Saturday, May 01, 2010

பிரியமானவளே...பகுதி 7

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6


அதன்பின் கார்த்தி பலமுறை முயன்றும் காயத்ரி அவனுடன் பேச தயாராய் இல்லை

அந்த நாளும் வந்தது, காயத்ரி கிளம்பும் நாள்

ரயில் நிலையத்தில் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி ரயிலுக்கு காத்திருந்தனர்

"செல்போன் எடுத்துண்டயா காயத்ரி. hostel அட்ரஸ் எல்லாம் எடுத்துண்டயா" என அவள் அக்கா கௌரி கேட்க

"ம்... எடுத்துண்டேன்..." என்றாள் காயத்ரி

"போனதும் போன் பண்ணுடி, பத்திரமா இரு என்ன"

"ம்..."

"இப்பவும் ஒண்ணும் கேட்டு போய்டலடி காயத்ரி... காலேஜ்க்கு கட்டின காசு போனா போறது. மனச மாத்திக்கோடி தங்கமே" என கண்ணை துடைத்தபடி கோகிலா கெஞ்ச பதில் பேசாமல் நின்றாள் காயத்ரி

"கோகிலா..... என்ன சொன்னேன் உன்னிட்டே.... என்னத்துக்கு இப்போ தேவ இல்லாம பேசிண்டுருக்க" என கணவன் கோபமுகம் காட்ட கோகிலா மௌனமானாள்

கார்த்தி செய்வது தெரியாமல் மௌனம் காத்தான். வாடிய முகத்துடன் அவளை வழி அனுப்ப மனமின்றி தனியே அவளிடம் ஏதேனும் பேசியேனும் சற்று இலகுவாக்கும் எண்ணத்துடன் "காயத்ரி வாட்டர் பாட்டில் வேணுமா? வாங்கிட்டு வரலாம் வா" என அழைக்க

"இல்ல கார்த்தி ஆத்துலேயே எடுத்துண்டோம்" என கோகிலா பதில் கூறினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் "ட்ரெயின்ல படிக்க புக்ஸ் வாங்கிக்க காயத்ரி. அங்க ஒரு கடை இருக்கு வா வாங்கிண்டு வரலாம்"

"இல்ல..... வேண்டாம்... புக்ஸ் இருக்கு" என தவிர்த்தாள், அவனுடன் பேசினால் தன் உறுதி தளர்ந்து விடும் என உணர்ந்தவளாய்.

ரயில் வந்ததும் ஏறி அமர்ந்து விட்டாள்

பெட்டிகளை உள்ளே எடுத்து வைக்க ஏறிய கார்த்தி "இன்னும் டைம் இருக்கே காயத்ரி, இப்பவே ஏறணுமா" என கேட்க

"எப்படி இருந்தாலும் போய் தானே ஆகணும்....?" என்றாள் அழுத்தமாய் அவனுக்கு மட்டும் கேட்கும்படி, எல்லாம் உன்னால் தான் என குற்றம் சாட்டுவது போல

அவன் ஏதோ சொல்ல முயல அதற்குள் கோகிலா அருகில் வரவும் எதுவும் பேசாமல் அகன்றான்

ரயில் நகரத்துவங்க கோகிலா அழலானாள். என்ன தான் கோபம் இருந்த போதும் அவள் தந்தைக்கு செல்ல மகளை பிரிவது மிகுந்த வேதனையை அளித்தது

காயத்ரி அழுகயை கட்டுப்படுத்த முகம் திருப்பினாள்

கார்த்திக்கோ வேதனை கொன்றது. கண்கள் பனிக்க குற்ற உணர்வில் தவித்தான்

எல்லோரின் மனத்திலும் கனத்தை ஏற்றி விட்டு அந்த ரயில் வேகமெடுத்து கிளம்பியது

________________

மறுநாள் பலமுறை அவள் கைபேசிக்கி அழைத்தும் காயத்ரி எடுக்கவில்லை. வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என அறிந்து வேதனை அடைந்தான் கார்த்தி

உற்ற தோழியின் பிரிவு மனதை வருத்தியது. அவள் பிரிவு தன்னை இந்த அளவு பாதிக்குமென அவன் நினைக்கவில்லை

ஒரு வாரம் பொறுத்தவன் தன் கைபேசியில் இருந்து அழைத்தால் எடுக்கமாட்டாள் என பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்

"ஹலோ..."

"காயத்ரி.... நான் கார்த்தி பேசறேன்"

"......." அவன் குரல் கேட்டதும் உடல் நடுங்க சரிந்து அமர்ந்தாள்

"என்னாச்சு காயத்ரி..." என அவள் அறைத்தோழி கேட்க

"ஒண்ணும் இல்ல..." என்றாள் தனக்கே கேட்காத குரலில்

"காயத்ரி.... என்ன ஆச்சு?" என பதறினான் கார்த்தி

"......." மொத்த தைரியமும் வடிய மௌனமானாள்

"காயத்ரி நான் லைப்ரரி போயிட்டு அப்படியே க்ளாஸ்க்கு வரேன்... நீ பின்னாடி வா" என்று விட்டு அறை தோழி கிளம்ப அது தான் சாக்கென

"நான் போணும் டைம் ஆச்சு...." என்றாள் காயத்ரி

"காயத்ரி... ப்ளீஸ் போன் வெச்சுடாத.. ப்ளீஸ்மா" என்ற கெஞ்சலில் கரைந்தாள்

"......"

