Tuesday, June 01, 2010

அதே கண்கள்... சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 1)


"சுமி.... ஏய் சுமி... தட்டை பாத்து சாப்பிடு... சுமி...கூப்டுட்டே இருக்கேன்... காதுல விழுதா பாரு" என சுமேதாவின் அம்மா சுசிலா அழைக்க அப்படியும் ஏதோ நினைவில் இருந்தாள் சுமி

"சுமி... " என அவள் அண்ணன் சுரேஷ் அவள் தோளை பற்றி உலுக்க நினைவில் இருந்து மீண்டாள் சுமேதா

"என்ன? என்ன ஆச்சு?" என மலங்க மலங்க விழித்தவளிடம்

"அத நாங்க கேக்கணும்" என்றாள் சுசிலா கேலியான குரலில்

"கேக்கறதுக்கு என்னமா இருக்கு. கல்யாணம் நிச்சியம் ஆகி இந்த ரெண்டு மாசத்துல மேடம் பாதி நேரம் வேற உலகத்துல சஞ்சாரம் தானே..." என கிண்டலாய் சிரித்தான் சுரேஷ்

சுமி முகம் சிவக்க "அதெல்லாம் ஒண்ணும் இல்ல...போண்ணா... " என சிரித்து மழுப்பினாள்

"டேய்.... சும்மா இரு சுரேஷ்....ஏன் அவளோட வம்பு பண்ற" என மகளுக்கு பரிந்து பேசினார் அப்பா சுந்தரம். அதே நேரம் மகள் முகத்தில் ஓடிய குழப்ப ரேகையை கவனிக்க தவறவில்லை

அதை கூறி எல்லோரையும் கலவரப்படுத்த மனமின்றி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என விட்டுவிட்டார். ஒருவேளை அப்போதே கேட்டிருந்தால்
பல விபரீதங்களை தவிர்த்து இருக்கலாமோ என்னமோ...

________________

"ஹலோ சுமி"

கணவனாக போகிறவனின் அன்பு குரலில் மனம் குதூகலிக்க "சொல்லுங்க சூர்யா" என்றாள்

"என்ன பண்றீங்க மேடம்? காலைல இருந்து போனே காணோம்"

"ம்...ஏன்? நீங்க பண்ணினா என்னவாம்"

"ஓ... நான் கூபிடறேனா இல்லையான்னு டெஸ்ட் பண்றீங்களோ" என சிரிப்பு வழிய கேட்க அவன் உற்சாகம் தன்னையும் தொற்றிக்கொள்ள

"ம்... அதே தான்" என்றாள் சிரிப்பை அடக்க முயன்று

"அடிப்பாவி... கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட என்னவெல்லாம் படப்போறேனு தெரியலையே" என போலியாய் பயந்தது போல் பேச

"அப்படியா .... அப்போ வேற பொண்ணு பாருங்களேன்... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா" என்றாள் கிண்டலாய்

"வேற பொண்ணா? எந்த பொண்ண பாத்தாலும் இப்பவெல்லாம் இந்த பொண்ணு முகத்த மாஸ்க் போட்ட மாதிரி தானே தெரியுது ... என்ன செய்ய? பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே மொத்தமா விழுந்துட்டனே கண்மணி" என காதல் மொழி பேசினான் சூர்யா

"ஆஹா...போதுமே...எனக்கு ஏற்கனவே பயங்கர கோல்ட்...ஹச்...." என கிண்டல் செய்தாள் சுமி

"நேரம் தான்... உன்ன நேர்ல பாக்கறப்ப கவனிச்சுகறேன்...." என்றவன் "சரிடா, கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பேசறேன்" என துண்டித்தான்

சூர்யாவுடன் பேசிய உற்சாகத்தில் ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள்

சற்று நேரத்தில் மறுபடியும் கைபேசி அலற சூர்யா தான் மறுபடியும் அழைக்கிரானென தோன்ற யாருடைய நம்பர் என்று கூட பார்க்காமல் "ஹலோ..." என்றாள் சந்தோசமாய்

