Monday, May 10, 2010

பிரியமானவளே...பகுதி 8

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் காயத்ரி... இன்னைக்கே எங்க அம்மாவ மாமி கிட்ட பேச சொல்றேன்" என்றான் கார்த்தி தீர்மானமாய் ................

"......"

"காயத்ரி...ஏன் எதுவும் பேசாம இருக்க?"

"என்ன சொன்ன கார்த்தி?"

"கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்"

"ஹும்.... ஆனா காதலிக்கறேன்னு சொல்லல"

"காயத்ரி...அது..."

"பரிதாபத்துல.... கல்யாணமா?"

"அப்படி இல்ல காயத்ரி...."

"நேக்கு அழறதா சந்தோசபட்றாதானு தெரியல"

"என்ன சொல்ற காயத்ரி?"

"என்னோட காதல் தோத்து போச்சுன்னு அழறதா... இல்ல என்னோட நட்பு சாகர வரை வேணும்கறதுக்காக கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்ன உன்னோட ஆழமான நட்ப நெனச்சு சந்தோசபட்ரதானு புரியல"

"இல்ல காயத்ரி... உன் விருப்பபடி நான் முன்னியே சொன்ன மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"இதோ... உன் வாயாலேயே சொல்லிட்ட... என்னோட விருப்பபடின்னு... உன்னோட விருப்பம் என்ன?"

"எனக்கும் சம்மதம் தான்"

"சம்மதம் வேற விருப்பம் வேற கார்த்தி"

"காயத்ரி எதுக்கு இந்த வேண்டாத வாதம்... நாம கல்யாணம் பண்ணிக்கறோம்... அவ்வளவு தான்... end of the story " என்றான் ஒரே முடிவாய்

"ஹும்... கல்யாணம்கறது end of the story இல்ல கார்த்தி... beginning of the life"

"இப்ப முடிவா என்ன சொல்ற? கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியா?"

"ஒரு பிரச்சனைய தீக்கறதா நெனச்சுண்டு அதை விட பெரிய பிரச்சனைய கொண்டு வர்ற. எதுவும் வேண்டாம் கார்த்தி. நாம நண்பர்களா மட்டுமே இருக்கணும்கறது கடவுள் விதிச்சது... அதை நாம மாத்த வேண்டாம்... மாத்தவும் முடியாது"

"ஆனா...."

"நீ என்ன சொல்ல போறேன்னு நேக்கு தெரியும்.... பழையபடி நாம இருக்கணும்னு சொல்லுவ...நான் ஒரு சாதாரண மனுசி கார்த்தி... என்னோட உணர்வுகள அத்தனை சீக்கரம் சாகடிக்கற சக்தி நேக்கு இல்ல..." என்றாள் அழுகையை வென்று

"காயத்ரி...." என்றான் தாங்காமல்

"இரு நான் பேசி முடிச்சுடறேன்.... out of sight, out of mind னு சொல்லுவா... நானும் அதை நம்பறேன்... நேக்கு நீ எதுனா நல்லது செய்யனும்னு நெனச்சா... என்னை பாக்கவோ பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்... " என்றாள் மனதை கல்லாக்கி

"இது அநியாயம் காயத்ரி..." என்றான் தவிப்புடன்

"ஞாயம் அநியாயம் பத்தி நேக்கு தெரியாது... நம்ம ரெண்டு பேரு வாழ்க்கைக்கும் இது தான் நல்லது... அது மட்டும் நன்னா புரியறது" என்றாள் தீர்மானமாய்

"என்னை பாக்காம இருக்கறது தான் நோக்கு சந்தோசம்னா அப்படியே இருக்கட்டும்" என்றான் கோபமாய்

"கோபப்பட்ரா மாதிரி காட்டி என் மனசை மாத்த முயற்சி செய்யறது வீண் கார்த்தி... அந்த நிலை எல்லாம் நான் தாண்டியாச்சு... என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல" என்றாள் பிடிவாத குரலில்

"நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியல காயத்ரி... ஆனா உன்ன பாக்காம பேசாம இருக்கறது மட்டும் ரெம்ப கொடுமையா இருக்கும்னு நன்னா தெரியும்" என்றான் ஏக்கத்துடன்

இந்த ஒரு நிமிட நெகிழ்வு இருவரின் வாழ்கையையும் புரட்டி போட்டு விடும் என உணர்ந்தவளாய் அழுகையை கடிவாளம் இட்டு நிறுத்தினாள் காயத்ரி...

