Monday, June 28, 2010

அதே கண்கள்...சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 3)


மேம்பாலம் தாண்டி சாய்பாபா கோவில் சிக்னலில் வண்டி நிற்க வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தாள் சுமேதா

அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...

தன் முகமாற்றத்தை கணவன் கண்டு கொண்டானோ என அவனறியாமல் அவனை கண்டவள் அவன் சாலையில் கவனம் செலுத்தியதில் நிம்மதியானாள்

சிக்னலின் மறுபுறம் நின்ற உருவம் ஏதோ சைகை காட்ட தலை குனிந்தாள்
_____________________

"சுமி.... வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமா?"

"......" குழப்பத்தில் லயித்து இருந்தவள் எதுவும் பேசாமல் இருக்க

"ஏய்... சுமி... என்ன இப்பவே ஊட்டி போயிட்டியா?" என கேலியாய் சிரிக்க

"ம்... இல்ல...."என சிரித்து சமாளித்தாள்

"வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமானு கேட்டேன்?"

"ம்....எந்த காலேஜ்?"

"கிழிஞ்சது போ... ரெண்டு மாசமா பேசினது எல்லாம் மறந்து போச்சா மேடம்க்கு"

"இல்ல...அது.... " என பேச இயலாமல் விழிக்க

"சரி விடு... நான் சொன்னது நான் UG பண்ணின கொங்கு நாடு ஆர்ட்ஸ் காலேஜ். அது ஒரு கனா காலம் தான். காலேஜ்ல ஐய்யா தான் ஹீரோ தெரியுமா... பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க தெரியுமா?" என காலர் தூக்கி கண்ணடித்து விசிலடித்து கொண்டே கூற

"ஒரு வேளை இவனுக்கு ஏதேனும் காதல் கதை இருக்குமோ... என் நிலைமை சொன்னால் புரிந்து கொள்வானோ. சொல்வதா வேண்டாமா" என மனதினுள் பட்டிமன்றம் நடத்தினாள் சுமேதா

அவளின் முக மாற்றத்தை அவன் "பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க"னு சொன்னதுக்கான முக மாற்றம் என நினைத்து கொண்ட சூர்யா

"ஏய்... நான் சும்மா உன்னை வம்பு இழுக்கறதுக்காக சொன்னேன். டென்ஷன் ஆய்டியா?" என சமாதானம் செய்தான்

"இல்ல... ஒண்ணுமில்ல" என சுமேதா சமாளித்து "காலேஜ் போலாமே...நீங்க சொன்ன மாதிரி" என்றாள்

"ம்... ஒகே.. " என்றவன் கல்லூரிக்கி முன் பக்கம் இருந்த இடத்தில் காரை பார்க் செய்து விட்டு இறங்க வாட்ச்மேன் எழுந்து வந்தார் "யாரை பாக்கணும் நீங்க?" என்றார் கரகர குரலில்

"இல்லங்க... நான் இங்க தான் படிச்சேன்... அப்போ சுந்தரம் அண்ணன் தான் வாட்ச்மேன்ஆ இருந்தாரு. சும்மா இந்த வழியா வந்தோம்... என்னோட wife க்கு காலேஜ் காட்டலாம்னு வந்தேன்" என சூர்யா உரைக்க

"ஓ... சரிங்க தம்பி... முன்னாடியே நின்னு பாத்துட்டு போங்க... இப்ப university ஆனப்புறம் கொஞ்சம் செக்யூரிட்டி tight " எனவும்

"ஒண்ணும் பிரச்சனை இல்லைங்ண்ணா... இங்கயே நின்னு பாத்துக்கறோம்" என்றான் சூர்யா
 

"சுமி... இந்த மரம் எல்லாம் இருக்கில்ல... இங்க தான் எப்பவும் அரட்டை கச்சேரி நடக்கும். செம ஆட்டம் போடுவோம்" என பழைய நினைவுகளில் கண்கள் பளிச்சிட கூறினான்

அவன் சந்தோசத்தில் தானும் மகிழ்ந்தவள் "ஓ.... அப்போ படிக்கற வேலை எல்லாம் இல்லையா?" என கிண்டல் செய்ய

"ஏய்... " என செல்லமாய் முறைத்தான்

இன்னும் பல கல்லூரி கால சம்பவங்களை சொல்லி கொண்டே வந்தான் சூர்யா

அவனது உற்சாகத்தை கண்ட வாட்ச்மேன் மனம் இறங்கி "தம்பி... வேணா இன்னும் கொஞ்சம் உள்ள வரைக்கும் போங்க... நான் சொல்லிக்கறேன்" என்றார்

"தேங்க்ஸ்ங்ண்ணா..." என ஒரு சல்யூட் வைத்து உள்ளே சென்றான்
 
 
 
 
 "இதான் சுமி மெயின் பில்டிங். ஆபீஸ் எல்லாம் இங்க தான் இருக்கும்" பேசிக்கொண்டே வந்தவனை செல்போன் ஒலி தடை செய்ய

"வீட்டுல இருந்து போன்" என சுமியிடம் கூறியவன்

"ஹலோ" என்றான் பேசியில்

"...."

