Thursday, June 17, 2010

முப்பெரும் விருது...

முப்பெரும் விழா தெரியும் முப்பெரும் தேவியர் கூட தெரியும், அது என்னம்மா முப்பெரும் விருதுன்னு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்...

மூணு பெரியவங்க எனக்கு விருது குடுத்து இருக்காங்க, அதான் முப்பெரும்  விருது, மனசிலாயோ...? பெரியவங்கன்னு சொன்னதும் "ஹலோ என்னோட birth certificate பாரு"ன்னு சண்டைக்கு வந்துடாதீங்கப்பா

தனக்கு கெடைச்சத மத்தவங்களுக்கு பகிர்ந்து குடுக்கற பெரிய மனசுகாரங்கன்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன்.... ஒகே வா (மொக்கை போதுமாத்தா.. விசியத்த சொல்லு - mindvoice )

விருதுகளை பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரு விளக்கம் சொல்லணும் (ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....முடியல - mindvoice )

விளக்கம்

போன வாரம் என்னோட "பேரு வெச்ச புராணத்தை" பதிவா போட்டேன் இல்லையா. அதை படிச்சுட்டு "சேலத்துல புவனேஸ்வரி அம்மன் கோவிலா? அது எங்க இருக்கு?" னு சிலர் கேட்டு இருந்தாங்க

எனக்கும் அது நிச்சியமா தெரியாதால எனக்கு பேரு வெச்ச எங்க மாமாவுக்கே போன் பண்ணி கேட்டேன். அவர் சொன்னது....

"சேலத்துல இருந்து ஆத்தூர் போற வழில ஏழாவது மைல்ல ஸ்கந்தாஸ்ரமம் இருக்கு. அதுல புவனேஸ்வரி மாதாவை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. மூலக்கோவில் புதுக்கோட்டைல இருக்கு"

ஒகே விளக்கம் ஓவர்... இனி விருது....விருது கெடச்ச தேதி வாரியா சொல்லிடறேன்...

முதல் விருது - "யாவரும் நலம்" சுசி அவர்கள் கிட்ட இருந்து

மே 30 ந்தேதியே சுசி இந்த விருதை குடுத்தாங்க. அப்பவே ஒரு பதிவு போட்டு நன்றி சொல்லணும்னு நெனச்சேன்

"ஒரு ஒரு விருதுக்கும் ஒரு பதிவை போட்டு பதிவு எண்ணிக்கைய கூட்டுறையா"னு நாளைக்கு நாக்கு மேல பல்லு இல்லேன்னா பல்லு மேல நாக்கு போட்டு நாலு பேரு மூணு விதமா (எப்பவும் நாலு விதமானு சொல்லி போர் அடிக்குது...அதான் ஒரு change க்கு... ஹி ஹி ஹி) பேசிற கூடாது பாருங்க (இதுக்கு என்ன அர்த்தம்னு இப்ப வரைக்கும் தெரியாது... எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்...So விளக்கம் எல்லாம் யாரும் கேக்க கூடாது....)

அதனால் தான் போடல... எதாச்சும் சின்ன பதிவா போடறப்ப அதோட சேத்து சொல்லிடலாம்னு நெனச்சேன்... நானாவது சின்ன பதிவாவது... ஹும்...  நமக்கும் அதுக்கும் ரெம்ப தூரம் தான் போங்க

இதோ, இந்த பதிவையே எடுத்துகோங்க. வேற ஒருத்தர்னா அரை பக்கத்துல முடிப்பாங்க... எனக்கு ஆறு பக்கம் இழுக்கும் போல இருக்கே... (இப்படியே போனா அறுபது பக்கம் கூட இழுக்கும் - mindvoice )

லேட்டா நன்றி சொல்றதுக்கு மாப்பு கேட்டுகரனுங்க சுசி. இதோ சுசி குடுத்த ஏஞ்சல் விருது. நன்றி நன்றி நன்றி


இரண்டாவது விருது - புதுகை தென்றல் அவர்கள் கிட்ட இருந்து

ஜூன் 14 ந்தேதி இந்த வைர விருதை குடுத்தாங்க. எனக்கு இது வரைக்கும் யாருமே வைரம் குடுத்ததில்லைங்க (ரங்க்ஸ் உட்பட) எனவே இது ஸ்பெஷல். அதுவும் பதிவர் தினதன்னைக்கி குடுத்தது கூடுதல் சிறப்பு. நன்றி நன்றி நன்றி

இதோ, அந்த வைர விருது

மூன்றாவது விருது - LK அவர்கள் கிட்ட இருந்து

"அன்புடன் மலிக்கா" அவர்கள் நடத்தின கவிதை போட்டில கலந்துகிட்டு தான் வாங்கின "கவிஞர் விருதை" எனக்கு குடுத்து நான் கலந்துக்காம மிஸ் பண்ணினதை ஈடு செஞ்ச LK அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

ஆனா வாங்கின விருதுக்கு ஒரு கவிதை எழுதலைனா மனசாட்சி ஏன் ஏன்னு கேள்வி கேக்கதா?

