Wednesday, July 28, 2010

பிடித்த ஐந்து பாடகர்கள் (அனன்யா அழைத்த தொடர்பதிவு)

இந்த தொடர்பதிவுக்கு அனன்யா என்னை அழைச்சது மே 1 2010 அன்னிக்கி... மொறைக்காதீங்க... கொஞ்சம் லேட் தான் ஆய்டுச்சு

கொஞ்சமில்ல ரெம்பவே... ஹி ஹி ஹி

"உன்னை எல்லாம் தொடர் பதிவுக்கு கூப்பிடுறாங்க பாரு அவங்கள சொல்லணும்"னு நீங்க திட்டறது நூறு டெசிபல் சத்தத்துல நல்லாவே கேக்குது...

அதான் முடிவு பண்ணிட்டேன்... இனி தொடர் பதிவு எல்லாம் போட்டு முடிச்சுட்டு தான் மத்த வேலைன்னு... ofcourse நடுல சாப்பிட / தூங்கன்னு சில முக்கியமான வேலைகள் செய்யத்தானே வேணும்

பிடித்த ஐந்து பாடகர்கள்னு எழுதறது கொஞ்சம் கஷ்டம்னு எனக்கு தோணுது... அதுக்கெல்லாம் ஸ்ருதி (இதை படிக்கறப்ப நம்ம பிரபல பதிவர் ........... உடைய பிரெண்ட் ஸ்ருதி ஞாபகம் உங்களுக்கு வந்தா நான் பொறுப்பில்ல...ஹா ஹா ஹா) , தாளம், ராகம், பல்லவி, பல்வலி, ஆலாப்பு, மத்தவங்களுக்கு ஆப்பு எல்லாம் தெரிஞ்சவங்க பாடகர்கள் பத்தி எழுதினா சரிதான்

சுருக்கமா சொல்லணும்னா நம்ம தக்குடுவ போல "Corporate கச்சேரி" நடத்துற "சங்கீத ஜாம்பவான்கள்" களுக்கு வேணும்னா சரி வரும்

என்னை போல மெட்டு நல்லா இருக்கு, பாட / கேக்க நல்ல இருக்குனு மேலோட்டமா பாத்து ரெம்ப புரிஞ்ச மாதிரி act விடுற ஜீவன்களுக்கு ஆகுமா?

அதான் பேசாம எனக்கு பிடிச்ச அஞ்சு பாட்டுகள போட்டுடறேனே... (அனன்யா திட்டாதே...ஹி ஹி ஹி)

1 . மன்றம் வந்த தென்றலுக்கு
"மௌன ராகம்" படத்துல வர்ற இந்த பாட்டு என்னோட ஆல் டைம் favourite ...
படத்தால பாட்டு பிடிச்சதா பட்டால படம் பிடிச்சதா பிரிச்சு பாக்க முடியல. அவ்ளோ அழகு இந்த பாட்டும் படமும். இந்த படத்துல எல்லா பாட்டும் சூப்பர் தான், ஆன இந்த பாட்டு ரெம்ப சூப்பர்

2 . ஜனனி ஜனனி
"தாய் மூகாம்பிகை" படத்துல இந்த பாட்டு நான் அடிக்கடி முணு முணுக்கற ஒண்ணு. என்னமோ அப்படியே கட்டி போடுற ஒரு composition னு எனக்கு தோணும். இந்த பாட்டு எப்போ கேட்டாலும் அப்படியே நின்னுடுவேன் அந்த எடத்துல (அப்ப மத்த சமயம் எல்லாம் உக்காந்துட்டே இருப்பியான்னு குண்டக்க மண்டக்க எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது ... அப்புறம் உங்கள பார்த்திபன் சார் கிட்ட புடிச்சு குடுத்துடுவேன் )

3 . என்ன சத்தம் இந்த நேரம்
"புன்னகை மன்னன்" படத்துல வர்ற இந்த பாட்டு ரெம்ப பிடிக்கும். அந்த கடைசி நிமிச உணர்வுகளை பிரதிபலிக்கற அருமையான வரிகள் மற்றும் இசை மற்றும் நடிப்பு. எல்லாம் சேந்து தான் இந்த பாட்டை பிடிச்சதா ஆக்கிடிச்சு

