Tuesday, May 04, 2010

இட்லியும் நானும்....


முன் குறிப்பு - இது என்னோட சில்வர் ஜூப்ளி பதிவு, அதாங்க 25 வது பதிவு

இதுகாரும் (இதுவரை) உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து என்னை வழி நடத்திய கோடானு கோடி ரசிகர் பெருமக்களுக்கு.... ஒகே ஒகே...  ஒரு சில சக பதிவர்களுக்கு மிக்க நன்றி. இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்வது என்னவென்றால்... (ஐயோ கல் எல்லாம் வேண்டாம் ப்ளீஸ், நிறுத்திடறேன்...)

சரி பதிவுக்கு போவோம். இந்த பதிவ எழுதி முடிச்சுட்டு போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி ரங்க்ஸ் கிட்ட படிச்சு பாருங்கன்னு சொன்னேன் (அவங்கள கேக்காம நான் எதுவும்  செய்யறது இல்ல...). படிச்சுட்டு அவர் நடு நடுவுல நெறைய கமெண்ட் அடிச்சார், அதையும் இங்க சேத்து இருக்கேன் ஒரு lively effect காக. கண்டுக்காதீங்க ஒகேவா

நான் ரெம்ப நாளா மனசுக்குள்ள சுமந்துகிட்டு இருக்கற ஒரு பாரத்த உங்க கிட்ட எறக்கி வெக்கலாம்னு இருக்கேன்... (அத நான் சொல்லணும் - ரங்கமணி)

மனசோட ஆழத்துல இருந்த இந்த கவலை இப்ப பொங்கி பிரவாகம் எடுத்ததுக்கு காரணம் நம்ம கீதா மேடம் இட்லி பத்தி கருத்து கேட்டதை படிச்சது தான் (சுத்தம், இதுக்கு நீ செய்ற இட்லி கொஞ்சம் பொங்கி இருந்தாலும் சாப்பிடவாச்சும் உதவும் - ரங்க்ஸ்)

அது என்னமோ தெரியலைங்க, எனக்கும் இந்த இட்லிக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். மத்ததெல்லாம் நல்லாவே செய்வேன் (பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா - ரங்க்ஸ்)

நல்ல இட்லிக்காக நான் படாத பாடு இல்ல, கேக்காத டிப்ஸ் இல்ல. எப்படி செஞ்சாலும் எதாச்சும் சொதப்பிடும்

இட்லிக்காக நான் பாடு பட்ட சரித்திரத்த சொல்றேன் அப்புறம் நீங்களே சொல்லுவீங்க ஐயோ பாவம் நம்ம அப்பாவின்னு

என்னோட இட்லி சரித்திரம் எங்க ஆரம்பிக்குதுன்னா.... பதினெட்டாம் நூற்றாண்டு எல்லாம் இல்ல...

கல்யாணம் முடிஞ்சு நான் துபாய் போறதுக்கு முன்னாடி டேபிள் டாப் grinder எல்லாம் வாங்கணும்னு பந்தாவா ஷாப்பிங் லிஸ்ட் போட்டுட்டு இருந்தேன்

அதுக்கு முன்னாடி ஒரு முன் குறிப்பு - இது பின் வரும் தேவையான குறிப்பு என்பதால் இப்பவே சொல்றேன். எங்க ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடியே கனடா immigration apply பண்ணிட்டு துபாய் வேலைல continue பண்ணிட்டு இருந்தார்... (நான் உங்க வீட்டுல வலது கால் வெச்ச நேரம் தான் எல்லாம் கூடி வந்து சீக்கரம் விசா வந்ததுன்னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன்கறது தனி கதை.)

அங்க துபாய்ல ஒரு தமிழ் மெஸ்ல தான் அய்யா போஜனம் எல்லாம் மூணு நேரமும், நான் போற வரைக்கும் (நல்ல சாப்பாடு சாப்ட்டுட்டு இருந்தேன்... ஹும்.... - ரங்க்ஸ்)

என்னோட ஷாப்பிங் லிஸ்ட் எல்லாம் பாத்துட்டு எங்க மாமனார் என்ன நெனைச்சாரோ "இன்னும் ஒரு வருசத்துக்குள்ள கனடா போறது தானேம்மா, பேசாம அதுவரைக்கும் நீயும் அவன் சாப்பிடற மெஸ்லையே சாப்ட்டுகோயேன், இதை எல்லாம் தூக்கிட்டு போகாட்டா என்ன" னு கேட்டார் (மகனை கொஞ்ச நாளாச்சும் காப்பாத்தலாம்னு நெனச்சார் போல - ரங்க்ஸ்)

நான் ஒத்துக்கல "என்னால எல்லாம் ஒரு வருஷம் கடை சாப்பாடு சாப்பிட முடியாது. அதுவும் இல்லாம நான் கனடா போறதுக்குள்ள சமையல் எல்லாம் கத்துக்கணும்னு" ஒத்தகால்ல நின்னு grinder வாங்கினேன் (மகாஜனங்களே, நோட் தி பாயிண்ட் சமையல் கத்துக்கணும்... செய்யணும் இல்ல - ரங்க்ஸ்)

ஒரு குயர் நோட் ஒண்ணு வாங்கி எங்க அம்மா கிட்ட சமையல் குறிப்பு எல்லாம் கேட்டு எழுதிட்டு போனேன்

துபாய் போன மொதல் நாள் நான் செஞ்ச அரிசி பருப்பு சாதத்துலையே ரங்கமணி கொஞ்சம் ஜெர்க் ஆனார். அந்த கதைய நீங்க மொதலே படிச்சு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்கலைன்னா இங்க கிளிக்குங்க. அடிப்படை வரலாறு (தல படம் இல்லங்க... இது என்னோட சுய சரிதை) எல்லாம் படிச்சுட்டு ஒரு யு turn எடுத்து வாங்க

சரி இட்லி கதைக்கி போவோம். ஆசையா மாவு எல்லாம் அரைச்சு இட்லி ஒரு ஈடு ஊத்தி வெச்சுட்டு மணக்க மணக்க தக்காளி சட்னி எல்லாம் செஞ்சு வெச்சுட்டு இட்லி cooker தெறந்தா.... ஐயோ நாராயணா அதை என் வாயல எப்படி சொல்லுவேன்? (இதுக்கு இனி பக்கத்துக்கு வீட்டுக்காரன் வாயவா கடன் வாங்க முடியும் - ரங்க்ஸ்)

இட்லியோட மேல் பாகம் நல்லா மல்லிகைப்பூ கலர்லயும் அடிப்பக்கம் சாம்பல் கலர்லயும் இருந்தது... சரியான பசி வேற எனக்கு, அப்படியே கண்ல தண்ணி வந்துடுச்சு

இப்ப எழுதறப்ப சாதாரணமா தெரியும், ஆனா நெஜமா அன்னைக்கி கண்ல தண்ணி வந்தது... நம்பினா நம்புங்க... அந்த கொடுமைய அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட வலி என்னனு புரியும்

அம்மா நாக்குல வெச்சா கரையுற பதத்துல இட்லி செஞ்சு குடுத்தாலும் நல்லா சாப்டுட்டு தினமும் இதே இட்லியானு நரம்பில்லாம பேசின நாக்குதானே... அனுபவிடி நல்லா அனுபவினு வானத்துல இருந்து ஏதோ அசிரிரி கேட்ட மாதிரி ஒரு பிரமை வேற... (சின்ன வயசுல தூர்தர்சன்ல பாஷை புரியலைனாலும் சண்டே சண்டே காத்தால பத்து மணிக்கி மகா....பா...ர.தம்.... அப்படின்னு மீசிக் கேட்டதும் ஆணி அடிச்சா மாதிரி உக்காந்து பாப்போமே அதுல வர்ற அசிரிரி மாதிரியே இருந்தது)

ஏன்? எப்படி இப்படி ஆச்சு? எங்க தப்பு நடந்தது? அப்படின்னு "நடந்து என்ன குற்றமும் பின்னணியும்" கோபிநாத் மாதிரி நானும் ரங்கமணியும் step-by-step detail analysis எல்லாம் செஞ்சோம்

ரங்கமணி வேற நடுவுல "ஒருவேள குக்கர்க்கு வெயிட் போட்டு இருக்கணுமோ" அப்படின்னு ஒரு பெரிய சந்தேகத்த கிளப்பினார். எனக்கு தான் அப்ப ஒண்ணும் தெரியாதே, அப்படி இருக்கலாமோ இது கூட தெரியாம இப்படி அப்பாவியா வளந்துட்டோமேனு எனக்கு மறுபடியும் அழுகையா வந்தது

அன்னைகின்னு பாத்து ஊர்ல இருந்து போன். என் தங்கச்சி ரெம்ப அக்கறையா ரங்க்ஸ் கிட்ட "சாப்டாச்சா" னு கேட்டா

அவ கேட்டது தான் தாமதம். ரங்க்ஸ் அப்படியே கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...

"உங்க அக்கா இட்லி செஞ்சா இட்லி. நீ வாழ்க்கைல எப்பவாச்சும் ப்ளாக் அண்ட் வைட் இட்லி சாப்பிட்டு இருக்கயா... நான் சாப்டேன்... அதுவும் அப்பளம் சைஸ்ல ஸ்பெஷல் இட்லி" னு வாருவாருன்னு வாரினாரு

எனக்கு ரெம்பவே பீலிங் ஆய்டுச்சு... எத்தனை கஷ்டப்பட்டு செஞ்சேன்... ஏதோ கொஞ்சம் கலர் மாறினதுக்கு இப்படி பேசிட்டாறேன்னு அன்னைக்கி பூரா சாப்பிடவே இல்ல (அந்த கொடுமைய நீ ஏன் சாப்பிடற, அதுக்கு தான் நான் இருந்தனே - ரங்க்ஸ்)

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி... பரிணாம வளர்ச்சில... அதாவது அப்பளதுல இருந்து மினி இட்லி சைஸ் வந்து அப்புறம் பணியார சைஸ்க்கு வந்து அப்புறம் ஒரு நிஜ இட்லி மாதிரி ஏதோ செய்ய ஆரம்பிச்சேன்

யாரு கண்ணு பட்டுச்சோ... அந்த நேரம் பாத்து கனடா விசா வந்தது

இந்த ஊருக்கு வந்து குளிர் கொடுமைல நொந்து நூடுல்ஸ் ஆகி (ஏன் நொந்து இட்லி ஆகினு சொல்ல கூடாது, நான் அப்படி தான் சொல்லுவேன் - ரங்க்ஸ்) இட்லி அரிசி தேடி புடிச்சு என்னோட இட்லி பயணத்த தொடரலாம்னு ஆரம்பிச்சேன்

அந்த பயணம் இனிய பயணமா இருந்திருந்தா இப்ப இதை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே (நீங்களும் தப்பிச்சு இருக்கலாம்னு சொல்றீங்களா...)