"வேற வழி இல்ல கார்த்தி... bye " என்றாள்

"காயத்ரி...." என்று இதோ சொல்ல நினைத்தவன் எதுவும் பயனில்லை என உணர்ந்து "ஒகே bye " என்றான்

"ஒரு நிமிஷம் கார்த்தி...ஒரே ஒரு கேள்விக்கி மட்டும் உண்மையான பதில் சொல்லமுடியுமா?"

"நான் எப்பவும் உன்னிட்ட பொய் சொன்னதா ஞாபகம் இல்ல காயத்ரி" என்றான் அழுத்தமாய்

ஒரு நிமிடம் மௌனம் ஆட்கொள்ள "நீ இன்னும் அந்த ஷிவானிய மனசுல நெனச்சுண்டுருக்கையா?" என கேட்டாள் தயக்கமாய்

"இன்னொருத்தன் மனைவி ஆனவளை நெனைக்கற அளவுக்கு என்னை கேவலமானவனா நீ நெனைக்கறையா? இது தான் நீ என்னை புரிஞ்சுண்டதா?" என்றான் வேதனையாய்

"இல்ல கார்த்தி... அது" என தவிப்புடன் திணற

"போதும் காயத்ரி... பேசாத பாக்காதன்னு பாதி உயிர எடுத்துட்ட... இப்ப... ஹும்... இன்னும் என்ன பேசணுமோ பேசு... கேட்டுக்கறேன்...." என்றான் பெருமூச்சுடன்

இருவரும் எதுவும் பேசவில்லை

மௌனம் இத்தனை கொடுமையானதா என இருவருமே தவித்தனர்

இறுதியாக "ஒகே காயத்ரி bye " என்று விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பேசியை துண்டித்தான் கார்த்தி

ஐயோ....இறுதியில் கோபமாய் சென்று விட்டானே... மன்னிப்பு கேட்போம் என தோன்றிய மனதை கட்டுப்படுத்தினாள்

குழந்தை அழுதாலும் குணமாக வேண்டி கசப்பு மருந்து கொடுப்பது போல் இந்த கோபமே நிரந்தர பிரிவுக்கான அச்சாரமாய் இருக்கட்டுமென மௌனம் காத்தாள்

_________________

அதன் பின் இருவரும் பேசிகொள்ளவேயில்லை. கார்த்தி campus interview வில் தேர்வு பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கி சேர்ந்து விட்டான் என காயத்ரி அவள் அன்னை மூலம் அறிந்தாள்

_________________

காலமும் அலையும் தான் யாருக்கும் எவருக்கும் காத்திருப்பதில்லையே (Time and Tide waits for none)

காலங்கள் மாறின காட்சிகள் மாறின...

அன்று.....

"ஏய்... அது என்னோட Ball .... குடுடா" என நந்தினி பிடிவாதம் செய்ய

"போடி... அது என்னோடது...." என ராகவ் கத்தினான்

"குடுக்க போறியா இல்லையா இப்ப?" என நந்தினி அவனை அடிக்க போனாள்

"ஏய்.... நந்தினி எதுக்குடி அவன அடிக்கற?" என காயத்ரி தடுக்க வர

"பாரு மம்மி.... என்னோட Ball தானே இது...குடுக்க சொல்லு" என சிபாரிசு தேட

"என்னத்துக்கு இப்ப பிடிவாதம் பண்ற நந்து... ராகவ் கொஞ்ச நேரம் விளையாடட்டும்" என்றாள் காயத்ரி அதட்டலாய்

"ஏன் காயத்ரி நந்துவ மெரட்டற... எல்லாம் இந்த ராகவ் பண்றது தான்" என கார்த்தி பரிந்து பேச

"போ டாடி... நீ எப்பவும் நந்தினிக்கு தான் சப்போர்ட் பண்ணுவ" என ராகவ் முகம் திருப்பினான்

"எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்... இந்த நந்தினி கெட்டு போறா" என காயத்ரி கார்த்தியின் மேல் பழி போட

"அவங்கள சண்டை போடவேண்டாம்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கேளா?" என கேலியாய் கேட்டபடியே வந்தாள் மைதிலி, கார்த்தியின் மனைவி !!!!!!

