Thursday, June 24, 2010

அதிருதே.... நகருதே..... Table Chair தானே.....

நேத்து என்னங்க தேதி..... ஜூன் 23 ஆ? ஹுஹும்.... இனிமே வருசா வருஷம் இந்த நாளை ஜூன் 23 னு சொல்ல மாட்டேன்.... கருப்பு தினம்னு தான் சொல்லுவேன்

ஆஹா... ஆரம்பிச்சுட்டியானு திட்டதீங்கப்பா.... நானே ரெம்ப பயந்து போய் இருக்கேன்

ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்.... என்னோட போன பதிவு "ஈ அடிச்சான் காப்பி" படிச்சுட்டு எல்லாரும் கன்னா பின்னானு திட்டுநீங்களா.... உண்மைய சொல்லணும்

எனக்கு என்னமோ அதோட எபக்ட் தான் நேத்து என்னை பழி வாங்கிருச்சுன்னு தோணுது.... ஹும்....

(செஞ்ச பாவம் சும்மாவா விடும் - mindvoice )

நேத்து என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி இங்க இருக்கற நிலவரம் மொதல்ல சொல்லிடறேன்... அப்போ தான் பின்னாடி சொல்றது தெளிவா புரியும்

(புரிஞ்சுட்டாலும்..... - mindvoice )

இங்க Toronto ல G20 Summit நடக்குது.... நம்ம மன்மோகன் சிங்க் எல்லாம் கூட வர்றாருன்னு கேள்விபட்டேன்... எங்க ஆபீஸ் செக்யூரிட்டி பெரிமீட்டர்குள்ள வருது... அதனால போன வாரமே எங்க ஆபீஸ்ல எல்லாருக்கும் ஈமெயில் வந்தது... இந்த வாரம் வியாழன் வெள்ளி work from home .... புதன் கிழமையே செக்யூரிட்டி tight ஆ தான் இருக்கும்.... எப்பவும் ID வெச்சு இருக்கணும்... எப்ப வேணா போலீஸ் யாரை வேணா செக் பண்ணுவாங்கன்னு எல்லாம் சொல்லி இருந்தாங்க.... நாங்க பாக்காத செக்யூரிட்டிஆ போங்கப்பானு நானும் assault ஆ டயலாக் விட்டுட்டு இருந்தேன்

(terrorist மாதிரியே பேசு - mindvoice )

சரி இனி மேட்டர்க்கு போவோம்... (இன்னும் போலயா நீ - mindvoice )

நேத்து எந்த ராகு காலத்துல வீட்டுல இருந்து கிளம்பினேனோ தெரியல.... சோதனை மேல் சோதனை

ட்ரெயின்ல பாதி தூரம் போயிட்டு இருக்கறப்பவே ஒரு announcement பண்ணினாங்க ட்ரெயின்ல... அது என்னன்னா நான் எறங்க வேண்டிய ஸ்டாப்க்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி ஆரம்பிச்சு நான் எறங்க வேண்டிய ஸ்டாப்க்கு ரெண்டு ஸ்டாப் தள்ளி இருக்கற ஸ்டாப் வரைக்கும் ட்ரெயின் நோ சர்வீஸ்

கொழப்பறேனா? இது எலெக்ட்ரிக் ட்ரெயின்ங்க... எந்த ஸ்டாப் ஓட வேணும்னாலும் ஸ்டாப் பண்ணி அப்படியே திருப்பிடுவாங்க... அப்புறம் பிரச்சனை இல்லாத ஸ்டேஷன்ல இருந்து ஒரு ட்ரெயின் ஸ்டார்ட் ஆகும்.. நடுவுல மட்டும் சர்வீஸ் நஹி....

என்னையா பிரச்சனைன்னு கேட்டா "யாரோ ட்ரெயின் ஸ்டேஷன்ல ஒரு suitcase வெச்சுட்டு போய்ட்டாங்களாம். இந்த G20 செக்யூரிட்டி அலப்பறைல அதுல bomb இருக்குமோனு சந்தேக பட்ரதால போலீஸ் investigation நடக்குதாம்"என்ன கொடுமை சார் இது? அப்புறம் அந்த மக்கள் வெள்ளத்துல நீந்தி ஸ்டேஷன் விட்டு வெளிய வந்து பஸ் எடுத்து... அப்புறம் ஒரு tram எடுத்து ஒரு வழியா பத்து மணிக்கி ஆபீஸ் போனேன்

அங்க போனா ஆபீஸ் பில்டிங் வாசல்ல "பீம் பாய் பீம் பாய் அந்த ஆறு லட்சத்த" ல வர்ற பீம் பாய் மாதிரியே நாலு பேரு நிக்கறாங்க

"ஐயோ.... நான் எந்த தப்பும் பண்ணலைங்ண்ணா..."னு சொல்றமாதிரி என் பேருக்கு ஏத்த மாதிரி அப்பாவியா மூஞ்சிய வெச்சுட்டு நானும் போனேன்

ID கார்டு, access கார்டு எல்லாம் வாங்கி பாத்துட்டு "போலாம்"னு கதவை தெறந்து விட்டார் அந்த பீம் பாய் அண்ணாநானும் ஆபீஸ்ல போய் ரெம்ப அலப்பறையா அதை சொல்ல "அட உனக்கு மட்டும் இல்ல.... இன்னிக்கி உள்ள வர்ற எல்லாருக்குமே அப்படி தான்" னு சொல்லி பொங்குன பாலுல தண்ணிய ஊத்தின மாதிரி என்னை ஆப் பண்ணிடாங்க