4 . கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
"புது புது அர்த்தங்கள்" படத்துல வர்ற இந்த பாட்டு ஒரு ஸ்பெஷல். நானும் ரங்க்ஸ்ம் ஒத்து போற ஒரே விசயம் இந்த பாட்டு ரெண்டு பேருக்கும் பிடிக்கும்கறது தான், ஹா ஹா ஹா
ரெம்ப தேர்ந்தெடுத்த வரிகள், அதுக்கு அழகு சேக்கற இசை மற்றும் குரல். பின் 80 முன் 90 களில் பெரும்பாலான கல்யாண CD களில் தவறாம இடம் பிடிச்ச ஒரு பாட்டு (அதாவது நான் சின்ன புள்ளயா இருக்கறப்ப... ஒகே... ஒகே)

5 . வா வா என் தேவதையே
சமீபத்துல ஒகே ஒகே... போன வருஷம்...  வந்த சினிமாக்களில் ரெம்ப பாதிச்ச ஒரு பாட்டு இது. "அபியும் நானும்" படத்துல வர்ற அழகான அப்பா பொண்ணு செண்டிமெண்ட் பாட்டு. அதனால தான் பிடிச்சதோ என்னமோ
ரெம்ப ரெம்ப அழகான வரிகள், அதை விட அழகான இசை, எல்லாத்துக்கும் மேல அந்த பாடலுக்கு முழு அர்த்தம் குடுத்த பிரகாஷ்ராஜோட நடிப்பு எல்லாம் சேந்து தான் இந்த பாட்டை ஹிட் பண்ணுச்சுன்னு நினைக்கிறேன்

இன்னும் நெறைய விருப்ப பாடல்கள் இருக்குங்க... சொன்னா இன்னிக்கி முழுக்க சொல்லலாம். நீங்க தெறிச்சு ஓடிடுவீங்க....ஹா ஹா ஹா

ஆனா நான் பாத்த வரைக்கும் ஒரு பாட்டு ஹிட் ஆகணும்னா அந்த படம் கூட ஹிட் ஆகணும்னு நினைக்கிறேன். பட்டாலேயே ஹிட் ஆனா படங்கள் பல உண்டுங்கறது வேற விசயம்

ஒகே , தொடர் பதிவுன்னா இன்னும் நாலு பேராச்சும் அழைக்கணும் இல்லையா... இது ரெம்ப பழைய தொடர் பதிவு, பெரும்பாலும் ஒரு ரவுண்டு வந்து எல்லாரும் எழுதிட்டங்கன்னு நினைக்கிறேன்...

இருந்தாலும் யாராச்சும் சிக்கராங்களானு பாப்போம்...

ம்....நான் தொடர அழைப்பவர்கள்

அபி அப்பா 


ஜெய்லானி


திவ்யாம்மா


சந்த்யா

சரிங்க போறதுக்கு முந்தி இன்னொன்னு...


நம்ம ப்ளாக் நண்பர்களுக்கு ரெம்ப பெரிய மனசுங்க... விருதை அள்ளி குடுக்கறாங்க.... கடந்த சில வாரங்களில் நாலு விருது குடுத்து இருக்காங்க... அவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிகரனுங்க... அதோட அதை உங்க எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணிகரனுங்க... நன்றிங்க... bye ங்க...

இதோ அந்த விருதுகள்:-

மிக்க நன்றி காயத்ரி - Golden Blog Award
மிக்க நன்றி பிரசன்னா - தேவதை விருது

மிக்க நன்றி ஜெய்லானி - தங்கமகன் விருது

மிக்க நன்றி ஆனந்தி - Thank you Friends Prizeநன்றிங்கோ... அப்புறம் பாப்போம்...

54 பேரு சொல்லி இருக்காக:

டம்பி மேவீ said...

அது ராகவேந்திர படம் இல்லைங்க .....சமயபுரம் மாரியம்மன் ன்னு ஒரு படம். ஜெய்சங்கர் கார்த்திக் ன்னு பலர் நடிச்ச படம்

டம்பி மேவீ said...

உங்க லிஸ்ட் ல எனக்கு ஒன்னும் இரண்டும் தான் பிடிச்ச பாட்டுங்க .....

பிறகு விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களுங்க

Rajaram said...

Hi

Janani Janani song is from the film 'Thai Mookambigai'.. Its one of the wonderful composition by Raja. Even the 'Amma yendru azhaikada' from Mannan also in the same raga is another masterpice from the Maestro

Jey said...

:)

அபி அப்பா said...

