Thursday, June 10, 2010

நான் பத்திரகாளியா?

இந்த தலைப்பை பாத்ததுமே ரெம்ப சந்தோசமா "என்ன மேட்டர்"னு படிக்க ஆவலா வந்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்....

அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும் (ஒண்ணு என்ன ஒம்பதே சொல்லு  கேக்கறதுன்னு ஆச்சு விதி யாரை விட்டதுன்னு யாரோ பொலம்பற மாதிரி கேக்குதே...ஹி ஹி ஹி)

போன வாரம் என்னோட "உபர்வாலா போஸ்ட்" (அதாங்க ஹிந்தி கொடுமை போஸ்ட்) பாத்துட்டு ரங்கமணி சொன்ன கமெண்ட்

 "உன்னோட போஸ்ட்ஐ விட அதுக்கு வர்ற கமெண்ட்ஸ் தான் ரெம்ப சுவாரஸ்யமா இருக்கு" அப்படின்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப் ஆய்ட்டார்

நேரம் தான்... இதுக்கு தான் இவருக்கு எங்க குரூப்ல பஞ்ச் பரமசிவம்னு பேரே வெச்சுட்டாங்க... இருந்தாலும் அந்த கமெண்ட் போட்ட உங்க கிட்ட எல்லாம் இதை சொல்லலைனா நல்ல இருக்காது இல்லையா..அதான் சொன்னேன் (நம்ம நல்ல மனசை யாரு புரிஞ்சுக்கறா?)

சரி விடுங்க மேட்டர்க்கு போவோம்...

அதுக்கு முன்னாடி... ஒரு சின்ன கேள்வி? (இன்னுமா... ? தாங்காது பூமி... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...)

கொழந்தைக்கி பேரு வெக்கறதை பத்தி என்ன நெனைக்கறீங்க?

அது எத்தனை கஷ்டமான வேலைன்னு பட்டவங்களை கேட்டாதான் தெரியும்

என்னமோ பதினாறு பெத்து பேரு வெச்சா மாதிரி டயலாக் விடறேன்னு கேக்கறீங்களா? இதுவரைக்கும் சொந்த அனுபவமில்லைனாலும் நாம எத்தனை பேரை பாத்து இருக்கோம்

சிலர் ரெம்ப கவனமா கொழந்தையோட நட்சத்திரம் அதுக்கு வர்ற எழுத்து எல்லாம் பாத்து, அப்புறம் PHD வாங்கற அளவுக்கு numerology alphabetalogy psychology biology இன்னும் என்ன என்ன ology எல்லாம் இருக்கோ எல்லாம் படிச்சு பேரு தேடுவாங்க...

இப்படி அழகா பேரு வெச்சுட்டு கூப்பிடறது "பப்பி" "பேபி" "தம்பி" "கண்ணா" னு.... கொடுமை தான்... இதுக்கு பேசாம X Y Z ன்னு வெச்சுக்கலாம்

எங்க அத்தை பொண்ணுக்கு பொண்ணு பொறந்தப்ப "கா கௌ ஷா ச" இந்த எழுத்துக்கள் வந்தது. எங்க வீட்டுல அடுத்த தலைமுறைல மொதல் கொழந்தைன்னு எல்லாரும் ஆளு ஆளுக்கு நான் பேரு சொல்றேன் நீ பேரு சொல்றேன்னு ஒரு வழி பண்ணினாங்க

நானும் என்னோட தங்கையும் "ஷாலினி" இல்லைனா "ஷாமிலி" தான் வெக்கணும்னு ஏக ரகளை பண்ணினோம். எங்க பாட்டி அதை கேட்டுட்டு "அது என்ன கண்றாவி? ஷாலாணி அலமாரி" னு அப்படின்னு டென்ஷன் ஆய்ட்டாங்க

(ஒரு குறிப்பு: எங்க பாட்டி காலத்துல fridge எல்லாம் ஏது? அந்த காலத்துல தயிர் பால் மாவு எல்லாம் பூனை உருட்டி விடாம இருக்கறதுக்காக ஒரு மர அலமாரி மாதிரி ஒண்ணு இருக்குமுமாம். அதுக்கு ஷாலாணினு பேருன்னு அப்புறம் தான் சொன்னாங்க... எங்க வீட்டுல கூட இருந்தது நான் சின்னதுல. யாருக்கு தெரியும் அதுக்கு பேரு எல்லாம்...)

அப்புறம் அவளுக்கு கௌசல்யானு அழகான பேரு வெச்சாங்கங்கறது தனி கதை. ராமபிரானோட அம்மா பேருன்னு எங்க பாட்டிக்கு ஒரே சிலாகிப்பு... மொதல் கொள்ளு பேத்தி ஆச்சே...

சிலர் வாய்ல நுழையாத பேரா இருக்கணும்னு தேடி தேடி வெப்பாங்க, அதுல என்ன சந்தோசமோ தெரியல

ஏங்க இப்படி எல்லாம்னு பண்றீங்கன்னு? கேட்டா வித்தியாசமா வெக்கறோம்ன்னு விளக்கம் வேற, என்னமோ புதுசா ஒரு recipe ட்ரை பண்றேன்னு சொல்றாப்ல. கொடுமைடா சாமி...

இன்னும் சிலர் ரெம்ப விவரமா "அந்த பேருக்கு நைஜீரியா மொழில நல்லவன்னு அர்த்தம்"னு ஒரு சூப்பர் விளக்கம் சொல்லுவாங்க. நாம என்ன நைஜீரியா டிக்சனரியா தேடி போய் கண்டுபிடிக்க போறோம்னு ஒரு தைரியம் தான்

இன்னும் சிலர் என்னனா "அது எங்க கொள்ளு தாத்தாவோட எள்ளு பாட்டியோட பேரு"னு குண்டக்க மண்டக்க பதில் வரும்

அந்த கொழந்தைக்கு மட்டும் இந்த மேட்டர் தெரிஞ்சா எத்தனை பீல் பண்ணும் பாவம்

பேரு வெக்கறது என்னமோ வெச்சுடறாங்க. பிள்ளைங்க வளந்து பெருசு ஆனதும் பெருபாலும் "உனக்கு வேற பேரே கிடைக்கிலையா"னு ஒரு கேள்வி கேப்பாங்க. கஷ்டப்பட்டு பேரு வெச்ச அப்பன் ஆத்தா நொந்து நூடுள்ஸ் ஆகணும்

பேரு சொல்ல பிள்ளைங்கறது போய் ஏன் இந்த பேருன்னு திட்டற புள்ளை ஆய்டும் கதை

என்னோட பேரு புவனானு உங்களுக்கு தெரியும், முழு பெயர் புவனேஸ்வரி. இந்த 13 எழுத்து (in English) இருக்கற பேரை எழுதி பழகரதுக்குள்ள  பச்ச புள்ளைல நான் எத்தனை நொந்து போய் இருப்பேன்

அதாச்சும் பரவாயில்லைங்க, இந்த கொடுமை புடிச்ச ஊர்ல (canada)  என்னோட பேரு பட்ற பாடு இருக்கே... நாராயணா.....