(வாங்கற சம்பளத்துக்கு வேலை பாக்காம ஆபீஸ்ல உக்காந்து ப்ளாக் படிக்கறியே... அப்போ உன் மனசாட்சி என்ன செகண்ட் ஷோ பாக்க போயிடுச்சா? - mindvoice )

(இல்ல.. பாப்கார்ன் சாப்பிட போய்டுச்சு, நேரம் காலம் தெரியாமல் காலை வாரும் mindvoice டௌன் டௌன் - அப்பாவி)

சும்மா எதாச்சும் கவிதை எழுதறதுக்கு பதிலா எந்த கவிதை போட்டில கலந்துக்காம மிஸ் பண்ணினேனோ அதையே எழுதுவோம்னு தோணுச்சு... உண்மைய சொல்லணும்னா அந்த போட்டிக்காக குடுக்கப்பட்ட போட்டோவை பாத்ததும் எதாச்சும் கிறுக்கணும்னு ஆசை வந்தது...

சும்மா குட்டியா ரெண்டு கிறுக்கல்கள்... இதோ... பொருத்தருள்க....

அதுக்கு முன்னாடி LK குடுத்த "கவிஞர் விருது" இங்கே..."அன்புடன் மலிக்கா" போட்டிக்காக குடுத்த படம் இங்கே...


இனி.... என்னோட கிறுக்கல்கள் இங்கே...
(கவிதைனு சொன்னாதானே தெரியும்னு யாரும் கேட்டுடகூடாது பாருங்க... நாம எப்பவும் முன் ஜாக்கிரதைதான் இதுல எல்லாம்)


***********************************

வானவீதியில் காதல்மொழி
வரைந்து வைத்தேன்உனக்கு
மேகம் கலையும்முன்னே
மீட்டுவிடு என்னையும்கூட!!!

***********************************

எட்டாத உயரத்தில்
எழுதிவைத்த கடிதம்
நிலவு களவாடும்முன்
நீவந்து வென்றுவிடு!!!

***********************************

வைகறை வரும்முன்
வானவெளி பல்லக்கில்
வருவான் ராஜகுமாரனென
விழிமூடா நிலவுப்பெண்!!!

***********************************

போதும் போதும் நிறுத்துன்னு கத்தறது கேக்குது... ஒகே ஒகே stopped ..... நன்றி (ஏன்பா LK ? இது தான் வம்பை விலை குடுத்து வாங்கறதா? ஏன்? ஏன்? - mindvoice )

வாங்கற விருதை நாலு பேருக்கு குடுக்கறது தான் முறைனு சொல்றாங்க... கண்டிப்பா குடுக்கணுமா? நானே வெச்சுகறனே.... (அல்பம் அல்பம் - mindvoice )

சரிங்க.... குடுக்கறேன்... இப்டீக்கா சைடுல பாத்தீங்கன்னா.... "நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகள்" னு போட்டு இருக்கறனல்லங்க.... அதுல இருக்கறவங்களுக்கு இந்த விருதுகளை குடுக்கரனுங்க... (அதுல இருக்கற என்னோட பேரை தவிர...)

என்னோட பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசிக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி...

52 பேரு சொல்லி இருக்காக:

LK said...

congrats adapaavi akka

அப்பாவி தங்கமணி said...

LK - தேங்க்ஸ் LK

LK said...

short and sweeta post poda teriyaatha yuunakku. shabbaaa

Anonymous said...

congrtas

Madumitha said...

வாழ்த்துக்கள்.

sandhya said...

வாழ்த்துக்கள் புவனா ...

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் புவனா.

//"நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகள்" //

எனக்கும் விருது. நன்றி புவனா.

பத்மநாபன் said...

முப்பெரும் விருது பெற்ற நயாகரா நாயகிக்கு ( நாலாவது விருது -ஒசில ..Mind voice ..mind voice எல்லாருக்கும் தொத்திக்கும் போல இருக்கு ) நல்வாழ்த்துக்கள்..... விருதை பகிர்ந்தமைக்கு நன்றி ( எனக்கு நெசமாவே ஒசி-- பெருசா இடுகைகள் போடாமலே ..mind voice highly infected )

நசரேயன் said...

