Monday, June 07, 2010

உயிரின் விலை..... ஒரு லட்சமா?



The mangled remains of the mini bus that was hit by the Coimbatore-Mettupalayam special train at an unmanned level-crossing at Idigarai near Coimbatore on Friday. Five people were killed in the accident. Photo: Courtesy "The Hindu"

கோயம்புத்தூர் டு மேட்டுபாளையம் ரயில் ஒரு நாளைக்கி ரெண்டு தடவை மட்டும் போய்கிட்டு இருந்தது. நாலு நாள் முன்னாடி தான் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு ஜூன் ஒன்னாம் தேதி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு ரயில் ஓட ஆரம்பிச்சது

அந்த ரயில் தொடங்கி நாலாவது நாள் (ஜூன் 4th ) கோரமா ஒரு விபத்து அஞ்சு பிஞ்சு உயிர்கள பலி வாங்கிடுச்சு

கோயம்புத்தூர் டவுன்ல இருந்து இருபது கிலோமீட்டர் தூரம் பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்துக்கும் அதுக்கு பக்கத்து ஊர் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கும்  நடுவுல ட்ரெயின் வந்துட்டு இருந்தப்ப ஒரு ஆள் இல்லாத லெவல் crossing ல ஒரு மினி பஸ் ரயில் தண்டவாளத்த கடக்க முயற்சி செஞ்சு இருக்கு

ட்ரெயின் கண்ணுக்கு தெரியற தூரத்துல வந்துட்டு இருக்கறத பாத்தும் பஸ்ல இருக்கறவங்க ட்ரெயின் வருது போகாதேனு சொல்லியும் கேக்கமா தண்டவாளத்துல அந்த பக்கம் நின்னுட்டு இருந்த மக்கள் வராதேனு சைகை காட்டியும் அதை எல்லாம் காதுல போட்டுக்காம அந்த மினி பஸ் டிரைவர் தண்டவாளத்த கடக்க முயற்சி செஞ்சு இருக்கான்

ஆனா கடக்க முடியல. ட்ரெயின் பிரேக் போட முயற்சி செஞ்சும் பஸ்யோட பின்னாடி பக்கத்துல மோதி ரெம்ப தூரம் இழுத்துட்டு போய் இருக்கு

அந்த மினி பஸ் டிரைவர் பஸ்ல இருந்து குதிச்சு தப்பிச்சி ஓடிட்டான்

அந்த விபத்துல ஸ்கூல் மற்றும் காலேஜ் பிள்ளைகள் அஞ்சு பேரு உயிர் போய்டுச்சுங்க. அதுல ஒரு பிள்ளை எங்க பின் வீட்டு அக்காவோட பையன். அவனுக்கு பேரு செலக்ட் பண்ணினது நாங்க தான்

நேத்து நைட் ஊருக்கு பேசினப்ப அம்மா சொன்னாங்க இந்த மாதிரி ஆய்டுச்சுன்னு. என்னால ராத்திரி பூரா தூங்கவே முடியல. அந்த பையன ரெண்டு வயசு பிள்ளையா பாத்தது. அப்புறம் அவங்க எடம் மாறி அதிகம் தொடர்பு இல்லாம போச்சு

யோசிச்சு பாருங்களேன்.. பன்னண்டு வருஷம் புள்ளைய வளத்து எமனுக்கு வாரி குடுக்கறதுன்னா அந்த தாய் மனசு என்ன பாடு படும்... எனக்கே ஒரு நாள் தூக்கம் தொலைஞ்சு போச்சுன்னா அந்த அம்மா இனி கண்ணு மூட முடியுமா?

உடனே அதிகாரிகள் கலெக்டர் எல்லாம் சம்பவ இடத்துக்கு வந்து ரயில்வே கேட் போடணும்னு தீர்மானம் போட்டு இருக்காங்களாம். இதை மொதலே செஞ்சு இருந்தா அஞ்சு உயிர் போய் இருக்காதே

அப்போ ஒரு ஒரு எடத்துலயும் உயிர் பலி ஆனதுக்கு அப்புறம் தான் நடவடிக்கை எடுபாங்கன்னா ஊரு முழுக்க எத்தனை தாய்களோட தூக்கம் தொலயணும், எத்தனை குடும்பங்கள் கண்ணீருல கரையணும்

