Wednesday, June 30, 2010

ஹாப்பி பர்த்டே டு மீ.... (ஹி ஹி ஹி)
ஹாப்பி பர்த்டே டு மீ....

ஹாப்பி பர்த்டே டு மீ....

ஹாப்பி பர்த்டே டு அப்பாவி....

ஹாப்பி பர்த்டே டு மீமீ மீமீ மீமீ மீமீ..................................

இருங்க இருங்க ஓடாதீங்க... ஒண்ணும் ஆகல எனக்கு... தெளிவா தான் இருக்கேன்...

நெஜமாவே எனக்கு ஹாப்பி பர்த்டே...எப்போவா? ஜூலை 3

(நீ பொறந்ததே கொடுமை இதுல அதுக்கு ஒரு போஸ்ட் வேறயா? - mindvoice )

"உன்னோட பர்த்டேக்கு நீயே பதிவு போட்டுகறியே...கஷ்டம் கஷ்டம்"னு யாரோ மண்டைல அடிச்சுக்கறாங்க.... நோ டென்ஷன் பாஸ் நோ டென்ஷன்...

இதுல என்ன தப்பு? நல்ல நாளும் அதுவுமா நாலு பேரு கிட்ட சொல்லி பெரியவங்கன்னா ஆசிர்வாதமும் சின்னவங்கன்னா வாழ்த்தும் வாங்கறது தானே முறை...

உடனே எல்லாரும் "வாழ்த்த வயதில்லை ...." அது இதுன்னு சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா... statistics என்ன சொல்லுது தெரியுமோ? மொத்தமா blog எழுதற மக்கள் தொகைல அஞ்சு சதவீதம் பேரு தான் என்னை விட சின்னவங்க... (என்னோட வயசு என்னவா? அஸ்கு புஸ்கு...சொல்ல மாட்டேன் போங்க...)

அந்த அஞ்சு சதவீதத்துல நம்ம மக்கள் ஒரு சதவீதம் தான்... மனசிலாயோ... ?

அதுல இந்த ப்ளாக்க்கு வர்றவங்க ஒரு நாலு அஞ்சு பேரு தான்னு எனக்கு நல்லாவே தெரியும் பாஸ்.... அதனால எல்லாரும் ஆசீர்வாதம் செஞ்சுட்டு போங்க... ஒகே.... (ஆசீர்வாதம் கூட மெரட்டி தான்பா வாங்க வேண்டி இருக்கு... ஹும்...) ஹி ஹி ஹி...

பிறந்தநாள் நினைவுகள் கொஞ்சம் இங்க உங்க கிட்ட பகிர்ந்துக்கணும் போல தோணுது....

இப்பவெல்லாம் பர்த்டே ஒரு பெரிய விசியமா தோன்றதில்லங்க... உடனே வயசானா அப்படிதான்னு சொல்லுவீங்கன்னு தெரியும்...

அப்படி இல்ல... நானே டிரஸ் வாங்கி... நானே ஸ்வீட் செஞ்சு நானே சாப்ட்டு... என்ன பர்த்டே போங்க...

இந்தியால தான் ரெம்ப குஷியா கொண்டாடின நாட்கள்னு எனக்கு தோணும்.. அப்போ பொறுப்பில்லாம சுத்திட்டு இருந்ததால அப்படி தோணுதோ என்னமோ... ஹி ஹி ஹி

(இப்ப ரெம்ப பொறுப்பா இருக்கறதா நெனப்போ... - mindvoice )

பர்த்டேக்கு டிரஸ் வாங்க போறதே செம அலட்டல் தான் ஸ்கூல் days ல எல்லாம்

எனக்கு ஜூலைல என் தங்கைக்கு ஆகஸ்ட்ல பிறந்த நாள்.... மறுபடி மறுபடி ஷாப்பிங் போனா ஓவர்ஆ பர்ஸ் காலி பண்ணிடுவோம்னு எங்க அப்பா ரெம்ப விவரமா (எங்க அப்பா ஆச்சே...) மே மாசம் ஸ்கூல் Uniform  வாங்க போறப்பவே ஸ்கூல் Uniform, ரெண்டு பேருக்கும் பர்த்டேக்கு டிரஸ் எல்லாம் வாங்கறது வழக்கம்

ஏப்ரல்ல annual எக்ஸாம் முடிஞ்ச நாளுல இருந்தே நச்சு நச்சுனு நச்ச ஆரம்பிச்சுடுவோம்...

மே மாசம் கோயம்புத்தூர் (காந்திபுரம்) டவுன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கிரௌண்ட்ல exhibition போட்டு இருப்பான்...எல்லாம் சேத்து பிளான் பண்ணிட்டு காலைல போனா நடு ராத்திரி தான் வீடு வந்து சேருவோம்

எங்க வீடு சிட்டிகுள்ள இல்ல, இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும்... அதனால என்னமோ திருவிழா போற முஸ்தீபுல தான் கெளம்புவோம்

காலைல எட்டு மணிக்கி கிளம்பினா மொதல்ல நேரா மருதமலை கோவில் போயிட்டு, அப்புறம் பத்தரை மணி ஷோ சினிமா பாத்துட்டு, லஞ்ச் பெரும்பாலும் கிராஸ் கட் ரோடுல இருக்கற அன்னபூர்ணா தான், அப்புறம் டிரஸ் வாங்கறது தான் செம காமெடி

என்னோட பாசமலர் இருக்கே... ரெம்ப நல்லவ மாதிரி "மொதல்ல புவனாவுக்கு வாங்கலாம்" னு சொல்லுவா...

கேக்கறதுக்கு ரெம்ப அக்கறை மாதிரி தானே தோணுது, வெயிட் வெயிட்... அதுல ஒரு மேட்டர் இருக்கு... என்னன்னா எனக்கு என்ன விலைக்கு வாங்கறோம்னு பாத்துட்டு அதை விட ஒரு பத்து ரூபாயாச்சும் மேடம் அதிகமா தான் அவங்களுக்கு டிரஸ் வாங்குவாங்க... இப்ப சொல்லுங்க... உலக மகா விவரம் தானே... ஹா ஹா ஹா...

சும்மாவா சொன்னாங்க "மூத்தது மோழை; இளையது காளை" னு...

நானும் பொழச்சு போனு விட்டுடுவேன்... நான் அப்பவே அப்பாவி தான் பாருங்க...

(எப்படி எல்லாம் பில்ட் அப் பண்றா - mindvoice )

ஒரு வாட்டி எனக்கு வாங்கின டிரஸ் விட அவளுக்கு பிடிச்ச டிரஸ் ஒரு இருபது ரூபாய் கம்மியா இருந்தது... அதை விடவும் மனசில்ல... என்னை விட கம்மியா இருக்கேன்னு வேற டென்ஷன்.

என்ன பண்ணினா தெரியுமா அந்த வாலு? வாங்கின டிரஸ்க்கு மேட்ச்ஆ நாலு kerchief வாங்கினா காசை சரி கட்டறதுக்கு....எங்க அம்மாவுக்கு "எத்தனை விவரம் பாரேன்" னு ஒரே பெருமை வேற

அப்போ செம கடுப்பா இருந்தது எனக்கு... இப்போ நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது

அதுவும் எனக்கு டிரஸ் வாங்கறதுக்கு மிஞ்சி போனா ஒரு அரைமணி நேரம் ஆகும்... அவளுக்கு மினிமம் நாலு மணி நேரம்... கடை கடையா ஏறி எங்க அப்பாவுக்கு B P எகிறி திட்ட ஆரம்பிச்சா தான் அப்புறம் ஒரு வழியா எடுப்பா...

