Monday, June 21, 2010

ஈ அடிச்சான் காப்பி...
 மேல போட்டோஸ் பாத்துட்டு ரெம்ப டென்ஷன் ஆகிட்டீங்களோ... ஹி ஹி ஹி...கூல்.... கூல்...

தலைப்ப பாத்துட்டு... "இவ என்ன பிராடுத்தனம் பண்ணினா"ன்னு ஆவலாக பார்க்க வந்துள்ள இனிய தமிழ் மக்களே.... எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே.... (அரசியல்ல கிரசியல்ல குதிச்சுட்டாளோ ஓவர் நைட்ல... நடந்தாலும் ஆச்சிர்யமில்ல... இப்பவெல்லாம் அதானே பேஷன் - mindvoice )

ஹி ஹி ஹி.... நீங்க நெனைக்கற மாதிரி இங்க ஒண்ணும் என்னை வம்பிழுக்க மேட்டர் தேறாது... (நாங்களும் உசாராய்ட்டமல்ல....ஹா ஹா அஹ)

சரி சரி... அதுக்காக கோவிச்சுட்டு போகாதீங்க... இருங்க வேற ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கு

ஆனா ஒண்ணு.... இதை படிச்சுட்டு..............

"வேற பொழப்பே இல்லையா"

"வெட்டி ஆபிசர்னு தெரியுது"

"இதுவும் ஒரு பொழப்பு"

"இப்படியுமா போஸ்ட் தேத்தனும்....(sensored )"

"வேண்டாம்... எதாச்சும் சொல்லிருவேன்"

"நல்லாதானே இருந்த"

"காலைல உன்னோட இட்லி சாப்டியோ"

இன்னும் இது போன்ற என்னோட இமேஜை குலைக்கும் கருத்துகளுக்கு அனுமதி லேது....

அதையும் மீறி போட்டால்... அப்புறம் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.... (வேற என்ன? இட்லி பார்சல் வரும்... ஒகேவா....?)

(பில்ட் அப் போதும் சொல்லித்தொலை - mindvoice )

என்கிட்ட ஒரு கெட்ட பழக்கமுங்க (ஒண்ணு தானா - mindvoice )

அது என்னனா... யாரையாச்சும் புதுசா மீட் பண்ணினா இவங்க நாம இதுவரைக்கும் மீட் பண்ணின யார் மாதிரியாச்சும் இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே இருப்பேன்... இதுக்கு மீடியா ஸ்டார்கள் கூட விதி விலக்கு இல்ல

இப்படி தான் கொஞ்ச நாளைக்கி முன்னாடி நாங்க ஒரு இங்கிலீஷ் படம் பாத்துட்டு இருந்தோம்...(pearl harbour னு ஞாபகம்...not very sure though )

அதுல Alec Baldwin னு ஒரு நடிகர், சொன்னா நம்ப மாடீங்கன்னு தெரியும்... அதான் இங்க போட்டோ போட்டு இருக்கேன்... அப்படியே அசப்புல நம்ம பழைய நடிகர் "ஜெய்சங்கர்" மாதிரியே இல்ல...

உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க... ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சுட்டேன்.... மிச்சம் அஞ்சு பேரை உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.... 
 
Alec Baldwin                Jaisankar  

எனக்கு உடனே இதை யாராச்சும்கிட்ட சொல்லலைனா மண்டை வெடிச்சுடும்னு தோண கிண்டல் அடிப்பார்னு தெரிஞ்சே ரங்க்ஸ் கிட்ட சொன்னேன் "படத்த பாக்க சொன்னா என்ன ஆராய்ச்சியோ...  கஷ்டம் கஷ்டம்" னு தலைல அடிச்சுட்டாலும்

"நீ சொன்னப்புறம் எனக்கும் கூட அப்படி தான் தோணுது" அவரே ஒத்துகிட்டார் (இது தான் சேருவார் சேர்க்கையோ...என்னமோ போங்க) 

இந்த மாதிரியான ஸ்பெஷல் observation பவர் பத்தி எல்லாம் எப்போ தான் புரிஞ்சுக்க போகுதோ இந்த உலகம்... சரி விடுங்க...

இதே போல இன்னும் ஒண்ணு ரெண்டு வெச்சு இருக்கேன்... ஆனா ஒரு நாளைக்கி ஒரு அளவுக்கு மேல அடி தாங்கமாட்டா இந்த தங்கமணி.... so அது கொஞ்ச நாள் கழிச்சு காயம் எல்லாம் ஆறினப்புறம்  பார்ட் 2 வா போடறேன்... வர்ட்டா..... (வராத...தொல - mindvoice அழுதுகொண்டே....)

Reminder : இமேஜ்-கமெண்ட்-விபரீதம்-இட்லி-ஒகே......ஒகே
(ஹி ஹி ஹி... ஜேம்ஸ் பாண்ட் படத்துல எல்லாம் இப்படி தான் hint language ல பேசிப்பாங்களாம்... தெரிஞ்சவங்க சொன்னாங்க...)
 
Tata.... bye bye.... see you...................

81 பேரு சொல்லி இருக்காக:

ப்ரியமுடன்...வசந்த் said...