ஆனா, மறுபடியும் "பழைய குருடி கதவ தெறடி" னாப்ல இட்லி சோகம் ஆரம்பிச்சது

சரி, அரிசி வித்தியாசம் தான் போல இருக்குனு பலவிதமா முயற்சி செஞ்சு பாத்தேன்

மூணு டம்ளர் அரிசிக்கி ஒரு டம்ளர் முழு உளுந்துன்னு போட்டு பாத்தேன், இட்லி அப்பளத்த விட கொஞ்சம் உப்பலா வந்தது

நாலு டம்ளர் அரிசிக்கி ஒரு டம்ளர் முழு உளுந்துன்னு போட்டு பாத்தேன் (சும்மா போட்டு இல்ல எல்லாம் ஊர வெச்சு அரைச்சு.... எல்லா சீரும் செஞ்சு தான்...) அப்பவும் இட்லி ஒரு பணியாரம் சைஸ்க்கு தான் வந்தது. அப்ப அப்ப கல்லு மாதிரியும் ஆச்சு

(வெளியில விழற பனிகட்டிய ஓடைக்க இதை use பண்ணினோம்னா பாத்துகோங்களேன் - ரங்க்ஸ்) இந்த கமெண்ட் கொஞ்சம் ஓவரா இல்ல... நீங்களே சொல்லுங்க ரங்க்ஸ் கிட்ட

போற எடத்துல எல்லாம் எல்லார் கிட்டயும் இட்லி எப்படி செய்வீங்க எப்படி செய்வீங்கன்னு கேட்டு கேட்டு ஒரு கட்டத்துல நான் போனாலே "இட்லி வந்துங்க..." அப்படின்னு எல்லாரும் சொல்ற மாதிரி ஆய்டுச்சு என் நிலைமை

இன்னும் சிலர் என்கிட்டே இருந்து தப்பிக்கறதுக்கு "எனக்கும் இட்லியே வராது"னு சொல்ல ஆரம்பிச்சுடாங்க

இட்லி cooker எல்லாம் ஒரு நாலு விதமா மாத்தி பாத்தேன் (அறுக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்... சும்மா ஒரு பழமொழி. இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல - ரங்க்ஸ்)

இதை விட பெரிய கொடுமை என்னன்னா நான் போடற அளவுல தான் ஏதோ தப்புன்னு நானா முடிவு பண்ணிட்டு போன வாட்டி ஊருக்கு போனப்ப எங்க அம்மா கிட்ட அவங்க இட்லிக்கு ஊற வெக்க அரிசி எடுக்கற அளவு டம்ளர் கடன் வாங்கிட்டு வந்தேன்

எந்த அளவுக்கு பீல் பண்ணி இருந்தா நான் இந்த அளவுக்கு போய் இருப்பேன்

எல்லாம் யாருக்காக... யாருக்காக... ரங்க்ஸ்காக (ஆஹா... இதென்ன புது ட்விஸ்ட் - ரங்க்ஸ்)

ஆமாங்க... எனகொண்ணும் இட்லி அத்தனை பிடித்தம் இல்ல... அவருக்கு பிடிக்குமேனு தான் இத்தனை பாடும்... ஹும்.... யாரு என்னை புரிஞ்சுக்கறா... (ஆஹா... சீன் ஸ்டார்ட் ஆய்டுச்சு... இனி நான் silent mode போறது தான் safe . இல்லைனா இட்லிலையே விழும் - ரங்க்ஸ்)

அப்புறம் யாரோ ஒரு தங்கமணி சொன்னாங்க, இந்த ஊர்ல குளிர் அதிகம்கரதால தான் மாவு புளிக்காம இந்த பிரச்சனை. மாவு அரைச்சதும் ஓவன்ல வெச்சு லைட் மட்டும் போட்டு விட்டு ராத்திரி முழுக்க விட்டா மாவு நல்லா பொங்கி இட்லியும் பொங்கும்னு நல்ல வார்த்தை சொன்னாங்க

அதானே பாத்தேன்... என்மேல தப்பில்ல... எல்லாம் இந்த ஊரு weather பண்ற சதின்னு புரிஞ்சது

அந்த விசயம் புரிஞ்சதும் அமெரிக்கவ கண்டுபிடிச்சப்ப கொலம்பஸ் பட்ட சந்தோசத விட ஒரு படி மேல சந்தோசப்பட்டேன். அந்த தங்கமணிய மனசார வாழ்த்தினேன்

கடேசியா பகவான் கண்ண தெறந்துட்டார்னு ஆனந்த கண்ணீர் எல்லாம் விட்டேன்

சனிக்கிழமை காத்தால இடி விழுந்தாலும் பத்து மணிக்கி முன்னாடி எழுந்திரிக்காத நான் (அப்பாடா இன்னிக்கி தான் உண்மை பேசி இருக்கா - ரங்க்ஸ்) அன்னைக்கி ஆறு டு ஏழரை எமகண்டம் முடிஞ்சதும் எந்திரிச்சு இட்லிக்கி ஊற வெச்சேன்

எல்லா சாமியையும் வேண்டிட்டு அரைச்சேன். சூடம் கொளுத்தி தேங்காய் உடைக்காதது தான் கொறை

அந்த தங்கமணி சொன்னாப்ல ஓவன்ல வெச்சு லைட் மட்டும் போட்டு விட்டு வெச்சுட்டு ரெம்ப எதிர்பார்ப்போட தூங்க போனேன். கனவுல எல்லாம் கூட குஷ்பு இட்லி தான் வந்தது.

அதையும் சுபசகுனமா எடுத்துட்டு காலைல எப்பவும் ரங்கமணி முகத்துல முழிக்கற செண்டிமெண்ட் கூட தியாகம் பண்ணிட்டு (அது மேட்டர் என்னனா, அன்னிக்கி எதாச்சும் மோசமா நடந்தா "உங்க மூஞ்சில தான் முழிச்சேன்" னு பழிய போடலாம் பாருங்க. அதுக்கு தான் - ரங்க்ஸ்) போய் ஓவன்ஐ ஓபன் பண்ணி பாத்தா.....

கண்ணுல தண்ணி இல்லைங்க ரத்தமே வந்தது... பின்ன ஓவரா பொங்கி எல்லா மாவும் ஓவன் பூரா மாவு அபிஷேகம் ஆகி இருந்தது. என் மனசு என்ன பாடுபட்டு இருக்கும்னு யோசனை செஞ்சு பாருங்க சக பதிவர்களே

அப்புறம் என்ன, மாவுக்கு மாவும் போச்சு... ஓவன் கிளீன் பண்ற வேலை வேற (அதை நான் தான் செஞ்சதா ஞாபகம் - ரங்க்ஸ்)

ரெம்ப நேரம் வெச்சதால ரெம்ப ஹீட் ஆகி அப்படி ஆய்டுச்சு போல

ஆனா இன்னைக்கி வரைக்கும் இட்லி எனக்கு சிம்ம சொப்பனம்தான்

சில சமயம் அரைச்சதும் அடுத்த நாள் நல்லா வரும். அப்புறம் பழையபடி பணியாரம் தான்

நான் மட்டும் இல்லைங்க இங்க பெரும்பாலான தங்கமணிகள் சொல்றது இது தான் "யாராச்சும் guest வந்தா இட்லி மட்டும் செய்யவே மாட்டோம்"னு

அதே போல இந்த potluck dinner சொல்றப்ப இட்லினா எல்லாரும் எஸ்கேப் ஆய்டுவோம்

இதுல ரங்கமணி அப்ப அப்ப வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி அப்பாவி மாதிரி மொகத்த வெச்சுட்டு சில சந்தேகம் எல்லாம் கேப்பாரு... அதுல ஒரு சாம்பிள்....

"ஏன்பா.... எங்க அம்மா இட்லி செஞ்சா... சின்னதா ஊசி மொனைல குத்தினாப்ல அங்க அங்க airholes மாதிரி இருக்குமே... நீ செய்யற இட்லில ஏன் அப்படி இல்ல?"

"ம்.... அந்த airholes விட பெரிசா இட்லி இருக்கில்லையா... சந்தோசப்பட்டுகோங்க"னு சொல்லிடுவேன்

அப்புறம் போன வருஷம் எங்க மாமியார் இங்க வந்தப்ப அதே டவுட் கேக்கவும் "அது நம்ம ஊரு இட்லி தட்டுல துணி போட்டு ஊத்துற இட்லி தான் அப்படி வரும். cooker இட்லி அப்படி வராது"னு சொன்னாங்க

பாத்தீங்களா... பாத்தீங்களா... இந்த மேட்டர் எல்லாம் தெரியாமையே நம்மள மாதிரி அப்பாவி தங்கமணிக மேல இந்த ரங்க்ஸ்க எல்லாம் பழி போடறாங்க

எங்க அம்மா சமையல் மாதிரி இல்லைன்னு குத்தம் சொல்றாங்க

நாமளும் நம்ம கிட்ட தான் ஏதோ பிரச்சனைன்னு டென்ஷன் ஆய்டறோம்

இதனால சக தங்கமணிகளுக்கு நான் சொல்ல வர்றது என்னனா... fault நம்ம மேல இல்ல சிஸ்டத்துல தான்.. என்ன நான் சொல்றது?

இப்பவும் சொல்றேன்... எனக்கு இட்லி சரியா வராததுக்கு இந்த ஊரு தான் காரணம் நான் இல்ல... நான் இல்ல... நான் இல்ல.... (இப்ப எதாச்சும் பேசினா அந்த airholes சைஸ் இட்லி கூட கெடைக்காது - ரங்க்ஸ்)

சரிங்க அப்புறம் பாக்கலாம்

இன்னிக்கி சாயங்காலம் டிபன் கூட இட்லி தான்.... வாங்க சாப்பிடலாம்....

(விடு ஜூட்......... - ரங்க்ஸ்)

146 பேரு சொல்லி இருக்காக:

LK said...

நான்தான் முதல்ல

தமிழ் உதயம் said...

இட்லி உங்க கையில் சிக்கிட்டு (உங்க ரங்க்ஸ் மாதிரி) படாதபாடு படும் போல் இருக்கு.

padma said...

இட்லி புராணம் நல்லா இருக்கு .ரங்கமணி பாவம்ங்க நிஜமாவே

தக்குடுபாண்டி said...

//இட்லிக்காக நான் பாடு பட்ட சரித்திரத்த சொல்றேன்// அதுக்கு எல்லாம் தக்குடு மாதிரி ஒரு கைமணம் வேனும் அக்கா!!

LK said...

தங்க்ஸ்
அப்ப துபைல இட்லி சரியாய் வந்துச்சா?
பாவம் ரங்கஸ். இதுக்காக தான் நான் அப்பாவி ரங்கமணிகள் சங்கம் ஆரம்பிக்லாம்னு இருக்கு. அதுக்கு உங்க ரங்கச தலைவர போடலாம்னு ஐடியா ... எப்படி வசதி ??

அமைதிச்சாரல் said...

இட்லி புராணமும், ரங்க்ஸின் புலம்பல் புராணமும் கலக்கல்.

