Sunday, June 13, 2010

அதே கண்கள்...சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 2 )


மறுநாள் ஏதோ ஆடை வாங்கவென கடைவீதிக்கு சுமி தன் அன்னையுடன் சென்றாள். சிறிது நேரத்தில் ஏதோ கண்கள் தன்னை தொடர்வது போல உள்ளுணர்வு உறுத்த அந்த திசையில் பார்த்தவள் ......


அதே கண்கள்................................ தொடர துணுக்குற்றாள்....

ஒரு கணம் தன் அருகில் இருக்கும் அம்மா தன்னை கவனித்து இருப்பாரோ என பதறியவள் அவர் பூக்காரியுடன் பேரம் பேசி கொண்டு இருப்பதை பார்த்து நிம்மதி ஆனாள் சுமேதா

அந்த சந்தடி நிறைந்த கோவை மாநகரின் கிராஸ் கட் ரோட்டில் அந்த கண்களை மீண்டும் தேடினாள்

"அம்மா நீ பூ வாங்கிட்டு இரு...நான் ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்றவள் அவள் அம்மாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அந்த கண்களின் திசையில் சென்றாள்

___________________

"எங்க சுமேதா போன வெயில்ல இப்படி நிக்க வெச்சுட்டு? எவ்ளோ நேரம் ஆச்சு"

"இல்லமா....இங்க தான்...கடைக்கு...." என்று ஏதோ உளறினாள்

"சரி சரி....சீக்கரம் வா. ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்ல ஒரு blouse எடுக்கணும். இன்னும் கொஞ்சம் போன கடைல கூட்டம் ஆய்டும்" என துரிதபடுத்தினாள் சுசீலா

____________________

"என்ன சுமி. எப்பவும் என்னோட காதை puncture பண்ற மாதிரி லொட லொடன்னு பேசிட்டே இருப்ப. இன்னிக்கி அமைதியா இருக்க. ஏண்டா ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா" என காதலும் கவலையுமாய் கேட்டான் சூர்யா

அன்னபூர்ணா உணவகத்தின் பாமிலி ரூமின் ஏசி குளிரையும் மீறி வியர்த்தது சுமேதாவுக்கு

"இல்லையே...நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என சிரிக்க முயன்றாள் சுமேதா

"இல்ல...நீ எப்பவும் போல இல்ல.... நான் மூணு நாளு தானே ஊர்ல இல்ல அதுக்கே கோபமா இல்ல கல்யாண பயமா?" என சிரித்து கொண்டே கேட்டான்

"கல்யாண பயம் உங்களுக்கு தான் வரணும்...எனக்கு என்ன?" என்றாள் இயல்பாய், பேச்சை திசை மாற்றும் பொருட்டு

"அடிப்பாவி...அப்போ என்னை torture பண்ண நெறைய பிளான் போட்டு வெச்சு இருக்கியா?"

"ம்... கல்யாணம் நிச்சியம் ஆன அடுத்த நாளே 80 பக்க நோட் ஒண்ணு வாங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்... கிட்ட தட்ட நோட் தீந்து போச்சு...." என அபிநயத்துடன் கை விரித்து சொல்ல அதை ரசித்தவன்

"ஆஹா...ஆளை விடு தாயே" என பயந்தது போல் நடித்தான்

____________________

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"......."

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"........"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"........"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"......."

"ஒகே வெச்சுடறேன்" என சொல்லி திரும்பியவள் தன் அம்மா அவள் அறை வாயிலில் நிற்பதை கண்டதும் இதயம் வேகமாக அடித்து கொண்டது சுமேதாவுக்கு

"என்ன சுமி...யாரு போன்ல? என்ன ஏதோ பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்னெல்லாம் சொல்லிட்டு இருந்த" என பதட்டத்துடன் கேட்க

"அ...அ....அது....ஒண்ணுமில்லமா....என் friend திவ்யா தான். அது...கல்யாணத்துக்கு பியுட்டி பார்லர் அவ தானே சொல்லி இருந்தா...அந்த லேடிக்கு அன்னிக்கி வேற ஏதோ முக்கியமா ஒரு appointment னா....அதான் கடைசி நேரத்துல இப்படி சொன்னா எப்படி? பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்ன்னு சொல்லிட்டு இருந்தேன்" என ஒருவாறு தன் அம்மாவிடம் சமாளிப்பதற்குள் சுமேதாவிற்கு முகம் வியர்த்து போனது