ஹிந்து பேப்பர்ல வந்து இருக்கற இந்த செய்திய பாத்து இன்னும் கோபம் அதிகம் தான் ஆச்சு. நீங்களே படிங்க இதை

"The bus driver was unaware of the time at which the train would cross the level crossing, as the service was introduced only on June 1 . According to eyewitness accounts and the police quoting the injured passengers, the bus driver noticed the train only after getting into the level crossing area . The driver, who had joined service only recently, is said to have jumped off the bus and escaped "

இதை படிச்சா உங்களுக்கே கோபம் வரலையா? புதுசா போட்ட ட்ரெயின்ங்கறதால டிரைவர்க்கு ட்ரெயின் டைம் தெரியலயாம். என்னங்க கொடுமையான விளக்கம் இது? ட்ரெயின் டைம் தெரியாது சரி... இடிக்கற அளவுக்கு பக்கத்துல வந்துட்ட ட்ரெயின் கண்ணுக்கு கூடவா தெரியாம போய்டும்

பஸ்ல முன் பக்கம் இருந்ததால ட்ரைன்ல அடிபடாம தப்பிச்சவங்க சொன்னது "வேண்டாம்னு சொல்லியும் அந்த டிரைவர் நிறுத்தல. சீக்கரம் போய்டலாம்னு ஓட்டினான்"

அப்படி என்னங்க அவசரம்? ஒரு நிமிஷம் நின்னு இருந்தா அந்த அஞ்சு பிள்ளைக உயிரோட இருந்து இருக்குமே.... அவன் மேல தப்பு இல்லைனா அந்த டிரைவர் ஏன் தப்பிச்சு ஓடனும்? அதுவும் புதுசா வேலைக்கி சேந்தவனாம்

இதுல இன்னொரு நியூஸ் ஹிண்டுல "..........has ordered a solatium of Rs 1 lakh each to the families of the five persons who died in the accident "

அப்போ உயிரோட விலை "ஒரு லட்சமா?". இந்த அஞ்சு லட்ச ரூபாயை மொதலே செலவு பண்ணி அங்க ஒரு ரயில்வே கேட் போட்டு இருந்தா இன்னிக்கி அஞ்சு உயிர காப்பாத்தி இருக்கலாமே...

இதுல யார் மேல தப்பு சொல்றது? யாரு மேல தப்பு சொன்னாலும் போன உயிர் போனது தானே

எனக்கு இதுக்கு மேல எழுத கூட முடியலைங்க... பக்கத்துக்கு வீட்டு அக்கா குழந்தை பெத்து hospital ல இருந்து வந்த அன்னைக்கி ராத்திரி பத்து மணி வரை அந்த குழந்தைய மடில போட்டு விளையாடினவ நான்...

ஒரே பிள்ளை அவங்களுக்கு... இன்னொரு பிள்ளை கூட இல்லையே... அடுத்த முறை ஊருக்கு போறப்ப அந்த அக்காவை எப்படி பாக்க போறேன்னு கலக்கமா இருக்கு....

நாலு நாள் துக்கம் கொண்டாடிட்டு நான் வேற ஒரு கவிதையோ கதையோ எழுத ஆரம்பிச்சுடுவேன் ... அந்த குடும்பதோட துக்கம் உள்ள வரை தீருமா?

உயிர்வலிக்க உணர்ந்து
உதித்ததன் பிள்ளை
உதிரம் உறைந்துகிடக்க
உறக்கமேது இனிஅத்தாய்க்கு!!!

(சனிக்கிழமையே போடணும்னு எழுதினது... ப்ளாக் ஏதோ பிரச்சனை ஆனதால இப்போ தான் போஸ்ட் பண்ண முடிஞ்சுது...)

30 பேரு சொல்லி இருக்காக:

ஹேமா said...

இனி யார் என்ன பேசிக்கிட்டாலும் போன உயிருக்கு யார் என்ன சொல்லப்போறாங்க.மனம் வலிக்க எழுதியிருக்கீங்க.அழுகைதான் வருது.

Mahi said...

என்னது? நரசிம்மநாயக்கன் பாளையமா? அந்தப் பக்கமெல்லாம் கிராமங்களுக்குள்ள மினி பஸ் தான் போக்குவரத்தே..அரசுப் பேருந்துகள் அதிகம் இருக்காது.

