Tuesday, June 15, 2010

Pittsburgh - ஊரு சுத்தின கதை...
போன மாசம் "கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு" சொல்லிட்டு ஊரு சுத்த போனோமே... அதை பத்தி எழுதணும்னு நெனச்சுட்டே இருந்தேன். இப்போ தான் அதுக்கு நல்ல முஹுர்த்தம் அமைஞ்சு இருக்கு

எதுக்கு இந்த திடீர் சுத்தல்னு வந்து சொல்றேன்னு சொன்னேன், அதை மொதல்ல சொல்லிடறேன்...

அது வேற ஒண்ணும் இல்லைங்க. நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட நாள்... இன்னும் புரியலையா? மணநாள்..... திருமணநாள்... (ஹி ஹி ஹி)

சரி சரி... வளவளக்காம ஒழுங்கா சொல்றேன்... ("உன்னால முடியாததெல்லாம் யோசிக்காதே" ங்கறீங்களா? ஹும்...என்ன செய்ய? பிறவியே அப்படியாகி போச்சு...)

மூணு நாள் லீவுன்னதும் "நீ ரெம்ப நாளா Pittsburgh வெங்கடேசபெருமாள் கோவில் போகணும்னு சொல்லிட்டு இருக்கியே.... போயிட்டு அப்படியே அங்க வேற எதுனா இருந்தா சுத்திட்டு வரலாம்" னார் அவர்

அவர் மனசு மாறரதுக்குள்ள நானும் சரின்னேன்

போன வருஷம் Chicago போனப்ப கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் எக்கசக்க கூட்டத்துல Borderல (US / கனடா)  நின்னு நின்னு வெறுத்து போச்சு... அந்த அனுபவத்துல.... "லாங் வீக்-எண்டுன்னா Borderல ரெம்ப கஷ்டமாய்டும், வெள்ளிகிழமையே  போய்டலாம்" னார்

"சரி" னேன் நான்

நான் எப்ப அவர் சொல்லி மறுத்துருக்கேன், இப்ப சொல்ல.... (ஹி ஹி ஹி....நோ கமெண்ட்ஸ் ஒகே..)

வெள்ளிகிழமை காலை 5.30 க்கு கிளம்பரதுன்னு முடிவாச்சு... அப்படி இப்படி நான் கிளம்ப 6.30 ஆய்டுச்சு.. "ஐயோ....பார்டர்ல ஏழு மணி நேரம் நிப்போம் பாரு"ன்னு ரங்க்ஸ் அப்பவே டென்ஷன் ஸ்டார்ட் மீசிக் தான்......

என்னங்க செய்ய? எனக்கு இந்த ஊரு காஞ்சு போன ரொட்டி பன்னு இலை தழை எல்லாம் சரி வராது.... கட்டு சாதம் எல்லாம் கட்டணுமே... அதான் லேட் ஆய்டுச்சு

ஆறரைக்கு வீட்டுல கிளம்பி கார்ல ஏறினப்புரம் "கேமரா எடுத்தாச்சா? ஹோட்டல் புக்கிங் பிரிண்ட் அவுட் எடுத்தியா...? GPS எங்க? எதுக்கும் map ம் backup வேணுமே அது எங்க? ஐயோ....பாஸ்போர்ட் இருக்கு தானே... எதுக்கும் driving லைசென்ஸ்ம் வேணும்.. கடன்காரன் என்ன வேணா கேப்பான் borderல.. எடுத்தோமா?" இப்படி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணிகிட்டே 7.45 க்கு border (Peace Bridge Exit) வந்து சேந்தோம்... அந்த படம் தான் மேல "Welcome to New-york - The Empire State" ......
 
அப்பவே பார்டர்ல ஒரு முப்பது கார் நிக்குது ஒரு ஒரு லைன்லயும்.... ராத்திரியே துண்டு போட்டு இருப்பாங்களோனு தோணுச்சு... ரங்க்ஸ் asusual டென்ஷன், கூடவே என்னை பாத்து ஒரு லுக் "அப்பவே சொன்னேன்ல" ங்கற மாதிரி
 
நான் எப்பவும் போல பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பீல் பண்ணி போட்டோ எடுக்கற மாதிரி பாவ்லா பண்ணிட்டே இருந்தேன்...

நாங்க நின்னுட்டு இருந்த லைன் ரெம்ப மெதுவா நகந்துட்டு இருந்தது... நான் சொன்னேன் "அந்த ஆபிசர் எதாச்சும் வீட்டுல சண்டை போட்டுட்டு வந்து இங்க காட்டுறாரு போல... எதுக்கு நமக்கு ஏழரை?  பேசாம அடுத்த லைன்ல போய்டலாம்னேன்" . எப்பவும் போல ரங்க்ஸ் நான் சொன்னதை கேக்கல (ஹும்..............)

ஒரு வழியா எங்க முறை வந்தது... பார்டர் ஆபிசர் ரங்க்ஸ்கிட்ட "வண்டில என்ன இருக்கு?"னான்

என்னை கேட்டு இருந்தா "டயர், லைட், பிரேக்,பெட்ரோல்..................... எல்லாம் இருக்கு" னு சரியா சொல்லி இருப்பேன்....

ரங்க்ஸ் "Nothing major " னார்.... அடடே மேஜர் சுந்தராஜன் எல்லாம் எப்போ வந்தார் நமக்கு தெரியாமனு நான் யோசிச்சுட்டு இருக்கறப்பவே அந்த ஆபிசர் "Any food / eatables?" னு கேக்க ரங்க்ஸ் "No" னார்

"ஏன் இப்படி பொய் சொல்றார்? ஒரு வேளை நம்ம கைபக்குவத்தை பாத்தா ஆபிசர் பங்கு கேப்பார்னு (ஹி ஹி ஹி) ரங்க்ஸ் பொய் சொல்றாரா" னு நான் யோசிச்சுட்டு இருக்கறப்பவே அந்த ஆபிசர் "Can I have your keys?" னார். "கிழிஞ்சது கிருஷ்ணகிரி" னு அப்பவே தோணுச்சு

ரங்க்ஸ் ரெம்ப பவ்யமா கார் சாவிய ஆபிசர் கிட்ட குடுத்துட்டு என்னை பாத்து "இதுக்கு தான் நேரத்துல போலாம்னேன்" னார்

என்ன கொடுமை சார் இது? இவர் தப்பா answer சொன்னதுக்கும் ஆபிசர் சாவி கேட்டதுக்கும் நான் லேட்ஆ கிளம்பனதுக்கும் என்னங்க சம்மந்தம்? நீங்களே கேளுங்க இந்த அநியாயத்த...