"ஆமாம் மைதிலி.... காயத்ரிக்கு ஆத்துகாரர் ஊர்ல இல்லாததால பொழுது போகாம வழில போறாவா கூட எல்லாம் வம்பு இழுந்துண்டுருக்கா" என கார்த்தி கேலி செய்தான்

காயத்ரி எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தாள்

அவர்களை பார்த்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்த கார்த்தியின் அன்னை காஞ்சனா

"இன்னிக்கி நேத்து இல்ல மைதிலி... பத்து வயசுல இருந்தே காயத்ரியும் கார்த்தியும் எலியும் பூனையும் தான்... ஆனா கொஞ்ச நேரத்துல friends ஆயுடுவா...அவா புள்ளங்க கூட அப்படி தான் இருப்பாங்க போல எப்பவும்" என்றாள் பெருமையாய்

உடனே காயத்ரி "அவங்க நட்பாவது கடைசி வரை எந்த களங்கமில்லாம இப்படியே நட்பாய் தொடரணும்" என மனதில் பிராத்தித்தாள்

அதையே கார்த்தியும் அதே கணத்தில் நினைத்தான்

ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அவர்கள் இருவரின் பார்வை சந்தித்து மீண்டது... அதற்கு அந்த நொடி வீசிய தென்றல் காற்று மட்டுமே சாட்சி...

என்வாழ்வெனும் புத்தகத்தில்
எங்கும் நிறைந்தவள்நீ
என்மனமெனும் பெட்டகத்தில்
எங்கும் உறைந்தவள்நீ
என்நட்பெனும் தோட்டத்தில்
எல்லாம் நீயேஆனாய்
பிரியமானவளே.....
ப்ரிய சகியே....

முற்றும்....ஆனால் தொடரும்..... என்ன குழப்பறேனா?

12B படத்துல வருமே... ஹீரோ அந்த பஸ் ஏறி இருந்தா ஒரு மாதிரி ஏறாம இருந்தா ஒரு மாதிரினு கதை போகுமே அந்த மாதிரி இந்த கதைக்கும் ரெண்டு விதமான கிளைமாக்ஸ் (Called Multiple Climax in Industry Terms ) தோணுச்சு....  இந்த முடிவு தான் எனக்கு பிடிச்சுருக்குன்னு நெனைக்கறவங்க இதை எடுத்துக்கலாம். இல்லேனா அடுத்த பகுதிய பாருங்க


வித்தியாசமா எழுதறதா நெனைச்சுட்டு நீயும் கொழம்பி எங்களையும் குழப்பறையானு சிலர் திட்டுவீங்கன்னு நெனைக்கிறேன்... வித்தியாசமா எழுதணும்னு இப்படி செய்யல... தோணினது எழுதறேன் அதுக்கு தானே ப்ளாக்.... ஒகே அடுத்த கிளைமாக்ஸ்ல மீட் பண்ணலாம்... நன்றி

38 பேரு சொல்லி இருக்காக:

complan surya said...

hey am the first

hey am the first
hey am the firstttttttttttttttttt.

complan surya said...

etho parunga..

neyku pidikalai...

kadhaiya matunga..

elati sangathuku

aparatham katavendivarum

but etho

oru periya director story pola erukku

valthukal

surya

Venkatesh said...

எனக்கு இந்த பகுதியின் முடுவு பிடிச்சிருக்கு! காயத்ரி, கார்த்திக் ரெண்டு பேரோட நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிகனும்

செ.சரவணக்குமார் said...

