய்திருக்கலாமில்ல்ல.. அடுத்த முறை ட்ரை செய்யுங்க..சூப்பருங்க எல்லாமே..//

என்னங்க முத்துலெட்சுமி.... இதுக்கே எல்லாரும் தெரிச்சு ஓடறாங்க.... இன்னும் நம்ம கொரல வேற கேட்டா... அம்புட்டு தான்...உங்க பாராட்டுக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க


//ஆனா நாட்டாமையா விஜயக்குமார் தானே வரனும்...என்ன சரத்குமார் ஸ்டைல்ல தொலைச்சுப்புடுவேன்னு சொல்றீங்க்ளா..இந்தா ஓடிட்டேன்..//

அட... இது கூட நல்லா இருக்கே... ரங்கமணிகிட்டயும் இதை ட்ரை பண்ணிடுவோம்

தக்குடுபாண்டி said...

ஏன் இந்த கொலவெறி?? பிரியமானவளே! கதை நன்னாதானே போய்கிட்டு இருந்தது????...:)

தக்குடுபாண்டி said...

//ஆனா நாட்டாமையா விஜயக்குமார் தானே வரனும்...என்ன சரத்குமார் ஸ்டைல்ல // ஹலோ! நாட்டாமை விஜயகுமாரும் இல்லை, சரத்குமாரும் இல்லை, ஒன் அண்டு ஒன்லி நாட்டாமை(பதிவுலக) பாஸ்டன்ல இருக்கார்னு 'சியாட்டில் சிங்காரி' சொல்ல சொன்னாங்க!...:)

என்றும் வம்புடன்,
தக்குடு

Porkodi (பொற்கொடி) said...

thakkudu, unga kallidai address sollunga.. appa amma kitta ponna mudikka solidaren, thangamani illama you're a kadivalam-less kudhirai.. talking bledy naan sans!

My days(Gops) said...

//'சியாட்டில் சிங்காரி' சொல்ல சொன்னாங்க!...:) //

ai idhukooda nalla irukey :)

My days(Gops) said...

@kodi:- //unga mind voice ku gops romba soru pottu valathu vutrukaru i think.. konjam patini podunga.. :D//

selaadhu selaadhu, naaney naalu naaalaiku oru naal thaan soru saapdren..

venum'na bread, butter'nu menu'va maathidunga :)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - கொலைவெறியா? வேற இப்படி உங்கள எல்லாம் பழி தீக்கறது. பாஸ்டன் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

@ பொற்கொடி - சூப்பரு.. நல்லா சொன்னிங்க.... கால் கட்டு போட்டாதான் சரி வரும்

@ Gops - அட ஆமா, நல்லா இருக்கே? bread butter ஆ? நம்ம தக்குடு மாதிரி சீக்கரமா நல்லா சமைச்சு பழகுங்க... பிற்காலத்துல ரெம்ப உதவும்

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு!!

தக்குடுபாண்டி said...

//thangamani illama you're a kadivalam-less kudhirai.. talking bledy naan sans!
// ஹலோ கேடி, இந்த பெயரை நான் ஒன்னும் உங்களுக்கு வைக்கலை, நீங்கதான் டுபுக்கு போஸ்ட்ல சொல்லியிருந்தீங்க, சரி அந்த பெயரை கொஞ்சம் பிரபலபடுத்தினா உங்களோட கேடி பட்டம் போகுமேனு பார்த்தா?? எனக்கு ஆப்படிக்க பாக்கறேளே?? நியாயமா இது?? இதுக்கு நம்ம 'அடப்பாவி'யும் சப்போர்ட்டு....:)

வேங்கை said...

நல்லா இருக்கு தங்கமணி

எப்புடி இப்படியலாம்................................

வாழ்த்துக்கள்

Complan Surya said...

stop fight..

stop fight...

enna nadkuthu enga..chinnapulinga erukira edathila enna sanda vendikidakku..

lestion

carefully...

yela nattamai engada poita..

therppa mathi chollu..

nandri
valga valamudan
v.v.s
complan surya

அன்புடன் மலிக்கா said...

அச்சோ அப்பாவி தங்கமணின்னு நெனச்சேனே! இப்படியா நடக்கனும்
யாருப்பா அது இனி ரயிலில் ஆளுகளை பார்த்து ஏத்துங்கப்பா தாங்கலடா அப்போவ்வ்வ்வ்வ்வ்வ்.

நாங்களும் நீரோடையில் கத சொல்லிகிறோம் கிரேண்மா கத வந்து பாருங்க..

அப்பாவி தங்கமணி said...

@ ரேஷன் ஆபிசர் - நன்றிங்க

@ தக்குடு - நோ டென்ஷன் பிரதர். சீக்கரம் வாழ்க்கைல செட்டில் ஆகட்டும்னு நல்ல எண்ணத்துல சொன்னேன் (ஐயோ நான் அப்பாவி தான் அப்பாவி தான் அப்பாவி தான், நோ மோர் அடப்பாவி)

@ வேங்கை - நன்றிங்க வேங்கை. எப்படியோ போகுது

@ காம்ப்ளான் சூர்யா - நானும் அதே தான் சொல்றேன் சூர்யா. நாட்டமைய கூப்பிடுங்க

@ அன்புடன் மலிக்கா - ஆஹா.... யாரும் நம்மள அப்பாவின்னு ஒத்துக்க மாட்டேன்கரான்களே. ஐ, கதையா, இதோ இப்போ பாத்துடறேன். ரெம்ப நன்றிங்க மலிக்கா

அனாமிகா துவாரகன் said...

யாருப்பா அங்கே, இவங்கள கட்டிண்ட அப்பாவியிடம் எனது அனுதாபத்தை தெரிவியுங்கள். என்னமா கடிக்கிறாங்க. நீங்களெல்லாம் பங்களா கட்டிண்டு யோசிக்கிறவங்கனு புரிஞ்சிடுச்சு. வீசிங்கோட சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிவிட்டது. கண்டனங்கள். ஹம்ப்.

பி.கு: படிக்கும்போது நடிகர்களின் வாய்ஸ் எஃப்க்டு இருந்தது பிரமாதம்.

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் said யாருப்பா அங்கே, இவங்கள கட்டிண்ட அப்பாவியிடம் எனது அனுதாபத்தை தெரிவியுங்கள். என்னமா கடிக்கிறாங்க. நீங்களெல்லாம் பங்களா கட்டிண்டு யோசிக்கிறவங்கனு புரிஞ்சிடுச்சு. வீசிங்கோட சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிவிட்டது. கண்டனங்கள். ஹம்ப்.
பி.கு: படிக்கும்போது நடிகர்களின் வாய்ஸ் எஃப்க்டு இருந்தது பிரமாதம்//

ஒருத்தர் கூட நான் தான் அப்பாவிங்கரத புரிஞ்சுக்கவே மாட்டேன்கரான்களே....My lord help me....
நன்றிங்க அனாமிகா உங்கள் பாராட்டுக்கும் படிச்சதுக்கும்

Madhuram said...

Supera irundhadhunga. I came here from Dubuku's blog. From there I'm visiting a lot of interesting blogs.

Neenga, kodi ellam ezhudharadha paartha poraamaiya irukunga. Kalakunga.

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - ரெம்ப நன்றிங்க மதுரம். உங்க egglesscooking சைட் கலக்கலா இருக்குங்க

Gayathri said...

chanseu illa akka padikurappo apdiye actors kannukulla kandhuttanga..

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - thanks a lot Gayathri

மகாதேவன்-V.K said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ மகாதேவன்-V.K - ரெம்ப நன்றிங்க மகாதேவன்

Post a Comment