:))

சேர்க்கை சரியில்லை வெறென்னத்த சொல்ல?

நசரேயன் said...

//ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…
:))

சேர்க்கை சரியில்லை வெறென்னத்த சொல்ல?
//

ஆமா .. ஆமா

Sangkavi said...

:))

அனாமிகா துவாரகன் said...

"வேற பொழப்பே இல்லையா"

அனாமிகா துவாரகன் said...

"வெட்டி ஆபிசர்னு தெரியுது"

அனாமிகா துவாரகன் said...

"இதுவும் ஒரு பொழப்பு"

அனாமிகா துவாரகன் said...

"இப்படியுமா போஸ்ட் தேத்தனும்....(sensored )"

அனாமிகா துவாரகன் said...

"வேண்டாம்... எதாச்சும் சொல்லிருவேன்"

அனாமிகா துவாரகன் said...

"நல்லாதானே இருந்த"

அனாமிகா துவாரகன் said...

"காலைல உன்னோட இட்லி சாப்டியோ"

அனாமிகா துவாரகன் said...

இப்டி மொக்க (??!!??) போடறப்போ இப்படியே கொம்ன்ட்சும் எழுதினா கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ண நமக்கு ஈசியா இருக்கும் பாருங்க. இல்லேன்னா என்ன கொமன்ட் போடலாம்னு நான் தலையை பிச்சுக்கணும். தாங்க்ஸ்சு புவ்வ்வ்வ்வ்ன்ன்ன்ன்ன்னாக்கா.

(புவ்வ்வ்வ்வ்ன்ன்ன்ன்ன்னா-ல எத்தனை வ் அன்ட் எத்தனை ன் இருக்குன்னு என்னைக்காவது எண்ணி இருக்கீங்களா? வெட்டியாத் தான இருக்கீங்க. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா)

ஸ்ரீராம். said...

உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க... ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சுட்டேன்.... மிச்சம் அஞ்சு பேரை உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க."//

ப்ளீஸ் அதையும் நீங்களே தெரிஞ்சிண்டு வந்து ஒரு போஸ்ட் போட்டுடுங்க...வந்து படிச்சிடறோம்...

LK said...

/உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க//
அப்ப உன்ன மாதிரி இன்னும் ஆறு பேரு இருக்காங்களா ??? அட கொடுமையே

LK said...

நாளை கதையின் அடுத்த பாகம் வாராவிட்டால் உங்கள் வலைபூ கடத்தப் படும்

sriram said...

அம்மா தாயே / அப்பாவி Aunty / இட்லி மாமி...
நாங்க என்ன பாவம் பண்ணோம்!!!! Fellow Blogger ஆக இருப்பதும் உங்க பக்கத்தை படிக்கறதும் பாவச்செயலா??? எங்களுக்கு ஏன் இப்படி ஒரு கருட புராண தண்டனை???? பாத்து செய்யுங்க - நாங்கல்லாம் பாவம்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

டம்பி மேவீ said...

உங்க ஆராய்ச்சி திறமைக்கு NASA வுல வேலை கிடைக்க போகுது பாருங்க .... இதை தான் பின்நவீன சிந்தனைன்னு சொல்லுவாங்க.

சத்யமா முடியல

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க இடுகைய விட உங்கள ஓட்டி வர்ற பின்னூட்டத்தப் படிச்சுத் தான் அதிகமா சிரிப்பு வருது..

அபி அப்பா said...

எல்க்கே சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு. என்ன கொடுமை ஒரு அப்பாவி தங்கமணிக்கே தாங்க முடியலையே? இன்னும் ஆறு பேர் கண்டிப்பா இருப்பாங்களா?

இருந்துட்டு போகட்டும் ஆனா ஒரு கண்டிஷன் ஆனா அவங்க யாரும் பிளாக் எழுத கூடாதுன்னு மட்டும் ஒரு வரம் தா ஆண்டவா:-)))

சி. கருணாகரசு said...

பதிவு மிக அருமைங்க.
மிகவும் ரசித்தேனுங்க...
தொடர்ந்து இப்படியே எழுதுங்க.....

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்க வேண்டியதுதான்...இல்லன்னா இட்லி அனுப்புவிங்க இது தேவையா?

சி. கருணாகரசு said...

சேர்க்கை சரியில்லை வெறென்னத்த சொல்ல?//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னிங்க.

அமைதிச்சாரல் said...

///உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க//
அப்ப உன்ன மாதிரி இன்னும் ஆறு பேரு இருக்காங்களா ??? அட கொடுமையே//

ஆயிரம்தடவை ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு.(மைண்ட்வாய்ஸ்- அதான் எல்லா பின்னூட்டத்தையும் அவங்களே போட்டுட்டாங்களே.. சேர்க்கை சரியில்லைங்கிறது உட்பட.. அப்றம் நாங்க என்னத்தை போடறதாம்)

ராமலக்ஷ்மி said...

:))!

நியோ said...

LK சார் யாரோ ஒரு பழைய நடிகர் மாதிரி இருக்கார்னு பட்சி சொல்லுது தங்கமணி தோழர் ....