அப்புறம் exhibition போய் Giant Wheel எல்லாம் நான் வேடிக்கை மட்டும் பாப்பேன்... சின்ன அம்மணி தான் அதெல்லாம் விளையாடிட்டு வரும்... நான் அப்பவே ரெம்ப பயந்த சுபாவம்... நம்புங்கப்பா...

(ஒண்ணும் சொல்றதுகில்ல - mindvoice )

நான் சிவனேன்னு டெல்லி அப்பளம், மொளகா பஜ்ஜி, பெரியயயய.......... பஞ்சு மிட்டாய் இப்படி item எல்லாம் உள்ள தள்ளிட்டு இருப்பேன்

அப்புறம் எல்லாரும் களைச்சு போய் பத்து பதினோரு மணி வாக்குல வீடு போய் சேருவோம்...

வந்ததும் அந்த அர்த்த ராத்திரிலேயே என்னோட உடன் பிறப்பு dress எல்லாம் போட்டு கண்ணாடி முன்னாடி அரை மணி நேரம் ரசிச்சு எல்லாரும் (தாத்தா பாட்டி உட்பட) "அருமையா இருக்கு" னு சொன்னா தான் தூங்க விடுவா

என்னை எங்க அம்மா "நீயும் போய் போட்டுட்டு வாயேண்டி" னு நச்சினாலும் "போம்மா... வேற வேலை இல்ல... அங்கேயே எல்லாம் போட்டு பாத்தாச்சு"னு போய் தூங்கிடுவேன்

பொதுவா எதுக்கு எடுத்தாலும் ரெண்டு பேரும் அடி தடி தான்... அதுலயும் மல்லிகை பூ வாங்கினா அதை ரெண்டா கட் பண்றதுக்குள்ள எங்க அம்மாவுக்கு பைத்தியம் பிடிக்காதது ஒண்ணு தான் மிச்சம்

மத்த விசியத்துல எல்லாம் ஒரு அளவுக்கு விட்டு குடுத்தாலும் இதுல நானும் பிடிவாதம் தான்... பூ னா அப்படி ஒரு இஷ்டம்... அதுக்கு தான் ஆண்டவன் வெச்சார் ஆப்பு....ஹும்... மல்லிகை பூவை கண்ணுல பாத்தே வருஷம் ரெண்டு ஆச்சு... சரி அதை விடுங்க

ஒரு பூ கூட எக்ஸ்ட்ராவா விட மாட்டோம்... "காவேரி தண்ணி பிரச்சனை கூட தீரும் இது தீராது" னு எங்க அம்மா டென்ஷன் ஆவாங்க

இப்பிடி எல்லாம் ரகளை பண்ணினாலும் என்னோட தங்கை பர்த்டே அன்னிக்கி நிஜமாவே பாசமலர் ஆய்டும்...

முந்தின நாளே பூக்காரி கிட்ட சொல்லி மொக்கு மொக்கா மல்லிகை பூ கொண்டு வரசொல்லி கோழிகொண்டைனு செவப்பா ஒரு பூ இருக்குமே அதையும் வாங்கி அவ கையாலையே மொத்த பூவும் எனக்கே செண்டு மாதிரி அழகா கோத்து குடுப்பா

எங்க அம்மா கேப்பாங்க "நீயும் கொஞ்சம் வெச்சுக்கோ" னு... "இல்ல இல்ல வேண்டாம்... இன்னிக்கி அந்த பிசாசுக்கு (!!!!!) தானே பர்த்டே. அவளே full ஆ வெக்கட்டும்"னு பாசமா சொல்லும்

பிசாசுன்னு சொல்றதெல்லாம் ஒரு பாசத்தின் வெளிப்பாடு மக்களே... அதை உடனே பில்ட் அப் பண்ணாதீங்க ஒகே...ஒகே...

அப்புறம் பர்த்டே அன்னிக்கி நேரத்துல எந்திரிச்சு குளிச்சு புது டிரஸ் எல்லாம் போட்டு கோவில் போயிட்டு வந்து, ஸ்கூல்க்கு கொண்டு போறதுக்கு மிட்டாய் எல்லாம் வாங்கி டப்பால போட்டுட்டு... என்னமோ புது பட ஹீரோயின் ரேஞ்சுக்கு பந்தா எல்லாம் நடக்கும்

அன்னிக்கி என்ன லொள்ளு பண்ணினாலும் எஸ்கேப் ஆய்டலாம்... "பொறந்த நாள் அன்னைக்கி கொழந்தைய திட்டாதே"னு பாட்டி ஒரு சவுண்ட் விட்டா அப்பா அம்மா எல்லாம் off ஆய்டுவாங்க... அப்புறம் ஒரே ஜாலி தான்

அப்புறம் மொத்தமா சேத்து வெச்சு அடுத்த நாள் கெடைக்கும்கறது தனி track ... ஹி ஹி ஹி

அன்னைக்கி ஸ்கூல்க்கு கலர் டிரஸ் போட்டுட்டு போலாம்கறது ஒரே குஷி... ஸ்கூல்லயும் கலர் டிரஸ் பாத்து அன்னிக்கி பர்த்டேனு தெரியும்கறதால homework பண்ணலைனாலும் "போய் தொலை" னு விட்டுடுவாங்க மிஸ் எல்லாம்... ஹய்யா ஜாலி...

அதுக்கு பின்ன, காலேஜ் நாட்கள்ல நாங்க ஒரு குரூப் இருந்தோம்... ஒரு பதினஞ்சு பேரு... அதுல யாருக்கு பர்த்டேனாலும் மத்த எல்லாரும் சேந்து கேக் கிப்ட் எல்லாம் வாங்கி செம ரகளை பண்ணுவோம்

பி.காம் லாஸ்ட் இயர் பர்த்டே அன்னிக்கி ஒரு tragedy நடந்தது... அது இப்போ சொல்லி நான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறதா இல்ல... அதாவது இந்த நல்ல நாளுல வேண்டாம் இன்னொரு நாள் தனி பதிவா போடறேன்... ஒகே ... ஹா ஹா ஹா

(அதானே .... என்னடா பெரிய மனசு பண்ணி விட்டுட்டாளோனு பாத்தேன். பிசாசாவது விடறதாவது - mindvoice )

அப்புறம் ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டர்ல வேலை பாத்தேன் பார்ட் டைம்ஆ. அப்போ அங்க staff ல யாருக்கு பர்த்டேனாலும் எல்லாரும் சேந்து கேக் / கிப்ட் எல்லாம் வாங்கி செம ரகளை பண்ணுவோம்... அது நெஜமாவே எவர்க்ரீன் மெமரி தான்... இன்னும் அந்த staff ல ஒரு friend ஒரு ஒரு பர்த்டேவும் மறக்காம விஷ் பண்ணும் ஸ்பெஷல் friend ...

இப்போ பர்த்டே is like "yet another day"னு ஆய்டுச்சு...

ஆனா இப்பவும் இந்த நாளை சந்தோச படுத்தற சில விசியங்கள் உண்டு...