ஆபிசர் back trunk எல்லாம் ஓபன் பண்ணி செக் பண்ணிட்டு "you got some fruits in the trunk, you said no eatables, there is a $100 fine for falsifying, you know?" னார்

என்னடா இது வம்புன்னு செம டென்ஷன் ஆய்ட்டேன். நல்ல வேளை பின்னாடி சீட்க்கு கீழ இருந்த சாப்பாட்டு கூடைய பாக்கல.... fineம் போடலை...

நான் tensionல முழிச்ச முழில என்மேல ஆபிசர்க்கு சந்தேகம் வந்து நான் ஒசாமாவுக்கு ஒண்ணு விட்ட தங்கச்சின்னு நெனச்சாரோ என்னமோ மறுபடியும் ரங்க்ஸ்கிட்ட "What is your country of citizenship?"னு கேக்க எக்கசக்க டென்ஷன்ல இருந்த ரங்க்ஸ் "India" னார்

இப்போ எங்களை விட ஆபிசர் செம டென்ஷன் ஆய்ட்டார் "What? You gave me a canadian passport man!!!!?" னார் ஆபிசர்

"O...sorry .... we have dual citizenship .... so said so...." ன்னு ஒரு வழியா சமாளிச்சோம்

நான் நெனச்சேன்... அவ்ளோ தான் வண்டிய திருப்பி வீட்டுக்கு போய் கட்டு சாதத்த ஒரு பிடி பிடிச்சுட்டு ஒரு தூக்கம் போட வேண்டியதான்னு.... ஆன அந்த ஆபிசர் அப்புறம் CEO போஸ்ட்க்கு ஆளு எடுக்கற மாதிரி நெறைய கேள்வி எல்லாம் கேட்டாரு...

அப்புறம இப்படி கொழப்பற கேஸ்களால அமெரிக்காவுக்கு எந்த பாதகமும் வராதுன்னு நெனச்சாரோ என்னமோ போங்கன்னு விட்டுட்டார் ஆபிசர்

"உங்களுக்கு நல்ல நேரத்துல நம்ம நாட்டுப்பற்று வந்தது போங்க" ன்னு நான் அப்புறமா ரங்க்ஸ்ஐ கலாய்க்க

"ஆமா... டென்ஷன் பண்ணிட்டான் பாவி... பாம் வெக்கரவனை எல்லாம் Band வாத்தியத்தோட அனுப்பிடுவான்... நம்மள போட்டு உயிர வாங்குவான்.  இருந்தாலும்  நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே.... dual citizenship இருக்கறதால நான் இந்தியன் சிட்டிசனும் தானே" ன்னு ரங்க்ஸ் சாமாளிச்சார்.  என்னமோ சொல்லுவாங்களே "குப்பற விழுந்தாலும் மீசைல.... " சரி சரி விடுங்க பழகி போச்சு

இதுல நாங்க கத்துகிட்டது "ஆபிசர் கேட்டா இனிமே இருக்கறதை சொல்லிடணும்.... பாம்ஆ இருந்தாலும் சரி பின்னூசியா இருந்தாலும் சரி" ஹா ஹா ஹா....  (அப்பாடா மெசேஜ் சொல்லியாச்சு.....)

இப்படி டென்ஷன்ஆ தொடங்கின எங்க பயணம் அதுக்கப்புறம் சுபமாவே போச்சு... (இன்னிக்கி தான் "விபரீதம் கிபரீதம்" னு இல்லாம ஒரு நல்ல வார்த்தை சொல்லி இருக்கேன்னு யாருங்க அங்க முணுமுணுக்கறது..... அந்த பார்டர் ஆபிசர் எனக்கு நல்லா தெரியும் (பின்ன????) அவர் கிட்ட புடிச்சு குடுத்துடுவேன்... ஆமா....சொல்லிட்டேன்....ஹி ஹி ஹி)

பார்டர் தாண்டி கொஞ்ச தூரம் போனப்புறம் வழி பூரா ஒரே பச்சை பசேல் தான்... ஒரு வீடு / கடை கூட இல்ல... அங்க அங்க ஒரு தோட்டம் / மாட்டு கொட்டகை இல்லேன்னா குதிரை பண்ணை....அப்புறம் வெறும் மலை / காடு தான்.... கீழ இந்த படங்கள் பாருங்க....இதை எல்லாம் பாத்துட்டே அப்படியே போயிட்டு இருந்தோமா....அப்புறம்....ஐயோ....இது என்னனு யாரோ டென்ஷன் ஆகற மாதிரி இருக்கே.. y tension y tension....no tension... ஹி ஹி ஹி....எல்லாம் நம்ம கை வண்ணம் தான் (இதை படிக்கற யாராச்சும் ஜோதிட மாமணியா இருந்தா... ரேகை பாத்து எனக்கு லாட்டரி விழுமா இல்ல போக போக சோத்துக்கே லாட்டரி தானான்னு சொல்லுங்க...ஹி ஹி ஹி)

என்ன தான் அழகான பச்சை பசேல் காட்சியா இருந்தாலும் அஞ்சு மணி நேரம் பாக்க முடியுமா சொல்லுங்க? எனக்கு தூர பயணங்கள் எப்பவும் கொஞ்சம் கஷ்டம் தான்...ஒரு மணி நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு

எதுனா புக் படிக்கலாம்னா "போட்டு இருக்கற சோடா புட்டி பத்தலையா?"னு ஒருத்தர் டென்ஷன் ஆவர்.... சரி எதுக்கு வம்புன்னு மருதாணி வெக்க ஆரம்பிச்சுட்டேன்

எனக்கு மருதாணினா ரெம்ப இஷ்டம்... மெஹந்தி கோன் வாங்கி வெச்சு போட நேரமே இருக்கல கிளம்பரவரை... முடிஞ்சா போடலாம்னு bag ல வெச்சேன் (இதை அந்த ஆபீசர் வேற பாத்து இருந்தா.... வம்பு தான் அப்படின்னு அப்புறம் தோணுச்சு)

வண்டி ஓட்டத்துல எப்படியோ சமாளிச்சு கோணல் மாணலா மருதாணி போட்டேன்... Just one of my ways to kill the time...ha ha ha
 
