Wednesday, April 14, 2010

குப்புசாமியும் கீதா பாட்டியும் - தமிழ் புத்தாண்டு கலாட்டா

"ஹலோ... யாரு கோமளாவா? இதோ கெளம்பிட்டே இருக்கேன்" என்று போன்ஐ வைத்து விட்டு கீதா திரும்ப தன்னையே எரிப்பது போல் பார்த்து கொண்டிருந்த கணவன் குப்புசாமியிடம்

"என்ன man ? எதுக்கு இப்படி மொறைக்கற?"

"ஏய் கெழவி. நான் ஒரு மணி நேரமா ஒரு நூறு ருபாய்காக நின்னுட்டு இருக்கேன். நீ பாட்டுல எங்க கெளம்பற?"

"எனக்கு லேடீஸ் கிளப் மீட்டிங்க்கு நேரம் ஆச்சு. Evening வரைக்கும் வெயிட் ஓல்ட் man "

"ஏய் கெழவி.... லேடீஸ் கிளப்ல போய் அந்த கிழவிங்க கூட வெட்டி ஞாயம் பேசறதுக்கு என்ன அவசரம்"

"வெட்டி ஞாயமா. இன்னிக்கி தமிழ் நியூ இயர் celebration பத்தி முக்கியமான மீட்டிங் இருக்கு"

"அது ஒண்ணு தான் கொறச்சல்"

"நம்ம பொண்ணு கனடால இருந்து பேசினத கேக்கலையா கெழவா. அவ தமிழ் friends எல்லாம் சேந்து தமிழ் நியூ இயர் celebrate பண்ண போறாங்களாம். வேற நாட்டுல இருக்கறவங்களே கொண்டாடரப்ப தமிழ் வுமன் நான் கொண்டாடகூடாதா"

"கொண்டாடறது இருக்கட்டும்...மொதல்ல தமிழ்ல ஒரு வாக்கியம் ஆங்கிலம் கலக்காம பேசு கெழவி"

"எல்லாம் எனக்கு தெரியும் இதுக்கே இன்னிக்கி உனக்கு பேட்டா கட்" எனவும்

"ஐயோ அப்படி சொல்லாதே கீதே" என கெஞ்ச கெஞ்ச

"Nothing Doing " என்று விட்டு கார் ஏறி கிளம்பினார் கீதா

சற்று நேரத்தில் அங்கு வந்த குப்புசாமியின் ஒரே வடிகால் நண்பன் assistant எல்லாமான கொத்சுகுண்டு, குப்புசாமி தலையில் கை வைத்து அமர்திருப்பதை பார்த்து

"என்னாச்சு தாத்தா? ஏன் இப்படி கப்பல் கவுந்தாப்ள இருக்கீங்க" என்றான்

"கப்பல் இல்லடா கொத்சு, இந்த கெழவி தான் கவுத்துட்டா"

"விடுங்க தாத்தா நம்ம பாட்டி தான"

"இல்லடா கொத்சு. அவ கிளப்ல நடக்க போற தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிலயே அவளுக்கு பாடம் புகட்டுறேன்" என்று கர்ஜித்தார் குப்புசாமி

அந்த நாளும் வந்தது

---------------------

விழா மேடையில் லேடீஸ் கிளப் ப்ரெசிடென்ட் கீதா பாட்டி வரவேற்புரை ஆற்றி கொண்டு இருந்தார்

"நம்ம லேடீஸ் கிளப் விழாவுக்கு வந்திருக்கும் எல்லாருக்கும் ஹாப்பி தமிழ் நியூ இயர்...."

"கேட்டியாடா கொத்சு, ஹாப்பி தமிழ் நியூ இயர்ஆம்... இருடி கீதா வெக்கறேன்டி உனக்கு ஆப்பு" என கறுவி கொண்டிருந்தார் குப்பு

கீதா: "இப்போ நம்ம சீப் (cheap இல்லைங்க chief ) கெஸ்ட் வளரும் டிவி நடிகை ஜலஜா சிறப்புரை ஆற்றுவார்கள்"

ஜலஜா: "எல்லார்க்கும் வண்க்கம். என்க்கு டமில் கொஞ்ச கொஞ்ச வர்து...."

