Friday, July 30, 2010

அப்பாவியின் ஆர்டர்...


நம்ம சுசி அக்கா (கண்டுக்காதீங்க...) இந்த வித்தியாசமா தொடர் பதிவுக்கு கூப்பிட்டது ஜூலை ஒண்ணாம் தேதி

தலைப்பை பாத்து அப்பவே எழுத கை துரு துருன்னுச்சு, ஆனாலும் என் இனிய தமிழ் மக்களே... கடமை கண்ணியம் கட்டுப்பாடு வா வா என அழைத்தபடியால் சற்று தாமதம் ஆகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன் மரத்தமிழனே(ளே).... (ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... சோடா ப்ளீஸ்...)

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... தாங்க முடில - mindvoice )

"என்னம்மா கண்ணு... ஒரே அரசியல்வாதி ஸ்டண்ட் அடிக்கற" அப்படின்னு கேக்கரீங்களோ... என்னங்க செய்ய? நான் எழுத போற விசயம் அப்படி

இதோ சுசி கூப்பிட்டது இப்படி தான்

//உங்களுக்கான டாபிக்.. கடவுள் உங்களுக்கு ஒரு வரம் தரார். நீங்க என்ன கனவு காணறிங்களோ அது அப்டியே கனடாவோட சட்டமா அமுல்ப்படுத்தப்படும். மறு பேச்சு இல்லாம. ஆரம்பியுங்க கனவை. தலைப்பு “அப்பாவியின் ஆர்டர்”//

சுசி வாழ்க சுசி வாழ்க சுசி வாழ்க... என்னத்துக்கு இப்போ கோஷம் போடறேன்னு கேக்கறீங்களா? பின்ன கனவுன்னாலும் "அப்பாவியின் ஆர்டர்" னு சொல்லிட்டாங்களே...அதுக்கு தான் வாழ்க கோஷம்... ஹி ஹி ஹி

(இவ சும்மாவே ஆடுவா... இந்த சுசி பொண்ணு சும்மா இருக்காம வேப்பெல வேற குடுத்தாச்சு... இனி என்ன... ஹும்... - mindvoice )

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...ஒகே ஒகே... போஸ்டுக்கு போவோம்...

உடனே எல்லாரும் உங்க போஸ்ட் பாக்ஸ் தேடி போகாதீங்க... அதாவது நான் எழுதபோறேன்னு சொன்னேன்...

அப்போ இவ்ளோ நேரம் எழுதாம என்ன கிறுக்கினயானு குறுக்க குறுக்க கேள்வி கேட்டீங்க... அப்புறம் அப்பாவியின் மொதல் ஆர்டர் உங்கள நாடு கடத்தறது தான்...ஹா ஹா ஹா... ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்...

யாரங்கே... அரசவை கூடட்டும்...

ஓவர் பில்டப்பா இருக்கோ? ஹி ஹி ஹி ... பின்ன ஆர்டர் போடணுமில்லையா...

ஒரே ஒரு கனவுல ஒரே ஒரு ஆர்டர் எல்லாம் நமக்கு கட்டுபடி ஆகாதுங்க... அதனால ஒரே கனவுல நெறைய ஆர்டர்ஸ் போடலாம்ன்னு இருக்கேன்...ஒரே கனவுல நெறைய ஆசை வராதா என்ன... எல்லாம் வரும்... பின்ன நமக்கு இருக்கற பிரச்சன ஒண்ணா ரெண்டா...

மொக்கை orders first :-

1 . என்னை போல சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டுல போய் நல்ல மனசோட அந்த ஊருக்காக உழைக்கற நல்ல உள்ளங்களுக்கு... அதாவது NRI ஸ்...

அவங்களை வருசத்துக்கு ஒரு வாட்டி அந்த அந்த நாட்டு அரசாங்கம் சொந்த செலவுல அவங்க அவங்க சொந்த ஊருக்கு அனுப்பி வெக்கணும் (ரெண்டு மாசம் சம்பள லீவோட...)

இது எப்படி இருக்கு? (இதுக்கு நெறைய வோட் விழும்னு நினைக்கிறேன்... ஹா ஹா ஹா)

2 . அப்புறம் தமிழ் பேருல ப்ளாக் வெச்சு இருக்கறவங்களுக்கு கவர்மென்ட் 95 % வருமான வரி விலக்கு தரணும்

(அந்த அஞ்சு சதவீதம் மட்டும் ஏன் விட்டு வெச்ச - mindvoice )

கவர்மென்ட் பாவம் இல்லையா .... (ஹி ஹி ஹி)...

ஐயோ பாவம் பொற்கொடி, ஹரிணி, அனாமிகாவுக்கெல்லாம் வரி விலக்கு கெடைக்காது... அதுவும் பொற்கொடிக்கு சான்சே இல்ல... அவங்க ப்ளாக் தலைப்பு மட்டுமில்லாம ஒரு ஒரு இடுகை தலைப்பு கூட ஆங்கிலத்துல தான் வெப்பாங்க...

பாவம்... சரி சரி.. பீல் பண்ணாதீங்க.... நான் உங்களுக்கு சாதகமா வேற ஆர்டர் போடறேன்... ஒகே... அழுகாதீங்க... சரியா...

அதோட வீட்டுல இருந்து முழுநேரம் ப்ளாக் போடறவங்களுக்கு ஸ்டைபண்ட் தரணும்... நெறைய எல்லாம் வேண்டாம்... மாசம் ஒரு ரெண்டாயிரம் டாலர் குடுத்தா போதும்... எங்களுக்கு பேராசை எல்லாம் இல்ல...

அமெரிக்கன் டாலர் குடுத்தாலும் சரி கனடியன் டாலர் குடுத்தாலும் சரி... ஆனா முருகன் டாலர் மட்டும் வேண்டாம்... (சாமி ஆனாலும் ஆசாமி ஆனாலும் நாம முன்ஜாக்கிரதயா இருக்கணும் பாருங்க... காலம் கெட்டு கெடக்கு...)

(அத இவ சொல்றா - mindvoice )

(ஆபீஸ்ல உக்காந்து முழு நேரம் ப்ளாக் எழுதறவங்கள என்ன செய்யறதாம், அதுக்கும் எதாச்சும் ஆர்டர் வெச்சுருப்பா.. பாப்போம்... - mindvoice )

3 . போட்டோ காபினா எப்படி ஜெராக்ஸ்ஓ? வனஸ்பதினா எப்படி டால்டாவோ? அப்படி உலகம் பூரா இட்லினா தங்கமணி பிராண்ட் இட்லி தான்

யாரும் வீட்டுல இட்லி செய்ய அனுமதி இல்லை. அப்படி மீறி செஞ்சா ஒரு லட்சம் ரூபா பைன். ஒன் அண்ட் ஒன்லி "தங்கமணி பிராண்ட் இட்லி" தான். விலை ஒரு இட்லி வெறும் நூறு ரூபா தான்

வேற வழியே இல்ல நீங்க வாங்கி தான் ஆகணும்... ஏன்னா இது monopoly ... புரியலையா... எல்லாரும் லைப்ரரி போய் உடனே எகனாமிக்ஸ் டிக்சனரி எடுத்து படிங்க...

(இவ அகராதியே தாங்கல .. இதுல எகனாமிக்ஸ் அகராதி வேறயா... - mindvoice )

சரி சரி... மொக்கைக்கு மூணு போதும்னு நினைக்கிறேன்... இல்லேனா flight வருமாம்... இப்பவெல்லாம் இதான் பேசனாம்... ஆட்டோ எல்லாம் ஓல்ட் பேசன் ஆய்டுச்சாம்... BBC ல சொன்னாங்க...