மைண்ட் வாய்ஸ் இல்லாத பதிவு ஒரு பதிவா அப்படீன்னு பின்னூட்டம் போட வந்தா எனக்கு பிடித்த அபியும் நானும் பாட்டை போட்டே என்னை கவுத்துட்டீங்க அப்பாவிதங்கைமணி:-) (இந்த பேர் எப்படி இருக்கு புவனா)

அடுத்து பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னே கீதாம்மா பதிவிலே நானா வாலண்டியரா ரவுடின்னு சொல்லி ஏறீட்டேன். அதாவது இந்த தொடருக்கு என்னையும் கூப்பிடக்கூடாதான்னு கேட்டு.

நான் தான் "கர்ணன்", 'அவன் தான் மனிதன்" சிவாஜிக்கு எதிர் வீட்டுகாரனாச்சே. கொடுத்த வாக்கை காத்துல விட்டுட்டேன். அவங்க மறந்தும் போயாச்சு. இப்ப நீங்க கூப்பிட்டாச்சு. கண்டிப்பா எழுதறேன். ஆனா எனக்கு இந்த லிங் கொடுத்து அந்த பாட்டை எல்லாம் கேட்க வைக்கும் வித்தை எல்லாம் தெரியாது. ஆனாலும் முயற்சி பண்றேன் அப்பாவிதங்கைமணி புவனா!!!

LK said...

அப்பாவி, நல்ல பாடல்கள் . அங்கத் தொட்டு இங்க தொட்டு, எங்க வீடு அம்மணிய கூப்டாச்சா? நாந்தான் இந்த தொடரை ஆரம்பித்தேன்

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் மிக அருமை. விருதுக்கு வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///டம்பி மேவீ சொன்னது…

அது ராகவேந்திர படம் இல்லைங்க .....சமயபுரம் மாரியம்மன் ன்னு ஒரு படம். ஜெய்சங்கர் கார்த்திக் ன்னு பலர் நடிச்ச படம்.///

அது சமயபுரம் மாரியம்மனும் கிடையாது. ஜனனி ஜனனி பாட்டு தாய்மூகாம்பிகை படத்துல உள்ள பாட்டு.

ஜெய்லானி said...

எல்லா பாட்டும் சூப்பர் பாட்டுத்தான்..

விருதுக்கு வாழ்த்துக்கள்..!! இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

போன பதிவுதான் தொடர் போட்டு விட்டு வந்தா திரும்பவும் தொடரா ... ஒரு கலக்கு கலக்கிடுவோம்..

பத்மநாபன் said...

ஜனனி,ஜனனி...இளையராஜா குரலில் அற்புதப்பாடல்.

மன்ற வந்த தென்றலுக்கு - ட்ரம்ஸ் கிளப்பலோடு எஸ்.பி. பி யின் சூப்பர் பாட்டு.

கல்யாண மாலை....எங்க விடியோ கேசட்டுல புடிச்சு இப்ப சிடியா மாத்தியாச்சு.

புன்னகை மன்னன் ...என்ன சத்தம் இந்த நேரம் ...
எஸ்.பி. பி + கமல் கூட்டணியின் வெற்றி.

வைரமுத்து அவரே எழுதிட்டு தனக்கு ஒரு மகள் இல்லையே சொல்லி எங்க வைத்த கவிதை வரிகளோடு..வா..வா..என் தேவதையே பாட்டு..

நல்ல தொகுப்பு.. சர்ரி... அனந்யா பொண்ணு இப்பவாது எந்திரிச்சு வருதான்னு பார்ப்போம்.

தமிழ் உதயம் said...

அபியும் நானும் பட பாடலை இப்போது தான் கேட்டேன். நன்றாக இருந்தது.

அமைதிச்சாரல் said...

//அது சமயபுரம் மாரியம்மனும் கிடையாது. ஜனனி ஜனனி பாட்டு தாய்மூகாம்பிகை படத்துல உள்ள பாட்டு//

நல்லா சொல்லுங்க.. இட்லி சாப்டுட்டு பாட்டைக்கேட்டா இப்படித்தான்.. பேரும் பாட்டும் குண்டக்க மண்டக்கவாயிடும் :-)))

நசரேயன் said...

//சில முக்கியமான வேலைகள் செய்யத்தானே
வேணும்//

இட்லியை தவிர

Gayathri said...

arumayaana paadalgal..nandri thozhi...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமை உங்களின் பாடகர்களின் தேர்வும் . பாடல்களின் தேர்வும் . விருதுகளுக்கு வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

சுசி said...

