Thursday, July 22, 2010

அதே கண்கள்... சஸ்பென்ஸ் த்ரில்லர்... (பகுதி 4)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3

அதே நேரம், ஊமையன் போல் இருந்தவன் அந்த receptionist ஆசாமியிடம்

"என்ன சார்? அந்த ரூம் வாடகைக்கி விட்டுடீங்க.... முதலாளிக்கு தெரியுமா?"

"நீ சும்மா இரு மாரிமுத்து. முதலாளிக்கி தெரியாது.... இதுக ஏதோ வெளியூர் பார்ட்டி போல இருக்கு.... இங்க நடக்கற விசயம் எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.... இநத வாடகை கணக்குல காட்டாம நாம பங்கு போட்டுக்கலாம்... என்ன சொல்ற?" என நயமாய் பேச

"நீங்க சொல்றப்ப கேக்க நல்லாத்தான் இருக்கு.... ஆனா ...." என இழுக்க

"ஒண்ணும் ஆகாது... நீ சும்மா இரு..." என பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்

_____________________

அதே நேரம்..... இரு கண்கள் அந்த ஹோட்டல் வாசலில் நின்று வெறித்து பார்த்து கொண்டு இருந்தது....

______________________

"சுமி... வீட்டுக்கு ஒரு போன் பண்ணிடலாம் மொதல்ல" என்றான் சூர்யா

"ம்.. சரிங்க" எனவும் தன் செல்போன்ஐ எடுக்க பாக்கெட்ல் கை விட அது காலியாக இருந்தது...

"இங்க தானே வெச்சேன்..." என மற்ற பாக்கெட்களையும் பார்த்தவன்

"ம்....காணோமே...சுமி... உன்னோட போன்ல இருந்து கால் பண்ணு... ரிங் ஆகுதான்னு பாப்போம்"

அவள் எண்களை அழுத்த எங்கும் சத்தம் வரவில்லை

"ஒருவேள கார்ல வெச்சுட்டேன்னு நினைக்கிறேன்... சரி உன்னோட போன்ல ஊருக்கு பேசிக்கலாம். அப்புறம் எடுத்துக்கலாம்" எனவும்

"என்னோட போன் பாட்டரி ஏற்கனவே கத்திகிட்டே இருக்கு பாருங்க... சார்ஜர் கொண்டு வர மறந்துட்டேன். அஞ்சு நிமிஷம் கூட பேச முடியாது.. பேசாம நீங்க காருக்கு போய் உங்க போன் எடுத்துட்டு வந்துடுங்க. அதுக்குள்ள நான் ஒரு குளியல் போடறேன்... "

"ம்... நான் வேற ஒரு ஐடியா சொல்லட்டுமா..." என்றவன் குறும்பு பார்வையுடன் அவள் காதில் ஏதோ சொல்ல...

சிவந்த முகத்தை மறைத்தவள் "ஒண்ணும் வேண்டாம்... நீங்க போயிட்டு வாங்க சார்... " என அவனை விரட்டினாள்

"சுமி... சாப்பிட எதுனா வாங்கிட்டு வரட்டுமா...இல்ல அப்புறமா ரூம் சர்வீஸ் ஆர்டர் பண்ணிக்கலாமா"

"ம்... வாங்கிட்டே வந்துடுங்க... அப்புறம் ஆர்டர் பண்ணி நேரம் ஆகும்... குளிருக்கு இப்பவே பசிக்குது... "

"ஒகே சுமி... வாங்கிட்டே வந்துடறேன்... கதவ சாத்திக்கோ" எனவும் அதுவரை மற்றதை மறந்து இருந்தவள் சட்டென முகம் மாறினாள்

"ம்..." என்ற ஒற்றை சொல்லில் கணவனுக்கு விடை கொடுத்தாள்

அவள் கதவை சாத்தி சூர்யா இரண்டு அடி நகர்ந்ததும் சுமேதாவின் செல் பேசி அலறியது

_______________

திரும்பி வந்த சூர்யா அறை திறந்து கிடந்ததை கண்டதும் "சுமி...சுமி... "என அழைக்க பதில் இல்லாமல் போக குளியல் அறை பால்கனி எல்லா பக்கமும் தேடியவன் எங்கும் அவளை காணாமல் தன் செல்போன் எடுத்து அவள் செல்போனுக்கு அழைக்க "The subscriber you are trying to reach is on another call" என்றது ஒரு பெண் குரல்