அப்புறம் Pittsburgh Holiday-Inn ல போய் செக்-இன் பண்ணிட்டு ஒரு ride போனோம்
 
அந்த ஊரே நம்ம ஊட்டி மாதிரி மலை பிரதேசம் மாதிரி தான் இருந்தது... சம வெளி ரெம்ப குறைவு தான். அப்போ அப்போ மழை வெயில்னு மாறி மாறி நம்ம கேரளா மாதிரி இருந்தது
 
அப்போ வெளிச்சம் குறைவா இருந்ததால போட்டோஸ் அவ்ளோ நல்ல வர்ல ("இது வரைக்கும் போட்டது மட்டும் நல்லா இருக்குன்னு யாரு சொன்னா"னு கேக்கறீங்களா? என்னங்க செய்ய? நம்ம திறமைக்கு ஏத்த கேமரா ரங்க்ஸ் வாங்கி தரலியே.... இந்த ஓட்டை கேமரா வெச்சு இவ்ளோ தான் எடுக்க முடிஞ்சுது....ஹி ஹி ஹி)
 
அப்புறம் கடை கடையா சுத்தினோம். சொன்னா நம்ப மாட்டீங்க... கனடா விட அமெரிக்கால dresses ரெம்ப விலை குறைவு. டாலர் value கொஞ்சம் கம்மி ஆகறப்ப ஷாப்பிங் பண்றதுக்குன்னே கனடால இருந்து பார்டர் கிராஸ் பண்ணி போறவங்க உண்டு. இல்லைனாலும் இங்க விட அமெரிக்கால வாங்கினா லாபம் தான்

அப்புறம் அடுத்த நாள் சனிக்கிழமை காலைல எழுந்து கோவில் கிளம்பினோம். சொல்லவே வேண்டாம் என்னால தான் லேட். புடவை எல்லாம் கட்டி கெளம்ப லேட் ஆகாதா என்ன? சுடிதார் போட்டா வரம் தரமாட்டேன்னு சாமி சொல்லுச்சானு இங்க ஒருத்தர் ரெம்ப டென்ஷன் ஆனது தனி கதை

சரி அதை விடுங்க... அப்பவே லேசா மழை தூர ஆரம்பிச்சது. கொஞ்சம் சின்ன குன்று மாதிரி மேல இருந்தது கோவில்.... இங்க S.V.Temple னு சொன்னா நம்ம மக்களுக்கு நல்லா புரியும்.... அதாவது ஸ்ரீ வெங்கடேஸ்வரா டெம்பிள்.... சாமிக்கும் shortform தான் போங்க....

ஒம்பது மணிக்கி சுப்ரபாத பூஜை. இந்த ஊர்ல குளிர்ல சாமிக்கி கூட லேட் திருப்பள்ளி எழுச்சி தான், கண்டுக்காதீங்க. ஒம்பதரை மணி சத்தியநாராயணா பூஜைக்கு கட்டி அதுல கலந்துகிட்டோம். நல்ல திருப்தியான பூஜை / தரிசனம்

முடிச்சுட்டு வந்து லட்டு பிரசாதம் வாங்கிட்டு அங்கேயே புளியோதரை, தயிர் சாதம், உப்புமா, சாம்பார் சாதம் எல்லாம் விக்கறாங்க. எது வாங்கினாலும் ரெண்டு டாலர். எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு வாங்கிட்டு கிளம்பினோம்

நல்ல மழை. கோவில் முகப்பு நல்லா போட்டோ எடுக்க முடியல மழைல.... இருந்தாலும் சில கிளிக்ஸ்...இதோ....
 
 
 
 


அப்பாடா.... இப்பவே பெரிய பதிவா போச்சு.... எனவே மிச்ச ஊர் சுத்தலை இன்னொரு பதிவா போடறேனே.... சரிங்க அப்புறம் பாக்கலாம்..... bye bye ...

தொடரும்.... ("பயண கட்டுரைக்கி தொடரும் போட்ட மொத ஆள் நீ தான்" னு யாருங்க அங்க திட்டறது.... கூப்பிடுங்க அந்த ஆபிசர.... ஹி ஹி ஹி)

66 பேரு சொல்லி இருக்காக:

LK said...

me the first.. naan appuram mng padichitu comment podaren ippa varatta

நசரேயன் said...

//நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட
நாள்...//

மாட்டிகிட்டது நீங்க மாதிரி தெரியலையே !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஐய்யோ நிஜம்மாவே திடீர்ன்னு ஒரு கை குறுக்கவந்து நல்ல பதிவ படிக்கவிடாம செய்யுதேன்னு நினைச்சேன்.. அப்பறம் தான் புரிஞ்சது சரி சரி.. ;)

DJ said...

Borderல் த‌னியே போனால்தான் வ‌றுத்தெடுப்பான்க‌ள் என்று நினைத்தேன்; குடும்ப‌மாய்ப் போனாலும் விதிவில‌க்கு இல்லைப் போலும்.

Krishnaveni said...

Mehandi nalla irukku, photos armayaa irukku, unga ezhuththum arumai Bhuvana.

dheva said...

அய்யோ....உங்க கூட சேர்ந்து ஊர் சுத்துன பீல்ங்ங்குக.....ரெஸ்ட் எடுத்துட்டு வாரோம்....! வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

இதை படிக்கறவங்க எல்லாருக்கும்..நேர்லேயே உங்ககூட டூர் வந்த அனுபவத்த குடுத்திட்டங்க..
பார்டர் சுங்கத்துல மாட்டுனது, தப்பிச்சது, பிட்ஸ்பர்க்
கோவில், பூஜை இப்படி எல்லாம் அருமை..அடுத்த பதிவு ஊர் சுத்த ரெடியாய்க்கிறோம்....

தமிழ் உதயம் said...

பயணக்கதை நன்றாக இருந்தது.

.அதாவது மாட்டிகிட்ட நாள்...

மாட்டிக்கிட்டது நீங்களா அவரா,

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////அது வேற ஒண்ணும் இல்லைங்க. நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட நாள்... இன்னும் புரியலையா? மணநாள்..... திருமணநாள்... (ஹி ஹி ஹி)/////

ஆமா இது உங்க வீட்டுக்கார அம்மாவிற்கு தெரிந்தால் அப்பறம் .உங்களுக்கு நிரந்தரமாக லீவுதான் . பார்த்துக்காங்க

Porkodi (பொற்கொடி) said...

