Friday, May 07, 2010

அம்மாவும் நானும்...
முன்குறிப்பு - அன்னையர் தின சிறப்பு பதிவாய் பல பிராயங்களில் அம்மா மற்றும் குழந்தையின் மனதை பதிவு செய்ய முயன்றுள்ளேன், உரையாடல் நடை கவிதையில். முதல் முயற்சி இது போல். நிறை குறைகளை சொல்லுங்கள்

பிராயம் - பிறந்த சிசு
குழந்தை:-
சிணுங்கலுக்கு கூடத்தான்
சிலிர்த்துஎழும் என்அம்மா
சீண்டித்தான் பாப்போம்னு
சிணுங்கலே என்மொழியாச்சு
அம்மா:-
எதுக்குஅழுதோ என்செல்லம்
என்னன்னு புரியலியே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா

பிராயம் - மூன்று மாதம்
குழந்தை:-
சாமியபாத்து சிரிக்குதுன்னு
சலிக்காம நீசொன்ன
உன்னத்தவிர யாரயும்தான்
உன்தங்கத்துக்கு தெரியாதே
அம்மா:-
பிஞ்சுகைய பிச்சுகிட்டு
பிறகெப்படி வேலைக்கிபோவேன்
போய்த்தானே ஆகோணும்
பொழப்பத்தான் பாக்கோணும்

பிராயம் - ஆறு மாதம்
குழந்தை:-
நிமிஷம்கூட என்னவிட்டு
நகராத அம்மாநீ
நாள்பூரா காணலியே
நானும்தான் தூங்கலியே
அம்மா:-
கண்மணிநீ காப்பகத்துல
கத்திகத்தி அழுகையில
காசுபணம் தேடிப்போறேன்
கண்ணீருல கரைஞ்சுபோறேன்

பிராயம் - ஒரு வருடம்
குழந்தை:-
மணியடிச்சா சாப்பாடும்
மத்தியான தூக்கமும்
பலபேருடன் விளையாட்டும்
பழகித்தான் போயிருச்சு
ஆனாலும்உன் முகம்பாக்க
ஆசையாத்தான் தாவிவந்தேன்
அம்மா:-
தங்கம்நீ எட்டுவெச்சு
தத்திதத்தி நடந்ததையும்
அம்மானு மொதவார்த்த
ஆசையா சொன்னதையும்
ஆயாதான் சொல்லக்கேட்டேன்
அதையும்நான் காணலியே

பிராயம் - 4 வயசு
குழந்தை:-
புதுசீருட போட்டுக்கிட்டு
பள்ளிக்கூடம் நான்போனேன்
பலகதை உன்கிட்டசொல்ல
பறந்துதான் வீடுவந்தேன்
பூட்டிய வீட்டபாத்து
புன்னகையும்தான் ஓடிப்போச்சே
அம்மா:-
பூட்டுனவீட்டு திண்ணையில
பொக்குன்னுநீ இருக்கையிலே
நாலுபஸ்சு மாத்திமாத்தி
நானும்தான் பறந்துவந்தேன்

பிராயம் - 8 வயசு
குழந்தை:-
அம்மாதான் என்னோட
அன்பான தோழிஇப்போ
கேட்டதெல்லாம் செஞ்சுதருவா
கேக்காததையும் சேத்துசெய்வா
எனக்குபோல ஒருஅம்மா
எவருக்குமிங்க வாய்க்கலியே
அம்மா:-
கண்ணுமூடி திறக்கும்முன்னே
கண்ணேநீ வளந்துபோன
சமத்துஉன் பொண்ணுன்னு
சகலரும் சொல்லக்கேட்டு
பெத்தவயிறு குளுந்துபோச்சு
பெறகென்ன வேணுமெனக்கு

பிராயம் - 13 வயசு
குழந்தை:-
என்னநான் செஞ்சாலும்
ஏன்எதுக்குன்னு கேள்விகேட்டு
எரிச்சலத்தான் கிளப்புறயே
என்னாச்சு அம்மாஉனக்கு
என்னைநீ எப்பத்தான்
எள்ளளவும் புரிஞ்சுகுவியோ
அம்மா:-
பேச்சுக்குபேச்சு எதுத்துக்கிட்டு
பேசாமமுகம் திருப்பறதென்ன
சகியாஇருந்த அம்மா
சகிக்காம போனதென்ன
ஏன்எதுக்குன்னு கேக்கத்தான்
எனக்குரிமை இல்லியோடி