"எனக்கு இத கேட்டா வாந்தி வாந்தி வர்து..." என குப்புசாமி சைடு கமெண்ட் குடுத்து கொண்டு இருந்தார் கொத்சுவிடம்

ஜலஜா: "இன்க்கி டமில் நியூ இயர்னு சொல்லுது. அதுக்கு நான் உங்கள்ல்கி விஷ் பண்ணுது"

குப்ஸ்: "ஆண்டவா இந்த கொடுமைல இருந்து தமிழ் மக்களுக்கு விடிவே இல்லையா..."

ஜலஜா: "என்க்கு சூட்டிங் இர்கி. ஒரே ஹாட்ஆ இர்கி. நான் bye சொல்லுது..."

குப்ஸ்: "போய் தொல சனியனே...டேய் கொத்சு என்னடா இந்த ஜலஜா மூஞ்சிய இப்படி பாக்குற"

கொத்சு: "தாத்தா...இந்த ஜலஜாவ எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"

குப்ஸ்: "எதாச்சும் அழு மூஞ்சி சீரியல்ல பாத்து இருப்ப டிவில"

கொத்சு: "இல்ல தாத்தா. நேர்ல பாத்து இருக்கேன்"

குப்ஸ்: "டேய் மெதுவா பேசு... அவளோட ஆள் யாராச்சும் கேட்டா நீ சட்னி தான்"

கொத்சு: "ஐயோ இல்ல தாத்தா நிச்சியமா நேர்ல பாத்து இருக்கேன்"

குப்ஸ்: "இப்படி நிச்சியமா சொல்றயே... யாரு?" என சற்று நேரம் மண்டையை உடைக்க, சட்டென பல்பு எரிய "யுரேகா" என கத்தினார் சத்தமாக

எந்த அளவுக்கு சத்தமாக கத்தினார் என்றால் மேடையில் இருந்த கீதா பாட்டி திரும்பி முறைக்கும் அளவுக்கு

"மொரக்கறையா...மொறடி மொற. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊரே உன்ன பாத்து மொறைக்க போகுது. நான் சின்ன பிளான் போட்டு வெச்சு இருந்தேன் நீ சூப்பர் பிளான் குடுத்துட்டே... ஒண்ணுக்கு ரெண்டா தாக்கறேன். டேய் கொத்சு என் செல்லம்டா நீ"

"என்ன தாத்தா ஆச்சு உங்களுக்கு? அந்த ஜலஜா யாருன்னு கேட்டா என்ன என்னமோ சொல்றீங்க"

"இப்படி காதை குடு சொல்றேன்" குப்புசாமி சொன்னதும் கொத்சு மயங்கி விழுந்தான்

அதற்குள் மேடையில் கீதா பாட்டி பேச குப்புசாமி அந்த பக்கம் கவனம் செலுத்தினார்

கீதா: "இப்போ தமிழ் நியூ இயர் ஸ்பெஷல் cultural ப்ரோக்ராம் பாத்து என்ஜாய் பண்ணுங்க"

"அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க...." என்ற பாடலுக்கு கிளப் செக்ரட்டரி கோமளாவின் பேத்தி ஐஸ்வர்யா குத்தாட்டம் போட்டார்

குப்ஸ்: "அட அட கருத்தாழம் மிக்க பாடல். பாவிங்களா... தமிழ் புத்தாண்டுக்கு நாக்க முக்கவா....இருடி கெழவி நாக்கும் மூக்கும் வெளிய தல்றாப்ள நான் போடறேன் குண்டு"

இப்படியாக சில பல அரிய தமிழ் பாடல்கள் ஒலித்த பின் கீதா நன்றி நவில வந்தார்

அதற்கே காத்து இருந்த குப்புசாமி விரைந்து மேடைக்கு சென்றார்

கீதா: "இப்போ...."

