Sunday, July 25, 2010

தங்கமணி ரங்கமணி (ஒரு அறிமுகம்)


ஒரு ஊர்ல ரங்கமணி ரங்கமணினு ஒரு ரங்கமணி இருந்தாருங்க. அட, ரெண்டு பேரு இல்லைங்க, ஒருத்தர் தான், அவர் பேரே "ரங்கமணி" தான். ஆச்சிர்யமா இருக்கோ? இதுக்கே ஆச்சிர்யப்பட்டா எப்படிங்க? இனிதான் முக்கியமான ஆச்சிர்யமே இருக்கு

அவரோட தங்கமணி பேரு "தங்கமணி" யே தான். நாலு வருசத்துக்கு முன்னாடி இவங்க கல்யாணதப்ப ஊரே ஆச்சிர்யப்பட்டுச்சு இவங்க பேரு பொருத்தத்த பாத்து

ஆனா... பேருல தான் இப்படி ஒரு பொருத்தம்... வீட்டுல தினமும் ரணகளம் தான் போங்க. இவங்க கிழக்குன்னா அவர் மேற்குனுவாரு. அப்படி ஒரு எதிர் பொருத்தம்

தங்கமணி ரங்கமணினாலே அப்படி தானேங்கரீங்களா... அதுவும் வாஸ்துவம் தான்...

இந்த தங்கமணி கிட்ட இருக்கற ஒரு peculiar விசயம் என்னனா.... பேச்சுக்கு பேச்சு ஒரே பழமொழியா கொட்டி தள்ளுவாங்க... உங்கூரு எங்கூரு பழமொழி இல்ல உலக பழமொழி தான் போங்க...

இருங்க இருங்க வீட்டுக்குள்ள என்னமோ ரகளை நடக்குது... என்னனு ஒட்டு கேப்போம்... (நமக்கு தான் ஓட்டு கேக்கரதுன்னா ரெம்ப பிடிக்குமே...ஹி ஹி ஹி)

"என்னங்க"

"ம்"

"என்னங்க"

"ம்"

"உங்களத்தானே..."

"ம்"

"கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறதுனு ஒரு பழமொழி சொல்லுவாங்க... அது கூட செஞ்சரலாம்.... உங்ககிட்ட ஒரு பதில் வாங்க முடியுதா"

"என்னமா சொல்லு? கேட்டுட்டு தான் இருக்கேன்"

"என்ன? கேட்டுட்டு இருக்கீங்களா? நான் என்ன சொன்னேன்னு திருப்பி சொல்லுங்க பாப்போம்?"

"அதுவா... பாப்போம் சொல்லுங்க திருப்பி சொன்னேன்னு என்ன நான். கரெக்ட்ஆ?"

"என்ன ஒளர்றீங்க?"

"நீ தானே நீ சொன்னத திருப்பி சொல்ல சொன்ன... அதான் ஒரு ஒரு வார்த்தையா திருப்பி சொன்னேன்"

"அட ராமா" னு தலைல கை வெச்சுட்டு உக்காந்துடாங்க தங்கமணி

"ஸ்ரீராமா தெரியும், பலராமா கூட தெரியும்... அது யாரு தங்கம் அட ராமா?"

"ம்...எங்க அப்பா?" என்றார் தாங்க்ஸ் பல்லை கடித்து கோபத்தை அடக்கியபடி

"ஓ... அப்படியா.... ஆனா உங்க அப்பா பேரு தண்டபாணி ஆச்சே? ஒருவேளை சுருக்கி செல்லமா அடராமானு சொல்லுவீங்களா?"

"தண்டபாணிய எப்படி அடராமானு சுருக்க முடியும்?"

"அதானே... எப்படி முடியும்? அப்புறம் எப்படி உங்க வீட்டுல இப்படி எல்லாம்? சரி விடு உங்க குடும்பமே ஒரு மாதிரி தான்னு தெரிஞ்சுது தானே"

"இங்க பாருங்க... பேச்சை மாத்தாதீங்க? அப்போ நான் என்ன சொன்னேன்னு இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?"