தனக்கு தான் அழைக்க முயல்கிறாளோ என தோன்ற கட் செய்து காத்திருக்கலானான்

நிமிடங்கள் கரைய கரைய பயம் சூழ்ந்தது சூர்யாவிற்கு

அறைக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் தேடினான். எங்கும் நிசப்தமாய் இருக்க அந்த அமைதி மனதில் கிலியூட்டியது

அறையை பூட்டியவன் விரைந்து reception க்கு வந்தான்

"Excuse மீ... என்னோட wife இந்த பக்கம் போனதை பாத்தீங்களா?" என கேட்டான்

"இல்ல சார்... நான் சாப்பிட போயிட்டு இப்ப தான் வந்தேன்... என்னாச்சு சார்? எதாச்சும் problemஆ?" என்றான் reception ஆசாமி

புது மனைவியுடன் சண்டையோ என்ற சந்தேகம் தெனித்தது அவன் குரலில்

அந்த கேள்வி தன் சுய மரியாதையை தீண்ட சூர்யா சமாளித்தான்

"இல்ல... நான் காருக்கு போயிட்டு வந்தேன்... அவ ரூம்ல இல்ல...
ஒரு வேள என்னை தேடி கார் பார்கிங் போய் இருப்பானு நினைக்கிறேன். போய் பாக்கறேன்" என்றவன்

அப்படியும் இருக்கலாம் தானே, அதை யோசிக்கவில்லையே என தன்னையே கடிந்து கொண்டவன் கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி விரைந்தான்

அங்கேயும் அவளை காணாமல் மறுபடியும் அவள் செல்போனுக்கு அழைக்க "The subscriber you are trying to reach is currently switched offl" என்றது

என்ன செய்வதென புரியாமல் மறுபடியும் அறைக்கு விரைந்தான் , தன்னை தேடி விட்டு மீண்டும் அறைக்கு சென்று இருப்பாள் என்ற நம்பிக்கையில்

அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது சூர்யாவிற்கு

அந்த ஹோட்டல் இருக்கும் தெருவில் அந்த பக்கமும் இந்த பக்கமும் இலக்கின்றி சுற்றினான். நடுநடுவே அவள் செல்பேசிக்கு அழைக்க முயன்று "switched off " என்றே வந்ததும் சோர்ந்து போனான்

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அப்படியே சுற்றியவன் மீண்டும் வந்திருப்பாள் என்ற நப்பாசையுடன் அறைக்கு சென்றவன் அவளை காணாமல் பயத்தில் கண்களில் நீர் கோர்த்தது

ஏதேனும் விபரீதமாய் ஆகி இருக்குமோ என்று அப்போது தான் மனதிற்கு உறைத்தது

அதற்கு மேலும் தாமதிப்பது தவறு என தோன்ற reception சென்றவன்

"என்னோட மனைவிய காணோம்.... போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணனும்... லோக்கல் போலிசை கூப்பிடுங்க" என்றான் கலங்கிய கண்களுடன்

அதை கேட்டதும் reception ஆசாமி நடுங்கினான்

முதலாளிக்கு தெரியாமல் அந்த அறையை வாடகைக்கு விட்டவன் போலிசை அழைத்தால் தன் வேலையே போய் விடுமென்பது உறைக்க "என்ன சார்... எங்க போய்ட போறாங்க... இங்க தான் எங்கயாச்சும் இருப்பாங்க... இருங்க தேடி பாப்போம்... "என சமாளிக்க முயன்றான்

"இல்ல மிஸ்டர்... எல்லா பக்கமும் தேடிட்டேன்... எங்கயும் காணோம்... போலிசை கூப்பிடுங்க ப்ளீஸ்... delay பண்ண பண்ண ரிஸ்க் தான்" என்றான் சூர்யா பதட்டத்துடன்

"அது இல்ல சார்..." என அந்த ஆள் ஏதோ சொல்ல முயல

"இப்ப நீங்களே கூப்பிடறீங்களா இல்ல நான் 100 டயல் பண்ணட்டுமா?" என சூர்யா கோபமாய் கேட்க

"கூப்பிடறேன் சார்... " என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்தான்

_________________

பூட்ஸ் சத்தம் அதிர உள்ளே நுழைந்த காவல் அதிகாரி "மிஸ்டர் கண்ணன்... உங்க ஹோட்டல்ல மாசத்துகொரு கேஸ்... இதே வேலையா போச்சா?" என்றார் reception ஆசாமியிடம்