எதிர்முனை பேசியதில் கொஞ்சநேரம் முன்பு இருந்த சந்தோச மனநிலை முற்றிலும் மாற தலையணையில் முகம் புதைத்தாள்

_______________________

"என்ன சுமி ஏன் என்னமோ போல இருக்க. நானும் நேத்துல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்" என சுசீலா மகளின் சோர்ந்த முகம் கவலையூட்ட கேட்டாள்

"ஒண்ணும் இல்லம்மா" என சிரித்து மழுப்பினாள்

"அம்மா...அது என்ன காரணம்ன்னு எனக்கு தெரியும்" என்றான் சுரேஷ் தங்கையை பார்த்து

என்ன என்பது போல் மொத்த குடும்பத்தின் பார்வையும் அவன் மீதே பதிந்தது

"ஒருவேளை போன்ல பேசினத அண்ணா கேட்டிருப்பானோ" என தோன்ற சுமேதாவின் இதயம் மிக வேகமாக அடித்து கொண்டது

ஆனால் அப்படி இருந்தால் இத்தனை நேரம் இப்படி தன்னிடம் சாவகாசமாய் பேசிகொண்டிருக்க மாட்டான் என்பது உரைக்க என்ன சொல்கிறான் என்பதை கேட்பதில் கவனமானாள்

"இன்னிக்கி காலைல மாப்பிள்ளை கிட்ட வேற ஒரு விசியமா பேச கூப்டப்ப சொன்னாரு. மூணு நாள் ஆபீஸ் விசியமா வெளியூர் போறாராம் இன்னிக்கி. அதான் சுமேதா அவர்களின் சோகத்தின் ரகசியம். சரிதானே தங்கையே..." என ஏதோ அந்த கால சினிமா வசனம் போல் சுரேஷ் கூற

"மூணு நாள் தானே சுமி... அதுக்கே இப்படி சோகமா" என சுசிலாவும் மகளை கேலி செய்தாள்

என்ன சொல்ல போகிறானோ என பயந்திருந்த சுமேதா தன் முகத்தில் தோன்றிய நிம்மதி உணர்வை மறைக்க தலை குனிந்தாள்

அதை மகளின் வெட்கம் என அர்த்தம் செய்து கொண்ட பெற்றோர் பெருமிதத்தில் மகிழ்த்தனர்

மகளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து விட்டோம் என்ற நிம்மதி அந்த பெருமிதத்தில் தெரிந்தது

தன் சிறு கலக்கத்தை தாங்காமல் விசாரிக்கும் குடும்பத்தினரிடம் எத்தனை பெரிய விசியத்தை மறைக்கிறோம் என குற்ற உணர்வு தோன்ற சொல்லிவிடலாம்  என இமை உயர்த்தியவள் தன் தந்தையின் உடல் நிலை நினைவு  வர மௌனமானாள்

ஆறு மாதம் முன்பு திடீரென சுந்தரம் நெஞ்சு வலியால் துடிக்க பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியதானது. அதன் பின் தான் இவள் ஜாதக கட்டை எடுத்ததே

கொஞ்ச நாள் போகட்டுமென சுமேதா தள்ளி போட முயன்றதை யாரும் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் அதற்குள் தன் இன்றைய பிரச்சனையின் நிலைமை சீராகி இருக்குமோ என தோன்றியது அவளுக்கு

அம்மாவை பற்றி சொல்லவே வேண்டாம் எப்போதும் இளகிய மனம்

அண்ணாவிடம் தனியே சொல்லலாமா என நினைத்தவள் சுரேஷின் கட்டுப்படாத முன் கோபம் நினைவுக்கு வர மனம் நொந்தாள்

"பேசாமல் சூர்யாவிடமே பேசினால் என்ன, பெண் மனதை புரிந்து கொள்ள முடியாதவன் இல்லையே. எத்தனை நாள் தான் மனதில் உள்ளதை மறைத்து சந்தோசமாய் இருப்பது போல் நடிக்க இயலும்" என தோன்ற அதுவே சரியன முடிவுக்கு வந்தாள்

மறுநொடியே, அப்படி அவனிடம் கூறினால் அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் கண் முன் தோன்ற செய்வது அறியாமல் திகைத்தாள்

_________________________

மறுநாள் ஏதோ ஆடை வாங்கவென கடைவீதிக்கு சுமி தன் அன்னையுடன் சென்றாள். சிறிது நேரத்தில் ஏதோ கண்கள் தன்னை தொடர்வது போல உள்ளுணர்வு உறுத்த அந்த திசையில் பார்த்தவள் ......

