Thursday, May 27, 2010

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...


நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது அப்பாவி டிவியின் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

பொற்கொடி என்ற இயற்பெயரும் கேடி மற்றும் பல துணை பெயர்களும் (இங்கு இடமும் நேரமும் போதாது என்பதால் அந்த பெரிய லிஸ்ட் போடலை) கொண்ட ஒரு அப்பாவி (!!!!!!!) பெண்ணை காணவில்லை

கடந்த ஒரு மாதமாக சரியாக சொல்லவேண்டுமென்றால் மே நான்காம் தேதி அன்று தனது வலைப்பூவில் ஒரு பதிவை எழுதியவர் அதன் பின் யார் கண்ணிலும் படவில்லைஎன அறியப்படுகிறது

காணாமல் போன அன்று ஏதோ ஒரு நிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கால் சட்டையும் அணிந்து இருந்தார் என கூறப்பட்டுள்ளது

அதோடு அவர் கையில் ஒரு பெட்டி நிறைய அமரர் சுஜாதா எழுதிய நாவல்களும் இரண்டு கத்தி மற்றும் மூன்று ரிவால்வர்கள் இருந்ததாக தகவல். பயப்படவேண்டாம், அவர் மனிதர்களை கொள்வதில்லை, ரோபோக்களை மட்டும் தான்

காணாமல் போன அன்று அவருடன் ஆண்டாள் என்ற ஒரு ரோபோ இருந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன

அந்த ரோபோ பார்ப்பதற்கு ஒரு நிஜ பெண்ணை போலவே இருக்கும் என்றும் அதை பெண் என்றே நம்பி பின் ரோபோ என்று தெரிந்ததும் பல இளைஞர்கள் தாடி வளர்த்து அலைவதாயும் சற்று முன் கிடைத்த தகவல் சொல்கிறது

அவருடைய ப்ளாக்ல இருந்து எடுக்கப்பட்ட அவருடைய படம் இங்கே


பொற்கொடியை நேரில் கண்டாலோ அல்லது அவரை பற்றி தவகல் எதுவும் அறிந்தாலோ உடனே ஒரு நூறு அடி தள்ளி சென்று நின்று கொண்டு பின்பு எங்களுக்கு தகவல் சொல்லவும்

நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

மிஸ்டர். ரோபோ
ப்ளாக் மூன் அபார்ட்மென்ட்ஸ்
# 13 கணேஷ்வசந்த் தெரு
ராஜி குறுக்கு சந்து
ஆண்டாள்புரம்

தகவல் அளிபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். ஆனால் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் "மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா" from அனன்யா ஏஜென்சிஸ். விளம்பர இடைவேளைக்கி பிறகு நிகழ்ச்சி தொடரும்

________________________________________

விளம்பரம்:

கேட்டீங்களா கேட்டீங்களா... LK தாத்தாவுக்கு SOS பட்டம் குடுத்து இருக்காங்களாம் www .engalcreations .blogspot .com ல இருந்து

படிச்சீங்களா படிச்சீங்களா... தக்குடு புளியோதரை கதை இரண்டாவது வாரமா வெற்றி நடை போடுதாமே? சுறா பட வசூலே இதனால தான் கம்மின்னு ஊரெல்லாம் பேசிக்கறாங்க

கேள்விபட்டீங்களா கேள்விபட்டீங்களா... அப்பாவி தங்கமணி இட்லிக்கு demand அதிகமாகி US ல Green Card லாட்டரி மாதிரி புவனா இட்லி லாட்டரி அறிவிச்சு இருக்காங்களாம் கனடா அரசாங்கம் (No tension no tension)

பாத்தீங்களா பாத்தீங்களா... ஒண்ணும் இல்லைங்க... சும்மான்னச்சிக்கும் ....  ஹி ஹி ஹி

__________________________________________

விளம்பர இடைவேளைக்கி பிறகு காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு தொடர்கிறது

கடந்த சில வாரங்களாக காணாமல் போன இவர் பேச்சு / செயல் / எழுத்து எல்லாம் Johnywalker ரகம் என்றாலும் பெயரில் Complan ஐ அடைமொழியாக கொண்டவர். பெயர் சூர்யா