கண்ணன் எதுவும் பேசாமல் பயந்து நிற்க

"யாரோ தங்கி இருந்தவங்க காணோம்னு சொன்னீங்க இல்லையா... அவங்க கூட இருந்தது யாரு?" என்ற கேள்வியை இன்ஸ்பெக்டர் முடிக்கும் முன்

"அது நான் தான் சார்... என் பேரு சூர்யா... என்னோட wife சுமேதாவை காணோம்" என்றான்

"மிஸ்டர் சூர்யா... நீங்க இருந்த ரூமை நான் பாக்கணும்... வாங்க போலாம்... எந்த ரூம்" எனவும்

"ரூம் நம்பர் 13 சார்" என சூர்யா கூற

"என்னது... ????" என்று அதிர்வுடன் நின்றார் இன்ஸ்பெக்டர்

"ஏன்யா...அந்த மூணு கேசும் முடியற வரை அந்த ரூமை யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம்னு சொன்னது மறந்து போச்சா" என இன்ஸ்பெக்டர் எகிறினார் receptionist கண்ணனிடம்

"சார்...அது வந்து சார்... " என கண்ணன் உளற

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சூர்யா பதறியவனாய் "என்ன சார்... என்ன கேஸ்? ப்ளீஸ் டெல் மீ" என்றான்

"மிஸ்டர் சூர்யா ... அந்த 13 ம் நம்பர் ரூம்ல கடந்த மூணு மாசத்துல மூணு பேரு மர்மமான முறைல இறந்து போய் இருக்காங்க... அதுக்கு என்ன காரணம்னு இன்னும் investigation நடந்துட்டு இருக்கு...இது தெரியாம நீங்க அந்த ரூம்ல தங்கி இருக்கீங்க... பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?"

"ஐயோ... என்ன சார் சொல்றீங்க... ? நான் இந்த ஊர் இல்ல... இந்த நியூஸ் நான் எதுலயும் பாக்கலையே... ஐயோ... இப்ப என்ன செய்வேன்...சுமி... எங்க இருக்க நீ" என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தயாரானான்

"காம் டௌன் மிஸ்டர் சூர்யா... லெட்ஸ் ஹோப் நத்திங் பாட் happened " என மனித நேயத்துடன் அவனை சமாதானம் செய்தார் அந்த காவல் துறை அதிகாரி

___________

சுமேதா என்ன ஆனாள்...?

விடை யாரிடம்... ?

அதே கண்களிடமா....?

பொறுத்திருந்து பார்ப்போம்...............

அடுத்த பகுதி - பகுதி 5 படிக்க - இங்கே கிளிக்கவும்


(தொடரும்...)

35 பேரு சொல்லி இருக்காக:

கோவை குமரன் said...

பொறுத்திருந்து பார்ப்போம்...............)

as soon as possible....thanks for sharing

LK said...

போட்டதே ரொம்ப நாள் கழிச்சு அதில இவ்வளவு சின்னதா போட்டா ? இதெல்லாம் சரியில்லை அவ்வளவுதான் சொல்லுவேன் ???

sandhya said...

ஒ புவனா ஒரே சஸ்பென்ஸ் தாங்க முடியலே ...மீதி கதை சீக்ரமா போடுவிங்களா ??

vgr said...

good one...nalla iruku....

அமைதிச்சாரல் said...

கதை சஸ்பென்ஸோ இல்லியோ.. நீங்க கதையை எப்போ போடுவீங்க என்பதே பெரிய சஸ்பென்சா இருக்கு :-))

நசரேயன் said...

The subscriber you are trying to reach is currently switched off = நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது உபயோகத்தில் இல்லை

"The subscriber you are trying to reach is on another call" = நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது உபயோகத்தில் உள்ளார்

reception =வரவேற்பு

receptionist = வரவேற்பாளர்

SenthilMohan said...

ஏங்க்கா....இது உங்களுக்கே நியாயமாப் படுதா? ரொம்ப நாள் கழிச்சு கத சொல்றீங்க. படிக்க ஆரம்பிக்குறதுக்குள்ள முடிஞ்சு போச்சு. கொஞ்சம் விலாவரியா எழுதியிருக்கலாம்ல.

பத்மநாபன் said...

சர்ரியான சஸ்பென்சுங்க... பாவம் சுமேதாவை கதையில கொன்னுபோடாதிங்க..