முந்தின நாளே கிப்ட் குடுத்து அசத்தற ரங்க்ஸ்... மத்தவங்க சொல்றதுக்கு முன்னாடி first wish ஆ இருக்கனுமாம்... (அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கறாங்க...ஹும்... )

காலைல நேரத்துல அப்பா அம்மா போன் பண்ணி "அர்ச்சனை பண்ணினோம் சாமி. ஹாப்பி பர்த்டே. ஸ்வீட் செஞ்சு சாப்டு" னு சொல்றது

பாசமலர் நடு ராத்திரிலயே போன் பண்ணி "தூங்கிட்டயா...ஹாப்பி பர்த்டே... சரி போய் தூங்குடி" னு ரகளை பண்றது

Cousins பட்டாளாம் "வயசாச்சில்ல... இன்னுமா பொறுப்பு வர்ல... நேரத்தோட எந்திரிடி... ஹாப்பி பர்த்டே" னு சொல்றது

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் மறக்காம ஈமெயில் பண்ணி வாழ்த்தற friends ....

இதெல்லாம் தான் இன்னும் இந்த நாளை சுவாரஸ்யமாக்குது...

இந்த வருஷம் இன்னும் ஒரு ஸ்பெஷல் இருக்கு...

என்னோட தங்கைக்கு ஏற்கனவே ஒரு குட்டி வாலு இருக்கா...நாலு வயசு ஆச்சு... செம சுட்டி அவ அம்மாவை போலவே... ஆனா ஆச்சு அசல் என்னை மாதிரி இருப்பா பாக்றதுக்கு

என்னோட தங்கை கணவர் கிண்டல் பண்ணுவார் "pregnant ஆ இருக்கறப்ப யாரை அதிகம் நெனைக்கறோமோ அவங்கள மாதிரி புள்ள இருக்கும்னு ஒரு பழைய வழக்கு உண்டு (சும்மா சொல்றது தான்)... நீ உங்க அக்காவ தான் ரெம்ப நெனச்ச போல" னு வம்பு இழுப்பார்

இப்போ என்னோட தங்கை மறுபடியும் அம்மா ஆக போறா... due date என்னோட பர்த்டே சமயம் குடுத்து இருக்காங்க...

pregnancy confirm ஆகி due date சொன்ன நாள்ல இருந்து என்னோட பாசமலர் அடிக்கடி சொல்ற டயலாக் "புவனி... உன்னோட பர்த்டே அன்னிக்கி இருந்தா நல்லா இருக்கும்டி... " . பாப்போம் என்ன ஆகுதுன்னு....
பர்த்டே நினைவுகள் சொல்றேன்னுட்டு பாசமலர் நினைவுகள் சொல்றயானு திட்டுவீங்கன்னு நினைக்கிறேன்

என்ன செய்ய? அவ இல்லாத நினைவுகள் நிகழ்வுகள் எனக்கு ரெம்ப கம்மிங்க...

ஒகேங்க.... மறக்காம ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க... இல்லைனா வம்பாயடும் சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா

அப்படியே மறக்காம இந்த கேக் ஒரு பீஸ் எடுத்துகோங்க... நான் செய்யல.... பொறந்தநாளும் அதுவுமா என்னத்துக்கு கோர்ட் கேஸ்னு... ஹி ஹி ஹி... தைரியமா சாப்பிடலாம்... ஹா ஹா ஹா

(கனடா டேக்கு சேத்து இங்க நாளைல இருந்து நாலு நாள் லீவ்... புது வீட்டுல இன்னும் இண்டர்நெட் இல்ல... அதனால பதிவை கொஞ்சம் முன்னாடியே போடறேன்... பொருத்தருள்க மக்களே... ஹி ஹி ஹி)   

113 பேரு சொல்லி இருக்காக:

sriram said...

மீ த ஃப்ர்ஸ்ட்டேய்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

நான் பிறந்தது ஜூலை ஏழு, நீங்க ஜூலை மூணு..
ஐயா அப்பாவி Aunty என்னை விட பெரியவங்க..
எனவே வாழ்த்த வயதில்லை - வணங்குகிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தமிழ் உதயம் said...

மறக்காம ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க... ////

ஆசிர்வாதம் பண்ணிட்டேன். "வளத்துடன், நலத்துடன் வாழ வாழ்த்துகள்"

sriram said...

//உடனே வயசானா அப்படிதான்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... //

இது நாங்க சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள்...

நசரேயன் said...

"வாழ்த்த வயதில்லை"

நசரேயன் said...

இருந்தாலும் வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!! ஹா... ஹா....

தக்குடுபாண்டி said...

நம்ப (கரகாட்டக்காரன்)செட்டுலையே மிக மூத்த்த்த்த்த்த பதிவர் தாங்கள்தான் என்பதாலும், நம்ப Bostan நாட்டாமையாலையே என்று அழைக்கப்படுவதாலும், வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் Idly மாமி!!....;) LOL

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. பிறந்த நாளுக்கு பதிலா வாரமா கொண்டாடறீங்களா அப்பாவி?? விவரமான ஆள் தான் என்னைப் போல.. :)

எனக்கு உங்களுக்கு நேர் எதிர் ஃபீலிங்கி.. இதை பத்தி பதிவே போட்டுற வேண்டியதுதேங்..

அமைதிச்சாரல் said...

//மொத்தமா blog எழுதற மக்கள் தொகைல அஞ்சு சதவீதம் பேரு தான் என்னை விட சின்னவங்க...//

நல்ல வேளை சொன்னீங்க அப்பாவி அக்கா...

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் :-)))))))))))

மகி said...

இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் புவனா!

நீங்க எழுதின கதையெல்லாம் படிக்கப் படிக்க அப்படியே சில வருஷம் பின்னால போயிட்டு வந்த மாதிரி இருந்தது எனக்கு!

ம்ம்..நீங்க சொல்லற டீடெய்ல் எல்லாம் பார்க்கும்போது எங்க வீடெல்லாம் தாண்டித்தான் உங்க வீடு இருக்குன்னு நினைக்கிறேன்.நாங்க டவுன்ல இருந்து ஒரு ஏழெட்டு கி.மீ. தூரம்தான்! :)

உங்க தங்கைக்கு வாழ்த்துக்கள்!

Arul Senapathi said...

Hi,

I am a regular reader of your stories and blog posts.

Wish you a Happy Birthday!!

Have fun!!

Arul

sriram said...

//எனக்கு ஜூலைல என் தங்கைக்கு ஆகஸ்ட்ல பிறந்த நாள்//

கணக்கு இடிக்குதே ???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ILA(@)இளா said...

வாழ்த்த வயசுல்லை, கமுந்தடிச்சு கும்புட்டுகிறேன் சாமீய்ய்ய்ய்

asiya omar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நல்ல ரசிக்கும் படி இருந்தது,நாங்களும் காந்திபுரம் வந்தால் அன்னபூர்ணாவுக்கு போகாமல் போனதில்லை(tnau student ma )

Porkodi (பொற்கொடி) said...

//வாழ்த்த வயசுல்லை, கமுந்தடிச்சு கும்புட்டுகிறேன் சாமீய்ய்ய்ய்//

இளா, நீங்களே இன்னும் இப்படி சொல்லிக்கிட்டு இருந்தா நானெல்லாம் என்னிக்கு பொறக்குறது? சீக்கிரம் வளருங்கப்பா..

ப்ரியமுடன்...வசந்த் said...

ஷேமமா வாழ அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சுசி said...

// "மூத்தது மோழை; இளையது காளை" னு... //

எங்க வீட்ல இது அப்டியே உல்டா..

உங்க பர்த்டே அன்னிக்கே ஸ்பெஷல் கிஃப்ட் கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனா.

Guna said...