பிராயம் - 18 வயசு
குழந்தை:-
கல்லூரிவிட்டு வந்ததுமே
கழுத்ததான் கட்டிக்குவேன்
வாய்வலிக்க நான்பேச
வாய்மூடாம நீகேப்ப
சந்தோசம்தான் எல்லாமே
சந்தேகமா நீபாக்காதவரை
அதசெய்யாத இதசெய்யாதன்னு
அனாவிசியமாநீ சொல்லாதவரை
அம்மா:-
உம்புள்ள இப்படின்னு
ஊராரு வந்துசொன்னா
தாங்கற மனசும்தான்
தங்கமே எனக்கில்ல
தம்புள்ளைய சந்தேகிக்கற
தாயுந்தான் உலகிலில்ல
பதினெட்டு வயசானாலும்
பச்சபுள்ள நீஎனக்கு

பிராயம் - 23 வயசு
குழந்தை:-
விடியவிடிய பேசினாலும்
"வெக்கட்டுமா"னு கேட்டபின்ன
ஒருமணி நேரமாச்சும்
ஓயாம பத்திரம்சொல்லுற
எனக்குகீழ நாலுபேரு
என்பேச்சுக்கு வேலைசெய்ய
உம்புள்ள நான்வளந்துட்டேன்
உன்னும்அம்மா நீவளரலியே
அம்மா:-
காசுதேடி போனப்ப
காப்பகத்துல உன்னசேத்தேன்
ஓஞ்சுபோய் நிக்கையிலே
ஒருகாப்பகம்தான் எனக்கும்இனி
பொழுதுஇப்ப நெறையகெடக்கு
பேசத்தான் நீஇல்ல
ஆயிரம் மைல்தாண்டி
ஆகயத்துல பறந்துபோன

பிராயம் - 30 வயசு
குழந்தை:-
எதுக்குஅழுதோ என்செல்லம்
என்னன்னு புரியலியே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா!!!
அம்மா:-
பச்சபுள்ளைய வெச்சுகிட்டு
பச்சஉடம்பா என்புள்ள
பட்டணத்துல தவிக்கிராளே
போகநான் தோதில்லையே
எந்தாயும் இப்படித்தானே
எனக்காக தவிச்சுருப்பா!!!

இது நான்:-
காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
அன்னைமனம் எப்பவும்
அப்படியே தானிருக்கு
 
எத்தனை உறவுவந்தாலும்
என்தாய்க்கி அதுஈடில்ல
எத்தனவயசு ஆனாலும்
என்தாய்க்கி நான்குழந்தைதான்

எனது அன்னைக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லா அன்னைகளுக்கும் 
எனதுசமர்ப்பணம் இப்பதிவு!!!

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

45 பேரு சொல்லி இருக்காக:

subburathinam said...

// எனது அன்னைக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லா அன்னைகளுக்கும் //

அன்னை பராசக்தி அவள்
அங்கும் இங்கும் எங்கும் தானிருப்பதை
அவனி அறியும்படி செய்ய
அன்னையாக உருவெடுத்தாள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Madhuram said...

Enakku kanla thanni vandhudichu Bhuvana. I'm sure that idha padikara ovovorutharum udane amma kitta pesanumnu ninaipaanga.

padma said...

உங்களோட best பதிவு இதுன்னு சொல்லலாம் தங்கமணி .
ரொம்ப நல்லா இருக்கு

LK said...

//காசுதேடி போனப்ப
காப்பகத்துல உன்னசேத்தேன்
ஓஞ்சுபோய் நிக்கையிலே
ஒருகாப்பகம்தான் எனக்கும்இனி
பொழுதுஇப்ப நெறையகெடக்கு
பேசத்தான் நீஇல்ல
ஆயிரம் மைல்தாண்டி
ஆகயத்துல பறந்துபோன//
புவனா ரொம்ப பீல் பண்ண வச்சிடீங்க. உண்மைலேயே ரொம்ப அருமைய எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

LK said...

