Wednesday, May 12, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் (தொடர் பதிவு)


"எனக்கு பிடித்த பத்து படங்கள்" இந்த தொடர் பதிவை எழுத அழைத்த பத்மா மற்றும் Dreamer க்கு மிக்க நன்றி

இந்த Top 10 லிஸ்ட் எல்லா விசியத்துலையும் எப்பவும் மாறிட்டே இருக்கும். ஆனாலும் எவர்க்ரீன் அப்படின்னு சிலது இருக்குமில்லையா. அதை தான் இப்போ இங்க சொல்லலாம்னு இருக்கேன்

1 . டும் டும் டும்:

அது என்னமோ இந்த படம் எத்தனை வாட்டி பாத்தாலும் எனக்கு சலிக்கரதில்ல. இது சராசரி மசாலா சினிமாவா இல்லாம கொஞ்சம் வித்தியாசமான கதைங்கரதால பிடிச்சுருக்குன்னு நெனைக்கிறேன்.

பாடல்களும் அருமை. காதல்/காமெடி/கலாட்டா/nativity / ஸ்வாரஸ்யம் எல்லாம் சரி விகிதமா கலந்து இருக்கறதால என்னோட favourites லிஸ்ட்ல வந்துடுச்சுன்னு நெனைக்கிறேன். இதுல எனக்கு ரெம்ப பிடிச்ச கேரக்டர் ஜோதிகாவோடது. அழகான அளவான நடிப்பு. எந்த costume / nativity க்கும் பொருந்தற ஒரு அழகு ஜோதிகாவோட பிளஸ். அது இந்த படத்துக்கும் பிளஸ் ஆய்டுச்சு

இதை அப்படி காட்டி இருக்கலாம், அந்த துணை கதை என்ன ஆச்சுன்னு நம்மள ஒரு நாள் டைரக்டர்ஆ கற்பனை குதிரை ஓட வெக்காத flawless screenplay

"பார்க்காமல் காதல்
பேசாமல் காதல்
பலதும் பாத்தாச்சு
பழையசோறு அதுஆச்சு
நிச்சியத்தில் தொடங்கி
நிச்சியமின்றி நின்று
அழகு காதலாகி
அரங்கேறியது டும்டும்டும்"

2 . மூன்றாம் பிறை:

இதுக்கு ஈடு சொல்ற மாதிரி ஒரு சினிமா நான் இதுவரைக்கும் பாக்கல. ஸ்ரீதேவியோட அழகு / கமலோட நடிப்பு / அது வரைக்கும் தமிழ் சினிமால சொல்ல படாத ஒரு கதை. கவிஞர் கண்ணதாசன் கடைசியா எழுதின "கண்ணே கலைமானே" பாட்டு ஒரு மகுடம் இந்த படத்துக்கு

தப்பான எடத்துல சந்திக்கற ஒரு பொண்ண காப்பாத்தற எண்ணத்தோட தன்னோட அழைச்சுட்டு போற விசயம் அந்த காலகட்டத்துல ரெம்ப பெரிய விசயம் (இப்பவும் தான்). எப்பவும் நம்ம வாழ்க்கைல பாக்க முடியாத / அனுபவிக்க முடியாத விசியங்கள் நம்மை அதிகமா ஈர்க்கும். அந்த வகைல இந்த சினிமா ஒரு ஈர்க்கும் விடயமா பெரிய வெற்றி அடைஞ்சது. என் மனதையும் கவர்ந்தது

"தன்னிலை மறந்தவளை
தன்னவளாய் நினைக்கும்மனசு
கதைக்கே என்றாலும்
கண்டதில்லை அதுவரை
சினிமா வானில்
சில்வர் ஜூப்ளிகண்ட
முத்தான முத்தல்லவோ
மூன்றாம் பிறை"

3 . Final Destination :

எனக்கு எப்பவும் இந்த அமானுஷ்ய கதைகள் மேல ஒரு ஈர்ப்பு உண்டு. நம்பறேனோ இல்லையாங்கறது வேற ஆனா அதுல இருக்கற த்ரில் அப்புறம் அந்த மர்மம் புரியறப்ப ஒரு ஸ்வாரஸ்யம் எனக்கு பிடிக்கும். தமிழ்ல கூட இந்த மாதிரி பல படங்கள் வந்திருந்தாலும் படம் முழுக்க சீட் நுனில உக்கார வெச்ச இந்த Final Destination படம் ஒரு செம த்ரில்லர்

