Sunday, May 30, 2010

என் பௌர்ணமி... (விகடன்)


(எனது மற்றுமொரு கவிதை விகடனில்... உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி)


இத்தனை வருடமாய்
இனிமையாய் இருந்தஎன்வீடு
இன்றுஏனோ அந்நியமானது
பிறந்தவீட்டில் சீராட
பறந்துநீ போனபின்னே

அதேஅறை தான்
அதேநான் தான்
தூக்கம் மட்டும்தான்
தூரமாய் போனதிப்போ

ஏக்கமாய் நான்சோர்ந்திருக்க
எள்ளிநகை ஆடியது
சன்னலில் எட்டிப்பார்த்த
சன்னமான மூன்றாம்பிறை

அருகில்நீ இருந்தபோதில்
அதைநான் புறக்கணித்தேனாம்
சமயம்பார்த்து சாடியது
சாபம்தான் என்தனிமைஎன்றது

என்பௌர்ணமி நீஅருகில்இருக்க
எங்கோ உள்ளநிலவைக்காண
எனக்கென்ன பைத்தியமா
ஏன்புரியவில்லை இந்நிலவுக்கு?

பௌர்ணமிதான் நானும்
பிரதிமாதம் ஒருமுறைஎன
பொறாமையில் வாதம்செய்தது
பொறுக்காத வான்நிலா

மாதம் ஒருமுறைதான்
மலர்வாய்நீ பௌர்ணமியாய்
முப்பது நாளுமே
முழுநிலவு என்னவள்என்றேன்
மூக்குடைந்த அந்நிலா
முகம்காட்ட முடியாமல்
மேகத்தில் தனைமறைத்து
வேகமாய் மறைந்ததடி!!!

போனால் போகட்டும்
புரியாத குறைநிலா
என்பௌர்ணமி நீவிரைந்து
என்னிடம் வந்துவிடு
புரியாத நிலவிற்கு
புரியவைப்போம் நம்காதலால்!!!

33 பேரு சொல்லி இருக்காக:

தக்குடுபாண்டி said...

//விகடன்// கும்புட்டுக்கறேன் எஜமான்!!..:)

என்றும் வம்புடன்,
தக்குடு

தக்குடுபாண்டி said...

//பௌர்ணமிதான் நானும்
பிரதிமாதம் ஒருமுறைஎன
பொறாமையில் வாதம்செய்தது
பொறுக்காத வான்நிலா// ohoo...:)

தக்குடுபாண்டி said...

But,தக்குடு விவரம் புரியாத சின்னக் குழந்தை என்பதால் கவிதை புரியலை அக்கா!!!(telling this with அப்பாவி முகம்)..:)

அனாமிகா துவாரகன் said...

//தக்குடுபாண்டி சொன்னது…

But,தக்குடு விவரம் புரியாத சின்னக் குழந்தை என்பதால் கவிதை புரியலை அக்கா!!!(telling this with அப்பாவி முகம்)..:) //

Same here. No more kavithai writing here. ok. If not............ ha ha

ஜெய்லானி said...

//புரியாத நிலவிற்கு
புரியவைப்போம் நம்காதலால்!!!//

கவிதை அருமையா இருக்கு..

ஹேமா said...

காதல்...தனிமை...ஏக்கம் கவிதை முழுதுமே காதல் நிலவுதான்.வாழ்த்துகள் தோழி.

சுசி said...

ரொம்ப நல்லாருக்கு புவனா..

வாழ்த்துக்கள்.

நியோ said...

"என்பௌர்ணமி நீஅருகில்இருக்க ..."
தனிமையில் மெல்ல தவித்து
ஜன்னல் வழி பார்க்கிறேன் ...
தோளை தொட்டு சொன்னாள் அவள் ...
நானிங்கு தானிருக்கிறேன் ...
நன்றிகள் தங்கமணி ...
இதமான வரிகளுக்கு ....

LK said...

அங்கேயே படிச்சேன். நல்ல இருக்கு புவ்ஸ் அக்கா

Krishnaveni said...

kavidai superaa irukku bhuvana. vaazhththukkal........

vanathy said...

தங்ஸ், கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

விகடனிலேயே வாசித்திருந்தேன். அருமை புவனா. வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

கவிதை நல்லா இருக்கு அப்பாவி..

தமிழ் உதயம் said...

விகடனிலேயே வாசித்திருந்தேன். கவிதை நல்லா இருக்கு.படமும் அற்புதம்.

VELU.G said...

கவிதை அழகு....

முப்பது நாளும் பௌர்ணமியா?!!!!!!!!

யப்பா சாமி தாங்குமா இந்த பூமி!!!!!!!!

அஹமது இர்ஷாத் said...

கவிதை நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள் விகடனில் வந்ததற்கு...

Venkatesh said...

//என்பௌர்ணமி நீஅருகில்இருக்க
எங்கோ உள்ளநிலவைக்காண
எனக்கென்ன பைத்தியமா
ஏன்புரியவில்லை இந்நிலவுக்கு? //

என்பௌர்ணமி நிலா கவிதையை ரசித்தேன் :)

எப்படி உங்களால மட்டும் இப்படிஎல்லாம் யோசிக்க முடியுது?

பிரசன்னா said...

//விவரம் புரியாத சின்னக் குழந்தை என்பதால் கவிதை புரியலை அக்கா!!!(telling this with அப்பாவி முகம்)..:)//

ரி........ :)

செ.சரவணக்குமார் said...

நல்லாருக்கு மேடம். வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!!

(அந்த ரகசியத்தக் கொஞ்சம் சொல்லுங்களேன்!! அதான் விகடன்ல எப்படி வரவைக்கிறதுன்னு?...)