அப்பாடா முடிஞ்சதுனு பெரு மூச்சு விடறீங்களோ.... நானும் அப்படி தாங்க நெனச்சேன்.... அந்த விபரீதம் நடக்கறதுக்கு முன்னாடி வரைக்கும்.... (என்னடா இன்னும் டயலாக் காணோமேனு பாத்தேன் - mindvoice )

நான் நேத்து லஞ்ச் எடுத்துட்டு போகல.... சரி வெளிய போய் வாங்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப என்னோட ரூம் வாசல்ல நிழலாடுச்சு.... I mean ஒரு பொண்ணு.... (ஐயோ ஐயோ - mindvoice )

"வாட் Erica ?" னேன்

"Did you feel something?" னா அவ

நான் "எனக்கு 1008 பீலிங் இருக்கு அதை பத்தி என்ன.... எனக்கு என்னோட இட்லி பிரச்சனய நெனச்சா கூட பீலிங் தான்... நீ தீத்து வெப்பியா"னு மனசுக்குள்ள நெனச்சுட்டு... பின்ன இதெல்லாம் அவ கிட்ட சொல்ல முடியுமா சொன்னாலும் உங்கள மாதிரி புரிஞ்சுப்பாளா என்ன? ஹும்.... (ஐஸ் பாக்டரியே தூக்கி வெச்சாச்சு - mindvoice )

நான் இதெல்லாம் யோசிச்சுட்டு பேசாம இருக்கவும் மறுபடியும் "Did you feel something?" னா அவ

"what feel ?"னு நான் நக்கலா சிரிச்சேன் (சின்ன பொண்ணு தான்... நல்லா காமெடி பண்ணுவோம் எல்லாரும் அவளை வெச்சு....அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா...)

"I felt like the whole building is shaking" னு சொன்னா அவ

நான் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு ஒரு காரணம் இருக்கு...சொல்றேன் சொல்றேன்... அந்த பொண்ணு wine shop யே ஒரே வாய்ல முழுங்கரவங்கறது ஆபீஸ் அறிந்த ரகசியம்

அதனால நான் கேட்டேன் "what? Day-time only you started?" னு கிண்டலா கேட்டேன்

அப்படி கேட்டது தான் தெரியும்.... அதுக்கப்புறம் ஒரு பத்து செகண்ட் என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியலங்க.... பயத்துல ஒறைஞ்சி போயிட்டேன்....

பின்ன.... டேபிள்ல இருக்கறதெல்லாம் நகருது... நான் உக்காந்திருந்த chair முன்னாடி பின்னாடி நகருது... ஒண்ணும் புரியல... எல்லாரும் அவங்க அவங்க ஆபீஸ் ரூம் விட்டு வெளிய வந்து ஹால்ல நின்னுட்டோம்....

"is that an earthquake?" னு ஒருத்தர் ஆரம்பிச்சார்

எனக்கு நிக்கவே முடியல.... கை கால் எல்லாம் நடுங்குது...

இன்னொருத்தர் "it could be a bomb. anything could happen due to G20 issues"னார்

அடபாவிங்களா... ஏன் இப்படி ஆள் ஆளுக்கு கொல்றீங்கன்னு யோசிச்சுட்டு இருக்கறப்பவே எங்க firemarshall (ஆபீஸ் staff லையே ஒருதர்ருக்கு வேண்டிய ட்ரைனிங் குடுத்து firemarshall னு வெச்சு இருப்பாங்க இங்க) வந்து

"everybody vacate vacate" னு கத்தினார்

மொதல் ஆளா பாஞ்சு போய் elevator பக்கத்துல நின்னேன்

பின்னாடியே வந்த firemarshall "no one is allowed to take elevator as per fire regulations. you need to take the stairs" னு சொன்னார்

அடகொடுமையே.... பத்து மாடி எறங்கறதுகுள்ளையே பாதி உயிர் போய்டுமே.... அப்புறம் நிலநடுக்கம் வந்தா என்ன வராட்டி என்ன? னு நொந்து போய் வேற வழி இல்லாம எறங்க ஆரம்பிச்சோம்

நெஜமா சொல்றேங்க.... வாழ்க்கைல அத்தனை வேகமா நான் படி ஏறங்கினது இல்ல... சொன்னா நம்ப மாடீங்க அஞ்சே நிமிசத்துல பத்து மாடி இறங்கினோம்

இந்த கொடுமைல டைம் எல்லாம் பாத்தியான்னு கேக்காதீங்க... நான் எங்க பாத்தேன்.. எனக்கு படிய பாத்து ஏறங்கறதே பெரிய பாடா போச்சு... எங்க firemarshall தான் சொன்னார் "good.... we made it in 5 minutes" அப்படின்னு

கீழ வந்து பாத்தா ஒரே ஜன கடலா இருக்கு... போதா கொறைக்கு G20 நடத்த கூடாதுன்னு போராட்டம் பண்றதுக்கு ஒரு கூட்டம்... அவங்கள கண்ட்ரோல் பண்றதுக்கு ஒரு நூறு போலீஸ்... என்னமோ warzone குள்ள போன எபக்ட்

கொஞ்ச நேரத்துல..... அது earthquake தான்... ஆன பெருசா இல்ல... மேல (ஆபீஸ்) போலாம்னு சொன்னாங்க

"மேலேயே மொத்தமா போய்டுவோமோ"னு பயந்து போய் இருக்கற என்கிட்ட மேல போலாம்னு சொன்னா எப்படி இருக்கும், அழுகை வராதா கொறை தான்

அப்புறம் ரெம்ப நேரம் கழிச்சு எல்லாரும் போனப்புறம்.... கை கால் நடுக்கம் எல்லாம் சரி ஆனப்புறம் நானும் போனேன்

ரங்க்ஸ்க்கு போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது முடிச்சப்புறம் ... "என்னது earthquake ஆ?" அப்படின்னு கிண்டலா கேட்டார்..... எனக்கு எப்படி இருந்து இருக்கும்... அப்புறம் தான் தெரிஞ்சுது ரெம்ப சின்ன quake ங்கறதால ground floor ல இருந்தவங்களுக்கு எல்லாம் ஒண்ணுமே எபக்ட் தெரியலயாம்

என்ன கொடுமை சார் இது?

