Sunday, July 11, 2010

என்னை போல் ஒருவன்...


"அம்மா"


"........"

"அம்மா....அம்....மா...."

"........"

"அம்மா... என்மேல கோவம்னா ரெண்டு திட்டு வேணும்னா திட்டிக்கோ.. இப்படி பேசாம இருக்காத"

"......." அம்மா ஒண்ணும் பேசாம கண்ணு மூடி உக்காந்துட்டாங்க

"அனு நீயாவது கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லேன். என்னோட அக்காவா பொறந்ததுக்கு இதையாச்சும் செய்யேன்" என பக்கத்துல இருந்த உடன்பிறப்பு கிட்ட கெஞ்ச அவ காதே கேக்காத மாதிரி நின்னா, படுபாவி அக்கா

இந்த மாதிரி கூட பொறந்ததுக இருக்கறதுக்கு நான் ஒரே பையனா இருந்திருக்கலாம். நெறைய சலுகயாச்சும் கெடைச்சுருக்கும்.... ச்சே...

"ச்சே... என்ன வீடு இது. காலேஜ் படிக்கற பையன் friends ரெம்ப கம்பெல் பண்ணினாங்கன்னு ஒரு நாள் தண்ணி அடிச்சா என்னமோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி treat பண்றாங்க" எனக்கு நானே பேசிகிட்டு இருக்கறப்ப எங்க வீட்டு அறுந்த வாலு என்னோட அருமை தங்கச்சி அபி வந்தா

"அபி.... நீயாச்சும் கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லேண்டி... உனக்கு ஒரு மாசத்துக்கு ஹோம் வொர்க் எல்லாம் பண்ணி தரேன்" னு கெஞ்சினேன். அவளும் என்பேச்சுக்கு மதிப்பு குடுத்து (அப்படின்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன்) அம்மா கிட்ட பேச போனா

"அம்மா... நீ ஒண்ணும் கவலை படாதே.... உனக்கு பொறந்ததே ரெண்டு பொண்ணுங்க தான்னு நெனச்சுக்கோ... கடைசி வரைக்கும் நான் உன்ன காப்பத்தறேன்...." னு சொன்னா அந்த எட்டாங்க்ளாஸ் படிக்கற எட்டப்பி

கொஞ்சம் மனசு மாறுற எண்ணத்துல இருந்த அம்மா இன்னும் மோசமா அழ ஆரம்பிச்சுடாங்க

சனியன் சனியன்.... இதுவும் வாரிடுச்சு பிசாசு.... எட்டாங்க்ளாஸ்லையே எட்டு வருஷம் இருக்க போற பாருன்னு சாபம் குடுத்தேன். Reaction எ காட்டாம போனா எட்டப்பி

நடுமண்டைல நல்லா நறுக்குன்னு ஒரு கொட்டு வெக்கணும்னு நெனச்சேன், அதுக்குள்ள அப்பா இருந்த ஹால்க்கு போய்ட்டா கொரங்கு

"அம்மா... நீ காத்தால இருந்து ஒண்ணும் சாப்பிடல. கொஞ்சம் காபியாச்சும் குடி" னு அனு அம்மாவ கெஞ்சிக்கிட்டு இருந்தா

"என்னது அம்மா காலைல இருந்து ஒண்ணும் சாப்பிடலையா? எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அம்மாவுக்கு லோ சுகர்னு தெரியாதா" னு நான் எகிற

"இந்தாம்மா... சுகர் கீழ போய்டும்.... கொஞ்சமா இந்த காபி மட்டும் குடி" இது அனு

"இவன் இப்படி செய்வான்னு நெனைக்கலடி.." னு அம்மா கண்ணுல தண்ணியே வந்துடுச்சு

"இனிமே இப்படி...." னு நான் என்னமோ சொல்ல வர அதுக்குள்ள எங்கப்பா உள்ள வந்தாரு "ஐயோ...அப்பா வர்றாரு...." னு Kitchen குள்ள போய் பதுங்கிட்டேன்