நான் முழு பேரு எல்லாம் சொல்றதே இல்ல.. இதுக என்னோட கால்வாசி பேரையே கசக்கி புழியரப்ப முழுசும் சொன்னா முக்காடு தான் போட்டுக்கணும்

என்னோட அழகான பேரை (ஆமாம் எனக்கு என் பேரு அழகு தான் போங்க...) எப்படி எல்லாம் கொல்லுதுங்க தெரியுமா

புவானா

புவ்னா

பூ

bhoo (என்னமோ நம்ம ஊரு புள்ளைங்க சாப்பிட பூச்சாண்டி காட்டி மெரட்டற மாதிரியே இருக்கும் அதுக சொல்ற லச்சணம்)

புவாநேஸ்வாரி

புவா நீஸ் வா ரீ (இப்படி கொதறி பிச்சு பீஸ் பீஸா ஆக்கரவங்களும் உண்டு)

எனக்கு கோவம் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க

ஆனா ஒரு விசயம் ஒத்துக்க தான் வேணும், நாமளும் அவங்க பேரை சில சமயம் கொலை செய்யறோம் தான்... அதுக அப்பன் ஆத்தா வாய்ல நுழையாத பேரை வெச்சா நான் என்ன செய்ய? (நம்மளையும் அதுக இப்படி தன் திட்டுமோ என்னமோ?)

நான் ஸ்கூல்ல படிக்கறப்ப எங்க தமிழ் ஆசிரியர் கணேசன் ஐயா ஒரு நாள் கேட்டார் "உன்னோட பேருக்கு அர்த்தம் தெரியுமா?"ன்னு

எனக்கு ஒரே டென்ஷன் ஆய்டுச்சு. எனக்கு பேரே ஒழுங்கா அப்பத்தான் எழுத தெரியும் இதுல அர்த்தம்னா... ஆனா கேட்டது என்னோட favourite தமிழ் ஐயா ஆச்சே... பொறுமையா "தெரியலங்க சார்" னேன்

அதுக்கு அவர் சொன்ன விளக்கம்
"புவனேஸ்வரினா புவனத்தின் ஈஸ்வரி, அதாவது உலகத்தை ஆள்பவள்னு அர்த்தம்" னு சொன்னார்

நான் அப்படியே பறக்காத கொறை தான், என்னமோ அப்பவே எலக்சன்ல சீட் ஜெய்ச்சு முதல்வர் ஆன நெனப்பு தான் போங்க

ஆன இந்த பேரை சொல்லி ஒரு பஸ் சீட் கூட வாங்க முடியாதுன்னு பின்னாடி புரிஞ்சுகிட்டேன்... ஹும்...

இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே... தலைப்புக்கும் நீ இது வரைக்கும் போட்ட மொக்கைக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா...சொல்றேன் சொல்றேன்... நானும் அதை தான் தேடிட்டு இருக்கேன்...இருங்க இருங்க ஓடாதீங்க... நோ டென்ஷன் நோ டென்ஷன்

நாம எல்லாரும் வாழ்க்கைல ஒரு தரமாச்சும் நம்ம அப்பா அம்மாகிட்ட "எப்படி எனக்கு இந்த பேரு செலக்ட் பண்ணினே?"ன்னு ஒரு கேள்வி கேக்காம இருந்து இருக்க மாட்டோம் இல்லையா

நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் எங்க அம்மாகிட்ட ஒரு நாள் கேட்டேன்

எங்க அம்மா அதுக்கே காத்துட்டு இருந்தாப்ல "அது... நீ பொறந்த அன்னிக்கி உங்க மாமா (அம்மாவோட அண்ணா) சேலத்துல இருக்கற புவனேஸ்வரி அம்மன் கோவில்ல இருந்தாரு"

"கெடச்சதே போதும்னு இதுக்கு (நான் தான்) அந்த பேரை வெச்சியா?" னு ஒரு குறுக்கு கேள்வி... வேற யாரு முந்திரிகொட்டை முனியம்மா என்னோட உடன் பிறப்பு (தங்கச்சி) தான்...

அப்புறம் அவகூட ஒரு சின்ன சண்டை போட்டு எங்க அம்மா எங்களை சமாதானம் பண்ணி continue பண்ணினாங்க

"மாமா சேலத்துல இருந்து வந்ததும் உன்னோட ஜாதகம் பாத்தப்ப 'ப' 'பூ' 'பு' இந்த எழுத்துல தான் பேரு இருக்கணும்னு சொன்னாங்க. மாமா தான் அந்த கோவில் போனப்ப நீ பொறந்ததும் ஒரு செண்டிமெண்ட்ஆ  அதே எழுத்துல வரவும் புவனேஸ்வரினு வெச்சோம்" அப்படின்னு நம்ம சரித்திரத்த சொல்லி முடிச்சாங்க அம்மா

திடீர்னு என்னோட பாசமலர் பயங்கரமா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சா

"என்னடி ஆச்சு... நல்லாதானே இருந்த?" னு நானும் அம்மாவும் மாத்தி மாத்தி விசாரிச்சோம்

அவ சிரிச்சுட்டே இருந்தா, அவ கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா சிரிக்க ஆரம்பிச்சா அவ்ளோ லேசுல நிறுத்தவே மாட்டா... நமக்கு பிரஷர் ஏறிடும் இவ விசியத்த சொல்றதுக்குள்ள

அன்னைக்கும் அபப்டி தான் செஞ்சா... ஒரு வழியா சொல்ல ஆரம்பிச்சா...

"இல்ல...இல்ல...." னு மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு கொரங்கு. எங்க அம்மா என்னனு தெரியாமையே மக சிரிக்கற அழகுல மயங்கி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க

"நான் போறேன்... சிரிச்சு முடிச்சுட்டு சொல்லி அனுப்பு..." நான் எந்திரிச்சதும் தான் சொன்னா

அந்த பிசாசு என்ன சொல்லிச்சு தெரியுமா....