இந்த படம் பிடிக்கும் in the sense பயப்படவெச்ச terror thriller கர வகைல

படம் பாக்கதவங்களுக்கு ஒரு ஒரு வரி சொல்லிடறேன் இந்த கதை என்னனு. ஒரு செட் of students ட்ரிப் போறதுக்காக flight ல ஏறி இருப்பாங்க. அதுல ஒரு student க்கு அந்த flight வெடிக்க போகுதுன்னு ஒரு கனவு மாதிரி தோணும். அவன் பண்ற கலாட்டால அவன் மற்றும் அவனோட சில நண்பர்கள் விமானம் விட்டு எறங்கிடுவாங்க. அப்புறம் அந்த விமானம் அவன் கனவுல வந்த மாதிரியே விபத்தாகி மத்த எல்லாரும் இறந்துடுவாங்க

தப்பிச்ச அந்த சில friends மர்மான முறைல ஒரு ஒருத்தரா செத்துடுவாங்க. விதி எங்க போனாலும் விடாதுங்கறது தான் கான்செப்ட். இதே கான்செப்ட்ல பார்ட் 2 பார்ட் 3 வந்தது. ஆனா இந்த படம் மனசுல நின்னதுக்கு காரணம் நான் படிச்ச ஒரு உண்மை சம்பவம்

2009 ஜூன் மாசம் Air France விமானம் வெடிச்சு அதுல இருந்த எல்லாரும் இறந்தது நீங்க படிச்சுருபீங்க. அந்த flight ல ஏற வேண்டிய ஒரு லேடி லேட்ஆ வந்ததால flight மிஸ் பண்ணிடுச்சு. விபத்துல இருந்தும் தப்பிச்சுருச்சு. ஆனா அடுத்த வாரமே ஒரு கார் விபத்துல அந்த லேடி இறந்துடுச்சு. அதை பத்தி படிக்க இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க

http://finchannel.com/index.php?option=com_content&task=view&id=39801&Itemid=13

"விதியை மதியால்வென்ற
விடயங்கள் பலகேட்டோம்
காத்து பிடித்தவிதியை
கேட்கவும் சிலிர்கிறதே"

4 . மொழி:

சீரியஸ் ஆன ஒரு subject ஐ அத்தன ஜனரஞ்சகமா சொல்ல முடிஞ்சுது தான் இந்த படத்தோட வெற்றிக்கி முக்கிய காரணம். ஜோதிகாவோட career ல ஒரு மைல்கல் இந்த சினிமா. டைரக்டர்ஸ் டச்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி ராதாமோகன் டச் அப்படின்னு எல்லார் மனசுலயும் ஒரு பெஞ்ச்மார்க் உருவாக்கின ஒரு படம்

என்னோட பிடிச்ச படங்கள் லிஸ்ட்ல என்னையும் அறியாம சேந்த ஒரு படம்

கரகாட்டகாரன் வாழைப்பழ ஜோக் மாதிரி "ஒரு பொண்ண பாத்தா மணி அடிக்கணும் பல்பு எறியணும்" அப்படின்னு ஒரு எவர்க்ரீன் காமெடி மறக்க முடியாத பிளஸ்

"பேசாத மொழியால்
பேசவைத்த மொழி
வர்ணமற்ற பாஷையால்
வரலாறுகண்ட மொழி
மொழிகடந்து உலகையே
மறக்கடித்த மொழி"

5 . சிந்துபைரவி:

இந்த படத்த எத்தனை வாட்டி பாத்தேன்னு ஒரு கணக்கே இல்ல... பாட்டுக்காகவா இல்ல சுஹாஷினிகாகவா இல்ல வித்தியாசமான கதையா என்னனு தெரியல... நெறைய வாட்டி பாத்து இருக்கேன். ரங்க்ஸ் நெறைய சினிமா பாக்க மாட்டார் (I mean கல்யாணத்துக்கு முந்தி..... இப்போ எல்லாம் நம்ம செட் சேத்தாச்சு..) . அவரே இந்த படத்தை நெறைய வாட்டி பாத்ததா சொன்னார்

பாட்டு ஒண்ணு ஒண்ணும் முத்து தான்... அதுலயும் "பாடறியேன்" மற்றும் "கலைவாணியே" கிளாசிக்....