"வந்துட்டு இருக்கோம்மா... அதுக்குள்ள காலேஜ்ல நிறுத்தினேன்... "

"....."

"இன்னும் பத்து நிமிஷம் தான் வந்துடுவோம்....சரிம்மா" என செல்போனை அணைத்தவன்

"அம்மா கெளம்பி ரெம்ப நேரம் ஆச்சே காணோம்னு டென்ஷன் ஆய்டாங்க போல...சரி சுமி கிளம்பலாம்... இன்னொரு நாள் ரிலாக்ஸ்ஆ வரலாம்" என்றவனை பின் தொடர்ந்தாள் சுமேதா
___________________

"வாம்மா மருமகளே... வலது கால் எடுத்து வெச்சு உள்ள வா" என ஆரத்தி சுற்றி மணமக்களை வரவேற்றாள் சூர்யாவின் அன்னை

"அதான் நேத்திக்கே சுத்தியாச்சே இதெல்லாம்... இப்பவும் சுத்தனுமா ம்மா" என அன்னையை கேலி செய்தான் சூர்யா

"போடா...உனக்கு வேற வேலை இல்ல... என்கிட்ட வம்பு பண்ணிட்டு... மறுவீடு வர்ரப்பவும் ஆரத்தி சுத்தறது தான்... நீ உள்ள வாம்மா" என்றாள் சுமேதாவிடம்

விருந்து முடிந்து சற்று நேரம் உண்ட களைப்பில் இளைப்பாறிய பின் மணமக்கள் தேனிலவுக்கு புறப்பட்டனர்
___________________

மேட்டுப்பாளையம் தாண்டி அழகிய பச்சை நிற வயல்களின் அழகில் எல்லாம் மறந்து உற்சாகமானாள் சுமேதா"வாவ்... ரெம்ப அழகா இருக்குங்க இந்த இடம்"
 
"நீ ஊட்டி போனதில்லையா சுமி"

"கோயம்புத்தூர்ல இருந்துட்டு ஊட்டி போகாம இருப்பாங்களா? இந்த வயல் வெளி ரெம்ப அழகா இருக்கு... பெரும்பாலும் நான் travel ல தூங்கிடுவேன்... தெளிவா பாத்ததில்ல இந்த வழி"

"ஓ....இப்ப என்கூட வர்றதால தெளிவா இருக்கேன்னு சொல்ற...இல்லையா சுமி" என சீண்ட

"நெனப்பு தான் உங்களுக்கு" என அவளும் கேலி பேசினாள்

"ஒகே....இனி ஹில் டிரைவ் ஆரம்பிச்சாச்சு... சீட் பெல்ட் நல்லா போட்டு இருக்கியான்னு பாத்துக்கோ" என்றான் சூர்யா அக்கறையாய்

"ஏன்... அவ்ளோ மோசமாவா ஓட்டுவீங்க" என அவனை ஓட்டினாள் சுமேதா

"நேரம் தான்...." என அவனும் அந்த சீண்டலை ரசித்தான்

"ட்ரைன்ல போனா இன்னும் நல்ல இருக்குமில்ல... அங்க பாருங்க ட்ரெயின் அழகா இருக்கு"


 "ஆமா சுமி...ட்ரைன்ல போனா நல்லாத்தான் இருக்கும்...ஆனா மேல போய் சுத்தறதுக்கு கார் வேணுமே... இன்னொரு வாட்டி ட்ரைன்ல வரலாம் சரியா"

"ம்...."

இப்படியே பேச்சும் சிரிப்புமாய் கடிகார முட்கள் நகர ஊட்டியின் அந்த பிரபலமான ஸ்டார் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்
 
சட்டென மேகம் கறுக்க சிறிது தூறல் விழ இருட்ட தொடங்கியது வானம்.... பின்னால் வரபோகும் விபரீதத்தை உணர்த்துவது போல்... ஆனால் அவர்கள் இருந்த மனநிலையில் அதை உணரவில்லை
 
அவர்களை கண்டதும் அந்த ஹோட்டல் பணியாள் வந்து பெட்டிகளை வாங்கி கொண்டான் எதுவும் பேசாமல்
 
"தேங்க்ஸ்...." என சூர்யா முறுவலிக்க பதில் பேசாமல் reception அருகில் பெட்டியை கொண்டு வைத்தான் அவன்

அவனது பார்வை ஏனோ உறுத்த சுமேதா சூர்யாவை ஒட்டி நின்றாள்

அதற்குள் reception ஆசாமி "மே ஐ ஹெல்ப் யு சார்?" எனவும்

"ஹாய்... ஒரு டபுள் ரூம் வேணும்" எனவும்

"ரூம்# 13 இருக்கு சார்... நல்ல view இருக்கும்...."