"நல்ல வேள மாமா புவனேஸ்வரி கோவிலுக்கு போனாரு. இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்.... சிரிப்பே அடக்க முடியல" அப்படின்னு சொன்னதும் மொதல்ல கோவத்துல அடிக்க கை ஓங்கிட்டு அதுக்கு மேல என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியாம சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்...

நாங்க மூணு பேரும் ரெம்ப நேரமா சிரிச்சுட்டு இருக்கவும் அப்ப தான் உள்ள வந்த எங்க அப்பா என்னாச்சுனு கேட்டதுக்கு நாங்க பதில் சொல்லாம சும்மா சிரிக்கவும்... "இன்னிக்கி பௌர்ணமி கூட இல்லியே... என்னாச்சு? சரியான லூசுங்க மூணும்" னு சொல்ல இன்னும் ஓவரா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்... ஹய்யோ.... ஹய்யோ...

நேத்து ஏதோ டிவில பத்திரகாளினு ஒரு டயலாக் கேட்டப்ப கொசுவத்தி சுத்த  ஆரம்பிச்சுட்டேன்... மொதல்ல சிக்கினது ரங்க்ஸ்... இப்போ நீங்க.... ஹா ஹா ஹா....

ச்சே... "பூ" னு எழுத்து வந்ததே ஒரு "பூமிகா"னு வெச்சிருந்தா என்னவாம்... ஹும்... இந்த தமிழ் திரை உலகம் இன்னொரு பூமிகாவை மிஸ் பண்ணிடுச்சுன்னு தான் சொல்லணும்... வேற என்ன சொல்ல?

வைரஸ் புகழ் அனாமிகா போன வார ஹிந்தி பதிவு படிச்சுட்டு என்னதான் சொல்ல வரீங்கன்னு commentல கேட்டுட்டாங்க... அதனால இனிமே எல்லா பதிவுக்கும் கண்டிப்பா கருத்து சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்  (Don't kill the messanger... தப்பு என் மேல இல்ல... எல்லாம் அந்த பொண்ணு பண்ணினது தான்...)

ஒகே.. இந்த பதிவுக்கான மெசேஜ்...


மெசேஜ் 1 - புள்ளைக்கு வெக்கற பேரு ஒரு மொழத்துக்கு இல்லாம சின்னதா இருந்தா பின்னாடி உங்க கொழந்தைகிட்ட திட்டு விழாம காப்பாத்திக்கலாம்

மெசேஜ் 2 - வாய்ல நுழையற பேரா இருந்தா உத்தமம் (அதுக்காக சாக்லேட்னு இல்ல.. எத்தனை நாளைக்கி தான் வாழைபழம்னே சொல்றது)

மெசேஜ் 3 - ஒண்ணும் தோணல....ஆனாலும் எப்பவும் 1 2 3 னே முடிச்சு பழகிட்டு ரெண்டோட நிறுத்த வர்ல...சோ அட்ஜஸ்ட் பண்ணிகோங்க... ஹி ஹி ஹி

ஒகே ஒகே... ஓடி போய்டறேன்... நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்னாடி...

59 பேரு சொல்லி இருக்காக:

அமைதிச்சாரல் said...

//நல்ல வேள மாமா புவனேஸ்வரி கோவிலுக்கு போனாரு. இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்.... சிரிப்பே அடக்க முடியல//

எங்க நிலைமையும் இதுதான் :-)))

//என்னமோ பதினாறு பெத்து பேரு வெச்சா மாதிரி டயலாக் விடறேன்னு கேக்கறீங்களா? இதுவரைக்கும் சொந்த அனுபவமில்லைனாலும் நாம எத்தனை பேரை பாத்து இருக்கோம்//

சீக்கிரமே அனுபவப்பட வாழ்த்துக்கள்....

நசரேயன் said...

அப்பாவி தங்கமணிங்கிற பேரை பத்திரகாளின்னு மாத்திடலாம்

ஹேமா said...

ஒரு பேர் வைக்குறதுக்கு இவ்ளோ சிக்கல் இருக்கா !

Malar Gandhi said...

Thank god, he didn't visit to Bhathrakaali Kovil...Oh man, that was hilarious, infact I laughed a lot today:) And coming to massacre the name...they call me Marla, Molly and Marlo' here:(

ராவி said...

பெயர் வச்ச ஒரே ஒரு லைன் fact ஐ வச்சிட்டு இவ்வளவு எழுதி இருக்கீங்க. நீங்க விஜய் படத்துக்கே கதை எழுதலாம் :)

தெரியாமல் பெயர் வச்ச நம்ம முன்னோர்களை கூட மன்னித்து விட்டுடலாம் ஆனால் தெரிந்தே மாடர்ன் ஆ வைக்கிறதா நினைச்சிட்டு வாயில நுழையாத பெயர் வைக்கிறவங்களை என்ன செய்யலாம்.

Porkodi (பொற்கொடி) said...

//"இல்ல...இல்ல...." னு மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு கொரங்கு. எங்க அம்மா என்னனு தெரியாமையே மக சிரிக்கற அழகுல மயங்கி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க //

ennaiya solringa? :)

Porkodi (பொற்கொடி) said...

//"இன்னிக்கி பௌர்ணமி கூட இல்லியே... என்னாச்சு? சரியான லூசுங்க மூணும்" //

haahaa aiyo paavam appa! :)

Guna said...

பத்திரகாளி also nalla opt-a thaan irunthrukkum ;)

juz kidding.....Excellent post

சின்ன அம்மிணி said...

//இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்//

அட நீங்க வேற. பத்ரகாளின்னு பேர் வைக்கறத சுருக்கின்னி பத்ரான்னு வைக்கறவங்க இருக்காங்க. அழகான பேரை மிஸ் பண்ணீட்டீங்க :)

Mahi said...