July 3rd-a ?? Naan July 16... neenga enna vida 13 naal periyavangala... so வாழ்த்த வயதில்லை இருந்தாலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Nice post...Many More Happy Returns Of The Day (Advanced.)

sriram said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…
இளா, நீங்களே இன்னும் இப்படி சொல்லிக்கிட்டு இருந்தா நானெல்லாம் என்னிக்கு பொறக்குறது? சீக்கிரம் வளருங்கப்பா.. //

நல்லா கேளுங்க கொடியக்கா.. அவுரு பெத்தது ஸ்கோலுக்கு போகப் போகுது, இன்னியும் யூத்து வேஷம் கட்றாரு மனுஷன்..
இனிமேத்தான் நீங்க யூத்தாவனும், நீங்க ரிட்டையர் ஆனப்புறம் நான் யூத்தாவனும் - நானும் எவ்வளவு நாளைக்குத்தான் டீன் ஏஜராவே இருக்குறது???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

//கொடியக்கா// - ஏன் பாஸு வாயில் பல்லு இல்லைனா பல் செட் வெச்சுட்டு பேசுங்க.. அதுக்காக இப்படி வெறும் நாக்கை வெச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு பொய் சொல்லக் கூடாது!

sriram said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது… - ஏன் பாஸு வாயில் பல்லு இல்லைனா பல் செட் வெச்சுட்டு பேசுங்க.. அதுக்காக இப்படி வெறும் நாக்கை வெச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு பொய் சொல்லக் கூடாது//

கேடியக்கா .. பல்லு விழுந்தாலே திரும்ப வளர்ற சின்ன வயசு எனக்கு. எனக்கு எதுக்கு பல் செட்டெல்லாம்? பல்லு கொட்டிபோற வயசாகும் உங்களைப் போல Aunty களுக்குத்தான் (அப்பாவி Aunty, Gulf ல இருக்குற குண்டு Aunty களும் அடக்கம்) அது தேவை..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

SenthilMohan K Appaji said...

//*மொத்தமா blog எழுதற மக்கள் தொகைல அஞ்சு சதவீதம் பேரு தான் என்னை விட சின்னவங்க**/
Height-லயாங்க..? :) எது எப்டியோ..நான் அந்த 5%-குள்ள தானுங்கா.
//*நானே ஸ்வீட் செஞ்சு நானே சாப்ட்டு..**/
இப்ப தெரியுதா? உங்க preparation-ன சாப்பிடுற கொடுமை. ஸ்வீட்டே அப்படின்னா, இட்லி எல்லாம் எப்டிங்?
//*நான் அப்பவே அப்பாவி தான், நான் அப்பவே ரெம்ப பயந்த சுபாவம்**/
எல்லாரும் நம்பிட்டோம்.
//*இன்னொரு நாள் தனி பதிவா போடறேன்**/
Count தேத்தறீங்க.
//*"மூத்தது மோழை; இளையது காளை"**/
மூணு பேர் இருந்தாங்கன்னா?
//*அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கறாங்க**/
உங்களோட better half ஆச்சே!!! உங்கள்ள பாதியாவது இருக்க வேணாம்.

//*@ Boston Sriram : நானும் எவ்வளவு நாளைக்குத்தான் டீன் ஏஜராவே இருக்குறது???**/
ஏனுங்க இப்படி? அப்ப நானெல்லாம் கிட்ட தட்ட அடுத்த தலைமுறை.

sriram said...

//SenthilMohan K Appaji சொன்னது…
ஏனுங்க இப்படி? அப்ப நானெல்லாம் கிட்ட தட்ட அடுத்த தலைமுறை.//

நானும் அதாங்க சொல்றேன். அப்பாவி ஆண்டி @ இட்லி மாமி, கேடியக்கா @ சியாட்டில் சிங்காரி, அனன்யா ஆண்டி @ (வேண்டாம் இதுக்கே எனக்கு இருக்கு) இவங்க எல்லாம் போன தலைமுறை, நீங்களும் நானும் அடுத்த தலைமுறை.

அப்புறம் நீங்களே மூணு பேரை வச்சிக்கிட்டா (செந்தில் மோகன் அப்பாஜி இதுக்கு நடுவில K வேற) மத்தவங்களுக்கு பேர்ப் பஞ்சம் ஏற்படாதா? பாத்து செய்யுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

SenthilMohan K Appaji said...

@ Boston Sriram
சந்தடி சாக்குல இந்த வாங்க போங்க வெல்லாம் வேணாங்ணா.
//*நீங்களும் நானும் அடுத்த தலைமுறை.**/
நீங்க வேணா அவங்களுக்கு அடுத்த தலைமுறையா இருங்க. நான் உங்களுக்கே அடுத்த தலைமுறை. ரைட்டா?
//*நீங்களே மூணு பேரை வச்சிக்கிட்டா**/
செந்தில்மோகன் மட்டுந்தாங்க பேரு. மீதி Initial-லுங்ணா. பாழாப் போன பொட்டி தட்டுற வேலைல சேந்தப்புரம், Full name தான் வெக்கணும்னு சொல்லிபுட்டானுக.Office email-ல @-க்கு முன்னாடியே 32 எழுத்துங்ணா.. :(:(:(.
சோறு போடுற மவராசனே சொல்லியாச்சு. அப்புறம் என்னடான்னு நானும் இப்படியே போட்டு,போட்டு அப்டியே பழகிடுச்சுங்ணா.

ஹேமா said...

மனம் நிறைந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள் தங்கமணி.

Krishnaveni said...

Bhuvana, naanum july thaan. Many more happy returns of the day.

vanathy said...

தங்ஸ், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மிணி.

அடச்சே! என் பிறந்தநாள் அன்னிக்கு இப்படி எல்லாம் ஐடியா என் மண்டையில் உதிக்கவே இல்லை.

பிறந்தநாள் கொண்டாடிய பிறகு வந்து சொல்லுங்க.

Krishnaveni said...

Wishes to your dear sister.

LK said...

Happy Birthday appavi

வெறும்பய said...

இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்..

Kousalya said...

HAPPY BIRTHDAY TO U FRIEND

மேரிஜோசப் said...

வாழ்க வளமுடன்

Harini Sree said...

Happy Birthday to you! Happy birthday to you! Happy birthday to you dear appaavi thangamani akka! Happy birthday to you! (apdiye paadinatha nenachukkanga :P) aasirvaatham panna vayathillai (antha naalu perula naan oruthi!) aagayaal vaazhthugiren. Unga thangaikku papa poranthathum yenna papa yepdi irukaanganu sollunga! :)

kavisiva said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நல்லா சுவாரசியமா எழுதறீங்க. தொடருங்க

அய்யோ மற்ற எல்லாரும் அடிக்க வர்றாங்களே மீ...எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

க.பாலாசி said...

//உடனே எல்லாரும் "வாழ்த்த வயதில்லை ...." அது இதுன்னு சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா//

யக்கா... வணங்குகிறேன்...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ILA(@)இளா சொன்னது…

வாழ்த்த வயசுல்லை, கமுந்தடிச்சு கும்புட்டுகிறேன் சாமீய்ய்ய்ய்
repeatu

ஸாதிகா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ பிரார்த்தனைகள்.இடுகை சுவாரஸ்யமாக உள்ளது.

அஹமது இர்ஷாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..>>True Voice!

kunthavai said...

யாருப்பா இங்க... இப்படியா என் பேத்தியை நல்ல நாள் அதுவுமா கலாய்கிறது?

நீ வாடி(சந்தடி சாக்குல...he..he...) செல்லம்.. நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்.
" சீரும் சிறப்புமாக...
சகல சொளபாக்கியத்துடன்
பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு
உற்றாருடன் இனிதே வாழ வாழ்த்துகிறேன்"

ரெம்பவும் ரசித்தேன் உங்கள் பதிவை. எனக்கு என்னுடைய அக்கா நியாபகம் தான் வந்தது.