அந்த பெட்டி தூக்கிய பணியாள் திடுக்கிட்டு திரும்பினான்

எதுவும் பேசாதே என்பது போல் அவனுக்கு சைகை காட்டினான் reception ஆசாமி

"ஒகே..." என்றான் சூர்யா

பதிமூணு என்ற எண் ஏனோ சுமேதாவுக்கு உறுத்த

"வேற இருக்கானு கேளுங்க" என்றாள்

"இல்ல மேடம்... எல்லாம் புக் ஆய்டுச்சு... "

"அதனால என்ன சுமி" என மனைவியை சமாதானம் செய்த சூர்யா "அதே குடுங்க" என்றான்

அறை சாவியை பெற்ற பின் சூர்யா பெட்டியை தூக்க முயல receptionist தடுத்து "இருங்க சார் இவன் கொண்டு வந்து தருவான்" எனக் கூற அந்த வேலையாள் மீண்டும் வந்து பெட்டிகளை எடுத்து கொண்டான்

அவனது வெறித்த சிவந்த கண்கள் சுமேதாவிற்கு என்னமோ போல் இருந்தது. அவனை காண்பதை தவிர்த்து கணவனை ஒட்டி நடந்தாள்

அறைக்குள் பெட்டிகளை வைத்தவன் உணர்ச்சியற்ற ஒரு பார்வையை செலுத்தினான் அவர்களை நோக்கி

"இந்தா வெச்சுக்கோ" என சூர்யா பத்து ரூபாய் நோட்டு ஒன்றை தர வேண்டாம் என்பது போல் செய்கை செய்தான்

அவன் சென்றதும் "அவன் பார்வையே சரி இல்ல... நாம வேற ஹோட்டல் போலாமே" என சுமேதா பயத்துடன் கூறினாள்

"ச்சே... ஏம்மா அப்படி சொல்ற...? பாவம் ஊமை போல இருக்கு... பணம் கூட வாங்கிகல பாரு... நல்லவன் தான் போல... பாக்கறதுக்கு கொஞ்சம் முரடன் மாதிரி தோற்றம் அவ்ளோ தான்..."

"இருந்தாலும்...." என சுமேதா ஏதோ சொல்ல வாய் எடுக்க

"சுமி... நமக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் என்னத்துக்கு? நமக்கு வேற முக்கியமான ஆராய்ச்சி எல்லாம் இருக்கே..." என கண்ணடித்து சிரித்தான் அவள் மனதை திசை மற்றும் பொருட்டு....
____________________

அதே நேரம், ஊமையன் போல் இருந்தவன் அந்த receptionist ஆசாமியிடம்

"என்ன சார்? அந்த ரூம் வாடகைக்கி விட்டுடீங்க.... முதலாளிக்கு தெரியுமா?"

"நீ சும்மா இரு மாரிமுத்து. முதலாளிக்கி தெரியாது.... இதுக ஏதோ வெளியூர் பார்ட்டி போல இருக்கு.... இங்க நடக்கற விசயம் எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.... இநத வாடகை கணக்குல காட்டாம நாம பங்கு போட்டுக்கலாம்... என்ன சொல்ற?" என நயமாய் பேச

"நீங்க சொல்றப்ப கேக்க நல்லாத்தான் இருக்கு.... ஆனா ...." என இழுக்க

"ஒண்ணும் ஆகாது... நீ சும்மா இரு..." என பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்
_______________________

அதே நேரம்..... இரு கண்கள் அந்த ஹோட்டல் வாசலில் நின்று வெறித்து பார்த்து கொண்டு இருந்தது....

அதே கண்கள்........

அடுத்த பகுதி - பகுதி 4 படிக்க - இங்கே கிளிக்கவும்


தொடரும்....

58 பேரு சொல்லி இருக்காக:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Porkodi (பொற்கொடி) said...

yaaay! :)))

Porkodi (பொற்கொடி) said...