ஆனா, நீங்க சொன்னதிலேயும் மேட்டர் இருக்குது. இங்கேயும், குளிர் நேரத்துல மாவு பொங்காது.முதல் நாள் காலையில மாவு அரைச்சு வெச்சாத்தான் மறு நாள் ஏதோ சுமாரா வெளங்கும்.இங்கே கிடைக்கிற அரிசியும் நல்லா இருக்காது. சவுத் இண்டியன் கடைகளை தேடிப்போய் இட்லி அரிசின்னு கேட்டு வாங்கிட்டு வருவோம்.

அப்றம், இட்லி குக்கருக்கும், இட்லிப்பானைக்குமே ருசி வித்தியாசப்படும். எல்லாமே அனுபவ உண்மைங்க. நானும், இங்கே வந்தபுதிதில் டெரராகியிருக்கேன்.

25-க்கு வாழ்த்துக்கள். கேக்கெல்லாம் வேணாம், இட்லியே வெட்டிக்கொண்டாடிடலாம்.

தக்குடுபாண்டி said...

//அப்பவும் இட்லி ஒரு பணியாரம் சைஸ்க்கு தான் வந்தது//

பணியாரம்! பணியாரம்! பணியாரம்! விட்டுக்கோ!!!...:)

தக்குடுபாண்டி said...

few years back,மதுரைல ஒரு சமையல் மாமா பீரங்கி குண்டு மாதிரி இட்லி வார்த்துட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமா, இட்லி எப்பிடி இருக்கு!னு என்கிட்ட வந்து பெருமையா கேட்டார், ஒரு வருஷம் தள்ளி போச்சு மாமா!னு சொன்னேன்,அவருக்கு ஒன்னும் புரியலை, நான் தொடர்ந்தேன், போன வருஷம் மட்டும் இதை ஒரு 400 வார்த்து கார்கில் அனுப்பி வச்சுருந்தா, 2 நாள்ல பாகிஸ்தான்காரன் தோத்து போய் ஓடியிருப்பான்!னு சொன்னேன். கல்யாணம் முடியர வரைக்கும் அந்த சமையல் மாமா நான் இருந்த பக்கமே வரவே இல்லை...;)

Anonymous said...

Use Rava instead of Rice to make Idli. =))1:1.5 Udar-dal:steamed Rawa.

Anamika.Duwaragan

அநன்யா மஹாதேவன் said...

//போற எடத்துல எல்லாம் எல்லார் கிட்டயும் இட்லி எப்படி செய்வீங்க எப்படி செய்வீங்கன்னு கேட்டு கேட்டு ஒரு கட்டத்துல நான் போனாலே "இட்லி வந்துங்க..." அப்படின்னு எல்லாரும் சொல்ற மாதிரி ஆய்டுச்சு என் நிலைமை//
absolutely hilarious!!! superb AT! கலக்கிட்டீங்க போங்க. ரங்ஸ் கமெண்ட்ஸ் எல்லாமே கனஜோர் ரகம்!
இட்லி முதல் இரண்டு ஆண்டுகள் எனக்கும் சிம்ம சொப்பனம் தான். அப்புறம் வெட் கிரைண்டர் வாங்கினேன். கல்யாணம் ஆன புதுசுல இட்லி அரிசி வாங்கி குக்கர் வெச்ச பிருஹஸ்பதி நான்! எது சமையலுக்கு எது இட்லிக்குன்னு கூட எனக்கு தெரியாது. அவ்ளோ மக்குத்தனம்!(உடனே தக்குடு எல்.கே எல்லாம் ஓ.... டி வந்து இதை கோட் பண்ணி கமெண்டுவாங்க ) Ferment ஆகலைன்னா கொஞ்சம் அதிகம் டைம் விடுறது நல்லது தான். ஆனாலும் ஒரு சின்ன டிப். நான் இங்கே மூடி போட்ட டப்பாவில் டைட்டா மூடி தான் வைக்கறது. நல்லா புளிச்சு இட்லி எல்லாம் பஞ்சு பஞ்சா.. ஆஹா.. இட்லி சாப்பிடலாம் வாங்களேன்.

பை தி பை, 25வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மா.. ரொம்ப காஷுவலா நகைச்சுவை வருது உங்களுக்கு. சூப்பர் போங்க!

sriram said...

இட்டிலி அழகு தெரிஞ்சி போச்சு, சுடுதண்ணியாவது நல்லா வைப்பீங்களா??

இவ்வளவு செஞ்சீங்களே, சரவண பவனுக்குப் போயி நாலு இட்டிலி பார்சல் வாங்கி வந்திருக்கலாம் இதுக்கு..

நான் கனடா வரும் போது வெளியில சாப்பிட்டுட்டு உங்களை பாத்துட்டு மட்டும் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் சில்வர் ஜூப்ளி பதிவிற்கு. இட்லி ஃபோட்டோ சூப்பரா இருக்குங்க.

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
நான்தான் முதல்ல//

வாங்க LK . எப்பவும் மொதல் கமெண்ட் போட்டுடறீங்க. ரெம்ப சந்தோஷம். வாங்க, என்ன சாப்பிடறீங்க? இட்லி ஒகேவா? சரி சரி ஓடாதீங்க...

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
இட்லி உங்க கையில் சிக்கிட்டு (உங்க ரங்க்ஸ் மாதிரி) படாதபாடு படும் போல் இருக்கு//

நீங்களுமா தமிழ் உதயம்... அப்படி எல்லாம் இல்லைங்க... நான் பேருக்கேத்த மாதிரி அப்பாவி தான்

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
இட்லி புராணம் நல்லா இருக்கு .ரங்கமணி பாவம்ங்க நிஜமாவே//

You too பத்மா... நாமே எல்லாம் ஒரே இனம் (அப்பவிகன்னு சொல்ல வந்தேன்). நீங்க தானே எனக்கு சப்போர்ட் செய்யணும். யாரு பாவம்னு நேர்ல பாத்தா புரிஞ்சுக்குவீங்க

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
தங்க்ஸ் அப்ப துபைல இட்லி சரியாய் வந்துச்சா?
பாவம் ரங்கஸ். இதுக்காக தான் நான் அப்பாவி ரங்கமணிகள் சங்கம் ஆரம்பிக்லாம்னு இருக்கு. அதுக்கு உங்க ரங்கச தலைவர போடலாம்னு ஐடியா ... எப்படி வசதி ??//

துபாய்ல ஒரு மாதிரி இட்லி செட் ஆச்சு... அதுக்குள்ள நாடு கடத்திட்டாரு ரங்க்ஸ்

என்னது அப்பாவி ரங்கமணிகள் சங்கமா... கிழிஞ்சது கிருஷ்ணகிரி. அதுக்கு ரங்க்ஸ் தலைவரா? ஆளை விடுங்க சாமி. ஏற்கனவே அவருக்கு பஞ்ச் பரமசிவம் ஒரு பேரு இங்க friends கிட்ட... இதுக்கு மேல தாங்காதுங்க

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//இட்லிக்காக நான் பாடு பட்ட சரித்திரத்த சொல்றேன்// அதுக்கு எல்லாம் தக்குடு மாதிரி ஒரு கைமணம் வேனும் அக்கா!!//

அப்படியா... கை மனதுக்கு என்ன சோப்பு use பண்றீங்க பிரதர்? (வேண்டாம்... அப்புறம் அந்த வைலெட் சுடிதார் மேட்டர் எல்லார் கிட்டயும் சொல்லிடுவேன்)

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - நன்றிங்க. நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே ரெம்ப சந்தோஷம்ங்க. அதே தான் சிஸ்டம்ல தான் fault நம்ம கிட்ட இல்ல. வாழ்த்துக்கு நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//அப்பவும் இட்லி ஒரு பணியாரம் சைஸ்க்கு தான் வந்தது//
பணியாரம்! பணியாரம்! பணியாரம்! விட்டுக்கோ!!!...:)//

கைவசம் ஒரு தொழில் இருக்கு. வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

//குடுபாண்டி சொன்னது…
few years back,மதுரைல ஒரு சமையல் மாமா பீரங்கி குண்டு மாதிரி இட்லி வார்த்துட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமா, இட்லி எப்பிடி இருக்கு!னு என்கிட்ட வந்து பெருமையா கேட்டார், ஒரு வருஷம் தள்ளி போச்சு மாமா!னு சொன்னேன்,அவருக்கு ஒன்னும் புரியலை, நான் தொடர்ந்தேன், போன வருஷம் மட்டும் இதை ஒரு 400 வார்த்து கார்கில் அனுப்பி வச்சுருந்தா, 2 நாள்ல பாகிஸ்தான்காரன் தோத்து போய் ஓடியிருப்பான்!னு சொன்னேன். கல்யாணம் முடியர வரைக்கும் அந்த சமையல் மாமா நான் இருந்த பக்கமே வரவே இல்லை...;)//

ச்சே... சமையல்காரரே அப்படினா... நான் அப்ப மோசமில்லனு சொல்ல வரீங்களா... ரெம்ப நன்றிங்க பிரதர்

அப்பாவி தங்கமணி said...

//பெயரில்லா சொன்னது…
Use Rava instead of Rice to make Idli. =))1:1.5 Udar-dal:steamed Rawa.
Anamika.Duwaragan//

தேங்க்ஸ் அனாமிகா உங்க டிப்ஸ்க்கு... பேரு என்ன ஆச்சு? பெயரில்லா ஆய்டீங்க (ofcourse அனாமிகாங்கற பேருக்கு அர்த்தம் அதுதான்னு எங்கயோ படிச்சு இருக்கேன்)

அப்பாவி தங்கமணி said...

@ அனன்யா ௦- தேங்க்ஸ் அனன்யா. நானும் ஒரு தரம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி அரிசி மாத்தி வெச்சு இருக்கேன்.. you have company, dont worry. நீங்க சொன்னாப்ல ட்ரை பண்ணி பாக்றேன். அரைச்சு முதல் தரம் இட்லி வாக்கரப்ப ஒகே, fridge ல வெச்சு மறுபடியும் பண்ணினா கொடுமை தான் போங்கோ. வாழ்த்துக்கு நன்றி அனன்யா

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
இட்டிலி அழகு தெரிஞ்சி போச்சு, சுடுதண்ணியாவது நல்லா வைப்பீங்களா??
இவ்வளவு செஞ்சீங்களே, சரவண பவனுக்குப் போயி நாலு இட்டிலி பார்சல் வாங்கி வந்திருக்கலாம் இதுக்கு..
நான் கனடா வரும் போது வெளியில சாப்பிட்டுட்டு உங்களை பாத்துட்டு மட்டும் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

சுடு தண்ணி நல்லாவே வெப்பேன் ஸ்ரீராம். சரவண பவன் அஞ்சு நிமிச டிரைவ் தான் அதை செஞ்சு இருக்கலாம் தான்... என்ன இருந்தாலும் வீட்டு சமையல் மாதிரி இருக்காதில்ல?

பயப்படாதீங்க... தைரியமா வீட்டுக்கு வாங்க. இட்லி மட்டும் தான் எனக்கு தகராறு. மத்தது எல்லாம் நல்லாவே செய்வேன் (நம்பமாட்டீங்களே... நல்லது சொன்னா எப்ப தான் இந்த உலகம் நம்பி இருக்கு)

அப்பாவி தங்கமணி said...