எமன் இப்படி அந்த பஸ் டிரைவர் ரூபத்துல வந்திருக்கானே??!!
பாவங்க..எத்தனை லட்சம் கொடுத்தா என்ன? போன உயிர் திரும்பி வருமா? அதுவும் நமக்கு தெரிந்தவர் எனும்போது அந்த வலியின் தீவிரம் நேரடியாகத் தாக்கும்..வருத்தமா இருக்குங்க புவனா!

Krishnaveni said...

such a frightening incident bhuvana......the fault by that driver results a big loss to another innocent family......saddest situation in the world......i couldn't write after this... i pray god for those who lost their precious life...

சுசி said...
This comment has been removed by the author.
சுசி said...

//உயிர்வலிக்க உணர்ந்து
உதித்ததன் பிள்ளை
உதிரம் உறைந்துகிடக்க
உறக்கமேது இனிஅத்தாய்க்கு!!!//

வேறு வார்த்தை வரவில்லை புவனா :((

(முதல்ல தப்பா டைப் ஆயிடுச்சு. அதான் டிலிட் பண்ணிட்டேன்)

அன்னு said...

என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த மாதிரி இழப்புக்கள் நம்மை சுற்றியோ, நமக்கு தெரிந்தவர்களாகவோ இருந்தால் இன்னும் அதிகமாக அதன் தாக்கம் இருக்கிறது. என்னுடைய ஊரில் இது நடந்தது என்னும்போதே வலிக்கிறது, உனக்கொ தெரிந்த முகம். கஷ்டம் என்று சொன்னாலும் அது சொல்லில் அடங்காது. ரயில்வே கேட் போடாததால் வந்த பிரச்சினை இல்லை இது. ஏனெனில் எதிர்ப்புற மக்கள் நின்றிருக்கிறார்கள். அவன் சைடிலும் மக்கள் நின்றிருப்பார்கள். வேண்டாம் என்று தடுத்திருப்பார்கள். அதையும் தாண்டி தன் வீரத்தை கட்ட நினைத்திருப்பான் அவன். வயதான் பொறுப்புள்ள மூத்த ஓட்டுனர்களை இப்பொழுதெல்லாம் அரசு வண்டிகளில் கூட பார்க்க முடிவதில்லை. நான் அம்மா அப்பா வந்தால் வயதான் ஓட்டுனர் உள்ள வண்டியிலேயே ஏறச் சொல்வேன். அவர்களுக்கு நாம் சொன்னால் புரியாது, பயந்தாங்கொள்ளி என்பார்கள். நானும் வெவ்வேறு கார‌ணங்களை சொல்லிக் கொள்வேன். இருந்தாலும் உண்மை இதுதான். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் மனம் Trafficஐ கண்டு வெறுத்துப் போகும், கண‌பதி பக்கம் கேட்கவே வேண்டாம்...எல்லாம் இனியும் வீரப்பனை தேட போகிறதுமாதிரிதான் பறப்பார்கள். நான் தினமும் அதிலேயே உழண்டு கொண்டிருப்பேன்...ப்ச்...எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை. இங்கே உள்ள system போல பள்ளி குழந்தைகளுக்கென தனி வண்டி, மிகுந்த சிரத்தையுடன் பணியாளர் தேர்வு செய்தல் போகியவை வரவேண்டும்...அபோழுதுதான் விடிவு...அவனவன் மகனுக்கும் மருமகனுக்கும் எம்.பி சீட்டு வாங்க சிண்டு முடியவே நேரமில்லாத போது இஃதைப் பற்றியெல்லாம் யார் யோசிக்கப் போகிறார்?

Porkodi (பொற்கொடி) said...

சோகத்துலயே பெரிய மீள முடியாத சோகம் புத்திர சோகம்ங்கறதை என் கண்ணால பாத்துருக்கேன்.. அப்படி தவிக்கற ஒவ்வொரு அம்மாவும் இன்னொரு அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு வேண்டினாலும்... :(

Porkodi (பொற்கொடி) said...

ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சதே இல்லை.. ஒரு ட்ரெயின் அல்லது பஸ் கிளம்பிடுச்சுன்னா அதுல ஓடி ஏறுறதுக்கோ, இல்ல க்ராஸிங்ல ஒரு 2 நிமிஷம் இந்த பக்கம் அந்த பக்கம் பாக்காம போற அளவுக்கு உலகத்துல யாருக்கு என்ன அவசரம் இருக்க முடியும்? படிச்ச சிட்டில வேலை பாக்கற எத்தனையோ பேர் உட்பட இதை பண்ணறாங்களே, எப்படின்னே புரியல எனக்கு!

LK said...

பொறுமை இல்ல யார்கிட்டயும் , ஒரு நிமிஷம் அவன் நின்னு பார்த்து போயிருந்தா பிரச்சனை இல்லை

@பொற்ஸ்
எங்க என் ப்ளாக் பக்கம் காணோம்

vanathy said...

தங்ஸ், படிக்கவே கவலையா இருக்கு. அந்த அக்காவின் நிலையை யோசித்துப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. இப்படி எத்தனை விபத்துக்கள் ஆளில்லாத ரெயில் கிராஸிங்கில் எத்தனை உயிர்கள் போய் விட்டன.

அன்னு said...
This comment has been removed by the author.
அநன்யா மஹாதேவன் said...

அப்பாவி,
கேக்கறதுக்கு ரொம்பவும் கஷ்டமாத்தான் மா இருக்கு.. என்ன பண்றது? நீ சொல்ற மாதிரி எல்லா இடத்துலேயும் உயிர்ச்சேதத்துக்கு அப்புறம் தான் நடவடிக்கை எடுப்பாங்கன்னா அப்போ எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டி இருக்கும்? நிஜம் தான். ப்ச். அதையும் சப்பைக்கட்டு கட்டுறாங்க பாரேன்..ரொம்ப வலிக்கிது.. நான் என்ன ஆறுதல் சொன்னாலும் உன் மனசு கேக்குமா? அந்த தாய்க்கு வேண்டி பிரார்த்திக்கிரேன்.

சி. கருணாகரசு said...

வலியை நானும் உணர்கிறேன்.

ஆறுதலுக்கு வார்த்தை இல்லை.

அனாமிகா துவாரகன் said...

ரொம்ப சாரிக்கா. இது தெரியாம உங்க பதிவில வந்து கும்மியடிச்சேன். நான் நியூஸ் பாக்கறதே இல்லை. பார்த்தா இதெல்லாம் பாத்து மனசு சங்கடப்படும்னு தான். நியூஸ் பாத்து இரண்டு வருஷமாச்சு. எங்க ஊர் பிரச்சினையின் போது பாக்காம கோழையாக ஒழிந்து கொண்ட நான் இன்னும் வெளிய வரல்ல.

//அப்போ உயிரோட விலை "ஒரு லட்சமா?". இந்த அஞ்சு லட்ச ரூபாயை மொதலே செலவு பண்ணி அங்க ஒரு ரயில்வே கேட் போட்டு இருந்தா இன்னிக்கி அஞ்சு உயிர காப்பாத்தி இருக்கலாமே..//

உண்மை தான். இந்த விஷயம் எதுக்கு அரசாங்கத்துக்கு புரிவதில்லை. குடும்பத்தினருக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.

geetha santhanam said...

குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அரசாங்கம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் தனி மனிதர்கள் சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் ப்ரச்சினைதான். குரோம்பேட்டை லெவல் க்ராஸிங்கில் கேட் மூடப்பட்ட பின்னும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அடிவழியே நுழைந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் பொறித்து செல்ல முடியாதபடி அப்படி என்ன அவசரமோ!!!

வெங்கட் நாகராஜ் said...

உயிருக்கு விலையே இல்லாதபோது, இவர்களாக ஒரு லட்சம் என மதிப்பிடுவது வருத்தமான விஷயம். அரசர் காலங்களில் இருந்த ”மாறு கால் மாறு கை” போன்ற தண்டனைகள் தான் இது போன்ற ஓட்டுனர்களைத் திருத்தும் என நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

வருந்துகிறேன்.

எல்லாத்துக்கும் அவசரமா:-((((

பத்மநாபன் said...