/ பத்ரகாளின்னு பேர் வைக்கறத சுருக்கின்னி பத்ரான்னு வைக்கறவங்க இருக்காங்க. அழகான பேரை மிஸ் பண்ணீட்டீங்க :) / அதானே? சுருக்கினா எவ்வளவு மாடர்ன் பேர் கிடைக்குது பாருங்க புவனா..நீங்க மிஸ் பண்ணிட்டீங்க,மிஸ் பண்ணிட்டீங்க,மிஸ் பண்ணிட்டீங்க![எதுக்கு இம்புட்டு டென்ஷன்-னு கேக்கறீங்களா?பத்ரகாளி எங்க குல தெய்வமாக்கும்..:)]

எனக்கு பேரு வைச்ச கதயும் இப்படி ஒரு மொக்கை தான்..நிறைய பெயர்கள் சின்ன சின்ன பேப்பர்ல எழுதி, ஒரு மூணு மாச குழந்தைகிட்ட(நாந்தாங்க) செலக்ட் பண்ணச் சொன்னாங்களாம்..அந்தக் குழந்தை அதுவா தேர்ந்தெடுத்த பேரையே வைக்கலாம்னு(இந்த மாதிரி வில்லங்கமான ஐடியா தந்த அந்த வில்லன்/வில்லி யாருன்னு எங்கம்மா இன்னும் சொல்லவே இல்லை! )வைச்சிருக்காங்க!!

இந்த ஊர்ல, எப்படி அவங்க வாயில நுழையற மாதிரி மஹி-ன்னு சிம்பிளா சொன்னாலும்,ஒரொரு முறையும் முழுப் பேரையும் மென்னு,கடிச்சு துப்புவாங்க! பழகிப் போச்சு!

காமெடி சூப்பர் புவனா!

Mahi said...

எங்க வீட்டுல குடிதண்ணீரை பித்தளை சால்-ல ஊற்றி வைப்பது வழக்கம்.சாலாணிங்கறது அந்த தண்ணி சால் வைக்கற மரஸ்டேண்டு.

போகிப் பண்டிகையன்னிக்கு,காப்பு கட்டிட்டு,அரசாணிக்காய்-அவரைக்கொட்டை பொரியல் செய்து சங்கராந்திக்கு படைத்து,இரவு முழுவதும் இலைய சாலாணிக்கு கீழே வைச்சிடுவோம்..காலைல,அக்கம் பக்கம் வீட்டுல இருக்க ஆடு மாடுகளுக்கு அதை கொடுத்துடுவோம்.

உங்களுக்கு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சது,எனக்கும் சேர்த்து சுத்திட்டு இருக்கு.ஹிஹி!

அனாமிகா துவாரகன் said...

வைரஸ் அனாமிகாவா? சை. அந்திராஸ் அனாமிகானு ஒரு ரைமிங்கா வைக்கறது. அப்புறம் நான் அன்பா (??!!??) ஆசையா (??!!??) புவ்வ்வ்வ்வ்வ்வ்ன்ன்ன்ன்ன்ன்னாக்கானு கூப்படறதை இங்க சொல்லாததால் வெளி நடப்பு செய்கிறேன். ஐ யாம் சீரியஸ்.

ஆக்சுவலி பத்ரகாளி சூட்ஸ் யூ, யூ நோ. அதுவும் ஒரு கையில் இட்லி தட்டோடயும், மத்த கையில் இட்லி ஊத்த கரண்டியோடயும் இருக்கறத விசூவலைஸ் பண்ணிப் பார்த்தா சாச்தாட் பத்ரகாளியே வந்து நிக்கற மாதிரி இருக்குக்கா. அவ்வ்வ்வ்வ்வ்வ்...

அனாமிகா துவாரகன் said...

//இந்த தலைப்பை பாத்ததுமே ரெம்ப சந்தோசமா "என்ன மேட்டர்"னு படிக்க ஆவலா வந்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..//

எப்டீக்கா? எப்டி இவ்ளோ கரக்ட்டா எங்கள் புரிஞ்சு வச்சிருக்கீங்க. அப்புறம் உங்க டிப்சுக்கு சொன்ன பதிலை நீங்க பாக்கலயா? பிசாசேனு நீங்க கத்தறது கேட்குது. இதுக்கெல்லாம் நாம பயந்திடுவோமா என்ன.

LK said...

///சேலத்துல இருக்கற புவனேஸ்வரி அம்மன் கோவில்ல இருந்தாரு"//

ஏனுங்க, சேலத்துல எங்க இருக்கு இந்த கோவில், கேள்விப்பட்ட மாதிரி இல்லையே ??


//அப்பாவி தங்கமணிங்கிற பேரை பத்திரகாளின்னு மாத்திடலாம் //

repeattt


சிங்கப்பூர் க்ளையன்ட் ஒருத்தன், என் பேரை அநியாயத்துக்கு கொல்லுவான்.

sriram said...

என்னவோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது, ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vanathy said...

தங்ஸ், ஹையோ!! சிரிப்பு தாங்கமுடியலை. நல்ல வேளை உங்கள் மாமா ஐயனார் கோயில் பக்கம் நிற்காமல் போயிட்டார். அங்கே நின்றிருந்தால் உங்கள் பெயர் என்னவா இருக்கும்??? நான் எஸ்ஸ்ஸ்...

சேட்டைக்காரன் said...

சேலத்துலே புவனேஸ்வரி கோவிலா? அந்தப் பக்கமெல்லாம் மாரியம்மன் தானே ரொம்ப ஃபேமஸ்? :-) வந்ததுக்குக் கொளுத்திப் போட்டாச்சு! ஜூட்!

LK said...

settai
nan eppavo athai kettachu. enakkuth therinju anga bhuvaneswari kovil illai.. poi solranga

மாதேவி said...

"புவனேஸ்வரி அம்மன் கோவில்ல இருந்தாரு" இந்த அம்மாக்களே இப்படித்தான் :)

ஜெய்லானி said...

//"அது... நீ பொறந்த அன்னிக்கி உங்க மாமா (அம்மாவோட அண்ணா) சேலத்துல இருக்கற புவனேஸ்வரி அம்மன் கோவில்ல இருந்தாரு"//

ஒரு வேளை டாஸ்மாக்கில நின்னிருந்தா கதை கந்தல் ஹா...ஹா......

ராமலக்ஷ்மி said...

bபூ..:)!

நல்ல கதை:))!

Porkodi (பொற்கொடி) said...

அடப்பாவி, சிம்பிளா கதையில் வரும் ஊர் பெயர் யாவும் கற்பனைனு சொல்லிட்டு ஓடிருங்க.. நல்லா கேக்குறாய்ங்கப்பா டீடெயிலு..

தமிழ் உதயம் said...

