Tuesday, May 25, 2010

பிரியமானவளே (2nd கிளைமாக்ஸ் - இறுதிப்பகுதி)

ஆபரேஷன் ஆரம்பித்ததும் கார்த்தி மருத்துவமனையின் பின் புறம் இருந்த பிள்ளையார் கோவில் முன் சென்று அமர்ந்தவன் ஆபரேஷன் நடந்த நான்கு மணி நேரமும் கண் திறக்காமல் ப்ராதித்தான்......

தோள் மீது ஸ்பரிசம் உணர்ந்து கண் திறந்தான். கௌரி கண்களில் நீர் வழிய நின்றிருக்க இவன் இதயம் வேகமாய் அடித்து கொண்டது. இனி அழக்கூட தெம்பில்லை என்பது போல் கண்கள் வற்றியிருந்தது

அவன் தவிப்பை உணர்ந்த கௌரி "உன்னோட பிரார்த்தனை வீண் போகல கார்த்தி, ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதுன்னு டாக்டர் சொன்னார்" எனவும் ஆனந்தத்தில் கண்கள் பனித்தது

உடனே அவளை காணவேண்டுமென மனம் தவிக்க "நீ பாத்தியா கௌரி. எப்படி இருக்கா? நான் போய் பாக்கறேன்" என எழுந்தவனை கை அமர்த்தினாள் கௌரி

"இல்ல கார்த்தி. சர்ஜரி தலைலைங்கரதால 72 hours போஸ்ட்-ஆப்பரேடிவ் வார்டுல தான் வெச்சிருப்பாங்கலாம். யாரும் பாக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்" என்று கௌரி கூற சற்று முன் மலர்ந்த முகம் சோர்ந்து போனது

____________

வாழ்வின் மிக நீளமான 72 மணி நேரமாய் அது தோன்றியது கார்த்திக்கு

அதன் பின்னும் அவளைக்காண அனுமதிக்கவில்லை

"கொஞ்ச நேரம் முன்னாடி காயத்ரிக்கு கான்சியஸ் வந்தது. பட் பல்சும் பிரசரும் கண்ட்ரோல்ல இல்ல. இன்னும் ரெண்டு நாள் sedation ல வெச்சுருக்கறது தான் பெட்டர்" என டாக்டர் கூறி செல்ல உடைந்து போனான்

அவள் அபாயகட்டத்தை தாண்டி விட்டாள் என டாக்டர் கூறியதை கூட மனம் நம்ப மறுத்தது

"எதுவும் பிரச்சனை இல்லேன்னா ஏன் பாக்க கூட விட மாடேங்கரா..." என கௌரியிடம் புலம்பி தீர்த்தான்

மேலும் மூன்று நாட்களுக்கு பின் பார்க்க அனுமதித்தனர். ஆனால் டாக்டர் அப்போது சொன்ன எச்சரிக்கை கார்த்தியை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது

"காயத்ரி அபாயகட்டத்த தாண்டி இருந்தாலும் இன்னும் ரெம்ப பத்திரமா இருக்கணும். ஒரு ஒருத்தரா போய் பாருங்க. ரெம்ப நேரம் பேச வேண்டாம். முக்கியமா அவங்க உணர்ச்சிவசபடக்கூடாது. இன்னும் full ரெகவரி ஆகல. சோ, பிரஷர் அதிகமானா மறுபடியும் rupture ஆகற சான்ஸ் இருக்கு.By God's grace head injury ஆகியும் கூட கை கால் இயக்கத்துல எந்த பிரச்சனையும் இல்ல. But as I said, be very careful" என எச்சரிக்கை செய்ய கார்த்தி பின் வாங்கினான்

காயத்ரியின் அம்மாவும் அப்பாவும் பார்த்து விட்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்

கௌரி உள்ளே செல்லும் முன் கார்த்தியை அழைக்க "இல்ல.... நீ போயிட்டு வா" என்று விலகினான்

அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்

____________

"பாக்கணும் பாக்கணும்னு துடிச்ச.... பாக்க கூப்ட்டா வர்ல... இப்போ தனியா பிள்ளையார் முன்னாடி உக்காந்து அழுந்துண்டுருக்க. என்னாச்சு கார்த்தி நோக்கு?" என கௌரி கேட்க அவளை அங்கே எதிர்பாராதவன் அவசரமாய் கண்ணீரை மறைக்க முயன்று "இல்ல... ஒண்ணும் இல்ல..." என மழுப்பினான்

"ஏன் உள்ள வரலேன்ன?" என விடாமல் கேட்க

"......" பதில் கூறாமல் வேறு எங்கோ பார்த்தான்

"உன்ன பாத்தா உணர்ச்சி வசப்படுவான்னு பயமா? சொல்லு கார்த்தி" என நேரடியாய் தாக்க அதை எதிர்பாராத கார்த்தி மௌனமானான்

அவனது தவிப்பு மனதை நெகிழச்செய்ய "இத்தன ஆசைய மனசுல வெச்சுண்டு ஏன் அவ காதல மறுத்த கார்த்தி" என முகத்திற்கு நேராய் கேட்க அதிர்ச்சியில் உறைந்தான்

"சொல்லு கார்த்தி. எதுக்கு இந்த நாடகம்?" நாடகம் என்றதும் தாங்க முடியாமல்

"நாடகம் இல்ல கௌரி. அப்போ என் மனசுல.... அப்படி எதுவும்....." என வார்த்தை வராமல் தடுமாறினான்

"அப்போ இல்லேன்னா...?? என்ன அர்த்தம் இதுக்கு??" என கௌரி விடாமல் கேட்க

"கீழ விழுந்ததும் அம்மானு கூட சொல்ல மறந்து கார்த்தினு கத்தினாளே... உள்ளுக்குள்ள என்னமோ பண்ணிடுச்சு கௌரி... ரெண்டு க்ஷ்ணம் மூச்சு விட மிச்சம் இருந்த உயிர் மொத்தத்தையும் கண்ணுல தேக்கி I Love you கார்த்தினப்ப.... அவ கண்ல தெரிஞ்ச அந்த ஏக்கம்.... வலி.... காதல்.... என்னை மொத்தமா புரட்டி போட்டுடுச்சு. அவ மொத்தமா என்னை விட்டு போயடுவாளோன்னு நின்னப்ப தான்.... அவ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லைன்னு உணர்ந்தேன் கௌரி....இப்போ.... ரெம்ப பயமா இருக்கு... " என்றவன் அதற்கு மேல் பேச இயலாமல் முழங்காலில் முகம் புதைத்தான்

சற்று நேரம் அழுது ஓயட்டும் என பொறுத்தவள் "அழாத கார்த்தி. அதான் இப்போ எல்லாம் சரி ஆய்டுத்தே" என ஆறுதல் படுத்த முயன்றாள்

''இல்ல கௌரி... அவள ரெம்பவே கஷ்டபடித்திட்டேன் .....நோக்கு தெரியாது....ரெண்டு வருஷமா..." என அங்கலாய்க்க

"தெரியும்..." என்றாள் கௌரி மெதுவாய்

"நோக்கு எப்படி? காயத்ரி எதுனா...."