"ஹாசினியா
 ஹாஸ்யமா
ஏதோஒன்று
ஏனோஈர்த்தது
சலிக்கபாத்தாச்சு
சலிக்கதான்இல்லைஇன்னும்"

6.அபியும் நானும்:

இந்த படம் பாத்தப்ப நதியா & சிவாஜி நடிச்ச "அன்புள்ள அப்பா" ஞாபகம் நிச்சியம் வந்தது. ஆனா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி சூப்பர் screenplay . எனக்கு என்னமோ எப்பவும் இந்த reverse screenplay படங்கள் ரெம்ப பிடிக்கும்... அதாங்க கொசுவத்தி சுத்தறது. நேரா போற கதைகள விட. முடிவுல ஆரம்பிச்சு flashback போற கதைகள் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடன்னு தோணும்

அதுவும் இந்த கதை ரெம்ப நல்லா கொண்டு போய் இருக்கார் டைரக்டர். அம்மாக்களை தூக்கி வெச்ச படங்கள் தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா

ஆனா அப்பாவோட கோணத்துல இருந்து எடுக்கபட்ட படங்கள் மிக சில (அன்புள்ள அப்பா, தவமாய் தவமிருந்து இன்னும் சில). ஆனா இந்த கதை சம்திங் ஸ்பெஷல். எனக்கு பிராகாஷ்ராஜ் பிடிக்கும்கரதால அப்படி தோணுச்சோ என்னமோ. ஆனா யாருக்கும் குடுக்காம save பண்ணி வெச்சு இருக்கற CD collection ல இதுவும் ஒண்ணு

போன சண்டே இங்க ஒரு நார்த் இந்தியன் restaurant போனப்ப buffet ல ராஜ்மானு ஒரு item பாத்ததும் நானும் ரங்க்ஸ்ம் சிரிக்க ஆரம்பிச்சுட்டோம். இந்த படத்துல பிரகாஷ்ராஜ் சாப்பிடறப்ப ஐஸ்வர்யா singh மருமகனுக்காக ராஜ்மா செஞ்சு வெச்ச கோபத்துல "அந்த ராஜாமாவ கொஞ்சம் கொட்டு" னு சொன்னது சூப்பர் timing காமெடி sense

"பிள்ளை வளந்தபின்
பெத்தவர் பிள்ளைஆன
அப்பாவின் மனதை
அழகாய் சொன்னகதை
எனதுஅப்பா கூட
எப்பவும் இப்படிதான்னு
பெருமையாய் சலிக்கசெய்த
பெயர்சொன்ன கதை"

7. பஞ்சதந்திரம் :

பேரு போடறது தொடங்கி வணக்கம் போடறது வரை வயிறு வலிக்கக் சிரிக்க செஞ்சது தான் இதோட ஹிட்க்கு காரணம். கமல் தவிர வேற யாரும் இப்படி செஞ்சிருக்க முடியுமான்னு தெரியல, such a versatile personality to fit there in everything he does. இதுக்கு மேல வேற என்ன சொல்றதுன்னு தெரியல. Ofcourse கிரெடிட் எல்லாம் Crazy மோகன்க்கு தான், இல்லைங்கல, ஆனா கூட அந்த ரோல்க்கு கமல் தான் அப்படி ஒரு பொருத்தம்

அந்த படத்துல வந்த இந்த dialouge எங்க வீட்டுல அடிக்கடி கேக்கலாம் "கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம் மாமா... ஆனா பதில் சொல்றது எத்தனை கஷ்டம் தெரியுமா?" ஹா ஹா ஹா. ஏன்னா ரங்கஸ் இருக்காரே, சரியான "கேள்வியின் நாயகன்". அது ஒரு தனி பதிவாவே போடற அளவுக்கு பெரிய கதை. இப்ப வேண்டாம் விடுங்க

"பஞ்சதந்திரம் பாத்து
பஞ்சாச்சு மனசு
சிரிச்சு சிரிச்சு
சுளுக்கிதான் போச்சு"

8. கோதாவரி: (Telugu)

ஒரு Boat லையே படம் முக்கால்வாசியும். அந்த வித்தியாசமான யோசனை தான் இதோட வெற்றி. கோதாவரி ஆத்து அழகை அள்ளி அள்ளி கொடுத்த படம். சிம்பிள்ஆன காதல் கதை, சொன்ன விதம் தான் அருமை