//செ.சரவணக்குமார் சொன்னது…
வாழ்த்துக்கள் சில்வர் ஜூப்ளி பதிவிற்கு. இட்லி ஃபோட்டோ சூப்பரா இருக்குங்க.//

@ சரவணகுமார் - ரெம்ப நன்றிங்க. போட்டோ உபயம் கூகிள் ஆண்டவர் தான் எப்பவும் போல

Krishnaveni said...

It looks like "my experiments with idly". Initially I struggled a lot for this idly. Now i have a formula which is 80% correct (i think!!!!). You have written very well...interesting...i laughed a lot while reading...superb. Initially we used mixie to grind idly maavu (with basmati rice) and it took 4 days to ferment and we noticed yellow discolouration. after that we stopped making idly. 4 years after we had a trip to india and bought a wet grinder. Now using idly rice and making good idlys. weather plays an important role in making idly. romba arumayaana post.

ஹேமா said...

இட்லி நல்லாத்தான் இருக்கு தங்கமணி.ஆனாலும் சாப்பாடு சாப்பாடுன்னு பதிவு போட்டே வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க.(ஸ்டார்ஜன் பிரியாணி பதிவும் பார்த்தேன்.அதான் புலம்புறேன்.)

sriram said...

அப்பாவி said
//என்ன இருந்தாலும் வீட்டு சமையல் மாதிரி இருக்காதில்ல? //
ஆமா உங்க வீட்டு இட்லி மாதிரி உலகத்தில எங்கயுமே இருக்காது... :)

அநன்யா Aunty Said

//நல்லா புளிச்சு இட்லி எல்லாம் பஞ்சு பஞ்சா.. ஆஹா.. இட்லி சாப்பிடலாம் வாங்களேன். //
உங்க காமடி சென்ஸுக்கு ஒரு அளவே இல்லயா???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஸ்ரீராம். said...

//"இந்த பதிவ எழுதி முடிச்சுட்டு போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி ரங்க்ஸ் கிட்ட படிச்சு பாருங்கன்னு சொன்னேன் (அவங்கள கேக்காம நான் எதுவும் செய்யறது இல்ல...)"//

நம்பிட்டோம்..!

//"ஆனா நெஜமா அன்னைக்கி கண்ல தண்ணி வந்தது"//

இட்லியை சூடா திறந்துட்டு குனிஞ்சு அதைப் பார்த்தா பின்ன வராதா..?

"//ஆனா இன்னைக்கி வரைக்கும் இட்லி எனக்கு சிம்ம சொப்பனம்தான்"//

ஹா...ஹா..

ஸ்ரீராம். said...

ஆனால் நீங்கள் பரவாய் இல்லை...சில வீடுகளில் "இந்தாங்க இட்லி கொஞ்சம் சரியாய் வரவில்லை..குடிச்சுடுங்க " என்று ஒரு டம்ப்ளரில் ஊற்றித் தந்து விடுவார்கள்..!

உங்கள் வீட்டுல செஞ்ச இட்லி படமா அது..?

இருபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

கால் சதத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனா!

அனுபவப் பகிர்வு அருமை.

இட்லி இல்லாத நாள் இல்லை எங்களுக்கு:)! பெங்களூரிலும் குளிர் காலத்தில் சரியா பொங்காம காலை வாரும். குறிப்பிட்ட வகை அரிசிக்குதான் சரியா வருது. எப்படி ஆனாலும் விடறதில்லை:))!

complan surya said...

HM

ORU 12 IDLE PARCEL PANNIDUNGA..
KONJAM KETI CHATINUM...

APPRUM

VALAKAM POLA KALAKKALANA PADIVU.

IDLE NALLA ERUNTHAL MELUM ORDER VARUM ENPATHI MUNKOTIYEY THIRIVITU KOLKIROM.

v.v.s
complan surya

Ananthi said...

ஹிஹி.. ஒய் ப்ளட் சேம் ப்ளட்....
இப்பதான் ஓரளவு நல்லா வருதுங்க.. :)

தக்குடுபாண்டி said...

//ரெம்ப நன்றிங்க. போட்டோ உபயம் கூகிள் ஆண்டவர் தான் எப்பவும் போல// akka, neenga sollithaan athu yengalukku theriyanumaa???....:))) LOL

அநன்யா மஹாதேவன் said...

//ஆனால் நீங்கள் பரவாய் இல்லை...சில வீடுகளில் "இந்தாங்க இட்லி கொஞ்சம் சரியாய் வரவில்லை..குடிச்சுடுங்க " என்று ஒரு டம்ப்ளரில் ஊற்றித் தந்து விடுவார்கள்..!// Too Much I say!!!!!!!!!!!!!! Hilarious!

Guna said...

Super nnga.. Congrats for QUARTER :-) century.

புதுகைத் தென்றல் said...

:))) இது பதிவுக்கு

வாழ்த்துக்கள் இது கால்சதம் அடிச்சதுக்கு

சுசி said...

முதல்ல வாழ்த்துக்கள்.

அவ்வ்வ்வ்..
அப்டியே என் பிரச்சனைய எழுதிட்டிங்களா..
ஆவ்வ்வ்வ்..

மீ டூ..
//அது என்னமோ தெரியலைங்க, எனக்கும் இந்த இட்லிக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்.//

ரோகிணிசிவா said...

mam, asathal ,
unga muyartchi ellam naan saudi la try panni appuram thappu nammba mela illa ,weather , appuram rice variety
appuram antha cooking gas, ethu ellam than thappunu kandu pidichu vechuirukaen ,
i understand thappu eppavum thnagamani kita iruka mudiyaathu ,
we are always rite,
appuram unga arisi paruppu saapdu padichen ,aadi poten ,neenga senjathuku illa, avar namba oora, namba paramparaiya palichathuku,
coimbathoree kaaranga kita arsiparuppu saapdu pathi kindal adikalamma????
rice poteengalae athu appreciable.

அஹமது இர்ஷாத் said...

சுவராஸ்யமான பதிவுங்கோ....

(அது சரி என் பாடு உங்களுக்கு சுவராஸ்யமா இருக்குதோ -ரங்க்ஸ்)

LK said...

/coimbathoree kaaranga kita arsiparuppu saapdu pathi kindal adikalamma????//

aga neenga ellaum coimbatore ammanigala. appa intha blog pakkam enga veetu thangamaniya vara vidakoodathu

SathyaSridhar said...

Thangam,,vazhthukkal unga silver jubilee pathivukku...Idly padathla super ah irukku nalla google ah serach panni kashtapattu poetrukeenga,,,Kavalai padatheenga winter n cold place la ildy maavu pulikka rombha kashtam,,unga kitta oven 5 mts low la on panittu aprama off panidunga apram idly maavu paatharatha overnight oven ulla vechudunga kandippa nalla pulikkum...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமைங்க.. அதும் அந்த கொப்பரை இட்லிக்கும் குக்கர் இட்லிக்கும் வித்தியாசமெல்லாம் சொன்னீங்க் அபாருங்க.. உண்மையோ உண்மை. நீங்களும் என்னப்போலவே ஒரு அப்பாவி தான்.. நானும் தில்லியில் இருப்பதால் தான் குளிருல இட்லி வரலைன்னு கொஞ்ச நாள் ஒப்பேத்துவேன். வெயில்காலத்துல அரைச்சுவச்ச கொஞ்ச நேரத்துலயே பொங்கி வழிஞ்சு துடைக்கற வேலை வந்துடும்.

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni
//weather plays an important role in making idly//

ஆயிரத்துல ஒரு வார்த்தை. நம்ம கஷ்டமா நமக்கு புரியுது. இது புரியாம இந்த ரங்க்ஸ்க எல்லாம் இப்படி கிண்டல் கமெண்ட் போடறாங்கன்னு பாருங்க. செஞ்சு பாத்தா தானே கஷ்டம் புரியும்... சும்மா டயலாக் விட்டுகிட்டு.Thanks for your visit and wishes krishnaveni

அப்பாவி தங்கமணி said...

//ஹேமா சொன்னது…
இட்லி நல்லாத்தான் இருக்கு தங்கமணி.ஆனாலும் சாப்பாடு சாப்பாடுன்னு பதிவு போட்டே வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க.(ஸ்டார்ஜன் பிரியாணி பதிவும் பார்த்தேன்.அதான் புலம்புறேன்.)//


இந்த ஒரு ஜான் வைத்துக்கு தானேங்க ஹேமா எல்லாமும்... ஆனாலும் ஸ்டார்ஜன் ரெம்பவே டென்ஷன் பண்ணி விட்டுட்டாரு போல இருக்கு. போய் பாக்கறேன் என்ன சொல்லி இருக்காருன்னு. நோ டென்ஷன் சிஸ்டர். தேங்க்ஸ் ஹேமா

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
ஆமா உங்க வீட்டு இட்லி மாதிரி உலகத்தில எங்கயுமே இருக்காது... :)//

தேங்க்ஸ்ங்க நாட்டாமை... (கனடா வர்றப்ப உங்களுக்கு confirmed ஆ மூணு நேரமும் இட்லி தான்)

//உங்க காமடி சென்ஸுக்கு ஒரு அளவே இல்லயா???//

இதை நான் தங்கமணிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் (எங்கள் ப்ளாக்)
நம்பித்தான் ஆகணும்... ஏன்னா நான் உண்மைய மட்டும் தான் பேசுவேன்

//இட்லியை சூடா திறந்துட்டு குனிஞ்சு அதைப் பார்த்தா பின்ன வராதா..?//

அடப்பாவமே நம்ம பீலிங்க்ஸ்ஐ கூட காமெடி ஆக்கிடராங்களே

//ஹா...ஹா..//

சிரிச்சதுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம்.
சொந்த அனுபவம் போல இருக்கு இட்லி டம்ளர்ல குடிச்சு

//உங்கள் வீட்டுல செஞ்ச இட்லி படமா அது..?//

ஏனுங்க சார் நீங்களும் வெந்த புண்ணுல வேலை பாச்சுறீங்க... இப்படி இட்லி வந்தா நான் ப்ளாக் எழுதறத விட்டுட்டு இட்லி கடை வெச்சுருப்பனே

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. நானும் எப்படி ஆனாலும் விடறதில்லைனு போராடிகிட்டு தான் இருக்கேன். மீண்டும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ காம்ப்ளான் சூர்யா
பன்னண்டு இட்லி போதுமா பிரதர். ஏன் diet ஆ?
நன்றி வாழ்த்துக்கு (ஆர்டர் மேலும் வருமா... உங்களுக்கு நெஜமாவே பெரிய மனசு தான் பிரதர்

அப்பாவி தங்கமணி said...

