Saturday, May 15, 2010

பிரியமானவளே (2nd கிளைமாக்ஸ் - பகுதி 1 )

(முன்குறிப்பு: சுருக்கி எழுதினா கதைக்கு ஞாயம் சேர்க்க முடியாதுன்னு அப்படியே எழுதிட்டேன். ஒரே பகுதில முடிக்கணும்னு செஞ்ச முயற்சி நடக்கல. ரெண்டு பகுதியா போடறேன். இதுவே.... கொஞ்சம்.... இல்ல இல்ல ரெம்ப பெரிய பதிவா போய்டுச்சு, மன்னிக்கணும். நடுவுல டீ பிரேக் எடுத்துட்டு படிச்சாலும் கோச்சுக்க மாட்டேன்....)

_____________________________

இது 2nd கிளைமாக்ஸ்ங்கறதால பகுதி 8 ல ஆரம்பத்துல காயத்ரி / கார்த்தி சண்டை எல்லாம் அதே தான். அதுக்கப்புறம் தான் கதை மாறுது

________________________________

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

இது வரை போன பகுதில படிச்சு இருப்பீங்க... இனி.......................

_________________________________

இருமுறை நடுவில் ஊருக்கு கார்த்தி வந்த போதும் காயத்ரியை காணும் வாய்ப்பு அமையவில்லை

வேலையில் சேர்ந்த மூன்று மாதத்தில் அவனுக்கு வேலை விசியமாய் ஒரு வருடம் அமெரிக்கா செல்ல வேண்டிய தருணம் வந்தது

அதற்கு முன் ஒரு முறை அவளுடன் பேச வேண்டும் என மனம் தவித்தபோதும் அவள் பேசிய கடைசி வார்த்தைகள் மனதை வருத்த பேசாமல் தவிர்த்தான்

ஒரு வருடம் மிக வேகமாய் ஓடியது...

காயத்ரிக்கும் கல்லூரி முடிந்தது. அவள் அங்கேயே ஏதேனும் வேலை தேடும் முயற்சியில் இருந்தாள்

____________________________________

"ஹலோ...."

"ஹலோ, அம்மா நான் கார்த்தி பேசறேன்"

"கார்த்தி... கண்ணா... நன்னா இருக்கியாடா?" என காஞ்சனா மகன் குரல் கேட்டதும் உருகினாள்

"இருக்கேம்மா...அப்பா, நீ எல்லாரும் எப்படி இருக்கேள்?"

"நன்னா இருக்கோண்டா...அங்க இன்னும் நல்ல குளிராப்பா?"

"இப்போ தேவலமா. அங்க நல்ல வெயில்னு சொன்ன. இப்ப எப்படி?"

"அப்படியே தான் இருக்கு கார்த்தி. எப்போடா ஊருக்கு வர்ற?"

"வரேம்மா... இன்னும் ப்ராஜெக்ட் முடியலியே"

"கண்ணுலேயே இருக்கடா... இனிமே இந்த ப்ராஜெக்ட் எல்லாம் வேண்டாம். இங்கயே இருக்கறாப்ல எதுனா வேலை பாரு"

"ம்... " என்றான் யோசனையை

ஒரு ஒரு முறையும் காயத்ரி பற்றி கேட்க நினைத்து தவிர்த்து வந்தான். இன்று ஏனோ அவள் நினைவு துரத்தியது

மகனின் மனதை படித்தது போல் காஞ்சனா "கார்த்தி, நேரம் கெடைக்கரச்ச காயத்ரி ஆத்துக்கு ஒரு போன் பண்ணிடு"

"என்னமா ஆச்சு... ?"என பதறினான். ஒரு கணத்திற்குள் மனம் என்ன என்னவோ கற்பனை செய்து தவித்தது

"மாமிக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியல கண்ணா. Uterus ல ஏதோ பிரச்சனைன்னு ஆபரேஷன் பண்ணி இருக்கா. காயத்ரி கூட இங்கியே வந்துட்டா" எனவும் இப்போதே அவளை காண மனம் வேண்டியது

"சரிம்மா. நான் பேசறேன். அப்பாவ கேட்டேன்னு சொல்லுமா. வெச்சுடவா?"

"சரிப்பா. ஒடம்ப பாத்துக்கோடா"

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே காயத்ரியின் வீட்டிற்கு அழைத்தான்

"ஹலோ......" என காயத்ரி சொல்ல, வெகு நாட்கள் கழித்து அவள் குரல் கேட்டதும் கண்ணில் நீர் கோர்த்து கார்த்திக்கு

"ஹலோ... யாரு பேசறீங்க? ஹலோ..."