அவருடைய படம் இங்கே


இவரது வலைப்பூ கூட செயல்பாட்டில் இல்லை என தெரியவருகிறது

பொற்கொடியின் அறிவிப்பில் சொன்னபடி ஆண்டாள் ரோபா என அறிந்த பின் தாடி வளர்த்த வாலிபர்களில் இவரும் ஒருவர்

அந்த விரக்தியில் தான் காணாமல் போனாரோ என்றும் ஒரு தரப்பு செய்தி சொல்கிறது

இன்னொரு தகவல் அப்பாவி தங்கமணியின் கதையில் வரும் சுதா என்ற பெண்ணின் முகவரி மறுக்கப்பட்டதால் தான் கோபித்து கொண்டு காணாமல் போனார் என்றும் ஒரு செய்தி குறிப்பு சொல்கிறது

காணாமல் போன அன்று நீல நிற சட்டையும் பச்சை நிற அரைகால் சட்டையும் அணிந்து இருந்தார்

இவருக்கு wrongnumber உடன் மணிக்கணக்கில் பேசும் வியாதி இருக்கிறதென அவர் வலைபூவில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே ஏதேனும் டெலிபோன் பூத்தில் மணிக்கணக்கில் பேசும் நபரை கண்டால் உடனே தெரிவிக்கவும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மிஸ். Wrongcall
# 1 பிரியமானவளே layout
காயத்ரி தெரு
சுதா குறுக்கு சந்து
காம்ப்ளான்பாளையம்

இத்துடன் இன்றைய அறிவிப்புகள் முடிவடைந்தன. மீண்டும் நாளை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வடை... மன்னிக்கவும் .... விடை பெறுவது உங்கள் அபிமான அப்பாவி....அப்பாவி....அப்பாவி....

டொன் டொன் டொயன்....................(மீசிக் மீசிக் ....)

37 பேரு சொல்லி இருக்காக:

நியோ said...

அப்பாவி தங்கமணி நிரம்ப கோபமாய் இருப்பதால் ...
மேற்கண்ட இருவரும் ....
ப்ளாக் ஸ்போட் காவல் நிலையத்தில் ...
இன்றே ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன் ...

பிரசன்னா said...

//# 1 பிரியமானவளே layout
காயத்ரி தெரு
சுதா குறுக்கு சந்து//

இது ஒரு ஸ்காண்டல்.. செய்தியிலேயே விளம்பரம் செய்வது..
Paid news, Paid news..!

:)

padma said...

இதோ எங்க வீட்ல தான் இருக்காங்க பொற்கொடி.....

LK said...

கவனிக்கறேன் அக்க

Guna said...

Full-form la irukeenga pola

vanathy said...

தங்ஸ், விட்டுடுங்கோ உங்களுக்கு ( May be உங்கள் இட்லிக்கு ) பயந்து என்கையாவது பம்மிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்ரீராம். said...

விடுங்க...பயம் தீர்ந்ததும் தானே வருவாங்க...

புதுகைத் தென்றல் said...

:))

சுசி said...

அசத்திட்டிங்க புவனா.. (பெயர் சொல்ல அனுமதி இருக்கா??)

ரொம்ப வித்யாசமான பதிவு.

சந்தடி சாக்கில உங்க இட்லிக்கு விளம்பரமா..

தமிழ் உதயம் said...

என்னையும் காணாமல் போனவர்கள் லிஸட்ல சேர்த்துடாதிங்க.

ஜெய்லானி said...

ரொம்பவும் சாக்கிரதையதான் இருக்கோனும் போலிருக்கு .

அன்னு said...

ஏனுங்கம்மணி, வெகேஷன் போயிட்டு வந்த்ப்பறம் ரெம்பத்தான் ஃப்ரெஷ் ஆயிட்டீங்க போல? பாத்துங்க. காணாமல் போனவங்க எல்லாம் நீங்க வீட்டை காலி பண்ணறதுக்கு முன்னாடி வந்து டேரா போட்டுரப் போறாங்க.

