Tuesday, April 27, 2010

என்னுடன் ஒரு நாள்....

முன் குறிப்பு:
எனது இந்த படைப்பு யூத் விகடனில் வெளி வந்துள்ளது. உங்களிடம் அதை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

எனது சொந்த பெயரான புவனா கோவிந்த் என்ற பெயரில் யூத் விகடனில் வெளிவந்துள்ள இந்த படைப்பை காண இங்கே சொடுக்கவும்  . விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது


என்னுடன் ஒரு நாள்....வயலும் வயல்சார்ந்த
வனப்பான பூமியது
ஆறுபருவங்கள் கொண்ட
அழகிய மருதத்திணை

ஆடி மாதம்அதுவென
அனைவருக்கும் பறைசாற்ற
நாற்று நடும்பெண்களின்
நகையொலி ஒருபுறம்

ஆலமர தொட்டிலிலே
ஆரிரரோ இல்லாமலே
அயர்ந்து துயில்கொள்ளும்
அழகுமழலைகள் மறுபுறம்

வயகாட்டின் மூலையிலே
வசதியான ஒருகூரை
கூரைமேல் குயில்ஒன்று
கூவியாரை அழைக்கிறதோ

பள்ளிக்கூடம் சென்றுவிட்ட
பிள்ளைகளின் வரவுக்காய்
திண்ணையில் காத்துக்கிடக்கும்
தினுசுக்கொன்றாய் விளையாட்டுச்சாமான்

தாழ்வார தூணில்சாய்ந்து
புழக்கடை தோட்டக்கீரையை
ஆய்ந்து கொண்டிருந்தேன்
ஏகாந்த அமைதியில்

ஆடிகாத்தின் பல்லவிக்கு
அழகிய பக்கவாத்தியமாய்
ரேழியில் இருந்தஊஞ்சல்
ராகம் இசைத்தது

கெட்டிலில் இருந்தபசு
கெதியாய் சுருதிசேர்த்து
அம்மா என்றழைத்து
ஆகிவிட்டது நண்பகல்என்றது

எப்படித்தான் தெரியுமோ
எங்கள் லட்சுமிக்கு(பசு)
கீரையை ஆய்ந்தமிச்சத்தை
கேட்கஅழைக்கிறது பாருங்க

கீரைகழுவிய தண்ணீரை
கிணற்றடி துளசிக்குவார்த்துவிட்டு
உள்ளிருந்த மிச்சத்தை
ஊட்டினேன் லட்சுமிக்கு

நாற்றுநடும் பெண்களுக்கு
நீர்மோர் தூக்கில்சேர்த்து
எட்டி நடைபோட்டேன்
என்னதாகமோ அவர்களுக்கென

ஆலமர தொட்டில்குழந்தை
அழகாய் சிணுங்கிஅழைக்க
"அலமேலுபுள்ளஅழுது" என்றுவிட்டு
அங்கிருந்த திட்டில்அமர்ந்தேன்

வயல் அழகா
வனிதையர் நடும்அழகா
வாய்கால் நீர்அழகா
வாய்சிவந்த கிளிஅழகா

ஒன்றைஒன்று போட்டிபோட்டு
ஒன்றாய் அழகைஅள்ளிவழங்கி
சொர்க்கத்தில் எனைஇருத்தி
சொக்கவைத்த தருணத்தில்.....

அலார சத்தத்தில்
அலறி எழுந்தேன்நான்!!!