இனி உருப்படியான கனவு ஒண்ணு சொல்லிக்கறேன்:-

உலகம் பூரா ஒரே கூரை ஆய்டணும்... ஒரே கரன்சி, ஒரே தலைவர், ஒரே ஜனநாயக அரசாங்கம், உலகத்துல மூணுல ஒரு பங்கு இடம் விவசாயம் தான் செய்யணும் இப்படி ஆகணும். ஏன் இப்படி சொல்றேன், இதனால் ஏற்படும் நன்மைகள் என்னனு சொல்றேனே:-

1 . எல்லாம் ஒரே நாடுன்னு ஆய்ட்டா அப்புறம் ராணுவம் எதுக்கு? எவ்ளோ பெரிய செலவு மிச்சம். எவ்ளோ உயிர் பலிகள் தடுக்கப்படும்

2 . தூதரகம், விசா ஆபீஸ், பாஸ்போர்ட் ஆபீஸ் எல்லாம் இல்லாம போய்டும். இன்னும் செலவு மிச்சம், பிரச்சனை தீரும்

3 . நீ நான்ங்கற போட்டி இல்ல, டாலர் ரூபாங்கற ஏற்ற தாழ்வு இல்ல. போர் பிரச்சினைங்கற விசியமே இல்ல. எவ்ளவோ மிச்சம், எவ்ளவோ நிம்மதி

4 . இது எதுவும் இல்லைனா மக்களுக்கு வேலை இல்லாத திண்டாட்டம் வந்துடாதானு நீங்க கேக்கலாம். நிச்சியமா வராது. Optimal Utilisation of Resources செஞ்சா எல்லாமும் சரியாவே இருக்கும்

5 . கனடா மக்கள் தொகை இந்தியா மக்கள் தொகைல நாலுல ஒரு பங்கு தான். ஆனா மொத்த பரப்பளவு இந்தியாவ விட மூணு மடங்கு பெருசு. எல்லாம் ஒண்ணுனு ஆய்ட்டா மக்கள் ஒரே எடத்துல குவியறது குறையலாம்... அதுக்கு கவர்மென்ட் சட்டம் கூட போடணும்னு சொல்லலாம்

6 . மூணுல ஒரு பங்கு இடம் விவசாயம்னு வர்றப்ப வேலை வாய்ப்பு கூடும், உணவு தட்டுபாடு விலகும், ஒரே நாடுன்னா ஏற்றுமதி இறக்குமதி எதுவும் இல்ல, எல்லாமும் எல்லாருக்கும் தான். அப்ப பதுக்கல், கள்ளசந்தை எல்லாமும் ஒழியும்

இப்படி இன்னும் சொல்லிட்டே போகலாம்... இப்ப சொல்லுங்க என்னோட கனவு நல்ல கனவு தானே...

கற்பனை தாங்க, ஆனாலும் நெனச்சு பாக்கவே ரெம்ப அழகா இருக்கு இல்லையா... பாப்போம் ஒரு ஆயிரம் வருஷம் கழிச்சாச்சும் இதுல நூத்துல ஒரு பங்காச்சும் பலிக்குதானு...

நான் இப்படி எல்லாம் சொல்றத பாத்து "அந்த ஒரே கூரை உலகத்துக்கு நீயே தலைமை தாங்குன்னெல்லாம் சொல்ல கூடாது" ஆமா சொல்லிட்டேன்... ஏன்னா எனக்கு பதவி ஆசை எல்லாம் இல்ல பாருங்க... ஹி ஹி ஹி

(ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா...... - mindvoice )

ஒகே.. இந்த தொடர் பதிவ தொடர அழைக்கணும் இல்லையா..

இதோ...இவங்க ஏழு பேரை சிக்க வெக்கலாம்னு இருக்கேன்... அருமையான வாய்ப்பு கெடைக்கறப்ப விடக்கூடாது பாருங்க... (ஹி ஹி ஹி)

மொதல்ல நம்ம சிரிக்க மட்டும் ப்ளாக் புகழ் (Just for laugh ங்கோ...) காயத்ரி 
நீங்க ஒரு கொள்ளகூட்ட கும்பல்கிட்ட சிக்கிக்கறீங்க (ஏன் இந்த நல்ல எண்ணம்னெல்லாம் கேக்க கூடாது). உங்ககிட்ட ஆயுதம், செல்போன் எதுவும் இல்ல. நீங்க இருக்கற எடத்துல எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்ல. கண்ணுக்கு எட்டின தூரம் வரை சுத்தியும் வெறும் காடு. காட்டோட எல்லை முழுக்க மின்சாரவேலி. உங்கள ஒரு இருட்டு ரூம்ல அடிச்சு வெச்சு இருக்காங்க...எப்படி தப்பிச்சு வருவீங்க....தலைப்பு "நானும் நாப்பது கொள்ளையர்களும்" ( "அமைதிச்சாரல்" அக்கா இன்னிக்கி நீங்க தப்பிச்சு இருக்கலாம்... பட் உங்க பேரை குறிச்சு வெச்சுட்டேன் என்னோட டைரில... நீங்க தப்பிக்கவே முடியாது... ஹா ஹா ஹா... வில்லன் சிரிப்பாக்கும்... ஹி ஹி ஹி...)

அடுத்தது நம்ம "அன்புடன் ஆனந்தி"
நீங்க ஒசாமா பின் லேடன் பத்தி ஒரு கவிதை எழுதணும்... மாட்டேன்னு சொன்னா அவரே வந்து விசாரிப்பாரு எப்படி வசதி? (ஹி ஹி ஹி)

அடுத்தது  நம்ம வானதி
நீங்க "மாவு இல்லாமல் பரோட்டா செய்வது எப்படி? " அப்படின்னு சமையல் குறிப்பு எழுதணும்... (ஹையோ ஹையோ)

அடுத்தது தக்குடு
"நாக்க முக்க நாக்க முக்க" என்ற கருத்தாழம் மிக்க பாடலுக்கு  தக்குடு ஸ்டைலில் விளக்கவுரை அளிக்கும் அரிய பணியை உங்களுக்கு அளிக்கிறோம்... இந்த அறப்பணியை செவ்வனே செய்து முடிக்கும் வேளையில் கோடம்பாக்கம் கல்வெட்டுகளில் உங்கள் பெயர் "நாக்கை வென்ற தக்குடு பாண்டியன்" என்ற அடைமொழியுடன் பதியப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தலைப்பு "நாக்க முக்கவும் தக்குடு பாண்டியரும்..." (ஹா ஹா ஹா)

இனி பாலாஜி
திடீர்னு உங்க கம்பெனில உங்கள ஒரு நாள் CEO ஆக்கிடறாங்க... நீங்க என்ன முடிவு வேணா எடுக்கலாம்னு சொல்றாங்க... என்ன என்ன மாற்றம் கொண்டு வருவீங்க... ஸ்டார்ட் லிஸ்டிங்... தலைப்பு "நான் CEO ஆனால்..."