பார்த்து பார்த்து... ப்ரஷர் வரப் போகுது.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்குங்க உங்க புது பேரு... :) நம்ம ஊருல பரவாயில்லைங்க. அஸ்ஸாம் மாநிலத்தில் பேர் வைக்கறது திரியுமா உங்களுக்கு? ஒரு வீட்டுல அப்பா பேரு ”கென்ஜார்” அப்ப அவரோட பசங்களுக்கு என்ன பேர் வைப்பாங்க தெரியுமா? ஜார்பொம், ஜார்பே... இந்த மாதிரி அப்பா பேர்ல இருக்கிற கடைசி வார்த்தைகள் பசங்களுக்கு வரும்... இது எப்படி இருக்கு?

Kayal said...

உங்க பெயாராவது பரவால்ல, என்னோட பேரு கயல்விழி, இத எப்படி எல்லாம் கொலை பண்ணி இருக்காங்க தெரியுமா. ரொம்ப கஷ்டம் தான் போங்க

sandhya said...

ஹலோ புவனா ரொம்பவே ரசித்தேன் நன்றி"நல்ல வேள மாமா புவனேஸ்வரி கோவிலுக்கு போனாரு. இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்.... சிரிப்பே அடக்க முடியல" அப்படின்னு சொன்னதும் மொதல்ல கோவத்துல அடிக்க கை ஓங்கிட்டு அதுக்கு மேல என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியாம சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்... "நானும் தான்


"நாங்க மூணு பேரும் ரெம்ப நேரமா சிரிச்சுட்டு இருக்கவும் அப்ப தான் உள்ள வந்த எங்க அப்பா என்னாச்சுனு கேட்டதுக்கு நாங்க பதில் சொல்லாம சும்மா சிரிக்கவும்... "இன்னிக்கி பௌர்ணமி கூட இல்லியே... என்னாச்சு? சரியான லூசுங்க மூணும்" னு சொல்ல இன்னும் ஓவரா சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்... ஹய்யோ...."நம்ம வீட்லும் சில டைம் லே இதே கமெண்ட் சொல்லுவாங்க

"என்னமோ பதினாறு பெத்து பேரு வெச்சா மாதிரி டயலாக் விடறேன்னு கேக்கறீங்களா? இதுவரைக்கும் சொந்த அனுபவமில்லைனாலும் நாம எத்தனை பேரை பாத்து இருக்கோம்"சீக்ரமா சொந்தமா அனுபவிக்க வாழ்த்துகிறேன்"இன்னும் சிலர் ரெம்ப விவரமா "அந்த பேருக்கு நைஜீரியா மொழில நல்லவன்னு அர்த்தம்"னு ஒரு சூப்பர் விளக்கம் சொல்லுவாங்க. நாம என்ன நைஜீரியா டிக்சனரியா தேடி போய் கண்டுபிடிக்க போறோம்னு ஒரு தைரியம் தான் "சரியா சொன்னிங்க

ஜெகநாதன் said...

கலக்கீட்டிங்க. முதல்முறையா வாசிக்கிறேன். எதிர்பாராத நகைச்சுவை ஆர்பாட்டத்தில் சிரித்து அதிர்கிறேன். மாமா பத்ரகாளி கோயிலுக்கே ​போயிருக்கலாம். நீங்க சிரிப்புப் பத்ரகாளி!

என் மகனுக்கு பேர் வைத்த சம்பவம் நினைவுக்கு வருது. குழந்தை பிறப்பதற்கு முன்பே பிரஸன்னா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தேன் (இருபாலருக்கும் பொருந்துமல்லவா?)
மகன் பிறந்தான். நியூமராலஜி, நேமாலஜி பிரகாரம் பகர (ப, பி, பு..) வரிசையில் பெயரிட அனுமதித்தது.

பிரஸன்ன ஆசையில் எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்ட​போது மனைவிக்கு ப்ரஜீத்​பெயரை முன்மொழிய, நான் அப்பாவி ரங்கமணியானேன்.

அதுவும் Prajeet... டபுள் ஈ ​போட்டால்தான் கூப்பிட நன்றாக இருக்கிறதாம்.
ப்ரஜீத் என்ற பெயர் சட்டென ​கேட்பவர்களுக்குப் புரிவதில்லை. என்னது அஜீத்தா என்கிறார்கள். டபுள் ​டைம் சொல்லி புரிய​வைக்க​வேண்டியதாகிறது.

ஏம்ப்பா இதெல்லாம் ஒரு இடுகையாப் போடாமா இங்க வந்து பினாத்தறே - என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். காரணம் நான் ஒரு அ.ர. :)))

பிரசன்னா said...

ஒரு பேருக்கு போரா..? சரியான அக்கப்போராக அல்லவா இருக்கிறது.. (ஹீ ஹீ நல்லா இருக்குது இந்த பதிவு.. லைட்டா வட போச்சு..)

தக்குடுபாண்டி said...

sssssssssssssssapaaa mudilada saaaami!!!...:) ungalukku bathrakaliey peru vechurukkalaam...;P

ஹுஸைனம்மா said...

நல்லா சிரிக்க வைச்சிட்டீங்க;அதுவும் அந்த “பௌர்ணமி இல்லியே...” உங்களை நல்லாத் தெரிஞ்ச அப்பா!!

அதுவும், அனாமிகாவின் பத்ரகாளிக்கான காட்சிப்படுத்துதல்... சூப்பர் அனாமி!!

நீங்க வேற மெஸேஜ்கள் சொல்லிருந்தாலும், எனக்குப் பிடிச்ச மெஸேஜ் “அழகா பேரு வெச்சுட்டு கூப்பிடறது "பப்பி" "பேபி" "தம்பி" "கண்ணா" னு.... கொடுமை தான்... இதுக்கு பேசாம X Y Z ன்னு வெச்சுக்கலாம்”

எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் இது!! (நானும் பாதிக்கப்பட்டவள்!!)

sriram said...

புவனா..
இங்க பேர் உச்சரிப்பது பத்தி சொல்லிட்டு இதை விட்டுட்டீங்களே??
கணவனின் First Name மனைவியின் Last Name ஆக இருப்பதை இவனுங்களுக்கு வெளக்கறதுக்குள்ள தாவு தீருது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Harini Sree said...

Enakku oru doubt oru vela unga mama karuppana sami or muniyaandi kovilukku poi iruntha unga nelamai yenna aagi irukkum??? :P athukku bathrakaaliye thevalaam! :P

பத்மநாபன் said...

பேரு வைக்கிறத வச்சு பதிவு போட்டு நல்ல பேரு வாங்கிட்டிங்க...