பத்மநாபன் said...

அம்முணி எப்படியெல்லாம் பதிவ தேத்தறிங்க...நாங்களும் விடமாட்டம்மல்ல...

அந்த வெள்ளக்காரர், ஜெய்சங்கர் மாதிரி தான் இருக்காரு...

VELAN said...

Ennatha solla.. Nallaa Varuveenga.

ஜெய்லானி said...

///உலகத்துல ஏழு பேரு ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்லுவாங்க//

இட்லி மாமி, எனக்கும் இதே மாதிரி நடந்திருக்கு ஒன்னு துபாய் ஏர்போர்ட் , இன்னொன்னு கொழும்பு ஏர்போர்டில..... ஏழு தெரியாது ஒரு வேளை ஒன்னு ரெண்டு இருக்கலாம்

ஜெய்லானி said...

இட்லி தவிர இன்னும் எத்தனை வித ஆராய்ச்சி உங்க பரிசீலனையில் இருக்கு ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அனாமிகா துவாரகன் said...

//எல்க்கே சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு. என்ன கொடுமை ஒரு அப்பாவி தங்கமணிக்கே தாங்க முடியலையே? இன்னும் ஆறு பேர் கண்டிப்பா இருப்பாங்களா?

இருந்துட்டு போகட்டும் ஆனா ஒரு கண்டிஷன் ஆனா அவங்க யாரும் பிளாக் எழுத கூடாதுன்னு மட்டும் ஒரு வரம் தா ஆண்டவா:-))) //

ரிப்பீட்டு

SenthilMohan K Appaji said...

ஆமா.. நீங்க ஏன் சொந்தமாவே அடிக்கடி சூனியம் வெச்சுக்குறீங்க...?
இட்லிக்கு மாவு நீங்க ready பண்றீங்களா? இல்ல கடைல வாங்குறீங்களா? ஏன்னா கடைல வாங்குறதுனா மட்டும் இட்லி பார்சல் அனுப்புங்க. own preparation-na வேணாம். அப்புறம் உங்க வீட்ல இட்லிக்கு இப்டித்தான் மாவு ready பண்றாங்களோன்னு நான் நினைக்க வேண்டியிருக்கும் பாருங்க. அதான்.
அப்புறம், சும்மனாச்சுக்கும் ஒன்னு இல்லீங். ரெண்டு Blog வெச்சிருக்கேனாக்கும். நான் கோயமுத்தூரு இல்லீங்க்கா. பக்கத்துல Gobi-ங்க. நான் உங்கள விட சின்ன பையந்தானுங். மருவாதி கொடுத்து பெரிய ஆளாக்கீறாதீங்.

sandhya said...

"நீ சொன்னப்புறம் எனக்கும் கூட அப்படி தான் தோணுது" அவரே ஒத்துகிட்டார் (இது தான் சேருவார் சேர்க்கையோ...என்னமோ போங்க) "
சரியான ஜோடி தான் .
பார்ட் 2 எப்போ ?
அதே கண்கள் மீதி கதை எழுதற ஐடியா இல்லையா ?

Jaleela Kamal said...

வெட்டி ஆபிஸரா?

ஆஜர் ஆஜர் ஆஜர்

My days(Gops) said...

ஆஜர் ஆஜர் ஆஜர்

eppadinga ipadi elaam? comment sollanum nu aasai ah thaan iruku.. but u see, u no see no problem, but only problem ur idly.. so me escape ffrom ur idly.. tata bye bye

அஹமது இர்ஷாத் said...

இந்த மாதிரி ஃபோட்டோ நான் கேள்விப் பட்டதே இல்லீங்க... போங்க ரொம்ப குசும்பு உங்களுக்கு... அப்பாவிக்கு பதில் இனி அலப்பறைதான் பொருத்தம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

LK said...

அலப்பறை supperrrr

Karthick Chidambaram said...

ஆமா தங்கமணி - நீங்க யார் மாதிரி இருக்கீங்கன்னு ஆராய்ச்சி எதுவும் பண்ணலையா ? எந்த நாட்டோட அதிபராவது உங்கள மாதிரி இருக்க போறாங்க

VELU.G said...

//
"வேற பொழப்பே இல்லையா"
"வெட்டி ஆபிசர்னு தெரியுது"
"இதுவும் ஒரு பொழப்பு"
"இப்படியுமா போஸ்ட் தேத்தனும்....(sensored )"
"வேண்டாம்... எதாச்சும் சொல்லிருவேன்"
"நல்லாதானே இருந்த"
"காலைல உன்னோட இட்லி சாப்டியோ"
//

இப்படியெல்லாம் சொல்லமாட்டேன் போதுங்களா

தக்குடுபாண்டி said...

Hello Idly mami, yyyyyyyy this kolai veri??? kanna pinna repeatuuuu for 'minnal'anamika's comments....;))

asiya omar said...

எபபடிங்க இப்படி?

தமிழ் வெங்கட் said...

அக்கா இரண்டு இட்லி அனுப்புங்க...

Malar Gandhi said...