அத்தனையும் கனவென்று
அறைந்து சொல்லியது
புதுதிரைசீலை வழிகசிந்த
புலராத காலைபொழுது

பிள்ளை கை பொம்மையை
பட்டென பிடுங்கியதுபோல்
பீரிட்ட அழுகையை
பிடித்து நிறுத்தினேன்

அழுது கொண்டிருக்க
அதுவல்ல நேரம்
காக்கை குளியல்முடித்து
கணவனுடன் புறப்பட்டேன்

புகைவண்டி ஏறிஅமர
பழகிய முகங்களுக்கு
செயற்கை புன்னகைவீசி
செய்தித்தாள் முகம்புதைத்தேன்

அலுவலகம் நுழைந்ததும்
ஆயாசம் தோன்றியது
அதேகணினி அதேசெயற்கைதனம்
அதேகணக்குகள் அதேபிணக்குகள்

காலைகனவின் நினைவுவர
கண்கள் நிறைந்தது
செயற்கையான இந்தவாழ்வில்
செய்யபோவது என்ன

முப்பது வருடம்கழித்து
முன்வாழ்வை திரும்பிபார்த்தால்
பணம்பகட்டை தவிர்த்து
பார்க்க என்னஇருக்கிறது

காலை கண்டகனவு
கண்டிப்பாய் பலிக்குமென
பாட்டிஒருமுறை சொன்னநினைவு
பலிக்குமா என்கனவு!!!

மறுபடியும் அலாரம்திருப்பி
மற்றொரு இயந்திரநாளுக்கு
ஆயாசம் ஆட்கொள்ள
ஆயுத்தமாகிறேன் நான்!!!

கண்மூடி உறக்கம்தேடி
கனவு மறுபடியும்
கனவாகவேனும் வரணும்என
கடவுளை வேண்டியே!!!

66 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

வாழ்த்துக்கள் அ.த! சங்கத்துக்கே பெருமை சேர்த்துட்டீங்க!

LK said...

//
கண்மூடி உறக்கம்தேடி
கனவு மறுபடியும்
கனவாகவேனும் வரணும்என
கடவுளை வேண்டியே!///

நாங்களும்தான் .. vaalthukkal

LK said...

//எனது இந்த படைப்பு யூத் விகடனில் வெளி வந்துள்ளது. உங்களிடம் அதை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்//

அம்புட்டு பெரிய ஆளா நீங்க..

Porkodi (பொற்கொடி) said...

அழகா இருக்கு! (இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாமோன்னும் தோணுது.)

Porkodi (பொற்கொடி) said...

எல்.கே, எப்படி நம்ம வடைய கவ்வுற திறமை? பாத்தீங்கல்ல.. பயம் இருக்கட்டும்!

அநன்யா மஹாதேவன் said...

அ.த,
வாழ்த்துக்கள்.
கலக்கிப்போட்டீங்கம்மணி!

LK said...

/எல்.கே, எப்படி நம்ம வடைய கவ்வுற திறமை? பாத்தீங்கல்ல.. பயம் இருக்கட்டும்! ///
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
(இவங்க ப்ளாக் ஓபன் ஆகா கொஞ்சம் நேரம் ஆச்சு அதுக்குள்ள )

sriram said...

வாவ்.. வாழ்த்துக்கள்.
கழகக் கண்மணி ஒருவரின் எழுத்துக்கள் விகடன்ல வந்தது எங்க எல்லாருக்கும் பெருமை.

கவுஜைக்கும் எனக்கும் ரொம்ப தூரம், எனவே ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//எனது இந்த படைப்பு யூத் விகடனில் வெளி வந்துள்ளது//

எனக்கு ஒரு உண்ம தெரியணும் சாமி..

உங்க படைப்பு எப்படி YOUTH விகடன்ல வருது??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
வாழ்த்துக்கள் அ.த! சங்கத்துக்கே பெருமை சேர்த்துட்டீங்க!//

ரெம்ப நன்றிங்க பொற்கொடி....

அப்பாவி தங்கமணி said...

//LK கூறியது...
//
கண்மூடி உறக்கம்தேடி
கனவு மறுபடியும்
கனவாகவேனும் வரணும்என
கடவுளை வேண்டியே!///
நாங்களும்தான் .. vaalthukkal//

வாழ்த்துக்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க LK

அப்பாவி தங்கமணி said...