அதற்குள் கீதா பாட்டியை இடிப்பது போல் தள்ளிவிட்டு இடைமறித்த குப்புசாமி "உங்க ப்ரெசிடென்ட் கீதா தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது நன்றி நவிலலை ஆங்கிலம் கலக்காமல் ஐந்து நிமிடம் செந்தமிழில் பேசுவார்" என முதல் குண்டை போட்டார்

அவரை எரிப்பது போல் பார்த்த கீதா மைக் முன் திகைத்து நின்றார்

"அது... அது... வந்து எனக்கு தொண்டை ம்கும்கும்....தொண்டை கொஞ்சம் சரி இல்ல...அதனால எல்லாருக்கும் நன்றி.... இதோட என்னோட நன்றிய முடிச்சுகறேன்..." என எஸ் ஆக பார்க்க

"கொஞ்சம் இரு கீதா.... உன்னோட சீப் guest கிட்ட சில கேள்விகள் நான் கேக்கணும்...." என குப்புசாமி கூற ஜெர்க் ஆனார் கீதா பாட்டி

"அது.... ஜலஜா மேடம்க்கு ஷூட்டிங் இருக்கு....இல்லையா மேடம்...." என கீதா இழுக்க

"அது ஆமா ஆமா....போகணும் எனக்கு" என அழகு தமிழில் ஜலஜா உளற

"அட அட .... ஜலஜா மேடம் ஒரு மணி நேரத்துல என்ன அழகா தமிழ் கத்துகிட்டீங்க..... நீங்க எந்த டிவில நடிக்கரீங்கன்னு சொல்ல முடியுமா..."

ஜலஜா: "அது அது.... நான் வந்து..."

கீதா: "அது ஜலஜா மேடம் நெறைய டிவில நடிக்கரதால அவங்களுக்கு....."

குப்ஸ்: "இரு கீதா....மேடம் பேசட்டும்"

அதற்குள் ஜலஜா நழுவ முயல "சரசா நில்லு...." என குப்புசாமி குரல் கொடுக்க டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா போல் தூக்கிய கால் அப்படியே இருக்க சிலையாய் நின்றார் நடிகை

கீதா: "Mr . குப்புசாமி நீங்க எங்க கிளப் function ல இப்படி கலாட்டா பண்றது சரி இல்ல... நீங்க கெளம்புங்க ஜலஜா மேடம்...." என்று சமாளித்தாள்

குப்புசாமி கீதாவிடம் ரகசியமாக "கீதே, அவசர உப்புமா மாதிரி ஆளு கிடைக்காததால நீ நம்ம வேலைக்காரி சரசாவ ஜலஜா ஆக்கின கதை இப்போ இங்க இருக்கறவங்களுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" என கிசு கிசுக்க

"வேண்டாம் Mr . இதோட பின் விளைவுகள் ரெம்ப மோசமா இருக்கும்" என்றார் கீதா யாருக்கும் கேட்காத குரலில்

குப்ஸ்: "அப்படின்னா இனிமே எனக்கு தினமும் 200 ரூபா பேட்டா தருவேன்னு சொல்லு நான் பேசாம போய்டறேன்"

கீதா: "தொலைக்கிறேன்...போய் தொலைங்க" என்றாள் பல்லை கடித்தபடி

குப்ஸ்: "மன்னிச்சுடுங்க நான் ஏதோ தப்பா புரிஞ்சுட்டேன்" என்று மைக்கில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தான் நினைத்ததை சாதித்த பெருமிதத்துடன் அவ்விடத்தை விட்டு சென்றார் குப்பு

இப்படியாக கீதா குப்புசாமி தம்பதியின் தமிழ் புத்தாண்டு கலாட்டா நிறைவுக்கு வந்தது

நீங்களும் போய் சந்தோசமா கொண்டாடுங்க

ஹாப்பி டமில் நியூ இயர் சாரி சாரி மன்னிச்சுகோங்க "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

தமிழ் பேச்சு எங்கள் மூச்சென
தமிழில் உரையாடுவோம்
எப்போதும் செய்வோமென்பது
எல்லோர்க்கும் சாத்தியமில்லை
இன்று ஒரு நாளேனும்
இயன்றவரை செயலாக்குவோம்
புத்தாண்டை சிறப்பிப்போம்
புன்னகையுடன் கொண்டாடுவோம்!!!