அடுத்தது நம்ம "எங்கள் ப்ளாக்" ஸ்ரீராம் சார்
கடவுள் உங்களுக்கு ஒரு வரம் தர்றார். ஒரு நாள் நீங்க விரும்பற உருவம் நீங்க எடுக்கலாம்னு...அதாவது கூடு விட்டு கூடு பாயுற மாதிரின்னு வெச்சுகோங்ளேன்... அந்த ஒரு நாள் நீங்க யாரா இருக்க விரும்புவீங்க? காரணம் என்ன? என்ன செய்வீங்க அந்த உருவத்துக்கு மாறி?

அது உயிரோட இருக்கறவங்களா தான் இருக்கணும்னு இல்ல... யாரா வேணும்னாலும் இருக்கலாம்...இதான் உங்களுக்கு... தலைப்பு "நான் அவர் இல்லை..." (எப்பவும் நீங்க கேள்வி கேப்பீங்க.. இன்னிக்கி ஒரு மாற்றத்துக்கு நான் கேக்கறேன்... ஹா ஹா ஹா)

அடுத்தது நசரேயன் அவர்கள்
இவருக்கு கொடுக்கப்படும் தலைப்பு "காபி வித் பறவை முனியம்மா...". நீங்க பறவை முனியம்மாவை மினிமம் பத்து கேள்விகள் கேக்கணும்... உங்க ஸ்டைல்ல கலக்குங்க... ஸ்டார்ட் மீசிக்...


...

85 பேரு சொல்லி இருக்காக:

LK said...

ayya naan thappicheen.. detailed commented in mngg

vanathy said...

தங்ஸ், ஏன் என் மேல் என்ன கோபம். கோபம் என்றால் சொல்லுங்கோ கனடாவிற்கே சொந்த செலவில் வருகிறேன் நாலு அடி வேணாலும் தாங்கோ. இப்படி எல்லாம் பதிவு போடச் சொல்லி கூப்பிட்டால்.... அதாவது தோசை/இட்லி மா இல்லாமல் தானே பரோட்டா செய்யணும்..

vgr said...

Nalla kanavu than. Palicha romba sandosham.

Good post.

A few related links.

http://vgrblogger.blogspot.com/2010/04/bloggers-dream-1.html

http://vgrblogger.blogspot.com/2010/05/bloggers-dream-2.html

publicity kaga illai. idai padikum yaravadu yedavadu seyya koodum endra nappasai than.

kavisiva said...

//1 . என்னை போல சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டுல போய் நல்ல மனசோட அந்த ஊருக்காக உழைக்கற நல்ல உள்ளங்களுக்கு... அதாவது NRI ஸ்...

அவங்களை வருசத்துக்கு ஒரு வாட்டி அந்த அந்த நாட்டு அரசாங்கம் சொந்த செலவுல அவங்க அவங்க சொந்த ஊருக்கு அனுப்பி வெக்கணும் (ரெண்டு மாசம் சம்பள லீவோட...)//

இதுவா மொக்கை. இது நம்ம எல்லாரோட கனவாச்சே!

ஆனாலும் உங்களோட உருப்படியான கனவு என்னை புல்லரிக்க வச்சிடுச்சு. உடனே ஆடு மாடுன்னு அனுப்பி வச்சுடாதீங்க.

கலக்கறீங்க அ(ட)ப்பாவி!

BalajiVenkat said...

@அப்பாவி தங்க்ஸ்... என் இந்த கொலை வெறி உங்களுக்கு ... நான் ஒரு சாதாரண PL கூட ஆகமுடியலேன்னு வருத்ததுல இருக்கேன் ... இதுல CEO ஆகி ... சுத்தம்...

நல்ல வேல நீங்க கால அவகாசம்லாம் சொல்லையோ நான் தப்பிச்சேன்.. இருந்தாலும் என்ன நம்பி இந்த பொறுப்ப கொடுத்ததுக்கு ...
mmm பாலாஜி பொங்கி எழுடா எழுதுடா ...

(mindvoice : எங்க ... :-( )

சௌந்தர் said...

எப்போதும் பெரிய பதிவா வருது நீளம் குறைக்கலாம்

தமிழ் உதயம் said...

உங்க சட்ட திட்டம் நல்லா இருக்கு

Jey said...

கலக்குரீங்க அம்மனி. mind voice supper:)

ஜெய்லானி said...

இட்லி மாமி சூப்பர் பதிவு இது உங்கள எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்....ஆயிரம் வருஷம் இல்ல அடுத்த வருஷமே வந்தாலும் நல்லதுதான் .

நல்ல வேளை வானதிக்கு போச்சி அந்த தலைப்பு..என் கையில கிடைச்சா தண்ணி இல்லாமலேயே பரோட்டா செய்வது எப்படின்னு போட்டிருப்பேன் ஹி..ஹி..

பத்மநாபன் said...

கனா க்கள் அருமை ... தொடர்பதிவு பாக்கியெல்லாம் தொடராக போட்டுத்தாக்குவதால் ``தொடர் பதிவு திலகம்`` விருதுக்கு `` நம்ம தோஸ்துக``சங்கம் பரிந்துரை செய்கிறது.

Gayathri said...

அம்மா அம்மா தங்கமணி டீச்சர் என்ன பதிவு எழுத சொல்லல ..என்ன கொடுமை இது என்னை யாரும் எந்த பதிவுக்கும் அழைக்க மட்டேன்கரங்க ??
என் தமிழ் மிது உள்ள பயமா? இல்லை என் மொக்கை மீது உள்ள பயமா ?? ஹா ஹா ..

தோழி மிக அருமையான பகிர்வு..உங்க கனவு நிறைவேற நான் மனமாற இறைவனை வேண்டுகிறேன்...உலகம் அழகாய் மாறிவிடும்...
நாட்டுக்கொரு தங்கமணி இல்லை நீங்க மட்டுமே போரும்...வாழ்த்துக்கள்..
இந்தாங்க ஒரு பூங்கொத்து...

http://www.winnipegflorist.info/images/floral/seasonal/mothers-day/moms-butterfly-bouquet-standard.jpg

ஜெய்லானி said...

ஒசாமா பத்தி கவிதையா .....பேசாமே உங்க இட்லியை பத்தி போட சொன்னா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்....ஹய்யோ..ஹய்யோ...

நசரேயன் said...

//ஐயோ பாவம் பொற்கொடி, ஹரிணி, அனாமிகாவுக்கெல்லாம் வரி விலக்கு கெடைக்காது..//

உங்களுக்குமே கிடைக்காது இடுகையிலே நிறைய இங்கிலிபிசு வருது

நசரேயன் said...

//மொதல்ல நம்ம கடிஜோக் புகழ் "அமைதிச்சாரல்" அக்கா//

இதை வன்மையா கண்டிக்கிறேன், கடிஜோக் மட்டும் என்று சொல்வது, சூர மொக்கை, மரணமொக்கை, கொலைவெறி கவுஜ இன்னும் பல பட்டப் பெயர்கள் விட்டுப்போச்சி

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஹலோ... நியாயத்துக்கு உன்னை தான் மொதல்ல சிக்க விட்டு இருக்கணும்... ஆனா சுசி ஏற்கனவே உன்னை இந்த கற்பனை தொடருக்கு கூப்டாச்சு... ("நானும் ரவுடி தான்")... சோ எஸ்கேப் ஆய்ட்டா... பட் ஒன் டே யு வில் பி trapped ... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - ஐயோ கனடாவுகெல்லாம் வர வேண்டாம்... எதுக்கு அந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு? (வர்றப்ப அடிக்க ஆள் கூட்டிட்டு வந்துட்டா.. நாம நம்ம பத்திரத்துலையே இருப்போம்... ஹா ஹா அஹ) ஹலோ மேடம் .... எந்த மாவும் இல்லாம தான் பரோட்டா செய்யணும்...ஸ்டார்ட் சமையல்...