//padma கூறியது...

உங்களோட best பதிவு இதுன்னு சொல்லலாம் தங்கமணி .
ரொம்ப நல்லா இருக்கு///

i cant agree more.. best one of ur 26 posts

Ammu Madhu said...

very emotional & touching post.Best wishes to you.

Jawahar said...

//தங்கம்நீ எட்டுவெச்சு
தத்திதத்தி நடந்ததையும்
அம்மானு மொதவார்த்த
ஆசையா சொன்னதையும்
ஆயாதான் சொல்லக்கேட்டேன்
அதையும்நான் காணலியே//

பிரமாதம்!

இதை விட நீங்க போட்டிருக்கிற போட்டோ நூறு கவைதைக்கு சமம்... நல்ல தேர்வு.

SathyaSridhar said...

Thangamani,,,really really superb post enakku rombha pdichurukku rombha manathin aazhathula poeduchu paa touchwood poet superb paa..muzhusaavum padichen..

SathyaSridhar said...

Thangamani,,,really really superb post enakku rombha pdichurukku rombha manathin aazhathula poeduchu paa touchwood poet superb paa..muzhusaavum padichen..

அமைதிச்சாரல் said...

என்ன சொல்றதுன்னே புரியலை. டச்சிங்கா இருந்திச்சிப்பா. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

ஒரூ வாழ்க்கையே கண்முன்னால் விரிகிறது....நல்லாருக்கு..

கவிநயா said...

//காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
அன்னைமனம் எப்பவும்
அப்படியே தானிருக்கு

எத்தனை உறவுவந்தாலும்
என்தாய்க்கி அதுஈடில்ல
எத்தனவயசு ஆனாலும்
என்தாய்க்கி நான்குழந்தைதான்

எனது அன்னைக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லா அன்னைகளுக்கும்
எனதுசமர்ப்பணம் இப்பதிவு!!!//

அருமையான பதிவும், அதுக்கேத்த முத்தாய்ப்பும். அன்பு நிறை அன்னையர்க்கெல்லாம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

Malar Gandhi said...

Enjoyed reading your write-up. Happy Mother's day wishes to you and your Mom.

Madumitha said...

வாழ்த்துக்கள்.
உணர்ச்சிகளைக்
கொட்டி
எழுதிருக்கீங்க.
உங்க அம்மாப்
படிச்சா
சந்தோஷப்படுவாங்க.

vanathy said...

Wow!! Very well written. Expecting more from you.

அப்பாவி தங்கமணி said...

@ சுப்பு தாத்தா - வருகைக்கி நன்றிங்க

@ மதுரம் - நன்றிங்க மதுரம்... எனக்கும் அம்மா கிட்ட பேசணும் போல தான் இருக்கு... இன்னிக்கி மாலை பேசணும்

@ பத்மா - ரெம்ப நன்றிங்க பத்மா... நீங்க சொன்னப்புறம் இதை 25 வது பதிவா எங்க அம்மாவுக்குன்னு போட்டு இருக்கலாம்னு தோணுது.... ரெம்ப நன்றி

@ LK - ரெம்ப நன்றிங்க LK ... எத்தனை உயரம் எத்தனை தூரம் கடந்து வந்தாலும் நம்ம தொடக்கம் தாய் மடி தானே...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க LK .

@ LK said //i cant agree more.. best one of ur 26 posts ///
என்ன தவம் செய்தனை... மிக்க நன்றி

@ammu madhu - தேங்க்ஸ் அம்மு

@ Jawahar - ரெம்ப நன்றிங்க ஜவஹர். எனக்கும் ரெம்ப பிடிச்சது இந்த போட்டோ

@ SathyaSridhar - ரெம்ப நன்றிங்க சத்யா. நாம எல்லாருமே அம்மா செல்லங்கள் தானே... அது தான் இப்படி எழுத வெச்சது...மீண்டும் நன்றி

@ அமைதிச்சாரல் - நன்றிங்க சாரல். வாழ்த்துக்களை சேமிச்சுக்கறேன்... வரம் கெடைச்சதும் வாங்கிகறேன்.... நன்றி