"பாத்து சுமி...வேற யாராச்சும் கிட்ட கூட சொல்லி வெய்யி" என சுசீலா சொல்லி சென்றார்

"கடவுளே....கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு...எப்படி சமாளிக்க போறேன்" என சுமேதா மனதிற்குள் புலம்பினாள்

___________________

அன்று... திருமண நாள்.... கோவையின் பிரபலமான ராமகிருஷ்ண திருமண மண்டபம் விழாக் கோலம் பூண்டு இருந்தது

"என்ன கல்யாண பொண்ணே...செம டென்ஷன்ஆ இருக்க? நியாயத்துக்கு மாப்பிள்ளை தானே டென்ஷன் ஆகணும்" என தோழிகளின் கேலியில் இயல்பாய் சிரிக்க முயன்று தோற்றாள் சுமேதா

அதற்குள் "முஹுர்த்ததுக்கு நேரமாச்சு...பொண்ண அழச்சுண்டு வாங்கோ" என ப்ரோகிதர் குரல் கொடுக்க மணப்பெண்ணை மணவறைக்கு (கல்யாண பந்தல்) அழைத்து சென்றனர்

மணமேடையில் அமர்ந்த சுமேதாவின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடியது

சுமேதாவின் குழப்பமான முகம் மணமகன் சூர்யாவை அமைதி இழக்க செய்ய "சுமி" என்றான் மெல்லிய குரலில்

அவன் அழைப்பில் கவனம் மாறி முகத்தில் வலிய புன்னகையை மாட்டி மணப்பெண்ணாய் தலை குனிந்தாள் சுமேதா

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என ப்ரோகிதர் கூற சுமேதாவின் கழுத்தில் சூர்யா மங்களநாண் அணிவித்தான்

சுற்றமும் நட்பும் கண்கள் பனிக்க ஆசீர்வதிக்க ஒரு ஜோடி கண்கள் மட்டும் அந்த காட்சியை ரசிக்கும் மனநிலையின்றி பதட்டத்துடன் அலைபாய்ந்தது.....

______________________

"பெண்ணே சமத்து....பத்தாவது மாசம் தொட்டில் கட்டிடணும், என்ன?" என மூத்த தலைமுறையும்

"பாத்துடி....மாப்பிள்ளை பயந்துட போறார்" என தோழிகளும் கேலி செய்ய எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவதை போல் நடித்து தலை குனிந்து சமாளித்தாள் சுமேதா

அதே சமயம் "அக்கா உனக்கு போன்" என தொலைபேசியை அவள் கையில் திணித்து விட்டு போனது ஒரு வாண்டு

"இந்த நேரத்துல என்ன சுமி போன்? சரி சரி... சீக்ரம் பேசிட்டு வெய்யி" என்றாள் சுசீலா

"ஹலோ...." என்றாள் நடுங்கும் குரலில்

"....."

மறுமுனை என்ன கூறியதோ, முகம் வியர்க்க கண்கள் பனிக்க உடல் நடுங்க குளியல் அறைக்குள் தஞ்சமானாள் சுமேதா

______________________

ஆவலுடன் மனைவியை எதிர்நோக்கி காத்திருந்த சூர்யா, அறைக்குள் வந்த சுமேதாவின் முகம் வெளிறி இருந்ததை கண்டு குழப்பமானான்

"என்ன ஆச்சு சுமி? ஏன் இப்படி இருக்க?" என பதட்டத்துடன் கேட்க

"அ....அது...ரெம்ப தலைவலியா இருக்குங்க" என்றாள் கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்க

"அப்படியா... காலைல இருந்து வீடியோ லைட் அடிச்சுட்டே இருந்ததல்ல... உனக்கு சேரலைன்னு நெனைக்கிறேன். உன் கண்ணு கூட சிவப்பா இருக்கு... சரி நீ ரெஸ்ட் எடு சுமி" என்றான் அக்கறையாய்