//LK கூறியது...
அம்புட்டு பெரிய ஆளா நீங்க..//

பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க LK . எப்பவும் அதே அப்பாவி தான்....

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
அழகா இருக்கு! (இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாமோன்னும் தோணுது.)//

எனக்கும் அனுப்பினதுக்கு அப்புறம் அப்படி தோணுச்சு கொடி. ஒரு ஆர்வத்துல சட்டுன்னு அனுப்பிட்டேன் (great women think alike..... )

padma said...

congrats

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
எல்.கே, எப்படி நம்ம வடைய கவ்வுற திறமை? பாத்தீங்கல்ல.. பயம் இருக்கட்டும்!//

//LK சொன்னது…
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
(இவங்க ப்ளாக் ஓபன் ஆகா கொஞ்சம் நேரம் ஆச்சு அதுக்குள்ள)..

இப்படி போட்டி போட்டுட்டு கமெண்ட் போடுற encouragement is what driving me...thank you both (thank you all).... (ஓவர் பீலிங்க்ஸ் அப்படின்னு யாராச்சும் கமெண்ட் பண்ணினா நான் டென்ஷன் ஆயடுவேனாமா... )

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
வாவ்.. வாழ்த்துக்கள்.
கழகக் கண்மணி ஒருவரின் எழுத்துக்கள் விகடன்ல வந்தது எங்க எல்லாருக்கும் பெருமை.
கவுஜைக்கும் எனக்கும் ரொம்ப தூரம், எனவே ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ரெம்ப ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்... கழகத்துல சேந்தபுரம் தான் இதெல்லாம்... எனவே பெருமை எல்லாம் கழகத்தையே சேரும்....(ஐயோ அதுக்குள்ளே யாரோ மைக் வாங்கிட்டாங்க)

Jokes apart, thanks a lot for your wishes Sriram

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
//எனது இந்த படைப்பு யூத் விகடனில் வெளி வந்துள்ளது//
எனக்கு ஒரு உண்ம தெரியணும் சாமி..
உங்க படைப்பு எப்படி YOUTH விகடன்ல வருது??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

யூத் படைப்பு யூத்ல தான் வரும்... ஐயோ ஐயோ... (எப்பூடி....? நாங்க அப்பாவி ஆச்சே....)

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
congrats//

ரெம்ப நன்றிங்க பத்மா

அப்பாவி தங்கமணி said...

//செ.சரவணக்குமார் சொன்னது…
ரொம்ப நல்லாயிருக்குங்க. விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.//

ரெம்ப நன்றிங்க சரவணகுமார்

sriram said...

//யூத் படைப்பு யூத்ல தான் வரும்... ஐயோ ஐயோ//

ஓ அப்போ நீங்களும் என்ன மாதிரி யூத்துதானா??

நீங்க ஆண்டின்னு நெனச்சிட்டேன் (அந்த ஆண்டி இல்ல Aunty)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள்.
கவிதை சிறப்பாக இருந்தது.

Porkodi (பொற்கொடி) said...

//ஓ அப்போ நீங்களும் என்ன மாதிரி யூத்துதானா?? //

இந்த மாதிரி அண்டப்புளுகு ஆகாசப்புளுகு படிக்கறதுக்கா ஆண்டவா என்னை இந்த உலகத்துக்கு அனுப்பி வெச்சே??

LK said...

//(great women think alike..... )//

பாம்பின் கால் பாம்பறியும் ....

(just for fun)

Guna said...

Congrats nga...