"இல்ல கார்த்தி அவ எதுவும் சொல்லல. ஒரு நா அவ ரூம்ல பழைய certificate ஏதோ தேடினப்போ அவ டைரி கண்ணுல பட்டது. கொஞ்ச நாளாவே அவ சரி இல்லைன்னு அம்மா பொலம்பினது ஞாபகம் வர என்னனு தெரிஞ்சா வழி பண்ணலாம்னு தான் படிச்சு பாத்தேன். ஆனா பிரச்சனைய தீக்க வழி தெரியாததால அவ கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல" எனவும்

"ரெம்ப வருத்தப்பட்டு எழுதி இருந்தாளா?" என வேதனையாய் கேட்டான்

ஆமாம் என்று சொல்ல மனமின்றி "இப்போ தான் எல்லாம் சரி ஆயாச்சே... இனி எதுக்கு பழைய கதை எல்லாம்" என மழுப்பினாள்

"அவளுக்கு சீக்கரம் குணம் ஆய்டும் தானே கௌரி" என எதிர்பார்ப்புடன் கேட்க

"ம்... அடுத்த வாரத்துக்கு கல்யாண சத்திரம் புக் பண்ணிடலாம்.... சரி தானே மாப்பிள்ளை சார்" என கேலி பேசி இலகுவாக்க முயன்றாள்

அவள் முயன்றது வீண் போகாமல் அவனும் கல்யாணம் என்றதும் சிந்தனை மாற சற்று நெகிழ்ந்தான்

"என்னோட மனமாற்றம் தெரிஞ்சா காயு ரெம்ப சந்தோசப்படுவா இல்ல கௌரி" என அந்த கற்பனை காட்சியாய் கண் முன் விரிய மகிழ்வுடன் கேட்டான்

"ஆமாம் கார்த்தி...அதை விட பெரிய சந்தோஷம் அவளுக்கு இந்த உலகத்துல எதுவும் இருக்க போறதில்ல" என்றாள் அவன் மகிழ்ச்சியில் தானும் கலந்து

"அதனால தான் இப்போ அவள பாக்க நேக்கு ரெம்ப பயமா இருக்கு கௌரி. அவள பாத்தா எந்த அளவுக்கு என்னை கட்டுபடுத்திக்க முடியும்னு நேக்கு தெரியல" காதல் கொண்ட மனதின் வெளிப்பாடாய் உரைத்தான்

"வாஸ்தவம் தான் கார்த்தி. ஆனா டாக்டர் இன்னொரு விசயம் கூட சொன்னார் இல்லையா. அவ குணமாகறது எங்க மருந்து மாத்திரைல மட்டும் இல்ல, அவ மனசுலயும் நம்பிக்கை வரணும்னு. உன்ன பாத்தா நிச்சியம் அவ நம்பிக்கை ஆய்டுவா. நீ பாக்காமயே இருந்தா அதுவும் அவளை பாதிக்கும். அதிகம் பேசாம பாத்துட்டு வந்துடு. நானும் உன்னோட வரேன்" என்றாள் தன் தங்கையின் மனதை படித்தவள் போல

_________________

"காயத்ரி...யாரு வந்திருக்கா பாரு? கார்த்திய பாரு" என கௌரி பேச வெகு ப்ராயதனப்பட்டு கண்களை திறந்தாள்

கார்த்தியை பார்த்ததும் பேச முயன்று அதற்கு உடல் ஒத்துழைக்காமல் போக கண்ணீரால் பேசினாள்

"ஏன் காயு? ரெம்ப வலிக்கறதா?" என்றான் கார்த்தி அவள் அழுவதை காண சகியாமல்

"இல்லை" என்பது போல் மெதுவாய் தலை அசைத்தாள்

அவளது ஏக்க பார்வை மனதை அறுக்க தன் மனமாற்றத்தை சொல்லவும் இயலாத நிலை கார்த்தியை கொன்றது

ஆதுரமாய் அவள் கைகளை பற்றினான். அதுவே பல விசியங்களை பேசாமல் பேசியது

சொற்கள் நூறு
சொல்ல இயலாததை
சொல்லாமல் சொன்னது
செல்லமேஉன் ஸ்பரிசமொன்று

அவன் தொடுகையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் காயத்ரி. உடல் மொத்தமும் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ச்சி குவியலானாள்

திடீரென அருகில் இருந்த கருவி "பீப் பீப்..." என ஒலி எழுப்ப காயத்ரி மூச்சி திணற அவன் கைகளை இறுக்க "கௌரி டாக்டரை கூப்டேன்....ஐயோ...." என பதறினான்

அதற்குள் அங்கு வந்த நர்ஸ் "என்ன நீங்க? patient ஐ எதுக்கு டென்ஷன் ஆக வெக்கறீங்க.... போங்க எல்லாரும் வெளிய... டாக்டர் வந்து என்னை தான் திட்டுவார்" என கத்தினாள்

விரைந்து வந்த டாக்டர் பரிசோதித்துவிட்டு "பிரஷர் அதிகம் ஆகி இருக்கு" என அதற்கான மருந்தை செலுத்த பணித்தார்

"என்ன மிசெஸ் கௌரி நான் எத்தனை முறை சொன்னேன் உங்க கிட்ட. she is still not 100% out of danger. Luckily, pressure ரெம்ப shootup ஆகல, அதுக்குள்ள பாத்துட்டோம். ப்ளீஸ் இனிமே யாரும் பாக்க போக வேண்டாம்" என கடிந்து கொண்டார்

அவள் மனதில் எத்தனை காதல் இருந்தால் தன் சிறு தொடுகை அவளை இத்தனை பாதிக்குமென கார்த்தி உறைந்து போனான். முடிந்தவரை அவளை காணாமல் இருப்பதே அவளுக்கு நலம் பயக்கும் என உணர்ந்தான். அது எந்த அளவுக்கு தனக்கு சாத்தியம் என புரியவில்லை அவனுக்கு

காதலை உணராத போதே தோழியாய் அவளை காணாமல் தவித்தவன் இப்போது சகலமும் அவளே என மனம் பதிந்த பின் ஒரு கணம் கூட அவளை விட்டு விலக மனம் ஒப்பவில்லை

_________________________

பத்து நாள் விடுமுறை காலம் முடிய அன்று அலுவலகத்துக்கு செல்ல மனம் இல்லாமல் சென்றான் கார்த்தி

திரும்பவும் வேறு ஒரு பணிக்காக அமெரிக்கா செல்ல வேண்டுமென அவன் மேலாளர் பணிக்க "தன்னால் செல்ல இயலாது லோக்கல் ப்ராஜெக்ட் வேண்டும்" என்றான்

அதனால் அவன் சம்பளம் கணிசமாய் குறையும் என்றதை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை

"வேலையே போகும் என்றாலும் நிச்சியம் தன்னால் இயலாது" என்று மறுத்தான்

அந்த ஊரிலேயே வேறு ஒரு ப்ராஜெக்ட்க்கு அமர்த்தப்பட்டான்

__________________________

அதன் பின் கிட்டதட்ட ஒரு மாதம் காயத்ரி மருத்துவமனையில் இருந்தாள்

ஒரு வாரத்திற்கு பின் ICU வில் இருந்து அறைக்கு மாற்றினர்

ஆனாலும் பத்திரமாய் இருக்கணுமேன டாக்டர் எச்சரித்தார்

அதன் பின் தினமும் அலுவலகம் செல்லும் முன் தன் அம்மா தயார் செய்து வைத்து இருக்கும் உணவை எடுத்து கொண்டு மருத்துவமனை சென்று காயத்ரியை பார்த்து விட்டு மீண்டும் மாலை அலுவலகம் முடிந்து நேரே மருத்துவமனை சென்று பார்த்து விட்டு வருவது தினசரி வாடிக்கை ஆனது கார்த்திக்கு

அவனை கண்டதும் செந்தாமரையாய் மலரும் அந்த முகத்தை காண நாள் முழுதும் அதே நினைவில் தவித்தான். முடிந்த வரை அவளை கண்ணோடு கண் நேரே பார்ப்பதை இருந்தான். தன்னையும் அறியாமல் தன் காதல் தன்னை இனம் காட்டி விடுமோஎன பயந்தான்

இந்த நாட்களில் இருவரும் பழைய தினங்கள் போல் இயல்பாய் பேச முயன்றனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்

மருத்துவமனை விட்டு கிளம்பிய அன்று டாக்டர் கூறியது கார்த்தியின் தவிப்பை மேலும் கூட்டியது

"காயத்ரி இப்போதைக்கி ஒகே தான். ஆனா இன்னும் பத்திரமாத்தான் இருக்கணும். மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொன்னா போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ். ஹெட் இஞ்சுரிக்கு இந்த போஸ்ட் சர்ஜெரி ஸ்டேஜ் ஒன் இயர் நாங்க பிக்ஸ் பண்றது. சிலர் சீக்கரமும் சரி ஆகலாம். But to be on a safer side every month செக் up வாங்க ஒன் இயர்க்கு