வர்ற சனிக்கிழமை தான் வீட்டுல இருந்து அபார்ட்மென்ட் move பண்றோம் அதுவும் பதினேழாவது மாடினு வேற நேரம் காலம் இல்லாம ஞாபகம் வந்து தொலஞ்சது....ஆஹா.... நல்ல நேரம் தான் போங்க

அப்புறம் எப்படியோ சாயங்காலம் ட்ரெயின் பிரச்சனை எதுவும் இல்லாம வந்தது.... ஆனா.... விதின்னு ஒண்ணு இருக்கே.... ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா......

ட்ரெயின் ஸ்டேஷன்ல எப்பவும் ரங்க்ஸ் பிக் பண்ற எடத்துல வந்து வெயிட் பண்றேன் வெயிட் பண்றேன் வெயிட் பண்றேன்... ஆளே காணோம்.... எனக்கு என்ன என்னமோ விபரீதமா எல்லாம் கற்பனை.... செம டென்ஷன்

செல்போன் அடிச்சு அடிச்சு நொந்து போயிட்டேன்... ஒரு வழியா போன் எடுத்தார்... "G20 க்காக highway க்ளோஸ் பண்ணிட்டான் சுத்திட்டு வர்றேன்...." னு சொன்னார்

ம்.... க்ளோஸ் பண்றது பண்ணி தொலைக்கட்டும் மொதலே சொல்ல வேண்டியது தானே....னு கோபமா வந்தது

இந்த G20 Z20 எல்லாம் மக்கள் அதிகம் இல்லாத நார்த்ல எங்கயாச்சும் வெக்கலாமேனு தோணுச்சு... நான் சொல்றத யாரு கேக்க போறா.... ரங்க்ஸ்ஏ கேக்க மாட்டார்... இதுல Steven Harper எங்க கேக்க போறார்... அவர் யாரா? கனடாவோட பிரதமர்.....

இப்ப சொல்லுங்க... நான் கருப்பு தினம்னு சொன்னது தப்பா....???????

ஆன ஒண்ணுங்க "உயிர் பயம்னா என்னனு என்னிக்கி உணர்ந்துடேங்க... அந்த நிமிஷம் என் மனசுல தோணினது .......ஐயோ....ரங்க்ஸ் என்ன பண்ணுவார்? ஐயோ... கடைசியா ஒரு வாட்டி ஊருக்கு போய் எல்லாரையும் பாத்துட்டு வந்து இருக்கலாமே...? இதான்.... வாழ்க்கை ரெம்ப குறுகியது அதுக்குள்ள எதுக்கு இந்த சண்டை தேடல் ஓட்டம் எல்லாம்னு தோணுச்சு...."

ரெம்ப தத்துவம் பேசறேனோ.... சரி விடுங்க....

ஆபீஸ் போனப்புறம் அந்த Erica என்கிட்ட வந்து "what did you say? Am I drunk?"அப்படின்னு மொறச்சா.... நான் வழக்கம் போல ஹி ஹி ஹி னு சிரிச்சு சமாளிச்சேன்

அதுக்கு முன்னாடியே லேசா ஆடி இருக்கு... அது எனக்கு தெரியலையா.... இல்ல என்னை அசைக்கற அளவுக்கு அது ஆடலயானு இன்னும் புரியல....

அதுக்கப்புறம் வெளிய போய் லஞ்ச் வாங்க கூட தோணல.... கொலை பட்டினி.... கொடுமை தான் போங்க
ஓ.... இன்னிக்கி work from home ஆச்சே... மறந்தே போயிட்டேன்... போய் கொஞ்சமாச்சும் வொர்க் பண்றேன்...

bye bye ...

பின் குறிப்பு:
இந்த எதிர்பாராத நிகழ்வுகளால் "அதே கண்கள்...." தொடர் கதை சற்று தாமதமாக வெளி வரும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி நன்றி நன்றி....

50 பேரு சொல்லி இருக்காக:

Krishnaveni said...

really a frightening moment bhuvana. yesterday i saw that earthquake news...romba bayamaaththaan irukku. seekkiram athe kangal pottu innum bayamuruththunga.........(just kidding)

Mahi said...

நானும் earthquake பத்தி கேள்விப்பட்டேன்..எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்தானே புவனா? கூல் டவுன்! ரிலாக்ஸ் ஆகுங்க.
(நீ இங்கஇருந்திருந்தா தெரியும்னு நீங்க பல்லைக் கடிக்கிறது கேட்குது,ஹிஹி!)

rk guru said...

ரிலாக்ஸ் ஆகுங்க.

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

SenthilMohan K Appaji said...