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க தங்கமணி... பௌர்ணமி நிலவுபோல்.... வாழ்த்துக்களும்...

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஆமா ஆமா... ஒண்ணுமே தெரியதுரா சாமி..!!!!!!!!!!!!!!!!......அடப்பாவி.... அப்பாவி முகம்னா என்னனு தெரியுமா? See my profile picture

@ அனாமிகா - ஆத்தா அனாமிகா... தாங்காது சாமி...ஆளை விடு... இனி எங்க வீட்டுல DHL பார்சல் வெக்க எடம் இல்ல... எஸ்கேப்....................

@ ஜெய்லானி - நன்றிங்க ஜெய்லானி

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க தோழி

@ சுசி - நன்றிங்க சுசி

@ நியோ - தொடர் வரிகள் எழுதி சிறப்பு செய்தமைக்கு மிக்க நன்றிங்க நியோ

@ LK - நன்றிங்கோ அண்ணா !!!!!

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ Vanathy - நன்றி வானதி

@ ராமலக்ஷ்மி - ஓ... அங்கேயே பாத்துடீங்களா... நன்றிங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க

@ தமிழ் உதயம் - அப்படிங்களா... நன்றிங்க

@ Velu .G - நன்றிங்க. 365 நாள் பௌர்ணமிய கூட தாங்கும் காதல் பூமி...

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமது

@ Venkatesh - நன்றிங்க வெங்கடேஷ். அது என்னமோ அப்ப அப்ப இப்படி தோணறதுதாங்க

@ பிரசன்னா - பிரசன்னா... நீங்களுமா? அநியாயமப்பா!!!!!!!!!!!!!!!

@ செ.சரவணக்குமார் - நன்றிங்க சரவணன்

@ ஹுஸைனம்மா - நன்றிங்க. அது ஒண்ணும் இல்லைங்க. See this link
http://youthful.vikatan.com/youth/NYouth/padaippu17092009.asp
தெளிவா instructions குடுத்து இருக்காங்க. பாருங்க. அனுப்புங்க. நன்றி

@ க.பாலாசி - நன்றிங்க பாலாசி

ஸ்ரீராம். said...

அருமை...அருமை...

பத்மநாபன்..... said...

ஓரு சைடு நக்கல் நிறைந்த நகைச்சுவை..மறு சைடு உணர்வு பூர்வமா கவிதை ..கலக்கிறிங்க...விகடனில் வந்ததா வாழ்த்துக்கள்....

DREAMER said...

கவிதை ரசனையா இருக்குங்க..!

பௌர்ணமிதான் நானும்
பிரதிமாதம் ஒருமுறைஎன
பொறாமையில் வாதம்செய்தது
பொறுக்காத வான்நிலா

இந்த வரிகள் அதிகம் ஈர்த்தது..! உங்க ரைமிங் எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்குங்க..!

-
DREAMER

அன்புடன் மலிக்கா said...

நிலா கவிதை
நிலவாய் ஜொலிக்கிறது சூப்பர்.

விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்..

சி. கருணாகரசு said...

கவிதை மிக அருமை...

பாராட்டுக்கள்.

Priya said...

ரசனை மிக்க அழகான வரிகள்!வாழ்த்துக்கள்!!!

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

@ பத்மநாபன் - நன்றிங்க. ஒரே மாதிரி எழுதினா போர் அடிச்சுடுமே... எழுதற எனக்கே அப்படினா படிக்கற உங்களுக்கு? அதான் அப்ப அப்ப track மாறி போறதுண்டு....

@ Dreamer - நன்றிங்க ட்ரீமர். எனக்கும் அந்த வரிகள் பிடிச்சது தான்

@ அன்புடன் மலிக்கா - நன்றிங்க மலிக்கா

@ சி. கருணாகரசு - நன்றிங்க பிரதர்

@ Priya - நன்றிங்க ப்ரியா

முகுந்த் அம்மா said...

Congrats

அப்பாவி தங்கமணி said...

Very many thanks முகுந்த் அம்மா

தனி காட்டு ராஜா said...

//மாதம் ஒருமுறைதான்
மலர்வாய்நீ பௌர்ணமியாய்
முப்பது நாளுமே
முழுநிலவு என்னவள்என்றேன்
மூக்குடைந்த அந்நிலா
முகம்காட்ட முடியாமல்
மேகத்தில் தனைமறைத்து
வேகமாய் மறைந்ததடி!!! //

நிலா மறைந்ததுக்கு காரணம் யாருக்கு தெரியும் ...?
"முழுநிலவு என்னவள்" -னு சொல்றையே இன்னும் 20,30 வருஷம் கழித்து பார்ப்போம் ...யார் அப்பவும் முழுநிலவு மாதிரி இருக்க போறாங்கனு - நிலா நெனச்சுதோ என்னவோ ...?
பார்த்துங்க ...இப்ப எல்லாம் நிலா ரொம்ப ப்ராக்டிகலா யோசிக்குதுனு எங்க ஊர்ல பேசிக்கறாங்க....

அப்பாவி தங்கமணி said...

வாங்க தனி காட்டு ராஜா... தனி காட்டு ராஜாவாத்தன் இருக்கோம்ங்கற தைரியத்துல தான் டயலாக் விடரீங்கன்னு நல்லாவே தெரியுது... எந்த ஊருங்க உங்க ஊரு? ரெம்ப பிரக்டிகல் நிலா எங்க இருக்குனு நாங்களும் தெரிஞ்சுக்கறோம் சொல்லுங்களேன்... ஹா ஹா ஹா

Post a Comment