அதே கண்கள்................................

முகத்தின் முகவரிகண்கள்
காதலின் முகவரிஇதயம்
கண்கள்வழி பயணித்து
காதல்முகவரி கண்டேனடி!!

பாதை மிகசுகமே
பயணம் சிலகணமே
ஒய்ந்து அமரஉணர்ந்தேன்
ஒருவழிபயணம் அதுவென!!

அடுத்த பகுதி - பகுதி 2 படிக்க - இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)

40 பேரு சொல்லி இருக்காக:

LK said...

நீயும் தொடர் ஸ்டார்ட் பண்ணிட்டியா ? நானும்தான்.

அருமையான துவக்கம்

அஹமது இர்ஷாத் said...

அருமையான துவக்கம்///


ரீபீஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட.............

krishnakumar said...

நல்லா இ௫க்கு

sandhya said...

தொடக்கமே நல்லா இருக்கு ....மீதி கதைக்கு காத்திருக்கிறேன்

Priya said...

ம்ம்.. த்ரில்லர் கதையா... தொடக்கம் நல்லா இருக்கு.

பத்மநாபன் said...

த்ரில்லர் க்கே உரித்தான நல்ல சஸ்பென்ஸோடு துவக்கம்.. என்னாவா இருக்கும்னு நாங்களும் பிச்சுக்க ஆரம்பிச்சிட்டோம்..

Matangi Mawley said...

interesting start... aduththa pakuthi padikka aavalaka ullaen! :)

keep writing!

அமைதிச்சாரல் said...

த்ரில்லரா.... நடத்துங்க. படிக்க காத்திருக்கேன்.

சுசி said...

தலைப்பே பயமா இருக்கு.. இதுல அத விட பயமா ஒரு பொண்ணு வேற முறைக்குது.. எங்க போய் முடியப்போதோ.. பிள்ளையாரப்பா..

நல்லா இருக்கு புவனா.

LK said...

//தலைப்பே பயமா இருக்கு.. இதுல அத விட பயமா ஒரு பொண்ணு வேற முறைக்குது.. எங்க போய் முடியப்போதோ.. பிள்ளையாரப்பா..//

idliya vida ithu bayamaa irukkaa???

தக்குடுபாண்டி said...

//சுமேதாவின் இதயம் மிக வேகமாக அடித்து கொண்டது
// nalla kelappuraangappa biithiyaii!!..:)

அமைதிச்சாரல் said...

//idliya vida ithu bayamaa irukkaa???//

இந்த இட்லிக்கண்ணை பார்த்தா ஏன் பயம் வராது!!!

தக்குடுபாண்டி said...

best wishes for your kadhai, உங்க இட்லி மாதிரி இதுவும் பிரமாதமா வரர்துக்கு வாழ்த்துக்கள் அடப்பாவி அக்கா!!...;)

இராமசாமி கண்ணண் said...

நல்ல ஆரம்பம்.

அன்னு said...

best wishes for your kadhai, உங்க இட்லி மாதிரி இதுவும் பிரமாதமா வரர்துக்கு வாழ்த்துக்கள் அடப்பாவி அக்கா!!...;)

repeaaaaaaaaaaaaattttttttt

:))

ஜெய்லானி said...

ஆரம்பமே நல்லா இருக்கு தொடருங்கோ!!

Krishnaveni said...

Those eyes are really frightening like your way of wrighting this thriller story bhuvana. Eagerly expecting the rest.....

மகி said...