//தோணினது எழுதறேன் அதுக்கு தானே ப்ளாக்....//

உண்மை. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள் மேடம்.

Guna said...

As usual, narration nalla irukku..

but enakku intha mudivu practical-a illainnu thonuthu..

waiting for the next part :)..
avvalavu seekiram kathaiya mudikka vituduvoma enna

Priya said...

வாவ்... இரண்டு கிளைமாக்ஸா! கலக்குங்க.
இந்த முடிவு நல்லா இருக்கு. அடுத்த பகுதி எப்போ?

தக்குடுபாண்டி said...

//இன்னொருத்தன் மனைவி ஆனவளை நெனைக்கற அளவுக்கு என்னை கேவலமானவனா நீ நெனைக்கறையா? // correctu karthi.

me,karthi & Gops yellarum unmarried pigarukkuthaan nuulu viduvoom...;))

தக்குடுபாண்டி said...

அப்பிடியே 2-வது க்ளைமாக்ஸ்ல நம்ப சுதாகுட்டி என்ன முடிவு பண்ணியிருக்காங்கனு கேட்டு சொல்லுங்கனு கோப்ஸ் சொல்லச்சொன்னாரு!!!...:)

தக்குடுபாண்டி said...

nice post!! nanna kontupooreel akka.....:)

அமைதிச்சாரல் said...

இந்த க்ளைமாக்ஸ் படிச்சாச்சு. அடுத்ததையும் படிச்சுட்டு சொல்றேன்.

அனாமிகா துவாரகன் said...

அட்ரோசியஸ்.......... ஒரு முடிவ மட்டும் எழுதி எங்கள காத்துட்டு இருக்க வைக்கிறது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. நாளைக்கு தூக்கும் போது மத்த முடிவும் இருக்கணும். இல்லேன்னா அந்திராஸ் நிச்சயம். (ஸப்பா..)

நிறைய கேள்வி இருக்குக்கா. வலிய மற்ந்து இப்டி ஒன்னா இருக்க முடியுமா??? மைதிலிக்கு காயத்ரி கார்த்திய லவ் பண்ணினது தெரியுமா? காயத்ரி ஹஸ்பன்ட் பேரு என்ன? யார் முதல்ல பழம் விட்டா? இதெல்லாம் நேக்கு தெரியணும். =))

சுசி said...

இதுவும் நல்லாருக்கு..

அடுத்த முடிவையும் போடுங்க படிச்சிட்டு சொல்றேன் எது பிடிச்சிருக்குன்னு :)

அப்பாவி தங்கமணி said...

@ Complan Surya - Yes, you're the first. கதைய மாத்தணுமா... அப்போ இன்னொரு கிளைமாக்ஸ் போட்டப்புறம் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

@ Venkatesh - ஒகே, உங்களுக்கு இதான் பிடிச்சுருக்கா? தேங்க்ஸ் வெங்கடேஷ்

@ செ.சரவணக்குமார் - ரெம்ப நன்றிங்க சரவணகுமார்

@ Guna - சரிங்க குணா... எழுத நான் ரெடி படிக்க நீங்க ரெடினு சொல்லிடீங்க.... (இதுக்கெல்லாம் நாங்க பயந்துருவோமா பிரதர்....)

@ Priya - நன்றிங்க ப்ரியா... சீக்கரம் அடுத்த முடிவு போடறேன்

@ தக்குடுபாண்டி - நல்ல பாலிசி தான் பிரதர். உங்களோட ஏன் அந்த நல்ல பையன் கார்த்திக் எல்லாம் சேத்துக்கறேள்... பாவம் விட்டுடுங்கோ. சுதாகிட்டயா ஒகே கேட்டு சொல்றேன்.. தேங்க்ஸ் தக்குடு

@ அமைதிசாரல் - நன்றிங்க, படிச்சுட்டு சொல்லுங்க

@ சுசி - நன்றிங்க சுசி.. படிச்சுட்டு சொல்லுங்க

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஆஹா... இப்படி மெரட்டினா எப்படி சிஸ்டர்... சீக்கரம் போட்டுடறேன் நிச்சியமா.