"காயத்ரி...நான் கார்த்தி பேசறேன்...."

"........" அவன் குரல் கேட்டதும் பேச்சே வரவில்லை அவளுக்கு

"காயத்ரி... லைன்ல இருக்கியா? ஹலோ..."

"ம்...." என்றாள்

என்ன பேசுவது என புரியாமல் "மாமிக்கு நன்னா இல்லைன்னு அம்மா சொன்னா... அதான் பேசலான்னு...." என்றான் பட்டும் படாமல்

"அப்போ என்னோட பேசணும்னு கூப்பிடலையா" என மனதில் தோன்ற துக்கம் அடைத்தது காயத்ரிக்கு. மனம் நினைத்ததை வாய் விட்டு கேட்க இயலவில்லை

"ஒரு நிமிஷம்...அம்மா கிட்ட தரேன்..."

"காயத்ரி... ஒரு நிமிஷம்... உன்னிட்ட...." என்பதற்குள்

"ஹலோ... கார்த்தி...நன்னா இருக்கியாப்பா?" என கோகிலாவின் குரல் கேட்டது

கோகிலாவிடம் ஷேமம் எல்லாம் விசாரித்து விட்டு காயத்ரியை பேச சொல்லி கேட்க

"அவ ஏதோ சாமான் வாங்கணும்னு சொல்லிண்டுருந்தா. கடைக்கு போய்ட்டா போல இருக்கு கார்த்தி" எனவும் கார்த்தியின் மனம் சோர்வுற்றது. தன்னிடம் பேசுவதை தவிர்க்கவே வெளியே சென்று விட்டாள் என புரிய "இன்னுமா என்னிடம் கோபம்" என வேதனை வாட்டியது

காயத்ரிக்கோ மனம் நிலை கொள்ளவில்லை. Out of sight, out of mind என்று நினைத்ததெல்லாம் சுக்குநூறாகியது. இத்தனை நாட்களுக்கு பின் கேட்ட அவனுடைய குரல் தன்னை இத்தனை பாதிக்குமென அவள் நினைக்கவில்லை. அன்று இரவு இருவருக்கும் தூக்கம் தொலைந்தது

அதற்கு பின் ஒரு ஒரு நாளும் ஒரு யுகமாய் கழிந்தது

இரண்டு மாத ப்ராஜெக்ட் வேலையை இரவும் பகலும் செய்து ஒரு மாதத்தில் முடித்து விட்டு ஊருக்கு கிளம்பினான் கார்த்தி

பெற்றவளிடம் கூட வருவதை பற்றி கூறவில்லை

அவனை கண்டதும் காஞ்சனாவிற்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. இப்படி ஆச்சிர்யப்படுத்தவே சொல்லாமல் வந்ததாக கூசாமல் பொய் சொன்னான்

வந்த சிறிது நேரத்திலயே காயத்ரியை காண சென்றான்

______________________

"அடடே... கார்த்தியா....? என்னப்பா உங்கம்மா நீ அடுத்த மாசம் தான் வருவேன்னு சொல்லிண்டுருந்தா?" என கோகிலா கேட்க

"ஆமாம் மாமி... அப்படி தான் இருந்தது.... திடீர்னு வேலை முடிஞ்சுது. கிளம்பிட்டேன். உங்க health எல்லாம் நன்னா இருக்கா மாமி?" என்றவனின் கண்கள் காயத்ரியை தேடியது

அதற்குள் பின் கட்டில் இருந்து வந்த காயத்ரி அவனை கண்டதும் ஒரு கணம் சிலையானாள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பின் எதிர்பாராத இந்த சந்திப்பின் அதிர்ச்சியில் உறைந்தாள். கீழே விழாமல் இருக்க அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றாள்

உடல் மெலிந்து சிரிப்பு மறந்த கண்களுடன் அவளை காண என்னவோ போல் இருந்தது கார்த்திக்கு

குளிர் பிரதேசத்தின் வாசம் கார்த்தியை மெருகேற்றி இருந்தது. அவன் கண்களை நேரே சந்திக்க இயலாமல் வேறு எங்கோ பார்வை பதித்தாள்

"என்ன காயத்ரி? யாரையோ புதுசா பாக்கராப்ல முழிக்கற? கார்த்தி கேக்கறதுக்கு பதில் சொல்லாம நிக்கற?" என கோகிலா கேட்க சுய நினைவுக்கு வந்தாள்

"நன்னா இருக்கியா காயத்ரி?"