அப்புறம் எதுவும் problem வர சான்ஸ் இல்லை. ஆனா இந்த ஒரு வருசத்துக்குள்ள எதுனா injury or relapse ஆனா ரெம்ப ரிஸ்க். So, be careful and take complete care of her" என டாக்டர் சொல்லி முடிக்க

"ஒகே டாக்டர் நீங்க சொன்னா மாதிரி நாங்க கேர்புல்லா இருக்கோம்" என்றார் காயத்ரியின் அப்பா

கார்த்தியின் நிலை தான் கவலைக்கிடமானது

அன்று தனது ஒரு சிறு ஸ்பரிசம் அவளை பாதித்தது கண் முன் வர இன்னும் ஒரு வருடம் தன் மனதை காட்டாமல் இருப்பதே உத்தமம் என முடிவு செய்தான், அது எத்தனை கடினம் என்பது தெளிவாய் உணர்ந்தே

இரண்டு வருடங்கள்
இரும்புமனம் காட்டினேனே
எப்படி தவித்தாயோ
என்செல்லமே நீயும்
இரண்டு நிமிடம்கூட
இயலவில்லை எனக்கு
காதல் கொண்டமனதை
கட்டுப்படுத்த கரைகிறேனடி

_______________

வீட்டுக்கு சென்ற மறுநாள் காயத்ரியின் பிறந்த நாளாய் அமைந்தது எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஆனது, புனர் ஜென்மத்தின் முதல் பிறந்தநாள் அல்லவா அது

"ஹே காயு. ஹாப்பி பர்த்டே டா" என கௌரி முதல் வாழ்த்தை சொல்ல

"தேங்க்ஸ் கௌரி" என புன்னகையுடன் கண் விழித்தாள் காயத்ரி

"கார்த்தி ரெம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கான்... இரு வர சொல்றேன்" எனவும்

"ம்...." என ஆர்வமாய் வாயிலை நோக்கினாள்

"ஹாய் காயத்ரி... ஹாப்பி பர்த்டே" என கார்த்தியின் குரல் கேட்க மகிழ்ச்சி ததும்பியது மனதில்

"Wishes இருக்கட்டும்....என்னோட கிப்ட் எங்க?" என்றாள் உரிமையாய்

பழைய நாட்களை போல் உரிமையாய் அவள் பேச "என் மனதையே உனக்கு தந்தேனடி" என கவிதையாய் சொல்ல தோன்றிய மனதை கடிவாளம் இட்டு நிறுத்தினான் கார்த்தி

மனதின் உணர்வை மறைக்க முயன்று அவளை நேரே பார்க்க இயலாமல் பரிசு பொருளை எடுக்கும் சாக்கில் குனிந்தான்

"இதோ... கிபிட்" என கையில் கொடுக்க போனவன் "வெயிட் வெயிட்...என்னனு guess பண்ணு அப்போ தான் தருவேன்" என குறும்பாய் கூற, அதை ரசித்தவள்

"ம்... patient க்கு என்ன தருவாங்க? horlicks , bournvita வா" என அதே குறும்புடன் உரைக்க அந்த குறும்பு சிரிப்பில் தன்னை முற்றிலும் இழந்தான் கார்த்தி

அவளை அணைத்துகொள்ள துடித்த கையை இறுக பற்றி நிறுத்தினான்

அதற்கு மேல் அவள் அருகில் இருப்பது ஆபத்து என தோன்ற "நீயே பிரிச்சு பாரு" என பேச்சை மாற்றினான்

பிரித்து பார்த்தவள் மிகவும் சந்தோசமானாள்

கால் கொலுசுகள் என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம். எத்தனை செட் வைத்து இருந்த போதும் மீண்டும் மீண்டும் வாங்குவாள்

சில வருடங்களுக்கு முன் ஒரு முறை எல்லோரும் தீபாவளி ஜவுளி வாங்க சென்ற போது ஐம்பொன் கொலுசு வேண்டுமென அவள் பிடிவாதம் செய்ய அவள் அன்னை ஐம்பொன் கூடாது என மறுத்து விட்டாள். அன்று முழுதும் அவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தாள்

அதை நினைவு வைத்து அவன் வாங்கியது மனதிற்கு மிகவும் சந்தோஷம் அளித்தது காயத்ரிக்கு

"வாவ்...ரெம்ப நல்லா இருக்கு கார்த்தி. உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா, நான் எப்பவோ கேட்டது?" என குதூகலித்தாள்

புன்னகையுடன் அவள் சந்தோசத்தை ரசித்தான் கார்த்தி

இன்னும் ஏதேதோ வாங்கவேண்டும் என ஆசை உந்திய போதும் அது தன் மனதை காட்டி விடுமோ என பயந்து சிறியதாய் அதே நேரம் அவளுக்கு பிடித்ததாயும் வாங்கி இருந்தான்

இப்படியே மகிழ்வும் சிரிப்புமாய் நாட்கள் ஓடின

தினமும் காலையும் மாலையும் அவளை காண்பதே வாழ்வின் அர்த்தமாய் தோன்றியது கார்த்திக்கு. ஏன் தான் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறதோ என கோபமாய் வந்தது. நாள் முழுதும் அவள் அருகிலேயே இருக்க தோன்றியது

காயத்ரியும் மற்ற நேரம் எல்லாம் அந்த சில மணி நேரங்களுக்காகவே காத்திருந்தாள்

ஒரு நாள் அலுவலகத்தில் சற்று நேரமாகி விட வாசலிலேயே காத்திருந்தாள்

"ஏன் கார்த்தி இத்தனை நேரம்? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"சாரி காயு. கெளம்பற நேரத்துல ஒரு வேலை. அப்படியே இழுத்துடுத்து" என்றான் அவள் தவிப்பில் உருகி

"உன்னோட செல்போன்க்கு கூட நெறைய வாட்டி ட்ரை பண்ணினேன். போன்ஏ எடுக்கல" என உரிமையாய் கோபித்தாள்

அவள் முகம் கோணியது காண பொறுக்காமல் "சாரி டா. போன் பாட்டரி ஏதோ problem . என்னோட friend கடைல குடுத்துட்டு வந்தேன். morning தான் வாங்கணும்" என சமாதானம் செய்தான்

இப்படி தவிப்பும் காதலுமாய் நாட்கள் சென்றன

தினமும் மாலை நெருங்கும் முன்னே தன்னை தயார் செய்து கொண்டு காயத்ரி காத்திருந்ததும் கார்த்தியை கண்டதும் அவளது மலர்ந்த முகமும் அவன் விடை பெற்று சென்றதும் முகம் வாடுவதும் காயத்ரியின் பெற்றோருக்கும் அவள் மனதை உணர்த்தியது

ஆனாலும் அவளாக சொல்லும் வரை பொறுமை காக்க நினைத்தனர். கார்த்தியின் வீட்டிலும் அதே நிலை தான்

அடுத்த சில மாதங்கள் பரிசோதனைக்கு சென்ற போது நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர் கூறியது எல்லோர் மனத்திலும் நிம்மதியை தோற்றுவித்தது

__________________

அன்று அலுவலகம் விட்டு வந்த போது காயத்ரியின் வீடு பூட்டி இருக்க மனம் பதறியது கார்த்திக்கு

ஒரு நொடிக்குள் மனம் ஆயிரம் காரணங்களை கற்பனை செய்து துடித்தது

விரைந்து தன் வீட்டை அடைந்தவன் முன்னறையில் தன் அன்னையும் காயத்ரியும் பேசிகொண்டிருப்பதை கண்டு போன உயிர் திரும்பி வந்தது போல் நிம்மதி அடைந்தான்