@ கண்ணகி - ரெம்ப நன்றிங்க கண்ணகி. எனக்கும் அப்படி தான் தோணுச்சு எழுதின அப்புறம்

@ கவிநயா - ரெம்ப நன்றிங்க கவிநயா

@ Malar Gandhi - ரெம்ப நன்றிங்க மலர்

@ Madumitha - எங்க அம்மா படிக்க இப்ப வாய்ப்பில்ல மது... ஊருக்கு போறப்ப தான் கொண்டு போய் காட்டணும்... நீங்க சொன்னாப்ல ரெம்ப சந்தோசபடுவாங்க. ரெம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு

@ Vanathy - தேங்க்ஸ் வானதி. I will try to give more as you expect. Thanks again

Krishnaveni said...

Excellent post Bhuvana. Perfect picture. Happy mothers day. It exactly reflects mom-baby relationship. Written very well. Keep posting interesting topics like this

தக்குடுபாண்டி said...

//விடியவிடிய பேசினாலும்
"வெக்கட்டுமா"னு கேட்டபின்ன
ஒருமணி நேரமாச்சும்
ஓயாம பத்திரம்சொல்லுற
எனக்குகீழ நாலுபேரு
என்பேச்சுக்கு வேலைசெய்ய
உம்புள்ள நான்வளந்துட்டேன்
உன்னும்அம்மா நீவளரலியே// classic akka...:) ungalai paartha poraamaiyaa irukku...:)

தக்குடுபாண்டி said...

//எனது அன்னைக்கும்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லா அன்னைகளுக்கும்
எனதுசமர்ப்பணம் இப்பதிவு!!!// ungakooda join pannikkarthula roomba santhoshampa.

ஹேமா said...

எப்படிச் சொல்லன்னு தெரியாம இருக்கு தங்கமணி.அம்மாவாய் குழந்தையாய் பிறகு வளரும் அத்தனை பருவங்களிலும் நீங்களே மாறி மாறி உணர்ந்து எழுதிய வார்த்தைகள் வரிகள்.அம்மா என்பவள் தெய்வமாய் எம் வழிகாட்டியாய் எம் காலத்தோடு கரைபவள்.அவளுக்கென்று ஒரு காலமே தேவையில்லை.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

Guna said...

Awesome....I dont know any better words to express....itss toooo good

complan surya said...

அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

ஸ்ரீராம். said...

இதை மார்க் பண்ணிக்கலாம் பாராட்டனு வந்தா, எவ்வளவுதான் மார்க் செய்யறது..
அருமையான உணர்வுகள்...அழகாய் சிறு பிராயம் தொடங்கி நடுவில் பதின்ம வயதில் திசை மாறி, மறுபடி பாதையில் சேர்ந்து, தவிப்புகள் இடம் மாறிய அழகையும் சொல்லி...
அசத்திட்டீங்கள் புவனா...அந்தப் படம் அருமை.
கடவுள் எல்லா இடத்திலும் தான் இருக்க முடியாது என்பதால்தான் தன் சார்பில் தாயை அனுப்பி இருக்கான் என்பார்கள். உண்மை. இதுவரை வந்ததில் உங்கள் சிறந்த இடுகை. இது போல இன்னும் இன்னும் நிறைய கொடுக்க வாழ்த்துக்கள்.

vgr said...

Excellent write-up!!!!!! Very good summary!!!!

செ.சரவணக்குமார் said...

nice post.

Anonymous said...

chance illa frnd..
this post is fantastic...and superb..
i just love it..
vassikrappo thondaya adaikraa madiri oru feel kudutheteenga...

Anonymous said...

chance illa frnd..
this post is fantastic...and superb..
i just love it..
vassikrappo thondaya adaikraa madiri oru feel kudutheteenga...
Anny Benny

ராமலக்ஷ்மி said...

மிக அருமை புவனா. திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன வரிகள். பிராயம் ஒன்றும் நாலும் உருக்கம். எல்லா அம்மாக்களுக்கும் இப்பதிவிலே நெகிழ்வாய் சொல்லிக் கொள்கிறேன் அன்னையர் தின வாழ்த்துக்களை.