அப்பாவி தங்கமணி said...

@ VGR - தேங்க்ஸ் VGR ... சூப்பர் லின்க்ஸ்... அருமையான கனவுகள்... எனக்கு பவர் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா பவர் குடுத்துடுவேன்... thanks for sharing ...

@ kavisiva - தேங்க்ஸ் கவி... ஆடு மாடு எல்லாம் அனுப்பலை... எனக்கே இல்ல... நான் எங்க உங்களுக்கு அனுப்பறது... ஹா ஹா ஹா. நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - ஹலோ பாலாஜி எல்லாம் ஒரு கற்பனை தானே சார்... கற்பனைல CEO என்ன சி.எம் கூட ஆகலாம்...ஸ்டார்ட் லிஸ்டிங் யுவர் ஆர்டர்ஸ்.... ம்... தேங்க்ஸ்

@ சௌந்தர் - நன்றிங்க... இனிமே குறைக்க முயற்சி செய்யறேன்...

@ தமிழ் உதயம் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Jey - தேங்க்ஸ் ஜெய்...mindvoice தான் சூப்பரா..அப்ப நானு? ஹும்...

@ ஜெய்லானி - நன்றிங்க... நீங்க தண்ணி என்ன அடுப்பே இல்லாம கூட செய்வீங்கன்னு பயந்து தான் உங்கள இழுக்கல... ப்ளாக் உலகம் தாங்காது சார்...

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா... ஆஹா பட்டமா... சூப்பர்... நன்றிங்க... "தோஸ்துக சங்கம்" வாழ்க

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - அச்சச்சோ அழாத காயத்ரி பொண்ணு...இதுக்கெல்லாம் அம்மா கிட்ட சொல்லுவாங்களா என்ன... உங்க தமிழ் மேலயும் பயம் இல்ல.. மொக்கை எல்லாம் இல்ல ... நீங்க கலக்கறீங்க... உங்க கிட்ட மட்டும் உண்மை சொல்றேன்... சிலரை சிக்க வெக்க தருணம் பாத்துட்டு இருந்தேன்... அதான் மாட்டி விட்டுட்டேன்... ஹி ஹி ஹி... (ஜஸ்ட் கிட்டிங்... நீங்க ஊருக்கு போறேன்னு போட்டு இருந்தீங்க ப்ளாக்ல...அதான் தொந்தரவு செய்ய வேண்டாம்னு இழுக்கல... இப்ப சொல்லிட்டீங்க இல்ல... நீங்க சிக்கியாச்சு... அடுத்த தொடர் பதிவுக்கு மாட்டி....ஹா ஹா ஹா)
வாவ்... பூங்கொத்து... சூப்பரா இருக்கு காயத்ரி.. ரெம்ப தேங்க்ஸ்மா...

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ரெண்டும் ஒண்ணு தானேங்க... ஹி ஹி ஹி...

@ நசரேயன் - //இங்கிலிபிசு// இது செம்மொழியாங்ண்ணா... ஹி ஹி ஹி (ஆட்டோ கமிங்...மீ எஸ்கேப்............................)

@ நசரேயன் - அமைதி அக்கா... நான் ஒண்ணுமே சொல்லல... இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்... ஹா ஹா அஹ...

SenthilMohan said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... தாங்க முடில,
இந்தக்கா சும்மாவே ஆடுவாவாங்க. இந்த சுசியக்கா வேற சும்மா இருக்காம வேப்பெல வேற குடுத்துட்டாங்க.. இனி என்ன... ஹும்..,
அந்த அஞ்சு சதவீதம் மட்டும் ஏன் விட்டு வெச்சிங்க?,
இத இந்தக்கா சொல்றத நினைச்சாத்தான்....,
இந்தக்கா அகராதியே தாங்கல .. இதுல எகனாமிக்ஸ் அகராதி வேறயா? ஒருவேளை இவங்க அகராதி புடிச்சவங்களா இருப்பாங்களோ?.
Monopoly, Optimal Utilisation of Resources - யாரோ சொரண்டிட்டு போன பதிவு(serendipity) மாதிரி இதுக்கும் பதிவு போடுவாங்களா?,
ஆரம்பிச்சுட்டாங்கப்பா ஆரம்பிச்சுட்டாங்க...
இதெல்லாம் Mind voice மட்டும் இல்ல. எல்லாரோட வாய்சும் தானுங்கா.

அப்புறம் நான் இன்னைகுத்தானுங்க்கா ஒன்ன கவனிச்சேன். நானே சும்மா ஒரு ரவுசுக்கு ஒரு blog register பண்ணி வச்சிருக்கேன்.
அதுக்கும் follower-aa சேர்ந்து இருக்கீங்க. ஆளே இல்லாத கடைல யாருக்குடா tea ஆத்துறன்ற மாதிரி ஒன்னுமே இல்லாத blog-la எதுக்கு...சரி விடுங்க.. என்ன இருந்தாலும் ஒன்னுமே இல்லாத என்கடைக்கு நீங்க மொத வாடிக்கையாளரா வந்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நண்றீங்கோவ். (இதுக்காகவாவது ஏதோ ஒன்ன எழுதனுமோ?!?!?!)

Gayathri said...

haiya nandri ...vaazhga thangamani akka...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வரிக்கு வரி லொள்ளு.. சிரிச்சேன் தங்க்ஸ்.. மொக்க ஆர்டர் ஒன்னொன்னும் கலக்கல்.. இப்போவே ஓராயிரம் இட்லி சுட்டு பதுக்கி வச்சிடப் போறேன்.. :)

சீரியஸ் ஆர்டரும் அருமை.. நல்லா யோசிச்சிருக்கீங்க..

ஆனாலும், வானதிக்கு இம்புட்டு ஈசியா கொடுத்திருக்கப்படாது தலைப்ப :))

வான்ஸ்.. ரெடிமேட் பரோட்டா ஃப்ரீசர்ல இருந்து எடுத்துப்போட்டு, தவால சூடு பண்ணி... மாவே இல்லாம பரோட்டா, கொத்து பரோட்டா எல்லாமும் பண்ணிடலாம்.. என்ன??

சுசி said...

//நம்ம சுசி அக்கா (கண்டுக்காதீங்க...)//

அத்தனை கோஷம் போட்டிருக்கிங்க.. அப்புறமுமா??

//(இவ சும்மாவே ஆடுவா... இந்த சுசி பொண்ணு சும்மா இருக்காம வேப்பெல வேற குடுத்தாச்சு... இனி என்ன... ஹும்... - mindvoice )//

ஹஹாஹா..

முதல் மொக்கை ஆர்டருக்கு என் கள்ள ஓட்டுக்களும்..

சுசி said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சிரிச்சு முடியல புவனா.. கை குடுங்க முதல்ல.. அசத்திட்டிங்க..

அதுவும் அந்த சீரியஸ் ஆர்டர்.. நடக்காதான்னு ஏக்கமா இருக்கு.

மாட்டிவிட்டவங்களுக்கும் செம டாப்பிக்.

நீங்க பாஸாயிட்டிங்க..

அமைதிச்சாரல் said...