அப்பாடா.. எங்களுக்கு ஜாலி பக்கத்து வீடு மாதிரி வான்கூவர்ல போய் கூவிட்டு வருவோம். :D

Porkodi (பொற்கொடி) said...

தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் அ.த.! பயணம் பத்தி எல்லாம் 50-60 பகுதி போட்ட துளசி டீச்சர் இருக்கையிலே இதெல்லாம் ஜுஜுபி! ஆனா உங்க ப்ராக்கெட் கமெண்ட் எல்லாம் எடுத்துட்டாலே பாதி போஸ்ட் காலி ஆயிடுமே, மீதியை கொஞ்சம் தயை பண்ணி போடுறது? ;)

அனாமிகா துவாரகன் said...

////அது வேற ஒண்ணும் இல்லைங்க. நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட நாள்... இன்னும் புரியலையா? மணநாள்..... திருமணநாள்... (ஹி ஹி ஹி)/////

ஹல்லோலோலோலோ Madam, அது அதிம்பேர் சொல்ல வேண்டியது. நல்லா சுத்தறீங்க ரீலு. ஹூக்கும். ஆமா, அப்புறம் 100 டொலர் fine கட்டினீங்களா? உங்க இட்லில கொஞ்சம் எடுத்துண்டு போய் அந்த ஆபிசருக்கு கொடுத்திருக்கலாம். அதுக்கப்புறம் இந்தியன்னாலே சல்யூட் அடிச்சு உள்ள விட்டிருப்பாங்க.ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

//ஆனா உங்க ப்ராக்கெட் கமெண்ட் எல்லாம் எடுத்துட்டாலே பாதி போஸ்ட் காலி ஆயிடுமே, மீதியை கொஞ்சம் தயை பண்ணி போடுறது?//
அவங்க பிராக்கட்ல போடறது தான் கிளாஸ். அதையும் எடுத்துட்டா அப்புறம் யாரு இவங்க புளொக் படிப்பாங்க. அவங்க மனசாட்சியின் குரல் (பிராக்கட்ல இருக்கறது) தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இல்லையா புவ்வ்வ்வ்வ்ன்ன்ன்ன்ன்னாக்கா.

திருமண நாள் வாழ்த்துக்கள்.

அநன்யா மஹாதேவன் said...

வழக்கம் போல ரொம்ப இண்ட்ரெஸ்டிங் நரேஷன் அ.த. நல்லா எஞ்சாய் பண்ணேன். நிச்சியமா உன் திருட்டு முழின்னால தான் அந்த ஆபீஸர் சந்தேகிச்சு இருப்பான்னு தோணுது. எனிவே தப்பிச்சுட்டியே! குட். அடுத்த பார்டு சீக்கிரம் போட்ரு!`

அநன்யா மஹாதேவன் said...

ஹேய் மெஹந்தி ரொம்ப அழகு!

Porkodi (பொற்கொடி) said...

கமெண்ட் சுவாரஸ்யம் உண்மை தான், அப்போ அதுக்கு பதிவு நீளமாயிடுச்சுனு லுலுலாயி காரணமெல்லாம் சொல்லக் கூடாதுல்ல?

Porkodi (பொற்கொடி) said...

அப்புறம் லாங் ட்ரைவ் பிடிக்காதா!!!!! எனக்கும் ரங்குவுக்கும் ரொம்ப பிடிக்கும்.. அப்போ தானே வேற வேலை வெட்டி இல்லாம மணிக்கணக்கா பேச ஒரு வாய்ப்பு? அது எப்படி அது போரடிக்கலாம்! பிட்ஸ்பர்குக்கே இயற்கை காட்சிகள்னு உருகல்ஸ்னா நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வரணுங்க அம்மணி.. and, cool mehendi! ;)

Madhuram said...

Bhuvana belated wedding anniversary wishes. Naanga philly la irundhukitte SV Temple pogala. Ulagame suthiyirukkom anga pogala. Supera irundhadhu unga travelogue.

@ Porkodi: அப்புறம் லாங் ட்ரைவ் பிடிக்காதா!!!!! எனக்கும் ரங்குவுக்கும் ரொம்ப பிடிக்கும்.. அப்போ தானே வேற வேலை வெட்டி இல்லாம மணிக்கணக்கா பேச ஒரு வாய்ப்பு? அது எப்படி அது போரடிக்கலாம்!

Madam ungalukku kalyanam aagi evvalavu varusham aachu? 3 or 4? Engala madhiri 7-8 years aagi and additionala oru kuzhandhaiyum vandhutta, long drive plan kooda panna matteenga. Local kadaiku pogaradhu kooda oru long trip madhiri plan pannanum. Adhanala ippellam enakku enga veede sorgam, rangamani engayavadhu polam sonnale azhuvaachiya varum.

Indha Bhuvana madhiri, sirukkum breakfast la irundhu dessert varaikkum veetula irundhu kattikittu poganum. Enakku adhu oru tensionana vela, apparam adhu enna vacation? Anga poyum naan, partial cooking (in microwave oven), serving, cleaning etc etc pannanum, sir jammunu TV paaparu hotel room la. Adhuku andha velaiya naan veetuleye pannittu poiduvene. So ipellam maximum 1 day trip dhaan.

ராவி said...

நானும் Buffallo, NY இல் இருந்தப்ப Pittsburg அடிக்கடி போய் இருக்கேன். ஆனா நீங்க சொல்லும் போது இன்னும் interest ஆ இருக்கு.
Border cross பண்ண 3 bridge இருக்கு. விசிட் வரவங்க Peace and Rainbow bridge இல் கிராஸ் செய்வதால் Imigration officer க்கு யாரு brown ஆ இருந்தாலும் பின் லேடன் தம்பி/தங்கச்சி தான். இன்னொரு bridge (Queenston-Lewiston Bridge) பெரும்பாலும் local இல் உள்ளவங்க தான் use பண்ணுவாங்க. அதில் இவ்வளவு கெடுபிடி இருக்காது. next time அந்த bridge ட்ரை பண்ணுங்க. நான் காலை 8 மணிக்கு அந்த bridge கிராஸ் பண்ணி உங்க ஊருக்கு வரும்போது opposite side ரோடு (Canada to US) empty யா இருக்கும்.