Porkodi (பொற்கொடி) said...

i second LK and senthil mohan!

Krishnaveni said...

bayangara suspense aaaaa irukke.....too small post...aduththa thadavai perisaa podungo bhuvana...tempting thriller story, excellent

Mrs.Menagasathia said...

very interesting...

SenthilMohan said...

//*Porkodi (பொற்கொடி) சொன்னது…
i second LK and senthil mohan! **/

கொடியக்கோவ்...(நன்றி Boston அண்ணாச்சி) தனித்தனியா போடுறதுக்கு செந்தில்,மோகன்-னு ரெண்டு பேரெல்லாம் இல்ல. செந்தில்மோகன்-னு ஒன்னே தான்.

SenthilMohan said...

//* சுமேதா என்ன ஆனாள்...?
விடை யாரிடம்... ?
அதே கண்களிடமா....?
பொறுத்திருந்து பார்ப்போம்...............**/
குற்றம் நடந்தது என்ன? மாதிரி முடிச்சிருக்கீங்க.
So அடுத்த அத்தியாயம் நாளைக்கு வரணும்.

Mahi said...

நிறைய பேர் சொல்லிட்டாங்க,நானும் சொல்லிக்கறேனே புவனா? :):)

அடுத்த பகுதிய இன்னுங்கொஞ்சம் நீஈஈஈஈளமா போடுங்க. கற்பனைக்குதிரை மக்கர் பண்ணுனா,அந்த மைண்ட் வாய்ஸ கூப்ட்டிங்கன்னா,ப்ராப்ளம் சால்வ்ட்! ஹிஹிஹி!

SenthilMohan said...

//*Mahi சொன்னது....... அந்த மைண்ட் வாய்ஸ கூப்ட்டிங்கன்னா,ப்ராப்ளம் சால்வ்ட்**/
என்னது..?!?! மைண்ட் வாய்ஸ கூப்பிட்டா Problem solved-ஆ? இவங்க சொன்னாங்கன்னு அதக்கீது கூப்பிட்டுடாதீங்கக்கா.

siva said...

what?
what?
what?
innum mudialaiya????
mudiala...
tissue please....
nice that mind voice...


vartta...

பிரசன்னா said...

//சுமேதா என்ன ஆனாள்...?

விடை யாரிடம்... ?

அதே கண்களிடமா....?

பொறுத்திருந்து பார்ப்போம்...............//

ஹா ஹா இது(வும்) சூப்பர் :)

Kousalya said...

interesting..... next yeppo?

வெங்கட் நாகராஜ் said...

பேசாம நீங்க ஸஸ்பென்ஸ் தங்கமணின்னு பேரை மாத்தி வையுங்க. வரதே ரொம்ப நாள் கழிச்சு - இப்ப இந்த ஸஸ்பென்ஸ் எப்ப தீரப்போதோ... : )

பொருத்திருந்து பார்ப்போம் :)

Thenral said...

suspense thaangala!Seekiram next parta podungo appavithangamani avargale!!!

Mythili said...

very interesting. waiting for the next!!!!!!!!!

சின்ன அம்மிணி said...

சுமேதா என்ன ஆனாள். நல்ல சஸ்பென்ஸ்

தக்குடுபாண்டி said...

குட்டி குட்டியா போஸ்ட் போடும் அடப்பாவி தங்கமணி டவுண்! டவுண்! ( என்னோட சேந்துக்க இஷ்டம் உள்ளவங்க எல்லாம் அடப்பாவி! டவுண்! டவுண்!னு ஜோதில ஐக்கியமாகிக்கலாம்)...:)

ஹேமா said...

சுமேதாவுக்கு என்னா ஆச்சு ....
கண்கள் என்ன சொல்லும்.
பார்க்கலாம் !

ஜெய்லானி said...

இட்லி மாமி இதெல்லாம் அநியாயமா இருக்கு . ரொம்ப நாள் கழிச்சி அதுவும் சின்னதா போட்டு உங்க பேச்சி கா...

siva said...