அடப்பாவி,.. நீங்க செஞ்ச இட்லியைன்னாலும் சாப்டுறேன்.என்னை கொள்ளைக்கூட்டத்துக்கிட்ட பிடிச்சுக்கொடுத்திடாதீங்க.ரெண்டேரெண்டு கடிஜோக் சொன்னதுக்காக இப்டி நாடு கடத்துறீங்களே இது நியாயமா.. தர்மமா.. ஒலகத்துக்கு அடுக்குமா!!! ஆனா, அந்த சிரிச்சுவேஷன் எனக்குப்பிடிச்சிருக்கு. ஆனா, வசந்த் ஆரம்பிச்ச இந்த கற்பனைத்தொடர்ல நான் ஏற்கனவே ஒரு ரவுண்ட் வந்திட்டேனே.. இப்ப என்ன செய்ய :-))))))

@ நசர்- இந்த வளவளத்தா இங்கேதானே இருந்தாங்க,.. எங்கே காணோம்? இதோ கூப்பிட்டுக்கிட்டு வர்றேன் :-))))))))))

//எல்லாம் ஒரே நாடுன்னு ஆய்ட்டா அப்புறம் ராணுவம் எதுக்கு? எவ்ளோ பெரிய செலவு மிச்சம். எவ்ளோ உயிர் பலிகள் தடுக்கப்படும்

2 . தூதரகம், விசா ஆபீஸ், பாஸ்போர்ட் ஆபீஸ் எல்லாம் இல்லாம போய்டும். இன்னும் செலவு மிச்சம், பிரச்சனை தீரும் //

எனக்கு இது பிடிச்சிருக்கே.....

Mahi said...

நல்ல கற்பனைங்க புவனா! தொடரக் கூப்பிட்டவர்களுக்கு கொடுத்த தலைப்புகள் கலக்கல் காமெடி! :):)

Matangi Mawley said...

room pottu yosichchurukkeengannu puriyuthu!

aanaa intha ellaa country onnaagarathellaam impractical!

1st- Russia-la nadanthaapla aaidum.. czar irukka koodaathunnu- communism vanthuthaan.. apram comrades kum czars kum vithyaasam illaama ponaa maathiri... oru president irunthaalum avar heads appoint pannuvaar.. east zone nee.. west neennu.. athula prachchana varum.. gradual-a athey vattathla vanthu nippoom!

potti kedayaathu/poraama kedayaathu... nenachchae paakka mudiyala! apram India Vs. Aussi match ellaam epdi nadakkarathu???

ellaarum ellaa edaththukkum varalaam/pogalaam... Bin Laden-ukkum Visa prachchana irukkaathu! Kasab kashta pattu boat-la laam aeri vanthurukka venaam...

3 pangu vivasaayam naa production jaasthi/ consumption kammi problem... aetho country-la potato cultivation prachchana nadantha kathayaa aaidum!

naan room pottu yosikkala... athuvaa vanthuchchu!

but kanavu.. ellaarum kaanalaaam... naan kooda thaan enga project module-la mattum bomb vedikkanum-nu kanavu kaanuvaen!

michcha padi.. unga idli idea/NRI ku leave kuduththu oorukku anupparathellaam hats off! :D :D kekkavey nallaa irukku!

ஹேமா said...

"தங்கமணி இட்லி"இவ்ளோ மலிவா
சுவிஸ் ல எங்கே கிடைக்கும் ?

எங்க நாட்ல எங்களை வச்சிருக்க முடியாமத்தான் கலைச்சுவிட்டாங்களோ என்னமோ அடுத்த நாட்டுக்கும் எத்தனை கட்டளைகள்.அப்பாடி !

அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரித் தலையங்கம்.கலக்கப் போறாங்க !

Priya said...

வழக்கம்போல கலக்கலா இருக்கு புவனா.

சின்ன அம்மிணி said...

நசரேயனுக்கு வெள்ளையம்மா இல்லைன்னா கறுப்பம்மா இருந்தாத்தான் பதிவு போட முடியும். நீங்க என்னடான்னா முனியம்மாவைப்பத்தி போடசொல்லி இருக்கீங்க :)

டம்பி மேவீ said...

உங்களோட உருப்படியான கனவுகளை படிக்கும் பொழுது நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்கன்னு தெரியுதுங்க .... செமைய எழுதிருக்கீங்க .....

Kousalya said...

உங்க கற்பனையை மிகவும் ரசித்தேன் தோழி....வாழ்த்துக்கள்

LK said...

//தங்கமணி பிராண்ட் இட்லி" தான்//

ithuku nee yaarum idli saapida koodathunu solli irukkalam

LK said...

//என்னோட கனவு நல்ல கனவு தானே...
///

nalla kanavuthan...

LK said...

rightu ellarukum nalla thalaippu. saaral escape aaittanga

ஸ்ரீராம். said...

சிரிப்பார்டர், சிந்தனார்டர்... ரெண்டுமே சூப்பர்...!

"எப்பவும் நீங்க கேள்வி கேப்பீங்க.."//

எப்போங்க... ஏங்க பொய் எல்லாம் சொல்றீங்க... கேட்டதே இல்லையேங்க ம்..ஹூம்...(அழுகை)

"சுசி சொன்னது...
நீங்க பாஸாயிட்டிங்க.."//

ஐயோ.. இதெல்லாம் வேறயா... ஃபெயில் ஆறத்துக்கும் வாய்ப்பு இருக்கா.. ஐயையையோ....

நல்ல வேளை டைம் கொடுத்திருக்கீங்க... தலைப்பு என்ன...நான் அவர் இல்லை? முதல்ல நான் புவனாவா மாறி அ.த.இட்லி செஞ்சு ஒரிஜினல் புவனாவுக்குக் கொடுத்து மிரட்டி இந்த தலைப்பில் கட்டுரை வாங்கி சொந்த உருவத்துக்கு மாறிடுவேன்...

Ananthi said...

///அடுத்தது நம்ம "அன்புடன் ஆனந்தி"
நீங்க ஒசாமா பின் லேடன் பத்தி ஒரு கவிதை எழுதணும்... மாட்டேன்னு சொன்னா அவரே வந்து விசாரிப்பாரு எப்படி வசதி? (ஹி ஹி ஹி)////

அவ்வ்வ்வவ்வ்வ்வ்.. ஏன்ப்பா இந்த கொல வெறி....??
நா என்ன செஞ்சேன் உங்கள.. என்ன கோவமா இருந்தாலும் சொல்லிருங்க..
பேசி தீத்துக்கலாம்.. நம்ம என்னவோ ஒரு 4 மணி நேர தூரத்தில தான் இருக்கோம்... :-))))
இப்படி எல்லாம் எழுத சொன்னா நா என்னத்த எழுதறது... :D :D :D

(என் கவிதை எல்லாம் உங்கள இந்த அளவு பாதிச்சிருக்குன்னு தெரியாம போச்சே.....)

vanathy said...

தங்ஸ், என் பெயரை பார்த்ததும் அதிர்ச்சியில் எதுவுமே சொல்லாம போய்ட்டேன். இப்ப தான் மனதை தேத்திகிட்டு, இந்த பக்கம் வரேன்.
நல்லா இருக்கு உங்கள் பதிவு. வேலைல இருந்து ப்ளாக் எழுதறவங்களுக்கு கம்பனியே சம்பளம் குடுக்கிறாங்களே... பிறகு ஏன் எக்ஸ்ட்ரா பணம்.
நல்லா சிரிச்சேன்.
ஏன் ஏன்... இந்த எல்கே, ஜெய்லானி, மகி எல்லாம் உங்கள் கண்ணில் படவே இல்லையா?????