Ha ha, no worries you are not alone there:)

Me too think of many English movies' if who plays the same role in Tamil, could be a good hit, not that they are not copying...its happening anyway. But there is some striking contrasts you know...Which actor looks like whom. Here you go...few to name

Al pacino - Kamal Hassan
Drew Barrymore - Jothika
Jodi Foster - Shabana Asmi
Angelina jolie - Simran
Samuel jackson - vijayakanth

hehe:)

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியமுடன்...வசந்த் - ஹி ஹி ஹி... என்ன சார் இப்படி சொல்லிடீங்க.... உங்கள நீங்களே எப்படி திட்டிகறது நல்லாவா இருக்கு?

@ நசரேயன் - நீங்களுமா பாஸ்? ஹையோ ஹையோ

@ Sangkavi - ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - காப்பி காப்பி காப்பி...நான் எழுதனதே காப்பி அடிக்கற நீ... சொந்தமா யோசிச்சு எழுது கண்ணு....//வெட்டியாத் தான இருக்கீங்க//னு சொல்லி என்னை அழ வெச்சுட்டே இல்ல... இரு இரு உலகத்துல உன்னை மாதிரி கொடுமையா இன்னும் ஆறு பேரு யாருன்னு கண்டு பிடிச்சு சொல்றேன்... (ஹா ஹா அஹ)

@ ஸ்ரீராம் - தேங்க்ஸ் ஸ்ரீராம்.... நீங்க தான் என்னோட திறமைய புரிஞ்சு பேசறீங்க... ஐ லைக் இட்...

@ LK - படுபாவி.... ஏன் என் வியாபாரத்த கெடுக்கற? உன்னை மாதிரி ஆறு பேரு இருக்கறப்ப என்னை மாதிரி ஆறு பேரை இந்த பூமி நிச்சியம் தாங்கும்....ஹி ஹி ஹி

@ LK - ஐயோ.... கடத்தவெல்லாம் வேண்டாம்... போட்டுடறேன்... (வில்லன் பேரு கார்த்திக்னு வெக்கறேன் இரு....)

அப்பாவி தங்கமணி said...

@ sriram - பாஸ்.... நீங்கெல்லாம் எப்படி பேசலாமா பாஸ்? உங்கள பாத்து தானே நாங்க இதெல்லாம் கத்துக்கறோம்... கழக கண்மணிகளே அலைகடலென திரண்டு வாருங்கள்... என்னை காப்பாற்றுங்கள்...

@ டம்பி மேவீ - சூப்பர் சூப்பர் ...இப்படி தான் இருக்கணும்... ஐ லைக் "பின்நவீன சிந்தனை" (சரி...அது எந்த கடைல கெடைக்கும்...நோ டென்ஷன் நோ டென்ஷன் ....)

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..- முதல் வருகைக்கு நன்றிங்க. ஆனாலும் இப்படி வாருறீங்களே ஞாயமா இது ஞாயமா? ஹும்..... (இப்போ கமெண்ட் போட்ட எல்லாருக்கும் குளுகுளுனு இருக்குமே....)

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - ஆஹா... உங்களையும் corrupt பண்ணிட்டாங்களே இந்த கூட்டம்... நீங்க என் பக்கம் தானே.... சரிங்க உங்க வரத்தை ஆண்டவனுக்கு forward பண்ணிடறேன் (ஹி ஹி ஹி)

@ சி. கருணாகரசு - அந்த பயம்... இட்லி பயம் எப்பவும் இருக்கணும்.... வெரி நைஸ்... சூப்பர்..... என்னது திருவாசகமா... என்ன சார் அதுக்குள்ள வாருறீங்க? ஹும்....

@ அமைதிச்சாரல் - //ஆயிரம்தடவை ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு// வாட் வாட் வாட்? இனிமே நோ repeats allowed ஒகே.... ஒகே... (அது நான் சொல்லல mindvoice சொன்னதுக்கு கம்பெனி பொறுப்பில்ல சிஸ்டர்...ஹி ஹி ஹி)

@ ராமலக்ஷ்மி - இது தான் சூப்பர் அப்படின்னு சொல்றீங்க தானே... தேங்க்ஸ் ராமலக்ஷ்மி

அப்பாவி தங்கமணி said...

@ நியோ - நியோ...சூப்பர் சூப்பர் சூப்பர்... அவர் யாரு மாதிரின்னு நான் சபைல எல்லாம் சொல்ல மாட்டேன்பா...எனக்கு எதுக்கு வம்பு... (ஹா ஹா ஹா )

@ பத்மநாபன் - இப்படி தானுங்க பதிவு தேத்தோணும்... (ஹி ஹி ஹி). அது தான் கரெக்ட்....

