Wednesday, June 09, 2010

ஸ்கூலுக்கு நேரமாச்சு..."ஸ்ருதி இன்னும் என்ன பண்ற? ஸ்கூல்க்கு டைம் ஆச்சு" என்ற சிவாவின் குரலுக்கு

"இன்னைக்கி நான் ஸ்கூல்க்கு போகலை" என்றவளை ஏதோ கொலை குற்றம் செய்தவளை போல் பார்த்தான் சிவா.

"என்ன இது புதுசா அடம்?"

"ஒன் டே தானே?" என கெஞ்சலாய் பார்த்தாள்

"நோ ஸ்ருதி, நீ இப்பவே ரெண்டு நாள் லீவ் போட்டாச்சு, இதுக்கு மேல லீவ் போட்டா கஷ்டம்"

அதற்குள் தொலை பேசி மணி அடிக்க....
"ஹலோ சிவா here,who is this?"

"டேய் சிவா நான் அம்மா பேசறேன், எப்படி இருக்க?"

"இருக்கேன் மா" என்றான் சலிப்புடன்

"என்னடா இப்படி சலிசுக்கற?"

"எல்லாம் இந்த ஸ்ருதி பண்ற டென்ஷன் தான்மா"

"ஏன்பா... என்ன ஆச்சு?"

"ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு அடம், ச்சே" என்று சலிப்புடன் பேசியவனை  பார்த்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை அவனது அன்னை சிவகாமிக்கு

"டேய் சிவா, நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே, இப்பவே கிளாஸ் போறது ரெம்ப அதிகம்டா... அந்த காலத்துல..."

"அம்மா அந்த கால கதை எல்லாம் சொல்லி நீ வெறுப்பேத்தாதே"

"டேய்...நான்..."

"சும்மா இரும்மா.. நீங்க எல்லாம் பண்ணின தப்புக்கு இன்னிக்கி நாங்க படறோம்"

"நாங்க என்னடா பண்ணினோம்"

"என்ன பண்ணல... எக்கச்சக்கமா காசு வாங்கற ஸ்கூல் தான் நல்ல ஸ்கூல்னு நீங்களே ஏத்தி விட்டு இப்ப கொட்டி குடுத்தாலும் சீட் இல்லைங்கற கதை ஆய்டுச்சு"

"உன்னோட நல்லதுக்கு தானே...."

"என்னோட நல்லதுக்குனு... இப்போ அடுத்த தலைமுறை தானே கஷ்டப்படுது"

"ஆனாலும்.... "

"என்ன ஆனாலும்...? உங்க காலத்துல சீட்டுக்கு மட்டும் பணம்... இப்போ அட்மிசன்  கோச்சிங் க்ளாஸ்க்கு பணம், என்ட்ரன்ஸ் எக்ஸாம் பீஸ் இன்னும்  லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இதுக்கே நாலு பேரு சம்பாதிக்கணும்"

"இப்ப என்ன பண்ண சொல்ற?"

"ஏன் கேக்க மாட்ட...? உன் கடமை எல்லாம் முடிஞ்சதல்ல? அப்பவே டொனேசன்  எல்லாம் குடுக்க மாட்டோம். எங்க புள்ளைகள கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வெச்சுக்கறோம்னு நீங்க உறுதியா இருந்திருந்தா இன்னிக்கி இந்த நெலம வந்திருக்குமா?"

"யாருக்கு தெரியும் இப்படி எல்லாம் ஆகும்னு. அந்த காலத்துல எல்லாம் குழந்தை பிறக்கற வரை ஒரு துண்டு துணி கூட வாங்க மாட்டோம், இப்ப புள்ள உண்டாகறதுக்கு முந்தியே கணவன் மனைவி... "

"புள்ள உண்டாகறதுக்கு முந்தினு சிம்பிளா சொல்லாத... அட்மிசன் கார்டு கவர்மென்ட் கிட்ட சப்மிட் பண்ணினா தான் "பேபி பெர்மிட்" (குழந்தை பெத்துக்க லைசென்ஸ்) கெடைக்கும். சரி நீ போன் வெய்மா... நான் உன் மருமக ஸ்ருதிய எப்படியாச்சும் தாஜா பண்ணி கோச்சிங் க்ளாஸ்க்கு கூட்டிட்டு போறேன்... நேரமாச்சு" என்றபடி மணியை பார்த்தான் சிவா

கடிகாரம் : வருடம் 2050 - June 9 : காலை ஆறு மணி என்றது

இப்ப படிக்கறப்ப சிரிப்பா தோணினாலும் இந்த நெலமை வரத்தான் போகுது... அதுல சந்தேகமில்ல...

கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ...

என் இனிய தமிழ் மக்களே:  இந்த கதைக்கு நான் பொறுப்பில்ல... சிவனேன்னு  தொடர் கதை எழுதிட்டு இருந்தவளை, உனக்கு சிறுகதை குறுங்கதை எல்லாம் எழுத தெரியாதான்னு வம்பு பண்ணினது ஹுஸைனம்மா தான்...  அதான் இப்போ இந்த சின்ன torture ... (ஹி ஹி ஹி... பழிய அவங்க மேல போட்டாச்சு... ஹய்யா... ஜாலி... )

66 பேரு சொல்லி இருக்காக:

LK said...

appavi, nan startinglaye guess panniten ippadithan kathai poguthunu .. but nalla irukku

நசரேயன் said...

//உனக்கு சிறுகதை குறுங்கதை எல்லாம் எழுத தெரியாதான்னு வம்பு பண்ணினது ஹுஸைனம்மா தான்...//

ஆட்டோ யாருக்கு அனுப்பனும் ?

ஹுஸைனம்மா said...

ம்ம்.. மொக்கையைப் போட்டுட்டு, பழிய என் தலையில் போட்டா ஆச்சா? இருங்க, வச்சுக்குறேன் உங்களுக்கு!!

எந்த ஊட்ல அப்பாகாரர் புள்ளையைப் பள்ளிக்கோடத்துக்கு ரெடி பண்றாராம் காலையில? அங்கிட்டே டவுட்டு வந்தாச்சு!!

padma said...

நடக்க வாய்ப்புக்கள் இருக்கு .
கதை ரொம்ப அழகா வந்திருக்கு தங்கமணி

Porkodi (பொற்கொடி) said...

தெய்வமே ஹுசைனம்மா.. ஏங்க உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்.. இந்த மாதிரி எல்லாம் உசுப்பேத்தக் கூடாது கேட்டியளா, ஆமா, அ.த. கேட்ட அவங்களுக்கு மட்டும் ஈமெயில் பண்ணியிருக்கலாம்ல, கேட்டது ஒருத்தரு தண்டனை எல்லாருக்குமா?

சரி சரி, மேலே சொன்னது எல்லாம் சும்மா ஜாலிக்கு ஜாலிக்கு மட்டுமே (இவ்ள நடந்தும் இன்னும் திருந்தலியா நீயின்னு கேக்கறது கேக்குது..), கதை சூப்பரோ சூப்பர்.

தமிழ் உதயம் said...

சிறுகதையும் நல்லாவே எழுதறிங்க.

soundar said...

நல்ல கருத்து இப்படி நடக்க வாய்ப்புக்கள் இருக்கு

sriram said...

//கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ//

கருத்து கந்த சாமி.. தாங்க முடியல, எங்களப் பாத்தா உங்களுக்கு பாவமா இல்லயா????

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பத்மநாபன் said...

நல்லா சஸ்ப்பென்ஸாத்தான் கதை நகர்ந்தது ..
இது நடக்க 2050 வரைக்கெல்லாம் போக வேண்டியதில்லை...
//கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ... // நல்லாத்தான் மெசேஜூ வெக்கிரிங்க ...

Anonymous said...

no logic in the story. if the govt. is that forward thinking(permit to have baby) then
1)there won't be too much (children)population
2)govt schools standard would not be that bad

therefore joining your kid in private school is your own fault(kozhuppu).

btw private schools will have to charge more because private teachers also will get the same salary as govt school do.

(now private school teachers salary are very low; nowhere near the govt teachers salary. in future this will be eliminated & all will be equal & so parents have to pay more in private schools)

Anonymous said...