"அப்போனா எப்போ... இப்போவுக்கு முன்னாடி அப்போவா... அப்போவுக்கு முன்னாடி அப்போவா"

"ஈஸ்வரா........." என மறுபடியும் தாங்க்ஸ் தலையில் கை

"அது யாரு? ஓ... உங்க சித்தப்பா சண்முகத்தோட சுருக்க பேரா"

"வேண்டாம்... கோவத்த கிளறாதீங்க... நான் மனுசியா இருக்க மாட்டேன்"

"நீ கோவம் வந்தா உண்மை எல்லாம் பேசற தங்கம்.. ஐ லைக் இட் யு நோ"

"முருகா... அந்த கீழப்பட்டி வரனுக்கே நான் சரின்னு சொல்லி இருக்கலாம்... இப்படி எல்லாம் படணும்னு இருக்கறப்ப விடுமா விதி" என்று தாங்க்ஸ் பிளாஷ்பாக் எல்லாம் இழுத்து மூக்கு உறிஞ்ச

"யாரு... கீழ்பாக்கம் வரனா... பொருத்தம் தான்"

"அது கீழ்பாக்கம் இல்ல... கீழப்பட்டி... காதும் போச்சா?"

"ஹி ஹி... காது எல்லாம் ஒகே தான். அந்த கீழப்பட்டிக்காரன் சிக்கி இருந்தா கீழ்ப்பாக்கத்துக்கு தானே வந்து சேந்துருப்பான்... அதை தான் சிம்பாலிக்கா சொன்னேன்" என ரங்கமணி இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொள்ள

"ஆஹா... ரெம்ப மேதாவின்னு நெனப்போ உங்களுக்கு"

"ச்சே ச்சே ... மேதாவியா இருந்துருந்தா அந்த மேலபட்டிகாரியவே கரெக்ட் பண்ணி இருப்பனே.....ஹும்" என ரங்கமணியும் தாங்க்ஸ் ஸ்டைலிலேயே பெருமூச்சு விட

"நான் என்ன சொன்னேன் அதை மொதல்ல சொல்லிட்டு அப்புறம் மத்தது பேசுங்க"

ரங்கமணி மனதிற்குள் (ஆஹா... இன்னிக்கி விட மாட்டா போல இருக்கே) "அதான் சொன்னேனே...பாப்போம் சொல்லுங்க திருப்பி........"

"போதும் உங்க மொக்கை... அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்? அதை சொல்லுங்க"

"என்ன நீ? பிரகாஷ்ராஜ் ஏதோ படத்துல கேக்கற மாதிரி... அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடின்னு மெரட்டற"

"காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? னு பழமொழி... அது மாதிரி தப்பு பண்ணினதும் இல்லாம இப்போ நான் மெரட்டறேனு பழி போடறீங்களா"

"என்னது தப்பா? என்னமோ பேங்க் robbery மாதிரி பேசறே தங்கம்..... யாராச்சும் கேட்டா வம்பாய்டும்"

"உங்கள திருத்தவே முடியாது"

"நான் என்ன பரிச்ச பேப்பர்ஆ திருத்தறதுக்கு"

தங்கமணி எக்கசக்க டென்ஷன் ஆகி எழுந்து போக

"தங்கம்... நீ போ வேண்டாங்கல... அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்னு நீயே சொல்லிட்டு போயேன்.... க்ரைம் ஸ்டோரி கடைசி பக்கத்த கிழிச்ச மாதிரி சஸ்பென்ஸ் வெச்சா எப்படி?"

"ம்ம்ம்....என்னவா? அதுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே சொல்லல... நான் பேசறத நீங்க கவனிக்கரீங்களானு சும்மா டெஸ்ட் பண்ணத்தான் அப்படி கேட்டேன்" என்று விட்டு தங்கமணி மின்னலாய் மறைய

"அடிப்பாவி... ஒண்ணுமில்லாமையே ஒரு மணி நேரம் அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடின்னு உசுர வாங்குனியா... ஹும்... எப்படி எல்லாம் பிளான் பண்றாங்கப்பா" னு ரங்கமணி ரங்காராவ் மாதிரி தலைல துண்ட போட்டுட்டு உக்காந்துட்டார்

(அப்புறம் நமக்கு என்ன வேல அங்க... அடுத்த சீனுக்கு வரலாம் வாங்க.... ஹி ஹி ஹி)