"ம்..." என்றாள் வார்த்தை தொண்டையில் அடைக்க

"ஏன் இப்படி எளைச்சுட்ட....?" என நிஜமான அக்கறையுடன் கார்த்தி கேட்க

"நானும் இதே தான் தெனமும் சொல்றேன் கார்த்தி. சாப்பிடறதே என்னமோ கொரிக்கராப்ல தான். முன்னி இருந்த அந்த காயத்ரியே இல்ல இப்ப. இதுல நான் வேற முடியாம படுத்துக்கவும், ஆத்துலயும் எல்லா வேலையும் செய்யறாளா, பாவம் ஆளே உருமாறி போயிட்டா" என கோகிலா புலம்ப

"எதுக்கும்மா இப்ப பொலம்பற... நான் காபி போடறேன்" என இருவருக்கும் பொதுவாய் கூறி அங்கிருந்து நழுவ முயல

"காபி வேண்டாம் காயத்ரி. இப்போ தான் அம்மா குடுத்தா. நான் பெருமாள் சன்னதிக்கி போறேன். வாயேன் நீயும்... "என்றான் அவளுடன் தனியே பேசும் ஆவலில்

வேறு வினையே வேண்டாம் என தோன்ற காயத்ரி "இந்த நேரத்துல ஆரத்தி எல்லாம் கூட ஆய்ருக்குமே. உச்சிக்கு நடை சாத்தற நேரம்" என தவிர்க்க முயன்றாள்

"பரவால்ல...சும்மா போயிட்டு வரலாம் வா..." எனவும்

"இல்ல...நேக்கு ஆத்துல கொஞ்சம் வேல இருக்கு" என தவிர்த்தாள்

"வேல கெடக்கு போ காயத்ரி. எத்தன நாள் கழிச்சு கார்த்தி வந்திருக்கான்... நீயும் நாள் பூரா ஆத்துலேயே பழியா இருக்க... சன்னதிக்கி போயிட்டு வா" என கோகிலா வற்புறுத்த, மறுக்க முயன்று தோற்று வேறு வழியன்றி உடன் சென்றாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

"ரெம்ப எளைச்சுட்ட காயத்ரி. மாமி சொல்றாப்ல சரியா சாப்பிடறதில்லையா?"

"இல்ல... அதெல்லாம் இல்ல" என்றாள் அவனை நேரே காண்பதை தவிர்த்து

அவளது அந்த செய்கை மனதை வருத்த "இன்னும் எம்மேல கோவமாதான் இருக்கியா?" என தவிப்புடன் கேட்க அழுது விடாமல் இருக்க பெரிதும் முயன்றாள்

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?"

அதற்குள் கார்த்தியை கண்டதும் தெருவில் சிலர் நலம் விசாரிக்க வர பேச்சு தடைபட்டது

கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அங்கிருந்த சிலரின் விசாரிப்புகளுக்கு எல்லாம் பதில் உரைத்து விட்டு கோவிலுக்கு பின் புறம் இருந்த ஒரு பெரிய மரத்தின் திட்டில் சென்று அமர்ந்தனர்

கார்த்தி எதுவும் பேசாமல் காயத்ரியயே பார்த்தான். வாய்க்கு வாய் வாயாடி சிரிப்பும் விளையாட்டுமாய் தான் கண்ட காயத்ரி தொலைந்து போனதை உணர்ந்தான். அதற்கு தானே காரணம் என மருகினான்

காயத்ரிக்கு தனியே சென்று ஒரு பாடு அழுது தீர்க்க வேண்டும் போல் தோன்றியது

"சொல்லு காயத்ரி... இன்னும் கோவம் தீரலியா?" என விட்ட இடத்தில் இருந்து பேச்சை தொடர்ந்தான் கார்த்தி

"......." எதுவும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்

"ப்ளீஸ் காயத்ரி... இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போறோம் சொல்லு"

"ப்ளீஸ் கார்த்தி. என்னை எதுவும் கேக்காத"

"காயத்ரி நான் என்ன தப்பு பண்ணினேன். நேக்கு தோணாத ஒண்ணை சும்மாவாச்சும் ஆமான்னு ஒத்துண்டா என்னை நல்லவன்னு ஏத்துபயா"

"என்னை அழ வெச்சு பாக்கணும்னு தான் இங்க வந்தியா கார்த்தி"

"இல்ல... எப்பவும் நீ அழறது நேக்கு இஷ்டம் இல்ல காயத்ரி. நேக்கு என் தோழி காயத்ரி வேணும்"