//*நானே ரெம்ப பயந்து போய் இருக்கேன் **/
நெசமாவா?
//*என்னோட போன பதிவு "ஈ அடிச்சான் காப்பி" படிச்சுட்டு எல்லாரும் கன்னா பின்னானு திட்டுநீங்களா.... உண்மைய சொல்லணும் **/
அதிலென்ன உங்களுக்கு Doubt. இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு?
//*நல்லா காமெடி பண்ணுவோம் எல்லாரும் அவளை வெச்சு**/
எப்படி? Comments-ல உங்கள வெச்சு பண்ற மாதிரியா?
//*ஆபீஸ் staff லையே ஒருதர்ருக்கு வேண்டிய ட்ரைனிங் குடுத்து firemarshall னு வெச்சு இருப்பாங்க இங்க**/
இங்கயும் தான். இங்க Floor-க்கு 4/5 பேரு. அதுவும் Mock Drill அப்படின்னு ஒன்னு வெப்பாங்க பாருங்க. அவங்க எல்லாரும் வந்து விசில் அடிச்சுட்டு கெஞ்சிகிட்டு நிப்பாங்க. பாத்தாலே பாவமா இருக்கும். First time அவசரமா(Acting தான்) நான் கதவு முன்னாடி போய் Access card நீட்டுனா access ஆகல. என்னடான்னா, இந்த மாதிரி சமயத்துல அத Deactivate பண்ணிடுவாங்களாம். ஹி..ஹி..ஹி..னு பல்ல காட்டிட்டு Esc.
//*டேபிள்ல இருக்கறதெல்லாம் நகருது... நான் உக்காந்திருந்த chair முன்னாடி பின்னாடி நகருது**/
எல்லாம் திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம். அன்னையிலிருந்து கோவாலு சாயந்திரம் 4 மணிக்கே கிளம்பிடுவானாம்.

அப்புறம் கடைசியா ஒன்னு. Mind Voice அதிகம் இல்லாத ஒரு பதிவு. Dont Keep it up!!!

Have a look @ http://www.envazhi.com/?p=19234. இத படிச்சப்போ, திடீர்னு நீங்க சொன்ன Self Realization, எழுத்துல முதிர்ச்சி, etc., னு ஒவ்வொன்னா நியாபகத்துக்கு வந்திடுச்சு. ஏன்னு சொல்லுங்களேன்?

Porkodi (பொற்கொடி) said...

இனிமே ஈயடிச்சான் காப்பி கரப்படிச்சான் டீன்னு எத்தையாவது போட்டீங்க..

Porkodi (பொற்கொடி) said...

ஃப்ரீயா விட்டுட்டு போய் இட்லிய் செய்யற வழிய பாருங்க அ.த.. நான் இதோட 3 எர்த்குவேக்கு, 1 சுனாமில இருந்து தப்பிச்சுட்டேன். இதெல்லாம் உங்களுக்கு சும்மா ஜுஜுபி!

அபி அப்பா said...

\\இந்த எதிர்பாராத நிகழ்வுகளால் "அதே கண்கள்...." தொடர் கதை சற்று தாமதமாக வெளி வரும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி நன்றி நன்றி..\\

ஊகூம் உங்களுக்கு நல்ல நியாபக சக்தி. இனி ஒன்னும் செய்ய இயலாது. நடத்துங்க:-))

டம்பி மேவீ said...

"இதான்.... வாழ்க்கை ரெம்ப குறுகியது அதுக்குள்ள எதுக்கு இந்த சண்டை தேடல் ஓட்டம் எல்லாம்னு தோணுச்சு...."

ஆமாங்க ...அது தெரியமா சண்டை ..கோவம்ன்னு இருக்குறது எவ்வளவு பெரிய தப்புங்க /...வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க முடிந்த வரைக்கும் சந்தோஷமா வாழனும்..பிறரையும் சந்தோஷமா வைச்சுக்கணும் . அனுபவிக்க தான் வாழ்க்கை

= = =

அது சரி ....சுனாமிக்கே பினாமி எடுக்கிற உங்களுக்கா இந்த பயம் .... நீங்களே இப்படி பயந்தால் தமிழ் செம்மொழி மாநாடு எப்புடி நடக்கும்

sriram said...

இந்த Aunties Group பண்ற அலப்பறை பூமாதேவிக்கே பொறுக்கலை, அதான் கோவத்தைக் காட்டிட்டா..
இனிமேலாவது பாத்து சூதானமா நடந்துக்குங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வெங்கட் நாகராஜ் said...

நிஜமாவே பயந்துட்டீங்களா? அய்யோ பாவம். தில்லி சீஸ்மிக் ஜோன்ல இருக்கிறதுனால அடிக்கடி சின்னச் சின்னதா அதிர்வுகள் எப்பயும் இருக்கும். எங்களுக்கு பழகிடுச்சு.

sandhya said...

பாவம் பா புவனா நீங்க ...ரொம்ப பயந்திடிங்களா ???இந்த பயங்கர சம்பவம் கூட இப்பிடி தமாஷா எழுதிடின்களே அதுக்கு உங்கள்க்கு ஒரு ஓஓ போடறே .."இந்த G20 Z20 எல்லாம் மக்கள் அதிகம் இல்லாத நார்த்ல எங்கயாச்சும் வெக்கலாமேனு தோணுச்சு... நான் சொல்றத யாரு கேக்க போறா.... ரங்க்ஸ்ஏ கேக்க மாட்டார்... இதுல Steven Harper எங்க கேக்க போறார்... அவர் யாரா? கனடாவோட பிரதமர்....."

செம்ம லொள்ளு தான் உங்கள்க்கு ..