"காயத்ரி... ஏன் பேசமாட்டேன்கர....?"

"என்ன பேசணும்?"

"பேச எதுவும் இல்லையா?"

"நான் பேசவேண்டியதெல்லாம் பேசியாச்சு... இனி என்ன இருக்கு" என்றாள் விரக்தியாய்

"காயத்ரி நான் உன்ன ரெம்ப மிஸ் பண்றேன்... ஒரு வாரமா உன்னோட பேசாம எதையோ இழந்த மாதிரி இருக்கு"

"இப்படி எல்லாம் பேசி தானே என் மனச கெடுத்த கார்த்தி.. ஏன் இப்படி சித்ரவதை பண்ற என்னை?"

"என்ன பேசற காயத்ரி? என்னோட பெஸ்ட் friend ஐ நான் மிஸ் பண்ண கூடாதா? தப்பர்த்தம் பண்ணிண்டது நீ, தண்டனை நேக்கா? என்ன ஞாயம் காயத்ரி இது" என்றான் வேதனையாய்

"ஆமா... எல்லா தப்பும் என்னுது தான்...போதுமா.... வெச்சுடறேன்" என அழுகையுடன் பேசியை துண்டித்தாள்

அதன் பின் அவன் அழைப்புகளை அவள் நிராகரித்தாள்
_______________

இப்படியே இரு மாதங்கள் தவிப்பும் ஊடலுமாய் ஓடின

அன்று....

"வா கார்த்தி... என்ன உன்ன ஆத்து பக்கமே காணோம்? காயத்ரி இல்லாம வெறிச்சோன்னு இருக்கு. கௌரி போலேயே நீயும் காயத்ரி இல்லாம இங்க சரியா வர்றதில்ல" என அங்கலாய்த்தாள் கோகிலா

"இல்ல மாமி... அப்படி எல்லாம் இல்ல... final year ங்கறதால கொஞ்சம் வேலையா இருந்துட்டேன். ரெண்டு வாரம் Hyderabad Industrial Trip முடிஞ்சு நேத்திக்கி தான் வந்தேன்"

"ம்....காஞ்சனா சொன்னா..."

"மாமி, நீங்க அடுத்த வாரம் காயத்ரி பர்த்டேக்கு hostel க்கு அவள பாக்க போறேள்னு அம்மா சொன்னா. நான் ஹைதராபாத்ல ஒரு முத்து செட் அவளுக்கு வாங்கினேன் பர்த்டேக்கு. குடுத்துடறேளா..?" எனவும் போன இடத்தில் கூட நினைவாய் வாங்கி இருக்கிறானே என நெகிழ்ந்தாள் கோகிலா

"குடுத்துடறேன் கார்த்தி. அவள வாடின்னேன். நேக்கு வேல இருக்கு, வேணும்னா நீ வந்துட்டு போம்மானுட்டா... அவ பிடிவாதம் தான் நோக்கு தெரியுமே"

அவள் தன்னால் தான் வீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கிறாள் என்பது மனதை உறுத்த

"சரி மாமி... நான் அப்புறம் வரேன்... அவள கேட்டதா சொல்லுங்கோ"

"சொல்றேன் கார்த்தி..."

__________

அவள் பிறந்த நாள் அன்று பல முறை முயன்றும் அவள் பேசவில்லை. Hostel தொலைபெசிக்கி அழைத்தும் கூட ஹலோ என்றதும் துண்டித்து விட்டாள்

முடிவில் கார்த்திக்கு அவள் மீது இருந்த பரிதாபம் போய் கோபம் மேலோங்கியது

"அவளுக்கே என்னோட பர்த்டே wishes வேணும்னு இல்ல... நான் ஏன் தேவ இல்லாம அலட்டிக்கணும்" என ஒதுக்க முயன்றான்... அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை அவன் எண்ணியது போல்

___________

காயத்ரியின் நிலையோ இன்னும் பரிதாபமாய் இருந்தது

அவள் அம்மா காலையே வந்து புத்தாடை கொடுத்து கோவிலுக்கு அழைத்து சென்று செல்லமாய் தாங்கிய போதும் மனம் எதிலும் லயிக்கவில்லை. எப்போதும் போன்ற சந்தோசமான  பிறந்த நாளாக அது இருக்கவில்லை அவளுக்கு

கார்த்தி பரிசளித்த முத்துமாலையை கண்டதும் அழாமல் இருக்க மிக பிரயத்தனப்பட்டாள்

மணமாலை கேட்பவளுக்கு முத்துமாலை பரிசா என மனம் பரிகாசம் செய்தது

"நீ காலேஜ் சேந்ததுல இருந்து ஆத்துக்கே வர்லடீ காயத்ரி.... அப்பா உன் நெனப்பாவே இருக்கார்.... ஒரு தரம் வந்துட்டு போயேன்" என கோகிலா கெஞ்ச

"வரேன்மா... நேக்கும் அப்பாவ பாக்கணும்னு தான் இருக்கு... இன்னும் அப்பா என்மேல கோவமா இருக்காராமா?"