பாடல்கள் கூட மறுபடி மறுபடி கேக்கவெக்கற ரகம் தான். அதுல வர்ற குட்டிஸ் லூட்டி ரெம்ப ரசிக்க வெச்சது. கோதாவரிய சுத்தி இருக்கற ஊர்களை எல்லாம் அழகா காட்டி இருப்பார் இந்த படத்துல. ஒரு வாட்டியாச்சும் இந்த ஊரை நேர்ல பாக்கணும்னு தோணவெச்ச cinematography

9. சதிலீலாவதி:

உண்மைய ஒத்துக்கறேன்... இந்த படம் பிடிச்சதுக்கு முக்கிய காரணம்... இதுல வர்ற எங்க ஊரு தமிழ் (கோயம்புத்தூர்). அதுலயும் நம்ம அம்மணி கோவை சரளா கலக்கல் தான் போங்க. அந்த தமிழே கேக்க கேக்க இனிக்கும், கதையும் கூட நல்ல கதை தான்

கமலோட மத்த படங்கள் மாதிரி வயறு குலுங்க சிரிக்க வெக்கலைனாலும் நல்ல கதை, நல்ல காமெடி. மாருகோ மாருகோ பாட்டு ஒரு சூப்பர் டூப்பர் தான்

"எங்கூரு பாஷையில
என்னசொக்க வெச்சபடம்
எல்லாஊரு மக்களையும்
ஏத்துக்கவெச்ச கதை"

10. மௌன ராகம்:

இதுவும் ஒரு reverse screenplay ரகம் தான். படத்தோட பேரே ஒரு கவிதை மாதிரி அழகா இருக்கு. அதுக்கேத்த மாதிரி அருமையான கதை. ரெம்ப மசாலா கலக்காத ஒரு அழகான காதல் கதை. காதல் வயப்பட்ட ஒரு பொண்ணோட உணர்வுகள அழகா சொன்ன கதை

இப்பவும் எங்கயாச்சும் "சந்திரமௌலி" ங்கற பேரை கேட்டா இந்த படத்துல வந்த அந்த சீன் கண்ணு முன்னால வரும் எனக்கு. காதல்/காமெடி/கவிதை/கலாட்டா எல்லாம் கலந்த ஒரு நல்ல படம்

"மௌனமாய்
மனதின்மொழியை
ராகமிசைத்த
ராகமாலிகா"

இந்த தொடர் பதிவு ஏற்கனவே பெரும்பாலும் எல்லாரும் எழுதியாச்சு. யாரையாச்சும் கூப்ட்டா ஆட்டோ வந்தாலும் வரும்...... அதுனால விருப்பபடரவங்க எழுதுங்க. ரெம்ப நன்றி

அனன்யா அழைச்ச "எனக்கு பிடிச்ச அஞ்சு பாடகர்கள் தொடர் பதிவு" அடுத்த வாரம் ரிலீஸ்

54 பேரு சொல்லி இருக்காக:

அமைதிச்சாரல் said...

ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு.

Ammu Madhu said...

all r nice & pleasent movies..

ஹேமா said...

தெரிவுகள் அத்தனையும் ரசிப்போடு இருக்கு.மூன்றாம் பிறை,
மொழி,அபியும் நானும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம் என்கிற மாதிரியான படங்கள்.

Priya said...

உங்க தேர்வுகள் அனைத்தும் அருமை. இதில் எனக்கு ரொம்ப பிடித்தது மெளன ராகம் ... நீங்க சொன்ன மாதிரி படத்தின் பேரே கவிதையாக இருக்கும். ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகா சொல்லிய படம்.

complan surya said...

ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு.

-repeattu.....

Krishnaveni said...

beautiful movies...nice selection Bhuvana

டம்பி மேவீ said...

எனக்கும் இந்த படங்களனைத்தும் பிடிக்குமுங்க ..... அதிலும் அந்த "சந்திரமௌலி ......" மாதிரி நானும் கல்லூரி நாட்களில் கலாட்டா பண்ணிருக்கிறேன். கோதாவரி படம் பற்றி சொன்னதற்கு நன்றி ..எனக்கு தெலுகு புரியாது இருந்தாலும் சிடி கிடைத்தால் பார்க்கிறேன்

தமிழிஷ் ல உங்க பதிவுகளை சேர்த்து விடுங்க

vanathy said...