//"என்ன ஆனாலும்...? உங்க காலத்துல சீட்டுக்கு மட்டும் பணம்... இப்போ அட்மிசன் கோச்சிங் க்ளாஸ்க்கு பணம், என்ட்ரன்ஸ் எக்ஸாம் பீஸ் இன்னும் லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இதுக்கே நாலு பேரு சம்பாதிக்கணும்"//

so you don't want to pay for these extra services? do you expect the private school to offer all these for free of cost?

whoever complains about this answer this question. can you work for free atleast for a day t your office?

don't you think those private teachers deserve some money?

you want all extra services but reluctant to pay.
if you don't want your kid have extra care/service, then why join in private school? go to public school.

indian middle class people are the biggest hypocrites.

Guna said...

Enakku onnume puriyala :(

My days(Gops) said...

//so you don't want to pay for these extra services? do you expect the private school to offer all these for free of cost?

whoever complains about this answer this question. can you work for free atleast for a day t your office?

don't you think those private teachers deserve some money?

you want all extra services but reluctant to pay.
if you don't want your kid have extra care/service, then why join in private school? go to public school.

indian middle class people are the biggest hypocrites//

y dension? no dension.. year 2050 la elaathaium paarthukalam ok ? smile plz

My days(Gops) said...

நல்லாத்தான் மெசேஜூ வெக்கிரிங்க ...

My days(Gops) said...

13

அமைதிச்சாரல் said...

ஸ்ருதி ஸ்கூலுக்கு போறாளா?.. இல்லை கோச்சிங்கிளாசுக்கு போறாளா?.. தெளிவுபடுத்துங்க. ஸ்கூல்ல இருக்கிற கோச்சிங்கிளாசுக்கு போறான்னு மட்டும் சொல்லிடாதீங்க :-))))

கண்ணகி said...

ட்விஸ்ட் நல்லா இருக்கு..நடக்கத்தான் பொகிறது...

vgr said...

privateschoolseat vangum petrore petror
matrellam pin senravar

T jr.

little related...read below

http://vgrblogger.blogspot.com/2010/04/bloggers-dream-1.html

Krishnaveni said...

siru kadhayum nalla ezhuthareenga bhuvana

அப்பாவி தங்கமணி said...

//LK சொன்னது…
appavi, nan startinglaye guess panniten ippadithan kathai poguthunu .. but nalla irukku//

அடப்பாவி... Guess பண்றதெல்லாம் தனியா சொல்லணும்... இங்க இல்ல... தேங்க்ஸ்ண்ணா... (ஹி ஹி ஹி)

அநன்யா மஹாதேவன் said...

பொற்கொடியை வழி மொழிகிறேன்..
ஹூஸைன்னம்மாவை வன்மையா கண்டிக்கிறேன்.. இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிட்டு திரியுறாங்க.. ஆமா..

ஹிஹி.. இந்த மாதிரி எல்லாம் சொல்லணும்ன்னு மனசு துடிக்கிது.. ஆனா பாரு.. படிச்சப்போ புல்லரிச்சிடுச்சு.. இரு மூக்கை சிந்திட்டு கர்ச்சீப்பை பிழிஞ்சுட்டு வரேன்..

அப்பாவி தங்கமணி said...

//நசரேயன் சொன்னது…
//உனக்கு சிறுகதை குறுங்கதை எல்லாம் எழுத தெரியாதான்னு வம்பு பண்ணினது ஹுஸைனம்மா தான்...//
ஆட்டோ யாருக்கு அனுப்பனும் ?//

ஆட்டோ அவங்களுக்கே அனுப்பிடுங்க... பேட்டா மட்டும் இங்க அனுப்புங்க... (money order, travellers cheques anything accepted...இதுக்கே தனியா ஆட்டோ வருமோ...)

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
ம்ம்.. மொக்கையைப் போட்டுட்டு, பழிய என் தலையில் போட்டா ஆச்சா? இருங்க, வச்சுக்குறேன் உங்களுக்கு!!//

அடப்பாவமே... நீங்க தானே ஹுஸைனம்மா "புவனா நீ சிறுகதை எழுதலைனா நான் ப்ளாக் எழுதறதே விட்டுடுவேன்" னெல்லாம் சொன்னிங்க...அதான்... உங்களுக்காக... உங்களுக்காக... விடிய விடிய தூங்காம யோசிச்சு... ஒரு கதை எழுதினா... என்னை பாத்து... என்னை பாத்து... என்ன வார்த்த... (துக்கம் தொண்டை அடைப்பதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை நம்ம அப்பாவிக்கு...என்கிட்டயேவா?....ஹா ஹா ஹா )

அப்பாவி தங்கமணி said...

