Tuesday, May 18, 2010

வீட்டை வித்துப்பார்..."வீட்டை கட்டி பார் கல்யாணம் பண்ணி பார்" தானே பழமொழி, இவ என்ன சம்மந்தமே இல்லாம சொல்றான்னு பாக்கறீங்களா. சொந்த (நொந்த) அனுபவம் அப்படி

இனிமே "வீட்டை வித்து பார்... புரோக்கர் கமிஷன் குடுத்து பார்" தான் என்னோட புதுமொழி

இருக்கற ஊரு அப்படி, நடந்த கதை அப்படி. இது.... கதையல்ல நிஜம்... மக்களே.... கேளுங்க சொல்றேன்

நான் மொதல்லையே ஒரு பதிவுல சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். தினமும் ஆபீஸ் போறது என்னமோ திருப்பதி மலை ஏறி எறங்கற மாதிரி தான் எனக்கு. ஆபீஸ் மலை மேலயான்னு எல்லாம் நக்கல் பண்ணினா இட்லி பார்சல் வரும்... ஆமா... சொல்லிட்டேன்...

தினமும் travel டைம் மட்டும் கிட்டதட்ட 3.5 to 4 hours ஆய்டுது. winter னா இன்னும் கொடுமை. இதுல ரங்கமணி வேற ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விட்ரதுக்கே என்னமோ ஆபீஸ் வாசல்ல டிராப் பண்ற மாதிரி "என்னை டிரைவர் வேலை பாக்க வெக்கறே"ன்னு டென்ஷன் ஆவார் அப்போ அப்போ

"மாசம் முந்நூறு டாலர் பார்கிங் குடுங்க நானே கார் எடுத்துட்டு போய்க்கறேன்"னு சொன்னா மட்டும் selectivehearingasia வந்துடும், அது என்னவா? selectiveamnesia மாதிரி இதுவும் ஒண்ணு, ரங்கமணிகள் ஸ்பெஷல், "வேண்டாங்கறது மட்டும் காதுல விழாது" ங்கறது அதோட தமிழாக்கம். இந்த விசியத்துல ரங்கமணிகள் PHD தான் (என்ன நான் சொல்றது சரி தானே...?)

சரி வீட்டு கதைக்கி போவோம். இந்த வம்பெல்லாம் வேண்டாம்னு பேசாம வீட்டை வித்துட்டு ட்ரெயின் ஸ்டேஷன் பக்கமா எதுனா வாங்கிக்கலாம்னு கிட்டத்தட்ட ஒரு வருசமா போராடி ரங்கமணிய ஒத்துக்க வெச்சாச்சு. அப்போ எனக்கு தெரியல அதை விட பெரிய போராட்டம் எல்லாம் இனிமே தான்னு (ச்சே... இதே தொடர் கதையா இருந்தா "வர போகும் விபரீதத்தை அறியாமல்"னு ஒரு "தொடரும்" போட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணலாம்....ஹும்... இங்க முடியாதே...)

நாங்க இருக்கறது இந்த ஊரு பாஷைல சொல்லணும்னா semi-detached single family home . அதாவது ரெண்டு ரெண்டு வீடு சேந்து இருக்கும். தனி வாசல் தனி backyard , தனி கார்டன், தனி கார் garage எல்லாம் இருக்கும்.நடுல இருக்கற சுவர் மட்டும் ரெண்டு வீட்டுக்கும் பொதுவா இருக்கும்

வீடு விக்கறதுன்னு முடிவு பண்ணினதும் ஆள் ஆளுக்கு ஐடியா அம்புஜன்களா மாறி ஐடியா சொல்ல ஆரம்பிச்சுடாங்க. சிலர் பயப்படுத்த ஆரம்பிச்சாங்க.

சில dialogues எல்லாம் இதோ உங்களுக்காக....

"புவனா... எதுக்கும் ஒரு பத்து பதினஞ்சாயிரம் டாலர் renovation க்கு எடுத்து வெச்சுடு.அப்புறம் புரோக்கர் கமிஷன் ஒரு பதினஞ்சாயிரம். அப்புறம் இந்த lawyer பீஸ், பேங்க் பெனால்டி etc etc எல்லாம் சேந்து.... எப்படியும் ஒரு மூணு நாலாயிரம் வந்துடும்.....ரெடிஆ இருங்க" அப்படின்னு ரங்கமணிய ஓர கண்ணுல பாத்துட்டே பத்த வெச்சுட்டு போய்டாங்க...

"இதெல்லாம் தேவையா..." னு ஒரு லுக், வேற யாரு ரங்கமணி தான் (எனக்கு இந்த சமயத்துல கை குடுத்தது selectivevisionasia ..... விளக்கம் தேவை இல்லைன்னு நெனைக்கிறேன்...)

இன்னொருத்தர் சொன்னாரு "நல்ல காஸ்ட்லி furniture , ஆர்ட் வொர்க், flowers , decoration , candles எல்லாம் வெச்சா சீக்கரம் வித்திடும்" னாரு

எனக்கு ஒரே சந்தேகமா போச்சு...நாம விக்கறது வீட்டை தானே... furniture flowers இல்லையேனு

நான் தான் உலகம் தெரியாத அப்பாவின்னு உங்களுக்கு தெரியுமே...

இன்னும் ஒருத்தர் என்னனா "நாங்க வீட்டை sale போட்டுட்டு நொந்துட்டோம்...  ரெண்டு மாசம் வீட்டுல சமைக்க கூட முடியல... வெறுத்து போய்டுச்சு போங்க" னு புளியக் கரைச்சாரு

இப்படி இருந்த சமயத்துல ஒரு agent ஐ (புரோக்கர் தாங்க...) கூப்ட்டு "preliminary showing " வெச்சோம். அது என்னனா நமக்கு தெரிஞ்ச மாதிரி வீட்டை சீவி சிங்காரிச்சி அலங்காரம் பண்ணி "எப்படி....?" அப்படின்னு கேக்கறது தான். சரியா சொல்றதுன்னா பொண்ணு பாக்க வர்ற கதை மாதிரி தான். அதுல கூட சொஜ்ஜி பஜ்ஜியோட போகும், இங்க மகா கொடுமை