உங்க கதைய படிச்சு ப‌டிச்சு கடைசில கண்ணாடில என்னோட கண்ணை பார்த்தாலே டென்சன் ஆகிடுறேன்.. :))) சீக்கிரமா மேட்டரை சொல்லுங்க!

மங்குனி அமைச்சர் said...

ஹலோ , வண்டி ரொம்ப பாஸ்ட்டா போகுது , கொஞ்சம் கண்ட்ரோலா ஓட்டுங்க

Mahi said...

புவனா,புவனா..கொங்குநாடு காலேஜாஆஆஆஆஆ? நீங்க அங்கே படிச்சீங்களா.. இல்ல வொர்க் பண்ணீங்களா?காலேஜ் போட்டோ எல்லாம் போட்டிருக்கீங்க..சீக்கிரமா சொல்லுங்களேன். ஒரு கல்லூரிப் பாசத்துல கேக்கிறேன். :)

கதை ஸ்பீடா போகுது..13-ஆம் நம்பர் ரூம் எல்லாம் சொல்லி திகிலை ஏத்தறீங்க! அப்புறம் சூர்யா வீடு கரெக்ட்டா:) எந்த இடம்னு சொன்னீங்கன்னா,நெக்ஸ்ட் டைம் ஊருக்கு போறப்ப போய்ப் பார்த்துட்டு வருவேன்!

தக்குடுபாண்டி said...

ஹம்ம்ம், அடுத்த பகுதி இன்னும் விறுவிறுப்பாதான் இருக்கும் போலருக்கு!!!..:)

தக்குடுபாண்டி said...

யெச்சூஸ்மீ, இந்த மாதிரி த்ரில்லர் கதை எல்லாம் என்னை மாதிரி குழந்தைகளுக்கு ரொம்ப பயம்!!...:)

அபி அப்பா said...

ஓடி வந்து தொடரும் இருக்கான்னு தான் பார்த்தேன். ஏன்னா இது போல த்ரில்லர் எல்லாம் நான் ஒட்டுக்கா தான் படிப்பது வழக்கம்.3ம் பாகமும் நான் தாண்டிட்டேன். ஆகவே கடைசி பாகத்துக்கு வெயிட்டிங்! ஆனா கமெண்ட் படிச்ச வகையிலே நல்லா இருக்கும் போல. அதனால ஆர்வமா வெயிட்டீஸ்!!

Krishnaveni said...

interesting thriller story....looks like you are a professional story writer...great. Kalyaanamaana udane appadiye Marudamalai Kovilukku, ponnu maappillaiya anuppittu appuram ootykku poga solli irukkalam. yedo drushti pola. athaan rendu kangal yeppavume thuraththikkittu irrukku

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
அனாமிகா துவாரகன் said...

அப்புறம், உங்களுக்கு வயசு தான் ஆச்சு. அறிவே இல்லைக்கா. (உங்க அக்கா வேற எப்படி இருப்பா அனாமி???) He he. உங்க கூட சேர்ந்து எனக்கும் மைன்ட் வாய்ஸ் பேச ஆரம்பிச்சுடுச்சு. ஸ்டோரி தலைப்பையே (For instance, Tag: அதே கண்கள்) டாக்காக கொடுத்தா அதை கிளிக் பண்ணி ஈசியா எல்லாப் பார்ட்டையும் படிக்கலாம்ல.

அனாமிகா துவாரகன் said...

அம்மாடீ. இன்னும் எத்தனை பார்ட் போடப்போறீங்க. கைல்லாம் நடுங்குது.

நசரேயன் said...

அடுத்த நெடுந்தொடர் தயாரிக்கும் போது உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு.. பழைய பகுதிகளையும் படிக்கிறேன்

Porkodi (பொற்கொடி) said...

அப்பாடா இப்பதேங் நிம்மதியா இருக்கு! நான் கதை எழுதும் போது என்ன பாடு படுத்தினீங்க.. நீளமா எழுது.. வாரத்துக்கு ரெண்டு தடவை எழுது ஆ ஊன்னு.. இப்ப அனுபவிங்க எல்லாரும் சொல்ற‌தை! :P

Guna said...

Hello, ennathu ithu, ippadi suspense vachu tension pannringa.. unga kathai-a vida, neenga eppa adutha part poduvinganngra tension thaan jaasthiya iruku. Konjam vegama adutha part pleasee..

Mrs.Menagasathia said...

ம்ம் சூப்பர்ர்!!

ஹேமா said...

அந்தக் கண்ணைப் பார்க்காமலே வாசிச்சிட்டேன்.சரி....தொடருங்க.

பத்மநாபன் said...

விறு விறுப்பா தலைப்பை கொண்டு வந்திட்டிங்க..

LK said...