39 பேரு சொல்லி இருக்காக:

LK said...

மீ தி பிரஸ்ட்

புத்தாண்டு அன்னிக்கு நல்ல நகைச்சுவை விருந்து, நன்றி அப்பாவி தங்கமணி

sriram said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமைதிச்சாரல் said...

இன்க்கி டமில் ந்யூ இயர்க்கு நம்பளும் விஷ் பண்ணுது.

பஹூத் சிர்க்கவெக்றீங்கோ. நன்றி.

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முக்கால் ப்ளேடு முத்து சாமியைக் காணோமே...விட்டுட்டீங்களா..

padma said...

அந்த சரசா அவ்ளோ அழகா என்ன?
ஹ்ம்ம் சிரிப்போடு ஆரம்பிக்குது புது வருடம் .வாழ்க

My days(Gops) said...

pochi :)

My days(Gops) said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ LK - நன்றிங்க LK . விருந்தை ரசித்ததற்கு

@ பாஸ்டன் ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம்

@ அமைதிச்சாரல் - காப்பாத்துங்க... காப்பாத்துங்க... அவிகளா நீங்க... ரெம்ப நன்றிங்க

@ ஸ்ரீராம் - முக்கால் ப்ளேடு முத்து சாமி முக்கியமான ஒரு விசியமா ஒபாமாகூட பேசிட்டு இருக்கார் ஸ்ரீராம். நம்ம பாஸ்டன்காரரை கேட்டா சற்று முன் கிடைத்த தகவல் கெடைக்கலாம். நன்றிங்க படித்ததற்கு

@ பத்மா - நீங்க பாத்ததில்லயா சரசாவ. நாளைக்கு உங்க வீட்டுக்கு வர சொல்றேன் (ஓடாதீங்க...). நன்றிங்க பத்மா

@ My Days (Gops) - ரெம்ப நன்றிங்க

தமிழ் உதயம் said...

அப்புசாமியையும் சீதாபாட்டியையும் ஞாபகப்படுத்திட்டீங்க. பாக்கியம் ராமசாமி கோபிக்க போறார்.

அனாமிகா துவாரகன் said...

haaaaaaaaaaa haaaaaaaa haaaaaaaaa.

ஹுஸைனம்மா said...

ரொம்ப நல்லாருக்கு!! ‘பாக்கியம் ராமசாமி’ மாதிரி ‘அப்பாவி தங்கமணி’யா?

sriram said...

//நம்ம பாஸ்டன்காரரை கேட்டா சற்று முன் கிடைத்த தகவல் கெடைக்கலாம்.//

என்னை வம்புக்கு இழுக்கறதயே கழகக் கண்மணிகளெல்லாம் முழு நேர வேலையா வச்சிருக்கீங்க போலருக்கே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தாராபுரத்தான் said...

வணக்கம்மா.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பதிவு கலக்கல் .
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

புதுகைத் தென்றல் said...

சூப்பர்பா, அப்புசாமி-சீதாபாட்டி கதை படிச்சா மாதிரியே இருந்துச்சு.

கட்சிசில வெச்சீங்க மெச்ஜை.

பாராட்டுக்கள்

செ.சரவணக்குமார் said...

நகைச்சுவை இழையோடும் நல்ல பதிவு.

Jawahar said...

’இது நீங்க எழுதினது இல்லைங்க, தங்கமணி எழுதினது’ ந்னு சொன்னா ஜ.ரா.சுந்தரேசனே நம்ப மாட்டார்!

ரொம்ப சிறப்பா வந்திருக்கு....

http://kgjawarlal.wordpress.com

அப்பாவி தங்கமணி said...