புரோக்கர் வந்து பாத்துட்டு வீடு எப்படி ஒகேவா இல்ல என்ன என்ன மாற்றங்கள் பண்ணனும்... என்ன விலைக்கி போடலாம், என்ன மாதிரி மார்க்கெட்டிங் technique எல்லாம் பண்ண போறார்னு ஒரு மீட்டிங் நடக்கும் நம்ம வீட்டுல. இந்த கொடுமைக்கு பேரு தான் "preliminary showing "

பொண்ணு பாத்துட்டு போய் புடிக்கலைன்னு சொன்னா இல்ல எதுனா கொறை சொன்னா "போய்யா... நீ குடுத்து வெச்சது அவ்வளவு தான்னு" சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்... ஆனா வீடு அப்படி இல்லியே... புரோக்கர் வர்றார்னதும் வீட்டையே கொட்டி கவுத்தி ஒரு வழி பண்ணினோம்

அதுக்குள்ள ஒரு நூறு சண்டையாச்சும் போட்டோம்ன்னு சொல்லி தெரிய வேண்டியதில்ல... சண்டை எதுக்கா? Difference of Opinion அப்படின்னா அதுக்கு முழு அர்த்தமே கணவன் மனைவி தானே... அப்புறம் வீட்டை அலங்கரிக்கதுல சண்டை வராமயா இருக்கும்

நான் சோபா இங்க போடலாம்னு அவர் ஏன் அங்க போட்டா என்னனுவார். நான் டிவி அங்க வெக்கலாம்னா ஏன் இங்க வெச்சா நல்லா இருக்குமேனு அவர்

இப்படியே ஒரு நாள் பூரா சண்டையும் காமெடியுமா வீட்டை நேராக்கினோம்... (அப்படின்னு நாங்களா சபாஷ் போட்டுகிட்டோம்... புரோக்கர் வந்தப்புறம் தான் தெரிஞ்சுது கொடுமை...தொடரும் போட கை துருதுருங்குது....)

புரோக்கர் வந்து பாத்தார். கைல ஒரு பேப்பர் பேனா எல்லாம் எடுத்துட்டு என்னமோ income tax raid வந்த மாதிரி வீட்டை சுத்தி சுத்தி பாத்தார். வாங்கினப்ப கூட நாங்க அப்படி பாத்ததா நினைவில்ல...

ஒரு ஒரு ரூம் அவர் பாக்கறப்ப நானும் ரங்கமணியும் அவர் முகத்த பார்க்கறது அப்புறம் நாங்க ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துக்கறது.... வேற என்ன... reaction read பண்றோமாம்... கொடுமைடா சாமி....

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா...அந்த புரோக்கர் பஞ்சாபி... நல்ல மனுஷன் சும்மா சொல்லக்கூடாது... பெரும்பாலும் இங்கிலீஷ்ல தான் பேசுவார்... நல்லாவே பேசுவார் இந்த ஊர் slang கூட... திடீர்னு எதுனா ஜோக் அடிக்கறப்ப இல்ல எதுனா சொல்றப்ப அவரும் ரங்க்ஸ்ம் டக்குனு ஹிந்தில பேச ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு தெரிஞ்ச ஹிந்தி எல்லாம் "Dilwale dulhania le jayenge"...."hum aapke hein kon" அளவு தான்

சனிக்கிழமை சனிக்கிழமை தூர்தர்சன்ல ஹிந்தி படம் பாத்து வளந்த knowledge நம்முது... இதுல இவிக பேசறது பாதிக்கும் மேல புரியாது.... நான் புரியாம திரு திருன்னு முழிச்சா ரங்கமணி மொகத்துல சந்தோசத்த பாக்கணுமே...  கல்யாணதன்னைகிகூட மனுஷன் மொகத்துல அப்படி ஒரு பிராகாசத்த பாக்கல போங்க...
அப்புறம் ஆரம்பிச்சது ராமாயணம்... மகாபாரதம் எல்லாம்....

புரோக்கர் குடுத்த லிஸ்ட்: (இதை கௌரவமா recommendations அப்படின்னு சொல்லுவாங்க....)

  1. Kitchen appliances (fridge/stove/dishwasher/rangehood microwave) to be replaced from white to stainless steel kind
  2. Painting to be done in Kitchen and all 3 bathrooms  
  3. Painting to be done in entrance foyer and all windows
  4. TV to be moved to basement (ரங்கமணிய பாத்து ஒரு லுக் விட்டேன் "அப்பவே சொன்னேன்ல" னு)
  5. Decorate thoroughout the house with flower pots,air freshners and candles

இப்படியே..... தொடர் கதையா "மணல் கயிறு" ல எஸ்.வி. சேகர் போட்ட லிஸ்ட் விட பெருசா போயிட்டே இருந்தது. எங்க ரெண்டு பேருக்கும் BP எகிறிடுச்சுனு சொல்லித்தான் தெரியணுமா...

"அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு"னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க....

அப்புறம் என்ன..... வேலை வேலை வேலை...வேலை தவிர வேறறியேன் பராபரமே தான்... செஞ்சு முடிச்சோம்... அப்பாடா முடிஞ்சதா புராணம்னு சந்தோசபடாதீங்க.... நான் கூட அப்படி தான் ஏமாந்தேன்...

இந்த ஊர்ல வீட்டை பாக்க ஆளுக வர்றாங்கன்னா, நாம வீட்டுல இருக்க கூடாது (சட்டப்படி அப்படி இல்ல... ஆனா புரோக்கர் சொல்றது அது தான் நல்லதுன்னு...என்ன நல்லதோ போங்க...)

போன வாரத்துக்கு முந்தின சண்டே வெற்றிகரமா புரோக்கர் வந்து வீட்டை போட்டோ எல்லாம் எடுத்து (பொண்ணு பாக்கற மாதிரின்னு நான் சொன்னது சரி தானே...) லிஸ்டிங் போட்டாரு

சண்டேவே ஒரு நாலு பேரு வந்து பாத்தாங்க. அப்புறம் அடுத்த நாலு நாளும் தினமும் நெறைய பேரு வந்து பாத்துட்டே இருந்தாங்க. தினமும் நைட் ஒம்பது மணி வரை வீட்டுக்குள்ள போக முடியாது. வெளியவே ஹோட்டல்ல சாப்டுட்டு (ஒரு வாரம் நோ சமையல் நைட்க்கு...ஹி ஹி ஜாலி தான் போங்க அந்த விசியத்துல....) காலைல ஏழு மணிக்கி ஆபீஸ் ஓடிடுவோம்...

