Tuesday, April 20, 2010

க்ரோர்பதி....கோடிஸ்வரன்.... (பதிவர் ஸ்பெஷல் கலாட்டா....)

முக்கியமான முன்குறிப்பு: இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. சும்மானாச்சிக்கும் கூடி கும்மி அடிச்சு சிரிக்க மட்டும் தான் என்பதை இங்கே சொல்ல கடமைபட்டுள்ளேன்

இனி...

மொக்கைஜி முன்குறிப்பு: இந்த பதிவில் வரும் கதா பாத்திரங்கள், சட்டிகள், கரண்டிகள், டபராக்கள், செம்புகள் மற்றும் எல்லாமும் கற்பனையே. உங்களை குறிப்பதாகவோ குத்துவதாகவோ நீங்கள் சொன்னால் அது தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொள்வதாகும்

இந்த மொக்கைஜி character பண்றது வேற யாரும் இல்லைங்க நம்ம சின்ன கலைவாணர் விவேக் தான்

"சரிங்க... ப்ரோக்ராம்க்கு போலாமா" என மொக்கைஜி கியர் போட (அப்ப இன்னும் ப்ரோக்ராம்கே போகலையா... கிழிஞ்சது கிருஷ்ணகிரி - mindvoice )

"வணக்கம்...நமஸ்தே... goodmorning ... இப்போ இங்க நம்ம கோன் ஐஸ் கா..." என மொக்கை சொதப்ப

"கட் . கட் கட் ...." என பதறியபடி ஓடி வந்தார் டைரக்டர்

"என்ன ஆச்சு டைரக்டர் சார்?" என கூலாக மொக்கைஜி கேட்க

"ஜி... என்னஜி நீங்க? கோன் பனேகானு சொல்றதுக்கு பதிலா... கோன் ஐஸ் கா...னு சொல்லிடீங்க" என டைரக்டர் அழுதார்

"சாரி டைரக்டர் சார். அது... வேற ஒண்ணும் இல்ல... வெயில் கூடி போனதால... அதை சமாளிக்க நெறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு... அதே பாதிப்புல அப்படி பேசிட்டேன்... இப்போ...இதோ நான் ரெடி... நீங்க action சொல்லுங்க"

"ரெடி சாட்...டேக் 2 action " என டைரக்டர் விலக மேடை களை கட்டியது

"வணக்கம்...நமஸ்தே... goodmorning ... இப்போ நாம கோன்பனேகா க்ரோர்பதி...அதாவது கோடிஸ்வரன் விளையாட போறோம். இன்னிக்கி நம்ம தமிழ் பதிவர்கள் பத்தி தான் கேள்விகள் இருக்க போகுது. யாரும் இப்ப எழுந்து ஓட கூடாது. அப்படி போனா "பாதிலபோனபாபியா" னு ஒரு பயங்கரமான சாபத்துக்கு நீங்க ஆளாக வேண்டி இருக்கும். நம்ம கூட யாரு விளையாட போறாங்கன்னு தெரிஞ்சுக்க நீங்க ஆவலா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சிறிய விளம்பர இடைவேளை...."

டொன் டொன் டொன் டொன் டொன் (மீசிக்....பாஸ்... மீசிக்...)

(என்னடா இன்னும் காணோமேனு பாத்தேன் - mindvoice )

___________

விளம்பரம் - திரட்டுப்பால் வாங்கலையோ...தக்குடு செஞ்ச திரட்டுப்பால் வாங்கலையோ... ஒண்ணு வாங்கினா நாலு free ... விட்டுடாதீங்க... அப்புறம் கேட்டாலும் கெடைக்காது (ஏன்...? அரசாங்கம் poisoncontrol ல cease பண்ணிட்டாங்களா - mindvoice )

____________

டொன் டொன் டொன் டொன் டொன் (மீசிக்....பாஸ்... மீசிக்...)

"வணக்கம்...நமஸ்தே... goodmorning ... விளம்பர இடைவேளை முடிஞ்சு வந்தததுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு போலாமா" (இதையே தான் ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்க...போறாப்ல காணோம் - mindvoice )

"இன்னிக்கி நம்ம கூட யாரு விளையாட போறாங்கன்னு தெரிஞ்சுக்க நீங்க ஆவலா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன். இதோ வந்துட்டார் நம்ம கோயமுத்தூர் முனியாண்டி...Welcome Mr . முனியாண்டி"

"வணக்கமுங்க மக்காஜி..."

"முனியாண்டி...அது மக்காஜியும் இல்ல சொக்காஜியும் இல்ல... மொக்கைஜி... எங்க சொல்லுங்க பாக்கலாம்"

"அது கெடக்குது உடுங்க.... நீங்க கேள்விய கேளுங்க"

"உங்க கடமை உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது முனியாண்டி. இப்போ கேம் ஆரம்பிக்கலாமா?" (இன்னொரு வாட்டி இந்த டயலாக் நீ சொன்ன மவனே... கேம் ஆரம்பிக்குதோ இல்லையோ... சங்கு ஆரம்பிக்கும்... - mindvoice )

"Mr . முனியாண்டி மொதல்ல உங்கள பத்தி சொல்லுங்க"

"நம்மளை பத்தி என்னங் பெருசா... நீங்க சொன்னாப்ல நமக்கு கோயமுத்தூருங்க"

"அடடே.... சினிமா உலகத்துக்கு நெறைய பேரை குடுத்த ஊராச்சே..."

"வாஸ்தவம்தானுங்க... கலைத்தாய் குடிஇருக்கற ஊருங்க..."

"ஆமாம்...ஆமாம்... அது சரி...இந்த முனியாண்டிங்கற பேரு... உங்க குலதெய்வ சாமி பேரா"

"இல்லீங்... எங்காத்தா வயத்துல நான் இருந்தப்ப நம்ம ஊரு பக்கம் முனியாண்டி விலாஸ் போகணும்னு ஆசபட்டுசுங்கலாமா... பொசுக்குன்னு நான் அங்கேயே பொறந்துட்டனுங்க...அதானுங்க அந்த கடை பேரயே வெச்ச்சுடாக..."