ஓரளவு என்ன நடக்கப் போதுன்னு யோசிக்க முடியுது .பார்ப்போம்

SenthilMohan K Appaji said...

இந்த பதிவின் மூலம் சகலமானவருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், நம்ம தங்கமணியக்கா College வரை சென்று படித்துள்ளார் என்பதே. தொடர்கதைய மொத்தமா எழுதிட்டு டெய்லி ஒன்னு ஒன்னா போடுங்க்கா. இல்லனா முன் கதை சுருக்கமாவது போடுங்க. ஒவ்வொரு வாட்டியும் முன்னாடி பதிவ பாத்து, படிச்சு, கதைய புரிஞ்சு இந்த பார்ட் படிக்குறதுக்குள்ள Tea time வந்திடுது. Manager ரொம்ப ஒரு மாதிரியாவே பாக்குறார். :(

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த பாக்த்தை சீக்கிரமா போட்டுடுங்க அம்மணி - எல்லாரும் டென்சன் ஆயிட்டாங்க இல்லையா! எல்லார் சார்பிலும் நானே சொல்லிட்டேன். சரியா.

தக்குடுபாண்டி said...

13ஆம் நம்பர் ரூம்ல மட்டும் பாத்ரூம்ல வாளி & கப்பு கிடையாது கரெக்டா?? நேதிக்கு நைட் புல்லா யோசிச்சு இதை கண்டுபிடிச்சேன்!...:)

சின்ன அம்மிணி said...

//ஹேமா சொன்னது…

அந்தக் கண்ணைப் பார்க்காமலே வாசிச்சிட்டேன்.சரி....தொடருங்க//

ரிப்பீட்டு :)

சின்ன அம்மிணி said...

13- unlucky for some :)

sandhya said...

என்ன புவனா நீங்க இப்பிடி சுச்பென்சில் நிர்த்தறியே??கதை கூடயே படங்களும் சேர்த்த விதம் சூப்பர் தான் ...அந்த சுமேத்தாகு என்ன ஆக போறோதொன்னு கவலையா இருக்கு ,,,சீக்ரமா மீதி கதை போடுவிங்களா ப்ளீஸ் ..

Riyas said...

நல்லாயிருக்கு..

ஸ்ரீராம். said...

சஸ்பென்ஸ் உடையற நேரம் வருது என்று நினைக்கிறேன்...! கண்கள் அவளுடைய பழைய காதலனோடதுதானே...

அப்பாவி தங்கமணி said...

@ உலவு.காம் - மிக்க நன்றி

@ பொற்கொடி - என்னம்மா? என்ன டென்ஷன்? ஹா ஹா ஹா... உங்க கண்ணு அவ்ளோ பயங்கரமாவா இருக்கு? ஹி ஹி ஹி (சீக்கரம் மேட்டர் சொல்றத... எங்களை எல்லாம் எப்படி படுத்தி எடுத்தீங்க.... இப்ப புரியுதா அந்த கஷ்டம்? ஹ ஆஹா ஹா)

@ மான்குனி அமைச்சர் - பாஸ்ட்ஆ போகுதுங்களா? சரிங்க கண்ட்ரோல் பண்ணிக்கறேன், நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - இல்ல மகி, நான் கொங்குநாடு காலேஜ்ல படிக்கல.... ஆனா அங்க நெறைய competitions க்கு (அதாங்க கவிதை பேச்சு கட்டுரை மற்றும் பல போட்டிகளுக்கு காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்தி இருக்கோம்) போய் இருக்கேன்.... நீங்க அங்க படிச்சீங்களா? சூர்யா வீடு எங்கயா? உங்களுக்கு தனி ஈமெயில்ல அட்ரஸ் அனுப்பறேன், சரீங்களா.... ஹா ஹா ஹா

@ தக்குடு - நன்றிங்கோ.... thriller கதைன்னு சொன்ன வரைக்கும் சரி... உன்னை மாதிரி குழந்தைகளுக்குன்னு சொன்னியே... என்ன கொடுமை தக்குடு இது?

