Thursday, May 20, 2010

கொலம்பஸ் கொலம்பஸ்... விட்டாச்சு லீவு...

என்ன ஆச்சு? என்ன ஆச்சுனு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன் பொறுமை பொறுமை

Annual exam முடிஞ்சு வந்து பை ஒரு பக்கம், செருப்பு ஒரு பக்கம் தெறிக்க "ஐய்யா லீவு" ன்னு ஒரு குதி குதிப்போமே... அட அட.... என்னா ஒரு சுகம் அது... ஒரே குஷி தான் போங்க... அந்த சொகம் இன்னிக்கி வரைக்கும் எதுலயும் கெடைக்கல... 

LKG ல ஆரம்பிச்சு இப்ப வேலைக்கி போற காலம் வரைக்கும் லீவுன்னா என்னா ஒரு சந்தோஷம் இல்லைங்களா...

"வெள்ளிக்கிழமை ஆனா.. என்னமோ இனி எல்லாமே முடிஞ்சு போன மாதிரி, இனி வேலைக்கே போக வேண்டியதில்லைங்கர மாதிரி அப்படி ஒரு குஷி ஆய்டுது. திங்ககிழமை வராமயா போய்டும். அது தோன்றதே இல்லை" னு என்னோட friend ஒருத்தங்க சொல்லுவாங்க. ரெம்ப சரிதான்

இப்ப என்னத்துக்கு இந்த build -up எல்லாம்னு கேக்கறது கேக்குது

இந்த வாரம் இங்க (கனடா) சனி ஞாயிறோட சேத்து திங்களும் லீவு....................... எதுக்கா? Queen Victoria Day Holiday

அது என்னனு ஒரு ஒன் லைன் சொல்லிடறேன்... (இவ ஒன் லைன் சொல்றேன்னா எப்படியும் பத்து லைன்ஆச்சும் எழுதுவான்னு யாருங்க அங்க நடுவுல முணுமுணுக்கறது....)

இந்தியா மாதிரியே கனடாவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கி கீழ தான் இருந்தது ஒரு காலத்துல (பிரிட்டிஷ் எதை தான் விட்டு வெச்சாங்க). 1867 ல தான் Canadian Confederation pass பண்ணி federal Dominion of Canada உருவாச்சு. ஆனா கூட இப்பவும் இங்கிலாந்து ராணி தான் head of the state. அதாவது முதல் பூரண கும்ப மரியாதை அவங்களுக்கு தான்

அரசியல்ல / நிர்வாகத்துல அவங்க தலைஈடு எதுவும் இருக்காது. சும்மா ஒரு honarary மட்டும் தான். அவங்கள கௌரவிக்கற முகமா அப்போதைய ராணியோட பிறந்த நாளான May 24th விடுமுறை நாளா கொண்டாடப்படுது. பொதுவா மே மாசம் கடைசி திங்கள் தான் விடுமுறை இருக்கும். இந்த முறை மே 24 ஏ கடைசி திங்களா வந்து இருக்கு. இது தான் வரலாறு... போதுமா? (நிறுத்தும்மா தாயேன்னு யாரோ கதரற மாதிரி இருக்கே...)


A portrait in Ottawa City Hall of Queen Victoria, first sovereign of a confederated Canada
(இந்த படத்துல இருக்கறவங்க தான் அந்த நாள் British ராணி)

எனக்கு இன்னும் பெரிய குஷி இந்த முறை இந்த மூணு நாளோட இன்னும் ஒரு நாள் சேத்து லீவு போட்டுட்டு ஊரு சுத்தலாம்னு ரங்கமணி சொனனது தான். அதை சொல்லிட்டு எல்லோரும் மூணு நாள் என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா இருங்கன்னு சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்...

எங்க போறோம்? எப்படி போறோம்? என்ன காரணத்துக்காக இப்ப இந்த சுத்தல்? (அது தான் முக்கியமான suspense .... அப்பாடா ஒரு suspense வெச்சாச்சு... இன்னிக்கி நிம்மதியா தூங்குவேன்...) எல்லாம் போயிட்டு வந்து அடுத்த வாரம் விவரமா (விவகாரமா) சொல்றேன்...

போயிட்டு வாரனுங்க.... (யாரு அது... ச்சே ச்சே... அழவெல்லாம் கூடாது கண்ணு... இதோ மூணே நாளு... பறந்து போய்டும்....சுருக்கா போயிட்டு சட்டுன்னு வந்துடறேன்... கண்ண தொடச்சுக்கோ கண்ணு....வாரேன்...)

நீங்களும் weekend நல்லா என்ஜாய் பண்ணுங்க... அதோட காயத்ரிக்கு என்ன ஆச்சோ? கார்த்தி நிலைமை என்ன? அப்படின்னு கொஞ்சம் டென்ஷன் ஆனாலும் ஒண்ணும் தப்பு இல்ல.... எல்லாம் ஒரு சமுக சேவை எண்ணத்தோட சொல்றது தான்...