ஆனாலும் அவங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்டேன்

"அனு, அம்மா சாப்டதும் இந்த மாத்திரைய குடு"

"அம்மா சாப்பிடவே மாட்டேன்கராங்கப்பா, நீங்க கொஞ்சம் சொல்லுங்க"

"பைரவி, இப்படி ஒரு புள்ளைங்கறது நாம வாங்கிட்டு வந்த வரம்... நீ சாப்டாம ஒடம்ப கெடுத்துகரதால எதுவும் மாற போறதில்ல"

"ஆனாலும்... இந்த வயசுல.. எப்படிங்க..."

"இதுக்கு வயசு என்ன பைரவி. கெட்ட சகவாசம் வேண்டான்னு தல பாடா அடிச்சுட்டேனே, கேக்கலியே..." என்றவர் தோளில் இருந்த துண்டால் கண்களை துடைக்க

"ஐயோ அப்பா.... அழறாரா?" னு மனசுக்கு என்னமோ போல ஆய்டுச்சு எனக்கு

"ச்சே அப்பா அழுது நான் பாத்ததே இல்ல... எல்லாம் இந்த மனோஜ் பண்ற வேலை. 18th பர்த்டே மேஜர் ஆனதை கொண்டாடனும்னு உசுப்பி விட்டுட்டான் பாவி"

"அவன் சொன்னா எனக்கு எங்க போச்சு புத்தி. அக்கா கல்யாணம் கூட இப்ப வேண்டாம்னு தள்ளி வெச்சுட்டு அதுக்கு வெச்சிருந்த retirement பணத்த எனக்கு capitation பீஸ் கட்டி இன்ஜினியரிங் சேத்தினாரே. காலேஜ் சேந்த அஞ்சு மாசத்துல அடுத்த வாரம் செமஸ்டர் வெச்சுட்டு.... தண்ணி அடிச்சா எந்த அம்மா அப்பா தான் டென்ஷன் ஆகமாட்டாங்க.... ச்சே...." என்மேலேயே எனக்கு வெறுப்பா வந்தது

ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஹால்ல இருந்த அப்பாகிட்டே போய் "அப்பா....என்ன மன்னிச்சுடுங்கப்பா... இனிமே இப்படி செய்ய மாட்டேன்.... ப்ளீஸ்ப்பா...."

அப்பா பதிலே பேசல. முகம் இறுக்கமா இருந்தது

இதுக்கு மேல என்ன சொல்லி சமாதானம் செய்யறதுன்னு தெரியாம நான் முழிச்சுட்டு நின்னப்ப

"ஐயோ...... இப்படி ஆய்டுச்சே...." என்றபடி என்னோட அத்தை (அப்பாவோட தங்கை) அழுதுகிட்டே வீட்டுகுள்ள வந்தாங்க

"என்னாச்சு அத்த.." னு நான் கேக்க என்னை ஒரு பொருட்டா கூட நெனைக்காம அப்பா கிட்ட போய் கைய பிடிச்சுகிட்டு அழுதாங்க

"என்ன அண்ணா இது.... இப்படி பண்ணிட்டானே உங்க புள்ள" னு அத்த அழ

"அடப்பாவமே... அதுக்குள்ள நான் தண்ணி அடிச்ச மேட்டர் டெல்லில அத்த வீடு வரைக்கும் போயிடுச்சா. எல்லாம் இந்த எட்டப்பி தான் போன் பண்ணி சொல்லி இருக்கும்" னு டென்ஷன் ஆய்ட்டேன்

"அப்படினா.... அத்த பொண்ணு வைஷு கிட்ட கூட என்னோட இமேஜ் டர்ரர்ர்ர்ர் தானா" னு தலைல கை வெச்சுட்டு உக்காந்துட்டேன்

அம்மா அத்தைய கட்டிபுடிச்சுட்டு ஓ னு அழுதாங்க

"இப்ப என்ன ஆடுச்சுன்னு இப்படி..." னு எனக்கு கோவமா வந்தது, அம்மா அழறதை பாக்க கஷ்டமாவும் இருந்தது