@ தமிழ் உதயம் - ரெம்ப நன்றிங்க தமிழ் உதயம். ஐயோ அவர் எங்க நான் எங்க. Comparision கூட பண்ண முடியாதுங்க

@ அனமிகா - ஹி ஹி ஹி . நன்றிங்க அனாமிகா

@ ஹுஸைனம்மா - பாக்கியம் ராமசாமி மாதிரி எல்லாம் இல்லைங்க. He is a legend. நாம ஏதோ கற்பனைல ஓட்டிட்டு இருக்கோம்

@ பாஸ்டன் ஸ்ரீராம் -
//என்னை வம்புக்கு இழுக்கறதயே கழகக் கண்மணிகளெல்லாம் முழு நேர வேலையா வச்சிருக்கீங்க போலருக்கே//
பின்ன, தலைவர் பதவி சும்மாவா குடுப்பாங்க. நாட்டாமைனா நாலும் டீல் பண்ணணுமில்லையா Boss . நன்றிங்க நாட்டமை

@ தராபுரதான் - நன்றிங்க

@ பனித்துளி சங்கர் - ரெம்ப நன்றிங்க சங்கர் தொடர்ந்த வருகைக்கு

@ புதுகை தென்றல் - ரெம்ப நன்றிங்க புதுகை

@ சரவணகுமார் - மிக்க நன்றிங்க சரவணக்குமார்

@ ஜவஹர் - ரெம்ப நன்றிங்க ஜவஹர். ஜ.ரா.சுந்தரேசன் எல்லாம் ஜாம்பவான்கள் சார். மிக்க நன்றி

sriram said...

//நாட்டாமைனா நாலும் டீல் பண்ணணுமில்லையா Boss .//

நாலும் டீல பண்றது பெரிய விஷயமில்லை, ஆனா இங்க நாலும் அறுந்த வாலாயிருக்கே (கேடி, அனன்யா, நீங்க மற்றும் தக்குடு)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

@ Sriraam Said

//நாலும் டீல பண்றது பெரிய விஷயமில்லை, ஆனா இங்க நாலும் அறுந்த வாலாயிருக்கே (கேடி, அனன்யா, நீங்க மற்றும் தக்குடு)//


ஆஹா... அறுந்த வாலா. என்னோட இத்தன வருஷ (ரெம்ப எல்லாம் ஒண்ணும் இல்ல) வாழ்க்கைல என்ன யாரும் இப்படி ஒரு வார்த்த சொன்னதில்ல. நான் ரெம்ப அப்பாவிங்க பிரதர் நம்புங்க (நானும் இத சொல்லிட்டே தான் இருக்கேன், யாரும் நம்பராப்ல காணோம்... ஹும்...)

ஆனா நீங்க தக்குடுவ சொன்னது வேணா கரெக்ட். நான், கேடி, அனன்யா எல்லாம் ரெம்ப பாவம்

தக்குடுபாண்டி said...

//கெஸ்ட் வளரும் டிவி நடிகை ஜலஜா // ஜலஜா!னு படிச்சோன்னே எனக்கு கோப்ஸுக்கு எல்லாம் வேற ஞாபகம் வந்துருத்து...:)

தக்குடுபாண்டி said...

//நாலும் டீல பண்றது பெரிய விஷயமில்லை, ஆனா இங்க நாலும் அறுந்த வாலாயிருக்கே (கேடி, அனன்யா, நீங்க மற்றும் தக்குடு)// பாஸ்டன் நாட்டாமை, தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும்..........:)

என்றும் வம்புடன்,
தக்குடு

தக்குடுபாண்டி said...

/ஆனா நீங்க தக்குடுவ சொன்னது வேணா கரெக்ட்// பிரியமானவளே!! அடுத்த பகுதி வரும் போது இருக்கு இதுக்கு பதில்...:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - அட பாவிங்களா....

// பாஸ்டன் நாட்டாமை, தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும்..........:)
என்றும் வம்புடன்,
தக்குடு//

இது நல்லா இருக்கே....வம்புடன்னு ஒத்துண்டா சரி தான்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடு Said - /ஆனா நீங்க தக்குடுவ சொன்னது வேணா கரெக்ட்// பிரியமானவளே!! அடுத்த பகுதி வரும் போது இருக்கு இதுக்கு பதில்...:) //

ஆஹா இதை தான் வம்பை விலை குடுத்து வாங்கறதா.... சரி சரி பேசி தீத்துக்கலாம் பிரதர். நோ revenge இல்ல, அது பொற்கொடி கதைல (கணேஷ் வசந்த்) மட்டும் தான் வரணும்

LK said...

