Friday, May 14, 2010

நன்றி சொல்ல உனக்கு...."நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

என்னடா இவ திடீர்னு சொற்பொழிவு ஆரம்பிச்சுட்டானு யோசிக்கறீங்களா? பயப்பட வேண்டாம். அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க

நன்றி பாராட்டு எல்லாம் எப்பவும் சேத்து வெச்சுக்க கூடாது, அப்ப அப்ப சொல்லிடணும். இது நம்ம பாலிசி

அரசியல்ல 33 % குடுத்தாங்களா இல்லையான்னு தெரியாது, நம்ம சேட்டைக்காரன் அவர்கள் எங்களுக்கு (பெண்களுக்கு) தன்னோட பதிவுல குடுத்துட்டார். அதுக்கு தான் இந்த நன்றி பதிவு

பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்
http://blogintamil.blogspot.com/2010/05/blog-post_14.html

அதுவும் சும்மா இல்ல... உலகம் போற்றும் பெண் கவிஞை அவ்வை பிராட்டி வாயல அதை வாங்கறது இன்னும் பெருமை தான் போங்க

ரெம்ப ரெம்ப நன்றிங்க சேட்டை என்னையும் உங்க பதிவுல சேத்ததுக்கு. நிச்சியம் நெறைய நேரம் செலவு பண்ணி எல்லா வலைபூக்களையும் படிச்சு தொகுத்து இருக்கீங்க. நன்றி

நெறைய புது வலை தோழிகளையும் அறிமுகம் செஞ்சு வெச்சதுக்கு மிக்க நன்றி

பதிவுலக பெண்களின் சார்பாக உங்களுக்கு நீங்கள் விரும்பிய வண்ணம் டாக்டர் பட்டம் அளித்து கௌரவப்படுத்துக்கிறோம்

டாக்டர் சேட்டை வாழ்க வாழ்க!!!

15 பேரு சொல்லி இருக்காக:

சேட்டைக்காரன் said...

நீங்க கொடுத்த டாக்டர் பட்டத்தை வீட்டுலே ஃபிரேம் போட்டு மாட்டிட்டேனுங்க! :-))

மிக்க நன்றி! வலைச்சரத்தில் வலைப்பூக்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது தானே முக்கியப் பணி! அதைத் தான் செய்திருக்கிறேன். இப்படியொரு தனிப்பதிவு போட்டு பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு இதயம் கனிந்த நன்றி சகோதரி! வாழ்க வளமுடன்!

ஹேமா said...

நானும் இப்போ கொஞ்ச நாளாகத்தான் இவரது பதிவுகள் படிக்கிறேன்.பாரமான மனதோடு போய் சிரித்துக் களைத்து மனம் இலேசாகி வருவேன்.பாராட்டுக்கள் அவருக்கு என் சார்பிலும்.

தக்குடுபாண்டி said...

hello adappavi, ippadiyellam post poottu thappikka try panna veendam. olunga intha week postai poodungo!!..;)

என்றும் வம்புடன்,
தக்குடு

அமைதிச்சாரல் said...

அருமையாக நகைச்சுவை கைவருகிறது அவருக்கு. அவரோட இடுகைகளை படிச்சதும் மனசெல்லாம் அப்படியே லேசாகிடும். வாழ்த்துக்கள் சகோதரரே!.. தனிப்பதிவு போட்ட அப்பாவிக்கும் நன்றி.

Priya said...

உண்மையிலேயே வேறு யாராவது இப்படி நன்றி தெரிவித்து இருப்பார்களா என்பது தெரியவில்லை! என் பதிவை பற்றியும் சேட்டைக்காரன் அதில் குறிப்பிட்டு இருந்தார்.என்னால் தனி பதிவாக நன்றி தெரிவிக்க முடியாமல் போனாலும் அதில் குறிப்பிட்டு இருந்த அனைத்து பெண்களின் சார்பாக நீங்க நன்றிகளை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

டம்பி மேவீ said...