//ஹுஸைனம்மா சொன்னது…
எந்த ஊட்ல அப்பாகாரர் புள்ளையைப் பள்ளிக்கோடத்துக்கு ரெடி பண்றாராம் காலையில? அங்கிட்டே டவுட்டு வந்தாச்சு!! //

ஹி ஹி ஹி...இப்படி ஒரு மேட்டர் இருக்கா... அது நமக்கு தெரியலைங்க... நாம இன்னும் சின்ன பொண்ணு பாருங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

//padma சொன்னது…
நடக்க வாய்ப்புக்கள் இருக்கு .
கதை ரொம்ப அழகா வந்திருக்கு தங்கமணி//

நன்றிங்க பத்மா... (நீங்களாச்சும் என்னை புரிஞ்சுக்கிடீங்களா...)

அப்பாவி தங்கமணி said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
தெய்வமே ஹுசைனம்மா.. ஏங்க உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்.. இந்த மாதிரி எல்லாம் உசுப்பேத்தக் கூடாது கேட்டியளா, ஆமா, அ.த. கேட்ட அவங்களுக்கு மட்டும் ஈமெயில் பண்ணியிருக்கலாம்ல, கேட்டது ஒருத்தரு தண்டனை எல்லாருக்குமா?

சரி சரி, மேலே சொன்னது எல்லாம் சும்மா ஜாலிக்கு ஜாலிக்கு மட்டுமே (இவ்ள நடந்தும் இன்னும் திருந்தலியா நீயின்னு கேக்கறது கேக்குது..), கதை சூப்பரோ சூப்பர்//


ஹுசைனம்மாவுக்கு நீங்க நன்றி இல்ல சொல்லணும்...எனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிறுகதை எழுத்தாளரை எழுப்பிவிட்டதுக்கு... தனியா அவங்களுக்கு மட்டும் ஈமெயில் பண்ணினா அப்புறம் நம்ம "இலக்கிய சேவை" என்ன ஆகறது... ஹி ஹி ஹி (அந்த சேவை எந்த கடைல கிடைக்குதுனெல்லாம் கேட்டா அப்புறம் அனன்யா வீட்டுக்கு லஞ்ச்க்கு போக வெச்சுடுவேன் ஆ...மா...)

ஜாலி தன் பொற்கொடி...எப்பவும் நாம எல்லாரும் ஜாலி ஜோலி தான் போங்க... நன்றிங்கோ (கதை ஜுபேர்னு சொன்னதுக்கு...)

சுசி said...

நடக்கும்போது கண்டிப்பா எல்லாரும் உங்களை நினைச்சுப்பாங்க புவனா..

வரலாறு பேசும் உங்க பதிவு :))

ராவி said...

நல்ல காலேஜ் போகணும்னா நல்ல ஸ்கூலில் LKG இல் இருந்தே ஸ்டார்ட் பண்ணனும் (சென்னையில் இப்போ அப்படிதான்னு கேள்விப்பட்டேன்), சமச்சீர் கல்வி அப்படின்னு அக்கரையிலும் ராக்கெட் போல மேல போகும் Education cost, Health care cost அப்படின்னு இக்கரையிலும் பார்க்கும்போது இதெல்லாம் நடக்க சான்ஸ் நல்லாவே இருக்கு. நல்லா எழுதிஇருக்கீங்க

அப்பாவி தங்கமணி said...

//தமிழ் உதயம் சொன்னது…
சிறுகதையும் நல்லாவே எழுதறிங்க//

நன்றிங்க தமிழ் உதயம்

அப்பாவி தங்கமணி said...

//soundar சொன்னது…
நல்ல கருத்து இப்படி நடக்க வாய்ப்புக்கள் இருக்கு//

Thanks Soundar

அப்பாவி தங்கமணி said...

//sriram சொன்னது…
//கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ//
கருத்து கந்த சாமி.. தாங்க முடியல, எங்களப் பாத்தா உங்களுக்கு பாவமா இல்லயா????
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

என்ன பாஸ்....? நீங்களே இப்படி சொன்னா எப்படி?
ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

//பத்மநாபன் சொன்னது…
நல்லா சஸ்ப்பென்ஸாத்தான் கதை நகர்ந்தது ..
இது நடக்க 2050 வரைக்கெல்லாம் போக வேண்டியதில்லை...
//கடசீல வெச்சம்ல்ல மெசேஜூ... // நல்லாத்தான் மெசேஜூ வெக்கிரிங்க ... //

நன்றிங்க...மெசேஜ் வெக்கனுமில்லையா பின்ன...என்னங் நான் சொல்றது?