"அவ செத்துட்டா" என்றாள் வெறுப்பாய்

"என்ன பேச்சு இது காயத்ரி" என கடுமையாய் சற்று உரக்கக்கேட்டான்

அந்த மதிய நேரத்தில் உச்சி பூஜை முடிந்து எல்லாரும் சென்று விட்டு இருந்தனர். எனவே அவர்கள் பேச்சுக்கு எந்த தடையும் இருக்கவில்லை

"அந்த ஷிவானி கிட்ட தோணின உணர்வு கூட என்னிட்ட தோணாத அளவுக்கு நான் மோசமா இருக்கேனா? அவள விட தான் எதுல கொறஞ்சு போயிட்டேன். சொல்லு கார்த்தி" என இத்தனை நாள் மனதில் கொந்தளித்து கொண்டிருந்ததையெல்லாம் கேள்வியாய் கொட்டினாள் அழுகையுடன்

"பைத்தியக்காரத்தனமான comparision காயத்ரி. ஷிவானி ஒரு.... சின்ன.... அந்த வயசு crush . ஆனா நீ என்னோட வாழ்நாள் தோழி" என்றான் கோபமும் சமாதானமுமாய்

"இந்த நழுவற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் கார்த்தி"

"அப்படி எல்லாம் இல்ல காயத்ரி. உன்கிட்ட எந்த கொறையும் இல்ல. இருந்தாலும் என் கண்ணுக்கு அது கொறையா தெரியாது. ஏன்னா நீ என்னோட உயிர் தோழி"

"Just stop it கார்த்தி. தோழி தோழினு என்னை கொன்னது போதும்" என அழுது கொண்டே எழுந்தாள்

திட்டில் இருந்து கீழே இறங்க முயன்றவள் கண்களில் கண்ணீர் மறைக்க ஒரு படி தவறி கீழே கால் வைக்க அப்படியே மறுபுறம் சரிந்தாள். கார்த்தி எழுந்து பிடிக்கும் முன் அவள் தலை அங்கு இருந்த ஒரு கல்லில் மோதியது

"கார்த்தி...." என கத்தியவாறே சரிந்தாள்

கார்த்திக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. பதறி அவளை தான் மடியில் இருத்த முயன்றான். தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது

"காயத்ரி... காயத்ரி...ப்ளீஸ் இங்க பாரு...ஒண்ணும் இல்ல... ப்ளீஸ் என்னை பாரு" என அவள் கன்னத்தில் தட்டினான்

மெல்ல கண்ணை திறந்தவள் ஏதோ சொல்ல முயன்று பேச இயலாமல் தோற்றாள்

அதற்குள் கார்த்தியின் சட்டை முழுதும் அவள் ரத்தத்தால் சிவந்தது

"ஐயோ...என்ன இது. யாராச்சும் வாங்கோளேன். ப்ளீஸ்... ஹெல்ப்" என கத்தினான்

அவன் கத்தலில் மெல்ல மீண்டும் கண் திறந்த காயத்ரி காதல் நிறைந்த கண்களுடன் "கார்த்தி.." என அழைக்க

"காயு....ஒண்ணும் ஆகாது... சீக்கரம் hospital போய்டலாம்...சரியா" என தனக்கே தைரியம் சொல்லி கொண்டான்

"கா....ர்...த்தி...." என திக்கியவள் அவன் கைகளை இறுக பற்றி "I... love....you....I love you கார்த்தி...." என மொத்த உயிரின் பலத்தையும் தேக்கி உரைத்து விட்டு கண்களை மூடினாள்

ஒரு கணம் அப்படியே உறைந்தான் கார்த்தி. தன் உயிரே காற்றோடு கலந்து விட்டது போல் மூச்சு விட மறந்தான்

அதற்குள் அவன் உதவி கேட்டு கத்தியதை கேட்டு கோவிலுக்கு முன் புறம் கடையில் இருந்த சிலர் ஓடி வந்தனர்

அவசரமாய் டாக்ஸி வரவழைத்து மருத்துவமனைக்கு விரைந்தனர்

"காயத்ரி....காயத்ரி...." என கார்த்தி அரற்றி கொண்டே வந்தான்

"கால் எல்லாம் சில்லிட்டு போச்சு....எனகென்னமோ நம்பிக்கை இல்ல" என காரின் முன் புறம் அமர்ந்திருந்த இருவர் அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேச கார்த்தியின் கண்களில் கட்டுபாடின்றி நீர் பிரவாகம் ஆனது. ஒரு நொடியில் உலகின் கடவுள்கள் எல்லாரையும் வேண்டினான்