பின் குறிப்பு: எத்தனை நாளைக்கி தான் யாரோ உருவாக்கின கேரக்டர் வெச்சே மொக்கை போடறது. அதுவும் இல்லாம அந்த ஜாம்பவான்கள் எல்லாம் எத்தனையோ ஆசையோட லட்சியத்தோட அந்த கதாபாத்திரங்கள உருவாக்கி இருப்பாங்க... நாம ஏன் வம்பு பண்ணனும்

அதான் நானே "தங்கமணி ரங்கமணி" னு உருவாக்கிட்டேன்... (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்னு உனக்கே தோணல. பெரிய ஆராய்ச்சி பண்ணி கிழிச்ச மாதிரியே பேசறாளே - mindvoice )

You never know ... நாளைக்கே (நாளைக்கேனா tomorrow இல்லங்க பிற்காலத்தில்னு அர்த்தம்...) அப்புசாமி சீதா பாட்டி மாதிரி புகழ் பெறலாம் இந்த கேரக்டர்ஸ் (இந்த மேட்டர் அவங்களுக்கு தெரியுமா - mindvoice )

கணேஷ் வசந்த்ஐ வெச்சு நம்ம பொற்கொடி (no offense Porkodi) கதை எழுதினா மாதிரி பின்னாடி ஒரு வெள்ளி கொடியோ இல்ல ஒரு தாமிர கொடியோ வந்து நம்ம followers ஆகலாம் (ஐயோ... போதும் தாயே... - mindvoice )

இன்னொரு மேட்டர்.... இந்த பதிவு சிரிக்க மட்டும் (அப்படியா ...சரி... ஹி ஹி ஹி - mindvoice ) அதாவது சிந்திக்க இல்லைன்னு சொல்ல வந்தேன்

நீ என்னமோ இதுவரைக்கும் NSK ரேஞ்சுல தினமும் சிந்திக்க பதிவு போட்ட மாதிரி என்னாத்துக்கு இப்போ அலப்பறைனு கேக்கரீங்களோ...  (இது தான் Self-Realisation ஓ - mindvoice)

என்னங்க செய்ய? "சட்டில இருந்தா தானே அகப்பைல வரும்".... ஹும்..... ஆஹா இந்த தங்கமணி கேரக்டர் ரெம்பவே influence பண்ணுதே... பழமொழி சரவெடியா வருதே...
 
சரி விடுங்க... ஆனா ஒரு விசயம்.... இனி அடிக்கடி உங்க ஸ்டடி ரூம் தேடி வருவார்கள்  "தங்கமணி ரங்கமணி" . அதாவது நீங்க கம்ப்யூட்டர்ஐ அங்க வெச்சிருந்தா....
 
 (நோ நோ கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி போட்டு ஓடைக்க கூடாது... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்...)

63 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

/நோ நோ கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி போட்டு ஓடைக்க கூடாது../ஹை..எங்க கம்ப்யூட்டர நாங்களே தூக்கிப்போட்டு ஒடைப்பமாக்கும்? அஸ்குபுஸ்கு!!

பழமொழி எல்லாம் சூப்பருங்க தங்கம்!:)

Bala said...

தங்கமணியும் ரங்கமணியும் பதிவுலகில் ஒரு ரவுண்டு வர வாழ்த்துக்கள்... :))

பத்மா said...

ennanavo seireenga
vaazhga :))

அமைதிச்சாரல் said...

//நோ நோ கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி போட்டு ஓடைக்க கூடாது... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்...//

யாரோட கம்ப்யூட்டரைன்னு தெளிவா சொல்லுங்க :-))))

அபி அப்பா said...

அடடா என்னாச்சு மைண்ட் சரியில்லியா இன்னிக்கு??? (நான் மைண்ட் வாய்சை சொன்னேன். ஏகத்துக்கும் அடக்கி வாசிச்சிருக்கு)

ரைட்டு! இனி தங்கமணி, ரங்கமணி ரவுசு தானா? நடத்துங்க!

Porkodi (பொற்கொடி) said...

சந்தடி சாக்குல என்னையும் வாரி விட்டுட்டு.. நல்ல வேள அந்த மைண்ட் வாய்ஸ் மட்டும் இல்லனா எங்க கதி என்னாவாகிருக்குமோ!! :)

பழமொழி எல்லாம் சூப்பரு.. இன்னும் உங்க கிட்டருந்து நிறை எதிர்ப்பாக்கறேன், உங்களால முடியும்! ;)

pinkyrose said...