"வா கார்த்தி" என்றாள் காயத்ரி உற்சாகமாய் அவனை கண்டதும்

"என்னாச்சு காயத்ரி? ஏன் ஆத்துல பூட்டு போட்டிருக்கு"

"ஏன்? ஒரு நா உங்க ஆத்துல நான் இருக்க கூடாதோ"

"காலம் பூரா இங்கேயே இருக்கணும்னு தானடி தவிக்கிறேன்" என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினான்

"அது இல்ல.... மாமி உன்னை ஆத்தை விட்டு படி எறங்க கூட விடமாட்டாங்களே. அதான் கேட்டேன்" எனவும்

"ஆமாம் கார்த்தி. மாமிக்கு விட்டுட்டு போகவே மனசில்ல. ஆனா மாமியோட நாத்தனார் ஆத்துகாரர் தவறிட்டார். போகவும் வேணும் காயத்ரிய அழைச்சுண்டு போக இஷ்டமில்ல. நான் தான் ஒரு நா இங்க இருக்கட்டும்னு பிடிவாதம் பண்ணி அனுப்பி வெச்சேன்" எனவும்

"ஆஹா...இன்று முழுதும் இங்கயே இருக்க போறாளா" என கார்த்தியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது

"சரிடா... நீ போய் மொகம் அலம்பிண்டு வா... நான் காபி போடறேன். காயு நோக்கும் காபி சரிதானே" என கேட்க அவள் பதில் சொல்லும் முன் கார்த்தி முந்தினான்

"ஐயோ...என்னமா நீ? cafeine எல்லாம் நல்லது இல்லைன்னு டாக்டர் போன வாட்டியே சொன்னார். அவளுக்கு பால் இல்லைனா பூஸ்ட் குடு" என அவசரமாய் சொல்ல

"ஒரு நேரம் காபி குடிச்சா ஒண்ணும் ஆய்டாது கார்த்தி....நானே காபி போடறேன் இருங்க மாமி" என அவள் எழ

"இரு காயத்ரி நீ கார்த்தியோட பேசிண்டிரு. நான் போடறேன். அவன் சொன்னாப்ல நோக்கு பூஸ்ட்ஏ தரேன்" என அவர்களுக்கு தனிமை தந்து விலகினாள்

கதிரவன் மறைந்து நிலவு தலை காட்டிய நேரத்தில் மின்சாரம் தடைபட

"கார்த்தி உள்ளே ஒரே புழுக்கமா இருக்கு. பின்கட்டுல chair போட்டு உக்காருங்கோ நீயும் காயத்ரியும். வேப்ப மர காத்து நன்னா இருக்கும். நானும் அப்பாவும் ஒரு நடை போயிட்டு வரோம்" என கிளம்பினாள் காஞ்சனா

"Chair வேண்டாம் கார்த்தி. பின்கட்டு செவத்துல சாய்ஞ்சு அப்படியே உக்காரலாம் வா. நல்ல மேடா தானே இருக்கு" என்றாள் காயத்ரி

"தரை சில்லுனு இருக்கும் காயு" எனவும்

"இல்ல கார்த்தி. ரெம்ப நாள் ஆச்சு அப்படி ப்ரீயா இருந்து. ப்ளீஸ்" என கெஞ்ச அதற்கு மேல் மறுக்க இயலவில்லை அவனுக்கு

"ரெம்ப நல்லா இருக்கில்ல கார்த்தி"

"என்ன?" என்றான் வேண்டுமென்றே புரியாதது போல்

"ம்....இந்த இதமான வேப்பமர காத்து. சில்லுனு தரை. பௌர்ணமி நிலா.... எல்லாமே அழகா இருக்கில்ல" என உணர்ச்சி பூர்வமாய் காயத்ரி சிலாகிக்க அந்த முழுநிலவு ஒளிக்கு போட்டியாய் ஜொலித்த அவள் முகம் கார்த்தியை கவிஞன் ஆக்கியது

ஒரு கணம் சுற்றுப்புறம் மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான்

"இதை எல்லாத்தையும் விட நீ ரெம்ப அழகா இருக்க காயு" என்றான் காதலுடன்

காற்றின் வேகத்தில் முன் நெற்றியில் அவள் சிகை சிறிது விழ பூர்ணசந்திரனாய் ஒளிவீசும் அவள் முகத்தை ரசிக்க அது தடை செய்வதாய் தோன்ற தனிச்சையாய் தன் ஒற்றை விரலால் ஒதுக்கினான் கார்த்தி

அவன் தொடுகை தந்த அதிர்வில் உடல் சிலிர்க்க அவன் காதல் மொழியும் மனம் சிலிர்க்க செய்ய மனம் தறிகெட்டு ஓடியது காயத்ரி

ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்

அவன் மன மாற்றம் ஓரளவு புரிந்த போதும் அவனே வாய் விட்டு சொல்லும் வரை எதுவும் கேட்க பயமாய் இருந்தது அவளுக்கு. சூடு பட்ட பூனையாய் ஒரு முறை அனுபவித்த நிராகரிப்பே பேச தடை செய்தது

இன்னும் நூறு சதம் அப்படி தானா எனவும் அவளால் முடிவுக்கு வர இயலவில்லை. ஒரு வேளை குற்ற உணர்வில் அன்பை பொழிகிறானோ. தனக்கு தான் அது காதல் போல தோன்றுகிறதோ என பல சிந்தனையில் மனம் அலைபாய்ந்தது

ஏதேனும் பேசி இப்போது உள்ள இந்த சந்தோசத்தையும் இழந்து விடுவோமே என அஞ்சினாள். எனவே மௌனம் காத்தாள்

அவள் சிலிர்த்ததும் கார்த்திக்கு அன்று மருத்துவமனையில் நடந்தது நினைவுவந்து பயம் தோன்ற இனியும் அவள் அருகில் தனிமையில் இருப்பது உகந்ததல்ல என

"காயு... இங்க ரெம்ப சில்லுன்னு இருக்கு. அம்மா திட்டுவாங்க. வா முன்னாடி திண்ணைல போய் உக்காரலாம்" என்றான்

அவளும் மறுப்பேதும் சொல்லாமல் பின் சென்றாள்

இந்த நிகழ்வு கார்த்தியின் மனதில் காத்திருத்தலை வெறுக்க செய்தது. டாக்டர் சொன்ன ஒரு வருட கெடு முடிய மூன்று மாதம் இருந்தது அவனை பொறுமை இழக்க செய்தது

ஆனாலும் அவசரப்பட்டு பாதகம் தேடிக்கொள்ள மனம் ஒப்பவில்லை

_____________________________

கார்த்திக்கு அடுத்து வந்த மூன்று மாதம் மூன்று வருடம் போல் கழிந்தது எனலாம்

"காயத்ரி எல்லா செக்கப்பும் செஞ்சாச்சு. நான் சொன்ன ஒரு வருசமும் முடிஞ்சுது. You're perfectly alright. You can lead a normal life" என டாக்டர் கூற சுற்றி இருந்த எல்லோர் முகத்திலும் நிம்மதி பரவியது

மருத்துவமனையில் இருந்து காயத்ரி பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல கௌரியை தானே அவள் வீட்டில் விட்டு விடுவதாய் அழைத்து சென்றான் கார்த்தி

"நான் ஆட்டோல போய்க்கறேன் கார்த்தி. நீ இனி அது வரைக்கும் வந்துட்டு திரும்ப வரணும் வீணா" என சொன்னதை ஏற்காமல் அழைத்து சென்றான்

"என்ன கார்த்தி? உங்க லவ் ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு?" என்றாள் செல்லும் வழியில்

"அது....அதுக்கு தான் உன்னிட்ட ஒரு ஹெல்ப் கேக்கனும்னு நெனச்சேன் கௌரி"

"என்ன மாப்பிள்ளை சார்? எங்க அம்மா அப்பா கிட்ட தூது போணுமா"

"இல்ல.... ஆமா..."