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
//யூத் படைப்பு யூத்ல தான் வரும்... ஐயோ ஐயோ//
ஓ அப்போ நீங்களும் என்ன மாதிரி யூத்துதானா??
நீங்க ஆண்டின்னு நெனச்சிட்டேன் (அந்த ஆண்டி இல்ல Aunty)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

பேச்சே வர்ல...வேற என்ன சொல்ல....என்னை மாதிரியே யூத்தானு கேட்டப்புறம் பேச என்ன இருக்கு... எனக்கு தெரிஞ்சு நாட்டாமைனா கொறஞ்சது ஒரு அறுபது வயசாச்சும் இருக்காது... என்ன பொற்கொடி நான் சொல்றது
(நான் ஆண்ட்டி தான், ஒரு மூணு / நாலு வயசு niece & nephews க்கு... நான் எப்பவும் உண்ம தான் பேசுவேன் என்பதை சொல்லி கொள்கிறேன்)

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
வாழ்த்துக்கள்.
கவிதை சிறப்பாக இருந்தது//

ரெம்ப நன்றிங்க தமிழ் உதயம்

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
//ஓ அப்போ நீங்களும் என்ன மாதிரி யூத்துதானா?? //
இந்த மாதிரி அண்டப்புளுகு ஆகாசப்புளுகு படிக்கறதுக்கா ஆண்டவா என்னை இந்த உலகத்துக்கு அனுப்பி வெச்சே??//

மனச தேத்திகோங்க கொடி....

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
//(great women think alike..... )//
பாம்பின் கால் பாம்பறியும் ....
(just for fun)//

இப்படியும் சொல்லலாம்... நல்லவங்களுக்கு நல்லவங்கள நல்லா தெரியும் (Just for serious....)

அப்பாவி தங்கமணி said...

//Guna சொன்னது…
Congrats nga... //

ரெம்ப நன்றிங்க குணா

DREAMER said...

கவிதை நடையில் ஒரு அழகிய பசுமையான கனவை பிரதிபலித்திருக்கிறீர்கள்... கனவு நனவாக வாழ்த்துக்கள்!

-
DREAMER

அமைதிச்சாரல் said...

அருமையா இருக்குங்க. பின்னீட்டிங்க.வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ Dreamer - ரெம்ப நன்றிங்க Dreamer

@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க....படித்ததுக்கும் வாழ்த்துக்கும்

Priya said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீராம். said...

கவிதை அருமை. ஒரு தனிப் பட்ட பாணி தெரிகிறது. அதன் கருவும் மனத்தைக் கவர்கிறது. இளமை விகடனில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்

Complan Surya said...

வாழ்த்துக்கள்
புவனா

மிக மிக அழகான
ஒரு எதார்த்த காவியம்
கவிதையாய்.

மிகவும் ரசித்தேன்.

அடியேன்
தங்கள்
கவிதைக்கு
வாசகன்
ஆகிவிட்டேன்

சூர்யா

Complan Surya said...

Porkodi (பொற்கொடி) கூறியது...
எல்.கே, எப்படி நம்ம வடைய கவ்வுற திறமை? பாத்தீங்கல்ல.. பயம் இருக்கட்டும்!
----hio hio

innuma enta vadaikku sanda..ethila perumai vera...engaiachum vadainu board matti eruntha pothum...

ammam yaru enga youth..

enga appavithan youth...nan annaikey chonnen ella oru sila peru than rumba youthunu cholikitu therianganu..

avangalai ellam aatathila sekathenganu chonnen keetengala appavi..??

epo parunga vadaikku sanda potukiranga..

அம்புட்டு பெரிய ஆளா நீங்க..--enna ethu china pullathanama kelvi ketukitu...

அழகா இருக்கு! (இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாமோன்னும் தோணுது.)---hkum evaga periya p.c ramu..edit pananuma? mudala evanga kadiyaa edit pana chollunga..emputu neramthan padikrathu...apapappa..

உங்க படைப்பு எப்படி YOUTH விகடன்ல வருது?? appavi mudala thisti sutthipodunga..egapatta perukku poramai..amam cholliputen.

varatta.

varuthapadtha vaasippor sangam
complan surya

தக்குடுபாண்டி said...

//தாழ்வார தூணில்சாய்ந்து
புழக்கடை தோட்டக்கீரையை
ஆய்ந்து கொண்டிருந்தேன்
ஏகாந்த அமைதியில்// excellent akka!