தக்குடுபாண்டி சொன்னது…
குட்டி குட்டியா போஸ்ட் போடும் அடப்பாவி தங்கமணி டவுண்! டவுண்! ( என்னோட சேந்துக்க இஷ்டம் உள்ளவங்க எல்லாம் அடப்பாவி! டவுண்! டவுண்!னு ஜோதில ஐக்கியமாகிக்கலாம்)...:)

hiiiiiii thakkdu anna nanum joined panikiren....,
MOKKAI
தங்கமணி டவுண்! டவுண்!
MOKKAI PODUM VALLAVAR
தங்கமணி டவுண்! டவுண்!
தங்கமணி டவுண்! டவுண்!
..BUT
mind voice thangamani valga valga valga....
varta..

ஸ்ரீராம். said...

சுமியைக் கொன்னுடாதீங்க... பாவங்க நல்ல பொண்ணுங்க அது...

"The subscriber you are trying to reach is on another call"//

இது பரவாயில்லை.... எங்கள் ஊரில் என் மனைவி அலைபேசியில் பேச முயலும்போதெல்லாம் "நீங்கள் பேச நினைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்றெல்லாம் சொல்லி சண்டையை மூட்டி விடுகிறாள்!

அப்பாவி தங்கமணி said...

@ கோவை குமரன் - பாருங்க பாருங்க... தேங்க்ஸ்ங்க

@ LK - சரிங்க நக்கீரரே...அடுத்த வாட்டி பெருசா எழுதறேன்... தேங்க்ஸ்

@ sandhya - சீக்கரம் போடறேன் சந்த்யா...தேங்க்ஸ்

@ VGR - தேங்க்ஸ் VGR

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ஹ ஹ அஹ... இது நல்லா இருக்குங்க்க்கா... ஹா ஹா ஹா

@ நசரேயன் - சரிங்கண்ணா... இனிமே ஆங்கிலம் குறைச்சுக்கறேன்... நன்றிங்க

@ Senthilmohan - அவ்ளோ சின்னதாவா இருக்கு... சாரி... அடுத்த முறை பெருசா எழுதரனுங்க...

@ பத்மநாபன் - சரிங்கண்ணா....வில்லன் கிட்ட உங்க recomendation சொல்லிடறனுங்க...

அப்பாவி தங்கமணி said...

@ பொற்கொடி - என்னத்த second third ...... ஒ... பழிக்கு பழியா... என்ன சிஸ்டர் இப்படி பண்ணுறீங்க....? elephant க்கு ஒரு காலம் வந்தா cat க்கு ஒரு காலம் வரும் ஆமாம் சொல்லிட்டேன்...ஹ ஹ அஹ

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... அடுத்த தரம் பெருசா போடறேன்...

@ Mrs.Menagasathia - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - இந்த கதை முடிஞ்சாலும் உங்க பேரு பிரச்சனை தீராது போல...

@ SenthilMohan - சரிங்க்ணா....

@ Mahi - தேங்க்ஸ் மகி... mindvoice ஆ? ஒகேங்க... கூப்பிடறேன்... தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - mindvoice உங்களை என்ன பண்ணுச்சுங்ண்ணா...ஹ ஹ அஹ

@ siva - tissue வா... ஏனுங்க...? ஹா ஹா ஹா...

@ பிரசன்னா - தேங்க்ஸ் பிரசன்னா...

அப்பாவி தங்கமணி said...

@ Kousalya - தேங்க்ஸ் கௌசல்யா... next சீக்கரம் போட்டுடறேன்ங்க...

@ வெங்கட் நாகராஜ் - ஒ... பேரை மாத்தறதா... அது சரி... ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க

@ thenral - தேங்க்ஸ்ங்க...சீக்கரம் அடுத்த பார்ட் போடறேன்..

அப்பாவி தங்கமணி said...

@ Mythili - தேங்க்ஸ் மைதிலி...

@ சின்ன அம்மணி - தேங்க்ஸ்ங்க அம்மணி

@ தக்குடு - அடப்பாவி... ஏன் இந்த கொலை வெறி...? ஆளு வேற சேத்தரயா... வெயிட் வெயிட்...

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - பாருங்க... தேங்க்ஸ் ஹேமா

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா... நெக்ஸ்ட் பெரிய போஸ்ட் போடறனுங்க... தேங்க்ஸ்

@ siva - சிவா என்ன கொடுமை இது? இந்த தக்குடு கூட எல்லாம் சேர வேண்டாம்... நல்லதில்ல சொல்லிட்டேன்...ஹா ஹா ஹா...

@ ஸ்ரீராம் - ஹா ஹா ஹா...இது சூப்பர்... சண்டை வேற மூட்டி விடுதா...கஷ்டம் தான் சார்...

Post a Comment