@ ஆனந்தி - என்னங்க ஆனந்தி பண்றது. ஆண்டவன் நல்லவங்கள எல்லாம் நல்லா சோதிக்கறார். எனக்கும் சீக்கரம் நல்லா இட்லி வரணும்னு வேண்டிகோங்க. தேங்க்ஸ் சிஸ்டர்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
//ரெம்ப நன்றிங்க. போட்டோ உபயம் கூகிள் ஆண்டவர் தான் எப்பவும் போல// akka, neenga sollithaan athu yengalukku theriyanumaa???....:))) LOL //

அடப்பாவி... கஷ்டப்பட்டு தேடி போட்டதுக்கு பாராட்ட வேண்டாமோ... விரைவில் நானே அழகா செஞ்சு போட்டோ எடுத்து போட்டு காட்டுகிறேன் என சபதம் எடுத்துக்கறேன்

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
//ஆனால் நீங்கள் பரவாய் இல்லை...சில வீடுகளில் "இந்தாங்க இட்லி கொஞ்சம் சரியாய் வரவில்லை..குடிச்சுடுங்க " என்று ஒரு டம்ப்ளரில் ஊற்றித் தந்து விடுவார்கள்..!// Too Much I say!!!!!!!!!!!!!! Hilarious!//

ஆமா அனன்யா.... நல்லா இருந்தா எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்ஐ எல்லாரும் சேந்து இப்படி செஞ்சுட்டாங்க

அப்பாவி தங்கமணி said...

//Guna சொன்னது…
Super nnga.. Congrats for QUARTER :-) century.//

ரெம்ப நன்றிங்க குணா

அப்பாவி தங்கமணி said...

//புதுகைத் தென்றல் சொன்னது…
:))) இது பதிவுக்கு
வாழ்த்துக்கள் இது கால்சதம் அடிச்சதுக்கு//

ரெம்ப நன்றிங்க புதுகை... பயணம் எல்லாம் எப்படி இருக்கு? இப்ப தான் பதிவு போட்டு இருக்கீங்க போல... பாத்துட்டு சொல்றேன்

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - வாங்க சுசி... நம்ம எல்லார் பிரச்சனையும் ஒண்ணு தான் பாத்தீங்களா? நன்றி படிச்சதுக்கும் கமெண்ட்டினதுக்கும்

அப்பாவி தங்கமணி said...

@ ரோகிணிசிவா - சரியா சொன்னிங்க ரோகிணி. //we are always rite // . ஆமாங்க அரிசிபருப்பு கதை அப்படி தான் ஆய்டுச்சு... படிச்சதுக்கு தேங்க்ஸ். அதானே... கோயம்புத்தூர்னா சும்மாவா? அது..... நம்மளுக்கும் கோயம்புத்தூர்ங்களா?

அப்பாவி தங்கமணி said...

//அஹமது இர்ஷாத் சொன்னது…
சுவராஸ்யமான பதிவுங்கோ....
(அது சரி என் பாடு உங்களுக்கு சுவராஸ்யமா இருக்குதோ -ரங்க்ஸ்)//

ஆஹா... நீங்க என்கட்சியா... ரங்கமணி கட்சியானே புரியலையே? நன்றிங்க அஹமத் வருகைக்கு

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
aga neenga ellaum coimbatore ammanigala. appa intha blog pakkam enga veetu thangamaniya vara//

கோயம்புத்தூர்காரங்கன்னா அத்தனை பயமா? இருக்கட்டும் இருக்கட்டும்... அது...

அப்பாவி தங்கமணி said...

@ சத்யாஸ்ரீதர் - தேங்க்ஸ் சத்யா. விரைவில் நான் செய்யற இட்லியே இப்படி போட்டோ எடுத்து போடறேன். நீங்க சொன்ன டிப்ஸ் ட்ரை பண்ணி பாக்றேன் சத்யா. ரெம்ப தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி - நன்றிங்க முத்துலட்சுமி. என்னப்போலவே ஒரு அப்பாவினு நீங்க சொன்ன ஒரு வார்த்தைலையே நான் surrender . நன்றிங்க வருகைக்கு

Priya said...

Nice one. I also experienced 50% of the troubles u faced. I started reading ur blog past two months. All the best for ur future works.

அப்பாவி தங்கமணி said...

Thanks Priya. I'm kind of glad (weird) that we all face troubles with this "idli". Thanks for visiting my blog again

Priya said...

சில்வர் ஜூப்ளி பதிவிற்கு... வாழ்த்துக்கள்!

ஆஹா இட்லிக்கு இவ்வளவு பெரிய ஃப்ளாஷ் பேக்கா:)

Porkodi (பொற்கொடி) said...

:)))))))) aapicela ukkandhu oru kekkepikkenu sirippu!

ஸ்ரீராம். said...

இதை முதலில் சொல்ல மறந்து விட்டேன்...எங்கள் ப்ளாக்கில் ஜனவரியில் சமையல் வாரம் கொண்டாடியபோது இட்லி பற்றி வந்த இடுகையின் சுட்டி இங்கே...
http://engalblog.blogspot.com/2010/01/blog-post_19.html

http://engalblog.blogspot.com/2010/01/blog-post_20.html

அப்பாவி தங்கமணி said...

ஸ்ரீராம் - உங்கள் ப்ளாக்ல பழைய இட்லி பதிவு படிச்சேன்.... ஏன் இந்த கொலைவெறி? இப்படி ஒரு இட்லி recipe நான் வாழ்க்கைல கேட்டதில்ல (இனியும் வேண்டாம்). பாட்டில் இட்லியா? கொடுமைடா சாமி. அதுவும் முழுசு முழுசா பாதாம் பருப்பு வேற... எஸ்கேப்.... (சூப்பர் hilarious ஸ்ரீராம்)

அப்பாவி தங்கமணி said...

வாங்க ப்ரியா...வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாங்க பெரிய சோகமான flashback தான் ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

பொற்கொடி - என்னதிது... ஒரு வரி கமெண்ட்? எப்போதிருந்து? சிரிச்சது சரி... உங்க இட்லி எப்படி? அப்பளமா பணியாரமா?

vanathy said...

அப்பாவி தங்கமணி, கனடாவிலை பெரும்பாலும் இட்லி பல்லை இளிச்சுடும். ஏதாவது சீரியல், பிரெட் க்கு மாறிடுங்கோகா.....

சுந்தரா said...

பாவம், இட்லி பொழைச்சுப்போகட்டும் விட்டுடுங்களேன் :)

ஹுஸைனம்மா said...

பரவால்லயே, இட்லி மட்டுந்தான் பிரச்னை போல உங்களுக்கு!! (ஹி..ஹி..)

அதான் எப்படி (இட்லி மாவை) பொங்க வைக்கீறதுன்னு தெரிஞ்சுபோச்சுல்ல, அப்புறம் என்ன பிரச்னை?

(அரிசி, உளுந்தோடு, அரை டீஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊறவச்சு அரைச்சுப் பாருங்க)

அப்பாவி தங்கமணி said...

வானதி - நன்றிங்க வருகைக்கு. சரியா சொன்னிங்க.... ஆனா இந்த cereal bread எல்லாம் எறங்க மாட்டேங்குதே... என்ன செய்ய?

அப்பாவி தங்கமணி said...

சுந்தரா - நன்றிங்க வருகைக்கி. நானா இட்லிய விட மாடேங்கறேன்... அது தான் சரியா வராம என்னை படுத்தி எடுக்குதுங்க சுந்தரா...

LK said...

//பாவம், இட்லி பொழைச்சுப்போகட்டும் விட்டுடுங்களேன் :)//

repeeeeeeeeeaaaaaaaaattttttttttttttt

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
பரவால்லயே, இட்லி மட்டுந்தான் பிரச்னை போல உங்களுக்கு!! (ஹி..ஹி..)//

ஆஹா... நீங்க அப்படி வர்றீங்களா...? கஷ்டம் தான்

பொங்குனது ஓவரா பொங்கிடுச்சே.. அதானே கொடுமை... இப்ப கொஞ்சம் ஒகே தான். வெந்தயமும் போடறது தானுங்க

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
//பாவம், இட்லி பொழைச்சுப்போகட்டும் விட்டுடுங்களேன் :)//
repeeeeeeeeeaaaaaaaaattttttttttttttt///

உப்பு போடாம உப்புமா செஞ்சா LK அவர்களே வருக வருக (ஏங்க அதோட பேர்லயே உப்பு மானு இருக்கே... எப்படி விட்டீங்க.... ஹி ஹி ஹி )

LK said...

பதிவ மறுபடியும் படிங்க. அதை பண்ணதி என் சித்தப்பு .. கூட இருந்தது மட்டுமே நான். நான் அருமைய உப்புமா செய்வேன். செஞ்சு பதிவுல போடறேன்

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
பதிவ மறுபடியும் படிங்க. அதை பண்ணதி என் சித்தப்பு .. கூட இருந்தது மட்டுமே நான். நான் அருமைய உப்புமா செய்வேன். செஞ்சு பதிவுல போடறேன்//

ஐயோ... மறுபடியுமா? ப்ளாக் உலகம் தாங்காதுங்க LK ..... நான் வேணா என்னோட கமெண்ட்ஐ வாபஸ் வாங்கிக்கறேன்

sury said...

இவ்வளவு சிரமப்படுவானேன்.

தூபாயிலே இருக்கிற
சரவண பவனுக்குப்போய்
சூடா எட்டு இட்லி சட்னி சாம்பாரோட‌
சுவையான கொத்துமல்லி தேங்காய் சட்னி பக்கத்துலே
வெங்காய பச்ச மிளகாய் கலந்த ஒரு கொஸ்து
இட்லி மிளகாய்பொடி இதயம் நல்லெண்ணை கலந்து
இத்தனையும் போதாதென்று
இடை இடயே
இரண்டு உளுந்து வடையையும்
நறுக்குனு உள்ளே தள்ளினால்
சுகமோ சுகம்.

பின் குறிப்பு: இட்லி இரண்டு இரண்டாக ஆர்டர் செய்யவும்.

சுப்பு தாத்தா.

அப்பாவி தங்கமணி said...

சுப்பு தாத்தா - முத வாட்டி வந்து இருக்கீங்க... என்ன சாப்பிடறீங்க? ஒரு ரெண்டு இட்லி போடவா? சரி சரி ஓட வேண்டாம்... துபாய்ல இருந்த வரைக்கும் நீங்க சொன்னாப்ல சரவண பவன்ல தான் காலம் போச்சு... இப்ப இந்த பனிகாட்ல (கனடா) வந்து சிக்கிட்டு என்ன செய்ய? இங்கயும் சரவண பவன் இருக்கு, ஆனா அந்த taste எல்லாம் கிடைக்கரதில்லே...அதுக்கு நான் செய்யற இட்லியே மேல்னா பாத்துக்கோங்க...

Malar Gandhi said...

Oh boy, thats an awesome presentation there, its been ages I have seen plaintain leaf speard, the very thought of idly tiffin, brings back all the nostalgic past, picture is breathtaking, love it:):)

Madhuram said...

Kalakareenga AT. Ananya solra madhiri ungalukku nagaichuvai saralama varudhu. Ennoda soga (idli) kadai neenga yaarum edhirpaarkadha vidhamanadhu. Ippa konjam velaiya irukken. Porumaiya vandhu ezudharen.