தக்குடுபாண்டி said...

//எனக்கு ஒரு உண்ம தெரியணும் சாமி..

உங்க படைப்பு எப்படி YOUTH விகடன்ல வருது?? // hahahahah..:) ROFTL , naattamai! kalakkal poongo!

தக்குடுபாண்டி said...

புவனாவாகிய உங்களின் 'பசுமையான புவனம்' பற்றிய பார்வை அருமை! வாழ்த்துக்கள் அக்கா!

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள். இந்த என்னுடன் ஒரு நாள் பலருக்கும் பொருந்தும். அருமை

அப்பாவி தங்கமணி said...

@ பிரியா - ரெம்ப நன்றிங்க ப்ரியா வாழ்த்துக்களுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம். இயல்பு நடை கவிதை எழுதி ரெம்ப நாள் ஆய்டுச்சு. பழைய படி எழுத முயற்சி செய்துட்டு இருக்கேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ சூர்யா - நன்றிங்க சூர்யா உங்க வாழ்த்துக்களுக்கும் சப்போர்ட்க்கும்

//அடியேன்
தங்கள்
கவிதைக்கு
வாசகன்
ஆகிவிட்டேன்//

சும்மாவே பறக்கற கேஸ் நானு, இப்படி எல்லாம் ஏத்தி விட்டா அவ்வளவு தான்

நீங்க சொன்ன மாதிரி சுத்தி போட்டுடலாம். நன்றி மீண்டும்

LK said...

//நீங்க சொன்ன மாதிரி சுத்தி போட்டுடலாம்//

யாரை சுத்தி போடணும்>?

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//தாழ்வார தூணில்சாய்ந்து
புழக்கடை தோட்டக்கீரையை
ஆய்ந்து கொண்டிருந்தேன்
ஏகாந்த அமைதியில்// excellent akka//

ரெம்ப நன்றிங்க பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//எனக்கு ஒரு உண்ம தெரியணும் சாமி..
உங்க படைப்பு எப்படி YOUTH விகடன்ல வருது?? // hahahahah..:) ROFTL , naattamai! kalakkal poongo!//

அடப்பாவி... இப்போ தானே உன்ன நல்லவன்(ர்)னு நெனச்சேன்...அதுக்குள்ள இப்படி வாரினா எப்படி?

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
புவனாவாகிய உங்களின் 'பசுமையான புவனம்' பற்றிய பார்வை அருமை! வாழ்த்துக்கள் அக்கா!//

ஆஹா கவிதையா ஒரு பின்னூட்டம் சூப்பர் தான்... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
(அந்நியன் அம்பினு மாறி மாறி ரோல் பண்றீங்க போல....)

அப்பாவி தங்கமணி said...

//புதுகைத் தென்றல் சொன்னது…
வாழ்த்துக்கள். இந்த என்னுடன் ஒரு நாள் பலருக்கும் பொருந்தும். அருமை//

ரெம்ப நன்றிங்க புதுகை

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
//நீங்க சொன்ன மாதிரி சுத்தி போட்டுடலாம்//
யாரை சுத்தி போடணும்>?//

இருக்கற நெலமைய பாத்தா உங்கள தான்னு நெனைக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

அருமை புவனா. [இனி அப்படியே கூப்பிடலாமா:)? ] என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரம்பம். தொடருங்கள்.

அப்பாவி தங்கமணி said...

//ராமலக்ஷ்மி சொன்னது…
அருமை புவனா. [இனி அப்படியே கூப்பிடலாமா:)? ] என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரம்பம். தொடருங்கள்//

தாராளமா புவனானே கூப்பிடலாம் ராமலக்ஷ்மி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க

ஹுஸைனம்மா said...

கவிதை ரொம்ப அருமைங்க. ஆனாலும் கனவுன்னு ஏமாத்தீருக்க வேணாம். துளசிக்கு நீரும், பசுவுக்கு கீரையும், ஆலமரத் தொட்டிலும்... சூப்பர்!!