தினமும் காலைல ஆபீஸ் போறதுக்கு முந்தி எல்லாம் ஒரு quick கிளீனிங் பண்ணி வீட்டை சிங்காரிச்சி வெச்சுட்டு போகணும்.... இப்படி போயிட்டு இருந்தப்ப....

புதன்கிழமை புரோக்கர் போன் பண்ணி இந்த வீக்எண்டு "openhouse " போடலாம்னு சொன்னாரு. Openhouse னா என்னனா... பொண்ணு உதாரணமே எடுத்துக்குவோம்.... ஜாதகத்தை புரோக்கர்கிட்ட குடுத்து வெச்சு இப்படி ஒரு பொண்ணு இருக்கு மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்கனு சொல்றது மாதிரி வேணுங்கறவங்க மட்டும் அவங்க புரோக்கர் மூலமா appointment வாங்கிட்டு வந்து வீட்டை பாக்கறது ஒரு ரகம், அது தான் மொதல் நாலு நாளு நடந்தது

அதே அந்த காலம் மாதிரி சுயம்வரம் வெச்சா...அது தான் openhouse . சனிக்கிழமை இல்லைனா ஞாயத்துக்கிழமை ஒரு ரெண்டு மணி நேரம் யாரு வேணா... வழில போறவன் கூட வந்து பாக்கலாம் (நானே சும்மா பொழுது போறதுக்கு அப்படி நெறைய பாத்து இருக்கேன்...இப்ப தான் புரியுது... அந்த வீட்டு ஓனர் எத்தனை கஷ்டப்பட்டு அலங்கரிச்சு வெச்சா நாம பொழுது போக பாத்தது கேட்டா நொந்து போயிருக்க மாட்டான்... யாரோ வயித்தெரிச்சல் எல்லாம் தான் இந்த பாடு படுத்துது...)

இந்த openhouse ல பாத்துட்டு யாருக்கு பிடிச்சு இருக்கோ அவங்க கேக்கற விலைக்கி கேக்கலாம். சில சமயம் ரெண்டு மூணு பேரு கேப்பாங்க. அப்போ யாரு அதிக விலை குடுக்கறாங்களோ அவங்களுக்கு போகும்

அந்த மாதிரி செய்யலாம்னு புரோக்கர் சொல்லிட்டு அதை அவங்க இன்டர்நெட் லிஸ்டிங் சைட்ல பப்ளிஷ் பண்ணினாரு. அதை பாத்ததும் ஒருத்தங்க openhouse னா ஆள் ஆளுக்கு பேசி விலை ஏத்தி விட்டுடுவாங்கன்னு விவரமா வியாழக்கிழமையே offerletter குடுத்தாங்க... நாங்க சொன்ன விலை விட ஒரு மூணு ஆயிரம் டாலர் தான் கம்மி அவங்க கேட்ட விலை. நாங்க எதிர்பாத்தது தான்

வீக்எண்டு openhouse வெச்சா கொஞ்சம் கூட விலை கெடைக்கலாம் இல்ல கெடைக்காமலும் போகலாம்.... அரசன நம்பி புருசன விட்ட கதை ஆய்ட கூடாதுன்னு... அந்த offer கே ஒத்துக்கிட்டோம்... ஓவரா ஆசைப்படக்கூடாது இல்லையா... இதோட முடிஞ்சதானா... அதான் இல்ல...

இங்க offer ஒகே ஆனப்புறம் வாங்கறவங்களுக்கு ஒரு வாரம்  டைம் இருக்கும். எதுக்குன்னா... homeinspection னு ஒரு formality இருக்கு. அதுக்குன்னு படிச்சுட்டு ceritification வாங்கி இருக்கறவங்கள கூட்டீட்டு வந்து இந்த வீட்டுல எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணனும். அது நம்ம வேலை இல்ல வாங்கறவங்க பொறுப்பு அவங்க செலவு தான்

ஆனாலும் என்ன சொல்ல போறானே என்னமோன்னு நமக்கு டென்ஷன் தானே. பொண்ணு பாத்துட்டு போயிட்டு எல்லாம் ஒகேன்னுட்டு... மாபிள்ளையோட அத்தை வந்து பாத்துட்டு சரின்னதும் முஹுர்த்தம்  குறிச்சுக்கலாம்னு சொல்றாப்ல தான் போங்க... (எனக்கு ஏன்தான் இப்படி comparision எல்லாம் தோணுதோ இன்னிக்கி தெரியல....)

இன்னொன்னு வீடு வாங்கறவங்க பேங்க்ல இருந்து லோன் approval லெட்டர் வாங்கி தரணும். இது ரெண்டும் முடிக்க தான் ஒரு வாரம் டைம். இது முடியற வரை விக்கறது நிச்சியம் இல்ல

அந்த ஒரு வாரமும் செம டென்ஷன். இதை நம்பி Openhouse யும் கான்சல் பண்ணிட்டு... சரியா தூங்க கூட இல்ல போங்க...

ஒரு வழியா போன வியாழக்கிழமை... எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுது... இனி ரெண்டு மாசாத்துல வீட்டை காலி பண்ணி தரணும்... அவ்வளவு தான் அப்பாடா.... (நீங்களும் அதே தான் சொல்றீங்கன்னு நல்லா கேக்குது....)

இப்ப சொல்லுங்க "வீட்டை வித்து பார். புரோக்கர் கமிஷன் குடுத்து பார்" னு நான் சொன்னதுலே எதுனா தப்பு இருக்கா?

ரெண்டு நாளா வேற ஒரு கவலை ஆரம்பிச்சாச்சு "ஐயோ... நமக்கு சரியா வீடு கெடைக்கணுமே ரெண்டு மாசத்துக்குள்ள"னு. ஒண்ணு விட்டா ஒண்ணு இருந்துட்டே இருக்கணுமே கவலை....