ஜெய்லானி said...

நல்ல ஜோக்...!!

கைய பாத்தா குழப்ப வாதியா தெரியுதே !! அதாவது அடுத்தவங்கள குழப்பறவாதியா ... இந்த படம்தான் நல்லா பளீச்சுன்னு இருக்கு அழகா ..!!

கட்டு சோத்துக்கு பதில் இட்லி நாலு ஆபீசருக்கு குடுத்திருந்தா ஃபைன் வந்திருக்காது . ஹி..ஹி... உங்க புகழ் கொடி கட்டி பறந்திருக்கும்

ஹேமா said...

ஓ...திருமணநாளுக்கு மாட்டிக்கிட்ட நாள்ன்னும் சொல்லலாமா !வாழ்த்துகள் தங்கமணி.

பயணக் கட்டுரை உங்களோடு பயணம் செய்த அனுபவமாய் எழுதியது அற்புதம்.

ராவி said...

நான் ஒரு தடவை ஒரு Immigration officer கிட்ட வாங்கி கட்டி இருக்கேன். நல்ல தூக்கத்தில இருந்த தங்க்ஸ் கிட்ட officer கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன். அதுக்கு என்னை பார்த்து " Sir I am asking her" அப்படினா அந்த அம்மா.

அப்புறம் ஆபத்தான, தடை செய்யப்பட்ட பொருள் எதாவது வச்சி இருக்கியா ன்னு அதி புத்திசாலிதனமான ஒரு formality கேள்வி கேட்டு விட்டு சரி போ அப்பிடின்னு போக சொல்லிருச்சி.
(இதெல்லாம் வச்சிக்கிட்டு வரவன் லிஸ்ட் போட்டா குடுப்பான்!!!!.)

ராவி said...

Belated Wishes

அப்பாவி தங்கமணி said...

@ LK - வாங்க first .... வாங்க வாங்க...

@ நசரேயன் - //மாட்டிகிட்டது நீங்க மாதிரி தெரியலையே !! // ஆஹா... நமக்கு எதிரிங்க எண்ணிக்கை கூடிகிட்டே போகுதே

@ முத்துலெட்சுமி - ஹா ஹா ஹா... நன்றிங்க

@ DJ - ஆமாங்க.... ஊரு மொத்தமும் சேந்து போனாலும் இதே கொடுமை தான்... நாங்களும் கொஞ்சம் சொதப்பினோங்கறது தனிக்கதை...முதல் வருகைக்கி நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி.... ரெம்ப டிசைன் போட்டா கார் ஓட்டத்துல சரி வராதுன்னு traditional புள்ளி டிசைன்க்கு போயிட்டேன்.... மெஹந்தி தப்பிச்சது...

@ dheva - வாங்க வாங்க.... நன்றிங்க

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க .... நானும் ரெடி ஆகிடறேன்

@ தமிழ் உதயம் - நன்றிங்க. //மாட்டிக்கிட்டது நீங்களா அவரா, /// அதை நீங்க அவர் கிட்ட தான் கேக்கணும்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - ஹலோ சார்.... வீட்டுக்கார அம்மா நான் தான்.... (ரெம்ப கொழப்பிட்டனோ... எப்பவும் போலத்தானே எழுதினேன்....கஷ்டம் தான்...)

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - vancouver பக்கத்துக்கு வீடா... ஆஹா... குடுத்து வெச்ச ஆளுங்க தான்... winter ஒலிம்பிக்ஸ் எல்லாம் உங்க வீட்டு ஜன்னல் வழியாவே பாத்தீங்களோ...?????????????

@ பொற்கொடி - ஓ... 50-60 பகுதி போட்டவங்க எல்லாம் இருக்காங்களா? அப்போ சரி .... (இன்னும் ஒரு நாலு பார்ட் இழுப்போம் அப்போ... ஹி ஹி ஹி)

@ பொற்கொடி - //ஆனா உங்க ப்ராக்கெட் கமெண்ட் எல்லாம் எடுத்துட்டாலே பாதி போஸ்ட் காலி ஆயிடுமே, மீதியை கொஞ்சம் தயை பண்ணி போடுறது? ;) //
நானே அப்படி இப்படி தேத்தி ஒரு "50 போஸ்ட் கண்ட அப்பாவி தங்கமணி"னு பேரு வாங்கலாம்னு பாக்கறேன்... விட மாட்டீங்க போல இருக்கே... (பொற்கொடி... நாம தனியா பேசுவோம் என்ன?)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - வாம்மா...மின்னல்.... இன்னும் காணோமேன்னு நெனச்சுட்டே இருந்தேன்....
//அது அதிம்பேர் சொல்ல வேண்டியது.// அதை நாங்க சொல்லணும்... குப்ப கொட்டின எங்களுக்கில்ல தெரியும்.... நூறு டாலர் எல்லாம் கட்டலை... என்னோட பால் வடியும் முகத்த பாத்து விட்டுடாங்க தெரியுமா...

//உங்க இட்லில கொஞ்சம் எடுத்துண்டு போய் அந்த ஆபிசருக்கு கொடுத்திருக்கலாம். அதுக்கப்புறம் இந்தியன்னாலே சல்யூட் அடிச்சு உள்ள விட்டிருப்பாங்க//
மொதல்ல உங்க டீச்சர்க்கு அனுப்பறேன் ஒரு டஜன்....ஹி ஹி ஹி

@ அனாமிகா - //அவங்க பிராக்கட்ல போடறது தான் கிளாஸ். அதையும் எடுத்துட்டா அப்புறம் யாரு இவங்க புளொக் படிப்பாங்க// வாட் இஸ் திஸ்????????????????????
(ஆஹா நம்ம தொழில் ரகசியம் எல்லாம் எல்லாரும் கண்டு பிடிச்சுட்டாங்களே ... சீக்கரம் technique மாத்தணும்). மணநாள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ...

அப்பாவி தங்கமணி said...

@ அனன்யா - //உன் திருட்டு முழின்னால தான் அந்த ஆபீஸர் சந்தேகிச்சு இருப்பான்னு தோணுது// "You too, Brutus?"