Venkatesh said...

அம்மாவின் பாசத்தை நேசத்தை எல்லோருக்கும் ஒருமுறை நீயபாக படுத்தியதற்கு மிக்க நன்றி!. வாழ்க தமிழ்த்தாய். இந்த பதிவை படித்தவுடன் என்னை அறியாமல் அழுதுவிட்டேன். உடனே எனது அம்மாவிற்கு போன் செய்து சிறிது நேரம் பேசினேன் மனம் லேசானது! தங்கமணி அவர்களே உங்களோட மிக மிக சிறந்த பதிவு இது என்பேன் நான்!!!
அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!!!
வாழ்க உங்களது தமிழ் :)

Priya said...

Wow! Excellent!!!

அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - Thanks Krishnaveni. Very many thanks for your encouragement

@ தக்குடு - ரெம்ப நன்றி பிரதர்

@ ஹேமா - வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க மிக்க நன்றி. நாம் எல்லோரும் கடந்து வந்த பருவங்கள் மற்றும் பிராயங்கள் தானே ஹேமா.... அந்த புரிதலே எழுத தூண்டியது. மீண்டும் நன்றி

@ Guna - ரெம்ப நன்றிங்க குணா

@ Complan Surya - நன்றி சூர்யா

@ ஸ்ரீராம் - ரெம்ப ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்.... உங்கள் வார்த்தைகள் மேலும் நெறைய எழுதும் ஆர்வத்தை கொடுக்கிறது.... மிக்க மிக்க நன்றி

@ VGR - நன்றிங்க VGR

@ சரவணகுமார் - தேங்க்ஸ் சரவணகுமார்

@ Anny Benny - ரெம்ப நன்றிங்க Anny . உங்க கமெண்ட்ஸ் எல்லாம் தான் என்னோட டானிக். மிக்க நன்றி

@ ராமலக்ஷ்மி - வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் ரெம்ப நன்றிங்க

@ Venkatesh - என்னுடைய எழுத்து ஒருவரை உணர்வு பூர்வமாய் சென்று அடைந்ததை விட பெரிய சந்தோஷம் வேறு இல்லை. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க வெங்கடேஷ். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

@ ப்ரியா - நன்றிங்க ப்ரியா

சுந்தரா said...

நிஜமாவே கடைசில கண்ல தண்ணி வந்திருச்சுங்க.

பிராயம் பிராயமா பகுத்து ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

உங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்னையர்தின வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - ரெம்ப நன்றிங்க சுந்தரா... உங்கள உணர்ச்சி வசப்பட வெச்சதுங்கறது பெரிய பாராட்டு... ரெம்ப நன்றிங்க மீண்டும் வாழ்த்துக்கு

முகுந்த் அம்மா said...

அருமையான கவிதை. மனம் நெகிழ்கிறது.

அப்பாவி தங்கமணி said...

@ முகுந்த் அம்மா - ரெம்ப நன்றிங்க முகுந்த் அம்மா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப அருமையான பதிவு தங்கமணி...

அப்பாவி தங்கமணி said...

அஹமது இர்ஷாத் - ரெம்ப நன்றிங்க வருகைக்கும் பாராட்டுக்கும்

மாதேவி said...

"ஓயாம பத்திரம்சொல்லுற
எனக்குகீழ நாலுபேரு
என்பேச்சுக்கு வேலைசெய்ய
உம்புள்ள நான்வளந்துட்டேன்
உன்னும்அம்மா நீவளரலியே"

அன்னைக்கு பிள்ளைகள் என்றுமே குழந்தைகள்தான்.

நன்றாக இருக்கிறது.

அப்பாவி தங்கமணி said...

மாதேவி - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்

SW.RADHYA said...

IT"S GOOD TO FEEL YOUR POEM MAA

அப்பாவி தங்கமணி said...

Thanks a lot SW.Radhya

கல்பனா said...

பிரமாதம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்பாவி தங்கமணி said...

@ கல்பனா - Thanks Kalpana

செந்தழல் ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

அப்பாவி தங்கமணி said...

@ செந்தழல் ரவி - ரெம்ப நன்றிங்க ரவி

Post a Comment