..சரி சரி இனி இந்த earthquake விஷயம் சொல்லி கதை எழுதறது மாதி வெக்கற வேலை வேண்டாம் ஹும் சொல்லிட்டேன்

பத்மநாபன் said...

சும்மாவே ஈ..கொசு கிடைச்சாலே , துவைச்சு வ்வெளுத்து காய போட்டுருவிங்க...இந்த மாதிரி மேட்டர் கிடைச்சா சும்மாவா விடுவிங்க எங்களை...

இப்ப அபார்ட்மெண்ட் 17 ஆவது மாடியிலா? லிப்ட்ல ஏறி இரங்கறப்பவே ஒரு பதிவை போஸ்ட் பண்ணிருவிங்களே....

LK said...

//இந்த எதிர்பாராத நிகழ்வுகளால் "அதே கண்கள்...." தொடர் கதை சற்று தாமதமாக வெளி வரும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி நன்றி நன்றி.//

ithu oru saakku grrrrrrrr

VELU.G said...

சரியான அனுபவங்க

take care

அஹமது இர்ஷாத் said...

உங்கள நினைத்தா ....

சின்ன அம்மிணி said...

நடுக்கத்துக்கு அப்பறம் லிப்ட் வேலை செய்யாம 14 மாடி ஏறி போய் வேலை செஞ்சிருக்கீங்களா ?

சுசி said...

புவனா.. சிரிப்பு தாங்கலை..

நானும் பயந்து போயி அப்பாவுக்கு கால் பண்ணேன்.. அவங்க இடத்தில இருந்து தூரம்னு சொன்னார்..

உங்க நினைவும் கண்டிப்பா வந்து போச்சு.. கமண்டல ஒரு வார்த்தை கேக்கலாம்னு வந்தா நீங்க போஸ்டே போட்டிங்க.. :))

//இன்னிக்கி work from home ஆச்சே //
என்ஜாய் மாடி :))))))))))))))))))

அமைதிச்சாரல் said...

//எனக்கு என்னமோ அதோட எபக்ட் தான் நேத்து என்னை பழி வாங்கிருச்சுன்னு தோணுது.//

இருக்கும் இருக்கும் :-)))))))))

jokes apart பத்திரமா இருங்க புவனா.

இராமசாமி கண்ணண் said...

//sriram சொன்னது…

இந்த Aunties Group பண்ற அலப்பறை பூமாதேவிக்கே பொறுக்கலை, அதான் கோவத்தைக் காட்டிட்டா..
இனிமேலாவது பாத்து சூதானமா நடந்துக்குங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ஹா. ஹா. ஹா.

தக்குடுபாண்டி said...

//"Did you feel something?" னா அவ // என்னா பிபிபிபீலிங்கு?னு கேக்க வேண்டியதுதானே?...;))

தக்குடுபாண்டி said...

//என்னையா பிரச்சனைன்னு கேட்டா "யாரோ ட்ரெயின் ஸ்டேஷன்ல ஒரு suitcase வெச்சுட்டு போய்ட்டாங்களாம்// நான் கூட உங்க இட்லி டிபன் பாக்ஸ்தான் காரணமோனு நினைச்சேன்...:)

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி.... ஆமாங்க கொஞ்சம் பயந்து தான் போயிட்டேன்...
//seekkiram athe kangal pottu innum bayamuruththunga.........(just kidding) // ஹா ஹா ஹா

@ Mahi - என்னது கூல் டௌன்ஆ? பேசுவீங்க பேசுவீங்க.... உங்கள இங்க கொண்டு வந்து விடணும்... ஆமா.... சொல்லிட்டேன்... (தேங்க்ஸ் மகி)

@ rk guru - நன்றிங்க குரு.... உங்க பதிவு பார்கிறேன்

@ SenthilMohan K Appaji - அடபாவிங்களா.... நம்மள எப்பவும் காமெடி பீஸ்ஆவே பாக்குறாங்களே.....ஹும்....ஜஸ்ட் கிட்டிங்.... தேங்க்ஸ் செந்தில்...
//அப்புறம் கடைசியா ஒன்னு. Mind Voice அதிகம் இல்லாத ஒரு பதிவு. Dont Keep it up!!!//
ஹா ஹா ஹா... என்னோட சோகத்துல அதை கொஞ்சம் தட்டி வெச்சுட்டேன்.... ஹா ஹா ஹா
(ஏங்க? டி ஆர் லிங்க் எல்லாம் குடுத்து பழி வாங்கறீங்க....அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வவ்)

அப்பாவி தங்கமணி said...

@ porkodi - இனிமே.. டீ காப்பி பத்தி கூட எழுத மாட்டேன் போங்க... என்னது இட்லி செய்யறதா....அதுக்கு earthquake ஏ மேல் போங்க... மேடம் உங்க கணக்கே வேற... 3 எர்த்குவேக்கு, 1 சுனாமி இல்ல முன்னூறு earthquake வந்தாலும் உங்கள அசைக்க முடியாது அம்மணி.... நம்ம கதை அப்படியா.... ஹும்.....(ஹி ஹி ஹி)

@ அபி அப்பா - ஹி ஹி ஹி... நடத்தறோம் நடத்தறோம்.... நன்றிங்க

@ டம்பி மேவீ - நன்றிங்க மேவி. அதாங்க எனக்கும் புரியல.... நம்மளையே ஒரு ஆட்டிடுச்சு இந்த கொடுமை (நன்றி)

அப்பாவி தங்கமணி said...