கொடுமைங்க...பிஞ்சு குழந்தைகள் என்ன செய்தார்கள்? என்ன அவசரம் அந்த ஒட்டுனருக்கு அப்படி வேகமாக லெவல் க்ராஸ்ஸிங்கை கடப்பதற்க்கு? இது போல் அடிக்கடி நடக்கிறது..சில நாள் முன் காஞ்சி புரம் அருகில் 11 பேரை பலி கொண்டது..அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் அனைத்து லெவல் கிராஸ்ஸிங்கிற்க்கும் ஆள் போடுவோம் என்று முதல்வர் , பிரதமர் வரை சொன்னார்கள்..ஒன்றும் நடக்கவில்லை...உயிர்க்கு மதிப்பு இல்லை....இனியாவது அரசு உடனடியாக செயல்படவேண்டும்.... எல்லா வல்ல இறைவன் அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க ப்ரார்த்தனைகள்..

சின்ன அம்மிணி said...

ட்ரைவரோட கவனக்குறைவு பல உயிர்கள் போக காரணம். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

கண்ணகி said...

அப்போ உயிரோட விலை "ஒரு லட்சமா?". இந்த அஞ்சு லட்ச ரூபாயை மொதலே செலவு பண்ணி அங்க ஒரு ரயில்வே கேட் போட்டு இருந்தா இன்னிக்கி அஞ்சு உயிர காப்பாத்தி இருக்கலாமே...

இதுல யார் மேல தப்பு சொல்றது? யாரு மேல தப்பு சொன்னாலும் போன உயிர் போனது தானே


உயிர்வலிக்க உணர்ந்து
உதித்ததன் பிள்ளை
உதிரம் உறைந்துகிடக்க
உறக்கமேது இனிஅத்தாய்க்கு!!!

கொடுமை...

பிரசன்னா said...

:((

sandhya said...

"இதை படிச்சா உங்களுக்கே கோபம் வரலையா? புதுசா போட்ட ட்ரெயின்ங்கறதால டிரைவர்க்கு ட்ரெயின் டைம் தெரியலயாம். என்னங்க கொடுமையான விளக்கம் இது? ட்ரெயின் டைம் தெரியாது சரி... இடிக்கற அளவுக்கு பக்கத்துல வந்துட்ட ட்ரெயின் கண்ணுக்கு கூடவா தெரியாம போய்டும் "

கோபமென்ன வெறியே வரது எனக்கு . டைம் தான் தெரியலே என்று சொல்லரா ஏன் அவனுக்கு காது கூடவா கேக்காது ? அப்பிடி என்ன அவசரம் ?
இப்பிடி தான் நிறையே டிரைவர்ஸ் உயிர் பலி கொடுக்கறாங்க .
அதென்ன ஒரு லக்ஷம் ரூபா ?அரசுக்கு இதே வேலையா போச்சு .தப்பு நடக்காமல் இருக்க வழியே தேட மாட்டாங்க ...
உங்க வீடு பக்கத்தில் இருக்கற அந்த அக்காவுக்கு என் தாழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கிறேன் ..அவங்களே யாரும் எது சொல்லியும் சமாதானம் செஞ்சுக்க முடியாது தெரியும் ...நானும் அவங்க கூட இருந்து அழுகிறேன் என் நெஞ்சமும் எரியறதே ...

ஜெய்லானி said...

:-(((

சுந்தரா said...

இப்படித்தான், அலட்சியத்தால் பல உயிர்கள் அன்றாடம் பலியாகிறது. வருத்தம்தான் மிஞ்சுது :(

அஹமது இர்ஷாத் said...

வருந்ததக்கது...

மாதேவி said...

ஆள் இல்லாத லெவல் crossing + ரைவரின் அவசரம்

:(((((

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - நன்றி ஹேமா

@ Mahi - ஆமாம் மகி. எப்போ அரசு பேருந்து போடறத சொல்லி இருக்காங்களாம் இந்த சம்பவத்துக்கு அப்புறம். எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. நன்றி மகி

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி. Nobody has patience and no value for life

@ சுசி - தேங்க்ஸ் சுசி

@ அன்னு - வாஸ்துவம் தான் அன்னு. வயசான டிரைவர்ஸ் கொஞ்சம் பாத்து நிதானமா ஓட்டுவாங்க. சின்னவங்கள்ளையும் பாத்து ஓட்டறவங்க இருக்காங்க. ஒரு சிலர் இப்படி செய்யறதால எல்லாருக்கும் கெட்ட பேரு. அதுவேணா உண்மை... சுயலாபதுக்கே அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்ல... போது சேவை எங்க செய்யறது...