@ VELAN - நன்றிங்க வேலன்... முதல் வருகைக்கி நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - பாத்தீங்களா பாத்தீங்களா.... இவங்களும் அதே மாதிரி யோசிச்சு இருக்காங்க (அப்பாடா நாம தனியா இல்ல...ஹி ஹி ஹி)

@ ஜெய்லானி - //இட்லி தவிர இன்னும் எத்தனை வித ஆராய்ச்சி உங்க பரிசீலனையில் இருக்கு?//
அது கணக்கே இல்லிங்க... நெறைய ஆராய்ச்சி நடந்துட்டே இருக்கு.... அப்ப அப்ப இந்த மாதிரி results ரிலீஸ் பண்ணுவேன்... ஒகேவா... (கேப்பீங்க இனிமே? ஹா ஹா அஹ)

@ அனாமிகா - என்னத்த repeat இப்போ... உன்னை... இரு இரு.... வெயிட் அண்ட் சி

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan K Appaji - செந்தில்ஜி.... அது சூனியம் எல்லாம் இல்ல... self - realization யு நோ.... இட்லி வேண்டாமா... ஐயோ இப்படி சொன்னா எப்படி....? உங்கள எல்லாம் நம்பி நூத்து கணக்குல இட்லி செஞ்சு வெச்சு இருக்கேனே... சரி சரி விடுங்க... ஓ... பக்கத்துக்கு ஊரா? சரி சரி
(ஆளாளுக்கு சின்ன சின்ன பயந்தான்னா...எனக்கு என்னங்க அறுபதா ஆச்சு... ஒரு வேளை நம்ம எழுத்து அவ்ளோ முதிர்ச்சியா இருக்கோ...இருக்கட்டும் இருக்கட்டும்....ஹி ஹி ஹி)

@ sandhya - ஆமாங்க சூப்பர் தான்... பார்ட் 2 சீக்கரம் போட்டுடறேன்... கதை எழுதிட்டே இருக்கேன்... சீக்கரம் போட்டுடறேன்...தேங்க்ஸ் சந்த்யா

@ Jaleela Kamal - ஹே ஹே ஹே....தேங்க்ஸ் ஜலீலா...

@ My days(Gops) - குட் குட் குட் .....குட்..... இது சூப்பர் ....

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - அலப்பறையா... ஆஹா... நமக்கு பட்டங்கள் சேந்துட்டே போகுதே.... ரங்க்ஸ் கிட்ட சொல்லி ஒரு தனி showcase வாங்க சொல்லணும் இதை எல்லாம் frame பண்ணி வெக்க

@ முத்துலெட்சுமி/muthuletchumi - எனக்கு தெரியும்...சூப்பர்னு சொல்றீங்கன்னு... சூப்பர்...தேங்க்ஸ்

@ LK - அதானே... இன்னும் சொல்லலியேனு பாத்தேன்... ஏன்பா ஏன்? (ஹி ஹி ஹி )

@ Karthick Chidambaram - குட் கொஸ்டின்.... ஆராய்ச்சி நடந்துட்டே இருக்கு... சீக்ரம் சொல்றேன்ங்க.... இன்னொரு மொக்க போஸ்ட்க்கு ஐடியா குடுத்ததுக்கு தேங்க்ஸ்ங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ VELU.G - தேங்க்ஸ்ங்க வேலு (ஆஹா... வர வர எல்லாரும் ரெம்ப தெளிவா இருக்காங்களே...)

@ தக்குடுபாண்டி - வாங்க பாஸ்... இனிமே எனக்கு ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "repeat " தான் ... ஆமா... சொல்லிட்டேன்....

@ asiya omar - அப்படியே தாங்க ஆசியா.. ஹி ஹி ஹி

@ தமிழ் வெங்கட் - அட...நீங்க ரெம்ப நல்லவங்க போல இருக்கே... இதோ இப்பவே... ரெண்டு என்ன? இருபது இட்லி அனுப்பிடறேன்... (ஹா ஹா அஹ )

அப்பாவி தங்கமணி said...

@ Malar Gandhi - தேங்க்ஸ் மலர்... நீங்க தான் சூப்பர்.... இதை நீங்க எனக்கு தனியா ஈமெயில்ல அனுப்பி இருந்தா இன்னும் அஞ்சு போஸ்ட் போட்டு எல்லாரையும் கொடுமை படுத்தி இருக்கலாம்... ஜஸ்ட் missed (just kidding)
(You know Drew Barrymore was on my list too ....ha ha ha)

அநன்யா மஹாதேவன் said...

யா................ய்! (அரிவாளுடன் நான் ஓடி வந்திண்டு இருக்கேன் ஸ்லோ மோஷன்ல)
அலெக் பால்டுவின்?????
ஜெய்ஷங்கர்???? பேத்தலா தின்க் பண்றதுக்கு ஒரு அளவு வேண்டாம்? க்ர்ர்ர்! இதுக்கு பத்து அங்கிள் வேற ஜால்ரா? அந்த வெள்ளைக்கார துரை ஜெய்சங்கர் மாதிரியே இருக்காறாம்! உஸ்ஸ்ஸ்ஸ் ..
கோயம்பத்தூர்ன்னா இப்பிடியெல்லாமா எது சொன்னாலும் சப்போர்ட்டுவாங்க? அநியாயமான்னா இருக்கு?

புவனா ப்ரூஃப் டாஷ்போர்டு எப்போ கிடைக்கும்ன்னு தெரியலையே! யம்மா.. முடியலை!

நீயும் உங்கூட்டுக்காரரும் நேரா ஒரு ஆப்தமாலஜிஸ்டை போய் பாருங்க. அர்ஜெண்டு..