"சின்னவளுக்கு அம்மை போட்டு இருந்தது.... அதான் விசயம் கேள்விப்பட்டும் பத்து நாளா வர முடியல. என்ன அண்ணி நடந்தது...?" னு அழுதுகிட்டே அத்தை கேட்டாங்க

"என்னத்த சொல்றது....." னு அம்மா மறுபடியும் அழ ஆரம்பிக்க அப்பா பதில் சொன்னார்

"பர்த்டே அன்னிக்கி friends க்கு treat குடுக்கணும்னு பிடிவாதம் பண்ணி பணம் வாங்கிட்டு போனான். பசங்க கூட சேந்து wine shop போய் இருக்கான் பாவி.... வர்ற வழில நிதானம் இல்லாம பைக் எதிர்ல வந்த லாரில மோதி......" அதுக்கு மேல சொல்ல முடியாம அப்பாவும் அழ ஆரம்பிச்சார்

ஐயோ.... என்ன நடக்குது இங்க....னு புரியாம.... நான் அப்ப தான் கவனிச்சேன். ஹால்ல ஒரு மூலைல.... என்னது இது... ஐயோ.... எதுக்கு என்னோட போட்டோக்கு மாலை போட்டு.....பதறி சிதறி.... கொஞ்சம் கொஞ்சமா எனக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சது

பர்த்டே அன்னைக்கி தண்ணி அடிச்சுட்டு வீட்டுல என்ன சொல்ல போறாங்களோனு டென்ஷன்ஆ வந்துட்டு இருந்தேன்.... அப்புறம்.. ஏதோ.... கூச்சல்.... சத்தம்... அப்புறம்... ஐயோ ஒண்ணுமே ஞாபகம் இல்லையே. அப்படினா அந்த போட்டோ நானே தானா.... இல்ல... என்னை போலவே இருக்கற யாரோ.... அப்படி இருந்தா நல்லா இருக்குமே

இத்தனை நேரம் என மேல இருக்கற கோபத்துல யாரும் நான் பேசினதுக்கு பதில் சொல்லலைன்னு நெனச்சேன்... ஆனா.... அவங்க கண்ணுக்கே நான் தெரியல... நான் செத்து பத்து நாள் ஆச்சு....

அதுக்குள்ள அத்தைய பாத்துட்டு அனு அக்கா அபி குட்டி எல்லாரும் அழறாங்க

ஐயோ, ப்ளீஸ் அழாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு

அக்கா நான் காலேஜ் சேர்றதுக்கு முன்னாடி போய் இருந்தா அந்த காசுல உன் கல்யாணமாச்சும் ஆகுமே. இப்போ அப்பா என்ன செய்ய போறார். அன்னிக்கி பெரியப்பா கேட்டதுக்கு அப்பா ரெம்ப பெருமையா எல்லாம் என்புள்ள செய்வான்னு சொன்னாரே... இப்ப என்ன செய்வாரு?

அபி குட்டி அழறாளே.... ஐயோ.... இனி தினமும் அவள யாரு ஸ்கூல்ல கொண்டு போய் விடுவா... டவுன் பஸ் கூட்டத்துல நசுங்கிடுவாளே.... ஐயோ

இனி இப்படி பொலம்பறரத தவிர என்னால என்ன செய்ய முடியும்....

என்னை போல ஒருவனா இனி யாரும் இருக்காதீங்க.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்

54 பேரு சொல்லி இருக்காக:

Chidambaram Soundrapandian said...

நல்லாருக்கு.


http://vaarththai.wordpress.com

டம்பி மேவீ said...

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்குங்க ..... சிவாஜி நடிச்ச முதல் தேதி பட கதை மாதிரியே இருக்கே

டம்பி மேவீ said...

