Thursday, July 08, 2010

தங்க மணிக்கு பத்து கேள்விகள் - பதிவுக்கு எதிர்பதிவு....
தராசு அண்ணாத்த "தங்கமணிகிட்ட பத்து கேள்விகள்" கேக்கராருங்களாமா... அதை படிச்சு போட்டு அப்பாவியான நானே பொங்கிட்டனுங்க...அதானுங்க இந்த எதிர் பதிவு...

இந்த லிங்க் குடுத்தது யாருன்னு பொறகால சொல்றனுங்க...அதாவது பின்னாடிங்க... சரி உடுங்க... இப்ப இங்க முன்னாடி படிங்க...

அண்ணாரு கேட்ட ஒரு ஒரு கேள்வியும் "பதிவு"ன்னும் அதுக்கு என்னோட மறுமொழிய "எதிர் பதிவு"ன்னும் போட்டு இருக்கறனுங்... படிச்சுபோட்டு உங்க கருத்த சொல்லி போட்டு போங்... சரிதானுங்....

பதிவு
உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

எதிர் பதிவு
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல


பதிவு
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா


பதிவு
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

எதிர் பதிவு
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்... என்ன நான் சொல்றது....? (தேவையா இது தேவையா...ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்... கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே "நான் செய்வேனே"னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்...நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா... மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்....ஹி ஹி ஹி)பதிவு
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

எதிர் பதிவு
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு.... நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா... நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு .... (இப்ப என்ன சொல்லுவீங்க... இப்ப என்ன சொல்லுவீங்க...ஹா ஹா ஹா)


பதிவு
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எதிர் பதிவு
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்.... ஓ... அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல... அதாவது... ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்... இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்... ஹே ஹே ஹே...


பதிவு
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு
என்ன கொடுமைங்ண்ணா இது? "ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்" னு சொல்றாப்ல பேச்சு.... அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் "என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது"ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க... ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ....? ஹும்... 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ...

பதிவு
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)


பதிவு
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

எதிர் பதிவு
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை... எங்களுக்கு அதுவும் ஒரு வேலை... அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க... பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு...), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்...)


பதிவு
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எதிர் பதிவு
//"போதை வஸ்துக்கள்"// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது...? ஓ... நீங்க ரங்கமணி ஆச்சே... அப்படி தான் இருக்கும்... யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்... எல்லாம் பண்றது தான்..


பதிவு
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்... ஆண்டவா காப்பாத்து...

பத்து கேள்வி கேட்டீங்களே... உங்ககிட்ட ஒரே கேள்வி...

அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது...

என்னமோ போங்க... இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா... ஹா ஹா ஹா

பின் குறிப்பு - தராசு அண்ணாத்தைக்கு:
என்னோட "ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி" பதிவை பாத்துட்டு உங்க "தங்க மணிக்கு பத்து கேள்விகள்" லிங்க் குடுத்தது செந்தில் மோகன் சார் தானுங்க... So என்ன திட்டணும்னாலும் அவரை திட்டிக்கோங்க... மீ எஸ்கேப்... please kill the messanger... not me.... (ஹி ஹி ஹி)

101 பேரு சொல்லி இருக்காக:

LK said...

ரங்கமணிகள் சங்கம் சார்பா இதற்க்கு எதிர்பதிவு விரைவில் எழுதப் படும் என்று பணிவன்புடன் சொல்லிக் கொல்கிறேன்(no typo error)

LK said...

அதே கண்கள் என்ன ஆச்சு ?? விரைவில் அதை எழுதவும் இல்லையேல் அந்த கண்களே உங்களுக்கு பார்சலில் அனுப்பப் படும்

LK said...

where is anaamika, boston annachi , seekiram vaanga

dheva said...

ரங்கமணிகள் சங்க செயலாளர் என்ற முறையில் ரங்கமணிகள் சார்பாக எங்கள் பொருளாலர்....கார்திக் தக்க பதிலடி கொடுப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....

LK...@ என்ன பாஸ் சொல்லவே இல்ல....அடி பயங்கரமா இருக்கு பதிலடி கொடுத்து ரங்கமணிகள....காப்பதுறது உங்க கையிலதான் இருக்குப்பு.....சரியா?

kggouthaman said...

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வருகின்ற பத்மினி & வைஜயந்திமாலா நடனப் போட்டி / பாட்டு ஞாபகம் வருகிறது. (பாடலின் ஆரம்ப வரி என்ன என்று மறந்துபோய் விட்டது.)

LK said...

@தேவா

கண்டிப்பாக விரைவில் பதிலடி கொடுக்கப் படும்..

@கௌதம்
அண்ணா," கண்ணும் கண்ணும் கலந்து " பாட்டுதான் அது,...

ப்ரியமுடன் வசந்த் said...

//எதிர் பதிவு
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல //

ஆமா லிப்ஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டு இதெல்லாமா ரங்கமணிகள் யூஸ் பண்றாங்க?

//எதிர் பதிவு
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா
//

உங்களாலதான் நிறைய நோட்டுகள் கசங்கி கிழிஞ்சு போறது அதனால புது நோட்டு அச்சடிக்கவேண்டியிருப்பதும் உங்களாலேதான்

//எதிர் பதிவு
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்... என்ன நான் சொல்றது....? (தேவையா இது தேவையா...ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்... கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே "நான் செய்வேனே"னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்...நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா... மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்....ஹி ஹி ஹி)//

மொக்க இது சரில்ல...

//என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு.... நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா... நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு .... (இப்ப என்ன சொல்லுவீங்க... இப்ப என்ன சொல்லுவீங்க...ஹா ஹா ஹா)//

உங்களுக்கு டிவி சீரியல் தொந்தரவில்லாம பாக்கணும்ன்றதுக்காக குழந்தைகளை பாடுபடுத்திட்டு அதுக்காக சமாளிப்பிகேசனெல்லாம் க்கூடாதுங் அம்மணி..

//அதுதாங்க மல்டி-டாஸ்கிங்.... ஓ... அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல... அதாவது... ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்... இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்... ஹே ஹே ஹே... //

பொய் பொய் குழந்தைகளுக்கு யூனிஃபார்ம் எடுக்க கடைக்கு போறதுக்கே உங்களுக்கு தேவையான ட்ரெஸ் எடுப்பதற்க்கு ஓத்திகைதான் இல்லாட்டினா நேரம் மிச்சம் பிடிக்கறதா கூட இருக்கலாம்...