"இல்லையா...ஆமாவா... தெளிவா சொல்லு" என கேலி செய்தாள்

"அது.....நாளைக்கி காயு பர்த்டே இல்லையா. அவள நான் வெளிய அழைச்சுட்டு போக நீ தான் உங்க ஆத்துல permission வாங்கி தரணும்" என தயக்கமாய் சொல்ல

"ஓ...ஹோ... இதுக்கு தான் அக்கறையா என்னை ஆத்துல விடறதா சொல்லி அழைச்சுண்டு வந்தியா? அப்பவோ நெனச்சேன்....சோழியும் குடுமியும் சும்மா ஆடுமானு..." என வேண்டுமென்றே சீண்டினாள் கௌரி

"ச்சே..... அப்படி எல்லாம் இல்ல கௌரி" என்றான் பாவமாய்

"சரி சரி... போனா போறது.... எங்காத்துல சொல்றேன்...உங்க காதல் சமாச்சாரத்தையும் சேத்து" என்றாள் சிரிப்புடன்

___________________________

பச்சை வண்ண பட்டு சேலையில் தேவதையாய் நின்றாள் காயத்ரி

"என் கண்ணே பட்டுடும்டீ செல்லமே" என மகளுக்கு நெட்டி முறித்தாள் கோகிலா

"ஆமாம் கோகிலா.... இன்னிக்கி சாயங்காலமா திருஷ்டி கழிக்கணும் மறக்காம" என்றாள் காஞ்சனா

எதுவும் பேசாமல் கண்களாலேயே அவளை விழுங்குவது போல் பார்த்து நின்றான் கார்த்தி

இருவரும் ஜோடியாய் புறப்பட இருவரின் பெற்றோரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்த புன்னகை பூத்தனர்

முதலில் கோவிலுக்கு சென்றனர். காயத்ரியின் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்று கொண்டு காரில் அமரும் வரை இருவரும் அதிகம் எதுவும் பேசவில்லை. கார் கிளம்பியதும்

"இப்போ எங்க போறோம்னு தெரியுமா?" என கார்த்தி கேட்க காயத்ரி பதிலே பேசவில்லை

முகத்தை கடுகடுவென வைத்து இருந்தாள்

"ஏய்...காயு....என்னாச்சு..." என கவலையானான் கார்த்தி

அவள் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க காரை ஓரத்தில் நிறுத்தி "காயு....ப்ளீஸ் என்னாச்சுனு சொல்லு"

"ஒண்ணும் இல்ல...." என முகம் திருப்பினாள் கோபமாய்

அவள் கோபத்தின் அர்த்தம் புரியாமல் கார்த்தி குழம்பினான்

"ப்ளீஸ் காயு சொல்லு....என்ன கோவம் இப்போ?" என பாவமாய் கேட்க

"அது என்ன... என்னை வெளிய அழைச்சுண்டு போக கௌரி மூலமா permission கேக்கறது... என்னை கேக்கறதுக்கு என்ன"

"இது தான் இப்போ கோவமா? நான் என்னமோன்னு பயந்துட்டேன்"

"அப்போ.... இன்னும் வேற நெறய தப்பு செஞ்சிருக்கயா நேக்கு தெரியாம"

"ம்....ஆமா....நெறய தப்பு... செஞ்சு தான் இருக்கேன்... இன்னும் கொஞ்ச நாழில அது எல்லாம் என்னனு ஒப்பிச்சு ஒண்ணா மன்னிப்பு கேட்டுக்கறேன், சரிதானா மேடம்" என கேலி செய்ய அவன் கேலி சிரிப்பை வரவழைத்த போதும் வேண்டுமென்றே கோப முகம் காட்ட முயன்றாள் காயத்ரி

"இப்போ நாம எங்க போறோம்னு தெரியுமா?" என அவன் மறுபடியும் கேட்க

"ம்... நேக்கு ஜோசியம் எதுவும் தெரியும்னு உன்னிட்ட எப்பவாச்சும் சொல்லி இருக்கனா என்ன?" என அவளும் கேலி செய்ய இப்படியே கேலியும் சீண்டலுமாய் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ஊருக்கு சற்று ஒதுக்குபுறத்தில் இருந்த கார்த்தியின் அப்பா வழி சொத்தான அவர்களின் பூர்வீக தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்

"வாவ்.... இங்க வந்து ரெம்ப நாள் ஆச்சில்ல கார்த்தி... இன்னும் அதே அழகோட இருக்கு" என சிலாகித்தாள் காயத்ரி

சிறுவயதில் எல்லாம் கார்த்தியின் தாத்தா பாட்டி இருந்த வரை ஒரு ஒரு வாரமும் குடும்பமாய் வந்து செல்வது வழக்கம். பலமுறை காயத்ரியும் இங்கு வந்து தங்கியதுண்டு

கார்த்தி பிறந்தது கூட இந்த வீட்டில் தான் என அவன் பாட்டி சொன்னதுண்டு

அதன் காரணமாய் தன் காதலை கூட அவளிடம் இங்கு வைத்து சொல்லணும் என அழைத்து வந்தான் கார்த்தி. தனிமை வேண்டுமென தோட்டத்தை பராமரித்து வந்த பணியாளை கூட விடுப்பு கொடுத்து அனுப்பி இருந்தான்

"இப்ப ஏன் இங்க வந்தோம்?" என காயத்ரி கேட்க

"ம்.... அது... உன்னிட்ட நான் ஒரு விசயம் சொல்லணும். அதுக்கு முன்னாடி... வா .... உனக்கு ரெம்ப பிடிச்ச தோப்புக்கு நடுவுல இருக்கற பவளமல்லி கிட்ட போவோம்" என அவள் கை பற்றி அழைத்து சென்றான்

பவளமல்லி மரத்தின் கீழ் திண்ணை போல் அமைக்கப்பட்டு இருந்தது. தோப்பின் நடுவில் அமர்ந்து மேற்பார்வை செய்ய வசதியாய் அவன் தாத்தா கட்டிய திண்ணை அது, இன்று பேரனின் காதலுக்கு சாட்சியாக நின்றது

"காயு.....உன்னிட்ட ஒரு விசயம் சொல்லணும்...." என தயக்கமாய் அவளை ஏறிட்டான்

காயத்ரியின் மனம் தடதடக்க அதேநேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்ன என்பது போல் பார்த்தாள்

"அது....வந்து...." என அவள் கையை தன் கையில் சிறை பிடித்தான். சட்டை பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்

காயத்ரிக்கு இதயம் படுவேகமாக துடித்தது. என்ன நடக்கிறதென சுதாரிக்கும் முன்னே அதை அவள் விரலில் அணிவித்தான்

"காயு.... ஐ லவ் யு டா" என அவள் பட்டு விரல்களில் இதழ் பதிக்க காயத்ரி அப்படியே கண்கள் சொருக கீழே சரிந்தாள்

கீழே விழாமல் அவளை அணைத்து பிடித்தவன் "காயு....காயு....ப்ளீஸ் கண்ணை தெற... காயு ப்ளீஸ்....ஐயோ கடவுளே....என்ன நடக்க கூடாதுன்னு ஒரு வருஷம் தவிச்சேனோ... அதே நடந்துடும் போல இருக்கே....ஐயோ செல்போன் டவர் கூட இல்லையே இங்க... என்ன செய்வேன்....காயு" என அவன் கண்ணீர் துளி அவள் முகத்தில் பட

"ரெம்ப பயந்துட்டயா கார்த்தி" என சிரித்தாள் காயத்ரி

தன் தவிப்பு புரியாமல் சிறுபிள்ளைதனமாய் அவள் வேண்டுமென்றே நினைவிழந்தது போல் நடித்தது புரிய, கோபமாய் அவளை விட்டு அகன்றான்

அவன் கோபம் அவனை மேலும் சீண்டி பார்க்க அவளை தூண்ட

"என்ன கார்த்தி கோபமா? ஒரு வருஷம் காத்தியே.... ஒரு நிமிஷம் முடியலையா" என சிரித்து கொண்டே கேட்க அவன் முகம் பாறையாய் இறுக பெரிய மூச்சுகள் எடுத்து நின்றான்