"ஒ... வெரி இண்டரெஸ்டிங் ஸ்டோரி Mr . முனியாண்டி"

"இருகட்டுமுங்க...."

"ஒகே இந்த கேம்ல உங்களுக்கு 3 lifeline இருக்கு.... ask a friend அதாவது உங்க நண்பன கேக்கலாம்... அடுத்தது ask for a clue அதாவது ஒரு clue கேக்கலாம்...." அதற்குள் குறிக்கிட்ட முனியாண்டி

"எனக்கு நம்ப நாளா கேக்கொனுனுமுங்க உங்ககிட்ட...அது ஏனுங்க எதை சொன்னாலும் மேஜர் சுந்தர்ராஜன் அய்யாவாட்ட இங்கிலீஷ்ல சொல்லி போட்டு பொறகு தமிழ்லையும் சொல்றீக....எதாச்சும் வேண்டுதலுங்களா..." என்ற கேள்வியில் மொக்கைஜி ஜெர்க் ஆனார் (அப்படி போடு அருவாள - mindvoice )

இந்த முனியாண்டி அப்பாவியா இல்ல நம்மள காமெடி பீஸ் ஆக்கரானா என மொக்கைஜி வெலவெலத்து போனார்

"அது...அப்படி இல்லைங்க முனியாண்டி... ஒரு... இதுக்காக சொல்றது தான்..." என சமாளிக்க

"அது என்ன எழவோ...உடுங்க... நீங்க கேள்விய கேக்கறீங்களா....இல்ல நானே சொல்லிரட்டுன்களா" என முனி உடுக்கை அடிக்க பதறி சிதறி "இல்லைங்க முனி நானே கேக்கறேன்...." என்றார் மொக்கை

"அந்த மூணாவது lifeline வந்து... வந்து... ask the audience ...அப்புறம் மொத்தம் இதுல எத்தன கேள்வின்னா..." இடைமறித்த முனி

"அதெல்லாம் எங்கூட்டு அம்மணி சொல்லி குடுத்துருச்சுங்க...நீங்க சட்டு புட்டுன்னு கேள்வி கேளுங்க... கெரகத்த முடிச்சுபோட்டு ஊர்ல நமக்கு தலைக்கி மேல வேலை இருக்குதுங்க... " என முனியாண்டி அம்பானி ரேஞ்சுக்கு பீல் காட்ட

"ஆஹா...இவன் ரெம்ப வெவரமா இருப்பான் போல இருக்கே... கோடிய வாங்காம விட மாட்டானோ... கம்பேனி காரங்களுக்கு நாம இல்ல பதில் சொல்லணும்... ஜவ்வாட்ட இழுக்கறதுக்கு தானே நமக்கு சம்பளம். இவன் அதுலயே கொள்ளி வெச்சுருவான் போல இருக்கே" என மனதிற்குள் புலம்பியபடியே ஆரம்பித்தார் மொக்கைஜி

"மொதல் கேள்வி : "ஒரு நாளும் கொல்லாமல் இருக்க மாட்டேன். ஒருவரையும் ஒரு எபிசொட்க்கு மேல் விட்டு வெக்க மாட்டேன்னு" புதிய ஆத்திசூடி எழுதின ஒளவையார்... ச்சே மன்னிக்கணும்.... அம்மையார்...அந்த பதிவர் யாரு? உங்களுக்கு options எல்லாம் இல்ல. நீங்களேதான் கண்டுபிடிக்கணும்"

"என்னங்... மொத கேள்வியே இத்தன கடினமா கேக்கரீக...."

"என்ன இப்படி சொல்றீங்க முனியாண்டி? இந்த கேள்விய நம்ம Complan Surya கிட்ட கேட்டா கூட சொல்லி இருப்பாரு"

"என்னமோ போங்க....ம்... கொல கிலனு வேற சொல்றீங்க... தப்பா சொன்னா நம்மளையும் போட்டுட்டா என்ர அம்மணி கெதி.... அதானுங்க கெரகம் பயமாருக்கு"

"Lifeline use பண்றீங்களா முனியாண்டி"

"பொறகு....வேற வழி என்னங்... பண்ணிதானுங்க ஆகோணும்... அந்த clue என்னமோ.... அதையே சொல்லி போடுங்க..."

"Clue வா .... இவங்கள... சியாட்டில் சிங்காரி அப்புறம் கேடி அப்படின்னும் கூப்பிடுவாங்க"

"ஒ...ஹோ....அந்த அம்மணிங்களா.... பொற்கொடி கண்ணுதானுங்க"

"நிச்சியமா சொல்றீங்களா... லாக் பண்ணிரலாமா..Are you Sure? Confident?"

"லாக்...பூட்டு...என்ன வேணா பண்ணுங்க...ஆனா வெளம்பர இடைவேளைன்னு மட்டும் இப்ப சொல்லிராதீக...."

"ஹா ஹா ஹா .... நம்ம நிகழ்ச்சிய பத்தி இத்தன ஆழமா தெரிஞ்சு வெச்சு இருக்கீங்களே முனி ....ஒகே கம்ப்யூட்டர்ஜி லாக் கரோ "பொற்கொடி" தான்னு முனி சொல்றாரு.... அது சரியா இல்லையான்னு ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கி பிறகு பாப்போம்" என மொக்கைஜி முடிக்க, தலையில் துண்டு போட்டு கொள்கிறார் முனி (முடியலடா சாமி - mindvoice )

டொன் டொன் டொன் டொன் டொன் (மீசிக்....பாஸ்... மீசிக்...)

_______________

விளம்பரம் - நீங்கள் பார்க்கும் விளம்பரம் பதிவர் தன்ஸ் அவர்களிள் மணமகள் தேவை பற்றியது.... இதில் கொடுக்கப்படும் விவரங்களின் நம்பகதன்மைக்கி நம் TV பொறுப்பல்ல.... ரிஸ்க் எடுத்து கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு பண்ணிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அவரோட வெப்சைட் விளைச்சல் . காம்ல தொடர்பு கொள்ளவும்

_______________

டொன் டொன் டொன் டொன் டொன் (மீசிக்....பாஸ்... மீசிக்...)