அடுத்து சொல்லுவா, மைக்கல் ஜாக்ஸனை பார்த்தா எனக்கென்னமோ நம்ம தயிர்வடை தேசிகன் மாதிரியே இருக்குன்னு.. ஒரு 60 பேர் வேலை மெனக்கெட்டு இங்கே உக்காந்து பின்னூட்டம்
போடுவோம்..

போ..போ.. போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைய்யி.. கப்பித்தனமா பேசிகிட்டு!

(ஜோக்ஸ் அபார்டு(நீ அடிக்கடி இந்த டயலாக்கை இப்போ எல்லாம் யூஸ் பண்றே, அதான் ஹீஹீ) இந்த பதிவு நிஜம்மாவே என்னை வயிறு குலுங்க சிரிக்க வைச்சது. கமெண்டுக்கள் அதை விட். முக்கியமா பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா.. சூப்பர்.
:))

அனாமிகா துவாரகன் said...

@ Malar Gandhi,
Does Kamal look like Al Pacino? அவ்வ்வ்வ்வ்வ். Al Pacino is 100 times better looking than Kamal.

@ அநன்யாக்கா,
சிங்கம் படம் ட்ரெய்லர் பாத்த இஃபெக்ட் (அருவாளோட ஓடறது). உங்க விமர்சனம் தான் பெஸ்ட்டு.

அனாமிகா துவாரகன் said...

Sorry. Its not விமர்சனம்; its Comment

Mahi said...

ஹஹ்ஹா..ஹ்ஹா..ஹா! புவனா,உங்க பதிவைப் படிக்க ரெண்டு நிமிஷம் தான் ஆகுது,ஆனா இந்த 'இத்தனை பேரு சொல்லீருக்காக"வப் படிச்சு முடிக்க ரெண்டு மணி நேரமாகுதே!!!??!! எ.கொ.பு.இ?

பின்னே,ஒரொரு கமெண்ட்டையும் படிச்சு,கொஞ்ச நேரம் சிரிச்சு,அப்புறம் படிச்சு,சிரிச்சு,படிச்சு,சிரிச்சு,அப்புறம் படிச்சு,சிரிச்சு,படிச்சு,சிரிச்சு,அப்புறம் படிச்சு,சிரிச்சு,படிச்சு,சிரிச்சு,அப்புறம் படிச்சு,சிரிச்சு,படிச்சு,சிரிச்சு.......

அப்பப்பா..செம காமெடி போங்க! 'அலப்பறை தங்கமணி.ப்ளாக்ஸ்பாட்.காம்'-ஹெடிங் அவய்லபிள்தானாம்..சீக்கிரமா மாத்திருங்கோ..இல்லைன்னா நாங்களே மாத்திடுவோம்.:):):):)

அநன்யா மஹாதேவன் said...

அலப்பறை தங்கமணி.. ஆஹா.. ஆஹா.. மஹி! தெய்வமே.. தெய்ய்ய்ய்ய்ய்வமே! சூப்பர் டைட்டில்..

டொக் டொக். மைக் டெஷ்டிங் 123....
அலோ அலோ..
க்கும்..
பெரியோர்களே தாய்மார்களே,
இன்றுமுதல் நம்ம அப்பாவி தங்கமணி, அலப்பறை தங்கமணின்னு எல்லோராலும் அன்புடன் வழங்கப்பெறுவார்.

கோஷம்:

அலப்பறை தங்கமணி வாழ்க
அலப்பறை தங்கமணி வாழ்க
அலப்பறை தங்கமணி வாழ்க

அநன்யா மஹாதேவன் said...

டியர் அனாமிகா
டாங்கூ...

ஹேமா said...

தங்கமணி மனசைத் தேத்திக்கோங்க.
எல்லாரும் திட்டுறாங்க உங்களை.
நான் மட்டும் இல்லப்பா.
ஜெய்சங்கர் படம் அழகாத்தான் இருக்கு !

ஹுஸைனம்மா said...

என்னோட போன பதிவுல ஒண்ணுரெண்டு பேர் ”மேட்டர் இல்லன்னா இப்படியும் பதிவு போடலாமோ?”ன்னு கேட்டு என்னை டேமேஜ் பண்ணிருந்தாங்க. அவங்ககிட்ட இந்தப் பதிவப் பாக்கச் சொல்லணும்!! ;-))))

எப்படிங்க இப்படி? ஆஃபிஸ்லயே ரூம் போட்டு ஓசிப்பீங்களோ?

:-))))))

அபி அப்பா said...

ஹே ஹே ;-)) ஹூசைன் அம்மா! நாங்க ஒரு நாலு எழுத்து "test" ்னு போட்டு பல விவாத பின்னூட்டம் பார்த்தவங்கப்பா! (கீதாம்மா ..... கமான் கமான்)

அந்த லிங் எங்கப்பா. என்ன? அங்க பின்னூட்டம் போட்ட பெரிய ஆளுங்க இப்ப அடக்கி வாசிக்கிறாங்க:-(

கீதா சாம்பசிவம் said...

நச், நச், நச், தலை எழுத்து! வேறே என்ன?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

புத்திசாலிங்க நீங்க! :P

kggouthaman said...