விறுவிறுப்பான தொடக்கம்..சுமேதாக்கு எனி ஓல்ட் லவ் ஸ்டோரி? ;)

Jaleela said...

arumai,

அனாமிகா துவாரகன் said...

யக்கோவ், ரொமான்ஸ்ல இருந்து திரில்லரா? இந்த படத்தைப் பாத்தா பயமா இருக்கு. இன்னைக்கு லைட் போட்டுட்டு தான் இரவு படுக்கப்போறேன். அவ்வ்வ்வ்.. ஒவ்வொரு நாள் விட்டு ஒரு நாள் என்று "மரியாதையா" எழுதனும் சரியா. ஹிஹி.

Guna said...

mm....Good start...Kalakkunga

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஆமாம் நானும் ஸ்டார்ட் தான்... வேணும்னே நான் த்ரில்லர் போடற அன்னிக்கி நீயும் போட்டு பழி வாங்கிட்ட... ஹும்... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது... (நன்றிங்கோ வோட்டுக்கு....)

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமது

@ Krishnakumar - நன்றிங்க

@ Sandhya - நன்றிங்க சந்தியா. வருகைக்கு நன்றி

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா. தொடக்கம் போலவே இனியும் இருக்க முயற்சிக்கிறேன்

@ பத்மநாபன் - பிச்சுக்க ஆரமபிச்சுடீங்களா? அதானே எனக்கு வேணும்... நன்றிங்க

@ Matangi Mawley - நன்றிங்க மாதங்கி...

@ அமைதிச்சாரல் - நடத்திடுவோம்....வாங்க வாங்க

@ சுசி - பயமா இருக்கா.... எனக்கும் கூட அந்த கண்ணை பாத்தா பயமாத்தேன் இருக்கு சுசி. தேங்க்ஸ் சுசி

@ LK - இட்லியவிட பயமா இருக்கா? அந்த பயம் எப்பவும் இருக்கணும்னு தான் இப்படி புதுசு புதுசா பயப்படுத்தறது....எப்பூடி?

@ தக்குடு - உங்கள விடவா நாங்க பீதிய கிளப்பறோம் சாரே? அடபாவிங்களா ஆள் ஆளுக்கு என்னோட தங்கமான இட்லிய வம்பு இழுக்கறீங்களே, ஞாயமா?

@ அமைதிச்சாரல் - நீங்களுமா? உங்களுக்கும் பார்சல் வருது இருங்க

@ ராமசாமி கண்ணன் - நன்றிங்க

@ அன்னு - மொதல்ல இந்த repeat ஐ ஒழிக்கணும் கேட்டேளா? நீயுமா? பெண்ணே நீயுமா?

@ ஜெய்லானி - நன்றிங்கோ

@ krishnaveni - தேங்க்ஸ் வேணி. எனக்கும் பயமா தான் இருக்கு

@ மகி - நன்றி. ஓல்ட் லவ் ஸ்டோரிஆ? தெரியலயே? இருங்க கேட்டு சொல்றேன்....

@ ஜலீலா - தேங்க்ஸ் ஜலீலா

@ அனாமிகா - வாக்கா...வா... என்னடா இன்னும் நம்ம பங்காளிய காணோமேனு பாத்தேன்? நீயா பயபட்ற ஆளு... உன்னை பாத்து நாங்க பயப்படாம இருந்தா போதாதா என்ன? பார்ரா.... நம்மள இந்த மெரட்டு மெரட்டுது... இதுக்கு பயமா? நம்பிட்டோம்......... "மரியாதையா"... ம்... எழுதறேன் ஆத்தா... எழுதறேன்....

@ Guna - தேங்க்ஸ் குணா

ஹேமா said...

கண்ணைப் பாக்கவே பயமாயிருக்கு.
பயப்பிடுத்தாம எழுதுங்க.வாசிக்கிறேன்.

LK said...

//வேணும்னே நான் த்ரில்லர் போடற அன்னிக்கி நீயும் போட்டு பழி வாங்கிட்ட.//

ecchus me.. naanthan first potten... ne secondthan vadai unakku illa. venumna un idliya tharen

geetha santhanam said...