"எல்லாம் ஒரே ரெத்தம் தானே.... நோக்கும் அப்பாவுக்கும் எப்பவும் இந்த பிடிவாதம் இருக்கறது தானே... ஆனா... சில சமயம் மறதியா எப்பவும் போல கண்ணம்மானு உன்ன கூப்ட்டுட்டு பின்ன கண்ண தொடச்சுப்பார்... கண்ல பாக்கவே கஷ்டமா இருக்குடி காயு..... நீ இல்லாம ஆத்துல இருக்கவே பிடிக்கலடீ"

பெருகிய கண்ணீரை துடைத்தவள் "வரேம்மா... தீபாவளிக்கு ஊருக்கு வரேன்..." என்றாள் சமாதானம் செய்யும் எண்ணத்துடன்

________________

ஆனால் தீபாவளிக்கும் கூட ஏதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவதை தவிர்த்தாள்

கார்த்திகேனும் காரணம் புரிந்து மருகினான், அவள் பெற்றவர்களுக்கோ என்னவென்றே புரியாமல் மகளை பிரிந்து வேதனையில் தவித்தனர்

_______________

அன்று நாள் விடியாமலே போனால் நல்லது என எண்ணினான் கார்த்தி. போன வருடம் இதே நாள் அதிகாலையிலேயே அர்ச்சனை பிரசாதத்துடன் "ஹாப்பி பர்த்டே கார்த்தி" என காயத்ரி சொன்னதே கண் முன் நின்றது

அவளை கண்ணால் கண்டே ஆறு மாதம் ஆகிவிட்டது. Hostel லில் சென்று பார்க்க ஏதோ அவனை தடுத்தது

குரலை கேட்டும் கூட பல நாள் ஆனது என்று நினைத்த நொடி அப்போதே அவளிடம் பேச வேண்டும் போல் மனம் ஏங்கியது

கை பேசியை எடுத்து hostel எண்ணுக்கு அழைத்தான்

"ஹலோ.."

"ஹலோ... காயத்ரி இருக்காங்களா... ரூம் நம்பர் 43 " என்றான்

"நீங்க... யாரு?" என்ற மிரட்டலாய் கேட்டது ஒரு குரல்

"நான் அவ friend " என்றான் பணிவாய் யாரேனும் ஆசிரியர்களோ என எண்ணி

"உங்க பேரு...."

"கார்த்தி"

"Friend னா? எப்படி friend ? என்ன friend ?" என குறும்பாய் கேட்க அது ஆசிரியை அல்ல, யாரோ ஒரு விஷமத்தனமான பெண் என உணர்ந்து

"ஹலோ.... காயத்ரியை இப்ப கூப்பிட முடியுமா முடியாதா?" என்றான் வேண்டுமென்றே குரலில் கோபம் காட்டி

"அம்மாடி... பயங்கர டென்ஷன் பார்ட்டியா இருப்பீங்க போல. கொஞ்சம் கடலை போடலாம்னு பாத்தா ரெம்பத்தான் அலட்டிகறீங்க... ஹும்....இருங்க உங்க friend ஐ கூப்பிடறேன்....ஏய்... காயத்ரி.. உனக்கு போன்" என்றாள்

"யாரு சுதா லைன்ல?" என்றபடியே வந்தாள் காயத்ரி

"யாரோ உன் friend , கார்த்தினு சொன்னார்" எனவும் இல்லைன்னு சொல்லு என ஜாடை காட்டினாள் காயத்ரி

"அது...." என தயங்கிய சுதா "ஏன்?" என சன்ன குரலில் கேட்டாள் "அப்புறம் சொல்றேன்" என செய்கையிலேயே சொன்னாள் காயத்ரி

அதற்குள் பொறுமை இழந்த கார்த்தி "ஹலோ... காயத்ரி... காயத்ரி... " என அழைக்க

"ஹலோ மிஸ்டர் டென்ஷன் பார்ட்டி, காயத்ரி வெளிய போய் இருக்கா. அப்புறம் பேசுங்க" என சுதா சமாளிக்க முயல கார்த்தி கோபமாய்

"பொய் சொல்லகூட ஒரு தனி திறமை வேணும், அது உங்ககிட்ட இல்ல. அவ பக்கத்துல தான் இருக்கானு எனக்கு தெரியும். போன்ஐ அவ கிட்ட குடுங்க ப்ளீஸ்..."

"நீ பக்கத்துல தான் இருக்கேன்னு அவர் கண்டுபிடிச்சுட்டார்" என்று விட்டு பேசியை அவள் கையில் திணித்து விட்டு போனாள் சுதா

"ஐயோ... " என தலையில் அடித்து கொண்டு "ஹலோ... "என்றாள் காயத்ரி

"ஏன் காயத்ரி இப்படி பண்ற? என்னோட பர்த்டேக்கு உன்னிட்ட ஒரு வார்த்த பேசணும்னு கூப்டா அதுக்கு கூட நோக்கு மனசில்ல இல்லையா?" என்றான்    ஆதங்கத்துடன்

"....." அவனது ஏங்கிய குரல் மனதை பிசைய பேச முடியாமல் தவித்தாள்

"நான் உன்கிட்ட எதுவும் பேசல.... ஜஸ்ட் ஒரு விஷ் பண்ணு போதும்... நான் போன் வெச்சுடறேன்... ப்ளீஸ்" என்றான் பாவமாய்

"......" கல்லும் கரையும் வண்ணம் அவன் பேச கண்களில் நீர் வழிய நின்றாள் காயத்ரி

அதை அவள் பேச விருப்பமில்லாமல் தவிர்க்கிறாள் என தவறாக எடுத்து கொண்ட கார்த்தி

"சரி காயத்ரி.... நான் வெச்சுடறேன்... நீ என்ன இந்த அளவுக்கு வெறுத்துருபனு நான் நெனக்கல" என விரக்தியுடன் பேச அதற்கு மேல் தாங்க முடியாமல்

"ஐயோ...அப்படி இல்ல கார்த்தி..."