@ sriram - ஹி ஹி ஹி...என்ன பாஸ் சான்ஸ் கெடைச்சதும் தாக்கறீங்க.... எனக்கென்னமோ ஒரு தாத்தா எங்களை பாத்து ஆண்டீஸ் சொல்றது பொறுக்க முடியாம தான் பூமி பொங்கிடுச்சுன்னு தோணுது... இது எப்படி இருக்கு? ஹா ஹா ஹா....(தேங்க்ஸ் பாஸ்....)

@ வெங்கட் நாகராஜ் - ஆமாங்க பயந்து தான் போயிட்டேன்.. ஓ ..... நீங்க பெரிய அனுபவஸ்தர் போல இருக்கு....ஹும்.... தேங்க்ஸ்

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா.... எனக்கு ஓ போடுறீங்களா? சந்தியா வாழ்க சந்த்யா வாழ்க...ஹி ஹி ஹி...
//செம்ம லொள்ளு தான் உங்கள்க்கு ..// ஹி ஹி ஹி... இதெல்லாம் ரத்ததுலையே ஊரினது பாஸ்... ஹி ஹி ஹி... கதை சீக்ரம் போட்டுடறேன்.... தேங்க்ஸ் சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹி ஹி ஹி... கண்டுபிடிச்சுட்டீங்களா.... இந்த தொழில் ரகசியம் எல்லாம் சபைல சொல்ல கூடாது பாஸ்... லிப்ட் ஏறி எறங்கறதுக்குள்ள ஒரு பதிவா... ஏறி எறங்கறத வெச்சு வேணா ஒரு பதிவு தேத்தலாம்.... ஹா ஹா ஹா.. நன்றிங்க

@ LK - ஹி ஹி ஹி... சாக்கு தான் பாஸ் சாக்கு தான் .... என்ன நீ கீதா மாமி டயலாக் எல்லாம் திருடறே.... மாமி சீக்ரம் வாங்க? ஹா ஹா ஹா..

@ VELU.G - தேங்க்ஸ்ங்க வேலு

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - சொல்ல வந்தாதா சொல்லிடணும்.... இப்படி நிறுத்தினா எப்படி பாஸ்?

@ சின்ன அம்மிணி - ஐயோ மறுபடியும் படி ஏற்றதா... சான்சே இல்ல போங்க.... அதுவும் சாப்பிட வேற இல்ல... லிப்ட்ல தான் போனோம்.... தேங்க்ஸ்ங்...

@ சுசி - என்னாது???????? சிரிப்பு தாங்கலையா?????? எவ்ளோ நாளா காத்துட்டு இருந்தீங்க.... ஜஸ்ட் கிட்டிங்....
//உங்க நினைவும் கண்டிப்பா வந்து போச்சு/// நன்றி நன்றி நன்றி.... தேங்க்ஸ்ங்க...

@ அமைதிச்சாரல் - ஹ ஹா ஹா...தேங்க்ஸ் சாரல்....

அப்பாவி தங்கமணி said...

@ இராமசாமி கண்ணண் - நீங்களுமா கண்ணன்?????? ஹா ஹா ஹா... தேங்க்ஸ் anyway ....

@ தக்குடு - அதானே..... நான் இந்த பதிவுல எவ்ளோ மேட்டர் சொல்லி இருக்கேன் எல்லாம் விட்டுட்டு நீ கரெக்ட்ஆ பாயிண்ட்க்கு போற பாரேன்.... அடாடாடா.... என்னே உன் கடமை உணர்ச்சி.... ஹி ஹி ஹி

@ தக்குடு - அதானே.... எங்கடா என் இட்லி இன்னும் காணோமேனு பாத்தேன்... அந்த கொறைய நீ தீத்து வெச்சுட்ட.... தேங்க்ஸ் தக்குடு...ஹா ஹா ஹா

சுரேகா.. said...

டோரண்டோ வே ஆடுச்சா? :)
G20க்காக இருக்கும்!!


மிக அருமையாக, சுவையாக சொல்லியிருக்கீங்க!

//ஆமா..எனக்கு கஷ்டம்..! உங்களுக்கு சுவையா? // (உங்க மைண்ட் வாய்ஸ்) :))

பத்மா said...

ஜாக்கிரதையா இருங்கப்பா ..வேறென்ன சொல்ல

Matangi Mawley said...

பாயமுருத்தர அனுபவம்தான்.. ஆனா அப்ப பயமா இருந்தாலும்.. இப்ப அப்டி ஒரு நிலை நடுக்கத்த அனுபாவித்தொமே- நு நெனச்சு பாக்க தோணுது இல்ல? எனக்கு என்னமோ இது ஒரு மறக்க முடியாத அனுபவமா தான் இருக்கும் உங்களுக்குனு சொல்ல தோணுது! பிற்காலத்துல உங்க பேரன் பேத்திக்கு சொல்லி film காட்டலாம்!

take it in a +ve sense! it's a damn good experience! :)

காற்றில் எந்தன் கீதம் said...

அடக் கடவுளே அங்கயும் வந்துத? இங்கயும்(இலங்கை) சுனாமி வருதுன்னு பயம் காட்டினாங்க.
நல்லா இருக்கு நீங்க எழுதுறது எல்லாமே.......
-sutharsshini

Mrs.Menagasathia said...

நல்ல அனுபவம்..பத்திரமா இருங்க...

அமுதா கிருஷ்ணா said...