ஆஹா..... ஸ்கூல்ல என்னோட டீச்சர் கூட என்கிட்டே இத்தனை கேள்வி கேட்டதில்ல.... just kidding ... இப்படி சந்தேகம் எல்லாம் கேக்கற அளவுக்கு சீரியஸ்ஆ என்னோட கதையை படிச்சதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி அனாமிகா...(என்னை வெச்சு காமெடி கீமடி பண்ணலியே...)

உங்களோட கேள்விக்கான பதில்கள் இதோ....

//வலிய மற்ந்து இப்டி ஒன்னா இருக்க முடியுமா??? //
காலம் எல்லா வலிகளையும் ஆற்றும், மறக்க செய்யும்...

//மைதிலிக்கு காயத்ரி கார்த்திய லவ் பண்ணினது தெரியுமா? //
மைலிதிக்கி இது தெரியாது. என்னதான் புரிதல் இருந்தாலும் தன்னோட கணவனை இன்னொரு பொண்ணு விரும்பினத சிம்பிள்ஆ எடுத்துக்கற பக்குவம் ஒரு பொண்ணுக்கு இல்ல... அதுவும் இந்த கதைல வர்ற சிம்பிள் மிடில் க்ளாஸ் பொண்ணுக்கு இல்ல... அதுவும் இது ஒரு தலை காதல், எனவே மைதிலிக்கி தெரியபடுத்தவில்லை

//காயத்ரி ஹஸ்பன்ட் பேரு என்ன?//
உங்களுக்கு பத்திரிகை வரலயா அனாமிகா... ச்சே ச்சே எப்படியோ மிஸ் ஆய்டுச்சு போல... ஒகே... காயத்ரி husband பேரு கிருஷ்ணகுமார்

//யார் முதல்ல பழம் விட்டா?//
பழம் யாரும் விடல... இது அவங்களா தேடிகிட்ட முடிவு... காலம் தானா மாத்திடுச்சு அந்த பிணைப்பை...

கண்ண கட்டுதுரா சாமி.... (அனாமிகா ஒரு quick question .... நீங்க டீச்சர்ஆ?...சும்மா கேட்டேன்... Just for general knowledge)

ஹேமா said...

விறுவிறுப்பாயிருக்கு கதை.
தொடர்ந்து வாசிக்கிறேன்.
தொடருங்கள் தங்கமணி.

vanathy said...

ம்ம்ம்... தொடருங்க நல்லாயிருக்கு. ப்ளாக் என்றால் விரும்பியதை விரும்பியது போல எழுதலாம். நானே ராஜா நானே மந்திரி என்பது போல நிறைய சுதந்திரம்.

Krishnaveni said...

You have very good capacity to write nice stories. It reflects in your writing. Excellent talent. Keep going...Eagerly expecting the second climax...

Anny Benny said...

Though i liked the narration , i didnt like this climax at all..
you know..what i feel?? Love is something powerful and mysterious, if Gayu's love towards karthi is that
true, she will/should get the reciprocation from him too..
Hope your next climax will unite them..
thangs, romba wait panna veikkatheenga..plz..

complan surya said...

தக்குடுபாண்டி கூறியது...
அப்பிடியே 2-வது க்ளைமாக்ஸ்ல நம்ப சுதாகுட்டி என்ன முடிவு பண்ணியிருக்காங்கனு கேட்டு சொல்லுங்கனு கோப்ஸ் சொல்லச்சொன்னாரு!!!...:)


அப்பாவி
காம்ப்ளான் சூர்யாவுக்கு
ஒரு நம்பர் தரேன்னு சொல்லி இருந்தேங்கலே...yen innum kudukkavillai.secreta nama padivu vanthu kuduthu ponga.

தக்குடுபாண்டி அண்ணாவுக்கும் ,
கோப்ஸ் அண்ணாவுக்கும் சுதா நம்பர் குடுத்தது போல ..
எங்க சங்க நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யாவுக்கும்
நம்பர் குடுத்தால் என்ன?கொறைஞ்ச போய்டுவீங்க?