"உன்னோட வாய்ஸ் மட்டுமாச்சும் கேக்கனும்னு எத்தன வாட்டி உன்னோட செல் போன்க்கு கூப்டுருப்பேன். நோக்கு என்னோட பேசணும்னு தோணாதா காயத்ரி?" என வேதனையுடன் கேட்க

"கார்த்தி நீ புரிஞ்சு தான் பேசறயா?"

"அத நான் கேக்கணும்"

"கார்த்தி... உன்னோட பேசினா நான் இன்னும் பலவீனமாய்டறேன். நீ என்ன நெனைக்கறத விட ஆயிரம் மடங்கு அதிகம் நான் உன்ன நெனைக்கிறேன்.... " என்றவள் அதற்கு மேல் தாங்காமல் hostel தொலைபேசி என்பதையும் மறந்து அழ தொடங்கினாள்

சுற்றி இருந்த தோழிகள் எல்லாம் "என்ன என்ன?" என விசாரிக்க தொடங்க தொலைபேசியை துண்டித்து விட்டு அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்

அவளது வார்த்தைகளும் அழுகையும் கார்த்தியை வதம் செய்தன

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவள் கைபேசிக்கி அழைத்தான்

"ஹலோ..." என்றாள் அழுகையுடன்

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் காயத்ரி... இன்னைக்கே எங்க அம்மாவ மாமி கிட்ட பேச சொல்றேன்" என்றான் கார்த்தி தீர்மானமாய் ................

ப்ரியமானவேளே,
உன்கண்ணீருக்கு முன்
உடைந்துபோனது என்தவம்
உன்அருகாமையற்ற வாழ்வில்
உயிர்இருந்தும் நான்சவம்!!!

உனைகாணா நாட்கள்
உலகில் வாழாநாட்கள்
உன்குரல் கேளாகணங்கள்
உயிர்வதை க்ஷணங்கள்!!!

ஊன்உறக்கம் வேண்டேன்
உலகில் மற்றெதுவும்வேண்டேன்
உன்புன்னகை போதுமடி
உயிர்வாழ்வேன் நான்!!!

தொடரும்....

54 பேரு சொல்லி இருக்காக:

LK said...

//நாம கல்யாணம் பண்ணிக்கலாம் காயத்ரி... இன்னைக்கே எங்க அம்மாவ மாமி கிட்ட பேச சொல்றேன்" என்றான் கார்த்தி தீர்மானமாய் ........//
திடீர் திருப்பம் .. காதல்னா இந்த பிரிவு வரும். சோகமும் வரும்

தக்குடுபாண்டி said...

//அம்மாடி... பயங்கர டென்ஷன் பார்ட்டியா இருப்பீங்க போல. கொஞ்சம் கடலை போடலாம்னு பாத்தா ரெம்பத்தான் அலட்டிகறீங்க... ஹும்// hello sudhakutty, note my number and gops number also...:)LOL

AnnyBenny said...

hai da..i didnt like this twist of karthik's decision of getting married to Gayu just for the sake of her..
He should feel his love towards her na..Anyway..expecting eagerly for climax..in your lovely writing style..
i cant wait its so tempting..put it soon frnd.
AnnyBenny

சின்ன அம்மிணி said...

சீக்கிரம் கல்யாணத்தைப்பண்ணி வைங்க

தமிழ் உதயம் said...

கவிதை நல்லா இருக்கு.

அனாமிகா துவாரகன் said...

ஏனுங்க? இந்த காலத்தில பொண்ணுங்க இப்பிடி ஒரேய‌டியா அழுதிட்டு இருப்பாங்களா? எனக்கு வரிக்கு வரிக்கு ஆர்.சி. புக் படிக்கிற மாதிரி இருக்கு. =)) இட்ஸ் ஓக்கே. இரண்டு நாள் ஒரே பாட்டை கேட்டா நாங்க பாடிட்டே இருக்கிறதில்லையா? அவங்க தாக்கம் உங்க எழுத்தில இருக்கு. பட் கதைகளில் மட்டும் தான். மத்ததுகளில் அவங்க தாக்கம் இல்லை. =)) எனக்கு அவங்கள் கதை இஷ்டமில்லை. ஆனாலும், படிப்பேன், அதில என்ன இருக்குனு என் பிரண்ட்ஸ் விழுந்து விழுந்து படிக்கிறாங்கனு பாக்க.

அப்புறம் இந்த ஒரு வாரத்துக்கு ஒன்னு போடுற வேலை எல்லாம் வேண்டாம். மரியாதையா இரண்டு நாளைக்கு ஒன்னு போடுங்க. இல்லேன்னா, அந்திராஸ் அனுப்பப்படும். =))

அனாமிகா துவாரகன் said...

I totally agree with AnnyBenny about Karthik and your writing. =))

அனாமிகா துவாரகன் said...