@ அனன்யா - //ஹேய் மெஹந்தி ரொம்ப அழகு! // அது என்னோட கைலங்கரதால தான் அழகு தெரியுமா? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - நாம தனியா பேசி ஒரு டீல்க்கு வருவோம் கொடி... ஹி ஹி ஹி

@ பொற்கொடி - //அப்போ தானே வேற வேலை வெட்டி இல்லாம மணிக்கணக்கா பேச ஒரு வாய்ப்பு?// மணிகணக்கா மாத்தி மாத்தி டென்ஷன் பண்ணிக்க ஒரு வாய்ப்புன்னு வேணா வெச்சுக்கலாம்.... (ஹா ஹா ஹா) உங்க ஊருக்கா? நெஜமாவா கூப்பிடறீங்க? வரேன்னு சொன்னா காலி பண்ணிட்டு போய்ற மாடீங்களே... வரோம் வரோம்... நீங்களும் இந்த பக்கம் வாங்களேன்... சம்பிரதாயமா சொல்லல.....

அப்பாவி தங்கமணி said...

@ Madhuram - வாங்க வாங்க வாங்க... எங்க ஆளே காணோம்? நீங்க அந்த கோவில் போனதில்லையா.... actual ஆ போறதுக்கு முன்னாடி உங்கள கூப்ட்டு அந்த ஊர்ல வேற என்ன பாக்கலாம்னு கேக்கனும்னு நெனச்சுட்டு அப்புறம் மறந்துட்டேன்.... நல்ல சொன்னிங்க லாங் டிரைவ் பத்தி... same blood ....

@ ராவி - ஓ.... Queenston-Lewiston Bridge பெட்டர்ஆ.....அது என்னமோ இந்த ஆகாவளி GPS இந்த ரூட்தாங்க காட்டுச்சு....அடுத்த முறை முயற்சி செஞ்சு பாக்குறோம்... நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - என்னோட டென்ஷன் உங்களுக்கு ஜோக்கா... அது சரி... நானா குழப்பரவாதி.... நேரம்தேன்?
//இந்த படம்தான் நல்லா பளீச்சுன்னு இருக்கு அழகா ..!!// அது என்னோட கையாலதான்... அதே ஓட்டை கேமரா தான்... இட்லியா... உங்களுக்கு அனுப்பறேன் இருங்க....

@ ஹேமா - நன்றிங்க ஹேமா... ஆமாங்க அப்படியும் சொல்லலாம்... (உண்மையா சொல்லணும்னா...ஹா ஹா ஹா) நன்றிங்க

@ ராவி - //(இதெல்லாம் வச்சிக்கிட்டு வரவன் லிஸ்ட் போட்டா குடுப்பான்!!!!.) // ஹா ஹா ஹா....நல்லா சொன்னிங்க ரவி. அந்த template கேள்விகளை ஒழிக்கணும் மொதல்ல... Thanks for your wishes

ராவி said...

Little off the topic. Dual Citizenship அப்படின்னு சொன்னதும் நம்ம இந்திய அரசாங்கம் பண்ணின ஒரு comedy ஞாபகம் வந்தது. (http://www.indiacgny.org/php/showHighLightDet.php?h_id=145&key=) இந்த rule ஐ 2 வாரத்தில 4 முறை மாத்தி கடைசியா இதில செட்டில் ஆகி இருக்காங்க . ($175 குடு இல்லை இல்லை $20 மட்டும் கொடு அப்படின்னு ஏக confusion)

இதை என் முதல் பதிவா எழுதலாம்ன்னு நினைச்சேன். அப்பறம் நம்ம மக்கள்ஸ் US போனா இந்தியாவை திட்டுவியான்னு கடிப்பாங்கன்னு விட்டேன். முதல் பதிவுலேயை கடி வாங்கனுமா ?

I think this now mandatory for Dual citizens. You may want to check this.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாக இருந்தது...இன்னும் சில ஃபோட்டோஸ் போட்டிருக்கலாம்தான்...

Vino said...

nice narration

LK said...

//தொடரும்.... ("பயண கட்டுரைக்கி தொடரும் போட்ட மொத ஆள் நீ தான்" னு யாருங்க அங்க திட்டறது.... கூப்பிடுங்க அந்த ஆபிசர.... ஹி ஹி ஹி)////

இந்த நினைப்பு வேற இருக்க எங்க கீதா மாமி ?? சீக்கிரம் வாங்க.
\
//முடிச்சுட்டு வந்து லட்டு பிரசாதம் வாங்கிட்டு அங்கேயே புளியோதரை, தயிர் சாதம், உப்புமா, சாம்பார் சாதம் எல்லாம் விக்கறாங்க. எது வாங்கினாலும் ரெண்டு டாலர். எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு வாங்கிட்டு கிளம்பினோம்///
அதானே பார்த்தன். எது முக்கியமோ அத மிஸ் பண்ணிடியோன்னு

/கனடா விட அமெரிக்கால dresses ரெம்ப விலை குறைவு.//

ரங்கஸ் பர்ஸ்/ கார்டுக்கு வந்த சோதனை

/நம்ம திறமைக்கு ஏத்த கேமரா ரங்க்ஸ் வாங்கி தரலியே.... இந்த ஓட்டை கேமரா வெச்சு இவ்ளோ தான் எடுக்க முடிஞ்சுது...//

ஆடத் தெரியாதவன் தெரு கோணல்னு சொன்ன மாதிரி

சி. கருணாகரசு said...

மிக நீண்ண்ண்ண்ண்ட பயணமா இருக்கு.
உங்க அன்றைய மணநாளுக்கு இன்றைக்கு என் வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

US is always 1000 times better than Canada

தக்குடுபாண்டி said...

//பாம் வெக்கரவனை எல்லாம் Band வாத்தியத்தோட அனுப்பிடுவான்... நம்மள போட்டு உயிர வாங்குவான்.// LOL adappavi akka!!...:)

வெங்கட் நாகராஜ் said...

நானும் பிட்ஸ்பர்க் போனது போல இருந்தது. தொடருங்கள்.

"சாமிக்கும் shortform தான் போங்க...."

"Short and Sweet" ன்னு நினைச்சு இருப்பாங்களோ என்னமோ! :)

Karthick Chidambaram said...

Canada passport vachchirundha indhiyarukku USila erpatta anupavam sooperunga :-)

அமைதிச்சாரல் said...