சென்னையில் இரவில் ஒரு முறை நிலநடுக்கம் வந்த போது ஒரு மணிநேரம் வீட்டின் வெளியேயே நின்று கொண்டு இருந்தோம்..அந்த ஃபீலிங் திரும்ப வந்து பயமுறுத்துகிறது. அதன் பிறகு வீட்டிற்கு நுழைந்ததும் ஒரு பையில் வீட்டில் உள்ளவர்களின் சர்ட்ஃபிகேட்டுகளையும்,நகைகளையும் எடுத்து வாச கதவிற்கு பக்கத்தில் வைத்து விட்டேன். என் பசங்க என்னை செம கிண்டல் செய்தார்கள்.

pinkyrose said...

hey guys come n visit my blogpa.
naan inthakka mathiri bayamellam kaatta matan vangappa (pinn enna panrathu yaarachum varuvaangalanu partha orutharayum kanom .mmmm i`m sobbing ya....mmmmm

My days(Gops) said...

நீங்க சுட்ட இட்லி எதுவும் மேல இருந்து கீழே விழுகலையே? ஒருவேலை அப்படி விழுந்து இருந்தா கூட நிலம் நடுங்கி இருக்கும்... ஒகே ஒகே.... நோ டென்ஷன்......smile plz...

//ரங்க்ஸ் என்ன பண்ணுவார்? ஐயோ... கடைசியா ஒரு வாட்டி ஊருக்கு போய் எல்லாரையும் பாத்துட்டு வந்து இருக்கலாமே...? இதான்.... வாழ்க்கை ரெம்ப குறுகியது அதுக்குள்ள எதுக்கு இந்த சண்டை தேடல் ஓட்டம் எல்லாம்னு தோணுச்சு//

ஆனாலும் உங்களுக்கு கடமை உணர்ச்சி ஜாஸ்தியா இருக்குனு நினைக்கிறேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படித்தான் நான் வீடு ஆடுதுன்னு உயிர்ப்பயம் எடுத்த கதையை இங்க எழுதி இருக்கேன் பாருங்க

இருந்தாலும் உங்க மைண்ட்வாய்ஸ் ரொம்ப ஓவரா பேசுதுங்க உங்களை விட.. ;)

ஹுஸைனம்மா said...

//இல்ல என்னை அசைக்கற அளவுக்கு அது ஆடலயானு//

அதேதான்!! உங்க இட்லி ஒரு நாலஞ்சு கொண்டுபோய் ஆஃபிஸ்ல வச்சுக்கோங்க; அப்படியே பூகம்பம் வந்தாலும் இந்த வெயிட் ஆடவிடாம அமுக்கிப் பிடிச்சுக்கும்!!

பிரசன்னா said...

சென்னைல கூட வந்துச்சு.. ஆனா யாருமே ஓடல.. சாணி மாதிரி உக்காந்து வேல பாத்துட்டே இருந்தாங்க :)

vanathy said...

தங்ஸ், நானும் கேள்விப்பட்டேன். பயமா இருந்திச்சு!!! கடவுளே கனடாவில் வந்தாச்சு!! அடுத்து எங்கள் ஊரிலா என்று??

நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

பயந்து கிட்டே படிக்க வெச்சிங்க. முத்துலெட்சுமி சொல்வது போல உங்க மைண்ட் வாய்ஸ் ரொம்பத்தான் பேசுது.( அவள் ஒரு தொடர்கதையில் வரும் ஜூனியர் போல ):)

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல் கூறியது...
... முத்துலெட்சுமி சொல்வது போல உங்க மைண்ட் வாய்ஸ் ரொம்பத்தான் பேசுது.//

ஆமா தென்றல்! இவங்க மைண்ட் வாய்ஸே இவ்வளவுன்னா, ரியல் வாய்ஸ் எவ்வளவு பேசும்!! பாவம் அவர் ரங்ஸ், ரெண்டு வாய்ஸையும் கேட்டு கேட்டு கெட்டு (no typos).... என்ன ஆனாரோ? அவருக்குத்தான் அப்பாவின்னு பட்டம் கொடுக்கணும்!!

;-)))

LK said...

//என்ன ஆனாரோ? அவருக்குத்தான் அப்பாவின்னு பட்டம் கொடுக்கணும்!!/

+1000

அப்பாவி தங்கமணி said...

@ சுரேகா - ரெம்ப நன்றிங்க. ஆஹா...எல்லாரும் நம்ம mindvoice ஐ நமக்கு எதிராவே use பண்ண ஆரம்பிச்சுடாங்களே....ஹி ஹி ஹி

@ பத்மா - ரெம்ப நன்றிங்க பத்மா

@ Matangi Mawley - அடப்பாவி... எப்படி எல்லாம் யோசிக்கறீங்க.... ஆனா நீங்க சொல்றதுதலையும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்யுது... ஹி ஹி ஹி.... நம்ம பின்னாடி வர்ற generation க்கு நம்மளை பத்தி ஒரு கெத்தான சரித்திரம் வேண்டாமோ... குட் பாயிண்ட் மாதங்கி... ஐ லைக் இட்...ஹி ஹி ஹி

@ காற்றில் எந்தன் கீதம் - ஆமாங்க இங்கயும் தான்... கொடுமை தான் போங்க. நன்றிங்க சுதர்ஷினி

அப்பாவி தங்கமணி said...

@ Mrs.Menagasathia - நன்றிங்க

@ அமுதா கிருஷ்ணா - வாங்க அமுதா.... ரெம்ப நாள் ஆச்சு இந்த பக்கம். ஓ... அங்கயுமா நில நடுக்கம். எங்கயும் safe இல்ல போல... நாங்களும் முக்கியமான திங்க்ஸ் எல்லாம் இப்படி ஒண்ணா போட்டு வெக்கறது தான்... பசங்க கிண்டலா ...ஹா ஹா ஹா

@ pinkyrose - welcome pinkyrose ... நோ sobbing அண்ட் ஆல்... நான் போணி பண்ணியாச்சு கமெண்ட்ல போய் பாருங்க

அப்பாவி தங்கமணி said...