இந்தக் கமேண்டுக்குப் பக்கத்தில் என்னுடைய உருவம் இருக்கும். என்னைப்போல இருப்பவர்கள் இன்னும் ஆறு பேரில் யாரையாவது நீங்க பாத்திருந்தா அதையும் ஒரு பதிவாகப் போடவும்.
ஜெய்சங்கர் போல இருக்கார் அந்த ஆங்கில நடிகர் என்று நீங்க சொல்வது சரியே. ஜெய்சங்கர் போல இருந்த இன்னொரு நடிகர், அந்தக் காலத்தில் யாதோங்கி பாரத் படத்தில் தர்மேந்திராவின் தம்பி பாத்திரத்தில் பார்த்த ஞாபகம்

சுசி said...

//யாரையாச்சும் புதுசா மீட் பண்ணினா இவங்க நாம இதுவரைக்கும் மீட் பண்ணின யார் மாதிரியாச்சும் இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே இருப்பேன்... இதுக்கு மீடியா ஸ்டார்கள் கூட விதி விலக்கு இல்ல//
சேம் ப்ளட்டு புவனா..

எதோ ஒரு சாயல் கண்டிப்பா இருக்கும்..

//இந்த மாதிரியான ஸ்பெஷல் observation பவர் பத்தி எல்லாம் எப்போ தான் புரிஞ்சுக்க போகுதோ இந்த உலகம்...//
இப்டித்தான் நானும் நினைச்சுப்பேன்..

பார்ட் டூ பாத்துட்டு நான் என்னத சொல்றேன்..

BalajiVenkat said...

///"நல்லாதானே இருந்த"

"காலைல உன்னோட இட்லி சாப்டியோ"/////

if u ate ur idly how u r able to write blog ... some thing wrong ... cbiku thagaval kodungapa...

@ATM CBI ya samalikira yuthiyum ungalaku theriyum... iruthalum .... :P

vgr said...

What's the history and geography behind the saying "ore mari ezhu peru"?? Curious to know.

Ama, neenga yaru sayal? sonna peyaruku uruvam koduka vasadiya irukum.

Karthick Chidambaram said...

நான் தொடர் எழுத ஆரம்பித்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்.
ஒரு அரவமில்லா காட்டில் ...
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com

தி. ரா. ச.(T.R.C.) said...

யாரை மாதிரி வேனா 7 பேர் இருகட்டும் அப்பாவி தங்கமணி மாதிரி 7 பேர் இருந்தா நினைச்சாலே கண்ணைக் கட்டுதே! இருந்தாலும் பதிவு எண்ணிக்கையை கூட்டனும்னு முடிவு பண்ணியாச்சு.ஜமாயுங்க. ஆமாம் படிச்ச அப்பரம் பார்த்தா நல்லா இருக்காமாதிரித்தான் இருக்கு

Harini Sree said...

aamam unga rangs a neenga muthal muthalaa paatha appavum ipdi thaan yosicheengalo??? appa neenga avara muzhusa paathu sammatham kudukkave illaya??? (innocent question :P)

அப்பாவி தங்கமணி said...

@ அனன்யா - கூல் மா கூல்.... ஊருக்கு போற நேரத்துல்ல எதுக்கு இந்த அருவா எல்லாம்.... பத்து அங்கிள் சரியாதான் சொன்னார் கேட்டியா.... optometrist opthomologist எல்லாம் வருசா வருஷம் பாக்கறது தான்.... எல்லாம் ஷேமமாவே இருக்கு கேட்டியா....

//மைக்கல் ஜாக்ஸனை பார்த்தா எனக்கென்னமோ நம்ம தயிர்வடை தேசிகன் மாதிரியே இருக்குன்னு//
இது தான் டாப்பு.... உன்ன மிஞ்ச ஆளே இல்ல இந்த லோகத்துல..

ஜோக்ஸ் அபார்டு (ஹி ஹி ஹி) - நீ பண்ற ரகளைல என்னோட ப்ளாக்க்கு TRP ரைடிங் எகிருதுன்னு சற்று முன் கிடைத்த தகவல் சொல்லுது... ஹி ஹி ஹி ஹா ஹா ஹா ஹையோ ஹையோ....

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஹலோ யாருங்க அது எங்க தலைவர (கமல்) பத்தி தப்பா பேசறது.... பொருத்தது போதும் பொங்கி எழுங்கள் கமல் ரசிகர்களே....