முன்னயும் சொல்லி இருக்கேன். எப்ப உங்க பக்கம் வந்தாலும், பெரிய புன்னகை என் முகத்தில் வரும். வேற எதுக்கு, உங்க ஹஸ்பன்டோட பஞ்சு அபவுட் உங்க அப்பா. ஹா ஹா ஹா. அப்பாகிட்ட உங்களுக்கும் அப்டியாப்பானு கேட்டேன். எங்க வீட்ல ஜாதகம் பாத்து கட்டிக்கிறதில்லை. ஆனால், எங்க அம்மம்மா நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு கொடுத்து (அதில மருந்து போடு = பிளக் மாஜிக்) தன்னை மயக்கி பொண்ணுக்கு கட்டி வைச்சிட்டாங்கனு சொல்லி சிரிச்சார். அதுவும் அம்மா கிச்சன்ல பூரி போட்டுட்டு இருக்கும் போது எனக்கு ஃபோனில் சொன்னாரா? பூரி கட்டையால அப்பாவுக்கு ஒரு தட்டு அம்மா தட்டினாங்கனு சொல்ல தேவையில்லை. ஆனாலும் இந்த ஆண்கள் பாவம்ப்பா. நான் ரங்கமணிகள் கட்சி தான். தங்கமணீஸ் ஆர் சோ மீன். ஹூக்கும்.

ஹேமா said...

கவிதை நல்லாயிருக்கு.

இன்றுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.பாகம் ஒன்றிலிருந்து வாசிக்கப்போகிறேன்.

அமைதிச்சாரல் said...

அப்ப காயத்ரியோட அழுகைதான் அவனை ஒத்துக்க வெச்சுதா.. அவனுக்கே தெரியாம மனசுல மறைஞ்சிருந்த காதலை வெளிப்பட வெச்சதா நான் அதை எடுத்துக்கிறேனே. ஏன்னா பரிதாபத்தால் வரும் காதலும் பரிதாபப்படத்தக்கதே.

அப்பாவி தங்கமணி said...

@ LK - எல்லாம் தானே வாழ்க்கை.... நன்றி

@ தக்குடு - அடப்பாவி... இப்ப காயத்ரிய கழட்டி விட்டாச்சா.... பச்சை சுடிதார் கோச்சுக்க மாட்டாங்களா பிரதர்

@ AnnyBenny - Thanks for your eagerness. Sure I will post soon. Thanks again

@ சின்ன அம்மணி - செஞ்சுடலாங்க சின்ன அம்மணி... நேரமா வந்துடுங்க கல்யாணத்துக்கு

@ தமிழ் உதயம் - ரெம்ப நன்றிங்க தமிழ் உதயம்

@ அனாமிகா - என்ன ரெம்ப நாளா ஆளே காணோம்? சௌக்கியமா? எந்த காலத்துலயும் காதல் கொண்ட மனசு ஒரே மாதிரி தாங்க.... சிலர் வெளிய காட்டிபாங்க... சிலர் காட்டிகரதில்ல.... ரமணி சந்திரன் இம்பக்ட் இருக்குனு நீங்க சொல்றப்ப ரெம்ப சந்தோசமா இருக்கு... ஐயோ அந்திராஸ் எல்லாம் வேண்டாம்... போட்டுடறேன்.... (வர வர எல்லாருமே terror ஆய்டான்களே...)

@ அனாமிகா - அடப்பாவி... இன்னுமா நீங்க அந்த பொண்ணு பாத்தா கதை ஜோக்அ மறக்கல. இதுல உங்க அப்பாவ வேற torture பண்றீங்களா... பாவம்... ஆனாலும் நீங்க ரங்கமணிஸ் ரெம்ப சப்போர்ட் பண்றீங்க... உங்களுக்கு இன்னும் டும் டும் டும் ஆகலைன்னு நெனைக்கிறேன்... அப்புறம் கண்டிப்பா சப்போர்ட் பண்ண மாட்டீங்க

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா

@ அமைதிச்சாரல் - நீங்க சொன்னதா கார்த்தி காயத்ரிக்கு forward பண்ணிடறேன்... என்ன பண்றாங்கன்னு பாப்போம்

My days(Gops) said...

//hello sudhakutty, note my number and gops number also..//

அன்பே சுதா, தக்குடு நம்மர் அடிக்கடி சுவிட்ச் ஆப் ல இருக்கும்... சோ, நீங்க என் நம்பருக்கே கால் பண்ணுங்க...ஒகே

My days(Gops) said...

13 எனக்கு தான்

My days(Gops) said...

அருமையா இருந்தது பதிவு... டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்.. என் மேல காதல் இருந்து இருந்தா நீ அன்னைக்கே ஐ லவ் யூ'னு சொல்லி இருப்ப கார்த்திக், ஆனா நீ இப்போ என் மேல காட்டுறது பரிதாபம் + என் கூட நீ பேசனும்ங்கற சுயநலம் கார்த்திக்.. தயவு செய்து, என் உண்மையான காதலை கேவல படுத்திடாத கார்த்திக்.. அப்படி'னு அடுத்த பதிவு'ல நம்ம காயத்திரி திரி இல்லாம விளக்கு ஏத்துவாங்க பாருங்க... அட அட ஜ யம் வெயிட்டிங்...

My days(Gops) said...

btw, உங்கள் போன பதிவு ஆனந்த விகடனில் வந்ததுக்கு :)

My days(Gops) said...

வாழ்த்துக்கள் கூறீ பூரி திங்க இதோ கிளம்பிட்டேன் :)

Priya said...

Nice Update
கவிதை நல்லா இருக்கு

Krishnaveni said...

romba nalla ezhutharinga buvana. nalla karpanai ungalukku. keep writing. Thanks a lot for following my blog. Kavidaiyum romba arumai

சுசி said...