அவனது புரிந்துணர்வும் அக்கறையும் சுமேதாவின் குற்ற உணர்வை மேலும் அதிகமாக்கியது

அந்த இரவு பல ரகசியங்களை தன்னுள் தேக்கி கொண்டே உறங்கியது

________________________

மறுநாள் மறுவீடு செல்ல மாமியார் வீட்டுக்கு கிளம்பினாள் சுமேதா

"மாமா நாங்க அந்த வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஊட்டி போறோம் சாயங்காலம். வெள்ளிக்கிழமை வந்துடறோம்" என சூர்யா சுமேதாவின் அப்பாவிடம் கூறிக் கொண்டு இருந்தான்

"சரிங்க மாப்ள... பாத்து பத்திரமா டிரைவ் பண்ணுங்க" என்றார் தந்தைக்கே உரிய அக்கறையுடன்

"ஏய்....சுமி...இன்னும் கிளம்பலையா நீ. மாப்ள வண்டில ஏறியாச்சு" என தங்கையை துரிதப்படுத்தினான் சுரேஷ்

"ஏண்டா அவள வெரட்டற. நானே கிளம்பராளேன்னு கவலையா இருக்கேன்" என சுசீலா கண்ணில் நீருடன் சொல்ல அதுதான் சாக்கென சுமேதா அன்னையை கட்டி கொண்டு அழுதாள்

அவள் அழும் காரணம் வேறு என அங்கு யாருக்கும் புரியாதது தான் வேதனை

"சரிம்மா நான் வரேன்...வரேண்ணா... அப்பா வரேன்...." என எல்லோரிடமும் கடைசியாய் விடை பெறுவது போல் பலமுறை சொல்லி சென்றாள் சுமேதா.....

__________________

புதுமனைவியை ஓர கண்ணில் ரசித்தவாறே கார் ஓட்டினான் சூர்யா

"சுமி... தலைவலி இப்போ ஒகேவா? மாத்திரை எதுனா வாங்கனுமா"

"இல்லைங்க...இப்போ பரவால்ல" என தலை குனிந்தாள்

"ஏய்...இப்போ நாம ரெண்டு பேரு தானே இருக்கோம்.... நேத்து கல்யாண மண்டபத்துல மாதிரியே இன்னும் தலை குனிஞ்சுட்டே இருக்க..." என்ற அவன் சீண்டலில்

"அப்படி எல்லாம் இல்ல..." என சிரித்தாள்

மேம்பாலம் தாண்டி சாய்பாபா கோவில் சிக்னலில் வண்டி நிற்க வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தாள் சுமேதா

அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...

அதே கண்கள்....

சிக்கனம் தான்நானும்
சிலையாய் உனைவடிப்பதில்
இக்கணம்நீ வேணும்
இனிவாழும் நாள்வரை

அடுத்த பகுதி - பகுதி 3 படிக்க - இங்கே கிளிக்கவும்

தொடரும்....

44 பேரு சொல்லி இருக்காக:

Krishnaveni said...

While reading the story....i was like...in coimbatore....nice round up...cross cut road, saibaba colony...sridevi silks...hilarious write up. eagerly expecting the rest...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...
//////


அங்கு யார் நின்றது என்பதை நானும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் . மிகவும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் கதையை முடிக்கிறீர்கள் .தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அனாமிகா துவாரகன் said...

அடப்பாவி அக்கா. இன்னைக்கு நான் தூங்கின மாதிரி தான். படம் ரொம்ப பயமா இருக்கு. இருங்க படிச்சுட்டு வந்து பேசறேன்.

dheva said...

ayo......payangaraa thirillnga...innaikkuthaan paarthen...thodarnthu varuhiren..!

அனாமிகா துவாரகன் said...

இதெல்லாம் ஏதுக்க முடியாது. நான் தூங்கற நேரத்தில இப்டி எழுதினா நான் எப்டி தூங்கறது. யாராவது இரண்டு பாக்கட் அந்திராஸ் இவங்களுக்கு அனுப்புங்கப்பா. போன வாட்டி படிச்சுட்டே நான் தூங்கற வரைக்கும் பேசுன்னு ஆஷை கெஞ்சிட்டு இருந்தேன். இன்னைக்கு அவனை கேட்டா உதைப்பான். அபி அல்லது தூவாவை ஐஸ் வைக்க வேண்டியது தான். அவ்வ்வ்வ்வ்வ்வ். டாப்பிக்கை மாத்தவும். =(( =(( =(( =(( =((

அனாமிகா துவாரகன் said...