//என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)
//

ரொம்ப பேர் சொல்லிக்கிட்டாங்க அடுத்தவீட்டு அம்மிணி எதிர்த்த வீட்டு அம்மிணிகள்கிட்ட பெருமையடுச்சக்கத்தான்னு ஏன் ஒத்துகிடமாட்டேன்றீங்க?
//

அபி அப்பா said...

தேவா, கார்த்தி எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. கமான் கமான் கமான்...... என்னது குதிரையை கூப்பிடுவது போல கரடியா கத்துறேன். இப்பதான் நாய் மாதிரி அலைஞ்சுட்டு வரேன். இல்லாட்டி எறும்பு மாதிரி சுறுசுறுன்னு இதுக்கு எதிர் பதிவு எழுதிடுவேன். யானை மாதிரி மனசிலே கர்வம் மட்டும் இருந்தா போதாது. நரி மாதிரி சிந்திச்சு சிங்கம் மாதிரி ஒரே அடி ஒன்னரை டன் அடியா அடிக்க வேண்டாமா?

SenthilMohan said...

அப்பாவி ரங்கமணிகள் சங்க உறுப்பினர்களே, ஒரு வரில பதில் சொல்லக் கூடிய கேள்விய எல்லாம் உட்டுட்டு, அவசரம் அவசரமா இந்தப் பதிவு எழுதிஇருப்பதன் மூலம் பதிவரது உண்மையான நோக்கம் அறியப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் நான் இன்னும் உங்கள் சங்கத்து அடிப்படை உறுப்பினர் கூட ஆகவில்லை என்பதாலும், சும்மா எட்டிப் பாக்க சொன்னதற்கு, முழு பொறுப்பு ஏற்க முடியாதென்பதாலும் இந்த பதிவிற்கும், எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். யக்கோவ், உங்கள அப்புறம் கவனிச்சுக்குறேன்.

SenthilMohan said...

@ தராசு அவர்கள் : அன்பரே இது முழுக்க, முழுக்க, அப்பாவி என்று சொல்லிக் கொண்டு அராஜகம் பண்ணிக் கொண்டிருகின்ற ஒரு அடப்பாவி டுங்காமணி செய்த சதி. என்னுடைய மேற்கண்ட Disclaimer-இல் தெளிவாக எல்லாவற்றினையும் குறிப்பிட்டு இருகின்றேன்.தவறாமல் கண்டுக்கோங்க.

நசரேயன் said...

//எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல//

ஆமா பொறுப்பா சீப்பு, கண்ணாடி, முகபவுடர் எல்லாம் கொண்டு போவீங்க

//
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா //

ஆமா புடவை, தங்கநகை எல்லாம் ரெம்ப சிக்கனமுன்னு statistics சொல்லுது

//தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்//

தேங்காய்க்கு பதிலா உங்க இட்லியே போதும்

//
மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்//

எதுக்கு உப்புமா வைக்கவா, இல்லை உங்க இட்லியை சாப்பிடவா?

//நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா//

தாயைப் போல பிள்ளை(?)

//உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்//
சட்டைக்கு மட்டுமே செலவா ?

//33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ..//

அரசாங்கம் 33% சதவீதம் கொடுத்தாலும், வீட்டிலே 100% சதவீதம் உங்க ஆட்சி தானே

//
நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே//

என்னவோ நாங்க வேண்டாமுன்னு சொன்ன புடவையே எடுக்காத மாதிரி சொல்லக் ௬டாது

//எங்களுக்கு அதுவும் ஒரு வேலை//

ஒரு சின்ன திருத்தம், அது மட்டும் தான் உங்க வேலை

//அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்//

வாங்குற 10 ரூபா மளிகை சாமானுக்கு 100 ரூபா அபதாரம் கட்டினா சந்தோசமா

// ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது//

வீட்டிலே தான் தொல்லை தாங்கமுடியலைன்னு அலுவலகம் வந்தா, அங்கேயும் தொல்லை கொடுத்தா எப்படி ?

நசரேயன் said...

//எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல//

ஆமா பொறுப்பா சீப்பு, கண்ணாடி, முகபவுடர் எல்லாம் கொண்டு போவீங்க

//
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா //

ஆமா புடவை, தங்கநகை எல்லாம் ரெம்ப சிக்கனமுன்னு statistics சொல்லுது

//தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்//

தேங்காய்க்கு பதிலா உங்க இட்லியே போதும்

//
மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்//

எதுக்கு உப்புமா வைக்கவா, இல்லை உங்க இட்லியை சாப்பிடவா?

நசரேயன் said...

//நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா//

தாயைப் போல பிள்ளை(?)

//உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்//
சட்டைக்கு மட்டுமே செலவா ?

//33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ..//

அரசாங்கம் 33% சதவீதம் கொடுத்தாலும், வீட்டிலே 100% சதவீதம் உங்க ஆட்சி தானே

//
நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே//

என்னவோ நாங்க வேண்டாமுன்னு சொன்ன புடவையே எடுக்காத மாதிரி சொல்லக் ௬டாது

//எங்களுக்கு அதுவும் ஒரு வேலை//

ஒரு சின்ன திருத்தம், அது மட்டும் தான் உங்க வேலை

நசரேயன் said...

//அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்//

வாங்குற 10 ரூபா மளிகை சாமானுக்கு 100 ரூபா அபதாரம் கட்டினா சந்தோசமா

// ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது//

வீட்டிலே தான் தொல்லை தாங்கமுடியலைன்னு அலுவலகம் வந்தா, அங்கேயும் தொல்லை கொடுத்தா எப்படி ?

நசரேயன் said...

பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலை

தக்குடுபாண்டி said...

சபாஷ்! சரியான போட்டி!!...:)

அனாமிகா துவாரகன் said...

எனக்கு இன்னும் ஒபாமா தலைமை தாங்கும் பாராட்டு விழா நடத்தவில்லை என்பதால் ரங்கஸ் சப்போட்டை வாபஸ் வாங்கற ஐடியால இருக்கேன். மரியாதையா எல்லா ரங்குஸ்சும் அனாமிகா வாழ்கனு ஒரு பதிவாவது இன்னும் ஒரு வாரத்தில் போடலேன்னா நான் முற்று முழுதாக தங்கஸ் பக்கம் சாய்ஞ்சிடுவேன். ஹா ஹா ஹா.

அமைதிச்சாரல் said...

சூப்பர் எதிர்பதிவு+போட்டி...

ஜெய்லானி said...