//// பாஸ்டன் நாட்டாமை, தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும்..........:)
என்றும் வம்புடன்,
தக்குடு//

இது நல்லா இருக்கே....வம்புடன்னு ஒத்துண்டா சரி தான்//

ஆஹா மொத்ததுல நீங்க எல்லாம் ஒரு மார்க்கம்தான் இருக்கீங்க

Complan Surya said...

am the first......

apdi cholalamnu patha konjam late aitu..its okk..

enta padivu mmmmmmmmmmm

ok paravala,..

kavithaigal superu..

v.v.s group.
complan surya..

(sanga urupinargala..no fightings.)
Mahalir anni thalavi enga erukupothu sathapodakoodathu..sariya....)

LK said...

//http://lksthoughts.blogspot.com/2010/04/ii_16.html //

உங்களை பத்தி சொல்லி இருக்கேன் கொஞ்சம் பாருங்க

Porkodi (பொற்கொடி) said...

//நான், கேடி, அனன்யா எல்லாம் ரெம்ப பாவம்//

oru varthai sonnalum thiru varthai! azhagana ennoda perai kedi nu aakitanga, sanga thalaivi 4 kelvi kelunga!

puthandu nalvazhthukkal, oru 3 naal late agiduchu, mannichukonga :)

DREAMER said...

நகைச்சுவை அருமை!

-
DREAMER

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - அதானே... அழகா பேரு இருக்கறப்ப கேடி கீடின்னு.... நாலு என்ன நாப்பது கேள்வி கேட்டுடுவோம்... (நமக்கு கேள்வி நல்லாவே கேக்க வரும்... பதில் சொல்றது தான் கஷ்டம். லேட்ஆ வந்தாலும் லேட்டஸ்ட்ஆ வந்துடீங்க. நன்றி அம்மணி

@ Dreamer - நன்றிங்க Dreamer

அஹமது இர்ஷாத் said...

ஏன் இப்படி தாங்கல.... அருமைங்கோ..

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
அப்புசாமியையும் சீதாபாட்டியையும் ஞாபகப்படுத்திட்டீங்க. பாக்கியம் ராமசாமி கோபிக்க போறார்//

நன்றிங்க தமிழ் உதயம்... அவர் எங்க நான் எங்க

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
haaaaaaaaaaa haaaaaaaa haaaaaaaaa//

நன்றிங்க அனாமிகா

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
ரொம்ப நல்லாருக்கு!! ‘பாக்கியம் ராமசாமி’ மாதிரி ‘அப்பாவி தங்கமணி’யா?//

ஐயோ... அப்படி எல்லாம் இல்லைங்க... ஏதோ ஓடிட்டு இருக்கு... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

//தாராபுரத்தான் சொன்னது…
வணக்கம்மா//

வாங்க... வணக்கங்க... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…
பதிவு கலக்கல் .
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்//

ரெம்ப நன்றிங்க சங்கர்

அப்பாவி தங்கமணி said...

//புதுகைத் தென்றல் சொன்னது…
சூப்பர்பா, அப்புசாமி-சீதாபாட்டி கதை படிச்சா மாதிரியே இருந்துச்சு.
கட்சிசில வெச்சீங்க மெச்ஜை.
பாராட்டுக்கள்//

ரெம்ப நன்றிங்க புதுகை.... நீங்க சொல்ற மெசேஜ் விட இதெல்லாம் ஒண்ணுமே இல்லங்க

அப்பாவி தங்கமணி said...

//அஹமது இர்ஷாத் சொன்னது…
ஏன் இப்படி தாங்கல.... அருமைங்கோ..//

ரெம்ப நன்றிங்க அஹமத்

Post a Comment