அப்பாவி தங்ஸ், அதெப்படி எனக்குப் பிடித்த படங்கள் பெரும்பாலும் உங்களின் சாய்ஸ் ஆக இருக்கு. மூன்றாம் பிறை, பஞ்ச தந்திரம் ( You tube ல் சில காட்சிகள் பார்த்தது ), அபியும் நானும் ( நன்றி U Tube ) , சதிலீலாவதி என்று பல படங்கள் என் பேவரைட்.

பிரசன்னா said...

//save பண்ணி வெச்சு இருக்கற CD collection ல இதுவும் ஒண்ணு//

ஓ திருட்டு விசிடிக்கு கலக்சன் வேறயா :) தலைவர் படம் இல்லாமல் எந்த லிஸ்டும் இருக்காது போல..
கவிதைகள் அருமை..

padma said...

தங்கமணி உங்க தெரிவை போல அதுக்கெல்லாம் கவிதை எழுதிருகீங்களே அதும் டாப் கிளாஸ் .
வர வர ரொம்ப மெருகேறுது உங்க ப்ளாக்
keep it up .

தமிழ் உதயம் said...

இதுல சில படங்கள் எனக்கும் பிடித்தது.

தக்குடுபாண்டி said...

கவிதை எழுத தெரிஞ்சா எவ்லோ செளகர்யமா இருக்குப்பா!! ம்ம்ம். பல்லு இருக்கிறவன் பக்கோடா திண்ங்கத்தானே செய்வான்!!...:) எல்லா படமும் நன்னா இருக்கு 'அடப்பாவி' தங்க்ஸ்!!!!...:)

அநன்யா மஹாதேவன் said...

அருமையான செலக்‌ஷன். கூடவே கவுஜ!! கலக்கறீங்க அப்பாவி தங்கமணி!

செ.சரவணக்குமார் said...

ஒவ்வொரு படத்தின் இறுதியிலும் எழுதப்பட்டிருந்த கவிதைகளை ரசித்தேன். நல்ல தேர்வுகள் மேடம்.

அன்புடன் மலிக்கா said...

/ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு/

அதேதான். மெளனராகம் எனக்கும் பிடிக்கும். அப்பாவி..

complan surya said...

அருமையான செலக்‌ஷன். கூடவே கவுஜ!! கலக்கறீங்க அப்பாவி தங்கமணி!

---கவுஜ!!ena kodumaida sami..ethu enna language.ethuku en tangalish evlovo mel..surya nee kalakitta pooda..

DREAMER said...

அருமையான தேர்வுங்க...

//எனக்கு எப்பவும் இந்த அமானுஷ்ய கதைகள் மேல ஒரு ஈர்ப்பு உண்டு. நம்பறேனோ இல்லையாங்கறது வேற ஆனா அதுல இருக்கற த்ரில் அப்புறம் அந்த மர்மம் புரியறப்ப ஒரு ஸ்வாரஸ்யம் எனக்கு பிடிக்கும்.//
அட.. நீங்க நம்ம Categoryங்க...

பஞ்சதந்திரம் டைலாக்ஸ் என் நட்பு வட்டத்திலும் ரொம்ப ஃபேமஸ்ங்க!
'அவன் விழாநாயகன்..' 'கூறுகெட்ட கூபே..' 'மாமா தேவுடூ..' இப்படி நிறைய்ய்ய்ய்யயய...

கோதாவரி படம் நான் இன்னும் பாக்கலை... பல பேர் பரிந்துரைச்சியிருக்காங்க... சீக்கிரமே பாத்துடுறேன்.

அழைப்பை ஏற்று கலக்கலாய் எழுதியதற்கு மிக்க நன்றி!

-
DREAMER

சின்ன அம்மிணி said...

பொண்ணு பாக்கற பதிவு போட்டாச்சு. நம்ம பக்கம் எட்டிப்பாருங்க

SathyaSridhar said...

Hey thangam, epdi irukeenga enakkum rombha rombha pidicha padam Mouna Raagam evlo time paarthaalum mudhal time paarkira maadiri utkarnthu paarpen, apram mozhi enakku pidicha padam, sathileelavathi enakkum pidikkum neenga enna coimbatore ahh rombha nerungiteengalae appa namma orru ammani ya neenga....

Hema said...

Wounderful Collections. Love all the movies. Especially Abiyum Naanum, Mauna ragam, Dum Dum Dum, Sindhu Bhairavi are my Fav...

ராமலக்ஷ்மி said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் நானும் ரசித்துப் பார்த்தவையே. கவிதையுடன் பகிர்ந்து விதம் அழகு புவனா:)!