"விளம்பர இடைவேளைக்கி முன்னாடி நம்ம முனி "பொற்கொடி" தான் சரியான பதில்னு லாக் பண்ணி இருந்தாங்க...." என மொக்கை இழுத்து கொண்டே போக பொறுமை இழந்த முனியாண்டி "நா என்கூருக்கே போறனுங்க... இது ஒண்ணு ஆகரதில்ல.... இங்க இருந்த நேரத்துல நாலு மாட்டுக்கு புல்ல புடிங்கி போட்டிருந்தாலும் பாலாச்சும் குடுத்துருக்கும்" என முனி கோபித்து கொண்டு கிளம்ப "ஐயோ...." என பதறினார் மொக்கை. வந்த ஒரு போட்டியாளரும் போயிட்டா புவ்வாவுக்கு அல்வா தான் என காலில் விழாத குறையாய் முனியாண்டியை அமர செய்தார்

சும்மா இல்ல, முனியாண்டி நெறைய கண்டிசன் எல்லாம் போட்டார்....இனி விளம்பர இடைவேளை இல்ல.... ஒரு நிமிசத்துல ஒரு கேள்வி முடியனும்...இப்படி இன்னும் நெறைய ... (நம்ம புதுகை தென்றல் அவிக அப்பா கிட்ட ரங்கமணி தேடுறதுக்கு போட்ட கண்டிசன் மாதிரி நீளமான லிஸ்ட்....)

"பொற்கொடி தான் சரியான பதில். நீங்க பத்தாயிரம் ஜெய்ச்சுடீங்க" என மொக்கைஜி அறிவிக்க கூட்டம் ஆர்பரித்தது

"அடுத்த கேள்வி வெரசா கேளுங்க" என முனி மீட்டர் போட

"அடுத்த கேள்வி : ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கரதுன்னு கேள்வி பட்டு இருப்பீங்க. ஆனா இவங்க பேனை பத்தி ஒரு பெரியபுராணமே பாடிய பெரியாத்தா... இவங்க யாரு?"

"அடே... இந்த அம்மணிய பத்தி எங்க அம்மணி சொல்லிருக்குதுங்க....சேக்குக ஊர்ல இருக்கற அம்மணி தானங்க... பேரு இங்க இருக்குது....வரமாடீங்குது " என தொண்டையை காண்பித்தார்

"சொல்லுங்க முனியாண்டி. உங்க டைம் முடிய போகுது"

"இருங்கஜி... நல்ல பேருங்க...ஆங்....அனன்யா... சரிங்களா?"

"சூப்பர் சூப்பர்... கரெக்ட் answer முனியாண்டி... நீங்க ஒரு லட்சம் ஜெய்ச்சுடீங்க"

"நல்லது தானுங்க....அடுத்த கேள்வி என்னங்க"

"ஆஹா....இப்படி எக்ஸ்பிரஸ் வேகத்துல போறானே..." என டென்ஷன் ஆனார் மொக்கைஜி

"ஒகே...அடுத்த கேள்வி.... இவர நாட்டாமைன்னு சிலர் கூப்பிடுவாங்க. நம்ம பிரபல டைரக்டர் டுபுக்கு அவர்களோட அடுத்த படத்துல கூட ஒரு நாட்டாமை ரோல் பண்ண போறார்னு கேள்விபட்டேன். இவர் பேர்லயே இன்னொரு பதிவர் இருக்கறதால இவர் இருக்கற ஊரான பாஸ்டன்ஐ அடைமொழியா சேத்து இருக்காரு...இவர் யார்?"

"என்னங் இது...நமக்கு எங்க ஊரு நாட்டாமைய தானுங்க தெரியும்...இப்படி அமெரிக்க நாட்டாமைய எல்லாம் கேட்டா எப்படிங்க"

"போட்டின்னு வந்துட்டா நீங்க எல்லா நாட்டமையையும் தெரிஞ்சு வெச்சு இருக்கனுங்க முனியாண்டி. இதே நம்ம கோப்ஸ் தம்பியா இருந்தா நாம ஒண்ணு கேட்டாலும் அவரு ஒண்ணு சொல்லி சமாளிப்பாரு"

"நீங்க ஆர சொல்றீக... ஒ.... அந்த பொண்ணு பாக்க போன கதைய எழுத சொன்னதுக்கு பொண்ணோட அப்பன் ஆத்தாள பாக்க போன கதைய எழுதின தம்பிங்களா?"

"இதையெல்லாம் சரியா சொல்றீங்க....உங்களுக்கு கேட்ட கேள்வி என்னாச்சு?"

"சரிங்க....கூட்டத்துல இருகறவங்கள கேட்டுகரனுங்க..."

"என்னது....? ஒ... ask the audience ஆ? ask the audience அ இப்படி உலகத்துல யாருமே மொழி பெயர்க்க முடியாது முனியாண்டி....முடியவே முடியாது"

"என்னதுகுங்க இப்ப சரோசா தேவியாட்ட பேசிட்டு இருக்கீக... கூட்டத்த கேளுங்கன்னா...."

"கேக்கறேன் கேக்கறேன்... (மனதிற்குள் - எல்லாம் நேரம்). Audience உங்களுக்கு தெரியுமா? இவர் யாருன்னு? ராமராஜனுக்கு தம்பியாட்ட அங்க பச்சை சட்டை செவப்பு pant போட்டுட்டு இருக்கறவர் கை தூக்கறார்... சொல்லுங்க உங்க பேரு?"

"என் பேரு ராமராஜன் தாங்க"

"ஆஹா...உங்க அம்மா அப்பா தீர்க்க தரிசிங்க... சரி பதில் தெரியுமா?"