இதே மாதிரியான உணர்வு எனக்கும் படிக்கும் போது அடிக்கடி வருமுங்க...... 8 வருட பல்கலைக்கழக படிப்பில் இந்த எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்ததால் கொஞ்சம் நல்ல பையனாக தான் இருந்தேன்

kavisiva said...

நெகிழ்ச்சியான கதை. உங்கள் பல பதிவுகள் கண்ணில் நீர்வரும் வரை சிரிக்க வைத்திருக்கிறது. ஆனால் இது மனதை என்னவோ செய்து கண்ணில் நீர் வரச் செய்தது.
தயவு செய்து தண்ணியடிக்காதீங்கப்பா.

Bala said...

நல்ல பதிவு அக்கா... நெகிழ்ச்சியான நடை...

ராமலக்ஷ்மி said...

மிக நன்று புவனா.

மிக உருக்கமும்.

வில்சன் said...

அருமையா இருக்கு. நமது சிற்றின்பங்கள் நமது குடும்பத்தையும், மற்றவர்களையும் எப்படி பாதிக்கும் என அனைவரும் எண்ணினால் நலமாக இருக்கும்.

அனாமிகா துவாரகன் said...

ஹல்லோ மடம்,
இந்த மாதிரி எழுதி எங்களை எதுக்கு அழ வைக்கறீங்க.

GEETHA ACHAL said...

இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை...மிகவும் கஷ்டமாக இருந்தது...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

Karthick Chidambaram said...

நெகிழவைக்கும் நடை. மிக அழகாக எழுதி இருக்கீங்க ...
சரி! இந்த எதிர் எதிர் பதிவெல்லாம் முடிஞ்சுஞ்சா :-)

LK said...

@புவஸ்
ஏன் இப்படி எல்லாரையும் அழ வைக்கற.. ஆமாம் அதே கண்கள் என்ன ஆச்சு

ஸ்ரீராம். said...

திருப்பத்தை எதிர்பார்க்க வைக்க முடியாத நடை. பாராட்டுக்கள் புவனா... நல்ல மெசேஜும் கூட. பாராட்டுக்கள்.

பிரசன்னா said...

என்னது அறிவுரையா :) ஓகே இது எனக்கு தேவைபடாது..
Good going..

தராசு said...

கடைசி வரை சஸ்பென்ஸ் அவிழ்க்காமல் கொண்டு போயிருக்கிறீர்கள். அருமை, அருமை.

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்குப்பா... சூப்பர்.

Thenral said...

Aahaa! Arputhamana Kathai!Itha parthu naalu per thirunthina sari!Arumaiyana padhivu

Venkatesh said...

குடிபலகத்தின் விளைவை எடுத்துரைத்த விதம் அருமை

Krishnaveni said...

Bhuvana...nice story, really good. at last a great moral for all, excellent. aaamaa......adhe kangal engenga?

சின்ன அம்மிணி said...

அருமையான கதைங்க

sandhya said...

புவனா என்னம்மா இது ? படிச்சு முடிச்சப்போ மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது கதை இப்பிடி முடியும்ன்னு நினைக்கவே இல்லை ..அப்புறம் அதே கண்கள் என்னாச்சு ??

உங்க தங்கைக்கு டெலிவரி ஆயிடதா ?

SenthilMohan said...

அட, தங்கமணியக்காவா இது?!?!?!?.
நீங்க எங்கியோ போய்ட்டீங்க்கா....

SenthilMohan said...

தலைப்ப பாத்த உடனே, என்னடா அக்கா மனச ஏதோ ஒரு ரங்கமணியோட பதிவுகள் பாதிச்சுட்டது போல, இன்னொரு தராசு-வ அக்கா intro பண்றாங்களோன்னு நம்பி வந்து பாத்தா...... பச்...சும்மா சொல்லக் கூடாதுங்க்கா. கடைசி வரைக்கும் சஸ்பென்ச maintain பண்ணி, இந்த காமெடி piece-க்கு உள்ளேயும் கொஞ்சம் சரக்கு இருக்குதுனு சொல்லிட்டீங்க.

Gayathri said...