இந்த பகுதி செமயா இருக்குங்க..

விட்ட பகுதிகளேம் படிச்சிடறேன் :))))

தக்குடுபாண்டி said...

//அன்பே சுதா, தக்குடு நம்மர் அடிக்கடி சுவிட்ச் ஆப் ல இருக்கும்... சோ, நீங்க என் நம்பருக்கே கால் பண்ணுங்க...ஒகே// dear sudhakutty, gops ponnu paakka poona yedathulaleenthu innum varalai, so yennoda numberukkey call pannuda kannaa!!..;)

அப்பாவி தங்கமணி said...

இந்த தக்குடு & கோப்ஸ் ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம்னு யாராச்சும் ஐடியா குடுங்களேன்.... நானும் பாக்கறேன்.... நல்லா கும்மி அடிக்க வசதியா காமெடி பதிவு போட்டா ரெண்டு பெரும் சீரியஸ்ஆ கமெண்ட் போடறது. அதே கஷ்டப்பட்டு சீரியஸ்ஆ ஒரு லவ் ஸ்டோரி எழுதினா காமெடி பண்றீங்களா காமெடி...

உங்கள என்ன பண்ணலாம்? ஒகே, இனிமே ரெண்டு பேரும் தினமும் என்னோட ப்ளாக்ஐ 108 வாட்டி சுத்தணும்னு தீர்பளிக்கிறேன்....

கோப்ஸ் & தக்குடு - ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான நியூஸ். அந்த சுதாவுக்கு ஏற்கனவே நிச்சியம் ஆயாச்சு... சைட் அடிக்கிறேன்னு சொன்னதெல்லாம் சும்மா காமெடிக்கு (வாழ்வே மாயம் பாட்டு கேக்கறாப்ல இருக்கு...)

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
13 எனக்கு தான்//

அது என்னங்க பிரதர் அடிக்கடி இந்த டயலாக் சொல்றீங்க.. ஆனா என்னன்னு தான் புரியல? விளக்கம் ப்ளீஸ்?

அப்பாவி தங்கமணி said...

@ கோப்ஸ் உங்க கற்பனை குதிரை பறந்து ஓடுது போல இருக்கே. சூப்பர் சூப்பர். என்னோடு பதிவு உங்க மூளைய கசக்கி பிழிய வெச்சுருக்குன்னு நெனைக்கரப்ப.... எங்கயோ போய்டீங்க கோப்ஸ்

பிரதர் பிரதர் அது ஆனந்த விகடன் இல்ல... யூத் விகடன்... நெறைய பேரு (??????!!!!!!) அந்த யூத்ங்கற வார்த்தைய இருட்டடிப்பு செய்ய முயற்சில ஈடுபட்டு இருக்காங்க... அதனால வரலாறு முக்கியம் அமைச்சரே....

உங்க வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ கிருஷ்ணவேணி - ரெம்ப நன்றிங்க வேணி. தொடர்ந்து படிக்கறதுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ சசி - ரெம்ப நன்றிங்க சசி. மத்த பகுதியும் படிச்சுட்டு வாங்க

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//அன்பே சுதா, தக்குடு நம்மர் அடிக்கடி சுவிட்ச் ஆப் ல இருக்கும்... சோ, நீங்க என் நம்பருக்கே கால் பண்ணுங்க...ஒகே// dear sudhakutty, gops ponnu paakka poona yedathulaleenthu innum varalai, so yennoda numberukkey call pannuda kannaa!!..;)//

ஏன்னா ஒரு வில்லத்தனம்???????????? அதானே, அந்த பொண்ணு பாத்தா கதை மிச்சம் எங்க கோப்ஸ். ஆனா கோப்ஸ் பரவாஇல்ல.... நான் தொடர் பதிவுக்கு அழைச்சதுக்கு மதிப்பு குடுத்து ஒரு பகுதியாச்சும் ரீல் சுத்துனாரு.... தக்குடு நோ response (அதை தான் ஒரு ஒரு பதிவிலும் சொல்றேனேன்னு சொல்றீங்களா தக்குடு)

Complan Surya said...

"......." மொத்த தைரியமும் வடிய மௌனமானாள்..
எந்த வரிகள் அழகு...

காயத்ரி... ப்ளீஸ் போன் வெச்சுடாத.. ப்ளீஸ்மா" என்ற கெஞ்சலில் கரைந்தாள்--சூர்யா நோட் panikko எது எல்லாம் நாளைக்கு use அகும்.

கதையில வேகம் கூடி இருக்கு
ஆனால் சோகம் தங்கி இருக்கே..

நேரில் ஒரு சம்பவம் போல அழகா போய்கிட்டு இருக்கு உங்க பதிவு.
வாழ்த்துக்கள்
சொல்ல வயதில்லை
காம்ப்ளான் சூர்யாவின்
வணக்கங்கள்.

Complan Surya said...

அப்புறம் இந்த ஒரு வாரத்துக்கு ஒன்னு போடுற வேலை எல்லாம் வேண்டாம். மரியாதையா இரண்டு நாளைக்கு ஒன்னு போடுங்க. இல்லேன்னா, அந்திராஸ் அனுப்பப்படும். =))

annami chonnathu

reppeettu...
அந்திராஸ் அனுப்பப்படும். =))

Complan Surya said...