உங்கள் கதை சுவாரஸ்யம். அதில் வந்த சிறு கவிதை அருமை.---கீதா

ஹுஸைனம்மா said...

ஏம்மா, இந்த சிறுகதை, குறுங்கதை எழுதலாந்தானே நீங்க? இப்படி சஸ்பென்ஸ் வச்சே நம்ம டென்ஷ்னை ஏத்துறது வழக்கமாப் போச்சு; சரியான ஸாடிஸ்ட்!! (க்ரைம் கதையாச்சே, அதனால இப்படி வார்த்தைகள்தான் சொல்லணும்?)

;-))))))))))

LK said...

//சரியான ஸாடிஸ்ட்!//
appa naan escapeee

Venkatesh said...

ஆரம்பமே பயமா இருக்கு. இன்னும் போகப்போக எங்க பொய் முடிய போகுதோ தெரியல. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

vanathy said...

தங்ஸ், நேற்று இரவே பார்த்தேன். படிக்கவில்லை. அந்த கண்களைப் பார்த்தாலே டெரரா இருக்கு. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.

நல்லா இருக்கு. எப்போ மீதிக் கதை போடப் போறீங்க!

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - உங்களையும் அந்த கண்ணு பயப்படுத்துதா? ஹா ஹா ஹா... சூப்பர்... திட்டாதீங்க... கஷ்டப்பட்டு த்ரில்லர் கதை எழுதி எல்லாரும் பயந்தா சந்தோசமா தானே இருக்கும்... அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...

@ LK - //ecchus me.. naanthan first potten... ne secondthan vadai unakku illa. venumna un idliya tharen //
திருப்பதிக்கே லட்டா... ம்... இருக்கட்டும் இருக்கட்டும்...

@ Geetha Santhanam - நன்றிங்க கீதா முதல் வருகைக்கும் கருத்துக்கும்

@ ஹுஸைனம்மா - சும்மா இருந்த சிங்கத்த கெளப்பி விட்டுடீங்க... இனி ஒரு பக்க கதையா எழுதி உங்களை torture பண்ணல... என் பேரை படுபாவி தங்கமணினு மாத்தி வெச்சுக்கறேன்... ஹும்....ஹும்...ஹும்... (மூச்சு வாங்கறேன் வேற ஒண்ணும் இல்ல... )
(மனசுக்குள்) அப்பாடா இப்போ தான் நிம்மதி. நாலு பேரு டென்ஷன் ஆகணும்னா நாம சாடிஸ்ட் பட்டம் வாங்கறது கூட தப்பில்ல தான்.. என்ன நான் சொல்றது? ஹி ஹி ஹி

@ LK - //appa naan escapeee // நீ எஸ்கேப் எல்லாம் ஒண்ணுமில்ல... உனக்கும் இருக்கு அடுத்த பார்ட் போட்டதும்... நீ என்னை விட பெரிய சாடிஸ்ட்னு (அவங்க சொன்ன அதே Context ல தான்) பாவம் நம்ம ஹுஸைனம்மாவுக்கு இன்னும் தெரியல....

@ Venkatesh - எங்கயாச்சும் போய் கண்டிப்பா முடிச்சுடுவேனுங்க வெங்கடேஷ்... நன்றிங்க

@ Vanathy - யாரு? நீங்க? பயந்த சுபாவம்? இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? கொஞ்சம் அசந்தா பிரியாணி இட்லி (ஹி ஹி ஹி) எல்லாம் சுட்டுடற ஆளுக்கு இதெல்லாம் ஒரு பயமா.... ஹா ஹா ஹா...மீதி கதை சீக்கரம் போட்டுடறேன் வானதி (ரெம்ப வாரிட்டனோ வானதிய...)

vanathy said...

தங்ஸ், அது வேற. இது வேற. அவங்க அசந்த நேரம் பார்த்து, மெதுவா சுட்டுட்டு வந்திடணும். அது சரி.. உங்கள் இட்லியை நான் எப்போ சுட்டேன். இதெல்லாம் சும்மா விளம்பரத்திற்காக தங்ஸ் பண்ணுற வேலை. மக்களே ஏமாந்திடாதீர்கள்.