Krishnaveni said...

you have very good humour sense bhuvana. enjoyed your lovely write up

தக்குடுபாண்டி said...

Hahahaha...LOL post akka!

டம்பி மேவீ said...

ஏன் ஏன் ...காலைல எழுந்த உடனே உங்க பதிவை படிக்க வந்தேன் ..இப்படி பயம்புடுதுரீங்களே.....

ஆனா காணாமல் போனவர்களோட அறிவிப்பில் கூட விளம்பரம் போடறது நீங்க மட்டும் தான்

டிஸ்கி - ஒன்னுமில்லைங்க ...... டிஸ்கின்னு போட்டுட்டேனே தவிர என்ன எழுதுறதுன்னு தெரியல

LK said...

//தங்ஸ், விட்டுடுங்கோ உங்களுக்கு ( May be உங்கள் இட்லிக்கு ) பயந்து என்கையாவது பம்மிக் கொண்டிருப்பார்கள். /

repeattttt

Priya said...

//கேள்விபட்டீங்களா கேள்விபட்டீங்களா... அப்பாவி தங்கமணி இட்லிக்கு demand அதிகமாகி US ல Green Card லாட்டரி மாதிரி புவனா இட்லி லாட்டரி அறிவிச்சு இருக்காங்களாம் கனடா அரசாங்கம்// ........அப்பப்பா...என்னமா போசிக்கிறிங்க:)

ரொம்ப ரசிச்சு படிச்சேன்... ரியலி என்ஜாயபெல்!

ராமலக்ஷ்மி said...

இது நல்லாயிருக்கே:)))!

அப்பாவி தங்கமணி said...

@ நியோ - நன்றிங்க நியோ... இல்லேன்னா சர்ச் வாரன்ட் தான் போடணும் போல

@ பிரசன்னா- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... சாதாரணமப்பா...ஹி ஹி ஹி

@ padma - அப்படியா...அட்ரஸ் சொல்லுங்க இப்பவே பஸ் புடிக்கறேன்

@ LK - நன்றிங்க தாத்தா

@ Guna - வாங்க குணா. ஏதோ மத்தவங்க மண்டைய உருட்டரதுல நம்ம காலம் ஓடுது

@ Vanathy - அடப்பாவி.... நானே விளம்பரத்துல ஓட்டிட்டு இருக்கேன்...நீங்க வாருரீன்களா...

@ ஸ்ரீராம் - வேண்டாம்.. அழுதுருவேன்...

@ புதுகை தென்றல் - ஹி ஹி ஹி

@ சுசி - தாராளமா பெயர் சொல்லலாம்.இதுக்கு என்ன அனுமதி எல்லாம் கேட்டுகிட்டு? நன்றிங்கோ. விளம்பரத்துல தானங்க காலம் போகுது...

@ தமிழ் உதயம் - அடிக்கடி வந்து கமெண்ட் போடலைன்னா உங்களையும் லிஸ்ட்ல சேத்துடுவேன் ( ஹா ஹா ஹா...இப்படி என் மிரட்டல்...??????/)

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா... நன்றிங்கோ என்னை பத்தி புரிஞ்சுகிட்டதுக்கு

@ அன்னு - பிரெஷ் தான் ஆய்ட்டேன் போல இருக்கு ..... அப்படி ஒரு ஊரு அது. டோராவுக்கு எல்லாம் பயப்படற ஆளா நானு... (இட்லிக்கு ஊற போட்ருக்கேன்னு மொதலே சொல்லிடுவோம்ல... அப்படியே தெறிச்சு ஓடிட மாட்டாங்க....எப்பூடி?????)

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ தக்குடுபாண்டி - தேங்க்ஸ் தக்குடு

@ டம்பி மேவீ - வாங்க....இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? விளம்பரம் போடுவமல்ல.... (டிஸ்கியா.. அடுத்த பதிவுக்கு இதை வெச்சே ஒரு மேட்டர் தேத்தறேன் இருங்க....)