//அன்பே சுதா, தக்குடு நம்மர் அடிக்கடி சுவிட்ச் ஆப் ல இருக்கும்... சோ, நீங்க என் நம்பருக்கே கால் பண்ணுங்க...ஒகே// dear sudhakutty, gops ponnu paakka poona yedathulaleenthu innum varalai, so yennoda numberukkey call pannuda kannaa!!..;)

"appavi sudovao no avanga 2perukitum kudupathai nan vanmaiya kondikiren..

appdi kuduthal 3perukum kudukanum..yaru athu 3vathu perunu kekrengala..

"complan boy surya."

தக்குடுபாண்டி said...

// தக்குடு நோ response (அதை தான் ஒரு ஒரு பதிவிலும் சொல்றேனேன்னு சொல்றீங்களா தக்குடு)// athey! athey!!

complan surya - neenga veera yethavathu pigarai try seyyavum, naanum gopsum already sudhakuttykku advance booking pannittu wait pannindu irukkom...:)

Complan Surya said...

தக்குடுபாண்டி கூறியது... "complan surya - neenga veera yethavathu pigarai try seyyavum, naanum gopsum already sudhakuttykku advance booking pannittu wait pannindu irukkom...:)

--"SARI PARAVALAI...neengaley vachukonga.


enaku appavi vera nalla figeraa paathu no thanga...(ethai avanga 2perukitum chollakodathu..secret.nan vanthu college padikumpothu no.vangikolren.epothan +2leave vittu erukkanga..

complan boy
surya

ஸ்ரீராம். said...

திடுக்கிடும் திருப்பம்..? பாவங்க கார்த்தி...ஒரு அழுமூஞ்சியைப் போய் கல்யாணம் பண்ணப் போறானே...!!

ஸ்ரீராம். said...

கவிதையை பாராட்ட மறந்துட்டேன்..தவம் சவம் கவிதை நல்லாருக்கு.

Venkatesh said...

சீக்கிரமா அவங்க ரெண்டு பேரருக்கும் கல்யாணம் பண்ணிவைங்க.. லேட் பண்ணிடாதீங்க தங்கமணி மேடம். காயத்திரி அழுகறது பொருதுக்கமுடியல.

Madhuram said...

Very interesting AT. Naan innum youthave irukaradhunaala enakku idhu madhiri romantic stories romba pidikkum.

Anamika solra madhiri enakkum RC avvalava pidikala in few things. Oru story rendu story ok, but I feel kittathatta ella storyum ore madhiri varudhu and 2010 la padikkum bodhu romba outdateda irukku. Enakku ippa takkunu gyabagam vara mattengudhu exacta enna pidakalanuttu.

Neenga konjam andha style follow panikonga, but avangala madhiri sterotype aayidadheenga. Ungalukku romance ezhudharadhu romba nalla varudhu. I'm actually able to feel the tension between Gayathri and Karthik. Nalla capture pannirukeenga. All the very best AT.

padma said...

இன்னும் தொடருமா ? தங்கமணி ப்ளீஸ் சோகம் போதும்

அனாமிகா துவாரகன் said...

எப்படீங்க மறக்க முடியும்? அது பசுமரத்தாணி போல மனசில பதிஞ்சிடுச்சு. எவ்ளோ அற்புதமான டயலொக் அது. அதை எப்படி மறப்பது சொல்லுங்க. அப்புறம், எனக்கென்னவோ நீங்க எல்லா தங்க்ஸ்சும் ரங்கஸ்சை படுத்திற மாதிரி தான் தோனுது. கல்யாணம் ஆனாலும் எனக்கு நோ ப்ரொப்ளம். உங்கள மாதிரி ஆளுங்க ட்ரெய்னிங் சோபிக்குமா என்ன? ஹா ஹா ஹா.

அப்பாவி தங்கமணி said...

Complan Surya Said
//சூர்யா நோட் panikko எது எல்லாம் நாளைக்கு use அகும்//

நீங்க காம்ப்ளான் பாய்... ம்... நம்பிட்டோம்

அப்பாவி தங்கமணி said...

@ காம்ப்ளான் சூர்யா - ப்ளீஸ் எல்லாரும் அந்த சுதா பொண்ண விட்டுடுங்க பாவம் பொழச்சு போகட்டும்... நல்ல வாழ்க்கை அமையட்டும்

@ தக்குடு - இது என்ன booking எல்லாம் நடக்குது. கஷ்டம்டா சாமி. வைஷு கோச்சுக்க போறா பிரதர்

@ காம்ப்ளான் சூர்யா said //enaku appavi vera nalla figeraa paathu no thanga...(//
அடப்பாவிங்களா... என்ன கொடுமை இது எல்லாம்?

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
திடுக்கிடும் திருப்பம்..? பாவங்க கார்த்தி...ஒரு அழுமூஞ்சியைப் போய் கல்யாணம் பண்ணப் போறானே...!!//

ச்சே ச்சே என்ன ஸ்ரீராம் இப்படி சொல்றீங்க. காயத்ரி தங்கமான பொண்ணு. என்ன கொஞ்சம் பிடிவாதம் கூட.. அதுவும் கூட கார்த்திக்காக தானே

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
கவிதையை பாராட்ட மறந்துட்டேன்..தவம் சவம் கவிதை நல்லாருக்கு//

மிக்க நன்றி ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

//Venkatesh சொன்னது…
சீக்கிரமா அவங்க ரெண்டு பேரருக்கும் கல்யாணம் பண்ணிவைங்க.. லேட் பண்ணிடாதீங்க தங்கமணி மேடம். காயத்திரி அழுகறது பொருதுக்கமுடியல//