தனி காட்டு ராஜா said...

//அதை கூறி எல்லோரையும் கலவரப்படுத்த மனமின்றி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என விட்டுவிட்டார். ஒருவேளை அப்போதே கேட்டிருந்தால்
பல விபரீதங்களை தவிர்த்து இருக்கலாமோ என்னமோ... //

கல்யாணம் -கறதே விபரீதம் தானே ...கண்டிப்பா அந்த விபரீதம் கதையில வரமா பார்த்து எழுதுங்க .
அவ்வ்வ்வ்வ்வ்............

ஸ்ரீராம். said...

கொலைக் கதையா.. காதல் கதையா..காதல் கொலைக் கதையா...

அன்னு said...

//@ அன்னு - மொதல்ல இந்த repeat ஐ ஒழிக்கணும் கேட்டேளா? நீயுமா? பெண்ணே நீயுமா?//

ஹி ஹி ஹி.....வலை, பதிவு, ஓட்டுன்னு வந்தப்புறம் எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதானே...இதுக்கு போயி கோவிச்சிகாதீங்க அம்மணி!!

அன்னு said...

//கொலைக் கதையா.. காதல் கதையா..காதல் கொலைக் கதையா... //

Good Question!!
இது கதை எனும் Conceptஐயே கொலை செய்யும் கதை, இல்லீங்க்கா??

அப்பாவி தங்கமணி said...

@ வானதி - நல்ல கருத்துள்ள திருட்டு தான் போல... ஓ... இப்போ நீங்க எடுக்கலையா இட்லிய... வேற யாரு எதுத்து இருப்பா, விசாரிக்கறேன் விசாரிக்கறேன்... (ஹும்... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குடா சாமி...)

@ தனி காட்டு ராஜா - உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா மிஸ்டர். தனி காட்டு ராஜா... ஆகி இருந்தால் மொதல்ல உங்க தங்கமணி ஈமெயில் அட்ரஸ் சொல்லுங்க... இல்லைனா மறக்காம கல்யாணத்துக்கு அழைப்பு குடுங்க... வந்து கவனிச்சுகறோம் ...

@ ஸ்ரீராம் - அப்பாடா... இது கதைங்கற அளவுக்கு ஒத்துகிட்டீங்களே... அது வரைக்கும் சந்தோஷம்... இது காதல் கலந்த கொலை கதை... ஏங்க? காதலிக்கறவங்க கொலை செய்ய மாட்டாங்களா... இல்லை கொலை செய்ய படமாடாங்களா... (நாங்களும் கொழப்புவோம்ல...ஹி ஹி ஹி)

@ அன்னு - //இது கதை எனும் Conceptஐயே கொலை செய்யும் கதை, இல்லீங்க்கா?? //

ஏம்மா? ஏன்? ஏதோ அப்படி இப்படி என் பொழப்பு ஓடுது... விடமாடீங்க போல இருக்கே... போற போக்குல என்னை அக்கானு வேற சொல்லியாச்சா... எல்லாம் அநியாயமப்பா? எல்லாரும் அந்த LK கோஷ்டி போல இருக்கு....இருங்க இருங்க உங்க பேருல என்னோட கொலை கதைல ஒரு கேரக்டர் create பண்ணிடறேன்... (எப்படி நம்ம மிரட்டல்...?ஹா ஹா ஹா!!!!)

siva said...

:) nice

Harini Sree said...

miga arumayaana thodakkam! :)

Porkodi (பொற்கொடி) said...

soooooooooooooooooooooofer!!!! :D enna ellarum thriller story ezhudhi kumikringa?

அப்பாவி தங்கமணி said...

@ siva - தேங்க்ஸ் சிவா

@ Harini Sree - தேங்க்ஸ் அம்மணி

@ பொற்கொடி - எல்லாம் உங்க தயவுல ஓடுது... நன்றி

Post a Comment