அருமையாக இருந்தது இப்படி ஒரு முடிவை எதிர்பார்கவே இல்லை...நல்ல கருத்து..hats off

இராமசாமி கண்ணண் said...

ஜாலியா படிக்க ஆரம்பிச்சா கடைசில நெகிழ வச்சூட்டீங்க.

geetha santhanam said...

அருமையான கருத்தை வித்தியாசமாக , ஆனால் நெஞ்சைத் தைப்பது போல் கூறியிருக்கிறீர்கள்.--கீதா

மங்குனி அமைச்சர் said...

அய்யோ மேடம் , கேசுவலா படிச்சிட்டு வந்தேன் , டக்குன்னு அதிர்ச்சி ஆகிட்டேன் , அருமையான கதை

pinkyrose said...

நானும் மங்குனிய வழிமொழியுறேன்..
ஆம மேடம் என்னொட பதிவுக்கு வர்ரதில்லையா...
வாங்க மேடம்...

தக்குடுபாண்டி said...

நல்ல நடை அடப்பாவி அக்கா! ஜோவியலா ஆரம்பிச்சு சீரீயஸா முடித்த உங்கள் அனுகுமுறை பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

தக்குடுபாண்டி said...

என்கிட்ட கேக்காமா வைஷு குட்டி பேரை உபயோகப்படுத்தி இருக்கேள் போலருக்கு??...:)

Mahi said...

நல்லகதை புவனா!

ஜெயந்தி said...

குடியின் கோர முகத்தை காட்டியிருக்கீங்க. கதையாக சொன்ன விதம் அருமை.

vanathy said...

சூப்பர் கதை, தங்ஸ். எப்படிப்பா சில நேரங்களில் தேம்பி தேம்பி அழவைக்கிறீங்க!!!

siva said...

:)

Matangi Mawley said...

!!!! wow... romba azhagaa irunthathu!
light-a start panninappo naan expect pannala ippadi mudiyumnu!!!

good work!

Mahi said...

சென்ட்டிமெண்டல் கம் நீதிக்கதையா? :) நல்லாருக்குங்க புவனா!

r.v.saravanan said...

அருமையாக இருந்தது வாழ்த்துகள்

pinkyrose said...

என்னச்சு புவனா...

ஆளயே காணும்?

அப்பாவி தங்கமணி said...

@ Chidambaram Soundrapandian - நன்றிங்க சிதம்பரம்

@ டம்பி மேவீ - நன்றிங்... ஓ.. அந்த படம் இந்த மாதிரியா... கெடச்சா பாக்குறேன்...

@ kavisiva - ரெம்ப நன்றிங்க கவி, பெரிய வார்த்தைகள்.. மிக்க நன்றிங்க

@ Bala - ரெம்ப நன்றிங்க பாலா

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி - மிக்க நன்றிங்க ராமலக்ஷ்மி

@ வில்சன் - சரியா சொன்னீங்க வில்சன்... ரெம்ப நன்றிங்க

@ அனாமிகா துவாரகன் - அப்ப அப்ப அழவும் வெக்கதானே வேணும் அனாமிகா

@ GEETHA ACHAL - ரெம்ப நன்றிங்க கீதா

அப்பாவி தங்கமணி said...

@ Karthick Chidambaram - ரெம்ப நன்றிங்க கார்த்திக். எதிர் பதிவெல்லாம் முடியல....இடைவேளைக்கு பின் தொடரும்...ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்

@ LK - கொஞ்சம் சும்மா ஒரு change க்கு அழவெச்சு பாக்கலாம்னு தான்....அதே கண்கள் கண்டிப்பா இந்த வாரம் வரும்... போன வாரம் டூ மச் பிஸி.... ஈமெயில் பாக்க கூட நேரம் இருக்கல சாரி...