ஹுஸைனம்மா said...

அந்த இங்லீஷ், தெலுங்கு படங்கள் தவிர (நான் தமிழச்சியாக்கும்!) எல்லாம் நாஉம் ரசிச்சுப் பார்த்தவை. என்னப் போலவே நல்ல ரசனை உங்களுக்கும்!! ;-))

ஸ்ரீராம். said...

பிடித்த படங்களைச் சொன்னதோட கீழ அதற்கு ஒரு கவிதையும் சொல்லி அசத்திட்டீங்க...! கமல் படம் லிஸ்ட்டுல வராம ஒரு லிஸ்ட் தயார் செய்ய முடியுமா?

முகுந்த் அம்மா said...

super selection.

அப்பாவி தங்கமணி said...

//அமைதிச்சாரல் சொன்னது…
ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு.//

ரெம்ப நன்றிங்க அமைதிச்சாரல். எனக்கும் கூட அதான் பிடிச்சது

அப்பாவி தங்கமணி said...

//Ammu Madhu சொன்னது…
all r nice & pleasent movies..//

Very many thanks Ammu Madhu

அப்பாவி தங்கமணி said...

//ஹேமா சொன்னது…
தெரிவுகள் அத்தனையும் ரசிப்போடு இருக்கு.மூன்றாம் பிறை,
மொழி,அபியும் நானும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம் என்கிற மாதிரியான படங்கள்.//

நன்றிங்க ஹேமா... நீங்க சொன்ன மூணுமே எவர்க்ரீன் ரகம் தான். Well said

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது…
உங்க தேர்வுகள் அனைத்தும் அருமை. இதில் எனக்கு ரொம்ப பிடித்தது மெளன ராகம் ... நீங்க சொன்ன மாதிரி படத்தின் பேரே கவிதையாக இருக்கும். ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகா சொல்லிய படம்//

ஆமாங்க priya . ரெம்ப பெண்ணோட உணர்வுகள decent ஆ சொல்லப்பட்ட ஒரு படம் மௌன ராகம். சான்சே இல்ல

அப்பாவி தங்கமணி said...

//complan surya சொன்னது…
ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு.
-repeattu.....//

Thanks Surya

அப்பாவி தங்கமணி said...

//Krishnaveni சொன்னது…
beautiful movies...nice selection Bhuvana//

Thanks Krishnaveni

அப்பாவி தங்கமணி said...

//டம்பி மேவீ சொன்னது…
எனக்கும் இந்த படங்களனைத்தும் பிடிக்குமுங்க ..... அதிலும் அந்த "சந்திரமௌலி ......" மாதிரி நானும் கல்லூரி நாட்களில் கலாட்டா பண்ணிருக்கிறேன். கோதாவரி படம் பற்றி சொன்னதற்கு நன்றி ..எனக்கு தெலுகு புரியாது இருந்தாலும் சிடி கிடைத்தால் பார்க்கிறேன்
தமிழிஷ் ல உங்க பதிவுகளை சேர்த்து விடுங்க//

//அந்த "சந்திரமௌலி ......" மாதிரி நானும் கல்லூரி நாட்களில் கலாட்டா பண்ணிருக்கிறேன்//

என்ன கலாட்டானு கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்க பிரதர்??? (ஹா ஹா ஹா). கோதாவரி கண்டிப்பா பாருங்க. பாஷை புரியலைனாலும் கேமராவுக்காக பாக்கலாம் (subtitle இருக்கே இப்போ). நன்றிங்க டம்பி மேவீ

அப்பாவி தங்கமணி said...

//vanathy சொன்னது…
அப்பாவி தங்ஸ், அதெப்படி எனக்குப் பிடித்த படங்கள் பெரும்பாலும் உங்களின் சாய்ஸ் ஆக இருக்கு. மூன்றாம் பிறை, பஞ்ச தந்திரம் ( You tube ல் சில காட்சிகள் பார்த்தது ), அபியும் நானும் ( நன்றி U Tube ) , சதிலீலாவதி என்று பல படங்கள் என் பேவரைட்.//

Great Women think alike....அதான் நம்ம சாய்ஸ் ஒரே மாதிரி இருக்கு (இது எப்படி இருக்கு?). நன்றிங்க வானதி

அப்பாவி தங்கமணி said...