மைனஸ் ஓட்டு விழுந்தா அது என்னோடது தான். அவ்வ்வ்வ்வ்வ்...

Porkodi (பொற்கொடி) said...

great! am still clueless what exactly could be the problem.. :-)

பத்மநாபன் said...

பரபரப்பா கொண்டு போறிங்க...கிருஷ்வேணி சொன்னமாதிரி நம்ம ஊருக்குள்ள ரவுண்ட் அடிக்கிற உணர்வு..கதையில் ட்விஸ்ட் எதுவும் வைக்கிலென்னா இந்நேரம் ஜோடி பெ.நா.பா , மே.பா தாண்டி கல்லாறு கடந்து..மலைப்பாதைக்கு வந்திருப்பார்கள்...இனிமேல் வழியிலும்..கதையிலும் நிறைய திருப்பங்கள் எதிர்பார்க்கலாம்..

அமைதிச்சாரல் said...

//சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்..//

நல்லா சஸ்பென்ஸ் வைக்கிறீங்கப்பா...

சுசி said...

சூப்பர் புவனா.. ரொம்ப நல்லா எழுதறிங்க..

சுமேதா நல்ல பெயர்.

சின்ன அம்மிணி said...

ஏன் சுமேதா பயப்படணும். முன்னாள் லவ்வு னு ஏதாவதா

சின்ன அம்மிணி said...

+ ஓட்டு நாந்தான் :)

LK said...

enna ithu sari illai ennai mathiriye suspense vaikrai

Ananthi said...

Wow.. Kalakkureenga pa.. Very nice..
hmmm...next part paarka meendum santhikiraen.. :D :D

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன். நல்ல தொடர். வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

அப்பாவியா இப்பிடி நம்ப முடியலப்பா ...நம்ப முடியல...

L.K யும் அப்பாவியும் போட்டி எப்ப முடியுமோ தெரியல...

நல்ல சஸ்பென்ஸ்...!!!

ஹேமா said...

ஐயோ...என்னதான் சொல்லப்போறீங்க.சொல்லி முடிச்சிடுங்க.பயமா இருக்கு."சப்"ன்னு மட்டும் முடிச்சீங்கன்னா ...!

யுக கோபிகா said...

சஸ்பென்ஸ் நல்லா இருக்கு..

அஹமது இர்ஷாத் said...

சஸ்பென்ஸ் அருமையா வைக்கிறீங்க சீக்கிரம் அடுத்து...!

sandhya said...

கதை ரொம்ப விருவிருப்பா போகுது மீதி கதை சீக்ரமா எழுதரிங்களா?

ஸ்ரீராம். said...

ஹேமா போலவே எனக்கும் பயமாத்தான் இருக்குங்க...சில இடங்களில் கண்கள் மட்டும்னு வேற எழுதி இருக்கீங்க...உடம்பு இருந்ததா இல்லையா என்று வேறு தெளிவா எழுதலை...நடுக்கத்துடன் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்...

ராம்ஜி_யாஹூ said...

me the 22nd

Mahi said...

கிராஸ்கட் ரோடு,லக்ஷ்மி காம்ப்ளக்ஸ் மல்லிகைப் பூ,ஸ்ரீ தேவி சில்க்ஸ்,அன்னபூர்ணா,சாய்பாபா சாய்பாபா கோவில்.ம்ம்..ஊருக்குப் போயிட்டு வந்த மாதிரிதான் இருக்கு புவனா!

கதை ஸ்பீட் எடுத்தாச்சு..:) 102 -A பஸ் எல்லாம் வராதா கதைல? :)

LK said...

//L.K யும் அப்பாவியும் போட்டி எப்ப முடியுமோ தெரியல...//

jai naanlam pottila illapa.. nan amature writer ivanga professional ...

Karthick Chidambaram said...

Arumaayaa eluthureenga. Naanum meendum kathai eluthalaamaa endru ninaikkuren.