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா

First of all, thank you for searching "logic" in my story. Logic is not the point, point is the point you know

//govt schools standard would not be that bad//
I dont think I anywhere said that govt schools are bad. Actually I was supporting govt schools and saying that "previous generation should've boycotted private schools and gone for govt school"

//therefore joining your kid in private school is your own fault(kozhuppu)//
Sorry, no experience regards to that yet. Even then, it is individual choices, I was not doing PR for any schools

//btw private schools will have to charge more because private teachers also will get the same salary as govt school do (now private school teachers salary are very low; nowhere near the govt teachers salary. in future this will be eliminated & all will be equal & so parents have to pay more in private schools)//
I see, thanks for the info

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா
//so you don't want to pay for these extra services? do you expect the private school to offer all these for free of cost?
whoever complains about this answer this question. can you work for free atleast for a day t your office?
don't you think those private teachers deserve some money?
you want all extra services but reluctant to pay.
if you don't want your kid have extra care/service, then why join in private school? go to public school.
indian middle class people are the biggest hypocrites//

Seems a bit contradict to what you said before. Thats alright. Again, I was not pointing anyone, just tried to record something I felt in the form of a simple story....thanks for reading it though... have a good day...

அப்பாவி தங்கமணி said...

//Guna சொன்னது…
Enakku onnume puriyala :( //

உங்களுக்கும் புரியலையா குணா... (எழுதின எனக்கே புரியல... உங்களுக்கு புரியணும்னு எதிர்பாக்கறது தப்பு தான்...ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
y dension? no dension.. year 2050 la elaathaium paarthukalam ok ? smile plz//

Thanks Gops

அப்பாவி தங்கமணி said...

//My days(Gops) சொன்னது…
நல்லாத்தான் மெசேஜூ வெக்கிரிங்க ...//

நன்றிங்கோ....yes yes 13 நீங்க தான்

அப்பாவி தங்கமணி said...

//அமைதிச்சாரல் சொன்னது…
ஸ்ருதி ஸ்கூலுக்கு போறாளா?.. இல்லை கோச்சிங்கிளாசுக்கு போறாளா?.. தெளிவுபடுத்துங்க. ஸ்கூல்ல இருக்கிற கோச்சிங்கிளாசுக்கு போறான்னு மட்டும் சொல்லிடாதீங்க :-))))//

ஐயோ...ஐயோ...என்னோட கதையை இவ்ளோ டீப்ஆ எல்லாம் தின்க் பண்ண கூடாதுங்கோ... இருந்தாலும் நீங்க கரெக்ட்ஆ கண்டு பிடிச்சுடீங்க... Sruthi ஸ்கூல்ல இருக்கிற கோச்சிங்கிளாசுக்கு தான் போறா.... சூப்பர் பிரைன்ங்க உங்களுக்கு... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

//கண்ணகி சொன்னது…
ட்விஸ்ட் நல்லா இருக்கு..நடக்கத்தான் பொகிறது... //

நன்றிங்க கண்ணகி

அப்பாவி தங்கமணி said...

//vgr சொன்னது…
privateschoolseat vangum petrore petror
matrellam pin senravar
T jr.//

சான்சே இல்ல சார்... திருவள்ளுவர் மட்டும் இருந்திருந்தா... ஆஹா....நான் சாகல நான் சாகல... ஏதோ என் மறுபிறவின்னு சொல்லி இருப்பார்... ஹா ஹா ஹா
(I will see that link, thanks for sharing)

அப்பாவி தங்கமணி said...

//Krishnaveni சொன்னது…
siru kadhayum nalla ezhuthareenga bhuvana//

Thanks Krishnaveni

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் சொன்னது…
பொற்கொடியை வழி மொழிகிறேன்..
ஹூஸைன்னம்மாவை வன்மையா கண்டிக்கிறேன்.. இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிட்டு திரியுறாங்க.. ஆமா..
ஹிஹி.. இந்த மாதிரி எல்லாம் சொல்லணும்ன்னு மனசு துடிக்கிது.. ஆனா பாரு.. படிச்சப்போ புல்லரிச்சிடுச்சு.. இரு மூக்கை சிந்திட்டு கர்ச்சீப்பை பிழிஞ்சுட்டு வரேன்..//

ஹா ஹா ஹா.... பாத்தும்மா...பாத்து...