இன்னும் அவன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது புரிய அதற்கு மேல் பொறுக்க இயலாமல்

"சாரி கார்த்தி....சும்மா விளையாட்டுக்கு தான்...இப்படி எதுனா ஆய்டுமோனு பயந்து தானே என்னை ஒரு வருசமா தவிக்க வெச்சேன்னு... சும்மா....விளையாட்டா... சாரி....கோபமா இன்னும்" என கெஞ்ச அதற்கு மேலும் கோபத்தை பிடித்து வைக்க இயலவில்லை அவனுக்கு

இருந்தாலும் மனம் ஆற்றாமையால் அவளை விலக்கி நிறுத்தியவன் அவளை தலை முதல் கால் ஆராய்ந்தான். அவளுக்கு நிச்சியமாய் எதுவும் ஆகவில்லை என உறுதி செய்து கொண்டதும் "ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு காயு..." என கண்கள் பனிக்க கூற

"சாரி சாரி சாரி கார்த்தி...சும்மா விளையாட்டா....தெரியாம... சாரி ப்ளீஸ் சாரி" என கெஞ்சினாள்

"காயு.... இனி விளையாட்டுக்கு கூட எப்பவும் இப்படி செஞ்சுடாதே... வாழ்நாள் மொத்ததுக்குமான தவிப்பை நான் அந்த ஒரு நாளுலேயே அனுபவிச்சுட்டேன் கண்மணி" என உணர்ச்சிவசப்பட்டான்

"சாரி கார்த்தி. இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன். promise ...." என அவன் கைகளில் கை பதித்தாள்

அவன் முகம் இன்னும் இறுக்கமாகவே இருக்க "ப்ளீஸ் கார்த்தி....எனக்கு என்ன தண்டனை வேணா குடு. இப்படி இருக்காதே" என தவிப்புடன் சொல்ல அப்படியே கரைந்தான் கார்த்தி

"ம்....என்ன தண்டனை வேணா தரலாமா?" என குறும்பாய் கேட்க

"ம்.....ம்...." என்றாள் அவளும் அவன் சிரிப்பை ரசித்து மகிழ்வுடன்

"ம்..... ஒகே அப்படினா.... உடனே ஆயுள் தண்டனை விதிக்கிறேன் உனக்கு" என தேவதூதன் போல் கை தூக்கி ஆசிர்வாதம் போல் காட்ட

"ஆயுள் தண்டனையா..." என பொய்யாய் பயந்தது போல் கேட்க

"ஆமாம் கண்மணி.... ஆயுள் முழுதும் என் இதய சிறையில் கைதியாய் உன்னை சிறை வைக்கிறேன்" என சொல்ல

"ஹா ஹா ஹா ... எந்த சினிமா டயலாக் காப்பி அடிச்சே" என கலகலவென காயத்ரி நகைக்க

"ஏய் கொழுப்பா நோக்கு....? நான் கஷ்டப்பட்டு சிந்திச்சு கவிதையா பேசினா நோக்கு காப்பி மாதிரி தோணுதா" என பொய்யாய் கோபம் காட்ட

"ஆமா... நீ தெனமும் சமைச்சு போட்டு கொழுப்பு தான் நேக்கு"

"ம்....சமைச்சு வேற போடணுமா.... ஆஹா... அப்போ என்னை முழு நேர சமையல்காரன் ஆக்கிடுவ போல...கஷ்டம் தான் கல்யாணத்துக்கு அப்புறம்....ம்..." என பெருமையாய் சலித்தான்

அவன் சலிப்பை ரசித்தவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அவர்களின் காதலுக்கு சாட்சியாய் நின்ற அந்த கணத்தின் அமைதியை இருவரும் ரசித்து அனுபவித்தனர்

"காயு...."

"ம்...."

"ஏன்...எதுவும் பேச மாட்டேன்ற?"

"ம்..... இன்னும் இது நிஜம்னு நம்ப முடியல கார்த்தி.... கண்ணு தெறந்ததும் கனவு கலைஞ்சுடுமோன்னு..... நெறய வாட்டி இந்த மாதிரி கனவு கண்டு..." என்றவள் அதற்கு பேச இயலாமல் தேம்பினாள் அதே போல் கலைந்த கனவுகளின் நினைவில்

அவள் தேம்பல் பொறுக்கமாட்டாமல் "சாரிடா செல்லமே.... உன்ன ரெம்பவே தவிக்க வெச்சுட்டேன் காயு மா. அப்பா... ரெண்டு வருஷம்... எப்படி தவிச்சுருப்ப இல்ல. எனக்கு மனசுல இப்படித்தான்னு புரிஞ்ச அந்த நிமிசமே உன்னிட்ட சொல்லிடணும்னு எப்படி துடிச்சேன் தெரியுமா?"

"சொல்லேன் கார்த்தி...எப்போ அப்படின்னு தோணிச்சுன்னு...கேக்கனும்னு இருக்கு"

"கண்ணு மூடற நிமிஷம் போற உயிர பிடிச்சு வெச்சுட்டு  ஐ லவ் யு கார்த்தினு சொன்னியே....என்னமோ பண்ணிடுச்சுடா நேக்கு... உயிர் போற மாதிரி ஒரு வலி...இப்ப நெனச்சா கூட பயமா இருக்குடா"

"நீ சர்ஜரி முடிஞ்சு பாக்க வந்தியே அப்பவே நேக்கு சந்தேகம் தான் கார்த்தி"

"நோக்கு சந்தேகம் வந்துட கூடாதுன்னு நான் எத்தனை கட்டுபடுத்திண்டேன் தெரியுமா....அப்படியும் பிரஷர் அதிகமாகி அப்பாப்பா என்ன டென்ஷன்"

"அதனால தான் ஒரு வருசமா சொல்லலியா"

"ம்....அன்னைக்கி பௌர்ணமிய ரசிச்சுட்டு இருந்தப்ப ஒரு நிமிஷம் நான் வசம் இழந்தது நிஜம்... எப்படியோ கட்டுபடித்திண்டேன்"

"ஆமா... அன்னிக்கி தான் நேக்கு ரெம்பவே நம்பிக்கை வந்தது கார்த்தி. ஆனாலும் என்னமோ ஒரு பயம்...மொதல் முறை நீ மறுத்ததே தோணி...."

"சாரிடா...எப்படி வேதனை பட்டு இருப்பே இல்ல.... மன்னிச்சுடு கண்மணி" என அவன் குற்றஉணர்வில் தவிக்க அது பொறுக்காமல் பேச்சை மாற்றும் எண்ணமாய்

"அது சரி... கௌரிக்கு தெரியுமா? ஏன் அவகிட்ட permission கேக்க சொன்ன இன்னிக்கி வெளிய வர"

"கௌரிக்கு நீ hospital ல இருந்தப்பவே எல்லாம் தெரியும்..."

"அடிப்பாவி.... மூச்சு விடல பாவி"

"தப்பு அவ மேல இல்ல காயு... நேக்கு தான் ரெம்ப பயமா இருந்தது.... டாக்டர் வேற அநியாயத்துக்கு பயப்படுத்தி வெச்சிருந்தார். என்ன செய்ய?"

"இன்னும் நம்பவே முடியல....என்ன சொல்றதுன்னு தெரியல கார்த்தி"

"ம்.... இன்னும் நம்ப முடியலையா.... இது கனவு இல்ல நிஜம்னு புரியவெக்க என்னிட்ட வேற ஒரு புது வைத்தியம் இருக்கு. அதை செய்யவா" என அப்பாவியாய் கேட்டான்

"என்ன....வைத்தியமா....?" என புரியாமல் விழிக்க அவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவள் முகம் குங்குமமாய் சிவந்தது

வெட்கத்தை மறைக்க அவன் மார்பில் முகம் மறைத்தாள்

அவள் நாணத்தை கண்டு தானும் நாணி சூரியன் கூட மேகத்தில் மறைந்தது

நமக்கும் தான் இனி என்ன வேலை இங்கே...