Adha padichaa LK ve Appavi Thangamanigal sangam aarambichiduvaaru.

அப்பாவி தங்கமணி said...

Thanks for the first visit Malar. Thanks for your comments too. I know plaintain leaf itself nostalgic.

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - வாங்க மதுரம்... நகைச்சுவை சரளமா வருதா... நம்ம லைப்எ காமெடிஆ போய்டுச்சு... அப்புறம் வராம என்ன? ஒகே, பொறுமையா வந்து உங்க சோக கதையும் சொல்லுங்க. LK அப்பாவி தங்கமணிகள் சங்கம் ஆரம்பிப்பாரா? சூரியன் மேக்க தான் உதிக்கும் போங்க!!!

Madhuram said...

நானும் கல்யாணம் ஆன (in US)புதுசில Iட்லி
செயிறதுக்கு ரொம்ப சிரமபட்டேன்

எவ்வளவோ கஷ்டப்பட்டு சரியான
(scientist rangeukku experiment
panni)correct combination and
procedure எல்லாம் கண்டுபிடிச்சு
இட்லியும் supera வந்தது.

எவ்வளவு supera இருக்கும்னா idly
expertaana என்னோட மாமியாரே
"மது நீ இட்லி supera பண்ற" னு
சொல்லுவாங்க.

Naanum perumai peethikaradhukaagave friends vandha idli senju avanga vayitherichala vangippen. Andha vayitherichal dhaan enna nalla pazhi vangidithunu ninaikiren.

Madhuram said...

Tamizh font la type panradhu naan idli panna kashtapattadha vida kashtama irukkuda saami!

Idli kadhaikku pogaradhukku munnadi ippa ennoda purushar pathi konjam sollanum. Avara naan (chellama?!) koopidaradhu eppadi theriyuma? "vinodhamanavane miga vinodhamanavane" nu dhaan. Idha chellamavum eduthakalam, kindalaavum edhuthakalam, adhaan adhoda specialty.

Avvalavu different aana taste manushanukku. Idli kallu madhiri irukkanum, bakshanam ellam moru moru nu irukka koodadhu, vachak vachak nu irukkanum. Idhellam oru sample dhaan.

Madhuram said...

Oru naal naanga ellorum Saravana Bhavan poirundhom. My mother-in-law was there too. Buffet la idli eduthuttu vandhaaru. Naanga edukka pogum bodhu ayiduchu, so we were waiting. Ivaru idliya oru vaai taste pannittu "idhu madhiri oru idliya naan sappitadhe illa, avvalavu super, aaha oho nu ore pughazhchi. Vitta chef ku poi paaraatu vizha ve nadathiyirupparu.

Idli expertaana ennoda mamiyarukkum (please ennaiyum sethukeren) enakkum ore aacharyam. Adheppadi mudiyum. Naamale supera seivome adha vida supera irukka idli nu, engalukku suspense thaangala.

Naana saapatukku and especially idlikku idhu madhiri parandhadhe illa. Wait pannikitte irundhom eppada idli poduvaanganu. Thattula irundha matha edhuvum irangamattengudhu. Ore tension!

Madhuram said...

Oru vazhiya idli vandhadhu, adha cut kooda panna mudiyala avvalavu gettiya irundhadhu. Thakkudhu sonna madhiri dhaan irundhadhu. Taliban theeviravadhiyoda gundu kooda appadi irukkadhu.

Naanum enga mamiyorum veruthu poittom, to the nth degree. Of course adhu parkaradukku kushbu voda cheeks madhiri sema uppala irundhadhu. Adha pathi naan kurai solla matten but kallavida strong iurndhadhu texture. Manushan buffet la irundha matha ellathaiyum vittutu idliya oru kai pathaaru adhuvum adha pugazhndhukitte. Enakku kaadhula irundhu pugaiya varudhu.

Ore kovama irundhalum sari "rowsaanalum rangamani" nu manasa thethikittu marupadiyum idli formula va experiment panna aarambichitten. Ulundha kuraichu, arisiya increase panni, ennennavo panni, adhu kadaisila ennada na nalla sodhappi ippa naan panra idli enakkum pidikkala, rangamanikkum pidikkala. Ippa konja naala idliya naan ban panni vachirukken en veetula.

Ippa sollunga LK, enga madhiri thangamanigala paartha ungalukku paavama illa? Manasaatchiyoda pesanum.

LK said...

அடடா இதுல இருந்து ஒன்னு நல்ல தெரியுது . உங்க யாருக்கும் இட்லி செய்ய தெரியாது. எல்லாரும் எங்க வீட்டுக்கு டியூஷன் வாங்க.. சரியா


@மதுரம்

இதை வச்சிலாம் என்னால அப்பாவி தங்கமணி சங்கம் ஆரம்பிக்க அனுமதி தர முடியாது, வேணும்னா நான் ஆரம்பிக்கப் போற அப்பாவி ரங்கமணி சங்கத்தில ஒரு பதவிய உங்க ரங்கச்க்கு தரேன் சரியா

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - சூப்பர் சூப்பர் சூப்பர்... போட்டு தாக்குங்க...அதே சரவணபவன்ல அதே கொடுமை buffet சாப்பிட்டு நானும் நொந்து போய் இருக்கேன்(But I'm a big fan of Barotta in that particular saravana bhavan, try when you go there next time). உங்க ரங்க்ஸ் நிஜமாவே 'வித்தியாசமானவர்' தான் போங்க. ரங்க்ஸ்னாலே அப்படி தான்கறது வேற விசயம்... thanks for sharing your story

அப்பாவி தங்கமணி said...

//LK கூறியது...
அடடா இதுல இருந்து ஒன்னு நல்ல தெரியுது . உங்க யாருக்கும் இட்லி செய்ய தெரியாது. எல்லாரும் எங்க வீட்டுக்கு டியூஷன் வாங்க.. சரியா//

டியூஷன் உங்க தாங்க்ஸ் கிட்டைனா வரோம்.. இல்லேனா வந்த வழியாவே போறோம்.. ஆளை விடுங்க சாமி....

LK பிரதர் மறுபடியும் சொல்றேன் fault is with the system not us கேட்டேளா.....

Madhuram said...

AT, naanum oven la vachu maavu pongi oven ellam aakiyirukken. Andha experiencekapparam dhaan, ippellam oru periya thatta vachu adhu mela idli maava paathiratha vaikkiradhu. So ponginaalum thattula dhaan vizhum.

Another tip, day fulla oven la irukanum illa. Night neenga padukka poguradhukku munnadi oven light switch on panna podhum. What I do sometimes is, I usually plan to grind for idli when I have the idea of baking also the same day. While the cookies/cake is baking in the oven I grind for the batter. And 30-45 minutes after baking (of course after the oven is switched off only) the oven is still warm. So I place the batter in the oven and that warmth is enough for the batter to ferment well. Or else you can simply preheat the oven at 250-300F for 15 minutes. Then place the batter inside it. By this you need not switch on the oven light throughout the night. Yogurt also sets well in this method.

For kushbu like gundu idlis, it wont come that well in the cooker. The idlis need enough space to rise properly. So you have to prepare the idlis in individual batch (one plate at a time) in a pan. Vaanliyil thanni vittu, oru oru platea steam panni edhutha konjam uppala varum.

Appa idliya pathi ivvalavu pesinadhula enakku idli panra aasai marupadiyum vandhiduchu. Ennoda idli viradhatha mudichikka porennu ninaikiren.

Madhuram said...

LK, enakku nalla idli panna kathukka venam. Adhu enakku vandhudum. Ippa konjam confuse aayirundhaalum (with various experiments) porumaiya munna eppadi pannenu think panna sariya vandhudum.

Kallu madhiri eppadi panradhunu dhaan therinjukkanum. Adhuvum indha rangsukkaga dhaan. Unga veetula idli kallu madhiri irukkunu solreengala? Wait, wait I'll mail your thangamani. Avanga vacation extend pannida poraanga.

Ammu Madhu said...

//அந்த விசயம் புரிஞ்சதும் அமெரிக்கவ கண்டுபிடிச்சப்ப கொலம்பஸ் பட்ட சந்தோசத விட ஒரு படி மேல சந்தோசப்பட்டேன்.//
அட அட...
//ஓவன் பூரா மாவு அபிஷேகம் ஆகி இருந்தது. //
போச்சு போங்க..
//"ஏன்பா.... எங்க அம்மா இட்லி செஞ்சா... சின்னதா ஊசி மொனைல குத்தினாப்ல அங்க அங்க airholes மாதிரி இருக்குமே... நீ செய்யற இட்லில ஏன் அப்படி இல்ல?"

"ம்.... அந்த airholes விட பெரிசா இட்லி இருக்கில்லையா... சந்தோசப்பட்டுகோங்க"னு சொல்லிடுவேன் //

ஹீ..ஹீ ..ஹீ

அப்பாவி தங்கமணி said...

முதல் வருகைக்கி நன்றிங்க அம்மு மது

Porkodi (பொற்கொடி) said...

அ.த, இந்த பதிவு அப்படியே பல கொசுவத்திகளை சுத்தி விட்டுடுச்சா.. சிரிச்சு சிரிச்சு மாளலை..! எது பிடிச்சதுன்னு சொல்லணும்னா வரிக்கு வரி கோட் பண்ணனும்.. சூப்பரோ சூப்பர்.

Porkodi (பொற்கொடி) said...

பதிவு என்னா கலக்கலா இருந்தா..

Porkodi (பொற்கொடி) said...

இப்படி செஞ்சுரி போட்டிருக்கும்?

Porkodi (பொற்கொடி) said...

100 போட்டு புளியோதரையை வாங்கிச் செல்கிறேன். ஏலேய் கோப்ஸு அம்பி, இங்க பாருங்க ரெம்ம்ம்ம்ம்ப வருசத்துக்கு அப்புறம் 100 புளியோதரை!!!! ஓடியாங்கப்பா..

Porkodi (பொற்கொடி) said...

அடக்கடவுளே.. மதுரம், இப்படிப்பட்ட ரவுசு ரங்குவை கேள்விப்பட்டதே இல்லை போங்க!

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - நூறாவது கமெண்ட் கண்ட பொற்கொடிக்கு போடுங்கப்பா ஒரு "ஓ". நன்றி நன்றி நன்றி கொடி. புளியோதரை எப்படி இருந்தது?

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
அடக்கடவுளே.. மதுரம், இப்படிப்பட்ட ரவுசு ரங்குவை கேள்விப்பட்டதே இல்லை போங்க!//

அதே தான் நானும் நெனச்சேன்... பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம் தான்... கஷ்டம் டா சாமி

Madhuram said...

Adaiyen kekkareenga! Naan ippellam aamai vadai, ribbon pakoda ellam bake dhaan panren. Sirukku vadaiyum venum aana ennaiya irukka koodadhu. So only baking these days.

அனாமிகா துவாரகன் said...