இதுல இருந்து நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னனா "கவலை எதுவும் இல்லைனா அதுவே ஒரு கவலை ஆய்டும் மனுஷனுக்கு". அப்படி ஒரு ஜென்மம் மனுஷ ஜென்மம்

இப்போதைக்கி வாடகை வீட்டுக்கு போயிட்டு அப்புறம் புதுசா கட்ற வீடு எதுனா புக் பண்ணிக்கலாம்னு தேடிட்டு இருக்கோம் வாடகைக்கி... எங்கயாச்சும் tolet போர்டு பாத்தா சொல்லுங்க என் இனிய தமிழ் மக்களே... (வீடு தேடற கதை என்ன ஆச்சுனு அடுத்த வாரம் சொல்றேன்... இருங்க இருங்க... நோ நோ ... என்னோட ப்ளாக்யை block எல்லாம் பண்ண கூடாது...இதெல்லாம் நல்லா இல்லை... சொல்லிட்டேன்....ஆமா... அப்புறம் இட்லி பார்சல் தான்... அதுக்கு மேல உங்க இஷ்டம்...)

இப்போ இன்னும் ஒரு கூடுதல் கவலை. இத்தனை நாள் இருந்த வீட்டை அதுவும் மொதல் மொதலா நாங்க ரெண்டு பேரு சேந்து வாங்கின வீட்டை மிஸ் பண்ணுவோமேன்னு கஷ்டமா இருக்கு. என்ன செய்ய? பொறந்து வளந்த வீட்டையே விட்டுட்டு வந்தாச்சு...இனி எந்த எடமும் நிரந்தரம் இல்லை தான் இல்லையா...

ஊர்ல எல்லாம் "இங்க உக்காந்து தான் உனக்கு தினமும் சாப்பிட வெப்பேன்" அப்படின்னு அம்மாவும்

" புவனா இந்த செவத்துல தான் ABCD எழுதி பழகினா" அப்படின்னு எங்க அப்பாவும் பெருமையா சொல்ற அந்த சுகமான பழைய நினைவுச்சின்னங்கள்  அடுத்த தலைமுறைக்கி நிச்சியம் இல்லை.... அது தவிர்க்க முடியாத மாற்றம்... காலத்தின் கோலம்... சரிங்க அப்புறம் பாக்கலாம்....

56 பேரு சொல்லி இருக்காக:

LK said...

புவனா
எவ்ளோ பெரிய கதை ....ஆனா இது கஷ்டம்தான். இங்கயே நிறைய கஷ்டம் இருக்கு . இன்னும் அங்கலாம் கேட்க வேண்டாம்

LK said...

//கல்யாணதன்னைகிகூட மனுஷன் மொகத்துல அப்படி ஒரு பிராகாசத்த பாக்கல போங்க... //

அன்னிக்கு எப்படி சந்தோசம் இருக்கும்.???? என்னங்க நீங்க

LK said...

சீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்

sriram said...

நாங்க வீடு வாங்குறதுக்கு நெறய தேடிட்டு அப்புறமா வாங்கலாமுன்னு விட்டுட்டோம். Other side of the table story இன்னிக்கு புரியுது..
:)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Madhuram said...

Enakku oru unmai therinjaganaum. Did you change the appliances to stainless steel? Acho naanga chancea miss panittome, enga seller kitta sollave illa. Everything looked okay only. Aana annaiku cleaning lady vandhu paathuttu stove romba rustya irukku, ungala nalla emathitaanga, ask them to replace it nu solra. DW and fridge is good but they have not maintained the stove, oven la drippings ellam pogave mattengudhu nu sonna. So we are thinking of getting a new ss stove. Indha DW and Fridge innuum oru 2-3 years ottittu apparam onnonna maathanum.

தக்குடுபாண்டி said...

(ச்சே... இதே தொடர் கதையா இருந்தா "வர போகும் விபரீதத்தை அறியாமல்"னு ஒரு "தொடரும்" போட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணலாம்....ஹும்... இங்க முடியாதே...)// ;;;) LOL yenna oru villathanam??

தக்குடுபாண்டி said...

//Enakku oru unmai therinjaganaum. Did you change the appliances to stainless steel? Acho naanga chancea miss panittome, enga seller kitta sollave illa. Everything looked okay only. Aana annaiku cleaning lady vandhu paathuttu stove romba rustya irukku, ungala nalla emathitaanga, ask them to replace it nu solra//
அடப்பாவி அக்கா, தெரிஞ்சிருந்தா நாம பேசாம நம்ப மதுரம் அக்காவுக்கே வித்துருக்கலாம். கிச்சன் மட்டும் சூப்பரா இருந்தா போதும் அக்காவை கவுத்திடலாம்....வடை போச்சே!!..:))

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு வீட்டுக்கு பின்னும் பல கதைகள் உண்டு. அது வாழ்ந்த கதையை சொல்லும். வீழ்ந்த கதையையும் சொல்லும்.

பத்மநாபன் said...

இட்லி விஷயம், தொடரும் போடப்போவதில்லை என்று சொல்லியே முழுப்பதிவையும் படிக்கவச்சுட்டிங்க...லோக்கல்ல புரோக்கர சாமளிக்கறத்தே கஷ்ட்டம்..வெளிநாட்டுல சரிகட்டி சாமளிச்சிட்டிங்க...நல்ல வீடு விரைவில் அமையப்பெற வாழ்த்துக்கள்.. கடைசில சூப்பர் செண்டிமெண்டா முடிச்சிட்டிங்க...
உண்மைதாங்க.....

அமைதிச்சாரல் said...

இப்படி ஒரு அவஸ்தையை பத்திரிக்கைகளில் படிச்சிருக்கேன். நேரடி அனுபவத்தை இப்பத்தான் கேள்விப்படுகிறேன். இந்தியர்கள் வீடுன்னா மசாலாஸ்மெல் எல்லாம் இருக்கும்ன்னு மட்டம் தட்டுவாங்களாமே உண்மையா?..

Krishnaveni said...

Very true bhuvana. I can understand your pain....excellent post as usual.

சுசி said...