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
கவிதை ரொம்ப அருமைங்க. ஆனாலும் கனவுன்னு ஏமாத்தீருக்க வேணாம். துளசிக்கு நீரும், பசுவுக்கு கீரையும், ஆலமரத் தொட்டிலும்... சூப்பர்!!//


ரெம்ப நன்றிங்க ஹுஸைனம்மா. நிஜமாவே என்னோட கனவு தான் போன வாரம். எழுதனும்னு தோணுச்சு. நன்றி மீண்டும்

Krishnaveni said...

Vaazhthukkal buvana. Kavidai romba nalla irukku. Excellent blog. Keep writing. Thanks for your comment about my blog. Nice to know that we are in the same country. All the best.

Madhuram said...

Daily vandhu vandhu etti paathuttu poren, eppadi idha miss pannen? Congratulations AT. Neenga innum niraiya ezhudhanum, unga ezhuthukkal ellam prasuram aaganum.

Dubukku edukira padathukku paattu ezhudha aal ready pa!

அப்பாவி தங்கமணி said...

@ கிருஷ்ணவேணி - முதல் வருகைக்கு நன்றிங்க கிருஷ்ணவேணி. I'm also happy that I'm getting to know more bloggers from canada

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - வாங்க மதுரம். எப்படி மிஸ் பண்ணினீங்க? சரி உங்க ஈமெயில்க்கு போஸ்ட் அலெர்ட் போட்டுடறேன் (இதுக்கு கேக்கமையே இருந்து இருப்பேன்னு நெனைக்கறீங்களோ)

ரெம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு... டுபுக்கு பாவம் ஏதோ நல்லவிதமா சினிமா எடுக்கலாம்னு இருக்கார். இப்படி எல்லாம் மெரட்டினா அப்புறம் நம்மள ப்ளாக் விட்டே தள்ளி வெச்சுருவார் (இருந்தாலும் நீங்க என்மேல வெச்சிருக்கற நம்பிக்கைக்கு மிக்க நன்றி மதுரம். Talk to you soon. Take care)

சுசி said...

முதலில் வாழ்த்துக்கள்.

ரொம்ப நல்லா இருக்குங்க..

//கண்மூடி உறக்கம்தேடி
கனவு மறுபடியும்
கனவாகவேனும் வரணும்என
கடவுளை வேண்டியே!!!//

அவ்ளோ நிஜமான வரிகள்..

அப்பாவி தங்கமணி said...

@ சசி - ரெம்ப நன்றிங்க சசி

சி. கருணாகரசு said...

எத்தனையோ.... நெருடல்களை மிக நேர்த்தியா சொல்லியிருக்கிங்க..... மிக ரசித்தேன் அது ஒரு காலங்க.....

உங்களுக்கு மேய் தின வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

நன்றிங்க கருணாகரசு. உங்களுக்கும் எனது மே தின வாழ்த்துக்கள்

SathyaSridhar said...

Vazhthukkal Thangam.. Migavum arumaiyana pathippu dear..

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப நன்றிங்க சத்யாஸ்ரீதர் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

சுரேகா.. said...

எப்படி மிஸ் பண்ணினேன்?

இன்றுதான் பார்க்கிறேன்.

மன்னிக்கணும்.!

அற்புதமா இருக்கு!

கடைசியில்

கண்மூடி உறக்கம்தேடி
கனவாவது மறுபடியும்
காணவேண்டும் என்ற கனவுடன்
கடவுளை வேண்டியே!!!

என்று இருந்திருக்கலாமோ?

அப்பாவி தங்கமணி said...

@ சுரேகா.. - ரெம்ப நன்றிங்க... எப்படியோ மிஸ் ஆய்டுச்சு போல இருக்கு...:) நீங்க சொன்ன கடைசி வரி மாற்றமும் சூப்பர்... மிக்க நன்றி

Post a Comment