பத்துக்கும் பதில் சரியில்லாததால் இந்த ஷீட்டுக்கு ஜீரோ மார்க் வழங்கப்படுகிறது ..

ஜெய்லானி said...

//அனாமிகா வாழ்கனு ஒரு பதிவாவது இன்னும் ஒரு வாரத்தில் போடலேன்னா நான் முற்று முழுதாக தங்கஸ் பக்கம் சாய்ஞ்சிடுவேன். ஹா ஹா ஹா.//

அனாமிகா வாழ்க...
அனாமிகா வாழ்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பயங்கர எதிர்ப்புகளுக்கு நடுவில இந்தப் பதிவ துணிஞ்சு எழுதியிருக்கீங்க தங்க்ஸ்.. உங்களப் பாராட்ட வார்த்தைகளே இல்ல..

கேள்வி-பதில்-பதிலுக்கான கேள்வி எல்லாமே ஜூப்ப்பர்..

அப்பாவி தங்கமணி said...

@ LK - எத்தன எதிர்பதிவு போட்டாலும் உண்மை என்னனு உலகத்துக்கு தெரியும் பிரதர்...

@ LK - அதே கண்கள்... பக்கத்து ஊருக்கு ஒரு வேலையா போய் இருக்கு... வந்ததும் போட்டுடறேன்... பார்சல் எல்லாம் வேண்டாம் .... மீ எஸ்கேப்

@ //LK சொன்னது… where is anaamika, boston annachi , seekiram vaanga //
பாஸ்டன் அண்ணாச்சி பிறந்த நாள் ஊர்வலம் முடிந்து வரவில்லை என அறியபடுகிறது
அனாமிகா nun ஆக போய்ட்டாளாம் (அப்பாடா ஒரு மனுஷன் பொழச்சான்...ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@dheva - அந்த கூட்டணி எல்லாம் ஸ்ட்ராங் இல்ல பாஸ்... பேசாம எங்க பக்கம் சேருங்க.. அதான் safe ...

@ kggouthaman - நன்றிங்க... நீங்க எங்க கட்சி தானே... அது "யாரடி நீ மோகினி" பாட்டு தானங்க

அப்பாவி தங்கமணி said...

@ //LK சொன்னது… @தேவா-கண்டிப்பாக விரைவில் பதிலடி கொடுக்கப் படும்//
குடு குடு... என் கை என்ன பூ பறிக்குமா... ஹையோ ஹையோ...

@ //LK சொன்னது @கௌதம்- அண்ணா," கண்ணும் கண்ணும் கலந்து " பாட்டுதான் அது,... //
இது கூட தெர்ல... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியமுடன் வசந்த் -
//ஆமா லிப்ஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டு இதெல்லாமா ரங்கமணிகள் யூஸ் பண்றாங்க?//
மத்ததெல்லாம் selective visionasia ல உங்க கண்ணுக்கு தெரியலயாங்ண்ணா ... ஹையோ ஹையோ

//உங்களாலதான் நிறைய நோட்டுகள் கசங்கி கிழிஞ்சு போறது அதனால புது நோட்டு அச்சடிக்கவேண்டியிருப்பதும் உங்களாலேதான்//
Reserve பேங்க்ல வேலை செய்யறீங்களோ... ஆனா சேமிக்கறது நாங்க தான் அதுல நீங்க போட்டி போட முடியாது

//மொக்க இது சரில்ல...//
உண்மை சுடும்... அதுக்காக மொக்கையா... பேசுங்க பேசுங்க

//உங்களுக்கு டிவி சீரியல் தொந்தரவில்லாம பாக்கணும்ன்றதுக்காக குழந்தைகளை பாடுபடுத்திட்டு அதுக்காக சமாளிப்பிகேசனெல்லாம் க்கூடாதுங் அம்மணி..//
"தலை வாரி பூ சூடி உன்னை பாட சாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை"னு தான் பாட்டே இருக்கு..."அப்பா"னு இல்ல பாஸ்

//பொய் பொய் குழந்தைகளுக்கு யூனிஃபார்ம் எடுக்க கடைக்கு போறதுக்கே உங்களுக்கு தேவையான ட்ரெஸ் எடுப்பதற்க்கு ஓத்திகைதான் இல்லாட்டினா நேரம் மிச்சம் பிடிக்கறதா கூட இருக்கலாம்//
நான் தான் சொன்னனே... ரங்க்ஸ்களுக்கு இது புரியாதுன்னு....Multi - tasking is only for women

//ரொம்ப பேர் சொல்லிக்கிட்டாங்க அடுத்தவீட்டு அம்மிணி எதிர்த்த வீட்டு அம்மிணிகள்கிட்ட பெருமையடுச்சக்கத்தான்னு ஏன் ஒத்துகிடமாட்டேன்றீங்க?//
ஆமாங்ண்ணா... நாங்க தான் புது LCD டிவி, பைக் எல்லாம் friends கிட்ட காட்டி பெருமை பட்றமாக்கும்... ஹும்... உண்மைய ஒத்துக்க மாடீங்களே...

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - என்ன அப்பா, நடராஜ்ஐ என்னை ஜூ கூட்டிட்டு போனீங்களோ... சும்மா கேட்டனுங்க... ஹா ஹா ஹா

@ SenthilMohan - என்னங்க மோகன்... இப்படி மாத்தி மாத்தி பேசறீங்க... நீங்க தானுங்க எதிர் பதிவே போட சொன்னீங்க... (என்னை மட்டும் மாட்டி விடணும்னு நெனச்சா இப்படி தான் சிக்க வெப்பேன் சொல்லிட்டேன்,.. ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் -
//ஆமா பொறுப்பா சீப்பு, கண்ணாடி, முகபவுடர் எல்லாம் கொண்டு போவீங்க //
பின்ன நீ பார்க் பீச்னு போனப்புறம் அம்மணி கிட்ட தானுங்க சீப்பு வாங்கி யூஸ் பண்றீங்க.. அப்ப உங்களுக்கும் யூஸ் ஆகுதே தானே பாஸ்... ஒத்துக்கணும்... இல்லேன்னா கனவுல சாமி கண்ணை குத்தும்

//ஆமா புடவை, தங்கநகை எல்லாம் ரெம்ப சிக்கனமுன்னு statistics சொல்லுது//
எல்லாமும் இன்வெஸ்ட்மென்ட் தான்... இன்னிக்கி தங்கம் விக்கற விலைல அதை விட பெரிய இன்வெஸ்ட்மென்ட் இல்லைன்னு பெரிய பெரிய economist களே சொல்றாங்க... தெரியுங்களா சார்?