முதல்ல வாழ்த்துக்கள். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கட்டும் :))

//பொறந்து வளந்த வீட்டையே விட்டுட்டு வந்தாச்சு...இனி எந்த எடமும் நிரந்தரம் இல்லை தான் இல்லையா...//
//எங்க அப்பாவும் பெருமையா சொல்ற அந்த சுகமான பழைய நினைவுச்சின்னங்கள் அடுத்த தலைமுறைக்கி நிச்சியம் இல்லை..//

வார்த்தைகள் வர்ல..

Matangi Mawley said...

romba unmai! sontha anubhavam illa.. anubhava pattavanga solli kettathundu!

kashtam thaan!

thanks for sharing! :)

முகுந்த் அம்மா said...

வாவ், North அமெரிக்காவில வீட்டை வாங்கி போட்டுட்டு விக்க மக்கள் படர கஷ்டத்தை அழகா சொல்லி இருக்குகீங்க. நானும் வேற ஊருக்கு போறதுக்கு இந்த காரனத்தினால தான் ரொம்ப யோசிக்கிறேன்.

சீக்கிரமே நல்ல வீடு கிடைக்கும்.

எந்த வீடும் நிரந்தரம் இல்லப்பா இங்க எல்லாம். அஞ்சு வருஷம் தான் எல்லாரும் இங்க ஒரு வீட்டுல இருப்பாங்களாம், ஒருத்தர் சொன்னாங்க.

ஹேமா said...

வீட்டைக் கட்டிப்பார்ன்னு தான் சொல்லக் கேட்டிருக்கேன்.நீங்க வித்துப்பார்ன்னு புதுமொழி சொல்லிட்டீங்க.

"வீடு"ன்னு சொல்றப்பவே அதுக்குள்ள அடங்குற கற்பனைகள் ஆசைகள் நிராசைகள்ன்னு நிறைய இருக்கும்.
ஒவ்வொரு சுவரும் எங்கள் ரகசியங்களை அடக்கி வச்சிருக்கும்.
சொல்லியிருக்கிற விதம் இயல்பு.

vanathy said...

அப்பாவி தங்கமணி, அட ஆமாம். இந்த ஓப்பன் ஹவுஸ் வைச்சா பல்லு விளக்க கூட மறந்துடும். நாத்தம் பிடிச்ச வாயுடன் காரை கொஞ்சம் தூரமாக பார்க் பண்ணிட்டு, யார் வீட்டுக்குள் ஷூ போட்டுட்டு போறான் என்று கவனிச்சு டென்ஷன் ஆயிடும். ஏன்னா வர்றவன் போறவன் எல்லாம் சும்மா டைம் பாஸிங் ஆக பூந்து வெளியே வருவானுங்க.

எங்கள் வீட்டையும் விற்க வேண்டும். ஆனால் பயமாக இருக்கு. என் பிள்ளைகளை வைத்துக் கொண்டு இதெல்லாம் ஆவுற காரியமாக தெரியவில்லை.

LK said...

அந்த கதையோட இறுதி பாகம் எங்க. அதைத்தான் போடணும் முதல்ல

அன்புடன் அருணா said...

ஆஹா...இவ்வ்ளோ கஷ்டம் விக்கிறப்போன்னா வாங்க எவ்வ்ளோ கஷ்டமாயிருக்கும்????

அஹமது இர்ஷாத் said...

ரொம்பத்தான் அவஸ்த்தை பட்டு இருக்கீங்க.. வேதனையான விஷயம்தான்...

ஹுஸைனம்மா said...

//ச்சே... இதே தொடர் கதையா இருந்தா "வர போகும் விபரீதத்தை அறியாமல்"னு ஒரு "தொடரும்" போட்டு //

நல்லவேளை ஆண்டவன் எங்களைக் காப்பாத்திட்டான்.

//தினமும் travel டைம் மட்டும் கிட்டதட்ட 3.5 to 4 hours ஆய்டுது.//

ரொம்பப் பொறுமை உங்களுக்கு!!

ஹுஸைனம்மா said...

என்னதான் சிரிச்சுகிட்டே எழுதினாலும்/பேசினாலும், உண்மையிலேயே ஒரு சொத்தை விற்கிறதோ/ வாங்குறதோ ரொம்ப கஷ்டமானதுதான். வெளிநாடுகள்லயாவது ஓரளவு பரவால்ல. நம்மூருலன்னா, வாங்கினதைப் பாதுக்காக்கிறதே ஒரு பெரிய பிரச்னை!!

இந்த ஊரு தற்காலிகமென்றாலும், சில வருடங்களே இருந்த வீடென்றாலும் பிரிவது சோகம்தான்!!

ஹுஸைனம்மா said...

அதெல்லாம் இருக்கட்டும்.

//"மாசம் முந்நூறு டாலர் பார்கிங் குடுங்க நானே கார் எடுத்துட்டு போய்க்கறேன்"னு சொன்னா மட்டும் selectivehearingasia வந்துடும்//

இதப் பாத்துட்டு எந்த பெண்ஈயவாதிகளும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்னெல்லாம் கொதித்தெழவில்லையா இன்னும்? ;-)))

சின்ன அம்மிணி said...

நாங்கெல்லாம் முதல்ல வாடகைக்கு விட்டோம். ஒப்பன் ஹோம் போட்டப்போ, குடியிருக்கறவங்க நல்லா வீட்டை ஷோ பன்ணிட்டாங்க :)

My days(Gops) said...

எப்படியோ வீட்டை வித்த கதையை சொல்லிட்டீங்க வெற்றிகரமா தொடரும் போடாம… எவ்வளவு கஷ்டம்? விக்கிறதுக்கு 15 ஆயிரம் செலவு செய்றதை விட 300 க்கு பார்க்கிங் டிக்கெட் எடுத்து இருக்கலாம் .. அட்லீஸ்ட் ஒரு 4 வருஷம் இதே வீட்டுல இருந்து இருக்கலாம்….. எது எப்படியோ ஒன்னு போனா தான் இன்னொனு வரும் :) ......

My days(Gops) said...

இனி நாங்க ஆவலுடன்"வீடு வாங்கின கதையை"எதிர் பார்க்கிறோம் :)

முடிஞ்சா உங்களுக்கு வீடு வித்தவங்க கதையும் சேர்த்து சொல்லுங்க. அவங்க என்னத ஆல்டர் பண்ணுனாங்க'னு தெரிஞ்சிக்குவோம்… :)

SathyaSridhar said...