//பிரசன்னா சொன்னது…
//save பண்ணி வெச்சு இருக்கற CD collection ல இதுவும் ஒண்ணு//
ஓ திருட்டு விசிடிக்கு கலக்சன் வேறயா :) தலைவர் படம் இல்லாமல் எந்த லிஸ்டும் இருக்காது போல..
கவிதைகள் அருமை..//

பிரசன்னா - திருட்டு VCD எல்லாம் இல்ல, நல்ல காப்பி தான் பிரதர் (ஆஹா... நம்மள பத்தி நல்ல விதமாவே யாரும் யோசிக்க மாட்டேன்கராங்களே... கொஞ்சம் இமேஜ் damage தான் ஆய்டுச்சு போல). தலைவர் படம் இல்லாம எப்படி? நன்றி பிரசன்னா

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
தங்கமணி உங்க தெரிவை போல அதுக்கெல்லாம் கவிதை எழுதிருகீங்களே அதும் டாப் கிளாஸ் .
வர வர ரொம்ப மெருகேறுது உங்க ப்ளாக்
keep it up .//

வாவ்... உங்க கிட்ட இருந்து கவிதை பத்தி பாராட்டு வந்தது ரெம்ப சந்தோசமா இருக்கு பத்மா. ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
இதுல சில படங்கள் எனக்கும் பிடித்தது//

நன்றிங்க தமிழ் உதயம்

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
கவிதை எழுத தெரிஞ்சா எவ்லோ செளகர்யமா இருக்குப்பா!! ம்ம்ம். பல்லு இருக்கிறவன் பக்கோடா திண்ங்கத்தானே செய்வான்!!...:) எல்லா படமும் நன்னா இருக்கு 'அடப்பாவி' தங்க்ஸ்!!!!...:)//

நன்றிங்க பஞ்ச் தக்குடு (அடிக்கடி பஞ்ச் பழமொழி எல்லாம் சொல்றீங்களே...அதான் பஞ்ச்னு அடைமொழி சேத்துட்டேன்)

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
அருமையான செலக்‌ஷன். கூடவே கவுஜ!! கலக்கறீங்க அப்பாவி தங்கமணி!//

ரெம்ப நன்றிங்க அனன்யா

அப்பாவி தங்கமணி said...

//செ.சரவணக்குமார் சொன்னது…
ஒவ்வொரு படத்தின் இறுதியிலும் எழுதப்பட்டிருந்த கவிதைகளை ரசித்தேன். நல்ல தேர்வுகள் மேடம்//

ரெம்ப நன்றிங்க சரவணக்குமார்

அப்பாவி தங்கமணி said...

//அன்புடன் மலிக்கா சொன்னது…
/ஏன் பிடிச்சிருக்குங்கறதை கவிதையோட சொன்னீங்க பாருங்க,.. அது ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாருக்கு/
அதேதான். மெளனராகம் எனக்கும் பிடிக்கும். அப்பாவி.. //

ரெம்ப நன்றிங்க மலிக்கா. மௌன ரகம் எல்லாருக்குமே பிடிச்ச படம் தான் போல

அப்பாவி தங்கமணி said...

@ Dreamer - ஆமாங்க me too உங்க category தான். உங்க கதைகள் எல்லாம் சூப்பர் தான் அந்த category ல. கோதாவரி நிச்சியம் பாருங்க. தொடர அழைச்சதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

//சின்ன அம்மிணி சொன்னது…
பொண்ணு பாக்கற பதிவு போட்டாச்சு. நம்ம பக்கம் எட்டிப்பாருங்க//

கலக்கிடீங்க அம்மணி. சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

SathyaSridhar சொன்னது…
//Hey thangam, epdi irukeenga enakkum rombha rombha pidicha padam Mouna Raagam evlo time paarthaalum mudhal time paarkira maadiri utkarnthu paarpen, apram mozhi enakku pidicha padam, sathileelavathi enakkum pidikkum neenga enna coimbatore ahh rombha nerungiteengalae appa namma orru ammani ya neenga//

வாவ்.... உங்களுக்கும் மௌன ராகம் பிடிக்குமா? சூப்பர். நானும் நெறைய வாட்டி பாத்து இருக்கேன். ஆமாங் அம்மணி நமக்கு கோயம்புத்தூர்தானுங்க.... நீங்களும் அங்க தான் இல்லையா?

அப்பாவி தங்கமணி said...