"you know..what i feel?? Love is something powerful and mysterious, if Gayu's love towards karthi is that..y y y..tension..ethu karpanai...
no tension...cool"
பாத்தீங்களா அப்பாவி
எல்லாம் டென்ஷன் ஆகி இருக்கா.
சோ நல்ல முடிவ சொல்லுங்க
இல்லாட்டி
:எங்க terror கேடி அக்ககிட்டவும்
அப்பரும்
anthirex தீவிரவாதி அனமிகா விடமும் சொல்லிவிடுவோம்

வருத்த படாத வாசிப்போர் சங்கம்.
நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யா

சின்ன அம்மிணி said...

இந்த முடிவு பிடிச்சிருக்கு

சின்ன அம்மிணி said...

அடுத்த முடிவு பிடிக்கறது நீங்க எவ்வளவு கன்வின்சிங்கா சொல்றீங்கன்றதை பொறுத்தது.

SathyaSridhar said...

Enna thnagam 2 climax ah aduthathu epppo poeda poerenga,,nalla kathai ezhuthareengalae..enakku intha climax ae pidichurukku paa.

My days(Gops) said...

ஜய் நான் நினைச்ச மாதிரியே தான் இங்க நடந்து இருக்கு :) .....

My days(Gops) said...

//me,karthi & Gops yellarum unmarried pigarukkuthaan nuulu viduvoom...;))
//

தம்பி தக்குடு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படி உண்மை பேசுற உனக்கே நம்ம சுதாவா கட்டி வச்சிடலாம்'னு நம்ம அப்பாவி அக்கா சொல்ல சொன்னாங்க....

My days(Gops) said...

சம்மதம் வேற விருப்பம் வேற கார்த்தி//

சூப்பர்

//நீ இன்னும் அந்த ஷிவானிய மனசுல நெனச்சுண்டுருக்கையா?//

காதலிக்கும் பெண்களுக்கே உண்டான சந்தேகம் :) ..

My days(Gops) said...

//இந்த முடிவு தான் எனக்கு பிடிச்சுருக்குன்னு நெனைக்கறவங்க இதை எடுத்துக்கலாம். இல்லேனா அடுத்த பகுதிய பாருங்க//


இதை படமா எடுத்தா என்ன முடிவு வைக்கலாம்'னு தம்பி தக்குடு கேட்க சொன்னார்

My days(Gops) said...

//தக்குடுபாண்டி அண்ணாவுக்கும் ,
கோப்ஸ் அண்ணாவுக்கும் சுதா நம்பர் குடுத்தது போல ..
எங்க சங்க நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யாவுக்கும்
நம்பர் குடுத்தால் என்ன?கொறைஞ்ச போய்டுவீங்க?//

காம்பளேன் பாய் நீங்க இன்னும் வளரலையே? சீக்கிரம் வளர்ந்தா, அன்பு அப்பாவி அக்கா உங்களுக்கு கண்டிப்பா துண்டிப்பாகாத நம்பர் தருவாங்க.. அது வரைக்கும் நீங்க, 100, 101, 102, நம்பர்களை டயச் செய்வீர்களாக :)

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா. வாசிங்க, சொல்லுங்க. நன்றி

@ Vanathy - நன்றிங்க வானதி, சரியா சொன்னீங்க

@ Krishnaveni - Thanks Krishnaveni for your compliments and encouragement. Will post the 2nd climax soon

@ Anny Benny - I expected that you wouldn't like this climax, wow... I read your mind right. Well said, //if Gayu's love towards karthi is that true, she will/should get the reciprocation from him too..// . Lets see what Karthi decides in 2nd climax. Thanks for reading this throughout

@ Complan Surya - சூர்யா, நீங்க காம்ப்ளான் பாய்னு சொல்றப்ப நான் எப்படி நம்பர் தர்றது... வயசாச்சுன்னு ஒத்துக்கிட்டா consider பண்றேன் (கோப்ஸ் சொன்னாப்ல). வேண்டாம் சாமி, சீக்கரம் 2nd கிளைமாக்ஸ் போட்டுடறேன், இப்படி எல்லாம் பொற்கொடி & அனாமிகா பேரை சொல்லி மிரட்ட கூடாது பிரதர்