Ananthi said...

புவன்ஸ்... ப்ளீஸ் வேற ஒரு தலைப்பு தாங்கோ..
முயற்சியாவது பண்றேன்... :D :D

priya.r said...

//1 . எல்லாம் ஒரே நாடுன்னு ஆய்ட்டா அப்புறம் ராணுவம் எதுக்கு? எவ்ளோ பெரிய செலவு மிச்சம். எவ்ளோ உயிர் பலிகள் தடுக்கப்படும்

2 . தூதரகம், விசா ஆபீஸ், பாஸ்போர்ட் ஆபீஸ் எல்லாம் இல்லாம போய்டும். இன்னும் செலவு மிச்சம், பிரச்சனை தீரும்

3 . நீ நான்ங்கற போட்டி இல்ல, டாலர் ரூபாங்கற ஏற்ற தாழ்வு இல்ல. போர் பிரச்சினைங்கற விசியமே இல்ல. எவ்ளவோ மிச்சம், எவ்ளவோ நிம்மதி

4 . இது எதுவும் இல்லைனா மக்களுக்கு வேலை இல்லாத திண்டாட்டம் வந்துடாதானு நீங்க கேக்கலாம். நிச்சியமா வராது. Optimal Utilisation of Resources செஞ்சா எல்லாமும் சரியாவே இருக்கும்

5 . கனடா மக்கள் தொகை இந்தியா மக்கள் தொகைல நாலுல ஒரு பங்கு தான். ஆனா மொத்த பரப்பளவு இந்தியாவ விட மூணு மடங்கு பெருசு. எல்லாம் ஒண்ணுனு ஆய்ட்டா மக்கள் ஒரே எடத்துல குவியறது குறையலாம்... அதுக்கு கவர்மென்ட் சட்டம் கூட போடணும்னு சொல்லலாம்

6 . மூணுல ஒரு பங்கு இடம் விவசாயம்னு வர்றப்ப வேலை வாய்ப்பு கூடும், உணவு தட்டுபாடு விலகும், ஒரே நாடுன்னா ஏற்றுமதி இறக்குமதி எதுவும் இல்ல, எல்லாமும் எல்லாருக்கும் தான். அப்ப பதுக்கல், கள்ளசந்தை எல்லாமும் ஒழியும்//

நீங்க சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்து ,நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்குறீர்கள் .
இந்த மாதிரியான சமுக வளர்ச்சிகள் ,சிந்தனைகளை கொண்ட செய்திகளை தனி பதிவாகவே போட்டு நீங்கள் போட்டு இருக்கலாங்க .
பாராட்டுகள் புவனா !

Karthick Chidambaram said...

:)))))))

தக்குடுபாண்டி said...

இட்லி மாமி, ஏன் இந்த வில்லத்தனம்?? எனக்கு போய் இப்படி ஒரு தலைப்பா?? வாரியார் ஸ்வாமிகள் தக்குடு பெரிதும் மதித்து வணங்கும் ஒரு பெரியவர். அதனால அவருடைய ஸ்டைல்ல டப்பாங்குத்து பாட்டுக்கு எல்லாம் விளக்கம் சொல்லர்து கஷ்டமான காரியம். வேற எதாவது தலைப்பு குடுங்க எஜமான்! உங்களை மாதிரியே 2- 3 மாசத்துக்குள்ள எழுதர்துக்கு முயற்ச்சி பண்ணறேன்....:)

தக்குடுபாண்டி said...

@ VGR - பெரிய ஆளுயா நீர்! வரும் போதே ஒரு பசை வாளியோட வந்து நச்! நச்!னு இரண்டு போஸ்டரையும் சத்தம் காட்டாம ஒட்டிட்டேரே?? ஆனா நீர் ஒட்டின இடம் சரியான இடம் தான். லட்சக்கணக்குல(முன்னப்பின்ன இருக்கும் கண்டுக்காதீங்கோ) ஆட்கள் வந்து போகும் இடம்...:) இவங்களோட கமண்ட் செக்க்ஷனை படிக்கர்துக்கே தனியா ஒரு ரசிகர் கூட்டம் உண்டு...:)

sandhya said...

"அதோட வீட்டுல இருந்து முழுநேரம் ப்ளாக் போடறவங்களுக்கு ஸ்டைபண்ட் தரணும்... நெறைய எல்லாம் வேண்டாம்... மாசம் ஒரு ரெண்டாயிரம் டாலர் குடுத்தா போதும்... எங்களுக்கு பேராசை எல்லாம் இல்ல..."

ஹாய் ஜாலி இனிமே மாதம் ரெண்டாயிரம் டாலர் கைக்கு வர போகுது ..அப்பாவி வாழ்க ..அப்பாவி வாழக ..

"உலகம் பூரா ஒரே கூரை ஆய்டணும்... ஒரே கரன்சி, ஒரே தலைவர், ஒரே ஜனநாயக அரசாங்கம், உலகத்துல மூணுல ஒரு பங்கு இடம் விவசாயம் தான் செய்யணும் இப்படி ஆகணும். ஏன் இப்படி சொல்றேன், இதனால் ஏற்படும் நன்மைகள் என்னனு சொல்றேனே:-"

இது ரொம்ப நல்ல முடிவு ...

எப்போதும் போல கலக்கல் பதிவு புவனா .
தொடர் பதிவுக்கு அழைப்பு வந்த எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்கள் (நல்லா மாட்டினிங்க ஹி ஹி ஹி )

sandhya said...

நான் இட்லி மாவு பிசினஸ் பண்ணலாம் ன்னு நினைக்கிறன்.".அப்பாவி தங்கமணி இட்லி மாவு "என்று பேரு வெக்கலாம் நிறையே சேல்ஸ் ஆயிடும் ஏன் ஏன்னா நீங்க தான் பேமஸ் ஆச்சே தங்கமே ...

ஜெய்லானி said...

//@ ஜெய்லானி - நன்றிங்க... நீங்க தண்ணி என்ன அடுப்பே இல்லாம கூட செய்வீங்கன்னு பயந்து தான் உங்கள இழுக்கல... ப்ளாக் உலகம் தாங்காது சார்...//

க்கி.க்கி....ஹி..ஹி.. வடை போச்சே..!!!ச்செ..இட்லி போச்சே..!!

@@@vanathy --//ஏன் ஏன்... இந்த எல்கே, ஜெய்லானி, மகி எல்லாம் உங்கள் கண்ணில் படவே இல்லையா????? //

பாருங்க வான்ஸ் மேல சொன்ன பதில பாருங்க .இதில டாக்டரேட் வாங்கியன ஆள் நான்.. ஹய்யோ..ஹய்யோ..

ஜெய்லானி said...

இட்லி மாமி விடாதீங்க , ரெண்டு நதியும் எஸ்ஸாக பாக்குராங்க சூப்பர் தலைப்பு..ஹா..ஹ...

thenammailakshmanan said...

நல்ல வேளை தங்ஸ் இந்த இடத்துல என்னை சேர்க்காம விட்டியே.. நன்றி மா.)))

thenammailakshmanan said...

அதோட வீட்டுல இருந்து முழுநேரம் ப்ளாக் போடறவங்களுக்கு ஸ்டைபண்ட் தரணும்... நெறைய எல்லாம் வேண்டாம்... மாசம் ஒரு ரெண்டாயிரம் டாலர் குடுத்தா போதும்... எங்களுக்கு பேராசை எல்லாம் இல்ல... //

இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு .. தங்ஸ்..