பிரியாவரம் வேண்டி
பிறவிபல காத்திருந்தேன்
பிரியமான உனைவேண்டி
பிறவிநூறு தவம்செய்தேன்
வரம்தந்த தேவதையே
வாழ்க்கைநீயே என்னவளே
பிரியமானவளே....

முற்றும்...

33 பேரு சொல்லி இருக்காக:

அமைதிச்சாரல் said...

ரெண்டாவது க்ளைமாக்ஸ் சூப்பருங்க.ரத்தம் சிந்தி வளர்த்த காதல் இல்லையா இது. காதலின் வலியை கார்த்தி உணர்ந்து ,வசப்பட்டதால் இன்னும் அருமையா இருக்கு.

padma said...

nalla mudivu

அன்னு said...

ஏனுங்கம்மணி, வெகேஷன்ல போயி வேறெதுவும் செய்லீங்களா? இதைத்தான் உக்காந்து யோசிச்சிட்டு எழுதிட்டிருந்தீங்களாங்? காயத்ரி வீட்டுக்காரருக்கு பிரச்சனையில்லை. உங்க வீட்டுக்காரர்தேன் டென்சன் ஆகியிருப்பார்னு நினக்கறேன், 4 நாள் லீவை வெறும் நாளு பக்க கதை எழுத use பண்ணிகிட்டாளேன்னு இல்ல?

btw, this is t ending everyone likes...hopefully. good job !

Guna said...

Nalla irukkunga...

ஸ்ரீராம். said...

வார்த்தைகளும் வசனங்களும் உணர்வு பூர்வமாய் ஒன்றி எழுதி இருக்கிறீர்கள்.நன்றாக இருந்தது. பதிவின் நீளம் கூட பொருட்டாய் தெரியவில்லை. பாராட்டுக்கள். சுப முடிவுகளை மட்டுமே மனதால் ரசிக்க முடிகிறது.

தக்குடுபாண்டி said...

ssssssappaaaaaaa, ippavey kannai kattuthey!!!..:)

தக்குடுபாண்டி said...

//ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைகண்டதும்
// classic one akka. Great job!! congrats. you are putting your real effort.

Venkatesh said...

அப்பாடஎப்படியோ காயத்ரியையும் கார்த்தியையும் சேர்த்து வச்சுடீங்க ரொம்ப நன்றி. காயத்ரி ரசிகர் மன்ற தலைவர்ங்கர முறையில உங்களுக்கு கோடி நன்றிகள்.அருமையான எழுத்து நடை. எல்லாம் அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறன் :):):):). அருமையான கதை முடிவுக்கு நன்றி, மேலும் இதே போல் நல்ல கதைகளை தர வேண்டும் எங்களுக்காக. வாழ்த்துகள்!!!

Venkatesh said...

காதலித்தால்தான் அதன் வலியும் விளைவும் தெரியும் :):)

காதலின் வளிமையை உங்களது எழுத்து நடையில் மிகவும் ரசித்தேன்!!!!

Krishnaveni said...

Nallavelai renduperayum seththu vachcheenga. intha jodi pallaandu vaazhga vaazhththukkal!!!!!!positive ending looks beautiful...

அனாமிகா துவாரகன் said...

//அன்னு சொன்னது…

ஏனுங்கம்மணி, வெகேஷன்ல போயி வேறெதுவும் செய்லீங்களா? இதைத்தான் உக்காந்து யோசிச்சிட்டு எழுதிட்டிருந்தீங்களாங்? காயத்ரி வீட்டுக்காரருக்கு பிரச்சனையில்லை. உங்க வீட்டுக்காரர்தேன் டென்சன் ஆகியிருப்பார்னு நினக்கறேன், 4 நாள் லீவை வெறும் நாளு பக்க கதை எழுத use பண்ணிகிட்டாளேன்னு இல்ல? //

Repeattu......

சுசி said...

பயணம் எப்டி போச்சுங்க??

அது சோகமா, இது சுகமா ரெண்டு முடிவும் நல்லாவே இருக்கு.

ஹேமா said...

இடையிடை கவிதையோடு
முடிவு அருமை.

காதலின் வலிமை ....அது உண்மையானதாய் அமைந்தால் மட்டுமே !

LK said...

அப்பாவி தங்க்ஸ், சூப்பர்ர்ர். ஒரு பக்கா தமிழ் சினிமா பார்த்த திருப்தி. ரொம்ப அருமைய எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

பிரசன்னா said...

Nice ending.. like a feel good movie :)

அந்த டாக்டர் ஒரு முக்கியமான டயலாக் சொல்லல.. அது என்னன்னா ..

'It is a medical miracle' :))

கண்மணி/kanmani said...

அட இன்னொரு ரமணி சந்திரன் இருக்காங்க போல...
காதலான காதல் கதை....வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி said...

இந்த முடிவு கொஞ்சம் ரப்பர்.

SathyaSridhar said...

Enakku mudhal climax ye pidichurunthathu epdiyoe rendu perum onnaa sernthaachu athu poedhum...Neenga long weekend apram unga trip pathi post panuveengannu ninaichen. Epdi nalla enjoy panneengalaa.

My days(Gops) said...

யப்பாடா ஒரு வழியா நல்ல படியா சேர்ந்துட்டாங்களே :).. சேர வச்சிட்டீங்களே... கூல்.... உங்களுக்கு ஒரு கப் பால் பாயசம் உண்டு :)

My days(Gops) said...

ஆனாலும் இந்த ஆஸ்பத்திரி சீன்'ல கொஞ்ச நேரம் கண்ணை கட்டிடுச்சிடா சாமி....

My days(Gops) said...

கார்த்தி காதல சொல்லுறத்துக்கு முன்னாடி காயத்திரிக்கு 7 பிறந்த நாள் முடிஞ்சி போச்சி .........விட்டு இருந்தா நீங்க அறுபதாம் கண்ணாலம் தான் செஞ்சி வச்சி இருப்பீங்க போல இவங்களுக்கு

My days(Gops) said...

இந்த கதையை படிச்சோன எனக்கும் காதல் செய்யனும்'னு ஆசை வந்துடுச்சி ...... இப்படிக்கு
அன்புடன்
தக்குடு ........

My days(Gops) said...

//அப்படியே கண்கள் சொருக கீழே சரிந்தாள் //

திரும்பியுமா? அய்யோ இங்க நான் கீழே விழுந்துட்டேன் :)

vanathy said...

தங்ஸ், ம்ம்... நல்லா இருக்கு. இடையிடையே கவிதை கலக்கல். நீங்கள் எழுதியதா????( சும்மா டமாஷ்.....). இன்னும் நிறைய எழுதுங்கோ.

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க

@ padma - நன்றிங்க பத்மா

@ அன்னு - அது என்னமோ அப்படி தான்...ஆனா vacation முடிஞ்சு வந்து நல்லா refresh ஆகி வீட்டுல தானுங்க எழுதினேன்... So, no tension to ரங்கமணி ... கொஞ்சம் நீளமான பதிவா தான் போச்சு.. ஆனா இதுக்கு மேல இழுத்து டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான். I'm glad you liked this ending

@ Guna - தேங்க்ஸ்ங்க குணா

@ ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம்

@ தக்குடுபாண்டி - கண்ணை கட்டுதா... படிக்கற உனக்கே அப்படினா எழுதினா என்னை நெனைச்சு பாரு... தேங்க்ஸ் தக்குடு

@ Venkatesh - நன்றிங்க காயத்ரி ரசிகர் மன்ற தலைவர் வெங்கடேஷ் அவர்களே. என்னது அனுபவமா... அது சரி... நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு

@ //Venkatesh said காதலித்தால்தான் அதன் வலியும் விளைவும் தெரியும் :):)//
யாரோ எனக்கு அனுபவம் சொன்னதா ஞாபகம்...