______________________

"என்ன நடந்தது?" என டாக்டர் கேட்க

"அது....கோவில்...கல்லு...தலை பட்டு....ரத்தம்....கண்ணு எல்லாம்....." என கோர்வையாய் சொல்ல முடியாமல் கார்த்தி தடுமாற உடன் வந்தவர்கள் நடந்ததை விவரிக்க சிகிச்சை ஆரம்பமானது

அதற்குள் விசயம் கேட்டு காயத்ரியின் பெற்றோர், அக்கா, கார்த்தியின் பெற்றோர் எல்லோரும் வந்து சேர பதட்டம் மேலும் கூடியது

எல்லோரும் கார்த்தியிடம் என்னவென விசாரிக்க முயல "எல்லாம் என்னால தான்....எல்லாம் என்னால தான்...." என்பதை தவிர அவன் எதுவும் பேசவில்லை. அதிரிச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தான்

அழுகை கூட வர மறந்தது போல் உறைந்து போனான்

கோகிலாவை சமாதானம் செய்வதே எல்லோருக்கும் பெரும் பாடானது

நேரம் ஓடி கொண்டே இருந்தது

கிட்டதட்ட இரவு நெருங்கிய வேளையில் டாக்டர் அழைப்பதாய் நர்ஸ் வந்து சொல்ல என்ன சொல்வாரோ என பயந்து யார் உள்ளே செல்வது என புரியாமல் தடுமாற கௌரியும் கார்த்தியும் சென்றனர்

_________________________

"நீங்க patient யோட husband ஆ" என கார்த்தியின் தவிப்பை பார்த்து கேட்டார் டாக்டர்

கார்த்தி எதுவும் பேச இயலாமல் தடுமாற "இல்ல அவர் காயத்ரியோட friend கார்த்தி. நான் அவளோட சிஸ்டர் கௌரி" என்றாள் கௌரி

"ஒகே கௌரி. உங்க சிஸ்டர்க்கு பின் மண்டைல பலமா அடிபட்டதுல ஒரு blood vessel rupture ஆகி இருக்கு. அதை surgery பண்ணனும். அதுவும் சீக்கரம் பண்ணனும். இன்டெர்னல் ப்ளீடிங் ரெம்ப ரிஸ்க் ஆய்டும் லேட் பண்ணினா"

"அவ உயிருக்கு எதுவும்...." என கார்த்தி மொத்த பலத்தையும் திரட்டி கேட்டான்

"100 % எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர் கார்த்தி. ஹெட் இஞ்சுரி எல்லாம் சர்ஜரி முடியற வரை சொல்ல முடியாது. Probability வேணா ஒரு அளவு சொல்லலாம். காயத்ரி கேஸ் Brain ல டைரக்ட்ஆ அடி இல்லைங்கரதால 60 % சான்ஸ் இருக்குனு சொல்லுவேன். எங்கள பொறுத்தவரை 50 % க்கு மேல இருக்கற எல்லாமே high probability " என டாக்டர் கூற கார்த்தியும் கௌரியும் ஒருவரை ஒருவர் ஆறுதலுடன் பார்த்து கொண்டனர்

"சர்ஜரி எப்ப பண்ணனும் டாக்டர்" என கௌரி கேட்க

"Earlier the better Mrs . கௌரி. நாளைக்கி மார்னிங் chief ப்ரீயா இருக்கார். அவரும் இருந்து செய்றது பெட்டர்னு நான் பீல் பண்றேன். மத்த billing details எல்லாம் reception ல கேட்டு கட்டிடுங்க" என்றார் டாக்டர் அவ்வளவு தான் என்பது போல

வெளியே வந்ததும் எல்லாரும் சூழ்ந்து கொண்டு கேள்வி கணை தொடுக்க கௌரியே எல்லாருக்கும் பதில் கூறினாள்

அப்போதே ஒரு லட்சம் கட்ட வேண்டுமென reception இல் கூறினார். அந்த இரவு நேரத்தில் பேங்க் கூட இருக்காதே என யோசித்து கௌரியின் கணவர் தன் நண்பர் ஒருவரிடம் கேட்பதாக சொல்ல கார்த்தி அதை மறுத்து தானே பொறுப்பேற்றான்

"அம்மா சாவி குடு. ATM கார்டு ஆத்துல இருக்கு. நான் போயிட்டு வந்துடறேன்" என கார்த்தி கேட்க

"இரு கார்த்தி நானும் ஆத்துக்கு வந்து எல்லாரும் சாப்பிட எதுனா செஞ்சுட்டு வந்துடறேன்" என காஞ்சனாவும் கிளம்பினாள்