என்ன புவனா.. உங்களுக்கு பிடிச்ச பாட்ட போட சொன்னா எனக்கு பிடிச்சதில அஞ்சு பாட்ட போட்டிருக்கிங்க.. ரொம்ப நன்றிப்பா.. :))

விருதுக்கும் வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி said...

@ டம்பி மேவீ - கரெக்ட் பண்ணிடனுங்க... தேங்க்ஸ்ங்க... நன்றிங்க

@ Rajaram - தேங்க்ஸ் ராஜாராம், மாத்திட்டேன்... முதல் வருகைக்கு நன்றி

@ Jey - எல்லாத்துக்கும் ஒரு smiley போட்டா என்ன சார் அர்த்தம்? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அபி அப்பா - ஓ.. உங்களுக்கு அந்த பாட்டு பிடிக்காம இருக்குமா என்ன? அப்பவிதங்கைமணி நல்ல இருக்குங்க அண்ணா ... அப்படியே இருக்கட்டும்... நன்றி... சீக்கரம் பதிவ போடுங்க அபி அப்பாண்ணா... (ஹி ஹி ஹி)

@ LK - பாரேன்...உலகம் உருண்டை தான்... நீ ஆரம்பிச்சது உன் வீட்டுலையே வந்து நிக்குது... ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கு மிக்க நன்றி

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - முதல் வருகைக்கு ரெம்ப நன்றிங்க. ஜனனி ஜனனி பாட்டு கரெக்ட் பண்ணிட்டேன்.. ரெம்ப நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - நன்றிங்க...சீக்கரம் தொடருங்க...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க விரிவான பின்னூட்டத்திற்கு... அந்த அம்மணி வர்ராப்ல காணமுங்ண்ணா... பாப்போம்...

@ தமிழ் உதயம் - நன்றிங்க .... ரெம்ப நல்ல பாட்டு அது

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ஹா ஹா அஹ... சமயம் கெடச்சா இட்லிய இழுக்காம விடுவீங்களா என்ன? ஹா ஹா ஹா.. இட்லி சாப்பிட்டு இருந்தா கரெக்ட்ஆ வந்திருக்கும் தெரியுமோ... ஹா ஹா ஹா

@ நசரேயன் - ஹா ஹா அஹ... அதான் வர்றதில்லையே...அப்புறம் எங்க செய்ய... ஹும்

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - ரெம்ப நன்றிங்க சங்கர்

@ சுசி - ஆஹா... நமக்கு என்ன ஒற்றுமை பாருங்களேன் சுசி... ரெம்ப சந்தோஷம்.... வாழ்த்துக்களுக்கு நன்றிங்க

Mahi_Granny said...

எனக்கும் மிக மிக பிடித்த பாடல்கள் . யாராவது குறிப்பிடும் போது தான் அதை உணர முடிகிறது.வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ..

ம்ம் ம்ம் ம்ஹும் ம்ம் ம்ம் ம்ஹும் ம்ஹ்ஹூம் இந்த கோரஸ் ல இருந்து அந்த பாடல்ல வர்ற வரி எல்லாம் மனப்பாடம் அவ்ளோ பிடிச்ச பாட்டு... பாடல்களுக்காகவே பல முறை பார்த்த படம் பு.பு.அர்த்தங்கள்...

Malar Gandhi said...

Congrats on ur well-deserved award, enjoy.

Aaaha, like all those first 4 songs, too good:)..never had a chance to listen to that 5th one' but my father keeps talking about that movie:)

சி. கருணாகரசு said...

இதுல எனக்கு 1,3,4 மிக பிடித்த பாடல்..... எனக்குன்னு மட்டுமில்ல எல்லோருக்கும் பிடிக்கும் பாடல். மற்றவை என் கவனத்த் கவரல.... நேரம் இருக்கும் போது முழுபாடலையும் கேட்டு பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிங்க.

siva said...

அப்படி போடு..

விருது எல்லாம் வாங்கி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

ட்ரீட் வேணும்.
100 dairy மில்க் பார்சல் பண்ணிடுங்க.

வரட்ட..

ஸ்ரீராம். said...

எல்லாமே நல்ல பாடல்கள். தொடர்ந்து தொடர் பதிவு படிப்பதை விட இப்படி "கொஞ்சம்" இடைவெளி விட்டு படித்தால் சுவாரஸ்யம் கூடுகிறது...

vanathy said...