இப்ப பார்த்திங்கன்னா..பசங்க முன்னாடி இருக்கட்டும்னு எல்லா A...A..லே ஆரம்பிக்கமாதிரி பேர் வச்சு..வகுப்புல ஒரே பேர்ல நிறைய ஆகி..A1,A2 A3...டீச்சர்களுக்கு குழப்பம்....(ஹீ..ஹீ என் பசங்க
பேரும் ஆ...ஆ ல தான் ஆரம்பிக்கும் )

ஆமாங்க வெளிநாட்டுக்காரங்க கிட்ட நம்ம பேரு சிக்கி ட்டு ரொம்ப சிரமப்படும்..நானும் அரை பேருதான் சொல்வேன்...அதயும் சுருக்கி ரகளை பண்ணுவாங்க (என் பேரு இதுவரைக்கும் இங்கே யாரும் சரியா சொன்னதில்லை padi,pad,padman... )

மெசஜு நல்லா இருந்துச்சுங்க...ஏன் மூனோட நிறுத்திட்டிங்க....

சி. கருணாகரசு said...

பகிர்வு நல்லாயிருக்குங்க.... புவா நீஸ் வா ரீ.

vgr said...

perthedal perunthedal enbar nalla
peyar thedi kandipithor

T jr

Anonymous said...

//நல்ல வேள மாமா புவனேஸ்வரி கோவிலுக்கு போனாரு. இதே பத்திரகாளி கோவிலுக்கு போய் இருந்தா உன்னோட நெலம என்ன ஆகி இருக்கும்னு நெனச்சேன்...சிரிச்சேன்.... சிரிப்பே அடக்க முடியல//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...........................

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - நன்றிங்க ச்சாரல்....

@ நசரேயன் - அடப்பாவமே...நீங்களுமா?

@ ஹேமா - ஆமாங்க ஹேமா....ஒரே சிக்கல் சிங்காரவேலன் தான் போங்க

@ Malar Gandhi - தேங்க்ஸ் மலர். உங்க பேரு சிம்பிள் தானே.,,,அதையே கொல்றாங்களா இந்த ஊர்ல... கஷ்டம் தான்...

நியோ said...

அன்பு புவனா! ( ஓ இது தான் அப்பாவி தங்கமணியோட பேரா...)

// எங்க வீட்டுல எல்லாரும் ஆளு ஆளுக்கு நான் பேரு சொல்றேன் நீ பேரு சொல்றேன்னு ஒரு வழி பண்ணினாங்க ... //

இதை பத்தி நீங்க தனி பதிவே போடலாம் ... ஒரு பெயர பாப்பாவுக்கு செலக்ட் பண்ணிண்டு அதுக்கு கான்வாஸ் பண்றது , ஆள் பிடிக்கிறது , கடைசில நாம செலக்ட் பண்ணின பெயரையே வச்சுட்டாங்க்கனா அப்போ கிடைக்கிற ரெட்டிப்பு சந்தோசமும் துள்ளலும் , நான் வச்ச பெயர் தான்னு எல்லாத்துகிட்டேயும் சொல்லி .... சந்தோஷ கணங்கள் அவை புவனா !

// அவ சிரிச்சுட்டே இருந்தா, அவ கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா சிரிக்க ஆரம்பிச்சா அவ்ளோ லேசுல நிறுத்தவே மாட்டா... நமக்கு பிரஷர் ஏறிடும் இவ விசியத்த சொல்றதுக்குள்ள
அன்னைக்கும் அபப்டி தான் செஞ்சா... ஒரு வழியா சொல்ல ஆரம்பிச்சா...
"இல்ல...இல்ல...." னு மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு கொரங்கு. //

நான் வீட்டுக்கு ஒத்தை பையன் ... பாச மலர்களை பத்தி யாராவது எது சொன்னாலும் எதையோ பறி கொடுத்த மாதிரியான பீலிங் எனக்கு தோணும் ! கொரங்கை கேட்டதா சொல்லுங்க ...

" ஷாலாணி '' - எனக்கு புது தகவல் ...
ஊருக்கு போறச்ச பாட்டிகிட்ட கேட்டு பார்க்கிறேன் !

பதிவை படித்து முடிக்கும் போது இலவம் பஞ்சாய் பறக்கிறது மனம் ...

ஆமாம் ரங்கமணி சாரும் ப்ளாக்குறாரா ....

வரேன் தோழர் !

வரேன் தோழர் !

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - ப்ளீஸ் வேற punishment எதுனா இருந்தா சொல்லுங்களேன்? வேணும்னா ஆரம்ப கால விஜய் படங்கள் மாதிரின்னு வெச்சுகறேன்.... உங்க ரவிங்கற பேரை ராவின்னு மாத்திட்டாங்க போல இந்த ஊர்ல...

@ பொற்கொடி - கொடி...நீங்க எதை பாத்துட்டு //ennaiya solringa? :) // னு கேட்டீங்க.... அழகுன்னு சொன்னதையா...இல்ல அதே sentence ல வேற ஒண்ணு சொன்னேனே அதா...ஹி ஹி ஹி... நோ டென்ஷன் நோ டென்ஷன் .... எஸ் எஸ் எங்க அப்பா சிலசமயம் பாவம் தான்....

@ Guna - வாங்க குணா... நீங்க கூட எனக்கு சப்போர்ட் இல்லையா? அடப்பாவமே... (தேங்க்ஸ்)

@ சின்ன அம்மணி - அடடா...இப்படி யோசிக்கல பாருங்க நானு...ச்சே... நெஜமாவே நல்ல பேரை மிஸ் தான் பண்ணிட்டேன் நீங்க சொன்னா மாதிரி... தேங்க்ஸ் அம்மணி

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஆஹா.... சும்மா இருக்காம மகிய மகிசாசுரவர்தினி ஆக்கிட்டனே.... அம்மணி எனக்கு பத்திரகாளி அம்மன் மேல இந்த கோவமும் இல்லைங்க...உண்மைய சொல்லணும்னா நானே ஊர்ல இருந்தப்ப ரெகுலர்ஆ மேட்டுபாளையம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு போறவ தான் (இப்படி ஒரு கோவிலே இல்லைன்னு ஒருத்தர் பின்னாடியே வந்து சொல்லுவார் வெயிட் அண்ட் சி)
ஆனா...அந்த பேரு முழுசா அப்படியே எனக்கு வெச்சு இருந்தா என்னை ஆளு ஆளுக்கு போட்டு தள்ளி இருப்பாங்க இல்லையா...அதை தான் சொன்னேன்... அப்பாவின்னு பேரு வெச்சே அடப்பாவி அடபாவின்னு கூப்பிடறாங்களே.... தேங்க்ஸ் மகி