அப்பாவி தங்கமணி said...

//சுசி சொன்னது…
நடக்கும்போது கண்டிப்பா எல்லாரும் உங்களை நினைச்சுப்பாங்க புவனா..
வரலாறு பேசும் உங்க பதிவு :))//

தேங்க்ஸ் சுசி... அப்போ வரலாறுல நமக்கு பேரு உண்டுங்கறீங்க... நன்றிங்கோ...

அப்பாவி தங்கமணி said...

//ராவி சொன்னது…
நல்ல காலேஜ் போகணும்னா நல்ல ஸ்கூலில் LKG இல் இருந்தே ஸ்டார்ட் பண்ணனும் (சென்னையில் இப்போ அப்படிதான்னு கேள்விப்பட்டேன்), சமச்சீர் கல்வி அப்படின்னு அக்கரையிலும் ராக்கெட் போல மேல போகும் Education cost, Health care cost அப்படின்னு இக்கரையிலும் பார்க்கும்போது இதெல்லாம் நடக்க சான்ஸ் நல்லாவே இருக்கு. நல்லா எழுதிஇருக்கீங்க//

நன்றிங்க ராவி... காலம் கேட்டு தான் கெடக்கு...சும்மா ஒரு கற்பனை தான்...பாப்போம் என்ன தான் நடக்குதுன்னு

ஜெய்லானி said...

அப்பாவியா இப்படி கதை எழுதியது ??????????????. அப்ப நாலு ரைட்டர் அவார்ட் கண்ணை காதை மூடிகிட்டு தரலாம் :-))))2012 உலகமே அழியுன்னு சொலறாங்களே!!!

Porkodi (பொற்கொடி) said...

ஏனுங்கம்மணி.. அதெப்படி நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல "அப்பாவி தங்கமணி"யா? இதெல்லாம் வளர வளர வந்ததா இல்ல பொறக்கும் போதேவா? :)

அனாமிகா துவாரகன் said...

பிரைவெட் ஸ்கூல் வைச்சிருக்கிறவங்க அவ்ளோ பணம் வாங்கறது டீச்சர்ஸ்சுக்கு மட்டும் கொடுக்கறதுக்கா? அடங்கொய்யாலே. அது அவங்க பைய்ய நிறப்பறதுக்கோய். ஆளப்பாறு. அதில மிடில் க்ளாஸ் ஆளுங்கள கொற சொல்ல வந்திட்டார். ஆமா, எனக்கொரு டவுட். ஹை கிளாஸ் ஆளுங்க தமிழே தெரியாத மாதிரில்ல நடிப்பாங்க. உமக்கு தமிழ் புரியறதா? அத பப்ளிக்ல சொல்லிக்காட்டினா நீரு ஹைக்கிளாஸ் இல்லேன்னு சொல்லிடுவாங்க. இது கூட தெரியாத. ஹையோ ஹையோ. போய் வேலையப் பாரும்மோய்

Madumitha said...

இப்ப நடக்கிற சமாச்சாரத்தைப் பாத்தா
கவர்மெண்டும் வேண்டாம்.. தனியாரும் வேண்டாம்.
நம்பளே சொல்லித் தந்திடலாம் போல.
எங்க பக்கம் அப்பாத்தான் புள்ளைங்கள
கிளப்பிவிடராங்க.

புதுகைத் தென்றல் said...

நல்லா வந்திருக்கு கதை. வாழ்த்துக்கள். என்னையும்
இப்படி ஜீவ்ஸ் உசுப்பி 5 கதை எழுதிட்டு விட்டுட்டேன். நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

மீ த 50

My days(Gops) said...

@kodi :- //ஏனுங்கம்மணி.. அதெப்படி நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல "அப்பாவி தங்கமணி"யா? இதெல்லாம் வளர வளர வந்ததா இல்ல பொறக்கும் போதேவா? :) //

padika onnum illainu neenga நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் idhelaam padipeeengala?

onnu vandha rockfort express maadhiri vareeenga, ilaati namma town bus pallavan 5b maadhiri vareeenga.. eksi :)

sandhya said...