Bhuvana,,yeppa enakku kanna kattuthu paa nethe page open paninen paatha periya kathaiya irukkum poela time venumn innaikku padikalamnu ippo utkarnthu padichen,,, enakkae heart konjam valikka aarambichuduchu evloe prachanaigal adukku adukku kundugal malai ohhh kadavula unmaiyana palamozhi thaan ,,ellaraium thuppaki kathi nnu thaan mirattu vaanga aana neenga rombha great Idli vechae mirattu reenga ithukkagavae yaarum vaaya thirakka maatoem..

சுந்தரா said...

வீடு கிடைக்கிறதுதான் கஷ்டம்னா விக்கிறதுமா?

கஷ்டத்தையும்,நகைச்சுவை,தத்துவம்னுகலந்து சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க :)

கடைசியா சொன்ன விஷயம் ரொம்ப டச்சிங் புவனா.

மாதேவி said...

வீடு வாங்குவதோ விற்பதுவோ ரொம்ப சிரமமானதுதான்.

நல்ல வீடு கிடைத்து இனிதேவாழ வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
புவனா
எவ்ளோ பெரிய கதை ....ஆனா இது கஷ்டம்தான். இங்கயே நிறைய கஷ்டம் இருக்கு . இன்னும் அங்கலாம் கேட்க வேண்டாம்//

ஆமாங்க LK கொடுமை தான் போங்க

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
//கல்யாணதன்னைகிகூட மனுஷன் மொகத்துல அப்படி ஒரு பிராகாசத்த பாக்கல போங்க... //
அன்னிக்கு எப்படி சந்தோசம் இருக்கும்.???? என்னங்க நீங்க//

என்னையா வம்பு இழுக்கறீங்க... இருங்க இருங்க எங்க ஊரு அம்மணிகிட்டயே போட்டு தர்றேன்

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
சீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்//

நன்றிங்க LK , அதையும் ஒரு பதிவா போட்டு torture பண்ணுவோம்ல

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
நாங்க வீடு வாங்குறதுக்கு நெறய தேடிட்டு அப்புறமா வாங்கலாமுன்னு விட்டுட்டோம். Other side of the table story இன்னிக்கு புரியுது..//

வாங்க Sriram , வாங்கறது ஒரு வகைல கஷ்டம்னா இது அதை விட, வாங்கறப்ப அட்லீஸ்ட் agent கமிஷன் இல்லியே...I heard it is sellers market now and better to wait until next year to buy..

அப்பாவி தங்கமணி said...

@ Mathuram - வாங்க அம்மணி. ஆமாங்க, appliances எல்லாம் stainlesssteel மாத்தினோம். It is not asked by the buyer. Our agent suggested it is better to invest couple of thousand dollars to sell the house sooner. So we did. White is okay only to use, but from selling point of view stainless steel is better

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - இது வில்லத்தனம் இல்லை பிரதர். எல்லாரோட மூளைக்கும் வேலை குடுக்கற நல்ல எண்ணம். பாவம் அது (மூளை) சும்மாவே இருந்தா கேட்டு போயிராதா....அந்த நல்ல மனசு தான்... இப்ப தான் என்னோட நல்ல மனசை எல்லாரும் புரிஞ்சுக்க போறாங்களோ....?????

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி சொன்னது…
அடப்பாவி அக்கா, தெரிஞ்சிருந்தா நாம பேசாம நம்ப மதுரம் அக்காவுக்கே வித்துருக்கலாம். கிச்சன் மட்டும் சூப்பரா இருந்தா போதும் அக்காவை கவுத்திடலாம்....வடை போச்சே!!..:))//

ஆமாம் தக்குடு. போச்சே போச்சே பதினஞ்சு ஆயிரம் கமிஷன்... சொக்கா.... பதினஞ்சு ஆயிரம் .... பதினஞ்சு ஆயிரம்... எனக்கு இல்ல... எனக்கு இல்ல...

அப்பாவி தங்கமணி said...

@ தமிழ் உதயம் - வாஸ்துவம்தாங்க தமிழ் உதயம். வீடு பல கதைகள் சொல்லும்

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - இட்லின்னு ஒரு மேட்டர் கைல வெச்சுட்டு இருக்கறதால தான் ஏதோ பொழப்பு ஓடுதுங்க. புரோக்கர் நல்லவர் தாங்க, அதுல பிரச்சினையே இல்ல... வேலை தான் ரெம்ப நச்சு வேலை வீடு விக்கறது. முதல் வருகைக்கி நன்றிங்க பிரதர்.

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - அதை ஏன் கேக்கறீங்க? வீட்டுல சமைக்கவே வேண்டான்னு விட்டுடோம் நாளு நாளும். Onion Garlic எல்லாம் இவங்களும் use பண்றது தான்.... சொல்லப்போன கார்லிக் பிரட்னு ஒண்ணை நான் பழகினதே இந்த ஊருக்கு வந்தப்புறம் தான்... ஆனா என்னமோ வீடு showing போடறப்ப ரெம்பத்தான் அலட்டுறாங்க போங்க... எப்படியோ சமாளிச்சு வித்தாச்சு...

@ Krishnaveni - தேங்க்ஸ் கிருஷ்ணவேணி

@ சுசி - நன்றிங்க சுசி உங்க வாழ்த்துக்கு

@ Matangi Mawley - ஆமாங்க மாதங்கி, கஷ்டம் தான் போங்க. முதல் வருகைக்கி நன்றி

@ முகுந்த் அம்மா - வாங்க முகுந்த் அம்மா. ஆமாங்க நெறைய பேரு இதனாலேயே வீடு மாத்த யோசிக்கறாங்க. வாஸ்துவம் தான் இங்க எல்லாரும் அஞ்சு வருஷம் தான் maximum ஒரு வீட்டுல. நாமளும் செண்டிமெண்ட்ஸ் attachments வெச்சுக்காம பழகிக்க வேண்டியது தான். சீக்கரம் நல்ல வீடு அமைய வாழ்த்தினதுக்கு நன்றிங்க

@ ஹேமா - நன்றிங்க ஹேமா. புதுமொழி தான் போங்க.... அனுபவம் அப்படி

@ Vanathy - ஆமாங்க வானதி, நான் கூட அப்படி எல்லாம் சும்மா டைம் பாஸ்க்கு போய் இருக்கேன்...அதோட வினை தான் இப்போ... பிள்ளைகள வெச்சுகிட்டு கஷ்டம் தான் வீடு விக்கறது... எங்க friend ஒருத்தங்க வீட்டை sale போட்டுட்டு பசங்கள கூட்டிட்டு ஊருக்கு போய்டாங்க ஒரு மாசம் vacation க்கு .. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ LK - இறுதி பாகம் சீக்கரம் போட்டுடறேனுங்க.... பொறுமைக்கி நன்றிங்க....