//தேங்காய்க்கு பதிலா உங்க இட்லியே போதும்//
இப்படி எல்லாம் சொன்னா அதான் கெடைக்கும்

//எதுக்கு உப்புமா வைக்கவா, இல்லை உங்க இட்லியை சாப்பிடவா?//
வேற என்ன செய்ய? உண்மைய ஒதுக்கலேன்னா அதுவும் நடக்கும்

//தாயைப் போல பிள்ளை(?)//
தாயை போல நல்ல பிள்ளை ஆகணும்னு தான் மேல சொன்னதெல்லாம் செய்யறது

//சட்டைக்கு மட்டுமே செலவா ?//
நூறு ரூபா சட்டைய ஆயிரம் குடுத்து வாங்கினா செலவு மட்டும் இல்ல economical வேஸ்ட்...

//அரசாங்கம் 33% சதவீதம் கொடுத்தாலும், வீட்டிலே 100% சதவீதம் உங்க ஆட்சி தானே//
நோ வே பாஸ்...

//என்னவோ நாங்க வேண்டாமுன்னு சொன்ன புடவையே எடுக்காத மாதிரி சொல்லக் ௬டாது //
உங்க ரசனை அப்படின்னா அண்ணி மேல சொல்ல கூடாதுங்ண்ணா... (ஹி ஹி ஹி)

//ஒரு சின்ன திருத்தம், அது மட்டும் தான் உங்க வேலை//
ஹையோ ஹையோ... உங்களுக்கு ஒரே ஜோக் தான்

//வாங்குற 10 ரூபா மளிகை சாமானுக்கு 100 ரூபா அபதாரம் கட்டினா சந்தோசமா//
தள்ளி நிறுத்தி போட்டு வாங்க... நாங்க சாமான்ல மிச்சம் பண்றமல்ல...

//வீட்டிலே தான் தொல்லை தாங்கமுடியலைன்னு அலுவலகம் வந்தா, அங்கேயும் தொல்லை கொடுத்தா எப்படி ? //
நாங்களும் இதையே சொல்லலாமே சார்... ஹி ஹி ஹி

//நசரேயன் சொன்னது… பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலை//
அதான்... இப்பவாச்சும் புரிஞ்சுகோங்கன்னு சொல்றோம்... ஹும்...

அப்பாவி தங்கமணி said...

@ //தக்குடுபாண்டி சொன்னது… சபாஷ்! சரியான போட்டி!!...:)//
அதெல்லாம் இருக்கட்டும்... நீ யார் கட்சி.. அதை சொல்லு மொதல்ல... ஹா ஹா அஹ

@ அனாமிகா துவாரகன் - ஹா ஹா ஹா , LK இவள நம்பாதேன்னு உனக்கு மொதலே சொன்னனல்ல... இப்ப அனுபவி... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க... எல்லாம் நீங்க எல்லாம் நம்ம பக்கம் இருக்கற தைரியம் தான்...

@ ஜெய்லானி - ஹலோ சார்.. என்னதிது... ஜீரோ வா... அப்போ நீங்க ஹீரோ லிஸ்ட்ல இல்ல போங்க..

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - தேங்க்ஸ்ங்க ... ரெம்ப ரெம்ப தேங்க்ஸ்... எல்லாம் உங்கள போல நல்லவங்க ஆதரவுலதான்....

GEETHA ACHAL said...

//உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)
//ஆஹா...சூப்பர்ப்...அருமையான கலக்கல் பதிவு....

ஹேமா said...

பதிவும் கலக்கும் மன்னர்களின் கும்மியும் கலக்கல்.
,
@ நசரேயன் -
//ஆமா பொறுப்பா சீப்பு, கண்ணாடி, முகபவுடர் எல்லாம் கொண்டு போவீங்க //

பின்ன நீ பார்க் பீச்னு போனப்புறம் அம்மணி கிட்ட தானுங்க சீப்பு வாங்கி யூஸ் பண்றீங்க.. அப்ப உங்களுக்கும் யூஸ் ஆகுதே தானே பாஸ்... ஒத்துக்கணும்... இல்லேன்னா கனவுல சாமி கண்ணை குத்தும்

தங்கமணி "நசர்"க்கு இப்பிடியான எதுவும் தேவைப்படாது,அழகு ராசா அவர் !

சுசி said...

தங்கமணி தங்கமணிதான்.. சபாஷ் புவனா.

சுசி said...

தங்கமணி தங்கமணிதான்.

சபாஷ் புவனா.

சுசி said...

அச்சச்சோ.. இன்னைக்கும் கமண்ட் கோளாறா..

முதல்ல காணம். காக்கா தூக்கி போச்சுன்னு மீள் கமண்டினா ரெண்டும் வந்திருக்கே..

ஸ்ரீராம். said...

//"நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா.."//

(மனதிற்குள்) "அப்போ நான் நல்லவனா கெட்டவனா..?"

(கமெண்ட்டுக்கு) "இப்படிப் பதிவு, பதிவுக்கு எதிர்ப் பதிவு, எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவு, எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவு, எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவுக்கு எதிர்ப்பதிவு என்றெல்லாம் எழுதும்
"நீங்க நல்லவரா கெட்டவரா...?" (எனக்குத் தெரியலியே என்ற பதில் மட்டும் வேணாம்..!)

Karthick Chidambaram said...

சபாஷ்! சரியான போட்டி ... !
ஆமா ஏன் இந்த கோல வெறி ?

Porkodi (பொற்கொடி) said...

//அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்//

illenna inum 15 minutes delay agum, epdi vasadhi? :P

vanathy said...

தங்ஸ், சபாஷ் சரியான போட்டி. இதுக்கு நம்ம பின்னூட்ட புயல் எப்படி பதிலடி கொடுக்கப் போறாங்க.

வித்யா said...

:))

தெய்வசுகந்தி said...

அப்பாவி தங்கமணி(கள்) வாழ்க!!!!!!!!!!!!!

Mahi said...

கலக்கல் பதிவு புவனா! தங்கமணிங்க எவ்வளவு நல்லவங்கன்னு பத்து கேள்விக்கும் பதிலை கொடுத்து நம்மபக்கம் இருக்க நீதிய நிலைநாட்டிட்டீங்க!!சூப்பரு!

தராசு said...

எச்சூஸ் மி, மே ஐ கம் இன்

தராசு said...