தக்குடுபாண்டி said...

nice flow akka, not able to judg...:) keep it up. sridevi textiles padam onnu pootu irukkalaamm...:P

soundar said...

நல்ல சஸ்பென்ஸ்.....

LK said...

appavi oru award koduthu iruken en blog paakavum

Matangi Mawley said...

super! semma viru viruppaa irukku! sari flow.. gr8!

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி.... thats real nostalgic for me too... thanks again

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - நன்றிங்க சங்கர்

@ அனாமிகா - யாரு உனக்கா பயம்? ஏம்மா எதுனா நம்பற மாதிரி சொல்லேன்.... ஹா ஹா ஹா

@ dheva - நன்றிங்க தேவா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஹா ஹா ஹா... இப்போ தான் சந்தோஷம்... நல்லா பயந்து கனவு பூரா கண்கள் கண்களா வர வாழ்த்துக்கள். மைனஸ் ஓட்டா... அப்புறம் நான் வைரஸ் அனுப்ப வேண்டி வரும் சொல்லிட்டேன்...

@ பொற்கொடி - தேங்க்ஸ் கொடி... உங்களுக்கே புரியலையா... ஆஹா...

@ பத்மநாபன் - நன்றிங்க. அடடா பெ.நா.பா , மே.பா னு ஊரு ஞாபகத்த கெளப்பறீங்க சார்... .//திருப்பங்கள் வழியிலும் கதையிலும் பார்க்கலாம்// சரி தான்... நம்ம ஊரு என்ன NH ரோடா?

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க... என்னங்க செய்ய? சஸ்பென்ஸ் வெச்சு வெச்சே பழகி போச்சு....

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - நன்றி சுசி. சுமேதா எனக்கும் ரெம்ப பிடிச்சது... சமீபத்துல தான் இந்த பேரு கேட்டேன்

@ சின்ன அம்மணி - ம்ம்ம்ம் .... தெரியலிங்களே அம்மணி... இருங்க ஒரு நடை கோயம்புத்தூர் போய் சுமேதாகிட்டயே கேட்டு சொல்றேன்... + ஓட்டு நீங்க தானா...நன்றி நன்றி நன்றி

@ LK - suspense வெக்கலன்னா திகில் கதை சங்கத்துல சேத்துக்க மாட்டாங்களாம் பாஸ்.... அதான்

@ Ananthi - தேங்க்ஸ் ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

@ ஜெய்லானி - ஹி ஹி ஹி... அதே அப்பாவி தானுங்க ..... நம்புங்க... ஐயோ போட்டி எல்லாம் இல்லைங்க... நன்றிங்க

@ ஹேமா - ஓ... சப்புன்னு கூட முடிக்கலாமோ... ஐடியாவுக்கு நன்றி... ஒகே ஒகே டென்ஷன் ஆகாதீங்க... நன்றிங்க

@ யுக கோபிகா - தேங்க்ஸ் கோபிகா

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க

@ sandhya - சீக்கரம் எழுதறேன்... நன்றிங்க

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா... அடப்பாவமே... இப்படி எல்லாம் சந்தேகமா... பயத்தோட காத்திருங்க... சீக்கரம் அடுத்த பகுதி போடறேன்.. நன்றிங்க

@ ராம்ஜி_யாஹூ - Yes, you the 22nd

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - எனக்கும் தான் மகி ....ஹும் ... மல்லிகை பூ கண்ணுல பாத்து வருஷம் ரெண்டு ஆச்சு.... //102 -A பஸ் எல்லாம் வராதா கதைல?// 102 A பஸ் இப்போ தான் காந்திபுரத்துல கெளம்பி சிவானந்தா காலனி வந்திருக்கு.... காரமடை போய் சேர இப்படியும் நேரம் ஆகும்...

@ LK - //jai naanlam pottila illapa.. nan amature writer ivanga professional ... // அடப்பாவமே... ஒரு முடிவோட இருக்கீங்க போல... நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் இவங்க சொல்றாங்கப்பா

@ Karthick Chidambaram - முதல் வருகைக்கு நன்றிங்க கார்த்திக். ம்ம்ம்..... சீக்கரம் ஸ்டார்ட் பண்ணுங்க கதைய....