@ அபி அப்பா - என்ன அபி அப்பா இப்படி எல்லாம் வெளி நடப்பு செஞ்சா எப்படி? அப்ப அப்ப படிச்சு நீங்க டென்ஷன் ஆனா தானே நான் நிம்மதியா தூங்க முடியும்... எல்லாம் ஒரு போது சேவை தான்ங்க... (ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி....வாவ்... Its like you read my mind....நானும் மருதமலை நெனச்சேன்... அதானே நம்ம ஊரு சம்பிரதாயம் (நாங்களும் போனோம் ஹி ஹி ஹி) அப்புறம் ஓவர்ஆ கோயம்புத்தூர் கோயம்புத்தூர்னு கொல்றனு யாரும் சொல்லிடுவாங்களோனு மாத்திட்டேன்.... தேங்க்ஸ் வேணி

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - உன்னோட ஞாபக சக்தி சரி இல்லைனா என்னை திட்டறையா... நேரம் தான்... மாசம் ஒரு பகுதி போட்டாலும் ஞாபகம் இருக்கணும் தங்கச்சி... என்ன நான் சொல்றது? ஹி ஹி ஹி

@ அனாமிகா - என்னது அறிவே இல்லையா? உன்கூட எல்லாம் சேராத வரை நெறைய இருந்தது... பாவம் உனக்கு சுத்தமா இல்லைன்னு குடுத்து குதித்து எப்படி ஆய்ட்டேன் என்ன செய்ய? நாங்க கர்ணன் பரம்பரை ஆச்சே... அதென்ன சந்தடி சாக்குல வயசு ஆச்சுன்னு வேற போட்டு விடற... உன்னை விட ஒரு வயசு தான் கூட தெரியுமோ... இப்போ உன் வயசு என்னனு நீயே சொல்லிக்கோ... ஹே ஹே ஹே... ஆனாலும் நீ சொன்ன பாயிண்ட் நல்ல பாயிண்ட்ங்கறதால விட்டுடறேன்... (sure I will add the story title tag Anamika - thanks for the tip)

@ அனாமிகா - இன்னும் எத்தனை பார்ட்னு எனக்கும் தெரியல. எழுதிட்டு சொல்றேன்...ஹ ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - நன்றிங்க.... உங்களுக்கும் டைரக்டர் யாராச்சும் தெரியுமோ

@ பொற்கொடி - அடிப்பாவி என்ன சந்தோஷம் இதுல உங்களுக்கு... ஹும்... பேசிக்கறேன்... இன்னொரு கதை எழுதாமையா போய்டுவீங்க...ஹா ஹா ஹா

@ Guna - ஹா ஹா ஹா....தேங்க்ஸ் குணா... ஓ இப்படி ஒரு டென்ஷன் இருக்கோ... அது சரி... (அதெல்லாம் இருக்கட்டும் சீக்கரம் போஸ்ட் போடறேன்ன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?)

அப்பாவி தங்கமணி said...

@ Mrs.Menagasathia - தேங்க்ஸ்ங்க

@ ஹேமா - ஹா ஹா ஹா... அவ்ளோ பயமா? சூப்பர்....தேங்க்ஸ்

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஆஹா... யூகிக்க முடியுதா? அது தப்பாச்சே....என்னனு சொல்லு, நான் கதைய மாத்தணும்...

@ SenthilMohan K Appaji - நான் காலேஜ் வரைக்கும் படிச்சேங்கறது நிஜம் தான் பாஸ். ஆன இந்த கதைல வர்ற காலேஜ் இல்ல. இனிமே அப்படி தான் செய்யணும்... ஒழுங்கா எழுதி வெச்சுட்டு அப்புறம் போடறேன்... நண்றிங்.... (உங்க மேனேஜர்யை நல்ல opthomologist கிட்ட கூட்டிட்டு போங்களேன்... ஹி ஹி ஹி)

@ வெங்கட் நாகராஜ் - நண்றிங்ண்ணா... சீக்கரம் போட்டுடரனுங்க...

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஆஹா.... என்ன ஒரு சிந்தனை? இதை நைட் பூரா யோசிச்சீங்களா சார்? ஐயோ ஐயோ ஐயோ.... (அப்பாவி bucket ல் தலையை முட்டி கொள்கிறாள்...) ஹி ஹி ஹி

@ சின்ன அம்மிணி - என்னங்கம்மணி... மொறத்துலையே புலிய வெரட்டுன வம்சமில்லீங்களா? இதுக்கே பயந்தா எப்படிங்........ஹா ஹா ஹா

@ சின்ன அம்மணி - 13 unlcuky for some and lucky for some....

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - suspense இல்லைனா கதை நல்லா இருக்காதே சந்த்யா. சுமேதாவுக்கு என்ன ஆகுமோன்னு எனக்கும் தான் பயமா இருக்கு. இருங்க எழுதிட்டு சீக்கரம் போட்டுடறேன்...

@ Riyas - தேங்க்ஸ்ங்க...

@ ஸ்ரீராம் - suspense உடைய நேரமா.... தெரியலீங்களே... இருங்க அவங்க கிட்டயே கேட்டு சொல்றேன் ... ஹி ஹி ஹி

Guna said...