உனக்கு அனன்யா மேல எதுனா கோபம்னா பேசி தீத்து இருக்கலாம்.... இப்படி சிங்கம் படம் மாதிரினேல்லாம் சொல்லி இருக்க வேண்டாம்... ஹா ஹா ஹா

@ Mahi - ஹா ஹா ஹா ஹி ஹி ஹி....தேங்க்ஸ் மகி.... ஆமா ஆமா நல்லாத்தான் ஓட்றாங்க கமெண்ட்ல.... ஆஹா நீங்க நல்லவங்கன்னு நெனச்சனே;....என்னை அலபரைன்னு சொல்லிடீங்களே... இந்த அப்பாவியா பால் வடியும் முகத்த பாத்து எப்படி இப்படி சொல்ல முடிஞ்சுது மகி.....ஹும்

@ அனன்யா - என்னத்த சூப்பர் டைட்டில்ங்கற நீ.... நான் அலப்பரைனா நீ டபுள் அலப்பறை.... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - தேங்க்ஸ் ஹேமா....ஹேமா வாழ்க வாழ்க

@ ஹுஸைனம்மா - ஹி ஹி ஹி.... தொழில் ரகசியம் எல்லாம் நான் வெளிய சொல்றதில்ல...ஹி ஹி ஹி... தேங்க்ஸ்ங்க

@ அபி அப்பா - ஓஹோ.... அப்படி எல்லாம் இருக்கா? ஆஹா... நான் பரவா இல்ல அப்படினா.... (இது கூட நல்ல யோசனையா இருக்கே... ஹி ஹி ஹி...)

அப்பாவி தங்கமணி said...

@ கீதா சாம்பசிவம் - தேங்க்ஸ்ங்க மாமி... ஆஹா... ஆஹா... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே... ஹி ஹி ஹி...

@ kggouthaman - அடடா..... உருவம் தெரியலங்க..... என்னமோ block பண்ணிடுச்சு... அனுப்புங்க கண்டிப்பா பாத்து சொல்றேன்... ஹி ஹி ஹி...தேங்க்ஸ்ங்க

@ சுசி - ஆஹா.. நீங்களும் என்னை மாதிரி தானா சுசி.. குட் குட்.. ... சொல்லுங்க சொல்லுங்க

@ BalajiVenkat - அடப்பாவி... என்னோட ப்ளாக்ல போடற மொதல் கமெண்ட் கொஞ்சம் நல்லதா போட்டா என்னவாம்.... என்னோட இட்லி சாபிடாததால தான் இப்படி தெரியுமோ.....ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ஹிஸ்டரி geography எல்லாம் ஒண்ணும் இல்லிங்க vgr ..... நான் யாரு சாயலா? ஐஸ்வர்யா ராய் சாயல்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க..... எல்லாம் ஒரு மிடில் க்ளாஸ் மாதவி சாயல் தான் போங்க.... ஹி ஹி ஹி... தேங்க்ஸ்

@ Karthick Chidambaram - தேங்க்ஸ் கார்த்திக்.... கண்டிப்பா பாத்துட்டு சொல்றேன்... டைட்டில் செம மெரட்டலா இருக்கே பாஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ தி. ரா. ச.(T.R.C.) சார் - ஆஹா.... கண்ண கட்டுதா.... .ஹா ஹா ஹா... நல்லாத்தான் இருக்குனு சொல்றீங்களா.... நன்றி நன்றி நன்றி

@ Harini Sree - ஹி ஹி ஹி... அதெல்லாம் ரகசியம் ஹரிணி.... ஹி ஹி ஹி

Bala's Bits said...

My first comment and apologies for writing in English

You are not alone......
There used be a section in Mid-day or Mirror(I think) long ago called Separated at Birth. It used to have the same....two examples
Cricketer Narendra Hirwani - Singer Hariharan ( ofcourse when young)
Cricketer Vengsarkar - Telugu Actor Venkatesh.

You can check this out for more info
http://www.inmirror.com/separated-at-birth

You have a very good sense of humor. Keep writing !

அப்பாவி தங்கமணி said...

@ Bala's Bits - Oh wow... nice info Mr.Bala.... Thanks for sharing. Feels better to know I'm not alone... thanks again. Also, thanks for first visit to my blog

அனாமிகா துவாரகன் said...

ஒ கமல் உங்களுக்குப் பிடிக்குமா? Haiyo. என்ன கொடுமை இது. அந்த கிழவங்க விசிறியா நீங்க. கிழிஞ்சு போ. (மைன்ட் வொய்ஸ்: அக்காவை செலக்ட் பண்ணும் போது இனிமேலும் கவனமா இரு அனாமிகா) க்லூனின்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. கமலா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஆனாலும் Clooney மேல கொஞ்சம் கடுப்புக்கா எனக்கு. அவர் கேள் பிரண்டைப் பார்த்தப்புறம், அவருக்கு ரொம்ப பாட் டேஸ்ட்டுன்னு மட்டும் புரியறது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அனாமிகா துவாரகன் said...

Clooney ஐ யாராவது கிழவன்னு சொன்னா, நான் பொங்கி எழுந்திடுவேன். ஜாக்கிரதை.

vinu said...

summa sollakkoodathu nallavea idli vikkareenga

Mythili said...

very nice

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - என்னது யாரு கிழவன்.... வயசு நூறு ஆனாலும் அவர் தான் உலக நாயகன் கேட்டியா? (Clooney கேர்ள் friend பாத்து அவனே கடுப்பு ஆகலை... நீ ஏன்மா டென்ஷன் ஆகற ...ஹா ஹா ஹா)

@ Vinu - ஹி ஹி ஹி... இட்லி விக்கற மேட்டர் கண்டு பிடிச்சுட்டீங்களா.... ஹி ஹி ஹி

@ Mythili - தேங்க்ஸ் மைதிலி

Post a Comment