எப்டி தங்கமணி இப்டி?
ஹய்யோ!
உண்மைல உங்க ரங்ஸ் பாவம் :)

pinkyrose said...

அப்புறம் எங்க இந்த பக்கமே காணும்?

நசரேயன் said...

//"உங்கள திருத்தவே முடியாது"//

அது எப்பவோ தெரியும்

பத்மநாபன் said...

சூப்பர் நகைச்சுவை எழுத்தோட்டம்.. சதிலீலாவதி கோவை சரளா- கமல் பேச வெச்சு எழுதன மாதிரியே இருக்கு.
சதிலீலாவதி பார்ட்-2 எடுத்தா நீங்க தான் வஜனகர்த்தா

ஜெய்லானி said...

//அடிப்பாவி... ஒண்ணுமில்லாமையே ஒரு மணி நேரம் அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடின்னு உசுர வாங்குனியா... ஹும்... எப்படி எல்லாம் பிளான் பண்றாங்கப்பா" //

இட்லி மாமி , அப்ப வீட்டில நிறைய நடக்குதுன்னு சொல்லுங்க ..பாவம் ரங்ஸ்..

Jey said...

அம்மனி சிரிச்சி முடியலை.. அசத்துங்க....

Mrs.Menagasathia said...

பழமொழிலாம் சூப்பர்ர்ர் அப்பாவியக்கா..சிரிச்சு முடியல..சூப்பர்ர்

வெறும்பய said...

கீழப்பட்டிக்காரன் சிக்கி இருந்தா கீழ்ப்பாக்கத்துக்கு தானே வந்து சேந்துருப்பான்... //

சூப்பர்ர்...


தங்கமணியும் ரங்கமணியும் பதிவுலகில் ஒரு ரவுண்டு வர வாழ்த்துக்கள்...

LK said...

kalakkal appavi.. nadathu nee,, iiru seekiram anga vanthu un computera keela podarenn

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு.

ஒரு தகவல். என் நண்பனின் மாமியார் பெயர் ரெங்கமணி.(ஆனால் மாமனார் பெயர் தங்கமணி அல்ல..!)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரசிச்சேன் தங்க்ஸ்.. தொடருங்க.. இன்னும் நிறைய பழமொழிகள் எதிர்பாக்கறேன்.. அப்பிடியே எங்கப்பா எங்கம்மா பேசுன மாதிரி இருக்கு :))

கோவை குமரன் said...

:))

Karthick Chidambaram said...

//நோ நோ கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி போட்டு ஓடைக்க கூடாது... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்...//

யாரோட கம்ப்யூட்டரைன்னு தெளிவா சொல்லுங்க :-))))

Repeat:))))

kavisiva said...

எல்லா வீட்டுலயும் தங்ஸும் ரங்ஸும் இப்படித்தான் பேசிக்கறாங்க போல!

//"அடிப்பாவி... ஒண்ணுமில்லாமையே ஒரு மணி நேரம் அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடின்னு உசுர வாங்குனியா... ஹும்... எப்படி எல்லாம் பிளான் பண்றாங்கப்பா" னு ரங்கமணி ரங்காராவ் மாதிரி தலைல துண்ட போட்டுட்டு உக்காந்துட்டார்//

ஹா ஹா ஹா

ஐ மிஸ் யுவர் மைண்ட் வாய்ஸ் :-(

ப்ரியமுடன் வசந்த் said...

:))) ரசிச்சு படிச்சு சிரிச்சாச்சு தங்ஸ் ரங்ஸ்ன்னு இனி தொடரா ?

//கணேஷ் வசந்த்ஐ வெச்சு நம்ம பொற்கொடி (no offense Porkodi) கதை எழுதினா மாதிரி பின்னாடி ஒரு வெள்ளி கொடியோ இல்ல ஒரு தாமிர கொடியோ வந்து நம்ம followers ஆகலாம் (ஐயோ... போதும் தாயே... - mindvoice )//’

:)))))))))) செம்ம.....

பிரசன்னா said...

ஆ ஆ ஆஆவாம், ஈ ஈ ஈஈயாம்.. அப்படியில்ல இருக்கு நீஙக சொல்றது :)

வித்யா said...

:))))))

தராசு said...