//என்னை கேட்டு இருந்தா "டயர், லைட், பிரேக்,பெட்ரோல் எல்லாம் இருக்கு" னு சரியா சொல்லி இருப்பேன்//

இன்னும் ஸ்டீயரிங், க்ளட்ச், மிர்ரர், சீட், சீட்பெல்ட், காருக்குள்ள அடப்பாவி தங்கமணி, ரங்க்ஸ் எல்லாம் சொல்லியிருக்கலாமில்ல. காலைல நீங்களே செஞ்ச இட்லிய சாப்டுட்டு புறப்பட்டீங்களாக்கும்?.. இப்படி மறதி வந்திருக்கே :-))))

ரெண்டு இட்லிய டோல் ஆபிசருக்கு கொடுத்திருந்தா மனுஷன் வாயத்திறந்திருப்பாரா!! உங்களுக்கு அடுத்தாப்ல வர்றவங்களும் பொழச்சிப்போயிருப்பாங்கல்ல :-)

அமைதிச்சாரல் said...

மிகமிக தாமதமான மண நாள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அது ஏன் உணவுப் பொருட்கள் கொண்டுபோகக்கூடாது? உடையகங்கள், திரையரங்குகளில்தானே இப்படி சொல்வார்கள்? நாடு விட்டு நாடு போகும்போதுமா? ஆச்சர்யம். காரணம் தெரிந்தால் சொல்லுங்க.

மணநாள் வாழ்த்துகள்!!

சின்ன அம்மிணி said...

பார்டர் தாண்டி போகும்போது உணவுப்பொருள் இருந்தா சும்மா விடுவாங்களா. நல்ல வேளை வெறும் அபராதத்தோட விட்டாங்க. சில சமயம் திருப்பி அனுப்பிச்சுடுவாங்க

தக்குடுபாண்டி said...

//நான் ஆயுள் கைதி ஆன நாள்...அதாவது மாட்டிகிட்ட நாள்... இன்னும் புரியலையா? மணநாள்..... திருமணநாள்... // ithu fulla unga rangu solla vendiya vasanam adappavi akka!!..:PP

தக்குடுபாண்டி said...

Narayanaaa!! next timeaavathu idly olunga varanum saami!!!nu neenga pray panninathaa US-la yellarum peesikkaraaley!! unmaiyaa adappavi akka??.....:))))

goma said...

ஆயுள் கைதியானாலும் அப்பப்போ பெயில் ஜாமின் எல்லாம் உண்டுதானே.....

LK said...

//ரெண்டு இட்லிய டோல் ஆபிசருக்கு கொடுத்திருந்தா மனுஷன் வாயத்திறந்திருப்பாரா!! உங்களுக்கு அடுத்தாப்ல வர்றவங்களும் பொழச்சிப்போயிருப்பாங்கல்ல :-)//

ungaluku appavi mela en kobam. avangala attmept murder casela matti vida pakakreenga

vgr said...

Hey, Very nice....romba nanna ezhudirukeergal....Great job!!!

இராமசாமி கண்ணண் said...

கலக்கறீங்க.

சுசி said...

சூப்பர் புவனா..

பிந்திய மண நாள் வாழ்த்துக்களும்..

அதான் உங்களுக்கு அப்பவே லாட்டரி விழுந்திடுச்சே.. :))

Mahi said...

பிலேட்டட் வெடிங் ஆனிவர்ஸரி விஷஸ் புவனா!

இங்கே,ஒரொரு ஸ்டேட்ல ஸ்டேட் பார்டர் தாண்டும்போதும் செக் பண்ணறாங்களே..நாங்களும் வேற ஸ்டேட் நம்பர் ப்ளேட்டொடுதான் வந்தோம்.ஆனா,அந்த ஆபீஸர் அக்கா எங்க அப்பாவி முகங்களையும்:) கார்ல இருந்த மூட்டை-முடிச்சுகளையும் பார்த்துட்டு ஓகே-ன்னு அனுப்பிடுச்சு. :):)

ட்ராவல் பண்ணும்போதுகூட இப்படி அழகா மெஹந்தி போடுவீங்களா? சிம்பிள் & ஸ்வீட்டா இருக்கு.

கோயில் போட்டோசும் நல்லா இருக்கு.அடுத்து வருவது.. ஹெர்ஷீஸ்..கோக்ககோலா? சீக்கிரம் கன்டினியூ பண்ணுங்க!

Anonymous said...

bala: nice and lively travel post..

அப்பாவி தங்கமணி said...

@ ராவி - We got the dual thing already. Yeah, I heard about that change in rates etc. Glad to know it is settled now. Thanks for the info anyway

@ ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம். ஆமாங்க எனக்கும் அப்படி தான் தோணிச்சு

@ Vino - தேங்க்ஸ் வினோ

அப்பாவி தங்கமணி said...

@ LK said -
//இந்த நினைப்பு வேற இருக்க எங்க கீதா மாமி ?? சீக்கிரம் வாங்க.//
ஹி ஹி ஹி...

//அதானே பார்த்தன். எது முக்கியமோ அத மிஸ் பண்ணிடியோன்னு//
வாழ்வின் ஆதாரத்த விட முடியுமா பாஸ்

//ரங்கஸ் பர்ஸ்/ கார்டுக்கு வந்த சோதனை//
வாழ்க்கையே குடுத்து இருக்கோமாமா.... பர்ஸ்/ கார்டு பெருசா போச்சா உங்களுக்கெல்லாம்

//ஆடத் தெரியாதவன் தெரு கோணல்னு சொன்ன மாதிரி//
இதெல்லாம் தனியா பேசிக்கலாம்....சபைல வெச்சு என்னதிது சின்ன புள்ளதனமா....ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ சி. கருணாகரசு - ஆமாங்க கொஞ்சம் நீண்ட பயணம் தான். நன்றிங்க வாழ்த்துகளுக்கு

@ ராம்ஜி_யாஹூ - ஆஹா... ஆனாலும் இருக்கற ஊரை விட்டு குடுக்க முடியாதே பாஸ்.... ரெண்டு ஊர்லயும் நல்லதும் இருக்கு வேண்டாததும் இருக்கு.... டீல்?