@ அன்புடன் அருணா - வாங்கறதுக்கு இத்தனை கஷ்டம் எனக்கு தோணலைங்க... ஒரு வேளை வீடு வாங்க போறோம்ங்கர சந்தோசத்துல தெரியலையோ என்னமோ... கமிஷன்உம் இல்லியே வாங்கறப்ப....

@ அஹமது இர்ஷாத் - ஆமாங்க பிரதர்

@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா... ஆண்டவன் கூட என்கிட்டே இருந்து உங்களை எல்லாம் காப்பாத்த முடியாது போங்க.... ஆமாங்க பொறுமை தான் எனக்கு... அதான் இப்போ பொறுமை எல்லை மீறி வீடு விக்கற முடிவு எடுத்துட்டோம்.... நீங்க சொன்னது ரெம்ப சரி, நம்ம ஊருல பாதுகாக்கறது இன்னும் கஷ்டம் தான்...

//ஹுஸைனம்மா said - இதப் பாத்துட்டு எந்த பெண்ஈயவாதிகளும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்னெல்லாம் கொதித்தெழவில்லையா இன்னும்? ;-))) //

ஹும்ஹும்.... யாரும் சப்போர்ட் பண்றாப்ல காணோமுங்க ஹுஸைனம்மா... உங்களுக்காச்சும் தோணுச்சே... ரெம்ப நன்றி

@ சின்ன அம்மணி - ஆஹா... இந்த ஐடியா எங்களுக்கு தோணலியே... ஆனா உங்களுக்கு அமைஞ்ச tenants தங்கமான மனுசங்க போல இருக்கு... இல்லைனா வம்பு தான் இல்லையா?

அமுதா கிருஷ்ணா said...

வீடு விற்கவே இந்த பாடா? போதும்டா சாமி...

அப்பாவி தங்கமணி said...

@ //My days(Gops) said - விக்கிறதுக்கு 15 ஆயிரம் செலவு செய்றதை விட 300 க்கு பார்க்கிங் டிக்கெட் எடுத்து இருக்கலாம் //
பார்கிங் டிக்கெட் எடுத்தாலும் இந்த டிராபிக்ல ஓட்டி நொந்து போய்டனுங்க... ஆபீஸ் இருக்கற எடம் டவுன்குள்ள.... அதுவும் ஒரு காரணம் வீடு விக்க... ஒன்னு போனா தான் இன்னொனு வரும்னு சொன்னீங்களே.. நூத்துல ஒரு வார்த்தை... நன்றிங்கோ...

@ My days(Gops) - உங்கள ரெம்ப மனசு தைரியம் ஜாஸ்தி தான் போங்க... எதை படிச்சபுரமும் வீடு வாங்கற கதைய கேக்கற உங்களுக்கு கோவில் கட்டலாம் போங்க... கண்டிப்பா சொல்றேன் (விதி யாரை விட்டது....????)

@ SathyaSridhar - ஆமாங்க சத்யா... என்னோட பொலம்பல் கொஞ்சம் பெருசாதான் போய்டுச்சு... எழுதிட்டு அப்புறம் எடிட் பண்ணலாம்னு நெனச்சேன்...அப்புறம் it doesn't make sense if I do so னு தோணுச்சு... so அப்படியே விட்டுட்டேன்... இட்லினு ஒரு ஆயுதம் கைல இருக்கறதால தான் பொழப்பு ஓடுதுங்க... ஹா ஹா ஹா

@ சுந்தரா - ஆமாங்க சுந்தரா கஷ்டம் தான் எல்லாம். நன்றிங்க

@ மாதேவி - சிரமம் தானுங்க. நன்றிங்க மாதேவி

அப்பாவி தங்கமணி said...

@ அமுதா கிருஷ்ணா - வாங்க அமுதா. முதல் வருகைக்கி மொதல்ல நன்றிங்க. ஆமாங்க. வீடு விக்கறது பாடு தான் போங்க...

அன்னு said...

நாங்க இப்பத்தான் வீட்டை வாங்கிப்பார் ஸ்டேஜை எட்டியிருக்கோம். அதுவுமே இன்னும் டீல் முடிய ஒரு மாதம் இருக்கு. பதிவுக்கு குறைச்சலே இல்லை போங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

து என்னவா? selectiveamnesia மாதிரி இதுவும் ஒண்ணு, ரங்கமணிகள் ஸ்பெஷல், "வேண்டாங்கறது மட்டும் காதுல விழாது" ங்கறது அதோட தமிழாக்கம். இந்த விசியத்துல ரங்கமணிகள் PHD தான் (என்ன நான் சொல்றது சரி தானே...?)///

ஆமாங்க ஆமா.. சரி யே தான்.

எவ்வளவு அப்பாவி நீங்க அதக்காகவே நல்ல வீடுகிடைக்க வேண்டிக்கிறேன்.

அனாமிகா துவாரகன் said...

ஆரம்பம் முதல் இறுதிவரை டெரர் தங்கமணியில் டச் அப்படியே இருக்கு. waaaahaaaaahaaaa

Ananthi said...

சூப்பர் மா...! அழகா சொல்லி இருக்கீங்க.. வீடு விக்கிற கஷ்டத்த.. இங்க ஒரு பிரண்ட் , வீட்ட சேல்ல போட்டு, ஒன்னும் கதைக்கு ஆகாம.. திரும்ப எடுத்துட்டாங்க..