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ஆ ஒரு விசயம் சொல்லி இருக்கீங்க... ச்சே...எனக்கு தோணலை பாரேன்... இனிமே போடறேன்...

@ Soundar - நன்றிங்க

@ //LK சொன்னது… appavi oru award koduthu iruken en blog பாகவும்//
நன்றி நன்றி நன்றி....

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி...

ராவி said...

நல்லா இருக்குங்க உங்க thriller ஸ்டோரி. ராஜேஸ்குமார் peak இல் இருந்தப்ப (10 years முன்னால) நான் எல்லா crime novel ம் படிச்சிஇருக்கேன். கோவை பின்னணியில் அதே ராஜேஸ்குமார் effect இருக்குங்க உங்க ஸ்டோரி இல் .

vanathy said...

Thangs, Super. I read this story few days before and was very scared. I think now I am okay.....DO NOT SCARE ME LIKE THIS

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - தேங்க்ஸ் ராவி... கோவை பின்னணி வேணும்னா ஒத்துக்கறேன்... அதுக்காக ராஜேஷ்குமார் எல்லாம் இல்லைங்க... அவர் எங்க நான் எங்க? ஏதோ ஓடுது பொழப்பு

@ vanathy - யாரு நீங்களா scare ? get together வெச்சு நீங்க தானுங்க ஊரையே மெரட்டிட்டு இருக்கீங்க... ஹா ஹா ஹா

Harini Sree said...

super! :) konjam late a thaan padichen! intha kathai manasulaye irunthuthu yentha blog la paathomnu yosichukitu irunthen inniki thaan oru vaarama padikkathatha ellaam padikkanumnu nenachu open panninen kannula pattuthu! :)

அப்பாவி தங்கமணி said...

@ Harini Sree - Thanks Harini. ஓ.... புக்மார்க் பண்ணிக்கோயேன்.... ஓவர் stunt ஆ இருக்கோ? ஹி ஹி ஹி .... thanks again

Thenral said...

Super...!Nijamave swaarasyamaa irukku.Padhivu podarathula ungalukku nigar neengathaan.

அப்பாவி தங்கமணி said...

@ Thendral - தேங்க்ஸ் தென்றல்.... உங்கள மாதிரி encourage பண்றவங்க தான் இதுக்கு காரணம்.... முதல் வருகைக்கு நன்றி

அனாமிகா துவாரகன் said...

//"என்ன சுமி. எப்பவும் என்னோட காதை puncture பண்ற மாதிரி லொட லொடன்னு பேசிட்டே இருப்ப. இன்னிக்கி அமைதியா இருக்க. ஏண்டா ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா" என காதலும் கவலையுமாய் கேட்டான் சூர்யா

அன்னபூர்ணா உணவகத்தின் பாமிலி ரூமின் ஏசி குளிரையும் மீறி வியர்த்தது சுமேதாவுக்கு

"இல்லையே...நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என சிரிக்க முயன்றாள் சுமேதா

"இல்ல...நீ எப்பவும் போல இல்ல.... நான் மூணு நாளு தானே ஊர்ல இல்ல அதுக்கே கோபமா இல்ல கல்யாண பயமா?" என சிரித்து கொண்டே கேட்டான்

"கல்யாண பயம் உங்களுக்கு தான் வரணும்...எனக்கு என்ன?" என்றாள் இயல்பாய், பேச்சை திசை மாற்றும் பொருட்டு

"அடிப்பாவி...அப்போ என்னை torture பண்ண நெறைய பிளான் போட்டு வெச்சு இருக்கியா?"

"ம்... கல்யாணம் நிச்சியம் ஆன அடுத்த நாளே 80 பக்க நோட் ஒண்ணு வாங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்... கிட்ட தட்ட நோட் தீந்து போச்சு...." என அபிநயத்துடன் கை விரித்து சொல்ல அதை ரசித்தவன்

"ஆஹா...ஆளை விடு தாயே" என பயந்தது போல் நடித்தான் //

எனக்கென்னவோ இது நீங்களும் அத்திம்பேரும் பேசிட்ட டயலோக்ஸ் மாதிரி இருக்கு. உண்மையை சொல்லுங்க.

Post a Comment