இங்கு ரங்க மணிகளுக்கு ஒரு நிபந்தனை,

கேட்ட கேள்விகளுக்கு மாத்திரம்தான் பதில் சொல்லணும், சும்மா இந்த விஷயத்தை திசை திருப்பறது, கேள்விக்கு பதிலா ஒரு கேள்வி கேக்கறது எல்லாம் அழுகுணி ஆட்டம் என்று ஒதுக்கப்படும்.

தராசு said...

//கேள்வி : எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே//

பதில் : எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய?//

ரங்ஸ்க்கு தேவையான குப்பைகள் என்னென்ன? படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

தராசு said...

//ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...//

எங்கே போய் பார்ப்பது, ரூட் மேப் இணைக்கவும்

தராசு said...

//சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்//

அவங்களத்தான் சொல்லீருக்கோம், செஞ்ச தப்பை ஏன் தப்புன்னு என்னைக்குமே ஒத்துக்கறதில்லைனு கேட்டா அதுக்கு பதில் சொல்லணும்.

தராசு said...

//அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?//

இதுக்கு பதில் ஆம், இல்லை, எனக்குத் தெரியாது இந்த மூன்றில் ஒன்றைக் கூறவும். இதை விட்டுட்டு சும்மா வாய்ச்சது, விதிச்சது, மிதிச்சது, அது இதுன்னு திசை திருப்பக் கூடாது. உங்க கிட்ட பதில் இல்லைங்கறது எங்களுக்கு தரியும், ஆனா அதை நீங்க ஒத்துக்குங்க

தராசு said...

//அதுதாங்க மல்டி-டாஸ்கிங்//

ஹலோ, ஒரு டாஸ்க்கை ஒழுங்கா பண்ணுங்க.

தராசு said...

//கேள்வி : எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க போனல பேசும் போது மட்டும் ஏன் மிக்சில மசால் அரைக்கறீங்க?

பதில் : என்ன கொடுமைங்ண்ணா இது?//

இதைத்தான நாங்களும் சொல்றோம், ரொம்பவே கொடுமைங்க அது.

தராசு said...

//நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே//

எங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சட்னி அரைச்சு குடுக்க தெரியல, இதுல புடவை கட்றாங்களாம் புடவை, நல்லா குடுக்கறாங்கைய்யா டீடெய்லு...

தராசு said...

//நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க... பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு...),//

ஒரே கன்ஃபூஷனா இருக்கே, வீட்டை விட்டு வெளிய கிளம்பும் போது எதுக்கு மிசில அரைக்கறீங்க, இதான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும், இல்லைன்னா திரியலைன்னு சொல்லுங்க

தராசு said...

//யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்... எல்லாம் பண்றது தான்//

ஹலோ, அந்த டப்பாவெல்லாம் என்ன அமுத சுரபியா, தீரத்தீர மறுபடியும் தானா நிறைஞ்சுக்கறதுக்கு. ஒரு நூற்றாண்டா சீல் பிரிக்காமயே நிறைய டப்பா இருக்கே, அதெல்லாம் எதுக்கு வாங்குனதுன்னாவது உங்களுக்கு தெரியுமா?

தராசு said...

//அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்//

ஆமா, மளிகை சாமான்ல ஒரு ரூபா மிச்சம், போலீஸ் காரனுக்கு நூறு ரூபாய் தண்டம்,

SenthilMohan said...

@ தராசு அவர்கள்: ஒவ்வொன்னுக்கும் யோசிச்சு பொறுமையா, நச்-னு இப்ப பதில் Comment போட்டுடுங்க. அந்தக்கா வந்து பாத்துட்டு தெறிச்சுடனும். அப்புறம் 3 நாளா உங்க page-ல Comments போட Try பண்ணிட்டு இருக்கேன். சரியாவே Submit ஆக மாட்டிங்குது. Publish பட்டன கிளிக் பண்ண உடனே blank-ஆ வந்து நிக்குது. மத்தவங்களுக்கு மட்டும் எப்டி ஆவுது. கொஞ்சம் பாத்து/கேட்டு சொல்லுங்க.

dheva said...

//அபி அப்பா சொன்னது…
@தேவா, கார்த்தி எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க.?//

சதிய உடைக்க பயங்கரமா சதி பண்ணிட்டு இருக்கோம்...ம்ஹூம்.....ம்ஹூம்....ம்ஹூம் (இது நம்பியார் ஸ்டைல் சிரிப்பு....)

//அப்பாவி தங்கமணி சொன்னது…
@தெவ - அந்த கூட்டணி எல்லாம் ஸ்ட்ராங் இல்ல பாஸ்... பேசாம எங்க பக்கம் சேருங்க.. அதான் சfஎ ...//

விலைக்கு வாங்க பாக்குறாங்க...வாங்க பாக்குறாங்க....ஏங்க... நாந்தாங்க.. சங்கத்து செயலாளரே.....!


///அப்பாவி தங்கமணி சொன்னது…
@ //ள்K சொன்னது… @தேவா-கண்டிப்பாக விரைவில் பதிலடி கொடுக்கப் படும்//
குடு குடு... என் கை என்ன பூ பறிக்குமா... ஹையோ ஹையோ...//


தங்கமணிகள் வன்முறை ஆட்டம்....பூ பறிக்க மாட்டோம்....அடித்து உடைப்போம் என்ற ரீதியில்....பகிங்கர.....பயமுறுத்தல்....(கொஞ்சம் பயமாதாங்க இருக்கு.....கார்திக்க்..பக்கதுலேயெ நில்லுங்க...)

கடைசியா ஒண்ணு கேக்குறென்......என் சங்கத்து ஆளா அடிச்சது யாரு..... நாளைக்கு பாருங்க....பூகம்பம் வெடிக்கும்...சுனாமி புரளும்...லைலா புயல் வீசும்....தமிழ் நாடே பத்தி எரியும்...(கொடுத்திருக்கிற பில்டப்ப....காப்பாத்தீடு....கார்த்தீதீதீதீ...(LK)

தராசு said...

செந்தில்,

அதான் பதில் போட்டுட்டம்ல, எதிரணி கிலியடிச்சுப் போய் அவிங்க கட்சியோட அவசர கால கூட்டத்தை கூட்டியிருக்கறதா நம்ம உளவுத்துறை சொல்லுது.

அப்புறம் என் கடையில இருக்கற பிரச்சனை, மீ த செக்கிங்.

தராசு said...