நல்ல தெரிவுகள். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் மிக அருமை. விருதுக்கு வாழ்த்துகள்.

Thenral said...

Aiyo...!Ellame super paattunga.En all time favourites.Enakum ithellam romba pidikkum.Aana en list ro.......mba perisu.

Riyas said...

எல்லா பாட்டும் சூப்பர் பாட்டுத்தான்..

எல்லாம் எனக்கும் பிடித்தவை..

வித்யா said...

எல்லாமே சூப்பர் பாட்டு.

விருதுகளுக்கு வாழ்த்துகள்..

தக்குடுபாண்டி said...

மொதல்ல விருதுக்கு வாழ்த்துக்கள் & தக்குடு ஜாம்பவான் எல்லாம் இல்லை, என்னோட ப்ரொபல் போட்டோல இருக்கும் சுண்டெலி மாதிரி சாதாரண ஒரு சுட்டிக் குழந்தை அவ்ளோதான்!!..:)

தக்குடுபாண்டி said...

அஞ்சு பாட்டுமே அருமையான ராகங்களை அடிப்படையா கொண்டு அமைக்கப் பட்டதாலதான் இன்னிக்கும் நம்ம மனசுல அப்பிடியே இருக்கு.

மன்றம் வந்த தென்றல் அழகான கீரவாணி ராகத்துல உள்ள பாட்டு, ஜனனி! ஜனனி! பாடல் அம்பாளோட பாட்டுங்கர்துனாலையோ என்னவோ ராஜா அவர்கள் அதை கல்யாணி ராகத்துல அமைச்சுருக்கார், என்ன சத்தம் இந்த நேரம் & கல்யாண மாலை இரண்டு பாட்டுக்கும் உள்ள ஒத்துமை என்னனா, இரண்டுமே சிந்துபைரவி ராகத்துல உள்ள பாட்டு (இன்னொரு ஒற்றுமை அபாயகரமான ஒரு பள்ளத்துல விழுவதற்கு முன்னால் பாடப் பட்ட பாடல்...:) )

அபியும் நானும் பாடல் மட்டும் என்ன ராகம்னு புடிபடலை, யாராவது சொல்லக்கூடாதா?? plessss

தனி காட்டு ராஜா said...

சோதனை மேல் சோதனை ...

sandhya said...

புவனா உங்கள்க்கு பிடிச்ச பாட்டு எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்தமானது தான் ..அப்புறம் தொடர அழைப்பவர்கள் என்று சந்தியா என்று போட்டிரிகிங்க ,அந்த அழைப்பு எனக்கா ?

sandhya said...

oh my god என்னால் இது நம்பவே முடியலை என்னேயும் தொடருக்கு கூபிட்டுருக்காங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு புவனா நன்றி

SenthilMohan said...

என்னக்கா நீங்க அடிக்கடி காணமப் போயிடுறீங்க? ஆணி அதிகமா?

நியோ said...

வா ..வா ..தேவதையே ..என்னோட கனவுப் பாட்டு ..பிறக்காத என்னோட குழந்தையை நினைச்சு ..அபியும் நானும் எனக்கு மிகவும் பிடிச்ச படமும் கூட தோழர் !

Mrs.Menagasathia said...

அனைத்து பாடல்களும் நல்ல தேர்வுகள்,விருதுக்கு வாழ்த்துக்கள்!!

அப்பாவி தங்கமணி said...

@ Mahi_Granny - ரெம்ப நன்றிங்க... முதல் வருகைக்கும் நன்றி...

@ ப்ரியமுடன் வசந்த் - ஆமா... நானும் அந்த பாட்டுக்காகவே நெறைய வாட்டி அந்த படம் பாத்தேன்... அருமையான பாட்டு... நன்றிங்க

@ Malar Gandhi -தேங்க்ஸ் மலர்... அந்த அபியும் நானும் படம் கண்டிப்பா பாருங்க... It will become your most favourite one... Thanks again

அப்பாவி தங்கமணி said...

@ சி. கருணாகரசு - ரெம்ப நன்றிங்க

@ siva - ட்ரீட் தானே சிவா... கண்டிப்பா... அடுத்தது ஒரு சமையல் குறிப்பு போட்டுடறேன்... ஒகேவா... ஒகே ஒகே... ஓடாதீங்க...ஹா ஹா ஹா.. தேங்க்ஸ்

@ ஸ்ரீராம் - நன்றிங்க... ஆஹா இப்படி ஒரு விசயம் இருக்கோ... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - நன்றி வானதி

@ வெறும்பய - நன்றிங்க

@ Thenral - நன்றிங்க தென்றல்... எனக்கும் லிஸ்ட் ரெம்ப பெருசு தான்... இங்க அஞ்சு தான் போடணும்னு சொல்லிட்டாங்க.. அதான்...