Intha weekend india kku pack-up, so india pona udane post pottuduren

Harini Sree said...

விறுவிறுப்பை போகிறது. அடுத்த பதிவிற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.

சுசி said...

புவனா.. நான் ரெம்ப பயந்தவனு தைரியமா சொல்லிக்கிறவ..

பேய் பிசாசெல்லாம் வந்திடாதே.. நம்பர் வேற 13..

பாத்து தாயி.. நான் பாவம்.

Ananthi said...

ஆஹா.. என்னங்க திரில்லிங் ஸ்டோரி இப்படி பின்றீங்க..

சூர்யா, சுமேதா... கேரக்டர் பேரு சூப்பரா இருக்குங்க.. ;-))))

தொடருங்க வரேன்.. ;-))

ஜெய்லானி said...

ஆஹா...விடாது கருப்புங்கிற மாதிரியில்ல இருக்கு. ஒரு பச்சபிள்ளய இப்பிடியா பயங்காட்டுவது (( நானும் மெட்டி ஒலி மாதிரி , 800 எபிசோட் தொடர் எடுக்கலாமுன்னு இருக்கேன் கதையாசிரியை நீங்கதான் டீலா...!! ))

vgr said...

miga pazhaya puthagam.....pazhupu color la....orangal ellam lesa kizhingi....stapler illamal noolal thaika pattadu.....siriya siriya ezhuthukalal porika pattadu....kagidam thottal soft aga irukum....anda madiri oru 1900s puthagathil kadai padithar pol irukiradu....

அனாமிகா துவாரகன் said...

//உன்னோட ஞாபக சக்தி சரி இல்லைனா என்னை திட்டறையா... நேரம் தான்...//
ARGH...

// உன்கூட எல்லாம் சேராத வரை நெறைய இருந்தது... பாவம் உனக்கு சுத்தமா இல்லைன்னு குடுத்து குதித்து எப்படி ஆய்ட்டேன் என்ன செய்ய? நாங்க கர்ணன் பரம்பரை ஆச்சே..அதென்ன சந்தடி சாக்குல வயசு ஆச்சுன்னு வேற போட்டு விடற... உன்னை விட ஒரு வயசு தான் கூட தெரியுமோ... இப்போ உன் வயசு என்னனு நீயே சொல்லிக்கோ... ஹே ஹே ஹே...//

அட பாவி யக்கோவ்,
என் கூட சேர்ந்தா??? இது ரொம்ப அநியாயம். உங்க கூட சேர்ந்து தான் எனக்கு ஒரே வயசான பீலிங்கஸ். அப்புறம் என்னை விட ஒரு வயசு கூடவா. ஐயோ ஐயோ பொய் சொன்ன வாயுக்கு போஜனம் கிடைக்காது தெரியுமோ உங்களுக்கு. எனக்கு இப்பத்தான் 12 வயசாகறது தெரியுமோ. ஹி ஹி ஹி.


//ஆனாலும் நீ சொன்ன பாயிண்ட் நல்ல பாயிண்ட்ங்கறதால விட்டுடறேன்... (sure I will add the story title tag Anamika - thanks for the tip)//

அனாமிகாவா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். உங்களுக்கு அந்திராஸ் நிச்சயம்.. ஹூக்கும்

அனாமிகா துவாரகன் said...

//ஆஹா...விடாது கருப்புங்கிற மாதிரியில்ல இருக்கு. ஒரு பச்சபிள்ளய இப்பிடியா பயங்காட்டுவது (( நானும் மெட்டி ஒலி மாதிரி , 800 எபிசோட் தொடர் எடுக்கலாமுன்னு இருக்கேன் கதையாசிரியை நீங்கதான் டீலா...!! ))//

நான் தான் டிரெக்கடர். சரியா

அப்பாவி தங்கமணி said...

@ Guna - ஓ... இந்தியா ட்ரிப்ஆ...ச்சே.... பொறாமையா இருக்கு... ஒகே ஒகே என்ஜாய்.... சீக்கரம் பதிவு போடுங்க... ஹாப்பி ஜெர்னி

@ Harini Sree - தேங்க்ஸ் ஹரிணி

@ சுசி - ஹா ஹா ஹா... சூப்பர் தைரியம் தான் சுசி உங்களுக்கு... நானும் உங்க கேஸ் தான்... பேய் பிசாசா... தெரியலயே... இருங்க கேட்டு சொல்றேன்...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - தேங்க்ஸ் ஆனந்தி. எனக்கும் இந்த பேரு ரெம்ப பிடிச்சது. வாங்க வாங்க.... நன்றி