@ My days(Gops) - உங்க கிட்ட அண்ட் தக்குடு கிட்ட இருந்து இந்த கமென்ட் தான் வரும்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஹா ஹா ஹா... see how I read your mind ? ஹா ஹா ஹா...

இட்லி எல்லாம் ஒண்ணும் விழுகல... கடமை உணர்ச்சி கொஞ்சம் ஓவர் தான் பாஸ்? ஒண்ணும் செய்ய முடியாது ...ஹா ஹா ஹா

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஓ... அப்படியா... இருங்க அந்த லிங்க் பாக்கறேன்... நன்றி... ஆமாங்க வர வர mindvoice தொல்லை ஓவரா போச்சு... கொஞ்சம் தட்டி வெக்கணும்...

@ ஹுஸைனம்மா - ஆஹா... நீங்களுமா? ஆனாலும் என்னோட இட்லி இப்படியாச்சும் யூஸ் ஆகும்னு சொன்னீங்களே... அதுக்கு ஒரு தேங்க்ஸ்...ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ பிரசன்னா - ஆஹா....என்னே உங்கள் கடமை உணர்ச்சி? அடாது நிலம் ஆடினாலும் விடாது வேலை செய்வோம்னு செஞ்சீங்களோ? எப்பா ..... நான் எஸ்கேப் ... தேங்க்ஸ்

@ vanathy - ஆமாங்க... பாத்து பத்திராம இருங்க... நீங்க வேற அப்ப அப்ப gettogether வெச்சு கடல் எல்லாம் கொந்தளிச்சு போய் இருக்கு...ஹி ஹி ஹி (கெடைக்கற சான்ஸ் விட மாட்டோம்ல... ஹி ஹி ஹி)

@ புதுகை தென்றல் - ஐ... அவள் ஒரு தொடர்கதை ஜூனியர் போலவா... வாவ்.... நான் கூட அப்படி யோசிக்கல .... தேங்க்ஸ்ங்க.... ஆமாங்க... கொஞ்சம் ஓவரா தான் பேசுது இந்த mindvoice வர வர... கொஞ்சம் தட்டி வெக்கணும்... ஹா ஹா ஹா தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஆஹா... நீங்க அப்படி வரீங்களா? அடுத்த வாட்டி இந்தியா வர்றப்ப உங்க ஊர் வழியா வர்றோம்.... நேர்லயே பாத்து தெரிஞ்சுகோங்க யாரு அப்பாவின்னு... ஹா ஹா ஹா ... (ஆஹா .... இருங்க இருங்க என்னது ஊரு விட்டே போறீங்களா... சரி சரி ...நோ டென்ஷன்...ஹா ஹா ஹா)

@// LK சொன்னது… //என்ன ஆனாரோ? அவருக்குத்தான் அப்பாவின்னு பட்டம் கொடுக்கணும்!!/
+1000 //
அடப்பாவி.... யு டூ ப்ரூட்டஸ்....???????????

அனாமிகா துவாரகன் said...

//அந்த நிமிஷம் என் மனசுல தோணினது .......ஐயோ....ரங்க்ஸ் என்ன பண்ணுவார்? //

ரொம்ப சீரியஸ் பதிவுன்னதால எதுவும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சாலும் சொல்லாமல் இருக்க முடியல்ல. அதிம்பேர் மேல அக்கறை தான். இனிமேலாவது அவரை டாச்சர் பண்ணாதீங்க சரியா? ஹி ஹி.

//ஐயோ... கடைசியா ஒரு வாட்டி ஊருக்கு போய் எல்லாரையும் பாத்துட்டு வந்து இருக்கலாமே...? இதான்.... வாழ்க்கை ரெம்ப குறுகியது அதுக்குள்ள எதுக்கு இந்த சண்டை தேடல் ஓட்டம் எல்லாம்னு தோணுச்சு...."
//

அத்தனையும் உண்மை. அதுவும் அனுபவிச்சவங்க கூட அதை கொஞ்ச நாள்ல மறந்திட்டு பழைய மாதிரியே சண்டை போடறப்போ என்னடா கொடுமைன்னு இருக்கும்.

ராவி said...

நியூ ஜெர்சி வரை அதிர்வு இருந்ததுன்னு கேள்விபட்டேன். Skyscrapper building ல வொர்க் பண்ணுரது நல்லாத்தான் இருக்கு ஆனா இது மாதிரி ஆனாதான் பிரச்சனையே.

Toronoto ஏரியாவில் earth quake வந்தால் Erie lake இல் சுனாமி வராதே? சும்மா கேட்டு வச்சேன்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - சீரியஸ் பதிவுன்னு ஒத்துகிட்டியே... பெரிய மனசு தான் தாயே... யாரு யாரை டாச்சர் பண்றா? நேரம் தான்... elephant one time cat one time...அந்த time me come and you நாக் அவுட்... ஹி ஹி ஹி

@ ராவி - நல்லா சொன்னீங்க ராவி.... Erie Lake ல மட்டும் இல்ல... இன்னும் தள்ளி கூட வரலாம்.. யாரு கண்டா.... என்னமோ நடக்குது உலகத்துல... ஒண்ணுமே புரியலங்க...

Post a Comment