//வானவீதியில் காதல்மொழி
வரைந்து வைத்தேன்உனக்கு
மேகம் கலையும்முன்னே
மீட்டுவிடு என்னையும்கூட!!!//

அப்படியே எங்களையும் இவங்க கவுஜையிலே இருந்து
மீட்டுவிடுங்கள்

நசரேயன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள்.

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அடப்பாவி தங்கமணி! ஒரே நேரத்திலே இத்தனை விருதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ? கண்ணு வச்சுட்டேன்:-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்களும் நன்றியும்..

கவிதை எல்லாம் ஒரே ரொமாண்ட்டிக் பறக்கிறாப்பலயே இருக்கே..அதான் வானத்துலயே இருக்கு எல்லா கவிதையும்.. ;)

sriram said...

முப்பெறும் விருதா?? உங்களுக்கு மூப்பு பெறும் விருதுதானே வழங்கணும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜெய்லானி said...

@@@இதுக்கு என்ன அர்த்தம்னு இப்ப வரைக்கும் தெரியாது... எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் சொல்றேன்...So விளக்கம் எல்லாம் யாரும் கேக்க கூடாது....) //

ஹி..ஹி...ஏனுங்க ... நான் வேனா அதுக்கு அர்த்தம் போட்டு ஒரு பதிவு போடவா......?..!! ஐயோ..ஓடாதீங்கோ..பிளீஸ்...

Krishnaveni said...

congrats on all your beautiful awards bhuvana and thanks a lot for sharing with me. kavidai looks so beautiful like that picture with moon and tree

Krishnaveni said...

Nayagara Nayagi romba apt aana peru

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ...குடுத்த உங்களுக்கும் அதை பெற்ற வர்களுக்கும்..!!

கவுஜ.. இன்னாமா ஜூப்பரா கீது.. அக்காங்..!!

ஜெய்லானி said...

உலகம் உருண்டைன்னு இதுக்குதான் சொல்வாங்களா என்ன ?...பார்க்கவும் http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html

என் பூனை என்னிடமே மியாவ்..மியாவ்..

தாங்ஸ்...இட்லி மாமி..

sriram said...

//தாங்ஸ்...இட்லி மாமி//
புவனா Aunty யோட புது பேரு நல்லா இருக்கே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராவி said...

மூன்று விருது கிடைச்சதுக்கு வாழ்த்துகள்.

கவித, கவித, கவித (கமல் வாய்ஸ்ல இதை சொல்லனும்) (மூணு கவிதையாச்சே) நல்லா இருக்குங்க.

ராவி said...

இன்னும் நிறைய எழுதி நிறைய விருது வாங்க வாழ்துக்கள்.
நான் சமிபத்தில் தன தமிழ் blogs படிக்க ஆரம்பிச்சேன். உங்க பதிவு எல்லாம் சிம்பிள் ஆ நல்லா இருக்கு.

(சில blogs உள்ளே போய் எதோ டௌன் டவுன் சைடு ஸ்ட்ரீட் இல லேட் நைட்இல தனியா நடக்கிற பீலிங் வந்து ஓடி வந்துட்டேன். என்னவெல்லாம் நடக்குது.)

சுசி said...

நன்றி புவனா..

சுசி said...

இன்னும் விருது பல பெற்று அத எங்களுக்கும் வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Mahi said...

வாழ்த்துக்கள் புவனா!

இராமசாமி கண்ணண் said...

விருதுகளுக்கு வாழ்த்துகள். கவிதைகள்லாம் சூப்பர்.

அப்பாவி தங்கமணி said...

@//LK சொன்னது… short and sweeta post poda teriyaatha yuunakku. shabbaaa//

பிரதர் - வேண்டாம்.... அழுதுருவேன்... .short and sweeta post போட தெரிஞ்சா நான் ஏன் மொக்கை இழுக்கறேன்? எனக்கு கமெண்ட்எ பத்து வரிக்கி கம்மியா எழுத தெரியாது.... இதுல ஷார்ட்ஆவது ஸ்வீட்ஆவது.... ஹும்.....