@ LK -
//தங்ஸ், விட்டுடுங்கோ உங்களுக்கு ( May be உங்கள் இட்லிக்கு ) பயந்து என்கையாவது பம்மிக் கொண்டிருப்பார்கள். /repeattttt ///

உங்க உப்புமாவ விடவா தாத்தா?

@ Priya - தேங்க்ஸ் பிரியா

@ ராமலக்ஷ்மி - தேங்க்ஸ்ங்க... ஹும்... நெறைய பேருக்கு இது புரியலியே...

பத்மநாபன் said...

///பாத்தீங்களா பாத்தீங்களா... ஒண்ணும் இல்லைங்க... சும்மான்னச்சிக்கும் .... ஹி ஹி ஹி /// சரி நக்கலுங்க.

அனாமிகா துவாரகன் said...

//தங்ஸ், விட்டுடுங்கோ உங்களுக்கு ( May be உங்கள் இட்லிக்கு ) பயந்து என்கையாவது பம்மிக் கொண்டிருப்பார்கள். //

Repeattu. Hahahaha.

அமைதிச்சாரல் said...

//புவனா இட்லி லாட்டரி அறிவிச்சு இருக்காங்களாம் கனடா அரசாங்கம் //

ஊரைக்காலி பண்ண வைக்கிறதுக்கு இதுதான் சூப்பர் ஐடியா :-))))

தக்குடுபாண்டி said...

ஒருவேளை காணாம போன இந்த ஆட்கள் எல்லாமே நம்ப அடப்பாவி அக்காவோட இட்லியை சாப்டுருப்பாங்களோ??...;) எனக்கு கொஞ்சம் சந்தேகமாதான் இருக்கு...!..:)

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நக்கலா... அது ஊரோட வந்ததுங்க... உங்களுக்கு தெரியாதா என்ன?

@ அனாமிகா - என்ன repeatuuuu ?????????? ஆள் ஆளுக்கு repeat ஆம்ல repeat ... ஒண்ணும் வேலைக்காவது..... பார்சல் கட்டிற வேண்டியதுதேன்.....

@ அமைதிச்சாரல் - //ஊரைக்காலி பண்ண வைக்கிறதுக்கு இதுதான் சூப்பர் ஐடியா :-)))) //
ஆஹா...கண்டு பிடிச்சுடீங்களா? என்னங்க செய்ய? நாம வீட்டை வித்தாச்சு... இனி வாங்கோனுமல்ல.. எல்லாரும் ஊரை காலி பண்ணி போனாத்தான நமக்கு சலிசா வெலைல வீடு கெடைக்கும்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. எப்படி நம்ம பிளானு? (யாரும் என்னா ஒரு வில்லத்தனம் எல்லாம் சொல்லகூடாது ஆமா... அப்புறம் உங்க ஊர்லயும் கடை போட்ருவோம்...)

@ தக்குடு - //ஒருவேளை காணாம போன இந்த ஆட்கள் எல்லாமே நம்ப அடப்பாவி அக்காவோட இட்லியை சாப்டுருப்பாங்களோ??...;) எனக்கு கொஞ்சம் சந்தேகமாதான் இருக்கு...!..:) //
ஆரும் நம்ம பக்கம் பேசறாப்ல காணோம்....மாமோய்... பேசாம அல்லாருக்கும் ஒரு பார்சல் போடுங்கோ...

ஹேமா said...

தங்கமணி...சுவிஸ் போலீஸ் க்கு வேலைகள் குறைவாம்.சொல்லித் தேடச் சொல்லலாமா !

LK said...

//தங்கமணி...சுவிஸ் போலீஸ் க்கு வேலைகள் குறைவாம்.சொல்லித் தேடச் சொல்லலாமா ! //

சொல்லுங்க. அப்படியா தங்க்சொட இட்லிய கூட தேட சொல்லுங்க

Anonymous said...

yen eppadi panrenga

appavi akka,

konjam Udal Nilai sari ellai,

manamum konjam..athanal
blog pakkam vara villai..
konjam aanigal adikama pidunga vendierukirathu..

manikkavum..

unga eluthkkal nalukku nall

mergueri kondu varukirathu...