வெங்கட் நாகராஜ் said...

ADVANCE HAPPY BIRTHDAY WISHES TO YOU.

manasu said...

வாழ்துகள்.

1974 - 1976 இருக்குமா பிறந்த வருடம்???

(எங்க அம்மாவே அப்பதான் பிறந்தாங்க்ன்னு

சொல்லிடாதிங்க!!!!!)

மனசிலாயோ - ஐ சேச்சியா நீங்க?

இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் - சோமனூரா சூலூரா?

வழிப்போக்கன் said...

Happy Birthday wishes

arul Sudarsanam said...

wish u a very happy birthday.. cakela konjam sweet jasti.. :)

Adimai-Pandian said...

iniya piranda nal vazthukal... unga pasa malar romba koduthu vachavanga.. eppavum avangala pathi pesa neenga marakkaradu illa.... unga pasa malara pathi solli adikkadi enga pasa malara ellam ninaikka vacidaringa....

Venkatesh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கமணி அவர்களே

Vidhoosh(விதூஷ்) said...

வாழ்த்த வயதில்லை .....
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

ட்ரீட் தராமலே இவ்வளவு வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் வாங்கிட்டீங்க, விவரமான ஆளுதான்!!

என் பங்குக்கும் வாழ்த்துகள்!!

goma said...

mind voice super

goma said...

3ம் தேதி டாண்ணு வந்து நிப்போம்ல...
வாழ்த்த வயசிருக்கு
ஆசி கூற ஆசையிருக்கு
.மீ த ஃபர்ஸ்ட் யாருன்னு பார்த்திடுவோம்

goma said...

அப்பாவி ரொம்ப அப்பாவியா இருக்காதீங்க...
தலை ,பச்ச மொழகா அரைக்க அம்மிதான்
அப்புறமா நாம டம்மிதான்..
ஆகும் மரியாதை கம்மிதான்
சுருண்டு கிடக்கணும் பம்மிதான்.....


[செம்மொழிமாநாட்டுக்கு எழுதின கவிதை!!எப்படி!!]

ராமலக்ஷ்மி said...

அன்பான வாழ்த்துக்கள் புவனா.

கலகலப்பான பதிவு.

Mythili said...

HAPPY BIRTHDAY TO YOU MY DEAR FRIEND

பிரசன்னா said...

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் :)

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனா,

எனக்கும் முல்லைப்பூவை செண்டாக கட்டி வைத்துக்கொள்ள ரொம்ப பிடிக்கும். அப்பா ஸ்பெஷலாக சொல்லி வைத்து வாங்கி வருவார். அதுதான் பர்த்டே ஷ்பெஷலா இருக்கும்.

செ.சரவணக்குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

pinkyrose said...

To my dearmost first commentor of blog,
Instead of counting candles,
Or tallying the years,
Contemplate your blessings now,
As your birthday nears.
Consider special people
Who love you, and who care,
And others who’ve enriched your life
Just by being there.
Think about the memories
Passing years can never mar,
Experiences great and small
That have made you who you are.
Another year is a happy gift,
So cut your cake, and say,
"Instead of counting birthdays,
I count blessings every day!"

sandhya said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனா ..கிருஷ்ணா பகவான் கருணையால் உங்கள்க்கு என்றும் நல்லது நடக்க நான் வேண்டுகிறேன் ...

உங்க தங்கைக்கு அழகானா ஆரோகியமான குழைந்தை பிறக்க நான் வாழ்த்துகிறேன் ..

காலையிலே உங்க பதிவு பார்த்தேன் ஆனா பதில் போட முடியலே மன்னிக்கவும் ...

உங்க சின்ன வயதில் நடந்த கலாட்டா படிக்கச்சே என் மனமும் என் அக்கா தம்பிகளே நினைவில் கொண்டுவந்திடது ...நன்றி ..

இராமசாமி கண்ணண் said...

அந்த அஞ்சுல நானும் ஒருத்தன். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். :-).

Priya said...

Many More Happy Returns Of The Day

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

ஜெய்லானி said...

விருதுடன் கூடிய Many More Happy Returns Of The Day வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....

ஜெய்லானி said...

பிறந்த நாள் காலையில டிஃபன்.. நீங்க சுட்ட இட்லியா..???

Anonymous said...

Bala: tumarow oppice leave.. no net.. athanale ippove wishings panneraen... hapy birthday do uu...

Iniya pirantha naal vaazthukal!!

shanthi said...

Many more Happy Returns of the Day Bhuvi Akka

vgr said...

Happy Birthday!!! Have a great year ahead!!!
enna vendumo anaithum poorthi adaiya vazhthukkal!!! Have a blast!

off topic: enga, ipadi life history e blog la public a podalama :) ? enaku innum theriyadadu unga amma, appa, sis peru, unga vayasu, veetu address mattum than. are u sure writing like this? oru nalla ennathula than kekaren. thappa ninaika vendam.

Anonymous said...

Iniya Pirantha naal valthugal.

தக்குடுபாண்டி said...

//நானும் அதாங்க சொல்றேன். அப்பாவி ஆண்டி @ இட்லி மாமி, கேடியக்கா @ சியாட்டில் சிங்காரி, அனன்யா ஆண்டி @ (வேண்டாம் இதுக்கே எனக்கு இருக்கு) இவங்க எல்லாம் போன தலைமுறை, நீங்களும் நானும் அடுத்த தலைமுறை.
// Boston நாட்டாமை! அடி விழுந்தா அய்யோ அடிக்கராங்க! அய்யோ கொல்ராங்க! சவுண்ட் உடர்துக்கு நான் உங்களுக்கு ஒத்தாசையா வரட்டுமா??..:)

என்றும் வம்புடன்,
தக்குடு

அனாமிகா துவாரகன் said...

Happy Birthday Acca. Here is my post for your birthday.

சின்ன அம்மிணி said...

Many More happy Returns of the Day

பத்மநாபன் said...

சிறுவாணி தண்ணி மாதிரி என்றும் இனிமையும் குளிர்ச்சியும் நிரம்பி இருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Subhashini said...

Hi Bhuvana

This is Subhashini wishing you many more happy returns of the day. I have come across your blog thru ambi's blog. You write very well. Keep writing.

Cheers, Subhashini

சுசி said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனா..

இப்போ எடுத்துக்கறேன் கேக் பீஸ் :)

அப்டியே உங்க பிறந்தநாள் பரிசா ஒரு தொடர் பதிவுக்கு கூப்டிருக்கேன். நெட் கனெக்டானதும் தொடருங்க.

gayathri said...

happy birthday appavai thangamani

மங்குனி அமைச்சர் said...

எல்லோரோடும் சேர்ந்து நானும் வாழ்த்திகிர்றேன்

Priya said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புவனா!

காற்றில் எந்தன் கீதம் said...

wish you a very happy birthday.....
sorry for the late wishes....

callmeasviju said...

very nice blog..................plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/

அப்பாவி தங்கமணி said...

@ Sriram - எஸ் பாஸ், நீங்க தான் first ... இட்லி உங்களுக்கே (எத்தனை நாளைக்கி தான் வடைனே சொல்றது... bore ...)... எஸ் எஸ் நீங்க ஜூலை ஏழுன்னு எனக்கு தெரியும்... அதுமட்டுமில்ல... நீங்க எனக்கு அஞ்சு வருஷம் முன்னாடியே தமிழ் கூறும் நல் உலகத்துக்கு விஜயம் செஞ்சாச்சுங்கரதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு பாஸ்...ஹா ஹா ஹா... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க...????????