@ பெயரில்லா - தேங்க்ஸ்ங்க

@ Madumitha - நன்றிங்க மதுமிதா

@ sandhya - நன்றிங்க சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க. உங்களுக்கும் தான்... வாழ்த்துக்கள்

@ பத்மநாபன் - //நயாகரா நாயகிக்கு// அண்ணா ஏங்கண்ணா? நல்லாதானே போயிட்டு இருக்கு... ஹி ஹி ஹி.... நன்றிங்க. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

@ நசரேயன் said -
//அப்படியே எங்களையும் இவங்க கவுஜையிலே இருந்து
மீட்டுவிடுங்கள்//
ஹா ஹா ஹா... நல்லாவே புரிஞ்சு வெச்சு இருக்கீங்க... ஹா ஹா ஹா. நன்றிங்க வாழ்த்துக்களுக்கு

@ தமிழ் உதயம் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - வாங்க வாங்க வாங்க... முதல் வருகைக்கு நன்றிங்க.... ஆனா வந்த வேகத்துல அடபாவின்னு சொல்லிடீங்களே.... (யாருப்பா நம்மள பத்தி மொதலே போட்டு குடுத்தது). ஆஹா.... கண்ணு வெச்சுடீங்களா??????? என்னோட ப்ளாக்க்கு சுத்தி போட்டுடறேன் மொதல் வேலையா.... நன்றிங்க

@ முத்துலெட்சுமி - நன்றிங்க முத்துலட்சுமி. ஆமாங்க, நாம எப்பவும் பறக்கற கேஸ் தான்.... ஹி ஹி ஹி

@ sriram - //உங்களுக்கு மூப்பு பெறும் விருதுதானே வழங்கணும்//
அது உங்களுக்கு தான் இன்னும் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.... ஹா ஹா ஹா.... நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - //நான் வேனா அதுக்கு அர்த்தம் போட்டு ஒரு பதிவு போடவா//
போடுங்க போடுங்க... ஓடவெல்லாம் மாட்டேன்... எத்தனையோ படிச்சோமாமா... இதை படிக்க மாட்டமா? ஹி ஹி ஹி... (திட்டாதீங்க)

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி. Congrats உங்களுக்கும்....
//Nayagara Nayagi romba apt aana பேரு// அது சரி.... ஹா ஹா ஹா

@ ஜெய்லானி - நன்றிங்க.... ஆஹா...ஜூப்பர் தான் போங்க உங்க கமெண்ட்ம்? ஆஹா .... (ப்ளாக்) உலகம் உருண்டை தானுங்க .... கண்டிப்பா ஒத்துக்கறேன்.... எங்க எங்க சுத்தி இங்க வந்து நிக்குது பாருங்க... அதையும் உங்களுக்கே குடுத்தோம் பாருங்க திருப்பி... ஹி ஹி ஹி

@ ஜெய்லானி - என்னாது? இட்லி மாமியா? ஏங்க? இவ்ளோ நேரம் நல்லாதானே போயிட்டு இருந்தது...

அப்பாவி தங்கமணி said...

@ sriram - //தாங்ஸ்...இட்லி மாமி//புவனா Aunty யோட புது பேரு நல்லா இருக்கே//

யாருக்கு யாருங்க ஆண்ட்டி? இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா இல்லையாங் தாத்தா.....(ஜெய்லானினினினினினினினினினினினினினினினினி......................பாயிண்ட் எடுத்ததா குடுக்கறீங்க)

@ ராவி - நன்றிங்க... ஆஹா... நீங்களும் தலைவர்(கமல்) விசிறியா. ரெம்ப நன்றிங்க

@ சுசி - நன்றிங்க சுசி. கண்டிப்பா உங்களுக்கு தான் first ... நன்றிங்க மீண்டும்...

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ இராமசாமி கண்ணண் - நன்றிங்க கண்ணன்

vanathy said...

தங்ஸ், வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு. அப்படியே நாற்பெரும், ஐம்பெரும், அறுபடை.....எல்லா விருதுகளும் வாங்க வாழ்த்துக்கள்.

LK said...

//"சேலத்துல இருந்து ஆத்தூர் போற வழில ஏழாவது மைல்ல ஸ்கந்தாஸ்ரமம் இருக்கு. அதுல புவனேஸ்வரி மாதாவை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. மூலக்கோவில் புதுக்கோட்டைல இருக்கு"///

விருது வாங்கின அன்னிக்கு வேண்டாம்னு பார்த்தேன். விதி வலியது. அந்த கோவிலுக்கு பெயர் ஸ்கந்தாஸ்ரமம் முருகன் கோவில். சிறிய குன்றில் அமைந்துள்ள்ளது, அங்கு ஒரு சந்நிதியில் புவனேஸ்வரி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்த கோவிலை யாரும் புவனேஸ்வரி அம்மன் கோவில் என்று அளிப்பது இல்லை. முருகன் கோவில் என்றுதான் அழைப்பர்.