@ சின்ன அம்மணி - நன்றிங்க சின்ன அம்மணி. கரெக்ட்ஆ சொன்னிங்க சொல்றத விதம் தான் பிடிக்கிதா இல்லையான்னு முடிவு பண்ணும், பிடிக்கற மாதிரி சொல்ல முயற்சி பண்றேன், படிச்சுட்டு சொல்லுங்க. நன்றி

@ SathyaSridhar - உங்களுக்கு இந்த கிளைமாக்ஸ் பிடிச்சு இருக்கா? நன்றிங்க சத்யா. சீக்கரம் 2nd கிளைமாக்ஸ் போட்டுடறேன்

@ My days(Gops) - நீங்க நெனச்சா மாதிரியேவா.... ஒருவேளை கார்த்தி உங்களுக்கு SMS பண்ணிட்டாரோ... அடபாவிங்களா ஆளாளுக்கு இப்படி சுதாவ கொல்றீங்களே... அதை அந்த பொண்ணு தான் முடிவு பண்ணனும். கேட்டு சொல்றேன். நன்றி பிரதர் (காதலிக்கற ஆண்களுக்கு கூட சந்தேகம் உண்டே...). இதை படமா எடுத்த என்ன முடிவா...? நான் படம் எடுத்தா 2nd கிளைமாக்ஸ் தான் முடிவா எடுப்பேன்... போட்டப்புறம் படிச்சுட்டு சொல்லுங்க. நன்றி மீண்டும்

ஸ்ரீராம். said...

என்னாது...ரெண்டு க்ளைமேக்ஸ்தானா? மிச்சம்லாம்...?

தக்குடுபாண்டி said...

//நான் படம் எடுத்தா 2nd கிளைமாக்ஸ் தான் முடிவா எடுப்பேன்.//

'டைரடக்கர்' அடப்பாவி அக்கா, இரண்டாவது க்ளைமாக்ஸுக்கு மீ வெய்ட்டிங்!!!..:)

Umm Omar said...

இது போலவே என்னுடைய வாழ்வில் இரு நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்களைப் பார்த்தால் யாருமே காதலர்கள்னுதான் சொல்வாங்க, அவ்வளவு சினேகம். ஆனா இருவரும் சேர்ந்து பேசி நண்பர்களாகவே தொடரலாம் என முடிவு செய்தார்கள் என்று கூட அறிந்தேன். அவளின் கல்யாணத்திலும் எல்லா வேலைகளையும் முன் நின்று செய்தவன் அவளுடன் பேசுவதை மட்டும், அவள் கணவனிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து விட்டான். அவளும் அவனும் ஒரே கம்பெனியில் வேலையில் இருந்தனர். அவளின் கல்யாணத்திற்கு பின் அவன் கம்பெனியையும் மாற்றி விட்டான். இப்பொழுது அவனுக்கும் கல்யாணம் ஆகி விட்டது. ஆனால் அவர்கள் நட்பு என்னானது என்றுதான் புரியவில்லை. இந்த முடிவை ரசித்தாலும் இது அதிக ஆயுட்காலம் இல்லாத முடிவு என்றே கூறலாம். இதுவரை காயத்ரி காட்டிய உணர்ச்சிகல், உணர்வின் பிரதிபலிப்புகள், எதிர்காலத்திலும் தொடர வாய்ப்பு உள்ளது. அதுவே மைதிலியையும் காயத்ரியின் கணவரையும் சந்தேகப்பிடியில் கொண்டு சேர்க்கும். இது கதை என்பதால் அவ்வளவு சிந்திக்க தேவையில்லை. so, go ahead with any kind of climax :) It was a nice read. Thanks.