காயத்ரி ரசிகர் மன்ற தலைவர்கரத prove பண்றீங்க. கல்யாணம் பண்றது கார்த்தி காயத்ரி தான் சொல்லணும்... என்ன சொல்றாங்கன்னு பாப்போம் . நன்றிங்க வெங்கடேஷ்

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - ரமணி சந்திரன் கதைகள் stereotype நாளும் ஒண்ணு ஒண்ணும் அழகு தான். அந்த ஸ்டைல் புடிக்கரவங்களுக்கு addict ஆய்டுவாங்க (என்னை மாதிரி...). நன்றிங்க மதுரம்

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
இன்னும் தொடருமா ? தங்கமணி ப்ளீஸ் சோகம் போதும்//

ரெம்ப தான் சோகமா அய்டுச்சோ? நான் என்னங்க பண்ணட்டும்... எல்லாம் இந்த கார்த்திக் பண்ற வேலை

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - சரி சரி பாக்க தானே போறோம். நாங்களும் இப்படி எல்லாம் டயலாக் அடிச்சவங்க தான். நாங்க படுத்தறமா ரங்க்ஸ்களை? நேரம் அம்மணி நேரம். எங்க training ஆ? இது நல்ல இருக்கே கதை... நான் தான் அப்பாவி ஆச்சே

தக்குடுபாண்டி said...

//எனக்கென்னவோ நீங்க எல்லா தங்க்ஸ்சும் ரங்கஸ்சை படுத்திற மாதிரி தான் தோனுது. கல்யாணம் ஆனாலும் எனக்கு நோ ப்ரொப்ளம். உங்கள மாதிரி ஆளுங்க ட்ரெய்னிங் சோபிக்குமா என்ன? ஹா ஹா ஹா.// ROFTL...:)

அனாமிகா துவாரகன் said...

Check my blog =)) ha ha ha ha

அக்பர் said...

நல்லாயிருக்கு தொடருங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

பயங்கர கும்மி போலருக்கு! கதை சூப்பர்.. ஆர்.சி இஃபெக்ட் இருக்கு தான் :) எனக்கு ஆர்.சி அவ்ளோ பிடிக்காதுன்னாலும், உங்க கதை இன்னும் கொஞ்சம் லைவ்லியா இருக்கு, ஆக பிடிச்சுருக்கு.. :)

கோப்ஸ் & தக்குடுவை ச‌மாளிக்க, இதுக்கு தான் என்னை மாதிரி ஷாக் குடுக்கணும்.. நீ பாக்கறது பொண்ணு இல்லை ரோபட்னு.. பயபுள்ளைக அன்னிக்கு ஓடுனவங்கதேன்..

My days(Gops) said...

//அது என்னங்க பிரதர் அடிக்கடி இந்த டயலாக் சொல்றீங்க.. ஆனா என்னன்னு தான் புரியல? விளக்கம் ப்ளீஸ்?//

13 நம்ம பேவரிட்'ங்க, பிறந்த நாள் தேதி... ஆக போடுற செயின்'ல இருந்து ( எப்படி செயின் போடுறேனு பப்ளிசிட்டி பண்ணலை) , வண்டி நம்பர், போன் நம்பர், சைட் அடிச்ச பொண்ணுங்க நம்பர்'னு எதுல எடுத்துக்கிட்டாலும் அந்த 13 கண்டிப்பா இருக்கிற மாதிரி மோஸ்ட்லி பார்த்துக்குவேன்..

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//எனக்கென்னவோ நீங்க எல்லா தங்க்ஸ்சும் ரங்கஸ்சை படுத்திற மாதிரி தான் தோனுது. கல்யாணம் ஆனாலும் எனக்கு நோ ப்ரொப்ளம். உங்கள மாதிரி ஆளுங்க ட்ரெய்னிங் சோபிக்குமா என்ன? ஹா ஹா ஹா.// ROFTL...:)//

என்ன ROFTL ? தம்பி, வெயிட் அண்ட் சி.... இதே அனாமிகா டும் டும் ஆனதும் ரங்கமணிகள் பின்னேற்ற கழகம் ஆரம்பிக்கராங்களா இல்லையானு? (இது எல்லாத்துக்கும் சேத்து வெக்கறோம் ஆப்பு... சமயம் கெடைக்கறப்ப)

அப்பாவி தங்கமணி said...

//அக்பர் சொன்னது…
நல்லாயிருக்கு தொடருங்கள்//

ரெம்ப நன்றிங்க அக்பர்

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி
என்னப்பா.... வர வர எல்லாரும் ஆர். சி ய இப்படி புடிக்கல புடிக்கல சொல்றீங்க.... ஒகே ஒகே. lively ய இருக்குனு சொன்னதுக்கு தேங்க்ஸ்

நானும் அந்த சுதாவுக்கு நிச்சியம் ஆய்டுச்சுன்னு கூட சொல்லி பாத்துட்டேன் கொடி... கோப்ஸ் & தக்குடு போதாததுக்கு இப்ப காம்ப்ளான் சூர்யா வேற, கேக்க மாட்டேன்கறாங்க... நீங்க குடுத்த ஷாக் தான் சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

@ கோப்ஸ் - ஓ ஹோ... அதான மேட்டர்.. இந்த ஊர்ல 13 நாலே எல்லாரும் அலறி ஓடுவாங்க

Post a Comment