உங்க பதிவைப்பாத்திட்டு நான் ஏதாவது சொன்னா, ரங்கஸ்சை சப்போட் பண்ணுறேன் திட்டுவீங்க. அவ்வ்வ்வ்வ்வ்.. அதனாலேயே வேணும்னு டிப்ஸ் கொடுத்திட்டு ஓடிட்டேன். உங்க ஆக்கமும் சரி, பின்னூட்டங்களும் சரி, வரிக்கு வரி சிரிப்பை வரவழைச்சுது. நீங்க எழுதினதில இது தான் பெஸ்ட். ஆனாலும், உங்க ரங்கஸ்சோட பஞ்சுக்கு அப்புறம் தான் இது. ஒரு வாரமா கதை போடல. இருங்க. டி,எச்.எல்.ல அந்திராஸ் அனுப்புறேன்.

அப்பாவி தங்கமணி said...

@ மதுரம் - கஷ்டம் தான் சிஸ்டர்

@ அனாமிகா - திட்டவெல்லாம் மாட்டேன். எல்லாம் சும்மா வம்புக்கு இழுக்கறது தான் சிஸ்டர். டி,எச்.எல்.ல அந்திராஸ் எல்லாம் வேண்டாம் தெய்வமே... சீக்கரம் போட்டுடறேன்

Jaleela said...

ஹா ஹா இங்க இட்லி கத பெரும் கதயா இருக்கே,.

இது ஏன் எல்லோருக்கும் இது போல சொதப்பல்/

25 பதிவு வாழ்த்துக்கள்.

இட்லிய வாழை இலையில் பார்க்க சூப்பரா இருக்கு.

Jaleela said...

ஹா ஹா இங்க இட்லி கத பெரும் கதயா இருக்கே,.

இது ஏன் எல்லோருக்கும் இது போல சொதப்பல்/

25 பதிவு வாழ்த்துக்கள்.

இட்லிய வாழை இலையில் பார்க்க சூப்பரா இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela - ரெம்ப நன்றிங்க ஜலீலா முதல் வருகைக்கும் பாராட்டுக்கும். ஆமாங்க இட்லி கொஞ்சம் வெவகாரமாத்தான் இருக்கு இங்க... நான் சொன்னாப்ல எல்லாத்துக்கும் இந்த ஊரு தான் காரணம் நாங்க இல்ல... ஹா ஹா ஹா

மகி said...

ஹா...ஹா...சூப்பர் காமெடி ஸ்டோரிங்க அப்பாவி தங்கமணி!! நானும் கிட்டத்தட்ட இதே போல ஒண்ணுல்ல,ரெண்டில்ல,மூணு மொக்கை போட்டிருக்கேன்..டைம் கிடைக்கும்போது பாருங்க!
இப்ப ஏதோ சுமாரா இட்லி செஞ்சு பழகிட்டேன். :)

அப்பாவி தங்கமணி said...

ஆமாங்க...காமெடியாதான் போச்சு நம்ம சோக கதை... சுமாரா இட்லி செஞ்சு பழகிட்டேன்னு சாதாரணமா சொல்றீங்க.. அது என்ன அத்தன சாதாரண விசியமா? வானதி நீங்க இட்லி டீச்சர்னு வேற சொன்னாங்க? நானும் போய் பாக்கறேன் உங்க recipe . தேங்க்ஸ்ங்க

Harini Sree said...

appaaaaaaaa da unga pathiva padichu sirichu sirichu naan saapta idli ellaam jeeranamayiduchu! (yenna oru coincidence :P)

Ellaarum unga idli-a pathi uyarva pesaraangale apdi yenna thaan idlinu paakalaamnu vanthen. Inimae thodarnthu varuven idli saapda illa! Intha blog padichu mudicha apram thaan enakke therinchuthu enakkum idli maavu araikka theriyaathunu??? :O yepdiyaachum try panni oru nalla idli maavu ready pannidaren! :)

அப்பாவி தங்கமணி said...

வா ஹரிணி... முதல் வருகைக்கு நன்றி. சிரிச்சு சிரிச்சே இட்லி digest ஆய்டுச்சா... ஹும்... அதுக்காச்சும் என்னோட இட்லி (பதிவு) உபயோகமானா சரி தான். ஓ... உனக்கும் இட்லி மாவு தெரியாதா? Join the club... அதெல்லாம் கண்டுக்காதே... மாப்பிள்ளை பாக்கறப்ப மொதல் கண்டிஷன் இட்லி மாவு அரைக்க தெரிஞ்சு இருக்கணும்னு சொல்லிடு.. மேட்டர் ஓவர்.. (ஹும்... நான் தன் அந்த கண்டிஷன் விட்டுட்டேன்... இப்போ அவஸ்தை படறேன்......ஹி ஹி ஹி)

geethasmbsvm6 said...

காரணம் நம்ம கீதா மேடம் இட்லி பத்தி கருத்து கேட்டதை படிச்சது தான் //

ada???நம்மளை இழுத்திருக்கீங்க இட்லிக்கு?? தெரியாமப் போச்சே, அப்போவே ஒரு வாரு வாரி இருக்கலாமே? ம்ம்ம்ம்ம்ம்??? இன்னிக்குக் காலம்பரக் கூட மல்லிகைப் பூவைப் போன்ற மதுரை மல்லிகைப் பூ இட்லி செய்தேன் தேங்காய்ச் சட்னியோட, முதல்லேயே இதைப் பார்த்திருந்தால் படமும் எடுத்துப் போட்டிருப்பேனே!

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம்ம் குளிர் பிரதேசத்திலே இருந்திருக்கோம், நாங்களும், ஊட்டியில் கூட ந்வம்பர், டிசம்பரில் இட்லிக்கு அரைச்சு இட்லி செய்திருக்கேன், நல்லாத் தான் வரும். proportion மட்டும் காரணம் இல்லை. அரைக்கிறதிலேயும் இருக்கு. மிக்ஸிதான் ஊட்டியிலே இருந்தப்போ, கிரைண்டர் கூடக் கிடையாது. இப்போவும் யு.எஸ்ஸில் என் பொண்ணு மிக்ஸியிலே அரைச்சுத் தான் இட்லி செய்யறா. அமெரிக்கன் லாங்க் கிரெயின் ரைஸ் இரண்டு கப் என்றால் சாப்பாட்டுப் பச்சரிசி இரண்டு கப், ஒன்றரை கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடச் சொல்வா. இட்லியும் சூப்பரா வரும், தோசையும் சூப்பரா வரும்.

geethasmbsvm6 said...

முன்னால் சொன்னாப்போல் முழுக்கப் பச்சரிசி போடறதுக்கு இரண்டு கப் உளுந்து கூடத் தேவைப்படும். நான் அமெரிக்கன் லாங் கிரெயின் அரிசியோட புழுங்கல் அரிசியைச் சேர்த்துப்பேன். அதிலேயும் நல்லா வருது.

முழுக்கப் பச்சரிசி என்றால் அரிசியைக் கொஞ்சம் சூடு வர வறுத்துட்டு, வெந்நீரில் ஊற வைத்துப் பார்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்துக்கவும். கொஞ்சம் மிருதுத் தன்மை வரும்.
ஆனால் என்ன இருந்தாலும் துணி போட்டு இட்லி வார்க்கிறாப்போல் குக்கரில் வராது. அந்தத் தட்டுக்களுக்கு ஏற்றாற்போல் துணிகளைத் தயார் பண்ணிப் போட்டுச் செய்து பாருங்க. ஸ்டீம் வந்ததும் காஸ் அடுப்பு/மின் அடுப்பு எதுவா இருந்தாலும் அணைச்சுட்டு, வெயிட் போடாமல் சற்று நேரம் கழிச்சுத் திறங்க. உடனே எடுத்தால் இட்லி நல்லா வராது.

அப்பாவி தங்கமணி said...

@ கீதா மாமி - அடடே வாராதவங்க வந்து இருக்கீங்க...பேஷ் பேஷ்... என்ன சாப்பிடறீங்க? ஒரு ஈடு இட்லி போடவா... ஹி ஹி ஹி... நோ டென்ஷன் நோ டென்ஷன்

வாவ்....இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா...? ஹும்... நமக்கு (I mean எனக்கு) தெரியாமே போச்சே... நன்றி நன்றி நன்றி... அதுலயும் இந்த ஊருக்கு தகுந்த டிப்ஸ் குடுத்தது கலக்கல்.... தேங்க்ஸ் மாமி...

geethasmbsvm6 said...

அதை ஏன் கேட்கறீங்க ஏடிஎம், உங்க பதிவுக்கு வந்தேனா? அப்புறமா இட்லி தான் இரண்டு நாளா! அதிலும் மதுரை மல்லிகைப் பூ இட்லியாக்கும்! சாப்பிட்டவங்க இட்லியைத் தொடுத்துத் தரச் சொல்லி வாங்கிட்டுப் போனாங்கன்னா பாருங்களேன்!

அப்பாவி தங்கமணி said...

இதெல்லாம் ஞாயமா மாமி? இங்க ஒருத்தி இட்லிக்கு தவிச்சு போய் கெடக்கரப்ப இப்படி வெறுப்பேத்தறீங்களே ஞாயமா இது ஞாயமா? இட்லி -மல்லிக பூ - தொடுத்து.... ஹும்...................(பெருமூச்சு..........)

Gayathri said...

ஆஹா அக்கா.நானும் இதே மாதிரிதான் இட்லி மாவு அரைக்க சொன்ன ஆறு கிலோ மீட்டர் ஓடுவேன்..இப்போ கடைலேந்து ரெடிமேட் இட்லி மாவு வாங்கி இட்லி செய்றேன்..

நீங்க உங்க சோக கதைய கூட சுவாரசியமா நகைச்சுவையா சொல்லிருக்கீங்க சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - same blood...ha ha ha... thanks gayathri

priya.r said...

25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .,௦௦ 100 க்கு எனது ஆசிகள்
புவனா ;சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் கூட வந்து விட்டது.,
நீங்க இட்லியை ஒரு பயத்தோடோ அல்லது எரிச்சலோடோ அணுகாமல்
பாசத்தோடும் பரிவோடும் அணுகினால் உங்களுக்கு புரிந்து கொள்ளும்
தன்மை வந்துவிடும் .(எல்லாம் chemistry workout ஆகணும் தங்கமணி மாவு புளிக்கனும் என்ற
ரசாயன மாற்றத்தை சொன்னேன்பா) .,
அப்புறம் பாருங்க !!
எல்லோரும் தங்கமணி இட்லி சுவையோ சுவை என்று கொண்டாட ஆரம்பித்து
விடுவாங்கபா !
பதிவு ,படம் இரண்டும் அழகு !
அளித்த தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்

அப்பாதுரை said...

tickles.
குரோம்பேட்டை அரசினர் உ.ப தமிழ் ஆசிரியர் துரைசாமி நினைவு வருது. கடவுள்னாலும் பிராமின்னாலும் காண்டு அந்த ஆளுக்கு. "உங்க வீட்டுல நாலு இட்லி செஞ்சாங்கன்னா அதுல ரெண்ட எடுத்து சந்தனம் பூசி பொட்டு வச்சு கும்பிடுவீங்க; எங்க வீட்ல நாலு இட்லி செஞ்சாங்கன்னா ஊர்காயோட துன்னுவோம்" என்பாரு. எந்த அய்யர் வீட்டு இட்லி சாப்பிட்டாரோ? (though nasty at times, he had a funny bone in him)

வாட் இஸ் ஏழாம் பொருத்தம்?

geethasmbsvm6 said...