@ தமிழ் உதயம் - நன்றிங்க... நீங்க தான் கரெக்ட்...

@ sriram - என்ன செய்ய? உங்கள விட அஞ்சு வயசு கம்மியா இருக்கறப்பவே இப்படி? (ஹா ஹா ஹா)

@ உலவு.காம் - மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - உங்களுக்கேவா? என்னை விட சின்னவங்க லிஸ்ட்ல நீங்க இல்லையே? ஹி ஹி ஹி... வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ...

@ Mrs.Menagasathia - ஆஹா... நீங்களுமா... தேங்க்ஸ் அக்கா...

@ தக்குடு - நல்ல செட்டு தான் போ... நீ சொல்றது பாதி கரெக்ட் பாதி தப்பு... என்னனு நீயே ஆராய்ச்சி பண்ணிக்கோ... இனிமே மாமின்னு சொல்லுவா நீ?....

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - ஹே ஹே ஹே...எஸ் எஸ் எஸ்... நாம எல்லாரும் விவரம் தான் சொல்லி தான் தெரியணுமா என்ன? பதிவா... போடுங்க போடுங்க

@ அமைதிச்சாரல் - இதெல்லாம் 200 much தெரியுமா.......?????? என்ன கொடுமை ஆண்ட்டி இது? ஹி ஹி ஹி.... வாழ்த்துக்களுக்கு நன்றி

@ மகி - தேங்க்ஸ் மகி. ஓ... நானும் அப்ப அப்ப இப்படி கொசுவத்தி சுத்துவேன் மகி... எஸ் எஸ்... எங்க வீடு நல்ல தூரம் தான்..

@ Arul Senapathi - thanks Arul for your wishes

அப்பாவி தங்கமணி said...

@ //sriram - கணக்கு இடிக்குதே ???//
கஷ்டம் பாஸ் உங்க கூட...... எனக்கு மூணு வருஷம் ஒரு மாசம் கழிச்சு அந்த பிறவி உலகத்துக்கு வந்தது... இப்போ கணக்கு tally யா? ஹா ஹா ஹா

@ ILA(@)இளா - முதல் வருகைக்கு நன்றிங்க... ஆஹா... நீங்க பாஸ்டன் அண்ணாத்தைய விட பெரியவகன்னு நம்ப தகுந்த வட்டார செய்தி சொல்லுதுங்களே பாஸ்... ஹா ஹா ஹா... வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ...

@ asiya omar - நன்றிங்க ஆசியா... அப்போ அந்த ஒரு கடை தானேங் ரெம்ப famous

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - நல்லா சொல்லுங்க கொடி... என்ன கொடுமை கொடி இதெல்லாம்?

@ ப்ரியமுடன்...வசந்த் - ரெம்ப நன்றிங்க வசந்த்...

@ சுசி - ஹா ஹா அஹ... அப்படியா... ரெம்ப ரெம்ப நன்றி சுசி...

@ Guna - குணா அண்ணா... நீங்க ஜூலை 16 கறதுக்காக... எப்பவும் "ஜூலை 16 வந்தால் வயது பதினேழு தான்"ங்கற பாட்டையே பாடின எப்படிங்ண்ணா... ஜூலை 16 சரி.... எனக்கு ஒரு பத்து வருஷம் முன்னாடி... கரெக்ட்ஆ?

அப்பாவி தங்கமணி said...

@ //sriram - இனிமேத்தான் நீங்க யூத்தாவனும், நீங்க ரிட்டையர் ஆனப்புறம் நான் யூத்தாவனும் - நானும் எவ்வளவு நாளைக்குத்தான் டீன் ஏஜராவே இருக்குறது???//
பொய் ஒரு அளவுக்கு தான் சொல்லணும் சார்... இப்படி எக்கசக்கமா சொன்னா... அப்புறம் போஜனம் இல்ல "திரட்டுப்பால்" கூட கெடைக்காது... ஆமா சொல்லிட்டேன்... ஹி ஹி ஹி

@ //பொற்கொடி - ஏன் பாஸு வாயில் பல்லு இல்லைனா பல் செட் வெச்சுட்டு பேசுங்க.. அதுக்காக இப்படி வெறும் நாக்கை வெச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு பொய் சொல்லக் கூடாது//
ஹா ஹா ஹா... ROFTL பொற்கொடி... சான்சே இல்லமா... எப்படி இப்படி எல்லாம்? உன்கிட்ட இவ்ளோ தெறமை இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சே கொடி தெரியாம போச்சே... இன்னும் நெறைய எதிர்பாக்குறேன் கொடி... keep it up ... ஹா ஹ ஹா

@ sriram - வாட் வாட் வாட்? அப்பாவி ஆண்ட்டிஆ? என்ன கொடுமைங்க இது? ஏன் இந்த ஊர்ல earthquake எல்லாம் வருதுன்னு இப்போ தான் புரியுது... இப்படி கன்னா பின்னான்னு பொய் பேசினா... பூமியே பொங்கிடுச்சு பாருங்க...

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan K Appaji - உங்கள இத்தனை நாளும் அப்பாஜினு நம்பினேன்... இனிமே தத்தாஜி... நீங்க நிச்சியமா அந்த 5 % இல்லைன்னு எனக்கு தெரியுமே.... ஸ்வீட்ஏ ஸ்வீட் செஞ்சா நல்லா இருக்காது தானே... அதை தான் அப்படி சொன்னேன்... மூணு பேரு இருந்தா நடுபிள்ளை நட்டாத்துல தான் (ஹி ஹி ஹி... நீங்க நடுவா...)

//ஏனுங்க இப்படி? அப்ப நானெல்லாம் கிட்ட தட்ட அடுத்த தலைமுறை. //
இன்னைக்கி எல்லாரும் பொய் மட்டும் தான் பேசுறதுன்னு முடிவோ... ஒகே ஒகே

@ Sriram - //(வேண்டாம் இதுக்கே எனக்கு இருக்கு)// இருக்கு இருக்கு... இன்னிக்கி உங்க மெயில் பாக்ஸ் (தபால் பெட்டி) போய் பாருங்க... சொன்ன ஒரு ஒரு பொய்க்கும் சேத்து இருக்கு...

@ SenthilMohan K Appaji - //நீங்க வேணா அவங்களுக்கு அடுத்த தலைமுறையா இருங்க. நான் உங்களுக்கே அடுத்த தலைமுறை. ரைட்டா//
எல்லாரும் அரிசந்திரனுக்கு opposite house போல... இப்படி opposite opposite ஆ பேசுறீங்களே... ஹும்... சாமி கண்ணை குத்திடும் தெரியுமோ...

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா

@ Krishnaveni - வாவ்... நீங்களும் ஜூலைஆ? நல்லவங்க எல்லாம் ஜூலை தான் போல... தேங்க்ஸ் for யுவர் விஷேஸ்... ஹாப்பி பர்த்டே டு யு டூ...

@ vanathy - தேங்க்ஸ் வானதி... இந்த ஐடியா எல்லாம் வரணும்னா நெறைய இட்லி சாப்பிடணும் அதுவும் நான் செய்யற இட்லி... ஒகே வா.... சொல்லுங்க வேணும்னா அனுப்பறேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் அ லாட் வேணி

@ LK - தேங்க்ஸ் கார்த்தி

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

@ Kousalya - தேங்க்ஸ் கௌசல்யா

@ மேரிஜோசப் - தேங்க்ஸ் மேரி

அப்பாவி தங்கமணி said...