இதுல என்ன அம்மணி சமூக சேவைனு கேக்கறீங்களா? நீங்க டென்ஷன் ஆகி உங்க BP ஏறினா உங்க ஏரியால இருக்கற டாக்டர்கெல்லாம் நல்ல வருமானம் வருமல்லங்க... அது தான் சமூக சேவை... ஹும்... என்னைக்கி தான் இந்த உலகம் இந்த அப்பாவியோட நல்ல மனசை புரிஞ்சுக்க போகுதோ தெரியல?

ஒகே ஒகே நிறுத்திடறேன்... கண்டிப்பா நிறுத்திடறேன்... TA TA... bye bye... see you...

37 பேரு சொல்லி இருக்காக:

சுசி said...

அட எங்களுக்கும் திங்கள் லீவுதாங்க. இது Pentecost day னு சொல்றாங்க.

சந்தோஷமா போய்ட்டு வந்து சொல்லுங்க.

டாட்டா.. பை..

சுசி said...

அய்ய்.. மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்..

Guna said...

Have A Nice Vacation.. Enjoy

Krishnaveni said...

Happy holidays bhuvana. Have a nice loooong weekend.

ஸ்ரீராம். said...

விடுமுறையை நல்லா கொண்டாடுங்க...வந்து பயணக் கட்டுரை ரெண்டு மூணு பாகம் எழுதுங்க...(க்ளைமேக்ஸ் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு பதிவு இன்னும் கொஞ்சம் ஒத்திப் போடுங்கனு சொல்ல வரேன்னு தப்பா மட்டும் நினைக்கக் கூடாது...)

LK said...

நல்ல ஊர் சுத்தி பாருங்க. ஆனால் வந்துடன் முதல்ல கதைய முடிச்சிட்டு அப்புறம் மத்த வேலைய பாக்கணும் சொல்லிபுட்டேன்

பிரசன்னா said...

சிஸ்.. நீங்க டூர் போறதுனால பயண கட்டுரை எழுதுறீங்களா, இல்ல பயண கட்டுரை எழுத டூர் போறீங்களா.. ஹா ஹா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரசன்னா சொன்னது…

சிஸ்.. நீங்க டூர் போறதுனால பயண கட்டுரை எழுதுறீங்களா, இல்ல பயண கட்டுரை எழுத டூர் போறீங்களா.. ஹா ஹா..//

athane .. :)

Ammu Madhu said...

Have a Wondeful holiday.

அமைதிச்சாரல் said...

ஜாலியா ஊர்சுத்திட்டு வாங்க.

அனாமிகா துவாரகன் said...

ஹல்லோ மாடம். மரியாதையா கதையை முடியுங்க. இல்லேன்னா, நான் ஃபெயிலானா,அடிக்கடி உங்க புளொக் செக்பண்ணிட்டே இருக்கிறதால ஒழுங்காக படிக்காமா பெயில்லானேன்னு உங்க பக்கம் தான் கை காட்டுவேன். சரியா? அப்புறம் நீங்களாச்சு எங்க அம்மாவாச்சு. ஸப்பா கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்தியாச்சு. பலனிருக்கா என்று பார்ப்போம்.

புதுகைத் தென்றல் said...

njoy

LK said...

அனாமிகா இப்படிலாம் சாக்கு சொல்லலாமா ???

LK said...

// சுசி கூறியது...
அய்ய்.. மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்..
//

வடை உங்களுக்கே

தக்குடுபாண்டி said...

Have a wonderful happy holidays akka!!..:) vanthu olunga namba gayu kadhai sariyaa??..:)

அநன்யா மஹாதேவன் said...

ஹாப்பி ஹாலிடேஸ்!
பயணக்கட்டுரைக்கு வெயிட்டிங்!

SathyaSridhar said...

Ohhhh leave vittachaaaa nalla leave ah enjoy pannunga,,

Venkatesh said...

சந்தோசமா விடுமுறையை கொண்டாடி மகிழுங்கள் தங்கமணி அவர்களே!!!

செ.சரவணக்குமார் said...

விடுமுறைய நல்லா கொண்டாடுங்க, வாழ்த்துகள்.

Priya said...

பிரான்ஸில் கூட திங்கள் சேர்த்து தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை.சோ, என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்:)

ஹேமா said...

ஜாலிதான் தங்கமணி.
எவ்ளோ சந்தோஷம்ப்பா...!

vanathy said...

have a nice vacation.

padma said...

happy holidays

Madhuram said...

Bhuvana ungalukku inime excuse kidaiyadhu. Address kudunga Sura DVD anuparen.