@ ஜெய்லானி - யாரு பச்ச புள்ள... ஓ... ஹீரோயின்ஆ? அப்ப சரி... மெட்டி ஒலியா... ஓ... எடுக்கலாமே... 800 எபிசொட் கம்மியா இருக்கேன்னு தான் யோசிக்கறேன்... ஒரு 2000 எபிசொட்னா நான் ரெடி... நீங்க ரெடிஆ? (இனிமே கேப்பீங்க...ஹி ஹி ஹி)

@ VGR - VGR நீங்க என்னை திட்டுறீங்களா இல்ல பாரட்டுரீங்களானே புரியல... நல்லாத்தான் பொடி வெச்சு பேசிறீங்க பாஸ்... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஹி ஹி ஹி (பண்ணண்டா... ஒண்ணும் பிரச்சனை இல்ல, அப்படின்னா எனக்கு பதிமூணு தான்... ஒகே.... ஹா ஹா ஹா)

@ அனாமிகா - அம்மா தாயே ஆளை விடு... நீ டைரக்டர்ஆ? ஜெய்லானி நான் இல்ல... நீங்களாச்சு உங்க டைரக்டர் ஆச்சு... மீ எஸ்கேப்...

vanathy said...

தங்ஸ், அந்த இரண்டு கண்கள். இரண்டு கண்கள், இரண்டு கண்கள்.... யாருடையது?? சீக்கிரம் சொல்லா விட்டால் அப்புறம் நானும் இட்லி ரெசிப்பி போட்டுடுவேன். சாக்கிரதை.

நல்லா எழுதி இருக்கீங்க. ஹோட்டல் அறை 13 ஆஆ... ஏதோ மர்மம் இருக்கிறாப்போல இருக்கு.

//ஓரளவு என்ன நடக்கப் போதுன்னு யோசிக்க முடியுது .பார்ப்போம்//

எனக்கு மட்டும் சொல்லுங்கள் பிளீஸ்.

LK said...

/யூகிக்க முடியுதா? அது தப்பாச்சே....என்னனு சொல்லு, நான் கதைய மாத்தணும்...
/

matten

pinkyrose said...

chummavae neenga eluthurathu ipdi than irukum ithula suspense thriller

but naan innum padikala first larnthu padichutu pene sorry keyboard thukiyu varren...

Venkatesh said...

தங்கமணி அவர்களே வணக்கம்!. கதையை நன்றாக இருக்கிறது ஆனா அந்த கண்கள் மட்டும் யாரோடதுன்னு சொல்ல மட்டேன்கறீங்க.

vgr said...

of course paratinen.

அப்பாவி தங்கமணி said...

@ Vanathy - ஐயோ.... வேண்டாம் தாயே.. ஒரு இட்லியவே இந்த உலகம் தாங்க முடியாம திணறிகிட்டு இருக்கு... இன்னும் ஒண்ணை தாங்காது அம்மணி... ஹா ஹா ஹா... சீக்கரம் சொல்றேன் (LK என்னனு சொன்னா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க வாணி...டீல்?)

@ LK - அடப்பாவி... போ... கனவுல இன்னிக்கி இட்லி இட்லியா வரும் பாரு

@ pinkyrose - என்னை பத்தி நல்லா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க போல... தேங்க்ஸ்...ஹி ஹி ஹி...

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - வாங்க வெங்கடேஷ்... என்ன காயத்ரி கதை முடிஞ்சப்புறம் இந்த பக்கமே காணோம்... ஒகே ஒகே நோ பீலிங்க்ஸ் ஒகே... சீக்கரம் இன்னொரு காயத்ரி வருவா.. சரிங்களா...

@ vgr - தேங்க்ஸ் பாஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - நிச்சியமா என்னோட கண்ணு இல்லங்க... தேங்க்ஸ்ங்க கதை நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு

Venkatesh said...

அமங்க கொஞ்சம் வேலைல பிஸி ஆகிட்டேன் அதான் ப்ளாக் பக்கம் வர முடியல. கொஞ்சமாவது வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டாம? என்ன பண்றது நாளுக்குநாள் பொறுப்புகள் ஜாஸ்தி அகுதிள்ள. ஆனா கண்டிப்பா உங்களோட ப்ளாக் படிக்காம இருக்கமாட்டேன்.

Venkatesh said...

இந்த கதை முடிந்தவுடனே கண்டிப்பா ஒரு காதல் கதை எழுதணும் ப்ளீஸ்.

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - நோ problem ங்க... தேங்க்ஸ்... கண்டிப்பா அடுத்தது காதல் கதை தான்... கதை எல்லாம் கூட யோசிச்சு வெச்சாச்சு... தேங்க்ஸ்ங்க...

Post a Comment