@ Mahi - எஸ் எஸ்...அந்த rack (அதான் சாலாணி) மேல தண்ணி சால் இருக்கும்....எனக்கும் ஞாபகம் இருக்கு... ஓ... அதனால தான் அந்த பேரா... யாரும் எனக்கு சொல்லவே இல்ல பாருங்க...ரெம்ப நன்றி... சங்கராந்திக்கு "காப்பு கட்டிட்டு,அரசாணிக்காய்-அவரைக்கொட்டை பொரியல் செய்து சங்கராந்திக்கு படைத்து" அதெல்லாம் எங்க வீட்டுலயும் நடக்கும், ஆனா அதை சாலாணிக்கு கீழ வெச்சமானு ஞாபகம் இல்லப்பா... அம்மா கிட்ட கேட்டு பாத்தா தெரியும்... தேங்க்ஸ் for sharing

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - அடிப்பாவி...இதுல ரைமிங்கா வேற சொல்லணுமா... எப்படி எப்படி "அன்பா (??!!??) ஆசையா (??!!??) " சரிங்காத்தா...சரிங்க... ஆஹா...விட்டா இட்லி தட்டு கரண்டியோட calender பிரிண்ட் பண்ணிடுவ போல இருக்கே... (ஆனா...சூப்பர் கற்பனை பாராட்டாம இருக்க முடியல...ஹா ஹா ஹா )

@ அனாமிகா - //எப்டீக்கா? எப்டி இவ்ளோ கரக்ட்டா எங்கள் புரிஞ்சு வச்சிருக்கீங்க// எல்லாம் ஒரு mind ரீடிங் தான்.. ஹி ஹிஹ ஹி... படிச்சேன் படிச்சேன்...பதில் போட்டு இருக்கேன் போய் பாருங்க அம்மணி... பிசாசேவா...அது ரெம்ப நல்லதுன்னு கேள்விப்பட்டேன்...ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஏன்பா?.ஏன்? ஏன் இப்படி? அட நான் சின்னதுல அந்த கோவிலுக்கு போய் இருக்கேன் promise ... இந்த weekend எங்க மாமாகிட்ட பேசிட்டு கரெக்ட்ஆ சொல்றேன்...ஒகே வா...என்ன repeat ? நேரம் தான்... உன்னோட பேரையே கொல்றாங்களா? கஷ்டம் தான்

@ Sriram - ஸ்ரிராமருக்கே புரியலன்னா நாங்க என்ன சொல்ல... ஹி ஹி ஹி

@ vanathy - அடப்பாவமே...ஏன் இந்த கொலை வெறி? ஐய்யனார் கோவிலா...ஒருவேளை ஐயம்மானு பேரு வெச்சு இருப்பாங்களோ...

@ சேட்டைக்காரன் - பாஸ்... புவனேஸ்வரி கூட அம்மன் பேரு தான்... இருங்க கரெக்டா விசாரிச்சுட்டு வந்து உங்ககிட்ட வம்பு பண்றேன்

அப்பாவி தங்கமணி said...

@ LK - வெயிட் அண்ட் சி....(என்னையா பொய் சொல்றேன்னு சொன்ன....வெயிட் வெயிட் ...)

@ ஜெய்லானி - ஐயோ...அநியாயமப்பா இது... "டாஸ்மாக்கில"ஆ? எப்படிங்க இப்படி எல்லாம் தோணுது? நீங்க "சுடுதண்ணி" வைப்பது எப்படின்னு பதிவு போட்டபவே எனக்கு சந்தேகம் தான்...இப்போ confirm ஆய்டுச்சு.. ஹி ஹி ஹி ...என்கிட்டயேவா???

@ ராமலக்ஷ்மி - தேங்க்ஸ்ங்க

@ பொற்கொடி - அப்படி சொல்லு கண்ணு... தேங்க்ஸ்....ஆனா இது நெஜம் தான்....prove பண்றேன் இருங்க இவங்களுக்கு ....

அப்பாவி தங்கமணி said...

@ தமிழ் உதயம் - ப்ரஷர் எல்லாம் இன்னும் வரலைங்க..இனிமே வருமோ என்னமோ? தேங்க்ஸ்

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க. அடப்பாவமே அஸ்ஸாம் கொடுமை பெரிய கொடுமையா இருக்கே... அப்போ போக போக எல்லா எழுத்தும் தீந்து பொய் வெறும் காத்து தான மிஞ்சும்..என்ன செய்வாங்க அப்போ?

@ Kayal - முதல் வருகைக்கு நன்றி கயல். வாஸ்துவம் தான்...உங்க பேரை ஒரு வழி பண்ணி இருப்பாங்க for sure ... ஹா ஹா அஹ

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா. ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ஜெகநாதன் - ஹா ஹா அஹ...தேங்க்ஸ்ங்க ஜெகநாதன். ஆஹா...சிரிப்புப் பத்ரகாளியா....? இது வேணா நல்லா இருக்கு... ஹி ஹி ஹி... பிரசன்னா நெஜமாவே அழகான பெயர்.... பிரஜீத் கூட அழகு தான்... டபுள் ​டைம் சொல்லி புரிய​வைக்க​வேண்டியது தான் கஷ்டம் நீங்க சொன்ன மாதிரி...

//காரணம் நான் ஒரு அ.ர. :)))// நோ நோ நோ....இதை நான் ஒத்துக்க மாட்டேன்... ஏன்னா? ரங்கமணிகள்ள அப்பாவிகள் இருக்கவே வாய்பில்ல...ஹா ஹா ஹா

@ பிரசன்னா - நன்றிங்க பிரசன்னா...பெரிய அக்கபோரே தான் போங்க...

@ தக்குடு - அடப்பாவி ...நீயுமா? தம்பி நீயுமா?