என்னங்க இது?? மே மாசம் போட்ட இட்லிக்கு இன்னுமா ஆளுங்க வராங்க?? ஓஹோ??? கனடாவிலே இருக்கிறதாலே ப்ரீஸ் பண்ணி வச்சிருக்கீங்களா என்ன?? யார் கால்லேயாவது விழுந்து எக்கச்சக்கமா ஆயிடப் போறது??

ஆமாம், எங்கே ஆளையே காணோம்??? உப்புச்சீடை போட்டு வச்சு நமுத்துப் போச்சே? :(

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - thanks a lot priya.. ha ha ha

@ அப்பாதுரை - ஆஹா... வாத்தியார் கேஸ் போட போறார் என் மேல... ஹா ஹா அஹ... நன்றிங்க... ஏழாம் பொருத்தம்னா பொருத்தமில்லா பொருத்தம் மாதிரி sir

அப்பாவி தங்கமணி said...

@ கீதா மாமி - ஹா ஹா ஹா... ஆமாம் மாமி freeze பண்ணி ஓட்டிட்டு இருக்கேன்... freeze பண்ணலைனாலும் கால்ல விழுந்தா டேமேஜ் ஆகும்... அவ்ளோ ஸ்பெஷல் இட்லி... ஹா ஹா ஹா.. சீடை கதை வழக்கம் போல சோக கதை தான் மாமி...

priya.r said...

@ geetha mami
ஆமாம், எங்கே ஆளையே காணோம்??? உப்புச்சீடை போட்டு வச்சு நமுத்துப் போச்சே? :(

@ கீதா மாமி - ஹா ஹா ஹா... ஆமாம் மாமி freeze பண்ணி ஓட்டிட்டு இருக்கேன்... freeze பண்ணலைனாலும் கால்ல விழுந்தா டேமேஜ் ஆகும்... அவ்ளோ ஸ்பெஷல் இட்லி... ஹா ஹா ஹா.. சீடை கதை வழக்கம் போல சோக கதை தான் மாமி//அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை
புவனா !கீதாம்மா உங்களுக்காக ஒரு பதிவு போட்டு அதற்குஅப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை என்று பெயரிட்டு
உங்களை பெருமை படுத்தி இருக்காங்க !!
உடனே போய் பாருங்கப்பா !
ஒரு நிமிஷம் ! கீதா மாமி எது கொடுத்தாலும் எனக்கும் அதில் பாதி தந்து விட வேண்டும்(ஒரு வேளை அவர் தங்கமணிக்கு ரெண்டு கிள்ளு, நாலு கொட்டு கொடுத்தா நம்ம பாடு கொஞ்சம் டேஞ்சர் தான் )சரி ! சற்று எட்சரிக்கையாகவே கேட்போம் இதோ பாருங்க தங்கம் !
கீதா மாமி சாப்பிடும் பொருள் எது கொடுத்தாலும் எனக்கும் அதில் பாதி தந்து விட வேண்டும்.
ஓகே வா !
போய்ட்டு நிறையா உப்பு சீடை ,தட்டு வடை எல்லாம் கொண்டுவாங்க தங்கம் !!

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - பாத்தேன் ப்ரியா... மாமி பதிவு பாத்து கமெண்ட் போட்டேன்... கீதா மாமி அடியெல்லாம் குடுக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ப்ரியா

geethasmbsvm6 said...

ஏடிஎம், எதிலே கமெண்டினீங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க கமெண்ட் வராததுக்குத் தான் இப்போ அடிக்கலாமானு யோசிக்கிறேன். தேடிப் பார்த்தாச்சு! :P

அப்பாவி தங்கமணி said...

ஐயோ மாமி ப்ராமிஸ்... அன்னைக்கே buzz ல லிங்க் பாத்து உடனே ஒரு குஷியா வந்து கமெண்ட் போட்டேனே... என்னதிது என்னோட கமெண்ட் எல்லாம் ஏன் இப்படி காணாம போகுது? போன வாரம் இப்படி தான் தக்குடு ப்ளோக்ல போட்டது காணோம்... யாரோ சதி பண்றாங்க மாமி...

priya.r said...

தங்கம் ! நான் உங்களை நம்பறேன் ! சரி சரி

இதெல்லாம் அந்த காக்காய் வேலையா தான் இருக்கும்

எந்த காக்காய் என்று கேட்கிறீர்களா !!

சற்று நினைவு படுத்தி கோங்க பா

நீங்க ஊருக்கு வந்த போது

காக்கைக்கு சாதத்திற்கு பதில் இட்லி வைத்தீர்கள் அல்லவா

அப்போ அதை சாப்பிட்டு பின்பு சற்று யோசித்து அந்த காக்கா, வழக்கத்திற்கு மாறாக

மற்ற காக்கைகள் சாப்பிட்டு விட கூடாது என்ற எல்லா காக்கையையும் பேசி அனுப்பி விட்டு அதுவும் ஊரை விட்டே

போய் விட்டதே அதற்கு கூட நாம் பரிதாப பட்டோமே அந்த காக்கா தானப்பா

சரி ;பழைய மேட்டர் நமக்குள்ளே ரகசியமாகவே இருக்கட்டும்

இருந்தாலும் அந்த காக்கா இப்படி நம்மளை( உங்களுக்கு ஒண்ணு என்றால் அது எல்லா தங்க மணிக்கும் தான் ;அதனால் தான் நாம் என்று சொன்னேன் ) பழி வாங்கி இருக்க கூடாது தான்

போனால் போகட்டும் ;கீதா மாமி எவ்வளோ பீல் பண்ணறாங்க பாருங்க ;சட்டுன்னு போய் மறுபடியும் கமெண்ட்ஸ் போட்டு

கொடுத்துட்டு ,உப்பு சீடை ,தட்டு வடை பார்சல் வாங்கிட்டு வாங்க .,

தயவு செய்து இட்லி பார்சல் மட்டும் கொடுத்துடாதீங்க

அதே மாதிரி மாமி எவ்வளோ வற்புறுத்தி,கெஞ்சி ,கொஞ்சி ,மிரட்டி கேட்டா கூட தங்கமணி இட்லி போர்மலாவை

மட்டும் சொல்லிடாதீங்க தங்கம் !உங்க மாமி வயது மாதிரி அதுவும் சிதம்பர ரகசியம் தான் .,ஓகே வா !!

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ha ha ha.. sema vaaru vaarureenga support panraa maadhiriye...ha ha ha... ippa thaan en friendnu prove panreenga priya...super... thanks pa

(maami blogla naan munnadi potta commentai yosichu oru alavukku adhe pola pottutten marupadiyum)

priya.r said...

உஷ் !அப்பாடா! ஒரு வழியா மாமியை சமாதான படுத்தியாச்சு
வெற்றி வெற்றி !!
தங்கமணியின் இட்லிக்கு ஒரு இன்னொரு மகத்தான வெற்றி
மீதியை உங்க மாமியின் ப்ளோக்ல போய் பார்க்கவும் !!

அப்பாவி தங்கமணி said...

Thanks Priya

திவா said...

சரி சரி படிச்சுட்டேன்! :-)

அப்பாவி தங்கமணி said...

@ திவா - ha ha...:)

கீறிப்புள்ள!! said...

படிச்சுட்டேன்.. சஸ்பென்ஸ் ஓவர்.. ஹா ஹா ஹா.. :)

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! - ha ha...thank you..:)

siva said...

me the firstu..

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு? போன வருஷம் போட்ட போஸ்டுக்கு இப்ப வந்து me the firstu.. ஆ? அவ்வ்வ்வவ்... வேணாம் அழுதுருவேன்...:))

Anonymous said...

இட்லி பற்றிய பதிவு நல்லாத்தான் இருக்கு (ஆமா.. இட்லி மாதிரி இல்லை .. ரங்கஸ் கமெண்ட்)

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - ha ha... Thanks...:))

rajalakshmi paramasivam said...

உங்களுடைய பதிவு பற்றி இன்றைய வலைசறம் மஊலமாக அறிந்து கொண்டு தான் இட்லி பதிவிற்கு வந்தேன்.
வந்து லேப்டாப் முன்பு உட்கார்ந்து கொண்டு சத்தமாக விடாமல் சிரிப்பதைப் பார்த்து " என்ன ஆச்சு /" என்று என்னவர் கேட்டு விட்டு ஒரு மாதிரி பார்த்தார்.(மறை கொஞ்சம் லூசாகி விட்டதோ என்று நினைத்திருப்பார் )அப்படி சிரித்திருக்கிறேன்.

இவ்வளவு நாட்களாக படிக்காமல் விட்டு விட்டோமே என்றிருந்தது. follow seyya ஆரம்பித்து விட்டேன்.

அப்பாவி தங்கமணி said...

@ rajalakshmi paramasivam - வாவ்... இவ்ளோ நாள் கழிச்சு இந்த போஸ்ட்டுக்கு ஒரு கமெண்ட்... ரெம்ப ஹேப்பி அண்ட் ரெம்ப ரெம்ப தேங்க்ஸ்...:)

Mala said...

அனன்ஸ்..இபதான் புரியுது...நமக்குள்ளே எப்படி இப்படியாப்பட்ட அண்டர்ஸ்டாண்டிங் வந்ததுன்னு...
ஹீ எனக்கு இட்லியும் வடையும் சிம்ம சொப்பனம் .நானும் உன்னாட்டம் இத்தனை அரிசிக்கு இவ்ளோ உளுந்துன்னு அளவை லாம் மாத்தி மாத்தி போட்டும்.ஒண்ணு, தக்கையா அப்ளாம் மாதிரி வரும்...இல்லாட்டா கல்லாட்டம் வரும்...சரி விட்டுடலாம்..அப்பா நானு ரெண்டே பேருக்கு என்ன மேனக்கிடல் வேண்டிருக்கு ன்னு கடைல வாங்கி சாப்பிட்டுடுவோம் :D
வடை கதையோ இதை விட மோசம்..

அப்பாவி தங்கமணி said...

@ Mala -
மாலா அக்கா... இது அனன்யா ப்ளாக் இல்ல...என்னோட ப்ளாக்... அவ்வ்வ்வ்வ்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலைனதும் பிளாட் போட்டுட்டாங்களே...;) இருந்தாலும் பாராட்டினதுக்கு நன்றி... நான் பாராட்டினேன்'லாம் நீங்க கேக்க கூடாது... எங்களை பொறுத்த வரை கமெண்ட் போட்டுட்டாலே பாராட்டு தான், doesn't matter what you write there....:)

அப்பாவி தங்கமணி said...

@ rajalakshmi paramasivam - ரெம்ப நன்றிங்க... பாலோ செய்யறதுக்கு இன்னொரு நன்றி...:)

Post a Comment