சேட்டைக்காரன் said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
என்னாது...ரெண்டு க்ளைமேக்ஸ்தானா? மிச்சம்லாம்...?//

மிச்சம் எல்லாம் பின்னாடி வரும்.... (நீங்களும் கிண்டல் பண்றீங்களே ஸ்ரீராம்... நியாயமில்ல... அப்புறம் அனன்யா மாதிரி நானும் பாட்டு பதிவு பண்ணி உங்கள் ப்ளாக்க்கு அனுப்பிடுவேன் ஆமா சொல்லிட்டேன்... ஆஹா.... எப்படி எல்லாம் மிரட்ட வேண்டி இருக்கு?)

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//நான் படம் எடுத்தா 2nd கிளைமாக்ஸ் தான் முடிவா எடுப்பேன்.//
'டைரடக்கர்' அடப்பாவி அக்கா, இரண்டாவது க்ளைமாக்ஸுக்கு மீ வெய்ட்டிங்!!!..:)//


ஆஹா... டைரக்டர்ஆ... பாவம் தமிழ் சினிமா பொழச்சு போகட்டும்... இரண்டாவது கிளைமாக்ஸ் சீக்கரம் போட்டுடறேன்... நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Umm Omar
முதல் வருகைக்கு ரெம்ப நன்றிங்க Umm Omar . நீங்க சொன்ன அதே நெருடல் எனக்கும் தோணுச்சு... அதனால தான் இரண்டாவது கிளைமாக்ஸ் போடணும்னு ஒரு யோசனை வந்தது... மிக்க நன்றி படிச்சதுக்கும் உங்க நண்பரின் கதையை பகிர்ந்து கொண்டதற்கும்

அப்பாவி தங்கமணி said...

//சேட்டைக்காரன் சொன்னது…
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்//

ரெம்ப நன்றிங்க சேட்டைக்காரன்... வெள்ளிகிழமை பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்... மிக்க நன்றி எனது வலைப்பூவை சேர்த்ததற்கு

Madhuram said...

@AT:மைலிதிக்கி இது தெரியாது. என்னதான் புரிதல் இருந்தாலும் தன்னோட கணவனை இன்னொரு பொண்ணு விரும்பினத சிம்பிள்ஆ எடுத்துக்கற பக்குவம் ஒரு பொண்ணுக்கு இல்ல... அதுவும் இந்த கதைல வர்ற சிம்பிள் மிடில் க்ளாஸ் பொண்ணுக்கு இல்ல... அதுவும் இது ஒரு தலை காதல், எனவே மைதிலிக்கி தெரியபடுத்தவில்லை//

AT I think these days it is quite common for both men and women to have had some sort of romantic experience before their marriage. Like teenage crushes, puppy love or even very serious first love. So I don't think the wife will take it serious if the husband reveals about his experience if the relationship is not continuing in any sort. I have lot of real life examples for this.

In a family I know the husband named his first born daughter after his first love and the wife knows it. Idhu konjam overa irukkalam, not everybody will agree for it, but harmless first lova ethukira pakkuvam ippa niraiya middle class pengalukku irukku AT, adhukkum enkitta examples irukku.

In Gayathri/Karthik case it is not possible because they are still in close quarters and friends and it will be difficult for Mythili to understand/digest it. Adhuvena othukiren.

But idhuve oru ponnu dhairyama ava first love pathi husband kitta solradhu kashtam, even though the other guy might be in the other side of the world or even dead. The husband won't take it light. Cinemala vena husband idha lighta eduthukira madhiri katttuvanga (like in Mouna Raagam) but in real life it is nearly impossible. Andha pakkuvam lakshathil oruvarukku vena irukkalam.

Naan Autograph padam paathutuu adhu
dhaan sonnen ennoda rangs kitta. Even girls would have experienced similar feelings in various stages of their life aana adhellam dhairyama velila solla mudiyuma? Never.

அப்பாவி தங்கமணி said...

@ Madhuram
I totally agree with you Madhu. A women cannot be as openbook as a man about past life. Thats how our culture is evolved. It will take a couple of generations to change this

Though it is common that men and women have past stories these days, in my story they are still in contact (as friends only, but still in contact). If Mythili knows about past whatever Gayathri says simply could be translated differently by Mythili. It is not out of suspicion but it is the normal human tendancy. Thats why I said so

Thanks for your detail comment Madhu

Post a Comment