செந்தில்,

செக் பண்ணீட்டேன், இப்பத்தான் ஒரு சோதனைப் பின்னூட்டமும் போட்டுட்டு வந்தேன். சரியாத்தான இருக்கு.

bala said...

appavi rangamani yaaravathu irukeengala???? :-D
intha maari innum neraya QA sessions kudunga... gud questions and gud answers... :)))

pinkyrose said...

hey hey ennappa nadakkuthu inga....
comments maathiri theriyala aalukku oru pathivu eluthura mathiri theriyuthu eppa konjam enna nadakuthunu sollungappa...

paravala enga sir tharra qst ans vida ithu konjam puriyara maathiri irukku irunthaalum yaaravathu theliva sonna nallathu

pinkyrose said...

oru pathivu eluthavae kanna kattuthu inga

pinkyrose said...

ennanga seriousa sandai podra jorla enna marathuteenga

தனி காட்டு ராஜா said...

"பதிவு" மட்டும் சூப்பர்.....

geetha santhanam said...

//ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.//
//சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்//
பின்னிட்டீங்க அப்பாவி அம்மணி.
அப்படியே, தராசு அண்ணனுக்கு, எங்க வீட்டு ரங்கமணி 'அப்படியே என்னோட ஃபீலிங்க்சை எழுதியிருக்காரே' என்று தழுதழுத்தாரென்றும் சொல்லவும்---கீதா

sandhya said...

பதிவு
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)

இது ரொம்ப சரியா சொன்னிங்க புவனா .எல்லா கேள்வியும் பதிலும் சூப்பர் தான் .ரொம்ப ரசித்தேன் நன்றி

Gayathri said...

கலக்கி எடுத்துடிங்க மெடம். என் full support உங்களுக்குத்தான்.
அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது...

ஸுப்பர் அக்கா கலக்கிடேள்.

அப்பாவி தங்கமணி said...

@ GEETHA ACHAL - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க கீதா... முதல் வருகைக்கு நன்றி

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ சுசி - தேங்க்ஸ் சுசி... எல்லாம் நீங்க எல்லாம் கூட இருக்கற தைரியம் தான்..ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - அண்ணா, நீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்கன்னு நினைக்கிறேன்... அதனால நீங்க நல்லவங்க தான்... அண்ணா நல்லவர்ன தங்கையும் (நான் தான்) நல்லவ தானேங்க... (இது எப்படி இருக்கு....????)

@ Karthick Chidambaram - தேங்க்ஸ்ங்க... கோல வெறி எல்லாம் இல்லைங்களே... ஓ... கொல வெறினு சொல்ல வந்தீங்களோ.... ரெம்ப சீரியல் பாக்றீங்க போல... ஹா ஹா ஹா

@ Porkodi (பொற்கொடி) - சூப்பர் கொடி,.....ரைட் answer மேடம்...

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - தேங்க்ஸ் வானதி.... புயல் என்ன செய்ய போறார்னு பாப்போம்... ஹா ஹா ஹா

@ வித்யா - தேங்க்ஸ் வித்யா

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ் சுகந்தி... முதல் வருகைக்கி நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - நன்றிங்க மகி.... நாம எல்லாம் நல்லவங்கங்கறது சொல்லாமையே தெரிஞ்சுது தானங்க... என்னங்க தான் சொல்றது...

அப்பாவி தங்கமணி said...

@ தராசு - எஸ், யு கேன் கம் இன் சார்... நீங்க ரங்கமணிகளுக்கு சப்போர்ட் இல்லையா... ஒகே ஒகே .... சூப்பர்

//ரங்ஸ்க்கு தேவையான குப்பைகள் என்னென்ன? படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.//
ஒண்ணா ரெண்டா... லிஸ்ட் போட்டா ப்ளாக் வெடிச்சுடும்...

//எங்கே போய் பார்ப்பது, ரூட் மேப் இணைக்கவும்//
இங்க போய் பாருங்க பாஸ்... http://www.mainstreet.com/article/smart-spending/women-trump-men-saving-ஹபித்ஸ்

//அவங்களத்தான் சொல்லீருக்கோம், செஞ்ச தப்பை ஏன் தப்புன்னு என்னைக்குமே ஒத்துக்கறதில்லைனு கேட்டா அதுக்கு பதில் சொல்லணும்//
உங்களுக்கு confirmed தேங்கா தான்...

//இதுக்கு பதில் ஆம், இல்லை, எனக்குத் தெரியாது இந்த மூன்றில் ஒன்றைக் கூறவும். இதை விட்டுட்டு சும்மா வாய்ச்சது, விதிச்சது, மிதிச்சது, அது இதுன்னு திசை திருப்பக் கூடாது. உங்க கிட்ட பதில் இல்லைங்கறது எங்களுக்கு தரியும், ஆனா அதை நீங்க ஒத்துக்குங்க //
உண்மைய ஒத்துக்க கஷ்டமாதான் இருக்குங்க உங்களுக்கு... என்ன செய்ய? உண்மை சுடும்...(ஹா ஹா ஹா )

//ஹலோ, ஒரு டாஸ்க்கை ஒழுங்கா பண்ணுங்க//
இதை படிங்க... அப்ப தெரியும் இதுல யாரு பெஸ்ட்னு http://hubpages.com/hub/Multi-Tasking-The-Real-Difference-Between-Men-and-வோமேன்

//இதைத்தான நாங்களும் சொல்றோம், ரொம்பவே கொடுமைங்க அது//
நல்லாவே நழுவறீங்க சார்... ஹா ஹா ஹா

//எங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சட்னி அரைச்சு குடுக்க தெரியல, இதுல புடவை கட்றாங்களாம் புடவை, நல்லா குடுக்கறாங்கைய்யா டீடெய்லு//
இப்ப பேச்சை மாத்துறது நீங்களா... நாங்களா.... ஹா ஹாஹ்

//ஒரே கன்ஃபூஷனா இருக்கே, வீட்டை விட்டு வெளிய கிளம்பும் போது எதுக்கு மிசில அரைக்கறீங்க, இதான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும், இல்லைன்னா திரியலைன்னு சொல்லுங்க//
வீட்டை விட்டு கிளம்பறப்ப வெறும் வயதோட போவீங்களோ... காலைல டிபன் வேண்டாமோ... என்னங்க இன்னிக்கி பொய் பேசும் தினமா ரங்க்ஸ்களுக்கு? ஹா ஹா ஹா

//ஆமா, மளிகை சாமான்ல ஒரு ரூபா மிச்சம், போலீஸ் காரனுக்கு நூறு ரூபாய் தண்டம்//
சரியான இடம் தேடி நிறுத்தற வேலை ஒண்ணு தானே உங்களுக்கு... அதையுமா நாங்களே சொல்லி தரணும்,.....ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா...