Sari sari azhadheenga, pona pogudhu, leavea nalla enjoy pannunga.

பத்மநாபன் said...

அப்பாடான்னு ,,,வெய்யில் எங்கிருக்குத்துன்னு தேடி போய் விடுப்பை கொண்டாடி வாங்க ....வெய்யிலூர் காரர்களின் வாழ்த்து..

அன்னு said...

நீங்க வெகேஷன் போனிங் சரி, நீங் போவேண்டிய ஊரு அங்கயே இருக்கா இல்ல, நீங் வர்றீங்கன்னவுடனே அந்த ஊரு வெகேஷனுக்கு போயிடுச்சா?

LK said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html

ஹுஸைனம்மா said...

எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு (உங்கள்) விடுமுறையை தயவாய் நீட்டித்துக்கொள்ளவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்!!

sriram said...

//யாரு அது... ச்சே ச்சே... அழவெல்லாம் கூடாது கண்ணு... இதோ மூணே நாளு... பறந்து போய்டும்....சுருக்கா போயிட்டு சட்டுன்னு வந்துடறேன்... கண்ண தொடச்சுக்கோ கண்ணு....வாரேன்...//

ஐய.. அந்த அழுகை கழகக் கண்மணிகள் மூணே நாளுதானா? இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்கலாமேன்னு அழும் அழுகை..

எங்களுக்கு அடுத்த வாரம், உலக சூதாட்ட தலைநகர் லாஸ் வேகஸ் போறோம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

My days(Gops) said...

லீவு விட்டத ஏங்க கொலம்பஸ்'க்கு மட்டும் சொல்லுறீங்க :(

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - எஸ் எஸ், நீங்க தான் first . இந்தாங்க வடை பிடிங்கோ.... ஓ... உங்களுக்கும் லீவ் தானா? என்ஜாய் என்ஜாய் ....டாட்டா பை பை

@ Guna - வாங்க குணா. நன்றிங்க

@ Krishnaveni - வாங்க வேணி. தேங்க்ஸ்ங்க

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... ரெம்ப பயந்து போய் இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. பயணக்கட்டுரை தானே. போடோஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணிடறேன்... (அதுக்கு மேல உங்க விதி....)

@ LK - வாங்க LK , கண்டிப்பா. ஏதோ கதைய ரிலீஸ் பண்ணியாச்சு இன்னைக்கி. படிச்சுட்டு சொல்லுங்க

@ பிரசன்னா - ஆஹா... என்ன இது ராஜரகசியம் எல்லாம் யார் இப்படி பகிரங்க படுத்துவது.... போடுங்கள் சிறையில் கொடுங்கள் இட்லியை....ஹா ஹா ஹா

@ முத்துலட்சுமி - நீங்களுமா அம்மணி. இது வந்து கோழில இருந்து முட்டை வந்ததா இல்ல முட்டைல இருந்து கோழி வந்ததா மாதிரி தான்னு வெச்சுகொங்களேன்

@ Ammu Madhu - தேங்க்ஸ் அம்மு

@ அமைதிச்சாரல் - நன்றிங்க சிஸ்டர்

@ அனாமிகா - ஆஹா... இந்த பொண்ணு ஏனப்பா எப்பவும் மெரட்டிட்டே இருக்கு? ஆனாலும் பெயில் ஆகரதுக்கெல்லாம் என்மேல பழி போடறது ரெம்ப அநியாயம். உங்க அஸ்திரத்துக்கு நல்லாவே பலன் இருக்கு. போட்டாச்சு கதைய போட்டாச்சு

@ புதுகை தென்றல் - நன்றிங்க புதுகை

@ யாதவன் - முதல் வருகைக்கி நன்றிங்க

@ LK - நல்லா கேளுங்க LK . இந்த அனாமிகா பொண்ணு பயங்கரமான ஆளு தான் போல. பாவம் யாரோ...யாருக்கு மாப்பிளை யாரோ....?

@ தக்குடுபாண்டி - நன்றிங்க பிரதர். இதோ வந்ததும் லாஸ்ட் பார்ட் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க

@ அனன்யா - தேங்க்ஸ் அனன்யா. பயணக்கட்டுரை போடாம விட்டுடுவமா...