@ Porkodi - Welcome back ma. Nice to see you. அதான் ஏன்னு புரியல. அந்த ரெண்டு நிமிசத்துல என்ன சாதிக்க போறாங்களோ தெரியல. இதுல படிச்சவங்க படிக்காதவங்கன்னு வித்தியாசமே இல்ல. தேங்க்ஸ்

@ LK - அதே தான் கார்த்திக். பொறுமைங்கறது மருந்துக்கு கூட இல்ல. அதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்

@ Vanathy - நன்றி வாணி. உண்மை தான், கணக்கில்லா உயிர்கள் பலி ஆகுது தினமும் ஒரு சிலரின் கவனக்குறைவால்

@ அனன்யா - தேங்க்ஸ் அனன்யா. கஷ்டமாதான் இருக்கு. நமக்கு சீக்கரம் மறந்துடும், அந்த அக்கா தான் பாவம்

@ சி. கருணாகரசு - நன்றிங்க கருணாகரசு

@ அனாமிகா - பரவாயில்ல அனாமிகா. உனக்கு இப்படி தெரியும். நானும் இப்பவெல்லாம் நியூஸ் பாக்றதே விட்டுட்டேன், நல்ல நியூஸ் எப்பவாச்சும் தான் இருக்குன்னு. ஊருக்கு பேசினப்ப அம்மா சொல்லித்தான் எனக்கு விசயம் தெரியும். தேங்க்ஸ்மா

@ geetha santhanam - நானும் அப்படி இரு சக்கர வாகனங்கள் போறதை பாத்து இருக்கேன்.. ஒரு நிமிசத்துல எந்த கோட்டைய பிடிக்க போறாங்களோ தெரியல போங்க. நன்றிங்க

@ வெங்கட் நாகராஜ் - முதல் வருகைக்கு நன்றிங்க வெங்கட். சரியா சொன்னீங்க. "மாறு கை மாறு கால்" முறை தான் ஒழுங்கு செய்யும் இதை எல்லாம். எல்லாத்துக்கும் மேல "தனி மனித ஒழுக்கம்" வேணும். அது எப்ப வருமோ தெரியல

@ துளசி கோபால் - நன்றிங்க துளசி. அவரசம் தான் எல்லாருக்கும் எல்லாத்துக்கும்....என்ன செய்ய?

@ பத்மநாபன் - அது எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு சொல்ற வாக்குறுதிகள்தாங்க... அதுக்கப்புறம் மறந்து போய்டுவாங்க... அவங்க வீட்டுல நடந்தாலொழிய எதுவும் மாறாது... நன்றிங்க

@ சின்ன அம்மணி - நன்றிங்க

@ கண்ணகி - நன்றிங்க கண்ணகி

@ பிரசன்னா - நன்றிங்க

@ sandhya - அதாங்க... எல்லாம் சப்பை கட்டு தான்? தப்பிக்கறதுக்கு சொல்றது. நன்றிங்க

@ ஜெய்லானி - நன்றிங்க

@ சுந்தரா - ஆமாங்க சுந்தரா. என்ன செய்ய? நன்றிங்க

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமது

@ மாதேவி - நன்றிங்க மாதேவி

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

பெரும்பாலும் விபத்துக்கள் நடப்பதில்.. ஓட்டுனர்களின் பங்கே அதிகம்.

அமைதிச்சாரல் said...

இதேமாதிரி சம்பவங்கள் எத்தனையோ நடந்துவிட்டன. ஆனாலும் இந்த மக்கள் அவசரபுத்தியை எப்போதான் விடுவாங்களோ :-((.கண்ணெதிர்க்க இவ்ளோ பெரிய ரயில் வந்தும் கண்ணு தெரியலைன்னா என்னன்னு சொல்ல :-((

அப்பாவி தங்கமணி said...

@ வசந்தவாசல் அ.சலீம்பாஷா - சரியா சொன்னிங்க... விபத்துக்கள் தவிர்க்க முடிபவை... அது ஓட்டுனர் கையில்...

@ அமைதிச்சாரல் - அது தான் புரியலைங்க... மாறும் ஒரு நாள்... மாறனும்... பாக்கலாம்...நன்றிங்க

Post a Comment