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா அஹ ....தேங்க்ஸ்ங்க... எங்க அப்பா எப்பவாச்சும் இப்படி பஞ்ச் விடுவாரு.... அடப்பாவமே நமக்கு எதிரா ஒரு பெரிய கூட்டமே இருக்கு போலவே.... ஓஹோ... உங்க வீட்டு பேரு என்னனு சொல்லுங்க அப்போ... வம்பு இழுக்க வசதியா இருக்கும்... ஹா ஹா அஹ

@ Sriram (பாஸ்டன்) - நல்லா சொன்னிங்க ஸ்ரீராம். என்னமோ நாம illegal மாதிரி ஒரு லுக் விடுவாங்க...ஓங்கி ஒண்ணு போடலாம்னு தோணும்... "நான் சரியாதாண்டா இருக்கோம் நீங்க தான் கொழப்பரீங்கன்னு" சொன்னாலும் இவங்களுக்கு புரியறதில்ல... தேங்க்ஸ்

@ Harini Sree - அடப்பாவி ...இன்னும் என்ன எல்லாம் கற்பனை பாக்கி இருக்கு? அதையும் சொல்லிடேன்.... ஹஹா ஹா ...தேங்க்ஸ் மா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க... ஏதோ ஓடுது பொழப்பு.... ஆமா அது வேற A ல ஆரம்பிக்கற பேருன்னு ஒரு வம்பு...அதை சொல்ல மறந்துட்டேன்....எடுத்து குடுத்ததுக்கு தேங்க்ஸ்... மூணு மெசேஜ்கே முழி பிதுங்குதுங்ன்ணா...

@ சி. கருணாகரசு - நன்றிங்க... ஆஹா.... புவா நீஸ் வா ரீ யா....நான் பாவம்க....

@ VGR - சூப்பர் சூப்பர் சூப்பர்....ஜூனியர் திருவள்ளுவர் வாழ்க வாழ்க...தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

நியோ சொன்னது…
//அன்பு புவனா! ( ஓ இது தான் அப்பாவி தங்கமணியோட பேரா...)//
ஆமாங்க அதே தான்...அதே தான்...

//நான் வச்ச பெயர் தான்னு எல்லாத்துகிட்டேயும் சொல்லி .... சந்தோஷ கணங்கள் அவை புவனா//
ஆமாங்க செம jolly தான் போங்க... ஆனா அந்த கொழந்தை பெருசாகி திட்டாத வரை சந்தோஷம் தான்...

//நான் வீட்டுக்கு ஒத்தை பையன் ... பாச மலர்களை பத்தி யாராவது எது சொன்னாலும் எதையோ பறி கொடுத்த மாதிரியான பீலிங் எனக்கு தோணும் ! கொரங்கை கேட்டதா சொல்லுங்க ...//
நோ பீலிங்...நாங்க எல்லாம் இல்ல... ஆனா... ஒத்த பயனா நெறைய சலுகைகளை அனுபவிச்சு இருப்பீங்களே... கொரங்கை கண்டிப்பா கேட்டதா சொல்றேன் (கேட்டா என்னை கொன்னுடுவா...ஹா ஹா ஹா)

//பதிவை படித்து முடிக்கும் போது இலவம் பஞ்சாய் பறக்கிறது மனம் ....//
ரெம்ப நன்றிங்க

//ஆமாம் ரங்கமணி சாரும் ப்ளாக்குறாரா ....//
ஆஹா...வேற வினையே வேண்டாம்பா... அவர் ஜஸ்ட் reader மட்டும் தான்.... நோ பிளாக்கர்....ஹா ஹா ஹா

ராவி said...

ஆமாங்க ரவி தான் ராவி இங்க ஆகிடுச்சி. Blog register பண்ணும் போது எல்லா favorite id யும் ட்ரை பண்ணி பார்தேன். ஒண்ணும் கிடைக்கலை . அப்புறம் தான் சரி இந்த நேம்ஐதான் வாரத்தில் 5 நாள் 40 மணி நேரம் சகிச்சுகிறமே அப்படின்னு அதையே வச்சுட்டேன்.

பிரசன்னா said...

//பிரசன்னா நெஜமாவே அழகான பெயர்..//

ஆமாம் உண்மைதான்.. :)

sinhacity said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

சுசி said...

//இந்த கொடுமை புடிச்ச ஊர்ல (canada) என்னோட பேரு பட்ற பாடு இருக்கே... நாராயணா.....//

அப்டியே அந்த அடைப்புக்குள்ள இருக்கிறதில நோர்வேனு எழுதினா.. சேம் ப்ளட்.. அவ்வ்வ்..

கலக்கிட்டிங்க போங்க.

ஸ்ரீராம். said...

சொல்லப்படும் கஷ்டம் கருத்துக்கள் எல்லாம் பார்த்தா நியூமராலாஜி படி சொல்ற அந்த முதல் எழுத்தை மட்டுமே பெயராக வச்சுடலாம்னு தோணுது...

Krishnaveni said...

Nalla kaamedi bhuvana....very good write up

Matangi Mawley said...

"weak point"- la kai vechchutteenga bhuvanaa!!!

en paer- மாதங்கி மாலி .

ithoda ekkachakka versions veli vanthurukku- ithu varaikkum--

மாதாங்கி
மதாங்கி
மந்தாகினி

pronunciations- um keval;amaa kooppiduvaanga..

"maa"-"thang"-"gi"! simple!
ennalaamo yosippaanga!

kashtam.. enga appa enakku geetha nu paer vekkalaamnu irunthaaraam.. athuvey vechchirukkalaam!

பத்மா said...

koluthureengappa

vaazhthukkal

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - நல்ல முடிவு தான் போங்க

@ பிரசன்னா - ஓ... அப்படி வரீங்களா?

@ சுசி - அடப்பாவமே அங்கயும் அப்படி தானா.. கஷ்டம் தான் போங்க

@ ஸ்ரீராம் - ஹா ஹா அஹ....இது நல்ல ஐடியாவா இருக்கே சார்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி

@ Matangi Mawley - //"maa"-"thang"-"gi"! simple! ennalaamo yosippaanga!// நல்லா சொன்னிங்க மாதங்கி.... என்ன கஷ்டமோ அவங்களுக்கு... கொலை தான் போங்க

@ பத்மா - நன்றிங்க பத்மா

priya.r said...

இன்று விஜய் டிவி ,"அருள் தரும் அம்பாள்" என்ற நிகழ்ச்சியில்
பத்ரகாளி என்பதற்கு பத்ர என்றால் மங்கலத்தை தருபவள் என்றும்
காளி என்றால் காலத்தை வென்றவள் என்றும் பொருள் என்று
பண்டிதர் ஒருவர் கூறினார் ;
எனக்கு உங்கள் நினைவு வந்தது !
நல்ல பகிர்வு புவனா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - Thanks Priya

Post a Comment