"அவர் பேரு ஸ்ரீராம்ங்க....பாஸ்டன் ஸ்ரீராம்"

"முனியாண்டி.... நம்ம ராமராஜன் தம்பி சொன்ன பதிலையே லாக் பண்ணிரலாமா? இல்ல...நீங்க வேற சொல்றீங்களா?"

"எனக்கு தான் தெரியாதுன்னு அப்பவே சொல்லிபோட்டனல்லங்க மறுக்கா மறுக்கா கேட்டா என்ன அர்த்தங் அது....போங்க.... நான் எங்ஊருக்கே போறனுங்க..." என கிளம்ப

"ஐயோ....என்னங்க முனியாண்டி.... இப்படி கோவிச்சுக்கறீங்க.... சரி சரி அதையே லாக் பண்ணிடறேன்... வாவ்.... சரியான பதில்.... நீங்க பத்து லட்சம் ஜெய்ச்சுடீங்க முனியாண்டி"

"சேரிங்க... அடுத்தத கேளுங்க..." என்றார் கூலாக

"அடுத்த கேள்வி... இவர் நக்கீரன் பரம்பரைல வந்தவர்... நம்ம பதிவுல இருக்கற தப்பை...கதாபாத்திரங்களின் பெயர் உட்பட சுட்டி காட்டுவாரு... அவர் ப்ளாக்ல நாலு வரி நச் கதைகள் ரெம்ப பிரபலம்... அவர் யார்?"

"அட....இவரு...நம்ம சாமி பேருங்க இவருக்கு...எங்கள் BLOG ஸ்ரீராம் தம்பிதானுங்க"

"சரியான பதில்...நீங்க இருபது லட்சம் ஜெய்ச்சுடீங்க....அடுத்த கேள்வி, இவரோட சில பதிவுகள பாத்தா கருத்து கந்தசாமின்னு சொல்லலாம்... சமீப காலமா சகபதிவர்கள வம்பிளுக்கரார்னு நியூஸ் வருது. இவர் யார்?"

"அடே...இவரு....நம்ம அம்மணி சொல்லுச்சுங்க.... ஆங்... LK தம்பி...சரிங்களா"

"சரியான பதில்...நீங்க 30 லட்சம் ஜெய்ச்சுடீங்க...அடுத்த கேள்வி.... இவரு கரண்டி சட்டி கூட எல்லாம் பேசற விஷேச சக்தி படைத்த சித்தர். கணக்குல புலி. இவரோட அண்ணா ஒரு கப் கேசரிக்காக சொத்தையே எழுதி வெப்பார்னு செவி வழி செய்தி....இவர் யார்"

"சுத்தமா தெரியலைங்க....எங்க அம்மணிய போன்ல கேக்கரனுங்க"

"இந்த அம்மணி அம்மணினு சொல்லிட்டே இருந்தீங்களே...உங்க மனைவியா?"

"இத்தன நேரம் அம்மணினது என்ர ஊட்டுகாரிதானுங்க....இப்ப நான் சொல்ற அம்மணி என்ர பொறந்தவளுங்க"

"அப்படினா?"

"என்ன சினிமாகாரரு நீங்க? நம்ம விஜயகுமார் அய்யா படம் எல்லாம் பாத்ததில்லைன்களா...அது சரி... நீங்க எடுக்கற கொடுமைய நீங்களே என்னத்துக்கு பாக்றீங்க? அந்த கெரகத்துக்குதான் நாங்க இருகறமல்ல. பொறந்தவனா என்ரகூட பொறந்தவ... என்ர தங்கச்சிங்க..."

"ஒ...சரிங்க....அவங்க எங்க இருக்காங்க? பேரு என்ன?"

"என்ர தங்கச்சி கனடாவுல இருக்குதுங்க.... அதுவும் பதிவெல்லாம் எழுதுமுங்க....அப்பாவி தங்கமணிங்க பேரு... அப்புராணி புள்ளைங்க பாவம்.... ஆரும் அதை அப்பாவின்னு புரிஞ்ச்சுகறதே இல்லீங்க..."

"ஆஹா....இவன் நம்ம செலவுல ISD பேசற ஐடியாவுல வந்துருக்கான்யா... கம்பெனிகாரன் என் சம்பளத்துல தான் புடிக்க போறான்...இன்னிக்கி யாரு மூஞ்சில முழிச்சேன்னு தெரியிலியே" என மனதிற்குள் புலம்ப

"வெரசா போன போடுங்க...நேரம் ஆகுதல்லங்க"

"ம்... போடறேன் போடறேன்...."

"டிரிங்... டிரிங் .... டிரிங்..."

"ஹலோ...."

"அலோ... அம்மணி....அம்மணி"

"அண்ணே... நீங்களானே...நல்ல இருக்கீங்களா?"

"நல்லா இருக்கறங் கண்ணு.... ஊட்டுல நீயி மச்சான் எல்லாம் நல்லா இருக்கீகளா?"

"நல்லா இருக்கோம்ணா... மதனி புள்ளைக... எல்லாருக்கும் மேலுக்கு சுகம் தானுங்க"

"எல்லாம் சொகம் தான் கண்ணு... அப்புறம்..... நம்ம செவப்பி கண்ணு போற்றுச்சு நேத்திக்கி"

"அப்படியானே....சந்தோசன்னே...." இப்படி பாசமலர்கள் கொஞ்சி குலாவி கொண்டே போக

"ஐயோ ISD பில் ஏறுதே.... முனியாண்டி சீக்கரம் பதில கேட்டுட்டு வெயிங்க"

"அப்புறம்... அம்மணி...நானு இந்த கோடீஸ்வரன் விளையாட்டுக்கு வந்தேன்.... அதுல......................................." விவரம் எல்லாம் சொல்லியதும்

"அடே...நம்ம தக்குடு தம்பி" என அப்பாவி கூறவும் "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என மணி அடிக்கவும் சரியாக இருந்தது