இந்த தங்கமணி ரங்க மணிக்கான பெயர் வைத்தவர் எங்கள் அன்பு தலைவர் ஆதிமூல கிருஷணன். அவரிடம் இதற்கான Copy Right உள்ளது. ஆகவே இந்த பெயர்களை உபயோகிப்போர் அவரிடம் அனுமதி வாங்குவது நல்லது என எல்லாம் வல்ல வடமகர நெடுங்குழைகாதனின் தீவிர பக்தரான புல்லு வெட்டி பித்தர் சொல்லுகிறார்.

தக்குடுபாண்டி said...

//தினமும் சிந்திக்க பதிவு போட்ட மாதிரி என்னாத்துக்கு இப்போ அலப்பறைனு கேக்கரீங்களோ...// purinjaa sari!!...:)))

Mythili said...

super :)))

தக்குடுபாண்டி said...

//இந்த தங்கமணி ரங்க மணிக்கான பெயர் வைத்தவர் எங்கள் அன்பு தலைவர் ஆதிமூல கிருஷணன். அவரிடம் இதற்கான Copy Right உள்ளது. ஆகவே இந்த பெயர்களை உபயோகிப்போர் அவரிடம் அனுமதி வாங்குவது நல்லது // in which year he found this names? because this one was introduced by Mr.Dubukku and he started using this term from 2005 itself.

ஸாதிகா said...

செமையா சிரித்தாயிற்று.பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாபாட்டி போல் அப்பாவிதங்கமணியின் தங்கமணி ரங்கமணியா..சபாஷ்..

sandhya said...

என்ன அப்பாவி உங்க வீடு ரங்கமணியை கூட இப்பிடி தான் torture பண்ணுவிங்களா ??

"You never know ... நாளைக்கே (நாளைக்கேனா tomorrow இல்லங்க பிற்காலத்தில்னு அர்த்தம்...) அப்புசாமி சீதா பாட்டி மாதிரி புகழ் பெறலாம் இந்த கேரக்டர்ஸ்".

உங்க கேரக்டர்ஸ் கூட புகழ் பெற நான் வாழ்த்துகிறேன் ..

வெங்கட் நாகராஜ் said...

:))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதிச்சாரல் சொன்னது…

//நோ நோ கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி போட்டு ஓடைக்க கூடாது... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்...//

யாரோட கம்ப்யூட்டரைன்னு தெளிவா சொல்லுங்க :-))))//

பாருங்க அமைதியே டெரராகிட்டாங்க :)

/

சின்ன அம்மிணி said...

பல இடத்துல சேம் சைட் கோல் போட்டிருக்கீங்க அப்பாவி தங்கமணி :)

Venkatesh said...

நல்ல காமெடி சென்ஸ் உங்களுக்கு. ரசித்தேன்.

r.v.saravanan said...

தங்கமணியும் ரங்கமணியும் புகழ் பெற வாழ்த்துகிறேன்

ஹேமா said...

இந்த பதிவு சிரிக்க மட்டும்....சிரிச்சுக் களைச்சுப்போனேன் தங்கமணி.
பாவம்தான் ரங்கமணி.

தமிழ் உதயம் said...

எனக்கொரு சந்தேகம். அப்பாவி தங்கமணிங்கிறது ஒருத்தரா... ரெண்டு பேரா...

vgr said...

photo engerundu pidicheenga...nallairuku....

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - ஹா ஹா ஹ...எல்லாரும் ரெம்ப தெளிவா ஆய்ட்டாங்களே... இது நமக்கு நல்லதில்ல...ஹா ஹா ஹா... தேங்க்ஸ் மகி

@ Bala - தேங்க்ஸ் பாலா

@ பத்மா - ஹா ஹா ஹா... எதாச்சும் ஒண்ணு செய்யணுமே பத்மா... அதான்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ஹி ஹி ஹி... என்னோட கம்ப்யூட்டர் எல்லாம் safety லாக்கர்ல வெச்சுட்டு தான் உங்க கிட்ட பேசறேன்... ஹா ஹஹா ... (ஏன் அமைதி அக்கா இப்படி ஒரு கொல வெறி...ஹா ஹா அஹ)

@ அபி அப்பா - ஆமாம் அபி அப்பா...போன பதிவுல கொஞ்சம் ஓவரா பேசுச்சுன்னு கொஞ்சம் தட்டி வெச்சுட்டேன்...ஹா ஹா ஹா... நன்றிங்க