@ Harini Sree - நன்றி நன்றி நன்றி... (நானும் நேர்ல சொன்னதா நெனச்சுக்கோ...) எஸ் நீ அந்த நாலு பேருல ஒருத்தின்னு நான் acknowledge பண்றேன்... கண்டிப்பா சொல்றேன்மா... தேங்க்ஸ் ஹரிணி

@ kavisiva - தேங்க்ஸ்ங்க...யாரு அடிக்க வர்ராங்கன்னு சொல்லுங்க... எல்லாருக்கும் இட்லி பார்சல் அனுப்பிடறேன்... இட்லி இருக்க பயமேன்... ஹா ஹா ஹா

@ க.பாலாசி - ஆஹா... என்ன கொடுமைங்க இது?... நன்றி வாழ்த்துக்கு

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - முதல் வருகைக்கு நன்றிங்க...ஆஹா...அண்ணாஸ் எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கேக போல... வாழ்த்துக்கு nanringo...

அப்பாவி தங்கமணி said...

@ ஸாதிகா - ரெம்ப நன்றிங்க ஸாதிகா... முதல் வருகைக்கு நன்றிங்க

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க பிரதர்... true voice நல்ல வாய்ஸ் போல இருக்கே... குட் குட்...

@ kunthavai - வாங்க பாட்டி வாங்க...ஹும்... ஹும்.. (அழுகையுடன்...) பாருங்க பாட்டி எல்லாரும் சேந்து .... ஹும் ஹும்... சரி சரி அதான் நீங்க வந்துடீகளே... இனி என்ன எனக்கு... நன்றிங்கோ பாட்டி... (நானும் சந்தடி சாக்குல நெறைய பாட்டி சொல்லிட்டனே...ஹி ஹி ஹி)

@ வெங்கட் நாகராஜ் - ரெம்ப நன்றிங்க நாகராஜ்

அப்பாவி தங்கமணி said...

@ manasu - நன்றிங்க மனசு...
// (எங்க அம்மாவே அப்பதான் பிறந்தாங்க்ன்னு சொல்லிடாதிங்க!!!!!)// நீங்க ரெம்ப நல்லவங்க மனசு... எப்படி இவ்ளோ கரெக்ட்ஆ சொன்னீங்க... ஹா ஹா ஹா
//மனசிலாயோ - ஐ சேச்சியா நீங்க?//
சேச்சி எல்லாம் இல்லிங்க... பச்சை தமிழச்சி தான்... ஆன எங்க ஊரு கேரளா பார்டர்... அந்த பாதிப்புனு வெச்சுகோங்களேன்
//இருபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் - சோமனூரா சூலூரா?//
அதர் சைடு பாஸ்...

@ வழிப்போக்கன் - நன்றிங்க வழிப்போக்கன்...

@ arul Sudarsanam - தேங்க்ஸ்ங்க அருள்... கேக் ஸ்வீட்ஆ தானே இருக்கணும் பாஸ்

அப்பாவி தங்கமணி said...

@ Adimai-Pandian - நன்றிங்க பாண்டியன்... ஓ... உங்களையும் கொசுவத்தி சுத்த வெக்கறேனா... சூப்பர்

@ Venkatesh - நன்றிங்க வெங்கடேஷ்

@ Vidhoosh(விதூஷ்) - நன்றிங்க... (ஹும்... உங்க background research பண்ணிட்டு வாழ்த்த வயதில்லையா... வயது மீறி போச்சான்னு சொல்றேன்....ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹி ஹி ஹி... நீங்க தான் கரெக்ட்ஆ பாயிண்ட்ஐ புடுச்சுடீங்க... ஹி ஹி ஹி... இதெல்லாம் ப்ளாக்ல சகஜமுங்க... ஹி ஹி ஹி... நன்றிங்க வாழ்த்துக்களுக்கு

@ goma - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் கோமா... வாங்க வாங்க ட்ரீட் வெச்சுடறேன் (என்னோட சமையல் ஒகே... நோ offense யு சி...ஹா ஹா ஹா)... மீ தி first அவிக தான்...
//அப்பாவி ரொம்ப அப்பாவியா இருக்காதீங்க...//
நீங்க சொன்னா சரி தான் கோமா... பாத்து நடந்துக்கறேன்... நன்றிங்கோ...
//[செம்மொழிமாநாட்டுக்கு எழுதின கவிதை!!எப்படி!!] //
ஒரே ஒரு கேள்வி... நீங்க டி ஆர் ரசிகையோ... சும்மா கேட்டேன்... மத்தபடி கவிதை சூப்பர்... (ஹையோ ஹையோ...)

@ ராமலக்ஷ்மி - ரெம்ப ரெம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி

அப்பாவி தங்கமணி said...

@ Mythili - தேங்க்ஸ் மைதிலி...

@ பிரசன்னா - ம்ம்... ஒகே... போன போகட்டும்... (நன்றிங்கோ...)

@ புதுகைத் தென்றல் - ரெம்ப நன்றிங்க புதுகை அக்கா. கண்டிப்பா செண்டு பூ ஸ்பெஷல் தான்...

@ செ.சரவணக்குமார் - நன்றிங்க சரவணன்

@ pinkyrose - வாவ்... லவ்லி விஷ் தட் இஸ்.... தேங்க்ஸ் pinkyrose

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ரெம்ப நன்றி சந்த்யா வாழ்த்துக்கு... உங்களுக்கும் பழைய ஞாபகமா...

@ இராமசாமி கண்ணண் - என்ன அநியாயம் இது? ஒகே ஒகே... இன்னிக்கி ஒரு நாள் பேசுங்க பேசுங்க... நீங்க அந்த அஞ்சு லிஸ்ட்ல இல்ல பாஸ்... ஹி ஹி ஹி (நன்றிங்க கண்ணன்)

@ ஜெய்லானி - நன்றி நன்றி நன்றி.... வாழ்த்துக்கும் விருதுக்கும்... என்னது இட்லியா... ஹையோ ஹையோ... அதெல்லாம் வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு மட்டுமே ஸ்பெஷல்...(ஹி ஹி ஹி)

@ shanthi - தேங்க்ஸ் சாந்தி... (உங்க ப்ளாக் லிங்க் ஆகலியே உங்க கமெண்ட்ல... லிங்க் குடுங்களேன்...நன்றிங்க)

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ரெம்ப நன்றிங்க VGR
off topic: you are right VGR ... எனக்கே சில சமயம் அப்படி தான் தோணும்... I should limit details... thanks a lot for your concern... தப்பா எல்லாம் நெனைக்க மாட்டேன்... தேங்க்ஸ் again

@ பெயரில்லா - நன்றிங்க

@ தக்குடு - வா வா... அடி வாங்கறதுக்கு கூட ஆள் வேணும் வா... (ஹா ஹா அஹ)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - தேங்க்ஸ் அ லாட் அனாமிகா... (ஆனந்த கண்ணீருடன்....)

@ சின்ன அம்மிணி - ரெம்ப நன்றிங்க அம்மணி

@ பத்மநாபன் - ஆஹா... சிறுவாணி தண்ணிய போலவா... ஆஹா... ஒரு டம்ளர் குடிசாப்ள இருக்கு சொன்னதே... ரெம்ப நன்றிங்க...

@ Subhashini - ரெம்ப நன்றிங்க சுபா...