@ SathyaSridhar - நன்றிங்க சத்யா

@ Venkatesh - நன்றிங்க வெங்கடேஷ்

@ செ.சரவணக்குமார் - நன்றிங்க சரவணன்

@ Priya - ஓ... அப்படியா... கலக்குங்க கலக்குங்க

@ ஹேமா - ஆமாம் ஹேமா... செம சந்தோஷம் தான். நன்றிங்க

@ Vanathy - தேங்க்ஸ் வானதி

@ Padma - தேங்க்ஸ் பத்மா

@ Madhuram - ப்ளீஸ் ப்ளீஸ் சுறா DVD வேண்டாம் சிஸ்டர். இதோ கதை லாஸ்ட் பார்ட் போட்டாச்சு

@ பத்மனாபன் - ஆமாமுங்க... வெயில் தேடி தான் ஓடறோம்...நன்றிங்க வாழ்த்துக்கு

@ அன்னு - அடப்பாவி.... ஏன் ஏன்? why why ? அந்த ஊரு எங்கயும் போகலங்க...பத்திரமா அங்கேயே தான் இருக்கு....ஹா ஹா ஹா

@ LK - ஆஹா... விருதா... இதோ இதோ... பஸ் ஏறியாச்சு...

@ ஹுஸைனம்மா - நீங்களுமா....? வேண்டாம்.... அழுதுருவேன்........

@ Sriram - நாட்டாம... இது எல்லாம் நல்லா இல்ல... அப்புறம் அடுத்த லீவுக்கு தம்பதி சகிதமா பாஸ்டன் வந்துடுவோம்... (இப்படி நம்ம மிரட்டல்).... லாஸ் வேகஸ்ஆ? நடத்துங்க நடத்துங்க? casino ல ஒன் சென்ட் ஸ்லாட் பிடிச்சு உக்காந்து ஒரு நாள் முழுக்க ஆட வாழ்த்துக்கள்

@ My days(Gops) - கொலம்பஸ் கண்டுபிடிச்ச ஊருக்கு போறப்ப அவர் கிட்ட தானே சொல்லணும்... எப்பூடி?

Malar Gandhi said...

Same, its long weekend for us too...planning to take some short trip. You guys have a wonderful time there too:) Loved ur write-up.

அப்பாவி தங்கமணி said...

@ Malar Gandhi - Yeah,I heard its long weekend there too.. Have a good one. Thanks for your comment

அனாமிகா துவாரகன் said...

//எல்,கே சொன்னது...
அனாமிகா இப்படிலாம் சாக்கு சொல்லலாமா ???//
ஹா ஹா ஹ் ஹா.

//ஹுஸைனம்மா சொன்னது…
எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு (உங்கள்) விடுமுறையை தயவாய் நீட்டித்துக்கொள்ளவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்!!//
ஹையோ ஹையோ.

//ஐய.. அந்த அழுகை கழகக் கண்மணிகள் மூணே நாளுதானா? இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்கலாமேன்னு அழும் அழுகை..//
ஹி ஹி.

//இந்த அனாமிகா பொண்ணு பயங்கரமான ஆளு தான் போல. பாவம் யாரோ...யாருக்கு மாப்பிளை யாரோ....?//
எந்தா. நான் நல்ல பொண்ணு ஆக்கும். அந்த ஒன்றுக்காகவே பசங்க லைன்ல நிக்கிறாங்க. நம்பிட்டீங்களா? மரியாதையா நம்புங்க. ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.

sriram said...

//அப்புறம் அடுத்த லீவுக்கு தம்பதி சகிதமா பாஸ்டன் வந்துடுவோம்//

இது மிரட்டல் அல்ல புவனா, கரும்பு சாப்பிடக் கூலி..

ஜூலை 4 க்கு பாஸ்டன் விசிட் ப்ளான் பண்ணுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - என்னது இது ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹையோ ஹையோ னு .... ஒண்ணும் சரி இல்ல கண்ணு... என்னது என்னது பசங்க லைன்ல நிக்கராங்களா...இதுக்கு உன் கண்ணுல சிக்காம தப்பிச்சு ஓடத்தானே... இந்த மெரட்டல பாத்தும் யாராச்சும் கிட்ட வருவாங்க...ஹும்ஹும்.... எனக்கு நல்லாவே தெரியும்... ஹா ஹா ஹா (நாங்களும் சொல்லுவோம்ல)

அப்பாவி தங்கமணி said...

//இது மிரட்டல் அல்ல புவனா, கரும்பு சாப்பிடக் கூலி..
ஜூலை 4 க்கு பாஸ்டன் விசிட் ப்ளான் பண்ணுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

உங்களுக்கு நெஜமாவே பெரிய மனசுங்க ஸ்ரீராம், அதோட தைரியமான மனசும் கூட... நம்பி என்னை invite பண்றீங்களே... நன்றி நன்றி நன்றி....ஜூலை 4th முடியுமான்னு தெரியல... அநேகமா வீடு மாத்தற நேரமா இருக்கும்... இன்னொரு லாங் weekend பிளான் செய்வோம்... நீங்க இந்த பக்கம் வாங்களேன்... nigarafalls இந்த பக்கம் (கனடா) view பாக்க நெறைய பேரு வர்றதுண்டு... பிளான் sometime

Post a Comment