@ Krishnaveni - தேங்க்ஸ் கிருஷ்ணவேணி

@ அனாமிகா - என்ன விளையாடறியா அம்மணி? எழுதலைனா வைரஸ் அனுப்புவேங்கர, எழுதினா vacation ல இதை தான் செஞ்சியான்னு repeat ஆ? பேசாம உன்னை iceland க்கு pack பண்ண வேண்டியது தான்

@ சுசி - வந்தேன் சுசி... பயணம் நல்லாவே இருந்தது. அதை பத்தி விரிவா எழுதறேன். நன்றி

@ ஹேமா - தேங்க்ஸ் ஹேமா. சரியா சொன்னிங்க //காதலின் வலிமை ....அது உண்மையானதாய் அமைந்தால் மட்டுமே ! //

@ LK - நன்றிங்க LK

@//LK said ஒரு பக்கா தமிழ் சினிமா பார்த்த திருப்தி//
Reading this comment Rangamani said "அவ்ளோ மோசமாவா எழுதின" (ஒண்ணும் பண்ண முடியாது இவரை... என் நிலமைய யோசிச்சு பாருங்க... ஹும்....)

@ பிரசன்னா - தேங்க்ஸ் பிரசன்னா. அந்த டாக்டர் டயலாக் எனக்கும் தோணுச்சு.. என்னோட ப்ளாக் ஏற்கனவே வடிவேலுவ விட நெறைய அடி வாங்கிருச்சு... இனி தாங்காதுன்னு தான் விட்டுட்டேன்...

@ கண்மணி - நன்றிங்க கண்மணி. எனக்கு இன்னிக்கி கிடைச்ச மிக சிறந்த பாராட்டு இதுனு எடுத்துக்கறேன்.. மிக்க நன்றி

@ சின்ன அம்மணி - தனி தனி பதிவா போட்டு இருந்தா கொஞ்சம் ஒகேவா இருந்து இருக்கும்னு நெனைக்கிறேன். கிட்ட தட்ட மூணு பதிவுல வர வேண்டியது. கொஞ்சம் ரப்பர் தான் என்ன செய்ய?

@ SathyaSridhar - நன்றிங்க சத்யா. Trip பத்தி போஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். போடோஸ் weekend ரெடி பண்ணி போட்டுடறேன். கேட்டதுக்கு மிக்க நன்றி

@ My days(Gops) - பால் பாயசமா...நன்றி கோப்ஸ்... பட் தக்குடு செஞ்சதுனா வேண்டாம்... அதுக்கு poison ஏ போதும்... எனக்கும் தான் கண்ணை கட்டுச்சு என்ன செய்ய? அறுபதாம் கல்யாணம் உங்களுக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன், பாட்டிய கூட்டிட்டு வந்துடுங்க.

@ //My days(Gops) said இந்த கதையை படிச்சோன எனக்கும் காதல் செய்யனும்'னு ஆசை வந்துடுச்சி ...... இப்படிக்கு அன்புடன் தக்குடு ........ //
இப்ப Full time அதானே செஞ்சுட்டு இருக்றதா கேள்வி... உங்களுக்கு தெரியாதா...

@ Vanathy - நன்றிங்க வானதி. கதைய நான் எழுதிட்டு கவிதைய பக்கத்துக்கு வீட்டுலயாங்க கடன் வாங்குவேன்... அது என்ன சும்மா டமாஷ்? அடப்பாவி என்னை வெச்சு காமெடி கீமடி பண்ணலியே? இன்னும் நெறயவா...எழுதிட்டா போச்சு...அதுகென்ன பஞ்சம்....

அனாமிகா துவாரகன் said...

ரொம்ப டென்ஷனா அக்கா. ஹி ஹி.நீங்க என்னை பார்சல் பண்ண வேண்டாம். நானே ஆந்தார்டிக்காவில தான் செட்டில் ஆகுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஐ ஹேட் சன். ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி தான் வியர்க்கிறதுனு குளிக்கிறது. இங்க சம்மருன்னா நான் பாதி நேரம் பாத்டப்ல உக்காந்து தான் படிக்கிறது எல்லாம். அந்த கொடுமையை பத்தி ஏன் கேக்கிறீங்க.

அப்புறம், தக்குடு பத்தின தகவலுக்கு நன்றி. போய் என்னனு விசாரிக்காட்டி எனக்கு தலை வெடிச்சிடும்.

அப்புறம், உங்க பதிவை படிச்சு முடிக்க முதல், நாலு லீட்டர் ஜூஸ் + இரண்டு பாக்கட் பிஸ்கட் உள்ள போச்சு. அவ்ளோ நீளம். அவ்ளோ டயரிங். ஹி ஹி. ரமணி சந்திரனுக்கு போட்டியா உங்கள களமிறக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க. அக்கோவ், உங்களுக்கு ஒன்னு தெரியுமா. மலேசியா போன போது ஒரு புக் ஷொப் போனேன். அங்க ரமணி சந்திரன் புக்ஸ் எல்லாம் 20 ரிங்கிட்ஸ். அந்த காசுக்கு இரண்டு வேளை ஒரு சாதாரண உணவகத்தில் வயிறு முட்ட சாப்பிடலாம். பகல் கொள்ளை.

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - பண்றத பண்ணிட்டு டென்ஷன் ஆனு அப்பாவி மாதிரி கேள்வியா? பெரிய ஆள் தான் பொண்ணே நீ.... ஐ ஹேட் சன்... ஆனா இந்த குளிரும் கொடுமை தான்.. போய் பாத்தா தெரியும் கதை....

//பாத்டப்ல உக்காந்து தான் படிக்கிறது எல்லாம்//
கஷ்டம் டா சாமி....

//அப்புறம், தக்குடு பத்தின தகவலுக்கு நன்றி. போய் என்னனு விசாரிக்காட்டி எனக்கு தலை வெடிச்சிடும்.//
ஹா ஹா ஹா... சீக்கரம் போ...

//அப்புறம், உங்க பதிவை படிச்சு முடிக்க முதல், நாலு லீட்டர் ஜூஸ் + இரண்டு பாக்கட் பிஸ்கட் உள்ள போச்சு. அவ்ளோ நீளம். அவ்ளோ டயரிங்//
இன்னும் இழுத்தா நீ வைரஸ் அனுப்பிடுவியோனு பயம் தான்... ஒரே மூச்சுல எழுதி முடிச்சுட்டேன்

//ரமணி சந்திரனுக்கு போட்டியா உங்கள களமிறக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க//
ஆஹா... இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தான் உடம்பு ரணகளமா போய் இருக்கு... இன்னுமா?

ரமணி சந்திரன் புக்ஸ் எல்லாம் 20 ரிங்கிட்ஸ்ஆ? ஆஹா.. கஷ்டம் தான்...ஆனாலும் அவங்க எழுத்துக்கு தகும்...என்ன செய்ய?

Anny Benny said...

hai thangs..
i couldnt surf the internet for the past few days..today just now i read..and the story ending was just superb..though i expected the ending to be like this your narration has made it perfect.
and ya..i too felt a touch of ramanichandran style n your writing..
keep posting such nice stories.
great going..

அப்பாவி தங்கமணி said...

@ Anny Benny -
Thanks a lot Anny. I was thinking yesterday "why no comment from Anny yet?". Now I know, hope internet is good now

Venkatesh said...

கரெக்ட கண்டுபிடுசிடீங்க,ஆமாம் காதல் அனுபவம் இருக்குங்க:). காதல் புனிதம்:) :) . ஆனால் கல்யாணம்தான் எப்போன்னு தெரியல.

Gayathri said...

இப்படி எந்த கதையுமே படிச்சு அழுததே இல்லை..சுப்பர்,இந்த முடிவுதான் அருமை..

சுப்பர்...எழுதவே வரல..நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - aahaa... how did I miss this comment for so long? Seekaram kalyana saapadu podunga sir

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - Thanks a lot Gayathri... thats a great compliment...

Post a Comment