"கார்த்தி நீ இப்ப வண்டி ஓட்ட வேண்டாம். நானே கார் எடுத்துட்டு வரேன்" என அவன் தந்தையும் உடன் சென்றார்

_________________

காயத்ரியின் வீட்டை கடந்து சென்ற போது கார்த்தி மேலும் பலவீனமானான். தன் அறைக்குள் நுழைந்ததும் அந்த தனிமை துக்கத்துக்கு தூபம் போட்டது

சிறுவயதில் கார்த்தியும் காயத்ரியும் கை கோர்த்து வழியும் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றபடி நின்றிருந்த அவன் அறையின் சுவரில் இருந்த பழைய புகைப்படம் அவனை முற்றிலும் நிதானம் இழக்க செய்தது

அதற்கு மேல் தாங்க இயலாமல் கதறி அழுதான்

காஞ்சனா அவசரமாய் கலந்த சாதம் தயார் செய்து கொண்டிருக்க மகனின் கதறல் கேட்டு ஓடி வந்தாள் அவன் தந்தையும் போட்டது போட்டபடி வந்தார்

"கார்த்தி...என்னடா இது... எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்றவன் நீ. இப்படி ஒடஞ்சு போனா எப்படி" என இருவரும் சமாதானம் செய்ய முயல

"ஐயோ....அம்மா... என்னால முடியலையே.... நான் வந்தே இருக்க கூடாது. நான் US லையே இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.... எல்லாமே என்னால தான்....என்னால தான்... " என கதறினான்

வளர்ந்த பிள்ளை அழுது கண்டிராத காஞ்சனா தாங்க மாட்டாமல் "என்ன கார்த்தி இது? ஏன் இப்படி எல்லாம் சொல்ற. அவ நேரம் அப்படி நடக்கனும்னு இருக்கு... அதுக்கு நீ என்ன செய்வ"

"இல்லமா... அவளுக்கு எதாச்சும் ஆய்ட்டா....நான்....." அதுக்கு மேல் அவனால் பேச இயலவில்லை

"எதுவும் ஆகாது கார்த்தி. இப்படி தைரியம் இழந்துட்டா அதுவே நெகடிவ் energy ஆய்டும்னு சொல்லுவா" என அவன் தந்தை அவன் அழுகையை நிறுத்த முயன்றார்

__________________

அன்று இரவு ஒருவரும் உறங்கவில்லை. கார்த்தி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ICU கண்ணாடி வழியே சென்று காயத்ரியை பார்த்து கொண்டே இருந்தான், பார்க்காமல் விட்டால் அவள் விட்டு சென்று விடுவாளோ என பயந்தது போல்

___________________

ஆபரேஷன் ஆரம்பித்ததும் கார்த்தி மருத்துவமனையின் பின் புறம் இருந்த பிள்ளையார் கோவில் முன் சென்று அமர்ந்தவன் நான்கு மணி நேரம் கண் திறக்காமல் ப்ராதித்தான்......

இனி....

உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி

காலன்தனை வென்று
கண்மலர்ந்திடு தேவதையே
கண்ணீரேஇனி வேண்டாமென
கண்ணீரில் கரைகிறேனடி

விரைந்துஎன்னிடம் வந்துவிடு
விதியைநீயும் வென்றுவிடு !!!

தொடரும்....அடுத்த பகுதியில் முடியும்

28 பேரு சொல்லி இருக்காக:

அனாமிகா துவாரகன் said...

I was about to come and warn you for the last time to post this part asap. Waaaaaaaahaaaaaahaaaaaa.. But. what a surprise. You have posted it 17sec ago. he he.

அனாமிகா துவாரகன் said...

Let me read and come. =))

அனாமிகா துவாரகன் said...

Done. Need Part 2 asap =)) =)) =))

ஸ்ரீராம். said...

தமிழ் படம் பார்க்கிற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. சுவையாதான் இருக்கு.

தமிழ் உதயம் said...

நான்கு மணி நேரம் கண் திறக்காமல் ப்ராதித்தான்...


அதென்ன கணக்கு. நாலு மணி நேரம்.
கவிதை நல்லா இருக்கு.

ஹேமா said...

கவிதைதான் அருமை.
கதையும்கூட !

சுசி said...

//உயிர்போன வலியை
உயிரோடே உணர்ந்தேனடி
காலம் முழுமைக்கும்
கண்மணிஇது போதுமடி //

செமயா இருக்கு வரிகள்..