ஹேமா சொன்னது போல நானும் அவரது பதிவுகளை படித்து கொஞ்சம் மனசை லேசாக்கி கொண்டிருக்கிறேன் ...

வாழ்த்துக்கள்

அன்னு said...

ஹ. எப்படியோ நாங்களும் களத்துல இறங்கிட்டோம். 33% கிடைப்பதற்கு முன்னாடியே. வந்து, ஆதரவுதாருங்கள் சகோதர சகோதரிகளே.

vanathy said...

அப்பாவி தங்கமணி, சேட்டைக் காரன் வலைப்பூ இன்னும் பார்க்கவில்லை. பார்த்து விட்டு வருகிறேன்.

அப்பாடியோ என்னமா யோசித்து பெயர் வைக்கிறீங்கள்.... அப்பாவி தங்கமணி, தக்குடுபாண்டி, சேட்டைக்காரன். எனக்கு இதெல்லாம் தோணவே இல்லை.

ராமலக்ஷ்மி said...

சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள்.

கெளரவித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

அப்பாவியா நீங்க...இதையே ஒரு தனி இடுகை ஆக்கிட்டீங்களே...

ஹேமா சொன்னது : "பாரமான மனதோடு போய் சிரித்துக் களைத்து மனம் இலேசாகி வருவேன்"

டம்பி மேவீ சொன்னது : " ஹேமா சொன்னது போல நானும் அவரது பதிவுகளை படித்து கொஞ்சம் மனசை லேசாக்கி கொண்டிருக்கிறேன்"//

நான் ஏற்கெனவே லேசான மனசுங்கறதால பறக்க ஆரம்பிச்சுடுவேன்..!!

புதுகைத் தென்றல் said...

சேட்டைத் தம்பிக்கு எனது நன்றிகளும்

செ.சரவணக்குமார் said...

நண்பர் சேட்டைக்காரனுக்கு எனது நன்றிகளும். அசத்துறாருங்க, வலைச்சரத்துல மட்டுமில்லை அவரது தளத்திலும்.

அப்பாவி தங்கமணி said...

@ சேட்டை - நன்றிங்க சேட்டை மீண்டும்

@ ஹேமா - சரியா சொன்னீங்க ஹேமா. வருகைக்கி நன்றி

@ தக்குடு - அப்படி எல்லாம் இல்லைங்க பிரதர். போஸ்ட் நாளைக்கு போட்டுடறேன்

@ அமைதிச்சாரல் - ஆமாங்க.. அது ஒரு பெரிய வரம் தான்...சிரிக்க வெக்கறது பெரிய கலை தான்

@ Priya - ரெம்ப நன்றிங்க ப்ரியா

@ டம்பி மேவி - நிச்சயமா.... நன்றிங்க

@ அன்னு - நிச்சயமா அன்னு... கலக்கலா ஆரம்பிச்சு இருக்கீங்க.... தொடர்ந்து கலக்குங்க

@ Vanathy - நம்ம பேரை தான் நாம வெச்சுக்க முடியல.... வலை உலக பேராச்சும் வெப்போம்னு வெச்சது தான். வானதி அழகான பெயர் தான்

@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க சகோதரி

@ ஸ்ரீராம் - ஆஹா... சான்ஸ் கெடைக்கறப்ப எல்லாம் வாருறீங்களே பிரதர்... பறக்க ஆரம்பிச்சுடுவீங்களா... ஆஹா.. சௌரியம் தான் பஸ் சார்ஜ் flight சார்ஜ் எல்லாம் மிச்சம்

@ புதுகை - ரெம்ப நன்றிங்க புதுகை உங்க நன்றிய பதிவு செஞ்சதுக்கு

@ செ.சரவணக்குமார் - ஆமாங்க கலக்கல் தான் எல்லாத்துலயும்

Jaleela said...

வாழ்த்துக்கள்.

டாக்டர் பட்டம் சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela - ரெம்ப நன்றிங்க ஜலீலா

Post a Comment