"இன்னிக்கி டைம் முடிஞ்சு போச்சு.... அந்த கேள்விக்கான பதில் தக்குடு சரியா இல்லையா? முனியாண்டி கோடி ருபாய் வெல்வாரா இல்லையா? அடுத்த வாரம் காண தவறாதீர்கள்.... அதுவரை உங்களிடம் இருந்து விடுபெறுவது..... உங்கள்.... மொக்கைஜி...நன்றி.... வணக்கம்"

(சரி சரி சரி....நோ நோ நோ....பேச்சு பேச்சா தான் இருக்கணும்.... இப்படி முட்டை..... கல்..... எல்லாம்... நோ நோ.... சின்ன புள்ள மனசு கஷ்ட படுதல்ல.... நோ நோ நோ நோ நோ.... தக்காளி விக்கற காசுக்கு.... என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு...அடுத்த வாரம் பாப்போம் மறுக்க... யாரு மண்டை எல்லாம் உருள போகுதுன்னு நீங்க மண்டைய பிச்சிகிட்டு இருங்க அது வரைக்கும்.....வர்ட்டா...நன்றி .....வணக்கம்ம்ம்ம்....)

53 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

gold!

Porkodi (பொற்கொடி) said...

//சமீப காலமா சகபதிவர்கள வம்பிளுக்கரார்னு நியூஸ் வருது.//

அப்ப நீங்க பண்ணுறதுக்கு பேரு?! ஓ நீங்க ஆப்பாவி இல்ல (ஆப்பு + ஆவி, ஸ்பெல்லிங் மிச்டேக்கு இல்ல.)

எ.கொ.ச.இ!!! என்னவோ ஆகிடுச்சு எல்லாருக்கும், வீணா எனக்குள்ள இருக்கற சிங்கத்த சொரிஞ்சு விடறீங்க, தெறிச்சு ஓடிடுவீங்க சொல்லிட்டேன்! :D

Porkodi (பொற்கொடி) said...

//யாரு மண்டை எல்லாம் உருள போகுதுன்னு நீங்க மண்டைய பிச்சிகிட்டு இருங்க//

யாரும் பிச்சுக்க மாட்டாங்க, எல்லாருக்கும் தெரியும் அது உங்க மண்டை தான்னு.

ஸ்ரீராம். said...

நன்றிங் அம்மணி...'எங்களை'யும் சந்தில நிக்க வச்சிப் போட்டீக...'அங்க' வர்றது அஞ்சு பேருக்கு சொந்தமுங்க...என்ர பேரை மட்டும் இழுக்காதீங்க அம்மணி..மத்தபடி மொக்கை அருமைங்க..

அமைதிச்சாரல் said...

//அப்புராணி புள்ளைங்க பாவம்.... ஆரும் அதை அப்பாவின்னு புரிஞ்ச்சுகறதே இல்லீங்க...//

எ.கொ.ச.இ. :-)))))))

superb.

டம்பி மேவீ said...

ரைட்டு ....ஏன் சாரு எஸ்ரா ஜெயமோவை எல்லாம் விட்டிங்க ????? அவங்களையும் கலாய்த்து இருக்கலாமே ???


(தங்கமணி ன்னறது உங்க பெயரு. அப்பாவின்னறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா ???)

LK said...

//ப்ப நீங்க பண்ணுறதுக்கு பேரு?! ஓ நீங்க ஆப்பாவி இல்ல (ஆப்பு + ஆவி, ஸ்பெல்லிங் மிச்டேக்கு இல்ல.)
//

repeatumaa,,,,

அப்பாவி தங்கமணி, ரொம்ப ரொம்ப சூப்பரா மொக்கை போட்டு இருக்கீங்க... நானும் ஒரு சூப்பர் மொக்கை போட்ருக்கேன் வந்து பாருங்க

Complan Surya said...

HEY AM THE 8TH..APPADA

EPOTHAN SANTHOSMA ERUKKU..

RUMBA SANTHOSMA ERUKKU..

EN PERU VARALIEY..

EN ETHIRINGA PERU ELLAM POTU THAKITENGA..(UNGALKU ENTHA MADA SAMBALAM US$5625.50cent.(enga sangam kanakila corecta erukkum.)

sema nakkal appavai..

neenga nijama evlo appaviya..

(pinkuripu:ungala evlo perukku perumai parunga..)

nandri
valga valamudan
varuthapadtha vasipor sangam
complan surya

Complan Surya said...

enaku oru doubt..seyati singarina..

enna?
enna?enna?

athavathu epovum entha hindi kara nadingapola makeupdan erupangala....(yarium kuripidavillai.)


எ.கொ.ச.இ!!!apdina enna appavai..

ok next doubt vanta kekren..varata

enga sangamthuku neram aitu..

varatta..

v.v.s
complan

sriram said...

ஆஜர் அருமை அபாரம் அப்பாவி..

என்னையும் ஆட்டத்தில் சேத்துக்கிட்டதுக்கு நன்றிகள் பல..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடுபாண்டி said...

// இவங்க பேனை பத்தி ஒரு பெரியபுராணமே பாடிய பெரியாத்தா// suuuuuuuper...:)LOL

தக்குடுபாண்டி said...

//இவங்கள... சியாட்டில் சிங்காரி அப்புறம் கேடி அப்படின்னும் கூப்பிடுவாங்க"// கேடி நல்லா பாத்துக்கோங்கோ நான் ஒன்னுமே சொல்லலை...:)

தக்குடுபாண்டி said...

//இவரு கரண்டி சட்டி கூட எல்லாம் பேசற விஷேச சக்தி படைத்த சித்தர். கணக்குல புலி// அடப்பாவி அக்கா, சிக்காமையா போவேள்!! அப்ப இருக்கு இதுக்கு எல்லாம் சேர்த்து......:)

அநன்யா மஹாதேவன் said...

அ.த,
எல்லாரையும் மரணக்கலாய் கலாய்ச்சு இருக்கிங்கம்மணி! முக்கியமா திரட்டுப்பால் விளம்பர இடைவேளையும் சியாட்டில் சிங்காரியும் அடிதூள்!என்னுடைய ரெண்டு அண்ணாச்சிகளையும் நக்கலடிச்சு இருக்கறதை வன்மையா கண்டிக்கிறேன்! நம்ம குருநாதரை இன்னாத்துக்கு விட்டுபோட்டீங்கம்மணி? அவுகளையும் ஏதாவது வம்பு தும்புல மாட்டு வுட்டுட வேண்டியதானே?
மொத்தத்துல கலக்கல் டெரர் பதிவு! கீப் கலக்கிங்!