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - ஏனுங்க இந்த கொல வெறி? புள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுவது ஞாயமா, இது ஞாயமா? ஹா ஹா அஹ

@ dheva - சதி பண்றோம்னு ஒத்துகிட்டதுக்கு நண்றிங்ண்ணா... நம்பியார் ஸ்டைல்ஆ... ஏன் இப்படி இதுலயும் காப்பி... ஹா ஹா ஹா... விலைக்கி எல்லாம் வாங்கல பாஸ்... ஜெயிக்கற கூட்டணில சேருங்கன்னு நல்லது தான் சொன்னேன்... அப்புறம் உங்க விதி... ஹா ஹா அஹ

//பூ பறிக்க மாட்டோம்....அடித்து உடைப்போம் என்ற ரீதியில்....பகிங்கர.....பயமுறுத்தல்....//
அடக்கொடுமையே... ஏனுங்ண்ணா... terror படம் பாத்தீங்களா நேத்திக்கி நைட்...

ஹா ஹா அஹ.... சூப்பர் பில்ட் அப்... பாப்போம் பாப்போம்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ தராசு -
//அதான் பதில் போட்டுட்டம்ல, எதிரணி கிலியடிச்சுப் போய் அவிங்க கட்சியோட அவசர கால கூட்டத்தை கூட்டியிருக்கறதா நம்ம உளவுத்துறை சொல்லுது//
கிலியும் அடிக்கல எலியும் அடிக்கலீங்க... தெளிவாதான் இருக்கோம்... ஓ... உங்கள பத்தி நீங்களே சொல்லிக்கரீங்களோ... ஒகே ஒகே (பாவம்...)

@ bala - நன்றிங்க பாலா... முதல் வருகைக்கும் நன்றி

@ pinkyrose - ஹா ஹா அஹ... confuse ஆய்ட்டீங்களா பிங்கி... ஒண்ணும் இல்ல... சும்மா ஒரு லுலுலாயி கலாட்டா... ஹா அஹ அஹ... மறக்க வெல்லம் இல்ல மேடம்... நீங்க கலக்குங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ தனி காட்டு ராஜா - தேங்க்ஸ்ங்க...

@ geetha santhanam - ஹா அஹ அஹ... தேங்க்ஸ் கீதா... அண்ணன் கிட்ட உங்க ரங்க்ஸ் சொன்னதை சொல்லிடறோம்...தேங்க்ஸ்ங்க

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி... //என் full support உங்களுக்குத்தான்// ஆஹா...காதினில் தேன் வந்து
பாயுதே காயத்ரி...தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்...

தக்குடுபாண்டி said...

////அதுதாங்க மல்டி-டாஸ்கிங்//

ஹலோ, ஒரு டாஸ்க்கை ஒழுங்கா பண்ணுங்க// hahaha...;) kalakkal point. (suuuperaa poluthu pooguthu)...:)

Endrum Vambudan,
Thakkudu

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////பதிவு
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு
என்ன கொடுமைங்ண்ணா இது? "ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்" னு சொல்றாப்ல பேச்சு.... அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் "என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது"ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க... ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ....? ஹும்... 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ...
///////


பார்த்துங்க கிடைக்கிற சாப்பாடும் கிடைக்காமல் போகப்போகிறது . கலக்குறிங்க ஒவ்வொரு பதிவுலும் ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி

டம்பி மேவீ said...

raittu

Ananthi said...

ஆஹா.. எதிர் பதிவு... சூப்பருங்கோ...

//சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்... என்ன நான் சொல்றது....? (தேவையா இது தேவையா...ஹா ஹா ஹா) //

........ஹா ஹா ஹா... செம செம..ஐடியா.. :-))

//என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு.... நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா... நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு //

..........அச்சோ.. முடியலிங்க.. சிரிச்சி முடியல.. :D :D

//என்ன கொடுமைங்ண்ணா இது? "ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்" னு சொல்றாப்ல பேச்சு.... அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் "என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது"ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க... ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ....? //

..........ஹா ஹா ஹா.. அருமை அருமை... பின்னி பெடல் எடுங்கப்பா.. :D :D

Ananthi said...

//எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்//

.......அதானே.. நல்ல்லா கேளுங்கப்பா... :D :D

//அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது...

என்னமோ போங்க... இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா... ஹா ஹா ஹா///

..........பதிவு சூப்பர்... போங்க...
என்ஜாய் பண்ணி வாசிச்சேன்.. பகிர்வுக்கு நன்றி.. தோழி.. :-

Ananthi said...

///ஜெய்லானி சொன்னது…

பத்துக்கும் பதில் சரியில்லாததால் இந்த ஷீட்டுக்கு ஜீரோ மார்க் வழங்கப்படுகிறது .. ///

.........எல்லா கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில் அளித்ததால்...
முழு மதிப்பெண்கள் உண்டு... :-))))

Ananthi said...

ரொம்ப ரொம்ப சூப்பர்... :-)))
வாழ்த்துக்கள்..

Krishnaveni said...

excellent answers, very nice

Porkodi (பொற்கொடி) said...

இவ்வ்வ்வ்வ்வ்வளவு நடந்துட்டு இருக்கா!!!

தக்குடுபாண்டி said...

//அதெல்லாம் இருக்கட்டும்... நீ யார் கட்சி.. அதை சொல்லு மொதல்ல// நாங்க எல்லாம் சுயேட்சை MLA மாதிரி, எந்த கட்சி ஆட்சி அமைக்குதோ அவங்களுக்கு ஆதரவு குடுத்து நைசா அமைச்சர் பதவியும் வாங்கிடுவோம்....:)

ஜெய்லானி said...

@@@Ananthi
///ஜெய்லானி சொன்னது…

பத்துக்கும் பதில் சரியில்லாததால் இந்த ஷீட்டுக்கு ஜீரோ மார்க் வழங்கப்படுகிறது .. ///

.........எல்லா கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில் அளித்ததால்...
முழு மதிப்பெண்கள் உண்டு... :-)))) //


ஆஹா... மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பிக்குதே ..அப்ப ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான் ...அடுத்த வெள்ளி சனி எப்ப வரும்...???( ஒரு வேளை வில்லங்கத்தில மாட்டி விட ஆசையோ?)

BalajiVenkat said...