@ தக்குடு - இது என்ன வர வர லிமிடெட் மீல்ஸ் மாதிரி லிமிடெட் கமெண்ட்ஸ்ஆ? நன்றிங்கோ

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்.... அப்படி தான் நெனசுட்டங்க போல இருக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Karthick Chidambaram - நன்றிங்க கார்த்திக்

@ அமைதிச்சாரல் - //நீங்களே செஞ்ச இட்லிய சாப்டுட்டு புறப்பட்டீங்களாக்கும்?.. இப்படி மறதி வந்திருக்கே//
இட்லிய சாப்டாம போனதால தான்னு நினைக்கிறேன்... (என்கிட்டயேவா:-)))))

//ரெண்டு இட்லிய டோல் ஆபிசருக்கு கொடுத்திருந்தா மனுஷன் வாயத்திறந்திருப்பாரா//
அதான் தப்பா போச்சு.... குடுத்து இருந்தா மாலை மரியாதையோட போயிருக்கலாம்... குட் பாயிண்ட் அடுத்த வாட்டி ட்ரை பண்றேன்... ஹி ஹி ஹி

வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ

@ ஹுஸைனம்மா - உணவுப் பொருட்கள் கொண்டுபோகக்கூடாதுனு இல்லைங்க.... நாம பயணத்துல சாப்பிட வேணும்கறதை கொண்டு போலாம்... நெறைய எடுத்துட்டு போனா அதாவது மளிகை மாதிரி கொண்டு போன சில சமயம் வம்பு பண்ணுவான்
நாங்க பண்ணின தப்பு அவன் கேட்டப்ப இல்லைனு சொன்னது
வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மிணி - சில சமயம் ஒண்ணும் சொல்றதில்லைங்க அம்மணி. அபராதம் எல்லாம் போடலை... என்னை பாத்தா பாவமா இருந்தது போல... விட்டுட்டார்... நன்றிங்க

@ தக்குடு - ஓ...detail கமெண்ட் பின்னாடி வருதா...குட் குட்....
// ithu fulla unga rangu solla vendiya vasanam adappavi akka!!//
அடப்பாவி....நீயுமா? எங்களுக்கும் காலம் வரும் பாஸ்... அப்போ பேசிக்கறேன்...

@ தக்குடு -
//next timeaavathu idly olunga varanum saami!!!nu neenga pray panninathaa US-la yellarum peesikkaraaley!! unmaiyaa adappavi akka??.....:)))) //
அதுவும் தான்... இன்னொரு பிரார்த்தனை கூட வெச்சேன்....நியூஸ் வரலையா....அது என்னவா? சீக்கரம் தக்குடு மாட்டிகிட்டு முழிக்கணும்னு தான் (ஹி ஹி ஹி....)

அப்பாவி தங்கமணி said...

@ Goma -
// ஆயுள் கைதியானாலும் அப்பப்போ பெயில் ஜாமின் எல்லாம் உண்டுதானே..... //
ஓ...நீங்க vacation க்கு அம்மா வீட்டுக்கு போறது பத்தி கேக்கறீங்களா..எஸ் எஸ்... ஜாமீன் உண்டுங்கோ...

@ LK said -
//ungaluku appavi mela en kobam. avangala attmept murder casela matti vida pakakreenga //
நோ problem ... அந்த ஆபிசர் ஏற்கனவே அரியலூர் உப்புமா சாப்பிட்டு immune ஆய்ட்டாராம்... (இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?????????? ஹே ஹே ஹே)

அப்பாவி தங்கமணி said...

@ vgr - தேங்க்ஸ்ங்க vgr

@ இராமசாமி கண்ணண் - நன்றிங்க

@ சுசி - தேங்க்ஸ் சுசி.... வாழ்த்துக்கும் கருத்துக்கும்.... (என்னது லட்டரியா? எனக்கா? எங்க எங்க? ஓ ....மாட்டிகிட்டத சொல்றீங்களோ... அது சரி .....)

@ Mahi - தேங்க்ஸ் மகி. நீங்களும் என்னை போல அப்பாவியா இருக்கீங்க போல...அதான் உங்களை ஆபிசர் விட்டுட்டார்.
//ட்ராவல் பண்ணும்போதுகூட இப்படி அழகா மெஹந்தி போடுவீங்களா? சிம்பிள் & ஸ்வீட்டா இருக்கு//
சிம்பிள்ஆ இருக்கறதால தான் ஸ்வீட்ஆ இருக்குனு நினைக்கிறேன் மகி. ரெம்ப டிசைன் ட்ரை பண்ணி இருந்தா சொதப்பிருக்கும்...தேங்க்ஸ்

@ பெயரில்லா - தேங்க்ஸ் பாலா

vanathy said...

தங்ஸ், நாங்களும் 2002 இல் அந்த கோயில் போனோம். ஆனால், எனக்கு இந்த எல்லையை ( border ) கண்டாலே அலர்ஜி. நடுங்காத குறை. ஆனா பாருங்க சும்மா அப்பாவி மாதிரி முகத்தை வைச்சு, ஒரு லுக் விடுவேன். எந்த ஆபிஸரும் நோண்டி, நோண்டி கேள்விகள் கேட்காமல் அனுப்பி விடுவார்கள்.

Happy anniversary, thangs

Guna said...

Nice Pics...ore enjoyment thaana...

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - தேங்க்ஸ் வானதி.... உங்களை அப்பாவின்னு விட்டாங்களா...என்ன கொடுமை LK இது? வாழ்த்துக்களுக்கு நன்றிங்க வானதி

@ Guna - எஸ் எஸ்...நல்ல ட்ரிப்தாங்க...

priya.r said...

பயண கட்டுரையை கோர்வையாக சிறுகதை போல சொல்லி ,உங்களுடன் பயணம் செய்த அனுபவத்தை எங்களுக்கும் ஏற்படுத்தி உள்ளீர்கள் புவனா .

சிரமப்பட்டு வழியில் ஏற்படும் இடைஞ்சல்களை தாண்டி இறைவரை வழிபடும் போது அத்தனை கஷ்டங்களும் மறந்து மனதில் உண்டாகும் நிறைவுக்கும் ஆனந்ததிற்கும், வார்த்தைகளால் சொல்வதை விட உணரும் போது தான் தெரியும்
நீங்களும் உணர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .

மனதை கவர்ந்த பதிவு ;புவனா என்றால் இப்போதெல்லாம் மருதாணி வைத்த கை தான் நினைவுக்கு வருகிறது !

அப்பாவி தங்கமணி said...

கண்டிப்பா... அது தனி சுகம் தான்... ரெம்ப நன்றிங்க ப்ரியா...

//புவனா என்றால் இப்போதெல்லாம் மருதாணி வைத்த கை தான் நினைவுக்கு வருகிறது//
ஹா ஹா ஹா... நன்றி ப்ரியா

Post a Comment