சீக்கிரம் அடுத்த பகுதிய ரிலீஸ் பண்ணுங்க..

பிரார்த்தனையில நாங்களும் கலந்துக்கிறோம்.

Guna said...

Chance-ye illa, super..

Krishnaveni said...

Again thodarum.......can't wait. post the end soon. nice write up

அன்னு said...

ஏஏஏ யப்பா....ஏங்க பக்கத்துல யாரையாவது உக்கார வெச்சு கிளிசரின் வேணுமா வேண்டாமான்னு டெஸ்ட் பண்ணிகிட்டே எழுதுவீங்களா...முதல் முடிவு சப்புனு போயிடிச்சு, இந்த பகுதிக்கு முன்னாடி....இதுல இந்த பகுதியை ரெண்டா வேற போடறீங்களா? லொள்ளுதான்.

கார்த்தி பக்கம் நியாயம் இருக்கறதால அவன் பாடுதான் காயத்ரியை விட மோசமா இருக்கு. உங்களுக்கு எதாவது கார்த்தின்ற பேர்ல vengenceஆ?

நல்ல வேளை கோலிவுட்ல யாரும் இன்னும் கதையெல்லாம் outsourcing பண்ண ஆரம்பிக்கலே...இல்லைன்னா உங்க படம் செம ஹிட் போங்க. சரி சரி....பதில் சொல்றதுல time waste பண்ணாம சீக்கிரம் கதைய முடிங்க. போயி ஜில்லுனு ஒரு லைம் ஜூஸ் குடிக்கணும். நமக்கும் சேர்த்து இல்ல வேர்த்துப் போச்சு..!!

AnnyBenny said...

mmm,... thangs..
chumma udane karthik ok solraapla illama..his realization is set to come only at the cost of some terrific pain..nice and realistic.
Now only this story is heading towards a
superb climax (ha ha...)..
post it soon ma.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு அப்பாவி தங்கமணி மேடம்.

My days(Gops) said...

13 VANTOM LA...

LK said...

ஊர்ல இருந்து வந்த உடன் என்னை கலங்க வசுட்டேங்க.. நாளைக்கே அதுத பாகம் போடவும்

ஹுஸைனம்மா said...

தமிழ்ப் படங்கள் நிறையப் பாப்பீங்களோ? ;-))

My days(Gops) said...

இந்த ஆஸ்பத்திரி சீன் கண்டிப்பா தேவையா? எனக்கு புடிக்கல செல்லாது செல்லாது ........... அடுத்த பதிவு பிளீஸ்....

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நல்ல வேளை. போஸ்ட் போட்டேன் தப்பிச்சேன். Many thanks for your interest Anaamikaa, its a big boost to write more

@ ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம்

@ தமிழ் உதயம் - நான்கு மணி நேரம் ஆபரேஷன் முடியும் வரை கண் திறக்காமல் ப்ராத்தித்தான்னு எழுத வந்துட்டு நடுவுல ரெண்டு வார்த்தை விட்டுட்டேன்.... speed for thought i faster than my typing speed, thats the problem. நன்றிங்க குறிப்பிட்டு கேட்டதுக்கு

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி. சீக்கரம் போட்டுடறேன் அடுத்த பகுதி

@ Guna - ரெம்ப நன்றிங்க குணா

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி. சீக்கரம் போட்டுடறேன் நெக்ஸ்ட் part

@ அன்னு - லொள்ளா... பின்ன நம்ம ஊரு லொள்ளு இருக்காதா சிஸ்டர். கார்த்திங்கற பேர்ல நோ vengence . In fact எனக்கு அந்த பேரு பிடிக்கும். ஆஹா... outsourcing ஆ.. இப்படி எல்லாம் ஏத்தி விட்டா நான் பறக்க ஆரம்பிச்சுடுவேன்

@ AnnyBenny - Thanks Anny. I will try to post sooner

@ சரவணகுமார் - நன்றிங்க பிரதர்

@ My days(Gops) - வாங்க வாங்க.... எங்க ஆளையே காணோம்....

@ LK - சீக்கரம் போட்டுடறேன் LK , நன்றி. தலைநகர்ல போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுங்களா?

@ ஹுஸைனம்மா - பாக்கறது தானுங்க..... ரெம்ப இழுக்கறேனோ?

@ My days(Gops) - அது சரி... செல்லாதா... சீக்கரம் போட்டுடறேன், நன்றி

அமைதிச்சாரல் said...

எனக்கு ஆஸ்பத்திரின்னாலே அலர்ஜி. காயுவுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடியட்டும். அப்றம் வந்து பார்க்கிறேன்.