LK said...

//.. இந்த எல்கே, ஜெய்லானி, மகி எல்லாம் உங்கள் கண்ணில் படவே இல்லையா?//

ungalukku oru box thangamani brand idli anuppanuma

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இரண்டாயிரம் டாலர் எல்லாம் வேணாங்க! ஆயிரம் டாலர் போதும். அந்த இன்கம்டாக்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணுங்க! zoo போனாக்க அந்த ZEBRA ஐ பார்க்காம வந்துடுவேனுங்க! ஏன்னா அதுல வரி இருக்கு(வரிக்குதிரை!!ஹி..ஹி..சரியான மரண மொக்கை!)

ஆர்.ஆர்.ஆர்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல கற்பனை, நல்ல நல்ல பின்னூட்டங்கள், மகிழ்வாக இருக்கிறது, வாழ்த்துகள்!

Ananthi said...

இப்படித் தான் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டு எஸ்.. ஆகணும்..நல்லதுங்கோ...

மிக்க நன்றி....
ன்றி...
றி...

அவ்வ்வ்வ்...

Ananthi said...

உங்க தொடர் பதிவு.... எழுதிட்டேன்... (ரொம்ப மொக்கையா தான் இருக்கும்...
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...) மீண்டும் ஒருதரம் உங்க அன்பு அழைப்புக்கு நன்றி..

(அவ்வ்வ்வவ்வ்வ்.... பின்ன பப்ளிக்-ல அழவா முடியும்....)

http://anbudanananthi.blogspot.com/2010/08/blog-post.html

Porkodi (பொற்கொடி) said...

ஹாஹாஹா! இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. சிவனேன்னு என் பாட்டுக்கு இருக்கேன்.. ஏன் ஏன் ஏன் இந்த வெறி? அப்புறம் நானெல்லாம் இந்த மட்டும் தலைப்பு வெக்குறேனேன்னு சந்தோசப்பட்டுக்குங்க! ஒரு காலத்துல டமில்ல தலைப்பு வெச்சவ தான்.. என்னாத்துக்கு?

எது எப்படியோ என்னை மட்டும் பதிவுக்கு கூப்புட்டு இருந்தீங்க, நானே இட்லி செஞ்சு இங்கேந்து எய்ம் பண்ணி கனடாவுக்கு அடிச்சுருப்பேன்..

Porkodi (பொற்கொடி) said...

எல்லாம் சரி, அதே கண்கள் எங்க?

திவ்யாம்மா said...

http://divyamma.blogspot.com/2010/08/blog-post.html

sandhya said...

http://sandhya-myfeelings.blogspot.com/2010/08/blog-post.html

அப்பாவி தங்கமணி said...

@ SenthilMohan - ஹா ஹா ஹா,... வர வர என்னோட mindvoice கமெண்ட்ஸ்ஐ எல்லாரும் திருடுறாங்க... ஒண்ணும் சரி இல்ல செந்தில்... உங்க ப்ளாக் பத்தி நானே சொல்லணும்னு இருந்தேன்... ஆளே இல்லாத கடைல follower ஆ சேந்தது பதிவு போடுங்கன்னு மறைமுக மெசேஜ் குடுக்க தான்... சோ நீங்களே சீக்ரம் போஸ்ட் போடுங்க... இல்ல தொடர் பதிவுக்கு கூப்பிடவா... ஹா ஹா ஹா...நன்றி செந்தில்

@ Gayathri - ஹா ஹா ஹா... இந்த வாழ்க சொன்னதுக்காக பின்னாடி பீல் பண்ணாம இருந்தா சரி தான்... ஹா ஹா அஹ ... தேங்க்ஸ் காயத்ரி

அப்பாவி தங்கமணி said...

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - ஆஹா.... இந்த இட்லி பதுக்கல் எல்லாம் illegal அம்மணி... ஆஹா... வானதிக்கு இப்படி எல்லாம் ஐடியா குடுத்தா அப்புறம் உங்களையும் தொடர் பதிவுக்கு கூப்டுடுவேன்,...ஆமா சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா... எப்படி எல்லாம் மிரட்ட வேண்டி இருக்கு... ஹா ஹா ஹா

@ சுசி - தேங்க்ஸ் சுசி அக்கா....(!!!!!) ஹா ஹா ஹா... ஐ நான் பாசா.... தேங்க்ஸ் சுசி... ஆத்தா நான் பாசாய்ட்டேன்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - என்னாது ரெண்டு கடி ஜோக்கா? இது உங்களுக்கே அநியாயமா இல்லியாங்க்க்கா... ஊரு பூரா எல்லாரும் மண்டைய பிச்சுட்டு ஒடுராங்களாம் ஜோக் படிச்சு நொந்து ... ஹா ஹா ஹா... ஆஹா... ஏற்கனவே எழுதியாச்சா... ச்சே... அருமையான பழி வாங்கும் வாய்ப்பு மிஸ் ஆய்டுச்சே...இன்னொரு வாய்ப்பு கிடைக்காமையா போகும்... யாரோ வலிய வந்து சிக்கினாங்களே....ஆங்.... அந்த காயத்ரி பொண்ணை மாட்டி விடுவோம் இதுக்கு... ஹி ஹி ஹி

@ mahi - தேங்க்ஸ் மகி...

அப்பாவி தங்கமணி said...

@ Matangi Mawley - Thanks a bunch for your detailed comment Matangi... that was great... yes you're right on all aspects... but as you said a dream is a dream....ha ha ha... thanks again Matangi

@ ஹேமா - ஆஹா.... இவ்ளோ மலிவுன்னா சொன்னிங்க... ஆஹா...சூப்பர்... நன்றிங்க ஹேமா

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ சின்ன அம்மணி - நசரேயன் முனியம்மா பத்தி எழுதுவார்னு தான் நினைக்கிறேன்.... நன்றிங்க

@ டம்பி மேவீ - ஆஹா... பெரிய படிப்பெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ... நன்றிங்க

@ Kousalya - ரெம்ப நன்றிங்க கௌசல்யா

அப்பாவி தங்கமணி said...

@ LK - ஹா ஹா ஹா... அது எப்படி? சாரல் மறுபடியும் சிக்காமையா போவாங்க...பாப்போம்...

@ ஸ்ரீராம் - நன்றிங்க...ஆமாங்க மார்க் எல்லாம் போடுவாங்களாம்... பெயில் ஆனா இன்னொரு தொடர் பதிவு வேற எழுதணுமாம்...(நல்லா பயமுருத்தியாச்சு ஹா ஹா ஹா)... நான் எங்க டைம் குடுத்தேன்... சீக்கரம் போடுங்க ஸ்ரீராம் சார்...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - //நம்ம என்னவோ ஒரு 4 மணி நேர தூரத்தில தான் இருக்கோம்... :-))))//

அய்யோ... இது என்னவோ மிரட்டல் மாதிரி இருக்கே...


//(என் கவிதை எல்லாம் உங்கள இந்த அளவு பாதிச்சிருக்குன்னு தெரியாம போச்சே.....)//

ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லீங்கோ ... (ஆஹா... உண்மை தெரிஞ்சு போச்சா... மீ எஸ்கேப்.....)

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - ஹா ஹா ஹா... மனசை தேதியாச்சா...குட் குட்... சரி சீக்கரம் பதிவு போடுங்க...