My days(Gops) said...

ஆல்ரவுண்டர் அ(ட)ப்பாவி ரங்கமணியா இருக்கீங்களே..... கலக்கல் போஸ்ட்..... ரயில் வண்டில போகும் போது யோசிக்கிறதா இதெல்லாம் :)

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது… gold!//

நன்றி நன்றி நன்றி

My days(Gops) said...

//முனியாண்டி விலாஸ் போகணும்னு ஆசபட்டுசுங்கலாமா... பொசுக்குன்னு நான் அங்கேயே பொறந்துட்டனுங்க...அதானுங்க அந்த கடை பேரயே வெச்ச்சுடாக..."//

நல்ல வேளை அவங்க கையேந்தி பவன், நல்லி சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போகனும்'னு ஆசை படல...

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது… அப்ப நீங்க பண்ணுறதுக்கு பேரு?! ஓ நீங்க ஆப்பாவி இல்ல (ஆப்பு + ஆவி, ஸ்பெல்லிங் மிச்டேக்கு இல்ல.)// யாரும் பிச்சுக்க மாட்டாங்க, எல்லாருக்கும் தெரியும் அது உங்க மண்டை தான்னு.//

என்னங்க இது, உங்கள தான மலை போல நம்பி இருந்தேன்.... பக்கபலமா இருபீகன்னு பாத்தா இப்படி பக்கவா மெரட்டுரீகளே.... ஞாயமா? இது ஞாயமா?

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது… நன்றிங் அம்மணி...'எங்களை'யும் சந்தில நிக்க வச்சிப் போட்டீக...'அங்க' வர்றது அஞ்சு பேருக்கு சொந்தமுங்க...என்ர பேரை மட்டும் இழுக்காதீங்க அம்மணி..மத்தபடி மொக்கை அருமைங்க..//

நன்றிங்க ஸ்ரீராம்

My days(Gops) said...

// ஒண்ணு வாங்கினா நாலு free ... விட்டுடாதீங்க... அப்புறம் கேட்டாலும் கெடைக்காது //

கெட்டாலும் கிடைக்காது.. யப்பா தக்குடு இனி நீ எப்ப திரட்டி'ய நினனச்சாலும் , உன்னை பிரட்டி போட்டு'டுவோம்.. :)

அப்பாவி தங்கமணி said...

//அமைதிச்சாரல் சொன்னது… //அப்புராணி புள்ளைங்க பாவம்.... ஆரும் அதை அப்பாவின்னு புரிஞ்ச்சுகறதே இல்லீங்க...//எ.கொ.ச.இ. :-)))))))superb.//

நன்றிங்க சாரல் (note the point அமைதி மிஸ்ஸிங்)

அப்பாவி தங்கமணி said...

//டம்பி மேவீ சொன்னது… ரைட்டு ....ஏன் சாரு எஸ்ரா ஜெயமோவை எல்லாம் விட்டிங்க ????? அவங்களையும் கலாய்த்து இருக்கலாமே ???
(தங்கமணி ன்னறது உங்க பெயரு. அப்பாவின்னறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா ???)//

முதல் வருகைக்கு முதல்ல நன்றிங்க. கலாய்த்தல் படலம் தொடரும் டம்பி மேவி. அப்போ மிச்சம் இருக்கறவங்களை எல்லாம் சேத்துருவோம்

அப்பவிங்கறது படிச்சு வாங்கினது இல்லைங்க... நம்ம குணத்த பாத்து ஊரு குடுத்த பட்டமுங்க (சரிங்களா...)

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது… //ப்ப நீங்க பண்ணுறதுக்கு பேரு?! ஓ நீங்க ஆப்பாவி இல்ல (ஆப்பு + ஆவி, ஸ்பெல்லிங் மிச்டேக்கு இல்ல.)/repeatumaa,,,,//

You too LK...ho ho ho..................

//அப்பாவி தங்கமணி, ரொம்ப ரொம்ப சூப்பரா மொக்கை போட்டு இருக்கீங்க... நானும் ஒரு சூப்பர் மொக்கை போட்ருக்கேன் வந்து பாருங்க//

நன்றிங்க LK . இதென்னங்க ரயில் ஏறிட்டனுங்க... வந்துட்டே இருகரனுங்க... உங்க ப்ளாக்க்கு

அப்பாவி தங்கமணி said...

//Complan Surya சொன்னது…EPOTHAN SANTHOSMA ERUKKU..RUMBA SANTHOSMA ERUKKU..EN PERU VARALIEY...//

தம்பி... கொஞ்சம் நல்லா கண்ண கசக்கிகிட்டு படிப்பா... உங்க பேரும் இருக்கு... கண்டுபிடிங்க பாக்கலாம்?

//EN ETHIRINGA PERU ELLAM POTU THAKITENGA..(UNGALKU ENTHA MADA SAMBALAM US$5625.50cent.(enga sangam kanakila corecta erukkum.)//

நன்றி நன்றி நன்றி. கணக்குல கரெக்ட் எனக்கு ரெம்ப பிடிச்ச விசயம் (பொழப்பே அதானே...)

//sema nakkal appavai..neenga nijama evlo appaviya..(pinkuripu:ungala evlo perukku perumai parunga..)//

நன்றிங்க சூர்யா. ஆமாங்க நெஜமாவே அப்பாவி தான். நீங்களாச்சும் புரிஞ்சுகிட்டீங்களே

அப்பாவி தங்கமணி said...