LK said...

@அப்பாவி

நல்லபடியா முடிஞ்சு இன்னிக்கு கலையில் வெற்றியுடன் சென்னை திரும்பியாச்சு

தக்குடுபாண்டி said...

அடப்பாவி தங்க்ஸ்! காயுவுக்கு மட்டும் எதாவது ஆச்சு!! அப்புறம் இருக்கு உங்களுக்கு!!...:(

தக்குடுபாண்டி said...

akka! kadhai unmaiyaavey nalla irukku!! backroubdla S.A.Rajkumarai vachu oru laleyla laleyla! poottuvittu, vikramanai vachu padam panninoomna kalla kattirum akka...;) orey peeeelinga irukku!!!

LK said...

karthiknu peyar irukava ellarum ippadithan romba nalla manusaala iruppa

Madhuram said...

AT, ezhuthula nalla viruviruppu konduvara mudiyudhu ungalaala. I was reading it so fast to know what happened in the last. Usuala thamizh padam ellam easya guess panniduven, but I'm not able to guess how you are going to end it. Romba interestinga irukku.

Neenga 2nd climaxa rendu parta pottu engala torture kudukaradhaala, Sura padathai oru dhadavai paarkaradhudhaan ungalukku punishment. Remote controla edhuthu vachiduven, ungala oru roomla pottu lock pannittu padatha pottuduven.

தக்குடுபாண்டி said...

//Neenga 2nd climaxa rendu parta pottu engala torture kudukaradhaala, Sura padathai oru dhadavai paarkaradhudhaan ungalukku punishment. Remote controla edhuthu vachiduven, ungala oru roomla pottu lock pannittu padatha pottuduven.// Maduram akka, suuuuuuper idea. konjam wait pannuvom naama, gayuvukku mattum yethaavathu aachchu?? then intha idea workout pannuvoom. ROFTL

தக்குடுபாண்டி said...

//karthiknu peyar irukava ellarum ippadithan romba nalla manusaala iruppa// Narayana! intha Lk thollai thaanga mudiyalaippa!!..:)

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - எனக்கும் கூட Hospital அலர்ஜி தான் சிஸ்டர். ஒகே, அப்புறம் வந்து பாருங்க

@ LK - Welcome Back LK

@ தக்குடு - அடப்பாவி... என்ன மிரட்டல் இது? ஆஹா.... ஒபாமாகிட்ட சொல்லி னைப்படை பாதுகாப்பு கேக்கணும் இன்னைக்கே

@ LK - //karthiknu peyar irukava ellarum ippadithan romba nalla manusaala iruppa // எங்க ஊர்பக்கம் (உங்க தங்கமணிகிட்ட கேட்டுபாருங்க வேணா) ஒரு பழமொழி சொல்லுவாங்க "நெனப்பு தான் பொழப்ப கெடுக்கரதுன்னு", சும்மா திடீர்னு ஞாபகம் வந்தது சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல ROFTL ....

@ Mathuram - guess பண்ண முடியலையா... ஹா ஹா ஹா ... ரெம்ப சந்தோசமா இருக்கு... ஆஹா... இது என்ன தக்குடு மிரட்டல் விட பயமா இருக்கு... சுறா படமா... வேண்டாம் அதுக்கு நான் ஒசாமா கிட்ட வேணா சரண் அடைஞ்சுடறேன்.... டீல்ஆ நோ டீல்ஆ?

@ தக்குடு - அடப்பாவி எத்தன பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க... காயு லைப் என்னோட கைல இல்ல... ஆபரேஷன் பண்ற டாக்டர் கைல... மொத்ததுல உங்க எல்லார் கைலயும் நான் கைமா ஆகாம தப்பிச்சா சரி.... (இப்படி நம்ம rhyming ...)

//@ தக்குடு said Narayana! intha Lk thollai thaanga mudiyalaippa!!..:) //
பிரதர் பாத்துப்பா, அவங்க தங்கமணி கோயம்புத்தூர் பொண்ணு... பாத்து சூதானமா நடந்துக்க... பின்னாடி நீங்க சொல்லிலியே அக்கானு சொல்லக்கூடாது ஆமா... சொல்லிட்டேன்.... (இது மிரட்டல் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...)

siva said...

After a small Break...

Bhavana mam,

Very nice and interesting...

i like it 2nd pardt end..

waiting for end..and also another one good story...

siva

அப்பாவி தங்கமணி said...

Thanks Siva. Thanks for visiting my blog. Give more posts in your blog, waiting to read

Post a Comment