இது தான் நடக்க போறது .

கதை நல்லா இருக்கு

சின்ன அம்மிணி said...

ஹுசைனம்மா வாழ்க. நல்லா இருக்குங்க அப்பாவி தங்கமணி

மகி said...

ஆக மொத்தம் சுருதி ஸ்கூல்ல இருக்க கோச்சிங் கிளாஸ் போறா..ஆனா,எதுக்கு கோச்சிங்-னு நெசமாவே எனக்கு புரியல!! :)

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ஆஹா.... ரெம்ப நன்றிங்க... நான் பட்டு சேலை எல்லாம் ஆர்டர் பண்ணிடறேன்... இனி பாராட்டு விழா எல்லாம் லைனா வருமில்லையா... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ //Porkodi (பொற்கொடி) சொன்னது… ஏனுங்கம்மணி.. அதெப்படி நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல "அப்பாவி தங்கமணி"யா? இதெல்லாம் வளர வளர வந்ததா இல்ல பொறக்கும் போதேவா? :) //
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... சாதாரணமப்பா.... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நன்றிங்க அம்மணி... (விடுங்க அவங்க கருத்தை அவங்க சொல்லி இருக்காங்க )

அப்பாவி தங்கமணி said...

@ Madumitha - அதுவும் நல்லது தான் நாமலே சொல்லி தர்றது.... எந்த ஊருங்க உங்க ஊரு? ரங்கமணிக எல்லாம் நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கே?

அப்பாவி தங்கமணி said...

@ புதுகை தென்றல் - நன்றிங்க....தொடர்ந்து எழுதவா? நீங்க நெஜமாவே நல்லவங்கங்க. எஸ் எஸ் யு தி 50

அப்பாவி தங்கமணி said...

// My days(Gops) சொன்னது… @kodi :- //ஏனுங்கம்மணி.. அதெப்படி நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல "அப்பாவி தங்கமணி"யா? இதெல்லாம் வளர வளர வந்ததா இல்ல பொறக்கும் போதேவா? :) //padika onnum illainu neenga நான் விரும்பி படிக்கும் பதிவுகள்னு ஒரு லிஸ்ட் idhelaam padipeeengala? onnu vandha rockfort express maadhiri vareeenga, ilaati namma town bus pallavan 5b maadhiri vareeenga.. eksi :) //

என்னங்க கோப்ஸ் இப்படி கேட்டு போட்டீங்க... எல்லா ப்ளாக்ம் விட்டுடாம படிக்கணும்னு தானே follow போடறதே... அது அப்போ அப்போ கொஞ்சம் பிஸி ஆனா 5b ஆகறது தான்.... ஆனா லேட்ஆ வந்தாலும் லேட்டஸ்ட்ஆ வந்த பதிவு வரைக்கும் படிச்சு விடாம கமெண்ட் போடுவமல்ல....ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Sandhya - தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - தேங்க்ஸ்ங்க அம்மணி...(ஹுசைனம்மா....நோட் தி பாயிண்ட்... உங்களுக்கும் பெருமை சேத்துட்டேன் பாருங்க...ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ மகி - ஐயோ மகி.... நீங்க என்னை விட பெரிய அப்பாவியா இருப்பீங்க போல இருக்கே (இல்ல போட்டு வாங்கறீங்களோ...). அது என்னன்னா ஸ்ருதியும் சிவாவும் அவங்களுக்கு வர போற கொழந்தைக்கு ஸ்கூல் admission வாங்கறதுக்கு ஸ்கூல்ல நடக்குற கோச்சிங் க்ளாஸ் போறாங்க .... மனசிலாயோ?

பிரசன்னா said...

ஹா ஹா ஹா.. Future-அ நெனச்சாவே பயமா இருக்கு :)

Harini Sree said...

nalla message velayaattaa sonnaalum! Intha nelamai vara thaan poguthu! :)

அப்பாவி தங்கமணி said...

@ பிரசன்னா - ஆமாங்க பிரசன்னா..... பயமாத்தான் இருக்கு...ஹா ஹா ஹா

@ Harini Sree - ஆமாம் ஹரிணி . தேங்க்ஸ்

Post a Comment