//ஏன் ஏன்... இந்த எல்கே, ஜெய்லானி, மகி எல்லாம் உங்கள் கண்ணில் படவே இல்லையா????? //

LK வை ஏற்கனவே இந்த தொடருக்கு சுசி கூப்டாச்சு...

ஜெய்லானி நான் ஏற்கனவே கூப்ட்ட ஒரு தொடர் பதிவு இன்னும் போடல....அதுக்கு waiting

மகி யை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... (இன்னும் போஸ்ட் போஸ்ட் பண்ணலை... ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ //Ananthi சொன்னது… புவன்ஸ்... ப்ளீஸ் வேற ஒரு தலைப்பு தாங்கோ..
முயற்சியாவது பண்றேன்... :D :D //

அடடா நான் மாத்தி தரலாம்னு நெனச்சேன்... நீங்க அதுக்குள்ள போட்டுடீங்க போல இருக்கே... (ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் ப்ரியா....

@ Karthick Chidambaram - smiley மட்டும் போடறவங்களை எல்லாம் கவர்ன்மென்ட் தேடுதாம்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஓ...சாரி அப்படி யோசிக்கல... சரி தக்குடு ஸ்டைலில் விளக்கவுரை எழுதவும்னு மாத்திடறேன்...

@ தக்குடு - //லட்சக்கணக்குல(முன்னப்பின்ன இருக்கும் கண்டுக்காதீங்கோ) ஆட்கள் வந்து போகும் இடம்...:) //

ஏன் ஏன் ஏன் இந்த கொல வெறி.... ஏதோ தேங்காமூடி கச்சேரி கணக்கா ஓடிகிட்டு இருக்கு... என்னத்துக்கு இந்த கொல வெறிங்கறேன்... ஹும்...

அப்பாவி தங்கமணி said...

@ sandhya - எஸ் எஸ்... பேங்க் அக்கௌன்ட் எல்லாம் காலியா வெச்சுகோங்க சந்த்யா... டாலர் கொட்ட இடம் வேணுமே... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் சந்த்யா

@ sandhya - அட நம்ம பேருல இட்லி பிசினஸ்ஆ...சூப்பர் சூப்பர்... கலக்குங்க (மாவை...) ஹா ஹா ஹா....தேங்க்ஸ் சந்த்யா

@ ஜெய்லானி - ஹா ஹா ஹா.... எப்படி எல்லாம் பயபடுத்தி வெச்சு இருக்கீங்க எங்களை... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ thenammailakshmanan - இந்த முறை தப்பிசிடீங்க... சீக்கரம் சிக்க வெக்கறேனுங்க அக்கா உங்களையும்... ஹா ஹா ஹா... ஓ... உங்களுக்கும் இந்த டீலிங் புடிச்சு இருக்குங்களா... எனக்கும் தான்... ஒகே ஆச்சுன்னா ராஜினாமா லெட்டர் குடுத்துட வேண்டியதுதேன்..... நன்றிங்க...

@ LK - ஹா ஹா ஹா... ஏன்பா ஏன்?

அப்பாவி தங்கமணி said...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - ஹா ஹா ஹா... நல்ல மனசுங்க உங்களுக்கு ஆயிரம் டாலர் போதுமா...ஹா ஹா ஹா... இன்கம்டாக்ஸ் சீக்கரம் ரெடி பண்ணிடலாங்க... ஆஹா... வரிக்குதிரைய பாத்து ஓடுற அளவுக்கா.... ஹா ஹா ஹா...சூப்பர்

@ பெயர் சொல்ல விருப்பமில்லை - நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi - //இப்படித் தான் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டு எஸ்.. ஆகணும்..நல்லதுங்கோ....//
கோச்சுகாதீங்கோ அம்மணி... எஸ் எல்லாம் ஆகலை... மூணு நாள் இங்க லீவ்... அதான் ஊர் சுத்தல்ல கொஞ்சம் பிஸி... ஹி ஹி ஹி... அதுக்குள்ள போஸ்ட் போட்டுடீங்க போல... நீங்க ரெம்ப நல்லவங்க அம்மணி....(ஹா ஹா ஹா...அப்பாடா எஸ்கேப்...)

//(அவ்வ்வ்வவ்வ்வ்.... பின்ன பப்ளிக்-ல அழவா முடியும்....)//
அழாத ஆனந்தி...இந்தா இந்த இட்லி சாப்புடு... எங்க சிரி பாக்கலாம்... (ஹையோ ஹையோ...)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ஹி ஹி ஹி... உங்கள எல்லாம் வம்பு பண்ணாம போஸ்ட் போட்டா நல்லாவா இருக்கும்... ஹா ஹா ஹா...

//எது எப்படியோ என்னை மட்டும் பதிவுக்கு கூப்புட்டு இருந்தீங்க, நானே இட்லி செஞ்சு இங்கேந்து எய்ம் பண்ணி கனடாவுக்கு அடிச்சுருப்பேன்..//

இதுக்கு தான் விவரமா பக்கத்துக்கு ஊர்காரங்களை எல்லாம் இதுக்கு கூபிடலை... ஹி ஹி ஹி...

@//Porkodi (பொற்கொடி) சொன்னது… எல்லாம் சரி, அதே கண்கள் எங்க? //

எதே கண்கள்...? ஓ... அந்த தொடர்கதையா... சீக்கரம் போட்டுடரனுங்க... sorry madam....(me escape...)

அப்பாவி தங்கமணி said...

@ //திவ்யாம்மா சொன்னது… http://divyamma.blogspot.com/2010/08/blog-post.html //
ரெம்ப நன்றிங்க திவ்யாம்மா

@ Sandhya - தேங்க்ஸ் சந்த்யா...

vanathy said...

//வானதிக்கு இப்படி எல்லாம் ஐடியா குடுத்தா அப்புறம் உங்களையும் தொடர் பதிவுக்கு கூப்டுடுவேன்,...ஆமா சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா..//

ஆஹா! ஒரு உண்மையான நட்பை இனம் கண்டு கொண்டேன். ம்ம்ம்ம்... சந்தோஷத்தில் டைப் பண்ணவே முடியலை.

Gayathri said...

தெய்வமே தேய்ய்ய்ய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே...தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் தொடர்பதிவை.....நன்றி அக்கா வாழ்க ( என்னிக்குமே ஒரே பேச்சு தான்..அவ்வ்வ்வ் )

Rajaram said...

Idly 100 rupees romba cheap.. pona varam inge (houston'la) 3 kal idli with thanni sambar'ukku $9 thalichutaanga... canada romba cheap pola irukku

siva said...

தெய்வமே unnaku kon ellaiya??????

mudilaa....

annalum padivu super..

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - ஹலோ மேடம்... இதெல்லாம் செல்லாது... அப்புறம் உங்களுக்கு பெயில் மார்க் தான் குடுப்பேன் இப்படி பிட் அடிச்சா... ஹா ஹா ஹா

@ Gayathri - ஆஹா... இதுல உள்குத்து ஒண்ணும் இல்லியே... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Rajaram - ஆஹா... சீப்பா? உங்களுக்கு ரெம்ப பெரிய மனசு தான் போங்க... கனடாவுல ஒரு இட்லி அம்பது சென்ட் தான்... இட்லி மட்டும் வாங்கினா... சாம்பார் எல்லாம் தனி ரேட்...

@ siva - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் சிவா

அஹமது இர்ஷாத் said...

ரைட்டுங்க அம்மணி..

அப்பாவி தங்கமணி said...

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க...

Post a Comment