2vathu and 1vathu 2mudivum rasithen..

valthukoora vayathilai.
epothum vaasanganai thodarvey virumbukiren..

"vilyatuku padvil appadi koori erunthen..yaridamum nan pesavillai appavi akka"

"ennai thediatharugu nandrigal pala"

tholar niyavirkum..
thakadu annavirkum...
porkodi akkavirukm nandrigal pala.


akkavai thitathenga avanga kaiyila pistal erukum..

"idle saptu nijamavey 12mathangaluku mel aginrathu mudinthal oru 12 idlyum konjam kara chatium anupumaru thalmaiudan ketukolkiren."

Nandri...


nandri
valga valamudan

surya

Anonymous said...

பொற்கொடியின் அறிவிப்பில் சொன்னபடி ஆண்டாள் ரோபா என அறிந்த பின் தாடி வளர்த்த வாலிபர்களில் இவரும் ஒருவர்
---enna koduma sir ethu,,

Anonymous said...

இன்னொரு தகவல் அப்பாவி தங்கமணியின் கதையில் வரும் சுதா என்ற பெண்ணின் முகவரி மறுக்கப்பட்டதால் தான் கோபித்து கொண்டு காணாமல் போனார் என்றும் ஒரு செய்தி குறிப்பு சொல்கிறது
----

athai than nan appovey gops annaviruku kudka cholitenaey..

yen akka eppdi enna kevalapadthrenga???

sari vidunga arasiala ethalam sagajam.

Porkodi (பொற்கொடி) said...

echoose me?? nenu ikade unanu, announcement revert cheyyandi!! :)

ஹுஸைனம்மா said...

எனக்கும் உங்க இட்லியின் பின்விளைவுதான் இதெல்லாம்னு தோணுது!! நல்லவேளை இங்கருந்து கனடா போயிட்டீங்க!!

சுசி said...

உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..

http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html

அஹமது இர்ஷாத் said...

சுவராஸ்யம்...

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - சூப்பர் ஐடியா ஹேமா.... ப்ளீஸ் சொல்லுங்க சொல்லுங்க.... ஆனா என்னை விசாரணை எல்லாம் பண்ண மாட்டாங்களே? எனக்கு காக்கி சட்டைய பாத்தாலே பட பட பட தான்...

@ LK - இட்லி மேல அத்தனை இஷ்டமோ... டோன்ட் வொர்ரி தாத்தா.... இன்னைக்கே அனுப்பிடறேன்.... ஹா ஹா ஹா

@ சூர்யா - வாங்க வாங்க வாங்க.... வந்துதுல ரெம்ப சந்தோசம். அப்படியா விசயம். சாரி தெரியலைங்க... take care and come back soon
கொடுமை எல்லாம் ஒண்ணும் இல்ல...சும்மா சும்மா.... அப்படியா அப்போ சுதா நம்பர் இல்லையா பிரச்சனை.. அப்பாடா இப்ப தான் நிம்மதி. தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

வெற்றி வெற்றி வெற்றி.... நமது அப்பாவி டிவியின் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு மிக பெரிய வெற்றி....நாம தேடிகிட்டு இருந்த ரெண்டு பேரும் அவங்களாவே வந்து சரணடைஞ்சுட்டாங்க...ச்சே... ஏதோ கிரிமினலை சொல்ற மாதிரி இருக்கோ... சாரி... சாரி... அவங்களே வந்துட்டாங்கன்னு மாத்திகோங்க...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஆஹா... நீங்களுமா? நான் இட்லியே செய்யல போங்க............. கனடா போனாலும் இந்தியா போற வழில துபாய் வருவோம்ல.... ஹா ஹா ஹா

@ சுசி - நன்றி நன்றி நன்றி...இதோ பட்டுசேலை சரசரக்க வந்துட்டே இருக்கேன் விருது வாங்கறதுக்கு....

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - ரண்டி ரண்டி ரண்டி.... மீரு இக்கட்னே உன்னாரா... அய்த்தே அசல் announcement revert செய்யால்சிந்தே.... இப்புடே சேஸ்துன்னான்... revert revert revert .... we missed you............

Post a Comment