//Hema சொன்னது…
Wounderful Collections. Love all the movies. Especially Abiyum Naanum, Mauna ragam, Dum Dum Dum, Sindhu Bhairavi are my Fav... //

Thanks Hema. I know most of us like these movies and will be in favourites list. Thanks for stopping by

அப்பாவி தங்கமணி said...

//ராமலக்ஷ்மி சொன்னது…
நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் நானும் ரசித்துப் பார்த்தவையே. கவிதையுடன் பகிர்ந்து விதம் அழகு புவனா:)!//

ரெம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி. சந்தோசமா இருக்கு என்னோட பிடித்த படங்கள் நெறைய பேருக்கு பிடிச்சு இருக்கறது

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
அந்த இங்லீஷ், தெலுங்கு படங்கள் தவிர (நான் தமிழச்சியாக்கும்!) எல்லாம் நாஉம் ரசிச்சுப் பார்த்தவை. என்னப் போலவே நல்ல ரசனை உங்களுக்கும்!! ;-))//

நானும் தமிழச்சிதானுங்க. காலக்கொடுமை கெடைக்கறது எல்லாம் பாத்துட்டு இருக்கேன். சரியா சொன்னிங்க, நம்ம எல்லாருக்குமே நல்ல ரசனை தான் (ரங்க்ஸ்க மாதிரி இல்ல ha ha ha)

அப்பாவி தங்கமணி said...

//ஸ்ரீராம். சொன்னது…
பிடித்த படங்களைச் சொன்னதோட கீழ அதற்கு ஒரு கவிதையும் சொல்லி அசத்திட்டீங்க...! கமல் படம் லிஸ்ட்டுல வராம ஒரு லிஸ்ட் தயார் செய்ய முடியுமா?//

ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம். கமல் படம் இல்லாம லிஸ்ட்ஆ? லட்டு இல்லாம திருப்தியா? குசும்பு இல்லாம கோயம்புத்தூர்ஆ? பாயசம் இல்லாம விருந்தா? நீங்களே சொல்லுங்க...

அப்பாவி தங்கமணி said...

//முகுந்த் அம்மா சொன்னது…
super selection//

Thanks முகுந்த் அம்மா

சுசி said...

கவிதையோட நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகாவும் வித்யாசமாவும் இருக்கு..

தெலுங்கு படம் தவிர மீதி எல்லாம் பாத்திருக்கேன்.. எனக்கும் பிடிக்கும்.

Madumitha said...

ஹேப்பி டேஸ்(தெலுங்கு)
பாத்தீங்களா?

Madhuram said...

Final Destination paarthadiillai, it sounds very interesting because I too believe a lot in fate and karma.

Enga veetula Ranagamani oru walking cinema encyclopedia. Avar dhaan adikadi edhavadhu padathilirundhu veetula nadakira situationukku etha madhiri dialogue eduthu vittukittu iruppaaru. Kalyanam aana pudhisila enaku idhu puriyave illa, dideernu ennennavo solrarenu. Enakkum neenga ezhudiyirukira padam ellam (FD ya thavira, innum paarkala) romba pidikkum.

Madhuram said...

Godavari kooda paarkala. Telugu movies paarthu romba varusham aachu. Madras la irundha varaikkum regulara paarpen in ETV, Gemini, inga vandhapparam parkaradhe illa. US la Gilli yoda original Telugu movie paarthen adukapparam onnume parakala.

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி. அந்த தெலுங்கு படம் ரெம்ப நல்ல இருக்கு. பாருங்க

@ Madumitha - Happy Days பாத்தேன் மது. அதுவும் ரெம்ப நல்லா இருக்கும். ஆனா கோதாவரி cinematography excellent

@ Madhuram - ஆஹா... சினிமால இருந்த டயலாக் வீட்லையா? கஷ்டம் தான் உங்க ரங்குவோட. கோதாவரி ரெம்ப நல்ல இருக்கு மது. Try sometime. நான் இங்க வந்தப்புறம் தான் தெலுங்கு movies அதிகம் பாக்கறது. ஊர்ல சான்ஸ் இருக்கல

சுந்தரா said...

ரசனையான தெரிவுகள் தங்கமணி...

இதில அநேகமா எல்லாமே எனக்கும் பிடிச்ச படங்கள்தான்.

அதோட கவிதைகள், சூப்பர்!

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - ரெம்ப நன்றிங்க சுந்தரா

Post a Comment