எனவே நீங்கள் கொடுத்த விளக்கம் நிராகரிக்கப் படுகிறது

goma said...

மேலும் மேலும் விருதுகள் வந்து குவிய வாழ்த்துக்கள்.

Porkodi (பொற்கொடி) said...

விருது பெற்ற எங்கள் எருது அக்கா வாழ்க!

Porkodi (பொற்கொடி) said...

//உங்களுக்கு மூப்பு பெறும் விருதுதானே வழங்கணும்//
அது உங்களுக்கு தான் இன்னும் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்

ஹிஹிஹி.. ஹைய்யோ ஹைய்யோ பாஸ் ஏன் பாஸ் இப்புடி? :)

வெங்கட் நாகராஜ் said...

விருதுகள் பெற்றமைக்கும் அதைப் பகிர்ந்து அளித்த நல்லிதயத்திற்கும் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

தக்குடுபாண்டி said...

////தாங்ஸ்...இட்லி மாமி//
புவனா Aunty யோட புது பேரு நல்லா இருக்கே//

நம்ப Boston நாட்டாமையை நான் வழிமொழிகிறேன். ...:)

என்றும் வம்புடன்,
தக்குடு

Pepe444 said...

GREAT BLOG MY FRIEND :) VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/

tamil blog said...

visit my blog &fllow please http://thenral2010.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - நன்றிங்க வானதி.... (உள்குத்து ஒண்ணும் இல்லியே...சாக்கிரதயாத்தான் இருக்கோனுமப்பு....)

@ LK - .//எனவே நீங்கள் கொடுத்த விளக்கம் நிராகரிக்கப் படுகிறது//
இன்னிக்கி நைட் தூங்கறப்ப சாமி ரம்யா கிருஷ்ணன் costume ல வந்து கண்ணை குத்தும் பாரு (ஹி ஹி ஹி... போன வாரம் கோவா படம் பாத்த எபக்ட் இன்னும் போகல...ஹா ஹா ஹா)

@ goma - நன்றிங்க கோமா

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி -
//விருது பெற்ற எங்கள் எருது அக்கா வாழ்க!//
நான் வெள்ளிக்கிழமை யாரையும் திட்ரதில்ல... me going friday....me back saturday... u thitting...

//ஹிஹிஹி.. ஹைய்யோ ஹைய்யோ பாஸ் ஏன் பாஸ் இப்புடி? :) //
இந்த சப்போர்ட்க்குகாக விட்டுடலாம்...ஹி ஹி ஹி

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

@ புதுகை தென்றல் - நன்றிங்க

@ தக்குடு - //நம்ப Boston நாட்டாமையை நான் வழிமொழிகிறேன். ...:)//
என்னிக்கி இருந்தாலும் அக்காக்கள் தயவு வேணும் பிரதர்... மறந்துடாதே... ஹும்....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதைகள் அனைத்தும் அருமை . விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

vgr said...

Congratulations.....and celebration.....
la la la.....

Guna said...

Congrats nga....Keep going

And thanks....enakkum Virudhu koduthrukkingale, athukkagavathu naan yethavathu post poda try pannren.

goma said...

வருது வருது ,
விருது விருது.....

siva said...

hi
hi
hi

mookai akka puvanaviruku
valthukkal.

LK said...

/இன்னிக்கி நைட் தூங்கறப்ப சாமி ரம்யா கிருஷ்ணன் costume ல வந்து கண்ணை குத்தும் பாரு/

nalla toonginen entha disturbum illama

ஹேமா said...

நன்றி நன்றி நன்றி தங்கமணி.
எனக்குமா !எல்லாமா !

கவிதைகள் அற்புதம்.
உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்து தோழி.

அப்பாவி தங்கமணி said...

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - ரெம்ப நன்றிங்க சங்கர்

@ vgr - தேங்க்ஸ் vgr

@ Guna - நன்றிங்க குணா.... வாவ்... சீக்கரம் பதிவு போடுங்க... waiting ....

@ goma - வருது வருது... விருது விருது... தேங்க்ஸ் கோமா

அப்பாவி தங்கமணி said...

@ siva - அடப்பாவமே... சரி... நன்றிங்கோ....

@ LK - சாமி கொஞ்சம் பிஸி... உன்னை போல நெறையா பேரை கவனிக்க போனதுல... வெயிட் வெயிட். .... சீக்கரம் வரும்...

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

Post a Comment