// sriram சொன்னது… ஆஜர் அருமை அபாரம் அப்பாவி..என்னையும் ஆட்டத்தில் சேத்துக்கிட்டதுக்கு நன்றிகள் பல..என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
// இவங்க பேனை பத்தி ஒரு பெரியபுராணமே பாடிய பெரியாத்தா// suuuuuuuper...:)LOL//
//இவரு கரண்டி சட்டி கூட எல்லாம் பேசற விஷேச சக்தி படைத்த சித்தர். கணக்குல புலி// அடப்பாவி அக்கா, சிக்காமையா போவேள்!! அப்ப இருக்கு இதுக்கு எல்லாம் சேர்த்து......:)////

அனன்யாவ சொன்னா மட்டும் சந்தோஷம்... உங்கள சொன்னா சிக்கலா? எத்தனையோ பாத்துட்டோம்...இத பாக்க மாட்டமா?

//இவங்கள... சியாட்டில் சிங்காரி அப்புறம் கேடி அப்படின்னும் கூப்பிடுவாங்க"// கேடி நல்லா பாத்துக்கோங்கோ நான் ஒன்னுமே சொல்லலை...:)//

பொற்கொடி... இப்படி எழுத சொல்லி ஐடியா குடுத்ததே இவர் தான் (நாங்களும் சொல்லுவமல்ல....)

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது… அ.த, எல்லாரையும் மரணக்கலாய் கலாய்ச்சு இருக்கிங்கம்மணி! முக்கியமா திரட்டுப்பால் விளம்பர இடைவேளையும் சியாட்டில் சிங்காரியும் அடிதூள்!என்னுடைய ரெண்டு அண்ணாச்சிகளையும் நக்கலடிச்சு இருக்கறதை வன்மையா கண்டிக்கிறேன்! நம்ம குருநாதரை இன்னாத்துக்கு விட்டுபோட்டீங்கம்மணி? அவுகளையும் ஏதாவது வம்பு தும்புல மாட்டு வுட்டுட வேண்டியதானே?
மொத்தத்துல கலக்கல் டெரர் பதிவு! கீப் கலக்கிங்!//

ரெம்ப நன்றிங்க அனன்யா... எல்லாம் உங்க ஆதரவுல இதோ நடக்குது. யாருங்க ரெண்டு அண்ணாச்சிகள். குருநாதர்னு நீங்க சொல்றது? சொல்லுங்க அடுத்த வாரம் சிக்க வெச்சுருவோம்

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது… ஆல்ரவுண்டர் அ(ட)ப்பாவி ரங்கமணியா இருக்கீங்களே..... கலக்கல் போஸ்ட்..... ரயில் வண்டில போகும் போது யோசிக்கிறதா இதெல்லாம் :)//

நன்றிங்க கோப்ஸ். ரயில் வண்டில போறப்ப யோசிக்கரதானு கரெக்ட்ஆ கண்டுபிச்ச கோப்ஸ்க்கு இந்த பொன்னாடையை பரிசளிக்கிறேன்

//நல்ல வேளை அவங்க கையேந்தி பவன், நல்லி சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போகனும்'னு ஆசை படல...//

அப்படி போய் இருந்த பவன், நல்லி, சரவணான்னு பேரு வெச்சுருபாகளோ?

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது… // ஒண்ணு வாங்கினா நாலு free ... விட்டுடாதீங்க... அப்புறம் கேட்டாலும் கெடைக்காது //
கெட்டாலும் கிடைக்காது.. யப்பா தக்குடு இனி நீ எப்ப திரட்டி'ய நினனச்சாலும் , உன்னை பிரட்டி போட்டு'டுவோம்.. :)//

சரியா சொன்னீக கோப்ஸ். இனி தக்குடு திரட்டுபால்னு தூக்கத்துல சொன்னாலும் அலறி எந்திருச்சுருவாகள்ள

Complan Surya said...

அம்மையார்...அந்த பதிவர் யாரு? உங்களுக்கு options எல்லாம் இல்ல. நீங்களேதான் கண்டுபிடிக்கணும்"

"என்னங்... மொத கேள்வியே இத்தன கடினமா கேக்கரீக...."

"என்ன இப்படி சொல்றீங்க முனியாண்டி? இந்த கேள்விய நம்ம Complan Surya கிட்ட கேட்டா கூட சொல்லி இருப்பாரு"

--ada neenga vera nan thokathila padichikitu erunthena..en peru erukkirtha marnthuthen..appada epothan rrumba rumba santhosma eruken..but my name neenga innum prabla paduthanum...(monthly US$5625.50cent engal sangam kudukirathu apprum kurichidum)


nandri valga valamudan..

neenga seyatil singarina ennanu cholavey elliey...


apprum neenga rumba nallavanga appavi...ennapolavey.

varta...

Ananthi said...

சூப்பரா இருக்குங்க.. தொடர் படிக்க காத்திருக்கிறேன்.. :)

Priya said...

//அப்பாவி தங்கமணிங்க பேரு... அப்புராணி புள்ளைங்க பாவம்.... ஆரும் அதை அப்பாவின்னு புரிஞ்ச்சுகறதே இல்லீங்க..."//....நான் புரிஞ்சிக்கிட்டேன். உண்மையை சொல்லனும்னா நம்பிட்டேன்:)

அப்பாவி தங்கமணி said...

@ காம்ப்ளான் சூர்யா - அப்பாடா கண்டுபிடிச்சுடீங்களா... வெரி குட்... இன்னும் பிரபல படுத்தணுமா... செஞ்சுட்டா போச்சு (நீங்களே வழிய வந்து தலைய குடுக்கரப்ப பலி போடற எனக்கு என்ன கசக்குதா?)

சியாட்டில் சிங்கரின்னா சியாட்டில் சிங்காரி தான்... வேற ஒண்ணும் இல்ல... (ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ ஆனந்தி - ரெம்ப நன்றிங்க ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியா - நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே, ரெம்ப நன்றிங்க ப்ரியா

DREAMER said...

நல்ல நீளமான ரோல்லர் கோஸ்டர் கலாட்டா... கலக்கலாய் இருக்குங்க...!

-
DREAMER

Madhuram said...