அப்பாவி தங்கமணி said...

@ Riyas - நன்றிங்க ரியாஸ்

@ வித்யா - நன்றிங்க வித்யா

@ தக்குடு - சுண்டலி ராகம் எல்லாம் சொல்லுமா என்ன... ஏனப்பா இத்தனை தன்னடக்கம். வாவ் ... ராகம் எல்லாம் கலக்கல்... இதை தான் சங்கீத ஜாம்பவான்னு சொன்னேன்... சூப்பர்...அபியும் நானும் பாட்டு சீக்கரம் கண்டுபிடிங்கோ...

அப்பாவி தங்கமணி said...

@ தனி காட்டு ராஜா - ராஜாவுக்கே சோதனையா... ஐயோ பாவம்

@ sandhya - நன்றி சந்த்யா... ஆமாம் நீங்களே தான்... தொடருங்க சீக்கரம்... நன்றி சந்த்யா

@ SenthilMohan - நான் இங்கேயே தானுங்கணா இருக்கேன்... உங்கள தான் காணோமுங்க... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ நீயோ - தேங்க்ஸ் நியோ... நெறைய பேருக்கு அது கனவு பாட்டு தான்... நன்றி

@ Mrs.Menagasathia - ரெம்ப நன்றிங்க ஸாதியா

BalajiVenkat said...

அப்பாவி தங்கமணி போட்ட பாட்டுல கடைசி பாட்ட தவிர மத்ததுலாம் நான் கேட்ருக்கேன் and எனக்கும் ரொம்ப பிடுச்ச பாடல் தான் ...

அப்புறம் விருது வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்

அபியும் நானும் பட பாடல நான் கேட்டு அத பத்தி பின்னூட்டம் போடறேன்...

//(இன்னொரு ஒற்றுமை அபாயகரமான ஒரு பள்ளத்துல விழுவதற்கு முன்னால் பாடப் பட்ட பாடல்...:) )/// தக்குடு... ஓகே ஓகே ....

எனக்கு ரொம்ப பிடிச்ச ராகமும் சிந்து பைரவி தான்.....

Ananthi said...
This comment has been removed by the author.
Ananthi said...

வாவ்.. என்ன சத்தம் இந்த நேரம்...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..
ஜனனி.. ஜனனி....ஜகம் நீ.......
மன்றம் வந்த தென்றலுக்கு....

அடடா அடடா.... எல்லா பாட்டுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டுங்க.. :-))))
சூப்பர்.. விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய வாங்குங்க..

Krishnaveni said...

very nice selection, my fav too, congrats on all your awards, you deserve a lot

சௌந்தர் said...

அருமையான பாடல்கள்

தொடர் பதிவு போடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)
ஜெய்லானி

அபி அப்பா

திவ்யாம்மா

சந்த்யா

அப்பாவி தங்கமணி said...

@ பாலாஜி - நன்றிங்கோ...

@ ஆனந்தி - தேங்க்ஸ் ஆனந்தி...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... எல்லாம் உங்க ஆதரவு தான்

@ சௌந்தர் - நன்றிங்க சௌந்தர்...

vinu said...

wow wow wow orea viruthugallaga vaangi kuviuchu irrukkenga appadiyea unga accountlea oru tea-um bunn-um treat order apnni kuduthu irrukkallam,,,,,


sari sari athukkeallam nammalaipolla periya manasu veanumm ok ok eatho oscar ellam vaangitteenga nallairrunga.

"ella pugalum tamillukkea"

eppudi unga logo vai naanga poduvomullea

அப்பாவி தங்கமணி said...

@ Vinu - தேங்க்ஸ் வினு... அதை உங்க எல்லாருக்கும் தான் ஷேர் பண்ணி இருக்கேன்.... இப்ப அந்த விருதெல்லாம் உங்களுதும் தான்... என்ஜாய்... ட்ரீட் தானே... ஆர்டர் பண்ணிட்டேன்... வந்துட்டே இருக்கு... ஹா ஹா அஹ... நிச்சியமா... "எல்லா புகழும் தமிழுக்கே"

Post a Comment