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - ரெம்ப நன்றி சுசி... ஒரு பீஸ் என்ன ரெண்டா எடுத்துகோங்க... (நான் செய்யல.. ஹி ஹி ஹி) .... சூப்பர் தொடர் பதிவு... எப்படிம்மா இப்படி எல்லாம்? சூப்பர் கண்டிப்பா எழுதறேன்... நன்றி வாழ்த்துக்கும் பதிவுக்கு அழைச்சதுக்கும்...

@ gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ மங்குனி அமைச்சர் - மிக்க நன்றிங்க அமைச்சரே...

@ Priya - ரெம்ப நன்றிங்க ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ காற்றில் எந்தன் கீதம் - ரெம்ப நன்றிங்க வாழ்த்துக்கு

@ callmeasviju- தேங்க்ஸ் viju ...sure ... தேங்க்ஸ் for யுவர் ப்ளாக் லிங்க்...

அப்பாவி தங்கமணி said...

//Priya சொன்னது… Many More Happy Returns Of The Day //

தேங்க்ஸ் priya

அனாமிகா துவாரகன் said...

// நீங்க எனக்கு அஞ்சு வருஷம் முன்னாடியே தமிழ் கூறும் நல் உலகத்துக்கு விஜயம் செஞ்சாச்சுங்கரதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு பாஸ்...//
அட அப்பாவியக்கோவ், இப்படியா உங்க வயச போட்டுடைப்பீங்க.

Karthick Chidambaram said...

Happy Birthday

SenthilMohan said...

//*உங்கள இத்தனை நாளும் அப்பாஜினு நம்பினேன்... இனிமே தத்தாஜி.**/
நான் பேர மாத்திட்டேனுங்க. இனிமேல் செந்தில்மோகன் மட்டுந்தான்.
//*நீங்க நடுவா?**/
நான் கடைக்குட்டீங்க்கா.
//*நீங்க நிச்சியமா அந்த 5 % இல்லைன்னு எனக்கு தெரியுமே**/
Boston அண்ணனுக்கும், உங்களுக்கும் 5 வருஷந்தான வித்தியாசம். So நான் நிச்சியமா 5%-க்கு உள்ள தானுங்க்கா. அப்புறம் தேர இழுத்து தெருவுல உட்ட மாதிரி அரிச்சந்திரர் பத்தி பேசிட்டீங்க. அதுனால நெசத்த சொல்றேன். நீங்க சொன்ன அந்த அரிச்சந்திரர் SunDynasty-யை சேர்ந்தவர். இதன் இன்னொரு பெயர் Ikshvaku Dynasty. இந்த வம்சத்துல இருந்த ஒரு மன்னன் பேரு சுமத்திரன். சுமத்திரனுடைய நண்பர் அல்லது தளபதி அல்லது மந்திரி அல்லது கூட இருந்தவர்களில் ஒருவர் கின்னரன். இவருடைய வம்சத்துல வந்தவங்க தான், எங்க ஊர்ல ஒருத்தரோட ஆறாந்தலைக்கட்டு தாத்தா திரு.அரங்கநல்லு அவர்கள். So அரிச்சந்திரருக்கு Opposite House இல்லன்னாலும் எப்டி, எப்டியோ போய் அப்டி, அப்டியே ஒரு தொடர்பு இருக்குதுங்கிறது உண்மைதானுங்க்கா.

பத்மா said...

belated greetings thangamani

na vaazhthuven enna enakku vayasaaidichu

needuzhi vaazhga bhuvana

Karthick Chidambaram said...

B'lated Happy B'day

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…
அட அப்பாவியக்கோவ், இப்படியா உங்க வயச போட்டுடைப்பீங்க//


இப்பவாச்சும் புரிஞ்சு கிட்டயே நான் எவ்ளோ அப்பாவின்னு

அப்பாவி தங்கமணி said...

@Karthick Chidambaram - தேங்க்ஸ் கார்த்திக்

@ SenthilMohan - ஏனுங்கண்ணா பேரை இப்படி சுருக்கி போட்டீக... நீங்க கடைகுட்டியா... அப்படின்னா எனக்கு எதிரி (ஹி ஹி ஹி). சாமி, தெய்வமே... இனிமே நான் உங்ககிட்ட பக்கத்துக்கு வீட்டு சந்தரன பத்தி கூட கேக்க மாட்டனுங்க... மீ எஸ்கேப்... (ஜஸ்ட் கிட்டிங் - nice detail )

@ பத்மா - ரெம்ப நன்றிங்க.. நீங்க தான் ரெம்ப நல்லவங்க...மீண்டும் நன்றி வாழ்த்துக்களுக்கு

@ Karthick Chidambaram - தேங்க்ஸ் again கார்த்திக்

SenthilMohan said...

//*ஏனுங்கண்ணா, நீங்க, உங்க**/
உங்க வீட்ல தம்பிக்கு இவ்ளோ மரியாதை கொடுப்பீங்களாக்கா? தெரியாம போச்சே. தம்பிக்கே இம்புட்டு மருவாதி கொடுக்குறீங்களே, அப்ப உங்க ரங்சுக்கு கிடைக்குற மருவாதிய நினைச்சுப் பாத்தா... வேணாண்டா மோகா. நமக்கெதுக்கு மத்தவங்க இல்லையில்ல அவரோட பொல்லாப்பு.
//*பேரை இப்படி சுருக்கி போட்டீக**/
உங்க கிண்டலுக்கு பயந்து தாங்க்கா.
//*அப்படின்னா எனக்கு எதிரி**/
'பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை.' அதுவே இல்லாத போது இது எல்லாம் எப்டிங்க்கா? இதுக்கெல்லாமா கோவிச்சுக்குறது.
//*பக்கத்துக்கு வீட்டு சந்தரன பத்தி கூட கேக்க மாட்டனுங்க**/
ஆமா... எம்பக்கத்தூட்டுல இருக்குற சந்திரனப் பத்தி உங்களுக்கு எப்டிங்க்காத் தெரியும்?
//*nice detail**/

என்ன சொன்னாலும் நம்புறதுக்கு 4 பேரு இருக்காங்கடானு அந்த அரங்கநல்லு சொன்னது நெசந்தாண்டா மோகா. நாலுல ஒருத்தங்க சிக்கிட்டாங்க. மத்த மூணு பேர எங்க பிடிக்குறது? அக்கா, அக்கா நீங்களே அந்த மீதி மூணு பேரையும் பிடிச்சுக் கொடுங்கக்கா.

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - ஆஹா... நான் பதிவு போட்டு torture பண்ணினா இவர் detail குடுத்தே பயமுறுத்துவாரு போல இருக்கே.. மீ எஸ்கேப்...

//என்ன சொன்னாலும் நம்புறதுக்கு 4 பேரு இருக்காங்கடானு அந்த அரங்கநல்லு சொன்னது நெசந்தாண்டா மோகா. நாலுல ஒருத்தங்க சிக்கிட்டாங்க. மத்த மூணு பேர எங்க பிடிக்குறது? அக்கா, அக்கா நீங்களே அந்த மீதி மூணு பேரையும் பிடிச்சுக் கொடுங்கக்கா. //
இப்பவாச்சும் ஒத்துகோங்க... நான் எவ்ளோஓஓஓஓஓஓஓஓஒ ....... அப்பாவின்னு....

siva said...

valthukkal...

happy birthday to you

Bhavana akka.

அப்பாவி தங்கமணி said...

@ siva - Thanks for the wishes siva

priya.r said...

Belated Happy Birthday Bhuvana.

அப்பாவி தங்கமணி said...

Thanks so much Priya

Post a Comment