//"மாசம் முந்நூறு டாலர் பார்கிங் குடுங்க நானே கார் எடுத்துட்டு போய்க்கறேன்"னு சொன்னா மட்டும் selectivehearingasia வந்துடும், அது என்னவா? selectiveamnesia மாதிரி இதுவும் ஒண்ணு, ரங்கமணிகள் ஸ்பெஷல்,//

ஹா ஹா ஹா.. இது செம செம சூப்பர்..!! ;)

Venkatesh said...

"கவலை எதுவும் இல்லைனா அதுவே ஒரு கவலை ஆய்டும் மனுஷனுக்கு". அப்படி ஒரு ஜென்மம் மனுஷ ஜென்மம்"

மனித வாழ்கையின் தத்துவம்.

உங்களது அனுபவத்தை நன்றாக எழுதி இருந்தீர்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - இப்போ தான் வீட்டை வாங்கி இருக்கீகளா? சரி சரி, Long way to go தான் போங்க. வாழ்த்துக்கள். நன்றி வருகைக்கு

@ முத்துலட்சுமி - நன்றிங்க நன்றிங்க, நீங்களாச்சும் நான் சொன்னதா ஒத்துகிட்டீங்களே.... ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு போங்க. நன்றிங்க உங்க வேண்டுதலுக்கு

@ அனாமிகா - வாங்க அம்மணி. அடிப்பாவி, லவ் ஸ்டோரி எழுதினாலும் terror னு சொல்ற, காமெடி பண்ணினாலும் terror ஆ. எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் கமெண்ட்ம் வரும்

@ ஆனந்தி - நல்லா சொன்னீங்க ஆனந்தி, நானும் சேல் போட்டு திருப்பி எடுத்த கதை நெறைய கேட்டு இருக்கேன். நன்றிங்க ஆனந்தி (welcome to anti - rangamani movement)

@ Venkatesh - வாங்க பிரதர். அப்போ அப்போ இப்படி தத்துவம் வந்துடுது. நன்றிங்க வெங்கடேஷ்

மகி said...

முதல் முறையா உங்க ப்ளாக் வந்திருக்கேன்..இன்ட்ரஸ்டிங்-ஆ இருக்கு எல்லா பதிவுகளும்!
வீடு பாத்துட்டீங்களா? :)

அப்பாவி தங்கமணி said...

welcome மகி...வாங்க வாங்க... முதல் வாட்டி வந்து இருக்கீங்க.... என்ன சாப்பிடுறீங்க? ஆஹா... கிச்சன் கில்லாடி கில்லாடி (நீங்க தான்) இந்த கிலாடி (நான் தான்) இந்த கேள்வி கேட்டது தப்புதேன். வேணா இட்லி சாப்பிடறீங்களா (என்னோட இட்லி பதிவு இன்னும் படிகலைன்கர நம்பிக்கை தான்)

வீடு பாத்துட்டே இருக்கோம்.. இன்னும் ஒண்ணும் அமையலங்க..

vanathy said...

இதென்ன கூத்து? எங்க இட்லி டீச்சருக்கே இட்லியா? இட்லியை சப்பாத்தி போல செய்து, என் கணவருக்கு இதான் இட்லி என்று சொல்லிக் குடுத்து வந்தேன். மகியின் புண்ணியத்தால் நானும் இப்ப நல்லாவே இட்லி செய்கிறேன். நீங்களும் போய் பாருங்கள், தங்ஸ்.

அப்பாவி தங்கமணி said...

வானதி, கதை அப்படி போகுதா... எனக்கு தெரியாம போச்சே... நானும் போய் மகியோட recipe பாக்கறேன்... (அப்போ நீங்களும் சப்பாத்தி இட்லி தானா மொதல்ல... ஹையோ ஹையோ...ஹி ஹி ஹி )

மகி said...

ஆஹா..வானதியும்,தாங்க்ஸ்-ம் சேர்ந்து நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க போல இருக்கே?!!
ஆமா வானதி,நீங்க நல்லவரா,கெட்டவரா?(நாயகன் ஸ்டைலுங்கோ..:) ) எப்போ சீரியஸா பேசறீங்க,எப்ப சிரியஸ்-ஆ பேசறீங்கன்னே எனக்கு புடிபட மாட்டேன்னுதே!grrr!

புவனா,நான் வந்ததே உங்க இட்லி புகழை ஒரு ப்ளாக்ல பாத்துதான்..யார் ப்ளாக்-னு மறந்துபோச்..ஹி,ஹி!

vanathy said...

மகி, நான் நல்லவங்களுக்கு நல்லவர்(ள்). கெட்டவர்களுக்கு மிக மிக நல்லவர். இது எப்படி இருக்கு.? .
தங்ஸ், நானும் உங்கள் இட்லி பார்த்து தான் உங்கள் பக்கம் வந்தேன். நல்லவிதமா நினைச்சு தான் வந்தேன். அதாவது நீங்கள் இட்லி எக்ஸ்பர்ட் என்று நினைத்தேன் ஹிஹி....

அப்பாவி தங்கமணி said...

@ மகி & வானதி - ஹா ஹா ஹா... இட்லிய பாத்து ஏமாந்து வந்தீங்களா???????????? ஹஹாஹா... உலகத்துல இன்னும் என்னை மாதிரியே நெறைய அப்பாவிக இருக்காங்கப்பா... (இதுக்கு பேரு சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்றது.....)

@ மகி - இந்த வானதி செம terror பொண்ணுங்க... ப்ளாக் ப்ளாக்ஆ போய் பிரியாணி எல்லாம் திருடுதுங்கோ....உங்க ப்ளாக்ல எதாச்சும் காநோமானு பாத்துகோங்க... பாத்து இருந்துகோங்க...ஆனா நான் அப்பாவி தாங்க...

vanathy said...

ஐயோ! இது என்ன கொடுமைப்பா. பிரியாணி யாரின் ப்ளாக்கில் சுட்டனோ அவங்களே வந்து, அண்டாவோடு தூக்கிட்டு வந்தியா? எல்லோருக்கும் போதுமா? என்று அக்கறையா விசாரிக்கும் போது. நீங்கள் எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவது கொஞ்சம் கூட நல்லாவேயில்லை. அப்புறம் உங்க இட்லியை சுட்டுடுவேன்....தங்ஸ்ஸ்ஸ்ஸ்.

Post a Comment