@ பொற்கொடி - ஹா ஹா ஹா... உங்கள வாரமா வேற யார வாருறது... தேங்க்ஸ் கொடி... இன்னும் எதிர் பாக்குறீங்களா...ஹி ஹி ஹி... உங்க நம்பிக்கைய நிச்சியம் காப்பாத்துறேன்...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Pinkyrose - ஹா ஹா ஹா... ரங்க்ஸ் எல்லாம் பாவம் இல்ல... எப்பவும் நான் தான் பாவம்... தேங்க்ஸ்... இதோ உங்க வீட்டுக்கு (ப்ளாக்க்கு) வந்துட்டே இருக்கேன்... பஸ் ஏறியாச்சு... ஹா ஹா ஹா

@ நசரேயன் - நாம எல்லாம் ஒரே போல தானே பிரதர்... அதான் கரெக்ட்ஆ கண்டு பிடிச்சுட்டீங்க போல... ஹா ஹா அஹ

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க... ஐ சதிலீலாவதி பார்ட்-2 ஆ? தட்ஸ் அ honor ... தேங்க்ஸ்...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ஹி ஹி ஹி... ரகசியங்கள் ரகசியமாத்தான் இருக்கணும் சார்... ஹா ஹா அஹ

@ Jey - தேங்க்ஸ் ஜெய்.. முதல் வருகைக்கும் நன்றி

@ Mrs.Menagasathia - தேங்க்ஸ்ங்க

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - ரெம்ப நன்றிங்க

@ LK - ஆஹா... கலக்கலா... ரெம்ப நாள் ஆச்சு இத கேட்டு... தேங்க்ஸ் கார்த்தி... நான் கம்ப்யூட்டர் எல்லாம் ஒளிச்சு வெச்சுடுவேனே.. ஹா ஹா ஹா

@ ஸ்ரீராம் - நன்றிங்க... ஐ... உல்டாவா இருக்கே...ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - ஹா ஹா ஹா... அப்பா அம்மாவை வாரிட்டீங்களே... ஹா ஹா அஹ... தேங்க்ஸ்...

@ கோவை குமரன் - வாங்க ஊர்காரரே... :)) அப்படின்னா....????

@ Karthick Chidambaram - இதுக்கெல்லாம் நல்லா repeat வீங்களே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ kavisiva - அப்படி தான் போல இருக்குங்க கவி... ஹா ஹா ஹா... மீ டூ மிஸ் மை mindvoice ... ஹி ஹி ஹி ... நன்றிங்க

@ ப்ரியமுடன் வசந்த் - தேங்க்ஸ் வசந்த்... ஹா ஹா ஹா

@ பிரசன்னா - நெஜமாவே புரியலைங்க பாஸ்...ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ வித்யா - :)))))))))))))))))))))))))

@ தராசு - ஆதி அண்ணா.. எனக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியாதுங்ண்ணா... என்ன என்னமோ சொல்லி சின்ன புள்ளைய மெரட்டுராங்கன்னா... கொஞ்சம் வாங்கண்ணா... (ஹி ஹி ஹி)

@ தக்குடு - ஆமாம் பாஸ்... மூக்கு ஆராய்ச்சி / குண்டலம் ஆராய்ச்சி போன்ற சிந்தனை தூண்டும் பதிவுகளை எழுதும் அளவுக்கு எங்க கிட்ட database இல்லையே...(ஹி ஹி ஹி... என்கிட்டயேவா...????)

அப்பாவி தங்கமணி said...

@ Mythili - தேங்க்ஸ் மைதிலி

@ தக்குடு - ஓ...இப்படி ஒரு ஸ்தல வரலாறு இருக்கோ... நன்றி சாரே...

@ ஸாதிகா - தேங்க்ஸ் ஸாதிகா...

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - ச்சே ச்சே... நான் எல்லாம் இப்படி இல்ல சந்த்யா... நான் தான் அப்பாவி ஆச்சே... (ஹி ஹி ஹி)... தேங்க்ஸ் சந்த்யா

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்கோ...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - அவங்க பேருதாங்க அமைதி... அக்கா எப்பவும் terror தான்... எல்லாரும் என்னை போலவே பேருக்கேத்தாப்ல அப்பாவியா இருக்க முடியுமா சொல்லுங்க... என்னங்க நான் சொல்றது... (ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - சேம் சைட் கோல் எல்லாம் அப்ப அப்ப வர்றதுதானுங்க அம்மணி... ஹி ஹி ஹி... தேங்க்ஸ்

@ Venkatesh - தேங்க்ஸ் வெங்கடேஷ்

@ r.v.saravanan - ரெம்ப நன்றிங்க சரவணன்

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - ஹா ஹா ஹா..தேங்க்ஸ் ஹேமா...