@ ஸ்ரீராம் - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

@ பிரசன்னா - அப்படியா அப்படின்னா குட்.. நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ தராசு - ரெம்ப நன்றிங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க சாரல்

@ Thenral - ரெம்ப நன்றிங்க தென்றல்

@ Venkatesh - தேங்க்ஸ்ங்க வெங்கடேஷ்

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி..அதே கண்கள் இந்த வாரம் கண்டிப்பா போட்டுடறேன்

@ சின்ன அம்மணி - நன்றிங்க

@ sandhya - ரெம்ப தேங்க்ஸ் சந்த்யா.அதே கண்கள் இந்த வாரம் கண்டிப்பா போட்டுடறேன். தங்கச்சிக்கு பாப்பா வந்தாச்சுங்க....அம்மா பாப்பா நலம்

@ SenthilMohan - எங்கயும் போகலைங்க செந்தில் இங்கயே தான் இருக்கேன்... ஹா ஹா அஹ நல்ல கற்பனை தான் உங்களுக்கு... சரக்கு இருக்கா? தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ இராமசாமி கண்ணண் - ரெம்ப நன்றிங்க கண்ணன்

@ geetha santhanam - ரெம்ப நன்றிங்க கீதா

@ மங்குனி அமைச்சர் - மிக்க நன்றிங்க அமைச்சரே...

அப்பாவி தங்கமணி said...

@ Pinkyrose - தேங்க்ஸ் பிங்கி.. உங்க பதிவுக்கு வராமயா? இந்த வாரம் தான் கொஞ்சம் வேளை அதிகம்... இனி அடிக்கடி வர்றேன் பிங்கி

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு.. வைஷு patent ரைட் papers காட்டினா யூஸ் பண்ணலை..

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ ஜெயந்தி - நன்றிங்க ஜெயந்தி

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - தேங்க்ஸ் வாணி

@ siva - :)

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி

@ Mahi - ரெம்ப நன்றிங்க மகி

அப்பாவி தங்கமணி said...

@ r.v.saravanan - ரெம்ப நன்றிங்க சரவணன்

@ Pinkyrose - சாரி பிங்கி.. இந்த வாரம் கொஞ்சம் வேளை அதிகம்... இனி வழக்கம் போல வருவேன்... கேட்டதுக்கு ரெம்ப நன்றிங்க...

vgr said...

ida padikarchey....samibathula engayo parthen..edo TV program nu nenakren...short story...Like a boy writes a Birthday journal every time...but he was dead during his 8/9 birthday...anda mari edo...adu nyabgam vandudu....Unga kadayum arumai...

Mudalil comment seida yaro oruvar...mudhal thedi padathai kuripittirundar....related to that...

http://vgrblogger.blogspot.com/2009/07/mudhal-thedhi-day-1-of-month_31.html

அப்பாவி தங்கமணி said...

@ VGR - தேங்க்ஸ்ங்க.... "முதல் தேதி" நியூஸ் ஹாட் நியூஸ் தான்... நான் எக்ஸ்பெக்ட் பண்ணல... தேங்க்ஸ் for sharing

முனியாண்டி said...

உண்மையில் கலக்கிடிங்க.... உங்களைப்போல் எழுதுவது கஷ்டம்தான் ஒத்துக்கிறேன்.

அப்பாவி தங்கமணி said...

@ முனியாண்டி - ஆஹா... சும்மாவே என்னை "கால் தரைல நிக்காது இவளுக்கு" னு சொல்லுவாங்க... இப்படி எல்லாம் சொன்னா அவ்ளோ தான்... பிடிக்க முடியாது அப்புறம்... எப்பவாச்சும் இதை போல் ஒரு knot தோணறது தான் சார்... மத்தபடி நான் "மொக்கை போஸ்ட் ஸ்பெசலிஸ்ட்" தாங்க... ரெம்ப நன்றிங்க

Madhavan Srinivasagopalan said...

இன்னைக்குதான் (26th Nov 2010) படிச்சேன்.. ரொம்ப ஜூப்பரு..

அப்பாவி தங்கமணி said...

@ Madhavan Srinivasagopalan - Thank you

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

awesome story appavi

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ரெம்ப நன்றிங்க

Post a Comment