அனாமிகா nun ஆக போய்ட்டாளாம் (அப்பாடா ஒரு ///

rngappan putharukkulla illanu ithukum mela theliva solla mudiyathu... :P

Danks thans... aayiram kaigal maraithu ninraalum aadhavan maraivathillai... athey pola neengal ethanai pathivu potalum rangsai onnum panna mudiyathu ....:D

@adapavi thangs... ithuku peruthaan sontha selavula ***** vachukirathungrathu,.. :P

kavisiva said...

எதிர்பதிவு சூப்பருங்க அப்பாவி! ரங்கமணிங்க பின்னூட்டத்துல சொல்லியிருக்கறதெல்லாம் சும்மா சமாளிஃபிகேஷன்ஸ்.

கீதா சாம்பசிவம் said...

அது சரிங்க,மத்தப் பதிவுங்களையும் படிச்சுட்டு, அங்கேயும் பதில் சொல்லி, எப்படி இப்படிப் பதிவும் போட்டுட்டு, பதிலும் சொல்லி??? ம்ஹும், ஆப்ப்பீச்ச்ச்சிலே இதான் வேலையா?? அப்போ சரிங்க! (ஹிஹிஹி, மீ எப்போவுமே ரங்க்ஸுகளுக்கு சப்போர்ட்ட்ட்டு) :)))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

to continute

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - வேண்டாம்.....நாள பின்ன பிரச்சனை வந்தா நாங்க தான் சப்போர்ட்க்கு வரணும்... மறந்துடாதே... ஹா ஹா ஹா

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - ஹா ஹா அஹ.....நீங்க தான் நல்ல ரங்க்ஸ்... நன்றிங்.....

@ டம்பி மேவீ - தாங்க்ஸ்உ...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - ரெம்ப ரெம்ப நன்றி ஆனந்தி... உங்க சப்போர்ட் தான் டானிக்.... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்....முழு மதிபெண்ணுக்கு மிக்க நன்றிங்க..

@ பொற்கொடி - எவ்ளோ..... னு சொல்லுங்க ஆத்தா...

@ தக்குடு - ஆஹா... ரெம்ப தெளிவாய்ட்ட .... ஆரம்பிச்சுட வேண்டியது தான்...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - பயம் வந்துடுச்சு போலேயே பாஸ்....ஹா ஹா ஹா

@ BalajiVenkat - ஹ ஹா ஹா... நல்லாவே சமாளிக்கறீங்க எல்லாரும்...

@ kavisiva - ஹா ஹா ஹா.... தேங்க்ஸ்ங்க கவி... கரெக்ட்ஆ சொன்னீங்க.... சூப்பர்

@ கீதா சாம்பசிவம் - ஹி ஹி ஹி..secret எல்லாம் வெளிய சொல்ல கூடாது மாமி... என்ன இப்படி சொல்லிடீக.. எங்களுக்கு சப்போர்ட் இல்லையா.... ஹும்..

Venkatesh said...

ரொம்ப நல்ல அனுபவம் பேசிய பதிவு, ரசித்தேன் !!!

Venkatesh said...

நல்ல வேல கல்யாணம் இன்னமும் ஆகல :):):):):)

SenthilMohan said...

//*என்னங்க மோகன்... இப்படி மாத்தி மாத்தி பேசறீங்க... நீங்க தானுங்க எதிர் பதிவே போட சொன்னீங்க***/
யாரு நானு?.........உங்கள?..............எதிர்ப் பதிவு? சும்மா காமெடி பண்ணாதீங்க்கா.
/**ஞாயமா, இது ஞாயமா?**/
அதையேதான் நானும் கேட்கறேன். இது நியாயமா?
நான் உங்கள பதிவே போட சொல்லல. இதுல எதிர்ப் பதிவு போட சொன்னேன்னு பொய் வேற. எனக்கு பொய் பேசுறவங்கள பிடிக்காது. பொய் பேசுறவங்களோட சேக்கையே கூடாதுன்னு என் Mummy சொல்லி இருக்காங்க. ஏன்னா நாங்க தான் அரிச்சந்திர மவராசனோட Relative-ன்னு உங்களுக்கு தெரியும்ல.

SenthilMohan said...

//*அனாமிகா துவாரகன் சொன்னது…
ரங்கஸ் சப்போட்டை வாபஸ் வாங்கற ஐடியால இருக்கேன்.
நான் முற்று முழுதாக தங்கஸ் பக்கம் சாய்ஞ்சிடுவேன்.**/
நீங்க கன்னியாஸ்திரியா போறதா இருந்தீங்களே. அப்புறம் எதுக்கு மறுபடியும் இப்படி? இந்த மாதிரி விஷயங்களில், ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, உங்க பேச்ச நீங்களே கேட்கக்கூடாது.

SenthilMohan said...

//*கீதா சாம்பசிவம் சொன்னது…
அது சரிங்க,மத்தப் பதிவுங்களையும் படிச்சுட்டு, அங்கேயும் பதில் சொல்லி, எப்படி இப்படிப் பதிவும் போட்டுட்டு, பதிலும் சொல்லி??? ம்ஹும், ஆப்ப்பீச்ச்ச்சிலே இதான் வேலையா??**/
நானும் உங்க கிட்ட இத பத்தி கேட்கலாம்னு இருந்தேன். இதுதான் வேலைனா உங்க office-லயே எனக்கும் ஒரு வேல வாங்கித் தாங்கக்கா.

siva said...

:)

அப்பாவி தங்கமணி said...

@ Venkatesh - நன்றிங்க வெங்கடேஷ்... இன்னும் கல்யாணம் ஆகலையா... ஒகே ஆனப்புறம் நீங்களே பதிவு போடுவீங்கன்னு நினைக்கிறேன்.. ஹா ஹா ஹா

@ SenthilMohan - ஹா ஹா ஹா... ஒகேங்க அரிச்சந்திரன் neighbour .... நல்ல கேள்வி கேட்டீங்க அனாமிகா கிட்ட,,, ஆனா அவ ஆளே காணோம்... எங்க ஆபீஸ்ல வேலையா...அது சரி... என் வேலைக்கி ஆப்பு நானே வெச்சுக்கவா.....

@ Siva - :)

priya.r said...

நல்ல நகைசுவையான பதிவுங்க ;ரசித்து படித்தேன்
பாராட்டுகள்!

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ரெம்ப நன்றிங்க ப்ரியா

priya.r said...

ஹ ஹா !என்னுடைய நெருங்கிய தோழி குந்தவையும் (குந்தவையின் பக்கம்) இப்படி தான் ரொம்ப என்பதற்கு ரெம்ப என்று குறிப்பிட்டு சிரிக்க வைப்பார் .

Post a Comment