Super nga thangamani! Enakku romba exciting aana vishayam therinjadhu unga post la. Neenga Canada vila irukkeenga? Naanum dhaan. Neenga enakku mail panreengala enga irukeenga nu. admin@egglesscooking.com.

Madhuram said...

//மொக்கைஜி முன்குறிப்பு: இந்த பதிவில் வரும் கதா பாத்திரங்கள், சட்டிகள், கரண்டிகள், டபராக்கள், செம்புகள் மற்றும் எல்லாமும் கற்பனையே. உங்களை குறிப்பதாகவோ குத்துவதாகவோ நீங்கள் சொன்னால் அது தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொள்வதாகும் //

Aamaanga, enakku neenga yaara pathi solreenganu sathiyama theriyala.

Madhuram said...

//திரட்டுப்பால் வாங்கலையோ...தக்குடு செஞ்ச திரட்டுப்பால் வாங்கலையோ... ஒண்ணு வாங்கினா நாலு free ... விட்டுடாதீங்க... அப்புறம் கேட்டாலும் கெடைக்காது (ஏன்...? அரசாங்கம் poisoncontrol ல cease பண்ணிட்டாங்களா - mindvoice )//

Paavam thambi paalai kilarayidhaivida avara ellarum romba kilarareenga pa.

தக்குடுபாண்டி said...

//Paavam thambi paalai kilarayidhaivida avara ellarum romba kilarareenga pa// நன்னா கேளுங்கோ அக்கா, எல்லா பயலும் தக்குடுவை பிடிச்சுண்டு காமிடி பண்ணரா,...;)

//Neenga Canada vila irukkeenga? Naanum dhaan// அடப்பாவி அக்கா, கனடாலையே என்னொட அனுதாபி இப்பொ இருக்கார், அதனால அடக்கி வாசிக்கவும்...;)

தக்குடுபாண்டி said...

//Neenga enakku mail panreengala enga irukeenga nu// இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கர்து....;) மதுரம் அக்கா, எதுக்கும் ஒரு தடவை யோசிச்சுக்கோங்கோ! அப்பரம் வந்து, தக்குடு! நீ ஒரு வார்த்தை சொல்லப்படாதா கண்ணா!னு சொல்லக்கூடாது....:)

Madhuram said...

@ Thakkudu: விதி யார விட்டது! AT சொல்றத பார்த்தா நாங்க ரெண்டு பேறும் பக்கத்து பக்கத்து வீட்டுல இருப்போம் போல இருக்கு.

LK said...

/நம்ம குணத்த பாத்து ஊரு குடுத்த பட்டமுங்க //

இது உங்களுக்கே ரொம்ப அதிகமா இல்லை

அஹமது இர்ஷாத் said...

தேர்தெடுத்த மொக்கை... சூப்பர் அம்மணி..

நல்லாயிருக்குங்...

Complan Surya said...

enda blog pakkam konjam

vanthu pathathal enna..kuraincha poiduvenga..

summa erukkira porkodi madathapotu kindal panna ellam neram erukku..

entha kutipayan blogs vara neram ellai..

ada comments pota unga weightla 2kg kurium....

vanthuparunga...

ammam cholliputen..

vartta..

complan surya

அப்பாவி தங்கமணி said...

@ Dreamer - ரெம்ப நன்றிங்க

@ மதுரம் - ஈமெயில் பண்ணிட்டேன். ரெம்ப சந்தோஷம்

@மதுரம் - ஆனாலும் நீங்க என்னைவிட பெரிய அப்பாவியா act குடுக்கறீங்களே. இது ஞாயமா சிஸ்டர்

@மதுரம் - நீங்க தக்குடுவ பத்தி தெரியாம சப்போர்ட் பண்றீங்க.... details எல்லாம் அப்புறம் சொல்றேன்

@தக்குடு - தக்குடுவ வெச்சு நாங்க காமெடி பண்ண வேண்டியதில்ல. அவரே போதும் அதுக்கு

@ தக்குடு - அனுதாபி கனடால இருக்காரா? விவரம் சொல்லுங்க விசாரிச்சுருவோம்

@ தக்குடு - நல்லவாளுக்கு நல்லவாள பகவானே காட்டி குடுப்பா....

@ மதுரம் - இப்படி same side goal போடறது நல்ல இல்ல சிஸ்டர்... என்னமோ ET மாதிரி என்னை AT னு terror இமேஜ் குடுக்கறீங்களே ஞாயமா?

@ LK - அதிகம் இல்ல gentleman ... கொஞ்சமே கொஞ்சம் தான்

@ அஹமது இர்ஷாத் - ரெம்ப நன்றிங்க அஹமது முதல் வருகைக்கு

@ காம்ப்ளான் சூர்யா - இதோ கெளம்பிட்டேன் பிரதர்... உங்க ப்ளாக்க்கு வந்துட்டே இருக்கேன்... ஏன் இப்படி பொற்கொடிய தாக்கறீங்க? பாவம் சின்ன பொண்ணு. அதுக்கு தக்குடு / LK மாதிரி ஆளுங்கள சொன்னாலும் தப்பில்ல

Cable Sankar said...

:))

பிரசன்னா said...

/"ஒ... வெரி இண்டரெஸ்டிங் ஸ்டோரி Mr . முனியாண்டி"

"இருகட்டுமுங்க...."//

ஹா ஹா.. இந்த மாதிரி நிறைய எடத்துல கலக்கல் (Eg. ராமராஜன்) :))

அப்பாவி தங்கமணி said...

@ கேபிள் சங்கர் - நன்றிங்க சங்கர் முதல் வருகைக்கு

@ பிரசன்னா - நன்றிங்க பிரசாந்த் முதல் வருகைக்கு

அன்புடன் மலிக்கா said...

அப்பாவி அப்பாவி இல்லையா தங்மணி.

பிரியமானவளே பிரியமாய்..

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க மலிக்கா. ஆமாங்க அப்பாவி தானுங்க அம்மணி

Gayathri said...

superhit ponga...sirichukitte irundhen

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ha ha... thanks ma

Post a Comment