@ தமிழ் உதயம் - இல்லைங்கோ... அப்பாவி தங்கமணி ஒன்லி ஒன்... வேறு எங்கும் கிளைகள் இல்லிங்க.... ஹா ஹா அஹ

@ VGR - போட்டோ எப்பவும் போல கூகிள் ஆண்டவர் தானுங்க...நன்றி ...

asiya omar said...

பாக்கியம் ராமச்சாமியை விட இந்த தங்கமணி ஒரு படி மேலே போயாச்சு.அப்புசாமி சீதாபாட்டியை மறக்கடிச்சிடமாட்டேளோ !

Akila said...

Hi

First time visiting...

Really a nice one...

அப்பாவி தங்கமணி said...

@ asiya omar - ஐயோ... அப்படி எல்லாம் இல்லிங்க... அவர் எங்க நான் எங்க? மிக்க நன்றி

@ Akila - தேங்க்ஸ் அகிலா

Krishnaveni said...

very interesting characters and name selection, continue pannunga...all the very best, aamaa..intha pazhamozhiyellam enga kaththukkareenga...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

vanathy said...

தங்ஸ், சூப்பர். இதுக்கெல்லாம் நாங்க கம்யூட்டரை தூக்கிப் போட்டு உடைக்க மாட்டோம்.
பழமொழிகள் நல்லா இருக்கு.

சே.குமார் said...

பழமொழி எல்லாம் சூப்பருங்க.

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... எங்க பாட்டி நெறைய பழமொழிகள் சொல்லுவாங்க பேச்சு வாக்குல ... அப்படியே இண்டரெஸ்ட்ல பழமொழி எங்க கேட்டாலும் மனசுல ஒட்டிக்கும்

@ sweatha - தேங்க்ஸ்

@ vanathy - தேங்க்ஸ் வானதி... ஹா ஹா ஹா

@ சே.குமார் - தேங்க்ஸ்ங்க குமார். முதல் வருகைக்கும் நன்றி

தனி காட்டு ராஜா said...

உஸ் ..சப்பா...இப்பவே கண்ண கட்டுதே .....

அப்பாவி தங்கமணி said...

@ தனி காட்டு ராஜா - இப்பவேவா... இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே பாஸ்...ஹா ஹா ஹா

என்னது நானு யாரா? said...

சூப்பர் எழுத்து நடை! அப்படியே க்ரேஸி மோகனோட காமெடி டயலக் மாதிரி விடாம தொடர்ச்சியா நகைசுவை வர்ற மாதிரி எழுதறீங்க!

நானும் கொஞ்சம் அந்த மாதிரி எழுத Try செய்து கொண்டிருக்கின்றேன். இப்போ தான் பதிவுலகத்தில நுழையறேன். புதுசா வந்திருக்கிற நான் உங்கள போல சீனியர் கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

என் பதிவுகளை படிக்கணும்னு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இப்போ உங்க எழுத்தை Follow செய்ய ஆரம்பிச்சிட்டேன். தொடருங்கள்! நாங்க கூட இருக்கோம்.

அப்பாவி தங்கமணி said...

@ என்னது நானு யாரா? - வாவ்... thats a great compliment to hear... நீங்களும் எழுதுங்க... நான் சீனியர் எல்லாம் இல்லிங்க... கொஞ்ச நாளா தான் எழுதறேன்... கண்டிப்பா உங்க ப்ளாக்க்கு ஏதோ வந்துட்டே இருக்கேன்... Follow போட்டதற்கு நன்றிங்க...

Krishnan R said...

இதுல ஏன் தங்கமணி கீழப்பட்டிக்காரனை வம்புல மாட்டி விடுற?? நல்லா இருந்தது.......

அப்பாவி தங்கமணி said...

@ Krishnan R - கீழ்பாக்கத்துக்கு ரைமிங்கா கீழப்பட்டி தானுங்க வந்தது அதான்....:)) நன்றிங்க பழைய பதிவை படிச்சதுக்கு...

Post a Comment